Kadhalil nan kathaadi aanen

Kadhalil nan kathaadi aanen

KNKA – 8

“ஸாரி டா! ப்ளீஸ் டா! இனிமே இந்த மாதிரி செய்ய மாட்டேன்!”

 

அவன் முகத்தை திருப்பிக்கொண்டு, அவளை பார்க்காமல்

அமர்ந்திருந்தான் .

 

“சூர்யா என்னை உன் கோவம் போற வரை திட்டு, ஆனா பேசாம இருக்காத டா!”

 

“டேய், இவ்ளோ கெஞ்சுறேன்ல்ல!” என்று அவன் தோளை பிடித்து வலுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்பினாள்!

 

பார்த்தால், அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்!

 

“அடப் பாவி! இவ்ளோ நேரம் என்னை கெஞ்ச வைச்சு, சிரிச்சிட்டு இருந்தியா டா?”

 

“இல்லை இல்லை, முதல்ல கோவமா தான் இருந்தேன். அப்புறம் நீ கெஞ்சினதை கேட்டு தான் சிரிப்பு வந்துடுச்சு. ஹாஹா, என்னமா கெஞ்சுற வாத்து என்று சிரித்தான்!”

 

“நிஜமா சாரி டா, உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிடேனா!” என்று வருந்தியவளை பார்த்து,

 

“ப்ரீயா விடு, நீ  பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி பீல் பண்ணாதே! சில விஷயம் சில நேரத்தில நாம எதிர்பார்த்த மாதிரி ஆகாமல் போய்டும்ல்ல , அந்த மாதிரி இன்னிக்கு என் விஷயத்தில ஆச்சு அவ்ளோ தான். எனக்கும் இன்னிக்கு என்ன ஆச்சுனு தெரில காமெடியா கூட எடுத்துக்கிட்டு இருந்து இருக்கலாம், ஆனா ரொம்ப கோவம் வந்துருச்சு…….”

 

“ஆனா, அந்த சப்னா கிட்டே ஜாக்கிரத்தையா தான் இருக்கணும்!  டேஞ்சரஸ் ஆன ஆளு ….”

 

“ஏன் டா, நா அவ மொக்கையை தாங்காம தான் ஓடுறீங்க எல்லாரும்னு நினைச்சேன்!”

 

“நீ வேற!  பசங்களோடவே ஏன் சுத்துறா , கேண்டீன்  எல்லாம் போற நினைக்கிற, மொத்த பில்லும் மாற்றவன் கிட்ட தான். பர்ஸ்ட் எல்லாம், இப்போ நீ பே பண்ணு அப்பறமா நா தரேனு சொன்ன பொண்ணு, இப்போ எல்லாம் அதை சொல்றது கூட இல்லை. சாப்பாட்டு டைம்க்கு கரெக்ட்டா வந்துடுது… பசங்கள் எல்லாருக்கும் ரொம்ப எரிச்சலா இருக்கு. ஒரு நாள் , ரெண்டு நாள்னா பரவாயில்லை, ஒரு மாசமா இதே கதை தான்!!

 

“ஓ! அவங்க வீட்டுல ஏதாவது பிரச்சனை இருக்குமோ?”

 

“எனக்கு தெரிந்து ,  அவ பாட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல, அவளுக்கு கையில காசு தேவைக்கு தான் கொடுக்கிறாங்க, சோ சாப்பாட்டுக்கு எவனையாவது மொட்டை போட்டுட்டு,  அந்த  காசை வேற எதுக்கோ செலவு பண்றா!”

 

“சொல்லவே ஒரு மாதிரி இருக்கு வாத்து, ஆனா இது தான் உண்மை.  அவளுக்கு செலவு பண்ண ஆளு தேடுறா , அதுக்கு பதிலா  எல்லாத்துக்கும் ஓக்கேயாம்!!”

 

ஸ்வாதிக்கு புரியவில்லை, “எது எல்லாத்துக்கும் டா?”

 

“உன்னை நா வாத்துனு கூப்பிடறது தப்பே இல்லை என்று சிரித்தான் சூர்யா!”

 

“டேய், அது ஏதோ ஸ்வாதியும் வாத்தும் ரைமிங்கா வருதுன்ன , சரி நண்பன் தானேனு  ஒத்துக்கிட்டேன்!!”

 

“சொல்லு டா!”

 

“ம்ம்…ம்ம்ம்.. ஒரு பொண்ணும் பையனும் தனியா இருந்தா என்ன பண்ணுவாங்களோ அதுக்கு என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான். ஒரு தோழியிடம் இப்படி சொல்ல அவனுக்கு சங்கடமாக இருந்தது.”

 

அதிர்ச்சியில் கண்களை விரித்து விட்டாள் ஸ்வாதி!! அவளுக்கு அது சம்பந்தமான கேள்வி அறிவே கொஞ்சம் தான் , அதுக்கே அவளுக்கு இப்படியும் நடக்குமா என்று தான் தோன்றியது!!

 

சூர்யா சொன்னது எல்லாம் உண்மை தான், மும்பையில் அவள்

பெற்றோர்  இருவரும் வேலைக்கு செல்பவர்கள். இரண்டு பெண்கள், இவள் சின்னவள். அக்கா படித்து முடித்து இப்போது தான் வேலைக்கு செல்கிறாள். சப்னாவிற்கு அவள் பணக்கார தோழிகள் போல் இருக்க வேண்டும் என்று ஆசை. கடைசி இரண்டு வருடம் வீட்டில் போராட்டம் தான். பாக்கெட் மணி பத்தலை, விதவிதமான ட்ரெஸ் , செருப்பு வாங்கி குடு என்று. நன்றாக  படித்தால் வரும் மரியாதையை உணர்ந்திருக்கிறாள்!!  அதனால் படிப்பு தப்பியது. சென்னை வரும் முன் , ரொம்பவும் மோசம், பிரெண்ட்ஸ் வாங்கி கொடுத்தார்கள் என்று பல காஸ்டலி பொருட்கள், எப்படி இவ்ளோ உனக்கு செலவு செய்வார்கள் என்றால் , அதற்கு பதில் வராது. பயந்து போன பெற்றோர் இங்க மூட்டை கட்டி அனுப்பி விட்டார்கள். வரும் முன்னேயே அவள் மூழ்கிவிட்டது அவர்களுக்கு தெரியாது!!

 

சப்னாவிற்கு சென்னையே பிடிக்கவில்லை. இங்க சிறிய அளவில் கூட பார்ட்டி கல்ச்சர் பண்ணும் பையன்களை கண்டுபிடிக்க முடியவில்லை அவளால்.

 

பசங்க கையில் நிறைய பணப்புழக்கமும் இல்ல. இவள் வகுப்பிலும் அந்த மாதிரி யாரும் இல்லை.  ஆனால் கண்டிப்பாக கல்லூரியில்  இருப்பார்கள், கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

 

அன்று வெள்ளிக்கிழமை, அவளுக்கு கொஞ்சம் நோட்ஸ் எடுக்க வேண்டி இருந்ததால், கல்லூரி பேருந்தில் செல்லாமல், தனியே சென்று கொள்ளலாம் என்றிருந்தாள்.

 

வேலை முடிந்து வந்தவள்,சற்று நேரம் அந்த குட்டி சுவரில் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அப்போது ஓர் BMW கார் ஒன்று வந்து நின்றது. டிரைவர் இறங்கி போன் செய்து விட்டு காத்திருக்க, யாரு தான் வந்து இந்த வண்டியில் ஏறுறாங்க பார்ப்போம் என்று பார்த்திருந்தாள்!

 

பிரபாவுடன் பேசியபடி வந்தான் சித். வந்தவன் டிரைவரிடம் ஏதோ சொல்ல , அவர் ஹாஸ்டலை நோக்கி சென்றார். டிரைவர் இரண்டு ட்ராவல் பேக்கோட திரும்பி வர , கிளம்பினான் சித்…

 

வாவ் , செம ஹண்ட்ஸ்ம்மா இருக்கான், பணக்காரனாவும் இருக்கான். அவள் லேட்டாக சேர்ந்ததால் , சீனியர் எல்லாரையும் தெரியாது, அதுவும் சித் மூன்றாம் ஆண்டு என்பதால் அதிகம் பார்க்க வாய்ப்பு இல்லை.

 

முதல்ல இவன் எந்த டிபார்ட்மெண்ட் என்று கண்டுபிடிக்கணும்!!

Leave a Reply

error: Content is protected !!