LogicIllaMagic21

LogicIllaMagic21

லாஜிக் இல்லா மேஜிக் 21

 

மறுநாள் நந்தனாவும் அவள் நண்பர்களும் படப்பிடிப்பை முடித்துக்கொண்டதும் அவர்களுடன் சேர்த்துக் கொள்வதாய் சொல்லியிருந்த நிரஞ்சன், மதியம் அவர்களுக்கான உணவுடன் வந்தான்.

அவர்களுடனே மதிய உணவை உட்கொண்டவன் அனைவரையும் அழைத்துக்கொண்டு பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு சென்றான்.

சிறிதுநேரம் நீரில் அனைவரும் விளையாடிமகிழ்ந்தபின்,

நிரஞ்சன்  “யாருக்காவது ஹைக்கிங் (மலைமேல் நடைப்பயணம்) போக இன்டெரெஸ்ட் இருக்கா? என் கூட வாரீங்களா?” என்று பொதுவாகக் கேட்க,

நந்தனாவோ வாடிய முகத்துடன், “என் கால் ஒழுங்கா இருந்தா நான் வருவேன்” என்று சோகமாக சொல்ல அவள் வாடிய முகத்தை பொறுக்க முடியாமல் அவள் நடக்க தான்  உதவுவதாய் நிரஞ்சன் சொன்னவுடன் நந்தனா உற்சாகமாகப் புறப்பட்டாள்.

அவர்களைத் தனிமையில் விட நினைத்த நண்பர்கள் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லி மறுத்துவிட்டு, அவர்களைச் சென்று வரும்படி அனுப்பிவைத்து, தேயிலை தொழிற்சாலையைக் காணப்புறப்பட்டனர்.

நந்தனாவை கைதாங்கலாக்க அழைத்துக்கொண்டு அடர்ந்தகாட்டுப்பகுதிக்குள் நடக்கத் துவங்கினான் நிரஞ்சன்.

யூகலிப்டஸ் வாசத்தைச் சுமந்துகொண்டு சிலுசிலுவென வீசும் பரிசுத்தமான காற்றும், பச்சை பசேலென்ற புல் தரையும், அங்காங்கே ஈரமான பாறைகளும், திரும்பிய பக்கமெங்கும் வானுயர வளர்ந்துநின்ற மரங்களும் காட்சியளிக்க, அனைத்திற்கும் அழகு சேர்ப்பதைப்போல் முகத்தில் புன்னகையுடன் அவள் கைப்பற்றி அன்பாய் அவள் வேகத்திற்கு ஈடுகொடுத்து பொறுமையாய் அவளை அழைத்து செல்லும் நிரஞ்சன் அவள் மனமெங்கும் நிறைய. அவ்வனமே சொர்க பூமியாய் தோன்றியது நந்தனாவிற்கு.

இருவரும் பேசியபடி மெல்ல மலை உச்சியை சென்றடைந்தனர். அவ்விடத்தின் எழிலில் மனதை தொலைத்தவள், குழந்தைபோல் இங்கும் அங்கும் நடந்து சுற்றிச் சுற்றி கைகளை அசைத்து விளையாடி மகிழ்ந்திருக்க, நிரஞ்சனோ தன்னவளையே ரசித்திருந்தான்.

அவளை நெருங்கியவன் “உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?” கண்களில் ஆர்வம் மின்ன கேட்க, அவளும் முகமெங்கும் சந்தோஷத்துடன்,

“ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு!…ஆமா இந்த இடம் உங்களுக்கு எப்படி எப்படி தெரியும்? கண்ணுக்கெட்டின தூரம்வரை யாருமே இல்லையே”

“சிலவருஷம் முன்னாடி ஊட்டி வரும்போது நானும் கிரியும் சும்மா சுத்த போய் இந்த இடத்தை கண்டுபிடிச்சோம். ஒருவாட்டி டென்ட் போட்டு இங்கயே ராத்திரி கேம்ப் கூட அடிச்சோம்.” உற்சாகமாகச் சொன்னான்.

“எனிவே நீங்க இதுவரை பண்ணதுலயே உருப்படியான விஷயம் என்னை இங்க கூட்டிட்டு வந்ததுதான். சூப்பரா இருக்கு”

“நல்லதுமா! ரொம்ப நல்லது” சிரித்தபடி பாறையின் மேல் அமர்ந்து கொண்டான்.

“ரஞ்சன்…”

“ம்ம்”

“தப்பா எடுத்துக்கலைனா செல்ஃபி ஒன்னு எடுத்துக்கலாமா?” தயக்கத்துடன் அவள் கேட்க

“ஒன்னு என்ன ? எத்தனை வேணும்னாலும் எடுத்துக்கலாம். நாம சேர்ந்து இருக்குற இந்த போட்டோலாம் நம்ம டிராமா முடிஞ்ச பின்னாடி பார்த்தா நல்லா இருக்கும்ல” அவன் புன்னகைக்க

‘ஒரு வாட்டியாவது வாயில நல்லதா வருதா பார்? லூசு ’ அவள் ஏதும் சொல்லாமல் கைப்பேசியை எடுக்க, அவனே வாங்கி சில பல புகைப்படங்களை எடுத்துத் தள்ளினான். கைப்பேசியை அவளிடம் கொடுக்கும் முன்பு தனக்கு அப்புகைப்படங்களை அனுப்பிக்கொள்ள வாட்சப்பை திறந்தவன்,

அதில் அவன் பெயரை ‘இம்சை’ என்று பதிவேற்றி இருந்ததைப் பார்த்து உறக்கச் சிரித்துவிட்டான்.

“ஹே வாலு நான் உனக்கு இம்சையா?” அவள் கதை பிடித்துத் திருகியவனைச் செல்லமாய் அவள் அடிக்க, அவன் பதிலுக்கு அடிக்க எனச் சிறு பிள்ளைகள்போல ஓடிப் பிடித்து விளையாடிக் களைத்து, மரத்தின் கீழே அமர்ந்து நேரம் ஆவதை மறந்து பேசத்துவங்கினர்.

வானம் மெல்ல இருட்டத் துவங்க, இருவரும் கிளம்பினர். ஏனோ வந்ததைவிடப் போகும் பாதை நீண்டதாய் நந்தனாவிற்கு தோன்றிட,

“வழியை மறந்துடீங்களா? ரொம்ப நேரம் நடக்கறாப்ல இருக்கே?”

“ஆமா! நீ வேணும்னே சுத்தி வளைச்சு போயிருக்கியா? ஜாலியா இருக்கும்!” அவன் உற்சாகமாய் சொல்ல

“ஐயோ! நாம அப்போ தொலைஞ்சு போயிட்டோமா என்ன?” அவள் பதட்டத்துடன் கேட்க

“வாழ்க்கையில சில நேரம் தொலைவதுதான் சுகமே!” அவளை விழுங்குவதைப் போல் பார்த்தவன் பார்வையைத் திருப்பிக்கொண்டு கேலியான குரலில் “இதெல்லாம் புரிஞ்சுக்க உனக்கு வயசு பத்தாது” சொல்லி நடக்க

“தோடா! எனக்கு 19 நான் ஒன்னும் குழந்தை இல்லை, பார்த்தா தெரியல?” அவள் அவன் உயரத்திற்கு அண்ணாந்து பார்த்து முறைக்க, அவள் மூக்கை பிடித்துச் செல்லமாக,

“சரிங்க பாட்டி!” என்று கொஞ்சிக் கொண்டே அவளை நெருங்கியவன் ஏதோ தோன்ற சட்டென விலானான். அதன் பிறகு விருந்தினர் மாளிகையை அடையும் வரை அவளுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டான்.

சமையல் காரரை வர வேண்டாம் என்றவன் இரவு உணவைத் தானே சமைப்பதாகச் சொல்லிச் சமையலறைக்குச் செல்ல

“அய்யோடா அப்படியே சார் நளபாகம் செஞ்சுட்டாலும்…” அவனை வம்பிழுத்தபடியே பின் தொடர்ந்து சென்ற நந்தனா அவனுக்கு ஒத்தாசை செய்ய சென்றாள்.

“சாப்பிட்டு பார்த்து அப்புறம் சொல்லு பேபி” என்னவன் மும்முரமாக சமையல் வேளைகளில் இறங்கினான்.

தன்னை மறந்து முதலில் முணுமுணுத்தபடியும் பின்பு உரக்கவும் பாடிக்கொண்டே உடலை அதற்கு ஏற்றாற்போல் மெல்லிய நடன அசைவுகளுடன், அவன் ரசித்து ரசித்துச் சமைக்கும் அழகில் மயங்கியவள்,

‘ஒரே ஆள் மேல எத்தனை தரம்டா லவ் வரும்? இவன் அவ்ளோ அழகா நான் அவ்ளோ லூசா? தெரியலையே ! ஐயோ டிசைன் டிசைனா படுத்துறானே!’

அவனையே மெய்மறந்து பார்த்திருக்க. அதை கவனித்தும் கவனிக்காததை போலச் சமைத்துக் கொண்டிருந்தவன், அவளுடன் பேசிக்கொண்டே உப்பு என்று நினைத்துச் சர்க்கரையை சாம்பாரில் போடப் போனான்.

அவன் தடுமாற்றத்தைக் கண்டு கொண்டவள் கைகொட்டிச் சிரித்துக் கிண்டல் செய்ய.

“உன்னால தான் எல்லாம்.” அவன் குற்றம் சாட்ட

“ஹலோ நான் என்ன செஞ்சேன்?” அவள் கையில் கத்தியை வைத்துக் கொண்டு மிரட்ட

“உன்ன பார்த்தா நான் கேனைத்தனமா என்னென்னவோ பண்றேன். நீ மொதல்ல போய் ஹால்ல உட்கார்”

“நான் உங்களைப் பார்த்ததிலிருந்து பண்றது எல்லாமே கேணைத்தனம் தான். புதுசா பண்ண என்ன இருக்கு?”

அவன் மனமோ ‘உன்னை இழக்கவும் மனசு வரல, உன்னால என் கனவை இழக்கவும் மனசு வரல. டார்ச்சர் பண்றே பேபி என்னை. நீ ஏன் தான் என் கண்ணுல பட்டியோ!’

சமையலறை மேடையில் அமர்ந்துகொண்டு கால்களைஆட்டியபடி , கையிலிருந்த ஊட்டிக் கேரட்டை ருசித்து கொண்டிருந்த நந்தனா அறியவில்லை நிரஞ்சன் அவள்மேல் கொண்ட காதலில் தவித்துக்கொண்டிருப்பதை.

கைப்பேசியில் வீடியோ கால் வர அதை ஏற்றவள், தங்கள் இருவரது குடும்பத்தினரும் கிரிதரும் என ஒரு பட்டாளமே குரூப் கால் போட்டிருப்பதைக் கண்டு கண்கள் விரிய.

நிவேதாவோ, “ஹேய் லவ் பேர்ட்ஸ் என்ன பண்றீங்க? எங்க அவன் என் கூடபொறந்த நலலவன்?” என்று கேட்க, தன் தங்கையின் குரலை கெட்டவன் புன்னகையுடன் திரையை எட்டிப்பார்க்க, நந்தனாவின் தோளில் கைபோட்டுக் கொண்டு

“இங்க தான் டி இருக்கேன். என் பேபியும் அவ ஃபைரண்ட்சும் சாப்பிட சமைசிட்டு இருக்கேன்” என்று சொன்னபடியே, பக்கவாட்டில் நந்தனாவின் தலையை செல்லமாக முட்டி,

“சொல்லேன் பேபி”  என்று சொல்ல, அவளும் “ஆமா! எவ்ளோ பிரமாதமா சமைகிறார் தெரியுமா. வாசனையே பசிய கிளப்பிவிடுது. அதான் கேரட் சாப்பிட்டு பசிய  கண்ட்ரோல் பண்றேன்” என்று கொஞ்ச

ஸ்ரீராம் கிரி நிவியென மாறி மாறி இவர்களைக் கிண்டல் செய்ய துவங்க. அவன் அனைவருடனும் பேசிக்கொண்டே சமையலைத் தொடர, அவனுக்குத் தோதாய் நந்தனா உதவிக்கொண்டே பேச, அனைத்தையும் அமைதியாய் பார்த்து மனம் நிறைந்த பெற்றோர்கள் நாகரிகம் கருதி பிள்ளைகள் பேசிக்கொண்டிருக்கட்டும் என்று உறங்கச் செல்வதாகச் சொல்லி மெல்ல விடை பெற்றனர்.

ஜெகந்நாதனும் மைதிலியும் தங்கள் அறையில்,

மைதிலி, “என்னங்க மனசுக்கு எவளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? நம்ம நிரு இப்படி இருப்பான்னு நினைக்கவே இல்லை. எங்க ஹாஸ்பிடல் டிரஸ்ட் அப்படின்னு தன் வாழ்க்கையை மறந்துடுவான்னு ரொம்ப பயந்தேன்” என்றபடி கணவரின் தோளில் சாய

“இப்போ அவங்கள பார்த்த அப்புறம் அந்த கவலை இல்லையே?” என்று மனைவியின் தலையை வருடிக் கொடுத்தவர், தான் சட்டை ஈரமாவதை உணர்ந்து

“என்னமா இது? ” என்று பதர

“சந்தோஷம் நெஞ்ச அடைக்குது ஜெகன். அவங்களை அப்படி பார்த்த்ப்போ உங்களுக்கு என்ன தோணிச்சு?” கணவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்

“என்ன சொல்லவரே? அவங்க காதல்ல விழுந்துட்டாங்க அப்படின்னு தானே?” சிரித்தபடி கேட்க

“அப்படிதான். அப்படியே தான்!” முகமெங்கும் சந்தோச புன்னகையுடன்மீண்டும் கணவரின் தோளில் சாய்ந்து கொண்டார்.

நிரஞ்சனின் கைவண்ணத்தில் மயங்கிய நந்தனாவும் அவள் நண்பர்களும் போதும் போதும் என்ற அளவிற்குச் சற்று மிகுதியாக உண்டுவிட்டு, வெகுநேரம் அரட்டை கச்சேரியில் மூழ்கினர்.

தன் அறையில் தூக்கம் வராமல் நடந்து கொண்டிருந்த நிரஞ்சன்,

‘எப்போ பார்த்தாலும் அப்படி என்னத்த தான் பேசுவீங்க?’

கிட்ட தட்ட அர்த்த ராத்திரி ஆகியும் பேச்சுச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க, தட தடவென கீழே விரைந்தவன், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நந்தனாவின் கைப்பற்றி இழுத்து,

“வா பேபி உனக்கு தூக்கம் வருது” என்று சொல்லவும், அதிர்ந்தவள்

“என்ன?” என்று விழிக்க, அவளைப் பாராது

“அவளுக்கு தூக்கம் வருதாம். குட்நைட்!” என்றவன் அவளைக் கைகளில் ஏந்திக் கொள்ளாத குறையாய் அவள் அறைக்கு இழுத்துச் சென்றான்.

அவன் செயலை அதிர்ச்சியுடன் பார்த்த நண்பர்கள், அவர்கள் சென்றதும் கேலி பேசி உரக்கச் சிரிக்கத் துவங்கினர்.

சித்தார்த் “டேய் பாவம்டா அவர்! நாம ரொமான்ஸ் பண்ணவிடாம கூடவே இருந்து படுத்துறோமோ?”

மயூரா “ஆமா அண்ணா பொறுமை இழந்துட்டார் போல இருக்கே”

சுகன்யா “ஆமா இதுவும் ஜாலியா தான் இருக்கு, இன்னும் நாளைக்கு அவரை வம்பிழுப்போமா?”

விக்கி “வம்பா?”

“ஆமாம் சும்மா கடுப்படிப்போமா ?” சுகன்யா துவங்க, நம்பர்கள் ஒன்றுகூடித் திட்டமிடத் துவங்கினர்.

மேற்தளத்தில் நந்தனா நிரஞ்சனிடம் சண்டைக்கு நின்றிருந்தாள்

“இப்போ எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தீங்க? எவளோ முக்கியமா பேசிட்டு இருந்தேன் தெரியுமா? நீங்க தூங்குங்க நான் கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கறேன். கிழ உங்க கிட்ட வாக்குவாதம் பண்ணா அவங்க எதிர உங்களுக்கு மரியாதையா இருக்காதேன்னு வந்தேன்”

“ஆஹா அப்படியே எனக்காக பார்த்துட்டாலும். நீ ஒன்னும் மறுபடி கிழப்போக தேவையில்ல! எப்போ பார்த்தாலும் பேசிட்டே தானே இருக்கீங்க? வாயே வலிக்காதா உங்களுக்கெல்லாம்? எதுவானாலும் காலைல பேசிக்கலாம் புரியுதா? இப்போ தூங்கு” என்றவன் நில்லாது அவள் அறையை விட்டு வெளியேறினான்.

கோவமாகக் கட்டிலில் அமர்ந்தவளோ “அடேய் உன் ரோதனை தாங்கல நீ டாக்டரா மிலிட்டரி ஆஃபீசரா? இம்சை இம்சை மெகா சைஸ் இம்சை” சிறிது நேரம் முணுமுணுத்து புரண்டு புரண்டு படுத்தவள், பின் சோர்வாய் உறங்கிவிட்டாள்.

மறுநாள் அனைவரும் ஊட்டியில் சில இடங்களில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு போட்டிங் செல்ல ஊட்டி ஏரிக்குச் சென்றனர்.

காலை முதல் படபிடிப்பென்ற பெயரில் சித்தார்த்தும் வினேஷும் நந்தனாவுடனே திரிவது, நெருங்கிப் பழகுவது என்று வேண்டுமென்றே நிரஞ்சினின் பொறாமையை தீயில் என்னை ஊற்றினார்.

போட்டிங் செல்ல பெடலிங் படகைத் தேர்வு செய்தனர், ஆண்கள் ஒரு படகும் பெண்கள் ஒரு படகும் எடுக்கத் திட்டமிட்டிருக்க, அனைவரும் படகை நோக்கி நடக்கும் நேரம், நிரஞ்சனின் கைப்பேசி ஒலிக்க, அதனை ஏற்க அவன் சற்று விலகிச் சென்றான்.

இதைப் பயன் படுத்திக் கொண்ட விக்னேஷ் சித்தார்த் இருவரும் நந்தனாவை பேச்சுக்கொடுத்தபடியே ஒரு படகிற்கு அழைத்துச் சென்றுவிட, நிரஞ்சன் திரும்பியதும் சுகன்யா மயூரா மட்டுமே இருக்க

சுகன்யா விஷம புன்னகையுடன் “அண்ணா நந்து அவங்க கூடப் போய்ட்டா, அங்க பாருங்க” என்று தூரத்தில் கைகாட்ட, நால்வர் அமர்ந்து பயணிக்கும் படகில் முன் இருக்கையில் சித்தார்த்தும், நந்தனாவும் அமர்ந்திருக்க பின் இருக்கையில் விக்னேஷ் இருக்க அனைவரும் நிரஞ்சனை பார்த்துக் கை அசைக்க கோவத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் நிரஞ்சன்.

மயூரா சுகன்யா எதிரே தன்னுடைய கோவத்தைக் காட்டாமல் கட்டுப்படுத்திக்கொண்டவன், பெண்களின் கெஞ்சுதலில் படகில் அமர்ந்தான்.

நந்தனா இருந்த படகின் பக்கம் பார்வையைத் திருப்பாமல் இருக்க எவ்வளவு முயன்றும் மயூரா சுகன்யா அந்த படகில் அவர்கள் அடிக்கும் லூட்டியை சொல்லிச் சொல்லிச் சிரிக்க நிரஞ்சனின் கோவம் எல்லையைக் கடந்தது. மிகவும் பிரயத்தனப் பட்டு சவாரியை முடித்தவன், இறங்கியதும் நந்தனாவிடம் முகம் கொடுத்துப் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு விறுவிறு வென முன்னே செல்ல, நந்தனா ஏனென்று புரியாமல் அவன் பின்னே ஓடினாள்.

கோவம் குறையத் தனியே சென்றுகொண்டிருந்த நிரஞ்சனுடன் ஓட்டமும் நடையுமாக பேசத் துவங்கினாள்.

“சார் நில்லுங்க! என்னாச்சு?”

“…”

“ரஞ்சன் என்னாச்சு?”

ஒரு நொடி நின்றவன், “உனக்கென்ன வேணும்? அவனுங்க கூடத் தானே சுத்தனும் அங்கேயே போ! என் பின்னாடி வராதே!” கோவமாகச் சொல்லிவிட்டு வேகமெடுக்க

“ஐயோ நான் என்ன பண்ணேன்?”

“நீங்க பண்ணத்தான் இந்த ஊட்டியே பாத்துதே! நான் தனியா என்னத்த சொல்ல? போ உன் சித்துவும் விக்கியும் தேடப்போறாங்க”

“ரஞ்சன்…”

“நீ அவங்க கூட ஊர்சுத்தவா நான் …” தொடராமல் வார்த்தைகளை விழுங்கினான்

“நீங்க?”

“நான்…விடு உனக்கு புரியாது!”

“சொல்லுங்க புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்”

“சரி வராது விடு”

“சொல்லாம புரியாதுன்னா எப்படி ?”

“விடுன்னா விடேன்!” என்றவன் கண்ணில் அனல் பறக்க, அவன் கோவத்திற்கான காரணத்தை ஓரளவிற்கு ஊகித்தவள் புன்னகையுடன்

“இப்போ என்ன பண்ணனும்?”

“ஒன்னும் பண்ண வேண்டாம். உனக்கு அவங்க கூடத்தான் போட்டிங் போகணும்னா என்னை எதுக்கு வற்புறுத்திக் கூட்டிகிட்டு வந்தே?”

“பொறாமையா இருக்கா?” கெட்டவள் கண்ணில் அத்தனை குறும்பு, முகத்தில் புன்னகை.

காதில் விழத்தைப்போல் அவனோ “இனிமே என் எதிரே இப்படி அவனுங்க கூட க்ளோசா பழகாதே!” கண்ணிலோ கோவமும் வலியும்

“நீங்கத்தானே சொன்னீங்க?”

“என்னனு?”

“அதான் அவங்க வாரங்களே நான் எதுக்கு நீங்க போய்ட்டுவாங்கன்னு!”

“அப்போ இனி நான் என்ன சொன்னாலும் கேட்காதே!”

சிரித்துவிட்டவளோ “சரி இப்போ நான் இதை கேட்கணுமா கூடாதா?”

“இதை கேட்கணும் அதை கேட்கக்கூடாது”

“எத கேக்கணும் எத கேக்கக்கூடாது?”

கடுகடுவென “யோசி புரியும்!” என்றவனுக்கு இப்பொழுதும் கோவம் இருக்கத்தான் செய்தது ஆனால் அவனால் அவளிடம் நீண்ட நேரம் கோவமாக இருக்கவும் முடியவில்லை

மறுநாள் சென்னை புறப்படத் திட்டமிருந்ததனால், வீட்டில் அனைவரும் கேட்டிருந்தபடி சாக்லேட், யூகலிப்டஸ் தைலம், டீ ஆகியவற்றை வாங்க ஷாப்பிங் சென்றுவிட்டு இரவு உணவிற்குப் பின், நண்பர்கள் ஒன்றுகூடி நந்தனா நிரஞ்சன் இருவரிடமும் பரிசொன்றைக் கொடுத்து,

“இது எங்க சார்பா உங்க கல்யாணத்துக்கு முன்கூட்டியே நாங்க தர கிபிட்! சேர்ந்து பிரிச்சுப்பாருங்க”

பெண்கள் அனைவரும் தங்கள் அறைக்குச் சென்றுவிட, அன்று விளையாட்டிற்காகச் சித்தார்த் விக்னேஷ் நந்தனாவுடன் லூட்டி அடித்ததையும் வேண்டுமென்றே நெருங்கிப் பழகி நிரஞ்சனை சீண்டியதையும் சொல்லி மன்னிப்பு கேட்க,

அவர்கள் செய்ததற்குத் தண்டனையாகத் தங்கள் திருமணத்திற்கு முன்னதாகவே மண்டபத்திற்கு வந்துவிடவேண்டுமென்று அன்பு கட்டளை விதித்தான்.

தன் அறையில் புறப்படப் பெட்டியை எடுத்துவைத்துக்கொண்டிருந்த நந்தனாவின் மனம் பாரமாக இருக்க, கைப்பேசியில் அவள் மலை உச்சியில் நிரஞ்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்தபடி,

‘உன்கூட இருந்த ஊட்டி ட்ரிப்பை என் வாழ்க்கைல மறக்கவே மாட்டேன்.’

தொண்டை செருமல் சத்தம் கேட்டு அவள் நிமிர, கையில் நண்பர்கள் கொடுத்த பரிசுடன் நின்றிருந்தான் நிரஞ்சன்.

“என்ன பேபி கனவுலகத்துல இருக்கே போல?”

“ம்ம் இல்லையே சும்மா பேக் பண்றேன்”

சிரித்தபடி அவளை நெருங்கியவன் “அப்படியா? பார்த்தா தெரியலையே?” அவன் கேலியாகக் கேட்கவும், அப்பொழுதான் தான் தன் துணிகளைப் பெட்டிக்குள் வைப்பதற்கு பதிலாக, தலையணை போர்வைகளை பெட்டிக்குள் வைத்திருந்ததை!

தலையில் அடித்துக் கொண்டவள் வெட்கப்பட்டுத் திரும்பிக்கொள்ள, நிரஞ்சனோ அவள் தலையைப் பிடித்துச் செல்லமாக ஆட்டி “லூசு!” கொஞ்சலாகச் சொல்லிவிட்டு

“வா என்ன கிபிட் கொடுத்துருக்காங்கனு பாப்போம்” அவன் அழைக்கவும் ஆவலாக இருவரும் பரிசை பிரிக்க அதில் ஒரு காஷ்மீர் ஷால், 2 தலையணை உரைகள், 1 மெத்தை விரிப்பு மற்றும் ஒரு பெரிய போர்வை இருந்தன. கூடவே ஒரு கடிதமும்

“இருவரும் இணை பிரியாமல், உயிருக்கு உயிராக மகிழ்ச்சி பொங்க வாழ வாழ்த்துக்கள்

பின்குறிப்பு : இந்த பரிசை சேர்ந்துதான் பயன்படுத்த வேண்டும் ;-)”

பரிசை பார்த்த நந்தனா “லூசுங்களா” சிரித்தபடி அவற்றை ஆசையாகத் தொட்டுப்பார்க்க

நிரஞ்சனோ “இப்போ இதை மட்டும்தான் யூஸ் பண்ண முடியும்!” என்றபடி அந்த காஷ்மீர் ஷால்வையை எடுத்து விரிக்க

வெளிர் சந்தன நிற ஷால்வை முழுவதும் பல வண்ணங்களில் நேர்த்தியாகக் கையினால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்க அதன் அழகில் மயங்கியவள் கண்கள் விரிய

பால்கனியின் அருகில் சென்றவன், ஷால்வையை தன் மீது போர்த்திக்கொண்டு “வா!” என்று அவளையும் ஷால்வைக்குள் அழைத்தான்

‘இப்போ மட்டும் நீ என் கிட்ட வந்தா, வாழ்க்கையில் என்னைவிட்டு ஒரு அடிகூட உன்னை விலக விடமாட்டேன்!’ மானசீகமாக அவளை எச்சரித்தான்

பெண்ணவளோ புன்னகையுடன் அவன் ஷால்வைக்குள் மனதார இனைந்து கொண்டாள்.

இருவரும் ஒரே ஷால்வையின் கதகதப்பில் இரவை ரசித்தபடி நிற்க.

“பேபி”

“ம்ம்”

“இப்படியே இருந்தா நல்லா இருக்கும்ல?”

“ம்ம்”

அதன் பிறகு அங்கு மௌனம் மட்டுமே. ஒரு வாரத்திற்கு முன்பு கசந்த இரவும் நிலவும் இன்று நிரஞ்சனுக்கு மன நிம்மதியைத் தந்தது.

மறுநாள் சென்னை புறப்பட்டவர்கள் மாலை வீடு சேர்ந்தனர். நந்தனாவை வீட்டில் விட்டுச் சிறுது நேரம் அவள் வீட்டினருடன் பேசிவிட்டு நிரஞ்சன் புறப்பட்டதும் நந்தனா கண்கள் கலங்கிவிட அதை மறைக்க தன் அரைக்கு ஓடிவிட்டாள்.

‘நீ இல்லாம எதிர்காலம்ன்ற ஒண்ணே எனக்கு இருக்காதே. உனக்கு என் மேல காதலே வரலையா? என்ன பண்ணப்போறேன்னே தெரியலையே’

அவன் காதில் விழுந்தது போலக் கைப்பேசியில் அவன் குறுஞ்செய்தி

“உன் விருப்பப் படி ஊட்டி ட்ரிப் இருந்து இருக்கும்னு நம்பறேன். உன் பெட்டில அவங்க கொடுத்த பரிசை வச்சுருக்கேன். உன் வாழ்க்கையில் இணைய போற அந்த அதிர்ஷ்ட சாலியோட அதை பகிர்ந்துக்கோ” அருகில் ஒரு மலர்க் கொத்து ஸ்மைலீ

மெஸேஜ் செய்துவிட்டு விஷம புன்னகையுடன் தன் வீட்டை நோக்கிச் சென்றவன் அறியவில்லை அவன் விளையாட்டைப் புரிந்துகொள்ளாத நந்தனா அக்குறுஞ்செய்தியைப் படித்துவிட்டு விபரீதமாக யோசிக்கப் போகிறாளென்று!

error: Content is protected !!