MIRUTHNAIN KAVITHAI IVAL 12

cover page-2738b122

MIRUTHNAIN KAVITHAI IVAL 12

மிருதனின் கவிதை இவள் 12

வானை தொடும் பல மாடிகள் கொண்ட , ‘ரன்  இந்தியா எனப்படும் வார இதழ் பத்திரிக்கை அலுவலகத்தில் மனேஜரின் அறையில் ,

” என்ன இஷிதா இது ,உங்க கிட்ட இருந்து நான் இன்னும் எதிர்பார்க்கிறேன் மா ,நாளைக்கு மார்னிங் ஆர்ட்டிகிள் ரெடியாகிருக்கணும்  இஷிதா ,இன்னும் பெட்டெர் ஆஹா திங்க் பண்ணுங்க ” என்று மனேஜர் திலீபன் கட்டளையிட  ,

‘வர்றதை தானே எழுத முடியும் ‘ என மனதிற்குள்  சலித்து கொண்ட இஷிதா  , அவரிடம் ,

” ஐ வில் ட்ரை மை பெஸ்ட் சார் ” என்று கூறிவிட்டு நேராக தன் அறைக்குள் வந்து கண்களை மூடி சூழல் நாற்காலியில் அமர்ந்த மறுநொடி,  அவளது அலைபேசி தன் இருப்பிடத்தை காட்ட , அதை எடுத்து பார்த்தவள் ,

” இவன் ஒருத்தன் லவ் பண்ணிட்டு நம்ம உயிரை வாங்குறான். மனேஜர் தொல்லை தான் தாங்கலைன்னா , இவன் தொல்லை அதுக்கும் மேல இருக்கு . ” என்று சலித்தபடி அழைப்பை ஏற்ற இஷிதா, ” சொல்லு டா அண்ணா ” என்றாள் தன் நெற்றியை நீவியபடி .

” இஷு நான் உன் ஆபிஸ்க்கு  தான் வந்துட்டு இருக்கேன் . உள்ள வரவா,  இல்லை உன்  ஆபிஸ்க்கு பக்கத்துல இருக்கிற காஃபி ஷாப்ல மீட் பண்ணுவோமா ” குரலில் சிறு கோபமும் வருத்தமும் தெரிந்தது .

” இங்கையே வா டா , நான் வெட்டியா தான் இருக்கேன் ” என்று தன் அழைப்பை துண்டித்தவள் ,

” இவன் லவ் சக்ஸஸ் ஆகுறதுக்குள்ள நாம நொந்துருவோம்  போல ” என்றவள் இன்டெர்காமில்  ஒரு காஃபியை ஆடர் செய்துவிட்டு   தலைவலி தைலத்தை எடுத்து தன் நெற்றியில் தேய்த்தவள் நாற்காலியில்  சாய்த்தபடி மீண்டும் கண்களை மூடினாள் .

#########################

ரிதுராஜிடம் பேசிவிட்டு ஒருவித பதற்றத்துடன் தன் அறையில் அமர்ந்திருந்த மேகா ,

” என்ன இவர் இப்படி பேசிட்டு போறார் , இதுக்கு தான் என்னை அன்றைக்கு கூப்பிட்டாரா ? இப்பவே இஷிதாகிட்ட சொல்லணும் , அவளே அவங்க அண்ணா கிட்ட பேசிக்கிட்டும் ” என்று வாய்விட்டே கூறியவள் உடனே இஷிதவுக்கு அழைப்பு விடுத்தாள் ,

” இஷிதா உன்கிட்ட பேசணும் டி “அவள் ஹெலோ சொல்லும் முன்பே இவள் ஆரம்பித்திருந்தாள் .

” ம்ம் சொல்லு டி ” தன் கையில்  இருந்த ஆவிபறக்கும்  காஃபியை பருகியபடியே கேட்டாள் .’குரலில் நீயுமா டி ‘ என்கின்ற சலிப்பு நன்றாக தெரிந்தது .அழைப்பு ஸ்பீக்கரில் இருக்க,  எதிரே இருந்த ரிதுராஜின் முகம் , அழைத்தது மேகா என்றதும் பிரகாசமானது .

” உங்க அண்ணா இன்னைக்கு என்ன பண்ணினார் தெரியுமா ?” மேகா கோபத்துடன் வினவினாள் .

” சொன்னாத்தானடி தெரியும் ” கோபத்துடன் கேட்டாள் .

” ஐ லவ் யு சொல்லிட்டாரு டி , அவர்கிட்ட இனிமே இப்படியெல்லாம் பேச வேண்டாம்ன்னு சொல்லிரு, அப்பாக்கு இதெல்லாம் புடிக்காது டி  ” என்றாள் மேகா .

“அவன் உன்கிட்ட தான சொன்னான் , நீயே அவன்கிட்ட சொல்லிரு , அதை விட்டுட்டு  ஸ்கூல் பொண்ணு மாதிரி ,அம்மா அம்மா அவன் அடிச்சிட்டான்னு  கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டு இருக்க , நீ ஒரு டாக்டர் அதை மறந்திராத ,இத கூட உனக்கு சமாளிக்க முடியாதா டி,  போ நீயே அவன்கிட்ட என்ன சொல்லணும்ன்னு நினைக்கிறியோ அதை சொல்லு ” என்று  சூடு எண்ணெயில் போட்ட கடுக்காக பொரிந்த இஷிதா ,  மேகாவிடம் இருந்து எந்த பதிலையும் எதிர்பாராமல் அழைப்பையும் வைத்துவிட்டாள்.

இஷிதா சற்று கோபமாக பேசவும் மேகாக்கு தான் கண்கள் கரித்து கொண்டு வந்தது ,

” பேச தைரியம் இருந்தா,  நான் பேச மாட்டேனா ” என்றவள் ,” திரும்ப வந்தா கோபமாக முடியான்னு சொல்லிரனும் ” என முடிவெடுத்தவள் தன் நோயாளிகளை பரிசோதிக்க ஆரம்பித்தாள் .

###################################################

இஷிதாவின் அறையில்,

” என்ன இஷு இவ இவ்வளவு பேபியா  இருக்கா  ?” ரிதுராஜ் இஷிதாவிடம் ஆச்சரியமாக கேட்டான் .

” ஹா ஹா சொன்னேன்ல , மேகா அப்படி தான் , திடீர்ன்னு பெரிய ஆள் போல தத்துவம் பேசுவா , திடீர்ன்னு குழந்தை மாதிரி பிகேவ் பண்ணுவா ,  பேசிக்கா பயந்த சுபாவம் , கொஞ்சம்  இல்லை நிறையாவே அழுகாச்சி டைப்  ரித்து,  பட் ரொம்ப நல்ல பொண்ணு “என்றாள் இஷிதா.

” ம் நல்ல பொண்ணு தான் , பட் கிட்ட போனாலே ஒருமாதிரியா பார்க்குறா.  ஏய் நீ என் தங்கச்சி தான, கொஞ்சம் எனக்காக பேசுறது “

“டேய் ஓடிரு , வந்துட்டான் பேசணுமாம் , டேய் இதுவரை உன் வாழ்க்கையில  ஏதாவது ஒன்னு நீயா பண்ணிருக்கியா டா ?எல்லாத்துக்கும் உனக்கு யாரவது வேணும் “தமையனை முறைத்தபடி திட்டினாள் .

” ஏய் ஏண்டி இப்படி பேசுற ?”

“உண்மைய தான் சொல்றன் , இவ்வளவு நாள் ஓகே ,ஆனா  இது உன் லைஃப் ஸோ நீ தான் அவளை கன்வின்ஸ் பண்ணனும் ,புரியுதா .  மூஞ்சை இப்படி வச்சிகாத இது ஒன்னு தான் உன்கிட்ட நல்லா இருக்கு ” என்றாள் .

“சும்மா இரு இஷு, நீ வேற என் நிலமை தெரியாம “என வருத்தத்துடன் கூறினான் ரிதுராஜ் .

“டேய்  இங்க என்கூட பேசிட்டு இருக்காம,  என்றான் போய் அவ கிட்ட  மனசை விட்டு பேசு “என்றாள் இஷிதா .

” ம்ம்ம்”என குரலில் சுருதி குறைய கூறியவனுக்கு , மேகாவுக்கு எவ்வாறு தன் காதலை உணர்த்துவது என்பதே பெரிய சவாலாக தான் இருந்தது 

“சரி அந்த ஆளுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவ ” இஷிதா அடுத்த குண்டை தூக்கி அவன் தலை மீதே போட்டாள்.

” இஷு அது  நம்ம அப்பா டி ” ஆற்றாமையுடன் கேட்டான் .

” உனக்கு மட்டும் நான் அப்பா, கன்னுகுட்டி எல்லாம் , நான் தலைமுழுகி நாள் ஆச்சு , சொல்லு எப்படியும்   மேகா அவங்க வீட்ல தான் பேச சொல்லுவா , அவ அப்பா நீ அந்த ஆள கூட்டிட்டு வந்தா தான்  வீட்டுக்குள்ளையே ஏற்றுவாருன்னு நினைக்கிறேன் “

“இல்லை டி அப்பா நான் கேட்டு இதுவரை எதுக்கும்  நோ சொன்னதில்லை,  அதனால மேகா விஷயத்துலயும் நோ சொல்ல மாட்டாருன்னு நினைக்கிறேன் . ஆனாலும் கொஞ்சம் உதறலாவே இருக்கு”

‘அதுசரி , உன் அப்பா தானே ?அவர் தான் உனக்கு வில்லனே’ என முனங்கியவள் ரிதுராஜிடம் ,”  உனக்கு எதுக்கு தான் டா உதறல, அப்பா ஓகே சொன்னா என்ன சொல்லலைன்னா என்ன ? மேகாக்கு ஓகேன்னா நீ அந்த ஆள்ட்ட பேசி மேகா வீட்ல பேச சொல்லு , அவர் முடியாதுன்னு சொன்னா  மேகாவ கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணு , அதை விட்டுட்டு , எப்பப்பாரு அப்பா ஆட்டுகுட்டின்னு சொல்லிட்டு இருக்க ” எரிச்சலுடன் கூறினாள் .

” நீ சொல்லுவ அதெல்லாம் நடக்குற காரியமா “

” நீ ஆம்பளை தானே ,  பொண்ணுங்க பயப்படுறாங்கன்னா ஒரு அர்த்தம் இருக்கு , ஆம்பளை பையன் தைரியமா இருக்க வேண்டாமா ? உண்மையாவே நீ லவ் பண்ணிருந்தா,  நீ தான் கன்வின்ஸ் பண்ணனும்,  அதை விட்டுட்டு எல்லாத்துக்கும் பயந்துட்டு ,

ஆனா ஒன்னு சொல்றேன் டா , நீங்க  ரெண்டு பேரும் ஜாடி கேத்த மூடி தான்” என இஷிதா கோபமாக கூற  அதை கேட்டு அழகாய் சிரித்தவன் ,

“இஷு அப்பா இன்கேஸ் நோ சொன்னா , எனக்காக அப்பா கிட்ட வந்து கொஞ்சம் பேசுவியா “என ரிதுராஜ் தயங்கியபடி கேட்க ,

“அடீங்கு ஓடிரு , நீ லவ் பண்ணு இல்லை சாமியாரா போ , ஆனா இப்போ இடத்தை காலி பண்ணு ” என்று இஷிதா எகிற , தன் தங்கையின் கோபம் அறிந்த ரிதுராஜ் அவளிடம்  சிக்கிவிட கூடாதென்று அங்கிருந்து கிளம்பியிருந்தான் .

என்ன தான் இஷிதா தன் தமையனிடம் காட்டமாக நடந்துகொண்டாலும் , அவன் சென்றதும் ஏனோ அவளுக்கு தமையனை எண்ணி உறுத்துதலாக தான் இருந்தது , எனவே அவன் காதல் வெற்றியடைய மானசீகமாய் கடவுளை வேண்டிக்கொண்டவளுக்கு , அவளது தந்தை ஒத்துக்கொள்வார் என்னும் நம்பிக்கை சுத்தமாக இல்லை .

######################################

” உங்க பேர் என்ன கண்ணா ?” மேகாவின் இனிமையான குரலில் நிமிர்ந்து பார்த்த சிறுவன் ,” நான் ஒன்னும் கண்ணா இல்லை ஐயம் மாதவ் ” என தான் போட்டிருந்த கண்ணாடியை சரி செய்தபடி கூறிவிட்டு மீண்டும் ஸ்மார்ட் ஃபோனில் தான் விட்ட பணியை தொடர , அச்சிறுவனின்  அருகில் இருந்த அவனது அம்மாவும் அப்பாவும் சோகமாக ,

” எப்பவும்  இப்படி  தான் ரியாக்ட் பண்ணிட்டு இருக்கான்  டாக்டர் . கேட்ட கேள்விக்கு பதில் அதைத்  தாண்டி அவனா  பேச மாட்டிக்கிறான் , சில நேரம் அது கூட கிடையாது , ரொம்ப பயமா இருக்கு , அடிக்கடி கோபப்படுறான் ” என கூறினர் . அப்பொழுது தன் கரத்தை  உயர்த்தி அவர்களை கொஞ்சம் நேரம் வெளியே  இருக்கும் படி செய்கை செய்தவள் , அவனது  பெற்றோர்கள் சென்றதும் ,

” ஹாய் மாதவ் ” என பேச்சுக்கொடுத்தாள் .

” யஸ் ” மொபைலில் விளையாடியபடியே  பதில் கூறினான் . மேகாவோ சிறுபுன்னகையுடன்,

” என்ன விளையிடுறீங்க  ?எனக்கும் கொஞ்சம் சொல்லிகுடுங்களேன் ” என்றபடி அவன் அருகில் வந்து அமர்ந்தவள்,  கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் பேசினாள் இல்லை அவனை பேச வைத்தாள் .

ரெண்டு மணிநேரம் கழித்து அவனது பெற்றோர்களை உள்ளே அழைத்தவள் ,” உங்க பையனுக்கு ஆட்டிசம் எல்லாம் இல்லை ,ரொம்ப லோனிலியா இருக்கான் , எல்லாரும் சொல்றதை தான் நானும் சொல்றேன் , தினமும்  அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க அதுவே போதும் , குழந்தை பருவம் ரொம்ப முக்கியம்  , இப்போ அவங்க மனசை பாதிக்கிறது தான் ,நாளைக்கு அவங்க எதிர்காலத்திலையும்  பிரதிபலிக்கும் .   கொஞ்சம் கொஞ்சமா எலெக்ட்ரானிக் கட்ஜெட்ஸ்  எல்லாதையும் அவாய்ட் பண்ணுங்க , தானே சரியாகிடுவான் . இதுக்கு மருந்து , இது தான் ஒ. ன் வீக் பாருங்க உங்களுக்கே சேஞ்சஸ் தெரியும் , ஸோ இப்போதைக்கு டெஸ்ட் வேண்டாம்  ” என்று மேகா அவர்களுக்கு நம்பிக்கை கூற அவளிடம் விடை பெற்றுக்கொண்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பவும் ,

” நீங்க சொன்ன மாதிரி விளையாடினேன்,  நான் லெவல் வின் பண்ணிட்டேன் , பாய் மேகா ” என புன்னகையுடன் மேகாவுடன் விடைப்பெற்றவன்  அவன் தாய் தந்தையரின் கரம் பிடித்து செல்ல , அவானாக பேசியதை எண்ணி மகிழ்ந்தவர்களுக்கு  இப்பொழுது மகனை  சரி செய்விடலாம் என்கின்ற நம்பிக்கை துளிர் விட்டிருக்க , மேகாவுக்கு நன்றி கூறிவிட்டு சென்றனர் .

அப்பொழுது அவள் அருகில் நின்றிருந்த செவிலியரிடம் ,” மாதவ் ரீபோர்ட்ஸை பீடியாட்ரிக் டிபார்ட்மெண்ட்க்கு அனுப்பிருங்க “என கூறினாள்.

” ஓகே மேம் , ஓபி முடிஞ்சிருச்சு நீங்க சாப்பிட போங்க மேம் ” என்று அந்த செவிலிய பெண்மணி கூற ,

” ஓகே அக்கா , நீங்களும்  ரீபோர்ட்ஸ் பாஸ் பண்ணிட்டு லன்ச் போங்க ” என்றவள் , தன் சகதோழிகளுடன்  மதிய உணவிற்காக  ஹாஸ்பிடல் கண்டீனிற்குள்  நுழைந்தாள்.

உணவருந்திவிட்டு தோழிகளிடம் மேகா சகஜமாக சிரித்து பேசிக்கொண்டிருக்க , அப்பொழுது அங்கே ரிதுராஜ் வர , அவனை  அங்கே  கண்டதும் அனைவரும் எழுந்து நிற்க  அவர்களை பார்வையாலே அமர சொன்னவன்    , நேரடியாக  மேகா இருக்கும் டேபிளுக்கு வந்து ,

” மேகா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ” என சொன்னது தான் தாமதம்  ,அவளது தோழிகள் மேகாவை பார்வையாலே கேலி செய்துவிட்டு சென்றுவிட மேகாவுக்கு தான் சங்கடமாகி போனது ,

” என்ன சார் வேணும் ?” கொஞ்சம் கோபமாகவே வினவினாள் .

” பதில் வேணும் “

” அதான் அப்போ பேசாமலே போனேனே , அப்பவே உங்களுக்கு புரிஞ்சிருக்க  வேண்டாமா எனக்கு புடிக்கலைன்னு “மனதிற்குள் அவன் வந்தால் என்ன சொல்ல வேண்டும் என்று எண்ணினாளோ அதை திணறாமல் , பயம் இல்லாமல் சொல்லிவிட்டாள்.

” நான் கொஞ்சம் மக்கு மேகா , புரியற மாதிரி சொல்லுங்க “என்றான் கைகளை குறுக்கே கட்டியபடி , பார்வை அவளை அளந்தது .

” எனக்கு லவ் எல்லாம் ஒத்துவராது சார் “

” ஏன் என்னை புடிக்கலையா ?”

“ஆமா “

“ஏன் “

” ஏன்னா புடிக்கலை ” என்று எழ போனவளை,

” ப்ளீஸ் மேகா ” என கெஞ்சி அமரவைத்தவன் ,

” என்கிட்ட என்ன  புடிக்கலைன்னு சொன்னா நான் மாத்திக்க போறேன் ” என்றான் .

” சார் ப்ளீஸ் நீங்க மாத்திக்கலாம்  வேண்டாம் , நீங்க எப்படி மாறினாலும்  எனக்கு உங்களை புடிக்காது “

” ஏன் “

” என் அப்பாக்கு கிட்ட  யாரையும் லவ் பண்ண மாட்டேன், அவர் சொல்ற பையனை மட்டும் தான் கல்யாணம்  பண்ணிக்குவேன்னு சத்தியம் பண்ணி குடுத்துட்டு தான் சென்னையில  இருந்து டெல்லிக்கே வேலைக்கு வந்திருக்கேன் ,ஸோ ப்ளீஸ் போங்க,  எல்லாரும்  நம்மளை தான் பார்க்குறாங்க “என்றவள் சங்கடத்தில் தலை தாழ்த்தி   அமர்ந்திருக்க ,

” ஒரு நிமிஷம் என் கண்ணை பாருங்க மேகா ப்ளீஸ் ” கெஞ்சி கெஞ்சியே  அவள் மனதை கரைக்க பார்த்தான் .

” ம் பார்த்துட்டேன் சொல்லுங்க ” சலிப்பாக கேட்டாள் .

” உங்க அப்பா சரி சொன்னா என்னை லவ் பண்ணுவீங்களா ?”

” அவர் ஓகே சொன்னா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை சார் “

” ம்ம் சரி அப்போ என்னை லவ் பண்ண ரெடியா இருங்க ” என்றவன்  ஒற்றை கண்ணை அடித்தபடி அங்கிருந்து செல்ல , இப்பொழுது அனைவரின் பார்வையும் அவள் மீது படிய ,’ என்ன ஏது ‘என்று கேட்டு அவளது தோழிகள் அவளை ஒருவழி செய்துவிட்டார்கள் .

” ஒன்னும் இல்லைன்னு எத்தனை தடவை சொல்றது  ”  மேகா புலம்பினாள் ,

“அதெப்படி ஒன்னும் இல்லாம இருக்கும் , MD யே உன்னை வந்து பார்த்திருக்காங்க , சொல்லு என்ன டி விஷயம்? ” என்றாள் ரம்யா ,

” இருந்தா சொல்ல மாட்டேன்னா “

” ரம்யா இவ பொய் சொல்றா,  காலையில இவங்க ரெண்டு பேரும்  ஹாஸ்பிடல் பின்னாடி  உள்ள பார்க்ல மீட் பண்ணிகிட்டாங்கன்னு  நம்ம சோர்ஸ் சொல்லுது ” என்றாள் ப்ரியா

” இப்போ கூட அவர் போகும் பொழுது கண்ணடிச்சாரு டி ” என இன்னொருவள் கோர்த்து விட மேகாவுக்கோ எங்கையாவது சென்று முட்டிக்கொள்ளலாம்  போல இருந்தது . 

இவ்வாறு அனைவரும்  அவளை  படுத்தி எடுக்க , வேறு வழியின்றி  மேகா நடந்ததை அவர்களிடம்  கூறினாள் .

” ஓஹோ ” என அனைவரும் கோரஸ் பாட , மேகாவுக்கோ ரிதுராஜ் மீது ஆத்திரமாய் வந்தது .

இதற்கு மேல் அங்கிருந்தால்  தன் தலை தான் உருளும்  என்று சுதாரித்தவள்,வேலை இருப்பதாக கூறி ,  ‘ சரியான ராட்சச கூட்டம் ,எப்படி பேசுதுங்க ? பாரு ‘ என மென்னகையுடன் தப்பித்தோம் பிழைத்தோம்  என அங்கிருந்து வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தவளின் வேக நடை  , 

அவள் எதிரே கருப்பு நிற  காரின் பேனட்டின் மேலே ஏறி அமர்ந்திருந்த அக்னி தீரனை பார்த்த மறுகணமே     சட்டென்று தடைபட்டு , அவளது மென் பாதங்கள்  தரையில் வேரூன்ற  அசையாமல்  விழிவிரித்து  நின்றாள் .

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!