KNKA – 20
“என்னடி முகமெல்லாம் இப்படி சிவந்து இருக்கு!”வேகமாக வந்த ஸ்வாதியிடம் கேட்டாள் பிருந்தா.
“ஆங்… அ..அது.. மாடிப்படியில் ஓடி வந்தேன் அதனால இருக்கும்!”
“எதுக்கு இப்ப அங்க போன?”
“சும்மா தான் டி, புது ஸ்டெப் ஈசி யா வருதா?”என்று பேச்சை மாற்றினாள். எல்லாம் முடிந்து கிளம்பும் போது தான் தேடினாள் சித், பிரபா இருவருமே தென்படவில்லை….
ஸ்வாதிக்கு இன்னுமே படபடப்பு அடங்கவில்லை. நினைத்து நினைத்து சொல்ல தெரியாத உணர்வுகள் கொப்பளித்தது நெஞ்சுக்குள்ளே! இன்னும் இன்னும் அவன் அருகாமையும் முத்தமும் வேண்டும் என்று பேயாட்டம் போட்டது மனசு……
கடவுளே!! இதுக்கு தான் படிக்கிற வயசுல மனசை அலைபாய விடாம இருக்கணும்னு சொல்றாங்க போல. கன்னத்தில் முத்தம் கொடுத்ததுக்கே நா அவன் பின்னாடியே போய், இன்னும் வேணும்னு கேட்ருவேன் போலயே என்று தலையில் தட்டிக் கொண்டாள்….
அவனும் என்னை பார்க்கிறான்னு தெரியும், ஆனா லவ் பண்றானா தெரியலையேனு நினைச்சுக்கிட்டு நான் இருந்தா, ஸ்டரையிட்டா முத்தம் கொடுத்துட்டான்! என்ன நினைச்சுக்கிட்டு கொடுத்து இருப்பான்…. லவ் இல்லாமையா கொடுப்பான்?
இவள் சிந்தனையிலே இருந்ததால்,உள்ளே வந்த வேறொரு டிபார்ட்மெண்டை சேர்ந்த அவள் அறை தோழி அழுதுக் கொண்டிருந்ததை கவனிக்கவில்லை…. கேவல் சத்தம் அதிகமான பின் தான் “அச்சோ! யே! ஹேமா ஏன் டீ அழுற? என்னாச்சு?”
கொஞ்சம் நேரம் ஒன்னும் சொல்லாமல் அழுதவள், “இந்த பசங்களை நம்பவே கூடாது டி என்றாள்.”
“ஏன்!! என்னாச்சு! வெறுமனே இப்படி சொன்னா என்னனு புரிஞ்சுகிறது! சூர்யா எல்லாம் நல்ல பையன் தான்!”
“நா பிரண்டா இருக்க பசங்களை சொல்லலை, லவ் பண்ற பசங்களை சொல்றேன்!!”
“அட பாவி, லவ்வா! சொல்லவே இல்லை, வாரம் வாரம் லோக்கல் கார்டியன் வீட்டுக்கு போறேன் சொன்னது எல்லாம் டுபாக்கூரா!!! ஊர் சுத்தினியா அந்த பையன் கூட….யாரு டி அவன்…”
“என் கிளாஸ் தான், ஆனா ஹாஸ்டல் இல்ல. வந்த கொஞ்ச நாள்லே லவ்னா நீங்க எல்லாம் தப்பா நினைப்பீங்கனு சொல்லலை ஸாரி டி…”
“சரி விடு, இப்போ என்ன ஆச்சு….”
“என்னை தப்பா நினைக்காதே டி, ப்ளீஸ்…”
“அடச்சி, நீ பண்ற பில் டப் எல்லாம் வயத்திலே புளியை கரைக்குது, சட்டுனு சொல்லித்தொலை!!!”
“பர்ஸ்ட் அவனே தான் வந்து லவ் பண்றேன்னு சொன்னான், நானும் ஒத்துக்கிட்டேன்.முதல்ல வெளியே போன அப்போ எல்லாம் மால், சினிமா தான் போனோம்… அப்போ எல்லாம் சும்மா லைட் தான் தொடுவான்… கொஞ்சம் நாள் கழிச்சு கொஞ்சம் தனியான இடத்திற்கு போக ஆரம்பிச்சோம், கிஸ் பண்ணுவான், உடம்புல எல்லா இடமும் தொடுறது, ஹக் பண்றது எல்லாம் உண்டு…. எனக்கும் பிடிச்சு தான் இருந்துச்சு அதனால…. என்று சொல்லிக் கொண்டே போனவள் ஸ்வாதியின் முகத்தை பார்த்து விட்டு, ப்ளீஸ்டி என்னை தப்பா நினைக்காத, நா அதுக்கு எல்லாம் அலையலை….நம்ம லவ் பண்ற பையன், அவனும் நம்மளை லவ் பன்றான், அப்பிடினு ஒத்துக்கிட்டேன், அந்த பீலிங்கும் பிடிச்சு இருந்தது…அதான்
நேத்து இதை சொல்லி இருந்தால், புரிஞ்சுக்க முடியுமோ என்னவோ,ஆனால் இன்று நன்றாக புரிந்தது.அதனால் “ச்சே, நா தப்பா நினைக்கலை , சொல்லு என்றாள் ஆறுதலாக…..”
“இப்போ ஓரு நாள் ட்ரிப்பா பாண்டிச்சேரி போலாம், இல்லனா ஈ.சி.ஆர்ல ஏதாவது ரீசார்ட் போலாம்னு தொல்லை பன்றான் டி, வரலைனு சொன்னா உனக்கு என் மேல லவ்வே இல்ல, நான் உன்னை என் பொண்டாட்டியா தான் நினைக்கிறேன், உனக்கு தான் என் மேல நம்பிக்கை இல்லைனு கோவப்படுறான் டி….”
“யே!! அவன் நல்லவன் தானே டி, நீ சொல்றது எல்லாம் கேக்கும் போது பயமா இருக்கு….”
“அப்படி நினைச்சு தானே லவ் பண்றோம். ஆனா ரொம்ப செல்பிஷா அவனுங்க பீலிங்ஸ் மட்டும் தான் நினைப்பானுங்க, உன்கிட்ட தான் டி எல்லாம் கேக்க முடியும்னு சொல்லியே முக்கால்வாசி பண்ணிட்டான், இப்ப முழுசா வேணும்னு தான் இப்படி பிளான் பன்றான்….”
“நமக்கு எப்படி இருக்கும், எவ்ளோ பயம் வரும்னு கொஞ்சம் கூட கவலை இல்லை டி, மேட்டரை முடிச்சிட்டு கழட்டி விட பிளானோனு கூட பயமா இருக்கு டி. பொண்ணுங்களுக்கு தான் நிறைய ப்ரோப்ளேம், நா தான் தப்பு பண்ணிட்டேன். தனியான இடத்துக்கு போறது, தொட விடுறது எதுவும் பண்ணியிருக்க கூடாது….” என்று அழுதவளை என்ன சொல்லி தேற்றுவது தெரியாமல் அமைதியாக இருந்தாள் ஸ்வாதி.
ஏற்கனவே மண்டை காயந்திருந்த ஸ்வாதி இன்னும் குழம்பி போனாள்.ஹேமா சொல்ற மாதிரி தான் போல, “சித் கூட , பர்ஸ்டே கட்டிப்பிடிச்சானே, கிஸ் கூட பண்ணான்!”அப்போ எல்லாம் எங்க ரெண்டு பேருக்கும் பழக்கம் கூட இல்லையே…… அப்புறம் சப்னாவோட கூட கட்டி பிடிச்சுக்கிட்டு இருந்தான் என்று சூப்பராக ராங் ட்ராக்கில் போனாள்…
அவங்க பீலிங்ஸ் மட்டும் தான் பார்ப்பாங்க என்ற ஹேமாவின் வார்த்தை மட்டுமே அவள் மண்டையில் ஆணி அடித்தது போல் அமர்ந்தது……..
இவளுக்கு நேர் மாறாக வானத்தில் பறந்தான் சித்!! அங்கிருந்து பிரபாவிடம் கூட சொல்லாமல், ரூம்க்கு வந்து விட்டான்.. அவன் தான் மிதந்து கிட்டு இருந்தானே!!! எங்கே பேசுறது??
டேய்!! சித்!! கொடுத்தது பேபி முத்தம், அதுக்கே இப்படியா!!
நீயெல்லாம் அடுத்த லெவல் போன,என்னாவியோ?? என்று அவனே அவனை ஒட்டிக் கொண்டான்….ஒரு சின்ன முத்தம் இப்படி உடம்பெல்லாம் பரவசம் தருதே, அவளை விட்டு தள்ளி வரவே அதீத முயற்சி தான் செய்ய வேண்டி இருந்தது!!!
முதல்ல லவ்வை சொல்லிடணும், அவளுக்கு எந்த குழம்பமும் வருத்தமும் என்னால வரக் கூடாது….தேங்க்ஸ் டி செல்லம் இந்த சந்தோஷம் தந்ததுக்கு!!!
“என்னடா மச்சான்!!! சொல்லாம வந்துட்டே ரூம்க்கு?” கேட்டதுக்கு பதில் இல்லாம , எங்கேயோ பார்த்தபடி படுத்து இருந்தவனை பார்த்த பிரபா, கிட்ட போய் அவனை உலுக்கி,விரல்களை ஒன்று இரண்டு என காட்டி, இது என்னடா?” எனவும்
திடீரென அவன் கேட்கவும் என்னவென்று புரியாமல் விழித்தான் சித்!! “என்ன டா?”
“என்ன என்ன டா??? முத்திடிச்சு டா உனக்கு காதல் பையத்தியம்! உன் கேரக்டர்க்கு நீ லவ் பண்றதே என்னால நம்ப முடியலை, இப்படி நீ உருகி உருகி லவ் பண்றது எல்லாம் நம்பவே முடியலை டா…..கரெக்டா சொல்லி இருக்காங்க டா, இந்த அமுக்கினியா இருக்கவங்களை நம்பவே கூடாதுனு……”
ஹா ஹா ஹா,என்ன நடந்ததுனு தெரியாமலேயே இப்படி சொல்றான்…..நடந்தது தெரிஞ்சா அவ்ளோ தான் என்று நினைத்தான் சித்…
“பிரபா என்னாலே நம்ப முடியலை டா, எனக்குள்ள இப்படி ஒரு பீலிங்ஸ் எல்லாம் இருக்குனு. நா சொல்லலை, அவ விஷயத்தில என்னை நானே புதுசா தான் டா பீல் பன்றேன்….”
கல்லூரி விழா
காணும் முகம் எல்லாம் சந்தோஷமும் உற்சாகமுமாக இருந்தது… விழா ஒருங்கிணைப்பாளர்கள் பிஸியாக அங்கே இங்கே என்று அலைந்துக் கொண்டிருந்தார்கள். பார்வையாளர்கள் எல்லாம் ஆங்காங்கே சிறு சிறு கூட்டமாக பேசிக் கொண்டிருக்க, பங்கேற்பாளர்கள் எல்லாம் தயாராகி கொண்டியிருக்க, சித் நிலை கொள்ளாமல் தவித்தான்….
அன்று ஆடிட்டோரியத்தில் சந்தித்த பின், அவன் ஸ்வாதியை பார்த்து ஒரு வாரம் ஆச்சு….எப்படி பார்க்க முடியும் அவள் தான் ரூம்லே பிரக்டிஸ் பண்றாளே!!
பிரபா கூட கேட்டான், “என்ன ஹீரோயினை காணும் என்று?”மனசுக்குள்ள தவிப்பா இருந்தாலும், “டான்ஸ்ல பிஸியா இருப்பா போல்!”
“இருந்தாலும் ஹீரோவை பார்க்காம எப்படி!! உன் பேஸ் டல் ஆய்டிச்சு தெரியுமா?உண்மையை சொல்லு டா! மறுபடியும் ஏதாவது சண்டையா உங்களுக்கு?” என்று நண்பன் மேலிருந்த அக்கறையில் கேட்டான்.
அவனே குழப்பத்தில் இருக்கும் போது என்ன சொல்வது? முத்தம் கொடுத்ததால் தான் அப்படி பண்றாளோ? இருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் ,”டேய் சண்டை போடணும்னா பர்ஸ்ட் பேசணும், நான் எங்க பேசினேன் அவ கிட்ட?”
ஸ்வாதியும் தவித்தபடி தான் இருந்தாள்.அவனை பார்க்கணும்னு துடிக்கும் மனதை சமாதானம் செய்ய ஒளிந்தாவது அவனை பார்த்து விடுவாள். ஏன் தயங்குகிறாள் தெரியவில்லை…. அவன் தொட்டால் தன்னால் தடுக்க முடியாது என்று தெரிகிறது…. தொடவிட்டால் தொடருவான். அது தப்பு! ஏமாற்றி விட்டால் என்றெல்லாம் குழப்பம்……. அவன் மேல் உள்ள அன்பினால் தானே இப்படி தவிக்கிறேன்…. அவனுக்கும் இந்த தவிப்பு இருக்குமா?
இன்றும் நடனம் முடிந்தவுடன் அவனை நேருக்கு நேர் பார்க்காமல் ரூம்க்கு சென்று விட வேண்டும் என்று ஒரு மனதும், இன்னிக்கு ஒரு நாள் தானே! அந்த கண்ணை பார்த்திட்டு போ என்று இரண்டு மனசாக அல்லாடினாள்