Thendral

398 POSTS 40 COMMENTS

ANIMA11

முந்தைய தின உரசல்களுக்குப் பிறகு… கோபத்துடன் சென்றிருந்தாலும்… அணிமா மலருடைய நடவடிக்கைகளை மறைந்திருந்து கண்காணிக்குமாறு தமிழை அனுப்பியிருந்தான் ஈஸ்வர்…

‘அதெல்லாம் முடியாது’ என்று முதலில் சுணங்கியவன்… ஈஸ்வரின் முறைப்பில் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டான்…

அன்று காலை மாம்பலத்திலிருந்து அவளைப் பின் தொடர்ந்தவன்… அவள் OMR அலுவலகத்திற்குள்  நுழைந்த பிறகு… அந்த இடத்திற்கு அருகில் பைக்கை நிறுத்தி விட்டு… அங்கேயே நின்றிருந்தான்… உள்ளுக்குள்ளே மலரை வறுத்து எடுத்தவாறே…

அவள் மதியமே… தனியாக வந்து அந்தக் கால் டாக்ஸியில் ஏறியவுடன்… அவசரமாக ஈஸ்வரிடம் அந்தத் தகவலை தெரிவித்துவிட்டு அவளைப் பின் தொடர்ந்தான் தமிழ்…

அதுவும் மலர் அந்த இரண்டாம் தர கடற்கரை விடுதியினுள் நுழைந்தவுடன் மிகவும் கடுப்பானவன்… அதையும் ஈஸ்வரிடம் சொல்லிவிட்டான்…

ஈஸ்வரால் மலரைத் தவறாக எண்ண முடியவில்லை… எதோ காரணத்தினால்… யாருடைய மிரட்டலுக்கோ பயந்துதான் அவள் அங்கே சென்றிருப்பாள் என்பதை மனதார நம்பியவன்… படப் பிடிப்பிலிருந்து பாதியிலேயே கிளம்பி அங்கே வந்தான்…

உள்ளே செல்ல அருவருத்து… அந்த விடுதியின் அருகிலேயே… ஈஸ்வர் வரும் வரை காத்திருந்த தமிழ்… அவன் அங்கே வந்தவுடன்… “அண்ணா! எனக்கு என்னவோ நீங்க இங்கேயெல்லாம் நுழைவது சரியாக படல… உள்ள போகாதீங்க” என்று ஈஸ்வரை தடுக்கவும்…

தமிழ் பேசிய எதையும் காதில் வாங்காமல்… “ப்ச்… ஷூட்டிங் ல பாதில வந்துட்டேன்… நீ உடனே போய் பிரச்சினை ஆகம டீல் பண்ணிக்கோ… நான் என்னனு பார்த்துட்டு வந்துடறேன்…” என்று அவனை வற்புறுத்தி அங்கிருந்து அனுப்பிவிட்டு… அந்த விடுதிக்குள் சென்றான் ஈஸ்வர்…

சரியாக அவன் உள்ளே நுழைய… அந்தப் பெண்கள் இருவரும் மலரை… அந்த அறையை நோக்கி இழுத்துச் செல்வதை பார்த்தவன்… அவர்களைத் தொடர… அதற்குள் அவர்கள் மலரை உள்ளே தள்ளி கதவைப் பூட்டினர்…

அவர்களை நோக்கி…  அவன் வேகமாக வருவதைக் கவனித்த அந்தப் பெண்கள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்…

அந்த அறையினுள்  யாராவது இருப்பார்களோ என்ற எண்ணம் தாக்க…  அந்த பெண்களைத் துரத்துவதைக் காட்டிலும் மலரைக் காப்பாற்றுவதே முக்கியம் எனக் கருதியவன்… அந்த அறையை நோக்கிச் சென்றான்…

அந்த அறை பூட்டப் படவில்லை… ஆனால் வெளிப்புறமாகத் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்து… 

கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றவன்… அங்கே இருந்த சோபாவில்… மயக்க நிலையில்… சரிந்து கிடந்த மலரை… அவளது கையைப் பற்றி தூக்க முயல…

முதலில் அவன் யாரோ ஒருவன் என்ற எண்ணத்தில்… அவளது பெண்மை விழித்துக்கொள்ள… தற்காப்பு உணர்ச்சியில் அவனது கையை இறுக்கப் பற்றியவள்…

“மலர்! நான்தான் மா! ஹகூனா மத்தாத்தா” என்று ஆதரவாக ஒலித்த அவனது குரல் தந்த நிம்மதியில்… அடுத்த நொடியே… அவளது கைகள் மெதுவாகத் தளர்ந்தன…

மனதினில் பரவிய நிம்மதியுடன்… அவளது இடையில் கையை கொடுத்து… ஈஸ்வர் அவளைத் தூக்க எத்தனிக்க… உடல் விறைக்க… அவனைத் தடுத்தவள்… குளறலான குரலில்… “இட்ஸ் ஓகே… மெதுவா நானாகவே வரேன்… ப்ளீஸ்!” என்றவாறு… மிகவும் முயன்று… மலர் எழுந்து நிற்க…

“இந்த மாதிரி இடத்துக்கெல்லாம்… இப்படி தனியா வந்தது உனக்குத் தப்பா தெரியல… இப்படி வந்து மாட்டிகிட்டது பயமா இல்ல… ஆனால் நான் உனக்கு உதவி செய்ய வந்தால்… உனக்கு அன் ஈஸியா இருக்கு இல்ல” கோபத்துடன் சொல்லிக்கொண்டே…  அவளுடைய கையை ஈஸ்வர் பிடிக்க… அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு பின்பு… கையை துப்பட்டாவினால் மூடிக்கொண்டாள் மலர்…

கோபம் மறைந்து சிரிப்பே வந்துவிட்டது ஈஸ்வருக்கு… “நீ எதை மறைக்க நினைக்கிறயோ… அது எனக்கு ஏற்கனவே தெரிஞ்சு போச்சுடி!” என்று நினைத்தவன்…  அந்த நிலையிலும்… விழிப்புடன் செயல்படும் அவளது அறிவைக் கண்டு… மனதிற்குள் அவளை மெச்சிக் கொண்டான்…

பின்பு அவளை கை தாங்கலாக அழைத்து வந்து… அவனது காரில் உட்கார வைத்தவன்… சுற்றும் முற்றும் பார்க்க… அந்த இடம் முழுதும் வெறிச்சோடிக் கிடந்தது…

இது போன்ற நிலை அங்கே சகஜம் என்பதாலோ இல்லை ஈஸ்வரை கண்டுகொண்டதாலோ… அங்கே  இருந்த காவலாளி… அவனைத் தடுக்க முற்படவில்லை…

வண்டியைக் கிளப்பிக்கொண்டு… ECR சாலையில் ஓட்டி வந்தவன்… ‘இந்த நிலையில் அவளை எங்கே அழைத்துச் செல்வது’ என்று குழம்பியவனாக… பின்பு ஒரு முடிவிற்கு வந்து… வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு… கைப்பேசியில் ஜெய்யை அழைத்தான்…

எதிர்புறம் அவன் அழைப்பை ஏற்றதும்… “ஜெய் உங்களால… ECR வரைக்கும் கொஞ்சம் வர முடியுமா… ஒரு முக்கியமான விஷயம்… இப்ப எதுவும் கேட்காதீங்க… நேரில் சொல்றேன்…” என்று… அவன் இருக்கும் இடத்தையும் குறிப்பிட்டு ஈஸ்வர் சொல்ல… ஜெய் வருவதாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்தான்…

அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே அங்கே வந்து சேர்ந்த ஜெய்… பைக்கை நிறுத்திவிட்டு… ஈஸ்வரின் பார்ச்யூனரின் அருகில் வரவும்… அதில் மலரைக் கண்டு ஒரு நொடி திடுக்கிட்டான்…

அவன் அங்கே வருவதற்குள்… முழுவதுமாக மயக்க நிலைக்குச் சென்றிருந்தாள் மலர்…

கார் இருக்கையை நன்றாக சாய்த்து… வாகாக அவளது துப்பட்டாவைப் போர்த்தி… அதில் சாய்ந்தவாறு அவளை படுக்க வைத்திருந்தான் ஈஸ்வர்…

ஜெய்யைக் கண்டு காரிலிருந்து இறங்கி வந்த ஈஸ்வரை… அவன் ஒரு புரியாத பார்வை பார்த்து வைக்க…  

காரின் உள்ளே வந்து அமருமாறு ஜெய்க்கு ஜாடை காட்டிவிட்டு உள்ளே சென்று அமர்ந்த ஈஸ்வர்… இரண்டு நாட்களாக நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தான்… ஜீவிதா சொன்ன தகவல்கள் உட்பட…

அதுவரை அவன் சொன்னவற்றை அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்த ஜெய்… “கிட்ட தட்ட ஒரு மாசமா நானும்… ரொம்பவே பிசி… இவளை… கொஞ்சம் கவனிச்சு இருக்கணும்… தாத்தா பாட்டி கூட என்கிட்ட ஒண்ணுமே சொல்லல…”

“ப்ச்… அவங்களைச் சொல்லியும் பயன் இல்லை…”

“ஏன்னா… நான் வீட்டிலே இருக்கும் நேரமும் குறைஞ்சு போச்சு… நான் வீட்டுக்கு போயே மூணு நாள் ஆச்சுண்ணா…”

“நிறைய கேஸ்… கவனிக்க வேண்டியதா இருக்கு… கொலை கேஸ்…  குழந்தைகள் கடத்தல் கேஸ் எல்லாம் வேற இழுத்துட்டே இருக்கு…”

“அந்த குழந்தைகளின் அப்பா அம்மாவை பார்க்கவே பரிதாபமா இருக்கு…”

“இதுல இவ வேற… புரியாமல் படுத்தி எடுக்கறா” என்று அவனது ஆதங்கம் அனைத்தையும் கொட்டித் தீர்த்தான்…

“பரவாயில்லை விடுங்க ஜெய்… அதுதான் ஆபத்திலிருந்து இப்போதைக்கு இவளை காப்பாத்திட்டோமே…”

“இனிமேல் என்ன செய்யலாம்னு யோசிப்போம்…” என்ற ஈஸ்வர்…

இப்போதைக்கு இவளை எங்கே அழைத்துப் போகலாம்? இந்த நிலைமையில் வீட்டுக்குப் போனால்… எல்லோரும் கேட்கும் கேள்விக்கெல்லாம் எப்படி பதில் சொல்வது… அதனாலதான் உங்களைக் கூப்பிட்டேன்” என்று முடித்தான்…

“நீங்க சொல்றதும் சரிதான் அண்ணா” என்று கைப்பேசியால் நெற்றியில் தட்டிக்கொண்டே சில நொடிகள் யோசித்தவன்… “பேசாம… மாமி வீட்டுக்கே இவளை அழைச்சிட்டு போகலாம்… மாமி நிலைமையை புரிஞ்சுப்பாங்க… எங்க வீட்டுக்கோ இல்ல அத்தை வீட்டுக்கோ போனால்… அம்மா… அத்தைப் பாட்டி மூணு பேரும் ஊரையே கூட்டிருவாங்க…” என்று சொன்ன ஜெய்…

“மாமி இருக்கும் பிளாட்லேயே… ஒரு டாக்டர் இருக்காங்க… அவங்களிடமே… இவளை ஒரு செக்கப் செஞ்சுடலாம்” என்று முடித்தான்…

உடனே தனது கைப்பேசியில் மாமியை அழைத்த ஜெய்… மலருக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவளை அங்கே அழைத்து வருவதாகவும் சொன்னான்…

ஜெய் பைக்கில் வர… ஈஸ்வர்… மலருடன் மாம்பலம் வந்து சேர்ந்தான்…

மாமி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வாயில் புறமும் இருக்கும் நடை மேடை அருகில்… ஜெய் பைக்கை நிறுத்த… அவனைப் பின் தொடர்ந்து வந்த ஈஸ்வரும்… அவனது காரை அவனுக்கு அருகில் நிறுத்தினான்…

பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்களெல்லாம்… ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர்… எதிர் புறம் இருக்கும் தேநீர் விடுதியில் ஓரிருவர் நின்றுகொண்டிருந்தனர்…

அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஜெய்… ஆள் அரவம் குறைவாக இருக்கும் சமயம் பார்த்து ஜாடை செய்ய… ஈஸ்வர் அந்தப் பகுதியின் வாயிலை மறைத்தவண்ணம் வண்டியை நிறுத்தினான்…

காரின் கதவைத் திறந்து… மலரைத் தனது கைகளில் தூக்கிக்கொண்ட ஜெய்… ஈஸ்வரைப் பார்க்க… “பரவாயில்லை ஜெய்… நான் இங்க இறங்கினால்… அது சீன் கிரியேட் பண்ணற மாதிரி ஆகிடும்… நீ அவளைப் பத்திரமா மாமி வீட்டுல விட்டுடு…” என்றவாறு அணிமா மலரைப் பார்த்தான் ஈஸ்வர்…

அந்த நொடி அவனது கண்களில் தெரிந்த வலி… ஜெய்யின் பார்வையில் தப்பாமல் பதிந்தது… அதை மனதில் குறித்துக்கொண்டு மலரைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான் ஜெய்…

சில நிமிடங்கள் பொறுத்து… தனது காரை கிளப்பிக்கொண்டு சென்றான் ஈஸ்வர்…

வீட்டின் உள்ளே ஜெய் மலருடன் நுழையவும்… “ஐயோ… இவளுக்கு என்ன ஆச்சு…” என்று பதறினார் மாமி… 

“சுசீ… உள்ள நுழைஞ்சதும் நுழையாததுமா ஏண்டி இப்படி பதர்றே…  போய் தீர்த்தம் எடுத்துண்டு வா… பொறுமையா எல்லாத்தையும் விஜாரிச்சுக்கலாம்” என்று அவரை அடக்கினார் கோபாலன் மாமா…

உடனே ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துவந்தார் சுசீலா மாமி… அதற்குள் அங்கே போடப்பட்டிருந்த திவானில் ஜெய் மலரைப் படுக்கவைத்திருந்தான்…

தண்ணீரை வாங்கி… மாமா மலரின் முகத்தில் தெளிக்க… அவளிடம் லேசான அசைவு தெரிந்தது… ஆனாலும் கண்களைத் திறக்கவில்லை…

“ஏண்டாப்பா… இவளுக்கு என்ன ஆச்சு?” என்று மாமா கவலையாய் கேட்க…

“ஒண்ணுமில்ல மாமா… வீக்னஸ் போல இருக்கு… ஆபிஸ்ல மயங்கி விழுந்துட்டா… லாவண்யா தெரியும் இல்ல… அவதான் எனக்குப் போன் செஞ்சா… எங்க வீட்டுக்கு போனால் தேவை இல்லாமல் பதறுவாங்க இல்ல… அதனாலதான் இங்கே அழைச்சிட்டு வந்தேன்…” என்று கோர்வையாக… அவர்கள் நம்புவதுபோல் சொல்லி முடித்தான் ஜெய்…

“கடங்காரி… எதாவது சொன்னா கேக்கறாளா… அவ ஒழுங்கா தூங்கி… ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு… தான் பிரச்சனையே தலைக்கு மேல இருக்கறப்ப… ஊர் பிரச்சனையெல்லாம் இழுத்து விட்டுண்டு இருக்கா…” என்று அங்கலாய்ப்புடன் சொன்னார் மாமி…

நெற்றியைச் சுருக்கி… ஜெய் அவரைப் பார்க்கவும்… மாமியை நோக்கி வேண்டாம் என்பதுபோல் ஜாடை செய்தார் மாமா…

அந்தக் குடியிருப்பிலேயே இருக்கும் பெண் மருத்துவரிடம் நேரில் சென்று… மலரின் உண்மை நிலையை விளக்கி… அவரை அங்கே அழைத்து வந்தான் ஜெய்…

அவளைப் பரிசோதித்தவர்… பயப்படும் விதமாக ஒன்றும் இல்லை… சில மணி நேரங்களில் தானாகவே சரியாகிவிடும் என்றும்… அவள் கண் விழித்தவுடன் எளிய உணவாகக் கொடுக்குமாறும் சொல்லிவிட்டுச் சென்றார் அந்த மருத்துவர்…

மலரைப் பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு… அவளது நிலையை வாட்ஸாப் செய்தியாக ஈஸ்வருக்கு தெரியப்படுத்திவிட்டு… அங்கிருந்து கிளம்பிச் சென்றான் ஜெய்…

அடுத்த நாள் மதியம் மலரைக் காண அங்கே வந்திருந்தான் ஜெய்…

அவன் உள்ளே நுழையும் நேரம்… மாமி வீட்டு வரவேற்பறையில் சில வாண்டுகள் சூழ… மடியில் ஒரு பெண் குழந்தையை இருத்திக் கொண்டு…  கைப்பேசியில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள் மலர்…

அவள் அங்கே போடப்பட்டிருந்த திவான் அருகில் அதில் கையை ஊன்றியவாறு உட்கார்ந்திருக்க… அந்தத் திவானில் ஒரு சிறுவன்… அவனது வாயில் கட்டைவிரலை வைத்தவாறு உறங்கிக் கொண்டிருந்தான்… கள்ளம் கபடம் இல்லாத அந்த குழந்தைகளைப் பார்த்து… அப்படியே நின்றான் ஜெய்…

அவன் போலீஸ் உடையிலேயே அங்கே வந்திருக்கவும்… அவனைப் பார்த்து மிரண்டன குழந்தைகள்… பிறகுதான் அவன் அங்கே வந்ததையே கவனித்தாள் மலர்…

மெல்லிய குரலில்… “நம்ம அங்கிள் தான்… பயப்படாதீங்க” என்றுவிட்டு… அங்கிருந்து எழுந்தவள்… மேலே போய் பேசலாம் என்று அவனுக்கு ஜாடை செய்ய… மொட்டை மாடிக்கு வந்தனர் இருவரும்…

நிழலாக இருக்கும் இடத்தில் போய் நின்றுகொண்டு… “உன்னோட என்கொயரியை ஸ்டார்ட் பண்ணு ஜெய்” என்று அழுத்தத்துடன் மலர் சொல்ல…

“ரொம்ப திமிறுத்தாண்டி உனக்கு…” என்று கோபத்துடன் பற்களைக் கடித்தவன்…

“எதுக்குடி… அந்தக் கேவலமாக இடத்துக்குப் போன?” என்று கோபத்துடன் கேட்க…

“அதை என்னால இப்ப சொல்ல முடியாது ஜெய்… தயவு செஞ்சு புரிஞ்சிக்கோ” என்று மலர் சொல்லவும்…

“என்னத்த புரிஞ்சுக்கணும்…”

“உன்னை நானே… அர்ரெஸ்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை கிரியேட் ஆகியிருக்கு… உனக்குத் தெரியுமா?” என ஜெய் சொல்லவும்… அதிர்ந்தாள் மலர்…

“நான் என்ன தப்பு பண்ணேன் ஜெய்… இன் ஃபாக்ட்… நானே அங்கே நடந்ததைப் பற்றி கம்ப்ளைண்ட் பண்ணனும்னு இருக்கேன்…” என்று மலர் சொல்லவும்…

“கிழிச்ச… நீ அங்கே போய் எவ்வளவு பிரச்சனைகளை இழுத்துட்டு வந்திருக்க தெரியுமா…”

“உன்னை… அந்த ரூம்ல அடைச்சாங்களே அந்த பொம்பளைங்க… அவங்க ரெண்டு பேரையும்… யாரோ கொன்னு… எரிச்சிருக்காங்க… தெரியுமா?’ என்று ஆவேசத்துடன் சொன்ன ஜெய்… தொடர்ந்து… “உன்னோட ஹாண்ட் பாக் எங்கடி?” என்று கேட்க… அதிர்ந்தாள் மலர்…

உடனே கீழே சென்று… சில நிமிடங்களில் அங்கே மறுபடி வந்த ஜெய்… அவளது கைப்பையை அவளுக்கு அருகில் வீசிவிட்டு… “இது அந்த ரூம்லயே இருந்தது…”

“அது என்னோட ஜூரிடிக்ஷ்ன் கிடையாது…”

“ஆனாலும் உனக்காக… விசாரிக்க அங்கே போனேன்…”

“நான் இதை அங்கிருந்து எடுத்துவந்த பிறகு… நேற்று நைட்… அங்கே கொலை நடந்திருக்கு…”

“எல்லாத்துக்கும் தயாரா இரு… இல்லனா என்கிட்டே நீ என்ன செஞ்சுட்டு இருக்கேன்னு உண்மையைச் சொல்லு” என்று அவன் மிரட்டலாக சொல்லி முடிக்க… அவளது மௌனம் தொடரவும்…

“ச்சை!” என்றுவிட்டு அங்கிருந்து சென்றான் ஜெய்…

****************************

அடுத்து வந்த இரண்டு தினங்கள் அமைதியாய் கடக்க… மலர்… இரவு நேரப் பணி முடிந்து வீட்டிற்கு வந்திருந்தவள்… அவளுடைய அறையில் உறங்கிக்கொண்டிருந்தாள்…

அங்கே வந்த… சரோஜா பாட்டி… அவளை “கண்ணு… கொஞ்சம் முகம் கழுவிட்டு… கீழே வாடா…” என்று அவளை எழுப்பவும்…

“ரோசாம்மா… ரொம்ப டயர்டா இருக்கு… ப்ளீஸ்… கொஞ்ச நேரம் தூங்கறேன்… உங்க பொண்ணுகிட்ட சொல்லுங்க…” என்று மலர் கெஞ்சலாக சொன்னாள்…

“கண்ணு… ஜீவிதா வீட்டிலிருந்து எல்லாரும் வந்திருக்காங்க… முக்கியமா… நீ வந்துதான் ஆகணும்” என்று பாட்டி சொல்லவும்… மொத்த தூக்கமும் பறந்துவிட… என்ன பாட்டி சொல்றீங்க… முக்கியமா நான் எதுக்கு வரணும்” என்ற மலரின் கேள்விக்கு…

“நீயே கீழ வந்து தெரிஞ்சிக்கோ” என்று சொல்லிச் சென்றுவிட்டார் பாட்டி… அவரது முகம்… அவ்வளவு கலவரமாக இருந்தது…

தூக்கமின்றி சிவந்த விழிகளும்… களைத்த முகமுமாக… ஒரு எளிய காட்டன் சல்வார் அணிந்து… கீழே வந்த மலர் அதிர்ந்தாள்…

அங்கே அவளது குடும்பத்தினர்… ஈஸ்வர் குடும்பத்தினர் என அனைவரும் உட்கார்ந்திருக்க… இறுகிய முகத்துடன்… சோபாவில் சாய்ந்து… தோரணையாக உட்கார்ந்திருந்தான் ஈஸ்வர்…

மலரை… அவர்களது அறைக்குள்… தனியாக இழுத்துச் சென்ற சூடாமணி… “கண்ணு… ஈஸ்வருக்கு… உன்னைக் கேட்டு வந்திருக்காங்க… தயவு செய்து… நீ எதுவும் சொல்லி கெடுத்துடாத… பார்த்து பேசு…’என்று அவளை கெஞ்சி கொஞ்சி… வெளியே அழைத்துவந்தார்…

ஜெகதீஸ்வரனின் பார்வை ஆராய்ச்சியுடன் அணிமா மலரை துளைத்துக் கொண்டிருந்து…

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             

 

MU- munnurai

மீண்டும் உயிர்த்தெழு

முன்னுரை

பழங்கால நூற்றாண்டுகளில் தொடங்க போகும் இந்தக் கதை பின்னர் இன்றைய காலகட்டத்தில் நடைபெறுவதாக அமையப் போகிறது. அறிவியல் ரீதியாகச் சொன்னால் Genetic memory, ஆன்மீக ரீதியாய் சொன்னால் மறுபிறவி என்றும் சொல்லலாம்.

இயற்கையில் இயைந்திருந்த நம் வாழ்க்கை இயந்திரத்தமான வாழ்க்கையை நோக்கிப் பயணிப்பதை சொல்லவும் நம் எண்ணங்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும் சில மரபியல் ஞாபகங்களைச் சேகரித்து வைத்திருக்கும் என்ற சில மைய கருத்தை கொண்டும் இந்தக் கதை பயணிக்கப் போகிறது.

நிலவு பூமியினை சுழன்று வர… பூமியோ சூரியனை சுற்றி வருவது… ஒரு முக்கோண காதல் கதையாய் எனக்குள் ஒரு கற்பனை.

செந்தழலாய் வீசி அனலாய் காதலிக்கும் ஒருவன். வெம்மையோடு குளிர வைத்து அவளைக் காதலோடு அரவணைக்கும் இன்னொருவன்.

இவ்வாறு செல்லப் போகும் நம் கதையின் போக்கில் காதல்கோபம்துவேஷம்ஏக்கம்,பழிவுணர்வு மற்றும் நிறைவேறாத ஆசையோடு பல காலங்கள் முன்பு உயிரற்று தொலைந்து போகும் மூவர் மீண்டும் உயிர்த்தெழுந்து சந்தித்துக் கொண்டால்… எப்படி அமையப் போகிறது நம் கதை களம்…  இந்தக் கதையில் இடம்பெறும் பெயர்களும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே.

1

ருத்ரதேவன்

“கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்”

என்ற வாக்கியத்திற்கு ஏற்ப கொங்கு நாடு பழம் பெரும் தமிழனின் வாழ்வியல் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றிருந்தது.

பண்டைய தமிழகம் சேர நாடுசோழ நாடுபாண்டிய நாடுதொண்டை நாடு மற்றும் கொங்கு நாடென பிரிந்திருந்தது.  இதில் கொங்கு நாடு… மலை தொடர்ச்சிகள்காடு சார்ந்த இடங்கள் மற்றும் வயல் வெளிகளாகவே அமைந்திருந்தன. ஆதலால் குறிஞ்சிமுல்லைமருதமே கொங்கு நாட்டு நிலங்களுக்கு உட்பட்டவையாக இருந்தன எனலாம்.

அன்று பொன்னி என்றழைக்கப்பட்ட காவிரி நதி குடகு மலையில் தோன்றிகொங்குநாட்டில் தவழ்ந்துபின் சோழ நாட்டில் தாயாகிச் சிறக்கின்றாள். ஆதலாலேயே கொங்கு நாடு செழிப்புற திகழ்ந்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றும் என்று இல்லாமல் நம் பார்வை திரும்பும் பக்கமெல்லாம் பசுமையுடன் காட்சியளித்தது.

நீலம்அல்லிஅனிச்சம்முல்லைநறவு எனப் பல வகையான மலர்கள் வண்ணமயமாகப் பூத்து குலுங்கிக் கொண்டிருக்க தேனீக்கள் தேடலின்றி தம் தேவையைத் தீர்த்து கொண்டன. பல இடங்களில் தேனீக்கள் தம் கூட்டுக்களில் தேனை தேவைக்கேற்ப சேகரித்து வைக்ககொங்கு நாட்டின் பெரும் சிறப்பாகத் தேனும் குறிப்பிடத்தக்கதாய் அமைந்தது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கொங்கு நாடு சிறு சிறு பிரிவுகளாய் பல சிற்றரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அம்மன்னர்கள் நட்பு பாராட்டிக் கொண்டாலும் அவ்வப்போது போர் மேற்கொண்டு தங்கள் எல்லையை விஸ்தரிக்கவும் முயன்றனர்.

கொங்கு நாட்டைச் சுற்றிலும் மலைகள்காடுகள் என இயற்கை அரணாய் நிற்பதால் பேரரசர்களின் பிரவேசம் எதுவும் நிகழாத சமயம் அது. வைணவசிவ சமயங்களுக்கு இடையில் பூசல் இருந்து வந்தாலும் அன்று வாழ்ந்த மக்கள் எல்லோரும் இரு ஸ்தலங்களுக்கும் பாகுபாடின்றி பக்தியோடு சென்று வழிப்பட்டனர்.

மலைப்பிரதேசங்கள் முழுவதும் தமிழ் கடவுள் முருகன் அருள்பாலித்துக் கொண்டிருக்க, மலைவாழ் இனங்கள் ஒற்றுமையாய் அவ்விடங்களில் வசித்திருந்தனர். அந்த அழகிய பிரதேசத்தில் அடர்ந்து விரிந்து வளர்ந்திருந்த மரங்களின் கிளைகளில் பறவைகள் கூடு கட்டி கீரிச் கீரிச்சென சத்தமிட்டபடி இருக்கவயல்களின் வரப்புகளில் தண்ணீர் சலசலவென ஓசையை எழுப்பியபடி பாய்ந்து ஓடி கொண்டிருந்தது.

 வேங்கை மரம்அரசமரம்புன்னை மரம்புளிய மரம்வேப்ப மரம் என எல்லா வகையான மரங்களும் அவற்றின் உயரத்தாலும் பிரம்மாண்டமான தூண்களைப் போன்ற அடித்தளங்களாலும் தங்களின் நீண்ட ஆயுட் காலத்தை பறைசாற்றி கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

இராணிகளுக்கு எல்லாம் மலையென அழைக்கப்படும் நீலகிரி மலை அக்காலத்தில் நீலமலை என அழைக்கப்பட்டது. அங்கிருந்து சிறு தொலைவில் பசுமை நம் கண்ணை கவரும் விதமாய் வசீகரித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து பார்க்கும் தொலைவிலேயே தென்னை மரங்கள் தென்றலின் தீண்டலால் தலையசைத்து ஆடிக்கொண்டிருக்கவயல் வெளிகள் விவசாயிகளின் கடும் உழைப்பால் செழிப்புற காட்சியளித்தன.

அந்த ரம்மியமான சூழலை மேலும் மேலும் அழகுறச் செய்து கொண்டிருந்தது அரங்கநாதன் திருக்கோவிலின் நிமிர்ந்த கோபுரம். அந்தத் திருத்தலத்தை சுற்றிலும் சுவாமியின் அலங்காரத்திற்கு வேண்டிய மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கசெழிப்பான காரை பசுக்கள் கோவிலுக்கு வெளியே கட்டி வைக்கப்பட்டிருந்தது. குளங்களில் தாமரை பூக்கள் புன்னகை செய்து நம் மனதை லேசாக்க அங்கே இறைவனின் அருளோடு இயற்கையின் அருளும் இயைந்திருந்ததை உணர முடிந்தது.

இத்தகைய அழகிற்கு இலக்கணமாய் விளங்கிய ஆரை நாடும் (இன்று கோவைஅவினாசி எனப் பெயர் பெற்றிருக்கிறது) அதன் சுற்றுவட்டார கிராமங்களை எல்லாம் தம் ஆட்சியின் கீழ் சிற்றரசராய் இருந்த மகாதேவன் சௌந்தர கொங்கணன் ஆண்டு வந்தார்.

 மலைகளும் காடுகளும் இயற்கை அரணாய் அவரின் ஆட்சிக்குட்பட்ட நிலங்களைக் காத்து நின்றது. அங்கு வாழும் மக்களின் முக்கிய தொழிலாய் கருதப்படுவது ஆநிரைகளை வளர்ப்பதும் தினைவரகுசாமை போன்றவற்றை விளைவிப்பதுமே. மன்னர் சௌந்தர கொங்கணன் என்ற அவரின் பெயருக்கு ஏற்றாற் போல் அவர் ஆளுமைக்குக் கீழ் இருந்த நிலங்கள் சௌந்தரியத்துடன் திகழ்ந்தன.

அவற்றை செவ்வனே பேணிக் காத்த மன்னர் சௌந்தர கொங்கணனுக்கும் பட்டத்து ராணி ருத்ரதேவிக்கும் வரிசையாய் மூன்று பெண் வாரிசுகளே ஜனித்தது. இறுதியில் வெகுநாட்களின் காத்திருப்புக்குப் பின் கிடைத்த அரியப் பொக்கிஷமாய் ஓர் ஆண் வாரிசை ஈன்றெடுத்தாள். அவனே ஆரைக்கோ ருத்ரதேவன். அறிவுக்கூர்மைகம்பீரம்வீரம் என அரசனுக்கு உரிய அனைத்துப் பண்புகளும் ஒருங்கே பெற்றுச் சிறப்புடன் திகழ்ந்தவன்.

ருத்ரதேவன் பெண்களின் உள்ளம் கவர்ந்த கள்வனாய் இருக்க அவன் மனதை என்ன காரணத்தினாலோ எந்தப் பெண்ணுமே அதுவரை வசீகரிக்கவில்லை. சாதாரண பெண்கள் முதற்கொண்டு இளவரசிகள் பலரும் ருத்ரதேவனை கண்ட மாத்திரத்தில் காதல் வயப்படும் கம்பீர தோற்றம் உடையவன் அவன்.

 இருப்பினும் அவனின் மனமோ அப்படி எந்தப் பெண்ணையும் கண்டு லயிக்கவோ காதல் வயப்படவோ இல்லை. தன் சகோதரிகளையும் தாயையும் தவிர்த்து வேறு பெண்களிடம் அவன் அதுவரை நெருங்கிப் பழகியதும் இல்லை.

இன்று ருத்ரதேவனுக்கு அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கப் போகிறது. அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகும் சந்திப்பு நிகழப் போகிறது. இந்தச் சந்திப்பினால் அப்பிறவி முழுவதும் அவன் நிம்மதியற்று போவான். ஏன் வரும் பிறவியிலும் கூட… என்ன செய்வது… விதியின் வசம் நிகழப் போகும் அந்த நிகழ்வைத் தடுக்கும் வல்லமை யாரிடமும் இல்லை.

ஆதவன் தன் காதல் பார்வையை வீசி பூமித்தேவதையை பிரகாசிக்கச் செய்ய அந்த விடியலில் ருத்ரதேவனும் சில நொடிகளில் தன் காதல் தேவதையை சந்திக்கப் போவதை உணராமல் அரங்கநாதன் ஆதுரசாலையை நோக்கி தன் கம்பீரமான வெண்புரவியின் மீது நிமிர்ந்து அமர்ந்தபடி வந்து கொண்டிருந்தான்.

பச்சை பசலேன்று இருந்த அந்த புல்வெளியில்அவனின் குதிரை மெதுவாகவே நடந்து வந்து கொண்டிருக்கமூச்சுக் காற்று பட்டாலே துவண்டு விடும் மென்மையான செம்மஞ்சள் அனிச்சம் மலர்கள் கண்ணை கவரும் விதமாய் வழியெங்கும் மலர்ந்திருந்தது.

 அந்த வண்ணமயமான காட்சியை இளவரசன் ருத்ரதேவன் ரசித்துப் பார்த்து கொண்டிருந்த சமயத்தில் அவனின் அடர்ந்த புருவங்களுக்கு கீழே உள்ள கூர்மையான விழிகள் அப்படியே ஸ்தம்பித்துப் போனது.

அவன் பார்வை நிலைகொண்ட குளத்தின் அருகில்தன் குதிரையின் கமிற்றை பிடித்து நகரவிடாமல் லாவகமாய் நிறுத்தினான். மேலே சென்றால் அந்தக் குளக்கரையில் அமர்ந்தபடி தண்ணீரில் தெரியும் தன் பிம்பத்தைத் தானே ரசித்துக் கொண்டிருக்கும் அந்த அழகுச் சிலையை தொந்தரவு செய்ய நேரிடுமே.

 விழியில் தொடங்கி அவளின் இதழ்கள் வரை செவ்வனே செதுக்கிய சிலையெனவே அவள் தோன்றினாள். மனதை மயக்கும் அந்த அழகு தேவதை யாராக இருக்கக் கூடும்?! அவளின் உடையும் ஆபரணங்களை பார்க்கும் போதே அவள் இளவரசி அல்ல என்பதை தெளிவுபடுத்தியது. இருப்பினும் நொடிப் பொழுதில் வேறு பெண்களை நிமிர்ந்து நோக்கிடாத தன் கண்ணியத்தை உடைத்தெறிந்த அவள் பேரழகியின் வம்சம்‘ என எண்ணி வியப்புற்றான்.

அவளோ அழகு பதுமையாய் தன் கரத்தில் காலியான குடத்தைப் பிடித்தபடி அந்தக் குளக்கரையில் வீற்றிருக்க எத்தனை நேரம் நீரில் தெரியும் அவளின் பிம்பத்தையே ரசிப்பது என்று ருத்ரதேவன் பொறுமையிழந்து அந்தப் பெண் நிலவின் உருவத்தைத் தரிசிக்க எண்ணி தன் கம்பீரமான குரலை மென்மையாக மாற்றிக் கொண்டு,

“நீ பேரழிகிதான் பெண்ணே… அதில் ஒன்றும் ஐயமில்லை” என்றான்.

இப்போது சிலையாய் இருந்தவள் அவனின் குரலைக் கேட்டு உயிர்பெற்று யாரென்று திரும்பி நோக்கினாள். அவளின் பிம்பத்தை பார்த்தே கிறங்கிப் போனவன் அவளின் வதனம் கண்டு தன்னிலை மறந்தான்.  

நீண்டு தொங்கி கொண்டிருந்த கேசமோ முன்புறம் அவள் தோள்களில் ஓய்வெடுக்க, அவளின்  சிவந்த இதழ்கள் பூவிதழ்களோ என்று குழப்ப முற செய்ய… வில்லாய் வளைந்திருந்த அவளின் புருவத்தின் கீழே இமைகளின் கீரடத்தை சுமந்தபடியாய் மான் விழிகள் அழகாய் படபடக்க… நெற்றியின் மத்தியில் வேலெனக் கூர்மையாய் நீண்டிருந்த பொட்டு அவன் இதயத்தில் பாய்ந்து பதம் பார்த்துவிட்டது.

அந்த நொடி ருத்ரதேவன் தான் பூமியில் ஜனித்ததிற்கான பிறவிப் பயனை அடைந்துவிட்டதாக எண்ணி மகிழ்வுற்றான். அவளோ அவனைப் பார்த்த சில நொடிப் பொழுதில் அவன் இளவரசர் ருத்ரதேவன் என்பதை அறிந்து கொண்டுவிட்டாள்.

ஏற்கனவே தம் தோழிகளோடு சேர்ந்து இளவரசன் ருத்ரதேவனை மறைந்திருந்து ஒரு முறை பார்த்தது நீங்காத நினைவுகளாய் அவள் மனதில் அழுத்தமாய் பதிவாகியிருந்தது. இத்தகையைவனை மணந்து கொள்ளும் அதிஷ்டசாலி யாரோ என்று எண்ணி ஆதங்கப்பட்டதும் அந்த நொடியில் மின்னலெனத் தோன்றி மறைந்தது.

வெகுதூரத்தில் பார்க்கும் போதே பிரம்மப்புற செய்தவன் இன்று இத்தனை அருகாமையில் நிற்கிறான். தான் செய்த செயலைப் பார்த்து அவன் பரிகாசம் செய்கிறான் என்று நாணம் கொண்டவள்குடத்தில் தண்ணீரை நிரப்பாமலே தன் கொலுசு சத்தம் ரீங்காரமிட அங்கிருந்து துள்ளி ஓடினாள். ருத்ரதேவன் தன் குதிரையின் கயிற்றை இழுத்து வேகமாய் பாய்ந்து அவளை வழிமறித்து நிறுத்தினான்.

அவனின் செயலில் சற்று மிரண்டு போனாலும் அவள் ஒருவாறு துணிவை வரவழைத்துக் கொண்டு,

 “வழி விடுங்கள்…  நான் செல்ல வேண்டும்” என்று உரைக்க தான் யாரென்று தெரிந்துதான் இவள் இவ்விதம் பேசுகிறாளா என்று தலையை சாய்த்துப் பார்த்தபடி,

 “குடத்தில் தண்ணீர் நிரப்ப வந்துவிட்டு இப்போது என்னைக் கண்டபின்… நீ வந்த வேலையைச் செய்ய மறந்து விட்டாயே” என்று அவனின் இதழ்களில் வேடிக்கையான புன்னகை ததும்ப உரைக்க!

அவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவளாய், “இப்போது ஒன்றும் அவசரமில்லை. நான் பிறகு வந்து தண்ணீர் எடுத்துக் கொள்கிறேன்… நான் என் குடிலுக்கு செல்ல வேண்டும்…வழி விடுங்கள்” என்று மீண்டும் அதே துணிவுடன் தீர்க்கமாய் உரைத்தாள். அவள் தடுமாறாமல் பேசும் விதத்தில் வெளிப்பட்ட அவளின் துணிவு அவனை மேலும் கவர்ந்திழுத்தது.

ருத்ரதேவன் ஏதும் பேசாமல் அவன் குதிரையை விலக்கிக் கொள்ளஅவள் முன்னேறி நடந்தாள். அவன் பின்னோடு வந்தபடி,

 “உன் குடில் வெகு தொலைவில் உள்ளதோ?” என்று அவன் வினா எழுப்பதன்னை ஏன் அவன் பின் தொடர்கிறான் என்று புரியாமல்,

 “இல்லை பக்கம்தான்… ஆதுர சாலைக்கு அருகாமையில்” என்று அவள் உரைக்க அப்போதுதான் தான் ஆதுர சாலைக்கு வேலை நிமித்தமாய் வந்தோம் என்று ருத்ரதேவனுக்கு நினைவு வந்தது.

 எந்த வேலைக்கு வந்து தான் மதி மயங்கி என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றிய போதும் அவள் பின்னோடு சென்று கொண்டிருப்பதை அவனால் தடுக்க முடியவில்லை.

“பெண்ணே நில்” என்று கொஞ்சம் அதிகாரத் தோரணையில் அழைத்த ருத்ரதேவன் தன் குதிரையிலிருந்து தாவி இறங்கினான். அவன் கம்பீரமாய் அவளருகில் நடந்து வந்து நிற்க…

அவனின் அதீத உயரமும்கட்டுடலான தேகமும்கூர்மையான பார்வையும் கொண்ட அவனை நிமிர்ந்துபார்க்க அவள் மனம் தவித்தாலும் அந்த எண்ணத்தைக் கட்டுப்படுத்தி கொண்டு தலையை கவிழ்ந்தபடி பதிலேதும் பேசாமல் அவள் மௌனமாய் நின்றாள்.

ருத்ரதேவன் அவளை ஆழமாய் நோக்கி தொண்டையை கனைத்தபடி, “நீ யாருடைய மகள்?”என்று வினவினான்.

இளவரசர் கேள்வி எழுப்பும் போது பதிலுரைக்காமல் இருக்க முடியுமா என்று அவள் எண்ணியபடி, “நான் கோட்டையின் தலைமை காவலாளியின் மகள்” என்றாள்.

“தலைமை காவலாளி எனில் சோம சுந்தரரா?!” என்று அவன் சந்தேகமாய் கேட்க, “ஹ்ம்ம்” என்று தலையசைத்து ஆமோதித்தாள்.

“உன் பெயர் என்ன?” என்று அவன் புருவத்தை மேலுயுரத்தி அதிகாரமாய் கேட்க அவளின் பொறுமை கரைந்து போனது.

“நான் ஏன் என் பெயரை சொல்ல வேண்டும்… என்னைப் போக விடாமல் வழிமறித்து தாங்கள் ஏன் என்னைக் கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்கள்… நான் ஏதேனும் குற்றம் செய்தேனா ?” என்று படபடவென பொறிந்து தள்ளினாள்.

அந்தக் கோபத்தை உள்ளூர ரசித்தபடி, “நீ செய்த குற்றம் என்னவென்று நீ அறிந்திருக்கவில்லையா ?” என்றான்.

இப்போது அவள் விழிகளை உயர்த்திப் புரியாமல் அவனை நோக்க ருத்ரதேவன் அந்த விழியின் விசையால் தன் மனதில் உள்ளதை பளிச்சென்று உரைத்துவிட்டான்.

“உன் அழகால் என் மனதைக் களவாடிவிட்டாயே… அது குற்றம்தானே!”

அவள் அவனின் சொற்களை கேட்டு அதிர்ந்து போனாள். இனி தான் அவன் முன்னிலையில் நிற்பது உசிதமில்லை என்று நினைத்துக் கொண்டு அவனைத் தவிர்த்து கொண்டு முன்னேறிச் சென்றவளிடம் தன் குரலை உயர்த்தி,

“நில்…இளவரசரனாகிய என் வார்த்தைக்கு கட்டுப்படாமல் செல்வதும் குற்றமே” என்று அதிகாரத் தொனியில் அழுத்தமாய் உரைத்தான்.

மீண்டும் புரியாத தவிப்போடு குடத்தை கையில் பிடித்தபடி அவள் செல்லாமல் நிற்க அவன் தன் குதிரை மீது ஏறி அமர்ந்து அவள் அருகில் வந்து, “உன் பெயரை சொல்லிவிட்டு நீ உன் விருப்பம் போல் உன் குடிலுக்கு செல்லலாம்” என்றான்.

லேசாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு அவனைப் பார்க்காமல் திரும்பியபடி அவள் பெயரை மெலிதாய் உரைக்க அவன் செவிகளில் அவள் வார்த்தைகள் சென்று சேரவேயில்லை.

ருத்ரதேவன் குலுங்கிக் குலுங்கி சிரித்தபடி, “உனக்கு நீயே சொல்லிக் கொண்டாள் எனக்கு எவ்வாறு கேட்கும்… என் கண்ணை பார்த்து சத்தமாய் என் செவிகளில் விழும்படி சொல்” என்றான்.

அவனின் கண்களை நோக்கிய அவளின்  கண்களில் கோபம் கனலாய் இருக்க அவளின் மென்மையான குரலில் அழுத்தம் கொடுத்து “என் பெயர் அக்னீஸ்வரி… இப்போது தங்கள் செவிகளில் கேட்டதா… நான் செல்லலாமா ?!” என்று தலையசைத்து கேட்டாள்.

அவளின் கர்வத்தோடு கூடிய அந்த அழகை ரசித்தபடி தன் காந்தமான புன்னகையை வீசி மௌனமாய் போகச் சொல்லி தலையசைத்தான் ருத்ரதேவன்.

அக்னீஸ்வரி தப்பி பிழைத்தோமென நிம்மதி பெரூமூச்சிவிட்டபடி வேகமாய் அங்கிருந்து அகன்றாள். அவனோ அவளைப் பின்தொடராமல் யோசிக்கலானான்.

“அக்னீஸ்வரி” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். அவளின் பெயரில் இருந்த வன்மையும் பார்க்கும் போது அனிச்சம் பூவை போன்ற மென்மையும் வித்தியாசமான கலவையோ அவள் எனச் சிந்தித்தபடி,

‘அக்னீஸ்வரியை… மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு இத்தோடு எப்போது கிட்டும் ?! என்று தனக்குள்ளேயே கேட்டு ஏக்கம் கொண்டான்.

அக்னீஸ்வரியை பார்த்த கண நேரத்தில் காதலின் பிடியில் ருத்ரதேவன் சிக்கிக் கொண்டதை அவனாலேயே தடுக்க இயலவில்லை. சற்றும் பழக்கமே இல்லாத அவளிடம் தான் அவ்வாறு பேசியது தவறென்று அவன் மூளை கடிந்து கொள்ளஅவனின் ஆழ் மனமோ அதை ஏற்க மறுத்தது. அவள் தன்னவள் எனும் போது இதில் தவறென்ன.

ஓரே சந்திப்பில் அதுவும் ரொம்பவும் குறுகிய நேரத்தில் அப்படி ஒரு எண்ணம் அவனை ஆட்கொண்டது அவனுக்கே ஆச்சர்யம்தான். முற்பிறவியின் பந்தமாக இருக்கக் கூடும் என அவன் மனம் ஏதுவாய் காரணம் கூற அவனின் புத்தியோ அவள் ஒரு சாதாரண காவலாளியின் மகள் என்று அவன் ஆசைக்குத் தடுப்பணை போடப் பார்த்தது. இந்த உறவு எவ்வாறு இணையும் என்ற ருத்ரதேவன் மனதில் கேள்வி துளிர்விட சற்று யோசிக்கலானான்.

பின்னர் தெளிவுப்பெற்று, ‘எனக்குள் முதல்முறையாய் காதலை உணர வைத்தவள்… அவள் அழகில் என்னை முழ்கடித்தவள்… பெண்மையை ரசிக்க வைத்தவள்… எந்த நாட்டுக்கும் இளவரசியாக இல்லாவிட்டால்தான் இப்போது என்ன?… என் இதயத்தை ஆளும் அரசியாக இருக்கட்டுமே!‘ என்று உறுதியாக எண்ணியபடி தன் மனதிற்கும் புத்திக்கும் நிகழ்ந்த போராட்டத்தை முடிவுறச் செய்தான்.

அக்னீஸ்வரியின் நினைப்பில் இருந்து மீண்டு வரமுடியாமல் போனாலும் தான் வந்த வேலையை முடிக்க எண்ணி ருத்ரதேவன் குதிரையின் பிடியை இழுத்து அதைக் காற்றென வேகமாய் ஆதுரசாலை நோக்கிச் செலுத்தஅவன் மனமோ கடிவாளமின்றி தறிகெட்டுக் காதல் மயக்கத்தில் பயனித்தது.

KYA-25

                                      காலம் யாவும் அன்பே 25

 

இருவரின் ரத்தத்தில் இருந்த திசுக்களை சித்தர் சொன்ன முறையில் பதப்படுத்தி வைத்தான் சேனா.

ரதியும் வர்மாவும் சேர்ந்து அன்று பூஜை செய்துகொண்டிருந்தனர். அவனது ஆராய்ச்சிக்கான நேரம் நெருங்குவதாக ஏனோ அவனுக்குள்  ஒன்று சொல்லிக் கொண்டே இருந்தது.

ஆனால் அதற்குமுன் சித்தரிடம் கேட்டுத் தெளிந்து கொள்ள வேண்டியது நிறைய இருந்தது. நாம் நினைத்த நேரத்தில் அவர்களை கண்டுவிட முடியாதே! அவர்கள் விரும்பினால் மட்டுமே அது சாத்தியம்.

சித்தர் கொடுத்த சிவலிங்கத்தின் முன்பு அமர்ந்து அவரைக் காண வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க, அவனது அருகிலேயே தோன்றினார் பரஞ்சோதி.

“ஐயா!” என பூரித்துப் போய் திரும்ப,

“ உனக்கு என்னென்னே கேட்க வேண்டுமோ கேள்” நேராக விஷயத்திற்கு வந்தார்.

“என்னுடைய ஆராய்ச்சி இன்னொரு உலகம் இருக்கிறதா ? அங்கு எப்படிச் செல்வது? காலத்தில் பயணம் செய்வதால் நான் மீண்டும் இங்கு வரும் போது இந்த உலகம் நிச்சயம் பல வருடங்களைக் கடந்திருக்கும். ஏனெனில் நான் அப்போது ஒளியின் அளவைப் பொறுத்து பயணம் செய்துகொண்டிருப்பேன்.

அப்போது என் மனைவி தனியாக இங்கே வாழவேண்டும். அதை நான் ஈடு செய்ய, இங்கு வந்த பிறகு, மீண்டும் அதே காலப் பயணம் செய்து அவளுடைய கடந்து போன அந்த வாழ்விற்குச் சென்றால் , அப்போது நான் முன்பு வேறு உலகிற்குப் பயணித்தது இல்லை என்று ஆகிவிடும். ஒரு முரண்பாடு உண்டாகிவிடும்.

ஒரு வேளை நான் மீண்டும் வராமலே இருந்துவிட்டால், அவளுடைய வாழ்வு என்னை நம்பி நிராசையுடனேயே  முடிந்தேவிடும்.

நான் கண்டுபிடித்ததை சொல்லி மகிழக் கூட அவள் என்னுடன் இருக்கமாட்டாள். பிறகு நான் என் வாழ்வில் இன்பத்தை தொலைத்தவன் ஆகிவிடுவேன்.

இது அனைத்திற்கும் எனக்கு ஒரு தீர்வு வேண்டும்.” கவலையுடன் அவரிடம் கேட்க,

அனைத்தையும் அமைதியாக அவன் அருகே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் பாகீரதி. இத்தனை சிக்கலை உண்மையில் அவள் மனம் ஏற்கவில்லை.

இருவரும் சித்தரின் பதிலுக்காகக் காத்திருந்தனர். அவரோ இருவரையும் பார்த்துவிட்டு,

“நான் உனக்கு முன்பே சொல்லிவிட்டேன். இதில் பல சிக்கல்கள் உள்ளது. எல்லாவற்றுக்கும் நானே தீர்வு சொல்ல முடியாது. இப்போது நீ தான் அனைத்தையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

காலத்தில் நீ பயணம் செய்தாலும், அதன் அளவைக் கணித்து மீண்டும் சரியான நேரத்திற்கு நீ திரும்பிவிடு. அதுவே உனக்குச் சிறந்தது. இன்று இரவு அந்த பாதாள சிவன் கோவிலுக்கு வந்துவிடு!” அவன் கேட்டதற்கு விடை சொல்லாமலே சென்றுவிட்டார்.

ரதி மனதில் கணத்த பாரம் ஏறிக்கொண்டது. அவன் சென்று திரும்பும் காலம் வரை தான் உயிருடன் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.

ரதி எப்படி உணர்கிறாள் என்று வர்மா நன்றாகவே புரிந்துகொண்டான். அன்று இரவே தான் கிளம்பவேண்டும் என்று சித்தர் சொன்னதனை மனதில் வைத்துக் கொண்டு, மேலும் அதைப் பற்றிப் பேசி அவளை துன்பத்தில் ஆழ்த்தாமல் , அன்று முழுதும் அவளுடன் ஆனந்தமாகக் கழித்தான். பகலென்றும் பாராமல் காதல் செய்தான்.

ரதியுடன் சேர்ந்து சமைத்து , உண்டு பின் அவளைத் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றான்.

இதற்குப் பிறகு அவளை எப்போது காண்போமோ என்ற உணர்வில் அவளை தன் விழிகளால் அங்குலம் அங்குலமாக அளந்தான். நெற்றி முதல் பாத நகம் வரை கண்களால் வருடினான்.

அவளின் அந்த அழகை எத்தனை முறை ரசித்தாலும் அவனுக்குள் மேலும் அவள் மேல் காதல் பெருகிக்கொண்டே தான் இருந்தது.

மனதில் இருந்த வலியையும் தாண்டி கணவன் பார்வை கூச்சம் தர,

“அத்தான் , போதும்..” முகத்தை தாழ்த்திக் கொண்டாள்.

அவளது குரல் கூட தன்னைத் தூண்ட போதுமானது என்றுனர்ந்தான்.அவளின் முகத்தை கைகளில் ஏந்தியவன்,

“ ரதி! நான் உனக்காகவே சீக்கிரம் திரும்பி வர வேண்டும். நிச்சயம் வருவேன். அதுவரை நினைவில் இருக்கும்படி எதாவது…” அவளது இதழ்களை குறிவைத்து பார்வை செல்ல,

அவனது கழுத்தில் மாலையாக தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு,

“ நிச்சயம் தரேன் அத்தான். உங்களை , என்னை விட்டு பிரிய நான் விடமாட்டேன், சரி சீக்கிரம் கிளம்புங்கள். பொழுது சாய்ந்துவிட்டது.” என அவனை துரிதப் படுத்தினாள்.

மீண்டும் குளித்து அவள் பூஜை அறைக்கு வந்து, பூஜை செய்து, அவனுக்குத் திருநீறு கொடுத்தாள்.

தெளிவாக அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள். அவளைக் காணவே அவனுக்கு ஆச்சரியாமாக இருந்தது.

கவலை தோய்ந்த முகத்துடன் தன்னை வழியனுப்புவாள் என்று எண்ணிக் கொண்டிருக்க, இப்படி அனைத்தையும் ஒவ்வொன்றாக அவளே செய்வது அவனுக்கு சந்தேகமாக இருந்தது.

‘ஒரு வேளை அதிகமான துக்கத்தை மனதில் போட்டு அழுத்திக்கொண்டதால் இப்படி இரும்பாக இருந்து சமாளிக்கின்றாளோ’ வர்மாவுக்கு மேலும் வலிக்க,

லிங்கத்தை இருவரும் சேர்ந்து விழுந்து வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

ஊரும் அடங்கிவிட்டது. அந்தக் காலத்தில் கோவிலை வெறும் தாழ் மட்டும் போட்டுத் தான் மூடிவைத்திருன்தனர்.

அதனால் அவர்களுக்கு உள்ளே செல்வது எளிதாகவே இருந்தது. உள்ளே சென்றதும் கதவை லேசாக சாத்திவிட்டு, அந்த கர்ப்பகிரக மூலையில் அடைத்திருந்த சிறு துவாரத்தை விலக்கிவிட்டு உள்ளே சென்றனர்.

ஏற்கனவே சேனா உள்ளே வந்து தீபம் ஏற்றி வைத்திருந்தான். அதனால் அவர்களுக்கு பாதை தெளிவாகத் தெரிந்தது.

சேனா இருக்கும் தைரியத்தினால் தான் ரதியை தன்னுடன் அழைத்து வந்தான் வர்மா.

இருவரும் லிங்கத்தின் அருகில் வந்தனர். சேனா அங்கு தான் இருந்தான்.

சேனாவிற்கு  ரதியைக் கண்டதும் அவள் திடமாக இருக்கிறாள் என்றே தோன்றியது.

“நீ ஏன்னம்மா இங்கே வந்தாய். வீட்டிலேயே இருந்திருக்கலாமே!” பாசமாக அவன் கேட்க,

“எப்படி அண்ணா? அவரை இங்கே அனுப்பிவிட்டு என்ன ஆயிற்று என்று யோசித்துக்கொண்டே என்னால் அங்கு எப்படி இருக்க முடியும்…” சிறு வருத்தம் குரலில் பொதிந்தே இருந்தது.

“ கவலைப் படாதே. அவன் நலமோடு திரும்பி வருவான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. எப்படியும் நான் அவனை வரவைத்து விடுவேன்” வர்மாவைப் பார்த்து நம்பிக்கையாகக் கூறினான்.

மூவரும் பேசிக்கொண்டிருக்க, ஒரு கழுகின் நிழல் சிவலிங்கத்தின் மேல் படர்ந்தது. சிறிது நேரம் சென்ற பின்னர் அந்த நிழல் நகர்ந்து வந்து சித்தராக மாறினார்.

இதெல்லாம் வெறும் மாயம் மட்டுமல்ல, அது வகை சித்தி பெற்ற நிலை என்று சேனாவும் வர்மாவும் உணரத் தொண்டங்கியிருநதனர்.

மூவரும் அவரின் அருகில் வர, பரஞ்சோதி அவர்களுக்கு முன்னேயே வரமாவிற்கு விளக்கம் அளித்தார்.

“இந்திரா, நீ எதற்கும் தயாரா?” முதல் கேள்வி கேட்க,

மனதில் கவலைகளும், சோகங்களும் இருந்தாலும் அதையும் தாண்டி சென்று பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் திண்ணமாக இருந்தது.

“ஆமாம் ஐயா. என் மனைவியில் சம்மதத்தோடு..” என அவளை அதில் கூட சேர்த்துக் கொண்டான்.

மனைவியான அவளுக்குப் தன் கணவனை நினைத்து எப்போதும் (இப்போதும்)பெருமையே..!

சரியென அவனுக்கு வழி சொன்னார்.

“ இந்த லிங்கத்தின் நீர் சூழ்ந்த பகுதி வழியே உள்ளே சென்று அடிஆழம் வரை நீந்திச்செல். அங்கே நீ இந்த லிங்கத்திற்கு வழி செய்த அந்தச் சுவர் இருக்கும். மீண்டும் உன் விரல் பதித்த அந்த ஐந்து கற்களை அங்கே பொறுத்த வேண்டும்.

அதைச் செய்தவுடன் அந்த மாயக் கதவு தோன்றும். அது தான் இந்த உலகம் ஏற்படுத்திய கடவுளின் கதவு.(star gate). கடந்து செல்வதற்க்கான கதவு என்று வைத்துக் கொள்.

அந்தக் கதவிற்குள் இந்த லிங்கத்தோடு உள்ளே நுழைந்து செல். அது உன்னை நான்காம் பரிமானத்திற்கு அழைத்துச் செல்லும்.

அங்கிருந்து பார்த்தால், இந்த அண்ட வெளி உன் கண்களுக்குப் புலப்படும். அதில் நீ எங்கு வேண்டுமானாலும் பயணப் படலாம்.

இந்த சூரியக் குடும்பம் மட்டுமல்ல, எத்தனையோ சூரியக் குடும்பங்களை உன்னால் காண முடியும்.

மீண்டும் நீ திரும்பி இந்த உலகிற்கு வருவதற்கு முன்னர் , ஒரு விஷயத்தை நினைவில் கொள்.

இந்த உலகில் பல்வேறு இடங்களில் இதே போன்ற கதவுகள் உள்ளது. அதில் நீ எங்கு வேண்டுமானாலும் திரும்பக் கூடும்.

மாறி சென்ற அந்த இடத்தில் இந்த போன்று லிங்கத்திற்கு நீ ஒரு இடம் அமைத்தால் அந்த வழி மூலம் தான் இங்கு இருக்கும் உன் சொந்த இடத்திற்கு வழி தெரியும்.” அவர் சொல்லச் சொல்ல அனைத்தையும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான் வர்மா.

“வெற்றியோடு திரும்புவாய் !” என அவனது கையில் லிங்கத்தை கொடுக்க ,

அதை அவன் வாங்காமல் ரதியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் மனம் புரிந்து ரதியே அவரிடமிருந்து அந்த லிங்கத்தைப் பெற்றுக் கொண்டாள். பின்பு வர்மாவிடம் அதைக் கொடுக்க, கண்கள் குளமாயின.

வெகுவாக சிரமப் பட்டு தன் துக்கத்தை மறைத்து , அவள் கைகளிலிருந்து அந்த லிங்கத்தை வாங்கிக் கொண்டான்  வர்மா . அவனது இடையில் இறுக்கமாகக் கட்டியிருந்த துணியில் இந்த லிங்கத்தை ஒரு புறம் வைத்துக் கொள்ள,

ரதி தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த அந்த துணிப் பையையும் எடுத்து அவனிடம் கொடுத்தாள். அதில் தான் அவன் அன்று கொண்டு வந்திருந்த ஐந்து கற்கள் இருந்தது.

அதையும் அவள் கையால் வாங்கித் தன் இடையில் சொருகிக் கொண்டான்.

வர்மா கிளம்பும் சமயம் வந்ததென ரதியை ஆறுதல் பார்வை பார்க்க, அதற்கு மேல் அவனைக் கண்டால் தடுத்து விடுவோம் என்று திரும்பி நின்று தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

அவளது தோளைத் தொடப் போனவனைத் தடுத்தான் சேனா.

வேண்டாமென கண் ஜாடை காட்ட,

மனத்தைக் கல்லாகிக் கொண்டு திரும்பி நீரில் இறங்கினான். நீரின் சலசலப்பு ரதியை கலைக்க, திரும்பி அவனை ஒரு முறை பார்ப்பதற்குள், உள்ளே குதித்துவிட்டான் வர்மா.

சித்தர் தன் கடமை முடிந்ததென அங்கிருந்து மறைய, சேனா கண்மூடி தன் நண்பனுக்காக அந்த ஈசனிடம் வேண்டிக் கொண்டிருக்க, அந்த சமயம் தன் மனம் தாளாமல் சட்டென ரதியும் நீருக்குள் குதித்து விட்டாள்.

சத்தம் கேட்ட சேனா , பதறிவிட,

“ அம்மா, ரதி! வேண்டாம் அம்மா, வெளியே வந்துவிடு….” கதறினான்.

ஆனால் அந்தக் குரலைக் கேட்பதற்கு அவள் அங்கு இல்லை. வர்மா சென்ற இடத்திற்கு தானும் சென்று கொண்டிருந்தாள்.

இதை அறியாத வர்மா , சிறிது நேரத்தில் ஆழத்தை அடைந்து , ரதி கொடுத்த கற்களை அந்தப் பாறையில் பொருத்திக் கொண்டிருக்க அந்தக் கதவு திறந்தது.

கதவைத் தொட அவன் சென்ற சமயம் ரதியும் வந்து சேர, அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவளை அங்கே சற்றும் அவன் எதிர்ப்பார்க்கவில்லை. இன்ப அதிர்ச்சியில் அவளை அனைத்துக் கொண்டான்.

எப்போதும் அவனோடு சேர்ந்து இருப்பதாக வாக்களித்தவள் இப்போதும் அதை நிறைவேற்றினாள்.

அவளையும் அழைத்துக் கொண்டு அந்தக் கதவைப் பார்க்க, ரதிக்கு அங்கே ஒன்றும் தெரியவில்லை.

“கதவு தெரியவில்லை அத்தான்” என அவள்  கவலையுற, உடனே அதற்கான மார்கத்தை யோசித்தான்.

அவளும் அந்தக் கதவைத் திறக்க வேண்டும் என எண்ண, அவளை இழுத்துச் சென்று அவளது கையை அந்த சுவரில் பொருத்திய கற்கள் மேல் வைத்தான். அந்த ஐந்து கற்கள் கீழே விழ, அதை மீண்டும் எடுத்து வைத்துக் கொண்டான்.

இப்போது ரதிக்கும் கதவு தெரிய, இருவரும் முதல் அடி எடுத்து வைத்து உள்ளே சென்றனர்.

திருவாசகம்:

பூவார் சென்னி மன்னன்எம்
புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளங் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய்
ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் கழல்புகவே.
விளக்கம்:
அழகிய பூசனை மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட சடையும்
பாம்பணிந்த புஜமும் கொண்ட எங்கள் பெருமான் 
சிறியோர் ஆகிய‌ எம் உள்ளத்திலே, 
உணர்வுமயமாகிக் கலந்து ஓயாமல் உருக்குகின்றான்.
இது கண்டு அவன் ஐயோ என இரங்கி, 
அவன் பெருங்கருணையினால் அவன் அன்பில் ஆட்பட்டீர்.
அவன் அன்பில் ஆட்பட்டவரே..
பொய் என்னும் இவ்வாழ்வு விட்டு
மெய்யாகிய எம்மிறைவன் திருவடி அடையும்
காலம் இதுவே.
அந்த‌ யாத்திரை வாருங்கள்.

 

 

 

 

MM25

மயங்காதே மனமே 25

அன்று ஞாயிற்றுக்கிழமை. வீடே மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது. சீமாவைக் கையில் பிடிக்க முடியவில்லை. மகனை மீண்டும் முழுதாகப் பார்த்த ஆனந்தத்தில் இரண்டு வயது குறைந்தாற் போல தெரிந்தார்.

நேற்று ஹாஸ்பிடல் போய்விட்டு, ஃபாக்டரியையும் பார்த்து விட்டு மதியம் போல வீடு வந்திருந்தார்கள் அபியும், கீதாஞ்சலியும். உடம்பில் எந்த விதக் கட்டுக்களும் இல்லாமல் சாதரணமாக இருந்த மகனைப் பார்த்து இப்போதும் சீமா அழுதுவிட்டார்.

இங்கப் பாரு பொண்ணே, இது சந்தோஷத்துல வர்ற கண்ணீர். அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் என்னை மிரட்டினே, எம் பையன் கிட்ட உன்னைப் போட்டுக் குடுத்துடுவேன் பாத்துக்கோ.” மிரட்டிய மாமியாரைப் பார்த்துச் சிரித்தாள் கீதாஞ்சலி.

ம்ஹூம், நான் ஒன்னுமே சொல்லமாட்டேன். நீங்க நல்லா ஆசை தீர அழுதுக்குங்க அத்தை. வேணும்னா உங்க மகனையும் சேத்துக்கோங்க.” சிரித்தபடியே சொல்லிவிட்டு, கீழேயிருந்த அவர்கள் ரூமிற்குள் போய்விட்டாள். அங்கிருந்த அத்தனை பேரும் சிரித்தார்கள். அபியும் புன்னகைத்துக் கொண்டான்.

அபி, டாக்டர் என்ன சொன்னார்ப்பா?” அன்பாய் விசாரித்த பாட்டியைத் திரும்பிப் பார்த்தான் அபிமன்யு.

டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்கபாட்டி. இனிப்ராப்ளம் இல்லைபாட்டி.” திக்கித் திணறி மெதுவாகச் சொல்லி முடித்தான் அபி.

ஆண்டவா! எங் குடும்பத்துக்கு ஒரு குறையும் வராம நீதான் காப்பாத்தணும்.” கண்கலங்க வேண்டுதல் வைத்தார் அன்னலக்ஷ்மி. சிரித்தபடியே அபியும் ரூமிற்குள் போனான்.

அபி, சாப்பிட்டுட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க. உங்க முகம் கொஞ்சம் டயர்ட் ஆனமாதிரி தெரியுது.” மனைவியின் கரிசனையில் நெகிழ்ந்தவன்

சரிடா.” என்றான்

மதிய உணவை முடித்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் கணவனின் நிர்மலமான முகத்தை கொஞ்ச நேரம் இமைக்காமல் பார்த்திருந்தவள், மாமனாரைத் தேடிப் போனாள். ஆஃபீஸ் ரூமில் ஏதோ ஃபைல் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தார் நாராயணன். இவளைப் பார்த்ததும்,

வாம்மாஉங்கிட்ட கொஞ்சம் பேசணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன், நீயே வந்துட்டே.” என்றார்.

சொல்லுங்க மாமா.”

புதுசா வாங்கின மில் ரெண்டுலயும் வேலை ஆரம்பிச்சாச்சும்மா. இனி கஸ்டமர்ஸ் கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிப்பாங்க. அதுதான் அபி ரெடியாகிட்டான் இல்லை, அவன் இனி ஃபாக்டரியைப் பாத்துக்கட்டும். நீ எங்கூட மில்லுக்கு வாம்மா.”

சரி மாமா. அபி கிட்டயும் சொல்லிடுறேன்.”

ம்நீ ஏதோ சொல்ல வந்தியேம்மா…”

மாமா, அபி மனசுல என்ன இருக்குன்னு எனக்குப் புரியலை…” சொன்ன மருமகளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார் நாராயணன்.

ஏன்? என்னாச்சும்மா?”

இன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருந்து நேரா ஃபாக்டரிக்கு போகணும்னு சொல்லிட்டாங்க. அங்க போயும் வெற்றி கூட ஏதோ தனியா பேசினாங்க. அந்த நேரம் என்னைக் கொஞ்சம் தவிர்த்த மாதிரி எனக்குத் தோணிச்சு மாமா.”

…!” நாடியை மெதுவாகத் தடவிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தார் நாராயணன்.

அபி மனசுல ஒரு வன்மம் வந்திருச்சோன்னு தோனுது. யாரு என்ன வேணும்னாலும் பண்ணட்டும். அதுக்காக நாமளும் அவங்க மாதிரியே இறங்கி அடிச்சா நல்லா இருக்காது மாமா.”

ம்…”

இதை என்னால அபிகிட்ட சொல்ல முடியலை. சொன்னா ஒருவேளை தப்பாகிருமோன்னு எனக்கு பயமா இருக்கு. கொஞ்சம் நீங்க என்னன்னு பாருங்க மாமா.”

சரிம்மா. நான் என்னன்னு பாக்கிறேன், நீ கவலைப்படாதே.” சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தார் நாராயணன்.

அன்று முழுவதும் அபி அடித்துப் போட்டாற் போல உறங்கினான். உடம்பின் பாரமா? இல்லை மனதின் பாரமா? எது இறங்கியது என்று தெரியவில்லை. யாரும் அவனைத் தொந்தரவு பண்ணவும் இல்லை.

இரவு வீடே உறங்கிய பிறகு மாடித் தோட்டத்தில் நிலவை ரசித்தபடி நின்றிருந்தாள் கீதாஞ்சலி. அபி எப்படியும் கட்டாயம் வருவான் என்று தெரியும். அதற்காகவே காத்து நின்றிருந்தாள். பின்னோடு அணைத்தவனின் ஸ்பரிசத்தில் சிலிர்த்தவள், அப்படி, நின்ற வாக்கிலேயே அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். அவள் தோளில் முகம் பதித்துக் கொண்டவன்,

அஞ்சலி…” என்றான்.

ம்…”

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஒரு பொண்ணு எங்கிட்ட ஒரு நிலாக்கதை சொன்னா.”

அப்பிடியா?” அவள் குரலில் சிரிப்பு வழிந்தது.

ம்அந்த நிலாவை அவளுக்குப் புடிச்சிருக்காம்ஆனா, ரொம்பவே தூரத்தில இருக்காம்அவளால பிடிக்க முடியாத தூரமாம்.” அவன் குரலிலிலும் சிரிப்பு இழையோடியது.

ம்அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?”

அடிப்போடி…‌ இதெல்லாம் ஒரு தூரமா? கையை நீட்டினா எட்டிப் பிடிச்சுடலாம்னு சொன்னேன்.” கொஞ்சம் கோர்வையாக தடங்கலின்றிப் பேசினான் அபிமன்யு.

இப்போ நிலாவை அந்தப் பொண்ணு பிடிச்சுட்டாளாமா என்ன?”

அப்பிடித்தான் நினைக்கிறேன் அம்மாடி.” சொன்னபடியே அவள் இடை வளைத்தான். அவள் கன்னத்தில் தன் கன்னம் வைத்து உரசினான்.

எங்கிட்ட அந்தப் பொண்ணு வேற கதை சொன்னாளே…” அவள் பேச்சில் அடிக்குரலில் அபி லேசாகப் புன்னகைத்தான்.

என்ன சொன்னா அம்மாடி?”

நிலாவோட தூரத்தைப் பாத்து பயந்து போய், இந்தப் பொண்ணு கவலைப் பட்டுக்கிட்டே ஒதுங்கிப் போயிடுச்சாம். ஆனா, அந்த நிலாதான் இந்தப் பொண்ணு மேல பரிதாபப் பட்டு, இந்தப் பொண்ணைத் தூக்கி தன் பக்கத்துல வெச்சுக்கிச்சாம்.” அவள் புனைந்த கதையில் வாய் விட்டுச் சிரித்தான் அபி. அவளைத் தன் புறமாகத் திருப்பியவன்,

அது பரிதாபப் பட்டு இல்லை அம்மாடி, மயங்கிப் போய்…” என்றபடி அவள் இதழ்களை முற்றுகை இட்டுக் கொண்டான். நீண்ட நாட்களுக்குப் பின்னான அவன் தீண்டலில் கீதாஞ்சலி மயங்கிப் போனாலும், தன்னை சுதாகரித்துக் கொண்டு மெதுவாக விலகினாள்.

அம்மாடி…?” அந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்தாலும், மனைவி தலைகுனிந்து மௌனமே சாதித்தாள். அவன் ஆரோக்கியம் மட்டுமே அவளுக்கு அப்போது பிரதானமாக இருந்தது

அஞ்சலி…”

ம்…”

நான் ஒன்னு கேக்கட்டுமா?” புன்னகையோடே அவன் முகம் நிமிர்ந்து பார்த்தாள் பெண்.

கேளுங்க அபி.”

இல்லைன்னு சொல்லாமக் குடுக்கணும்.”

உங்களுக்கு இல்லைன்னு சொல்ல எங்கிட்ட எதுவுமே இல்லையே அபி.”

பேச்சு மாறக் கூடாது.”

ம்ஹூம்மாட்டேன்…”

தருண் மாதிரி ஒரு பொண்ணு எனக்கு வேணும் அஞ்சலி…” வில்லங்கமாக ஏதோ வரப்போகிறது என்று எதிர்பார்த்திருந்த கீதாஞ்சலி, சத்தியமாக இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை. அவன் மார்பிலேயே முகம் சாய்த்துக் கொண்டாள்.

என்ன அஞ்சலி? யோசனை பலமா இருக்கு? வேணாமா?”

வேணும் அபிகண்டிப்பா வேணும்.”

அப்புறம் ஏன் பதிலே சொல்லலை?”

அதுஅபி…” அவள் கன்னச் சிவப்பில் அவன் பார்வை மாறிப்போனது. அவளையும் அழைத்துக் கொண்டு ரூமிற்குப் போனவன், கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து கொண்டான்

அவன் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டிருப்பது கீதாஞ்சலிக்கு நன்றாகப் புரிந்திருந்தது. ஏதேதோ கதைகள் பேசி, அவன் சிந்தனையை மாற்ற முயன்றவளின் வாயில் ஒற்றை விரல் வைத்துத் தடுத்தான் அபி.

நான் ஈஷ்வரன் கிட்ட எல்லாம் கேட்டுட்டேன் அம்மாடிநோ ப்ராப்ளம்ன்னு சொல்லிட்டார்டா.”

அபிஇருந்தாலும்…”

கொஞ்சம் தயவு காட்டு அம்மாடி…” போலியாகக் கெஞ்சியவனைப் பார்த்து பக்கென்று சிரித்தாள் கீதாஞ்சலி

போதுமே நடிப்புரொம்பத்தான் நான் சொல்லுறதைக் கேக்குறவர் நீங்க…” அவள் சொல்லவும் மீண்டும் அடிக்குரலில் சிரித்தவன், அதற்கு மேல் பேசவில்லை

நேற்று நடந்த அனைத்தையும் அசை போட்டபடி குளித்து முடித்து கிச்சனுக்குப் போனாள் கீதாஞ்சலி. சீமா ஏற்கனவே காஃபி தயாரித்துக் கொண்டிருந்தார்

குட் மார்னிங் அத்தை.”

குட் மார்னிங் கண்ணம்மா. அபி எந்திருச்சுட்டானா?”

இன்னும் இல்லை அத்தை.” மகனின் பெயரைச் சொன்னதும் மருமகள் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் சீமாவிற்கே ஆசை வந்தது. கீதாஞ்சலியின் கன்னத்தில் முத்தமிட்டார். அப்போதுதான் வாங்கி வைத்திருந்த பூவை அவள் தலையில் வைத்து விட்டவர், காஃபி ட்ரேயை கையில் கொடுத்தார்.

நீ அபியோட போய் சாப்பிடும்மா.”

சரிங்கத்தை.” புன்னகையோடு நடந்து போகும் மருமகளின் பின்னோடு போனது சீமாவின் கண்களும்

என்னாச்சு? எதுக்கு இப்பிடியொரு பார்வை?” கேட்டபடியே வந்தமர்ந்தார் நாராயணன். கணவனின் கேள்வியில் புன்னகைத்தார் சீமா.

அபி இந்தப் பொண்ணு கழுத்துல திடுதிடுப்புன்னு தாலி கட்டினப்போ, கொஞ்சம் வருத்தமா இருந்துதுங்க. யாரு? என்ன? நம்ம குடும்பத்தோட ஒத்துப் போவாளா? இப்பிடி எத்தனையோ கேள்வி இருந்துச்சு. ஆனா, இன்னைக்கு சொல்றேங்க. இந்தப் பொண்ணு இடத்துல வேற யாராவது இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்? என்னால நினைச்சுக் கூடப் பாக்க முடியலேங்க.” கனவில் பேசுபவர் போல பேசிக் கொண்டிருந்தார் சீமா. நாராயணனும் தலையாட்டிக் கொண்டார்.

அபி…” மெதுவாக கணவனை எழுப்பினாள் கீதாஞ்சலி.

அபிகாஃபி ஆறிடப் போகுது…” மீண்டும் ஒலித்த மனைவியின் குரலில் கண் விழித்தான் அபிமன்யு. எதிரில் தெரிந்த மனைவியின் முகத்தில் விழி பதித்தவன், லேசாகப் புன்னகைத்தான்

காஃபி…” அவள் நீட்டவும் வாங்கிக் கொண்டான்

அபிநான் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும்.” தயக்கத்தோடே ஆரம்பித்தாள் கீதாஞ்சலி. இத்தனை நாளும் மனதிற்குள் உறுத்திக் கொண்டிருந்த விஷயம். அபியிடம் சொல்லாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல இருந்தது.

சொல்லுடா.”

அன்னைக்கு ஒரு நாள்மித்ரன் சார் எனக்கு கால் பண்ணினாங்க.” தயங்கியபடியே சொன்னாள்.

என்னவாம்?” சாதாரணமாகக் கேட்டான் அபி. அவன் கோபத்தை எதிர்பார்த்தவள் அவன் நிதானம் பார்த்து திகைத்துப் போனாள். இருந்தாலும் தொடர்ந்தாள்.

இந்த ஆக்ஸிடென்ட்க்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லையாம். ஏதேதோ பேசினாங்க. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு நானும் மாறி நல்லா திட்டிட்டேன் அபி.”

ம்அப்பிடியாஉண்மையிலேயே அதை இவன் பண்ணலைடா.” சிந்தனையோடே சொன்னான் அபிமன்யு. கணவன் பேச்சில் திகைத்துப் போனாள் கீதாஞ்சலி.

அபி…! என்ன சொல்லுறீங்க? அவங்க தானே உங்களை எதிரி மாதிரி பாத்தாங்க. அப்போ அவங்க தானே பண்ணி…”

அஞ்சலிம்மாநாம வேற ஏதாவது பேசலாமே…” அவளை இடைமறித்த அவன் குரலில், சட்டென்று நிறுத்தினாள் கீதாஞ்சலி. முகம் கொஞ்சம் யோசனையைக் காட்டியது.

மித்ரன் சார் தான் இதைப் பண்ணி இருக்காங்கன்னு நினைச்சு, நான் அவங்களை ரொம்பவே திட்டிட்டேன் அபி.”

புருஷன் காரன் முதல் முதலா ஆசையா நேத்து நைட் ஒன்னு கேட்டானே, அதுக்கு ஏதாவது வழி பண்ணுவோம்னு யோசிக்காம…” சரசமான அவன் பேச்சில் நிகழ்காலத்துக்கு வந்தாள் கீதாஞ்சலி. சொல்ல வந்தது எல்லாம் மறந்தே போனது.

                          ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கண்களைத் திறவாமலேயே பெட்டைத் துழாவினான் மித்ரன். எதிர்பார்த்தது கையில் சிக்கவில்லை. ஒரு சிணுங்கலோடு கண் விழித்தவன், பக்கத்தில் மனைவியைக் காணாத ஏமாற்றத்துடன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். சரியாக அந்நேரத்திற்கு ரூம் கதவு திறந்தது.

பின்க் நிற காட்டன் புடவையில், கையில் காஃபியோடு உள்ளே நுழைந்தாள் தாமரை. புடவையின் ஹெட் பீஸ் நல்ல மஞ்சள் நிறத்தில் ஜொலித்தது. தலை நிறைய மல்லிகைப்பூ. மித்ரன் கண்கள் தெறிக்க அவளையே பார்த்திருந்தான்.

இரவின் மீதங்களே விடியலின் போதும் தொடருமோ, என்று ஒரு பதட்டத்தோடே உள்ளே நுழைந்தவள், அவன் பார்வை பார்த்து ஆச்சரியப் பட்டாள்.

அத்தான், என்னாச்சு? ஏன் அப்பிடிப் பாக்குறீங்க?”

தாமரை…! எதுக்கு இப்போ இந்த காஸ்ட்யூம்…”

புடவைன்னு சொல்லுங்க அத்தான்.”

யெஸ்யெஸ்புடவை. நான் அன்னைக்கு சொன்னதுக்காகவா?”

ஆமாநீங்க தானே புடவை நல்லா இருக்கும்னு கட்டச்சொன்னீங்க?”

அன்னைக்கு கட்டச் சொன்னேன், ஆனா இன்னைக்கு சொல்லலையே பேபி.”

ஒவ்வொரு தரமும் சொல்லணும்னு அவசியம் இல்லை அத்தான். நீங்க ஒரு தரம் சொன்னாலே நான் புரிஞ்சுப்பேன்.”

எனக்குஎன்ன சொல்றதுன்னு…” அவன் எதையோ சொல்லத் தயங்கவும், காஃபியை அவன் கையில் கொடுத்தாள் தாமரை.

எதுவா இருந்தாலும் எங்கிட்ட ஷெயார் பண்ணுங்க அத்தான்.” அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள்.

இல்லை பேபிசில நேரம் தாத்தா எங்கேயாவது வெளியே போய் வர லேட் பண்ணிடுவாங்க. நாங்க எல்லாரும் நேரத்துக்கு சாப்பிட்டிருவோம். ஆனாபாட்டி சாப்பிடாம வெயிட் பண்ணுவாங்க. எனக்கு அது அப்போ சில்லியா தோணுச்சுஆனாஇப்போ நீ காஃபி கொண்டு வரும் போதுபுரியுது.”

என்ன புரியுது அத்தான்?” 

சுகமா இருக்கு பேபி. அந்த ஃபீலிங் சொல்லத் தெரியலை பேபி…” அவன் பதிலில் புன்னகைத்தாள் தாமரை.

தாமரை, நீ குக் பண்ணுவியா?”

சுமாரா பண்ணுவேன் அத்தான். ஏன் கேக்குறீங்க?”

இல்லைடா, பாட்டிக்கு கிராமத்துல ஒரு பெரிய வீடு இருக்கு. ரொம்ப அழகா இருக்கும். பின்னால தென்னந்தோப்பு இருக்கு. அந்த வீட்டை பாத்துக்க ஒரு ஃபாமிலியை பாட்டி அரேன்ஞ் பண்ணி இருக்காங்க. நாம ரெண்டு பேரும் மட்டும், அங்க போலாமா?” கண்கள் மின்னக் கேட்டான் மித்ரன்.

போலாம் அத்தான்.”

தட்ஸ் குட் பேபி. ஒரு டூ, த்ரீ டேய்ஸ் அங்க ஸ்பென்ட் பண்ணிட்டு வரலாம். கே வா?”

ம்அப்போ ஃபாக்டரி?”

அந்தத் தடியன் என்னத்துக்கு இருக்கான்? பாத்துக்கட்டும்.” சொன்ன மித்ரனை முறைத்துப் பார்த்தாள் தாமரை. அவள் முறைப்பைப் பார்த்த பிறகே, தான் பேசியதன் அர்த்தம் உறைத்தது மித்ரனுக்கு. அவன் பேச்சில் கோபப்பட்டு ரூமை விட்டு வெளியேறப் போனவளையும் அள்ளிக்கொண்டு, பாத்ரூமிற்குள் நுழைந்தான் மித்ரன்.

சாரி பேபி, வாய் தவறி வந்திடுச்சு. இனி இப்பிடிப் பேச மாட்டேன்…” காற்றில் தேய்ந்தது அவன் குரல்.

மித்ரனும், தாமரையும் ரூமை விட்டு வெளியே வந்தார்கள். மித்ரன் ஃபாக்டரிக்குப் போக தயாராகி இருந்தான். நானும் வருகிறேனே என்று கேட்ட தாமரையைத் தவிர்த்திருந்தான். மேலும் மேலும் அவள் கதிர் விடயத்தில் ஏமாந்து போவதை மித்ரன் விரும்பவில்லை.

நேராக டைனிங் டேபிளை நோக்கிப் போனவர்கள், கொஞ்சம் அதிர்ந்தாற் போல நின்று விட்டார்கள். ஏனென்றால் அங்கே ராஜேந்திரனும், சுலோச்சனாவும் அமர்ந்திருந்தார்கள். தாமரை கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.

தாமரை, எனக்கு லேட் ஆகுது. கொஞ்சம் சீக்கிரமா பரிமாறு.” சொல்லிவிட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தான் மித்ரன். யாரையும் அவன் கண்டு கொள்ளவில்லை. அவளை எதையும் சிந்திக்க விடாமல்,

இட்லி இன்னும் ஒன்னு வை, சாம்பார் கொஞ்சம் ஊத்து.” இப்படிச் சொல்லியபடியே உணவில் கவனமாக இருந்தான்.

மித்ரா…” சுலோச்சனா மகனை அழைத்தார். சோஃபாவில் அமர்ந்த படியே பேப்பர் படித்துக்கொண்டிருந்த மதுராந்தகனும், மித்ரனோடு சேர்ந்து அண்ணாந்து பார்த்தார். அம்மாவின் முகத்தைப் பார்த்த போதே மித்ரனுக்குப் புரிந்தது, அவர் ஏதோ வம்பு பண்ணப் போகிறார் என்று.

இல்லைஇந்தப் பொண்ணு உனக்கு என்ன முறையாகணும்?” சுலோச்சனா கேட்ட கேள்வியில் சாம்பார் பரிமாறிய தாமரையின் கை அப்படியே நின்றது. கிச்சனில் வேலையாக நின்ற ஜெயந்தி கூட சட்டென்று வெளியே ஓடி வந்தார். மதுராந்தகனின் கண்கள் தெறித்து விடும் போல நிலைகுத்தி நின்றன. ராஜேந்திரன் மௌனமாக அமர்ந்திருந்தார். ஆனால், மித்ரன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை

தாமரை சட்னி வை…” என்றவன்,

ஆங்என்னம்மா கேட்டீங்க? தாமரை பத்தியா கேட்டீங்க? எனக்குத் தெரிஞ்சு, உங்க புருஷன் உங்க கூட மட்டும்தான் குடும்பம் நடத்தி இருக்காரு. இவங்க அம்மா கூடவும் குடும்பம் நடத்தி இருக்காரான்னு, நீங்க தான் கேட்டு சொல்லணும்.” என்றான்

மித்ரன் சொல்லி முடிக்கவும் டேபிளில் இருந்த ப்ளேட் பறந்தது. அடித்து வீசியது வேறு யாருமல்ல. ராஜேந்திரன் தான். இத்தனை நாளும் இப்படி நடந்து கொள்ளாத கணவனின் செய்கையில் ஆச்சரியமாகப் பார்த்த படி அப்படியே அமர்ந்து இருந்தார் சுலோச்சனா. கண்களில் கொஞ்சம் குரோதம் வழிந்தது.

 

KVK-Final

அவன் சென்றதும் உள்ளே வந்தாள் சுஜா.
“ என்னடி ஆச்சு, சித்து வெளில தான் இருக்காரு. எப்படி யாரும் எதுவும் கேட்காம இருக்காங்க ? சரி அத விடு . இவரு என்ன சொன்னாரு? ? நீ இவரு போட்டோ காட்டவே இல்ல.. ஆனா ஆளு செம்ம ஸ்மார்ட் டீ.. எப்படி தான் வேண்டான்னு சொன்னியோ…ஹ்ம்ம்ம்” அவள் பெருமூச்சு விட,
“ அடியேய் ! அவன் இந்தக் கல்யாணம் நடக்கும்ன்னு என்கிட்ட சவால் விட்டுப் போறான். சித்துவ ஒரு கை பாக்கறேன்னு சொல்லிட்டுப் போறான். நான் சித்து கிட்ட பேசணும். வீட்டு பின்னாடி வழியா சித்துவ வர சொல்லு. “ அவளைத் துரத்தினாள்.
யுவா தன் நாடகத்தைத் தொடர்ந்து நடத்தினான். சித்துவிடம் சென்று, “ ஒன்னும் பிரச்சனை இல்லை.. நான் எல்லாம் பேசிட்டேன். உனக்கும் அவளுக்கும் தான் இன்னிக்கு நிச்சயம். இந்தக் கல்யாணம் நிச்சயமா நடக்கும் அப்டின்னு சொல்லியிருக்கேன். அவ கேட்டா நீயும் அதையே சொல்லு. பாவம். நான் அம்மா கிட்ட பேசிக்கறேன்.” யுவா சொல்ல, பெரிய நிம்மதி அடைந்தான் சித்து.
பின் சுஜா சுந்தருக்கு போன் செய்தாள். சித்து வை பின் பக்கமாக அழைத்து வரச் சொன்னாள். அவனும் சித்துவை அழைத்துக் கொண்டு சென்றான். அதற்குள் யுவா இங்கு மலரிடமும், பார்வதியிடமும் விஷயத்தைச் சொன்னன்.
“ சித்து வும் சக்தியும் விரும்பறாங்க. சோ , இப்போ அவங்களுக்கு நிச்சயம் பண்ணிடுங்க.” இருவரையும் பார்த்துச் சொல்ல,
“ ஓ! இந்தப் பெண் தானா அது, அப்போ நீ லவ் பண்ற பொண்ணு?!” பார்வதி கேட்க,
“ அவ பேர் ஆராதனா! “ மலரைப் பார்த்துக் கொண்டே சொல்ல,
“ உன்னோட பி ஏ வா டா?? ஏன்டா முன்னாடியே சொல்லல, நல்ல வேளை இப்போவாவது சொன்னியே!” மலர் அவனை முறைத்துக் கொண்டே கேட்டார்.
“ ஆமாம்மா அவ தான். நான் நீங்க அவள தான் நிச்சயம் பண்ணப் போறீங்கன்னு நினச்சேன். எங்கயோ சின்ன கன்ஃப்யூஷன், இனிமே ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. நான் அவங்க நம்பர் தரேன். அவ அப்பா கிட்ட பேசிடுங்க. இங்க நடந்தது தெரியாம அவங்க நான் சொன்னதை வெச்சு ரெடியா இருப்பாங்க.” சொல்லிவிட்டு, கதிருக்குப் போன் செய்யச் சென்றான்.
ஜானகி எதுவும் புரியாமல் விழிக்க, மலர் எழுந்து சென்று விவரம் சொன்னார்.
“அப்பாடா! இப்போ தான் கொஞ்சம் நிம்மதியாச்சு. என் பொண்ணு முன்னாடியே என்கிட்ட சொன்ன, ஆனா அவ

அப்பாவ சமாளிக்க முடியல, அதுனால தான், எதுவும் இப்போ பேச முடியல. சித்துவும் உங்க பையன் தான் அதுனால இப்போ எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சுது.” ஜானகி மிகவும் மகிழ்ந்தார்.

வெளியே அனைத்தையும் ஸ்ரீநிவாசனுக்கு விளக்கிக் கொண்டிருந்தார் மனோகர். எப்படியும் அவர் பேசிய சம்மதிக்க வைத்துவிடுவார்.
யுவா, கதிருக்குப் போன் செய்து ஆராதனா வீட்டிற்குச் சென்று அவளின் தந்தையை சற்று சமாதனப் படுத்தச் சொன்னான். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு இருப்பதாகச் சொல்லச் சொல்லி அவனை அங்கே அனுப்பினான்.
வெளியே நின்று பேசிக்கொண்டிருந்ததால், எங்கோ சித்துவின் குரல் கேட்க, பின் வழியே சென்று பார்த்தான்.
அங்கே சித்துவும் சக்த்தியும் எதிர் எதிரே நின்றுகொண்டிருந்தனர். சற்றுத் தள்ளிச் சுஜாவும் சுந்தரும் நின்று தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். யுவா தொலைவில் நின்றே நடப்பதைப் பார்த்தான்.
“ அவர் சொன்ன மாதிரி இந்த நிச்சியம் கண்டிப்பா நடக்கும்.” அடித்துக் கூறினான் சித்து.
“ என்ன சொன்ன, ? அப்போ நம்ம கல்யாணம்?!” புரியாமல் சக்தி கேட்டாள்.
“ நம்ம கல்யாணம் இப்போ வேண்டாம், ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணிக்கலாம்.” சிரித்துக் கொண்டே சொன்னான்.
“ ஹே! என்ன சொல்ற?! “ தலையில் கை வைத்துக் கொண்டு அங்கே இருந்த கல்லில் அமர்ந்தாள் சக்தி.
“ என்ன? வேண்டாமா! சரி ஒரு வருஷம்? அண்ணன் கல்யாணம் முடிஞ்சு அதுக்கப்றம் நாம பண்ணிக்கலாம்.” அவன் சொல்லிக்கொண்டே போக,
‘இந்தப் பையன் கூட நிச்சயம் நடக்கும்ன்னு சொல்றான், அப்புறம் இவன் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றான். இவன் என்ன லூசாயிட்டானா?’ மனதில் குழம்பினாள். இன்னும் அவளுக்கு யுவா தான் அண்ணன் என்று விளங்கவில்லை பாவம்.
“ ஸ்டாப் இட் சித்து…” கத்தினாள்.
அதற்குள் சுஜாவிற்கு அனைத்தையும் சொல்லியிருந்தான் சுந்தர். அவளும் நடப்பதை வேடிக்கைப் பார்த்தாள்.
சித்து புரியாமல் அவளையே பார்க்க,
“ எனக்கு ஒண்ணுமே புரியலை. முதல்ல உள்ள ஒர்த்தன் உட்கார்ந்துட்டு இருக்கானே அவன வெளில அனுப்பு, அதுக்கப்றம் வந்து பேசு.” கோவமானாள்.
“ அவர் ஏன் வெளில போகணும். என்ன சக்தி பேசற?” சித்து கேட்க,
“ அவன் என்கிட்டே வந்து உன்னையும் உங்க அண்ணனையும் பாத்துக்கறேன்னு சொல்றான். நீ என்னடா னா இன்னிக்கு அவன் கூட நிச்சியம் நடக்கும்னு சொல்ற.. “ சக்தி சொல்லியவுடன் ,
சுந்தர் , சுஜா , சித்து மூவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். தொலைவில் நின்ற யுவாவும் அவளின் நிலையை நினைத்துச் சிரித்தான். அவளைப் பார்க்க பாவமாகவும் இருந்தது.
இவர்கள் சிரிப்பதில் அவளுக்கு எரிச்சல் தான் வந்தது.
“ என்ன நடக்குதுனு கொஞ்சம் சொல்றீங்களா?” கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் கேட்க,
மூவரும் சிரித்து முடித்த பாடில்லை.

“ நான் சொல்றேன்.” யுவா வந்தான். சித்து அவனை ஓடிச்சென்று அணைத்துக் கொள்ள,
சக்திக்கு மண்டையே வெடித்துவிடும் போல இருந்தது.
“ இவர் தான் என்னோட அண்ணன் யுவராஜ்.” சித்து சொல்ல,
நிலைமையை உணர்ந்து தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள். அப்போது தான் தன்னை வைத்து அங்கே நடந்த விளையாட்டு புரிந்தது அவளுக்கு.
“ முதல்ல உன்கிட்ட நடந்த குழப்பத்தை எடுத்துச் சொல்லத் தான் வந்தேன். அப்புறம் நீ சித்துவை லவ் பண்றேன்னு சொன்னதும், கொஞ்சம் விளையாட்டுக் காட்டலாம்னு தோணிச்சு. அதான் அப்படி பேசினேன். டோன்ட் டேக் இட் சீரியஸ்.” சொல்லிவிட்டு சித்துவைப் பார்த்து
“ உள்ள கூட்டிட்டு வா” என கூறிச் சென்றான். அனைவரும் உள்ளே சென்றதும்,
சித்து அவள் நின்ற கோலத்தை ரசித்தான். அழகாகப் புடவை கட்டி நகை அணிந்து தன் முகத்தை மட்டும் மூடிக் கொண்டு நின்றாள். அவள் அருகே சென்று அவள் கையை எடுக்க, அவனைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்ள,
அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பி அவளது இரு தோள்களிலும் தன் கையை மாலையாகக் கோர்த்து நின்றான்.
“ சகி!”
“……”
“ என்னைப் பாரு..”
“ம்ம்ம்ம் ஹும்ம்” அவள் மறுப்பாகத் தலையசைக்க
“பாருடி”
லேசாக அவள் நிமிர்ந்ததும்,
“ இப்போவே என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ !”
நிமிர்ந்து அவனை ஆச்சரியமாகப் பார்க்க, அவன் அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
உதட்டைச் சுழித்துக்கொண்டு, “ இப்போ தான் ஒரு வருஷம் கழிச்சு பண்ணிக்கலாம்னு சொன்ன… “ என கேட்க,
“ ஒரு வருஷம் ரொம்ப கஷ்டம் போலிருக்கு. தாங்காது..”
“ ஏன்!”
“ உன்னை இப்படி பாத்துடே எவ்ளோ நாள் ‘வெஜிடேரியனா’ ஓட்ட முடியும். எனக்கு ‘நான் வெஜ்’ வேணும்டி.. “
“ ம்ம்ம்… நோ! இப்போதிக்கு வெஜ் தான். அதுவே ஜாஸ்தி”
“ உன்கிட்ட யார் இப்போ பெர்மிஷன் கேட்டா….”
அவள் முகத்தைத் தன் இரு கைகளாலும் இறுகப் பற்றி அவளது இதழ்களை அவன் விருப்படி ருசித்துக்கொண்டிருந்தான். அவளும் மனம் முழுதும் நிறைவுடன் தன்னவனின் செயலை ரசித்துத் தானும் அதில் ஐக்கியமானாள்.
உள்ளே அனைவரும் சம்மந்தம் பேசி முடித்தனர். யுவாவின் திருமணம் முடிந்த பிறகு, ஒரு வருடம் கழித்து அவர்களின் திருமணம் என நிச்சயம் செய்தார்கள்.
வெகுநேரம் இருவரையும் காணாமல் சுந்தரும் சுஜாவும் அங்கே வர,
நடப்பதை முதலில் கண்ட சுந்தர், சுஜாவை வந்த வழியே திருப்பி அழைத்துப் போனான். “ என்ன அவங்கள கூப்பிட வேணாமா? எவ்வளவு நேரம் பேசுவாங்க?” சுஜா கேட்க,
“ வா வா ! அவன் வருவான். நீ அங்க போனா நான் காலி. முதல்ல படிக்கற வேலையப் பாரு!” அவளைத் தள்ளிக்கொண்டே வர, அவளும் புரியாமல் நடந்தாள்.
அவர்களின் சத்தம் கேட்டுச் சித்துவும் சக்தியும் உள்ளே வந்தனர். ஸ்ரீநிவாசன் தன் மகளின் சந்தோஷமும் தன் விருப்பமும் ஒருங்கே நடந்ததில் மகிழ்ச்சியடைந்தார். சித்துவை தன் மகளுடன் நிற்க வைத்து அழகு பார்த்தார்.

அனைவரும் விடைபெற்று ஆராதனாவின் வீட்டிற்குச் சென்றனர். கதிர் அங்கே நிலமைய எடுத்துச் சொல்லிப் புரியவைத்திருந்தான். ஆராதனா வின் தந்தை ஏற்கனவே யுவாவைத் தன் மருமகனாக ஏற்றுக்கொண்டு விட்டார். அதனால் எந்த வித தடங்கலும்இல்லாமல் அவர்களின் நிச்சயம் முடிந்தது.
அடுத்த பத்து நாட்களில் அவர்களின் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.
யுவா எப்போதும் போல மறுநாள் தன்னுடைய அலுவகத்துக்குச் செல்ல, ஆராதனா வும் அங்கே ஆஜராகி இருந்தாள்.
கம்பெனியில் அனைவருக்கும் விஷயம் பரவ, அவளை வந்து வாழ்த்தினர் அனைவரும். கதிர் தன் நண்பனிடம் சென்று அவனைக் கட்டிக்கொண்டான்.
“ யுவா! கங்ராஜூலேஷன்ஸ்! இப்போ தான் எனக்குச் சந்தோஷமா இருக்கு. ரெண்டு விஷயத்துல. ஒன்னு ஆராதனா. ரெண்டாவது உங்க அப்பா.. ஹாப்பி டா… “

“ தேங்க்ஸ் கதிர். நானும் ஹாப்பியா இருக்கேன். எங்க அம்மாவை நினைச்சு. இத்தனை நாள் நான் பாக்காத சந்தோஷம் அவங்ககிட்ட இப்போ பார்க்கறேன். இதுக்கு நீயும் ஒரு காரணம். தேங்க்ஸ் டா” மனதார சொன்னான்.
“ கல்யாண வேலைய எனக்குப் பாதி குடுத்துட்டாரு மாமா.. நான் அதப் போய்ப் பாக்கறேன். உனக்கு இப்போ என்ன வேலை?” கதிர் கேட்க
“ அப்பா கம்பெனியும் நம்ம கம்பனியும் கம்பைன் பண்ணனும். அதுக்கு லீகலா சில விஷயம் பண்ணனும். அது தான் பாத்துட்டு இருக்கேன். சித்துகிட்ட சில வொர்க் குடுத்திருக்கேன். சோ அதை எல்லாம் தான் இப்போ பார்க்கறேன். சரி நீ கிளம்பு… “ அவனிடம் சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினான்.
ஆராதனா, கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தாள். கையில் காஃபியுடன் அவனைப் பார்க்க, அவளைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தான். அவளுக்குக் கோபம் வர,
காஃபியை வைத்துவிட்டு திரும்பி நடந்தாள். மெலிதாகச் சிரித்துவிட்டு தன் வேலையை முடித்துவிட்டு, அவளை மீண்டும் இன்டெர்காமில் அழைத்தான்.
அவள் கோபமாக உள்ளே வர, அந்த அறையில் அவனைக் காணவில்லை.
அவளுக்குப் பின்னால் நின்று கதவைத் தாழிட்டான். அப்போதும் அவள் முறுக்கிக் கொண்டே நின்றாள்.
“ என்ன கோபமா?” அவளை ஒரு இழுப்பில் இழுத்துக் கட்டிக்கொண்டான்.
நிச்சயம் ஆனதிலிருந்து அவள் புடவை தான் கட்டினாள். அதனால் இப்போது அவன் கைகளில் நெளிந்து கொண்டிருந்தாள். அவன் கைகள் அவள் புடவைமேல் எங்கெங்கோ படற அவளின் கோபம் இப்போது எங்கே சென்றதென்று அவளுக்கே தெரியவில்லை.
அவள் கழுத்து வளைவில் முகம் வைத்து அவள் காதில் மெல்லப் பேசினான். “ கோபமானு கேட்டேன்”
அவள் இந்த உலகத்தில் இருந்தால் தானே அதற்குப் பதில் சொல்ல! அவனது அருகாமையும் அவனது செயலும் அவளை மேலும் அவனோடு ஒட்டவைத்தது. அவளது கழுத்தில் தன் இதழ் பதித்தான். அவள் அவனது கைகளில் குழைந்து கொண்டிருந்தாள். அவனது முத்த மழை அவள் முகமெங்கும் பொழிய, அவளுள் இருந்த காதலும் தூண்டப்பட்டது.
இப்போது அவள் இத்தனை நாள் தேக்கி வைத்திருந்த காதலை அவன் மேல் பொழியத் தொடங்கினாள். அவனது நெற்றியில் தொடங்கி கண், கண்ணம் தாடை என வாரி வழங்கினாள்.
அவனது இதழை நெருங்கும் நேரம் , அங்கிருந்த கடிகாரம் ஒலி எழுப்ப , இருவரும் சட்டென விலகினார்கள்.
இருவரும் மூச்சு வாங்க நின்றனர். இதழோரம் சிரிப்போடு அவளைப் பார்க்க, அவள் அவனைப் பார்க்கவும் முடியாமல் கண்ணை இருக்க மூடினாள்.
கல்யாண நாளும் வந்தது. அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தனர். சித்து தன் அண்ணிக்கு டிபன் எடுத்துக்கொண்டு அவள் அறைக்குச் சென்றான். அவளுக்குத் தலை அலங்காரம் செய்துகொண்டிருந்தனர்.
“வாவ்! அண்ணி என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. யூ ஆர் சோ பியூட்டிஃபுல். அண்ணா பாத்தான்… அவ்ளோ தான்.. “ அவளின் முன் இருந்த டேபிள் பொருந்திய கண்ணாடியில் அவளைப் பார்த்துச் சொன்னான்.

“ உங்க அண்ணனா.. அவனுக்கு ரியாக்ஷன் கம்மி சித்து.” அவள் நெற்றிச் சுட்டியைச் சரி செய்து கொண்டே சொல்ல,
“ நோ அண்ணி.. இனிமே அவன் இவன் என்ற ஏக வசனம் கூடாது. அவர்ர்ர் இவர்ர்ர்ர்னு மரியாதையா சொல்லணும்… ஓகே! இப்போ சமத்தா வாயைத் திறங்க” அவளின் முன் வந்து நின்று அவளுக்குச் சிறிது பொங்கலை ஊட்டினான்.
“ நல்ல வேலை.. லிப்ஸ்டிக் போடறத்துக்கு முன்னாடி வந்த… “ சாப்பிட்டுக் கொண்டே சொல்ல,
“நீங்க போட்டிருந்தாலும் நான் குடுத்திருப்பேன்”
இருவரும் கதை பேசிக்கொண்டே அவளுக்குப் பொங்கலைக் குடுத்து முடித்தான்.
“சரி உங்க ஆள் என்ன பண்றாருன்னு பாக்கறேன். பை” அங்கிருந்து ஓடினான் யுவாவிடம்.
அவன் அங்கே கதிருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். சித்து உள்ளே வர,
“ எங்க டா போன.. உன்ன காணும்னு உன் மாமனார் வந்தாரு. “
“ மிஸ்ஸஸ் யுவராஜ் க்கு டிபன் குடுத்துட்டு வரேன். என் மாமனார் வந்துட்டாரா? அப்போ சக்தி வந்திருப்பாளே!.. எதாவது வேணும்னா கதிர் அண்ணாவ கேளுங்க.. ஒரு முக்கியமான வேலையிருக்கு வந்துடறேன்.” அங்கிருந்து ஓட நினைக்க,
அவனைத் தடுத்தான் கதிர். “எங்க போற.. சக்தி வரலையாம்” கதிர் சொல்ல,
“ அண்ணா , இந்த டூபெல்லாம் நம்ம கிட்ட வேணாம். அவ கிளம்பரப்ப எனக்கு மேசெஜ் அனுப்பிட்டா.. நான் வரேன்!” சக்தியைப் பார்க்கச் சென்றான்.
சக்தி அன்று சிம்பிளாக ஒரு பேபி பிங்க் நிற டிசைனர் புடவையில் , ஃப்ரீ ஹேர் விட்டு மாடனாக வந்திருந்தாள். பார்த்ததும் அவனைக் கட்டுப்படுத்த சிரமப் பட்டான். தூரத்தில் இருந்தே அவளுக்குப் போன் செய்தான். அவளும் உடனே எடுக்க,
“ எங்க டா இருக்க, உன்னப் பார்க்க முடியல?” கண்களால் அந்த மண்டபத்தைச் சுற்றித் தேடிக்கொண்டே கேட்டாள்.

“ ஏன் டீ என்ன படுத்தற. ? நான் அன்னிக்கே சொன்னேன், உன்னைப் புடவைல பாத்தா எனக்கு ‘நான் வெஜ்’ வேணும்னு. நீ வேணும்னு தான்டி என்ன சீண்டிப் பார்க்கற “ அவளைப் பார்த்துக்கொண்டே பேச,
“ முதல்ல நீ எங்க இருக்கனு சொல்லு?”
“ நீ மேல இருக்கற ரெண்டாவது ரூம்க்கு வா” சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.
அவளும் அவனைப் பார்க்கும் ஆசையில் மேலே சென்றாள். அந்த அறையில் இவள் முதலில் செல்ல பின்னால் சித்து வந்து வந்து அவளைக் கட்டிக்கொண்டான்.
“ ஹே சித்.. புடவைய கலைச்சிடாத…” கிசுகிசுப்பாகச் சொல்ல
“ அப்போ கழட்டி வெச்சிடு..” யோசிக்காமல் சொன்னான்.
“ ச்சீ! டர்டி ராஸ்கல்..விடு டா..” சிணுங்கலுடன் சொல்ல,
“சும்மா இருக்கறவன சீண்ட வேண்டியது அப்பறம் என்னையே திட்ட வேண்டியது. உன்னை இன்னிக்கு விடறதா இல்லை.”
அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவளையும் மடியில் அமரவைத்தான். அவள் ஒருபக்கமாக அமர்ந்தாள்.
அவளது இடையைக் கட்டிக்கொண்டு அவள் நெஞ்சில் சாய்ந்து கண் மூடினான். எதுவும் பேசாமல். அவளும் அவனது முதுகில் கைவைத்து அவனை அணைத்துக் கொண்டாள்.
“ தூக்கமா வருது சகி.. “ குழந்தை போலப் பேசினான்.
“ தூங்கு டா பேபி!” அவன் தலையை வருடிக் கொடுத்தாள்.

 

அவளும் கண்மூடி அவன் தலைமேல் சாய்ந்திருக்க, சிறிது நேரம் கழித்து எழுந்தான். சட்டென அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்.
“ வா போகலாம். இந்த ஒரு தடவ எக்ஸ்கியூஸ்.. நேக்ஸ்ட் டைம் சும்மா இருக்க மாட்டேன்.. “ சொல்லிவிட்டு கண்ணடித்தான்.
அவள் திரும்பி நடக்க, ஒரு நிமிஷம் இங்கேயே இரு, சொல்லிவிட்டு வெளியே சென்று இரண்டு நிமிடத்தில் மீண்டும் வந்தான். கையில் பூவுடன்.
“ திரும்பு” அவளுக்குத் தானே பூவை வைத்தான்.
அவள் அவனது செயலை ரசித்தாள். அவனைக் கட்டிக்கொண்டு பின் “ போகலாமா” என்றாள்.
இருவரும் சென்று மணமக்களை அழைத்து வந்தனர்.
யுவாவை பட்டு வேட்டியில் பார்த்து மனம் கிறங்கினாள் ஆராதனா. யுவாவும் அவளைச் சர்வ அலங்காரத்துடன் பார்த்துச் சொக்கி நின்றான். அன்றொரு நாள் அவளைப் பட்டுபுடவையில் பார்த்தது நினைவுக்கு வர, அவளைப் பார்வையாலேயே விழுங்கினான்.
இருவரும் அருகில் அமர்ந்து மந்திரம் சொல்லி , ஓமம் வளர்த்தனர். ஆராதனா மனம் முழுதும் அவனைத் தாங்கி அந்த இனிமையான தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
கெட்டிமேளம் கொட்ட , ஐயர் மந்திரம் சொல்ல, பெற்றோர்கள் ஆசியுடன் கையில் தாலியை எடுத்தான் யுவராஜ்.

அவள் குனிந்து அமர்ந்திருக்க அவள் கழுத்தில் தாலி கட்டினான். அப்போது அவள் காதில் கேட்குமாறு “ ஐ லவ் யூ ஆரு!” என்றான்.
கண்ணீர் வழிய அவனைப் பார்த்தாள் ஆராதனா. அவள் கண்ணீரைத் துடைத்து, அவள் நெற்றியில் குங்குமம் வைத்தான். மனம் நிறைந்தது இருவருக்கும்.
இனிதே நடைபெற்றது திருமணம்.
அனைவரும் இப்போது மனோகரின் இல்லத்தில் புதுமணத் தம்பதிகளோடு வந்தனர்.
அனைத்து சடங்குகளும் முடிந்த பின் , யுவா அவனது வீட்டில் அன்றிரவு தங்க முடிவு செய்திருந்தான். அதற்காகச் சித்துவை ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தான்.
ஆராதனாவை அழைத்துக் கொண்டு தன் வீடு வந்து சேர்ந்தான். வீடு முழுதும் அலங்காரம் செய்திருந்தான் சித்து. அவர்கள் வந்ததும் அவர்களை வரவேற்று தான் கிளம்புவதாகச் சொல்லிக் கிளம்பினான்.
யுவா சித்துவை தனியே அழைத்து “ தேங்க்ஸ் டா” என்றான்.
“ ஹலோ அண்ணா, இதெல்லாம் நீ எனக்குத் திருப்பிச் செய்யனும். “ என்று சொல்ல, அவன் தலையில் தட்டினான்.
“ ஆல் தி பெஸ்ட். சொதப்பாதீங்க…” சித்து சொல்ல,

“ நீ மட்டும் தான் காதல் மன்னனா.. போடா” சிரித்துக் கொண்டே சொல்ல, சித்து கிளம்பினான்.
அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்தான்.
ஆராதனா வீட்டின் அலங்காரத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். அங்கே மாட்டாப் பட்டிருந்த யுவா வின் புகைப்படம் அவளை மிகவும் ஈர்க்க, அங்கேயே நின்றுக்கொண்டிருந்தாள்.

மெதுவாக வந்த யுவா, அவளைப் பூப் போலக் கையில் ஏந்தினான். அவள் அவனை ஆச்சரியமாகப் பார்க்க,
அவளைத் தூக்கிக் கொண்டு அவன் அறைக்குச் சென்றான்.
“யுவா! “
“ஷ்ஷ்ஷ்..” யுவா சொல்ல,
யுவா அவளை இறக்கிவிட்டான். இன்னும் அவள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை. அதற்குள் அவள் தனது அலமாரியிலிருந்து ஒரு அழகிய பெட்டியை எடுத்து வந்தான். அதை அவளிடம் நீட்ட,
“என்ன இது?”
“பிரிச்சுப் பாரு”
மெதுவாக அதைப் பிரித்தாள். அதில் ஒரு இள நீல நிறத்தில் ஒரு டிரஸ் இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தவள் அசந்து போனாள்.
அது அவள் அன்று ஒரு காகிதத்தில் வரைந்து இருந்த மாடல் டிரஸ். அவன் அதை வாங்கிப் பார்த்தான் தான். ஆனால் அதை வடிவமைத்துக் கொடுப்பான் என்று நினைத்துக் கூடப் பார்க்க வில்லை.

பேச்சின்றி அவனைப் பார்க்க,
“ போய்ப் போட்டுட்டு வா..”
அவன் சொல்வதை கேட்டு இயந்திரம் போல அனைத்தும் செய்தாள். அதை அணிந்து கொண்டு வந்தாள். அவளை உச்சி முதல் பாதம்வரை பார்வையால் அளந்தான்.
அவள் அருகில் வந்து அந்த மேற்க்கத்திய உடைக்கு ஏற்ப அவளது தலைமுடிய மாற்றினான். வரும்போது பூவைத்துப் பின்னியிருந்தாள். முதலில் பூவை எடுத்துவிட்டு அவளது தலையைக் கலைத்து , கூந்தலை விரித்து விட்டான்.
அவளை அந்த ஆளுயரக் கண்ணாடியின் முன் நிறுத்தினான். அவளுடன் சேர்ந்து அவள் அழகை ரசித்தான். அவனது அன்பால் அவள் கண்ணில் நீர் வரக் காத்திருந்தது.
அவளைத் தன் புறம் திருப்பி “ நோ க்ரைஸ். இனிமே நீ எதுக்கும் கலங்கக் கூடாது. ஐ அம் டோட்டல்லி யூவர்ஸ்”
அவனை அணைத்துக் கொண்டு மீண்டும் முத்த மழையில் அவனை ஆழ்த்தினாள்.
“ வெயிட்” என்றான்.
அவள் புரியாமல் பார்க்க…
அங்கே இருந்த கடிகாரத்தை எடுத்துச் செல்லைக் கழட்டி வைத்தான்.

ஆராதனா சிரிக்க, இப்போது அவளைச் சிரிக்கவிடாமல் அவள் இதழ்களில் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்தே அவளை விடுவித்தான். வெட்கப் பட்டு ஜன்னலருகே சென்று நின்றாள். அவனும் அட்டை போல் அவளோடு ஒட்டி நின்றான். நிலவின் வெளிச்சம் அந்த அறையில் பட அங்கிருந்த மலரின் வாசனை அவர்களை எங்கோ இழுத்துச் சென்றது.அந்த நீல உடையில் அவள் ஜொலித்தாள்.
“ஆரு! நான் உன்னை ரொம்ப நாள் காக்க வெச்சிட்டேனா?” அவளைவிட்டு ஒரு நொடியும் விலகாமல் நின்றான்.

“ அது கூட எனக்கு சுகமா தான் யுவா இருந்துச்சு .. “ அவளது ஒவ்வொரு பேச்சுக்கும் அவளுக்கு முத்திரை பத்தித்தான். விரல் நகம் கூட விடாமல்!
“ ஐ அம் சாரி ஆரு! எல்லாத்துக்கும் சேர்த்து உன்னை …..” அதற்குமேல் அங்கே பேச்சில்லை.

 

        உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
   முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா
   உன் இடையோடு நடமாடும் உடையாக
   நான் மாறி எந்நாளும் சூடேறவா
   என் ஜென்மம் ஈடேறவா…

அந்த இரவு அவர்களுக்கு தூங்கா இரவாக, வாழ்வின் மறக்க முடியாத இரவாக மாறிப் போனது.

 

 

ஒரு வருடம் கழித்து யுவா கையில் குழந்தையுடன் மீண்டும் மணமேடையில் ஆராதனவோடு நின்றான்.
மங்கள வாத்தியங்கள் முழங்க, பெற்றறோரின் ஆசியுடன், மிகவும் மகிழ்ச்சியோடு , சித்து சக்தியின் கழுத்தில் தாலி கட்டி அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான்.
சுந்தரும் சுஜாவும் அடுத்த மாதம் கல்யாணம் செய்வதாக் சொல்ல, “ சுஜா க்கு வேலை கிடைச்சிடுச்சா “ என்றாள் சக்தி.
“அவளுக்கு வேலை கிடைச்சு தான் கல்யாணம்னா வாழக்கை முழுக்க நான் பிரம்மச்சாரி தான். வீட்ல சம்மத்திச்சுட்டாங்க, அதான் போனா போகுத்துன்னு விட்டுட்டேன்.” சுந்தர் அவளைக் கிண்டல் செய்தான்.
அனைவரும் சிரிக்க, அங்கே மகிழ்ச்சி பொங்கியது. அவர்கள் வாழ்வில் இனி எதற்காகவும் காத்திருக்க வேண்டாம். அவர்கள் காத்திருந்த காதல் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.

 

யுவராஜ் சித்துவின் ஒப்பந்தப் படி இப்பொழுது யுவராஜ் அவனது வீட்டைச் சித்துவின் முதலிரவுக்கு அலங்காரப் படுத்திக் கொண்டிருந்தான். ஆராதனாவும் அவனுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
யுவா பூக்களை வைத்துத் தோரணமாக அந்த அறை முழுதும் கட்டிக்கொண்டிருந்தான். நெற்றியில் வியர்வை வழிய அவன் வேலை செய்வதைப் பார்த்த ஆராதனா,
“யுவா, எப்படி இருந்த நீங்க எப்படி மாறிட்டீங்க?” இழுத்து சொருகிய சேலையுடன் தட்டில் பழங்களை அடுக்கி வைத்துக் கொண்டு கேட்டாள்.
“ என்னடி நக்கலா?” அவளை முறைக்க
“ இல்ல கம்பனில உங்களப் பார்த்து ஸ்ட்ரிக்ட் ஆபீசர்னு பயப்படுவாங்க, ஆனா இப்போ இங்க வந்து பாத்தா தான் தெரியும் “ அவனைக் கிண்டல் செய்ய,
அவள் நின்றிருந்த கோலம் அவனை ஈர்க்க ,வேகமாக அவள் அருகே வந்தவன், அவளது இடையில் சொருயிருந்த சேலையை இழுத்துவிட்டு அந்த இடத்தில் தன் கையை வைத்து அழுத்தமாகப் பிடித்துக்கொண்டான்.
அவனது இந்தத் திடீர் செயலால் பேச்சிழந்து மூச்சு வாங்க நின்றாள்.
“ இப்போ பேசு டீ! “ அவளது காதில் ஹஸ்கி வாய்சில் பேச,
உள்ளுக்குள் அவளுக்கு வெப்பம் பரவியது.
“ யுவா, இன்னிக்கு சித்துகும் சக்திக்கும் தான் …….” பாதியிலேயே நிறுத்தினாள்.
“ என்ன சொல்லு … அவங்க ரெண்டுபேருக்கும்?? “ அவளது கழுத்தில் தன் உதடுகளால் கோலமிட்டுக் கொண்டே கேட்க,
அவளது கைகள் தன்னிச்சையாக அவனது பின் தலையைக் கோத ஆரம்பித்தது.
“ஆரு! … “ அவளது பாதி தெரிந்த முதுகில் கோலம் போட ஆரம்பித்தான்.
“யுவா….!! ப்ளீஸ்… “ சொல்லிக்கொண்டே அவனது மார்பில் புதைந்தாள்.
அவளைத் தன்னுள் புதைத்து விடும் அளவு வாரி அணைத்தான். அவளும் அவனது முதுகைத் தழுவிக் கட்டிக்கொண்டாள்.
அவளது முகத்தைத் தன் கையில் ஏந்தி அவளை ஆசையுடன் பார்க்க, அவனது மோகப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.
“ஏய்! நமக்கு கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆச்சு டி… இன்னும் வெட்கப் படற… “ குறுநகையோடு நின்றான்.
“ நீ பாக்கற பார்வை அப்படி…நான் என்ன பண்றது.. “ சிறு சினுங்கலுடன் சொல்ல, சத்தமாகச் சிரித்தான் அவளது ஆசைக் கணவன்.
அவனது சிரிப்பை இமைக்காமல் ரசித்தாள்.
“ ஐ லவ் யூ யுவா…..”
“ ஐ மேட்லி லவ் யு டீ ………” அவளது நெற்றி முட்டி லேசான இதழ் ஒற்றுதலுடன் காதலால் சொன்னான்.
“இதெல்லாம் பத்தாது…” என்று சொன்னவள், அழுத்தமாக அவனது உதடுகளைக் கடிக்க, அவனும் அவளுக்கு சளைத்தவனல்ல என்று தன் வேகத்தைக் காட்டிக் கொண்டிருந்தான். சிறிது நேர சுகமான போராட்டத்திற்குப் பிறகு இருவரும் களைத்து ஓய்ந்தனர்.
பின்பு தனது கைகடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு “ சரி சரி நாம கிளம்பலாம்…. அப்புறம் சித்து வந்தா நம்மள ஓட்ட ஆரம்பிச்சுடுவான்… “ என்று கிளம்பினான்.
சக்தியும் அனைவரிடமும் ஆசி பெற்று கிளம்பினர். வழக்கம் போல அவன் தனது காரை எடுத்து வர , சக்தி மறுத்தாள்.
“ எனக்கு உன்கூட பைக்ல போகணும் சித்” அவனது கையைப் பற்றிக் கொண்டு கேட்க,
“ இந்த டைம்ல பைக்ல போறது ரிஸ்க் சகி. அதுவும் நீ இப்போ நகையெல்லாம் போட்டுப் புடவை வேற கட்டியிருக்க, உனக்கு கம்ஃபர்டபிளா இருக்காது டா” அவளது கண்ணம் தொட்டு சொன்னான்.
அவன் கையைத் தட்டி விட்டு “அதெல்லாம் ஒன்னும் இல்ல. ஐ அம் ஓகே … நீ வேஷ்டி கட்டியிருக்கறதால யோசிக்கிறியா. அப்படீனா வேணாம். “ முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள்.
அவளின் அந்தச் செய்கைய ரசித்தவன், “ ஹே பொண்டாட்டி திரும்பு டீ “ கையைக் கட்டிக்கொண்டு நின்று அவளைப் பார்க்க,
“ ஹ்ம்ம் “
“ கோவமா செல்லத்துக்கு ? சரி வா… பொண்டாட்டி ஆனா பிறகு முதல் முதலா கேக்கரத எப்படி நான் முடியாதுன்னு சொல்லுவேன் . வாங்க மிசஸ் சித்து போகலாம்!” அவளின் தோள் மீது கை போட்டு அழைத்துச் சென்றான்.
புன்னகையோடு ஆசையாக அவன் பின்னே அமர்ந்தாள் அவனது சகி. வண்டியை ஸ்டார்ட் செய்து ஆசிலேட்டர் அதிகப் படுத்த எடுத்த எடுப்பிலேயே வண்டியின் வேகம் அதிகரித்தது. வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவனது தோளை இரு கைகளாலும் பற்றிக் கொள்ள,
“ஹே பொண்டாட்டி, இன்னும் என்ன புதுசா லவ் பண்ற மாதிரி தோளைப் புடிக்கற, இடுப்போட சேர்த்து கட்டிக்கோ டீ, அதுக்கு தான் வேகமா போறதே! டிச்சப்பாயின்ட் பண்ணாத! “ அவன் சொல்லி முடிப்பதற்குள் அவளது கைகள் இருபுறமும் அவனது இடையை சுற்றி வளைத்திருந்தது.

கண்ணாடி வழியாக அவன் சிரிப்பதைப் பார்த்தவள், அவனது முதுகில் முகம் வைத்துச் சாய்ந்து கொண்டாள்.
“ சகி! இவ்ளோ நாள் இந்த மாதிரி பைக் ரைட் மிஸ் பண்ணிட்டோமோ!” ஒரு கையால் பைக்கைப் பிடித்த படி இன்னொரு கையால் தன் வயிற்றில் மேல் படர்ந்திருக்கும் அவளது கரத்தைப் பிடித்துக் கொண்டே வண்டியைச் செலுத்தினான்.
“ ஆமா சித்…. ஆனா இப்போ போறதும் ஒரு சுகமாதான் இருக்கு! என்னோட புருஷன்ங்கற உரிமையோட உன்னைக் கட்டிக்கிட்டு இப்படி வேகமா போறது மனசுக்கு நிறைவா இருக்கு !” அவனது காதோரம் நெருங்கி வந்து சொன்னாள்.
அதற்காகவே இன்னும் சிறிது நேரம் சுற்றிவிட்டு யுவாவின் வீட்டை அடைந்தனர். சாவியை வாட்ச்மேனிடம் குடுத்துவிட்டு சென்றிருந்தான் யுவா.
சாவியைப் பெற்றுக்கொண்டான் சித்து.
“வரேன் சார்” அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் அந்த வாட்ச்மேன்.
அவன் சென்றதும் வீட்டின் முன் வந்து நின்றனர்.
“கதவைத் திறங்க சித்”
அவளைக் கிறக்கமாகப் பார்த்துக் கொண்டே கதவைத் திறந்தான்.
உள்ளே சென்றதும் மீண்டும் கதவைத் தாழிட்டு அவளைத் தோளோடு அனைத்து தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.
வந்ததிலிருந்து அவன் பார்வை போன விதம் அவளை ஏதோ செய்ய , ‘ஐயோ ! அப்படிப் பாக்காத டா… முதல் நாள் உன்ன பார்த்தப்போ இந்தப் பார்வை தான் என்ன உன்னோட சேர்த்து கடிப்போட்டுடுச்சு. எத்தனை முறை பாத்தாலும் மனசுக்குள்ள ரயில் ஓடுது.’ மனதில் மருகினாள். அவனோடு தனியாக இப்போது மனைவி என்னும் பந்தத்துடன் ஒரு அறையில் அதுவும் இரவில் நிற்பது அவளுக்கு வெட்கத்தைத் தந்தது.
அந்த அறையின் ஒரு பகுதியில் இருந்த வரண்டாவில் சென்று நின்று வானத்தை வெறித்தாள். அவளது இந்தப் பதட்டத்தை உணர்ந்தவன், மெல்ல அவளருகே சென்று நின்றான்.
“சகி!” அருகில் அவன் நெருங்கி நின்று அழைப்பதை உணர்ந்தாலும், அவளால் பதில் பேச முடியவில்லை. பேச நினைத்தும் வார்த்தை வரவில்லை.
அவள் உடல் லேசகாக நடுங்குவதை உணர்ந்தவன், பின்னிருந்து அவளை அனைத்துக் கொண்டான். அவளது தோளில் தன் தடையைப் பதித்து,
“ என்ன டா! எதுக்கு இப்போ பதட்டம் ! நான் உன்னோட சித். நீ என்னோட சகி. எனக்குள்ள எப்பயோ வந்துட்ட.. இன்னும் தயக்கமா உனக்கு?”
அவனது வார்த்தைகள் அவளை அவனிடம் மேலும் ஒட்டி நிற்க வைத்தது. அவனது மார்பில் முகம் புதைத்து அவனைக் கட்டிக்கொண்டு நின்றாள்.
“எனக்கு ஒன்னும் தயக்கம் இல்ல.. உன்னைப் பார்த்ததிலேந்து உன்கூடவே இருக்கணும் துடிச்சேன். நாம காதலிக்க ஆரம்பிச்சப் பிறகு உன்கூட இருக்கற மாதிரி என்னென்னவோ கனவு கண்டேன். இது நடக்காம போயிடுமோனு சில நாள் தவிச்சிருக்கேன். ஆனா எல்லாம் நல்லா முடிஞ்சு இப்போ முழு உரிமையோட உன் பக்கத்துல நிக்கறது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. கனவா நினைவா னு கூட யோசிக்கத் தோணுது.” உணர்ச்சிப் பொங்க அவள் பேசும்போது தனக்கான அவளுடைய காதல் எவ்வளவு ஆழம் என்பதை உணர்ந்தான்.
தன்னோடு சேர்த்து அணைத்து அவளது தலையில் முத்தமிட்டான். “இது கனவில்லை கண்ணம்மா. நிஜம் தான். செக் பண்ணுவோமா” சொல்லிக்கொண்டே அவளது இடையைக் கிள்ள, துள்ளி குதித்தவளை நகர விடாமல் பிடித்துக் கொண்டான்.
“நிஜம்தான் சகி” சிரித்தான்.
“ டேய்! இப்படியா பண்ணுவ” செல்லமாகச் சிணுங்கி அவன் மார்பில் அடிக்கத் துவங்கினாள்.
அவளது கையைப் பிடித்துக் கண்மூடி முத்தமிடத் தொடங்கினான். அவனது மீசையின் குறுகுறுப்பு கூச்சத்தை கொடுத்தாலும் அவனை ரசித்தாள் சக்தி. அவனது முடியக் கலைத்து எம்பி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
அவளது கஷ்டம் உணர்ந்து அவளைத் தூகிக் கொண்டான் . “ இப்போ நல்லா குடு “ என்று சொல்ல,
யோசிக்காமல் அவன் முகமெங்கும் வாரி வழங்கினாள். அவனது இதழ்களை நெருங்கும்போது சிறிது இடைவெளி விட,
“ என்ன அங்க வந்துட்டு யோசிச்சுட்டு இருக்க, ம்ம்ம் ..கம்மான்” என உதடு பிரிக்காமல் சிரித்தான்.
அவள் முடியாது என்று அவனது தோள்களில் முகம் புதைத்தாள். அவளது கூந்தலில் சூடியிருக்கும் ஜாதிமல்லயின் வாசம் அவனை எங்கோ கொண்டு சென்றது. அவளைக் கீழே இறக்காமல் தூக்கியபடியே அவளின் கதகதப்பில் அவளுள் கரைந்துகொண்டிருந்தான்.
வெகுநேரமாகத் தன்னைத் தூகிக் கொண்டிருக்கிறான் என்றுணர்ந்து இறங்க முயற்ச்சிக்க, அவன் விடுவதாக இல்லை.
“விடு சித்.. கை வலிக்கப் போகுது.” அவனது இரு தோள்களையும் பற்றிக் கொண்டு அவனைப் பார்த்துக் கேட்க,
“முடியாது! நீ முத்தம் தர வரைக்கும் விடமாட்டேன். இனிக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் டீ.. ‘நான் வெஜ்’ பிளான் பண்ணி வெச்சிருக்கேன் நீ இந்த வெஜ் கிஸ்கே முடியாதுங்கற..” அவளது வயிற்றில் முகம் புதைத்துக் கேட்க ,
அவள் யோசித்துவிட்டு ,“ எனக்காக நீ ஒரு பாட்டு பாடு.. அப்புறம் குடுக்கறேன்” அவனது கழுத்தில் மாலையாகத் தன் கைகளைக் கோர்த்து கொண்டு கேட்க,
“உனக்காக ஒரு பாட்டு என்ன , எத்தனை வேணாலும் பாடறேன், ஆனா இந்தக் கிஸ்ஸ மட்டும் கம்ப்ளீட் பண்ணு டீ, காக்க வைக்காத” குழந்தையாய் அவளிடம் கெஞ்சினான்.
“முடியாது! நீ பாடு அப்பறம் குடுக்கறேன்” கண்டிப்பாக அவனிடம் கொஞ்சினாள்.
“படுத்தற டி”.. அவளைத் தூகிக் கொண்டே பாட ஆரம்பித்தான்.
“பாவை உந்தன் கூந்தல் இன்று போதை வந்து ஏற்றும்போது
பாத்து பாத்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாத மாற்றம் ஏது
பார்வை செய்த சோதனை நாளும் இன்ப வேதனை
காதல் கொண்ட காமனை கண்டு கொண்டு நீ அணை.

கூடினேன் கொண்டாடினேன் என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன் தள்ளாடினேன் உன் தாகம் தீர்க்கலானேன்
பாலும் தெளிதேனும் பறிமாற நேரம் வந்ததே
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ளபோது வேதம் ஓது..”
அவள் அதற்கு மேல் அவனைக் காக்க வைக்க வில்லை. தன் இதழ் தேனை அவனுக்குப் பருகக் கொடுத்து அவனை இன்பத்தில் ஆழ்த்தினாள். இதற்காகக் காத்திருந்த அவனும் அவளை முழுதாய் உணர உள்ளே தூக்கிச் சென்றான்.
காத்திருக்காமல் அவர்களது காதல் தொடர்ந்தது.

 

 

 ****************** முற்றும் ***********************************

KVK-20

இரவு நெருங்கியது. அன்பரசு தாங்களே வருவதாகச் சொல்லிவிட்டார். ஆகையால் அனைவரும் காத்திருந்தனர். குழந்தையுடன் பேசி அவளுக்கு இனிப்புகளை வங்கிக் கொடுத்தான் யுவா. அதனால் அவள் அவனுடனேயே பொழுதைக் கழித்தாள்.
மனோகர் இதயம் படபடக்க வாசலிலேயே அமர்ந்திருந்தார். ஊரே மறுநாள் திருவிழவிற்காகக் கோலாகலமாக இருந்தது. வாசலில் கார் வந்து நிற்கவும் அனைவரும் வெளியே வந்தனர். மனோகர் ஆவலோடு எழுந்து சென்றார்.
ஆனால் வந்தது ராஜேஷும் மைதிலியும். அனைவருக்கும் இருந்த ஆர்வம் வடிந்து விட்டது.
அவர்கள் இறங்கிய பின்னர், பின் சீட்டிலிருந்து இறங்கினார் மலர். மறு பக்கம் இறங்கினார் அன்பரசு.
அனைவரும் அவர்களைப் பார்த்து மகிழ்ந்தனர். மனோகர் அசைய முடியாமல் நின்றுவிட்டார். பார்வதி எந்த வித சஞ்சலமும் இல்லாமல் அவரைப் பார்த்துப் புன்னகை செய்தார். முதலில் ஓடிச்சென்று மலரை வரவேற்றார்.
“ அக்கா! உள்ள வாங்க. இது உங்க வீடு.” ஆசையோடு அழைக்க,
மலர் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். யுவா போனில் சொன்னது போல பார்வதி மிகவும் நல்லவளாகத் தெரிந்தாள்.
அனைவரும் அவர்களை உள்ளே அழைக்க, “ஒரு நிமிஷம்” என்றார் பார்வதி.
எல்லோரும் பார்வதியைப் பார்க்க, அவர் உள்ளே ஓடிச் சென்று ஆரத்தி தட்டை எடுத்து வந்தார். மனோகரை அருகில் நிற்குமாறு சொல்ல, அவரும் மலரும் சேர்ந்து நின்றார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துத் சொல்ல முடியாத உணர்வுகளால் தவித்தனர்.
இருவருக்கும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்தார் பார்வதி.
உள்ளே சென்று இருவரையும் அருகே அமரச் சொல்லி, இனிப்புகளை அவர்கள் முன் வைத்து, மலருக்கு ஊட்டிவிடச் சொன்னார். பார்வதியின் இந்தச் செயல் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
முதலில் மனோகர் தயங்கினார். பின் பார்வதியே அவர் கையில் எடுத்துக் கொடுக்க, அதை மலருக்கு ஊட்டினார் மனோகர்.

பின் எல்லோரும் உணவு அருந்தி அவர்களின் அறைக்குச் செல்லுமாறு பார்வதி அனுப்பிவைத்தார். அதுவரை மலர் ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேசவில்லை. யுவா அருகில் வந்து,
“ அம்மா.. ஐ அம் சாரி மா.. உங்கள பயப்பட வெச்சிட்டேன்.” என்று சொல்ல,
“ எல்லாம் நல்ல படியா முடிஞ்சிருக்கு யுவா. இது எல்லாம் உன்னால தான். என் வாழ்க்கையே அர்த்தம் உள்ளதா நீ

மாத்திட்ட. நீ இதுல வருத்தப்பட ஒண்ணுமே இல்லை யுவா. எல்லாரும் எவ்வளவு நல்லவங்கன்னு நான் மட்டும் இல்ல அண்ணா வும் புரிஞ்சுகிட்டாரு. நீ சந்தோஷமா இருக்கியா யுவா?” அவனைப் பார்த்துக் கேட்க,
“ அம்மா… ரொம்ப சந்தோஷம்மா. அப்பா ரொம்ப நல்லவர். நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். இப்போ எனக்கு எல்லாமே கெடச்சிடுச்சு. ஐ அம் வெரி ஹாப்பி “ புன்னைகையோடு சொல்ல, தன் மகனின் சந்தோஷத்தில் தானும் மகிழ்ந்தார் மலர்.
சித்து அருகில் வந்தான். அவனைத் தன் அருகில் அமரவைத்தார் மலர். “ நான் உங்க ரெண்டாவது பையன், சித்தார்த்.” தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் .
“ யுவா உன்னைப் பத்தி சொன்னான் போன்ல. உங்க ரெண்டுபேரையும் பாக்கறப்ப புதுசா பழகுன மாதிரி இல்லை. யுவா அவ்வளவு சீக்கிரம் யார் கிட்டயும் ஒட்டமாட்டான். ஆனா நீ அவன் கூட இவ்வளவு சீக்கிரம் க்ளோஸ் ஆயிட்ட. உன்னை மாதிரி ஒரு ஆளு அவனுக்குக் கூட இருந்தா அவன சமாளிச்சுடலாம்.” அவன் தலையைத் தடவி சொல்ல,
சித்து “ அவர இனிமே நான் பாத்துக்கறேன். நீங்க இனிமே சந்தோஷமா இருக்கணும். “ .
சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் சென்றனர். பார்வதி அருகில் வந்தார்.
“ அக்கா! “ மெதுவாக அழைக்க
“ பார்வதி.. “ மலர் கை கூப்பி வணங்கினார் பார்வதியை.

அவரின் கையத் தடுத்தார்.
“ நான் தான் அக்கா உங்க வாழ்க்கைய பறிச்ச பாவி. நீங்க இத்தனை நாள் தனியா கஷ்டப்பட்டதும் என்னால தான். என்னை மன்னிச்சி நீங்க ஏத்துக்கணும். “ அவர் கண்ணீருடன் நின்றார்.

“ பார்வதி! என்னோட உருவத்தில நீ அவர் கூட இருந்ததா தான் நான் இத்தனை நாள் நினைச்சுக்கிட்டேன். அப்போ நீயும் நானும் ஒன்னு தான. எதுக்கு இந்த மன்னிபெல்லாம். இனிமே நாம எல்லாரும் ஒண்ணா இருப்போம். அதுல உனக்கு ஒன்னும் வருத்தமில்லையே?” அவள் கண்ணீரைத் துடைத்து விட்டுக் கேட்டார் மலர்.
“ என்னக்கா இப்படிக் கேட்கறீங்க. இனிமே நீங்க சொல்றது தான் நாங்க எல்லாரும் கேட்போம். சரிக்கா. உங்க நேரத்த நான் வீணாக்க விரும்பல. நீங்க அவரோட பேசுங்க. நான் உங்கள காலைல பாக்கறேன்.” அடுத்து மலர் பேசும் முன்பே அங்கிருந்து சென்றார் பார்வதி.
காலையிலிருந்து ஊர் சுற்றிய களைப்பில் ராஜேஷும் மைதிலியும் உறங்கச் சென்றனர். அவர்கள் செல்வதைப் பார்த்த சித்து அவர்களை நிறுத்தினான்.
“ மாமா! மலரம்மாவ எங்க பாத்தீங்க. நீங்க ரெண்டு பேரும் எதுவும் தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலயே .உங்களுக்கு முன்னாடியே அவங்களத் தெரியுமா? என்ன நடக்குது அக்கா.?” இருவரையும் கேள்வி கேட்க,
“ டேய் ரொம்ப டையர்டா இருக்கு. உங்க அக்கா பர்ச்சேசிங் பண்ணி ஒரு வாழி ஆயிட்டேன். காலைல சொல்றேனே ப்ளீஸ்.” ராஜேஷ் போய்ப் படுத்தே விட்டான்.
“ அவரை விடு. நான் சொல்றேன்.” மைதிலி சொல்ல, ஆர்வமானான் சித்து.
“எங்களுக்கு முதல்ல இவங்க யாருன்னு தெரியாது. ஆனா அப்பா அடிக்கடி புலம்பறதை அம்மா சொன்னாங்க. அப்போ அன்னிக்கு அப்பா ரூம் ல நாங்க இவங்களோட போட்டோவ பார்த்தோம். ஆனா அம்மா கிட்ட எதுவும் காட்டிக்கல.
நான் எதாவது உளரிடக் கூடாதுன்னு தான் இவரு என்னையும் கிளம்பச் சொன்னாரு. காலைல இருந்து நாங்க இதப் பத்தி தான் பேசிட்டு இருந்தோம். அப்புறம் டவுன்ல இருந்து நம்ம ஊர்க்கு வர வழியில இவங்க பஸ்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. அப்போ தான் இவங்க போட்டோல பாத்தா மாதிரி இருந்துச்சுன்னு சொன்னேன்.
அவங்ககிட்ட போய் விசாரிச்சப்போ நாம்ம ஊருக்குப் போக தான் காத்திருந்தாங்க ன்னு தெரிஞ்சுது. அப்புறம் நாங்க கார்ல கூட்டிட்டு போறோம்ன்னு சொன்னோம், அப்புறம் அவங்க கிட்ட எங்க போறீங்க ? உங்க பேர் என்ன ? , எல்லாம் கேட்டோம். அவங்க பையன் பேரு யுவராஜ் இங்க வந்திருக்கான்னு சொன்னபிறகு, நான் அப்பாவைப் பத்திக் கேட்டேன். மாமா தான் எல்லாத்தையும் சொன்னாரு. நான் ஷாக் ஆயிட்டேன். ஆனா அப்பா மேல தப்பிருக்காதுன்னு தெரியும்.
எங்கப்பாவும் மலர் பேர் சொல்லிப் புலம்பராருன்னு சொன்னேன். அவங்க அழுதுட்டாங்க. அப்டியே பேசிக்கிட்டே வந்தோம். உன்னப் பத்தி என்னைப் பத்தி எல்லாம் கேட்டாங்க. ரொம்ப நல்லவங்க மலரம்மா. எனக்கு அவங்கள ரொம்ப புடிச்சிருக்கு. “ அவள் சொல்லி முடிக்க,
“ எல்லாருக்குமே அவங்கள புடிக்கும்.” சித்துவும் ஆமோதித்தான்.
மறுபுறம் யுவராஜும் அன்பரசுவிடம் இதைத் தான் கேட்டுக்கொண்டிருந்தான். அவரும் அவர்கள் சந்தித்ததிலிருந்து சொல்லிக்கொண்டிருந்தார். யுவாவும் இங்கு நடந்த்ததைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
அனைவரும் உறங்கியபிறகு, மலரும் மனோகரும் மட்டும் பேசிக்கொண்டிருந்தனர். மனோகரின் தோளில் சாய்ந்து இத்தனை நாள் பிரிவைப் போக்கிக்கொண்டிருன்தனர். அவர்களுக்கு நடந்ததைப் பற்றிப் பேசும் எண்ணமில்லை. இருவரும் ஏற்கனவே யுவாவிடமிருந்து தேவையான விவரங்களைத் தெரிந்து கொண்டனர். ஆகையால் அங்கே அவர்களுக்காகக் காத்திருந்த அந்தக் காதல் பேசியது.

“மலர்.. இனிமே எனக்குக் கவலையே இல்லை. நம்ம ரெண்டு பசங்களும் எல்லாத்தையும் பாத்துப்பாங்க. யுவாவ ரொம்ப நல்லா வளத்திருக்க மலர். உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. “ மலரின் கையைப் பற்றிக்கொண்டு சொல்ல,
மலரின் கண்களில் அந்த மோதிரம் பட்டது.
“ நீங்க இன்னும் என் ஞாபகமா இதை வெச்சிருப்பீங்கன்னு நான் எதிர்ப்பர்க்கல. “ கண்கள் பனிக்கக் கூறினார் மலர்.
“ உன் ஞாபகம் தான் என்னை இத்தனை நாள் உயிரோட இருக்கக் காரணம். ஆனா நீ திரும்பக் கிடைப்பன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. எனக்குக் கடவுள் குடுத்த மறுவாழ்வு இது. ஒருநாளும் உன்னைப் பிரிய மாட்டேன்.” மனதிலிருந்து சொல்ல,
“பார்வதி ரொம்ப நல்லவங்க.”
“ஆமாம்… உங்க அண்ணனுக்கும் நான் நன்றி சொல்லணும். என் மலர இத்தனை நாள் பாதுகாப்பா பாத்துக்கிட்டதுக்கு.”
அவர்களின் பேச்சு விடிய விடிய தொடர்ந்தது. இனி அவர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தமே.!
மறுநாள் அனைவரும் திருவிழவிர்க்குச் சென்றனர். அங்கே முதல் மரியாதை செய்ய மனோகரின் மகனை அழித்தனர். யுவா சித்துவைத் தேட, அவனோ எங்கோ நின்று வர்ஷினிக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொண்டிருந்தான். அவனைக் கூப்பிட இவன் செல்ல , மனோகர் அவனைத் தடுத்தார்.
“நீ தானப்பா என் முதல் மகன், நீ தான் இதை ஏத்துக்கணும்” என்று சொல்ல, மைதிலி அவனை அழைத்துச் சென்று கையில் கும்பத்தைப் பெற்றுக்கொள்ளச் செய்தாள்.

“ இவர் தான் என் அண்ணா, இவர் கைல குடுங்க” என்றாள்.
யுவாவும் அவளைப் பாசாமாகப் பார்க்க,
மலரும், அன்பரசுவும் ஆனந்தத்தில் இருந்தனர். பின்பு பெற்றோரிடம் ஆசி வாங்கச் சொன்னார்கள். மனோகர், மலர் மற்றும் பார்வதியையும் அழைத்து அவர்கள் மூவரிடமும் ஆசி பெற்றான்.
மீண்டும் அவர்கள் தங்களின் ஊருக்குத் திரும்பினர். யுவாவிற்குப் பெண் பார்க்க அங்கே எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது.

 

யுவா மிகவும் மகிழ்ச்சியாக ஆராதனவிற்கு போன் செய்தான்.
“ஹே ஆரு ! என்ன ரெடி ஆயிட்டியா? உங்க அப்பா என்ன சொல்றாரு.?” உற்சாகமாகக் கேட்டான்.
“ நான் ரெடி ஆகறது இருக்கட்டும். உங்க வீட்ல இருந்து இன்னும் யாரும் போன் கூட பண்ணலன்னு அப்பா சொல்றாரு. நீ என்னனா கூலா கேட்கற…” குழப்பமாகக் கேட்டாள் ஆராதனா.
“ என்ன சொல்ற! நேத்தே போன் பண்ணிட்டேனு மாமா சொன்னாரே! இரு நான் மாமா கிட்ட கேட்டுட்டு போன் பண்றேன். “ போனை வைத்துவிட்டு அன்பரசுவிடம் சென்றான்.
அவரோ மலருடனும் பார்வதியுடனும் பூ பழங்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார். அவரை அழைக்க நினைத்தபோது, சித்து அப்போது தான் வேகமாக உள்ளே வந்தான். அவன் முகத்தில் கலவரம் தெரிந்தது. வந்தவன் நேரே யுவா வை அழைத்துக் கொண்டு அனவது அறைக்குள் புகுந்தான். சித்துவின் பிரச்சனையை மறந்தே போனான் யுவா.
“ என்ன டா.. ஏன் என்ன இப்படி தள்ளிட்டு போற, நான் என உன் ஆளா?” நக்கலாகக் கேட்க
“ செல்பிஷ் அண்ணா… உனக்கு மட்டும் பொண்ணு பாக்க போவ, ஆனா என் பிரச்சனைய மறந்துட்ட.. சக்திய பொண்ணு பாக்க வராங்கன்னு சொன்னேன் ல .. ஹெல்ப் பண்றேன்னு வாக்கு குடுத்தியே.. “ அவசரமாகச் சொல்ல
“ ஓ! எப்போ வராங்க? “ கலைந்த தன் சட்டையைச் சரி செய்து கொண்டு மெதுவாகவே கேட்டான்.
“ இன்னிக்கு.. இன்னும் கொஞ்ச நேரத்துல வராங்களாம். ‘எங்க இருக்கன்னு’ சக்தியும் அவ பிரண்டு சுஜாவும் போன் பண்ணிகிட்டே இருக்காங்க. “ தலையில் கை வைத்து அமர்ந்தான்.
“ சரி சரி… கவலைப் படாத, நாம முதல்ல அங்க போய்ச் சமாளிப்போம் அப்புறம் ஆரு வ பாக்க போலாம். மத்தவங்கள இப்போ அனுப்பிடலாம்.” தைரியம் சொன்னான். இருவரும் வெளியே வந்தனர்.
மனோகர் ஜிப்பா அணிந்து தயாராக வந்தார். இருவரையும் பார்த்து , “என்னப்பா ரெண்டு பேரும் இப்படி நிக்கறீங்க?” என கேட்க
“ அப்பா! நீங்க எல்லாரும் முதல்ல போங்க, நாங்க ரெண்டு பேரும் என்னோட கார்ல வரோம். “ சித்துவைப் பார்த்துக் கொண்டே சொல்ல,
“ சரி ஆனா சீக்கிரம் வந்துடுங்க.” சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
“ ஆராதனா வோட அப்பாக்கு,…” யுவா இழுக்க
“ இப்போ தான்பா அன்பரசு கிட்ட நம்பர் வாங்கிப் பேசினேன். “
யாரிடம் பேசினோம் என்று அவரும் தெரியாமல் பேசிவிட்டார். யுவாவும் அந்தப் பதிலில் கொஞ்சம் நிம்மதி அடைந்தான்.
அனைவரையும் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு , அண்ணனும் தம்பியும் தனியாகக் கிளம்பினார்கள். வரும் வழியில் சித்து சுந்தருக்கு போன் செய்து சக்தி வீட்டின் அருகில் வந்து நிற்க்கச் சொன்னான். அவனும் வந்துவிட, மூவரும் இப்போது சக்தியின் வீட்டு வாசல் முன் வந்து நின்றனர். ஆனால் அங்கே அவர்களின் பெற்றோர் வந்த வண்டியும் நிற்க, ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
“ என்ன டா அப்பா கார் இங்க இருக்கு? முன்னாடியே எதாவது ஏற்பாடு பண்ணிட்டியா? “ முறைத்தான் யுவா.
“ ஐயோ இல்லனா.. அப்பா நம்மக்கு தெரியாம பிளான் பன்னிருப்பாரோ?!” அவனும் குழம்ப,
“ எதுக்கு இங்கயே நின்னு யோசிக்கணும், வாங்க உள்ள போய்ப் பார்ப்போம்” சுந்தர் அவசரப் படுத்த,
மூவரும் உள்ளே சென்றனர்.
“ வாங்கப்பா! “ பார்வதி உள்ளே அழைத்தார்.
சக்தியின் தந்தை ஸ்ரீனிவாசனும் உள்ளே அவர்களை அழைத்து சோஃபாவில் அமரவைத்தார்.
“நீங்க ஏன் அம்மா இங்க வந்தீங்க? சித்து முன்னாடியே சொல்லிட்டானா?” மலரின் காதில் கிசுகிசுத்தான் யுவா.

 

“இது தான டா பொண்ணு வீடு. “ அவரும் சத்தம் வராமல் கேட்க,
“ அம்மா! என்ன குழப்பறீங்க? கல்யாணம் எனக்கா இல்ல சித்துக்கா?” மறுபடியும் காதைக் கடித்தான்.
“ என்ன யுவா பேசற. நீ தான அண்ணன். சித்து சின்னப் பையன். உனக்குத் தான பொண்ணு பார்க்க வந்திருக்கோம்” மலர் தெளிவாகச் சொல்ல,
“ அப்போ ஏன் இங்க வந்தீங்க? “ மீண்டும் புரியாமல் கேட்டான்.
அதற்குள் அவர்களுக்கு ஜூஸ் கொண்டு வந்தாள் சுஜா.
“ இது என் பொண்ணு சக்தியோட பிரண்ட் சுஜா. ரெண்டு பேரும் சின்ன வயசில இருந்து ஒண்ணா படிச்சவங்க. “ என்று ஸ்ரீநிவாசன் அளக்க ஆரம்பித்தார்.
சித்துவைப் பார்த்ததும் சிறிது நிம்மதியாக அவள் உள்ளே செல்ல,
சித்துவிற்கு அப்போது தான் புரிந்தது. சக்திக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை யுவராஜ் தான் என்று. உடனே அவன் வெளியே எழுந்து செல்ல, பின்னோடு சென்றனர் யுவாவும் சுந்தரும். அவர்களின் பின்னே மனோகரும் வர, அதை அவர்கள் கவனிக்கவில்லை.
“ டேய் அண்ணா! என் ஆளுக்குப் பாத்திருக்கற மாப்பிள்ளை நீ தானா? “ அழாத குறையாகக் கேட்டான்.
“ எனக்கும் ஒன்னும் புரியல சித்து. பொண்ணு சக்தின்னு சொல்றாங்க. இரு நான் ஆரு அப்பாக்கு போன் பண்றேன். “ போனை எடுத்தான். அவரோ இதுவரை யாரும் போன் செய்யவில்லை என்று சொல்லிவிட, என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.
“ சித்து நீ தைரியமா வா, நான் பேசிக்கறேன். “ உள்ளே சென்றனர். மனோகர் அவர்களுக்கு முன்னே சென்று விட்டார்.
எல்லோரும் அமர்ந்திருக்க, “பொண்ணைக் கூபிடுங்க” என்று பார்வதி சொன்னார். ஸ்ரீனிவாசனும் , ஜானகியிடம் சைகை செய்ய, சக்தி வேண்டா வெறுப்பாக வந்து நின்றாள். மனோகர் அவளைப் பார்த்ததும் மகிழ்ந்தார்.
“பையன நல்ல பாத்துக்கோம்மா” ஒரு குரல் கேட்க,
அவள் நிமிர்ந்து பார்த்தது சித்துவைத் தான். ‘இவன் எப்படி இங்கு வந்து அமர்ந்திருக்கிறான் ‘ என்று குழம்பினாள். சுஜா சொன்னாள் தான் அனால் அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை. அனைவருக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு அங்கிருத்து சென்றாள். எப்படி வந்திருக்கும் மாபிள்ளையிடம் பேசுவது என்று தவிக்க, யுவாவே அதைச் செய்தான்.
“ நான் பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசணும்” சொன்னதும் ஸ்ரீநிவாசன் மனோகரைப் பார்க்க,

“ சம்மந்தி நீங்க வாங்க நாம பேசுவோம்.” என்று அழைத்தார். மலரும் பார்வதியும் ஒன்றும் புரியாமல் இருக்க,
ஜானகி யுவாவை உள்ளே சென்று பேசுமாறு சொன்னார். அவனும் சித்துவிற்கு ஜாடை காட்டிவிட்டு உள்ளே சென்றான்.
சக்தி மிகவும் தைரியமாக நின்றிருந்தாள். சின்னப் பெண் என்று பார்க்கும் போதே யுவாவிற்குத் தோன்ற, பயப்பட வேண்டாம் என்று பொறுமையாகச் சொல்ல நினைத்தான். ஆனால் அதற்குள் சக்தி முந்திக்கொண்டாள்,
“ நானே உங்கள கூபிட்டுப் பேசணும்ன்னு இருந்தேன் .” சற்று கடுமையாகவே பேச,
இவளுக்குத் தான் யார் என்பது இன்னும் தெரியாது என்று உணர்ந்தான். பேசாமல் அவளைச் சற்று சீண்டிப் பார்க்க நினைத்தான். 

“ சொல்லு. என்ன பேசணும்?” அவனும் தெரியாதது போலவே கேட்க,
“ நான் ஒருத்தர விரும்பறேன். அவரைத் தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். இந்தக் கல்யாணம் நடக்காது.” விறைப்பாகவே சொன்னாள். யுவா பேசாமல் கையைக் கட்டிக் கொண்டு அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றான். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தான். சித்துவிற்கு ஏற்ற ஜோடி தான் என்று நினைத்தான்.
“ சரி அப்பறம்.?” அவனும் மேலோட்டமாகக் கேட்க,

‘என்ன இவன். லவ் பண்றேன்னு சொல்றேன். இவ்வளவு சாதாரணமா கேட்கறான்!’ அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றாள்.
யுவா அவளது மனஓட்டத்தைப் புரிந்துக்கொண்டான். அவனே அடுத்துப் பேசினான்.
“வெளில ஒருத்தன் வந்து உட்கார்ந்துட்டு இருக்கனே, அவன தான் லவ் பண்ற. அவன் எல்லாத்தையும் என்கிட்ட சொன்னான்” சாதாரணமாகச் சொல்ல, சக்திக்குக் கோவம் வந்தது.
“அப்புறம் ஏன் இன்னும் என்ன பாத்துட்டு இருக்கீங்க. என்னைப் புடிக்கலன்னு சொல்லிட்டுப் போங்க” சீறினாள்.
யுவாவிற்கு சிரித்து விடுவோம் என்று தோன்றியது.
“அவன் என்கிட்டே பொறுமையா சொல்லியிருந்தா கேட்டிருப்பேன். அவன் என்னை மிரட்டற மாதிரி பேசறான். அதான் என்ன நடந்தாலும் கண்டிப்பா இந்தக் கல்யாணத்தை நடத்திடனும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.” முயன்று சிரிக்காமல் சொல்லிவிட்டான்.
சக்திக்கு இன்னும் பயம் வர, “ அவர் சாதாரண ஆள் இல்லை. அவங்க அண்ணன் அதை விட பெரிய ஆள். அவர கூட்டிட்டு வரேன்னு சொல்லியிருக்காரு. அவரும் வரட்டும் அப்புறம் பார்போம்.” தைரியத்தை வரவைத்து அவள் சொல்ல,
அவள் சொன்னதைக் கேட்டு , மறுபுறம் திரும்பி வாயை மூடிக்கொண்டு யுவா சிரித்துக் கொண்டிருந்தான். பின் தன்னை சரி செய்து கொண்டு, “ அவனும் வரட்டும் பாத்துகறேன். “

சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

KVK-19

யுவராஜ் இரண்டு விதமான மனநிலையில் இருந்தான். ‘இவர் சொல்வது எல்லாம் உண்மை தானா? இல்லை ஆதாரத்திற்கும் சாட்சி சொல்லவும் யாரும் இல்லை என்று நல்லவனாகக் காட்டிக்கொள்ள இதைச் சொல்கிறாரா? இருந்தாலும் அவர் பேசும்போது சிறிதும் தடையின்றி அனைத்தையும் சொல்வதால் உண்மையாக் கூட இருக்கலாம். அவரது அறையில் இருக்கும் பழைய புடவையும் அந்தப் போட்டோ வும் அவர் நல்லவர் என்றே நினைக்கத் தோன்றுகிறது.’ எதுவாக இருந்தாலும் இப்போது தன்னைப் பற்றிக் காட்டிக் கொள்ளும் மனநிலை அவனுக்கு வரவில்லை.
சித்து கணத்த மனதோடு அமர்ந்திருந்தான். அவனுக்குத் தன் தந்தை மீது சிறிதும் சந்தேகம் இல்லை. அவர் மனதின் ஆழத்திலிருந்து தான் பேசுகிறார் என்று அவன் உணர்ந்தான்.
மனோகரும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தார். யுவராஜின் அருகே வந்தார். “ உன்னைப் பற்றி எனக்கு அவ்வளவா தெரியாதுப்பா. இருந்தாலும் உன்னை வெளி ஆளா என்னால நினைக்க முடியல. உன்னைப் பார்த்ததிலிருந்தே எனக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம். உன்னையும் சித்துவையும் வேற வேற யா பார்க்க முடியல. நீங்க ரெண்டு பேரும் எப்பவும் பிரிண்ட்ஸாவே இருக்கணும். “ அவன் கையைத் தட்டிக்கொடுத்துச் சொல்ல, அவர் கையில் இருந்த ஒரு பழைய மோதிரம் கண்ணில் பட்டது.
இதே போன்ற மோதிரம் தன் தாயிடமும் ஒன்று இருப்பதைப் பார்த்திருக்கிறான். அதை அவன் அவர் கையைப் பிடித்துப் பார்க்க ,
“ இது மலர் எங்க கல்யாணம் ஆன அன்னிக்கு எனக்காகக் குடுத்தப் பரிசு. அவளோட ஞாபகம் எனக்கு அடிக்கடி வரும். அப்போல்லாம் இதையும் அவளோட புடைவையும் தான் எனக்கு ஆறுதல். நான் கடைசியா மலரைப் பிரிஞ்சு வேலைக்குப் போறப்ப அவளோட ஒரு புடைவைய என்கூட எடுத்துக்கிட்டுப் போனேன்.
அங்க வேலைக்குச் சேர்ந்த பிறகு தினமும் அவ என் பக்கத்துல இல்லைன்னு வருத்தப் படக் கூடாதுன்னு அவ புடைவைய படுக்கைல விரிச்சு அது மேல தான் படுத்துப்பேன். அவளே என் பக்கத்துல இருக்கற மாதிரி தோணும்.

கடைசில அந்தப் புடவை மட்டும் தான் எனக்கு மிச்சம். “ கண்களில் நீர் பெருகக் கூறினார்.
“எனக்கும் பார்வதிக்கும் கல்யாணம் ஆகி மைதிலி பிறக்கற வரைக்கும் என்கூட தான் வெச்சிருந்தேன். பார்வதி அதைப் பத்திக் கேட்க மாட்டா. ஆனா பிள்ளைகள் பெருசாகி அதைப் பத்திக் கேட்க வாய்ப்பிருக்கு , அதுனால தான் இங்க எடுத்துட்டு வந்து வெச்சிகிட்டேன். இப்போ என்னோட கடமை எல்லாம் முடிஞ்சு மீண்டும் நான் அவ கூட வாழற மாதிரி தோணுது.“ அவரின் காதலின் ஆழம் யுவாவை எங்கோ தொட்டது. அவர் மேல் இருந்த சிறு சந்தேகமும் விலகியது.
லேசாகக் கண்ணைக் கரிக்க ஒரு முறை அவரை அப்பாவென்று அழைக்கத் தோன்றியது.அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் , “ நான் ஊருக்குக் கிளம்பறேன். “ என்று கிளம்ப
சித்து அவனிடம் வந்து “ என்ன அதுக்குள்ள கிளம்பறீங்க? இனிமே நீங்க என்னை விட்டு எங்கயும் போக நான் விடமாட்டேன். நீங்க தான் என்னோட …” சொல்ல வருவதற்குள்
“ இல்லை சித்து. வேண்டாம்…இதப் பத்தி அப்புறம் பேசுவோம். “ மெதுவாக யுவா சொல்ல
“ இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போப் பா . எப்பையும் வேலைலையே இருந்தா எப்படி. நாளைக்குத் திருவிழா, ரொம்ப வருஷம் கழிச்சு நான் திருவிழாவில் கலந்துகறேன். இந்த வருஷம் என் பையனுக்குத் தான் பூர்ண கும்பம் குடுக்க சொல்லியிருக்கேன். இருந்து பாத்துட்டுப் போகலாம். “
“ இல்ல அப்…..” அப்பா என்று அவனையும் அறியாமல் வந்ததை வாய்க்குளேயே அடக்கினான்.
சிறு வயது முதலே அவனுக்கு அப்பாவைக் காணும் ஆவலும் அவருடன் மனம்விட்டு பேசிப்பழகும் ஆசையும் இருந்தது. இடையில் அவன் தவறாகப் புரிந்துகொண்டு வஞ்சம் வளர்த்துக்கொண்டிருந்தான். அது தீர்ந்தவுடன் இப்போது ஏனோ பழைய ஏக்கம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.
சித்து அவனது தவிப்பை உணர்ந்து தான் இருந்தான்.

“ அண்ணா. எதுக்குத் தயங்கறீங்க. நான் சொல்லப் போறேன். “ சித்து வேகமாகச் சொல்ல
அவன் கையைப் பிடித்துத் தடுத்தான் யுவா.
“ என்னப்பா ? என்ன விஷயம் ?” மனோகர் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.
“ இதுக்கு மேல எதுக்கு மறைக்கணும் அண்ணா ….ஏற்கனவே அம்மாக்கு தெரியும். அதுனால இப்போவே சொல்லறது தான் நல்லது.”
“என்ன அம்மாக்குத் தெரியும் ? எதுவா இருந்தாலும் சொல்லு சித்து.!” மனோகர் விஷயம் தெரியாமல் குழம்பினார் .
“அது .. அது.. “ யுவா சொல்லமுடியாமல் தவித்தான்.
“ இவர் தான் உங்க முதல் மகன். மலர் அம்மாவோட பையன். மலர் அம்மாவும் உயிரோட தான் இருக்காங்க.” போட்டு உடைத்தான் சித்து.
உலகமே ஸ்தம்பித்துவிட்டது மனோகருக்கு. இதயம் வேகமாகத் துடித்து ,வியர்த்துக் கொட்டியது. நிற்க முடியாமல் தலை சுற்றியது. கண்கள் இருண்டு கீழே விழப்போனார். உடனே யுவாவும் சித்துவும் ஓடி வந்து தாங்கினர்.
மனோகர் சரிந்தார். யுவா அவரைத் தன் மடியில் கிடத்திக்கொண்டான். சித்து ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்தான். முகத்தில் தெளித்தும் அவரிடம் அசைவில்லை. சித்து பயந்துவிட்டான்.
“அண்ணா, என்ன ஆச்சு. எனக்குப் பயமா இருக்கு. ஏன் அப்பா எந்திரிக்கல? டாக்டர் கிட்ட போகலாமா? “ பதட்டமாகக் கேட்க,
“ ஒன்னும் இல்ல. பயப்படாத. கொஞ்சம் காத்து வேணும். அருகில் இருந்த பேப்பர் சுருளை எடுத்து விசிறினான். சிறிது நேரம் கழித்து கண்கள் அசைந்தது. இருவரும் அவரைப் பார்க்க மெதுவாகக் கண் விழித்தார்.

கண்களில் ஆனந்தம் மிகுதியால் கண்ணீர் பொங்கியது. யுவாவைத் தான் பார்த்தார். “யுவராஜ்” மெல்ல அழைத்தார்.
அவனும் கண்களில் பாசத்தோடு அவரைப் பார்த்தான்.
“ நீ என் மகனா? நிஜமாவா? என் மலர் இன்னும் உயிரோட இருக்காளா? இது கனவா? “ மனோகர் அந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்.
யுவா ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
“ என்னப்பா எதுவும் பேச மாட்டேங்கற? சொல்லுப்பா!” அவன் முகத்தைப் பற்றிக் கேட்க
அந்தத் தொடுதல் அவன் இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த பாசத்தை மடை திறந்த வெள்ளம் போலப் பெருகி ஓடச் செய்தது.
“ என்னை மன்னிச்சிடுங்க” தன் முகத்தில் இருந்த அவரின் கையைப் பற்றிக்கொண்டு கண்களை மூடி அவரிடம் வேண்டினான்.
“ நீ ஏம்பா மன்னிப்புக் கேட்கற? மன்னிப்பு கேட்க வேண்டியது நான் தான் . உன்கிட்டயும் மலர் கிட்டயும் நான் தான் மன்னிப்புக் கேட்கணும். இத்தனை நாள் உங்களைப் பத்தி நான் தெரிஞ்சுக்காம போனது நான் செஞ்ச பாவம். குற்ற உணர்ச்சியால தினம் தினம் சேத்துகிட்டு இருந்தேன். ஆனா அந்தத் தண்டனை எனக்கு வேணும். என்னோட செல்வங்கள தொலச்சததுக்கு கடவுள் எனக்குக் குடுத்த தண்டனை.
மலர் ஏன் என்கிட்டே வரல? இத்தனை நாள் ஏன் என்னைப் பிரிஞ்சு இருக்கணும்? நான் உங்கப்பான்னு தெரிஞ்சும் ஏன் யுவா என்னைத் தேடி வரல? “ அவர் அனைத்தையும் தெரிந்துக் கொள்ளத் துடித்தார்.
இருவருக்கும் மனம் விட்டுப் பேச அவகாசம் தந்து , அவர்களைத் தனிமையில் விட்டுச் சித்து அவர்களுக்குச் சாப்பாடு எடுத்து வர நினைத்தான். பார்வதியின் மனநிலையை அறியவும் விரும்பினான். ஆகையால் அங்கிருந்து கிளம்பினான்.
யுவராஜ் தன் பக்க வாழ்க்கையை அவரக்குச் சொன்னான். மலர் மீண்டும் அன்பரசுவைத் தேடி வந்து. அன்று மனோகரின் திருமணத்தை நிறுத்தாமல் ஒதுங்கியது. பின் இருவரும் ஊரைவிட்டுச் சென்று ஒரு வெறுமையான வாழ்வை இத்தனை நாள் வாழ்ந்தது என்று அனைத்தையும் அவரிடம் சொல்ல, தான் தவறாகப் புரிந்து கொண்டு பழிவாங்க நினைத்ததையும் அவரிடம் கூறினான்.

 

 

அனைத்தையும் கண்ணீருடன் கேட்டுக்கொண்டிருந்தார் மனோகர். “ உன்மேல தப்பில்ல யுவா. இனி ஒரு முறை மன்னிபுன்னு நீ பேசக் கூடாது. உன் நிலைமை எனக்கு நல்லாவே புரியுது. உன்னால எனக்கு எந்தப் பிரச்சனை வந்திருந்தாலும் அது எனக்குக் கிடைக்கற சிறு தண்டனை தான். உனக்கும் உங்க அம்மாக்கும் நான் பண்ண துரோகம் மிகப் பெரியது.
அவ தெரிஞ்சே என்னை இன்னொரு கல்யாணம் பண்ண வெச்சிருக்கா. எங்க அப்பாவால எனக்கு எந்தத் தொல்லையும் வரக் கூடாதுன்னு. அவ எனக்குக் கிடச்ச வரம். அதை நான் தவற விட்டுட்டேன். இனிமே ஒரு நிமிஷம் கூட அவளைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. உன்னைச் சின்ன வயசில கூட இருந்து வளர்க்க முடியாத பாவியாயிடேன். என்னைத் தயவு செஞ்சு மன்னிச்சு ஏத்துக்கோ யுவா. “ மனமுருகி அவனிடம் கேட்டார்.
“ நீங்க எந்தப் தப்பும் உங்களுக்குத் தெரிஞ்சு பண்ணல. விடுங்க. எல்லாம் விதி. யார் என்ன பண்ண முடியும்?”யுவா சொல்ல,
“ நீ இன்னும் என்னை மன்னிகலையா யுவா?”
“ நான் உங்க மேல இருந்த வன்மத்தை , வெறுப்பை மறந்துட்டேன். “ சிரித்துக் கொண்டே சொன்னான்.
“ அப்போ இன்னும் ஏன் என்னை ‘அப்பான்னு’ கூபிடத் தயங்கற? “ அவர் தலை குனிந்துக் கேட்க
அப்போது தான் அவரைப் பொதுவாக அழைத்துப் பேசியது நினைவுக்கு வந்தது. அவனுக்கும் அப்பா என்றழைக்க ஆசை தான். ஆனால் தயக்கமா , குற்றவுணர்வா எதுவோ அவனை அப்படி அழைக்க விடவில்லை. அனால் இனி தான் எந்தத் தடையும் இல்லையே,
“அப்பா………” வார்த்தைகள் வராமல் மெதுவாக அவன் சொல்ல
பூரித்துப் போனார் மனோகர்.
முதல் முறையாக அவரை அப்பா என்று அழைக்கிறான். அவனுக்குள் தந்தை என்ற உறவின் அருகாமை, அவரைப் புரிந்து கொண்ட ஆனந்தம். இனி வாழ்நாள் முழுதும் அவரைப் பிரியும் அவசியம் இல்லை. கண்களில் கண்ணீர் வழிந்தது யுவராஜிற்கு .
“கூப்பிடு யுவா… இந்தப் பாவிய நீ அப்பான்னு கூப்பிட நான் தவம் செஞ்சிருக்கணும்.” மனோகரும் கரைந்தார்.
“ அப்பா… அப்பா…..” அவர் கையில் தன் முகத்தைப் புதைத்து அழுதான்.
இருவரும் இத்தனை வருடம் காட்டாத அன்பை இன்றே தீர்த்துக் கொள்ளவது போல உருகினர். தன் முதல் மகனை ஆசைத் தீரக் கொஞ்சி மகிழ்ந்தார் மனோகர். யுவா தன் தந்தையின் மடியில் தலை வைத்துப் படுத்துத் தன் மன ஏக்கங்களைப் போக்கிக் கொண்டான்.
“ அப்பா இனிமே என்கூடையே இருங்கப்பா? ப்ளீஸ்.. “ சிறு குழந்தையாகவே மாறிவிட்டான்.
“ யுவா நாம இனி ஒரே குடும்பம். சித்துவும் உன்னை அண்ணான்னு ஏத்துக்கிட்டான். பார்வதியும் நிச்சியம் ஏத்துப்பா.” அவன் தலையை வருடிக் கொடுத்தார்.
“ சித்து ரொம்ப ஸ்வீட் பா. என்னையே கன்வின்ஸ் பண்ணிட்டான். இப்போ கூட நமக்கு டைம் குடுத்துட்டு அவன் வெளிய போய்ட்டான். பார்வதி அம்மா கிட்ட முன்னாடியே சொல்லிட்டோம். அவங்க ரொம்ப நல்லவங்க. “ கண்ணை மூடிக்கொண்டே அவர் வருடலை ரசித்த படி பேசினான்.

“ பார்வதிக்குத் தெரியுமா? அவளும் ரொம்ப நல்லவ. என்கிட்டே இருந்து எதையும் எதிர்பார்க்காம இருந்தவ. அவகிட்ட எப்படி சொல்றதுன்னு தவிச்சேன். அந்த வேலைய நீங்க செஞ்சுட்டீங்க. அவ கிட்டயும் நான் மன்னிப்புக் கேட்கணும். எனக்கு உடனே மலர பாக்கணும் போல இருக்கு யுவா.. நாம இப்போவே அவ இருக்கற இடத்துக்குப் போகலாமா?” மிகுந்த ஆசையுடன் கேட்க,
“ போகலாம் ப்பா … முதல்ல இங்க எல்லாத்தையும் பார்வதி அம்மா கிட்ட சொல்லி அதுகப்பறம் போகலாம். “
அவன் சொல்வதை ஏற்றுக்கொண்டார். பின்பு அவனின் குழந்தைப் பருவம், படிப்பு அனைத்தையும் கேட்டறிந்தார். அவரின் அந்த ஆர்வம் யுவாவிற்கு மனநிறைவை அளித்தது.
இத்தனை நாள் அவர் தங்களை வேண்டும் என்றே நிராகரித்துச் சென்றதாக நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தான். மனோகர் அவனிடம் சிறு சிறு விஷயங்களைக் கூடக் கேட்டுக் கொண்டார். அவனது நண்பர்கள், அவன் படித்த பாடம், அமெரிக்காவில் அவன் தங்கிய இடம் ஒன்று விடாமல் தன் மகனை அன்றே முழுதாகத் தெரிந்து கொண்டு விடவேண்டும் என்ற வேகம் இருந்தது.
சிறு வயதில் யுவா தந்தை இல்லாமல் இழந்த அனைத்துத் தருணங்களையும் சொல்லும்போது மிகுந்து வேதனையுற்றார். அவனை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார். அவனைச் சிறு வயதில் ஆசைதீர கையில் ஏந்திக் கொஞ்ச முடியாமல் போனதை நினைத்து அவருக்கு மேலும் கண்ணீர் வர, அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடினார். அவன் வளரச்சியைப் பார்த்துப் பெருமைப்பட்டார்.
இனி ஒரு நாளும் அவனை விட்டு விலகக் கூடாது என்று தீர்மானித்தார்.
சித்து வீட்டில் பார்வதியிடம் நடந்த அனைத்தையும் சொல்லிக்கொண்டிருந்தான். தன் அம்மா விடம் செய்த சத்தியத்தினால் தான் தன்னிடம் மனோகர் எதுவும் சொல்லவில்லை என்பதை உணர்ந்த பார்வதி அவர் மேல் இருந்த சிறு வருத்தமும் நீங்கப் பெற்றார். அனைத்தையும் சொல்லிவிட்டு பார்வதியின் முகத்தில் ஏதேனும் வருத்தம் தெரிகிறதா என்று அவரையே ஊன்றிப் பார்த்தான்.
மாறாக அவர் முகத்தில் தெளிவே காணப்பட்டது. “ என்னடா அப்படிப் பார்க்கற?” மலர்ந்த முகத்துடனே சித்துவைக் கேட்க,
“இல்ல இந்தச் சிடுவேஷன்ல நீங்க அழனும் இல்லனா கோவப்படனும், அது ரெண்டுமே இல்லாம தெளிவா இருக்கீங்களே அதான் ஒரு சின்ன கன்ஃப்யூஷன்” தன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டே கேட்டான்.
உடனே அவன் தலையில் தட்டி, “ இல்லை சித்து அவங்க வாழ்க்கைல எனக்கே தெரியாம நான் வந்துட்டேன். ஆனா உங்க அப்பா என்னைக் கடுமையா ஒரு நாளும் நடத்தினது இல்ல. மலரும் என்னகாக அவங்க ஒதுங்கிப் போய்ட்டாங்க. இத்தனை நாள் எப்படி அவங்க கஷ்டப்பட்டு இருப்பாங்க. அவங்க நெனச்சு இருந்தா என் கல்யாணமே நடந்திருக்காது. இவங்க ரெண்டுபேருக்கும் நான் என்ன கைம்மாறு செய்ய முடியும். இப்பயாவது அவங்க ஒண்ணா சேரனும். அது தான் என்னால முடிஞ்சுது. “ உடனே அவங்கள வர சொல்லணும்.” முகம் மலர்ந்து சொல்ல, தன் தாயை நினைத்துப் பெருமைப் பட்டான் சித்து.
அதற்குள் யுவாவும் மனோகருமே அங்கே வந்துவிட, அவர்களை அன்போடு வரவேற்றார் பார்வதி. மனோகர் வியந்துப் பார்க்க ,
“என்னை மன்னிச்சிடுங்க. உங்க வாழ்க்கைல நடந்த எல்லா குழப்பத்துக்கும் நான் தான் காரணம். என்னை மன்னிச்சிடுங்க,
மலர் அக்கா கூடத் தான் இனிமே நீங்க இருக்கணும். எனக்கு அதில எந்த வருத்தமும் இல்லை. நான் சித்து கூட இருந்துக்கறேன். கொஞ்சம் வருத்தம் இருக்கத் தான் செய்யுது, இருந்தாலும் அக்கா பட்டக் கஷ்டத்த நினைக்கறப்ப இது ஒன்னும் பெருசில்ல” பார்வதி சொல்ல,
“இல்ல பார்வதி. நீ தான் என்னை மன்னிக்கணும். உன்கிட்ட நான் இதைச் சொல்லியிருக்கணும். ஆனா சொல்லமுடியல. ஆரம்பத்துல மலர் நினைவால உன்கிட்ட சரியா பேசக்கூட மாட்டேன். எல்லாத்தையும் நீ பொறுத்துக்கிட்ட. நான் உன்னைத் தேவையில்லாம தண்டிச்சுட்டேன். மன்னிச்சிடு பார்வதி” அவர் மனதார மன்னிப்பு வேண்டினார். யுவா அருகே வந்தான்.
“ எனக்கும் நீங்க அம்மாதான். எங்க அம்மா மாதிரி நீங்களும் ரொம்ப ரொம்ப நல்லவங்க. யாரும் இனிமே பிரிஞ்சு இருக்க வேண்டாம். நாம எல்லாரும் இனிமே ஒண்ணா இருக்கலாம். நீங்க இதுல கொஞ்சம் கூட வருத்தப் படவேண்டாம்.” அவரின் தோள்களைப் பற்றிக்கொண்டு சொன்னான் யுவராஜ்.

அவனின் நல்ல மனது அனைவரையும் இளகச் செய்தது. அனைவரும் சென்று உணவருந்தினர். பார்வதி இம்முறை அனைவருக்கும் பரிமாறினார். குழந்தையும் எழுந்து விட அது இப்போது யுவாவின் மடியில் அமர்ந்து உணவு உண்டது.
அவன் குழந்தைக்கு ஊட்டிவிட்டான். அதைக் கண்ட மனோகர் எழுந்து அவன் அருகில் வந்தார். யுவா அவரைப் பார்க்க,
“ எனக்கு ஒரு ஆசை யுவா! உனக்கு நான் ஊட்டிவிடனும்.” தன் தட்டிலிருந்து ஒரு உருண்டை எடுத்து அவனுக்கு ஊட்ட , அவனும் கண்ணீர் மல்க அதை உண்டான்.

பார்வதியும் தன் பங்கிற்கு அவனுக்கு ஊட்டினார். அவருக்கு அடுத்து “ எங்க அண்ணாக்கு நான் ஊட்டனும் தள்ளுங்க” என்று அவனும் ஊட்டினான்.
மகிழ்ச்சியில் தத்தளித்தான் யுவராஜ். இந்த இன்பமான நேரத்தில் தன் தாய் தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். அனைவரும் உண்டு பின் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
திடீரென சித்து “ அண்ணியப் பத்தி சொல்லுங்க “ என்று சாதாரணமாகக் கேட்க, மனோகரும் பார்வதியும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.
இதைப் பற்றி அவன் அவர்களிடம் எதுவும் சொல்லாமல் இருக்க, இப்போது சங்கடமாக உணர்ந்தான்.
“ இல்லப்பா .. அது வந்து “ என்று இழுக்க ,
“சொல்லுப்பா.. “ சித்து கிண்டல் செய்ய
“ஆராதனா.. அவ பேரு. அம்மா கூட நிச்சயம் பண்ண முடிவு பண்ணிட்டாங்க.” தயங்கித் தயங்கிச் சொல்ல,
நக்கலாகச் சிரித்துக் கொண்டிருந்தான் சித்து. அதில் சற்றுக் கடுப்பாகி
“ சக்தி பத்தி சொல்லிட்டியா சித்து?” இப்போது யுவா கேட்க,
திரு திரு வென விழித்தான் சித்து. பார்வதியும் மனோகரும் மாறி மாறி அவனைப் பார்க்க,
“ அண்ணா ….” மனதில் கத்தினான்.

“ ஒரு போன் பண்ணனும் இதோ வரேன்..” என்று அங்கிருந்து தப்பிச் சென்றான் சித்து.
“என்னப்பா அண்ணனும் தம்பியும் எங்களுக்கு வேலையே வைக்கல போல” மனோகர் சிரித்துக்கொண்டே கேட்க,
“ஆமாப்பா. உங்களுக்கும் பிடிக்குமப்பா” மெதுவாகச் சொல்ல
“ உங்க விருப்பம் தான் எங்க விருப்பம் அதுக்கு எப்போதுமே தடை இல்லை யுவா” பார்வதி சொன்னார்.

அதற்குள் அவனுக்கும் போன் மணி அடிக்க அவனும் எழுந்து சென்றான்.
சித்து நிஜமாகவே போன் செய்யத் தான் சென்றான். சக்த்திக்குப் பேசவேண்டும் என்று தோன்றியது. அவளுக்கு இப்போது போன் செய்ய , அவளோ தனக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார் தன் தந்தை ஆனால் அவள் அவனிடம் ‘நானும் சித்துவும் காதலிகின்றோம்’ என்று சொல்லப்போவதாச் சொன்னாள்.
“ சக்தி என்ன சடனா உங்க வீட்ல இப்படி அர்ரெஞ் பண்ணிட்டாங்க, நீ உங்க அம்மாகிட்ட சொன்னியா?” சித்து என்ன செய்வது என்று மனதில் யோசித்துக் கொண்டே கேட்டான்.
“ சொல்லிட்டேன் சித். அவங்க என்ன செய்யறதுன்னு தெரியாம இருக்காங்க. “ அவள் சற்று கலவரமாகவே பேசினாள்.
“ ஹே சகி, நீ டென்ஷன் ஆகாத, எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். அவங்க இன்னும் ரெண்டு மூணு நாள் கழிச்சு தான வராங்க. அதுக்குள்ள நான் அங்க வந்துடுவேன். எனக்கு இப்போ பெரிய சப்போர்ட் இருக்கு. நீ கவலைப் படாத.” யுவாவை மனதில் நினைத்து இப்படிச் சொன்னான்.
“ சரி , உன்கிட்ட விஷயத்தைச் சொன்ன பிறகு தான் கொஞ்சம் நிம்மதியாச்சு. நீ ஏன் டா ரெண்டு நாளா போன் எடுக்கல. நான் எவ்ளோ டென்ஷனா இருந்தேன் தெரியுமா?” செல்லமாகக் கோவப்பட்டாள்.
“ என்னது டா வா? என்னடி வர வர மரியாதை தேஞ்சுக்கிட்டே போகுது.?” அவனும் அவளுக்கு ஈடு கொடுத்தான்.
“ ஆமா எனக்குக் கோவம் வந்தா அப்படி தான் சொல்லுவேன். என்ன டா பண்ணுவ?”
“ நீ பக்கத்துல இருந்தா என்ன பண்ணுவேன்னு காட்டியிருப்பேன். ஹ்ம்ம்… “ இறங்கிய குரலில் அவன் பேச, அவனது பெருமூச்சு அவள் காது வழியாக உள்ளத்தில் புகுந்து ஏதோ செய்தது.
“உன்மேல பொய்யா கூட கோவப் பட முடியல. சித் நீ எப்போ வருவ என்னைப் பார்க்க, ? உடனே உன்னைப் பார்க்கணும் போல இருக்கு.. ரெண்டு நாளா சரியா சாப்பிடக் கூட இல்ல.” சிணுங்கலுடன் சொல்ல
“ சீக்கிரம் வரேன் டியர். எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா? இப்போ தான் வீட்ல எல்லா பிரச்சனையும் சால்வ் ஆச்சு.”
“ என்ன பிரச்சன? அதுனால தான் நீ போன் எடுக்கலையா?”
“ ஆமா! என் அண்ணா வந்துட்டாரு. ….” என்று தொடங்கி சுருக்கமாக அவளுக்குக் கதை சொல்ல,
“ ரொம்ப சந்தோஷம் சித். சரி நான் இப்போ போன வைக்கறேன். நீ சீக்கிரம் வந்து நம்ம பிரச்சனைய பாரு” தன் நிலைமையை நினைத்து வருந்தினாள்.
“ எங்க அண்ணா எல்லாத்தையும் சால்வ் பண்ணுவாரு , டோன்ட் வொர்ரி. நீ நல்லா சாப்பிடு. சரியா?” இணைப்பைத் துண்டித்தான்.

“ என்ன டா அண்ணா சால்வ் பண்ணனும்?” பின்னாலிருந்து யுவா கேட்க, தூக்கிவாரிப் போட்டது சித்துவிற்கு.
“ என்ன அண்ணா! லவ்வர்ஸ் பேசறத கேட்கக் கூடாது.” பயந்த தன் நெஞ்சைத் தேய்த்துக் கொண்டே சொல்ல,
சத்தமாகச் சிரித்தான் யுவா!
“ என்ன சிரிப்பு?” முறைத்துக் கொண்டே சித்து கேட்டான்.
“ நீ அவள முதல் முதலா ரெஸ்டாரெண்ட் ல பாத்ததுலேந்து எனக்கு எல்லாம் தெரியம் டா.. நான் உனக்குக் குடுத்த வொர்க் பிரேஷர முடிச்சுட்டு போய் அவளுக்கு நீ ப்ரோபோஸ் பண்ண … அப்பறம் நீ அவ பிறந்தநாள்க்கு குடுத்த கெஸ்ட்ஹவுஸ் ட்ரீட் வரைக்கும் தெரியும்.” அவனைப் பார்த்துக் கண்ணடித்து அவன் யுவா அடுக்கிக் கொண்டே போனான்.
வாய் பிளந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான் சித்து. சட்டென அவள் மூலையில் ஏதோ உரைக்க,
“ அண்ணா!” யுவா வை ஏதோ போல பார்க்க,
“ என்ன டா அடிக்கப் போறியா? ஏன் இப்படி பாக்கற?” யுவா சற்று விலகி நின்று கேட்க
“இல்ல ணா! அப்படீனா இப்போ சக்திக்கு வீட்ல மாப்பிளை பாத்திருக்காங்களாம். அது யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?” ஆர்வமாகக் கேட்க
“ என்ன? மாப்பிளை பாத்திருக்காங்களா? இது எனக்குத் தெரியாது…” கூலாக அவன் சொல்ல
“ விளையாடாத ண்ணா… சொல்லு.. நீ தான எனக்கு ஹெல்ப் பண்ணனும்.” கையை மடக்கி அவன் முன் நின்றுக் கேட்க
யுவாவிற்கு அவன் நின்ற கோலம் சிரிப்பை வரவைத்தது.
‘ சரி சரி .. எல்லாம் நான் பாத்துக்கறேன். இப்போ வா என்கூட “ அவன் தோள் மேல் கை போட்டு அழைத்துச் சென்றான்.
இருவரும் ஒன்றாக வெளியே செல்லும் அழகை ரசித்தார் மனோகர். இன்று அவர் மனம் நிறைவாக இருந்தது. மலரை மட்டும் எப்போது சந்திப்போம் என்று ஏங்கிக் கொண்டிருந்தார்.
யுவா சித்து வை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான். எதற்காக வெளியே வந்தோம் என்று சித்து நினைக்க,
“ அம்மா வராங்க சித்து.” யுவா மெல்ல சொல்ல
“ என்ன…?! என்ன சொன்னீங்க?” நடந்துக்கொண்டிருந்தவன் சட்டென நின்று கேட்டான்.
“ம்ம்ம் .. ஆமா. அம்மா வும் மாமா வும் வந்துட்டு இருக்காங்க. மாமா நான் இங்க இருக்கறதா அம்மா கிட்ட சொல்லிட்டாரு. அவங்களுக்கு நான் அப்பாவா எதாவது கஷ்டப் படுத்திடப் போறேன்னு பயம். அதான் உடனே கிளம்பி வராங்க. இப்போ தான் மாமா போன் பண்ணி சொன்னாரு. “
“ மலரம்மா ரொம்ப நல்லவங்க. அவங்க எவ்வளோவோ கஷ்டப்பட்டும் , அப்பா கஷ்டப் படக் கூடாதுன்னு இப்பயும் நினைக்கராங்களே! ரொம்ப கிரேட். வரட்டும் அண்ணா. நான் போய்க் கூட்டிட்டு வரேன். “ உள்ளம் கனிந்தான் சித்து.
“ நம்ம குடும்பத்துல எல்லாரும் நல்லவங்க சித்து. நான் தான் கொஞ்ச நாள் முரட்டுத் தனமா நடந்துக் கிட்டேன்.” சிறு வருத்தத்துடன் சொல்ல,
“ நீங்க தான் எங்க எல்லாரையும் விட நல்லவர் அண்ணா. அப்பா மேல இருந்த கோவம், அவர் நிலமைய எடுத்துச் சொன்னதும் புரிஞ்சுகிடீங்களே .. அவர் மேல எவ்வளவு பாசம் இருந்தா நீங்க அவருக்காக ஃபீல் பண்ணியிருப்பீங்க .. நீங்க பட்ட கஷ்டத்தையும் மறந்துட்டு எங்கள ஏத்துக்கிடீங்க. தேங்க்ஸ் அண்ணா” அவனைக் கட்டிக்கொண்டான் சித்து.

“ மாறி மாறி ஃபீல் பண்ணது போதும். இப்போ என்ன பண்ணலாம்.” யுவா கேட்க
“முதல்ல நீங்க அம்மாக்கு போன் பண்ணி இங்க நடந்தது எல்லாத்தையும் சொல்லி , கவலைப் படாம வர சொல்லுங்க. பாவம் உங்களை நினச்சு பயந்துட்டே வரப் போறாங்க. நீங்க ஒரு டேரர் பீஸ்” அவனைக் கிண்டல் செய்தான்.
அவனை முறைத்தான் யுவா. “ சக்தி விஷயமா ஏதோ கேட்டியே… என்ன அது?!” தாடையில் கை வைத்து யோசித்தான்.
“ தெய்வமே!! மன்னிச்சிடு! முதல்ல அம்மாவுக்குப் போன் .. அப்புறம் நாம பேசிப்போம்.” பயந்து போய்ச் சொல்ல,
“ கொஞ்சம் கேப் கெடச்சா என் தலைலையே கை வைக்கற… உனக்கு அப்பறம் இருக்கு…” சொல்லிவிட்டு மலருக்குப் போன் செய்தான்.

KVK-18

ஆகவே மறுநாளே அவர்களின் திருமணம் நடந்தது. ஒரு சிறிய கோவிலில் அர்ச்சகர் மற்றும் அன்பரசு மற்றும் அவரின் தாய் , இவர்கள் மூவரின் முன்னிலையில் ஆடம்பரம் இல்லாமல் மாலை மாற்றி , தாலி கட்டி மலரைத் தன் மனைவியாக்கிக் கொண்டார் மனோகர்.
அவர்களுக்குப் பாலும் பழமும் கொடுத்து வரவேற்று அவர்களை அந்தக் குடிசை வீட்டிலேயே தங்க வைத்தனர். அன்பரசுவும் அவரின் அம்மாவும் கடையில் தங்கிக் கொண்டனர். சாப்பிடும் நேரம் மட்டும் இங்கு வருவார்கள்.
மனோகர் மலர் இருவரும் ஆனந்தத்தின் எல்லையில் இருந்தனர். மலர் தனக்குக் கிடைத்த வாழ்க்கையை ஒரு வரமாக நினைத்து வாழ்ந்தாள்.
தன் வாரிசைச் சுமந்து கொண்டிருந்தவளை பூ போலத் தாங்கினார் மனோகர். அது தான் அவளுக்கு மூன்றாம் மாத தொடக்கம். அவளுக்கு ஒரு சிறு வேலையும் தரமாட்டார். அவளுக்குத் தலை சுற்றல் வாந்தியின் போதும் அருகிலேயே இருந்தார். மலரின் தாய் சமையல் வேலைகளைக் கவனித்துக் கொண்டார். ஆகவே முழுக்க முழுக்க மலரின் அருகாமையிலேயே பொழுதைக் கழித்தார்.
கலையில் காபி குடிக்கும் போதும் இருவரும் ஒரே தம்ளரில் தான். மனோகரை பாதி குடிக்கச் சொல்லி மீதியை அவள் குடிப்பாள். இது அவர்களின் வாடிக்கை. மனோகர் ஏற்கனவே கூறியபடி, மலர் தான் உணவை அவருக்கு ஊட்டுவாள். அவளுக்கு முடியாத நேரம் மனோகர் அவளுக்கு ஊட்டுவார்.

இருவரின் இந்த அன்னியோன்யம் அன்பரசுவை நெகிழச் செய்தது. இவருவரையும் கடைசி வரை இப்படியே வை கடவுளே என்று வேண்டினார். அந்த வேண்டுதல் பலிக்காமல் போய்விட்டது.
மனோகரின் தந்தை இவர்களின் திருமணம் பற்றி அறிந்தும் எதுவும் பேசாமல் இருந்தார். அவர் மனதில் வன்மம் அதிகரித்துத் தான் இருந்தது. இம்முறை வேறு மாதிரி சதி செய்ய யோசித்தார். அந்த நேரம் மனோகரின் நண்பனிடமிருந்து வேலையில் வந்து சேர்ந்துக் கொள்ளுமாறு தபால் வர அதைச் சாக்காக எடுத்துக் கொண்டு தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள துடித்தார்.
உடனே அதை எடுத்துக்கொண்டு மனோகரைத் தேடிச் சென்றார். அவர் வீட்டு வாசலில் நின்று மனோகரை அழைத்தார். முதலில் ஓடி வந்தது மலர் தான். அவரைப் பார்த்ததும் பணிவாக வணங்கினாள். அவர் மிகவும் நல்லவர் போல நடிக்க ஆரம்பித்தார்.
“ நீ தான் என் மருமகளாம்மா “ கண்களில் நீர் வரவைத்துக் கேட்டார்.
“மாமா “ உடனே அவர் காலில் விழுந்தாள்.
“மலர் என்ன செய்யற, அவரைப் பத்தி உனக்குத் தெரியாது , வா இங்கே !” மனோகர் அவளைத் தன் பக்கம் இழுக்க
“ இன்னும் என் மேல கோபமா மனோ! நடந்ததெல்லாம் மறந்துடுப்பா. எனக்கு நீ ஒரே பையன். உன்னோட ஆசைய நான் நிறைவேத்தனும். அதை மறந்துட்டு நான் தப்பா நடந்துக்கிட்டேன். என்னை மன்னிச்சிடு மனோ” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்சினார்.
“ உங்கள நம்ப நான் தயாரா இல்லை. நீங்க போகலாம். எங்களோட வாழ்க்கைய கெடுக்காதீங்க.” திரும்பி உள்ளே நடக்க ஆரம்பித்தார்.
“மலர். நீயாவது எடுத்துச் சொல்லும்மா. அப்பா மகனுக்குக் கேட்டது நினைப்பானா!” அவரின் வயதுக்கு அவர் கெஞ்சுவதைப் பார்க்கப் பொறுக்கவில்லை அவளுக்கு.
“ நீங்க முதல்ல வீட்டுக்குள்ள வாங்க மாமா.” அன்புடன் அழைத்தாள்.
முகத்தில் மலர்ச்சியுடன் உள்ளே நுழைந்தார் . மனோகருகுக் கொஞ்சம் கூட விருப்பமில்லை. இருந்தாலும் மலரின் வார்த்தைக்கு மதிப்பளித்தார்.
“உட்காருங்க மாமா. உங்களுக்குக் குடிக்க எதாவது கொண்டுவரேன்.” தன் அன்னையிடம் சென்று காபி கொண்டுவரச் சொல்லிவிட்டு மனோகரின் அருகே வந்தார். அன்பரசுவும் விஷயம் கேள்விப் பட்டு அங்கே வர,
“ மனோ உங்க ரெண்டு பேரையும் ஒரு நல்ல நாள் பார்த்து நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு போறேன் . ஐயர் கிட்ட சொல்லியிருக்கேன். “ கனிந்த பார்வையுடன் சொல்ல,
மலர் மிகவும் மகிழ்ந்தாள். மனோகர் இனி இந்த வசதியில்லாத இடத்தில் கஷ்டப் படத் தேவையில்லை என்று நினைக்க,
“ அதெல்லாம் எதுவும் வேண்டாம். நான் இங்கேயே நிம்மதியா சந்தோஷமா இருக்கேன். எங்களை இப்படியே விட்டுடுங்க.” எங்கோப் பார்த்துக் கொண்டு சொன்னார்.
“மலர் ! நீ எடுத்துச் சொல்லும்மா. நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுல இருந்தா தான் எனக்கு நிம்மதி. அது தான் முறை. அவனுக்குப் புரிய வை” மலரிடம் பேசித் தன் வேலையை முடிக்க நினைத்தார்.

மலரும் மனோகரை சமாதனாம் செய்து ஒத்துக்கொள்ள வைத்தார். அவர் அரை மனதோடு சம்மதம் சொல்ல,
“ மனோ ! உனக்கு இந்தக் கடிதம் வந்தது. என்னன்னு தெரியல கொஞ்சம் பாரு.” மனோகரிடம் கொடுத்தார்.
அதை வாங்கிப் படித்துவிட்டு, மிகவும் மகிழ்ந்தார்.
“மலர்! எனக்கு வேலை கிடைச்சுடுச்சு. வந்து ஜாயின் பண்ணிக்க சொல்லிட்டாங்க.” மகிழ்வுடன் சொல்ல,
இப்போது தான் நடிப்பைக் கொட்டினார் பெரியவர்.
“ என்னப்பா சொல்ற, வேலைக்கு ஏன் போகணும். நம்ம வீட்லயே இருந்து எனக்குப் பிறகு எல்லாத்தையும் கவனிக்கப் போறன்னு கனவு கண்டுகிட்டு இருக்கேன். நீ எதுக்கு வெளிய போய் வேலை செய்யணும். அதெல்லாம் வேண்டாம். “ இவ்வாறு அவர் சொல்ல,
மனோகர் தன் முடிவிலேயே உறுதியாக இருந்தார். மீண்டும் தொல்லை செய்யாமல் பெரியவர் கிளம்ப, போகும்போது,
“ சரிம்மா நான் நல்ல நாள் பார்த்துச் சொல்லியனுப்பறேன், நீங்க ரெண்டு பேரும் வரணும் ; அதுக்கப்பறம் நீ வேலைக்குப் போ மனோ.” இருவரையும் பார்த்துச் சொல்லிவிட்டு , அனைவரிடமும் விடைப் பெற்றுச் சென்றார்.
மனோகர் மறுநாளே வேலைக்குக் கிளம்பத் தயாரானார். முதலில் அங்குச் சென்று வேலையில் சேர்ந்துவிட்டு , வீடு பார்த்துச் சாமான்கள் வாங்கி வைத்து, ஒரு வாரத்தில் திரும்பி வந்து மலரை அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அதன் பிறகு அவர் ஊருக்குச் சென்று திரும்பும் வரை என்ன நடந்தது என்று அவர் அறியாத ஒன்று. பின்பு மலர் ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டதாக அவருக்குத் தந்தி வந்தது.
அடித்துப் பிடித்து நேரே அவரின் தந்தையைப் பார்க்கச் சென்றார். அவர் நல்லவர் போல மீண்டும் நடித்தார். மலர் தண்ணீர் எடுக்கச் சென்ற பொது ஆற்றில் இறந்து விட்டதாகவும் அதைத் தாங்க முடியாமல் அவள் தாயும் அடுத்த நாள் இறந்துவிட்டதாகவும் சொன்னார்.
ஊரிலிருந்து வரும் போதே அழுது சிவந்த அவரது கண்கள் இப்போது அவரின் தந்தையின் பேச்சில் கோபம் அடைந்து ரத்தமே வந்தது போலக் காட்சியளித்தது.
நேராக அன்பரசுவைத் தேடிச் சென்றார். வீட்டில் மலரின் படத்திற்குப் பெரிதாக மாலை போட்டு வைத்திருந்தது.அதைக் கண் கொண்டு காண முடியாமல் அழுதார் . நரக வேதனையாக இருந்தது. வாழ்வே இருண்டு விட்டதாகத் தோன்றியது. இனி தான் வாழ்ந்து என்ன ஆகப் போகிறது என்று வருந்தினார்.
“ஆற்றில் தண்ணீர் எடுக்கப் போனபோது மூழ்கிட்டான்னு சொல்லிட்டாங்க மனோகர். எங்க அம்மாவும் படுத்தப் படுக்கையாகி இறந்துட்டாங்க.” அழுது கொண்டே அன்பரசு சொல்ல,
மனோகரிடம் பதில் இல்லை. துவண்டு கிடந்தார்.
“உங்களுக்கு உங்க அத்தை மகள் கூட நிச்சியம் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்.” அன்பரசு கேட்க
“ அது எனக்கே தெரியாம நடந்த விஷயம். என்னைப் பொறுத்த வரை மலர் மட்டும் தான் எனக்கு மனைவி. இனிமே எனக்கு எந்த ஆசையும் இல்லை. எனக்கு வேலை கிடச்ச இடத்திலேயே தங்கப் போறேன். எங்க அப்பா கூட ஒரு நிமிஷம் கூட நான் இருக்க மாட்டேன். “ சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அது தான் மனோகரும் அன்பரசுவும் இறுதியாகச் சந்தித்தது. வழியில் அவர் தந்தை தடுத்தும் அவர் ஊருக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
அதற்குள் அன்பரசு வந்து தொல்லைக் கொடுக்காமல் இருக்க, மனோகருடைய கழுத்தில் இருந்தத் தங்கச் சங்கிலியைக் களவாடி விட்டதாக அவர் மேல் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதுவும் மனோகரே புகார் கொடுத்ததைப் போன்று ஏற்பாடு செய்து விட, அன்பரசு சிறையில் தள்ளப்பட்டார். இதைப் பற்றி ஏதும் அறியாத மனோகர் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

ஒரு மாதம் கழித்து ஊரில் அவருக்குத் திருமண ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்துக் கொண்டிருந்தது.
மனோகரை வரும்படி அழைத்துப்பார்க்க , அவரோ மறுத்துவிட்டார். பின்பு மறைமுகமாக மிரட்டினார் பெரியவர்.
“மனோ ! இப்போ நீ வரல மலர் கதைய முடிச்ச மாதிரி அன்பரசுவை சிறையிலேயே முடிக்க சொல்லட்டுமா?” லேசாகச் சிரித்தார்.
“ மலரைக் கொன்னுடீன்களா? என்ன சொல்றீங்க? அன்பரசு ஏன் சிறையில் இருக்காரு?” பதறிக் கொண்டு கேட்க,
அவர் செய்த தில்லுமுல்லைச் சொல்ல,
“இப்போ நான் என்ன செய்யணும்?”
“ உனக்கும் பார்வதிக்கும் கல்யாணம் நடக்கணும். இல்லனா அன்பரசு உயிர் போய்டும்” சொல்லிவிட்டு டெலிபோனை வைத்தார்.
மனோகர் வந்ததும் , அன்பரசுவை விடுதலை செய்யச் சொன்னார்கள். நேரே அவரின் தந்தையின் அறைக்குச் சென்று நடந்தவற்றைக் கேட்க,
அவர் அனைத்தையும் சொன்னார்.
மனோகர் சென்று ஒரு நாள் கழித்து , மலரைக் காண ஆட்களை அனுப்பிவைத்தார். அன்பரசு அப்போது தான் கடைக்குச் சாமான்கள் வாங்கவென்று பக்கத்து டவுனுக்குச் சென்றார். வீட்டில் மலரும் அவரது தாயும் மட்டுமே தனித்து இருந்தனர். ஆட்கள் கதவைத் தட்டி ,
“ ஐயா , உங்கள கையோட கூட்டிட்டு வர சொன்னாரும்மா. இன்னிக்கு ரொம்ப நல்ல நாளாம். அதனால மகன் இல்லாட்டியும் மருமகளை மட்டும் வீட்டுக்கு அழைக்கனும்ன்னு ஐயர் சொன்னதா உங்கள கூட்டிட்டு வரச் சொன்னார். திரும்ப நாங்களே கொண்டு வந்து விடறோம். சின்னையா வந்ததும் அவர் கூட வரலாம்ன்னு சொன்னங்க.” வந்தவர்களில் ஒருவன் சரளமாகப் பேசினான்.
இரு பெண்களும் அதை நம்பி விட்டனர். மலர் தாயைப் பார்த்து,
“ அம்மா , நீங்களும் வாங்க” என்று அழைக்க
“ இல்லம்மா முதல் முதலா புகுந்த வீட்டுக்குப் போற , நான் வரக் கூடாது, நீ போயிட்டு வா, நான் அண்ணன் கூட இன்னொரு நாள் வரேன். பத்தரமா திரும்பிக் கொண்டு வந்து விட்டுடுங்க “ என்று வழியனுப்பி வைத்தார்.

இரண்டு தெருக்களை அமைதியாகக் கடந்தனர். பின்பு அவளைக் கைகளை ஒருவன் பற்றிக்கொள்ள, கால்கள் இரண்டை மற்றொருவன் பற்றிக்கொள்ள, அவளைத் தூக்கிக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றனர். அவள் வாயைத் துணியை அடைத்துக் கத்த விடாமல் செய்தனர். எவ்வளவோ திமிறிப் பார்த்தும் அவளால் அசையக் கூட முடியவில்லை.
அவளைத் தண்ணீரில் வைத்தனர். இடைவரை தண்ணீரில் நிறுத்தி அவள் கைகளைப் பின்னால் பிடித்துக் கொண்டான் ஒருவன் , தலையைப் பிடித்து ஒருவன் முக்கினான். அவளுக்கு விழி பிதுங்கியது. கத்தவும் முடியாமல் போனது. வெளியே வர முடியாத படி அவளைப் பற்றினார்கள்.
சிறிது நேரத்திலேயே அவள் மயங்கி விழ, அப்படியே ஆற்றோடு போகட்டும் என விட்டுவிட்டு சென்றனர்.
அவள் ஆற்றின் வேகத்தோடு அடித்துக் கொண்டு சென்றாள்.
இதைக் கேட்ட மனோகர் மயக்கம் வராத குறையாக அங்கே அமர்ந்துவிட்டார். உலகமே தலைகீழாக ஆனாத உணர்ந்தார். இதற்கெல்லாம் உங்களுக்குத் தகுந்த தண்டனைக் கிடக்கும் என்று மனதில் சபித்தார். மறுநாள் கல்யாணத்திற்கு தயாராகும் படி சொல்லிவிட்டுச் சென்றார் பெரியவர்.
மனதிற்குள் மலரிடம் மன்னிப்புக் கேட்டார். அன்றிரவு உறக்கம் சிறிதும் வரவில்லை. தன்னால் தான் மலருக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று மருகினார். தன் வாழ்வில் நிலவாக ஒளிவீசியவள் இன்று அமாவாசையாக மாறிப்போனதை அவரால் ஏற்க முடியவில்லை. ‘உனக்கு நான் பாவம் செஞ்சுட்டேன் மலர். அந்தப் பாவத்தை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னால போக்க முடியாது. நீ இல்லாத நான் ஒரு நடைபிணம் தான். அன்பரசுவைக் காபாற்றத் தான் நான் இந்தத் திருமணதிற்கு சம்மதிச்சேன். அவனையும் பலி கொடுக்க நான் விரும்பவில்லை. என்னை மன்னிச்சுடு மலர். உன்கூட நான் வாழ்ந்த நாட்கள் மட்டும் தான் என் வாழ்வின் சுந்தரக் காண்டப் பகுதி. இனி என் வாழ்வில் வசந்தம் என்பது சிறிதும் இல்லை.’ மலர் அருகில் இருப்பதாக நினைத்துத் தனக்குள் பேசினார்.

     வீசுகின்ற தென்றலே
  வேலையில்லை நின்று போ
  பேசுகின்ற வெண்ணிலா
  பெண்மையில்லை ஓய்ந்து போ
  பூ வளர்த்த தோட்டமே
  கூந்தலில்லை தீர்ந்து போ
  பூமி பார்க்கும் வானமே
  புள்ளியாக தேய்ந்து போ

பாவையில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

இனி தன் வாழ்வின் இருண்ட பாதையை நினைத்துக் கண்களை மூடிப் படுத்துக் கொண்டார். கண்களுக்குள் மலர்மொழி சிரித்தாள்.
திருமணத்தைத் தடுக்க வேறு வழி இருக்குமா என யோசித்தவர், தன் அத்தையிடம் சென்றார். அவர் மனோகரிடம், தனக்கு அனைத்தும் தன் அண்ணன் மூலம் தெரிந்தது என்று சொல்ல, அதிர்ந்தார் மனோகர்.
“மனோ! மலர் வாழ்க்கை என்னால காப்பாத்த முடியல, நீ இல்லனா பார்வதி நிச்சியம் உயிரோட இருக்கமாட்டா. இன்னொரு பெண்ணோட உயிரைக் காப்பாத்து “ கெஞ்சினார்.
மனோகர் எல்லா வழியும் அடைக்கப் பட்டதாக உணர்ந்தார். எதுவும் பேசாமல் திரும்பி நடக்க, “மனோ! இந்த விஷயம் பார்வதிக்குத் தெரிய வேண்டாம். அவளாவது நிம்மதியான வாழ்க்கைய வாழட்டும். நீ எனக்குச் சத்தியம் செய்” என்று விடாப் படியாகக் கேட்க,
பார்வதி ஒருத்தியாவது எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கட்டும். அவளையும் குழப்ப விருப்பம் இல்லை மனோகருக்கு. தன் சோகம் தன்னோடு போகட்டும் என்று அவருக்குச் சத்தியம் செய்தார்.
திருமணம் நடந்து முடிந்தது. மனோகர் யாரிடமும் ஆசி வாங்க மறுத்து விட்டார். பின் அவர் ஊருக்குக் கிளம்பும் முன் தனிமையில் தன் தந்தையைச் சந்தித்தார்.
நீங்க நினச்சது நடந்துடுச்சுன்னு மட்டும் நினைக்காதீங்க. என் மலர கொன்னுட்டு நீங்க நிம்மதியா இருக்க விடமாட்டேன்.
நான் உயிரை விட ரொம்ப நேரம் ஆகாது. ஆனா அது ஒரு நாள் வேதனை தான். உங்களுக்கு வாழ்நாள் முழுக்க நான் தண்டனைத் தரப் போறேன். பார்வதிக்கும் எனக்கும் நடுவில ஒன்னும் கிடையாது. உங்க குடும்பம் என்னோட அழிஞ்சது. நான் வரேன்.” ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
அவர் சென்றதும் மிகவும் நொந்து விட்டார் பெரியவர். அதிக மன அழுத்தம் அவருக்குப் பக்க வாதம் வந்து படுக்கையில் தள்ளியது. மனோகர் கடைசிவரை அவரை வந்துப் பார்க்கவில்லை.
ஒரு வருடம் மிகவும் கஷ்டப் பட்டார். பேச்சும் இல்லை, வலது பக்கம் முழுதும் செயலிழந்து போனது. பார்வதியின் தாய் எத்தைனையோ முறை அழைத்தும் மனோகர் வர மறுத்தார். கடைசியில் இறந்தே விட்டார்.
அந்த ஒரு வருடம் , பார்வதியுடன் அவர் பேசினாலும் ஒரு ஒதுக்கம் இருந்தது.பார்வதி அவரை எதற்கும் வற்புறுத்தியது இல்லை. ஆகவே சுமுகமாகவே சென்றது வாழ்வு. மனோகர் மலரின் இழப்பிலிருந்து முழுவதுமாக வெளி வர வில்லை. அன்பரசுவைத் தேடித் பார்த்தும் அவரும் கிடைக்க வில்லை.
தந்தையின் காரியத்திற்கு வரவேண்டும் என்று அவரின் அத்தை வற்புறுத்த அதற்கு வந்தார். காரியம் செய்ய மறுத்தார். அவரைப் படாதபாடு பட்டுச் செய்ய வைத்தார்கள்.
அனைத்தும் முடிந்து அமர்ந்திருந்தவரிடம் , பொறுமையாக வாழ்க்கையைப் பற்றி எடுத்துரைத்தார் பார்வதியின் தாய்.
“போவனளைப் பற்றி நினைக்காமல் இருக்கும் வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ளுங்கள். உங்க மலர் இருந்திருந்தா அவளும் இதைத் தான் சொல்லியிருப்பா. உங்க அப்பா செஞ்ச பாவத்திற்கு அவருக்குத் தக்க தண்டனை கிடைச்சுடுச்சு. இனி போனவங்க எப்பவும் திரும்பி வரமாட்டாங்க.

தவறு செஞ்சவங்க எங்கோ இருக்க, நீ பார்வதிய தண்டிக்கறது நியாயம் ஆகாதுப்பா. அவ பாவம். சின்ன வயசில இருந்து உன்னைப் பற்றி நாங்க தான் அவகிட்ட சொல்லி அவ மனசில உன்னை விதைச்சோம் அவளோட தப்பு எதுவும் இல்லை மனோ. நீ தயவு செஞ்சு என் பொண்ணை தண்டிக்காதே. உன் காலில் விழுந்துக் கேட்கிறேன் ” என்று அவர் காலில் விழப் போக, தடுத்தார் மனோகர்.
“ கொஞ்சம் யோசி மனோ!” சொல்லிவிட்டுச் சென்றார்.
பார்வதியை பற்றி அவர் தனிப்பட்ட முறையில் எதுவும் சிந்தித்ததில்லை. முதல் முறையாக அவளைப் பற்றி யோசித்தார். திருமணம் முடிந்த நாளிலிருந்து அவளுக்கு ஒரு முழம் பூ கூட வாங்கிக் கொடுத்ததில்லை. அவளும் கேட்டதில்லை. அவர்களுக்குள் மிகவும் குறைவாகவே பேச்சும் இருந்தது.
அவள் இது வரைத் தனக்கு தேவையானதைக் கவனித்துச் செய்திருக்கிறாள்.அனால் தான் ஏன் அப்படி இருக்கிறேன் என்று ஒருநாளும் கேட்டதில்லை. அவள் அவரைத் தொல்லை செய்ததே கிடையாது. அவள் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் தண்டனை அனுபவிக்கிறாள்.

தன் மனதை கொஞ்சாமாக அவளுக்காக ஒதுக்கினார். அவளுடன் அன்பாக இருக்க முயற்சித்தார். இரண்டு வருடங்கள் கழித்தே அவர் மனதை மாற்றிக்கொண்டு அவளுடன் வாழ ஆரம்பித்தார். அதற்காக மலரை மறக்கவும் அவரால் முடியவில்லை.
பின் மைதிலியும் சித்துவும் பிறந்தனர். அந்தக் குழந்தைகளிடம் நேரம் செலவழித்து மலர் நினைவின் வேதனையைக் குறைத்துக் கொண்டார்.
இதுவே மனோகரின் பக்கம் நடந்தவை.
அனைத்தையும் கேட்ட சித்துவும் யுவாவும் சொல்வதறியாது அமர்ந்த்திருந்தனர்.

KVK-17

நாளை அவரை மீண்டும் சந்திக்கப் போவதை எண்ணி ஒரு புது உணர்வுடன் அன்று தூங்க முடியாமல் தவித்தாள்.
அடுத்த நாள் மலரைச் சந்திக்க அதே நேரத்தில் சென்றார். மலர் அவருக்கு முன்பே அங்கு வந்துக் காத்திருந்தாள். இருவரும் பேசிக்கொள்ள ஆரம்பித்தானர். முதலில் மனோகர் தான் பேசுவார். பிறகு தயக்கம் நீங்கி, மலரும் நிறைய பேச ஆரம்பித்தாள்.
இந்தப் பழக்கம் தொடர ஆரம்பித்தது. இருவரும் தங்களின் சிறு வயதுக் கதையில் தொடங்கி நேற்று நடந்தது வரை அனைத்தையும் பேசித் தீர்த்தனர். ஒரு நாள் பார்க்காவிட்டாலும் இருவரும் ஒரு கை உடைந்தது போல் உணர்ந்தனர். மலர், மனோகரின் உள்ளத்தாலும் உணர்வாலும் கலந்தவள் ஆகிவிட்டாள்.
மலரோ, மனோகரை நம்பிக்கையின் சின்னமாகவே நினைத்தாள். மனதில் தினமும் அவரையே பூஜித்தாள். மனோகர் மனதில் நினைத்தால் , அவள் செயலில் செய்தாள். அந்த அளவு அவருடன் ஒன்றிவிட்டாள்.
இருவரும் தங்களின் தனி உலகத்தில் வாழ ஆரம்பித்தனர். அதில் வேறு யாருக்கும் இடம் இல்லை. தங்களுக்குள் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளும் இருவருக்கும் காவியமாய் மனதின் ஆழத்தில் பதிந்தது. மனோகருக்காக வித விதமாகச் சமைத்து எடுத்து வருவாள்.
அதை அவளையே ஊட்டிவிடும்படி கேட்பார். அவளும் செய்வாள்.
காதலையும் தாண்டி ஒரு உன்னதமான உறவை இருவரும் உணர்ந்தனர்.
ஒரு நாள் மனோகர், “மலர்! என்கிட்ட உனக்கு எது பிடிக்காது ? நான் அதை மாத்திக்கறேன் ” எனக் கேட்க,
“உங்களை நான் அப்படியே ஏற்றுக் கொண்டேன். நீங்க தான் நான், நான் தான் நீங்க. எனக்குன்னு தனியா விருப்பு வெறுப்பு இல்லை. நாம ரெண்டு பேரும் தனித்தனின்னு நான் நினச்சது இல்லை.” அவள் சொல்லி முடித்ததும், அதைக் கேட்டு
உணர்ச்சிக் கடலில் தத்தளித்தார் மனோகர். மலர் தன் வாழ்வில் கிடைத்த வரம், அவ்வளவு எளிதில் யாருக்கும் இப்படியொரு மனைவி கிடைப்பது சாத்தியம் இல்லை . மலரை நினைத்து மிகவும் பெருமைப்பட்டார்.
அந்தச் சந்தோஷத்தைக் குலைக்கும் வகையில் மனோகரின் வீட்டில் நிச்சய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மனோகர் அதைக் கண்டதும் பார்வதிக்கும் வேறு ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் என்றே நினைத்திருந்தார். நேரே தந்தையிடம் சென்று
“நான் எதாவது வேலை செய்யட்டுமா?” என்று அக்கறையுடன் கேட்க,
“ நீ ஏனப்பா வேலை செய்யனும், மாபிள்ளையா லட்சணமா ராஜா மாதிரி உட்காரு. நமக்குத் தான் நிறைய பேர் வேலைக்கு இருக்காங்களே!” சிரித்துக்கொண்டே சொன்னார்.
அதைக் கேட்டுச் சற்றே அதிர்ந்தார் மனோகர்.
“என்னப்பா சொல்றீங்க ? நான் மாப்பிள்ளையா?” புரியாமல் கேட்க,
“ஆமாம்ப்பா நீ தான நம்ம பார்வதியை கல்யாணம் பண்ணிக்கப் போற. அப்போ நீ தான மாப்பிள்ளை. இது எப்பவோ முடிவு செஞ்சது தான. “ சந்தேகமாகப் பார்க்க
“அப்பா! இது கொஞ்சமும் நல்லாஇல்லை. என்னைக் கேட்காம ஏன் இந்த முடிவு எடுத்தீங்க?” கோபமாகப் பேச,
“ என்னாப்பா இப்படி சொல்ற, இதை என் தங்கை கேட்டா நிச்சயம் தாங்க மாட்டா..நீ என் அறைக்கு வா நாம பேசலாம்” சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றார்.
மனோகரும் உள்ளே வந்தபிறகு கதவைத் தாழிட்டார்.

“ அப்பா , இதுல மறைக்கறதுக்கு எதுவும் இல்லை. என்னால பார்வதிய கல்யாணம் செஞ்சுக்க முடியாது. அவளும் நானும் சின்ன வயசில இருந்து பார்த்து வளர்ந்தவங்க. அவளைப் போய் எப்படிப்பா? இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க” படபட வெனக் கூறி முடித்தார்.
கதவின் அருகிலேயே நின்று கொண்டிருந்தவர், அருகில் வந்து,
“மனோ , இங்க வா. என் பக்கத்தில உட்காரு. “ கட்டிலில் இருவரும் அமர்ந்தனர்.
“ என்ன மனோ , உனக்குப் பார்வதிய பிடிக்கலையா?” மெதுவாகக் கேட்டார்.
“இது பார்வதிய பிடிச்சிருக்கா இல்லையாங்கற விஷயம் இல்லை. எனக்கு வேற ஓரு பெண்ணைப் பிடிச்சிருக்கு. அவளையே கல்யாணம் செஞ்சுக்கறதா வாக்குக் குடுத்திருக்கேன். என்னால வேற ஒரு பெண்ணை மனைவியா நினைச்சுப் பார்க்க முடியாதுப்பா.” அமர்த்தலாகவே சொல்ல,
சற்று இடைவெளி விட்டு ஆரம்பித்தார் பெரியவர்.
“ உன் அத்தையைப் பற்றி உனக்குத் தெரியும். அவ பொண்ணு தான் இந்த வீட்டு மருமகள்ன்னு கனவு கண்டுகிட்டு இருக்கா. அவ சின்ன வயசிலேயே வாழ்க்கைய தொலைச்சிட்டு இங்க வந்தப்போ எனக்கு இதயமே நின்னு போய்டுச்சு. அவளோட ஆசை இது மட்டும் தான். எனக்கும் பார்வதி தான் உனக்கு மனைவியா வரணும்ன்னு ஆசை மனோ. “ தொண்டையைச் செருமிக் கொண்டார்.
மீண்டும் அவரே தொடர்ந்தார்.
“பார்வதிக்கு பருவம் வந்த நாள்ல இருந்து நீ தான் அவளுக்குக் கணவன் அப்படின்னு நான் சொல்லிச் சொல்லியே அவள வளத்துட்டேன். அவளும் உன்னைத் தான் புருஷனா நினச்சுட்டு இருக்கா, எங்க மூணு பேரோட ஆசையைவிட உன் விருப்பம் தான் முக்கியமா ? அது சுயநலம் மனோ.” அவனை இறைஞ்சும் பார்வைப் பார்த்தார்.
“ அப்பா! நான் யாரோட விருப்பத்தையும் பத்தி நினைக்க முடியாத சூழ்நிலையில இருக்கேன். நான் அப்படியே பார்வதியைக் கல்யாணம் பண்ணாலும் ரெண்டு பெண்களுக்குத் துரோகம் செஞ்சவானா ஆயிடுவேன். என் மனசாட்சி என்னை மன்னிக்காது. தயவு செஞ்சு நீங்க என்னை மன்னிச்சிடுங்க.” கைகூப்பி நின்றார்.
தன் மகன் இவ்வளவு பிடிவாதம் பிடிப்பான் என்று பெரியவர் நினைக்கவில்லை.

“சரி மனோ. நீ அந்தப் பொண்ணு யாருன்னு சொல்லு, நான் பேசிப் பார்க்கறேன். உன்கூட படிச்சப் பொண்ணா? இல்லை நம்ம ஊர் பொண்ணா? “ சற்று நரி போல யோசிக்க ஆரம்பித்தார்.
அதை உணராமல், “ இல்லைப்பா . நீங்க அவ கிட்ட பேச எதுவும் இல்லை. அவ தான் என் மனைவி. இதை நீங்களே அத்தைக் கிட்ட சொல்லிடுங்க” வெளியே செல்ல எழுந்தார்.
“ மனோ! நில். நாளைக்கு உனக்கு நிச்சயதார்த்தம். கூடிய சீக்கிரம் உனக்கும் பார்வதிக்கும் கல்யாணம் இது தான் என்னோட முடிவு. நீ போகலாம்” கடுமையாகவே ஆணையிட்டார்.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் மனோகர் வெளியேறினார். தன் தந்தையைப் பற்றி ஓர்அளவு தெரிந்தே வைத்திருந்தார். ஆகையால் மலரைப் பற்றி அவருக்குத் தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்ள நினைத்தார்.
மறுநாள் கலையில் மலரைச் சந்திக்கக் கிளம்பினார். அவளிடம் சிறிது எச்சரிக்கைச் செய்து வைக்க நினைத்தார். அவர் கிளம்பி வெளியே வர , அவரின் அத்தை வந்தார்.
“ எங்கப்பா கிளம்பிட்ட, இன்னிக்கு நிச்சயதார்த்தம் , வெளிய எங்கயும் போகக் கூடாது.”
“இல்ல அத்தை.. ஒரு நண்பனுக்கு டெலிகிராம் குடுக்கனும். வந்திடுவேன்” என்று சொல்ல,
பின்னால் வந்த அவரது தந்தை,
“ விடும்மா, அவன் போயிடு வரட்டும். கண்டிப்பா வந்துடுவான்” மனோகரை ஒரு அர்த்தப் பார்வைப் பார்த்தார் .
மனோகர் கிளபிச் சென்றதும், தன் ஆட்களில் ஒருவனை அழைத்து அவன் காதில் ஏதோ சொல்லி அனுப்பினார்.
மனோகர் சொன்னபடி முதலில் அவர் சென்றது , தபால் நிலையத்திற்குத் தான். தன் நண்பன் ஒருவன் , ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை இருப்பதாகச் சொல்லியிருந்தான். அப்போது அவர் ஊரில் தங்கி தந்தையின் பொறுப்பை ஏற்கப் போவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் இப்போது நிலமை வேறு! தந்தை ஒருக்காலும் மலரை ஏற்க மாட்டார். அதனால் வெளியூரில் வேலைத் தேடிக்கொண்டு , மலரைத் திருமணம் செய்துஅவளுடன் அங்கேயே தங்கிவிட தீர்மானித்திருந்தார்.
ஆகவே முதலில் அந்த வேலையைத் தனக்குத் தரும்படி கேட்டுத் தன் நண்பனுக்கு ஒரு தந்தி அனுப்பினார். அதன் பின் மலரைக் காணக் சென்றார். தனக்குப் பின் தன்னை யாரோ பின் தொடர்வது போல உணர்ந்தார். திரும்பித் திரும்பிப் பார்த்தார். யாரும் இல்லை என்று உறுதி செய்துக் கொண்டு பின் நடந்தார்.
எப்போதும் போல் மலர்மொழி அவருக்கு முன்பே வந்து காத்திருந்தாள். அவளைக் கண்டதும் அவருக்கு மனமே குளிர்ந்து. அவளது சிரித்த முகம் அவரை எப்போதும் போலச் சாந்தப் படுத்தியது.
இருவரும் சேர்ந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். மலர் கையில் ஒரு பித்தளை தூக்குச்சட்டி வைத்திருந்தார். அதைக் கண்டதும்,
“ என்ன மலர் அது? “ ஆவலாகக் கேட்க,
“ உங்களுக்காக நானே செய்த மீன் குழம்பு, சாப்பிடுங்க “ அவரிடம் தூக்குச் சட்டியை நீட்ட, அவரும் அதை வாங்கி ஆசைத் தீர உண்டார்.

“ ரொம்ப அருமையா இருக்கு மலர். இதுக்கு முன்னாடி இவ்வளவு ருசியா நான் சாபிட்டது இல்லை . ஆனா இனிமே நான் இப்படிச் சாப்பிட மாட்டேன்.” அவர் சொல்ல
புரியாமல் விழித்தார் மலர்.
“ இனிமே நீ எனக்கு ஊட்டி விடனும்.அப்போ தான் நான் சாப்பிடுவேன்.” ஊடுருவும் பார்வையால் கேட்க,
குங்குமமாய்ச் சிவந்தது அந்த மலர்.
எதையும் மலரிடம் மறைத்துப் பழக்கமில்லாததால், தன் வீட்டில் நடந்ததையும் சொல்ல நினைத்தார். மெதுவாக ஆரம்பித்தார்.
“மலர்”
“ம்ம்ம்..”
“உங்கிட்ட ஒன்னு சொல்லணும். கொஞ்சம் பதட்டப் படாம கேளு. “ பீடிகையுடன் ஆரம்பித்தார்.
“ எதுவாக இருந்தாலும் சொல்லுங்க. நீங்கப் பெரிய இடத்துப் பிள்ளை, உங்களை நான் மனசில நினச்ச நாளிலிருந்தே எல்லாத்தையும் எதிர்கொள்ள என் மனசை தயார்படுத்திக் கொண்டேன். நீங்க என்கூட இருக்கறப்ப எனக்கு என்ன கவலை” புன்னையுடன் அவரைப் பார்க்க
மலரின் நம்பிக்கை அவருக்கு மேலும் பலம் தந்தது. என்ன துன்பம் வந்தாலும் இவளைக் கைவிடக் கூடாது என்று மனதில் நினைத்தார்.
“அது… என் அத்தைப் பெண்ணைத் தான் நான் கல்யாணம் பண்ணனும்ன்னு என் அப்பா நேத்து சண்டைப் போட்டார். எப்போதோ சின்ன வயசில முடிவு செஞ்சாங்களாம். அதை நிறைவேத்தாம விடமாட்டேன்ன்னு ஒத்தைக் காலில் நிற்கறாரு.
நான் முடியாதுன்னு உறுதியா சொல்லிட்டு வந்துட்டேன். இனிக்கு நிச்சயம் பண்ணனும்ன்னு இருக்காங்க. ஆனா நான் போகப் போறதில்லை. இனிக்கு முழுசும் உன்கூடத்தான் இருக்கப் போறேன். என்ன நடந்தாலும் சரி.

அதுமட்டும் இல்லை. எங்கப்பா கொஞ்சம் அடாவடியான ஆளு. நமக்கு எதாவது இடைஞ்சல் குடுப்பாரு. அதுனால , என் நண்பன் கிட்ட எனக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணச் சொல்லிட்டேன். இன்னும் கொஞ்ச நாள்ல நாம கல்யாணம் செஞ்சுகிட்டு அங்க போய்டலாம்.
நடுவில ஒரு நாள் மட்டும் நான் அங்கே போயிட்டு வர மாதிரி இருக்கும். அப்போ மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. வீட்டை விடு வெளியே வராத.
உன்னைப் பற்றி யார்க்கும் தெரியாது. இருந்தாலும் எங்கப்பாவுக்கு ஊர் பூரா ஆளுங்க இருக்காங்க, அதுனால நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்போம். “ உணர்ச்சிப்பொங்க கூறி முடித்தார்.

“ நம்ம காதல் உண்மை . அது ஒரு நாளும் பொய்யாகாது. நம்மளைப் பிரிக்க யாராலும் முடியாதுங்க. என்னை என்ன கொடுமை செய்தாலும் உங்கள விட்டுப் போகமாட்டேன். என் உயிர் போனாக் கூட அது எப்போதும் உங்களைச் சுற்றித் தான் திரியும்” அவள் சொன்னதைக் கேட்டு அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டார்.
“உனக்கு எந்தத் துன்பமும் நான் வரவிடமாட்டேன் மலர். நீ இல்லாத என்னோட வாழ்க்கை ஒரு உயிரற்ற பிணத்துக்குச் சமம். எல்லாம் நல்லதாவே நினைப்போம். நீ கவலைப் படாம இரு.” அவளின் உச்சியில் முத்தமிட்டார்.

மனோகர் வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. எல்லாரும் நிச்சயம் செய்யக் காத்திருந்தனர். பார்வதி அலங்காரத்துடன் தன் மாமாவைக் காணக் காத்திருந்தாள். மனோகரின் தந்தை வாசலிலேயேக் காத்திருந்தார். அவர் அனுப்பிய ஆள் மட்டும் ஓடி வந்தான். மனோகரின் விஷயத்தைக் கூற, பெரியவர் ஆத்திரம் கொண்டார். அதற்கு மேல் தாமத்திகாமல் உள்ளே சென்றார்.
தன் தங்கையை அழைத்தார். அவரிடம் எதுவும் சொல்லாமல் முகத்தை மாற்றிக்கொண்டு அன்பாகப் பேசினார்.
“ தங்கச்சி , அவன் நண்பனைப் பார்க்கப் வெளியூர் போயிருக்கானாம். அவன் வர வரைக்கும் நல்ல நேரம் காத்திருக்காது. நாம தட்டை மாத்திக்குவோம். என்ன சொல்றம்மா?”
அண்ணனை முழுமையாக நம்பினார் தங்கை. “ சரி அண்ணா, நீங்க சொல்லி நான் என்னிக்கு மறுத்திருக்கேன். வாங்க பத்திரிகை வாசிப்போம்.”
பெண்ணை மட்டும் வைத்து ஊர் மக்கள் முன்னிலையில் நிச்சயம் செய்துக்கொண்டனர். பார்வதிக்கு சற்று ஏமாற்றமே, ஆனால் மனோகர் தன் மாமா வைத் தாண்டி எதையும் செய்யமாட்டார் என்ற முழு நம்பிக்கை , அவளை வேறு சிந்ததனைக்கு இட்டுச் செல்லவில்லை.
பெரியவர் அனுப்பிய ஆள் , மனோகரின் விவரம் அனைத்தையும் அவருக்குச் சொல்லிவிட்டான். பெண் யார் என்ன குடும்பம் அனைத்தும் இப்போது அவர் அறிவார். புலி வேட்டையாட பதுங்குவதைப் போல வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருந்தார்.
அனைத்தும் முடிந்து அனைவரும் கிளம்பிய பிறகு, வீட்டிற்குள் நுழைந்தார் மனோகர்.
“ வாங்க மாப்பிள்ளை” என அத்தை வரவேற்க,
“என்ன சொல்றீங்க! அப்போ நிச்சயம்?!” என அவரைக் கேள்வியாகப் பார்க்க,
“ எல்லாம் நல்ல படியா முடிஞ்சுது மனோ. நீ வருத்தப் படாத, பார்வதி கிட்ட பேசணும்ன்னா போய்ப் பேசுப்பா” அவர் மகிழ்ச்சியாகச் சொல்ல,
பார்வதியைப் பார்க்கும் எண்ணம் அவருக்குச் சிறிதும் இல்லை.
“பரவாயில்லை அத்தை. “ எனச் சொல்லித் தன் அறைக்குச் சென்றார்.
வெட்கப்படுகிறான் என்று நினைத்து அவரும் அங்கிருந்து சிரித்துக்கொண்டே நகர்ந்தார்.
அதன் பிறகு மனோகர் அவரின் தந்தையிடம் கூடச் சரியாகப் பேசுவதில்லை. இந்த நிலையில் பெரியவர் ஒரு முடிவு செய்தார்.
அவரின் தங்கைக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாமல் பார்த்துக்கொள்ள நினைத்தார்.

மறுநாள் தன் தங்கையை அழைத்தார்.

“ தங்கச்சி ! நாம நிச்சயத்தை சாதரணமா வீட்டிலேயே முடிச்சுட்டோம். ஆனா நம்ம வீட்டுக் கல்யாணம் ஊரே மெச்ச திருவிழாப் போல நடக்கணும். நம்ம சொந்த பந்தம் எல்லாரையும் கூப்பிடனும். “ சற்று நிறுத்த,
அவரின் தங்கை அந்த வார்த்தைகளில் கனவு கண்டுக் கொண்டிருந்தார்.
“கண்டிப்பா அண்ணா. என்ன செய்யணும் சொல்லுங்க” அவரின் அடுத்த வார்த்தைக்காகக் காத்திருந்தார்.
“ நம்ம குல தெய்வம் கோயிலுக்குப் போய்ப் படையல் போடணும். அப்புறம் நாம சொந்த பந்தத்தை நேர்ல போய் ஒவ்வொருத்தருக்கும் துணி வங்கிக் கொடுத்து அழைக்கணும். நம்ம சொந்தம் என்னை விட உனக்குத் தான் நல்லாத் தெரியும், அதுனால நீயே பார்வதிய அழைச்சுகிட்டுப் போய் , ஒரு மாசம் தங்கியிருந்து நல்ல நாள் பார்த்துப் படையல் போட்டுட்டு, எல்லாரையும் கூப்டுட்டு வந்துடு. எனக்கு அருப்பு வேலை இருக்கு, அதுனால என்னால உன்கூட எல்லாத்தையும் விட்டுப்புட்டு வர முடியாது. நீ போயிட்டு வந்துடும்மா. என் மருமகளை ஜாக்கிரதையாப் பாத்துக்கோ ” தேனொழுக பேசினார்.
அதை நம்பி அவரும் பார்வதியும் ஊருக்குக் கிளம்பினார்கள்.
பெரியவர் ஒரு பெரிய திட்டம் போட்டார். அதன் படி தன் அடியாள் ஒருவனை அழைத்து மலரின் வீட்டிற்குத் தீ வைக்கச் சொன்னார்.
இதைக் கதவின் அருகிலிருந்து மனோகர் கேட்டுக்கொண்டிருந்தார். அந்த ஆள் அங்குச் செல்வதற்கு முன்பு மனோகர் அங்கே சென்றுவிட்டார்.
நடு இரவில் அந்த ஆள் தீப்பந்ததுடன் வந்து நிற்க, மனோகர் அவன் முன்னே வந்து நின்றார்.

ஊரே அடங்கிவிட்ட சமயம். கிராமம் ஆதலால் அனைவரும் சீக்கிரம் உறங்கி விட்டனர். அந்த அடியாள் மட்டும் கையில் தீப்பந்தத்துடன் நடந்து வந்துக்கொண்டிருந்தான். விஷயத்தை முன்னமே அறிந்திருந்ததால் மனோகர் அவனுக்கு முன்பே அங்கே சென்று நின்றார். மலர் வீட்டில் அனைவரும் உறங்கிவிட்டிருக்க அவர்கள் வீட்டின் முன் நின்றார் மனோகர்.
அந்த நெடிய உயரமான அடியாள் வந்து சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு ஓரமாக இருளில் மறந்திருந்த மனோகர் அவன் முன் திடீரென வெளிப்பட்டார். அவன் பேய்யைக் கண்டவன் போல நடுங்கிவிட்டான். மனோகர் அவனைப் பார்வையாலே எரித்துவிடும் அளவு அவனை முறைத்துக் கொண்டிருந்தார்.
“ ஐயா என்னை மன்னிச்சிடுங்க…. பெரியய்யா தான் செய்யச் சொன்னாரு. நான் வேலைக்காரன் … என்னை விட்டுடுங்க….” கதறி நின்றான்.
அவனைத் தண்டித்து என்ன பயன்! அனைத்திற்கும் மூலகர்த்தா தன் தந்தை அல்லவா! ஆகையால் அவனை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார். அவன் தப்பித்தது உயிர் என்று ஓடியேவிட்டான். அவன் கொண்டு வந்த தீபந்தத்தை எடுத்துக்கொண்டு நேரே தன் தந்தையிடம் சென்றார்.
அவரோ அனுப்பிய ஆள் வராமல் அவரது மாடியின் பலகனியில் நின்றுப் பார்த்துக்கொண்டிருக்க தூரத்தில் ஒருவன் தீப்பந்தத்துடன் வருவது தெரிந்ததும் அவசரமாகக் கீழே இறங்கி வந்தார்.
அங்கே மனோகர் வந்து நிற்கவும் நெருப்பை மித்திதவர் போலச் சற்றுப் பின் வாங்கினார்.
“ ஏம்ப்பா இப்படி செஞ்சீங்க?!” ஆத்திரமும் கோபமும் கொப்பளிக்க நின்றிருந்தார் மனோகர்.
பெரியவர் இதற்கெல்லாம் அசரும் ஆள் இல்லை. “மனோ நீ உள்ள வா பேசிக்கலாம். “ எதுவும் நடக்காதது போலப் பேச
“இதுக்குமேலயும் நான் உள்ள வந்தா நான் மனுஷனே இல்லை. எப்படி நீங்க கொலை செய்யற அளவுக்குப் போனீங்கன்னு எனக்குத் தெரியல. உங்கள அப்பான்னு இனிமே நான் கூப்பிட மாட்டேன்.” வாசலில் நின்றே கத்திக்கொண்டிருந்தார்.

“ மனோ! நீ என்ன பேசறன்னு புரியுதா? நாம இந்த ஊருக்கே படியளக்கரவங்க. போயும் போயும் ஒரு மளிகைக் கடை வெச்சிருக்கறவன் தங்கச்சி தான் உனக்குக் கிடைச்சாளா? நம்ம அந்தஸ்த்து என்ன ஆகறது? இது ஊர்ல நாலு பேருக்குத் தெரிஞ்சா என் மானம் போய்டும். அதான் அவளைக் குடும்பத்தோட முடிச்சிட சொன்னேன். இதுல என்ன தப்பு?” குற்ற உணர்வு சிறிதும் இன்றிப் பேசினார்.
அவரின் மன எண்ணம் அவர் வார்த்தைகளில் நன்றாகத் தெரிந்தது. பணம், அந்தஸ்து இவைகளைத் தான் பெரிதாக நினைத்தார்.
“ இதுவே ஒரு பணக்காரப் பெண்ணா இருந்தா பரவாலையா ? அப்போ உங்க தங்கச்சிக்காகன்னு பாச நாடகம் போட்டீங்களே, அது பொய்யா? “ மனோகர் விடாமல் கேட்க
“ இல்லை ரெண்டுமே உண்மை தான். பணக்காரப் பெண்ணா இருந்தா , கொஞ்சம் யோசிக்கலாம். இப்படி ஒருத்திய காதலிக்கறேன்னு சொல்ல உனக்கு வெட்கமா இல்ல?” பதிலுக்கு அவரும் பேசினார்.
“இதுல எனக்கு எந்த வெட்கமும் இல்லை. நீங்க தான் உங்க கேவலமான புத்திக்காக வெட்கப் படனும், நீங்க செய்ய நினச்சது மிகப் பெரிய பாவம். காசு பணம் எப்பவும் முக்கியம் இல்லை. நல்ல மனசு தான் முக்கியம். அது உங்ககிட்ட கொஞ்சமும் இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன். நான் இனிமே உங்க கூட இருக்க மாட்டேன். நான் வரேன். என்னோட மலர உங்ககிட்டேந்து காப்பாத்த எனக்குத் தெரியும். “ கோபமாக அங்கிருந்து கிளம்பினார்.
மனோகர் செல்வதை வெறுப்புடன் பார்த்தார் பெரியவர். அவர் மனதில் தன் மகனை வழிக்குக் கொண்டு வர அடுத்து என்ன செய்யலாம் என்ற எண்ணம் தான் ஓடியது. ஆனால் மனோகர் அதை விட வேகமாக மலரின் வீட்டிற்குச் சென்றார்.
நள்ளிரவானாலும் கதவைத் தட்டினார். அன்பரசு தான் வந்து கதவைத் திறந்தார். “யார் நீங்க ?” கேட்டதும் , வீட்டில் அனைவரும் எழுந்து விட்டனர்.
மலர்மொழி மனோகரி அருகே ஓடிவந்தார்.
“அண்ணா … இவர் ..” இழுக்க
“நான் மனோகர்..” என்று தொடங்கி தாங்கள் இருவரும் காதலிப்பதாகச் சொல்லி , அவரின் தந்தை இதற்குச் சம்மதிக்க மாட்டார் என்றும் அவரின் சம்மதம் இல்லாமலேயே மலரைத் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.
சற்றுமுன் நடந்தவைகளைப் பற்றிக் கூற மனம் வரவில்லை. அவர்கள் இன்னும் பயந்து விடுவார்கள் என்று நினைத்தார்.
அன்பரசு அனைத்தையும் கேட்டு மிகுந்த கோபம் கொண்டார்.
“ நீ சொன்னவுடனே என் தங்கச்சிய கல்யாணம் பண்ணி வெச்சிடனுமா ? உங்க குடும்பம் பெரிய குடும்பம். நாங்க சாதரனமானவங்க. பணக்காரங்க புத்தி நிலையானது இல்லை. இதற்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்.” சொல்லிவிட்டு மலரைப் பார்க்க
அவளோ அழுது விட்டாள். அதைக் கண்டு மனம் பொறுக்கவில்லை.
“மலர்! நீ ஏம்மா அழற ? இவங்கள நம்பக் கூடாது . எப்போ வேணா நம்மள விட்டு வேற இடத்துல கல்யாணம் பண்ணிப்பாங்க…. “ அன்பரசு சொல்லும்முன்
“ அண்ணா, அம்மா .. ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க. இவரைத் தவிர என்னால வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாது. நானும் இவரும் மனசால மட்டும் ஒன்னு சேரல,
இவரோட வாரிசு என் வயித்துல … “ சொல்லிமுடிக்கும் முன்பே அன்பரசுவின் கை இடி என அவள் கன்னத்தைப் பதம் பார்த்தது.
மலரின் தாயும் வந்து அவளை நன்றாகத் திட்ட ஆரம்பித்தார். இவரும் மாறி மாறி அவளுக்கு வசை மழை பொழிய, அவள் தேம்பி அழ , ஒரு கட்டத்தில் மனோகர் பொங்கி எழுந்தார்.

“ இதோ பாருங்க, நீங்க சொல்ற மாதிரி நாங்க தப்பு பண்ணனும்னு நினைக்கல. அன்னிக்கு எங்களையும் மீறி நடந்த விஷயம் . அது விதி. நாங்க ரெண்டு பேரும் மனசால கணவன் மனைவி ஆயிட்டோம். எனக்கு ஏமாத்தர எண்ணம் இருந்தா எப்பவோ நான் போயிருப்பேன். மலர் கூட வாழனும் , அது தான் என்னோட ஆசை. அவ மட்டும் தான் எனக்கு மனைவி.” மலரைத் தன் பக்கம் நிறுத்திக் கொண்டார்.
இருவரின் மனமும் ஒன்று பட்டபிறகு இனி அவர்களைத் தடுத்து ஆகப் போவது ஒன்றுமில்லை. அந்த வீட்டில் அன்பரசுவின் முடிவு தான் இறுதியானது. அவர்களின் தாய் ஒரு வாயில்லாப் பூச்சி. விவரம் அறியாதவர். ஆகையால் அன்பரசு அவர் தாயைப் பார்க்க, அவரும் சம்மதித்தார்.

KVK-16

அதைக் கேட்டு இடிந்துபோய் சோஃபாவில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டார். இப்படியொரு குடும்பம் இருக்கும் என்று அவர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
“ இவர் தான் யுவராஜ் அப்புறம் இவங்க அம்மா தான் மலர்மொழி “ தன் தாயை தன் தோளில் சாய்த்துக்கொண்டு சொன்னான்.
சிறிது நேரம் கழித்து யுவாவிடம் எழுந்து சென்றார். அவன் கையைப் பிடித்துக் கொண்டார். கண்களில் நீர் பெருகியது. யுவாவோ, ‘தன் வாழ்க்கைப் பறிபோய்விடும் என்று அழுகிறாரோ’ என நினைத்தான்.
“ யுவாராஜ்! உங்க அம்மா கிட்ட நான் மன்னிப்புக் கேட்கணும். அவங்கள பார்க்க முடியுமா?!” அவன் கையை விடாமல் பிடித்துக்கொண்டு கேட்டார்.
இதை அவன் எதிர்ப்பார்க்கவே இல்லை. ‘என் அம்மாவிடம் எதற்காக இவங்க மன்னிப்புக் கேட்கணும். இவங்க என்ன செஞ்சாங்க?!’ அவன் பார்வதியின் நடவடிக்கையில் சங்கடமாய் நெளிந்தான்.
“ உங்க அம்மாவோட வாழ்க்கை இப்படி ஆக நானும் ஒரு காரணம்ன்னு தோனுதப்பா…”
“ நீங்க எப்படிக் காரணம் ஆகா முடியும்? உங்களுக்கு அவங்களப் பத்தி எப்படித் தெரிஞ்சுது?” யுவராஜ் கேட்க சித்துவும் அருகில் வந்தான்.
“ அவருக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை. அதுவும் இந்த ஊருக்கு வந்தபிறகு தான். அன்னிக்கு மயக்கம் வந்தபிறகு டாக்டர் அவர் சரியா தூங்கறது இல்லைன்னு சொன்னாரு.
நல்லாத் தூங்க மாத்திரைக் கூடக் குடுத்தாரு. அவருக்கு அதை நான் குடுத்த பிறகு அவரு தூக்கத்தில ‘மலர் மலர்’ ன்னு புலம்பினாரு. அவருடைய படுக்கைக்கு அடியில ஒரு கிழிந்த புடவை வைத்திருந்தார். எனக்கு அப்போ ஒன்னும் புரியலை.

அப்புறம் ஒரு நாள் அவருக்குப் போர்வை எடுக்க பீரோ வை திறந்தேன் . அந்தப் போர்வைக்குள்ள ஒரு பழைய போட்டோ இருந்தது. இவரும் இன்னொரு பெண்ணும் கல்யாணக் கோலத்தில இருந்தாங்க.
எனக்கு மயக்கமே வந்துடுச்சு. அவர் மனசில ரொம்ப நாளா எதையோ யோசிக்கறாருன்னு தெரியும் ஆனா இவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட மறச்சியிருப்பாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.
நான் இவரைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதமா இருந்தேன். ஆனா , நிச்சயமா இந்த விஷயம் எனக்குக் கல்யாணத்துக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா , நான் அவங்க வாழ்க்கையில குறுக்க வந்திருக்க மாட்டேன். என்னை என்னாலையே இப்போ மன்னிக்க முடியல. நிச்சயம் அவங்க கிட்ட நான் மன்னிப்புக் கேட்கணும்.
அவங்க இவர் இல்லாம இத்தனை நாள் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்க அதுவும் ஒரு குழந்தையோட, நினைக்கவே ரொம்ப வேதனையா இருக்கு, எனக்கு இதைப் பத்தி எதுவுமே தெரியாதுப்பா ..
நீயும் நிறைய கஷ்டப்பட்டிருப்ப.அப்பா இல்லாம வளருவது ரொம்ப கஷ்டம், அந்தப் பாவத்துல எனக்கும் பங்கிருக்கு , என்னை மன்னிச்சிடு யுவா .” சொல்லிவிட்டு அழுது கொண்டே இருந்தார்.
பாவம்! பார்வதியால் என்ன செய்ய முடியும்? மனோகர் ஏன் அப்படி நடந்துக்கொண்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இதில் சம்மந்தப் பட்ட அவர் தந்தையும் இப்போது உயிருடன் இல்லை. அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டே ஆகவேண்டும்.

“ நீங்க எந்த வகையிலும் பொறுப்பில்லை. இதுக்காக நீங்க வருத்தப்படாதீங்க. என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிப்போம்.” யுவா அவரைத் தேற்ற ,
சித்து , “ வாங்க அப்பா கிட்ட இதைப் பத்தி கேட்டே ஆகணும். போகலாமா ?” என்று கிளம்ப,
“ நீங்க போயிட்டு வாங்க , நான் வரல “ பார்வதி குழந்தை இருந்த அறைக்குச் சென்றார்.
“சித்து , எங்கம்மாவைப் பற்றியோ இல்ல என்னைப் பற்றியோ இப்போ உங்கப்பாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம். நான் உன்னோட பிரிண்டாவே இப்போதிக்கு இருக்கட்டும். அவரோட தப்பை அவர் ஒத்துக்கணும். அதுக்குஅப்புறம் சொல்லிக்கலாம்.. என் அம்மா உயிருடன் இருக்காங்கன்னு தெரிஞ்சா அவர் மாத்திக்கூடப் பேசலாம்.” இறுகிய முகத்துடனே யுவா சொல்ல,
“அஸ் யூ விஷ் அண்ணா “
இருவரும் மனோகர் இருந்தத் தோப்பிற்குச் சென்றனர். மாமரம் நிறைந்த தோப்பு அது. பக்கத்தில் பம்ப் செட்டின் சப்தம் கேட்க , அங்கே சென்று பார்த்தனர். ஒருவர் மட்டும் அங்கே வேலை செய்துகொண்டிருந்தார்.
அவரிடம் கேட்க, “ முதலாளி எப்பவும் தோப்பு வீட்டுக்குப் பின்னாடி தான் இருப்பாரு. போய்ப் பாருங்க “ என்றார்.
மிகவும் அழகான இடம். இருவரும் அந்த வீட்டை நோக்கி நடந்தனர். தழைத்து வளர்ந்த மாமரங்கள் வெய்யிலின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்து இருந்தது. காய்ந்த சருகுகளில் இவர்கள் நடக்கும் சப்தங்கள் மட்டுமே கேட்டது. வீட்டின் அருகில் சென்றனர். அங்கே ஆள் அரவம் இல்லை. வீட்டின் பின்னால் இருந்து சப்தம் வந்தது.
இருவரும் வீட்டின் மறுபுறம் சென்றுப் பார்க்க , அங்கே ஒரு சாதாரணக் கயிற்றுக் கட்டிலில் மனோகர் படுத்து மரத்தை வெறித்துக்கொண்டிருந்தார்.
“ அப்பா!” மெதுவாகச் சித்து அழைத்தான்.
சட்டென எழுந்து இருவரையும் பார்த்தார்.
“வாங்க. வாப்பா யுவராஜ். ஏதோ பேசனும்ன்னு சொன்ன, நானும் உன்கிட்ட நிறைய பேசணும் . வாங்க வீட்டுக்குள்ள போகலாம்.” இருவரையும் அந்தத் தோப்பு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
அது ஆடம்பரம் இல்லாத ஒரு ஒட்டு வீடு. அந்த வீட்டின் திண்ணையிலேயே அமர்ந்தான் யுவா. பின் அனைவரும் அங்கேயே அமர, சித்து பேச ஆரம்பித்தான்.

“ அப்பா! உங்க கிட்ட நானும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”
“ சொல்லு சித்து “
“ உங்ககிட்ட நான் இதைப் பத்தி பேசறது சரியா தப்பான்னு தெரியல. ஆனா பேசியே ஆகவேண்டிய நிலைமை. “ சற்று தயங்க
“எதுவா இருந்தாலும் சொல்லு சித்து. உனக்கு இல்லாத உரிமையா?” சாதாரணமாகக் கூற யுவா அதைக் கேட்டுப் பல்லைக் கடித்தான். ‘நல்லவன் வேஷம் நல்லாவே பொருந்துது. ரெண்டு பெண்களை அழ வெச்சிட்டு இவரு இங்க வந்து இயற்கைய ரசிக்கராரு. எல்லாம் வேஷம்.’ மனதில் பொருமினான்.
“நான் சுத்தி வளச்சு பேசல, நேராவே கேட்கறேன். உங்க லைஃப்ல என்ன நடந்தது. உங்களுக்கு அம்மா ரெண்டாவது மனைவியா? அப்போ உங்க முதல் மனைவி எங்க? இதெல்லாம் ஏன் எங்ககிட்ட சொல்லல, முக்கயமா அம்மா கிட்ட ஏன் சொல்லல?!” அவர் முகத்தைப் பார்த்து அனைத்தையும் கேட்டான்.
இதை அவர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை தான். ஆனால் இந்தக் கொஞ்ச நாட்களாக இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததால் அவருக்கு இது பற்றி யாரிடமாவது சொல்லிவிடும் மனநிலையிலேயே இருந்தார். பார்வதியிடம் சொல்ல நினைத்தார், ஆனால் இப்போது மகனிடம் மறைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை.
யுவராஜைப் பார்த்தார்.
“அவர் இருப்பது உங்களுக்குப் பிரச்சனையா இருக்காதுன்னு நினைக்கறேன்” சித்து அவசரமாகச் சொல்ல,
“ கண்டிப்பா இல்லை பா . உங்க அம்மா கிட்ட சொல்லிவிட நினைத்தேன். ஆனா எல்லாரும் ஒரு நாள் தெரிஞ்சுக்க வேண்டியது தானே. இதைப் பற்றி உனக்கு எப்படித் தெரிஞ்சுதுன்னு எனக்குச் சொல்லு. “ கேள்வியை அவனிடமே திருப்ப
“ நீங்க இங்க வந்ததிலிருந்து உங்க மனசு சரியில்லை . இது எல்லாருக்குமே தெரியும். உங்க ரூம்ல இருக்கற பழைய புடவை , நீங்க உங்களுக்கே தெரியாம புலம்பறது, அப்புறம் முக்கியமா இது …. “ அவன் கையில் இருந்த அந்தப் புகைப்படத்தைக் காட்டினான்.
அதைக் கண்டதும் அவர் கண்கள் கலங்கின. அப்படத்தை வாங்கி அதைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
“ இதைவிட வேற எதுவும் வேண்டாம்ன்னு நினைக்கறேன். இப்போ சொல்லுங்க….” நிதானமாகவே அவரிடம் கேட்டான்.
சிறிது நேரம் பேசமுடியாமல் அமர்ந்திருந்தார். பிறகு தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.
“ மலரப் பத்தி மட்டும் சொல்ல முடியாது. அதுக்கு முன்னாடி என்னைப் பத்தி அப்புறம் என் குடும்பத்தைப் பத்தியும் உனக்குச் சொல்லணும். உங்களுக்குப் பொறுமை ….. “ மெதுவாக இழுத்தார்.
“ நாங்க பொறுமையா கேட்குறோம். நீங்க சொல்லுங்க…” யுவா குறுக்கே பேச
அவனின் ஆர்வம் ஏன் என்று அவருக்கு விளங்கவில்லை. இப்போது அவனைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும் தோன்றவில்லை. தன்னைப் பற்றி அவர்களிடம் சொல்லத் தயாரானார்.

 

 

அன்பரசுவிற்கு அங்கே இருப்புக்கொள்ளவில்லை . யுவா என்ன பேசுவானோ ? அங்கே நடப்பதென்ன என்பதை தெரிந்துக் கொள்ளாவிட்டால் மண்டையே உடைந்து விடும் போல உணர்ந்தார். அவரின் சங்கட நிலையைப் பார்த்து மலர் ஏதோ சரியில்லை என்றறிந்தார்.
“என்ன ஆச்சு அண்ணா ? ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்பு சரியில்லை யா?” அருகில் வந்து பாசமாகக் கேட்க,
தங்கையின் முகத்தில் விழிக்க அவரால் முடியவில்லை. மறுபுறம் திரும்பி அமர்ந்தார்,
“மலர், என்னை மன்னிச்சிடு” அதற்கு மேல் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை.
“எதுக்கு அண்ணா? என்ன விஷயம்?” ஒன்றும் புரியாமல் அப்பாவியாய் கேட்க,
“உன்கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேன்.” கையைப் பிசைந்தார்.
அவரைத் தன் பக்கம் திருப்பி நேராகக் கேட்டார்.
“ எதுவா இருந்தாலும் சொல்லுங்க. நான் உங்க தங்கை.”
“ யுவா …” அதற்கு மேல் எபாடி சொல்வது என்று தெரியவில்லை.
“ என்ன அண்ணா? யுவாவுக்கு என்ன? “ பதறினார்.
“யுவாவிற்கு ஒன்னும் இல்லை மலர். நீ பதட்டபடாத..”
“ அவன் இப்போ ஊருக்குப் போனதே எனக்குப் பிடிக்கல. அவன் பிடிவாதமா இருந்ததுனால நான் எதுவும் சொல்லல. அதுவும் இல்லாம, அவர் அந்த ஊர்ல இல்லை. அந்த ஒரு காரணத்தால தான் நான் சம்மதிச்சேன்.” சற்று நிம்மதியாகச் சொல்ல
“ இல்லை மலர். மனோகர் இப்போ குடும்பத்தோட அங்க தான் இருக்கான்.” மனதில் ஒரு பயத்தோடு சொன்னார்.
“ அண்ணா………..” முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டார் மலர்.
“ ஆமாம் மலர். மனோகர் குடும்பம் இப்போ திருவிழாவுக்காக அங்கே போயிருக்காங்க. யுவாவும் மனோகரைப் பார்க்கத் தான் …”
“என்ன சொல்றீங்க.. அவரைப் பார்க்கப் போனானா? இதை ஏன் நீங்க என்கிட்ட சொல்லல? அவருக்கு எந்தத் தொல்லையும் வரக் கூடாதுன்னு தான் நான் இதுவரை பொறுமையா இருக்கேன். இவன் எதுக்கு அவரத் தேடிப் போகணும்.?” பேசிக்கொண்டே போக
“மலர். கொஞ்சம் யுவாவோட நிலைல இருந்து யோசிச்சுப் பாரு. எந்த ஒரு மகனுக்காவது தன்னோட அம்மாவ வருத்தப் பட வைக்கரவங்கள சும்மா விட மனசு வருமா. அதுவும் அவன்
சின்ன வயசில இருந்து அவன் அப்பாவுக்காக எவ்வளவு ஏங்கினான். அந்த அப்பாவே இதுல சம்மந்தப்பட்டவர் , அம்மாவ தண்ணில தள்ளிவிட்டுப் பின் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணார்ன்னு தெரிஞ்சா யாருக்குத் தான் கோவம் வராது.

அப்படி அவன் நல்லவனா இருந்தா, இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது.
இந்தக் கோவம் எனக்கும் இருந்துச்சு.உனக்காகத் தான் நான் எதுவும் செய்யாம இருந்தேன். உனக்குக் கஷ்டம் வரக்கூடாதுன்னு தான் பொறுமையா இருந்தேன். யுவா இப்போ எதையும் சமாளிப்பான். அதுனால தான் நான் அவன் போக சம்மதிச்சேன். மனோகர் நல்லவனா இருந்தா எனக்கும் சந்தோஷம் தான். அதை இப்பயாவது நாம தெரிஞ்சுப்போம். “ மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்த்தார்.
“அவரைப் பத்தி உங்க யாருக்கும் தெரியாது. எனக்கு மட்டும் தான் தெரியும். என்னைத் தண்ணில தள்ளிவிட்டதுக்கும் அவருக்கும் எந்தச் சம்மந்தமும் இருக்காது. நிச்சயம் அவர் இன்னொரு கல்யாணத்தை மனசு வந்து ஏத்துகிட்டு இருக்க மாட்டாரு. விதி எங்களைப் பிரிச்சுடுச்சு. நானும் அதை ஏத்துக்கிட்டேன்.
மறுபடியும் நான் அவங்க முன்னாடி போய் நின்னா எல்லாரோட வாழ்க்கையும் கேள்விகுறியாயிடும். அவங்க அப்பா என்னை ஏத்துக்காம அவருக்குத் தான் தொல்லைக் குடுப்பாரு.
ரெண்டுபேரும் கஷ்டப் படறதுக்கு நான் வேதனைய மட்டும் அனுபவிக்க முடிவு செஞ்சேன். அதுனால தான் அவர் கண்ணுல படாம இருந்தேன்.
இனிமே என்னால சும்மா இருக்க முடியாது. யுவா அவரைக் கஷ்டப்படுத்த நான் விடமாட்டேன். என்னைப் பத்தித் தெரிஞ்சா அவருக்குக் குற்ற உணர்வு தான் வரும். அதுவும் இல்லாம, அவரோட மாணவி குழந்தைகளும் அவர தப்பா நினைப்பாங்க.
உடனே நான் அங்க போகணும். அவங்களுக்கு என்னால எந்தத் தொல்லையும் வராதுன்னு சொல்லணும். கிளம்புங்க போகலாம்.” அழுகையோடு சொல்ல
“வேண்டாம் மலர். நீ அழாதம்மா. உன்னை மாதிரி ஒருத்திக் கூட வாழ அவனுக்குக் குடுத்து வைக்கல. நீ அங்க போக வேண்டாம் “ மலரைத் தடுத்தார்.
“ இப்போ நீங்க என்கூட வரீங்களா, இல்லை நானே போகட்டுமா?” அவர் கிளம்ப எத்தனிக்க,
“ இரும்மா நானும் வரேன். இனி நடப்பது நடக்கட்டும். நம்ம கையில ஒண்ணுமில்ல “ அவரும் மலருடன் கிளம்பத் தயாரானார்.

மனோகர் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். (நாம் அதைக் கதையாகவே வாசிப்போம்.)

மனோகரின் தந்தை அந்த ஊரில் பெரிய பண்ணைக் குடும்பம் என்று அழைக்கப் பட்டனர். ஊரில் உள்ள முக்கால் வாசி மக்கள் அவரிடம் தான் வேலை செய்தனர்.
மனோகர் பிறந்து சில வருடங்களிலேயே அவரின் தாய் இறந்துவிட்டார். தந்தை ஒருவராக இருந்து அவரை வளர்த்தார். அந்த நிலையில் தான் மனோகரின் அத்தை, கணவனை இழந்து பார்வதியுடன் அண்ணன் வீட்டிற்கே தஞ்சம் புகுந்தார்.
சிறு வயதிலிருந்து பார்வதியுடன் தான் அவர் வளர்ந்தார். பார்வதி இவரை விடச் சிறியவள் என்பதால், மிகவும் கேலி செய்து விளையாடுவார். சிறிது நாட்களில் அவரை வெளியூரில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தார் மனோகரின் தந்தை.
மனோகர் இல்லாததால், பார்வதியை மிகவும் ஆசையாக வளர்த்தார். அவள் தான் என் மருமகள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.
சற்று வளர்ந்த பிறகும் அவர் தீவிரமாகத் தன் தங்கையிடம் அதைப் பற்றிப் பேச , அவருக்குப் பேரானந்தம். அண்ணன் வீட்டிற்கே தன் மகள் மருமகளாவது யாருக்குத் தான் பிடிக்காது. இந்த நினைப்பை பார்வதியிடம் விதைத்து விட்டனர். அவரும் மனோகர் தான் தன் கணவர் என்ற நினைப்புடன் தான் வளர்ந்தார்.
மனோகர் அவ்வப்போது விடுமுறைக்குத் தான் வருவார். அப்பொழுதெல்லாம் பார்வதி வெட்கப்பட்டு மனோகரின் முன்னே வருவதைக் குறைத்துக்கொண்டார்.

மனோகர் கல்லூரியில் படித்துமுடித்து ஊருக்குத் திரும்பினார். ஒரு நாள் ஊர் சுற்றக் கிளம்பினார். ஆனைமலையில் ஒரு காட்டு வழியில் சென்றுகொண்டிருக்க, யாரோ அலறும் சத்தம் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி ஓடிச்சென்றார்.
மனோகர், எங்கிருந்தோ வந்த அலறல் சத்தம் கேட்டு அந்தத் திசையை நோக்கி ஓடினார். அது ஒரு பெண்ணின் குரல். எங்கெங்கோ தேடி அலைந்தார். அந்தக் காட்டிற்குள் இன்னும் எங்கு அலைவது. அந்தப் பெண்ணின் அழுகுரல் மட்டும் கேட்டுக்கொண்டிருக்க, மீண்டும் அந்த இடத்தைச் சுற்றினார்.
ஒரு இடத்தில் கால் சறுக்கி அங்கிருந்த மணலில் உருண்டு விழ, தன் காலைத் தேக்கி சமாளித்துக் கொண்டு எழுந்தார். அப்போது தான் அவர் ஒரு மணல் சறுக்கலில் விழுந்ததை உணர்ந்தார்.
“என்னைக் காப்பாத்துங்க “ என்று அந்தப் பெண்ணின் குரல் அருகில் கேட்க, திரும்பிப் பார்த்தவர் அதிர்ந்தார். அவருக்குப் பின்னால் ஒரு புதைமணல் இருந்தது, அதில் தான் அந்தப் பெண் சிக்கிக் கொண்டிருந்தாள்.
இவர் இன்னும் வேகமாக உருண்டு போயிருந்தால் அவரும் அந்தப் புதைமணலில் மாட்டிக்கொண்டிருக்க நேர்ந்திருக்கும். நல்ல வேளையாக அவர் தப்பித்தார். அந்தப் பெண் இன்னும் அழுது கொண்டிருக்க , அவளை எப்படி வெளியில் கொண்டுவருவது என யோசித்தார்.
சுற்றும் முற்றும் பார்க்க அங்கே ஆள் அரவம் எதுவும் இல்லை. கத்தினால் கூட யாரும் வரமாட்டார்கள். எப்படி இந்த இடத்தில் வந்திருப்பாள் என ஒரு நொடி நினைத்தார். பின் சுதாரித்துக் கொண்டு வேகமாகச் செயல் பட்டார்.
“ பயப்படாத நான் உன்னை வெளில கொண்டுவரேன்.” அவளைப் பார்த்துச் சொல்லி விட்டு அருகில் தேட, மரங்களைத் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை.

“ இந்த இடத்துல எதுவும் இல்லை. நான் இங்கேயே சாகப்போறேன் “ பலமாக அழுதாள் அந்தப் பெண்.
“அழாத ஏழாவது யோசிக்கலாம்” அவளின் பதட்டம் அவருக்கும் தொற்றிக்கொள்ள , அவளைக் கண்டார். அவள் தொடை வரை தான் உள்ளே சென்றிருந்தாள்.
அவளின் அழுகை இன்னும் அதிகரித்துக்கொண்டே சென்றது. அது அவரை ஏதோ செய்தது. கண்ணைமூடிக்கொண்டு யோசனை செய்ய, அந்தப் பெண்ணின் சேலை தான் அவருக்கு ஆயுதமாகப் பட்டது. உடனே அவளைப் பார்த்து,
“உன் சேலையைக் கழட்டி வீசு, அதை வைத்துத் தான் உன்னை வெளியே இழுக்க முடியும் என்றார்.
“ஐயோ வேண்டாம் . நான் அதுக்கு இங்கேயே இருக்கிறேன் “ பதட்டத்துடன் சொன்னாள்.
“ இங்கபாரு , இந்த ஊர்ல என்னை எல்லாருக்கும் தெரியும், பண்ணை வீட்டுப் பையன் தான் நான். நீ என்னைத் தாராளமா நம்பலாம். உன்னை எதுவும் செய்யமாட்டேன்” அவசரமாச் சொல்ல,
அவள் இன்னும் தயக்கத்துடனே நின்றாள்.
“ இதோ பாரு! நேரம் ஆக ஆக நீ உள்ள போய்கிட்டே இருக்க, இப்போவே தொடை வரை உள்ள போயிட்ட, இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடுச்சுன்னா அப்புறம் காட்டு விலங்கெல்லாம் வெளியே வர ஆரம்பிச்சுடும்.” மனோகர் சொன்னதும் முன்னை விட இன்னும் பீதி அவளைப் பற்றிக்கொண்டது.
“சீக்கிரம்” அவர் அவசரப்படுத்த,
அவளும் நம்பித் தன் சேலையை கழட்டி அவரிடம் வீச, எந்தக் கேட்ட எண்ணமும் இல்லாமல் அவளைக் காப்பாற்றும் எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது.
ஒரு முனையை அவளைப் பிடிக்கச் சொல்லிவிட்டு மறுமுனைய அவர் பலம் கொண்ட மட்டும் பிடித்து இழுத்தார். மணலின் ஈர்ப்பையும் தாண்டி இழுப்பது சற்றுக் கடினமாகவே இருந்தது. முயன்று வெளியே இழுக்க, அவளும் நன்றாகப் பற்றிக்கொண்டு வெளிவர முயற்ச்சித்தாள்.
சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவள் கைகள் தொடும் தூரம் வந்ததும் அவள் கையைப் பற்றி வெளியே கொண்டு வந்தார். கால்கள் தள்ளாடி நிற்க முடியாமல் அவன் மேல் விழுந்து விட்டாள். சிறிது நேரம் மூச்சு வாங்க அப்படியே படுத்துக் கிடந்தனர்.
சற்று களைப்புத் தெளிந்ததும் சட்டென எழுந்து புடவையைச் சுற்றிக்கொண்டாள்.

“ரொம்ப நன்றிங்க” என்றாள்.
“ பரவாயில்லை. இங்க எப்படி வந்து மாட்டிக்கிட்ட? “ மனோகர் கேட்க,
பயந்த சுபாவம் அவளுக்கு. திக்கித் திக்கி பதில் சொன்னாள்.
“ என் கூடப் படிச்ச பொண்ணுங்களோட இந்தப் பக்கம் வந்தோம். கண்ணாமூச்சி விளையாடிக்கிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் போய்டோம். நான் இங்க வந்து மாட்டிக்கிட்டேன். மத்தவங்க வேற பக்கம் என்னைத் தேடிகிட்டு ரொம்ப தூரம் போய்டாங்க. வீட்டுக்குப் போனா தான் தெரியும்.” ஒரு வாறு சொல்லி முடித்தாள்.
மனோகர் அவள் பேசுவதையேப் பார்த்துக்கொண்டு இருந்தார். அவளின் ஒவ்வொரு முகபாவனையும் அவரை ஈர்த்தது. கிராமத்துப் பெண்ணின் உடல் வாகு, நீண்ட கூந்தல், அவளின் பயந்த பேச்சு அனைத்தும் பிடித்தது. வயதின் கோளாறு யாரை விட்டது.
அவர் பேசாமல் நின்றதைக் கண்டு, “சார் “ மெல்ல அழைத்தாள்.
சிந்தனை கலைந்து ,” சரி வா பக்கத்துல இருக்கற ஓடைல மண்ணை கழுவிட்டுப் போகலாம், இருட்டுறதுக்குள்ள ஊருக்குள்ள போய்டலாம்.” சொல்லிவிட்டு முன்னே நடக்க
அவரைத் தொடர்ந்து சென்று ஓடையில் கை கால்களைக் கழுவிக்கொண்டிருந்தாள். அவள் சேலை நனைந்து அதைப் பிழிந்தாள்.
அவளின் அழகு அந்த மஞ்சள் வெயிலில் தங்கமாக ஒளிர்ந்தது. அவர் பார்வையை விலக்க முடியாமல் கட்டிப் போட்டது.தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல், அவளை நோக்கி அவர் கால்கள் சென்றது.

அவரைப் பார்த்ததும், பயத்தில் உறைந்து போய் நின்றாள். பேசக்கூட முடியாமல் அவரைத் திரு திருவென விழிக்க, அவளைக் கட்டி அணைத்தார். அவள் தன்னிலையை உணரும் முன்பே அவளைத் தன் வசமாக்கிக் கொண்டார்.
இருள் தொடங்க ஆரம்பித்த சமயம் இருவரும் தங்கள் நிலையை உணர, அவள் “ஓ” என அழ ஆரம்பித்தாள். தான் செய்த மடத்தனத்தை உணர்ந்தார் மனோகர். அவளை எப்படி சமாதனப் படுத்துவது என்று குழம்பினார்.
“ என்னை மன்னிச்சுடு. நான் வேணும்ன்னு செய்யல, என்னையும் மீறி நடந்துடுச்சு. தப்பு தான். நான் உன்னையே கல்யாணம் செஞ்சுக்கறேன், தயவு செய்து அழாதே. நிச்சயம் நான் ஏமாத்த மாட்டேன். என்னை நம்பு. இது சத்தியம். “ அவரின் அந்தப் பேச்சில் உறுதி இருந்தது.
எந்தக் காரணத்தினாலோ, அவரை நம்பினாள் அவள். சற்று அவளின் அழுகை குறைந்து .
“ உன் பெயர் என்ன? “ மெல்ல அவர் கேட்க, மீண்டும் அழத் தொடங்கினாள்.
அவளின் முகத்தைக் கைகளால் தாங்கி, அவளின் கண்ணீரைத் துடைத்தார்.
“ பெயர் கூடத் தெரியாதவனிடம் ஏமாந்து விட்டோம்ன்னு நினைச்சு அழறியா? வேண்டாம். நான் மோசமானவன் இல்லை. என்னை நீ நூறு சதவீதம் நம்பலாம்” ஆறுதலாகப் பேசினார்.
சற்றுத் தெளிந்தவுடன், அவளைப் பற்றிக் கேட்டார்.

“என் பெயர் மலர்மொழி. அப்பா இறந்துட்டாரு. அம்மாவும் அண்ணனும் தான். அண்ணன் ஒரு சின்ன மளிகைக்கடை வெச்சிருக்கார். நான் பன்னிரெண்டாவது முடிச்சுட்டு தையல் கத்துகிட்டு இருக்கேன் “ அழுகையின் கேவல்களுக்கிடையே சொல்லி முடித்தாள்.
அவள் கைகளைப் பற்றினார்.தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார். “ மலர், இனிமே நீ தன் எனக்கு மனைவி. இதை யாராலும் மாத்த முடியாது. நாளைக்கும் நாம இதே இடத்தில சந்திக்கலாம். இப்போ ரொம்ப இருட்டிடுச்சு, உன்னை ஊர் எல்லைவரை வந்து விடறேன் , வா போகலாம்” அழைத்துச் சென்றார்.
அவளை விட்டுவிட்டு தன் வீடு நோக்கி நடந்தார். அவளும் அவரைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றாள்.
மனோகரின் வீட்டில் அவரின் தந்தையும், அத்தையும் ஒரு முடிவுக்கு வந்திருந்தனர். அது விரைவில் பார்வதிக்கும், மனோகருக்கும் நிச்சயம் செய்வது. இது தெரியாமல் மனோகர் தன் மனதில் நிறைந்துவிட்டப் பெண்ணை நினைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.
வீடு வேலையாட்கள், “ சின்னையாவுக்கு கல்யாணக்களை வந்துடுச்சு “ என அவர் காதுபடப் பேசினார்கள்.
இவர் எதையும் பொருட்படுத்தாமல், உள்ளே சென்று அமர, உள் அறையிலிருந்து பார்வதி எட்டிப்பார்த்தார். அவளைப் பார்த்து,
“ஹே என்ன பார்வதி என் முன்னாடி வரவே மாட்டேங்கற! என்ன ஆச்சு உனக்கு, இங்க வா” என அழைக்க
அவர் வெட்கப்பட்டு உள்ளே ஓடிவிட்டார்.அவளின் இந்தச் செயல் அவருக்கு வித்தியாசமாக இருக்க, அங்கே வந்த தனது அத்தையிடம்,
“என்ன ஆச்சு அவளுக்கு, ஏன் என்னைப் பார்த்துப் பேசமாட்டேங்கறா? “ புரியாமல் கேட்க
“ எல்லாப் பெண்களுக்கும் கல்யாணம்னா வெட்கம் வராதா ?!” சிரித்துக்கொண்டே சொல்ல,
“அட! பார்வதிக்கு கல்யாணமா? யாரு மாப்பிள்ளை? “ ஆர்வமாகக் கேட்டார்.
“ உனக்கு எப்பவும் விளையாட்டுத் தான். போ ப்பா . சரி என்ன சாப்பிடற? பணியாரம் செஞ்சேன். எடுத்துட்டு வரேன். “ சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
அதை ருசித்து உண்டு விட்டு , இன்று நடந்த மறக்க முடியாத நினைவுகளை நினைத்துக்கொண்டே சென்று படுத்தார்.
மலரும் அங்கே ஒரு வித பயத்துடனும், ஆனால் பெண்மைக்கே உரிய நாணமும் கலந்த உணர்வில் தத்தளித்தாள்.

error: Content is protected !!