Kathalukku Enna Vayathu – 3

வயது – 3

 

மாலை சொன்னதுபோல் வீட்டிற்க்கு வந்த பிரகாஷை முதலில் வரவேற்றது  சமையல்காரம்மா மீனாட்சி தான்.

 

“வாங்க தம்பி…நல்லா இருக்கிங்களா?ப்ரியாம்மா ,குட்டி பையா எல்லா நல்லா இருக்காங்களா?” என்று விசாரித்தார்.அவருக்கு பிரகாஷை நன்றாக தெரியும் அவனை மட்டும் அல்ல அவன் குடும்பம்,செழியனை சார்ந்த அனைவரையும் தெரியும்.கடந்த 13 வருடங்களாக இங்கு சமையல் மற்றும் வீட்டு பராமரிப்பு மேற்ப்பார்வை பார்ப்பவர்.செழியன் வீட்டில் அவரும் ஒருவர் போல் தான் அதனால் தான் அன்புடன் அவன் நலம் விசாரித்தார்.

 

“எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா!!!” என்று அவரின் நலமும் விசாரித்தான் .

 

“இருங்க தம்பி நன் உங்களுக்கு காஃபி கொண்டுவறேன் ” என்று அவர் கிளம்ப 

 

“இல்ல அம்மா அதெல்லாம் வேண்டாம், இப்போ தான்  காஃபி குடிச்சிட்டு வரேன்” என்று மறுத்தவன்  “செழியன் எங்க?” என கேட்க 

 

“செழியன் தம்பி மேல அவர் ரூம்ல தான் இருக்குறாரு” என்று சொன்னவர் மேலே எதோ சொல்ல வந்து தயங்க 

 

“சொல்லுங்கம்மா எதோ சொல்ல வர மாதிரி தெரியுது”

 

“தம்பி காலைல வந்து மேல போச்சு இன்னும் கீழ வரல…சாப்பிட கூட வரல…நானும் மேல போய் 2,3 தடவை கூப்பிட்டேன்,ஆனா வந்தபாடு இல்ல,தட்டில் வச்சு  கொண்டு போனாலும் வேண்டாம்னு சொல்லிட்டாறு” என்றார் வருத்தத்துடன்.

 

“அப்படியா!!! சரிம்மா நீங்க கொஞ்சம் நேரம் கழிச்சு  அவன் ரூம்க்கு ஜூஸ்  கொண்டுவாங்க ” என்று சொல்ல அவருக்கு இனி மேல் பிரகாஷ் எப்படியும் செழியனை சாப்பிட வைத்து விடுவான் என்று நிம்மதியுடன் சமையல்அறைக்கு சென்றார்.

 

மேலே சென்ற பிரகாஷ்,செழியனின் அறை கதவை தட்ட எந்தஒரு பதிலும் கிடைக்காமல் போகவே அவனே கதவை திறந்து உள்ளே சென்று பார்க்க வெளியறையில் அவன் இல்லை ,பின் உள்சென்று படுக்கை அறையில் பார்க்க  அங்கும் அவன் இல்லாமல் போகவே திரும்பிய அவன் பார்வையில் பட்டது பால்கனியில் வானத்தை வெறித்தபடி புகைபிடித்து கொண்டிருந்த செழியன்.

 

செழியனுக்கு புகைபிடிக்கும்,மது அருந்தும் பழக்கம் உண்டு தான்.ஆனால் அது எங்கே ,எப்போது ,எப்படி என்று வகை தெரிந்து எல்லையோடு வைத்து கொள்பவன்.சோசியல் ட்ரிங்கர் என்று சொல்லும் வகையில் வருபவன்.அதிலும் புகை பிடிக்கும் பழக்கம் தாங்க முடியாத டென்ஷன்,குழப்பம் என்று வரும்போது தான் அதை தொடுவான்.

 

இன்று அதற்கு என்ன காரணம் என்று அவன் சொல்லாமலே பிரகாஷிற்கு புரிந்தது.

 

மெல்ல அவன் பால்கனிக்கு செல்ல…பிடித்து கொண்டிருந்த சீகிரெட்  முடிந்து புதியதை பற்ற வைக்க லைட்டரை செழியன் எடுக்க வெற்றிகரமாக கைப்பற்றினான் அவன்  தோழன்.

 

“என்னடா பால்கனில  சீகிரெட் எல்லாம் நிரப்பி   வச்சு நியூ மாடல் வீடு கட்டுவ போல…இது நம்ம கம்பெனி லிஸ்ட்லயே இல்லையே…எத்தனாவது பாக்கெட் இது ?” என்று கேட்டவாறு கீழே பார்க்க தரையில் குறைந்தது 6,7 இருந்தது.

 

“பார்த்துடா,அக்கா வீட்டுக்கு வந்துடோன்னா நீ ஹாஸ்பிடல் போய் படுத்துக்க போற” நக்கல் குரலில் சொல்ல  அவன் முன் திரும்பி முறைத்தான் நம் நாயகன்.

 

“என்ன பிரச்சனை உனக்கு?” நக்கல் போய் தீவிரம் அவன் குரலில் குடி கொண்டது.

 

“ஏன் உனக்கு தெரியாதா!!!”

 

“அக்கா சொன்னாங்க,நீ மேரேஜ்க்கு ஓகே சொல்லிட்டனு …அதில் உனக்கு என்னடா பிரச்சனை  எனக்கு புரியல “

 

“ஏன்னு உனக்கே புரியலைனா அப்பறம் யாருக்குமே என்னோட பிரச்சனை புரியாதுடா” விரக்தி மட்டுமே அவனிடம்.

 

“முதல்ல என்ன பிரச்சனை இதுல…சொல்ல போனா ரொம்ப சந்தோசப்பட வேண்டிய விஷயம் இது…கேட்டபோது எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு…உனக்கு போன் பண்ணலாம் தான் இருந்தேன்,அப்புறம் தான் ஒரு நிமிஷம் யோசிச்சேன் உன்கிட்ட நான் மட்டும் போன் பண்ணி மாட்டி இருந்தா என்னை கடிச்சி கோதரியிருப்ப  அதான் பேசலை” மலையளவு கடுப்பும்,நண்பன் தன் வாழ்க்கையை கெடுத்து கொள்கிறானே என்ற வருத்தமும் அவனில் தென்பட்டது.

 

“ம்ச்…” என்று சலித்தபடி அவன் முகத்திருப்பி கொள்ள 

 

“என்ன விடு அக்காயோட சந்தோசத்தை பார்த்தியா…ஹாஸ்பிடல் போய் பார்க்கும் போது பேஷண்ட் மாதிரியே இல்ல நீ சொன்ன ஒரு   வார்த்தையால இப்போ அவ்ளோ கம்பிரம்,தேஜஸ் எல்லாம்…சத்தியமா 12 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த அனுஅக்காவ பார்த்த மாதிரி இருந்துச்சு…எப்போ டிஸ்சார்ஜ்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க”

 

“உனக்கு நான் சொல்லணும்  இல்லடா…எல்லாருமே அந்த கட்டத்தை விட்டு வந்துட்டாங்க…நீ மட்டும் தான் உன்னோட பர்சனல் லைப்ல அதே புள்ளிலேயே இருக்கியோ தோணுது..கமான் மேன்!!! உனக்கு கொஞ்சம் கூட வெல்யூ இல்லாததை நீ இறுக்கமா பிடிச்சுட்டு பிடிவாதம் பண்றியோ தோணுது” மனதில் உள்ளதை மறைக்காமல் சொன்னான்.

 

“ஆனா என்னோட  நம்பிக்கைக்கு,பீலிங்ஸ்க்கு வெல்யூ இருக்கேடா…அதுதான் என்னை கொல்லாமா கொல்லுது”

 

“மடத்தனமா இருக்கு உன்னோட பேச்சு…உன்மேல பாசம்,அன்பு,நம்பிக்கை,நீ தான் வாழ்க்கைனு வாழ்ந்தவங்களுக்கு பார்க்காம சுயநலமா இருக்க ஆரம்பிச்சுட்டடா…நாம நினைச்ச மாதிரி வாழ நம்ம சில செயல்கள் செய்யலாம் தான் ஆனா அது மத்தவங்க நிம்மதியை பறிக்காத அளவுக்கு அந்த செயல் நேர்மையாவும் கவுரவமாவும் இருக்கனும்.உனக்கும் நிம்மதியில்லாத மத்தவங்களுக்கும் சந்தோசம் தராத இந்த பிடிவாதத்தை வச்சிட்டு என்ன செய்யபோற செழியா”

 

பிரகாஷ் கூறிய வார்த்தை செழியனின் மனதில் நாம் தவறான முடிவை எடுத்து கொண்டு பல வருடங்களாக தன்னையும் மற்றவர்களையும் தேவை இல்லாமல் தண்டித்துவிட்டோமோ என்ற சந்தேக விதை மனதில் விழுந்து சரியாக வேலை செய்தது.

 

“இது உனக்கு ஒரு பிரெஷ் ஸ்டார்ட்  அப்படி நினைச்சிகோடா…எங்க எல்லாருக்கும்  பழைய செழியன் வேனும்” அவன் அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் முடிக்க 

 

செழியன் “நானும் அவனை தான் தேடிட்டு இருக்கான்” என்றான் வானத்தை வெறித்தபடி 

 

கதவை தட்டிவிட்டு ஜூஸ் டம்பளர் சகிதம் வேலையாள் நுழைந்து டீப்பாயில் வைத்து விட்டு போக  உள்ளே வந்து அதை எடுத்து செழியனிடம் நீட்டியவாறு “முதல ஜூஸ் குடி” என்க மறுக்காமல் அதை வாங்கி குடித்தான் செழியன்.அவன் கையில் வைத்திருந்த மற்ற  சீகரெடை வாங்கி அங்குவைத்துள்ள குப்பைக்கூடையில் போட்டான்.

 

“அக்காக்கு எப்போ டிஸ்சார்ஜ்”

 

“டாக்டர்ஸ் போலாம் தான்  சொன்னாங்க…நான் நாளைக்கு மறுநாள் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்   முடிவு பண்ணி இருக்கேன்”

 

“இன்னைக்கே சீக்கிரம் வீட்டுக்கு போகனும் உன்னோட முடிவு மாறத்துக்குள்ள பொண்ணு பாக்கணும் சொல்லிட்டு இருந்தாங்க…அதனால இப்படி சோக கீதம் வாசிக்காமா ஒழுங்கா சந்தோசமா இரு…அப்போ தான் அக்காவும் சந்தோசமா இருப்பாங்க”

 

“தெரியலைடா…நான் என்னோட லைப்ல பிளான் பண்ண மாதிரி எதுவும் ஒழுங்கா நடக்கல…பாப்போம் என்னதான் நடக்குது” என்றான் தீவிரமான பாவனையில்.

 

“கூல் மேன்!!!அதெல்லாம் உனக்கு நல்லதா தான் நடக்கும்”

 

எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணிட்டா அப்புறம் நான் எதுக்குடா இருக்கேன் என்று விதி அவனை பார்த்து கோரமாக சிரித்தது.

 

அதன்பின் அவன் எண்ணத்தை திசைதிருப்ப “ஹேய் செழியா!!! நம்ம காலேஜ் ரியூனியன் 2 மன்த்ஸ்ல இருக்கு போல நேத்து தான் வாட்ஸஅப் குரூப் கிரீயேட் பண்ணாங்க…நம்ம குரூப் ல உள்ள எல்லா பொண்ணுகளும் உன்ன தான் கேட்டாங்க…’செழியன் எங்க?’ ‘மேரேஜ் ஆச்சா?’ ‘இப்போ எப்படி இருக்கான்?’ பல கேள்விகள் டா…அப்புறம் நான் உன்னோட ஒரு ரிசன்ட் போட்டோ அனுப்பினேன்.உடனே ‘காலேஜ்ல பார்த்ததை விட இப்போ  நீ ரொம்ப அழகா இருக்கியாம்’ ஒரே புகழ் பாடல்தான்…எப்படிடா உனக்கு மட்டும் வயசு ஏறாமா குறையுதா என்ன?உண்மையாவே அப்போ இருந்ததா விட இப்போ நீ அழகன் தான்…எல்லாரையும் கரெக்ட் பண்ணிறியே பலே ஆளு தான் நீ” என்று பெருமூச்சு விட 

 

“டேய்ய்ய்ய்ய்” என்று பல்லை கடித்தபடி அருகில் இருந்த தலையணையை வைத்து அவனை அடிக்க 

 

“இருடா..இருடா…இதுக்கே டென்ஷன் ஆனா இரு இதையும் கேளு…உன்னோட எக்ஸ் மேனகா பிரைவேட் சாட்ல வந்து உன்ன பத்தி நிறைய கேக்குறா…அவளுக்கும் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி தான் டிவோர்ஸ் ஆச்சுனு சொன்னாங்க…பேசாம அக்கா கிட்ட அவள பக்கா சொல்லவா…” சீரியசான குரலில் கேட்க 

 

“டேய் நாயே…மூடிட்டு கிளம்பு ஒரு ஆணியும் நீ புடுங்க வேண்டாம்” என்று அசிங்க அசிங்கமாக செழியன் திட்ட 

 

“நல்லதுக்கு காலமே இல்லபா சாமி…சரிடா நான் கிளம்புறேன் நாளைக்கு ஆபீஸ்ல பார்க்கலாம்” என்றவாறே பிரகாஷ் கிளம்ப,அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்தவன் மனதில் அவன் கல்லூரிகால நினைவுகள் தான் வந்தது.அப்பொழுது அவன் ஒரு குழலோதும் கண்ணன் போல  அவன் செயல்கள் இருக்கும்.அதையெல்லாம் நினைத்து கொண்டு சிரிப்புடன் வலதுகையால் இடது புருவத்தை தடவியவாறே திரும்ப மழை பெய்ய ஆரம்பிப்பது  பால்கனி வழியாக தெரிந்தது.

 

அதையே பார்த்து கொண்டு இருந்தவனின் கால்கள் அவனையும் அறியாது அவனை பால்கனிக்கு கொண்டு சென்றது.இப்போது மழை நன்றாக வெளுத்துவாங்கி கொண்டிருக்க அவன் காதுகளில் மழை பெய்யும் போதெல்லாம் கேட்கும் அந்த குரல் கேட்டது.

 

‘இந்த அடிக்கிற மழைல நிற்கும்போது  நம்ம கண்ணீர் எப்படி தண்ணில கறையுதோ அதே மாதிரி நம்ம மனசுல இருக்குற கஷ்டம்,வருத்தம் எல்லாம் கரைஞ்சு மனசு புதுசா பிரெஷா ஆயிடும்’

 

அந்த குரலோடு பயணித்து அவனும் அந்த மழையில் நனைத்தான்,சுகமான நினைவும் சேர்ந்து அவன் முகத்தில் சின்ன புன்னகை ஓட்டிக்கொண்டது.சில நொடியே அது நிலைத்தது,அதோடு சேர்ந்து சில விரும்பதகாத நினைவும்,கசப்பான சம்பவங்களும் நினைவுக்கு வர அவன் உடல் இறுகியது.

******************************

இன்று அனுராதாவை டிஸ்சார்ஜ்  செய்வது அதனால் திவாகரோடு செழியனும் சேர்ந்து ஹாஸ்பிடல் வந்துவிட்டான்.மருத்துவர்களிடம் பேசி விட்டு ஃபார்மாலிட்டீஸ் அனைத்தையும் முடித்துவிட்டு அனுராதா இருக்கும் அறைக்கு வர அரவிந்தன் வேலையாள் உதவியுடன் அனைத்தையும் பேக் செய்து விட்டான்.

 

அனு “அனிஷா எங்கே” என்று கேட்டாள்.

 

 திவாகரன் “அவளை நான் வீட்ல உன்னோட  ரூம் எல்லாம் ரெடி பண்ணி வைக்க சொல்லி இருக்கேன்”

 

” அய்யோ போதுண்டா சாமி…இங்கு அஞ்சு நாளா சும்மா படுத்து இருந்ததே  தாங்க முடியல இதுல வீட்டுக்கு வந்தும்மா என்னால முடியாதுபா…தலைக்கு மேல வேலை இருக்கு…”

 

“தலைக்கு தானமா வேலை உனக்கு வேலை இல்லை இல்ல…அப்புறம் என்னமா” என்று அரவிந்த்  மொக்கை போட 

 

“போதும் டா உன்னோட காமெடி…வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பாருனு  சும்மாவா சொன்னாங்க…கல்யாணம்னா ஆயிரம் வேலை இருக்கும் அதுவும் இது என்னோடு தம்பியோட கல்யாணம் சும்மா இருக்க முடியாது…சரி தானா?” என்று செழியனை பார்க்க 

 

உண்மையாகவே செழியன் சம்மதம் சொன்ன நாளில் இருந்து எப்போது வீட்டுக்கு கிளம்புவோம் என்று தான் இருந்தார்.சீக்கிரம் சென்று அவன் கல்யாணத்தை முடிவு செய்ய வேண்டும் என்ற பரபரப்பு அவருக்கு அதிகமாக இருந்தது.அதற்கு தம்பி மனம் மாறி விடுவானோ என்ற பயமும் ஒரு காரணம்.

 

அக்காவின் மகிழ்ச்சி சுறுசுறுப்பை மட்டுமே வைத்த கண் வாங்காமல் கதவருகில் சாய்ந்து பார்த்துக்கொண்டிருந்த செழியன் தன் பதிலுக்காக அனுராதா தன்னை பார்ப்பதை உணர்ந்து “சரிதான் ஆனா உன்னோட ஹெல்த் அதைவிட முக்கியம் எனக்கு” என்க 

 

“அதான் நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டியே…இனிமே எனக்கு என்னடா கவலை,இனிமே நம்ம எல்லாருக்கும் சந்தோஷம் மட்டும்தான்” என்று சொல்லி அவன் கன்னம் தட்டி சிரித்தார். 

 

அதன் பிறகு அனைவரும் கிளம்ப கடைசியாக அனைத்தையும் சரி பார்த்து கொண்டு வெளியே வந்து காரிடாரில் நடந்த செழியனுக்கு  ஏதோ இனம் புரியாத ஓர் உணர்வு அதோடு உள்ளுணர்வு திரும்பிப் பார்க்கச் சொல்லி தூண்டியது.அதை அசட்டை செய்து நடக்க தோன்றாமல் நின்று மெல்ல திரும்பி பார்த்தான்.அந்த காரிடாரில் அவனைத் தவிர வேறொருவரும் இல்லை,ஏதோ ஓர் உணர்வு அவனை ஆட்கொண்டது அது என்னவென்று  பகுத்தறிய முடியாமல் அவன் அங்கேயே நின்றான்.

 

அப்போது அரவிந்தனிடம் இருந்து கால் வர மறுமுனையில் “மாம்ஸ் எங்க இருக்கிங்க…கார் பார்க்கிங்ல  உனக்குத்தான் எல்லாரும் வெயிட்டிங்…சீக்கிரம் மாம்ஸ்” என்று சொல்லி வைக்க,பின் ஏதோ பிரம்மை என்று புறந்தள்ளிவிட்டு வேகமாக கார் பார்க்கிங்  நோக்கி சென்றான்.

 

அவன் முழுமையாக சென்றபின் இடது பக்கத்தில் இருந்த ஒரு அறையிலிருந்து ஒரு உருவம் வெளிவந்தது.அதன் உதடுகளில் பெரிதாக சிரிப்பு மலர்ந்தது ஆனால் அதற்கு நேர்மறையாக கண்களில்  கண்ணீர் பளபளத்தது.

*********************************

எல்லோரும் வீட்டிற்கு வந்தபின் திவாகர் அரவிந்திடம் கோர்ட்டில் செய்ய வேண்டிய வேலைகள் சிலதை சொல்லிக் கொண்டிருக்க அனிஷா தான் மேலும் 2 நாள் லீவு சொல்லி இருப்பதாகவும் தான் அம்மாவைப் பார்த்துக் கொள்வதாகவும் சொல்ல அதுவும் அனைவருக்கும் நல்லதாகப் பட்டது.பின் செழியன் சொல்லிக்கொண்டு கிளம்ப,திவாகர் தங்கள் அறைக்கு சென்றார்.

 

தங்கள் அறை பீரோவில் ஏதோ செய்து கொண்டிருந்த அனுராதா தன் பின்னால் அரவம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே திவாகரன் கண்டவள் “என்னங்க கோர்ட் போகலையா? டைம்  ஆச்சு போலயே?” என்றவரின் பார்வை கடிகாரத்தை பார்க்க 

 

“சொல்லிட்டு போலாம் தான் வந்தேன்.நீ எதுவும் ஸ்ட்ரஸ் பண்ணிக்காத,ரொம்ப யோசிக்காத ,வேலையை பார்த்துக்க ஆள் இருக்கு அனிஷாவும் இருக்கா.ஏதாவதுனா எனக்கோ செழியனுக்கோ உடனே கால் பண்ணு புரியுதா…”

 

 “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்,என்னை  நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க…நான் இல்லனு  சரியா சாப்பிடாம,தூங்காம  உங்க முகமே சரியில்ல”

 

“உண்மையாவே எனக்கு உலகமே இருண்டு போச்சு ராதா…அன்னைக்கு காலையில உன்னை பேச்சு மூச்சில்லாமல் பார்த்த நிமிஷம் எனக்கு மறக்கவே மறக்காது…செத்துட்டேன்” என்ற அவரின் குரல் மெல்லியதாக நடுங்கியது

 

 29 வருட வாழ்க்கை அவர்களோடது. காதல்,அன்பு,புரிதல்,பாசம்,விட்டுக் கொடுக்கும் மனோபாவம்,சண்டை,சமாதானம் என்று எல்லாம் நிறைந்த ஒரு வாழ்க்கை. தன்னுடைய சரிபாதி இனி இல்லையோ என்ற பயத்தின் விளிம்புக்கு சென்று வந்தவர் அல்லவா அந்த பயம் இன்னும் அவரிடம் இருந்தது.தான் உடைந்து விட்டால் அனைவரும் இன்னும் பயந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தால் எதையும் வெளிக்கட்டாமால் இருந்தவர்,தன் துணையிடம் வெளிப்படுத்தினர். 

 

“விடுங்க அதான் எல்லாம்  சரியாச்சே…இனிமே ஒரு பிரச்சனையும்  இல்ல…என்னோட கவலையும் முடிய போகுது.செழியனும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான் வேற என்ன வேணும் எனக்கு சொல்லுங்க பாப்போம்”

 

“உண்மைதான் ராதா இதுதான் கெட்டதிலும் ஒரு நல்லது போல”

 

“ஆமாங்க…சரியா சொன்னீங்க கல்யாண வேலை எல்லாம் நிறைய இருக்கு அதெல்லாம் நம்ம தான் பார்க்கணும், எனக்கு தலையும் புரியல வாலும் புரியல நம்ம குடும்ப ஜோசியரை நாளைக்கு வர சொல்லுங்க.அப்புறம்…”என்று வரிசையாக சொல்லி கொண்டே போனவரை 

 

 “ஏய்!!! இரு…இரு… இப்பதான் ஓகே சொல்லி இருக்கான்.இனிமேதான் நம்ம பொண்ணு பார்க்கணும்,ரெண்டு பேருக்குமே பிடிக்கணும்,அப்புறம்தான் நீ சொன்னது எல்லாம்…நீ பேசுறத பார்த்தா என்னமோ  ஏற்கனவே பொண்ணு எல்லாம் பார்த்துவிட்டு பேசுற மாதிரி இருக்கு…” என்று சிரிப்புடன் சொல்ல 

 

ஒரு நிமிடம் திகைத்த அனுராதா பின் “அப்படி இல்லங்க…அது வந்து… என்னோட தம்பிக்கு  பொண்ணு தர யாருக்கு தான் கசக்கும்? இப்போவும் அவனுக்கு பொண்ணு தர நீ நானும் போட்டி போடுறாங்க” என்று சிலிர்த்து கொண்டார்.

 

“அது என்னமோ சரி தான்…சரிமா நான் கிளம்புறேன்” என்று திவாகர் சென்றார். 

 

அவர் கிளம்பி சென்ற பாதையையே பார்த்த  அனுராதா மனதுக்குள் ‘மன்னிச்சிடுங்க!!! நான் இதுவரைக்கும் உங்ககிட்ட எதையும் மறைத்ததில்லை,பொய் சொன்னதும் இல்லை. ஆனா, இப்போ சில விஷயங்களை உங்ககிட்ட சொல்லாம செய்யப்போறேன்…ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னு சொல்லுவாங்க…அதை தான் நானும் பண்ண போறேன்’ என்று எண்ணியவராக தங்கள் பீரோவை திறந்து அதன் உள்ளே வைத்த புகைப்படத்தை எடுத்து பார்த்தார்.

 

” நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை

சுமந்து போக மறுக்கிறதே

மொழிகள் எல்லாம் முடமாகி என்

மெளனத்தைக் கூட எரிக்கிறதே

சுவாசிக்க கூட முடியவில்லை

எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை

என்னை எனக்கே பிடிக்கவில்லை

காரணம் கேட்டால் தெரியவில்லை “