Kadhalil nan kathaadi aanen

KNKA – 7

பார்ட்டி ஜாலியாக முடிந்தது. அனைவரும் பார்ட்டி ஹால் விட்டு வெளியே வர,  அங்க அவர்கள் குரூப்புடன் நின்றிருந்த பத்மினி , ஸ்வாதி! என அழைக்க, ஆச்சரியமாக அவளை நோக்கினான் பிரபா!

 

அட, நம்ம பத்துக்கு , ஸ்வாதியை தெரியும் போலவே……

 

ஸ்வாதி,  “ஹாய் சீனியர்!”

 

அவர்கள் இருவரையும் சுவாரசியமாக பார்த்தபடி, சித்தை தேடினான் பிரபா. அவன் சற்று தள்ளி நரேனுடன் சுவாரசியமாக பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தான்.

 

நரேனுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் கவனம் எல்லாம் ஸ்வாதியிடம் தான் இருந்தது.. அவனுக்குகே அவன்  என்ன உணர்கிறான் என்று புரியவில்லை. காரணமே இல்லாமல் அவளை பார்த்து பார்த்து எரிச்சல் அடைகிறான்…. சரி பார்க்காமல் இருக்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை…இவனே எரிச்சல் ஆகி விட்டு, பழியை தூக்கி அவள் மீது போடுகிறான்,  அவள் சரியில்லையாம்!!!!

 

“ரொம்ப நல்லா பண்ண ஸ்வாதி”! என்றாள் பத்மினி.

 

“தேங்க்ஸ் சீனியர்!” என்று அழகாக வெட்க புன்னகை புரிந்தாள் ஸ்வாதி! அவளுக்கு எல்லோரும் பாராட்டவும், கூச்சமாக இருந்தது.

 

“உண்மையை சொல்லு, இது நிஜமாவே  நீ யாரு கூடவோ போட்ட  சண்டை தான?  இல்லனா இப்படி கொஞ்சம் கூட யோசிக்காம ஆன் த ஸ்பாட் பண்ணியிருக்கவே முடியாது…..

 

“அடடா என்ன அறிவு?” என் பத்துக்கு  என்று மெச்சிக் கொண்ட பிரபா, ஓரக் கண்ணில் சித்தை பார்த்துக் கொண்டே , “ஆமா கண்டிப்பா!  இல்லனா அந்த பையன் கேரக்டர்  இவ்ளோ ரியலிஸ்டிக்கா வரவே வராது….  ரீசண்டா போட்ட சண்டையா ஸ்வாதி?” என்றான் குறும்பாக

 

பிரபா இருப்பதால் அன்று நடந்தது தெரிந்து , இருவரும் தன்னை வம்பு செய்கிறார்களோ ? தான் இல்லை என்று சொன்னால் எதுவும்  சொல்வார்களா என்று புரியாமல் முழித்தாள் ஸ்வாதி…..

 

அது…. என்று ஆரம்பித்த ஸ்வாதியை , அங்கு வந்து நின்ற சித்தின் பார்வை , ஏதாவது உளறி வைச்ச என்று மிரட்டுவது போல இருக்கவே….. முதலில் கொஞ்சம் தயங்கியவள், பின்,

 

இவர் என்ன  ரொம்ப ஓவரா போறார்? இப்போ எதுக்கு என்னை முறைக்கிறார் ? என்று தன் குறும்பு தனத்துடன்,  ஆமா சீனியர் என்று கொஞ்சம் கேப் விட்டு சித்துவை பார்த்தாள்….

 

என்ன சொல்ல வர்றா இப்போ? என்று  அவளை பார்த்தபடி நின்றான் சித். சாதாரணமாக நிற்பது போல இருந்தாலும், அவன் தாடை இறுகுவது கண்டு பல்லை கடிப்பது புரிந்து சிரிப்பு வந்தது அவளுக்கு.

 

அவன் எங்க ஏரியா பையன் தான் சீனியர், சரியான சிடுமூஞ்சி…. இப்போ தான் ஜஸ்ட் காலேஜ்க்கு வரதுக்கு ஒரு நாள் முன்னாடி சண்டை , ஆனா நீங்க இரண்டு பேரும் சூப்பர் சீனியர் …. கண்டுபிடிச்சிட்டீங்க…  என்று சித்தை வெறுப்பேத்தினாள்…!!!!

 

“ஏரியால இருக்க சின்ன பையனா!, ஹஹா என்று சிரித்த பிரபாவை, கொலைவெறியோடு தள்ளிக்கொண்டு , அவளையும் முறைத்து விட்டு போனான் சித்..

 

மச்சான், ஏரியா பையனா டா???

 

பேசாத பிரபா! தேவையில்லாதது எல்லாம் பேசி அந்த பெண்ணை வளர்த்து விடாத, அவ்ளோ தான் சொல்லுவேன்… எனக்கு பிடிக்கலை என்றான்.

 

ஓக்கே ஓக்கே டா, பிரீயா விடு…. இது ஜஸ்ட் பஃன் தான் டா …..

பார்ட்டிக்கு பிறகு கடந்து போன இரண்டு வாரங்களில், எப்போவவது தான் சித்தை பார்த்தாள் ஸ்வாதி, நேரிடையாக பார்க்க நேர்ந்தால் கூட , சித் கண்டுகொள்ளாமல் செல்வான்…..

 

ஷப்பா இவர் காட்டுற பந்தா இருக்கே….. முடியலை ,எண்ணிக்காவது நான் காட்டறேன் … அப்போ இருக்கு கச்சேரி என்று சொல்லிக் கொள்வாள்…….

 

அவனுக்கும்,  இவளை பார்த்தாலே மண்டை காய்ந்தது, அதுவரை தெளிவாக இருப்பவன், மீண்டும் குழம்பிவிடுவான்… தூரத்திலேயே அவளை பார்த்து விடுவான், கிட்ட வரும் போது யதார்த்தமாக கூட பார்க்க கூடாது என்றிருப்பான், தப்பி தவறி நேரிடையாக பார்க்க நேர்ந்தாலும் நீ எல்லாம் ஒரு ஆளா என்ற ரேஞ்சில் தான் பார்ப்பான்….  நான் ஏன் இப்படி வித்தியாசமா பிகேவ் பண்றேன்? என் தாட்ஸை (எண்ணங்கள்) என்னால கண்ட்ரோல் பண்ண முடியலையே என்று நொந்து போனான்!!

 

ஒரு மாதம் சென்று விட்டது, புதிய மாணவர்கள் பழசு ஆன பின், புதுசாக வந்து முதலாமாண்டில் சேர்ந்தாள் சப்னா , மும்பையில் இருந்து!!

 

அவள் அம்மா , சென்னையை சேர்ந்தவர் , அப்பா மும்பையை சேர்ந்தவர். இப்போது சப்னா மட்டும்  சென்னை வந்து தாய் வழி பாட்டி வீட்டிலிருந்து  கல்லூரியில் படிக்க போகிறாள். ஆள் நல்ல அழகாக, ஸ்டைலாக இருந்தாள். பெண்களை விட பையன்களிடம் பேசவே ஆர்வம் காட்டினாள்.

 

அன்று கல்லூரி முடிந்தது , கல்லூரிக்கு வெளியே இருக்கும் ஜூஸ் கடையில் அமர்ந்திருந்தனர் ஸ்வாதியும் சூர்யாவும். அவர்களுடன் பத்மினியும் இருந்தாள். இப்போது எல்லாம் பத்மினி ஸ்வாதியுடன் தான் வெளியில் செல்வது …

 

சீனியர் இப்போ பாருங்களேன் ஒரு ஜோக்கை என்று பத்மினியின் காதில் கூறி விட்டு, எழுந்து கடை வாசலுக்கு போகிற மாதிரி போயிட்டு வந்து சூர்யா, இன்னிக்கு இன்னும் காலேஜ் பஸ் கிளம்பலை போல, என்ன ஆச்சுனு தெரியல என்றாள்!

 

உனக்கு எப்படி தெரியும் என்று அதுவரை அசல்ட்டாகப் பேசிக் கொண்டிருந்தவன், சப்னா இங்க கடைக்கு தான் வரா டா என்று சொல்லி முடிக்கவில்லை….. அமர்ந்திருந்த சேர் பின்னாடி விழுந்தது அவன் எழுந்த வேகத்தில்! பதட்டமாக  நான் போறேன், நீ வந்திரு என்று வேகமாக கிளம்பினான்.

 

கிளம்பியவன் காதில் ஸ்வாதியின் சிரிப்பு சத்தம் கேட்க, திரும்பி பார்த்தால் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்ததாள்.

 

கோபத்தில் முகம் சிவந்து விட்டது அவனுக்கு, வந்தவன் ராட்சசி என்று மட்டும் சொல்லி விட்டு போய் விட….

 

ஐயோ, ஹர்ட் ஆய்ட்டான் போல, நா ரூம்ல வந்து சொல்றேன் சீனியர்…. என்றபடி அவன் பின்னே ஓடினாள்.

 

அவனை சமாதானப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே மனசில் இருந்ததால், ஓடும் போது சரியாக கடைக்குள் பிரபாவுடன் நுழைந்த சித்துவை நன்றாக இடித்து விட்டாள்!!!   ஓரு நிமிடம் தடுமாறி விட்டான் சித்…

 

யார் என்று கூட பார்க்காமல், ஸாரி என்று கத்தியபடி ஓட முயன்றவளின் கையை எட்டி பிடித்து நிப்பட்டினான் சித்…..

 

யாரது என்று பார்த்தவள்,  சித்தை பார்த்ததும்  வழக்கம் போல சொதப்பினாள், நீங்களா சீனியர்? ஸாரி ! என்றவாறு மறுபடியும்  ஓடப்  பார்த்தாள்….

 

அடிக்குரலில்,  நீயெல்லாம் எப்படி காலேஜ் வரை வந்த? கொஞ்சம் கூட காமன் சென்ஸ் இல்ல, பப்ளிக்ல எப்படி பிகேவ் பண்ணனும், எப்படி பேசனும்னு எதுவும் தெரியல என்று சீறினான்….. எங்க சான்ஸ் கிடைச்சாலும் ,யாரு கிடைச்சாலும்  இடிச்சுற வேண்டியது எனவும்,

 

“டேய் சித்!” என்று அவன் பேசியதை நம்ப முடியாமல் பார்த்தான் பிரபா…இந்த மாதிரி எல்லாம் பேசும் ஆள் இல்லையே இவன்….

 

அதுவரை ,” ஐயோ ,ஆரம்பிச்சுட்டரா?” என்ற மனநிலையில் இருந்தவளுக்கு, கடைசி வார்த்தையை கேட்டதும்,  ஆதங்கமும் ஆத்திரமும் சரி சமமாக வந்தது.

 

எனக்கு தான் எதுவுமே  தெரியலை!  உங்களுக்கு  எல்லாம் தெரியும் தானே ஸார்!  அப்போ ஏன் எப்போ பாரு நீங்களும் என்கிட்டயே வந்து இடிச்சுக்கிறீங்க? அலெர்ட் ஆறுமுகமா  இருங்க சார்… சின்ன பிள்ளைங்கனா அப்படி தான் கொஞ்சம் துறு துறுனு  இருப்போம்… கொஞ்சம் வயசானவங்க ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது பாருங்க….. என்று அவன் முகம் சிவப்பதை பார்த்தவாறே  ஓட்டம் எடுத்தாள்.

 

அவள் ஒடுவதை எரிச்சலுடன் பார்த்தபடி கடையினுள் சென்றான் சித்…..  பிரபா , சிரிப்பை கட்டுபடுத்தியபடி  “இது உனக்கு தேவையா மச்சான்?” என்று மனதினில் நினைத்தபடி பின் தொடர்ந்தான்.

 

என்ன ஆச்சு ஸ்வாதிக்கு? இப்படி ஒடுறா! என்று பத்மினியிடம் கேட்டான் பிரபா.பத்மினியுடன்  பார்க்க நேர்ந்தால், ஸ்வாதியுடன் நன்றாக பேசுவான் பிரபா.

 

சூர்யாவிற்கு கோவம் வர மாதிரி கலாய்ச்சுட்டா!  அவன் கோச்சுக்கிட்டு கிளம்பிட்டான், இவ பின்னாடியே ஒடுறா என்று குழந்தைகள் சண்டையை ரசிக்கும் மனநிலையில் தான் சொன்னாள் பத்மினி. அவளுக்கு தான் அவர்கள் எவ்ளோ நெருங்கிய நண்பர்கள் என்று தெரியுமே!!

 

ஆனால் கேட்டிருந்த சித்க்கு, சூர்யா எவ்ளோ நல்ல பையன். எப்போதும் அழகான ஸ்மைலோட பேசுவான் எல்லார்கிட்டயும்!  அவனுக்கே கோவம் மாதிரினா எவ்ளோ மோசமா கிண்டல் பண்ணி இருப்பா,இடியட். எல்லாரையும் கலாய்க்கிற அளவுக்கு நீ என்ன பெரிய ஆளா!! ஒரு நாள் மாட்டாமய போய்டுவ, அப்போ  இருக்கு உனக்கு……


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!