Kandeepanin Kanavu – 19

Kandeepanin Kanavu – 19

                                                காண்டீபனின் கனவு 19

 

 மலை உச்சிக்கு மூவரும் வந்ததும், அதன் உச்சியிலிருந்து சுற்றிப் பார்த்தனர். தாங்கள் சென்ற பிரம்ம மலை நன்றாகத் தெரிந்தது.

“அது தான் பிரம்ம மலை சாம்.” என்றான் வருண்.

“விட்டுட்டு போயிட்டு இப்போ மட்டும் காட்டுரீங்களாக்கும். ஹும்ம்..” அழகு காட்டினாள்.

“இல்ல சாம். உண்மையிலேயே அது ரொம்ப கஷ்டம். ஜஸ்ட் மிஸ்ல நாங்க உயிர் பொழச்சோம். என்னோட கனவால.” வீரா மனது கனவுகளை நினைக்க ஆரம்பித்தது.

“சரி சரி. இங்க என்ன இருக்கு?” அவள் அலுக்க,

“தெரியல, இந்த நீலக்கல்லும், நீலத் தாமரையும் இங்க எடுத்துட்டு வரணும். அதுக்கப்றம் இங்க என்ன நடக்கும்னு தெரியல.” கண்களை ஆங்காங்கே சுழல விட்டான் வீரா.

“உன் கனவுல எதுவும் வரலையா வீர்?” வருண் கேட்க,

“எங்கயோ…” அவன் பேச ஆரம்பிக்க பூமி நகர்ந்தது.

“யே….ஏ…..” மூவரும் அலற, காற்றடிக்க ஆரம்பித்தது, வீராவின் கையில் இருந்த மலர் பறந்தது.

மூவரின் நிலமும் பிளவு பட, அருகில் நின்று கொண்டிருந்த மூவரும் பத்தடி தூரத்தில் இருந்தனர். தாமரை பறந்து சம்ரக்க்ஷாவின் நிலத்தில் விழ,

“ஹே சாம்… அதை எடுத்து கைல பத்திரமா வெச்சுக்கோ.” கத்தினான் வீர்.

“ஓகே ஓகே…!” அவளும் பதிலுக்குக் கத்த, மூவரும் தடுமாறிக் கொண்டிருந்தனர்.

“வீர். பயமா இருக்கு.” கையில் மலரை எடுத்துக் கொண்டவள், கண்ணை மூடிக் கொண்டு இருந்தாள்.

“பயப்படாத, கண்டிப்பா நாம எல்லாரும் சேஃப் ஆ தான் இருப்போம். இப்போ நாம இருக்கற இந்த லேன்ட் கீழ் போகும். சோ பயப்படாம இருங்க.” அவன் கனவில் கண்டதைக் கூறினான்.

“என்னது..கீழ விழப் போறோமா!” வருண் கேட்க,

“எஸ்….” சொல்லிகொண்டிருக்க வருண் இருந்த பூமிப் தனியாக பிளந்து வேகமாக உள்ளே சென்றது.

“ஆ……!” என்ற அவனது குரல், சத்தமாக ஆரம்பித்து குறைந்து கொண்டே போனது.

அவனை அடுத்து வீரா வின் பூமியும், சம்ரக்க்ஷாவின் பூமியும் ஒரே நேரத்தில் உள்ளே செல்ல

“சாம் பயபடாம இரு.” கத்திக் கொண்டே கீழே சென்றான்.

போகப் போக இருட்டாகிக் கொண்டே சென்றது. நீண்ட நேரத்திற்குப் பிறகு ‘தொப்’ என கீழே விழுந்தனர். ஆனால் வலி எதுவும் இல்லை. காயம் ஏற்படவில்லை.

வீராவும், சாமும் ஒரு இடத்தில் இருக்க, தூரத்திலிருந்து வந்து கொண்டிருந்தான் வருண்.

வீரா தன் கையிலிருந்த கல்லைப் பார்க்க, அது நினைத்தபடியே காணவில்லை. கனவில் வந்ததைப் போல, சாமிடம் அது இருக்கும் என நினைத்து அவளைக் கேட்டான்.

“சாம், உங்கிட்ட கல், தாமரை ரெண்டும் இருக்கா?” எனவும்,

“ஆமா வீர். நாம உள்ளே போக ஆரம்பிக்கும் போது என் கையில வந்து விழுந்தது.” அவன் கையில் கொடுத்தாள்.

வருணும் அதற்குள் வந்து சேர,  மூவரும் சேர்ந்து சற்று தூரம் நடந்து செல்ல,

“இங்க என்ன ஒண்ணுமே இல்லையே!” சாம் கேட்க,

“உன் கனவுல எதுவும் வரலையா?” வருண் நிறுத்தினான்.

“சரியா எதுவும் வரல வருண். இப்படி எங்கயோ வந்து விழுந்தது தெரிஞ்சது. அப்பராம் ஒரு பெரிய நீளமான யாரோ கொடு போட்ட மாதிரி இருந்ததுச்சு. அது என்னனு தெரியல.”

“நீளமான கோடா?” குழப்பமாகக் கேட்க

“ஆமா, ஆனா இது வரை அது கண்ணுல படல.” அவன் சொன்ன மாத்திரத்தில் அவன் எதவையோ மிதித்து விட, கீழே பார்த்தான்.

யாரோ வரைவது போல அதிவேகமாக அந்தக் கொடு வெளியே தெரிய ஆரம்பித்தது. சர சர வென அந்த வெற்றிடம் முழுதும் கோடுகளும் வளைவுகளும் மண்ணில் சத்தத்தோடு ஏற்பட. மூவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர்.

என்ன நடக்கிறது என ஒன்றும் புரியாமல் திகைத்தனர்.

புழுதியும் சத்தமும் எங்கும் எதிரொலிக்க, சற்று நேரத்தில் இரண்டும் நின்றும் போனது.

அந்த இடத்தில் ஏதோ ஒன்று இருப்பதைக் காட்டியது. என்னவென்று புரியவில்லை.

“வருண் உன்னோட டிரோன் எடு. அதை மேலே பறக்கவிட்டு இங்க என்ன வரஞ்சிருக்குன்னு பார்ப்போம்.” அவசரப் படுத்தினான் வீரா.

வருண் உடனே தனது பையிலிருந்து டிரோன் கேமராவை எடுத்தான். அதை ஆன் செய்து பறக்கவிட்டு ரிமோட் மூலம் இயக்கினான்.

ஒரு பதினைத்து நிமிடம் பறந்து அந்த இடம் முழுதும் படமெடுத்துக் காட்டியது. அந்தப் படத்தைப் பார்த்ததும் புரிந்துவிட்டது. அது ஸ்ரீசக்கரம்.  கோலம் போடுவது போல அதிவேகமாக ஸ்ரீ சக்கரத்தை வரைந்திருந்தது. இப்போது இவர்கள் நின்று கொண்டிருப்பது அந்த கோலத்தின் மையைப் புள்ளியில்.

மிகவும் கடினமான அந்தக் கோலத்தை இப்போது அவர்கள் கடந்து செல்லவேண்டும்.

 

 

அந்த வெட்டவெளி திடீரென இப்போது கருமேகங்கள் சூழ்ந்து இருள் கவ்வத் தொடங்கியது.

“ஹா ஹா ஹா. ஹா……” இடி முழங்கியது போல ஒரு பெரும் சத்தத்துடன் சிரிப்பொலி கேட்டது.

அந்தச் சிரிப்பொலிக்கே பயந்து நடுங்கினாள் சம்ரக்க்ஷா. வீராவின் பின்னால் ஒடுங்கினாள். வீரா அவளை தன்னோடு சேர்த்து அணைத்து நின்றான்.

“காண்டீபா….!” கரகரத்த ஒரு குரல் கேட்க, அவன் மேலேயே மயங்கியே விழுந்தாள்.

“சாம்..சாம்” அவளைப் பிடித்து எழுப்பினான்.

திரும்பிப் பார்க்க வருணைக் காணவில்லை.

“வருண்…” கத்தினான் வீரா.

“இங்கிருந்து முதலில் நீயும் இவளும் தப்பிக்க முயற்சி செய். அவனைத் தேடி பலனில்லை. அவனே கடைசியில் வந்து சேருவான்.” அந்தக் குரல் அவனை மிரட்ட,

“நீ யார். முதல்ல என் முன்னாடி வா. உனக்கு என்ன வேணும்?” சாம்-ஐ ஒரு கையில் பிடித்துக் கொண்டு ஆணையிட்டான்.

“ஹா ஹா… கண்டிப்பாக வருவேன். உன் கையிலிருக்கும் அந்த நீலக் கல் எனக்கு வேண்டும். அதைக் கொடுத்துவிட்டு இங்கிருந்து ஓடு. உனக்கு உயிர் பிச்சைத் தருகிறேன்” மீண்டும் மிரட்டியது.

“என்னைக் கொல்ல உன்னால முடியாது.” அவளைக் கீழே விட்டு எழுந்து நின்றான்.

“அப்படியென்றால் என்னுடன் மோத தயாராகு. முதலில் இந்த சக்கரத்தில் இருக்கும் முக்கோணங்களை தாண்டி வா. பிறகு நான் நேரில் வருகிறேன்.”

சம்ரக்ஷாவை தன் மேல் சாய்த்துக் கொண்டு கிளம்பினான். முதல் அடி எடுத்து வைக்க முயல,

“ஞாபகம் வைத்துக்கொள். இதில் ஒரு முக்கோணம் இடதுபக்கம் வர வேண்டும், ஒரு முக்கோணம் வலது பக்கம் கடக்க வேண்டும். பெரிய முக்கோணத்தை நீ கடக்கும் நேரமும், சிறிய முக்கோனத்தைக் கடக்கும் நேரமும் இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். இதைக் கடந்து வா. உனக்கு நான் தெரிவேன். ஒரு வேளை நீ ஒரு முக்கோணத்தை தவறாக கடந்தாலும் மீண்டும் மையத்திற்கு வந்து விடுவாய்.”

சொன்னதை ஒரு முறை நன்றாகக் கிரகித்துக் கொண்டு, தன் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு, நீலக்கல்லையும் தாமரையையும் பத்திரப்படுத்தினான்.

பையைத் தோளில் மாட்டிக் கொண்டு அவளையும் தன் மேல் சாய்த்துக் கொண்டு முதல் முக்கோணத்தில் அடியெடுத்து வைத்தான்.

அவனுக்கு சக்கரங்களைப் பற்றி அவனது தாத்தா சிறு வயதில் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.

‘எப்போதும் வலது பக்கம் தான் முதல்ல’ அவனது தாத்தா அதை வரைந்து காட்டும்போது சொல்வது நினைவிற்கு வர, முதல் முக்கோணத்தை வலது பக்கமாகக் கடக்க நினைத்தான்.

நேரமும் இங்கே முக்கியம் என நினைத்தவன், சிறிய முக்கோணத்தை வேகமாகக் கடந்து விட்டால் , பெரியதைக் கடக்க நேரம் இருக்காது என்று கணித்தான்.

வேண்டுமென்றே மிகவும் பொறுமையாக அவளையும் சுமந்து கொண்டு வலப் புறம் சுற்றி வந்து இரண்டாம் முக்கோணத்தின் முன் நின்றான்.

முதல் முக்கோணம் முடிந்ததன் அடையாளமாக அந்தக் கோடு அழிந்தது. அதனோடு அவன் பின்னால் ஒரு சிறு மூட்டை தோன்றியது. அதில் சிவப்பும் பச்சையுமான கற்கள் ஜொலித்தன. அதை அவன் எடுத்துக் கொள்ளாமலே அவனைப் பின்தொடர்ந்தது.

அடுத்து இரண்டாவது. ஒவ்வொரு முக்கோணத்தையும் ஒவ்வொரு தேவதை காவல் காப்பதாக சொல்லியிருந்தார் தாத்தா.

அந்த தேவதைகளை எல்லாம் மனதில் நினைத்து வேண்டினான்.

‘என் கூட இருந்து நீங்க எல்லாரும் இதைக் கடக்க உதவனும்’ என வேண்டிக்கொண்டான்.

அடுத்த முக்கோணம் இடமா வலமா என யோசித்த போது அவனுடைய கை தன்னால் இடது பக்கம் இழுக்கப்பட, இடது காலை முன் வைத்துச் சென்றான்.

சாம் வேறு அவனுடன் கஷ்டப்படுவது தெரிய, அங்கேயே நின்று அவளை எழுப்பினான்.

“சாம்…சாம்… எழுந்திரு” அவளது கன்னத்தைப் பிடித்து ஆட்டினான்.

அவளோ மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தாள். அவனுக்குள் சிறிது பயம் வர, கையில் இருந்த தண்ணீர் பாட்டிலால் அவளது முகத்தில் நீரைத் தெளிக்க,  அப்போதும் அசைவில்லை.

பயத்தில் உறைந்து விட்டாள் என்பதை உணர்ந்தான். இதற்கு வேறு என்ன வழி என யோசிக்க, நேரம் வேறு சென்று கொண்டிருந்தது. அவளை உடனே எழுப்ப வேண்டும் என்ற வேகத்தில், தன் மூச்சை அவளுக்குக் கொடுத்து தெளிய வைப்பதே சரி என்றுனர்ந்தான்.

அவளை தன் மடியில் கிடத்தி, அவளது அழகிய சிவந்து உதடுகளை தன் இரு கையாலும் பிரித்து , தன்னுடைய உதட்டை அதில் ஒற்றினான். மூச்சை இழுத்து அவளுக்குப் புகுத்தினான்.

இரு முறை செய்த பிறகும், அவளிடம் அசைவில்லை. மீண்டும் இப்போது முழு வேகத்துடன் அவள் கன்னத்தைப் பிடித்து உதட்டு வழியே உயிரைப்பாய்ச்சினான்.

ஒரு கட்டத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதை மறந்து, அவளது உதட்டில் லயித்தான்.

அவளும் விழித்துக் கொண்டாள். ஆனால் அவன் தன்னை முத்தமிடுவதை உணர்ந்து, அவனை தள்ளிவிட,

தள்ளிச் சென்று விழுந்தான்.

“வீர்…!” கண்கள் வெறிக்க அவனைப் பார்த்தாள்.

“யப்பா!! எழுந்துட்டியா…?” மனதில் எழுந்த சலனத்தை மறைத்து, இப்போது இருந்த சூழலை நினைத்துக் கொண்டான்.

“என்ன.. என்ன பண்ண..இப்போ!” அவள் அதிலேயே நிற்க,

“ம்ம் உன் வாய்ல வயலின் வாசிச்சிட்டு இருந்தேன். இருக்கற நிலைமை தெரியாம பேசாத, உன்னை எவ்வளோ நேரம் அப்படியே தூக்கிட்டு போறது நான். வா பேசாம..டைம் இல்ல..” அவளை மேற்கொண்டு பேசவிடாமல் கையைப் பிடித்துக் கொண்டு இடது புறமாக அந்த முக்கோனத்தைக் கடக்க எத்தனித்தான்.

அவன் இழுப்புக்கு அவளும் சென்றாள்.

“இந்த மொத்த ஸ்ரீசக்கரத்தையும் நாம இப்போ கடக்கணும். அதுக்கு அப்றம் தான் நாம இங்கிருந்து போக முடியும். ஒன்னு கடந்திருக்கோம். இன்னும் பதிமூன்று இருக்கு.” அவளுக்கு அங்கு நடந்ததை விளக்க,

“அப்போ அது யாருன்னு இனிமே தான் தெரியுமா?” முந்தைய நிலையை ஒரு மறக்க,

“இருந்தாலும் நீ…” ஆரம்பிக்க,

“இது ஒரு க்ளூ மாதிரி. இந்த முக்கோணம் தாண்டினா தான் அடுத்து என்ன பண்ணனும்னு அது சொல்லும்.” அவனும் அவளது சிந்தையைக் கலைக்க முயன்று கொண்டிருந்தான்.

அவர்கள் பின்னால் வந்த அந்த கற்களின் முடிச்சு அவர்களுக்கு முன்னால் சென்றது. உடனே நேரத்தைப் பார்த்தவன், அவளது கையைப் பிடித்துக் கொண்டு ஒரு நொடியில் அந்த முக்கோணத்திலிருந்து முடித்து வெளியே வந்தான்.

அதுவும் ஒளிர்ந்து மறைந்தது. இப்போது அந்த சிறு மூட்டையோடு சேர்ந்து ஒரு அம்பு வந்து சேர்ந்து கொண்டது.

 

 

Leave a Reply

error: Content is protected !!