Kadhalil nan kathaadi aanen

KNKA – 14

திடீரென்று எழுந்து போன சித்தை பார்த்தாள் ஸ்வாதி! என்ன தான் அவள் அவனை பார்க்கவில்லை என்றாலும், உள்ளுணர்வு அவன் அவ்வவ்போது தன்னை பார்ப்பதை உணர்த்தியது…..

 

அதே போல் இப்போதும் , அவன் ஏதோ டிஸ்டர்பாகி தான் போறான் என்று நிச்சயமாக உணர்ந்தாள்….அடியே லூசு!! அவன் உன்னை மனுஷியாவே மதிக்கிறது  இல்ல, மேடம்  அவனை பத்தி கவலைப்படுறீங்க!!! தூ என்று  துப்பியது மனசு !!!!

 

திரும்பி வந்த சித், தெளிவாக வந்தான்!!!!??? என்ன தான் அவள் ஸ்பெஷல் என்றாலும் , அவள் அருகாமையில் தடுமாறினாலும்  அமைதியாக தான் இருக்க வேண்டும் என்று.

 

சற்று நேரம் பீச்சில் ஆட்டம் போட்டு விட்டு நேரத்தோடு ஹாஸ்டல்க்கு செல்ல வேண்டும் என்பதால், கிளம்பினார்கள்.

 

அவளை வம்பு இழுக்க என்று பிரபா சென்று , பின் சீட்டில் விளையாட்டுக்கு அமர்ந்து கொண்டான்.

 

அதை கவனித்த ஸ்வாதிக்கு ஒரு ஐடியா வந்தது. பிரபாவும், பத்மினியும்  சற்று நேரம் கூட தனியாக செல்லாமல்  தங்களுடனே இருந்ததால், அவர்கள் இருவருக்கும் சற்று தனிமை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவள்,

 

“வாங்க அக்கா, என் கம்பெனி நீங்க தான ?” இன்னிக்கு சீனியரை நம்ம ஒரு வழி பண்ணுவோம் என்று மற்றவர்களுக்கு  சந்தேகம் வராத அளவு அவளுடன் பின் சீட்டில் அமர்ந்தாள்.

 

வாவ்!!! இன்னிக்கு நமக்கு செம ஜாக்பாட்  என்று மகிழ்ந்து போனான் பிரபா. அவன் முகத்தை பார்த்து  பின் சிரிப்புடன் சைகையால் கைகுட்டையை காட்டினாள் பத்மினி….

 

நடுவில் ஏறிய சூர்யா , யாரு நீ ! என்று சிரித்து  ப்ரோ , இவ தூங்கி  வழிந்து உங்க ரெண்டு பேரையும் நசுக்கி , அந்த வலி வேணா பண்ண  வாய்ப்பு இருக்கு!!! எனவும்….ஆஹா அக்காவுக்கு  இன்னும் நல்ல சான்ஸ் கொடுக்கலாம்  என்று நினைத்தவள், இருடா உன்னை அந்த வலி பண்றேன் என்று ஏறி அவனுக்கும் பிருந்தாவிற்கும் நடுவில் அமர்ந்து அவனை கிள்ளினாள்…..

 

அவ்ளோ தான் பின்னால் அமர்ந்து இருந்த பிரபா , மானசீகமாக ஸ்வாதிக்கு நன்றிகள் பல கூறி சந்தோஷத்தில் திளைத்தான்…. அவன் முகத்தை பார்த்த பத்மினிக்கு வெட்கமாக இருந்தது. அய்யோ !!! இவன் என்ன இப்படி ஆயிட்டான் என்று….

 

ட்ரைவிங் சீட்டில் இருந்த சித், கண்ணாடி வழியே “என்ஜாய் மச்சான்” என்று கண் சிமிட்டி சிரித்தான். சற்று நேரத்திலே வழக்கம் போல் கண் அயர்ந்து விட்டாள் ஸ்வாதி.

 

ஒரு டீ பிரேக்க்கு பிறகு  தான் ஓட்டுவதாக சூர்யா சொல்லவும், ஷங்கர் முன் சீட்டில் அமர்ந்திருந்தால் , சித் சூர்யாவின் இடத்திற்கு தான் வர வேண்டும்… ஷங்கரை இடம் மாறச் சொன்னால் , ஏதோ பெண்கள் பக்கத்தில் அவன் அமரமாட்டேன் என்று பிகு பண்ணுவது போல் தோன்றும்….

 

ஒன்றும் சொல்லாமல் , வந்து அமர்ந்தான் சித். அவள் தூங்குவது ஒன்று தான் இப்போ நல்ல விஷயம் என்று சொல்லிக்கொண்டான்.

 

பின்னால், முதல் முறையாக  பத்மினியின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்ட பிரபா அவளை பார்த்து மென்மையாக சிரித்தான். அவள் விரல்களை வருடி விட்டான். வெட்கத்தில் கையை இழுக்க அவள் செய்த முயற்சி எல்லாம் வீண் தான். கண்களாலே அவளை அமைதிப்படுத்தினான்.. சற்று நேரம் அமைதியாக இருந்தவன், மெதுவாக ஒரு கையை அவள் முதுகின் வழியே விட்டு  மெதுவாக தயங்கி தயங்கி இடுப்பில் கை வைக்கவும் , பட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்! தப்பு எண்ணம் இருந்தால் தானே கண்ணை பார்க்க முடியாது, பிரபா அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான்… அவனோடு சேர்த்து அவளை  அணைத்தவன் வேறெதுவும் செய்யவில்லை . அந்த நிமிடங்களை ரசித்தபடி மௌனமாக வந்தனர் இருவரும்.

 

ஸ்வாதியின் அருகில் வந்து அமர்ந்த சித், அவள் மேல்  கையோ  காலோ படக்கூடாது என்று ஜாக்கிரதையாக அமர்ந்திருந்தான். பிருந்தாவும் கூட களைப்பினால் உறக்கத்தில் இருந்தாள். சற்று நேரத்தில் வண்டியின் வேகத்தால் சரிந்து சித்துவின் மேல் சாய்ந்தாள் ஸ்வாதி….

 

அவள் அவன் மேல் பட , ஒன்றும் செய்யமுடியாமல் விரைத்து அமர்ந்திருந்தான் சித். மெதுவாக அவளை நகர்த்தி பார்த்தான், அவள் மொத்தமாக  அவன் மடியிலே சாய்ந்து விட்டாள்..

 

அவள் தலை ஆடிக் கொண்டே இருக்க , அதை பிடித்தே ஆக வேண்டிய அவசியம், மெதுவாக அவள் தலையில் கை வைத்து பிடித்து கொண்டவனுக்கு, ஏதேதோ ஒரு  சந்தோஷம், சொல்ல தெரியவில்லை அவனுக்கு…

 

இன்னொன்றையும்  உணர்ந்தான்!!!!! கொஞ்ச நாட்களாகவே இறுக்கமாக இருந்த மனசு , இந்த நொடி  ஏதோ பாரம் விலகியது போல  குதூகலமானது. ஏதோ அவனுக்கு இருந்த பெரிய பிரச்சனைகள் எல்லாம் விலகியது  போல்  “எவரித்திங் இஸ் பைன்”! என்று  உணர்ந்தான்.

 

“என்னென்னவோ பண்ற என்னை”! என்று செல்லமாக புலம்பி கொண்டான்.

 

இன்னும் சற்று நேரத்தில் , இறங்கி விடுவோம் என்ற நிலையில் அவளை கஷ்டப்பட்டு நிமிர்த்தி,பிருந்தாவின் பக்கம் சாய்த்து விட்டான்.

 

கார் நின்றவுடன் முதல் ஆளாக இறங்கி விட்டான் சித்.

 

நடந்த எதுவும் தெரியாமல், அனைவரும் அவரவர் ரூம்க்கு செல்ல முயலுகையில், சித் மனசுக்குள் “என்ன பாரு ஸ்வாதி” என்று திரும்ப திரும்ப சொல்ல,

 

அவன் ஏதோ டென்ஷனா இருந்தானே, இப்போ சரியா ஆய்ட்டானா, பார்ப்போமா என்ற அலைபாய்ந்து கொண்டு இருந்தவளை, எண்ண அலைகள் அடைந்தது போல், சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் பார்க்க,

 

அதற்காகவே காத்திருந்தவன்,அவள் கண்ணோடு கண் நோக்கி, மலர்ந்த முகத்துடன் புன்னகைத்தான்…

 

நம்மளையா பார்த்து சிரிக்கிறான், கண்டிப்பா இருக்காது என்று முகத்தை சுருக்கிய படி  பின்னால் திரும்பி, வேற யாரும் வர்றாங்களோ? என்று பார்த்தாள்.

 

அவளின் செய்கையில் “சோ க்யூட்” என்றபடி ,குனிந்து  போனை பார்ப்பதை போல் அடக்கமாட்டாமல் சிரித்தான் சித்.

 

தன்னை தான் பார்த்து சிரிக்கிறான் என்று புரிந்த பின், இவரு சிரிச்சா, நானும் உடனே சிரிக்கனுமா? இவ்ளோ நாள் அவர் பண்ணார்ல, இப்போ என் டர்ன் என்று நினைத்து கொண்டவள், முகத்தை திருப்பிக்கொண்டாள்.

 

சண்டைப்போட ட்ரை பண்றா பாரேன் என்று  செல்லமாக சொல்லிக்கொண்டான்…

 

ரூமில், ஏன்டா சித்!!! நா ஸ்மைலிங் பேஸா இருக்கிறது ஒரு நியாயம், நீ  என்னடா இப்படி எல்இடி லைட் மாதிரி பிரகாசமாக இருக்க??? என்று ஓட்டினான்…..

 

அவ்ளோ ஒப்பனா வா தெரியுது நம்ம சந்தோஷம் என்று நினைத்தவன் அதை மறைத்து, “என்ன மச்சி  செம ஹாப்பி யா??”

 

ம்ம்…. என்று வெட்க சிரிப்பு சிரித்தவன், ஸ்வாதிக்கு ஏதோ  டௌட் இருந்திருக்கு, “அதான் சான்ஸ் எவ்ளோ நாச்சுரலா கிரியேட் பண்ணிட்டா… ரொம்ப நல்ல பொண்ணு டா!!”

 

“ஆமா ஆமா!!! இன்னிக்கி ரொம்ப நல்ல பொண்ணனு தானே சொல்லணும் என்ற சிரித்தான்!!!”

 

“டேய்!! இன்னிக்கு எனக்கு ஃபேவர் பண்ணதால சொல்லலை டா……”

 

“நானும் அவ கெட்ட பொண்ணுனு சொல்லவே இல்லையே டா…. என்று இடையிட்டான்!”

 

“நீயும் நானும் மட்டும் இருந்தா, உனக்கு ஒரு மாதிரியா இருக்குமேனு நா அவ கிட்ட பேச மாட்டேன், அது அவளுக்கும் தெரியும்…”

 

“ஆனாலும் ஒரு தடவை கூட, நாங்க எல்லாரும் இருக்க அப்போ, இப்ப மட்டும் ஏன் என்கிட்ட பேசறீங்கனு கேட்டதே இல்லை. அவளுக்கு வருத்தம் இல்லாமையா இருக்கும்? ஆனா சின்னதா கூட காட்டிகிட்டதே இல்ல டா, எப்போதும் ஒரே மாதிரி தான் பேசுவா…..”

 

“நா இருந்தா பரவாயில்லை , இனிமேல் நீ பேசு, எனக்கு ஒன்னும் இல்ல!”

 

“சே!! நா அதுக்காக மட்டும் சொல்லலை  டா, உங்க இரண்டு பேருக்கும் என்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்னு தெரியலை,ஆனா நீ இன்னிக்கு வரைக்கும் அந்த பொண்ணை இக்னோர் பண்றனு” எனக்கு தெரியும்,

(அது நேத்து வரைக்கும் தான் மச்சான். இன்னிக்கு தான் என்னை  கதற விட்டுட்டாளே டா……..என்றது சித்துவின் மைண்ட் வாய்ஸ்!!)

 

“நீ இன்னிக்கு கவனிச்சியா தெரியலை”,

 

(அவளை மட்டும் தான் டா கவனிச்சேன்)

 

“அவ எல்லாரையும் அவங் அவங்களுக்கு தகுந்த மாதிரி பேசி, குரூப்பே ஜாலியா இருக்க வைச்சுடுவா….” அதனால் நீ …….

 

(முதல்ல அவளை என்னை பார்த்து சிரிக்க சொல்லுடா…..)

 

“போதும் டா பிரபா, நா இனிமே அவ கிட்ட பேச ட்ரை பண்றேன்…”

 

“நிஜமாவா??  குட்….”

 

“பாரு இன்னிக்கு ஒரு நாள் வெளியே வந்ததுக்கே நீ எவ்ளோ ரெபிரஷ் ஆய்ட்ட , இனிமே உனக்கு பிரீயா இருக்க அப்போ கண்டிப்பா ஜாய்ன் பண்ணிக்கோ டா….”

 

“ம்ம்..பார்ப்போம் டா”

 

“குட்நைட் என்ற படி படுத்தனர்”

 

படுத்தவனுக்கு அவன் மடியில் தூங்கிய ஸ்வாதியின் ஸ்பரிசம் நினைவில் வந்தது…

 

அவளை அப்படி மடியிலேயே வைத்திருந்தது கொஞ்சம் கூட அவனுக்கு கஷ்டமாகவே தோணவில்லை….

 

யாரோ ஒரு பெண்ணை நான் ஏன் என் மடியில படுக்க வைச்சுக்கணும், அப்படி தோன்றாமல், அவள் தூக்கம் கலையாத மாதிரி வைச்சுக்க தான 

தோணியது!!!! அவன் மடியில் இருந்த மாதிரி, அவனோடவே அவளை வைத்துக்கொள்ள தோன்றியது முதல் முறையாக!!

 

ஸ்வாதி!ஸ்வாதி! என்று மனம் ஜெபித்தது!!!!