Kadhalil nan kathaadi aanen

Kadhalil nan kathaadi aanen

KNKA – 9

கல்லூரி முடிந்து சாயந்திரம் ரெகுலராக பாஸ்கெட் பால் விளையாடுவான் சூர்யா. பிரபாவும் சித்தும் முடியும் போது எல்லாம் விளையாடுவார்கள்.இப்போ சித் வெளிநாட்டில் சென்று மேற்படிப்பு படிப்பதற்கான தேர்வுகளுக்கும்  தயார் செய்வதால் முன்பு போல் விளையாட முடிவதில்லை.

 

அன்று அனைவரும் விளையாட வந்திருந்தார்கள்….

 

என்கூட இந்த வீக் எண்ட் வெளிய வரியா சூர்யா? என்றான் பிரபா.

 

அது… ப்ரோ..என்று இழுத்தான்…. அவனுக்கு சங்கடமாக இருந்தது,  கொஞ்சம் கூட சீனியர் என்ற பந்தா இல்லாமல் பழகுவார்கள் பிரபாவும் சித்தும். அவன் கூப்பிட்டு போக முடியவில்லையே என்று…..

 

பிரபா , உடனே ஜாலியாக , “என்னங்கடா பண்ண போறீங்க அன்னிக்கு?” அவன் தயக்கத்தை வேறு மாதிரி புரிந்துக்கொண்டு , பசங்க ஏதோ விவகாரமாக பிளான் பண்ணிட்டாங்க என்றே நினைத்தான்!

 

“அச்சோ !! அதெல்லலாம் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல சீனியர்.” சனிக்கிழமை மூவி நயிட்டில், இந்த வாரம் ஹிந்தி படமாம்.  ஸ்வாதிக்கு கொஞ்சம் தான் ஹிந்தி தெரியும் ,  அதனால்  புரியாததெல்லாம் என்னை தான்  கேட்பா ,  நானும் வரேன்னு சொல்லிட்டேன் ப்ரோ  என்று பரிதாபமாக சொன்னான்.”

 

அவர்கள் கல்லூரியில், சனிக்கிழமை தோறும் விடுதி மாணவர்களுக்காக  ஏதேனும் ஒரு இந்திய மொழி திரைப்படம் போடுவார்கள்.அதை தான் சொல்கிறான் சூர்யா.

 

“பெரிய வேலை தான் சூர்யா!” என்று சிரித்தான் பிரபா. சித்  வழக்கம் போல எரிச்சலானான். அது என்ன எல்லாம் அவளுக்கு  பிடித்த மாதிரி நடக்கணுமா பெரிய மகாராணி இந்தம்மா, ஆர்டர் போட்டாங்க !!!

ஏன் மேடம்க்கு அப்படி படம் பார்க்கணுமோ!!!  பார்க்கிறேன் இந்த வாரம் எப்படி அவ படம் பார்க்கிறா என்று திட்டம் போட்டான்.

 

அவள் எப்படி இருந்தால் இவனுக்கு என்ன?

 

கல்லூரி ஆரம்பித்து மூன்று மாதம் ஆகியும் பெரிதாக எங்கேயும் வெளியில் சென்றதில்லை ஸ்வாதியும் தோழிகளும்! ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆடிட்டோரியத்தில் போடப்படும் படத்தை கமெண்ட் அடித்துக்கொண்டு என்ஜாய் செய்வார்கள்!!

 

இன்று பிருந்தா வராததால், சூர்யாவுடன் மட்டும் இருந்தாள். ஷங்கர் அவன் லோக்கல் கார்டியன் வீட்டுக்கு சென்று விட்டான். பத்மினி மாதத்திற்கு இரண்டு முறை மட்டும் ஊருக்கு செல்வாள். இன்று சிறிது நேரம் கழித்து வந்து சேர்ந்து கொள்வதாக கூறியிருந்தாள்.

 

நேற்று காலையில், “இந்த வாரம் நா வீட்டுக்கு போகலை டா!” என்றவனை அதிசயமாக பார்த்தான் பிரபா. திங்கட்கிழமை ஏதாவது டெஸ்ட் இருந்தால் கூட தங்காதவன் சித்.

 

“ஏன்டா?”

 

“அம்மாவும் அப்பாவும் எங்கேயோ வெளியூர் போறாங்க, இன்னிக்கு மார்னிங் போய்ட்டு சண்டே தான் வராங்க. மே பி , நான் சண்டே மட்டும் போவேன்….. முதல் பொய்  நண்பனிடம்….. எவ்ளோ சரளமாக வருது?

“ஓ! ஓக்கே டா. அப்போ எங்கேயாவது போவோமா? “

 

“கதையை கெடுத்த! என்ற மைண்ட் வாய்ஸை அமைதி பண்ணி , இல்லைடா இங்கேயே பக்கத்திலே வேணா சும்மா போலாம் ….” என்றான்.

 

சனிக்கிழமை ஏதோதோ பேசி கேஷுவலாக கூட்டி வருவது போல்  மூவி ஹால் பக்கம் கூட்டி வந்தான். ஏழு மணி ஆதலால் , அங்கிருந்த சொற்பமான மஞ்சள் விளக்கு மட்டும் தான். சித் அதன் வாயிலை பார்த்தவாரு அமர்ந்திருந்தான்….. தூரத்தில் சூர்யா  தெரிந்தான்.  நிச்சயமாக பிரபாவை  பார்த்தால் பிளான் மாறிடும் என்று, மச்சான் ஏதாவது வாங்கிட்டு வாடா சாப்பிட என பிரபாவை கிளப்பினான், அவனும் கிளம்பினான்.

 

சித், படம் தொடங்கி சிறிது நேரத்தில் போய் சூர்யாவை கூப்பிட்டு தன் அறை க்கு சென்று விட வேண்டும் என்றே நினைத்தான். அவள் இன்று தனியாக தான் படம் பார்க்கணும்!  அவள் நினைத்த  மாதிரி எதுவும் நடக்க கூடாது என்று மட்டும் தான் நினைத்தான்..

 

சூர்யாவும் , ஸ்வாதியும் வருவது தெரிந்தது. இருட்டி தான் விட்டதே என்றும், நிறைய பேர் படம் பார்க்க வரமாட்டார்கள் என்ற எண்ணத்திலும், ஹாஸ்டலில் போடும் நயிட் பாண்ட் மற்றும் டீ ஷரட் உடனும் வந்திருந்தாள். அவர்கள் இவனை கவனிக்கவில்லை .

 

ஆனால் அந்த மஞ்சள் ஒளியில் ஸ்வாதியை பார்த்த சித்ற்குள் ஏதேதோ பூகம்பம்… அவள் முகத்தில் ஒரு பகுதியில் மட்டும் பட்ட ஒளி , தலைக்கு குளித்திருப்பாள் போல, இடைக்கு கொஞ்சம் மேலே இருந்த முடியை கொஞ்சம் லூஸாக விட்ருந்தாள். இவ்ளோ அழகானவளா என்று வியந்தான்!! அந்த உடையில்  அவள் அவனை மிக மிக பாதித்தாள்.

 

அவர்கள் இருவரும் உள்ளே சென்ற பின், மூச்சை இழுத்து விட்டான். இது போல் அவன் இதுவரை உணர்ந்ததே இல்லை. அவனும் நார்மல் பையன் தானே! அழகான பெண்களை ரசிக்க தான் செய்வான். ஆனால் இந்த உணர்வுகள் புதிதாக இருந்தன…

 

அதே நேரம் பிரபாவும் வர, இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். சித்க்கு , தனிமையில் அந்த  உணர்வை அனுபவிக்க   வேண்டும் போல் இருந்தது.  மறுபடியும் மறுபடியும் ஸ்வாதியே அவன் மனதில் வந்தாள்… அதனால் பிரபாவை பத்மினியுடன் அனுப்பினால், தான் தனியாக இருக்கலாம் என்று நினைத்தான்.

 

“பத்மினி ஊருக்கு போயாச்சா இந்த வாரம்?”

 

“இல்ல இங்க தான், இப்போ வருவா! ஸ்வாதியோட படம் பார்க்க போறலாம்… நல்லா பழகிட்டாங்க ரெண்டு பேரும்……”

 

“உனக்கு நல்ல சான்ஸ் மச்சான்,நீயும் போய் படம் பாரு எல்லாரோடையும் அப்படினு நூல் விட்டு பார்த்தான் சித்.”

 

“அட போடா, எங்கேயாவது உட்கார்ந்து அவ கூட , அவ முகத்தை பார்த்து பேசிட்டு இருந்தா போதுமே!”

 

“அவளை படம் பார்க்க விடாம இங்கேயே புடி , நா ரூம்க்கு போய்டுறேன் என்று இவன் பிளானை செயல் படுத்த அவனுக்கு ஐடியா கொடுத்தான்.”

 

இப்படி எல்லாம் பேசுறது என் நண்பன் தானா என்று தன்னையே கிள்ளி பார்த்து சிரித்தான் பிரபா!

 

“பாவம் மச்சான்னு , ஐடியா குடுத்தா ரொம்ப பேசுற, பத்மினி வந்தா போக சொல்லுறேன் எனவும்……”

 

“தெய்வமே!!”  என்றான் பிரபா.

 

சித்,  தூரத்தில் வரும் பத்மினியை கண் காட்டி விட்டு நகர்ந்தான்…..

Leave a Reply

error: Content is protected !!