Kaalangalil aval vasantham 19(1)

Kaalangalil aval vasantham 19(1)

https://www.youtube.com/watch?v=LmOhnoGLHcc

19

 ரிவர்ஸ் ஹேக்கிங்கை ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், ஹேக் செய்தவர்களின் ஐபியை கண்டுபிடித்து விட்டானர், வந்த இருவரும். தன்னுடைய அறை வேண்டாமென, இன்னொரு அறையை ஒதுக்கித் தந்திருந்தான் ஷான். தன்னுடைய அறையில் எதாவது ஸ்பை கேமரா இருந்தாலும் ஆச்சரியமில்லை என்று தோன்றியது அவனுக்கு!

ஆபீஸ் மொத்தத்திற்கும் லீவ் கொடுத்து, ஒருவர் விடாமல் அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்கள். நடந்த பிரச்சனை மாதேஸ்வரனின் காதுகளுக்கும் சென்றிருந்தது. ப்ரீத்திக்கு தான் அழைத்தார் அவர்.

“என்ன ப்ரீத்தி பிரச்சனை? ஆபீஸ் லீவ் விடறளவு சீரியஸா?” என்று கேட்க,

“கொஞ்சம் சீரியஸ் தான்ப்பா. சிஸ்டம், சர்வர்ஸ், வெப்சைட்ன்னு மொத்தத்தையும் யாரோ ஹேக் பண்ணிருக்காங்க.” மெல்லிய குரலில் அவள் கூற,

“என்ன சொல்ற ப்ரீத்தி? எப்படி பாசிபிள்?”

“பண்ணிருக்காங்கப்பா. பாஸ் அக்கௌண்ட்ஸ பார்க்கறது யாருக்கோ பிரச்சனையாகுதுன்னு பீல் பண்றேன். பாஸும் அதைதான் பீல் பண்றார்…”

“திஸ் இஸ் அட்ரோஷியஸ் ப்ரீத்தி. அவன் ஆபீஸ். அவன் பார்க்க மாட்டானா?”

“அதே தான்ப்பா. நீங்க கவலைப்படாதீங்க. பாஸ் இதை சும்மா விடப் போறதில்ல. நீங்க யார்கிட்டயும் இதை பத்தி டிஸ்கஸ் பண்ணாதீங்க, ஈவன் வித் வைஷு மேம். இன்னும் டீட்டைலா நேர்ல சொல்றேன்…” என்று முடிக்க,

“ஓகேம்மா ஜாக்கிரதை…” என்றவருக்கு மனதுக்குள் ஏதேதோ குழப்பங்கள்.

இங்கு ஜுப்பிட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அறைக்குள் யாரும் எட்டிக் கூட பார்க்க முடியாதபடி வாசலில் பாதுகாப்புக்கு செக்யுரிட்டி இருந்தனர்.

ஷானுக்கு நம்பிக்கையான, அவனது கட்டுமான பணிகளின் பாதுகாப்புக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் அது! அவர்கள் துப்பறியும் நிறுவனத்தையும் நடத்திக் கொண்டிருந்தனர். அதனால் பல விஷயங்களுக்கு அவர்களைத்தான் உபயோகிப்பான் ஷான்.

மொத்தமாக இருபத்தி ஐந்து பேர். மொத்த ஜுபிட்டர் ஸ்கொயரையும் தங்கள் கட்டுபாட்டில் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு தலைவனாக மகேஷ். துப்பறிவாளன். முன்னாள் ராணுவ வீரன். விஆர்எஸ் வாங்கிக் கொண்டு சென்னையில் செட்டிலாகி இருந்தான். அளவான உயரம். உடற்பயிற்சி அவனது உடலை உரமாக்கி இருந்தது. அனைவரது காதுகளிலும் மைக்ரோபோன். மறைவாக ஒரு பிஸ்டல், அது மகேஷுக்கு மட்டும். ஷானின் நம்பிக்கையை பெற்றவன் அவன். எப்போது தேவை என்றாலும் எதிர்கேள்வி கேட்காமல் எதை வேண்டும்னாலும் முடித்துவிட்டு வருவான்.

இப்போதும் அவன் தான் அறைக்கு வெளியே பாதுகாப்புக்காக இருந்தான்.

“சர்… அட்ரெஸ் எடுத்தாச்சு…” என்று மானிட்டரை பார்த்தபடியே குரல் கொடுத்தான் அனில் வெர்கீஸ். ஆல்வின் அனுப்பிய இருவரில் ஒருவன் அவன். மலையாளியாக இருந்தாலும் பக்கா சென்னைக்காரன். இன்னொருவன், சஞ்சீவ்.

இருவரும் அவர்களது வேலையில் புலிகள் என்பது  வேலையை ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே புரிந்து கொண்டான் ஷான். சற்று நேரத்திலேயே ஆல்வினும் வந்திருந்தான்.

“இவ்வளவு பெரிய கம்பெனில இப்படி செக்யுரிட்டி காம்ப்ரமைஸ் ஆகிருக்கே. ப்ச்… தப்புடா மச்சான்…” என்ற ஆல்வினை ஆமோதித்தான் ஷான்.

“அப்கோர்ஸ். இந்த பிரச்சனைய சரி பண்ணிட்டு முழுசா நாம மாத்தறோம். மொத்த ஜுபிட்டர் ஸ்கொயர்லையும் எனக்குத் தெரியாம ஒரு ஈ எறும்பு கூட அசையக் கூடாது. ஈவன் அத்தனை பேக்டரிஸ், ப்ராஞ்சஸ்ன்னு, எல்லாத்தையும் கனெக்ட் பண்றோம். உட்கார்ந்த இடத்துல இருந்தே அத்தனை கண்ட்ரோலும் என்கிட்ட இருக்கணும் ஆல்வின். அதுக்கு என்னென்ன பண்ணலாம்ன்னு எனக்கு நீ ஐடியா கொடு. இனிமே ஒருத்தனும் நம்ம சிஸ்டம்ல கைவைக்க துணிய கூடாது.”

“வெரி ஸ்மார்ட் ஷான். கண்டிப்பா. நான் செஞ்சு தரேன்.” என்றவன், வெர்கீசுடனும் சஞ்சீவுடனும் சேர்ந்து அமர்ந்து வேலை பார்த்தான்.

வேலை படு வேகமாக நகர்ந்தது. ஷான் இறுக்கமாகவே நின்றிருந்தான்.

“தனியா எனக்கு நாலு பேரை அப்பாயின்ட் பண்ணி குடு ஆல்வின், இந்த மாதிரி வேலைக்கு. ஐ மீன் ஹேக்கிங்க்கு. எப்பவும் இருக்கற மாதிரி…” என்ற ஷானை பார்த்து சிரித்த ஆல்வின்,

“உனக்கு தெரியாத ஆளுங்களா?”

“ஏன் நீ பண்ணமாட்டியா?”

“உனக்கு தேவைப்படற வரைக்கும் வெர்கீசையும் சஞ்சீவையும் நீயே வெச்சுக்கடா…”

“இன்னும் கொஞ்சம் பேர் கூட தேவைப்படுவாங்க. நீ எனக்கு செக்யுரிட்டி சிஸ்டம டிசைன் பண்ணு… அப்புறம் ஒவ்வொன்னா சொல்றேன்டா…”

“தங்களுக்கு என்ன சப்போர்ட் வேண்டுமென்றாலும் செய்து தர ஜி7 தயாராக இருக்கிறது மன்னா…” என்று ஆல்வின் சிரிக்க, அதை கண்ட ஷானும் புன்னகைத்தான்.

பேச்சு பேச்சாக இருந்தாலும், காரியமாகிக் கொண்டு தான் இருந்தது. கொஞ்சம் கூட கவனத்தை கலையவிடாமல் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி. ஷான் பேசிக்கொண்டே இன்னும் சில விஷயங்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.

“ஹேக் ஆனதையெல்லாம் மீட்டெடுக்க முடியுமா ஆல்வின்?” சந்தேகமாக கேட்ட ஷானை பார்த்த ஆல்வின்,

“முடிஞ்ச அளவு ட்ரை பண்ணலாம்டா. மேக்சிமம் பண்ணி தர்றேன்…” என்று கூறினாலும், அந்த வகையில் ஷானின் முகம் தெளியவில்லை.

குழப்பமாக நெற்றியை சொறிந்தவனின் கைகளை பற்றிய ப்ரீத்தி, லேசாக அழுத்தி, “பார்த்துக்கலாம்… டென்ஷன் ஆகாத ஷான்…” என்று மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்குமாறு கூற, அவளது கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.

“ம்ம்ம்…”

“எதாவது ஆர்டர் பண்ணட்டா? பசிக்குதா? இல்லைன்னா காபி போட்டு கொண்டு வரட்டா?” அதே குரலில் கேட்டாள். அவனது முகம் அவ்வளவு சோர்ந்திருந்தது.

“வேண்டாம் ப்ரீத். இப்படியே கூட கொஞ்ச நேரம் நில்லு. போதும்…” என்றவன், சிறிது நேரம் கழித்து அவளது கையை மெல்ல விடுவித்தான். அவனது அழுத்தங்கள் சற்று குறைந்தது போலிருந்ததது.

“அப்பா கிட்ட சொன்னியா?” அவள் புறம் குனிந்து மிக மெல்லிய குரலில் ஷான் கேட்க, “ம்ம்ம்… கொஞ்சம் பயந்தாங்க… எல்லாம் நீ பார்த்துக்குவன்னு சொல்லிருக்கேன்…” என்றாள் அவனைப் போலவே!

“அப்பப்ப அவர்கிட்ட நீ பேசிக்க…”

“நான் பார்த்துக்கறேன்… டோன்ட் வொர்ரி…” என்று அவள் கூறியது நிச்சயமாக ஹார்லிக்ஸ் குடித்ததை போன்ற தெம்பை தந்தது.

அதற்குள் சஞ்சீவும் வெர்கீசும் அவர்களது வேலையில் பாதிக்கும் மேல் கடந்திருந்தனர்.

“அட்ரெஸ் சொல்றேன். நோட் பண்ணிக்கங்க சர்…” என்று சஞ்சீவ் சொல்ல, தயாராக வைத்திருந்த நோட்பேடில் எழுதிக் கொண்டாள் ப்ரீத்தி.

“அமைதிக்கு பெயர்தான் ப்ரீத்தி…” என்று ஆல்வின் கிண்டல் செய்ய, அதற்கு பதிலொன்றும் பேசாமல், சிறிய புன்னகையோடு ஆமோதித்தாள் ப்ரீத்தி. அதை கேட்டு வாய்விட்டு சிரித்தான் ஷான்.

“ஏமாறாத. அவ கிட்ட சிக்கினா சிக்கனு… மாட்டினா மட்டனு… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ரவி செமையா வாங்கிட்டு போனான்…” என்று சிரிக்க,

“அப்படியா?! அந்த அளவு பேசுவாங்களா?” சந்தேகமாக அவளைப் பார்த்து கேட்டான் ஆல்வின்.

அவனுக்கு பதில் கூறாமல், ஷானை பார்த்து, “வெட்டிக் கதை பேசாம, வேலைய பாருங்க பாஸ்…” என்று புன்னகைத்தவாறே கடிந்தாள் ப்ரீத்தி. ஆல்வினை பார்த்து புன்னகைத்து, ‘பார்த்தியா?’ என்று ஷான் கண்களால் கேட்க, வாயை மூடிக் கொண்டு சிரித்தான் ஆல்வின்.

இதை பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், “சஞ்சீவ்… அட்ரஸ் ரிப்பீட் பண்றேன். இன்னொரு தடவை செக் பண்ணிருங்க…” என்றவள், முகவரியை திருப்பிக் கூறினாள். அதை கேட்ட அந்த சஞ்சீவ், “ஓகே மேடம்…” என்று சரிபார்த்து முடிக்க, அதை போனில் டைப் செய்து ஷானுக்கு அனுப்பி வைத்தாள்.

முகவரியை கூகிள் மேப்பில் பார்த்தவன், “தென் இன்னொரு ஹெல்ப் வேணும் ஆல்வின்.” என்று நிறுத்த, என்னவென நிமிர்ந்து பார்த்தான் ஆல்வின்.

“பெகாசஸ் மாதிரி ஏதாவது இருக்கா? இல்லைன்னா பெகாசஸ் கிடைக்குமா?” என்று ஷான் கேட்க,

“அதை விட பெட்டராவே கிடைக்கும் ஷான். பேசிக்கா ஜெயில் பிரேக்கிங் மெத்தடாலஜி. நாம ட்ரை பண்ணலாம். முடியலைன்னா பெகாசஸ் போலாம். எத்தனை டார்கெட்?”

(பெகாசஸ் என்பது இஸ்ரேலின் என்எஸ்ஓ என்ற நிறுவனத்தின் உளவு பார்க்கும் சாப்ட்வேர். பெகாசஸ் நுழைய முடியாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். உடைக்கவே முடியாது என்று மார்தட்டிக் கொண்ட ஆப்பிளின் பாதுகாப்பு அம்சங்களை ஒரு வினாடியில் உடைத்திருக்கிறது பெகாசஸ். ஆனால் அதை தனி நபர்கள் வாங்க முடியாது. அரசாங்க காரியங்களுக்காக பல அரசாங்கங்கள் இதை உபயோகப்படுத்துகின்றன. பல நாட்டு அதிபர்களும் ஆளுமைகளும் தலைவர்களும் பெகாஸஸால் ஒட்டுக்கேட்கப்படுகிறார்கள். பத்து செல்போனை ஒட்டுக் கேட்க மூன்று லட்சம் டாலர்கள் வரை தேவைப்படும், பெகாஸஸில்.)

“இப்போதைக்கு சியூரா சொல்ல முடியாது. அட்லீஸ்ட் டென் எக்ஸ்பெக்ட் பண்றேன்.” என்றவன் ப்ரீத்தியை பார்த்து கண்களால் ‘சரியா?’ என கேட்க, அவளும் ‘ஆமென்றாள்’.

“செலவு? எவ்வளவு பண்ணலாம்ன்னு இருக்க?”

“அதை பத்தி பாதர் பண்ணிக்காத. ஆனா இட் ஷுட் பி வெரி வெரி கான்ஃபிடென்ஷியல்.”

“தென் ஓகே. நீ டார்கெட் பிக்ஸ் பண்ணு. நானே நேரா வந்து பசங்களோட உனக்கு வொர்க் பண்ணித் தரேன்.” என்று முடித்துவிட்டு எழுந்த ஆல்வின்,

“மச்சான் எனக்கொரு ஹெல்ப் வேணுமே…” என்று நிறுத்த,

“என்னடா?” என்று கேட்டான் ஷான்.

“ப்ரீத்தி மாதிரி ஒரு செக்ரட்டரி எனக்கும் கிடைப்பாங்களா?” சிரிக்காமல் கேட்டவனை பார்த்து வாய்விட்டு சிரித்தான் ஷான்.

“அவ என்னோட செக்ரட்டரின்னு யார் மச்சான் சொன்னது? ஜுபிட்டர் ரியல்டர்ஸ்ல சிவில் இஞ்சினியர் அன்ட் ஷீ இஸ் மை பெஸ்ட் ப்ரென்ட்…” என்றதும் ஷானின் தோளை தட்டிக் கொடுத்த ஆல்வின்,

“சான்ஸே இல்ல போ…” என்று கண்ணடித்து விட்டு நகர்ந்தான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஹேக் செய்த இருவரையும் அள்ளிக் கொண்டு வந்திருந்தனர் மகேஷ் தலைமையிலான அவனது பாதுகாவலர்கள்!

***

 

error: Content is protected !!