kv-12

kv-12

12

ஜானவியின் தாய் வசுந்தராதேவி ஒரு ராணி என்ற நினைப்புடன் தான் எப்போதும் இருப்பார். ஆனால் கணவன், பிள்ளைகள் குடும்பம் என்னும் வட்டத்திற்குள் வரும் போது அவர் தன்னை மாற்றிக் கொள்வார். அதே சமயம், பிள்ளைகளின் விருப்பத்திலோ அல்லது கணவனின் செயல்களிலோ தலையிடமாட்டார்.

ஜானவியின் தந்தை ப்ரித்விராஜவர்மா அந்தக் குடும்பத்தைத் தன் தந்தைக்குப் பிறகு வெகு சிறப்பாகவே தாங்கினார். குடும்ப விவரங்கள் ஊர் விவரங்கள் கோவில் சம்மந்தப் பட்ட விஷயங்கள் யாவையும் அவர் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டார்.

அவரின் தந்தை அவருக்கு ஒப்படைத்த பொறுப்புகளை ஒரு நாள் ஜானவியை அழைத்து அவர் கூறினார். அப்போது ஜானவிக்கு பன்னிரண்டு வயது தான் ஆனது. ஆனாலும் அப்போது அவருக்கு உடல் நிலையில் சில உபாதைகள் ஏற்படவே, எங்கே நமக்குப் பிறகு இதை பாதுகாக்க ஆள் இல்லாமல் போகுமோ என்ற பயத்தினாலே அவர் அப்போதே சிறிது சிறிதாக அவளைத் தயார செய்ய நினைத்தார். அது ஜானவியின் மனதில் ஆழப் பதிந்தது.

மேற்கொண்டு அவளின் தாத்தா வேறு அவளுக்கு இன்னும் சில தகவல்களையும் அந்த ரகசிய அறைகளின் கதைகளையும் கூற அவளுக்குள் ஆர்வம் , ஆவல் இரண்டும் பெருகிக் கொண்டே வந்தது. அதற்கான புத்தகத்தை அவள் தந்தை கொடுத்த போது, இது நம்ம குடும்பத்துக்கு மட்டுமே உண்டானது என்று மட்டும் அவளுக்கு மனதில் பதியும் படி சொல்லியிருந்தார்.

இன்று அந்தப் புத்தகத்தினைத் தேடி ஒருவன் வருவான் என்றும், அவனிடம் அனைத்தையும் கொடுப்போம் என்றும் அவள் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை.

கிருஷ்ணன் சொல்லிய யோசனை அவளுக்கு ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. அவனை வைத்து எப்படியும் அந்த அறைக்குள் இருக்கும் ரகசியத்தை தனக்கே உரித்தாக அடைய வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தாள்.

ஆனால் அது அவளை வெகு தூரப் பயணத்திற்குத் தள்ளக் காத்திருந்தது. காணக் கூடாததும் செய்யக் கூடாததும் அனைத்தும் அவள் அனுபவிக்க விதி இருந்தது.

ஜானவி ஒருபுறம் தன்னுடைய இலக்கை அடைய காத்திருந்தால், கிருஷ்ணமாச்சாரி ஒரு புறம் அந்தக் கதவினுள் புகுந்து தான் அடைய நினைத்த , இந்த உலகத்தினை ஆளும் பதவியைக் கைப்பற்ற ஆசைப் பட்டார். யாருக்கும் தெரியாமல் அவர் பல வேலைகளைச் செய்து கொண்டு தான் இருந்தார்.

ஜானவியிடம் இருக்கும் புத்தகம் பற்றி அவருக்கு சிறிதும் தெரியாது. தெரிந்திருந்தால் அதை முதலில் கைப்பற்ற நினைத்திருப்பார். ஆனால் ஜானவி மூலம் தான் அந்த அறைக்குள் செல்ல முடியும் என்பதை தன் சக்தி மூலம் அறிந்தவர், ஒரு நாள் பள்ளி செல்லும் விஜய்யை கண்டார். அரூபமாக அவன் வீட்டிற்குள் புகுந்தவர், அவனது கை ரேகையைக் கண்டார். அப்போது முதல் அவன் தான் அந்தக் கதவின் சாவி என்பதைப் புரிந்து கொண்டார். ஆனாலும் அது ஜானவியின் உதவியால் மட்டுமே ஆகக் கூடிய காரியம் என்றும் அறிய, அன்று முதல் விஜய்யின் மீது ஒரு கண் வைத்திருந்தார்.

இதைக் கண்ட அனந்து, வெங்கடேசனிடம் கூற, அவர்களின் குடும்பத்திடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவனுக்குச் சொல்லியிருந்தார்.

இன்று அதற்கான நேரம் நெருங்குவதை உணர்ந்த கிருஷ்ணன், எப்போதும் போல இடுக்காட்டுகுள் சென்றார். அங்கே ஒரு வெட்டவெளியில் அமர்ந்தவர், தன் பையில் இருந்த ஒரு உருளையான கண்ணாடி போன்ற ஒரு பந்தை எடுத்தார். கண்ணை மூடி சில மந்திர ஒலிகளை அதனிடம் கூற, சற்று நேரத்தில் அது சுழல ஆரம்பித்தது.

அதன்மேல் இருந்து ஒளி பரவ அதில் ஒரு மூன்று பேரின் முகம் மட்டும் தெரிந்தது. அவர்கள் அனைவரும் கிருஷ்ணனைப் போல ஒரு சாமியாரின் தோற்றத்தில் இருந்தனர்.

கிருஷ்ணா நேரம் நெருங்கிகிட்டு இருக்கு. அந்த அறையில இருக்கற சக்தி கடவுளுக்கு சொந்தமாகறதுக்கு முன்னாடி, நமக்கு வந்து சேரனும்.ரொம்ப கவனமா இரு.” மூன்றில் ஒரு முகம் பேசியது.

அதுக்காகத் தான் காத்துகிட்டு இருக்கேன். நிச்சயம் அந்த சக்திய நான் அடையணும். அதுக்குப் பிறகு, இந்த உலகத்துல எங்க எது நடக்கணும்னு நான் தான் முடிவு செய்வேன்.” கண்களில் உக்கிரம் பொங்க சொல்லிக்கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

இந்த உலகத்தை இப்ப ஆளறதும் நாம தான். ஆனா நீ அதுக்குத் தலைவனாகனும்னா உன்கிட்ட அந்த சக்தி இருக்கணும். உன்னை எங்க கூட்டத்துக்கு நாங்க அறிமுகம் செய்ய நேரம் பாத்திருக்கோம். வர்ற மாசம் அமாவாசை அன்னிக்கு நீ நாங்க சொல்ற இடத்துக்கு வந்துடு. எந்த இடம்னு இன்னும் ரெண்டு நாள் கழிச்சு சொல்றேன்.” இன்னொரு முகம் கூற,

கண்டிப்பா வரேன். அதுக்குத் தான காத்துட்டு இருக்கேன்.” சிரித்தார்.

நீ அந்த சக்தியை எங்ககிட்ட சேர்க்கலன்னா பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும். உன்னை விட அதிக சக்தியோட இருக்கறவங்களும் அங்க இருக்காங்க. பாத்துக்கோஎச்சரித்தது மூன்றாவது முகம்.

கிருஷ்ணனின் முகம் சற்று சுருங்கியது.

சரி நாங்க வரோம்.” என்றதும் அந்த ஒளி குன்றி மீண்டும் அந்த உருளைப் பந்துக்குள் புகுந்து கொண்டது. அதை பத்திரமாக எடுத்து தன் பைக்குள் வைத்துக் கொண்டு தன் இருப்பிடம் விரைந்தார் கிருஷ்ணமாச்சாரி.

மாமா நான் ஊருக்குப் போறேன்.” அரவிந்த் அனந்துவின் முன்னாடி வந்து நின்றான்.

தங்கையின் மகன் என்றாலும் சிறு வயது முதலே அவரே வளர்த்ததினால் அவருக்கு அவன் மீது பற்று அதிகம் தான். அவனுக்கும் அதே அளவு பாசம் அவர் மீது இருந்தது.

பாத்து போயிட்டு வா ப்பா. ஊருக்கு போயிட்டு போன் பண்ணு. அந்த கிருஷ்ணன் கிட்ட ஜாக்கரதையா இரு.” எச்சரித்தார்.

சரி மாமா.” என்று அவன் கிளம்ப, அங்கே நின்றிருந்த விஜயினைப் பார்த்தான்.

அண்ணா, நீங்க கார் வெச்சுகோங்க. நான் பஸ்ல போய்டுவேன். நான் அந்த ஓனர்கிட்ட சொல்லிக்கறேன்.” எனவும்,

நீ எடுத்துட்டுப் போ அரவிந்தா. நான் வந்துக்கறேன்.”

இல்லண்ணா..எனக்கு இது பழக்கப்பட்ட ஊரு. உங்களுக்கு அப்படி இல்ல. அதுனால நீங்க எடுத்துட்டு வாங்க. வரேன் மாமா.” சொன்னபடி இரண்டே நாள் தங்கிவிட்டு கிளம்பிவிட்டான். எப்போதுமே அவன் இங்கு வந்தாள் ஒரீரு நாட்களுக்கு மேல் தங்குவதில்லை. இம்முறையும் அப்படியே கிளம்பினான்.

விஜய் அடுத்து வந்த நாட்களில் அனந்துவிடம் நிறைய கற்றுக் கொண்டான். அவனுடைய மூளைக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு அவனுக்கு சில பயிற்சிகளைக் கொடுக்க நினைத்தார். அவனை காலை வேளையில் அந்தக் காட்டிற்குச் சென்று சில நேரம் உலவச் சொன்னார்.

அவன் எதற்கு என்று கேட்டாலும், உனக்கே புரியும் என அனுப்பி வைத்தார்.

தினமும் அந்தக் காட்டிற்குள் அவன் செல்ல, அவனையும் அறியாமல் அதனால் ஈர்க்கப் பட்டான்.

முதல் நாள் அவர் சொல்லிச் சென்றவன், அடுத்த நாள் அவனே சென்று வந்தான். தனக்குள் ஒரு வித உணர்வு பரவுவதை அவனால் தடுக்க முடியவில்லை. அது எந்த மாதிரி உணர்வு என்று அவனால் பிரித்தறிய இயலவில்லை.

ஆனால் அவன் வாழ்வின் பல கேள்விகளை அவனால் எதிர்கொள்ள முடியும் என்கிற தைரியம் இருந்தது. அவனுக்காக ஒரு இலக்கு காத்திருப்பதை புரிந்து கொண்டான். அனந்து கூறிய படியே அவனும் அந்தக் காட்டிற்குள் பத்மநாப சுவாமியைத் தேடினான்.

பார்க்கின்ற ஒவ்வொரு மரமும் இது இலுப்பை மரமா என்று அவனை தேடவைத்தது.

அலுத்துச் சோர்ந்தவன் ஓர் நாள், அந்தக் காட்டிற்குள் ஒரு மரத்தடியில் அமர்ந்தான். கண்ணைமூடி இனி தன் வாழ்வில் தனகென்று யார் இருக்கிறார்கள் என்று யோசித்த போது, கண்களில் நீர் கசிந்தது. அதை அவனது கைகள் துடைத்துக் கொள்ளும்முன் ஒரு பெண்ணின் கை அதைத் துடைப்பது போல உணர்ந்தான். சட்டென கண்விழிக்க அங்கே யாரும் இல்லை. கண்ணீர் மட்டும் துடைக்கப்பட்டிருக்க, இது தன் கனவா என்று யோசித்து மீண்டும் கண் மூடிக் கொண்டான்.

அந்தக் காற்று அவனுக்குள் எதையோ புகுத்தப் பார்த்தது. ஜானவி ஏனோ நினைவில் வந்தாள். அவளின் மீது கோபம் இருந்தாலும், அவளைக் காணும் ஆவல் மனதிற்குள் எழத் தொடங்கியது.

ச்சி.. எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுதுஎன சுற்றிப் பார்த்தவன், அதற்கு மேல் தாங்காமல் எழுந்து வீட்டிற்கு வந்தான்.

அனந்துவிடம் தனக்குப் பல மாதிரியான உணர்வுகள் வருவதை பொதுவாகக் கூறினான்.

வாழ்க்கை அது தானே விஜய். நீ ஊருக்குப் போ. நான் கொஞ்ச நாள்ல அங்க வருவேன். உன்னோட முதல் வேலை, அந்தக் கோவில் நிலவரை ரகசியத்தை அந்த அரச குடும்பத்துல இருந்து தெரிஞ்சுக்கறது தான். நீ வேற யாரையும் பார்க்க வேணாம். அந்த ஜானவிய மட்டும் பாத்தா போதும். அதுக்குப் பிறகு நீயே கண்டுபிடிப்ப.” என்றதும்,

முயன்று அவள் தன் தந்தையைக் கொன்றவள் என சொல்லிக்கொண்டான்.

சரி அங்கிள். ஆனா, நானா அங்க போக முடியாதே. என்ன சொல்லி நான் போறது..?” அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவனது கைபேசி சினிங்கியது.

அவனது உயர் அதிகாரி மினிஸ்டர் தான் அழைத்திருந்தார்.

சொல்லுங்க சர்.” என ஆரம்பிக்க,

அவர் சொன்ன செய்தி, வாழ்வில் ஏற்கனவே சில விஷயங்கள் முடிவு செய்யப் பட்டு விட்டது. நாம் எல்லாம் அதன் கருவி மட்டுமே என்று தெளிவாகப் புரிந்தது அவனுக்கு. பேசியை வைத்தவன், ஆச்சரியத்தின் உச்சியில் இருந்தான்.

என்ன விஜய், நீ அந்தக் கோவிலுக்குப் போக அதிகாரம் உள்ளவன்னு உத்தரவு வந்துடுச்சா?” அனந்து சிரித்தார்.

சீக்ரெட் ஏஜென்சி, அந்தக் கதவைத் திறக்க என்ன வழின்னு கண்டுபிடிக்க அப்பாயின்ட் பண்ண கிரிப்டாலஜிஸ்ட் நான் தான். வெளியில் தெரியாம டீல் பண்ண சொல்லியிருக்காங்க. ஆனா அந்த நிலவரை வரை செல்ல எனக்கு அதிகாரம் இருக்குன்னு லெட்டர் அனுப்பிர் இருக்காங்க. பிரதம மந்திரி கையெழுத்தோட.” அனந்துவை ஆச்சரியமாகப் பார்த்தான்.

நான் தான் சொன்னேனே விஜய். எல்லாமே உன் தலைல எழுதி வச்சது தான் . அது படி தான நடக்கும். இனியும் என்ன நடக்கணுமோ எல்லாம் உனக்கு சாதகமா தான் நடக்கும். தைரியமா கிளம்பு.” சிரித்தவர்,

எதையோ நினைவு கூர்ந்து,

ஒரு நிமிஷம் என் கூட வாஅவனை அழைத்துக் கொண்டு அவரது பூஜை அறைக்குச் சென்றார்.

அங்கிருந்த ஒரு பாட்டிலில் வைத்திருந்த வேர் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

அதை வாங்கிப் பார்த்தவன், மிகவும் மெல்லிதாக இருப்பதை உணர்ந்தான்.

இது என்னோட குரு எனக்குக் கொடுத்தது. இதை இப்போவே முழுங்கிடு.” ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து நீட்டினார்.

இது என்னது? எதுக்கு அங்கிள் சாப்ட சொல்றீங்க. அதுவும் உங்க குரு உங்களுக்குக் கொடுத்தது..” விஜய் தயங்கி நிற்க,

இதை அவர் எனக்காக கொடுக்கல. சமயம் வர்றப்ப உபயோகப் படுத்திக்க கொடுத்தது. இது எனக்கு எப்பவுமே தேவைப்படாது. உனக்காகத் தான் வச்சிருந்தேன். இது சாப்டா உன்னை கட்டுப்படுத்த நினைக்கறவங்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும். உன் மூளை மனம் ரெண்டும் எப்பவும் உன்னோட கட்டுப்பாட்டுல இருக்கும். இதுக்கு கண்டமதி வேர் ன்னு பேரு. சாப்பிடு விஜய்.” பாசமாக அவர் சொல்ல அதன் பின் கேள்வி இல்லாமல் அதை வாயில் போட்டு விழுங்கினான்.

அவனுக்கு ஆசி வழங்கி அனுப்பி வைத்தார் அனந்து. அவன் இருந்த பத்து நாட்களில் அவனுக்கே தெரியாமல் அவனை தயார் படுத்தி இருந்தார். அந்தக் காட்டின் மரங்களும் காற்றும் அவனை ஒருநிலைப்பட வைத்திருந்தது.

வேதாளம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்ன விக்ரமாதித்தனைப் போல அவன் மூளையை இன்னும் கூர்ந்து செயல்பட பணித்திருந்தது.

 

அவனது வாழ்க்கைப் பயணத்தை அவன் சிறப்பாக ஆரம்பித்தான்.

ஜானவி மீண்டும் அந்தப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அவளது அறையில் இருக்க, அந்தக் கடைசி பக்கத்தை புரட்டி இருந்தாள். யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த அந்த ரகசிய வரிகளை படிக்க ஆரம்பித்தாள்.

அந்த நேரத்தில் அவளுக்கு அறையில் இருந்த தொலைபேசி அழைக்க அதை எடுத்தாள்.

அரண்மனை அலுவலில் இருந்து தான் அழைத்திருந்தது.

அம்மா, உங்களுக்கு டெல்லில இருந்து ஃபோன் வந்திருக்குஎன்றாள் அந்தப் பெண்.

கனெக்ட் பண்ணுதொரனையாகக் கூறினாள்.

இணைப்பு கொடுக்கப் பட்டது.

அரசாங்க சீக்ரெட் என்ஜெசி , விஜய்யின் வருகையை அதிகாரப் பூர்வமாக அவளுக்கு அறிவித்தனர்.

நீங்க கோஆபரேட் பண்ணனும். பப்ளிக்குக்கு தெரியாம பாத்துக்கோங்க.” அவளைப் பணிக்க,

கண்டிப்பா செய்யறேன்ஒத்துக்கொண்டாள்.

! நீ அவ்வளோ பெரிய ஆளா… இத்தனை நாள் உன்னை சாதாரண ஒருத்தனா தான் நினச்சு இருந்தேன். பிரதம மந்திரியே உன்னை ரிகமேன்ட் (recommand) பண்ற அளவு நீ புத்திசாலியா? அதையும் பாக்கறேன்எரிச்சலுற்றாள்.

விஜய் மறுநாள் காலையே அவளுக்குப் போன் செய்தான்.

 

error: Content is protected !!