Home Authors Posts by admin

admin

557 POSTS 727 COMMENTS
Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

UVVU30

உயிர் விடும்வரை உன்னோடுதான்
அத்தியாயம் 30
முகம் சிவக்க, தன் எதிரே நின்றிருந்த ரோவனை ஆசை தீர ஒரு முறை பார்த்தாள் ஆராதனா.
“வெல்கம் டூ இந்தியா ரோவன். எப்படி இருக்கீங்க?”
“பேச்ச மாத்தாத பேபி! ஹவ் குட் யூ டூ திஸ் டு மீ?”
“ஏன் ரோவன்? ஏன் இந்த கோபம்? உங்களுக்கு இருக்கற கேபசிட்டிக்கு நீங்க எத்தனைப் பிள்ளைங்க வேணும்னாலும் பெத்துக்கலாமே! நீங்க வேணாம்னு ஒதுக்கன இந்த ஆரா பெத்த பிள்ளை மேல ஏன் இவ்வளவு அக்கறை?” மனதைக் கல்லாக்கி கொண்டு கேட்டாள்.
“பிகாவ்ஸ் ஐ லவ்ட் யூ. என் காதலுக்கு கிடைச்ச பரிசு அவன். அவன் வாழ்க்கையில நான் இருக்கனும். அப்பன் பெயர் தெரியாத பிள்ளையா அவன் வளர கூடாது”
ஐ லவ்ட் யூ எனும் வார்த்தை அவளை இன்னும் ராட்சசியாக மாற்றியது. அதாவது காதலித்தேன் என பாஸ்ட் டென்ஷில் சொன்னது அவள் மனத்தை அறுத்திருந்தது. தான் மட்டும் இன்னும் அவனையே நினைத்திருக்க இவன், தன்னை மறந்து வாழ ஆரம்பித்து விட்டானே என கோபம் எழுந்தது.
“பிரகாஷ் என்னோட மகன். அவனை சுமந்து கஸ்டப்பட்டப்ப யாரோட உதவியும் இல்லாம எல்லாத்தையும் தனியா தாங்கனவ நான். அவன் எனக்கு மட்டுமே சொந்தம். சந்தோசத்தை மட்டும் என் கூட அனுபவிச்சுட்டு, கஸ்டத்தை என்னை தனியா தாங்க வச்ச உங்களுக்கு அவனை மகன்னு கூப்பிடற அருகதையே இல்ல” வார்த்தைகள் தடித்து விழுந்தன.
அவளது பேச்சைக் கேட்டு கைத்தட்டியவன்,
“ப்ராவோ ஆரா ப்ராவோ! எப்படி , எப்படி, கஸ்டத்தை தனியா தாங்க வச்சேனா? இந்த விஷயத்தை என் கிட்ட சொல்லி இருந்தா இந்தக் கஸ்டமே வந்துருக்காதே ஆரா. வை ஆரா வை? எனக்கு ஒரு மகன் இருக்கான்ற விஷயமே உன் அப்பா சொல்லித்தான் எனக்குத் தெரியனுமா?”
‘ஓ! அவர் வேலையா இது! கொஞ்ச நாளா என்னையும் என் மகனையும் ஒரு மார்க்கமா பார்த்தது இதுக்குத்தானா? பெத்த மகள பாசமா வளர்க்க துப்பில்ல, இப்ப சாவப் போற வயசுல அவள வாழ வச்சுப் பார்க்கணும்னு துடிக்குதா!’ தன் அப்பாவை மனதிற்குள்ளேயே அர்ச்சனை செய்தாள் ஆராதனா.
“இப்ப மகன் இருக்கறது தெரிஞ்சு மட்டும் எதாவது மாற போகுதா ரோவன்?”
“கண்டிப்பா பேபி. இனி என் மகன் வாழ்க்கையில எனக்கும் இடம் வேணும்”
“மகன், மகன், மகன்! வந்ததுல இருந்து அவன் மட்டும் தான் உன் நினைப்புல இருக்கானா? இதோ, கத்திக்கிட்டு இருக்கேனே இந்த பைத்தியக்காரி, நான் இல்லையா?”
‘என் மனசு முழுக்க நீ தான் இருக்க ஆரா! ஆனா நீ கேட்கறத என்னால தர முடியலையே. என் சுயத்தை சுடும் ஒரு செயல என்னால எப்படி செய்ய முடியும்? அப்படி என் கலைய விட்டுட்டு வந்தாலும், இந்த உயிர் அரை உயிரா தானே இருக்கும். அந்த அரை உயிரால நீ கேட்கற சந்தோஷத்தைக் கொடுக்க முடியாமா ஆரா?’ மனம் வலிக்க தன் உயிர் கொல்லும் காதலியைப் பார்த்தான் ரோவன்.
அவன் பார்வையிலேயே மனதைப் படித்த ஆராதனா,
“நமக்குள்ள எல்லாம் இன்னும் அப்படியே தான் இருக்கு ரோவன். எப்போ என்னை விட்டு உன்னோட கலை பெருசுன்னு முடிவு எடுத்தியோ, அப்பவே முடிவு பண்ணேன் பிள்ளையைக் காட்டி உன்னைக் கட்டிப் போடக்கூடாதுன்னு. அது எனக்கும், என் காதலுக்கும் கேவலம். இப்போ கூட எங்க கூட உன்னால சேர்ந்து வாழ முடியாது. அப்புறம் எதுக்கு இந்த சீன்? பேசாம திரும்ப போயிரு ரோவன்”
“பையன என் கண்ணுல கூட காட்ட மாட்டீயா ஆரா? என் வாரிச பார்க்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா?”
“எந்த வாரிசு ரோவன்? டெல் மீ! வாரிசு வந்துரக் கூடாதுன்னு அவ்வளவு கவனமா இருப்ப! எங்கயோ தப்பு நடந்ததுனால இந்த வாரிசு வந்துச்சு. இல்லைன்னா இப்போ பார்க்கத் துடிக்கறீயே வாரிசு, அது எப்படி சாத்தியம்?” ஏளனமாக சிரித்தாள் ஆராதனா.
“உனக்காகத் தான் நான் கவனமா இருந்தேன்னு உனக்குப் புரியலையா ஆரா? எங்க கல்ச்சர்ல கல்யாணம் இல்லாமலே குழந்தைப் பெத்துக்கறது சர்வ சாதாரணம். உங்களுக்கு அப்படி இல்லையே. என்னோட செயல் ஒன்னொன்னும் உன் நன்மைய சுற்றி தான் இருக்கு ஆரா.” கண்களைத் தேய்த்துக் கொண்டான்.
போன் வழியாக விஷயத்தைக் கேள்வி பட்டதில் இருந்து அவனால் அங்கே இருக்க முடியவில்லை. ஆராதனாவையும் மகனையையும் பார்க்க வேண்டும் எனும் ஆவலில் கிடைத்த அடுத்த ப்ளைட்டிலேயே விழுந்தடித்துக் கொண்டு வந்திருந்தான். அவள் போன இந்த ஒரு வருடமாக, அவளைப் பார்க்கத் துடித்த மனதை அடக்கி இப்பொழுது தான் கொஞ்சம் சமன் பட்டிருந்தான். மீண்டும் இந்த திருப்பம் அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருந்தது.  
களைப்பில் நெற்றியைத் தேய்த்து கொண்டவனை அமர சொன்னவள், செக்ரட்டரியை அழைத்து ப்ளாக் காபி கொண்டு வர சொன்னாள்.
“குடிங்க ரோவன்!”
மறுக்காமல் வாங்கிக் குடித்தவனுக்கு, லேசாக களைப்பு நீங்கி இருந்தது. அவள் கரிசனத்தைப் பார்த்தவனுக்கு நெஞ்சை அடைத்தது. தன் குடும்பத்தை விட்டுவிட்டு தான் மட்டும் வாழ்க்கையில் என்ன சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணம் வேறு மனதைக் குடைந்தது. அவள் கொடுத்த சாய்ஸ் கண் முன்னே ஆடியது. கண்களை இருக மூடித் திறந்தவன்,
“ஆரா பேபி! நான் உன் கூடவே வந்துடறேன். இனி எனக்கு வேற எதுவும் வேணாம். நீயும், மகனும் போதும்” என்றான்.
கைகளைக் கட்டிக் கொண்டு சிறிது நேரம் அவனை ஆழப் பார்த்தாள் ஆராதனா.
“நீ எங்களுக்காக உன் வாழ்க்கைய பிச்சைப் போட வேணாம் ரோவன். அப்படிப்பட்ட வாழ்க்கையே எங்களுக்கு  வேணாம்” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.
ஏற்கனவே, ஆண் வாரிசு என்பது கனவாய் போனதும் தன்னிடம் பாசம் காட்டிய பெற்றவர்களை கண்டவளுக்கு, இவ்வளவு நாள் தன்னைத் தேடி வராமல் பிள்ளை இருப்பது தெரிந்ததும் வந்திருக்கும் ரோவன் மேல் கொலை வெறியே வந்தது.
‘அன்புக்கு மட்டும் தான் நான் தலை வணங்குவேன். ஆனா நான் மனம் திறந்து உன் கிட்ட காட்டுன அன்புக்கு நல்ல பாடத்தை அனுபவிச்சுட்டேன். போதும்! இந்த காட்டாறு இனி யாருக்கும் தேங்கி நிற்காது. அடிச்சு தள்ளிட்டுப் போய் கிட்டே இருக்கும்’
“ஆரா!”
“ஆரா தான்! வந்தது வந்துட்டீங்க. பிள்ளையைப் பார்த்துட்டு கிளம்பி போயிட்டே இருங்க”
வீட்டிலிருந்து மகனை அழைத்து வர செய்தவள், அமைதியாக நாற்காலியில் அமர்ந்து கணக்கு வழக்குகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
பிள்ளையுடன் ஆராவின் அம்மாவும் அப்பாவும் சேர்ந்தே வந்திருந்தார்கள். அவர்கள் வரும் போதே ஆராவுக்குப் புரிந்து விட்டது ஏதோ திட்டத்துடன் தான் வருகிறார்கள் என.
அவர்கள் தூக்கி வந்த தன் மகனைப் பார்த்ததும் ரோவனுக்குக் கண் கலங்கி விட்டது. ஆசையாக ஒரு வயது பிரகாஷைத் தூக்கி உச்சி முகர்ந்தவன், இறுக்கி அணைத்துக் கொண்டான். அந்நிய ஆளைப் பார்த்ததும் குட்டிப் பிரகாஷ் வீறிட்டு அழ ஆரம்பித்தான்.
“புள்ளைக்கு இவர்தான் அப்பான்னு கூட சொல்லாம, எங்களையும் சொல்ல விடாம வளர்த்துருக்க. பெத்த தகப்பன் பேரு தெரியாம வளரறது எல்லாம் நம்ம பரம்பரைக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா?” ஆரம்பித்தார் ஆராவின் அம்மா.
இன்னும் என்ன வரப்போகிறது என யோசித்துக் கொண்டே அமைதி காத்தாள் ஆரா. ரோவனோ இங்கே நடக்கும் சம்பாஷனையை கவனிக்காமல் மகனை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கி இருந்தான்.
“இவ்வளவு நாள் தான் நீ இழுத்த இழுப்புக்கு வந்தோம். இப்பவாவது நாங்க சொல்லறத கேளு ஆரா. நான் இருக்கப் போறது இன்னும் ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ தான். அதுக்குள்ள நீ வாழ்க்கையில செட்டல் ஆகறத நாங்க பார்க்கனும்” கண் கலங்கினார் ஆராவின் அப்பா. அவருக்கு சமீபத்தில் தான் ப்ரோஸ்டேட் கான்சர் என கண்டுப்பிடிக்கப் பட்டிருந்தது. அவருக்குப் பின் மனைவி வாழ வீடு, பணம் என ஒரு வழி செய்துவிட்டாலும், மகளை இப்படியே விட்டு போக அவருக்கு மனம் வரவில்லை. அதனால் தான் தேடிப் பிடித்து ரோவனை தொடர்பு கொண்டிருந்தார்.
“என்ன செய்யனும்?” கைகளைக் கட்டிக் கொண்டு தகப்பனை நேர் பார்வைப் பார்த்தபடி கேட்டாள் ஆரா.
“நீ காதலிச்ச இவரையே கல்யாணம் பண்ணிக்க. சேர்ந்து சந்தோஷமா இருங்க. அப்பத்தான் என் ஆத்மா சாந்தி ஆகும்”
“கல்யாணம் பண்ணிக்கறேன். ஆனா இவர இல்ல”
“ஆரா!” அதிர்ச்சி அடைந்தனர் அவளின் பெற்றோர்.
ஹிந்தியில் இவர்களின் வாக்குவாதம் நடந்ததால், புரியாமல் நின்றிருந்தான் ரோவன்.
“பிள்ளையை அவன் கிட்ட பெத்துக்கிட்டதனால அவனைத் தான் கட்டிக்கனும்னு ஏதாவது கட்டாயம் இருக்கா? நீங்க எந்த காலத்துல இருக்கீங்க?” நக்கலாக கேட்டாள்.
“ஆரா! உன்னைப் பெத்தவங்க கிட்ட இப்படித்தான் பேசுவியா?” ஆத்திரமாக கேட்டார் அவள் அம்மா.
“பெத்தேன், பெத்தேன்னா! ஆடு மாடு கூட தான் பெத்துக்குது. அதெல்லாம் மேட்டரா?” இன்னும் நோகடித்தாள்.
அவர்கள் மிஞ்ச மிஞ்ச இவள் இன்னும் எகிறுவாள் என அறிந்த அவள் அப்பா, பட்டென அவளது கையைப் பற்றிக் கொண்டார். மகளின் கையைப் பிடித்து தன் முகத்தில் வைத்துக் கொண்டு கதறிவிட்டார்.
“எங்களை மன்னிச்சிரு ஆரா. நாங்க உனக்கு ஆராதனானு பெயர் வச்சோமே தவிர, உன்னை ஆராதிக்கல. மன்னிப்புன்னு ஒரு வார்த்தையில நாங்க செஞ்ச பாவத்தைக் கழுவ முடியாது. ஆனா இப்படி நீ பட்ட மரமா இருக்கறது எங்களை தினம் தினம் கொல்லுதும்மா ஆரா. தயவு செஞ்சி எங்களுக்கு மோட்சத்தைத் தா”
ஆராதனா கல் நெஞ்சுக்காரி தான். மிரட்டுபவர்களை கோபத்தால் சாய்த்திருப்பாள், கண்ணீர் விடுபவர்களை என்ன செய்வாள்!
‘நீங்க கேட்கறத என்னால குடுக்க முடியாதே அப்பா ! ஒரு சுதந்திர மனுஷன என் காதலைக் காட்டி என்னால கட்டிப் போட முடியாதே. என் கூட இவன் எப்பவும் இருக்கனும்னு ஆசைப்பட்டேன் தான். ஆனா அப்படி வந்தா அவன் சந்தோஷமா இருக்கற மாதிரி நடிப்பானே தவிர, உயிர்ப்போட இருக்க மாட்டான்! என் ரோவனா என்னால நடைப்பிணமா மாத்த முடியாதுப்பா. அதுக்காக அவன் இன்னொருத்திய கலை கண்ணால பார்த்துட்டுப் போகட்டும்னும் என்னால விட முடியலையே. நான் என்னப்பா செய்யட்டும்?’
“நான் ஏற்கனவே இன்னொருத்தன காதலிக்கறேன்பா. உங்க கிட்ட சொல்லறதுக்குள்ள, நீங்க இவர வரவச்சு பிரச்சனையை இழுத்து விட்டுட்டீங்க” என பொய் சொன்னாள்.
“யாரு ஆரா? சொல்லு நாங்க பார்க்கனும். இப்பவே!” உணர்ச்சிவசப்பட்டவர் அவள் முன்னேயே மயக்கம் போட்டு விழுந்தார். அப்பாவைத் தாங்கிப் பிடித்தவள், அவசரமாக தன் செகரெட்டரியை கத்தி அழைத்தாள்.
“ஜெய், கால் தே ஆம்புலன்ஸ்”
அடுத்தப் பதினைந்தாவது நிமிடத்தில் குடும்பமே, ஐசியூ முன் நின்றிருந்தது. வெளியே வந்த டாக்டர்,
“ஆரா மேடம்! அப்பாவுக்கு இப்பவோ அப்பவோன்னு தான் இருக்கு. உங்க கிட்டப் பேசனும்னு சொல்லறாரு. போய் பாருங்க” என்றார்.
உள்ளே நுழைந்தவள் அவரது கையைப் பற்றிக் கொண்டு,
“டாடி” என அழைத்தாள்.
மெல்ல கண் விழித்தவர்,
“ஆரா! எனக்கு டைம் இல்லம்மா. நான் கண்ண மூடுறதுக்குள்ள  உன் கல்யாணத்தப் பார்க்கனும். கொஞ்சம் தயவு காட்டும்மா” என விட்டு விட்டுப் பேசினார். ஆராவுக்குமே அவர் நிலையைப் பார்த்துக் கண் கலங்கியது.
சரி என தலை ஆட்டியவள், மெல்ல வெளியே வந்தாள். செக்ரட்டரியை அருகே அழைத்தவள்,
“ஜெய், கோ கெட் மீ அ மங்கல்சூத்ரா. யூஸ் மை கார்ட்” என நீட்டினாள்.
“என்ன மாதிரி டிசைன் வேணும் மேம்?”
“ஏதாவது ஒரு டிசைன். வாங்கிட்டு வந்து தொலை. நான் எப்பொழுதும் சொல்லற மாதிரி கேள்வி கேட்கறத குறைச்சுக்க. போ!” கத்தினாள்.
விட்டாள் போதும் என ஓடினான் ஜெய்.
“ஆரா! அப்பா எப்படி இருக்காரு? ஹிஸ் எவரிதிங் ஓகே?” என கேட்டான் ரோவன்.
அவன் முகத்தை ஒரு நிமிடம் ஆழ நோக்கியவள், ஆமென தலையாட்டினாள்.
பிரகாஷ் அவன் பாட்டியின் மடியில் தூங்கி இருந்தான்.
ஜெய் திரும்பி வரும் போதெல்லாம் ஆராவின் அப்பாவை நார்மல் வார்டுக்கு மாற்றி இருந்தார்கள். போகப் போகும் உயிரை ஐசியூவில் அடைத்து வைக்க வேண்டாம் என சொல்லி விட்டாள் ஆரா. அனைவரும் ரூமில் இருக்க,
“டேடி! கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்க” என அழைத்தாள் ஆராதனா. அவர் கண்ணைத் திறந்து அனைவரையும் ஒரு முறைப் பார்த்தார்.
“நீங்க கேட்டத நான் நிறைவேத்தி தரேன் டேட். இனி நிம்மதியா இருங்க” என்றவள்,
“ஜெய்! கிவ் மீ தெ மங்கள்சூத்ரா” என கேட்டாள்.
குட்டி பாக்சில் இருந்ததை அவளிடம் நீட்டினான் அவன்.
“திறந்து குடு”
அங்கு நடப்பதை ஒரு வித புரியாத பாவத்துடன் பார்த்திருந்தான் ரோவன்.
திறந்து அவள் கைகளில் நீட்டினான். அதை வாங்காமல் ஜெயின் முகத்தையே கூர்ந்து நோக்கினாள் ஆரா. அவளின் பார்வை வீச்சை தாங்க முடியாமல், தலை குனிந்துக் கொண்டான் அவன்.
“ஜெய்! இத என் கழுத்துல பூட்டு” ஆளுமையுடன் சொன்னாள் ஆரா.
“மேம்!” குரல் நடுங்கியது அவனுக்கு. அவர்கள் பேசுவது புரியாத ரோவனைத் தவிர மற்றவர்கள் அதிர்ச்சியாக பார்த்திருந்தார்கள்.
“ஹ்ம்ம். சீக்கிரம்” கட்டளையாக வந்தது குரல்.
கை நடுங்க அந்த கருப்பு மணியில் தங்கம் கோர்த்திருந்த மங்களநாணை அவள் கழுத்தில் அணிவித்தான் ஜெய். அவன் அணிவிக்கும் போது கூட ஆராவின் பார்வை முழுக்க ரோவனையே பார்த்திருந்தது.
அந்த மாதிரி திருமண சடங்கை ஏற்கனவே பார்த்திருந்தா ரோவன்,
“ஆரா!” என அதிர்ச்சியில் கூவினான்.
நேராக அவன் கண்ணைப் பார்த்தவள்,
“நவ் ஐ ஹேவ் செட் யூ ப்ரீ ரோவன். இனிமே பிள்ளை குடுத்ததுக்காக நீ எனக்கு எந்த வகையிலும் கடமைப் படல. யூ ஆர் அ ப்ரீ மேன் நவ். பிரகாஷ் மேல உனக்கு உரிமை இருக்குன்றத நான் ஒத்துக்கறேன். உன்னால அவனை வளர்க்க முடியாது. உன் லைப் ஸ்டைலுக்கு அது ஒத்து வராது. வருஷத்துல ஓன் மன்த் சம்மர் ஹோலிடே அப்போ உன் கிட்ட இருக்கட்டும். மீதி நாள்லாம் என் கூட இருக்கட்டும். என் வக்கீல் கிட்ட இருந்து லீகலா உனக்கு எல்லா டீடெய்ல்சும் வரும்.”
அதிர்ச்சியில் நின்றிருந்தவன் அருகில் வந்தவள், அவனை இறுக அணைத்து விடுவித்தாள்.
“டேக் கேர் ரோவன்! தேங்க்ஸ் ஃபார் எவரிதிங். பாய்” என நடக்க ஆரம்பித்தவள், பின் திரும்பி வந்து மகனைத் தூக்கிக் கொண்டாள். ஜெயை திரும்பிப் பார்த்தவள்,
“வா !” எனும் ஒற்றை சொல்லோடு இவர்களின் கண்ணில் இருந்து மறைந்தாள். இது நடந்து ஒரு வாரத்தில் உலகை விட்டுப் பயணித்தார் ஆராவின் அப்பா.  
அதிலிருந்து ஆரம்பித்தது பிரகாஷின் சட்டதிட்டங்களுடன் கூடிய மிலிட்டரி வாழ்க்கை. ஜெய் இவர்களுடன் தான் இருந்தான் ஆராவின் நிழலாக. ஆராவின் பின் ஒரு பீதியுடனே சுற்றிக் கொண்டிருப்பான். நில் என்றால் நிற்பான், ஓடு என்றால் ஓடுவான். வாய் திறந்து அவர்கள் இருவரும் பேசி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பேசுவதெல்லாம் ஆராதான். அவளின் செக்ரட்டரியாக இருந்ததால் கண் அசைவிலேயே என்ன வேண்டும் என அறிந்துக் கொள்வான் ஜெய். பிரகாஷிடம் தனித்துவமான பாசம் எதையும் அவன் காட்டியதில்லை என்றாலும், சீ போ என ஒதுக்கியதும் இல்லை. இருவருக்கும் தனி தனி அறைதான். திருமணம் ஆகியும் கன்னிப்பையனாக சுற்றிக் கொண்டிருந்த ஜெய்கும் கடவுள் கருணை காட்டினார்.
முழுதாக ரோவனை மறக்க மூன்று வருடம் எடுத்துக் கொண்ட ஆராதனா, ஜெயின் ரூமுக்குள் அன்று நுழைந்தாள்.
“என் ரூமுக்கு வா ஜெய்!” ஆச்சரியமாகப் பார்த்தவனை,
“சுத்தமா குளிச்சிட்டு, வாசமா வா! யூ ஹேவ் டென் மினிட்ஸ்!” என்றவள் விறுவிறுவென தன் ரூமுக்குள் சென்று விட்டாள். அன்று ஜெய் தீயாய் செய்த வேலை, அடுத்த பத்தாவது மாதத்தில் பலனைத் தந்தது. பிரகாஷின் ஐந்தாவது வயதில் ஆராதனா, ஜெய்பிரகாஷ் கப்பூரை ஈன்றெடுத்தாள். பிரகாஷ் கப்பூர்.ஜே(Prakash Kapoor.J) என பேர்த் சர்டிபிகெட்டில் கொடுத்திருந்தாள் ஆரா. ஏன் என கேட்ட ஜெய்க்கு,
“பிரகாஷ் எங்க குடும்ப பெயர். என் அப்பா கூட ராம்பிரகாஷ். உனக்கு தெரியாதா? அவரோட அப்பா பெயர் ராம்தேவ் பிரகாஷ். இப்படி அப்பா பெயருல பாதிய எடுத்து பிரகாஷ கோர்த்து தான் எங்க பரம்பரையில பெயர் வைப்பாங்க. நான் பொண்ணா போயிட்டதால எனக்கு அந்த ரோதனை இல்லாம போச்சு. உன் பேர நம்ம மகனுக்கு வச்சிருக்கேன். ஆனா பிரகாஷ் அப்பா மேல உள்ள கோபத்துல அவனுக்கு வெறும் பிரகாஷ்னு வச்சிட்டேன். பிரகாஷ்கு விவரம் தெரிஞ்சு அவங்க அப்பா பெயர அவனுக்கு ஏன் வைக்கலன்னு கேட்கக் கூடாது பாரு. அதுக்குத்தான். நாம சின்னவன, ஜேபீன்னு கூப்படலாம்.” என்றவள்,
“சரி, எப்ப இருந்து நான் எடுக்கற முடிவுக்கு எதிர் கேள்வி கேட்க ஆரம்பிச்ச? பக்கத்துல படுக்க இடம் குடுத்த உடனே உனக்கு உரிமை வந்துருச்சா?” முறைத்தவாறே கேட்டாள்.
“இல்ல ஆரா! ஹ்ம்ம் ஆரா மேம்!” தடுமாறினான் ஜெய்.
“இப்படியே பயத்திலேயே சுத்திட்டு இருக்கனும். போ, போய் கதவ சாத்திட்டு வா. என்னை எதிர்த்து பேசன வாய்க்கு தண்டனை வேணாம்!” கோபமாக பேசினாலும், அதில் மறைந்திருக்கும் அன்பை அறியாதவனா ஜெய்! சந்தோசமாக கதவை மூட சென்றான்.
“டாடி! எனக்கு லெமனெட் வேணும்” மியாமி பீச் மணலில் துண்டு விரித்துப் படுத்திருந்த பிரகாஷ், பக்கத்தில் படுத்திருந்த ரோவனை அசைத்தான்.
“ஓன் செக் சன்” எழுந்து சென்றவன், மகன் கேட்ட பானத்தோடு ஹாட் டோக்கையும் சேர்த்து வாங்கி 
வந்தான். சாப்பிடும் தன் பணிரெண்டு வயது மகனை ஆசை தீர பார்த்திருந்தான் ரோவன்.
‘ராட்சசி! டயட், டிசிப்ளின், டைம் கீப்பிங்னு சொல்லி சின்ன பையன இப்படி வளர்த்து வைக்கிறா. ஒரு வயசுலயே மோட்டார் ஸ்கில் கிளாஸ்னு யாராச்சும் அனுப்பிருப்பாங்களா? வளர வளர கையும் காலும் தானா வேலை செய்யப் போகுது. அதுக்குப் போய் கிளாஸ் அனுப்பி, பேப்பர கசக்கறது, கலிமண்ணை உருட்டறதுன்னு டார்ச்சர் பண்ணி வச்சிருக்கா. ஏதாவது கேட்டா, ஓன் மந்த் பார்க்கிறதையும் நிறுத்தவான்னு மிரட்டறா.’
ஆராவின் திருமணம் முடிந்ததும் மனமொடிந்து திரும்பியவன், வரைவதிலேயெ தன்னை மூழ்கடித்துக் கொண்டான். ஆரா தன் முன்னே இப்படி நடந்துக் கொண்டும் கூட, அவனால் அவளை கோபிக்க முடியவில்லை. முயன்று மனதை தேற்றியவன், கொஞ்சம் கொஞ்சமாக நார்மலாக ஆரம்பித்தான். மறுபடியும் டேட்டிங், ஓன் நைட் ஸ்டாண்ட், இப்படி மனதை திருப்பினாலும் எந்தப் பெண்ணும் அவன் மனதைத் தொடவில்லை. மகனுடன் இருக்கும் அந்த ஒரு மாதம் மட்டுமே அவனை உயிர்ப்புடன் வைத்திருக்கும். வேலை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு மகனுடனே நேரத்தைக் கழிப்பான்.
இவனுடன் இருக்கும் போது மட்டும், மகனை சுதந்திரமாக விட்டு விடுவான் ரோவன். அவனுக்குப் பிடித்ததை சாப்பிட விடுவான், ஆரா தடை விதித்திருந்த ஓவியம் வரைவதை செய்ய விடுவான், என்னேரம் வேண்டும் என்றாலும் தூங்கி என்னேரம் வேண்டுமானாலும் எழ அனுமதிப்பான்.
“சன்! இப்போ உன்ன என்ன கிளாசுக்கு அனுப்பறா உங்க மம்மி?” ஒவ்வொரு தடவை வரும் பொழுதும் புதிதாய் ஏதாவது கற்றிருப்பான் பிரகாஷ்.
“தமிழ் கிளாஸ் போறேன் டேட்”
“தமிழா?”
“யெஸ் ! நம்ம கார் சேல்ஸ் தமிழ் நாட்டுலயும் நடக்குது இல்ல. அதனால தமிழும் கத்துக்கனும் சொல்லிட்டாங்க மம்மி”
“தம்பியையும் கிளாஸ் சென்ட் பண்ணுறாங்களா உங்க மம்மி?”
“இல்ல டேடி”
“ஏன்?”
“ஏன்னா நான் உங்க மகன். உங்க மாதிரியே லைப்ப ஈசியா எடுத்துக்குவேன். சோ ஐ நீட் டிசிப்பிளின். தம்பி, ஜெய் டாடியோட மகன். அவனுக்கு ஜெனடிக்லி எல்லாம் சரியா இருக்கும்.”
முகம் சுருங்கியது ரோவனுக்கு.
“அப்படின்னு யார் சொன்னது?”
“யாரும் என் கிட்ட சொல்லல. மம்மி, ராணிம்மா கிட்ட பேசனப்போ நான் கேட்டேன். உங்கள மாதிரி நான் லைப்ப ஜாலியா எடுத்துக்க கூடாதாம். பொறுப்புணர்ச்சி இருக்கனுமாம். இன்னும் நிறைய சொன்னாங்க”
‘இப்படி எந்த கவலையும் இல்லாம நீங்க இருக்கறது தான் ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க டேக் இட் ஏசி போலிசி தான் என்னை கவர்ந்திழுக்குது. ரசனையோட என்னை நீங்க கையாளற விதத்துல தான் நான் உங்க காலடியில விழுந்து கிடக்கறேன். இப்படிலாம் பேத்திட்டு, அதே குணங்கள் மகனுக்கு வரக்கூடாதுனு நீ நினைக்கறது நியாயமே இல்ல ஆரா. விதை ஒன்னு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்?’(லைக் ஃபாதர் லைக் சன்- அப்படிதாங்க நினைச்சாரு. நான் தான் தமிழ்ல மாத்திட்டேன்)  
“சாரி சன்! ஐ லெட் யூ டவுன். என்னால தானே உனக்கு இவ்வளவு கட்டுப்பாடு. மம்மி கிட்ட பேசி உன்னை என் கூடவே வச்சிக்கவா?”
வேண்டாமென தலையாட்டியவன்,
“ஐ லவ் மம்மி. கண்டிப்பா இருந்தாலும் டீப் டவுன் ஷீ லவ்ஸ் மீ. நான் வந்துட்டா அவங்க ரொம்ப சேட் ஆயிருவாங்க. தம்பிய கிளாசுக்கு அனுப்பலனாலும், என்னை ட்ரீட் பண்ணுற மாதிரி தான் அவனையும் ட்ரீட் பண்ணுறாங்க டாடி. இப்ப இருக்கற மாதிரியே இருக்கலாம்.”
“அப்போ நீ என்னை லவ் பண்ணலயா சன்?”
தந்தையை இருக அணைத்தவன்,
“இந்த முடிவு உங்களுக்காகவும் தான் டாடி. ஓன் மன்த் என் கூட இருக்கறப்பவே, நீங்க நிறைய ஆர்ட் டீலிங்ச மிஸ் பண்ணிருறீங்க. எவ்வளவு லாஸ் ஆகுது உங்களுக்கு. ஐ டோண்ட் வாண்ட் டூ பேர்டன் யூ” என்றான்.
பனிரெண்டு வயதில் மகனின் அறிவாளித்தனத்தில் மனம் நிறைந்து போனான் ரோவன்.
‘ஆரா, நாம ஒரு அழகான தேவதைப் பையன படைச்சிருக்கோம். அன்பு, அழகு, அறிவு, ஆளுமை, அரவணைப்பு எல்லாமே கலந்து செய்த கலவை இவன். வீ ஆர் லக்கி டூ ஹேவ் ஹிம்.’ மகிழ்ந்துப் போனான்.
“சன், ஐ லவ் யூ சோ மச். டூ யூ க்னோ தட்?”
“ஐ லவ் யூ டூ டாட்”
இருவரும் நீந்தி விட்டு வந்து மீண்டும் ஓய்வெடுத்தனர்.
“பை தெ வே டாட்! உங்க நீயூ மாடல் கார்லாவ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ திங்க் ஐம் இன் லவ் வித் ஹேர்”
‘அடேய் சன்! அவளுக்கு இருபது வயசுடா ! நானே பதினாலு வயசுல தான் சைட்டடிக்க ஆரம்பிச்சேன். நீ பனிரெண்டு வயசுலயே ஸ்டார்ட் பண்ணிட்டியா? எப்படி உங்கம்மா பார்த்து பார்த்து வளர்த்தாலும், என் மகன்டா நீ. என் ரத்தம்’ உள்ளுக்குள் சந்தோஷம் ஊஞ்சலாடியது. அதெல்லாம் கோபத்தில் முகம் சிவக்க ஆரா அவன் மனக்கண்ணில் வரும் வரைக்கும் தான்.
‘உங்க மம்மிக்கு தெரிஞ்சா இனி என் முகத்துலயே முழிக்க விடமாட்டாளே’
யோசனையாக மகனைப் பார்த்தவன், அவனின் சீரியஸ்சான முகத்தைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்க மிகவும் கஸ்டப்பட்டான் ரோவன்.
“இது காதல் செய்யற வயசு இல்ல சன். இந்த வயசுல உடம்புக்குள்ள பல மாற்றங்கள் வரும். ஹார்மோன்கள் பேயாட்டம் போடும். எந்த கேர்ள் சின்னதா பார்த்து சிரிச்சாலும், நமக்குள்ள பல கற்பனைகள் ஓடும். ஒரு  அப்பாவா மட்டும் இல்லாம ஒரு ஆம்பிளையா உன்னோட பீலிங்ஸ்ச என்னால புரிஞ்சிக்க முடியுது சன். பட் இதெல்லாம் இன்பாக்சுவேஷன் தான். ட்ரூ லவ் நீ இன்னும் ரொம்ப பெரியவனா ஆனதும் தான் வரும். அது வரைக்கும் பெண்கள் கண்ண பார்த்து மட்டும் தான் பேசனும். உனக்குன்னு வரவ கிட்ட மட்டும் எங்க வேணும்னாலும் பார்த்து பேசலாம்” (இதுல சில வரிகள் ஏற்கனவே எங்கயோ கேட்ட மாதிரி இல்ல? ப்ரௌனி மணி கிட்ட பேசனதுதான்)
“ட்ரூ லவ்னு நான் எப்படி தெரிஞ்சிக்கறது டாடி?”
“ஹ்ம்ம்!” தாடையை சொரிந்தான் ரோவன்.
“அவ கண்ணுல தண்ணிய பார்த்தா உனக்கு மனசு துடிக்கும். உடனே ஓடி போய் கண்ணைத் துடைச்சி அணைச்சிக்கனும்னு தோணும். அது ட்ரூ லவ்” இந்த வயதில் இவ்வளவு எளிதாக சொன்னால் போதும் என நினைத்தான் ரோவன்.
ஆனால் மகன் அதையே நினைத்திருந்து, தன் காதலை அப்படிதான் அடைவான் என்பது அந்த தந்தைக்குத் தெரிந்திருக்கவில்லை.
(தொடர்ந்து உன்னோடுதான்)  

Naan aval illai 18

விஸ்வரூபம்
வேந்தன் தன் வருங்கால மனைவி லாவண்யாவிடம் ரகசியம் பேசியபடியே, அவள் வீட்டின் வாயிலுக்கு வெளியே நடந்துவந்து கொண்டிருந்தான்.
பின்னோடு அவன் வருங்கால மாமியார் கூர்மையாக அவர்களையே பார்த்து கொண்டிருந்தார். 
திருமணத்தை நெருக்கத்தில் வைத்து கொண்டு அவர்கள் இப்படி தனியாக வெளியே செல்வதில் அவருக்கு துளியும் விருப்பம் இல்லையென்பது அவர்கள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.
ஆனால் என்ன செய்ய முடியும். வேந்தன் பிடிவாதமாய் நிற்க, அவன் வீட்டிலும் அனுப்பி வைக்க சொல்லி போஃன் !
பெரியவர்களால் நிச்சியக்கப்பட்டாலும் சரி. அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி. மாப்பிள்ளை வீட்டாரின் கை ஓங்கியிருப்பதுதானே வழக்கம்.
ஆதலால் ஒரு எல்லைக்கு மேல் அவரால் மறுக்க முடியவில்லை. 
மனதில் பதட்டத்தை தேக்கிக் கொண்டு  சிரமப்பட்டு புன்னகையித்து வழியனுப்பினார். 
இது இன்றைய காலகட்டத்தில் இயல்புதான் என்றாலும் பல குடும்பங்கள் இன்னும் அத்தகைய எல்லை கோடுகளை தாண்ட யோசித்து கொண்டிருந்தனர்.
கிட்டதட்ட வேந்தன் வீட்டிலும் அப்படிதான். 
முழுதாக அவன் கேட்டதை நிறைவேற்றாமல் கூடவே பாதுகாவலனாய் எழிலின் பெரிய மகன் புகழை துணைக்கு அனுப்பிவிட்டிருந்தனர். 
ஆதலால் வேந்தனுக்கு உள்ளுக்குள் குமைந்தது. எரிச்சலோடு வந்தவன் அதை லாவண்யாவிடம் காட்டினான். 
“உன்னை ஒரு ஷாப்பிங் கூட்டிட்டு போக நான் எல்லார் காலில் விழனுமா?” என்று அலுத்துக் கொண்டு கேட்டான். 
அவனின் அதிகாரமான வார்த்தைகள் அவளை காயப்படுத்தினாலும் அதனை காட்டிக்  கொள்ளாமல் “கல்யாண நெருக்கத்தில ஷாப்பிங் போனோன்னு சொன்னா யார்தான் அனுப்புவாங்க… அதுவும் இல்லாம… உங்களுக்கு டிரஸ் எடுக்க போறதுக்கு நான் எதுக்கு?” என்று அமர்த்தலாகவே கேட்டாள்.
வேந்தன் அவளை கூர்மையாய் பார்த்தபடி “மேடம்தானே உங்க லெகங்கா கலர்லயே நான் குர்தா போடனும்னு ஆர்டர் போட்டீங்க? அப்ப நீங்கதானே செலக்ட் பண்ணனும்…” என்று பழியை அவள் புறமே திருப்பிவிட்டான். அவன் சொன்னதை கேட்டு அவள் புன்னகையிக்க,
அவனும் சிரித்தபடியே காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.
அப்போது பக்கத்து இருக்கையில் அவனின் தங்கை மகன் புகழ் ஏற வரவும் 
“டே புகழ்… .மாமி முன்னாடி உட்கார்ந்துக்கட்டுன் டா… நீ பின்னாடி உட்கார்ந்துக்கோ”  என்று வேந்தன் உரைக்க
“உம்ஹும்.. நான் முன்னாடிதான் உட்காருவேன்… வேண்ணா மாமி பின்னாடி உட்கார்ந்துக்கட்டும்” என்றதும் வேந்தனுக்கு கோபம் பொங்கி கொண்டு வர மனதிற்குள் ‘பிள்ளையை வளர்த்து வைச்சிருக்கா பாரு ‘ என்று தங்கையை கடிந்து கொண்டான். 
புகழ் பிடிவாதமாய் ஏற வர வேந்தன் உடனே “சரி… நீ மாமா போஃனை வைச்சுக்கோ… ஆனா பின்னாடிதான் உட்கார்ந்துட்டு வரனும்” என்றான்.
அவன் குதுகலமாய் அவன் பேசியை தாவி வாங்கிக் கொண்டவன் “ஒகே” என்று சம்மதித்துவிட்டு லாவண்யாவுக்கு வழிவிட்டு பின்னாடி போக அவள் உள்ளே வந்து அமர்ந்தாள்.
புகழ் பின்கதவை திறக்க பிராய்த்தனப்பட,
அந்த சந்தர்ப்பத்தில் லாவண்யாவை தன் அருகில் இழுத்து அவள் உதட்டில் அவசரம் முத்தம் ஒன்றை வழங்க, அதனை எதிர்பாராதவள் முகம் வெட்கத்தில் சிவிந்தது.
அவனை ஏறிட்டு பார்க்காமல் அவள் திரும்பிக் கொள்ள, அவளை பார்த்து கள்ளத்தனமாய் புன்னகையித்தவன் “ஏறிட்டியா புகழ் ? போலாமா” என்று கேட்க “ஹ்ம்ம்… ஒகே மாமா” என்று கைப்பேசியில் விளையாடியபடியே உரைத்தான். 
கார் புறப்பட வேந்தன் லாவண்யாவை பார்வையாலயே சீண்டி நாணப்படச் செய்து கொண்டு வந்தான்.
அதோடு அவள் கரத்தை வேறு இறுக்கமாய் பற்றி கொள்ள
லாவண்யா அவஸ்த்தையோடு “விடுங்க? புகழ் இருக்கான் பின்னாட” என்று மெல்லிய குரலில் எச்சரித்தாள்.
“அவன் இருக்கிறதினாலதான் நான் இந்தளவுக்கு கன்டிரோலா வந்துட்டிருக்கேன்” என்று சொல்லி அவன் பார்த்த பார்வையில் அவள் உடலெல்லாம் அவளை அறியாமல் சிலிர்த்து கொண்டது.
கார் தியாகராய நகருக்குள் நுழைய, இயல்பாகவே கூட்ட நெரிசலுடைய சாலை. ஆனால் இன்று கட்டுக்கடங்காத நெரிசலுக்குள் சிக்கித் தவித்து கொண்டிருந்தது. 
வண்டிகள் நகராமல் அப்படியே தேங்கி நின்றுக் கொண்டிருந்தது.
அதோடு வாகனத்தில் செல்பவர்களை விட நடந்து செல்பவர்களின் கூட்டம்  அதீதமாய் இருந்தது.
முன்னாடி நின்றிருந்த வாகனம் எதுவும் ஒரு இஞ்ச் கூட நகராமல் நின்றுக் கொண்டிருக்க வேந்தன் இதை எதிர்பார்க்கவில்லை.
லாவண்யாவுக்கும் அந்த வாகன நெரிசல்களை பார்த்து கலக்கம் தொற்றிக் கொண்டது.
  முன்னுக்கும் செல்ல முடியாமல் பின்னுக்கும் செல்ல முடியாமல் அவர்கள் மாட்டிக் கொண்டிருக்க,.எத்தனை நேரம் ஒரே இடத்தில் நகராமல் நின்றிருப்பது.
வேந்தனுக்கு எரிச்சல் மூண்டது.
“சே… இன்னைக்கு ஏன் இவ்வளவு டிராஃபிக் ?” என்று அலுத்தான்.
அதன் பிறகு சில நிமடங்கள் கழிய, மெல்ல மெல்ல வாகனங்கள் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.
அப்போதுதான் லாவண்யா எதையோ கவனித்தவள் வேந்தனிடம் “இன்னைக்கு ஆக்டர் ராகவ் ஏதோ ஜ்வலிரி ஷாப் திறக்க வர்றாருன்னு விளம்பரம் போட்டாங்களே… நான் மறந்தே போயிட்டேன்… அதான் இவ்வளவு டிராஃபிக் போல” என்றாள்.
“ஓ” என்று வேந்தன் அவள் சொன்னதை கேட்டு சிந்தனையில் ஆழ்ந்து வேறுபுறமாக போய்விடலாமா என யோசித்தான்.
அத்தனை நேரம் கைப்பேசிக்குள் மூழ்கியிருந்த புகழ் இதனை கேட்டு 
“ஹய்… ராகவ்? சூப்பர்… போலாம் மாமா… அவரை போய் பார்க்கலாமா மாமா ?!” என்று ஆர்வமானான்.
வேந்தன் எரிச்சலோடு  “இங்க அவன் அவனுக்கு டிராஃபிக்ல கண்ணுமுழி பிதுங்குது… வந்த வேலையே நடக்குமான்னு தெரியல… இதுல ராகவை வேற பார்க்கனுமா… வாயை மூடிட்டு வாடா” என்றான்.
“உம்ஹும்… அதெல்லாம் முடியாது… எனக்கு ராகவை பார்க்கனும்” என்க,
வேந்தன் கடுப்பாகி “டே அவன் என்ன நமக்கு மாமனா மச்சனா… நீ பார்க்கனும்னதும் கூட்டிட்டு போய் காட்ட” என்று சொல்லியபடி அந்த நகைகடை வழியே போகாமல் இருக்க வேறு வழிகள்  இருக்கிறதா என ஆராய்ந்தான்.
ஆனால் அதற்கான சாத்தியகூறுகளே இல்லை. அந்த வழியாகவே போக வேண்டும். 
புகழ் ஏக்கமாய் ஜன்னல்கண்ணாடியில் பார்த்தபடி “ப்ளீஸ் மாமா.. .ஒரே ஓரு நிமிஷம் பார்த்துட்டு போயிடலாம்… அவரு எவ்வளவு சூப்பரா டான்ஸாடுவாரு தெரியுமா ?!” என்று கெஞ்சலாய் கேட்க
“டேய் நானும் சூப்பரா டேன்ஸாடுவேன்… வீட்டுக்கு போய் ஆடி காண்பிக்கிறேன்” என்றதும் லாவண்யா குபீரென்று சிரிக்க, புகழ் எரிச்சலானான். 
இப்படியே வேந்தன் வாகனங்களுக்கு இடையில் ஊர்ந்து செல்ல தன்யா ஜுவல்லர்ஸ் அருகாமையில் வந்தது. 
திறப்பு விழாவிற்கு அலங்காரத்தோடு தயார் நிலையில் இருந்த அதிகம்பீரமான நகை மாளிகை. 
அதன் வாசலில் அலங்காரத்தோடு  ராட்சத உயரத்தில் இருந்த ஜென்னிதாவின் படம். 
வேந்தன் அந்த படத்தை பார்த்து வெலவெலத்து போனே அதே சமயம் புகழ் சத்தமாக “மாமா..  சாக்ஷி அக்கா” என்றான்.
அவன் முகமெல்லாம் அந்த நொடியே வியர்த்துவிட, லாவண்யா புரியாமல் “யாரு புகழ்… சாக்ஷி” என்று  அவனிடம் கேட்க
“அவங்க” என்று அவன் ஆரம்பிக்க வேந்தன் கொந்தளிப்போடு “வாய மூடு புகழ்… அது ஒண்ணும் சாக்ஷி இல்ல” என்றான்.
“உம்ஹும் அது சாக்ஷி அக்காதான்… எனக்கு தெரியும்… காலையில அம்மா பாட்டியும் கூட டீவியை பார்த்து சாக்ஷி அக்கான்னு பேசிட்டிருந்தாங்களே ?” என்க, வேந்தனுக்கு பற்றி எரிந்தது. 
கோபமாக “அதெல்லாம் இல்ல புகழ்… அவ வேற யாரோ?!” என்று அழுத்தமாக உரைக்க லாவண்யாவிற்கு அவர்களின் வாக்குவாதம் ஒன்றும் விளங்கவில்லை.
ஆனால் புகழ் பிடிவாதமாக “உம்ஹும்… நீங்க பொய் சொல்றீங்க… அது சாக்ஷி அக்காதான்… சாக்ஷி அக்காதான்… சாக்ஷி அக்காதான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வேந்தன் மனதில் கனன்று கொண்டிருந்த கோபத்தையும் எரிச்சலையும் புகழின் புறம் திருப்பினான்.
பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தான்.
லாவண்யா அதிர்ந்து “என்ன இப்படி சின்ன பிள்ளையை போய் அடிச்சிட்டீங்க.. அப்படி என்ன உங்களுக்கு கோபம் ?” என்று அவள் சினத்தோடு கேட்க
“ஆமான்டி கோபம்தான்… இப்ப என்னங்கிற” என்றபடி வெறுப்பை உமிழ்ந்தான். 
லாவண்யா அவனை அதிர்ந்து பார்க்க, வேந்தன் முகம் எரிமலை குழம்பாக கொதிப்படைந்திருந்தது.
அதனை பார்த்தவளுக்கு அச்சம் தொற்றிக் கொண்டது. ஆதலால் மூச்சுவிடும் சத்தம் கூட வெளிவராமல் அமர்ந்திருந்தாள். ஆனால் பின்னோடு புகழின் விசும்பல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
லாவண்யா அவனை சமாதானப்படுத்த முயன்றிருக்க,
நெரிசலில் எல்லா வாகனமும் பொறுமையாய் முன்னேற, எரிச்சலின் உச்சிக்கட்டத்தை தொட்டதிருந்தான் அவன்.  
வேந்தனின் விழிகள் அலங்காரங்களோடு பேரழகியின் ரூபமாய் நின்றிருந்த ஜென்னித்தாவை பார்த்து கொண்டிருந்தது.
எல்லோரின் பார்வையையும் வசீகரிக்கும் அவள் முகம், அவனை மிரட்சியடைய  வைத்திருந்தது.
யாரை அவன் எந்த காரணத்தை  கொண்டும் இப்பிறவியில் தப்பித்தவறி கூட பார்க்கவே விரும்பவில்லையோ,   அவள் விஸ்வரூபம் எடுத்து அவன் கண்முன்னே வந்து நின்றாள்.
அந்த படத்தில் உள்ளவள் அவன் கண்ணுக்கு ஜென்னித்தாவாக காட்சியளிக்கவில்லை. சாக்ஷியாகவே காட்சியளித்தாள். 
இவன் இப்படி அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க பின்னாடி இருந்த கார் ஓட்டுநர் காரை நகர்த்த சொல்லி ஹாரன் அடித்து காதை செவிடாக்க “ஏங்க…ஹாரன் அடிக்கிறாங்க…. வண்டியை எடுங்க… ” என்றபடி அவன் தோளை தொட்டு உலுக்கினாள்.
அவன் க்ளச்சிலிருந்து காலை எடுக்க கார் முன்னோக்கி சென்றது.
அப்போது தன்யா நகை மாளிகைக்குள் ஒரு பெரிய கருப்பு நிற ரோல்ஸ் ராயஸ் கோஸ்ட் கார்  அந்த வாகன நெரிசலிலும் சுமூகமாய்  நுழைந்தது.
ராகவின் வரவேற்பிற்காக மேளச் சத்தங்கள் பட்டாசு சத்தங்கள் எல்லாம் எழும்ப, காரில் அமர்ந்திருந்த புகழ் அழுகையை நிறத்தி எட்டிப்பார்த்தான்.
அவன் கார் ஜன்னல் கண்ணாடியின் வழியே ராகவை பார்த்துவிட முடியாத என ஏக்கத்தில் இருந்தான்.
வேந்தனுக்கோ அந்த இடத்தை கடந்தால் போதுமென்றிருந்தது. 
அவன் தன் அவசரத்தாலும் பொறுமையின்மையாலும் ஹாரனை ஓயாமல் அழுத்த, லாவண்யாவிற்கு அவனின் அந்த செயல் கடுப்பாய் இருந்தது.
ஒரு சில விநாடிகள் தன்யா ஜுவலர்ஸ் வாசலுக்கு நேராய் கார் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட, லாவண்யாவும் வேந்தனும் கவனிக்காத தருணத்தில் புகழ் கார் கதவை திறந்து இறங்கிஓடினான்.
இருவருமே அரண்டு போய்
“புகழ்ழ்ழ்ழ்ழ்” என்று சத்தமிட்டனர்.
ஆனால் அவன் சாலைகளை கடந்து தன்யா ஜுவல்லர்ஸ் நோக்கி ஓட்டம் எடுக்க, பின்னோடு வாகனங்கள் நிற்பதால் வேந்தனால் வண்டியை நிறுத்த முடியாத சூழ்நிலையில்,.அவன் நிலை புரிந்தவளாய் லாவண்யா அவசமாய் கார் கதவை திறந்து இறங்கியபடி 
“நான் புகழை கூட்டிட்டு வர்றேன்… நீங்க வண்டியை நிறுத்திட்டு வாங்க”என்க, அவன் கார் நிறுத்துவதற்கு இடம் தேடினான். 
தன்யா ஜுவலர்ஸ் திறப்பு விழா வெகு கோலகோலமாய் நடந்து கொண்டிருந்தது. அதுவும் ராகவ் வருவதென்றால் சொல்ல வேண்டுமா?
அவன்தான் இன்று டாப் மோஸ்ட் ஹீரோ. அவனுக்காகவே மக்கள் திரள் திரளாய் கூட,.அந்த கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர காவல் துறையோடு காவலாளிகளும் திணறிக் கொண்டிருந்தனர். 
ஜென்னி  நேரத்தோடு வந்து சேர்ந்துவிட்டாள். ஆனால் ராகவ் தாமதித்த காரணத்தால் கூட்டம் பெருகி தியாகராய நகரே ஸ்தம்பித்து போனது.
அவன் தன் ஆடம்பரமான காரில் இறங்கியதுமே எல்லோரும் அவனின் கம்பீர தோற்றத்தில் மெய்மறந்து நின்றுவிட்டனர். 
பலரும் தங்கள் அலைப்பேசியில் அவனை படம் பிடித்து கொண்டிருந்தனர். எப்படியாவது அவனோடு ஓரே ஒரு செல்ஃபி அல்லது கையெழுத்து வாங்கிவிட மாட்டோமா என தவித்திருக்க ராகவின் பாதுகாப்பிற்காக வந்தவர்கள் அந்த கூட்டத்தில் உள்ள யாரையும் அவனிடம் நெருங்க கூட விடவில்லை.
பிளேக் பேண்ட் ப்ளூ ஷர்ட்டில் தன் கருப்பு நிற கூலர்ஸோடு ராகவ் அந்த கட்டிடத்தின் வாசலை நெருங்க அந்த நகை மாளிகை முதலாளி கரம் கூப்பி அவனை ஹிந்தியில் வரவேற்றார்.
அவன் பார்வை அவர் மீது விழாமல் ஜென்னித்தாவிடம் அடைக்கலம் புகுந்தது.
கண்களை பறிக்கும் தங்க நிற பட்டு சேலையில், பாரம்பரியான பாணியில் பின்னி கூந்தலில் மல்லிகை பூவெல்லாம் சூடி  முந்தானையை முன்புறம் இழுத்துபிடித்து கொண்டு நின்றிருந்தாள்.
அவள் செவிகளோடு நடனமிட்ட கூடை ஜிமிக்கியும், ஒற்றை கம்பீரமான டாலர் அவள் கழுத்தை நிறைத்தது போல்  அவள் மார்பக பகுதியை தொட்டு நீட்டமாய் தொங்கிக் கொண்டிருக்க, அவனோ கிறங்கி போய் அவளிடமே லயித்தான். 
அவன் கூலர்ஸ் அணிந்திருந்ததினால் அவளை விழுங்குவது போல் அவன் பார்த்த பார்வையை யாரும் கவனிக்க சாத்தியமில்லை.
ஆனால் அவன் செகரட்டிரி மனோ அவனை உணர்ந்து “பாஸ்” என்று குரல் கொடுத்தான். 
உடனே இயல்பு நிலைக்கு திரும்பியவன் கூலர்ஸை கழட்டிவிட்டு அங்கிருந்த நகைக்கடையின் நிர்வாகி மற்றும் முக்கிய  பணியாளர்களிடம் கைகுலுக்கினான்.
அந்த நகைக்கடை நிர்வாகி ஜென்னித்தாவை கைக்காண்பித்து “ஷீ இஸ் மிஸ்.ஜென்னித்தா விக்டர்… அவர் பிரேண்ட் அம்பேஸிடர்… ” என்றார்.
ஏற்கனவே அறிமுகமான போதும் புதிதாய் அறிமுகமாவது போல இருவரும் புன்னகையித்து கைகுலுக்க, அவள் மெல்லிய கரத்தை பிரிய மனதில்லாமல் தவிப்போடு விடுவித்தான். 
ராகவ் ஜென்னியிடம் தன் பெருமைகளையும் புகழையும் பிராஸ்தாபிக்கவே இந்த விழாவிற்கு வர சம்மதித்தான். 
அதுவும் இல்லாமல் தான் வந்தால் அவளுக்கு இரண்டாபட்ச மரியாதைதான் கிட்டும். கிட்டத்தட்ட அப்படிதான் நிகழ்ந்தது. 
அதுவும் இல்லாமல் யோசனையின்றி அவள் தன்னிடம் அவமதிக்கும் விதமாய் பேசிவிட, அவள் தவறை அவளுக்கு புரிய வைக்கவும் எண்ணினான்.
ஆனால் அவனின் எந்த எண்ணமும் பலிக்கவில்லை. 
முந்தைய நாள் நடந்த நிகழ்விற்கான எந்தவித தாக்கமும் அவளின் செயலிலும் முகப்பாவனையிலும் கூட இல்லை. 
அவளோ சிறு சஞ்சலம் கூட இல்லாமல் அவனிடம் ரொம்பவும் இயல்பாக சிரித்து பேசினாள். தெளிந்த ஓடை நீராய் இருந்த அவள் முகம் அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதோடு ரிப்பனை வெட்டச் சொல்லி அவளே அவனிடம் தெரிவிக்க, 
திறப்புவிழா சிறப்பாக நடந்தேறியது.
ராகவ் உள்ளே நுழைந்ததும் அந்த கடை நிர்வாகி ஜென்னியிடமும் அவனிடமும் அங்கு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த வித்தியாசமான நகைகளை சுட்டிகாட்டி அதன் சிறப்பையும் மதிப்பையும் எடுத்துரைக்க,
ஜென்னி அவ்வப்போது அவனிடம் அவற்றை எல்லாம் பற்றி பேச்சு கொடுத்து கொண்டு வந்தாள். 
அன்று தன் முகத்திற்கு நேராக எடுத்தெறிந்து பேசிவிட்டு, இன்று எப்படி அவளால் அதன் சுவடுக்கூட காட்டிக் கொள்ளாமல் இருக்க முடிகிறது. அவளின் செயல்களை கண்டு நொடிக்குநொடி வியந்துதான் போனான்.
அதேநேரம் அவனால் அவளை போல் அத்தனை இயல்பாய் இருக்க முடியவில்லை. 
அவ்வப்போது அவளிடம் ஈர்க்கப்படும் அவன் விழிகளை கட்டுக்குள் கொண்டு வர அவன் பெரும் பாடுப்பட்டுக் கொண்டிருந்தான். 
அதே நேரம் அவளிடம் தனியாய் பேசும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டும் இருந்தான். 
மனோ அவனை நெருங்கி “பாஸ் டைமாச்சு” என்று அறிவிக்க,
ராகவ் அங்கிருந்தவர்களிடம் புறப்படுவதாக உரைத்தான்.
அவர்களும் அமோதித்து அவன் புறப்படும் ஏற்பாடுகள் செய்ய வெளிபுறம் சென்றனர். 
ஜென்னி புன்னகையோடு “ஒகே மிஸ்டர் ராகவ்… சீ யூ” என்று கரத்தை நீட்ட அவனோ அவள் கரத்தை கொஞ்சம் இறுக்கமாய் பற்றிக் கொண்டு
“காசு கொடுக்காமலே இப்படி நடிக்கிற… கொடுத்தா எப்படி நடிப்ப ?” என்று கேட்டுவிட்டு அவளை ஆழ பார்த்தான்.
ஆனால் அவன் எதிர்பார்த்த எந்தவித உணர்வுகளையும் அவள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்முறுவலோடு நின்றாள் .
அவனோ அவள் கையை விடாமல் அழுந்த பிடித்திருக்க
மனோ பின்னோடு “பாஸ் மீடியா எல்லாம் இருக்காங்க” என்று அறிவுறுத்தினான்.
உடனேஅவள் கரத்தை விடுவித்தவன் சற்று அழுத்தமாக “திரும்பியும் எப்போ மீட் பண்ணலாம் ஜென்னி ?” மெலிதான குரலில் அவன் கேட்க, அவள் கூர்ந்து அவனை புரியாமல் பார்த்தாள்.
அவள் மௌனத்தை உள்வாங்கியவன் கிசுகிசுத்த குரலில் “நெக்ஸ்ட் மீட்டிங் நீயும் நானும் மட்டும்… தனியா… திஸ் டைம் ப்ளேஸ் அன் டைம் இஸ் யுவர் சாய்ஸ்… ” என்றவன் கூலர்ஸை மாட்டியபடி கண்ணடித்து “கால் மீ பேபி” என்று ஹஸ்கி குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
ரூபா அவன் பேச்சையும் சீண்டலான பாவனைகளையும் கவனித்து  “என்ன ஜென்னி இது? ராகவ் சார் இப்படியெல்லாம்” என்று அதிர்ந்து வினவ,
ஜென்னி தன் இயல்பு நிலையிலிருந்து மாறுபடாமல் “ப்ச்… விடு ரூப்ஸ்… இதெல்லாம் ஒரு மேட்டரா ?” என்று தோள்களை குலுக்கிவிட்டு
“ஒகே நாமலும் கிளம்பலாமா?” என்று கேட்டாள்.
“இல்ல ஜென்னி… ஏதோ இத்தனை சவரன் மேல நகை வாங்கினா கிஃப்ட்ஸ்னு அனௌன்ஸ் பண்ணி இருக்காங்களாம்… அதை நீங்கதான் தரனுமாம்” என்றாள்.
“ஒ அப்படியா?” என்றவள் களைப்பாய் மூச்சை இழுத்துவிட
“நீங்க வாங்க ஜென்னி.. அதுவரைக்கும் நம்ம உள்ள போய் ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்ணுவோம்” என்று சொல்ல அவர்கள் இருவரும் அலுவலக அறைக்குள் சென்றனர்.
அவர்கள் அங்கே காத்திருக்கும் போது  ஒரு சிறுவனை அங்கே பணிபுரிபவன் அழைத்துவந்தான்.
அந்த சிறுவனோ நிறுத்தாமல் அழுது கொண்டிருந்தான்.
அந்த பணியாள் ஜென்னியை கண்டதும் “சாரி மேடம், டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்க,
“இட்ஸ் ஒகே” என்றவள் அழுது கொண்டிருக்கும் சிறவனை பார்த்து “யார் இந்த பையன்” என்று கேட்டாள்.
“தெரியல மேடம்… உள்ள ஷாப்ல சுத்தி சுத்தி வந்தான்… கூட வேற யாரும் இல்ல…  அழுதிட்டே இருக்கான்… பேரும் சொல்ல மாட்டிறான்… டீடைல்ஸும் சொல்ல மாட்டிறான்” என்றான்.
ஜென்னி தன் இருக்கையில் இருந்து எழுந்தபடி அவன் அருகாமையில் சென்று குனிந்தவள் “எதுக்கு அழறீங்க? …  உங்க அப்பா அம்மாவோடபோஃன் நம்பர் சொல்லுங்க… நான் கால் பண்ணி அவங்களை வர வைக்கிறேன்” என்றதும் 
அவன் அழுகையின் ஓலி குறைய அவளை ஏறிட்டான்.
அப்போது அவள் முகத்தை பார்த்தவன் அடுத்த கணமே “சாக்ஷி அக்கா” என்று சொல்லி அவள் கழுத்தை இறுக்கமாய் கட்டிக் கொண்டான்.  

Poi poottu 5

9
காலை சீக்கிரமே கிளம்பிச் சென்றிருந்தான் ராஜேஷ். கார்த்திக் இல்லாததால் இங்கே இருக்கும் வேலைகள் அனைத்தையும் அவன் பார்க்க வேண்டுமே…
அவன் சென்றதும் தானும் தயாராகி காரை எடுத்துக் கொண்டு கார்த்திக்கின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் மீனா.
கார் சத்தம் கேட்டதும் விரைந்து வெளியே வந்த கவிதா “வாடி… உனக்காகத் தான் வெயிட் பண்ணுறேன்” என்று தோழியின் கை பிடித்து உள்ளே அழைத்தாள்.
“சும்மா சுத்தாத… உனக்கு இந்த டைரி படிக்கணும். அதுக்காக வெயிட் பண்ணேன்னு சொல்லு. நான் வரதப் பத்தியெல்லாம் நீ என்னைக்குச் சந்தோஷப்பட்டிருக்க?”
“போடி… நீயும் இல்லன்னா எனக்கு போர் அடிக்காதா? முதல்ல அத குடு. நீ படிச்ச வர நான் படிச்சுட்டு தரேன்” அவள் கையிலிருந்து டைரியை வாங்கிக் கீழே இருந்த ரோஷனின் அறைக்குள் சென்றாள் கவிதா.
மீனா ஏற்கனவே போனில் தான் படித்தவரை கவிதாவிடம் கூறியிருந்தாள். அதுவரை படித்தவளால் அந்த இடத்தில் நிறுத்த முடியவில்லை.
ஆர்வ மிகுதியால் அறை வாயிலை எட்டிப் பார்த்தாள். மீனா ரோஷனுடன் பேசும் சத்தம் கேட்டது. அவசர அவசரமாக வாசித்தாள்.
ப்ரேக் விட்டதும் ஜென்னி கேள்விக் கேக்குறதுக்கு முன்னாடி கிளாஸ் விட்டு வெளில போயிடணும்னு யோசிச்சு வேகமா வெளில வந்தேன். கிளாஸ் வாசலுக்குப் பக்கத்துல கௌதம் நின்னுட்டு இருந்தான்.
திடீர்னு அவன என் கிளாஸ் வாசல்ல, அதுவும் இவ்வளவு பக்கத்துல பார்த்ததும் நான் ஸ்தம்பிச்சு நின்னுட்டேன்.
என்ன பேசணும்? என்ன பண்ணணும்? நிக்கணுமா? இல்ல ஓடி போயிடணுமா? எதுவுமே எனக்குத் தோணல.
“என்னடி இங்க நிக்குற?”னு ஜென்னி கேட்டதும் திரும்பினேன். அவ என் பின்னாடி வந்துட்டு இருந்தா. அவளும் கௌதம அங்க எதிர்ப்பார்க்கல. என்னையும் அவனையும் மாத்தி மாத்திப் பார்த்துட்டே நின்னா.
மத்த நேரத்துல எல்லாம் தேவைக்கு அதிகமா யோசிக்குற ஜென்னி, இப்போ இப்படி மண்ணு மாதிரி நின்னதும் எனக்குப் பதட்டம் அதிகமாயிடுச்சு.
கௌதம் கைய கட்டி நின்னு என்னையே உத்துப் பார்த்துட்டு இருந்தான். நான் தல குனிஞ்சு நின்னேன்.
“உன் பேரு என்ன?”
கௌதம் முதல் முதல்ல என்கிட்ட பேசுறான்… என்னால என் காதையே நம்ப முடியல.
சூரியன் உதிக்காத இருள் சூழ்ந்த காலை வேளையில கேக்குற முதல் குயில் கூவும் சப்தம் மாதிரி… பிறந்த குழந்தையின் முதல் அழுகை சப்தம் மாதிரி… மழை வரும்போது விழுற முதல் மழை துளியோட…
“உன் பேரு என்னன்னுக் கேட்டேன்?”னு கௌதம் மறுபடியும் கேட்டதுக்கு அப்பறம் தான் அவன் என்கிட்ட கேள்விக் கேட்டான்றதே எனக்கு ஞாபகம் வந்துது.
பேரு… என் பேரு… ஐயோ… சத்தியமா அந்த ஒரு நொடி என் பேரே எனக்கு மறந்துப் போச்சு. இவ்வளவையும் மனசுக்குள்ள பேசினேனே தவிர என்னால என் உதட்டப் பிரிக்க முடியல.
“அவ பேரு ரேணு” நல்லவேளை ஜென்னி சொல்லிட்டா. அவன் ஒரு தடவ அவள பார்த்துட்டு என்னைப் பார்த்தான். திரும்ப அவள பார்த்து “நீ போ… நான் இவ கூடக் கொஞ்சம் தனியா பேசணும்” னு சொன்னான். எனக்குச் சர்வமும் அடங்கி ஒடுங்கி போயிடுச்சு…
என்னாது? தனியா பேசணுமா?
ஜென்னிய போகாதன்னுக் கண்ணாலயே கெஞ்சினேன். கிராதகி… அவன் சொன்னதும் மண்டைய மண்டைய ஆட்டிட்டு ஓடிட்டா.
“வா”னு சொல்லிட்டு அவன் பாட்டுக்கு முன்னாடி நடந்தான். வேற வழி இல்லாம நானும் அவன் பின்னாடி போனேன்.
“நடக்க முடியாமல் அவள் கால்கள் பின்னிக் கொண்டன…” ஏதோ ஒரு கதைல படிச்ச வரி… அந்த நேரம் என்னோட நிலமையும் அப்படித் தான் இருந்துது.
கிரௌண்ட்ல ஒரு மரத்தடில போய் நின்னு திரும்பிப் பார்த்தான். சுத்தி நிறையப் பேர் இருந்தாங்க. சிலர் எங்கள கவனிச்சாலும் யாரும் பெருசா ரியாக்ட் பண்ணல.
நான் நிமிர்ந்து அவனப் பார்த்தேன். கொஞ்ச நேரம் என்னை ஆழமா பார்த்தவன் “எதுக்கு இன்னைக்கு என் கிளாஸ் பக்கம் வந்த?”னு கேட்டான்.
பாத்துட்டான்… என்னை அவன் சரியா கவனிக்கலன்னு நெனச்சேன். ஆனா நான் அவன் கிளாஸ் பக்கம் வந்ததப் பார்த்துட்டான். இப்போ என்ன சொல்லி சமாளிப்பேன்?
“அது பர்ஸ்ட் இயர் ப்ளாக் கிடையாது. அப்பறம் எதுக்கு அங்க வந்த?”னு கேட்டான். நான் அமைதியா தல குனிஞ்சு நின்னேன்.
“அன்னைக்கு காண்டீன்ல எதுக்கு என் மேல மோதுனதுக்கு அழுத?”னு கேட்டான்.
எனக்கு வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. இதெல்லாம் இவன் கவனிச்சானா? யாராவது வந்து என்னைக் காப்பாத்த மாட்டாங்களான்னு சுத்திப் பார்த்தேன். எல்லோரும் அவங்கவங்க வேலையப் பார்த்துட்டு இருந்தாங்க.
“க… வீ… ஈ…” ஹாலிலிருந்து மீனா கத்திய கத்தலில் தூக்கி வாரிப் போட்டு அவசரமாக டைரியை மூடிய கவிதா “என்ன மீனா?” என்று குரல் கொடுத்தாள்.
“ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்காத. நான் படிச்சத விட நீ அதிகமா படிக்க ஆரம்பிச்சுட்டன்னு எனக்குத் தெரியும்”
‘எப்படிக் கண்டுப்பிடிச்சா?’
“இல்ல மீனா…”
“நீ படிக்குற ஸ்பீட் எனக்குத் தெரியும். பொய் சொல்லாத”
“ஹே ப்ளீஸ் மீனா… நீ வீட்டுல போய்ப் படிச்சுக்கோயேன்… ப்ளீஸ்டி…”
“படிச்சுத் தொல”
செண்பகம் “அடடடா… இப்போ எதுக்கு ரெண்டு பேரும் இப்படிக் கத்துறீங்க? மீனாக்கா டைரி உங்கக்கிட்ட தான இருக்கப் போகுது? நீங்க வீட்டுல போய்ப் படிக்கத் தான போறீங்க? அப்பறம் என்ன?
கவிதா அக்கா… அதான் மீனா அக்காவுக்கு நீங்க படிக்குறது தெரிஞ்சுடுச்சே… வெளில வந்து உட்கார்ந்தே படிங்க. எதுக்கு இப்படி ஆளுக்கு ஒரு ரூம்ல உக்காந்து கத்திட்டு இருக்கீங்க?” என்று சத்தம் போட்டாள்.
மீனா ரோஷனின் பொம்மையைக் கீழே வைத்து விட்டு எழ கவிதா டைரியுடன் ஹாலிற்கு வந்தாள். “செண்பா…” என்று இருவரும் ஒரு சேர கூவினர்.
“நான் இல்லபா…” வேகமாகச் சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள் செண்பகம்.
“போய்ப் படி போ” என்று மீனா கூற கவிதா சோபாவில் அமர்ந்தாள்.
கௌதம்கு என்ன பதில் சொல்லுவேன்? அமைதியாவே நின்னுட்டு இருந்தேன்.
“எதுக்கும் பதில் சொல்ல மாட்டியா? சரி என் பேரு தெரியுமா?”னு கேட்டான்.
அதுக்கும் நான் முழிச்சேன்.
“கௌதம். நீ எதுக்கு என்னை இப்படி முழுங்குற மாதிரி பார்க்குறன்னுத் தெரிஞ்சுக்கலாமா ரேணு”னு கேட்டான்.
அவ்வளவு தான். அங்கேருந்து என்னால எவ்வளவு வேகமா நடந்து வர முடியுமோ அவ்வளவு வேகமாத் திரும்பிப் பார்க்காம நடக்க ஆரம்பிச்சுட்டேன்.
பர்ஸ்ட் இயர் ப்ளாக் கிட்ட வந்ததும் ஒரே ஓட்டமா ஓடி வந்து… படில வேகமா ஏறி… கிளாஸ்குள்ள வந்தப்போ எனக்கு மூச்சே நின்னுடும் போல இருந்துது.
ம்ம்ஹும்ம்… சாமி சத்தியமா இனி அவன் இருக்கப் பக்கம் தல வெச்சுப் படுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு கைய இறுக்கி புடிச்சு உட்கார்ந்திருந்தேன்.
என் பக்கத்துல வந்த ஜென்னி “எதுக்குடி இப்படி வெறப்பா இருக்க?”னு கேட்டா.
முன்னாடி இருந்த நோட்ட எடுத்து அவ தலையிலயே அடிச்சு “நீ போ னு சொன்னா இப்படித் தான் தனியா விட்டுட்டு போயிடுவியா?”னு கத்துனேன்.
“நான் என்ன தெரியாத யாரோக்கிட்டயா உன்ன விட்டுட்டு போனேன்? கௌதம் அண்ணா தான?”னுக் கேட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டா.
இவ இளிச்ச சத்தத்த கேட்டு “யாருடி? இப்போ நம்ம கிளாஸ்கு வெளில இவ கூடப் பேசுன சீனியரா?”னு ஆர்வமா கேட்டு ரம்யா என்னோட இன்னொரு பக்கம் வந்து உட்கார்ந்தா.
அவள திரும்பி மொறச்சேன். இந்த ஆர்வத்த எல்லாம் படிப்புல காட்டிடாதீங்கடின்னு மனசுக்குள்ள அவள திட்டுனேன்.
பின்னாடி பெஞ்ச்ல உட்கார்ந்திருந்த கிருபா, பூஜா, கலை மூணு பேரும் என்ன புடிச்சு இழுத்து “ஹே நெஜமாவாடி? அந்தச் சீனியர் அண்ணாவாடி? எப்போலேருந்துடி?”னு மாத்தி மாத்தி கேக்க ஆரம்பிச்சாங்க.
ஷ்ஷ்ஷ்… ஜென்னி…… உன்ன கொல்லாம விட மாட்டேன்டி… அவள ஒரு பார்வை பார்த்தேன்.
எந்திரிச்சு வெளில போயிட்டா. அப்பவும் வாயப் பொத்தி சிரிச்சுட்டே தான் போனா. அப்படி என்ன அவளுக்கு என்னைப் பார்த்தா சிரிப்பா வருதுன்னு தெரியல. இதுங்கக்கிட்ட மாட்டி விட்டுட்டு போயிட்டாளே… எப்படிச் சமாளிக்கப் போறேன்னு பயந்துட்டே திரும்பி பார்த்தேன்.
மூணு பேரும் சொல்லு சொல்லுன்னு சொன்னாங்க. பக்கத்துல இருந்த ரம்யா சொல்லுடி ப்ளீஸ்னு சொன்னா.
“அது ஏன்டி அடுத்தவங்க லவ் பண்ணா இவ்வளவு ஆர்வமா கதை கேக்குறீங்க?”ன்னு கேட்டேன்.
“லவ் ஸ்டோரி எல்லாமே இண்டரெஸ்டிங்கா இருக்கும்டி. நாங்க தான் லவ் பண்ணல… அட்லீஸ்ட் அடுத்தவங்க கதையாவது கேக்கலாம்ல”னு ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாங்க.
நல்லா இருக்குடி உங்க லாஜிக்.
நான் நாலு பேரையும் ஒரு தடவ பார்த்துட்டு “நான் யாரையும் லவ் பண்ணல”ன்னு சொன்னேன்.
“அப்பறம் எதுக்கு அந்த அண்ணா உன்கிட்ட வந்து பேசுனாங்க?”னு கிருபா கேட்டா.
“தெரியாது”னு சொன்னேன்.
“சரி என்ன பேசுனாங்க?”னு கலை கேட்டா.
எங்கேருந்துடி எனக்குன்னு வந்து சேருறீங்க? முடியல என்னால… கௌதம் கேட்டத நான் எப்படி இவங்கள்ட சொல்ல முடியும்? அமைதியா இருந்தேன்.
“இவ பொய் சொல்லுறாடி. இவங்களுக்குள்ள ஏதாவது சண்டையா இருக்கும்”னு பூஜா சொன்னா.
உடனே ரம்யா முந்திக்கிட்டு “ஒஹ்ஹ்… அதான் அவங்கள கிளாஸ்கு வெளில பார்த்ததும் அப்படியே அமைதியா நின்னாளா?”னு கேட்டா.
“ஆமா ஆமா… அந்த அண்ணா இவள பாத்ததுலயே தெரியல… இவள எவ்வளவு லவ் பண்ணுறாங்கன்னு” இது கலை.
“இவங்க எப்படிடி மீட் பண்ணி இருப்பாங்க?”னு கிருபா கேட்டா.
அடீஈ… பாவிகளா… சம்பந்தப்பட்டவ நான் இங்க குத்துக் கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கேன். நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாம ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இருந்ததும் டோட்டல் ஸ்டோரியே பார்ம் பண்ணி முடிச்சுட்டீங்களேடின்னு எனக்கு மலைப்பா இருந்துது.
அந்த நேரம் ஜென்னி உள்ள வந்ததும் அவள தொரத்தி தொரத்தி அடிச்சேன். அவளும் பெஞ்ச் மேலயெல்லாம் ஏறி ஓடி என்கிட்ட அடி வாங்கி மூச்சு வாங்க அவ இடத்துல வந்து உட்கார்ந்தா. நானும் மூச்சு வாங்க அவ பக்கத்துல உட்கார்ந்தேன்.
கௌதம் அண்ணா என்ன சொன்னாங்கனு கேட்டா. பின்னாடி பெஞ்ச்ல இருந்த மூணு பேரும் கன்னத்துல கை வெச்சு முன்னாடி நகர்ந்து வந்து என்னையே பார்த்தாங்க. அவங்கள ஒரு தடவ திரும்பிப் பார்த்துட்டு ஜென்னிய கைய புடிச்சு வெளில இழுத்துட்டு போனேன்.
“நான் அன்னைக்கு அழுதத பார்த்திருக்கான்டி. ஏன் என் மேல இடிச்சதுக்கு அழுதன்னு கேட்டான். எதுக்கு என் கிளாஸ் பக்கம் வந்த? அது பர்ஸ்ட் இயர் ப்ளாக் இல்லையேன்னு கேட்டான். என் பேரு தெரியுமான்னு கேட்டு அவன் பேர சொன்னான். எதுக்கு இப்படிப் பார்க்குறன்னு கேட்டான். நான் ஓடி வந்துட்டேன்”னு சொன்னேன்.
ஜென்னி வயித்த புடிச்சு கண்ணுல தண்ணி வர அளவுக்குச் சிரிச்சா.
அந்த ஹவர் வர வேண்டிய ஸ்டாப் வரல. அதனால இவங்கக்கிட்ட நான் சிக்கிட்டேன். ஜென்னிய மண்டைல அடிச்சுட்டுக் கிளாஸ் உள்ள வந்துட்டேன். என்னை வீட்டுல டிராப் பண்ணப்பையும் ஜென்னி என்ன பாத்து பாத்து சிரிச்சுட்டே இருந்தா.
– ரேணு
10
“என்ன கவி சிரிச்சுட்டே இருக்க?” மீனா எழுந்து வந்து அவள் அருகில் சோபாவில் அமர்ந்தாள்.
“இந்த ரேணு அடிச்ச கூத்தெல்லாம் இருக்கே… நீ அப்பறமா படிச்சு பாரு மீனா”
“ம்ம் ம்ம்… ஹேய்… எங்கடி ரோஷன காணும்?”
“அவன் மாடிபடிக்கிட்ட இருப்பான்டி. போய்ப் பாரு”
“புள்ளைய பத்தி கவலப்படுறியா?” மீனா அவசரமாகப் படியருகில் ஓடினாள். ரோஷன் முழங்காலிட்டுக் கடைசிப் படியில் இரு கைகளையும் ஊன்றி சிரித்துக் கொண்டிருந்தான்.
“எப்படிடா இவ்வளவு தூரம் வந்த?” அவனைத் தூக்கியவளின் கன்னத்தைக் கடித்தான் ரோஷன்.
அவர்கள் அருகில் வந்த கவிதா “பாரபட்சம் பார்க்காம எல்லாரையும் கடிடா நீ” என்று ரோஷனை வாங்கிக் கொண்டாள்.
சாப்பிட்டு முடித்ததும் அவனைத் தூங்க வைத்துவிட்டு சிறிது நேரம் தானும் அவனுடன் உறங்குவதாகக் கூறி கீழே இருந்த அறைக்குச் சென்றாள் மீனா.
செண்பகமும் அலுப்பாக இருப்பதால் சிறிது நேரம் உறங்குவதாகக் கூறி அவளுடைய அறைக்குள் சென்றுவிட கவிதா மீண்டும் டைரியுடன் ஹால் சோபாவில் அமர்ந்தாள்.
இன்னைக்கு காலேஜ்குள்ள நுழையும்போதே கௌதம் பைக்ல வரதப் பார்த்தேன். ஜென்னி வண்டிய நிறுத்த போனப்போ அவனும் எங்க பின்னாடியே வந்தான்.
இருக்குறது ஒரு பார்க்கிங் ஏரியா. அவன் அங்க தான வண்டிய நிறுத்த முடியும்… என் பின்னாடி வரான்னு எப்படி நினைக்குறது? அதுக்கு மேல யோசிக்காம நார்மலா இருக்க முயற்சி பண்ணேன்.
ஜென்னி வண்டிய விட்டு இறங்கினதும் பக்கத்துல வண்டிய நிறுத்த வந்தவன பார்த்து “குட் மோர்னிங் கௌதம் அண்ணா”னு சொல்லி சிரிச்சா.
அவனும் பதிலுக்குச் சிரிச்சு “என் பேர உனக்குச் சொன்ன உன் பிரண்ட் உன் பேர எனக்குச் சொல்லவே இல்ல”னு சொல்லி என்னைப் பார்த்தான்.
ம்ம்கும்… என் பேரே மறந்து போச்சாம்… இதுல என் பிரென்ட் பேரு வேற உன்கிட்ட சொல்லணுமான்னு இருந்துது.
“என் பேரு ஜென்னி… கிளாஸுக்கு டைம் ஆயிடுச்சு. அப்பறம் பார்க்கலாம்ணா…”னு சொல்லிட்டு அவ கெளம்புனா. நாங்க வண்டிய நிறுத்திட்டு அங்கேருந்து நகருற வரைக்கும் நான் தலை நிமிரவே இல்ல.
கௌதம் எங்க பின்னாடியே வரான்னு பர்ஸ்ட் இயர் ப்ளாக் கிட்ட வந்ததுக்கு அப்பறம் தான் கவனிச்சேன். உடனே அவனைத் திரும்பிப் பார்த்தேன்.
“ஒண்ணு வெச்ச கண்ணு வாங்காம பார்க்குற… இல்லன்னா பார்க்கவே மாட்டேங்குற… நீ பார்க்கலன்னா எனக்கும் என்னவோ மாதிரி இருக்கு. அதான் நீ என்னை நிமிர்ந்து பாக்குற வரைக்கும் உன் பின்னாடி வந்தேன். பாய் ரேணு”னு சொல்லிட்டு வேகமாத் திரும்பிப் போயிட்டான்.
கௌதம் என்ன சொல்ல வந்தான்? நான் அவன பார்க்கணும்னு எதிர்ப்பார்க்குறானா? நான் பார்க்குறது அவனுக்கு எப்படித் தெரியும்? அப்போ ஒவ்வொரு தடவையும் என்னை அவன் கவனிச்சிருக்கானா? என்னைப் பார்க்கவாவது செஞ்சிருக்கியா கௌதம்னு நான் ஏங்குனதெல்லாம் தேவயில்லாத ஒண்ணா?
ஆனா அவன்கிட்ட என்ன பேச? அவன் சொன்னதுக்கு அர்த்தம் என்ன? என்னால ஏன் அப்போ அவன நிமிர்ந்து பார்க்க முடியல?
எனக்கு அவன பிடிச்சிருந்துது. முதல் பார்வையிலேயே. அதனால தான அவன பார்த்துக்கிட்டே இருந்தேன். இப்போ அவனே வந்து என்கிட்ட பேசுறப்போ என்னால எதுவும் பேச முடியலயே…
ஒருவேளை எனக்குத் தைரியம் பத்தலையோ? ஏதோ ஒருத்தன பார்த்ததும் பிடிச்சிருந்ததால பார்த்தேனோ? அவன்கிட்ட பேசுற அளவுக்கு எனக்குக் கட்ஸ் இல்லையோ?
ஐயோ அவன் திரும்பி வந்து பேசுனா என்ன பண்ணுறது? தேவயில்லாம அவன டிஸ்டர்ப் பண்ணிட்டோமோ? என் வீட்ட பத்தியெல்லாம் நான் ஏன் யோசிக்கவே இல்ல?
என் மனசுக்குள்ள ஆயிரம் கேள்வி எழுந்துது. அடுத்து என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியல. சிலை மாதிரி நின்னுட்டு இருந்த நான் திரும்பி ஜென்னிய பார்த்தேன். சிரிச்சுட்டு இருந்தா. இவளுக்கு என்ன அப்படி எப்போ பார்த்தாலும் கெக்கேபிக்கேன்னு சிரிப்பு வேண்டிக் கிடக்கு…
அவள மொறச்சேன். “ஏன் ரேணு உன் மூஞ்சி இப்படிப் பேயரஞ்ச மாதிரி இருக்கு?”னு கேட்டா.
அப்படியா இருக்குனு யோசிச்சு ஒரு தடவ என் கன்னத்த வருடிப் பார்த்தேன்.
ம்ம்ஹும்… நமக்கு இந்தக் காதல் கீதல் எல்லாம் சரிப்பட்டு வராதுன்னு முடிவு பண்ணி அவள இழுத்துட்டு கிளாஸுக்கு போயிட்டேன்.
சாயந்தரம் வண்டி எடுக்கப போனப்போ கௌதம் அவன் பைக் மேல உட்கார்ந்திருந்தத தூரத்துல வரும்போதே பார்த்துட்டேன். அவன்கிட்ட போக வேண்டாம்னு தோணுச்சு. ஜென்னிய போய் வண்டி எடுத்துட்டு வர சொல்லிட்டு நான் அங்கயே நின்னுட்டேன்.
எனக்குக் காதலிக்குற தைரியம் இருக்கா இல்லையான்னு தெரியாம அநாவசியமா கௌதம் மனசுல எந்த ஆசையையும் வளர்க்க நான் தயாரா இல்ல.
ஜென்னி போய் வண்டி எடுக்குறப்போ கௌதம் ஏதோ அவக்கிட்ட பேசுனான். அப்பறம் திரும்பி நடந்து வந்தான். எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல. அவ சீக்கிரம் வண்டிய எடுத்துட்டு வரணும்னு வேண்டிக்கிட்டே நின்னேன்.
என்கிட்ட வந்ததும் “இப்போ எதுக்கு ரேணு நீ இங்கயே நிக்குற? அவ கூட வண்டி எடுக்க வர வேண்டியது தான?”னு கேட்டான்.
நான் அவனத் தாண்டி ஜென்னிய பார்த்தேன். அவளோட வண்டில உட்கார்ந்திருந்தா. “நான் சொல்லுற வரைக்கும் அவ வர மாட்டா. எனக்குப் பதில் வேணும் ரேணு”னு சொன்னான்.
ரேணு ரேணு ரேணு… எத்தன தடவ என் பேர சொல்லுறான். ஏன்டா என்ன படுத்துறன்னு அவன் சட்டைய பிடிச்சு கத்தணும் போல இருந்துது.
இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம்னு எனக்குத் தெரியும். நான் எதுவும் பேசல. அழுக முட்டிக்கிட்டு வந்துது. நான் கஷ்டப்படுறது மட்டுமில்லாம என் கௌதமையும் எதுக்கு இப்படி என் பின்னாடி வர வெச்சேன்னு நெனச்சு நொந்து போனேன்.
எனக்கு என்னையே பிடிக்காம போன தருணம்… என்னையே நான் வெறுத்த தருணம்…
“என் பின்னாடி வராத கௌதம்”னு சொல்லிட்டு அங்கேருந்து நகரப் போனேன். “என்கிட்ட நீ பேசுற முதல் வார்த்தை இதுவா இருக்கும்னு நான் நினைக்கல ரேணு”னு கௌதம் சொன்னான்.
என் இதயத்த யாரோ அறுத்து எடுக்குற மாதிரி இருந்துது. கதறி அழணும் போல இருந்துது. கண்ணுல தண்ணி வர ஆரம்பிச்சுது. அவன பார்த்துட்டு வேகமா ஜென்னிகிட்ட ஓடி போயிட்டேன். நான் அழறதப் பார்த்து அவளும் வேற எதுவும் பேசாம வண்டிய எடுத்தா.
கௌதம் அதே இடத்துல நின்னுட்டு இருந்தான். அவனைத் தாண்டிப் போறப்போ கௌதம் என்னைப் பார்த்த பார்வை… நான் தப்புப் பண்ணிட்டேன். அவன நான் பார்த்திருக்கவே கூடாது…
-ரேணு
இன்னைக்கு கௌதம் எங்களுக்கு முன்னாடி பார்க்கிங் ஏரியா வந்து எங்களுக்காகக் காத்துட்டிருந்தான். இவன் ஏன் நான் சொல்லுறத கேக்க மாட்டேங்குறான்? நான் வண்டிய விட்டு இறங்கி அவன்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி கைய காட்டி நிறுத்த சொல்லிட்டு “நான் உன்கிட்ட பேச வரல ரேணு. நீ போகலாம். எனக்கு ஜென்னி கூடப் பேசணும்”னு சொன்னான். அவன் கண்ணுல கோபத்த
சிரிப்புச் சத்தம் பெரிதாகக் கேட்கவும் கவிதா திரும்பிப் பார்த்தாள். ரோஷனின் அறையிலிருந்து தான் சப்தம் வந்தது.’ரெண்டு பேரும் எந்திரிச்சுட்டாங்க போல’டைரியை மூடி கீழே வைத்துவிட்டு எழுந்து சென்று அந்த அறையை எட்டிப்பார்த்தாள்.
மீனாவின் மேல் படுத்திருந்த ரோஷன் அவள் கன்னத்தைக் கடிக்க வந்தான். அவன் மிக அருகில் வரும்போது மீனா அவனைக் கடிக்க விடாமல் தூக்கினாள். அவன் கை தட்டி சிரிக்கவும் அவளும் பெரிதாகச் சிரித்து அவனைத் தன் மீது படுக்க வைத்துக் கொண்டாள். மீண்டும் அவன் அவள் கன்னத்தைக் கடிக்க வந்தான்.
“என்னடி விளையாட்டு இது?”
“இது நாங்க புதுசா கண்டுப்பிடிச்சது. இல்லடா தங்கம்?”
கவிதாவும் மீனாவின் அருகில் படுத்தாள்.
“என்ன கா? அப்படிச் சிரிச்சுட்டு இருக்கீங்க? கிச்சன் வரைக்கும் கேக்குது”
“நாங்க கண்டுப்பிடிச்ச புது விளையாட்ட விளையாண்டுக்கிட்டு இருக்கோம் செண்பா” ரோஷனை மேலே தூக்கினாள் மீனா. அவன் கை தட்டி சிரித்தான்.
“நல்ல விளையாட்டு போங்க…”
கையில் தேநீர் கோப்பையுடன் வீட்டிற்கு வெளியே இருந்த படிகட்டில் ரோஷனுடன் அமர்ந்தனர் தோழிகள் இருவரும். சிறிது நேரத்தில் செண்பகமும் வந்து அவர்கள் அருகில் அமர்ந்தாள்.
ரோஷன் கையில் ஒரு பொம்மையைக் கொடுத்ததும் மீனாவின் மடியிலிருந்து கீழே இறங்க வேண்டும் என்று அழுது அடம் பிடிக்க ஆரம்பித்தான்.
எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்காததால் வேறு வழி இல்லாமல் கடைசிப் படியின் அருகில் கீழே இறக்கிவிட்டாள் மீனா.
“அது என்னவோ மீனா இவனுக்குப் படிகட்டுன்னா ரொம்பப் பிடிச்சிருக்குடி… எப்போ பாரு கையில இருக்கப் பொம்மைய படில அடிச்சு சிரிச்சுக்கிட்டே இருக்கான்”
“விடுடி… அமைதியா தான இருக்கான்”
“அடடே இன்னைக்கும் குட்டி பையன் வெளில உட்கார்ந்திருக்கானா?” என்று கேட்டபடியே போர்டிகோவின் அருகில் வந்தார் சீத்து மாமி.
“வாங்க” என்று எழுந்த கவிதா “மீனா நான் சொன்னேன்ல… பக்கத்து வீட்டுல இருக்காங்கன்னு… சீத்து மாமி… இவங்க தான். இது என்னோட பிரண்ட் மீனா” என்று பரஸ்பரம் அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள்.
“வணக்கம் மா. உங்களைப் பத்தி கவிதா நிறையச் சொல்லி இருக்கா. வாங்க தோட்டத்துல போய்ச் சேர்ல உட்காரலாம்”
“வேண்டாண்டிம்மா… இங்கயே உக்காரலாம். நாள் பூரா சேர்ல உக்காந்து இடுப்பு வலிக்கறது” என்று கூறி மேல் படியில் கை ஊன்றி மெதுவாக அமர்ந்தார் சீத்து மாமி.
செண்பகம் “மாமி டீ குடிக்குறீங்களா இல்ல காபி கலந்து எடுத்துட்டு வரவா?” என்று கேட்க “ஒண்ணும் வேண்டாம் செண்பா. இப்போ தான் நம்மாத்துலக் குடிச்சுட்டு வரேன். நீயும் உக்காரு. செத்த நேரம் பேசிண்டிருக்கலாம். ஆத்துல ஒண்டியா நாள் பூரா உக்காண்டு போர் அடிச்சுண்டிருக்கேன்” என்றார்.
மீனாவும் செண்பகமும் சீத்து மாமியுடன் பேசுவதை கவிதா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நீ எவ்வளோ நன்னா பேசுற மீனா. உன் பிரண்ட பாரு… அமைதியாவே இருக்கா”
“அவக் கெடக்குறா விட்டுத் தள்ளுங்க மா. அவ எப்பயும் அப்படித் தான். என்னைக்கோ அதிசயமா தான் பேசுவா. ரொம்ப க்ளோஸா பழகிட்டா நல்லா அரட்ட அடிப்பா. மத்தபடி தோ இப்படித் தான்… ஈஈ னு இளிச்சுக்கிட்டே உக்காந்திருப்பா. நீங்க எனக்குப் பக்கத்து வீட்டுல குடி இருந்திருக்கணும்… இவக்கிட்ட வந்து மாட்டிக்கிட்டீங்க”
“நீ வாங்க போறடி” என்று கூறியதோடு நிறுத்தாமல் அவள் முதுகில் ஒரு அடியையும் வைத்தாள் கவிதா.
“ஆமா மீனா. நான் உனக்குப் பக்கத்தாத்துல இருந்திருந்தா நன்னா பொழுது போயிருக்கும்… பேசிண்டிருந்ததுல நேரம் போனதே தெரியல மா. இருட்ட ஆரம்பிச்சுடுத்து. நான் வரேன்… மீனா நம்மாத்துக்கும் வா என்ன?” என்று கூறி விடைபெற்றுச் சென்றார் சீத்து மாமி.
சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து பேசிய மீனா தானும் கிளம்புவதாகக் கூறினாள்.
சரியென்று தலையசைத்த கவிதா சிறிது தயங்கி “மீனா… நான்… எனக்கு அந்த டைரி குடுப்பியா? ப்ளீஸ்டி… ரெண்டு நாள் மட்டும் தான். படிச்சுட்டு தரேன். ப்ளீஸ்…” என்றாள்.
“ரெண்டு நாள் கழிச்சுப் பாதிப் படிச்சுட்டு இருக்கும்போது எப்படிடி திருப்பித் தரது… முழுசா படிச்சுட்டு தரேன்னு சொல்ல மாட்டியே?”
உடனே அவளைக் கட்டியணைத்து “கண்டிப்பா இல்லடி. ரெண்டு நாள் கழிச்சு எவ்ளோ படிச்சிருந்தாலும் திருப்பித் தந்திடுறேன். அப்பறம் எப்பயும் போல நீயே படிச்சுட்டு எனக்கு போன் பண்ணி சொல்லு” என்றாள் கவிதா.
“சரி. டைரி பத்திரம். ரெண்டு நாள் தான்… பை டா ரோஷன் குட்டி” அவன் கன்னத்தில் முத்தமிட்டுக் கிளம்பிச் சென்றாள் மீனா.
இரவு ராஜேஷ் படுக்கையறைக்குள் வந்ததும் முதல் வேலையாக டைரியை தேடினான்.
“என்ன ரொம்பத் தீவிரமா தேடுறீங்க?”
“ஒண்ணுமில்ல… துண்ட காணும்… அதான்” மனைவியின் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்து வேறுபுறம் திரும்பி நின்று சட்டையைக் கழற்றினான்.
“துண்ட எதுக்கு ராஜேஷ் புக் ஷெல்ப்ல எல்லாம் தேடுனீங்க?”
“அதான் என்ன தேடுறேன்னு தெரியுதுல்ல… எடுத்துக் குடுக்க வேண்டியது தான?”
“டைரி கவிதாகிட்ட இருக்கு. ரெண்டு  நாள் மட்டும் குடுத்துட்டுப் போடின்னு ரொம்பக் கெஞ்சுனா… அதான்”
“நீ ரெண்டு வாரத்துலப் படிக்குறத அவ ரெண்டு நாள்ல படிச்சு முடிச்சிடுவா…” என்று முணுமுணுத்தவன் குளியலறைக்குள் சென்றான்.
“என்னது?” என்று மீனா அதட்டலாகக் கேட்கவும் “ஒண்ணுமில்ல மீனு” என்று கூறி வேகமாகக் கதவை மூடித் தாழிட்டான் ராஜேஷ்.

Poi poottu 4

7
கதவு தட்டப்படவும் டைரியை அவசரமாக மூடி வைத்து எழுந்து சென்று கதவை திறந்தான் ராஜேஷ்.
“டைரி படிச்சீங்களா?”
“இல்ல மீனு… நா…”
“பொய் சொல்லாதீங்க ராஜேஷ். உங்கள படிக்கக் கூடாதுன்னு நான் சொல்லலையே… எனக்கும் படிச்சு சொல்லலாம்ல?”
“எனக்கு இப்படி வாய் விட்டுப் படிக்குறது பிடிக்கவே இல்ல மீனா. அதுல ஒரு பீலே இல்ல…”
“சரி… நானே படிச்சுக்குறேன். குட் நைட்”
வேகமாகச் சென்று மெத்தையில் படுத்தவளின் அருகில் படுத்து “கோவமாடா” என்று கேட்டான்.
“ம்ம்ஹும்… நீங்களும் கவிதாவும் சொல்லுற மாதிரி நான் எழுத்துக் கூட்டிப் படிக்கறதுக்குள்ள…”
“புரிஞ்சா சரி…” என்றவனின் நெஞ்சில் அடித்து அவன் மீது கை போட்டு “தூங்குங்க” என்று கூறி கண்களை மூடிக் கொண்டாள்.
“ம்ம்ஹும்… தூக்கம் வரலையே”
“ராஜேஷ்… பேசாம தூ…” அதற்கு மேல் பேச விடாமல் அவளைச் சீண்ட ஆரம்பித்தான்.
கவிதா படுக்கையறை பால்கனியில் நடந்து கொண்டிருந்தாள். மணி பதினொன்றை தாண்டி இருந்தது. தூக்கம் வரவில்லை.
‘பக்கத்துலயே இருந்தா நல்லா பேசுறாங்க. ஆனா பிஸினஸ்னு வந்துட்டா என்ன மறந்தே போயிடுறாங்க. இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம் எப்படி என்கிட்டயே இருந்தாங்க… இப்போ ஒரு போன் கூடப் பண்ணுறதில்ல’
சரியாக அந்த நேரம் அவள் கையிலிருந்த கைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தவளுக்கு ஆச்சரியம்.
“சொல்லுங்க கார்த்திக்”
“மேடம் ரொம்பச் சந்தோஷமா இருக்கீங்க போல… பேரெல்லாம் சொல்லுறீங்க?”
“போங்க கார்த்திக். நீங்க தான் என்ன கண்டுக்குறதே இல்ல”
“சாப்பிட்டியா கவி?”
“ம்ம்… நீங்க?”
“ம்ம்”
“என்ன அதிசயமா இந்த நேரத்துல கூப்பிடுறீங்க?”
“நீ தூங்கியிருக்க மாட்டன்னு தோணுச்சு. வீடு பிடிச்சிருக்கா? ரோஷன் தூங்கிட்டானா? பத்தரமா இரு கவி…”
“வீடு ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்கள ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. ரோஷன் தூங்கிட்டான். நான் பத்தரமா தான் கார்த்திக் இருக்கேன். நீங்க நிம்மதியா ஒழுங்கா தூங்குங்க”
“ம்ம். குட் நைட்”
“குட் நைட்”
“கவி…”
“சொல்லுங்க…”
“ஐ லவ் யூ கவி”
இவ்வளவு நேரம் இருந்த பாரம் குறைந்து மனம் லேசானது. அதற்கு மேல் அங்கு நடக்க அவசியமில்லாமல் வந்து படுத்து உடனே உறங்கியும் போனாள்.
திடீரென்று கண் விழித்தவள் இன்றும் தன் வலது புறம் ஜில்லிடுவதை உணர்ந்தாள்.’ரெண்டு நாளா ஏஸிய குறைக்க மறந்துட்டோம்னு இன்னைக்கு அத போடவே இல்லையே…’
ஏஸி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.’பின்ன எப்படி?’சுற்றிப் பார்த்தவள் பால்கனி கதவு திறந்திருப்பதைக் கண்டாள்.
‘போன் பேசிட்டு கதவச் சாத்தாமையா படுத்தோம்?’என்று யோசித்தவளுக்குச் சரியாக நினைவு வரவில்லை.’இனி இதையும் ஒழுங்கா பார்க்கணும்’மெத்தையிலிருந்து எழுந்து கதவை தாழிட்டு ரோஷனிடம் வந்தாள்.
தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவனின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டுக் கைபேசியில் மணி பார்த்தாள். மணி நாலு. உறக்கம் வரவே மீண்டும் படுத்துவிட்டாள்.
காலை ராஜேஷ் கிளம்பிச் சென்றதும் முதல் வேலையாக டைரியை எடுத்தாள் மீனா.
இன்னைக்கு ரெண்டாவது நாள் காலேஜ் போனேன். கேட் கிட்ட வந்ததுமே அவன தான் என் கண்ணு தேடுச்சு. அதுக்கப்பறம் ப்ரேக், லஞ்ச்சுன்னு காண்டீன் சுத்தி சுத்தி வந்தேன். ம்ம்ஹும். அவன பார்க்க முடியல. எதுக்குடா இன்னைக்குக் காலேஜ் போனோம்னு இருக்கு.
-ரேணு
இன்னைக்கு மூணாவது நாள் காலேஜ். இன்னைக்கும் என்னால அவன பார்க்க முடியல. ஜென்னியோட மொக்கைய கேட்டு, கிளாஸ் கவனிச்சு, பிரண்ட்ஸோட அரட்டை அடிச்சது தான் மிச்சம்.
– ரேணு
இன்னையோட அவன பார்த்து 4 நாள் ஆகுது. இன்னைக்கு வெள்ளிக் கிழமை. இனி திங்கக்கிழமை தான் காலேஜ். எனக்குப் பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்கு. யாருக்கிட்டயும் பேசாம அமைதியா இருக்கேன்.
காலேஜுல ஜென்னி என்னை எப்படியாவது பேச வைக்க முயற்சி பண்ணா. முயற்சி பண்ணுறேன்னு என்னைக் கடுப்பேத்திட்டு இருந்தா. எனக்கு வந்த கோபத்துக்கு…
கௌதம் எங்க இருக்க?
– ரேணு
இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. ரெண்டு நாள் வீட்டுல வெட்டியா இருந்ததுல மூளைய கசக்கி யோசிச்சு ஒரு ஐடியா கண்டுப்பிடிச்சுட்டேன்.
ப்ளாப் ஆனாலும் ஆகலாம்…
எதுக்கு நெகடிவ்வா யோசிக்கணும்? நாளைக்கு மண்டே. எப்படியும் கௌதம பார்ப்பேன்.
மணி பதினொன்னு ஆகுது. ஆனா நான் இன்னும் தூங்காம உன்ன நெனச்சுக்கிட்டு இருக்கேன். நீ என்னைப் பார்க்கவாவது செஞ்சிருக்கியா கௌதம்? ஹ்ம்ம்…
– ரேணு
பயந்தது மாதிரியே பிளான் சொதப்பிடுச்சு. நானும் என் கிளாஸ் பிரண்ட்ஸ பிடிச்சு… அவங்களோட பிரண்ட்ஸ தெரிஞ்சுக்கிட்டு… அவங்களோட பிரண்ட்ஸுக்கு பிரண்டாகி… கிளாஸ் கிளாஸா அலஞ்சு…
மொத்த பர்ஸ்ட் இயர் பொண்ணுங்களும் இப்போ எனக்குப் பிரண்ட்ஸ் ஆகிட்டாங்க. ஒரே நாள்ல… ஆனா கௌதம் எந்தப் பர்ஸ்ட் இயர் கிளாஸ்லயும் இல்ல.
– ரேணு
‘அடிப்பாவி ரேணு… இதெல்லாம் பண்ணியா நீ? ஒரே நாள்ல மொத்த பர்ஸ்ட் இயர் பொண்ணுங்களையும் பிரண்ட் புடிச்சு… ஸ்கூல் பர்ஸ்ட் வந்த பொண்ணு பண்ணுற வேலையா இதெல்லாம்?
அது சரி… காதல் யார வேணா கிறுக்காக்கும் போலருக்கு. நம்மளும் அப்பப்போ இப்படி ஏதாவது செஞ்சிருக்கோம் தான்’
கவிதா ரோஷனுடன் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். “ம்ம்… ஊ…” என்று சப்தம் எழுப்பிப் பெரிய ரோஜா செடியை கை காட்டினான்.
“செல்லத்துக்கு அந்தச் செடி தான் பிடிச்சிருக்கா? இங்க பாருங்கடா தங்கம்… இன்னும் நிறையக் கலர் கலரா ரோஸ் இருக்கே…” என்று வேறுபுறம் சென்று அங்கிருந்த ரோஜா செடிகளைக் காட்டினாள்.
ரோஷன் அவற்றைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவளும் வேறு வழியில்லாமல் அந்தப் பெரிய சிவப்பு ரோஜா செடியின் முன் போய் நின்றாள்.
அமைதியாக அதிலிருந்த பூக்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு ரோஜா பூவை முள் இல்லாமல் சிறிய காம்புடன் பறித்து அவன் முன் நீட்டினாள்.
அதை முதலில் தன் பிஞ்சுக் கரங்களால் வருடியவன் கையில் வாங்கிப் பார்த்து “ஊ… ஊ…” என்று ஏதோ கூறினான்.
“பிடிச்சிருக்கா செல்லத்துக்கு? சரி வாங்க உள்ள போகலாம்”
வீட்டினுள் வந்தாள். ரோஷன் ஹாலில் விளையாடினான். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து கார்ட்டூன் பார்த்தான். மதியம் அவனுக்கு உணவூட்ட வந்தபோது அவன் கையில் இன்னும் அந்த ரோஜா மலர் இருப்பதைக் கண்டாள்.
“இன்னுமா இத கையில வெச்சிருக்க?”
அதை அவன் கையிலிருந்து வாங்க முயன்றாள். உடனே வீரிட்டு அழ ஆரம்பித்தான்.
“விடுங்க கா. அவன் அத வாய்ல வெக்கல. நான் பார்த்துட்டு தான் இருக்கேன். வெச்சுக்கிட்டுப் போறான்” அவன் அழுவது பொறுக்காமல் கவிதாவை தடுத்தாள் செண்பகம்.
மீனாவிற்கு இன்று மதியம் உறக்கம் வரவில்லை.’இந்த டைரிய படிச்சு முடிக்குறதுக்குள்ள நான் நல்லா தமிழ் படிக்கக் கத்துக்குவேன் போலருக்கு… நல்லது தான்’
என்னடா ஒரு வாரமா ஜென்னி எதுவும் கேக்கலயேன்னு நெனச்சேன். இன்னைக்கு ப்ரேக்ல அவக்கிட்ட சிக்கிட்டேன்.
காண்டீன்ல மதியானம் சாப்பிட உட்கார்ந்திருந்தோம். எங்கள தாண்டி போன எல்லாப் பொண்ணுங்களும்’ஹாய் ரேணு’னு சொல்லிட்டுப் போனாங்க.
“எப்படி ரேணு ஒரே நாள்ல இத்தன பேர தெரிஞ்சுக்கிட்ட”னு கேட்டா. நான் அமைதியா இருந்தேன்.
“நானும் உன்ன ஒரு வாரமா பார்த்துட்டு தான் இருக்கேன். உன்னோட மிஷன் கௌதம் எந்த அளவுல இருக்கு”னு கேட்டா.
இவளால மட்டும் எப்படி எல்லாத்தையும் கண்டுப்பிடிக்க முடியுது? இதுக்கு மேல எதையும் மறைக்க வேண்டாம்னு தோணுச்சு. அவன் பர்ஸ்ட் இயர்ல இல்லைன்னு சொன்னேன். எதுக்காக அவன தேடுறன்னு கேட்டா.
தெரியல. அவன பார்க்கணும். ஒரே ஒரு தடவ பார்க்கணும்.
எதுவும் சொல்லாம அமைதியா இருந்தேன். திடீர்னு “அவன் இப்போ உன் கண்ணு முன்னாடி வந்தா என்ன பண்ணுவ ரேணு?”னு கேட்டா. அவ எனக்குப் பின்னாடி பார்த்துட்டு இருந்தா. திரும்பிப் பார்த்தப்போ கௌதம் ஒரு ஸ்டாப் கூடப் பேசிட்டே வந்தான்.
ஒரு நிமிஷம் மூச்சே நின்னுடுச்சு எனக்கு. கையில இருந்த ஸ்பூன இறுக்கிப் பிடிச்சு அவன் எங்கள தாண்டி போற வரைக்கும் அவனையே பார்த்துட்டு இருந்தேன்.
யார் இவன்? அவனோட பேரு கௌதம் தானான்னு கூட எனக்குச் சரியா தெரியாது. பேசுனது கிடையாது. ஆனா என்னை ஏன் இப்படி ஆட்டி வைக்குறான்?
அவன் தாண்டி போனதும் ஜென்னி கேட்ட முதல் கேள்வி…”அவன லவ் பண்ணுறியா ரேணு?”
வேகமா இல்லன்னு தலை ஆட்டிட்டு இனி அவன பத்தி நினைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணி சாப்பிட ஆரம்பிச்சேன். எல்லாம் கண்டீன் விட்டு வெளிய வர வரைக்கும் தான்.
தல குனிஞ்சு யோசிச்சுட்டே வந்த நான் அவன் மேல மோதிட்டேன். அவனும் திரும்பி அவன் பிரண்ட் கிட்ட பேசிட்டே வந்ததால என்னைக் கவனிக்கல.
“சாரி”னு சொல்லிட்டு வேகமா போயிட்டான்.
என்னால தான் அந்த இடத்த விட்டு நகர முடியல. என்னாச்சுன்னு ஜென்னி கேட்டப்போ எனக்கு அழுக தான் வந்துது.
காண்டீன் பக்கத்துல இருக்க பென்ச்ல உக்காந்து ஜென்னி மடில படுத்து அழுதேன். எதுக்குன்னே தெரியாம… யாருன்னே தெரியாத ஒருத்தனுக்காக… அதுக்கப்பறம் ஜென்னி எதுவும் கேக்கல.
-ரேணு
8
எனக்கு இன்னைக்கு ஜூரம். காலேஜ் போகல. ஒருவேளை நேத்து அழுததுனால இருக்கலாம். வீட்டுல இருக்க வெறுப்பா இருக்கு. அம்மா காலையில லீவ் போட சொன்னப்போ அவன பார்க்காம இருந்தா நான் தெளிவா யோசிப்பேன்னு நெனச்சு தான் ஒத்துக்கிட்டேன்.
ஆனா இப்போ காலேஜ் போயிருந்தா அவன ஒரு முறையாவது பார்த்திருக்கலாமேன்னு ஏக்கமா இருக்கு. தல வலி அதிகமானது தான் மிச்சம். மதியானம் அம்மாவும் தூங்கிட்டாங்க. எனக்குத் தான் என்ன பண்ணுறதுன்னு தெரியல.
மணி ஆறு. டைரி எழுதிட்டே அப்படியே படுத்துத் தூங்கிட்டேன் போல… அம்மா வந்து எழுப்பினாங்க. ஜென்னி கால் பண்ணியிருந்தா. நாளைக்கு காலேஜ்ல ஒரு முக்கியமான விஷயம் சொல்லுறேன்னு சொன்னா. ஏன் அத இப்போ சொன்னா என்னவாம்? ஜென்னி எப்பயும் இப்படித் தான்.
-ரேணு
“என்னம்மா இன்னைக்கு ரொம்ப நேரமா படிக்குறீங்க?” என்று கேட்டபடியே ஹாலிற்கு வந்தார் காமாட்சி.
“ஆமா. படிச்சு படிச்சு டயர்ட் ஆகிட்டேன்” டைரியை மூடி வைத்து கவிதாவை தொடர்பு கொண்டு தான் படித்தவரை அவளிடம் கூறினாள்.
மொபைலை அணைத்த கவிதாவிற்கு வீட்டிற்குள் இருக்கப் பிடிக்கவில்லை. அதிகம் பேசி பழக்கமில்லாதவள். இருப்பினும் இப்போது கணவன் அருகில் இருந்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என்று தோன்றியது. மொட்டை மாடிக்கு சென்றாள்.
வெயில் அதிகம் இல்லாமல் சூழ்நிலை ரம்மியமாக இருந்தது. “ம்மா… ஊ… பா…” என்று எல்லாத் திசையையும் கை காட்டி எதேதோ கூறினான் ரோஷன். “அட… ஆமாடா தங்கம்…” என்று அவனுக்கேற்ப பதில் கூறியவள் சிறிது நேரத்திற்குப் பின் இருட்டத் துவங்கவே கீழே இறங்கி வந்தாள்.
ஒரு கையில் தேநீர் கோப்பை மறுகையில் டைரியுடன் தோட்டத்திற்கு வந்தாள் மீனா. எப்படியும் இரவு ராஜேஷ் வர தாமதமாகும் என்பதால் விளக்கைப் போட்டு ஊஞ்சலில் அமர்ந்தாள்.
இன்னைக்குக் காலையில ஜென்னி எங்க வீட்டுக்கு என்னை பிக்கப் பண்ண வந்ததும் நான் அவக்கிட்ட கேட்ட முதல் கேள்வி – “என்ன விஷயம்?”
சொல்லுறது என்ன… காட்டவே செய்யுறேன்னு சொல்லி வண்டிய எடுத்துட்டா. இவ இன்னைக்கு இல்லன்னாலும் என்னைக்காவது என்கிட்ட நல்லா வாங்கப் போறான்னு நெனச்சுட்டே நானும் அமைதியா அவப் பின்னாடி வண்டில உட்கார்ந்திருந்தேன்.
காலேஜ் வந்ததும் வண்டிய நிறுத்திட்டு எங்க கிளாஸுக்கு போகாம வேற பக்கம் போனா. எங்க போறோம்னு கேட்டதுக்கு “நான் சொல்லுற கிளாஸ திரும்பிப் பாரு”னு சொல்லிட்டு வேகமா நடக்க ஆரம்பிச்சா.
எங்கெங்கயோ சுத்தி ஏதோ ஒரு ப்ளாக்குல மூணாவது மாடி ஏறி அவ நடந்தப்போ எனக்குப் பொறுமை பறந்திருந்துது. இவ இப்போ எதுக்கு நமக்குக் காலேஜ சுத்திக் காமிச்சுட்டு இருக்கான்னு எரிச்சலா வந்துது.
திடீருன்னு கொஞ்சம் மெதுவா நடக்க ஆரம்பிச்சவ “இந்த கிளாஸ்குள்ள பாரு ரேணு”னு சொன்னா.
கௌதம்… இன்னும் கொஞ்சம் பசங்களோட சேர்ந்து அரட்ட அடிச்சுட்டு இருந்தான். நான் அவன பார்த்த நொடி சரியா அவனும் என்னைப் பார்த்தான். எனக்குப் பதட்டமா இருந்துது. உடனே திரும்பி முன்னாடி போய் ஜென்னி கைய இறுக்கிப் பிடிச்சு வேகமா நடக்க ஆரம்பிச்சேன்.
படில இறங்குறதுக்கு முன்னாடி ஒரு தடவ திரும்பி அவன் கிளாஸ் இருந்த திசையப் பார்த்தேன். கௌதம் அவன் கிளாஸ் வாசல்ல நின்னு எங்களைத் தான் பார்த்துட்டு இருந்தான்.
ஜென்னிய இழுத்துட்டு மூணு மாடியோட படியையும் ஒரு நிமிஷத்துக்குள்ள இறங்கி வந்தேன்.
நான் இழுத்த வேகத்துக்கு அவ படில உருளாம இருந்ததே பெரிய விஷயம். அவளும் கௌதம பார்த்ததால கொஞ்சம் வேகமா தான் வந்தா.
ஆனா அந்த ப்ளாக் விட்டு வெளில வந்ததுக்கு அப்பறமும் நான் ஓடாத குறையா அவள இழுத்துட்டு நடந்ததால கத்த ஆரம்பிச்சுட்டா. “கைய விடு ரேணு… விடுடி…”னு எவ்வளவோ கெஞ்சியும் நான் விடல.
கிளாஸ்ல வந்து உட்கார்ந்து ஒரு பாட்டில் தண்ணிய ஒரே மடக்குல குடிச்சு முடிச்சுட்டு என்னைப் பார்த்து “எதுக்குடி இப்படித் தல தெறிக்க ஓடி வந்த? நீ ஓடுற சரி… என்னையும் ஏன்டி இப்படித் தர தரன்னு இழுத்துட்டு ஓடி வந்த?”னு கேட்டா.
நான் எதுவும் பேசாம அவளையே பார்த்து முழிச்சுட்டு இருந்தேன். தண்ணிய குடுத்துக் குடிக்கச் சொன்னா.
அவள நேத்து ஒரு ஸ்டாப் அந்த ப்ளாக்குல இருக்க ஒரு லேப்கு போய் ஏதோ நோட் வாங்கிட்டு வர சொன்னாங்களாம். அப்போ அவ கௌதம் கிளாஸ பார்த்தாளாம். அவன் செகண்ட் இயர் E. C. E. படிக்குறானாம். நான் தண்ணி குடிச்சு முடிக்கறதுக்குள்ள அவ இது எல்லாத்தையும் சொல்லி முடிச்சுட்டா.
இவ்வளவு நேரமும் அவ கௌதமுக்கு மரியாதை குடுத்து பேசுனது எனக்குப் பிடிச்சுது. ஆனா அவனுக்கு மரியாதை குடுக்கணும்னு எனக்குத் தோணல. அவன் என்ன படிச்சா எனக்கு என்ன? இனி அவனப் பத்தி பேசாதன்னு சொன்னேன்.
அப்பறம் எதுக்கு இத்தன நாள் தேடி அலஞ்சன்னு ஜென்னி கேட்டப்போ எனக்குப் பதில் சொல்ல தெரியல.
கொஞ்ச நேரம் என் முகத்த குருகுருன்னு பார்த்துட்டு “அதெல்லாம் சரி… கௌதம் அண்ணா சீனியர்னு சொல்லிட்டேன்… நான் அண்ணான்னு கூப்பிடுறேன்… நீ என்னமோ அவன் இவன் னு பேசுற?”னு கேட்டா.
கடவுளே… இவளை எல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களா? அது எப்படித் தேவயில்லாத விஷயத்த எல்லாம் கரெக்டா யோசிக்குறாளோ? பிரண்ட்ஸ்னாலே இப்படித் தான் இருப்பாங்களோ?
இப்போ இவக்கிட்ட என்ன சொல்லி சமாளிக்கப் போறேன்னு யோசிச்சுட்டு இருந்த நேரம் ஸ்டாப் உள்ள வந்து கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.
நல்லவேளை தப்பிச்சேன்னு நெனச்சு நிம்மதி பெருமூச்சு விட்டேன். என் நிம்மதி இன்னும் ரெண்டு மணி நேரத்துல மொத்தமா கெடப் போறது தெரியாம.
“மீனு… மணி என்ன ஆகுது தெரியுமா? ஏன் இங்க உக்காந்திருக்க?” அவள் அருகில் ஊஞ்சலில் வந்தமர்ந்தான் ராஜேஷ்.
“வந்துட்டீங்களா? கார் வந்த சத்தம் கூடக் கேக்கல?”
“எப்படி மேடம் கேக்கும்? நீங்க தான் இந்த டைரில மூழ்கிப் போயிட்டீங்களே…”
“வந்ததும் ஆரம்பிக்காதீங்க ராஜேஷ். உள்ள வாங்க”
“நான் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வரேன்” மீனாவின் கன்னத்தில் முத்தமிட்டு கைபேசியை எடுத்து எண்களை அழுத்தியபடியே நடந்தான் ராஜேஷ்.
“இப்போ தான வந்தீங்க… அதுக்குள்ள யாருக்கு போன் பண்ணுறீங்க?”
“கவிதாவுக்கு” என்று அவன் கூறிய நேரம் கவிதா காலை அட்டென்ட் செய்திருந்தாள்.
“சொல்லுங்கண்ணா… வீட்டுக்கு வந்துட்டீங்களா?”
“இப்போ தான்மா வந்தேன். ரோஷன் என்ன பண்ணுறான்?”
“தூங்கியாச்சுண்ணா”
“வேற ஏதும் பிரச்சனை இல்லையே?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லைண்ணா. இன்னைக்கு புல்லா மீனா இங்க தான இருந்தா. எனக்குப் பொழுது போயிடுச்சு”
“சரி மா… வெக்குறேன்”
கைபேசியை அணைத்த கவிதா “செண்பா நீயும் தூங்கு. காலைல பாக்கலாம்” என்று கூறி மாடிக்குச் சென்றாள். தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ரோஷனை பார்த்துவிட்டு பால்கனி கதவை திறந்து வெளியே வந்து நின்றாள்.
அவள் வெளியே வரவும் கார்த்திக் அழைக்கவும் சரியாக இருந்தது.
“ஹலோ”
“என்ன கவி பண்ணுற?”
“கொஞ்ச நேரம் வெளில நிக்கலாமேன்னு பால்கனிக்கு வந்தேன்”
“என்ன கவி… ரொம்பச் சந்தோஷமா இருக்கப் போல?”
“ம்ம்… இன்னைக்கு புல்லா மீனா இங்க இருந்தா. பொழுதுப் போயிடுச்சு. அதோட…”
“அதோட?”
“பால்கனில நிக்குறப்போ எல்லாம் இந்த வீட்டுக்கு வந்தன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் இங்க நின்னு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தது தான் ஞாபகம் வருது”
“ம்ம்ஹும்… என்ன பேசினோம்னு ஞாபகம் இருக்கா?”
“…”
“கவி?”
“ரோஷன பத்தி பேசுனீங்க. நம்ம லைப் எப்படி இருக்கணும்னு சொன்னீங்க. உங்க கனவப் பத்தி சொன்னீங்க” என்றவள் இரண்டு நொடி அமைதிக்குப் பின்னர் “அப்பறம் என்ன எவ்ளோ லவ் பண்ணுறீங்கன்னு சொன்னீங்க” என்றாள்.
“உண்மையிலயே நான் ரொம்ப லக்கி கவி. பிசினஸ் விஷயமா உன்ன விட்டுட்டு எவ்ளோ அலையுறேன்… உனக்குக் கஷ்டமா தான் இருக்கும். ஆனாலும் என்ன அதிகம் தொந்தரவு பண்ணாம… வீட்ட பாத்துக்கிட்டு… ரோஷனையும் சமாளிச்சு… எனக்கு மறுபடியும் அந்த பால்கனில உன்கூட நிக்கணும். உன் கண்ண பார்த்து ஐ லவ் யூ னு சொல்லணும் “
“ம்ம்கும்… நீங்க எங்க வீட்டுல இருக்கீங்க? உங்கள ரொம்ப மிஸ் பண்ணுறேன் தெரியுமா?”
“நீ இப்படிச் சொல்லுறத நேர்ல கேக்கணும் போல இருக்குக் கவி”
“அப்போ சீக்கிரம் வீட்டுக்கு வாங்க”
“இத கேக்குறதுக்காகவே சீக்கிரம் வரேன். குட் நைட்”
உள்ளே வந்த கவிதா ரோஷனின் நெற்றியில் முத்தமிட்டு “குட் நைட்” என்று கூறி மெத்தையில் படுத்தாள்.
ராஜேஷின் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருந்த மீனா அன்று அவன் ஆபீஸில் செய்த வேலைகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். பின் கவிதாவின் வீட்டில் ரோஷன் செய்த குறும்புகளைக் கூறினாள்.
“நாளைக்கும் போவியா மீனு?”
“ம்ம்… பாவம் கவி. தனியா இருக்கால்ல… அதனால காலைல போயிட்டுச் சாயந்தரம் தான் வருவேன்”
திடுக்கிட்டு விழித்தெழுந்தாள் கவிதா. இன்றும் தன் வலதுபுறம் சில்லிடுவதை உணர்ந்து அறையைச் சுற்றிப் பார்த்தாள். பால்கனி கதவு திறந்திருந்தது.
‘இது என்ன மடத்தனம்? ஏன் இப்படிக் கதவச் சாத்த மறக்குறோம்? அப்படி என்ன அலட்சியம் நமக்கு? ரோஷன் மேல அக்கறையே இல்லையா?’
எழுந்துச் சென்று கதவைத் தாழிட்டாள். ஏனோ உறக்கம் கலைந்திருந்தது. ரோஷனை தொட்டுப் பார்த்தாள். அவன் உடலும் லேசாகச் சில்லிட்டிருந்தது.

Poipoottu 3

5
ராஜேஷ் டைரியை மூடி வைத்து எழுந்தான்.’இனி இதப் படிச்சு முடிக்குற வரைக்கும் இவ அடங்க மாட்டாளே…’தங்களறைக்குள் சென்று சில பைல்களை எடுத்து வைத்து வேலைப் பார்க்க ஆரம்பித்தான்.
இரவு உணவிற்கு என்ன செய்ய வேண்டுமென்று காமாட்சி அம்மாளிடம் சொல்லிவிட்டு ஹாலில் வந்தமர்ந்து டைரியை கையில் எடுத்தாள் மீனா.
என்னோட வாழ்க்கைல நிறையச் சந்தோஷம் இருந்துது. நான் டுவல்த்ல ஸ்கூல் பர்ஸ்ட் வந்தத எங்க வீட்டுல கொண்டாடுனாங்க. எனக்குக் கத்திய தூக்கிட்டு எதையாவது கிழிச்சு ஆராய்ச்சி பண்ணுறது… தலகாணி சைஸ்ல இருக்க புக்க படிக்குறது… இதுல எல்லாம் சுத்தமா விருப்பமே இல்ல.
நல்ல மார்க் எடுத்திருந்தாலும் என்னோட சாய்ஸ் இஞ்சினியரிங் தான். எந்த காலேஜ்ல வேணா சேர்த்துவிட எங்க வீட்டுல ரெடியா இருந்தாங்க. எனக்குக் குழப்பமா இருந்துது. தப்பா செலக்ட் பண்ணிட்டா நாலு வருஷம் கஷ்டப்படணுமேன்னு பயமா இருந்துது.
என்னோட வீட்டுல எனக்கு புல் சப்போர்ட் பண்ணாங்க. என்னோட வீடு… என்னைப் பொறுத்த வரைக்கும் என் உலகம். எங்க வீட்டுல நான் அப்பா அம்மா மட்டும். அப்பா ரயில்வேஸ்ல வேலை பார்க்குறாங்க. அம்மா ஹவுஸ் வைப். எங்களோடது ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பாமிலி. ஆனா என்னைப் பெத்தவங்க என்னை அப்படி வளக்கல.
சிரிப்பு தான் வருது. இந்த டைரி நான் எழுத ஆரம்பிச்சதுக்குக் காரணமே வேற. ஆனா நான் அவன பத்தி எழுதாம இப்போ வரைக்கும் எங்க வீட்ட பத்தி தான் எழுதியிருக்கேன்.
எனக்கு என் அப்பா அம்மா அவ்வளவு புடிக்கும். ஒருவேளை நாளைக்கு லைப்ல இவங்க ரெண்டு பேருல யார சூஸ் பண்ணணும்னு கேட்டா நான் எங்க வீட்ட தான் சூஸ் பண்ணுவேனோ?
ச்சச்ச… இன்னைக்குத் தான் அவன முதல் தடவ பார்த்தேன். முதல் பார்வையே என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. ஆனா நான் ஏன் இப்படி எல்லாம் யோசிக்குறேன்? தெரியல. அவன் என்னை அந்த அளவுக்குப் பாதிச்சுருக்கான்னு நினைக்குறப்போ ஆச்சரியமா இருக்கு.
“மீனா வா சாப்பிடலாம்”
“அய்யய்யய்ய… நான் ஒரு வேல செஞ்சா பொறுக்காதே. அதுக்குள்ள என்ன சாப்பாடு வேண்டிக் கிடக்கு?” கையிலிருந்த டைரியை மூடினாள் மீனா.
“அடியேய் மணி ஒன்பதாச்சு” சோபாவில் அமர்ந்த ராஜேஷ் அவள் தோளில் தன் இடது கையைப் போட்டு வலது கையால் அவள் தாடையைப் பற்றி “பசிக்குது மீனு… ப்ளீஸ்” என்றான்.
“சரி சரி… சாப்பிடலாம்”
எழ முயன்றவளை அவள் தோளில் போட்டிருந்த தன் இடது கையால் அழுத்தி அமர வைத்தான். “ஆமா… உனக்குத் தமிழ் படிக்கத் தெரியாதுல்ல… அதான் எழுத்து கூட்டி கூட்டி ஒரு மணி நேரமா ஒரு பக்கத்த படிச்சியா?”
அவன் கையைத் தட்டி விட்டு “ராஜேஷ் வேணாம்…” என்றாள்.
“ஒஹ்ஹ்… உனக்குத் தமிழ் படிக்கத் தெரியாதுன்னு சொன்னா கோவம் வேற வரும்ல…”
“பேசாம இருக்க மாட்டீங்களா? எழுந்து வாங்க”
“இன்னும் ஒரு வாய்டா செல்லம்… ஆ காட்டுங்க… தோ பாத்தீங்களா… முயல் பொம்ம… ஹை அழகா இருக்கே… ரோஷன் குட்டி மாதிரியே புசு புசுன்னு ரவுண்டு ரவுண்டு கண்ணோட இருக்கே… ஆ காட்டுங்க செல்லம்…” ரோஷனை சுற்றி பொம்மைகளைப் பரப்பி அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள் கவிதா.
“குட்டி இங்க பாருங்க… கார்…” என்று ஒருபுறம் செண்பகம் அமர்ந்து அவனுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தாள்.
“இன்னும் ஒரே வாய்டா செல்லம். வாயத் தொறங்க வாயத் தொறங்க… அப்பாடா… முடிஞ்சுது” நீண்ட பெருமூச்சை விட்டு ரோஷனின் வாயைத் துடைத்தாள்.
மொபைல் அடித்தது. அழைப்பது கார்த்திக் எனவும் உடனே அழைப்பை ஏற்றாள்.
“சொல்லுங்க”
அந்தப் பக்கம் முத்த மழைப் பொழிந்தான் கார்த்திக். கவிதாவின் முகம் உடனடியாகச் சிவந்தாலும் எதிரில் செண்பகம் இருப்பதால் கஷ்டப்பட்டு முகத்தை இயல்பாக வைக்க முயன்றாள்
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் “என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று கேட்டேவிட்டாள்.
“ஒண்ணும் இல்லையே. என் பொண்டாட்டிக்கு குடுக்கணும்னு தோணுச்சு. குடுத்தேன்”
“ஆமா… விட்டுட்டு போனீங்கல்ல. போய் ஒரு போன் கூடப் பண்ணல. நான் போன் பண்ணாலும் ஒழுங்கா பேசல. இப்போ மட்டும் என்னவாம்?”
“ஹே… டென்ஷன்ல இருந்தேன் கவி. அதோட நீ தனியா சமாளிச்சுடுவன்னு தான் விட்டுட்டு வந்தேன். என்ன பண்ணுற? ரோஷன் என்ன பண்ணுறான்?”
“அவனுக்குச் சாப்பாடு ஊட்ட தான் இவ்வளவு நேரம் போராடிட்டு இருந்தேன். இப்போ தான் சாப்பிட்டு முடிச்சான்”
“ம்ம்… இந்த ஆர்டர் நமக்குக் கெடச்சுடுச்சுக் கவி”
“அது போன் எடுத்ததும் புரிஞ்சுது”
“ம்ம்ஹும்”
“சரி அப்போ வீட்டுக்கு வந்துடுவீங்களா?”
“இல்ல கவி. இன்னும் ஒரு வாரம். எல்லாம் சைன் பண்ணி பக்காவா ரெடி பண்ணிட்டு வரேன்”
“ஹ்ம்ம்… சரி கார்த்திக். சாப்பிட்டீங்களா?”
“இல்ல. அதுக்குத் தான் கிளம்புனேன். அப்பறம் பேசுறேன். பை”
“பை”
‘போன் எடுத்ததும் அப்படிப் பேசுனாங்க. நான் அவங்கள சாப்பிட்டீங்களான்னு கேட்டேன். வெக்குறதுக்கு முன்னாடி பதிலுக்கு என்னைக் கேக்கணும்னு தோணவே இல்ல அவங்களுக்கு’
“அந்த டைரில என்ன படிச்ச மீனா?” என்று கேட்டான் ராஜேஷ்.
“ரேணு காலேஜ் சேர்ந்தத பத்தி இருந்துது ராஜேஷ். அவ அந்தப் பையன பத்தி எழுதி இருந்தத படிக்குறதுக்குள்ள தான் நீங்க சாப்பிட கூப்பிட்டுட்டீங்களே…”
“ம்ம்கும்… அடுத்தவங்க விஷயம்னா என்ன ஆர்வமா இருக்க நீ?”
“அங்க மட்டும் என்ன வாழுதாம்?’அந்த டைரில என்ன படிச்ச மீனா?’”
“சரி சரி படிச்சுட்டு சொல்லு”
“எப்போ பாரு திட்டிக்கிட்டு…”
“சும்மா வம்பிழுத்தேன்டி” அவள் கன்னத்தில் முத்தமிட்டு எழுந்து சென்றான்.
“தெரியும் தெரியும்”
கவிதா ரோஷனை தூக்கிக் கொண்டு மாடி ஏறினாள். அவன் அரைத் தூக்கத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தான். “தூக்கம் வந்துடுச்சா செல்லத்துக்கு? தூங்குவோமா?” அவனிடம் பேசியபடியே அறையினுள் வந்து அவனை மெத்தையில் கிடத்தினாள்.
அவன் அருகில் படுத்து தட்டிக் கொடுத்து உறங்கச் செய்தாள். அவளுக்கும் கண்கள் சொருகின. அவனை அணைத்தபடியே படுத்துக் கண் மூடினாள்.
தன் வலது புறம் மட்டும் சில்லிடுவதை உணர்ந்து மெல்ல விழித்தாள் கவிதா. நல்ல உறக்கத்தில் இருந்ததால் தான் எங்கிருக்கிறோம் என்று புரிவதற்கே சில நொடிகள் தேவைப்பட்டன. அறையைச் சுற்றி பார்த்தவள் ஏ ஸியை திரும்பிப் பார்த்தாள்.
இன்றும் மிகக் குறைந்த வெப்பநிலையில் இருந்தது. அதை அணைத்தவள் ரோஷனிற்கு உடை மாற்றி அவனைத் தொட்டிலில் கிடத்திவிட்டு வந்து படுத்தாள். தூக்கம் கலைந்திருந்தது.
‘ச்ச… இப்படிப் பொறுப்பில்லாம இருக்கோமே. நேத்து தான் ஏ ஸி டெம்பரேச்சர் கொறச்சு வெச்சு படுத்தோம். இன்னைக்கும் ஏன் இப்படி? ரோஷன் தூங்குறான்னு கொஞ்சம் கூட யோசிக்காம… அவன் ஞாபகமே நமக்கு வரமாட்டேங்குதே. இனி கவனமா இருக்கணும்’
படுக்கையறையுள் கையில் டைரியுடன் நுழைந்தாள் மீனா. “ஓகே மீனா… குட் நைட்” வேகமாகப் போர்வையை இழுத்து மூடி படுத்தான் ராஜேஷ்.
“விளையாடாதீங்க ராஜேஷ். காலைல நீங்க ஆபீஸ் போயிடுவீங்க. ப்ளீஸ். எனக்குக் கொஞ்சம் படிச்சு காமிங்களேன்…”
“விட மாட்டியே… இதுக்குப் பயந்து தான் நான் அப்போவே வந்து படுத்தேன்” போர்வையை விளக்கி எழுந்து அமர்ந்தான். அருகில் அமர்ந்து அவன் கையில் டைரியை கொடுத்தாள்.
“இன்னைக்கு மட்டும் தான் மீனு… இனி என்ன படிக்கச் சொல்லாத. எனக்கு அதுக்கெல்லாம் பொறுமை கிடையாது”
“சரி” அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் “படிங்க…” என்றாள். அவள் விட்ட இடத்திலிருந்து அவன் வாசிக்க ஆரம்பித்தான்.
காலேஜ் செலக்ட் பண்ணுறதுல எனக்கிருந்த குழப்பத்த என் பிரண்ட் ஜென்னி தீர்த்து வெச்சா. அவ தான் இந்த காலேஜ் பத்தி சொன்னது. அவ என்னோட க்ளோஸ் பிரண்ட். தர்ட் ஸ்டாண்டர்ட்லேருந்து ஒண்ணா படிக்குறோம். அவ அந்த காலேஜ் சேரப் போறேன்னு சொன்னதும் நானும் முடிவு பண்ணிட்டேன்… அங்க சேரணும்னு.
முதல் நாள் காலேஜ். யூனிபார்ம் இல்லாம… ரெட்ட ஜட இல்லாம… ஏதோ ஒரு விடுதலை உணர்வு. நானும் ஜென்னியும் சேர்ந்து அவளோட ஸ்கூட்டில போனோம். காலேஜ்குள்ள நுழையும்போது ஏதோ ஒரு புது உலகத்துக்குள்ள நுழையுற மாதிரி இருந்துது.
அவ வண்டிய நிறுத்த பார்க்கிங் ஏரியா போனப்போ தான் அவன பார்த்தேன். பைக் கண்ணாடிய பார்த்து அவன் முடிய கையால கோதிட்டு இருந்தான். அவன் பைக் பக்கத்துல ஜென்னி அவ வண்டிய நிறுத்துனதும் நிமிர்ந்து எங்கள பார்த்தான்.
ஒரு பார்வை ஆள வீழ்த்தும்னா… அது அவனோட அந்தப் பார்வை தான். நான் விழுந்துட்டேன்.
6
சலனமற்ற பார்வை… அது ஏன் என்னை இந்த அளவு அலகழிக்குதுன்னு புரியல.
ஒரு தடவ என்னையும் ஜென்னியையும் பார்த்தான் அப்பறம் திரும்ப என்னைப் பார்த்தான்.
அவன் உதடு புன்னகைல விரிய ஆரம்பிச்சதும் எதுக்குன்னே தெரியாம எனக்குச் சந்தோஷமா இருந்துது. அவன் இன்னும் பெருசா சிரிக்க ஆரம்பிச்சதும் எனக்கு வெட்கம் வந்து நான் தலக் குனிஞ்சுட்டேன்.
எங்களத் தாண்டி ஒரு பையன் அவன்கிட்ட போனான். “கௌதம் இன்னும் கிளாஸ்கு போகலயாடா?”ன்னுக் கேட்டான்.
அப்போ தான் எனக்குப் புரிஞ்சுது… அவன் என்னைப் பார்த்து சிரிக்கல. என் பின்னாடி வந்த அவன் பிரண்ட பார்த்து சிரிச்சிருக்கான்னு…
நல்லவேளை நானும் பதிலுக்குச் சிரிச்சு பல்பு வாங்காம இருந்தேன்.
தலையில அடிச்சு திரும்பிப் பார்த்தா ஜென்னி ஒரு கைல பேக் பிடிச்சு ஒரு கைய இடுப்புல வெச்சு என்னையே பார்த்துட்டு நின்னா.
செத்தேன்னு அப்போவே முடிவு பண்ணிட்டேன்.
மெதுவா “போகலாமா?”ன்னுக் கேட்டேன். எனக்கே நான் பண்ணுறதெல்லாம் விநோதமா இருந்துது. இவ இப்போ கிண்டல் பண்ண ஆரம்பிச்சா விடிஞ்சாலும் நிறுத்த மாட்டாளேன்னு உள்ளுக்குள்ள பயம் வேற…
“வா”ன்னு சொல்லி அமைதியா நடக்க ஆரம்பிச்சா. எனக்கு இன்னும் ரொம்பப் பயம் வந்துடுச்சு. இவ இப்படி அமைதியா இருக்கான்னா நான் அவக்கிட்ட தனியா சிக்க டைம் பார்க்குறான்னு அர்த்தம். பார்க்கிங் ஏரியால நிறையப் பேர் இருந்ததால அப்போதைக்கு நான் தப்பிச்சேன்.
க்ளாஸுக்கு போகாம நேரா காண்டீன் கூட்டிட்டுப் போனா. எதுக்கு இங்க போறோம்னு கேட்டேன். க்ளாஸுக்கு போக வழி கேக்க வேணாமான்னு சொல்லிட்டு அவ பாட்டுக்கு நடந்தா.
இதுக்கு மேல பேசுனா எனக்குத் தான் ஆபத்துன்னு தெரியும். அமைதியாவே போய் அவ எதிர்ல உட்கார்ந்தேன்.
“மீனா நாளைக்குப் படிச்சுக்கோடா. தூக்கம் வருது…”
“அதுக்குள்ளையா? என்ன ராஜேஷ்?”
“இந்த டைரியே நாலு கிலோ இருக்கும் போல… எவ்வளவு பெருசா வெய்ட்டா இருக்கு. மடியில வெச்சு படிக்க முடியல மீனு. காலைல வேலை இருக்கும்மா… சீக்கிரம் போகணும்”
“சரி… நாளைக்குப் படிச்சுக்குறேன்” அவன் கையில் இருந்த டைரியை வாங்கி மெத்தையின் அருகில் இருந்த மேஜையில் வைத்து விளக்கை அணைத்துப் படுத்தாள்.
அடுத்த நாள் காலை சொன்னது போல் சீக்கிரமே கிளம்பிச் சென்றான் ராஜேஷ். கவிதாவின் வீட்டிற்குப் புறப்பட்ட மீனா வழியில் காரை நிறுத்தி பழக்கடை ஒன்றினுள் நுழைந்து தோழிக்கு அழைத்தாள்.
“என்னென்ன ப்ரூட்ஸ் வேணும் கவி? நான் வாங்கிட்டு வரேன். ரோஷனுக்கு என்ன குடுப்ப?”
“ஆப்பிள் வாங்கு மீனா. வாழைபழம் இருந்தா காயா பாத்துக் கொஞ்சம் வாங்கிக்கோ”
பழங்களை வாங்கி மீண்டும் காரை எடுத்தவள் கவிதாவின் வீட்டருகில் வர செல்வம் கேட்டை திறந்துவிட்டான்.
போர்ட்டிகோவில் காரை நிறுத்தி வாங்கி வந்த பழங்களைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.
“வாங்க மீனா கா…”
“கவிதா எங்க செண்பகம்?” கையிலிருந்த கவரை அவளிடம் கொடுத்தாள்.
“மாடிபடில ரோஷனோட உக்காந்திருக்காங்க கா. போய்ப் பாருங்க”
“இங்க உக்காந்து என்னடி பண்ணுற? ஹே குட்டி…” ரோஷனை தூக்கிக் கொண்டாள்.
“அத ஏன்டி கேக்குற? இவன்கூட ஹால்ல உக்காந்து விளையாடிட்டு இருந்தேன். இவன் எப்போ பாரு இந்த மாடிப்படிக்கிட்ட தான் வரான். அதான் இங்கயே வந்துட்டேன்”
“ஏன்டா தங்கம் இங்க வரீங்க? ம்ம்…”
“படிக்க ஆரம்பிச்சுட்டியா? என்ன இருந்துது அதுல?”
“மறந்தே போயிட்டேன். இரு எடுத்துட்டு வரேன். இவனப் புடி” ரோஷனை அவளிடம் கொடுத்துவிட்டு காரை நோக்கி விரைந்து சென்று முன் இருக்கையில் இருந்த பெரிய டைரியை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தாள்.
“இது வர தான் நான் படிச்சேன். நீயும் அது வர தான் படிக்கணும்”
“சரி சரி… இவன பாத்துக்கோ…”
மீனா சொன்ன இடம் வரை படித்த கவிதா “ஹே மீனா… ப்ளீஸ் ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் மட்டும் படிச்சுக்குறேனே…” என்றாள்.
“நோ வே… நான் தான் முதல்ல படிப்பேன்” அவள் கையிலிருந்த டைரியைப் பிடுங்கி தன் அருகில் வைத்தாள்.
“நீ எழுத்துக் கூட்டி எந்தக் காலத்துக்குப் படிச்சு முடிக்குறது?”
“உங்க அண்ணன் மாதிரியே பேசாத… நான் சீக்கிரம் படிச்சிடுவேன்”
செண்பகம் ஆப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் எடுத்து வர பேசி பேசி பொழுதை கழித்த மீனா, மாலை ஆறு மணிக்கு கவிதாவின் வீட்டிலிருந்து கிளம்பினாள்.
இரவு வீட்டினுள் நுழைந்ததிலிருந்து டைரி ராஜேஷின் கண்ணை உறுத்தியது. மீனா மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்க மெதுவாகப் படுக்கையறைக்கு வந்து கதவைத் தாழிட்டு டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
ஜென்னி அமைதியா என்னைப் பார்த்துட்டே உட்கார்ந்திருந்தா. அவளா ஏதாவது கேட்டா அதுக்கேத்த மாதிரி சமாளிச்சுப் பதில் சொல்லியிருப்பேன்.
அவ இப்படி அமைதியா இருக்கவும் அவ என்ன கேட்க நினைக்குறா? எத தெரிஞ்சுக்க என்னைக் கூட்டிட்டு வந்திருக்கா? நான் என்ன சொல்லணும்னு எதிர்ப்பார்க்குறா? நான் எத சொல்லணும்? எத விடணும்? எதுவும் புரியாம அமைதியா இருந்தேன்.
“ஜென்னி நீ நினைக்குற மாதிரி ஒண்ணும் இல்லடி”னு சொன்னேன். “நான் நினைக்குற மாதிரின்னா என்ன ரேணு?”னு திருப்பிக் கேட்டா.
கிராதகி… இப்படி என் வாயக் கிளறுவான்னுத் தெரிஞ்சு தான அவ்வளவு நேரம் எதுவும் பேசாம இருந்தேன்.
கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு நான் ஏன் அவன அப்படிப் பார்த்தேன்னு கேட்டா.
எனக்கே பதில் தெரியாத கேள்வி. ஏன் பார்த்தேன்? அவன்கிட்ட எது எனக்குப் பிடிச்சுது? எது என்ன ஈர்த்துச்சு? தெரியாது…
காதல்… சினிமால நான் பார்த்த விஷயம். கதைகள்ல படிச்ச விஷயம். காதலிக்குறவங்கள நான் நேர்ல பார்த்தது கிடையாது. ஸ்கூல்ல நிறையப் பேசுவோம். ஆனா அந்தக் கதை எதுவும் உண்மை இல்லன்னு எனக்குத் தெரியும். யாரையாவது ஓட்டுறதோட சரி.
எனக்கு அவன பாத்ததும் வந்த உணர்வுக்குப் பேரு காதலான்னு அப்போ நான் ஆராய்ச்சி பண்ண விரும்பல. ஒரே ஒரு தடவ பார்த்தத வெச்சு என்னால என் மனச புரிஞ்சுக்க முடியும்னு எனக்குத் தோணல.
அதனால தானோ என்னவோ இன்னைக்குத் திரும்பவும் அவன பார்த்தேன். ஒரு தடவ இல்ல… பல தடவ…
இப்படி நான் சுய அலசல்ல இருந்த நேரம் ஜென்னி என்னை ஆராய்ச்சி பண்ணி இருக்கா. ஒரு வழியா யோசிச்சு முடிச்சு நிமிர்ந்துப் பார்த்தப்போ ஒரு கைல பேகோட ஒரு கைய இடுப்புல வெச்சு என்னை மொறச்சுட்டு இருந்தா.
“கனவு கண்டது போதும். எத்தன வாட்டி போலாமா? போலாமா?னு கேக்குறது? எந்திரிச்சு வாடி”னுக் கத்திட்டு முன்னாடி நடக்க ஆரம்பிச்சுட்டா.
காண்டீன் வாசல நாங்க நெருங்கினப்போ மறுபடியும் அவன பார்த்தேன். பார்க்கிங்க்ல பார்த்த அவன் பிரண்டோட பேசிக்கிட்டே உள்ள வந்தான்.
கையில ஒரே ஒரு நோட். அதோட சேர்த்து ஹெல்மெட்டும் பிடிச்சிருந்தான். இன்னொரு கையில பைக் சாவியைச் சுத்திட்டே… ப்ளாக் போர்மல் பாண்ட், கிரே கலர் புல் ஹாண்ட் ஷர்ட் போட்டு சிரிச்சுக்கிட்டே எங்களத் தாண்டிப் போனான்.
அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்துது தெரியுமா? “பரவசம்” – இந்த வார்த்தைக்கான அர்த்தத்த வாழ்க்கையில முழுசா அனுபவிச்சதா உணர்ந்தேன்.
அவன் கடந்து போற வரைக்கும் அவனையே தான் பார்த்தேன். ஜென்னி என்னையே பார்த்தான்றது திரும்புனதுக்கு அப்பறம் தான் எனக்குத் தெரிஞ்சுது. ஷ்ஷ்ஷ்… பிரண்ட்ஸ பக்கத்துல வெச்சுக்கிட்டு சைட் அடிக்கக் கூட முடிய மாட்டேங்குது…
மறுபடியும் தல குனிஞ்சு வா போகலாம்னு சொல்லிட்டு இப்போ நான் அவளுக்கு முன்னாடி நடந்து கிளாஸ் விசாரிச்சு போய் உட்கார்ந்துட்டேன்.
முதல் வருஷம் E. C. E, E. E. E. ஒண்ணா உட்கார வெச்சிருந்தாங்க. நானும் ஜென்னியும் E. C. E எடுத்திருந்தோம். அவ சொன்னது தான்.
இப்போ என்கிட்ட பேசுன பொண்ணுங்க பேரெல்லாம் கேட்டா எனக்குத் தெரியாது. மறந்துடுச்சு. மனசுல பதியவே இல்லைன்றது தான் உண்மை.
எனக்கு அப்போ ஞாபகம் இருந்த ஒரே பேரு கௌதம்…
யார் யாரோ ஸ்டாப்ஸ் வந்து பேசுனாங்க. எங்க எல்லாரையும் பேச சொன்னாங்க. எல்லாமே கனவு மாதிரி இருந்துது.
ப்ரேக் அப்போ கிளாஸ் விட்டு வெளியில வந்தோம். கொஞ்ச தூரத்துல கௌதம் ஒரு கைய பாண்ட் பாக்கெட்ல விட்டு வேகமா நடந்து போயிட்டு இருந்தான்.
ஜென்னி என் கையப் புடிச்சு இழுத்து “ஏன்டி இப்படி மிட்டாய் கடைக்காரன் பட்டணத்தப் பார்க்குற மாதிரி பார்க்குற? சுத்தி எல்லாரும் கேக்குறாங்க… அவன் உனக்குத் தெரிஞ்சவனான்னு… ஒழுங்கா வா”னு என் காதுல சொன்னா.
அப்போ தான் எனக்கு ஒரச்சுது. நாங்க கும்பலா நடந்து போறோம்னு… அவனப் பார்த்தா மட்டும் நான் ஏன் இப்படிச் சுத்தி நடக்குறத மறந்திடுறேன்னு தெரியல.
நல்லவேள நான் அவக்கிட்ட தனியா சிக்கல. கூட்டமாப் போனதால அவளாலையும் அதிகம் பேச முடியல. எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து அரட்டை அடிச்சு ஆளுக்கு ஒரு ஜூஸ் குடிச்சோம்.
நாங்க காண்டீன்லேருந்து க்ளாஸுக்கு திரும்பி வந்தப்போ கௌதம் எங்களுக்கு எதிர்ல வந்தான். ஆனா நான் தலைக் குனிஞ்சுட்டேன். எனக்குத் தெரியும் அவனப் பார்க்க ஆரம்பிச்சா என்னால அவன் முகத்துலேருந்து கண்ண எடுக்க முடியாதுன்னு…
ஈவ்னிங் திரும்ப வண்டி எடுக்கப் போனப்போ கௌதம் அவன் பிரண்ட்ஸ் நிறையப் பேரோட பார்க்கிங் ஏரியால பைக்ல உக்காந்து பேசிட்டு இருந்தான்.
ச்ச… காலையில ஜென்னி அவளோட வண்டிய அவன் பைக் பக்கத்துல தான நிறுத்தினா… அவன் பைக்ல உட்கார்ந்து பேசியிருந்தா அவன கிட்ட பார்த்திருக்கலாம். ஆனா அவங்க எல்லாருமே கொஞ்சம் தள்ளி, தூரத்துல இருந்த பைக்ல உட்கார்ந்திருந்தாங்க.
வீடு வர வரைக்கும் ஜென்னி அமைதியா வந்தா. எனக்கும் காலையிலேருந்து கௌதம பார்த்தத யோசிக்க டைம் கெடச்சுது.
எனக்கு நான் நினைக்குறத யார்கிட்டயாவது சொல்லணும். எப்பயுமே.
இப்போ என்னால கௌதம் பத்தி ஜென்னிகிட்ட சொல்ல முடியாது. அவள விட க்ளோஸ் பிரெண்ட் வேற யாரும் எனக்குக் கிடையாது.
அப்போ முடிவுப் பண்ணேன். டைரி எழுதணும்னு.
ஜென்னி என்னை வீட்டுல விட்டுட்டு கிளம்புறப்போ “நீ சரியே இல்ல ரேணு”னு மட்டும் சொல்லிட்டு போனா.
வீட்டுக்கு வந்து ரெண்டு மணி நேரம் கழிச்சும் என்னால கௌதம் தவிர வேற எதையும் யோசிக்க முடியல.
ஜென்னி சொன்ன மாதிரி நான் சரியே இல்ல தான்…
– ரேணு

Pidikaadu 14

பிடி காடு – 14
நேரம் நடு ஜாமத்தைக் கடந்திருக்கும். வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாள் கௌரி. ஊர் அடங்கி நிசப்தமாக இருந்தது. மதியம் வந்துபோன நினைவுகளின் தொடர்ச்சியில் மூழ்கியிருந்தாள். செந்தில் சொன்னது சாத்தியமா?
“இந்நேரத்துல இங்க உக்காந்து என்ன பண்ணுற?”
“ஆத்தாடி… ச்ச… திடீருன்னு பேச்சுக் கேட்டதும் தூக்கிவாரிபி போட்டுடுச்சு. இல்ல சும்மா… நீ என்னய்யாப் பண்ணுற இன்னும் தூங்காம?”
“தூக்கம் வரல”
“ஏன்?”
“ஒனக்கு ஏன் தூக்கம் வரல?”
“நீ பாட்டுக்கு ஏதேதோ சொல்லிப்புட்ட. இம்புட்டுப் பெரிய விசயமெல்லாம் என்னால முடியுமான்னு யோசிச்சா… தூக்கம் போச்சு”
“இதுல என்ன கஷ்டம்?”
“கேப்பய்யாக் கேப்ப. சொவத்துல ஒய்யாரமா சாஞ்சு நின்னு கேள்விக் கேக்குறது சொலபம்”
“எதுக்கு இவ்வளோ யோசிக்குற? எனக்கு சமச்சுப் போட்டுட்டு தான இருக்க? அத இன்னும் பத்து இருவது பேத்துக்கு சேத்து செய்யுன்னு சொல்லுறேன்”
“நீ என்னைய வியாவாரம் பண்ண சொல்லுற. கணக்கு வழக்கெல்லாம் பா…”
“என்ன படிச்சிருக்க? ஒண்ணு ரெண்டு எண்ணத் தெரியுமா?”
“எல்லாம் தெரியும்”
“கட போடுறதுக்கு என்னென்ன சாமான் வேணும்னு லிஸ்டு போட்டு நாளைக்கு ரெடி பண்ணி வை. சாயங்காலம் வந்து கடைக்குக் கூட்டிட்டுப் போறேன். நேரங்கெட்ட நேரத்துல இங்கல்லாம் உக்காறாத. உள்ள போ”
“கேக்குற ஒரு கேள்விக்கும் பதிலுக் கெடயாது. திருப்பி நம்மக்கிட்டயே கேள்விக் கேக்க வேணடியது. போறதப் பாரு… ஹ்ம்ம்… இதுக்கு மேல இங்க உக்காந்து என்ன பண்ண? யோசிக்கக் கூட நேரங்குடுக்க மாட்டாக போல. என்ன நடக்குதோ நடக்கட்டும். பொலம்பி என்னாகப் போகுது? கண்ணு முழிச்சுத்தே என்னாகப் போகுது? எனக்கு ஆயிரத்தெட்டுக் கவல.. தூக்கம் வரல. இவகளுகென்ன வந்துச்சு? இந்நேரத்துல இங்கெதுக்கு வந்தாக?”
செந்தில் பெட்டியிலிருந்த கணக்குப் புத்தகத்தை எடுத்தான். அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கையிருப்பைக் கணக்கிட்டான். இருந்தது. இப்போதைக்கு தாராளமாக இருந்தது. ஆனால் வரும் நாட்களில் அதில் எவ்வளவு மிச்சமிருக்கும்?
புத்தகத்தை உள்ளே வைத்து பெட்டியை மூடி விளக்கை அணைத்துப் படுத்தான்.
காலை எழுந்தது முதல் ஒரு காகிதத்தில் கடைப் போட தேவையான பொருட்களைக் குறித்து வைத்தாள் கௌரி. செந்தில் கவனித்தான். எதுவும் கேட்கவில்லை. இரவிலிருந்து அவன் மனதில் ஒரு கேள்வி மட்டும் எஞ்சியிருந்தது.
‘இவளுக்காக நா எதுக்கு இம்புட்டு செலவுப் பண்ணணும்?’
வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிட்டான். மாற்றிப் பேச மனம் இடம் கொடுக்கவில்லை. எதற்காக அப்படிச் சொன்னான் என்ற ஆராய்ச்சி ஒருபுறம். இத்தனை செலவு போகத் தனக்கென்று எதுவும் மிஞ்சுமா என்ற சந்தேகம் ஒருபுறம்.
அவள் அமைதியாய் இருப்பது செந்திலிற்கு பிடிக்கவில்லை. இத்தனை வருடங்களாய் அவன் வீட்டில் நிலவிய அமைதி இன்று மட்டும் ஏன் பிடிக்காமல் போனது?
அவன் பேசாமல் சாப்பிடுவது அவளுக்கும் பிடிக்கவில்லை. எப்போதும் அவன் அமைதியாகச் சாப்பிடுவது வழக்கம். தெரியும். இருந்தாலும் இன்று அவன் ஏதாவது பேசினால் ஆறுதலாக இருக்குமென்று நினைத்தாள். கிளம்பும்போதும் தலையை மட்டும் அசைத்துச் சென்றுவிட்டான்.
‘சாயங்காலம் எத்தன மணிக்கு வருவாக? இன்னைக்கே எல்லாத்தையும் வாங்கணுமா? என்னைக்கு வண்டிக் கெடைக்கும்? என்னையிலேந்துக் கடப் போடணும்? எங்கப் போடணும்? என்ன சமைக்கணும்? ஒரு மண்ணும் சொல்லாம லிஸ்டு எழுதுன்னு மட்டும் சொல்லிட்டு… என்னன்னு எழுத? நானும் காலையிலேந்து நாலு சாமான் எழுதி வெச்சுக்கிட்டு முழிக்குறேன். ஒக்காந்து எதுனாப் பேசுனா என்ன? வாயத் தொறந்தா முத்து உதுந்துடும்னு இறுக்கி மூடி வெச்சுக்கிட்டே திரியுறது. எனக்கென்ன போச்சு? கடுகு, சீரகம்னு என்னத்தையாவது எழுதி நீட்டுறேன். அவகளே பாத்துக்கட்டும்’
மாலை அவன் கையில் காகிதத்தைக் கொடுக்கும்போது இந்த வீராப்பெல்லாம் காணாமல் போயிருந்தது.
“இன்னும் கெளம்பலையா? எம்மூஞ்சிய பாத்துட்டு நிக்குற?”
“எத்தன மணிக்கு வருவேன்னு நீ சொல்லவே இல்ல. இவ்வளோ சீக்கிரம் வந்து நிப்பன்னு எனக்கென்ன தெரியும்? நீயே போயி வாங்கிட்டு வந்துடுறியா?”
“கையெழுத்து கன்றாவியா இருக்கு. எனக்கொண்ணும் புரியல”
“நா வேணா இப்போ சொல்லுறேன்”
“மறந்துடும்”
“வேற புதுசா வேணா எழுதித் தரேன்”
“நேரமில்ல”
“எப்படியும் நா கெளம்ப நேரமாகுமில்ல. அந்த நேரத்துல வேற எழுதிக் குடுக்குறேன். நீயே…”
“கெளம்புறியா என்ன?”
“நா புடிச்ச மொயலுக்கு மூணே காலு”
“மொனகாதன்னு சொல்லிக்கிட்டே இருக்க மாட்டேன். என்னைக்காவது ஒரு நாள் செவுலு மேலயே விழும்”
“சீக்கிரமாக் கெளம்புறேன்னு சொன்னேன். புள்ளைக்கு ட்ரெஸ் மாத்தி விடுறியா?”
“அதெல்லா எனக்குத் தெரியாது. ஒனக்கு இன்னும் பத்து நிமிஷம் தரேன். ஓடு”
“நல்லாத்தான்யா அதிகாரம் பண்ணுற”
“நா காருல ஒக்காந்திருக்கேன். சீக்கிரம்”
“சரி சரி”
கௌரி தயாராகி மகனை தூக்கிக் கொண்டு வந்தபோது அவன் காரின் முன்புறம் நின்று செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தான்.
“போலாம்”
“எங்கப் போகணும்?”
“எங்கயா? நீதானக் கடைக்குப் போவோம்ன?”
“எந்தக் கடைக்கு?”
“எனக்கிந்த ஊருல எந்தக் கடைய தெரியும்?”
“என்ன வாங்கணும்?”
“அதா லிஸ்டு குடுத்தேன்ல?”
“அது ஒனக்குதாத் தெரியும். எங்கப் போகணும்?”
“பத்துக் கேள்விக் கேட்டு எரிஞ்சு வுழுந்தாலும் வுழுவ… ஒத்த கேள்விய உருப்படியாக் கேக்க மாட்ட அப்படித்தான? மொத எத வாங்கணும்னுக் கேக்குறியா? அதுக்கு நா என்ன கட போடணும்னு நீ சொல்லணும். அதவே சொல்லாம…”
“வண்டியில ஏறு. தெருவுல வெச்சுக் கத்த வேணான்னுப் பாக்குறேன்”
“என்னத்துக்குக் கத்த…”
“முன்னாடி ஒக்காரு”
“இந்தா ஒக்காந்துட்டேன். போதுமா?”
வண்டித் தெரு முனையைத் தாண்டிப் பிரதான சாலைக்கு வரும்வரை அமைதியாக இருந்தான் செந்தில். அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மனதிற்குள் பட்டியலிட்டாள் கௌரி.
“எனக்கு…”
“ட்ராபிக் தாண்டட்டும். ரெண்டு நிமிஷம்”
அவனுடன் காரில் செல்வது இது முதல்முறை இல்லையென்றாலும் அவன் எப்படி ஓட்டுகிறான், சாலையை எப்படி கவனிக்கிறான், எப்போது எரிச்சலடைகிறான், எப்போது நிதானிக்கிறான் என்று சாலையையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“இப்போ சொல்லு”
“எங்கப் போறோம்?”
“ஏதோ கேக்கணும்னல்ல? கேளு. இப்படியே கொஞ்ச தூரம் போறேன். ஒன்னோட எல்லா கேள்விக்கும் பதில் சொன்னதுக்கப்பறமா பஜாருக்கு போவோம்” “என்னத்துக்கு கோவிக்குற? எனக்கென்னயாத் தெரியும்? கடப் போடுங்குற. தள்ளு வண்டி வாங்கித் தரேங்குற. என்ன…”
“இதுக்கு மேல வேற என்ன சொல்லணும்? தள்ளு வண்டி வெச்சு ஒன்னால என்ன கடப் போட முடியும்? நல்லா சமைக்குற. சாப்பாட்டு கடப் போடுன்னும் சொல்லிட்டேன்”
“நல்லா சமைக்குறேனா? இத எப்போ சொன்ன?”
“மதியம் வீட்டுக்கு வர நேரம் கெடைக்க மாட்டேங்குது சோத்த கட்டிக் குடுன்னு டப்பா கட்டி எடுத்துட்டுப் போறனே. எதுக்கு?”
“காசு மிச்சம் புடிக்குறேன்னு நெனச்சேன்”
தலையில் அடித்துக் கொண்டான் செந்தில்.
“இத்தன வருஷமா வெளில தான சாப்பிட்டுட்டு இருந்தேன். மிச்சம் புடிக்கணும்னா நானே செஞ்சு சாப்பிட்டிருக்க மாட்டேனா? நீ என் வீட்டுக்கு வந்தன்னைக்கு வீட்டுல சமைக்க ஏதாவது இருந்துதா? டீ தூள் இருந்துதா?”
“ஆமா… எதுவும் இல்ல. ஆனாலும் நீ சொல்லாம சாப்பாடு ஒனக்குப் புடிக்குதுன்னு…”
“ம்ம்ச்ச்… எல்லாத்தையும் சொல்லிட்ருக்க முடியாது”
“சரி நா சாப்பாட்டு கடப் போடுறேன்னே வெச்சுக்கோ. எடம் பாக்கணும்ல? இந்த ஊருல…”
“பாத்து வெச்சிருக்கேன். வேற”
“எங்க?”
“சொன்னா ஒனக்குத் தெரியுமா?”
“சரி சொல்லாத. என்ன சாப்பாடுப் போட?”
“ஒனக்கு எது நல்லா செய்ய வரும்னு ஒனக்குதாத் தெரியும்”
“நீதா தெனம் சாப்பிடுறல்ல? எது ரொம்பப் புடிச்சிருக்குன்னு சொல்லு. அதையே…”
“எல்லாமே புடிச்சிருக்கு”
“எல்… அது… இப்படி சொன்னா?”
“வேற எப்படி சொல்லுறது?”
“எது நல்லாருக்கு எது நல்லாலன்னு சொல்லு”
“வர வர எனக்கு வெளில டீ குடிக்கிறது கூடப் புடிக்கல. முன்னல்லாம் பத்து மணிக்கு ஒரு வாட்டி, மதியம் சாப்பிட்டு ஒரு வாட்டி, அஞ்சு மணிக்கு ஒரு வாட்டி டீ குடிப்பேன். இப்போல்லாம் ரொம்ப தல வலிச்சா சாயந்தரம் ஒண்ணுக் குடிக்குறேன். இல்லன்னா காலையில வீட்டுல நீ தரதக் குடிக்குறதோட சரி”
“…”
“வேற என்ன?”
“எப்பக் கடப் போடுறதுன்னு சொல்லு. அதுக்கேத்த மாதிரி ஏதாவது யோசிக்குறே”
“நா சொல்லுற எடத்துல காலையில ஆறு மணியிலேந்துக் கூட்டம் இருக்கும். எல்லாம் கூலி வேலைக்குப் போறவங்க”
“அப்போ அஞ்சற மணியிலேந்து ஆரம்பிக்கலாம். காலையில அதிகமா செஞ்சுட்டு, மதியத்துக்குக் கொஞ்சம் கம்மிப் பண்ணிட்டு ராத்திரிக்குத் திரும்ப அதிகமாப் போட்டுக்கலாம்”
“ராத்திரிக்கு வேணாம்”
“ஏன்?”
“தனி பொம்பளையா கையில கொழந்தையோட காலையில அஞ்சர மணியிலேந்து கடையில நிக்குறேன்ற. பகல்ல ஏதாவது பிரச்சனன்னாப் பரவாயில்ல. ராத்திரியில ரிஸ்கு. அதோட விடிஞ்சதுலேந்து நடு ராத்திரி வரைக்கும் கடையிலயே நின்னுட்டிருந்தா அடுத்த நாள் சாப்பாட்டுக்கு யாரு ரெடி பண்ணுவா?”
“ஆமால்ல… அத நா யோசிக்கவே இல்ல. சரி அப்போ இட்லி போடலாம். மதியத்துக்குக் கலந்த சாதம். போதும்”
“ம்ம்”
“இத மொதவே எங்கூட ஒக்காந்து பேசியிருக்கலாம்ல? நீ ஆம்பள… நாளெடத்துக்குப் போற வர…”
“என்ன நாளெடம்? எந்தக் காலத்துல இருக்க நீ? ஏன் நீ என்ன வூட்டுள்ள அடைஞ்சுக் கெடக்குறியா? ஒரு தள்ளு வண்டி வாங்கித் தரேன் சாப்பாட்டு கடப் போடுன்னா… உடனே பீதி ஆகுறது.
இப்போ எல்லாமே நீதான சொன்ன? காலையில எத்தன மணிக்கு கட ஆரம்பிக்கணும், என்ன சமைக்கணும் எல்லாம். ஒக்காந்து நெதானமா யோசிச்சாத் தெரியப் போகுது.
ஊரு தெரியாது ஏரியா தெரியாது ஒத்துக்குறேன். அத எங்கிட்டக் கேட்டா சொல்லப் போறேன். இதெல்லாம் யோசிக்காமையா இவ்வளோ மொதல் போட்டு வியாவாரம் பண்ணுன்னு சொல்லுறேன்?
ஒண்டியாத்  தெரியாத ஊருக்குக் கெளம்பி வந்திருக்க. அதும் கையில கொழந்தையோட. அவ்வளோ தைரியம் இருக்குதுல்ல? தனியா தெரியாத ஊருல சமாளிக்குற அளவுக்கு. அது போதாதா?
இப்போ ஏதாவது ஒதவின்னா செய்யுறதுக்கு நா இருக்கேன். இன்னுமும் நீ என்ன யோசிக்குற எதுக்கு யோசிக்குறன்னு எனக்குப் புரியவே இல்ல.
அப்பப்போ மார்க்கெட் போயி மொத்தமா சாமான் வாங்கிட்டு வரலாம். அவசரத்துக்கு வேணும்னா மாமா கடையில வாங்கிக்கோ. கையில காசு இல்லன்னாலும் கணக்கு சொல்லிட்டு வாங்கிட்டு வந்துக்கலாம். வேற என்ன வேணாலும் எப்ப வேணாலும் எனக்குக் கூப்பிடு”
“எப்படி?”
“என்ன எப்படி?”
“நா எப்படிக் கூப்புட?”
“போன் இல்லல்ல? மொத ஒனக்கு ஒரு செல்போன் வாங்குவோம்”
“மொத எங்கப் போவணும்னு எங்கிட்டக் கேட்ட… இப்போ நீயே சொல்லிப்புட்டப் பாத்தியா?”
“இந்த நக்கலுக்கொண்ணும் கொறச்சலில்ல. சொன்னதெல்லாம் மண்டையில ஏறுச்சா?”
“என்னால முடியும்னு நீ நம்புற. அதுவே எனக்கு தைரியத்தக் குடுக்குது. தெனம் நாலு எடம் போலன்னா என்ன? எனக்கு எதுவுமே தெரியாதுன்னு இல்லையே. நீ சொல்லுற மாதிரிக் கொஞ்சம் பீதி ஆயிட்டேன்”
“ஆளும் மண்டையும்… போடுற மொதலுக்கு ஒழுங்கா தெனம் கணக்கு சொல்லுற. ஒண்ணு ரெண்டு எண்ணத் தெரியுமா?”
“இன்னைக்கு நீ வாங்கி தரதுலேந்து எல்லாத்துக்கும் பில்லு குடு. நோட்டு போட்டு எழுதி வெச்சுக்குறேன். நோட்டுக்கும் பேனாவுக்கும் கூடக் கணக்கு வெச்சுக்குறேன்”
“பாருடா…”

Pidikaadu15

பிடி காடு – 15
கௌரி கை காட்டிய அனைத்தையும் வாங்கிக் கொடுத்தான் செந்தில். கை காட்ட அவள் தயங்கினாள். கடன். தெருவில் நின்ற அவளுக்கு உதவி செய்பவனிடம் எவ்வளவு கேட்பதென்ற அளவுகோல் பிடிபடவில்லை. வாங்கித் தர செந்திலும் தயங்கினான். திருப்பித் தருவாளாத் தெரியாது. தந்தாலும் எப்போதென்று தெரியாது. அதற்குள் ஏதேனும் முக்கியச் செலவு வந்தால் எப்படி சமாளிப்பது?
“என்னாச்சு? பஜாருக்கு வந்ததுலேந்து உம்மூஞ்சி சரியில்ல”
“இல்லையே… அப்படியெல்லா எதுவுமில்ல. நீ என்னய்யா யோசிக்குற?”
“ஒண்ணும் யோசிக்கல”
“காசு ரொம்ப ஆகுதுல்ல?”
“அதப் பத்தி நீ ஏன் யோசிக்குற?”
“திருப்பித் தர வேண்டியது நாந்தான? நா யோசிக்காம?”
“தரப்பப் பாத்துக்கலாம்”
“தந்துடுவேன்யா. எம்புட்டு சீக்கிரம் தர முடியுமோ உங்கடனயெல்லா அடச்சுடுறேன். ஊரு பேரு தெரியாதவளுக்கு யாரு இம்புட்டும் செய்வா? இருக்க எடம் பாத்துக் குடுத்த. சோறு போட்ட. இப்போ… சொந்த கால்ல நிக்க ஏற்பாடுப் பண்ணுற. உசுருள்ள வர மறக்க மாட்டேன்யா”
“எதுக்கு தெருவுல நின்னு ஒப்பாரி வெக்குற? எல்லாரும் பாக்குறாங்க. புள்ளையக் குடு. என்னதா தப்பா நெனப்பாங்க. ஒழுங்கு மரியாதையா வரதா இருந்தா அடுத்தக் கடைக்குப் போலாம். இல்ல இப்படியே வீட்டப் பாக்கப் போய் சேருவோம்”
“இல்லல்ல… அழல… இன்னைக்கே எல்லாம் வாங்கிடலாம். பாவம் நீ இதுக்காக சீக்கிரம் வந்திருக்க. தெனம் இப்டி ஒம்பொழப்ப விட்டுப்புட்டு எங்கூட சுத்த முடியுமா? இன்னைக்கு ஒன்னோட ஓட்டம் முடிஞ்சுதா? எனக்காகப் பாதியில வுட்டுட்டு வந்துட்டியா?”
“ஒனக்கென்ன தெரியும் என் வேலையப் பத்தி?”
“பெருசாத் தெரியாது. தெனம் இத்தன ட்ரிப்பு போகணும்னு ஏதோ கணக்கிருக்கு. ஒரு நாள் நீ சேகரண்ணன்ட பேசுனதக் கேட்டேன். அதா…”
“ஒட்டுக்கேக்குறியா?”
“ஆத்தி… இல்ல… எம்முன்னாடி வெச்சுப் பேசுனியா…”
“ஆமா கணக்கிருக்கு. இன்னைக்கு முடிஞ்சுது”
“எப்டி அதுக்குள்ள?”
“ஏதோ என் நல்ல நேரம்… எல்லாமே பக்கம் பக்கமா அமைஞ்சுது. ஒரு ட்ரிப்பு முடிச்ச எடத்துலயே அடுத்த ட்ரிப்பு கெடச்சுது”
“ஓஹோ… ச்ச… நீ வந்ததும் ஒரு டீ கூடப் போட்டுத் தரல. நீ வெளிலையும் குடிச்சிருக்க மாட்டல்ல?”
“ஓவர் நக்கலாருக்கு… நல்லதுக்கில்ல… பாத்துக்கோ”
“பரவால்ல. அதா போன் வாங்கிக் குடுத்துருக்கியே. இனிமே எப்போ வரன்னு சொல்லு… ஒனக்கு டீ ரெடியா இருக்கும்”
“இனிமே எங்க… நீங்க பிஸியா இருப்பீங்க. நா வர நேரத்துக்கு கடையில இருப்பீங்களோ வீட்டுல இருப்பீங்களோ யாருக்குத் தெரியும்?”
“எங்க இருந்தா என்ன? ஒனக்கு செய்யாமையா? ஆமா இந்த போன் நம்பர் என்ன சொன்ன? ஒன் நம்பரையும் மனப்பாடம் பண்ணணும்”
“அதெல்லா எழுதித் தரேன். ஆமா ஒனக்கு உங்கூர்ல ஒரு அடையாள அட்ட கூட இல்லையா? அதெப்படி? சிம் வாங்க ப்ரூப் கேட்டா முழிக்குற? இப்டி எல்லாத்தையும் எம்பேருல எடுக்க முடியாது. ஒழுங்கா வீட்டுக்குப் போனதும் பையிலத் தேடு. ஒரு அடையாள அட்டக் கூடவா இல்ல?”
“அது… நா… தேடிப் பாக்குறேன்”
ஏதோ கேட்க வந்தவன் அவனது கைபேசி ஒலிக்க எடுத்துப் பார்த்தான். சேகர் அழைத்திருந்தார்.
“சொல்லுங்கண்ணே”
“நல்ல நாள் பாக்க சொல்லியிருந்தல்ல… நாளன்னைக்கு நாள் நல்லா இருக்கு. அத வுட்டா அடுத்த வாரம் புதன் கிழம நல்லாருக்கு. அப்பறம்…”
“இல்லண்ணே. நாளன்னைக்கே வெச்சுக்கலாம். தள்ளிப் போட்டு ஆவப் போறது எதுவுமில்ல. நீங்க கட்டாயம் வரணும். வீட்டுலையும் சொல்லுங்க”
“சரிப்பா. வெக்குறேன்”
சேகர் கட்டிலில் அமர்ந்திருந்தார். சோர்ந்திருந்தார். இன்று வெயில் அதிகம். இரவு வரை ஆட்டோ ஓட்டத் தெம்பில்லாமல் மாலையே வீடு வந்திருந்தார். ரத்தினத்திடம் பேச வேண்டும். எப்படி ஆரம்பிப்பதென்று மனதிற்குள் ஒத்திகைப் பார்த்து மனைவியை அழைத்தார்.
“வெளியில வந்து ஒக்காரலாம்ல? ஏன் இப்படி வந்ததுலேந்து ரூமுள்ளயே அடைஞ்சுக் கெடக்குறீங்க?”
“நீ கொஞ்சம் இங்க ஒக்காரு. பேசணும்”
“என்னாச்சு?”
“நா ஒண்ணுக் கேப்பேன். எனக்காக செய்வியா?”
“பெருசா ஏதோ கேக்கப் போறீங்கன்னு மட்டும் தெரியுது”
“இல்ல ரத்தினம். நம்ம செந்திலு இருக்கான்ல… அவன் ஒரு பொண்ணக் கூட்டியாந்தானே… கௌரி…”
“அதுக்கென்ன?”
“நீ இப்டி வெடுக்கு வெடுக்குன்னு கேள்விக் கேட்டா நா எப்படிப் பேச சொல்லு… கொஞ்சம் பொறுமையாத்தாக் கேளேன்…”
“சொல்லுங்க”
“அந்தப் பொண்ணுக்கு ஒரு தள்ளு வண்டி வாங்கி குடுத்துருக்கான் சாப்பாட்டுக் கட போட. நாளன்னைக்கு ஆரம்பிக்குறதுக்கு நாந்தா நாள் பாத்து இப்போ செந்திலுக்கு சொன்னேன்”
“ஒங்களுக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலையெல்லாம்?”
“இதுல என்ன தப்பிருக்கு? ஏதோ சொந்தமாத் தொழில் பண்ணா அந்தப் பொண்ணு அது பொழப்பப் பாத்துக்கும்னு நெனைக்குறான். நல்லது தான? அதும் நாலு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சுதுன்னா அது வழியப் பாத்துட்டுப் போயிடும்ல?”
“அது வழியப் பாத்துக்கிட்டுப் போறதுக்காக் கூட்டியாந்தான்?”
“பின்ன? ஏதோ ஆதரவில்லாம நின்னுச்சேன்னு ஒதவி பண்ணுறான். அந்த புள்ளைக்குந்தா யாரு இருக்கா? அது வாழ்க்கையிலையும் ஒரு நல்லது நடக்குது. கூட நாலுப் பேரு இருந்தா அதுக்கும் தெம்பா இருக்கும்ல? அவன் என்ன காசு பணமாக் கேக்குறான்? இல்லக் கூடவே இருந்து பாத்துக்க சொல்லுறானா? அது…”
“இப்ப எதுக்கு இவ்வளோ இழுக்குறீங்க?”
“பத்தியா? இப்பதான சொன்னேன்?”
“சரி சரி… முழுசா சொல்லுங்க”
“நாளன்னைக்கு அது கடத் தொறப்புக்கு நீயும் வருவியா?”
“நீங்க போனாப் பத்தாதா?”
“ஆம்பளையாளுங்களாப் போயி நின்னா அதுக்கும் சங்கடமா இருக்கும்ல?”
“செந்திலு அத்தக்காரி வராளா?”
“ம்ம்ச்ச்… அவங்களப் பத்தித் தெரியாதா?”
“அப்பறம் என்னைய மட்டும் எதுக்குய்யாக் கூப்பிடுற? நம்ம வூட்டுலயும் ஒரு பொண்ணிருக்குது. நியாபகம் இருக்கா? ஊரு என்னாப் பேசும்… செந்திலோட அத்தையே வரல. நா மட்டும் போயி மின்ன நிக்க முடியுமா? யாராவது கேட்டா அந்த பொண்ணு யாருன்னு சொல்லுறது?”
“ஊர் வம்புப் பேசுற எவளாவது வந்து கேப்பா… அவனோட சொந்தக்காரப் பொண்ணுன்னு சொல்லு”
“அதா நானும் கேக்குறேன். அவன் சொந்தக்காரப் பொண்ணுன்னா அவன் அத்தை ஏன் வரலன்னுக் கேப்பாங்களே… என்ன சொல்லுறது?”
“அய்யோ என்னடி இது ஒன்னோட ரோதனையாப் போச்சு… செந்தில எனக்கு எத்தினி வருஷமாத் தெரியும்? இது வர அவன் என்னைக்காவது ஒன்ன அவன் வூட்டுக்குக் கூப்பிட்டிருக்கானா? இன்னைக்குக் கூப்பிடுறான். அதும் என்ன பண்ணுறதுன்னு அவனுக்கே தெரியாத சூழ்நிலையிலக் கூப்பிடுறான். அத்தை ஆத்தான்னு ஏதோ சாக்கு சொல்லிக்கிட்ருக்க…
எங்கையிலக் காசில்லாதப்போ ஒம்பொண்ணுக்கு பீஸ் கட்டுனானே… அப்போ ஊருக் கேக்கலையா? அவன் யாருன்னு? அவன் என்ன எனக்கு தம்பியா இல்ல ஒனக்கு தம்பியா? என்னாத்துக்கு நம்ம வாசவிக்கு பீஸ் கட்டுனான்?
இன்னைய வரைக்கும் அந்த காச அவன் திருப்பிக் கேட்டதில்ல. காரு வாங்குனானே… அப்போ கூடத் தரேன்னேன். உங்க கையிலயே காசு இல்ல… இப்போதைக்கு வேணான்னுட்டான்.
மனுஷனுக்கு மனுசன் ஒதவிப் பண்ணுறதுக்கு ஊரு அனுமதிக் கொடுக்கணுமோ? நமக்குன்னா ஊருக் கேக்காது… அடுத்தவனுக்குப் பண்ணும்போது மட்டும் ஊருக் கேக்குமோ? நல்லதா ஒரு சீலையக் கட்டிக்கிட்டு வந்து பத்து நிமிசம் சிரிச்ச மூஞ்சியா நின்னுட்டு போ. அவ்வளவுதா நா கேக்குறேன். முடியுமா முடியாதா?”
“என்னங்க இப்படியெல்லாம் பேசுறீங்க? செந்திலுக்கு ஒதவின்னா செய்யாமையா? அந்த தம்பி பத்தி எனக்குத் தெரியாதாங்க? அதுக்கு என்னா வேணா செய்யலாங்க. ஆனா நீங்க அந்த தம்பிக்குக் கேக்கலையே…”
“ஒதவி நம்மக் கேக்கும்போது இன்னாருக்கு இன்ன விஷயத்துக்குன்னு யோசிச்சாக் கேக்குறோம்? பழகுனப் பழக்கத்துக்காக… நமக்குத் தெரிஞ்சவங்களுக்கு நேரடியா செஞ்சா என்ன? அவங்கள சேந்தவங்களுக்கு செஞ்சா என்ன ரத்தினம்?”
“சரி”
“வரியா?”
“ம்ம்”
“நமக்கொரு பொண்ணிருக்குன்னு எனக்கு மட்டும் நெனப்பில்லாத போயிடுமா? அப்படியெல்லா ஒன்ன கொண்டு போயி நிப்பாட்டிடுவேனா ரத்தினம்? செந்திலு நல்ல பையன். அந்த பொண்ண ஒரு வாட்டிப் பாரு. பேசு. எனக்கென்னமோ நல்ல மாதிரியாதாத் தெரியுது.
வாழ்க்கையில யாருக்கு என்ன கஷ்டகாலம் வரும்னு யாருக்குடித் தெரியும்? கையிலப் புள்ளையோட அனாதையா நின்னுச்சு. மனசுக் கேக்காமக் கூட்டியாந்து பாத்துக்குறான். நாதியில்லாமதான ஊருப் பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு இங்க நிக்குது?”
“கஷ்டந்தா. என்னமோ… நல்லா இருந்தா சரி. நா கண்டிப்பா வரேன்”
கௌரி கேட்டை திறந்தாள். மகன் அவள் கையில் உறங்கிக் கொண்டிருந்தான்.
“நீ உள்ளப் போ. இந்த மாச வாடக இன்னும் குடுக்கல. மாமா வீடு வரைக்கும் போயிட்டு வரேன்”
“சரி. சாமானெல்லாம்?”
“வந்து எடுத்துத் தரேன். இப்போவே மணி 9”
செந்தில் காரில் சென்றுவிட அவளுடைய வீட்டைத் திறந்து உள்ளே வந்து விளக்கைப் போட்டாள். மகனை தூளியில் கிடத்தினாள்.
‘வாடக… இத எப்படி மறந்தோம்? வந்து நாலு மாசமாச்சு… அடேங்கப்பா… நாளு எம்புட்டு வேகமா ஓடுது? செலவுக் கணக்கோட வீட்டு வாடகையும் சேக்கணும்.
கடவுளே… எவ்வளோ பெரிய கடங்காரியா ஆக்கிட்ட? இந்தக் கடனால தான ஊர விட்டு ஒறவ விட்டு ஓடியாந்தேன். இந்த வட்டம் திருப்பி அடைக்குறதுக்கு ஒரு நல்ல வழி காமி’
செந்தில் மாமாவின் முன்னால் அமர்ந்திருந்தான். வாடகைக் கொடுத்தாகிவிட்டது. அவன் வீட்டிற்கும் கௌரியின் வீட்டிற்கும் சேர்த்து.
“இன்னைக்கு வர லேட் ஆயிடுச்சா? இவ்வளவு நேரம் வண்டி ஒட்டணுமா?
“இல்ல… இன்னைக்குக் கொஞ்சம் வெளியிலப் போற வேல இருந்துது”
“ம்ம்”
“நீங்க… கௌரிக்கு ஒரு கடப் போட்டுத் தரலாம்னு இருக்கேன்”
“எவ்வளவு செலவாகும் தெரியுமா? எடம் பாக்கணும். அட்வான்ஸு வாடக…”
“இல்ல… ரோட்டுக்கட. தள்ளுவண்டி ஒண்ணு வாங்குனேன். நாளன்னைக்கு ஆரம்பிக்கலாம்னு… நம்ம ரவுண்டானா பக்கம்”
“ஒன் இஷ்டத்துக்குதா எல்லாம் பண்ணுவன்னு முடிவாயிப் போச்சு. அப்பறமென்ன? ஆரம்பி. காரு ஓட்டப் போறியா? இல்ல நீயும் ரோட்டுல நிக்கப் போறியா?”
“யாரும் ரோட்டுல நிக்கத் தேவையில்ல. நாளன்னைக்கு ஆரம்பிக்கப் போகுது. நா ஒங்கக்கிட்ட சொல்லாம வேற யாரு மூலமாவது தெரிஞ்சா அசிங்கம் ஒங்களுக்குதா. அதா…”
“மாமா…”
அறையிலிருந்து வெளியே ஹாலிற்கு வந்த கண்மணி செந்திலை முறைத்தாள்.
“இதான் நீ அழைக்குற லட்சணமா? ஒங்கிட்ட அன்னைக்கே சொன்னேன்”
“அவன் அப்படிதான்மாப் பேசுவான். ஏன்னா…”
“நிறுத்துங்கப்பா. நீங்க பேசுனதும் தப்பு. கேட்டுட்டுதானிருந்தேன். மாமா ஒங்க மனசு நோவாம இந்த விஷயத்த எப்படிச் சொல்லுறதுன்னு சங்கடப்பட்டுக்கிட்டு மென்னு முழுங்கிப் பேசுது. அது ஒங்களுக்கும் புரியும். அப்பறம் எதுக்குச் சும்மா குத்திக் காமிக்குறீங்க?”
“நாளன்னைக்குக் காலையில அஞ்சு மணிக்குச் சின்னதா பூஜப் போட்டு ஆரம்பிக்குறோம். நா காரு வாங்கிப் பூஜப் போட்டப்போ நீங்க எல்லாரும் எம்பக்கத்துல இருந்தீங்க. அவளுக்கு யாருமில்ல. என்னைய நம்பிதா இங்க இருக்கா. எனக்குத் தெரிஞ்சவங்களக் கூப்பிடுறேன். நீங்க வந்தா நல்லாயிருக்கும். நா கெளம்புறேன்”
கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுச் செந்தில் சென்றுவிட்டான். கண்மணி தந்தையைப் பார்த்தாள். தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார். பாஸ்கர் வீட்டிற்குள் நுழைந்தான்.
“செந்திலு எதுக்கு வந்தான்?”
“வாடகக் குடுக்க. ஏன்பா மாமாவ இவ்வளோ நோவடிக்குறீங்க?”
“நீ என்ன சின்னப் பொண்ணா? நடக்குறதயெல்லா பாக்குறல்ல?”
“இதே மாமா ஒரு பையன கூட்டிட்டு வந்து ஒதவி பண்ணா இம்புட்டு பிரச்சன இல்லல்ல?”
“இப்…”
“நாளைக்கு நீங்க எல்லாரும் என்ன விட்டுப் போயிட்டீங்கன்னா… கடவுள் புண்ணியத்துல அப்படியொரு நெலம எனக்கு வரக் கூடாது. அப்படி வந்து நா நடுத் தெருவுல நின்னு இப்படியொருத்தன் எனக்கு ஒதவிப் பண்ணா அப்பயும் ஊருத் தப்பாதாப் பேசும் இல்லப்பா?”
“கண்மணி…”
அவள் அறைக்குள் சென்றுவிட்டாள். பாஸ்கருக்கு விஷயம் இன்னதென்று தெரியாவிட்டாலும் கௌரியை பற்றிய பேச்சென்பது புரிந்தது. இந்நேரம் வீட்டில் அவன் அம்மா இல்லையென்பது நிம்மதியைத் தந்தது. அமைதியாக அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

OVS14

உடல் தேறியதும் நல்ல நாள் பார்த்து மூலிகை டீ தயாரிக்கும் தொழிலை தொடங்கினர் மாமியாரும் மருமகளும். ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், அதன் பிறகு டீத்தூள் தயாரிக்கும் பணியை நேர்த்தியாகவே செய்தனர். வாரம் ஒரு முறை நகரத்து கடைகளுக்கு சப்ளை செய்ய முதல் பேட்ச் வேகமாகவே விற்றது. ‘உழவும் தொழிலும்’ செயலியும் முற்று பெரும் தருவாயில் இருந்தது.
ராணியின் தந்தையோ மகளிடம் ரகசியமாய்,
“ஆத்தா, அந்த திருட்டுப்பயல் திட்டம் போட்டு காய் நகர்த்துறான். அந்த புள்ளை தன்னை விட்டு போயிடக்கூடாதுன்னு தொழில் தொடங்கி கொடுத்திருக்கான். அந்த பொண்ணுக்கு ஒட்டுதலையும், பிடிப்பையும் அதிகப்படுத்துறான். நாம அமைதியா இருந்தா வேலைக்காகாது. நானே நேர்ல போய் விருந்துக்கு அழைக்கிறேன், வந்தா நீ அவன் பொண்டாட்டிகிட்ட பேசு. நம்ம வீட்ல இருந்து கிளம்புறவ ஆத்தா வீட்டுக்கு போய் தான் திரும்பிப் பார்க்கனும்.!”
“நடந்த விஷயமெல்லாம் அவளுக்குத் தெரிஞ்சிருந்தா…?”
“அட கிறுக்கே! உன்னை யாரு நடந்ததை பத்தி பேசச் சொல்றது?” என்றதும் பொய் புரட்டு சொல்லி பிரித்துவிட வேண்டும் என்பது அவளுக்கும் புரிய,
“சரி தான் அப்பா! அவளுக்கு குற்ற உணர்ச்சியை தூண்டி ஓட வைக்கிறேன்” என்றாள் இறுக்கத்துடன்.
“ஒருவேளை வரலைன்னா கூப்பிட போன இடத்திலேயே நான் கொளுத்தி போட்டுட்டு வந்துடறேன். எறும்பு ஊற கல்லும் தேயும். திரும்ப திரும்ப முயற்சி பண்ணினா சுலபமா செஞ்சுடலாம்.” என விருந்துக்கு அழைக்க வந்தார் அன்பின் கணவர்.
ராணியைப் பார்த்திராததால் அவளைத் தவிர அன்பின் குடும்பத்தார் அனைவரும் ஈஸ்வரிக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதால்,
“வாங்கப்பா!” என வாஞ்சையுடன் வரவேற்றாள்.
“யாரு யாருக்கு அப்பா? என் மக இருக்க வேண்டிய இடத்துல சட்டமா இருக்கோம்ங்கிற திமிரா?” கேட்க நினைத்த மனதை அடக்கி,
“வந்துட்டேன். உன்னை பார்க்க மட்டுமில்ல, விருந்துக்கு அழைக்கவும் தான் அப்பா வந்திருக்கேன். மாப்பிள்ளை எங்கே? உன் மாமனார், மாமியாரெல்லாம் எங்கே? வீட்டு மாப்பிள்ளை வந்திருக்கேன், உன்னைத் தவிர மற்ற யாரையும் காணோம்? இது தான் என் மரியாதை. இந்த குடும்பத்திலேயே நீ தான் மரியாதை தெரிஞ்ச புள்ளை” என புகழ்வது போல் இகழ்ந்து கொண்டிருக்க, ஒவ்வொருவராய் வந்து வரவேற்றாலும்,
“இவர் ஏன் இப்போ வந்தார்?” எனும் கேள்வி அனைவர் முகத்திலும் தொக்கி நின்றது.
“மாப்பிள்ளை, வர்ற வெள்ளிக்கிழமை விருந்து வைக்கிறேன் வந்துடுங்க!” வெகு நிதானமாய் குண்டைத் தூக்கி போட்டார்.
“இல்ல மாமா, அன்னைக்கு கலெக்டரோட விவசாயிகளை சந்திக்க போகணும். தோது பார்த்து நாங்களே வர்றோமே!” நாகரீகமாய்த் தவிர்க்க,
“நீங்க வர்றதுக்குள்ள பிள்ளையே பிறந்திடும் போல, அப்புறம் என் பேரன் அம்மா அப்பாக்கு விருந்து கொடுக்குறீங்களா இல்ல எனக்கு சோறு ஊட்டும் வைபவமான்னு கேட்ருடுவான். பகல்ல வர முடியாதுன்னா என்ன…? ராத்திரிக்கு வாங்க. ஒரு நேரம் சாப்பிட்டாலும் சரி தான்” விடாப்பிடியாய் நிற்க,
“மன்னிச்சுடுங்க மாமா. வாரக் கடைசியில் பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு அதனால நானே ஃப்ரீயா இருக்கும் போது ஈஸ்வரியை கூட்டிட்டு வரேன். நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு நீங்க அழைக்கணும்ங்கிறது இல்ல”
“உன் வீட்டு விருந்துக்காக இங்கே யாரும் ஏங்கி நிக்கலைன்னு சொல்றீங்க! ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. என் பொண்ணு இருக்க வேண்டிய இடத்தில வேறொரு பொண்ணு இருந்தாலும் அதையும் என் மகளா நினைச்சு விருந்துக்கு அழைச்சவனுக்கு நல்ல மரியாதை பண்ணிட்டீங்க, ரொம்ப சந்தோஷம்!
மாப்பிளை பேசுறது தான் சரின்னு நீங்களும் வாய் திறக்காம இருக்கீங்களே மச்சான். இது தான் உங்க ஊர் நியாயமா? பொண்ணை பெத்தவன் பணிஞ்சு போற காலம் போய் பெண்ணெடுத்தவன் வளைஞ்சு கொடுக்கிற காலம் வந்திருச்சு. நல்லது. உங்க தோது போல வாங்க!” என விடைபெற்றாலும்,
‘கதறிக்கிட்டு வர வைக்கிறேன்டா!’ என சூளுரைத்துக் கொண்டார்.
இதோடாவது போனாரே என அயர்ந்து அமர்ந்தவனிடம்,
“அத்தான்! அவங்க பொண்ணு இருக்க வேண்டிய இடம்ன்னு ஏதோ…” இன்னொருத்தியின் உடைமையை தட்டி பறித்துவிட்டோமோ என்னும் பதைப்புடன் கேட்டவளை கை உயர்த்தி அடக்கியவன்,
“ஆளாளுக்கு ஆயிரம் ஆசைகள் இருக்கும் ஈஸ்வரி. அதையெல்லாம் பார்த்தா வாழ முடியாது!” என்றான் எங்கோ பார்த்தபடி.
பெண்ணை கட்டிக் கொடுக்க வேண்டும் எனும் ஆசையில் இருந்தவர், முடியாத ஆதங்கத்தில் சொல்கிறார் என ஒற்றை வரியில் சொல்லியிருக்கலாம். இவையெல்லாம் தனக்கெதிராய் திரும்பும் என நினைக்காமல் சூசகமாய் சொல்லி அவளிடம் சஞ்சலத்தை உண்டாக்க தருணம் பார்க்கத் தொடங்கிவிட்டான். அவளோ,
‘என்ன சொல்கிறான்? அந்த பெண்ணை மணமுடிக்க இவனும் ஆசைப்பட்டானோ? என்னால் தான் அந்த ஆசை நிறைவேறாமல் போனதோ?!’ மனதில் பெரும் பாரம் குடிகொள்ள,
“நீங்களும் ஆசைப்பட்டீங்களா அத்தான்?” தயங்கி நெஞ்சடைக்க கேட்க,
“ஷட்டப்! ஏதாவது உளறாம வெளியே போ!” என விரட்டினானே தவிர ஆம் என்றோ இல்லையென்றோ சொல்லவில்லை. அவளிடம் சிறு சந்தேகம் தோன்றியது.
‘ஒரு வேளை இந்தப் பெண்ணால் தான் என்னிடம் காதல் வயப்படவில்லையோ?’ என்று எண்ணும் போதே கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது. சோர்ந்து, சுருண்டு கிடப்பவளை கண்டவனுக்கு வருத்தமாகிப் போக,
“ஈஸ்வரி…” என அருகே அமர்ந்து தோள் தட்டினான்.
‘ம்…‘ என்று கூட சொல்லாமல் படுத்திருந்தாள்.
“சாரி, நீ கேட்டது தப்பில்லையா? நான் உன் புருஷன்கிறதை மறந்து அவள் மேல ஆசைபட்டேனான்னு கேட்கிற! அதான் கோபம். அடுத்தவங்க ஆயிரம் சொல்லுவாங்க, அதையெல்லாம் பெருசா எடுத்துக்கக் கூடாது. முறைக்கார பசங்ககிட்ட ஒரு ஈர்ப்பு இருக்காதா? எனக்குள்ளேயும் அது தான் இருந்துச்சு!”
“எனக்கு அத்தை மகன்கள் இல்ல!” முறைக்காரர்களைப் பற்றியெல்லாம் எனக்கு தெரியாது என்பது போல் வெடுக்கென பதில் கொடுத்தாலும், கண்களில் தாரை, தாரையாய் வழிந்தது கண்ணீர்.
அவளைத் தூக்கி இறுக அணைத்து, முதுகு நீவி,
“ஏய் லூசு! அழுது தொலைக்காதே…” என அவள் தலையில் கன்னம் அழுத்தி,  
‘சிறு வயதில் பேச்சு நடந்ததை சொல்லிவிடுவோமா என யோசித்தவன், இப்போ இருக்கிற மனநிலையில் தப்பா தான் எடுத்துக் கொள்வாள்’ எனத் தோன்றிவிட,
“பக்கத்துக்கு ஊர்னாலும் அடிக்கடியெல்லாம் பார்க்க முடியாது. எப்போவாச்சும் அத்தை கூட வருவா. நாங்க ரெண்டு பேரும் நேருக்கு நேர் பார்த்ததோ, தனியா நின்னு பேசினதோ கூட கிடையாது. அவள் என்னை பார்க்கவே வெட்கப்படுவா.
எனக்கும் ரெண்டு தங்கைகள் இருக்க வீட்ல அத்தை மகளோட பேசி விளையாடனும்ங்கிற எண்ணம் கூட வந்ததில்லை. சரியா பார்க்க, பேச முடியலைங்கிறதால் சின்ன ஈர்ப்பு மட்டும் தான். இயல்பா பார்த்து பேசியிருந்தா அது கூட தோனியிருக்காது” அவன் சொன்னதையெல்லாம் விட்டு,
“ஈர்ப்புன்னா? பிடித்ததுக்கு முன்ன வர்றதா இல்லை அப்புறமா?” என வேகமாய் கேட்க,
“இவ்வளவு சொல்றேன் இன்னும் புரியலயா… பொம்மை! சின்ன சிரிப்பு, கள்ளப் பார்வை, கேலிப்பேச்சு, சீண்டல், தீண்டல் இதெல்லாம் செய்திருந்தாக் கூட தப்பா பார்க்க முடியாத உறவுக்காரி தான் இருந்தும், என் நிழல் கூட அவள் மேல பட்டதில்லை, விழி பார்த்து பேசினது இல்லை…
“வாங்க அத்தான்”, “ம்” இது ரெண்டைத் தவிர வேறு வார்த்தைகள் பேசியதும் இல்ல, கேட்டதும் இல்ல. இவ்வளவு தான் எனக்கும் அவளுக்குமான உறவு. உன் கேள்விக்கான பதிலை நீயே சொல்லுடி… என் பொம்மை! மடுவுக்கும், மலைக்குமான வித்தியாசத்தை வச்சுக்கிட்டு உன்னையும், அவளையும் இணை கூட்டுற…!” வலிக்க கன்னத்தில் தன் தடம் பதித்தான். விழிநீர் பெருகினாலும்,
‘இவன் மனதில் அவள் இல்லை, நாம் இவர்கள் வாழ்வை கெடுத்துவிடவில்லை’ எனும் பெரும் நிம்மதி மனதில் பரவ, அது மகிழ்ச்சியாய் முகத்தில் இடம் மாற… சட்டமாய் கணவனின் மடியில் அமர்ந்து கழுத்தை கட்டிக்கொண்டு தோளில் கன்னம் புதைத்து,
“சாரி அத்தான்” மென்குரலில் முணுமுணுக்க, முகம் நிமிர்த்தி,
“பார்டா…!” சிறு சிரிப்புடன்,
“உன் அழுகையெல்லாம் எங்க போச்சு ஜில்லு?” குறும்பு கொப்பளிக்க கேட்க,
“ம்… சைனாவுக்கு சீராட போயிருக்கு… வோ ஐ நி சோங் அர்!” என குழைந்து அடர்ந்த மீசைக்குள் அழகாய் பதுங்கியிருந்த அதரங்களை தன் வசமாக்கிக் கொண்டாள் அந்த கள்ளி. தெளியா போதை, தெவிட்டா இன்பம் என்ற போதும் முடியா நிலையில் தன் அதரங்களை விலக்கிக் கொண்டவளைப் பார்த்து,
“பிடிச்சிருக்கு ஜில்லுக்குட்டி!” என மூக்கோடு மூக்கை உரசி சிரிக்க,
“போங்க! இப்பவும் பிடிச்சிருக்கு தானா? எப்போ தான் இம்ப்ரஸ் ஆவீங்க அத்தான்?” சிணுங்க,
“ஆமாடி, அடுத்தவங்க சொல்றதையெல்லாம் கேட்டுக் கறுப்புக் கண்ணாடியை மாட்டிக்கிட்டு அத்தானை பார்த்து அப்பப்போ டர்ட்டி டைனோசர்ன்னு கோவிச்சுக்கிட்டு அழு… உன்கிட்ட இம்ப்ரஸ் ஆகிறேன்!” என வாரினான்.
“நீங்க டைனோசர் இல்ல ஆங்கிரி பர்ட் அத்தான்”
“வாய் மட்டும் வக்கனையா பேசு! உன்கிட்ட ஒரு வேலை கொடுத்து எத்தனை நாளாச்சு? இன்னும் அதை என்ன ஏதுன்னு கூட பார்க்கலை அப்படித் தானே?”
“ஹலோ, பார்க்கலைன்னு யார் சொன்னா? பினிஷிங் டச் தான் பாக்கியிருக்கு!”
“ம்ஹூம்… எடுத்துட்டு வா, பார்க்கலாம்!” என்றவன் சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டி அமர தன் லேப்டாப்புடன் வந்தவள் விரிந்திருந்த கால்களுக்கு நடுவில் அமர்ந்து, அவன் மார்பில் முதுகு சாய்த்து வசதியாய் அமர்ந்துகொண்டு ‘உழவும், தொழிலும்’ செயலியை இயக்க, அவன் கொடுத்த குறிப்புகளின் படி விவசாய பூமி வாங்கும் போது பார்க்க வேண்டியதில் ஆரம்பித்து,
என்னென்ன ஆவணங்கள் கையில் வைத்திருக்க வேண்டும், அதை யாரிடம் எங்கு போய் வாங்க வேண்டும், அந்த அலுவலகத்தில் வேலை நேரம், விடுமுறை நாட்கள், அதிகாரியின் பெயர், தொலைபேசி எண் போன்றவையும்,
மண் பரிசோதனை, நீர் பரிசோதனை போன்றவற்றை ஏன் செய்ய வேண்டும், எங்கு செய்ய வேண்டும், மண்ணின் வகைக்கேற்ப என்னென்ன பயிர்கள் விளைவிக்கலாம், அதற்கான விதைகள் எங்கு கிடைக்கும்,
எதற்கெல்லாம் அரசாங்கம் மானியம் வழங்கும், குறுவிவசாயிகள், சிறுவிவசாயிகள் போன்றோருக்கான வங்கிக்கடன் பற்றிய தகவல்கள், உற்பத்தியை பெருக்குவதற்கான உத்திகள், லாபம் தரும் விவசாய முறைகள், வேளாண் அலுவலகங்கள் அமைந்திருக்கும் இடங்கள், அதன் தொலைபேசி எண்கள் என அனைத்தும் அடங்கியிருந்தது அந்த செயலியில்.
கூடுதலாய் வீரபாண்டியன் கைபேசி எண்ணும், சிறப்புசேவை எனும் பெயரில் இணைக்கப்பட்டிருந்தது. மனையாளின் தோள்வளைவில் தாடை அழுத்தி அனைத்தையும் பார்வையிட்டவன்,
“ஓய்! எல்லாத்தையும் நான் கொடுத்தது போலவே செஞ்சிருக்கியே, ஆங்கிலம் படிக்கத் தெரியாதவங்க எப்படி இதை உபயோகப்படுத்த முடியும்னு கொஞ்சமாவது யோசிச்சியா?”
“இதுல லாங்குவேஜ் கன்வர்ட்டர் இருக்கு அத்தான். இதோ பாருங்க, தமிழ்ன்னு இருக்க ஆப்ஷனை க்ளிக் பண்ணினா எல்லாம் தமிழுக்கு மொழி மாற்றமாயிடும். அப்புறம் படிக்கிறதுல பிரச்சனை இருக்காது” என தெளிவாய் விளக்கம் கொடுக்க, மனையாளின் நேர்த்தியான வேலையில் கவரப்பட்டவனாய் இருகரம் கொண்டு வயிற்றோடு அணைத்து மெச்சுதலாய் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
திடீரென நிகழ்ந்த இச்செயலால் காதல் ஹார்மோன்கள் விழித்துக்கொள்ள, அவன் கரத்தின் மீது தன் கரம் வைத்து அழுத்தி,
“என்ன?” என அவன் மார்பில் தலை சாய்த்து முகம் பார்க்க,
“எல்லாம் தான் முடிஞ்சிருச்சே, இன்னும் என்ன பினிஷிங் டச்?” என புருவம் ஏற்றி இறக்கினான்.
‘ம்ஹூம்… நீ இதிலேயே இரு!’ என விழித்தெழுந்த ஹார்மோன்களனைத்தும் மறுபடியும் முடங்கிவிட,
“எனக்கு சில டவுட்டுகள் இருக்கு அத்தான். இதுல இருக்க சில தமிழ் வார்த்தைகளே அப்படித்தானா? இல்லை ஸ்பெல்லிங் எறர் ஏதாவது இருக்குமோன்னு?”
“பார்டா, தமிழ் பண்டிட் பிழை கண்டு பிடிக்குறாங்க! இந்த சைனீஸ் பட்லியையே யோசிக்க வச்ச வார்த்தைகள் என்னன்னு சொல்லு பார்க்கலாம்?!”
“அத்தான், நான் ஒன்னும் சைனீஸ் பட்லி இல்லை!” என முகம் தூக்கினாலும்,
“ஏதோ பட்டு, சிட்டு, நம்மாளு… இப்படி சில வார்த்தைகள் பார்த்தேன்!?”
“ஓ! அதுவா… நான் தான் பொண்டாட்டி நமக்காக மெனக்கெட்டு செயலி உருவாக்குறாளே, அவளையும் கொஞ்சலாம்ன்னு நினைச்சு பட்டு, சிட்டு, சீனி சர்க்கரைன்னு போட்டேன்!” சிரிக்காமல் சொன்னாலும், குறும்பு கூத்தாடியது அவன் கண்களில்.
“நிஜமாவா?” ஆர்வமும், ஆச்சர்யமுமாய் அவன் முகம் பார்க்க, சிரிப்பை வெகு சிரமப்பட்டு அடக்கினாலும் கண்ணோர சுருக்கம் காட்டிக்கொடுக்க,
“கேலி பண்றீங்க தானே? போங்கத்தான்! எவ்வளவு கஷ்டப்பட்டு செஞ்சேன் தெரியுமா? நீங்க மோசம்!” எழுந்து செல்ல எத்தனித்தவளை மடி சாய்த்து அணைத்துக் கொண்டவன்,
“அது பட்டு, சிட்டெல்லாம் இல்லை ஜில்லுக்குட்டி, பட்டா, சிட்டா, நான்குமால் அது தான் உங்க ஊர்ல நம்மாளுன்னு மாறிடுச்சு!” என கன்னத்தில் முத்தமிட,
“அப்போ கரெக்டா தான் எழுதி இருக்கீங்களா? அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?”
“அர்த்தம் புரியாமலேயே ஆப் உருவாக்கியிருக்க, இதுல ஏதாவது தப்பு இருந்தா என்ன செய்வ?”
“அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, இதை உருவாக்கினது Mr. வீரபாண்டியன் தான். Mrs. வீரபாண்டியன் ஹெல்ப் தான் பண்ணினாங்க தெரியும்ல…!” என செல்லமாய் கன்னம் கிள்ளிய கரத்தை பிடித்து முத்தமிட்டவன்,
“என் ஜில்லுக்குட்டி ரொம்ப சமத்தாயிடுச்சே… சூப்பர்டா!” என பாராட்டினாலும்
“பட்டான்னா அந்த நிலத்தோட தற்போதைய உரிமையாளர் யார், என்னங்கிற விவரம் அடங்கிய ஆவணம். இதை ரெஜிஸ்டர் ஆபீசில் வாங்கணும். பத்திரம் போட்டதும் முதல்ல வாங்க வேண்டிய டாகுமெண்ட் இது தான். அடுத்து பத்தின் கீழ் ஒன்னு 10/(1) இதை பஞ்சாயத்து போர்டில் வாங்கணும்.
உரிமையாளரோட பெயர், ஊர், இந்த நிலம் இருக்கும் இடம், அதோட அளவு எல்லாம் குறிக்கப்பட்டிருக்கும். அடுத்து நான்குமால், இதைத் தான் நம்மாளுன்னு சொன்னீங்க Mrs. வீரபாண்டியன்! இதில் நிலத்தின் நான்கு எல்லைகள் அதாவது நம்ம நிலத்திற்கு நான்கு பக்கமும் என்ன இருக்குன்னு சொல்லி அடையாளம் காட்டுறது. 
சிட்டான்னா நிலத்தில் என்னென்ன இருக்கு, அதாவது பம்ப்செட், கிணறு, நாம என்ன பயிரிட்டிருக்கிறோம் இது போன்ற விபரங்கள் இருக்கும். இப்போ புரியுதா ஜில்லு!” என அவள் விரல்கள் நீவி சொடுக்கு எடுக்க,
“இதோட யூஸ் என்ன அத்தான்?” ஆர்வமாய் கேட்டதால்,
“கவர்மெண்ட் விவசாயிகளுக்கு கடன் கொடுக்குது. நிறைய மானியம் கொடுக்குது. அதெல்லாம் வாங்கணும்ன்னா இதையெல்லாம் காட்டணும்”
“ஓ! அப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை. எல்லாம் ரெடி அத்தான்!” என்றதும், அச்செயலியை அனைவரும் பயன்படுத்தும்படி இணையத்தில் இணைத்தனர் கணவனும், மனைவியும்.
“ஜில்லுக்குட்டி, அருமையான காரியம் பண்ணியிருக்க! தேங்க்ஸ்” என கன்னம் தாங்கி நெற்றியில் முத்தமிட்டு இதமாய் அணைத்துக் கொண்டான்.
‘இம்ப்ரஸ் ஆகிறானோ?’ மனம் துள்ளாட்டம் போட, முக்கியமான வார்த்தைகளை சொல்வான் என காத்திருக்க, அவனோ இயல்பாய் அடுத்த வேலைக்கு தாவி விட்டான். (எதிர்பார்த்து ஏமாந்து போறதே உன் வேலையா போச்சு விக்கி!)  
அன்பு தன் கணவரிடம்,
“வர்ற வெள்ளிக்கிழமை, நம்ம ஊர் திருவிழா வருது. உங்க அக்கா, தங்கச்சி வீடுகளுக்கு நானும், பெரியவனும் போய் சொல்லிட்டு வந்துட்டோம். அவன் வேலை விஷயமா வெளியூர் போறானாம். அதனால என் அண்ணன் வீட்டுக்கு நானும் நீங்களும் போய் சொல்லிட்டு வந்திடுவோம்” என நயமாய்ச் சொல்ல,
“என்னை மதிக்காத பய வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டேன். விருந்துக்குப் போய் கூப்பிட்டேன், வந்தானா உன் அண்ணன் மகன்? என் பொண்ணை கட்டிக் கொடுத்திருந்தா நான் பணிஞ்சு போறதுல அர்த்தம் இருக்கு. இப்போ எவன் தயவும் எனக்குத் தேவையில்லை. உனக்கு வேணும்ன்னா நீ போய் கூப்பிட்டுக்க, நான் சொல்றேன் அவன் வரமாட்டான். எழுதி வேணாலும் வச்சுக்க!” என நக்கலாகச் சொன்னார்.
“எனக்காக என் அண்ணன் மகன் மட்டுமில்ல எல்லோரும் வருவாங்க! வர்றவங்க கிட்ட மரியாதையா நடந்து உங்க மரியாதையை காப்பாத்திக்கங்க!” என நொடித்தவர், சின்ன மகனுடன் அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அண்ணனும், அண்ணியும், ஈஸ்வரியும் நன்றாகவே வரவேற்று உபசரித்தனர். வீரபாண்டியன் வேலைக்குச் சென்றிருந்ததால் அவனை நேரடியாக அழைக்க வேண்டும் என்பதால் அவனுக்காக காத்திருந்தார். மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தவனிடம்,
“வர்ற வெள்ளிக்கிழமை நம்ம ஊர்ல திருவிழா. ஒரு நேரமாவது அத்தை வீட்டுக்கு வந்துட்டு போயிடுய்யா…” அவர் சூசகமாக சொன்னதிலேயே அத்தையின் நிலை அறிந்தவன்,
“ஒரு நேரம் என்ன அத்தை, காலையிலேயே வந்து மூணு நேரமும் விருந்து சாப்பிட்டு எப்போதும் போல ராத்திரிக்கே வீடு திரும்புறோம்” என வாக்களித்தான்.
என்ன தான் பிரச்சனையா இருந்தாலும் தன்னையும், தன் மருமகளையும் பிறந்த வீட்டு சொந்தங்கள் விட்டுக்கொடுக்காததை எண்ணி நிறைந்து போனது அன்பரசியின் மனம்.
இருள் கவியத் தொடங்கும் வேளையில் கணவனின் கரம் பிடித்து ஏரிக்கரையில் நடந்தபடி,
“திருவிழான்னா என்ன அத்தான்?”
“இது கூடத் தெரியாதா உனக்கு?”
“தெரியுமே, கள்ளழகர் ஆத்துல இறங்குற சித்திரைத் திருவிழாவை யூ-டியூப்ல பார்த்திருக்கேன்… அப்படித் தான் நம்ம ஊர்லயும் நடக்குமா?”
“பரவாயில்லையே… இந்த அளவுக்காவது தெரிஞ்சு வச்சிருக்கியே! இது நம்ம கருப்பசாமிக்கு நடக்கிற கடா வெட்டுத் திருவிழா ஜில்லு. சொந்த பந்தம் எல்லாருக்கும் சொல்லி, கடா வெட்டி விருந்து வைப்பாங்க. நம்ம வீட்ல பிறந்த பொண்ணுங்களுக்கு நாம சீர் செய்யனும். தேங்காய் பழத்தோட புதுத் துணியும், சீர் பணமும் வைக்கணும். அது நம்ம வீட்டுப் பெண்ணின் கவுரவத்தை உயர்த்திக் காட்டும்.
“ஓ! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா! அப்போ, நேரா அன்பு அம்மா வீட்டுக்கு போய் சாப்பிட்டு வர வேண்டியது தானா?” அறியாப் பிள்ளையாய் கேட்க,

“என் பொம்மை….! சாப்பிட்றதுக்கு மட்டுமா திருவிழா? முக்கியமா இங்க தான் பொண்ணு, மாப்பிள்ளை பார்க்கிறதெல்லாம் நடக்கும். அப்போ, பசங்க தங்களோட வீரத்தைக் காட்ட, இளவட்டக் கல்லைத் தூக்குறது, உறி அடிக்கிறது, வட மஞ்சுவிரட்டு, கபடின்னு போட்டிகள் பல நடக்கும்.

பெண்கள் தங்களோட திறமையை காட்டுறதுக்கு கோலம் போடுறது, மருதாணி போடுறது, பாட்டு பாடுறது, கும்மி கொட்டுறதுன்னு நிகழ்ச்சிகள் எல்லாம் இருக்கும்.

“நாம கலந்துக்கலாமா அத்தான்?” என ஆர்வமாய் கேட்க,

“இதெல்லாம் முக்கியமா நம்மள மாதிரி புது மணத் தம்பதியர், கல்யாணத்திற்கு காத்திருக்கிற இளவட்டங்களுக்குத் தான்! தாராளமா கலந்துக்கலாம்!”

“உனக்கு கோலம் போடத் தெரியுமா ஜில்லுக்குட்டி?!” கேலி கூத்தாடக் கேட்டான்.

“நான் நல்லா கலர் பண்ணுவேன் அத்தான்!” 

“அப்போ, போட்டியில கலந்துக்கிட்டு பரிசு வாங்கப் போறேன்னு சொல்லு! வீரபாண்டியனோட மனைவி தான் ஜெயிச்சாங்கன்னு ஊரையே சொல்ல வச்சிடுவியா ஜில்லு…!” என்றான் அட்டகாசச் சிரிப்புடன்.

வெள்ளிக்கிழமை விடிகாலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை தட்டி எழுப்பி கிளம்பச் சொல்ல, தூக்கம் கலையாமலேயே தயாராகி வந்தாள். சென்டர் க்ளிப் செய்து விரியவிடப்பட்டிருந்த கூந்தலில் மல்லிகைச் சரம் சூடி, நெற்றியில் சிறிய பொட்டிட்டு அவள் நிறத்தை கூட்டிக் காட்டும் வண்ணத்தில் லெஹெங்கா அணிந்து, அதற்கு பொருத்தமாய் குந்தன் செட் நகைகளையும் போட்டு, சொக்கும் விழிகளுடன் நின்றவளைப் பார்த்து, தலை கிறுகிறுக்க, ஆச்சரியத்தில் விழிகள் விரியப் பார்த்தவன்,

“ஹே பொம்மை…! இருக்க இருக்க சின்ன பிள்ளை மாதிரி ட்ரெஸ் பண்ற!”

“ஏன் அத்தான், நல்லா இல்லையா?” மாற்றச் சொல்லிவிடுவானோ என்று மருண்ட பார்வையுடன் கேட்க,

“இப்பவே போகணுமா… மெதுவா போகலாமான்னு யோசிக்க வைக்கிற…” கள்ளப் பார்வையுடன் அருகே வந்து நெற்றிமுட்டி சிரித்தவன் சட்டென சமன் செய்து கொண்டு, 

“கிளம்பு… கிளம்பு. நேரமாச்சு! எப்போ தான் நெத்தி வகிடில் பொட்டு வைக்கிற பழக்கம் வருமோ?” எனும் முணுமுணுப்புடன் அவள் கன்னம் தாங்கி தன் உயரம் குறுக்கி தன் நெற்றியில் இருக்கும் குங்குமத்தை அவளது நெற்றி வகிடுக்கு இடம் மாற்றினான்.

“அதையெல்லாம் சரிபார்த்து வச்சுவிடத் தான் நீங்க இருக்கீங்களே அத்தான்…” என கொஞ்சியபடி அவனது முறுக்கு மீசையை பிடித்து விளையாட்டாய் இழுக்க

“என்னை டெம்ப்ட் பண்ணாத பொம்மை. அத்தை பாவம்… நமக்காக காத்திருப்பாங்க” என வாய் தான் சொன்னதே தவிர கரங்களோ தன்னவளை சுற்றி படர்ந்து தன்னோடு இறுக்கிக் கொண்டது. இதழ்கள் தானாக கழுத்து வளைவுக்கு இடம் பெயர்ந்துவிட நொடிகள் கரைய வெகு சிரமப்பட்டு தன்னிலை பெற்றவன்,

“உன் பக்கத்திலேயே வரக் கூடாது ஜில்லுக்குட்டி! என் மனசை கெடுத்துடற… டயமாச்சு வா…” என அழைத்துக் கொண்டு போனான். 

மருமகளின் கரம் பிடித்து அழைத்து வரும் மகனின் முகத்தில் விரவியிருக்கும் மகிழ்வைக் கண்டவருக்கு மகனின் விருப்பம் புரிய, அழகோவியமாய் இருக்கும் மருமகளின் கன்னம் வழித்து, திருஷ்டி கழித்து,

“அழகு போல இருக்கத்தா!” என அவள் தீட்டியிருந்த அஞ்சனம் எடுத்து தாடையில் திருஷ்டி பொட்டு வைத்தார்.

நாத்தனாருக்கும், மகளுக்கும் கொடுக்க வேண்டிய முறைகளுடன் வாடகைக் கார் பிடித்து அனைவரும் அன்பரிசியின் இல்லத்திற்கு சென்றனர். சொந்தபந்தங்களால் வீடே நிறைந்திருந்தாலும், தன் பிறந்த வீட்டு சொந்தங்களைக் கண்டதும் பெருமை பொங்க வரவேற்றனர் அன்பும், சுந்தரியும். வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்காவிட்டால் தன் மானம் கப்பலேறிப் போகும் என்பதால் முகம் கோணாமல் அப்பாவும் மகளும் கூட அனைவரையும் வரவேற்றனர்.
சுமதியின் நிச்சயதார்த்தத்தில் பார்த்ததற்குப் பிறகு மீண்டும் ராணியும், ஈஸ்வரியும் இப்பொழுது தான் மிகவும் நெருக்கத்தில் ஒருவரையொருவர் பார்க்கின்றனர் என்பதால் அவரவர் உள்ளத்தில் பற்பல எண்ணங்கள் அலைமோதின.
ராணியோ, அன்று பார்த்த ஈஸ்வரிக்கும் இன்று இருப்பவளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பொருத்திப் பார்த்தாள். புதுப் பெண்ணிற்கே உரிய வனப்பும், பளபளப்பும், பூசினார் போன்ற உடல் அமைப்பும், முகத்தில் நிரந்தரமாய் குடிகொண்டிருக்கும் மந்தகாசப் புன்னகையும் கணவன் மனைவியின் இணக்கத்தை அம்பலப்படுத்தியது.
அவள் அணிந்து இருப்பது லெஹெங்கா எனத் தெரியாவிட்டாலும் வேலைப்பாடுகளுடன் கூடிய பாவாடை தாவணி என எண்ணியவளுக்கு அதை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை.
‘இதெல்லாம் எங்க தான் வாங்கியிருப்பாளோ, ஒருவேளை சீனாவுலயே வாங்கியிருப்பாளோ? நம்ம ஊர்ல கிடைக்கும்ன்னா அடுத்த தடவை இதை கண்டிப்பா வாங்கணும். ஆளு பார்க்க ஆழாக்கு மாதிரி இருந்தாலும் தனக்கு பொருத்தமா, நேர்த்தியா உடுத்தியிருக்கா ‘ என கண்களால் எடை போட,
கணவனின் வலிய கரத்தை சுற்றியிருக்கும் பூங்கொடியாளின் மினுமினுக்கும் கரத்தை கண்டவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது! என் உடைமையை தன் உரிமையாக்கிக் கொண்டிருக்கும் திமிர் போலும் என கண்களில் கோபம் கொப்பளிக்க அதை காட்டிக்கொள்ளாமல் இதழ்களில் புன்னகை ஏந்தி நின்றாள்.
ஈஸ்வரியோ தன் கணவனுக்கு பொருத்தமாய் ஓங்கு தாங்கான உருவ அமைப்புடன் பட்டுப்புடவையும், பலவித நகைகளும், தளரப் பின்னிய கூந்தலில் வாடைவாடையாய் மல்லிகைச் சரம் சூடி மிடுக்குடன் நிற்பவளை கண்டு,
‘இவள் தான் தன்னவனுக்கு பொருத்தமானவளோ!’ என மனம் சுருள, காரணமற்ற வருத்தத்தை கண்கள் ஒரு நொடி பகிரங்கப்படுத்த, சட்டென தன்னை சமாளித்து இயல்பாய் இதழ் விரித்தாள். ராணியின் பொருமலையும், மனையாளின் வருத்தத்தையும் ஒரு சேர உணர்ந்தவன்,
“நல்லா இருக்கியா ராணி?” என மென்முறுவலுடன் விசாரிக்க, அத்தான் தன் நலம் விசாரித்ததில் கர்வம் தலை தூக்க, மிடுக்காய்,
“நல்லா இருக்கேன் அத்தான். நீங்களும் நல்லா தானே இருக்கீங்க?!” என்றபடி ஏளனமாய் ஈஸ்வரியைப் பார்க்க, அவளோ எந்த பாதிப்பும் இன்றி இயல்பாய் இருப்பதாய் விழிகள் சங்கதி சொல்ல,
‘இது எப்படி சாத்தியம்?’ என அதிர்வுடன் அத்தானையும் அவன் மனையாளையும் அளவிட்டவளுக்கு ஈஸ்வரியின் குட்டிக் கரத்தை தன் கரத்தில் பொதித்து அழுத்திக் கொடுப்பவனின் செயலே காரணம் என்பது புரிய,
வாய் மட்டுமே நம்மிடம் உறவாடுகிறது. மனமோ மனையாளிடம் மயங்கிக் கிடக்கிறது என கண்டுகொண்டவளுக்கு கட்டுக்கடங்கா கோபமும், பொறாமையும் உண்டானது.
இந்தத் திருவிழா முடிந்து போவதற்குள் இருவரின் இணக்கத்தையும் கேள்விக்குறி ஆக்கிவிட வேண்டும் எனும் வெறியுடன் விலகிச் சென்றாள்.
ராணியின் சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள் அத்தை மக்கள் என கிட்டத்தட்ட ஒரே வயதொத்த பெண்கள் அங்கு அதிகம் இருந்தனர். அனைவருமே ஈஸ்வரியைவிட பெரியவர்கள் தான். பலர் திருமணம் முடித்து குழந்தையுடன் இருந்தனர். அவர்கள் அத்தனை பேருக்கும் வீரபாண்டியன் ஈஸ்வரியை மணமுடித்தது ராணிக்கு செய்த துரோகமாகவே தெரிய யாரொருவருக்கும் ஈஸ்வரியை பிடிக்கவில்லை என்பது அவர்களது பார்வையிலும் பேச்சிலும் விலகலிலும் அப்பட்டமாய் தெரிந்தது.
“ஏன் ராணி, இது தான் ஒண்ட வந்த பிடாரியா?” ஜாடைமாடையாய் திட்டவும் செய்தனர். நல்லகாலம் அதெல்லாம் விக்கிக்கு புரியவில்லை அனைவரிடமும் சிரித்த முகமாகவே பேச விரும்பினாள்.
ராணியின் எண்ணம் நிறைவேறுமா நாளை பார்க்கலாம்…

KNK Prefinal

1377

அத்தியாயம் 32

“வாங்க…வாங்க…என்ன சொல்லாமல் கொள்ளாமல் இப்படி திடீர்ன்னு வந்து இருக்கீங்க”பொழிலரசி அவனின் கோபத்தை பொருட்படுத்தாமல் அவனை வரவேற்றுக் கொண்டு இருந்தாள்.

“வள்ளி உங்க அய்யா வந்து இருக்காங்க பார்…அவருக்கு காபி கொண்டு வா.சீக்கிரம்”என்று பரபரத்தாள். சமையல் அறையை விட்டு வெளியே வந்த வள்ளியின் முகமும் அந்த நேரத்தில் ஆதித்யனை அங்கு எதிர்பார்க்காததால் ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளானது.

“உட்காருங்க அய்யா…இரண்டே நிமிஷத்தில் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்.”

“வேண்டாம் வள்ளி…நீ இப்போ கிளம்பி அந்த நர்ஸ் கூடப் போய் தங்கிக்கோ…மறுபடி நான் சொன்ன பிறகு நீ இங்கே வந்தால் போதும்” என்று சொல்லி அவளை அனுப்பியவன் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டு விட்டு அழுத்தமான காலடிகளுடனும்,ஊடுருவும் பார்வையுடனும் அரசியை நெருங்கினான்.

அவனின் பார்வை அரசிக்கு உணர்த்திய சேதியில் அரசியின் வயிற்றில் அமிலம் சுரந்தது.‘என்ன மாதிரியான பார்வை இது…’ பெண்ணவளின் தளிர்மேனி நடுங்கியது. வேட்கையும்,தாபமும் ஒன்றாக கலந்து இருக்க அவளை நெருங்கிக் கொண்டு இருந்தவனின் நிதானமான நடையில் அவளுக்குள் இருந்த தைரியம் எல்லாம் பறந்தோடி விட்டது.

“விக்கிரமா”மெல்லிய குரலில் மறுத்துப் பேசத் துவங்கியவளின் பேச்சு அப்படியே அந்தரத்தில் நின்று போனது.தாவி அவளை அணைத்துக் கொண்டவன் அவளின் பேச்சு சுதந்திரத்தைத் தான் முதலில் பறித்து இருந்தான்.இதழும்,இதழும் கவி பாட அங்கே சில நிமிடங்களுக்கு மௌனத்தின் ஆட்சி மட்டுமே.

“ஏன்டி இப்படி செஞ்ச” தாபத்துடன் அவன் குரல் காதோரம் கிசுகிசுத்தது.

“என்ன செய்தேன்?”அவனிடம் இருந்து விடுபட போராடியபடியே பேசினாள் பொழிலரசி.அவளுடைய விலகல் அவனுக்கு எரிச்சலைத் தர அதற்கும் அவள் மேல் தான் கோபத்தை காட்டினான்.ஆனால் காட்டிய விதம் தான் வேறாக இருந்தது.அவளின் எலும்புகள் நொறுங்கி விடும் அளவிற்கு அவளை இறுக அணைத்தவன் அன்றைய தினத்தை விட இன்று அதிக வேகத்தை காட்டினான்.

சற்று நேரம் அவனை விலக்க முயற்சி செய்த அரசிக்கு ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் போக அது அவனுக்கு வசதியாகப் போனது.தாகத்திற்கு நீர் அருந்தும் குழந்தையைப்போல் சொட்டு கூட மிச்சம் இல்லாமல் அவளைப் பருகி விடத் துடித்தான்.அணைக்கும் பொழுது கார்த்தி கொடுத்த மொபைல் போன் உறுத்தினாலும் அப்பொழுது அதை கண்டு கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை.

“விக்கிரமா…இது ஆடி மாசம்….”பலகீனமான குரலில் அவனுக்கு நினைவூட்டினாள்.

“இருந்துட்டு போகட்டும்”

“அம்மனுக்கு காப்பு கட்டியாச்சு…”

“பரவாயில்லை”

“இதெல்லாம் தப்பு”

“எனக்கு இது தான் சரி”

“உங்களை…” என்று பெரும்பாடுபட்டு அவனை விலக்கியவள் கோபமாக அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

“என்ன கிண்டலா பண்ணுறீங்க…ஆமா இப்போ உங்களை யார் இங்கே கிளம்பி வர சொன்னது”

“உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லையாடி …ராட்சசி…”

“எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.முதல்ல கதவை திறங்க…யாராவது பார்த்தா தப்பா போய்டும்.”

“நான் உன் புருஷன்டி.என் கூட தனியா இருந்தா யார் என்ன சொல்லுவாங்க…ஓ…அந்த கார்த்தி இன்னும் இந்த ஊரில் தான் இருக்கான் இல்லையா?”அவன் குரலில் இருந்த எரிச்சல் அவனின் மனநிலையை சொல்லாமல் சொல்ல இதை இத்ஹோடு விடுவது நல்லதற்கு இல்லை என்ற முடிவுக்கு வந்தவள் நல்ல விதமாகவே அவனிடம் எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றாள்.

“போச்சுடா…இதிலே கார்த்தி எங்கே வந்தார்?அவர் பாட்டுக்கு தேமேன்னு இருக்கார்.அவரை எதுக்கு இதிலே இழுக்கறீங்க?”

“ஏன் அவனை சொன்னால் உனக்கு பொறுக்க முடியவில்லையா?”

“ஆமா…பொறுக்கத் தான் முடியலை.நீங்க இப்படி பேசுறதை பார்க்கும் பொழுது.சந்தேகப்படறீங்களா என்னை?” உதடு துடிக்க கோபத்துடன் கண்கள் கலங்க நின்றவளின் கோலம் அவனை ஏதோ செய்ய சட்டென்று அவளை நெருங்கி தோளில் சாய்த்துக் கொண்டான் விக்ரமாதித்யன்.

“சே! சே! அப்படி எல்லாம் இல்லைடி”

“அப்புறம் எதுக்கு எப்பப்பாரு அவரைப் பத்தி பேசறீங்க? நீங்களும் நானும் மட்டும் தனியா இருக்கிற நேரத்தில் எல்லாம் எப்பொழுதும் அவர் பேச்சை எடுப்பது நீங்க தான்.நான் இல்லை”அழுத்தமான குரலில் அவனை குற்றம் சாட்டினாள் பொழிலரசி.அது உண்மை என்பதால் சற்று நேரம் மௌனமாக இருந்த ஆதித்யன் தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“அது என்னவோ தெரியலை பொழில்.அவன் என்னை உன்கிட்டே இருந்து பிரிச்சு கூட்டிட்டு போய்டுவானோன்னு எனக்கு பயமா இருக்கு”

“அப்படினா என்ன அர்த்தம்…என் மேல இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரலைன்னு தானே அர்த்தம்”காயம் பட்ட குழந்தையாக கண்களில் கண்ணீரோடு கேட்டாள் அரசி.

“அப்படி எல்லாம் இல்லை பொழில்” அவன் குரல் உள்ளே போய் விட்டது.

“அதெல்லாம் இருக்கட்டும்.இப்போ எதுக்கு நீங்க இங்கே கிளம்பி வந்தீங்க?என்னை ஆள் வச்சு வேவு பார்க்கிறது பத்தாதா?நீங்களே நேரில் வந்து பார்த்து உறுதி செஞ்சுக்க இங்கே வந்தீங்களா?”

“ஏய்! என்னடி விட்டா ரொம்ப பேசுற…அடிச்சு பல்லை எல்லாம் கழட்டிடுவேன்.உன்னை நான் இங்கே பார்க்க வந்தது வேற காரணத்திற்காக”

“என்ன காரணமோ சொல்லுங்களேன் நானும் தெரிஞ்சுக்கறேன்” எள்ளலாக வெளிவந்தது அவள் குரல்.

அவளின் குரலில் இருந்த பேதத்தால் சீண்டப்பட்டவன் அவளை இழுத்துக் கொண்டு அருகில் இருந்த சேரில் அமர வைத்து  அதற்கு அருகிலேயே தானும் அமர்ந்து கொண்டு கையில் இருந்த மொபைலை எடுத்து அதில் பதிவாகி இருந்த காட்சிகளை ஓட விட்டான்.அங்கே ஒரு அறையில் விஜயேந்திரனும்,மேனகாவும் கைகள் கட்டப்பட்ட நிலையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.அந்தக் காட்சியைக் கண்டதும் அரசியிடம் அதுவரை இருந்து வந்த எரிச்சல் காணாமல் போய் இருந்தது.நிமிர்ந்து அமர்ந்து கண்களில் தீவிரத்துடன் வீடியோவை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்.

“இதில் மேனகா எங்கே வந்தாள்?அவளை ஏன் கட்டிப் போட்டு வச்சு இருக்கீங்க?”

“கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டு அவர்கள் சொல்வதை மட்டும் கவனி”என்று கடுப்பாக சொன்னவன் முகத்தை திருப்பிக் கொள்ள வேறு வழியின்றி அரசியும் மொபைல் ஸ்க்ரீனை வெறிக்கத் தொடங்கினாள்.

“சொல்லு விஜி எதுக்காக அன்னைக்கு என்னோட கார்ல பாம் வச்ச?”

“பாமா? நான் எதுவும் வைக்கலையே”அழுத்தமாக சொன்னான் விஜயேந்திரன்.

“நீ வைக்கலேன்னா அந்த பாமில் உன்னோட கைரேகை எப்படி வந்தது?”

“எனக்குத் தெரியாது”

“உனக்குத் தெரியாமல் உன்னுடைய கை ரேகை எப்படி அதில் வந்து இருக்க முடியும்?”

“அதுதான் எனக்கு தெரியாதுன்னு சொல்லிட்டேன் இல்லை…மறுபடி மறுபடி அதையே கேட்டா என்ன அர்த்தம்…எனக்கு தெரியாதுன்னா தெரியாது தான்.” வாயைத் திறக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருந்தான் விஜயேந்திரன்.

“சரி அப்போ நீ எதுவும் சொல்ல வேண்டாம்.நாங்க எங்க விசாரணையை இவகிட்டே ஆரம்பிச்சுக்கிறோம்”என்று பேசியபடியே அடியாட்களுக்கு கண்ணை காட்ட மேனகாவை நெருங்கினான் ஒருவன்.

“விஜி”பயத்தில் கத்தி கூச்சல் போட்டாள் மேனகா.

“அண்ணா இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை.எதுவா இருந்தாலும் என்கிட்டே கேளு.அவளை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்து இருக்கீங்க.முதல்ல அவளை இங்கே இருந்து அனுப்புங்க”

“எதுக்கு அவ மலேசியா தப்பிச்சு போகப் போறாளே அதுக்கா?”

“சும்மா உளறாதீங்க…அவ என்னை விட்டு எங்கேயும் போக மாட்டா?”

“அப்படியா? அப்படின்னா இந்த டிக்கெட் யாரோடது.நாளைக்கு ராத்திரி இந்த நாட்டை விட்டு இவ கிளம்பப் போறா.அது உனக்கு தெரியுமா? இல்லை இவளோட அப்பா ஏற்கனவே இங்கே இந்தியாவில் இருக்கும் எல்லா சொத்துக்களையும் விற்க ஏற்பாடு பண்ணிட்டார் அது தெரியுமா உனக்கு?”

“சுத்தப் பொய் நான் நம்ப மாட்டேன்”உரக்கக் கத்தினான் விஜயேந்திரன்

“சரி நீ நம்ப வேண்டாம்…இப்போ சொல்லு எதுக்கு பாம் வச்சே?”

“எனக்குத் தெரியாது.நான் வைக்கலை” மீண்டும் அதே பல்லவியை பாட இது வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்த ஆதித்யன் அடியாளை நோக்கி ஒரு பார்வையை செலுத்த அவன் மேனகாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

“அம்மா…என்று கதறினாள் மேனகா…விஜி உன் கண்ணு முன்னாடியே என்னை அடிக்கறாங்களே.வேண்டாம்னு சொல்லு…என்னை காப்பாத்து விஜி.ப்ளீஸ்!”

“அண்ணா…ப்ளீஸ் அவளை அடிக்காதே…நான் உண்மையை சொல்லிடறேன்.நான் தான் உன் காரில் பாம் வச்சேன்.”

“எதுக்காக வச்சே?”

“அண்ணிகிட்டே வீட்டை விட்டு வெளியே போகவோ சொல்லி எத்தனையோ தடவை சொன்னோம்.ஆனா அவங்க கேட்கலை.அதான் இது மாதிரி சின்னதா ஒரு செட்டப் செஞ்சோம்.அவங்க பயந்து போய் உன்னை விட்டு போய்டுவாங்கன்னு நினைச்சோம்”

“எதுக்காக அவளை வீட்டை விட்டு கிளம்ப வைக்கணும்னு நினைச்ச?”

“அங்கேயே இருந்தா நீ அவங்களை கொன்னுடுவ…அதனால தான்”

“டேய்! அவ என் பொண்டாட்டி.அவளை எதுக்காக நான் கொல்லப் போறேன்”

“இல்லை நீ அவங்களை கொன்னுட்டு அதுக்கு அப்புறம் நல்ல வசதியான வீட்டுப் பொண்ணா பார்த்து மறுகல்யாணம் பண்ணிக்குவ.எனக்கு உன்னைப் பத்தி தெரியாதுன்னு நினைச்சியா”

“முட்டாள்…முழு முட்டாள்…யார்டா இப்படி எல்லாம் சொல்லி உன் மனசை குழப்பி வச்சது”

பற்களை நறநறத்தான் ஆதித்யன்.

“யார் சொன்னா என்ன? அதெல்லாம் உண்மை தானே?”

“சரி நீ சொன்னது எல்லாம் உண்மையாகவே இருக்கட்டும்.அந்த பாமை நீ யார்கிட்டே இருந்து வாங்கின? அதை எப்படி,எப்போ என் காரில் வச்சே”

“அது…அது”

“என்னடா மென்னு முழுங்கிற…பதிலை சொல்லு”

“…”

“உனக்குத் தெரியாது.ஏன்னா நீ வச்சு இருந்தா தானே உனக்கு தெரியும்.வச்சது இவளாச்சே”

“அண்ணா நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல.அவளுக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு…மறுபடி ஏன் அவளை இதுக்குள்ளே இழுக்கிற…நான் தான் ஆள் வச்சு இதெல்லாம் செஞ்சேன்.அவன் எப்படி செஞ்சான்? யார்கிட்டே இருந்து வாங்கினான்ன்னு எல்லாம் நான் தெரிஞ்சு வச்சுக்கலை.”

“ஸோ…நீ உண்மையை சொல்ல மாட்டே” என்று சொல்லியபடியே அவனது அடியாளை ஒரு பார்வை பார்க்க அவன் கையில் ஏதோ ஒரு ஆயுதத்துடன் மேனகாவை நெருங்கினான்.உருண்டையாக கையில் பிடிப்பதற்கு வசதியாக சிறிய அளவில் இருந்த அந்த ஆயுதத்தில் ஒரு சிறிய பட்டனை அழுத்தியதும் உள்ளிருந்து முட்கள் போன்று நீட்டிக் கொண்டு வெளிவந்தது.

“ஏன் மேனகா…இதை வச்சு உன்  மூஞ்சியில் கோடு போட்டா எப்படி இருக்கும்”நிதானமான குரலில் கேட்ட ஆதித்யனின் முகம் இப்பொழுது மேனகாவிற்கு குளிரை பரப்பியது.

“நீ ஒண்ணும் பயப்படாதே மீனு…நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன்”

பயத்தில் இருண்டு போய் கிடந்த மேனகாவின் முகத்தை நெருங்கிய அடியாள் மீண்டும் ஏதோ ஒரு பட்டனை அழுத்த இப்பொழுது அந்த முட்கள் அனைத்தும் வேகமாக சுழல ஆரம்பித்தது.இதை ஒரு நொடி முகத்தின் அருகில் கொண்டு சென்றால் கூட போதும்.முகத்தில் சதை என்பதே இருக்காது என்பதை உணர்ந்தவளின் அச்சம் உச்சத்தை தொட்டது.அதை இயக்கியபடியே அடியாள் நெருங்கி வரவும் அச்சத்தில் தன்னை மறந்து கூவத் தொடங்கினாள்.

“ஆதி…ப்ளீஸ் ஸ்டாப் திஸ்….நான் உண்மையை சொல்லிடறேன்”

“மீனு…நீ எதுவும் சொல்ல வேணாம்”அவளை முந்திக்கொண்டு பேசிய விஜயேந்திரனை வெறுப்பாக பார்த்தவள் ஆத்திரத்துடன் பேசத் தொடங்கினாள்.

“டேய் லூசு நீ வாயை மூடிக்கிட்டு இரு.அவன் கையில் இருக்கிறதை கவனிச்சியா இல்லையா?அவன் ஏதாவது செஞ்சு வச்சா அப்புறம் என் அழகு என்ன ஆகும்”

“நீ எப்படி இருந்தாலும் உன்னை நான் கை விட மாட்டேன் மீனு”

“என்னது நீ என்னை கை விட மாட்டியா? போடா பைத்தியம்…எனக்கும் மலேசியால இருக்கிற மிகப்பெரிய தொழிலதிபருக்கும் அடுத்த வாரம் கல்யாணம்.அது தெரியாம இன்னும் காதல் கல்யாணம்ன்னு உளறிக்கிட்டு இருக்கியே…உன்னை மாதிரி ஒரு பைத்தியத்தை எல்லாம் என்னால கல்யாணம் செஞ்சுக்க முடியாது”

“மீனு…நீ என்ன சொல்ற…”அதிர்ச்சியில் கண்கள் நிலைக் குத்தி போய் விட்டது விஜயேந்திரனுக்கு.

“ம்…நொன்னை சொல்றாங்க…பைத்தியம்…சரியான பைத்தியம்.உன்னை எல்லாம் யார் கல்யாணம் பண்ணிக்குவா…யார் எது சொன்னாலும் தலையாட்டி மாடு மாதிரி தலையாட்டிக்கிட்டு பின்னாடியே வால் பிடிச்சுக்கிட்டு சுத்துற…உன்னைப் போய் நான் கல்யாணம் செய்து கொள்வதா? நெவர்”

“அப்போ இத்தனை நாள் என்னோட பழகினது?”கண்கள் வேதனையில் கலங்கக் கேட்டான்.

“எல்லாம் இதோ இவனால தான்…”அவள் கைகள் ஆதித்யனை கை காட்டியது.

“இவன் பின்னாடியே அஞ்சு வருசமா சுத்தி எப்படி எல்லாமோ கேட்டுப் பார்த்தேன்.என்னை கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு மறுத்துட்டான்.காரணம் கேட்டப்போ வேற ஒரு பொண்ணை விரும்புறதா சொன்னான்.அப்படி கல்யாணம் ஆகி வரும் பொழுது அவனையும் அவன் ஆசைப் பொண்டாட்டியையும் பிரிக்கிறதுக்கு அவன் குடும்பத்துக்குள்ளே ஒரு ஆளா இருந்தா மட்டும் தான் முடியும்னு நினைச்சு தான் உன்னை பிடிச்சேன்.மத்தபடி உன்னைப் போல ஒருத்தனை எல்லாம் நான் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்.”

“அப்போ அண்ணனைப் பத்தி நீ என்கிட்டே சொன்னது எல்லாம்”

“பொய் தான் போதுமா?”

“உங்க கதை எல்லாம் அப்புறம் பேசலாம்.எனக்கு முதலில் பதில் சொல்லுஎன்னோட காரில் எதுக்கு பாம் வச்சே…”

“உங்க காரில் நான் ஒண்ணும் பாம் வைக்கலை.அது என்னோட கார்ல எனக்கு நானே வைச்சுகிட்ட பாம்”

“உனக்கு நீயே வச்சுகிட்டதா?”

“ஆமா…அப்பப்போ இது மாதிரி எனக்கு நானே பாம் வச்சு தான் இந்த லூசை ஏமாத்தி இருக்கேன்.அது மாதிரி அன்னைக்கும் செட் பண்ணி உன் பொண்டாட்டியை நம்ப வைக்கிறதுக்காக ஏற்பாடு செஞ்சு இருந்தேன்.ஆனா பாமை என்னோட வண்டியில் வச்சு உங்க வீட்டுக்குள்ளே வர முடியாது.செக்கிங்ல மாட்டிப்பேன்.அதனால உன் டிரைவர் காருக்கு பெட்ரோல் போட வெளியே எடுத்துட்டுப் போனப்போ அதுல பாமை டைமர் (timer) செட் பண்ணாம ஆப் பண்ணி வைச்சுட்டு வந்தேன்.

அப்புறமா எப்பவும் போல உங்க வீட்டுக்கு வந்து பங்ஷன் முடியிற நேரத்தில் வெடிக்கிற மாதிரி செட் பண்ணி என்னோட காரில் வச்சிடலாம்னு தான் போனேன்.டைம் செட் பண்ணி முடிச்சு எடுத்துட்டு திரும்பும் போது உன் அருமைத் தொம்பி பின்னாலேயே வந்து நின்னு தொலைச்சுட்டான்.கைல என்ன வச்சு இருக்கன்னு வாங்கி அதை பார்க்க வேற முயற்சி செஞ்சான்.நான் தான் அதை உடனே வாங்கி அப்படியே உன் கார் டிக்கியில் வச்சிட்டு இவனை கொஞ்சி,மயக்கி டைவர்ட் பண்ணி அங்கே இருந்து கூட்டிட்டு வந்துட்டேன்.இவன் கிட்டே இருந்து தப்பிச்சு அந்த பாமை எடுத்து என்னோட காரில் வைக்க எனக்கு அதுக்குப்பிறகு நேரமே கிடைக்கலை.அதுக்குள்ளே பாம் வெடிச்சு தொலைச்சிடுச்சு”

“ஆனா அதுல உன்னோட கைரேகை எதுவும் இல்லையே… அது எப்படி?”

“அது நான் டிசைனர் நீ கிளவ்ஸ்(designer knee glouse) போட்டு இருந்தேன்.எப்பவும் வண்டி ஓட்டிட்டு வரும் பொழுது அதை போட்டு இருப்பேன்.அதனால யாருக்கும் என் மேல சந்தேகம் வரலை”

“ஒருவேளை அந்த பாம் வெடிச்சு இருந்தா…உன் உயிரும் சேர்ந்து தானே போகும்.பயம் இல்லையா உனக்கு?”

“அந்த பாம் அந்த அளவுக்கு பவர் கிடையாது.சும்மா உன்னோட லூசு பொண்டாட்டியை பயமுறுத்தி வீட்டை விட்டு அனுப்புறதுக்காக டம்மியா செஞ்சது.ஆனா அந்த லூசு தானா வழிய வந்து அதுல மாட்டிக்கிச்சு”

“சிசிடிவி கேமராவை என்ன செஞ்ச?”

“நான் ஒண்ணும் செய்யலை…அதை எல்லாம் உன் தம்பி…இதோ பக்கத்தில் உட்கார்ந்து இருக்கே இந்த தலையாட்டி பொம்மை இவன் தான் செஞ்சான்”

“ஆமா அண்ணா…அந்த கார் வெடிக்கிறதுக்கு முன்னாடி நீங்களும் நானும் தான் கடைசியா அந்த கார் பக்கத்தில் வந்து நின்னு பேசிக்கிட்டு இருந்தோம்.இது மட்டும் உங்க அண்ணனுக்கு தெரிய வந்தா,நான் தான் அந்த பாமை வச்சேன்னு என் மேலே பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பக் கூட உங்க அண்ணன் தயங்க மாட்டார்னு சொல்லி அழுதா…அதனால நான் தான் அதை எல்லாம் அழிச்சேன்.குற்றஉணர்வுடன் தலையை தொங்கப் போட்டபடியே பேசினான் விஜயேந்திரன்.

“இப்போ நீ பாட்டுக்கு கிளம்பி மலேசியா போறியே? என் தம்பியோட நிலைமை என்ன ஆகும்னு கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா?”

“அவன் எப்படிப் போனால் எனக்கென்ன? நீ மட்டும் என்னைப் பத்தி கவலைப்பட்டியா என்ன? உன்னோட கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடி வருசக்கணக்கா உன் பின்னாடியே சுத்தி சுத்தி வந்தேனே…என்னை கொஞ்சமும் கண்டுக்காம நீ ஒரு பைத்தியத்தை கல்யாணம் செஞ்சுக்கலை”வன்மத்துடன் கூறியவளை அருவருப்பான பார்வை பார்த்தவன் அப்படியே விஜயேந்திரன் புறம் திரும்பினான்.

“இதை எல்லாம் உன்கிட்டே முன்னாடியே நான் சொல்லி இருந்தா நிச்சயம் நீ நம்பி இருக்க மாட்ட விஜி.அதனால தான் நான் சொல்லலை.முடிஞ்ச அளவுக்கு உங்க ரெண்டு பேரையும் பழக விடாம நான் தடுத்ததுக்கு இது தான் காரணம்.இப்பவும் உனக்கு இவ தான் வேணும்னா சொல்லு.அடுத்த முகூர்த்தத்தில் உங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும்…” என்று சொல்லிக் கொண்டே போனவன் விஜியின் முகத்தில் தெரிந்த அடிபட்ட வேதனையின் சாயலில் அப்படியே பேச்சை நிறுத்தினான்.

“வேண்டாம் அண்ணா…நான் காதலித்தது இவளை இல்லை.அமைதியும்,அடக்கமும்,அன்பும் நிறைந்த ஒரு பெண்ணை.என்னை நினைத்தால் எனக்கே கேவலமா இருக்கு.இப்படி ஒருத்தி என்னை நடிச்சு ஏமாத்தி இருக்கா.அதுகூட தெரியாம உங்ககிட்டே வந்து சண்டை போட்டு இருக்கேனே.சே! என்ன மனுஷன் நான்…”என்று தன்னையே நொந்து கொண்டவன் சில நிமிடங்கள் ஆழ்ந்த பெருமூச்சு விட்டு தன்னை சமாளித்துக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினான்.

“வேண்டாம் அண்ணா…இவளை அனுப்பிடுங்க…எனக்கு இவ வேணாம்”என்று சொன்னவன் லேசாக நிமிர்ந்து ஒரு முறை ஆதித்யனின் முகம் பார்த்து விட்டு மறுபடி தலையை குனிந்து கொண்டே பேசினான்.

“முடிஞ்சா நான் செஞ்ச தப்பை எல்லாம் மன்னிச்சுடுங்க அண்ணா…இனி உங்க பேச்சை மீறி எதையும் செய்ய மாட்டேன்”என்று சொன்னவன் கழிவிரக்கத்தில் அடக்க மாட்டாமல் அழத் தொடங்கினான்.அத்தோடு அந்த வீடியோவும் நிறைவு பெற்று இருக்க ஆதித்யன் திரும்பி அரசியைப் பார்த்தான்.

அவள் முகத்தில் இருந்த உணர்ச்சிகளை வைத்து அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அறிய முயன்றான்.ஆனால் அவளுடைய முகமோ இறுகிப் போய் இருந்தது.

“பொழில்…என்ன ஆச்சுடா…”லேசாக தோள் தொட்டு உலுக்கினான்.

“நாம யாரை ரொம்ப நம்புறோமோ அவங்க தான் கடைசியில் நம்மை ஏமாத்திடறாங்க” என்று சொன்னவள் கயல் செய்த செயலைப் பற்றி ஒன்று விடாமல் சொன்னாள். “அவளால தான் என் வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சினை.அவளோட சிறுபிள்ளைத்தனமான செயலால மூணு வருஷம் என் வாழ்க்கையில் வீணாப் போச்சு.என்னால மேற்கொண்டு படிக்க முடியலை.எங்க அப்பாவோட கடைசி நிமிடங்களில் அவரோட இருக்க முடியலை.இன்னும் சொல்லப் போனால் அவர் எப்படி செத்தார்ன்னு கூட எனக்குத் தெரியலை.இது எல்லாத்தையும் விட எல்லாரும் சொல்றாங்க.அவர் ஏதோ கொலை பண்ணிட்டார்ன்னு சொல்றாங்க.அதைப் பத்தியும் எனக்கு எதுவும் தெரியலை.இப்போ வந்து என்னை மன்னிச்சுடுன்னு சொன்னா, என்னால எப்படி அவளை மன்னிக்க முடியும்”

“இந்த விஷயத்தை ஏன் அப்படி பார்க்கிற பொழில்…ஒருவேளை இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கலைனா உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தே இருக்காதே…நீ எனக்கு கிடைச்ச பொக்கிஷம் பொழில்.அந்த வகையில் பார்த்தா கயல் எனக்கு நல்லது தான் செஞ்சு இருக்கா”

“ஹுக்கும்…நீங்க தான் மெச்சிக்கணும் அவளை…உங்களை கட்டிக்கிட்டு நான் படுற அவஸ்தை எனக்குத் தான் தெரியும்”

“அடிப்பாவி…என்னை மாதிரி அழகா,அம்சமா ஒருத்தன் தனக்கு புருஷனா வர மாட்டானான்னு எல்லாரும் ஏங்குறாங்க.நீ என்னடான்னா இப்படி ஒரே வார்த்தையில் என்னை அசிங்கப்படுத்திட்டியே.ஸோ சேடு (so sad) ஆதி…உன் நிலைமை இப்படியா ஆகணும்”

“உங்க பெருமையை நீங்க தான் பீத்திக்கணும்.கல்யாணம் ஆனதில் இருந்து எப்பப் பாரு ஒரே குழப்பம் தான்.ஆரம்பத்தில் எதுக்கு இந்த அவசரக் கல்யாணம்னு ஒரு குழப்பம்,அப்புறம் நீங்க நல்லவரா கெட்டவரான்னு ஒரு குழப்பம் (படிக்கிற எங்களுக்கும் அதே குழப்பம் தான் அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது.)அப்புறம் வரிசையா ஒவ்வொரு குழப்பமா வந்துகிட்டே தான் இருக்கு.இன்னும் சில கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் கண்டிப்பா தெரியும்.ஆனா நீங்க சொல்ல மாட்டீங்க”

“…”

“இதைப் பத்தி பேசினா மட்டும் உங்க வாய் இறுக கம் போட்டு ஒட்டினா  மாதிரி ஆகிடுமே…ஆமா எதுக்கு வரும் பொழுது அவ்ளோ கோபமா வந்தீங்க?”

“ஹி ஹி…அது ஒண்ணும் இல்லைடி…விஜி பிரச்சினை முடிஞ்சதும் என் மனசு உன்னைத் தான் தேடுச்சு…ஆனா நீ பக்கத்தில் இல்லையா?நானும் அன்னைக்கு நீ மயங்கினதுக்கு நான் தான் காரணம்னு நினைச்சுக்கிட்டு உன்னை இங்கே ஊருக்கு அனுப்பி வச்சி தொலைச்சிட்டேன்.நேத்து போனில் சொன்னதை முன்னாடியே ஊரிலேயே சொல்லி இருந்தால் உன்னை இங்கே போகவே விட்டு இருக்க மாட்டேன்ல.ஏற்கனவே நிறைய நாள் வீணாக்கிட்டோம்.இப்போ இன்னும் ஒரு மாசம் எப்படிடி உன்னை பிரிஞ்சு இருப்பேன் நான்.நீ சொல்லாம விட்டதால தானே அப்படினு உன்மேல கொஞ்சம் கோபம் வந்துச்சா…அதான் அதே கோபத்தோட கிளம்பி வந்தேன்”

“நீங்க கோபத்தோட கிளம்பி வந்த இலட்சணத்தைத் தான் பார்த்தேனே” கசங்கி இருந்த புடவையை சரி செய்தவாறே பேசியவளை காதலாய் பார்த்தான் ஆதித்யன்.

“பொழில்…வாடி ஊருக்கு போகலாம்…”ஏக்கத்துடன் அழைத்தான் ஆதித்யன்.

“அ…அது எப்படி இன்னும் இருபத்து எட்டு நாள் முடிஞ்சு தான் அனுப்புவாங்க.நீங்க முதல்ல கிளம்புங்க”

“ஐ…ஐ…என்னை மட்டும் எப்படி அனுப்புவாங்க…நேத்திக்கு போன் பேசும் பொழுதே நீ என்ன சொன்ன ஊருக்குள்ளே வந்துட்டா திருவிழா முடியாம ஊரை விட்டு யாரும் வெளியே போகக்கூடாதுன்னு சொன்ன இல்லை…அதனால அய்யா ஏற்கனவே பிளான் பண்ணி ஒரு மாசம் இங்கே இருக்கிற மாதிரி தான் வந்து இருக்கேன்.ஸோ இன்னும் ஒரு மாசம் நானும் உன் கூடத் தான் இருக்கப் போறேன்” என்று அலுங்காமல் குண்டைத் தூக்கி போட்டான் ஆதித்யன்.

“அய்யயோ…அதெப்படி உங்களை இங்கே தங்க விடுவாங்க…அதெல்லாம் சரிப்பட்டு வராது.யாரும் பார்க்கிறதுக்கு முன்னாடி நீங்க உடனே கிளம்புங்க”

“என்னடி இப்படி விரட்டுற”என்று சலித்துக் கொண்டவன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு தொடர்ந்து பேசினான். “ஏற்கனவே உன்னோட மாமாகிட்டே இங்கே வரப் போறதையும் தங்கப் போறதையும் சொல்லி பர்மிஷன் வாங்கிட்டு தான் வந்து இருக்கேன்.அய்யாவை யாரும் அசைச்சுக்க முடியாது”என்று பெருமையாக காலரை தூக்கி விட்டுக் கொண்டான் ஆதித்யன்.

ஆதித்யன் பேசப் பேச அரசிக்குள் கலவரம் மூண்டது. ‘இது என்னடா வம்பா போச்சு…இவனை பக்கத்தில் வச்சுக்கிட்டா சமாளிக்கிறது கஷ்டமாச்சே…’என்று சில நிமிடங்கள் யோசித்தவள் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டாள்.அதன்பிறகு வந்து இருவரையும் பார்த்து விட்டு போன பரசுராமன் ஆடி மாதம் என்பதால் ஆதித்யன் தங்குவதற்கு வேறு ஒரு வீடு ஒன்றை ஏற்பாடு செய்து அதன் சாவியை ஆதித்யனிடம் கொடுத்து கையோடு அவனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட,முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு ஏக்கத்துடன் மனைவியை பார்த்தபடியே அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

அதன்பிறகு வந்த நாட்களில் ஆதித்யன் அருகிலேயே இருந்ததால் அரசி இன்னும் அதிக கவனத்துடன் செயல்பட்டாள்.ஆதித்யன் அருகில் நெருங்க முயற்சிக்கும் சமயங்களில் ஆடி மாதம்,கோவில் திருவிழா போன்ற காரணங்களைக் காட்டி முடிந்தவரை அவனை நெருங்க விடாமல் தவிர்த்து வந்தாள்.அப்பொழுது தான் விதி மீண்டும் தன்னுடைய வேலையை காட்டியது.

கார்த்தி ஒவ்வொரு இடமாக சென்று தகவல்களை திரட்டத் தொடங்கியது ஆதித்யனின் காதுகளுக்கு வந்து சேர்ந்தது.ஆதித்யனுக்கு தெரிந்து கார்த்திக்கு அந்த தகவல்களை திரட்ட வேண்டிய அவசியம் கிடையாது.அப்படி அவன் செய்கிறான் என்றால் அது நிச்சயம் அரசி சொல்லித் தான் அவன் செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று முழுமையாக நம்பினான் ஆதித்யன்.அவனுக்குத் தெரிந்து அரசியும் கார்த்தியும் வீட்டில் கூட ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசிக் கொள்வதில்லை.வேறு எந்த முறையில் இருவரும் தகவல்களை பரிமாறிக் கொள்கிறார்கள் என்று யோசித்தவனுக்கு சட்டென மூளையில் பொறி தட்டியது.

சில நாட்கள் முன் வள்ளி தன்னிடம் அரசி இவ்வளவு நேரமாக போன் பேசியதை பற்றி சொன்னதும் அரசிக்கு அவன் வாங்கிக் கொடுத்து இருந்த மொபைல் எண்ணின் இன்கமிங்,அவுட்கோயிங்  போன் கால்ஸ் தொடர்பான தகவல்களை வரவழைத்தவன் அதில் தன்னுடைய எண்ணைத் தவிர வேறு எண் இல்லாதது கண்டு குழம்பினான்.மேலும் தீவிரமாக அமர்ந்து யோசிக்கும் பொழுது தான் அன்று அவளை அணைத்த பொழுது அவளிடம் மறைத்து வைத்து இருந்த ஏதோ ஒன்று உறுத்தியது நினைவுக்கு வர ஒருவேளை அரசி தனக்கு தெரியாமல் வேறு ஏதேனும் போன் வைத்து இருக்கிறாளோ  என்ற சிந்தனையில் ஆழ்ந்தவன் பதட்டத்துடன் தன்னுடைய வீட்டு வேலையாட்களை போனில் அழைத்து பேசினான்.

துவைக்கும் பொழுது எடுத்து வைத்த கார்த்தியின் கார்ட் அங்கேயே பத்திரமாக இருப்பதாக தகவல் வர வேறு எப்படி என்று யோசித்தவன் (பொழில் தான் அன்று போன் பேசிவிட்டு மீண்டும் அதே சட்டைப்பையில் அதை வைத்து விட்டாளே).ஏதோ எண்ணம் தோன்ற சட்டென்று அவனுடைய பி.ஏவை அழைத்தவன் அந்த வீட்டின் லேண்ட்லைன் போனில் இருந்து போன வாரத்தில் மட்டும் எந்த எந்த நம்பருக்கு அழைக்கப்பட்டு இருந்தது என்ற லிஸ்டை கேட்க, அடுத்த சில நிமிடங்களில் அது அவனின் மொபைலுக்கு மின்னஞ்சலாக வந்து சேர்ந்தது.

அதில் கார்த்தியின் எண்ணை கண்டதும் ஆத்திரத்தில் அவன் கண்கள் உக்கிரமானது. ‘எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறாள் என்னை? இவளை இப்படியே விடக்கூடாது’ என்ற ஆத்திரத்தோடு தான் தங்கி இருந்த இடத்தை விட்டு கிளம்பி நேராக அரசியின் வீட்டுக்குள் நுழைந்தவனால் வீட்டின் உள்ளே செல்ல முடியவில்லை.வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

“அரசி…கதவைத் திற”கர்ஜனையாக ஒலித்தது அவன் குரல்.

“முடியாது” முதல் அறையில் இருந்த ஜன்னலை மட்டும் திறந்து வைத்துக் கொண்டவள் நிமிர்வாக பதில் சொன்னாள்.

“ஏய்!ஒழுங்கா கதவை திறடி…இல்லை உடைச்சுக்கிட்டு உள்ளே வந்திடுவேன்”

“ஓ!…விஷயம் தெரிஞ்சுடுச்சா?”நிதானமாக கேட்டாள் அரசி

“ஆமா…நான் இவ்வளவு தூரம் சொல்லியும் கொஞ்சமும் அடங்காமல் மறுபடி உன்னோட சிபிஐ வேலையை எனக்கே தெரியாம பண்ணி இருக்கேன்னா என்ன அர்த்தம்?”

“எங்க அப்பாவோட மரணத்திற்கு என்ன காரணம்னு கண்டுபிடிக்காம ஓய மாட்டேன்னு அர்த்தம்”

“வேண்டாம் பொழில்…அது உனக்கு தெரியவேண்டாம்.அது நம்ம வாழ்க்கைக்கு தேவையும் …அதை மறந்துட்டு வா…நாம நம்மோட வாழ்க்கையை வாழலாம்”

“முடியாது…எனக்கு தெரிஞ்சே ஆகணும்”

“ஏய் என்னடி விட்டா ரொம்ப பண்ணுற…இந்த கதவை உடைச்சுக்கிட்டு உள்ளே வர எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஒழுங்கா வந்து கதவைத் திற”

“கதவை நீங்க உடைக்க முயற்சி செஞ்சாலோ…என்னை நெருங்க முயற்சி செஞ்சாலோ அதுக்கு அப்புறம் என்னை நீங்க உயிரோட பார்க்க முடியாது சொல்லிட்டேன்.”என்று சொன்னவள் அதுவரை மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தன்னுடைய கழுத்தில் வைத்துக் கொண்டாள்.

“பொழில்…என்ன காரியம் பண்ணுற…கத்தியை கீழே போடு…எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்”அதுவரை இருந்த ஆத்திரம் காணாமல் போய் பதட்டம் சூழ்ந்து கொண்டது அவனை.

“மாட்டவே மாட்டேன்…என்னுடைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரியும்வரை நான் இந்த கதவை திறக்க மாட்டேன்.மீறி என்னை நெருங்க முயற்சி செஞ்சா நான் என் கழுத்தை அறுத்துக்குவேன்”கொஞ்சமும் தளராமல் ஒரு முடிவுடன் பேசியவளைக் கண்டு மலைத்துப் போய் நின்றான் ஆதித்யன்.

“வேண்டாம் பொழில்…நீ தாங்க மாட்ட…சொன்னா கேளு…”

“இப்போ சொல்றீங்களா இல்லை என்னுடைய கை நரம்பை அறுத்துக்கவா”கத்தியை கைகளுக்கு அருகில் கொண்டு செல்லவும் ஆதித்யன் அலறி விட்டான்.

“வேண்டாம் பொழில்…எதுவும் செஞ்சிடாதே நான் சொல்லிடறேன்”

காதலாகும்…

VNE50

50
அன்று முதல் மஹா தினம் வந்தாள். ஷ்யாம் தான் அழைத்துக் கொண்டு வருவான். ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு கிளம்பும் போதும் பைரவி முணுமுணுப்பார்.
“எதுக்கு ஷ்யாம் தம்பி இந்த வேண்டாத வேலை? அவன் எக்கேடு கெட்டா நமக்கு என்ன? நம்ம வேலைய பார்க்கலாமே… உங்க கிட்ட நிறைய கையாடி இருக்கான்னு வேற கார்த்தி சொன்னான்…” என்று கூறியவரை அவன் தான் சமாதானம் செய்ய முயன்றான்.
அவருக்கு அந்த அளவுதான் தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்ற விஷயங்களை கேட்குமளவு பரந்த மனப்பான்மை அவருக்கு கிடையாது என்பது கார்த்தியின் வாதம். தெரிந்து விட்டாலோ கண்டிப்பாக திருமணம் என்பது கனவு தான். முந்தைய வாழ்க்கையை கொண்டு இருவரின் காதலை பணயம் வைக்க வேண்டாம் என்று கண்டிப்பாக தெரிவித்து இருந்தான்.
“இருக்கட்டும் த்தை… பரவால்ல… எனக்கும் கோபம் இருந்துது… ரொம்பவே இருந்துது… ஆனா இப்ப அவன் இருக்க நிலைமையை பார்த்தா மனசு கேக்கலை… கூடவே இருந்தவன்… அவனை எப்படி நான் அப்படியே விட்டுட முடியும்?” என்று இவன் கேட்க,
“அப்படீன்னா நீங்க மட்டும் பாருங்க… இவ எதுக்கு? இது முதல்லையே ஒரு ஆர்வ கோளாறு… உங்களுக்கு தெரியாது…” என்றவரை சிரித்தபடி பார்த்தான்.
“நல்லாவே தெரியும்ன்னு சொன்னா உங்க மக என்னை ஒரு வழி பண்ணிடுவா…” என்றவனை, பார்த்து சிரித்தவர்,
“இல்ல தம்பி… கல்யாண நேரத்துல அங்கயும் இங்கயும் உங்களை யாராவது பார்த்தா சரி வராது… இன்னும் மூணு வாரம் கூட இல்ல… அதான் சொன்னேன்…” என்று அவர் கூற, புன்னகைத்துக் கொண்டானே தவிர, அவளை அழைத்து போவதை மாற்றவில்லை.
காலையில் விஜியை பார்த்துவிட்டு, அவனுக்கு தேவையானவற்றை கவனித்துவிட்டு, அதன் பின் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாள். உடன் ஷ்யாம் எப்போதும் இருந்தான். அவளை தனியாக விஜியை பார்க்க எப்போதும் அனுமதிக்கவில்லை. என்ன செய்வதானாலும் நான் உன் கூடவே இருப்பேன் என்பது போல தான் இருந்தான்.
அவனது வேலைகளை ஒதுக்கி வைத்துக் கொண்டான். முடிந்த போதெல்லாம் விஜய்யோடு இருக்க முயன்றான். அவன் என்ன மனநிலையில் இருந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. விஜி செய்தது மிகப்பெரிய தவறு தான். ஆனால் அந்த கோபத்தில் தான் செய்தது சரி செய்யவே முடியாத பெரும் தவறல்லவா… அவனை வேறு எப்படி வேண்டுமானாலும் அடித்து இருக்கலாம். மஹா சொன்னது போல கொன்று இருந்தால் கூட அது அதோடு முடிந்து இருக்கும் என்ற குற்ற உணர்வு அவனை வாட்டியது.
ஷ்யாமின் பண பலமும் படை பலமும் போலீஸ் கேசை ஒன்றுமில்லாமல் செய்திருந்தது. மீடியாவையும் மொத்தமாக மௌனமாக்கியிருந்தான். யாரும் இந்த சம்பவத்தை பற்றி பேசாதவாறு செய்திருந்தான். ஆனால் விஜியின் மனநிலையை எப்படி சரி செய்வது என்று புரியவில்லை. நடுவில் இருந்த விஜய்யை தவிர்த்து பார்த்தால் எட்டு வருடமாக தனக்காக உழைத்தவனை நினைத்து அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. விஜி ஷ்யாமை மிரட்ட வீடியோ எடுத்து வைத்ததெல்லாம் நினைவிருந்தாலும், அவனது இப்போதைய நிலை மட்டும் தான் அவனை வெகுவாக உறுத்திக் கொண்டிருந்தது.
விஜி இந்தளவு பலகீனமான மனதை கொண்டிருப்பான் என்று ஷ்யாம் கனவிலும் நினைக்கவில்லை.
அவனை சோதித்த மருத்துவர் கூறியது நினைவுக்கு வந்தது.
“நீங்க ப்ராபர்டீசை எழுதி வாங்கினதுல மனசளவுல ரொம்ப பெரிய அடி வாங்கி இருக்கணும் பாஸ்… ரொம்ப பயந்து, ரொம்ப ஸ்ட்ரெஸ் அதிகமாகி இருக்கணும்… அதோட வெளிப்பாடு தான் உங்களை மிரட்ட அப்படி ஒரு காரியத்தை செய்திருக்கார்.
அதோட உங்களை ஏமாத்தறோம்னு குற்ற உணர்வும் வேற ரொம்ப நாளா இருந்து இருக்கணும்… தன்னோட இடத்தை தக்க வைக்க முடியலையேன்னு ஒரு ஸ்ட்ரெஸ். அவர் ஆசைப்பட்ட பொண்ணை அடைய முடியலைங்கற தவிப்பு வேற… தப்பு தப்பா யோசிக்க வெச்சுருக்கு…
எல்லாத்துக்கும் சிகரம் வெச்ச மாதிரி அன்னைக்கு நடந்த விஷயம்… எக்ஸ்ட்ரீம் ஸ்ட்ரெஸ்ல முதல் கட்டமா மூளை செலெக்ட்டிவா உங்களை மறந்துச்சு… தனக்கு எதுவுமே நியாபகம் இல்லைன்னு இன்னொரு ஸ்ட்ரெஸ்… எல்லாமா சேர்ந்து மொத்தமா டிஸ்ஓரியன்ட் ஆகிட்டார்…”
மெளனமாக அவர் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தவன்,
“இனிமே விஜியை மீட்க முடியாதா டாக்டர்?” என்று கேட்க,
“ஒய் நாட்? இது ரொம்ப ஷார்ட் லிவ்ட் தான் பாஸ்… அந்தளவுக்கு அவரோட மனசு வீக் கிடையாது… எப்ப வேணும்னாலும் சரியாக சான்ஸ் இருக்கு… ஆனா மனசு அமைதியா இருக்கணும்… நல்ல தூக்கம் வேணும்… அதை நாங்க பார்த்துக்கறோம் பாஸ்…” எனவும், மெளனமாக எழுந்து கொண்டான்.
இப்போதைக்கு அவனது மனதுக்கு அமைதியை தருவது மஹாவின் அருகாமை. வேறென்ன சொல்ல?
அவனை பார்க்கவே கூடாது என்று பேயாட்டம் போட்டவன், இன்று பரிவாக அவனோடு உரையாடுவதை மெளனமாக அங்கீகரித்தபடி இருந்தான்.
ஷ்யாம் தான் அடித்ததும்… அவனே தான் இப்போது வருந்துவதும். தவறு செய்த குழந்தையை அடித்து விட்டு, அதன் பின் அழும் தாயின் மனநிலையில் இருந்தான். அடித்த அடியில் இறந்து போயிருந்தால் கூட இத்தனை வருத்தம் இவனுக்கு இருந்திருக்காது. ஆனால் யார் முன் கம்பீரமாக இருக்க ஆசைப்பட்டானோ அந்த மஹாவின் முன் படுக்கையில் மலம் கழித்த நிலையில் இருந்தவனை பார்க்க ஷ்யாமால் முடியவில்லை.
விஜி சரியாக வேண்டும் என்று உண்மையாக நினைத்தான். அவனால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தான்.
இன்டர்ன்ஷிப்பில் அதிகம் விடுமுறை அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் மஹா விடுமுறை எடுக்கவெல்லாம் முனையவில்லை. திருமணத்துக்காக வேறு விடுமுறை எடுக்க வேண்டுமே… அவனுக்காக நேரம் ஒதுக்கினாள். அவ்வளவே! ஆனால் உண்மையாக ஒதுக்கினாள். பரிதாபத்தை காட்டாமல் பரிவை காட்டினாள்.
கடைசி மூன்று மாத இன்டர்ன்ஷிப்புக்கு ஏதேனும் கிராமம் செல்ல வேண்டும் என்பது அவளது ஆசையாக இருந்தது. ஆனால் இனி முடியுமா என்பது தெரியவில்லை. கல்லூரியில் எப்படி ஒதுக்குகிறார்களோ அப்படி செய்ய வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டாள்.
டிஸ்ஓரியன்ட்டேஷன் படிப்படியாக சரியாகிக் கொண்டிருந்தது. அவனது மனநிலையில் மெதுவான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. மனநல மருத்துவர்கள் முழுமையாக அவனை டேக் ஓவர் செய்து கொண்டனர். அனைத்துக்கும் வைத்தியம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவனது தாய் அங்கேயே தங்குவதற்கு வசதி செய்து கொடுத்திருந்தான் ஷ்யாம். நீலாங்கரை வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலையும் நடந்து கொண்டிருந்தது.
பத்து நாட்கள் போன நிலையில், இன்று காலை வந்த போதே விழித்திருந்தான் விஜய். இப்போதெல்லாம் குளறல் குறைந்து இருந்தது. கண்கள் ரொம்பவும் அலைபாய வில்லை. ஆனால் ஐ டூ ஐ காண்டாக்ட் என்பது இன்னமும் வரவில்லை. பேசும் போது அங்கும் இங்கும் பார்த்தபடியே இருப்பது இப்போதைய வழக்கமாகி இருந்தது.
ஆனால் யாரோ தனது செயல்களையெல்லாம் ரெக்கார்ட் செய்கிறார்கள் என்ற பிதற்றல் குறைந்து இருந்தது. மெல்ல குணமாகிக் கொண்டிருந்தான்.
மெளனமாக அமர்ந்திருந்தவன், அருகே இருந்த நாற்காலியில் அமைதியாக வந்தமர்ந்த ஷ்யாமை திரும்பிப் பார்க்கவில்லை. சற்று நிலைக்கு வந்தபோதிலிருந்தே பார்ப்பதில்லை. ஷ்யாமை பார்க்கும் போது அவனையும் அறியாமல் மனதுக்குள் ஒரு அச்சம் கவ்விக் கொண்டிருந்தது. அந்த உணர்வு அவனுக்கு பிடிக்காமல் இருந்தது. அதனால் அவனை பார்ப்பதை தவிர்த்து கொண்டிருந்தான்.
“ஹாய் ப்ரோ… குட் மார்னிங்…” என்றபடி அருகே வந்த மஹாவை பார்த்துக் கொண்டே இருந்தான், மெல்ல தலையாட்டியபடி!
“ஷ்யாம்… ப்ரோக்கு குட் மார்னிங் சொன்னயா?” அவனது கேஸ் ஷீட்டை பார்த்தபடியே ஷ்யாமை வம்புக்கு இழுத்தாள் சிறு சிரிப்போடு.
தினம் வருவான் என்றாலும், விஜியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கோபம் என்ற உணர்வு வேறு. இது ஏமாற்றம், ஆற்றாமை அதனோடு சேர்ந்த குற்ற உணர்வு. அதை புரிந்து கொண்டவள், அவனை அவ்வப்போது இப்படி விஜி முன்பாகவே சீண்டுவாள்.
விஜி ரொம்பவும் மோசமான நிலையில் இருந்த போதெல்லாம் ஷ்யாம் ரொம்பவுமே கலங்கி அமர்ந்திருக்கிறான். அவனது கலக்கத்தை கண்டவளுக்கு உள்ளுக்குள் வெகு கலக்கமாக இருக்கும். தோளோடு மெல்ல அணைத்துக் கொள்வாள்.
என்ன மாதிரியான மனிதன் இவன்?
இவனையா ராட்சசன் என்று சொல்கிறார்கள் என்ற ஆற்றாமை அவளுக்குள்ளே நிறைய தோன்றியிருக்கிறது. வெளியில் எத்தனை கொடூரமானவனாக சித்தரிக்கப் படுகிறானோ, உள்ளுக்குள் அத்தனை மென்மையான அவனது மனதை கண்டவளுக்கு சற்று பெருமையாக இருந்தது.
இவன் என்னவன்!
இவனால் நம்பிக்கை துரோகத்தை சகிக்க முடிவதில்லை. ஆனால் அப்படி நம்பிக்கை துரோகம் செய்தவனுக்காக கூட வருந்துகின்ற மனம் இருக்கிறது. அந்த நிலைக்கு தான் மட்டுமே காரணம் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளும் தைர்யம் இருக்கிறது. இவன் வெளிப்படையானவன். உண்மையாக இருக்கும் பட்சத்தில் உயிரையும் கூட தரும் மனம் எத்தனை பேருக்கு வாய்த்து விடும்?
இருக்கும் இடத்திற்கு தக்கபடி இவன் மாறிக் கொண்டானே தவிர, அவனது மனம் உயர்வானதுதான் என்று மட்டுமே எண்ணத் தோன்றியது மஹாவுக்கு.
அவனது தூய்மையும், நேர்மையும், உண்மையும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வெகு சிலருக்கு தான்.
காதலெனப்படுவதும் நட்பெனப்படுவதும் யாதெனில் அது நம்பிக்கை… துணை… உறுதி… நேர்மை… துணிவு!
அதன் செயல் வெறும் இன்பத்தில் பங்கெடுப்பது மட்டுமல்ல… உற்றவரின் துன்பத்தையும் தனதாக நினைத்து அதில் பங்கு கொள்வது. நானிருக்கிறேன் உனக்காக என்ற நம்பிக்கையை கொடுப்பது. உன்னை நானறிவேன் என்று இணையின் நேர்மையை தான் பறைசாற்றுவது. உனக்காக எதையும் செய்வேன் என்று எப்போதும் துணையிருப்பது. எந்த சூழ்நிலையாக இருப்பினும் உன்னை கைவிட மாட்டேன் என்ற உறுதியை கொடுப்பது. வாழ்க்கையின் கடைசி நொடிகளையும் இருவரும் கைப்பிடித்தவாறு அழகான புன்னகையோடு கடக்க முடியும் என்ற துணிவை கொடுப்பது காதல் மட்டுமல்ல நட்பும் கூடத்தான்!
இவன் தன்னுடைய காதலுக்கு மட்டுமல்ல… நட்புக்கும் உண்மையாக தான் இருந்திருக்கிறான். ஆனால் விதி… இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது போல!
அதே உணர்வோடு அவனை அடிக்கடி பார்த்தபடியே, விஜியின் வைட்டல்சை செக் செய்து கொண்டிருந்தாள்.
அவளது எண்ணப் போக்கை அறியாதவன், விஜியை பார்த்தபடியே அவனது மனதுக்குள் போராடியபடி இருந்தான்.
விரைவாக அவன் குணமாக வேண்டும் என்ற பிரார்த்தனை மட்டுமே அவனது மனதுக்குள்!
திருமணத்திற்கு நகை எடுப்பது, வெட்டிங் கார்ட் செலக்ஷன், தாலி உருக்குவது என்று ஒவ்வொன்றிலும் மகிழ்ச்சியோடு பங்கு கொண்டான் என்றாலும், ஓரத்தில் விஜி உறுத்திக் கொண்டே இருந்தான்.
அதே உணர்வோடு தான் அங்கும் அமர்ந்திருந்தான். அவனது இயல்பே இந்த பத்து நாட்களில் முற்றிலுமாக தொலைந்து போயிருந்தது. பேச்சு வெகுவாக குறைந்து விட்டிருந்தது. யோசனை யோசனை யோசனை மட்டுமே!
“ஷ்யாம்ம்ம்ம்….” என்று சலுகையாக அழைத்த காதலியை பார்த்தான். என்ன யோசனையாகவே இருக்கிறாய் என்று கண்களால் உணர்த்தியபடி,
“என்னம்மா ஒரே திங்கிங்? அனுப்புன ராக்கெட் கவுந்து போச்சா?” விஜிக்கு மாத்திரைகளை எடுத்து வைத்தபடி கேட்க,
“ப்ச்…” என்று சலித்துக் கொண்டான்.
“ஏன் இவ்வளவு சலிப்பு?” என்று இவள் கேட்க,
“விஜிக்கு சரியாகிடுமா குல்ஃபி?” கவலையாக கேட்டான், அவனை வைத்தபடியே, அவனுக்கு புரியாது என்றெண்ணிக் கொண்டான் போல!
“அதெல்லாம் ஜம்முன்னு ஆகிடுவாப்ல… அதுக்கு ஏன்டா வயலின் வாசிக்கற?” என்று கேட்க,
“இல்ல மஹா… இவன் என்ன தப்பு பண்ணிருந்தாலும் நான் பண்ணது ரொம்ப தப்பு… நீ சொன்னப்ப எனக்கு புரியல… இப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு… ஒரு இடத்துல நிற்கவே நிக்காம ஓடிட்டு இருந்தவன். கட்டிட்டு வாடான்னா வெட்டிட்டு வருவான்… ஏன் இப்படி பண்ணான்னு இன்னமும் எனக்கு புரியல… ஆனா நான் இப்படி பண்ணிருக்க கூடாது…” என்று மனம் வருந்தியவனை அவளால் பார்க்க முடியவில்லை.
“முடிஞ்சு போன விஷயத்தை பேசி இப்ப ஒண்ணுமே ஆக போறதில்லைடி குட்டிம்மா… திரும்ப திரும்ப அதையே ரிவைண்ட் பண்ணி பார்க்காத… மனசு கஷ்டமா இருக்கும்… விஜி அண்ணன் சரியாகிடுவாங்க… அவ்வளவுதான்…” மென்மையாக அவனை செல்லமாக அழைத்தபடி காதலோடு அவள் கூற, அதை மௌனமாக அங்கீகரித்தான்.
இருவரும் தன்னைப் பற்றி பேசுவதை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் விஜய்.
உண்மையில் அவனுக்கு நினைவு மீண்டு கொண்டிருந்தது.
ஒருவிதமான ஆழ்ந்த அவமானத்தில் தான் மெளனமாக அவன் அமர்ந்திருந்தான். இருப்பது சுஷ்ருதா என்று தெரியும். தெரிந்தும் அவனால் ஏதும் செய்ய முடியாத நிலை. அதிலும் தன் முன் வந்து அமர்ந்த ஷ்யாமை அவனால் ஏறிட்டு பார்க்க முடியவில்லை. விரும்பவில்லை. கோபம் எல்லை மீறி வந்தாலும் அவனால் எழுந்து ஓடவெல்லாம் முடியாது. அடிக்கவும் முடியாது. கை கால்கள் வலுவிழந்த நிலையில் ஷ்யாமை எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபம் உள்ளுர கொதிக்கத்தான் அமர்ந்திருந்தான்.
ஆனால் ஷ்யாமின் வருத்தம் அவனை ஏதோ செய்தது. தான் எத்தனை அவனை ஏமாற்றி இருந்தாலும், அவனது அந்தரங்கத்தை பகிர்ந்து இருந்தாலும், அதற்கு பின் ஷ்யாம் அவ்வளவு கோபமாக இருந்ததை விஜியும் உணர்ந்தே இருந்தான். ஆனாலும் தனக்காக அவன் வருந்துவதை கண்ட போது மனது ஏதோ அழுத்தியது. இந்த வருத்தத்திற்கு தான் தகுதியானவன் தானா?
அதோடு மஹா அத்தனை பரிவாக அவனுக்கு உணவை தந்து மாத்திரையை தந்து, அவனோடு உரையாடி, அவனையும் உரையாடலில் இழுக்க முயல்வது, உண்மையிலேயே ஆடி விட்டான்.
எத்தனை தூய்மையானவள் இவள்!
இந்த தூய்மையும் உண்மையும் எளிமையும் தானே ஆனானப்பட்ட ஷ்யாமை அவளோடு கட்டிப் போட்டிருக்கிறது.
எத்தனைக்கு எத்தனை அவனது மனம் எதையோ தேடியது என்பதை விஜய் அறிவான். எத்தனை பெண்களிடம் படுக்கையை பகிர்ந்தாலும் மனதை பகிராமல் இருந்த ரகசியமும் அவனுக்கு தெரியும். அவனது மனம் தேடிய ஒன்று அவனுக்கு அப்போதெல்லாம் கிடைக்கவே இல்லை.
அது இப்போது கிடைத்திருக்கிறது.
அதுதான் தூய்மையான மனது!
இதுவா இல்லை அதுவா என்ற அவனது தேடல் இப்போது முற்று பெற்று இருக்கிறது.
மஹாவின் அந்த தூய்மையில் ஷ்யாம் மட்டுமல்ல… விஜியின் அழுக்கும் அழுக்காறும் கூட அடித்து செல்லப்படுவது போல ஒரு பிரம்மை!
அந்த தூய்மைக்கு தான் ஈடு கிடையாது என்று எண்ணிக் கொண்டான்.
செடியில் பறித்த வாசனை மலர் கடவுளுக்கு அர்ப்பனமாவதும் விலைமகளை அலங்கரிப்பதும் அந்த மலரின் கையில் இல்லை. அது அத்தனையும் தாண்டிய ஒரு சுழற்சி விதி.
இவருக்கு இவர் தான் என்று எழுதி வைத்த ஒன்றை யார் மாற்ற முடியும்? 
அவனது எண்ணப் போக்கு இப்படியாக இருக்க,
இன்னமும் ஷ்யாமின் முகம் தெளிவடையாமல் இருப்பதை கண்ட மஹா, விஜியின் பைலை பார்த்தபடியே, நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டு,
“ஷ்யாம்ம்ம்….” என்றழைக்க, திரும்பி அவளைப் பார்த்தவன், என்னவென்று புருவத்தை உயர்த்தி,
“என்னடி?” என்று கேட்க,
“எனக்கு சூயிங் கம் வேணுமே… உன்ட்ட இருக்கா?” நெற்றியை தேய்த்து விட்டபடி சற்றே இறங்கிய வெட்க வாடை வீசிய குரலில் கேட்க, ஷ்யாமின் முகம் குபீரென்று மலர்ந்தது.
விஜியோ அவன் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளும் பின்னுக்கு அடித்து செல்லப்பட்டன.
“என்னடி இன்னைக்கு நீயே கேக்கற? எந்த பக்கம் மழை வருதுன்னு பாக்கறேன்…” சிரித்தபடி ஜன்னலை பார்ப்பது போல பாசாங்கு செய்ய,
“இருக்கா இல்லையான்னு மட்டும் சொல்லு…”
“சாரி ஸ்டாக் இல்லடி…” என்று கண்ணடிக்க, அவள் சுற்றிலும் பார்த்தாள். மருத்துவர்கள் அவர்களது வேலையை பார்த்துக் கொண்டிருக்க, விஜய் மெளனமாக அமர்ந்து கொண்டு உணவை உண்டு கொண்டிருக்க, இவனானால் இபப்டி வாரிக் கொண்டிருப்பதை சிரிப்போடு பார்த்தவள்,
“மகனே… இன்னைக்கு நீ செத்த….” என்றாள், புன்னகையோடு!
“அப்படீங்கற?” என்றவனை,
“ஆமாங்கறேன்…” என்றவளுக்கு முகம் விகசித்தது.
இருவரின் அன்யோனியத்தை கண்டவனுக்கு, தன்னுடைய நிலை இன்னமும் பூதாகரமாக தோன்ற, கண்கள் கலங்க ஆரம்பித்தது.
விஜியின் கலங்கிய முகத்தை கண்டவள்,
“விஜிண்ணா…” என்று அவனது தோளை தட்டினாள்.
அவன் அதற்கும் பேசவில்லை.
மெளனமாகவே இருந்தான். கண்கள் மட்டும் கலங்கியபடி இருந்தது.
“விஜி…” ஷ்யாமும் அழைக்க, அதற்கும் அவன் பதில் பேசவில்லை.
“மனோஜ் கம் ஹியர்…” அவனை தொடர்ந்து கொண்டிருந்த மருத்துவரை ஷ்யாம் அழைக்க, கை காட்டி தடுத்தான் விஜி.
ஷ்யாம் புரியாமல் பார்க்க, மகாவுக்கு புரிந்தது. விஜி தன்னுடைய நினைவுகளை மீட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை!
விஜியின் கண்கள் நிலையாக இருந்தது.
“வேண்டாம் பாஸ்…” என்றான் சற்று தெளிவாக!

Trending

error: Content is protected !!