MIRUTHNAIN KAVITHAI IVAL 20

cover page-41995b06

மிருதனின் கவிதை இவள் 20

திருமணம் நன்றாக முடிந்து , பிடித்தோ பிடிக்காமலோ தீரனுடன்  வாழ்க்கை பயணமும்  துவங்கியாயிற்று.  அனைவரும்  சந்தோஷமாக இருக்கிறார்கள் . ஆனால் மேகா ? அவள் மனம் நிம்மதியாக இல்லையே . நாம்  அப்படி என்ன தவறு செய்தோம்? என்று எண்ணியெண்ணி மருகினாள்.

இனி என்ன நினைத்தாலும் திரும்பவே முடியாத தீரனுடனான இந்த ஒருவழி பாதையில்,   கல்லும் முள்ளுமாய்  இடர்பாடுகள் இருப்பதை கூட தாங்கிக்கொள்ளலாம் , ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டி கிடந்து ,செல்லும் பாதைக்கான  வழியே தெரியலையே ?வாழ்க்கை முழுவதும்  தொடரும் இடர்பாடுகளை கண்ணீருடன்  கடந்துவிடலாம். ஆனால் பாதையே தெரியாமல் , இந்த இருளே இறுதி வரை நீடித்தால்? என்ன செய்வது ? மிகவும் கலங்கினாள் ! தன்னுடைய பக்கத்தில் இருந்து யாரும் யோசிக்க வில்லையே,  வலித்தது !

‘ காலம் கடந்துவிட்டது மேகா, நல்லதோ கெட்டதோ  இனி உன் வாழ்க்கை பயணம் , இவனுடனே ‘ என அவளது மனம் மீண்டும் சொல்ல , வாழ்க்கையை குறித்த அச்சத்தில் இருந்தவள் , கண்களை மூடி ஆழமான மூச்சை வெளியிட  கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது .

“வரு ” காதில் தீரனின் குரல் காதலில் குழைந்தது .

“ம்ம் “அவளிடம் இருந்து சிறு முனங்கல் .

“ப்ச் எதுக்கு இந்த கண்ணீர் ?” மீண்டும் அவளிடம் இருந்து  சிறு முனங்கல் .

” ஐ லவ் டி வரு பேபி “என்ற  குரலை கேட்டதும் ,’ ஆஆ ‘ அரண்டு எழுந்தாள் .  கனவா ! எப்போ தூங்கினேன் ? அருகில் திரும்பி பார்த்தாள்! ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் . கனவுதான் ! ‘ஷப்பா ‘ உதட்டிற்கு மேலும் உதட்டிற்கு  கீழும் துளிர்த்திருந்த வியர்வையை புறங்கையால் துடைத்து கொண்டாள். இதய துடிப்பு இப்பொழுது சமநிலைக்கு வந்தது . 

ஏன்  இந்த மாதிரியெல்லாம் கனவு வருது ? ஹான் உன் புத்தி கெட்டு போச்சு !- தன்னை தானே கடிந்து கொண்ட மேகா,   சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்த்தாள் . நேரம்  விடியலை காட்ட,  சத்தம் போடாமல் எழுந்து கொள்ளலாம் என்று எண்ணியவள் , மெல்ல எழும்ப முயற்சிக்க , அக்னியின் நீண்ட வலது கரம் மேகாவின் இடையை வளைத்து பிடித்து கொண்டது .அதிர்ச்சி தான், ஆனால் சில நொடிகள் கழித்து ஆசுவாசம் அடைந்தவள் , நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் .அவன் நாசியில் இருந்து வெளியான சீரான மூச்சு காற்று அவனது தூக்கத்தை உறுதிப்படுத்தியது .

மெல்ல அவனது பிடியில் இருந்து விடுபட முயன்றாள் .

” தூங்கு ” மேகாவின்  கழுத்தை உரசிய தீரனின் கரகரத்த குரல் , அவளது அசைவுகளுக்கு  தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்தது .  மூச்சு விட யோசித்தபடி கண்களை உருட்டி கொண்டு அசையாமல் கிடந்தவள் மெல்ல,  ” குளிக்கணும்  ” என முணுமுணுத்தாள் . 

” குளிக்கலாம் குளிக்கலாம் தூங்கு ” என்றான் இன்னும் தன் தாடி அடர்ந்த முகத்தை நன்கு அவளது கழுத்து வளைவில் புதைத்தபடி .   அட்டை போல இப்படி ஒட்டிக்கொண்டு கிடந்தால் மூச்சே விட முடியவில்லை , இதில் எங்ஙனம் உறங்குவது ? முழி பிதுங்கியது  மேகாவுக்கு . இது  எல்லாவற்றிற்கும்  மேல் நேற்று அவன் பேசியது , மற்றும் நடந்து கொண்டது,  என  நினைவுகள் அனைத்தும் அவளது சிந்தனையை நிரப்ப   , கண்களில் சட்டென்று கண்ணீர் திரையிட்டது  , உடல் குலுங்கியது .

” ப்ச் அழாம தூங்கு ” அவளை இழுத்து தன் மார்பில் போட்டுகொண்டு இறுக்கமாக பிடித்தபடி  கூறினான்   . தீரனின் உறக்கம் கலையாத கட்டளையான குரல் அவளது சிந்தனையை கலைத்தது .  அவனை பார்த்தாள் .  கண்கள் மூடியிருக்க உறக்கத்தில் தான் இருந்தான் . ‘ உறக்கத்திலும்   தன் அசைவை இவ்வளவு நுட்பமாக கவனிக்கிறானே ‘ அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘ ஆக நம் உறக்கத்தை கூட இவன் தான் தீர்மானிப்பான் ,’ எண்ணும் பொழுதே ஏதோ சிறையில் மாட்டிக்கொண்ட உணர்வு அவளை கஷ்டப்படுத்த, தீரன்  எப்பொழுது விலகி செல்வான் என்பதை எதிர்பார்த்து   அவனது அணைப்புக்குள்ளே  கண்மூடி கிடந்தவள் , அவன் அசந்து உறங்கவும் எழுந்து குளித்துவிட்டு ஓசைப்படாமல் அங்கிருந்து வெளியேறியிருந்தாள்.

கடோத்கஜன் போல கைகளையும்  கால்களையும்  நன்றாக பரப்பியபடி ஆஜானுபாகுவான  தோற்றத்தில்  ,மெல்லிய குறட்டை ஒலியுடன் மல்லார்ந்து படுத்து உறங்கிக்கொண்டிருக்கும்  பொழுதே இன்டெர்க்காம் விடாமல் ஒழிக்க,  கண்களை மூடிய நிலையிலே பாதி உரக்கத்தில்  இடக்கரம்  நீட்டி  எடுத்து ,” ம்ம்ம் , வந்து பேசிக்கிறேன் ” என்ற தீரனின் வலக்கரம்  மனைவியை தேட , அவள் கிடைக்காததும் சட்டென்று எழுந்து அமர்ந்தவன் , அவளை அங்கு காணாததும்  எதையோ இழந்தவன் போல அவன் முகம் வாடியது .

மணியை பார்த்தான்,   சில வினாடிகள் கழிந்தால் மணி பத்தை தொட்டுவிடும் ‘ இவ்வளவு நேரம் தூங்கினோமா ?’ அவனுக்கே ஆச்சரியம் ! நேற்று நடந்த நிகழ்வுகள்  எல்லாம் மங்கலான  காட்சிகளாய்  அவன் மனதில் தோன்றின .  அளவுக்கு மீறி உள்ளே சென்றிருந்த  மதுபானத்தின் வீரியம் , இப்பொழுதும் தொடர்ந்தது. விளைவு!  தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தான் . உடனே இன்டெர்க்காமை தொடர்பு கொண்டவன் ,  பிளாக்  டீயை  தன்  அறைக்கு எடுத்து வருமாறு பணித்துவிட்டு, 

‘ இவ எங்க போனா ?’ சிந்தனை மீண்டும்  மனையாளிடம்  மீள , பின்பு  ஏதோ நியாபகம் வந்தவனாய்  டெரசிற்கு சென்று தோட்டத்தை  பார்த்தான் . அவன் நினைத்தது போலவே அவனது மனையாள் அங்கே தான் செடிகளுக்கு நடுவே நின்றிருந்தாள் .

அன்று போலவே நின்றும் இடை தாண்டி வளர்ந்திருந்த கூந்தல் காற்றில் அசைந்தாட , கழுத்தில் இருந்த தாலியும், நெற்றி வகிட்டில் இருந்த குங்குமமும்  ,அவள் உன் மனைவி என்று கூறி அவன் உரிமையை  எடுத்து சொல்ல ,  அன்றைக்கு விட இன்று மிகவும்  அழகாய் தெரிந்தாள் . தீரனின் இதழ்கள்  மெலிதாக புன்னகைத்து கொள்ள , அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தவன் , கதவை தட்டும் ஓசையில் தன் சுயத்தை அடைந்து  ,   எதையோ சிந்தித்தவனாய் ,

“போதை ஏறினா மனசு கண்டதையும் ரசிச்சு தொலையுது ச்ச ” என  தன் தலையை உலுக்கிக்கொண்டவன்  ,  வாசலில் ட்ரேயுடன்   நின்ற பணிப்பெண்ணை வருமாறு சைகை செய்ய , பரிமாறப்பட்ட பிளாக் டீயை சுட சுட பருகினான் .

 உள்ளே சென்ற கசப்பு சுவை  அவனுக்குள் இருக்கும் கசப்பான நினைவுகளுக்கு தூபம் போட , “இங்க வந்து  ஒளிஞ்சிகிட்டா விட்ருவேனா, ஓடு ஓடு எவ்வளவு ஓடுறன்னு நானும் பார்க்கிறேன் “என்றவனின் முகம் கோபத்தில் சிவந்தது .

~~~~~~~~~~~~~~~~~~

” நல்லா இருக்கேன் மா ” கவலை மறைத்து பொய்யாய் சிரித்தாள் . ஆனால் பார்வை மட்டும்  எதிரே இருந்த மரத்தில், தனித்து இருந்த சிறிய பறவையை வெறித்திருந்தது.

” நிஜமா தானே சொல்ற , மாப்பிள்ளை நல்லா பார்த்துக்கிறார்ல, அங்க அஷோக் தம்பியும்  அவரோட தங்கச்சியும்  தான் இருக்காங்களாம் , அந்த பொண்ணு நல்லா பேசுறாளா உன் கூட ?”

‘ என்ன அஷோக்கோட தங்கச்சியா !’ இதுவே மேகாவுக்கு அவளது தாய் சொல்லி தான் தெரிய , ‘ அப்போ நாம தனியாக இல்லை ‘ இதழில் சிறு நிம்மதி புன்னகை , இந்த புதிய தகவல் மேகாவுக்கு  அதிர்ச்சியெல்லாம்  ஏற்படுத்தவில்லை , அக்னி தன் கணவன் எண்ணும் அதிர்ச்சியை  விட இது ஒன்னும் பெரிய விடயம் இல்லை என அவள் எண்ணி கொண்டாள் போல !

“இன்னும் பார்க்கல மா “

” ம்ம் “

” அவசர அவசரமா புடிச்சு தள்ளிட்டோம்ன்னு  நினைக்கிறியா மா ” இதை கேட்டதும் , கேள்வியை கேட்டது வேணுடுமானால் தாயாக இருக்கலாம் ஆனால் கேள்வி தந்தையுடையது என்பதை புரிந்து கொண்டவள் ,

” அப்பா கிட்ட கூடுமா “என்றாள்.

“ஹான் கொடுக்குறேன் , கிருஷ்ணா ம்ம்ம் பேசணும்ன்னு சொல்றா,  வாங்க ” தவிப்புடன் நின்றிருந்த கணவரிடம் அலைபேசியை கொடுத்தார் .

” மேகா ” தந்தையின் கனத்த குரல் , மேகாவின் கண்களை ஈர மாக்கியது .

” பா ” மேகாவின் குரல் உடைந்தது , கோபாலகிருஷ்ணன்  தன்   கண்களில் ஓரம் துளித்த நீரை துடைத்து கொண்டார் . அவளும் தான் .

” டேப்லெட் போடீங்களா ?”

” ம்ம்ம் போட்டேன் டா , எப்படி இருக்க டா மா ?”

” செமையா இருக்கேன் பா , உங்க எல்லாரையும் தான் கொஞ்சம் மிஸ் பண்றேன் மத்தபடி ரொம்ப நல்லா இருக்கேன்” அழகாய் சிரித்தாள், அலைபேசியில் உள்ளத்தின் வலி தெரியவா போகிறது .

” மாப்பிளை எப்படி மா இருக்காரு ?” அவர் கேட்க இவளது முகம் சுருங்கியது .

” நல்லா இருக்காரு பா , மயூரி விக்கி எப்படி இருக்காங்க ?”

” இதோ அவங்க கிட்ட கொடுக்குறேன் “

” அக்கா ப்ரோ எப்படி இருக்காரு ? மாமா வீடு எப்படி இருக்கு ரொம்ப பெருசா ” தன் அக்காவின் திருமணம் அக்னியுடன்  ஆனதில் விக்ரமுக்கு ஏக சந்தோசம்  .

” ம்ம்ம் ஆமா டா “

“சரி ப்ரோ எங்க ?” இப்படியே அவர்களின் சம்பாஷணை தொடர்ந்து கொண்டிருக்க ,

அதேநேரம்,” யாரு இவ புதுசா இருக்கா ?” தன் அறையின் ஜன்னல் அருகே நின்று மேகாவை நோட்டமிட்டபடி ,நேத்ரா பணிப்பெண்ணிடம்  விசாரித்தாள் .

” அவங்க பெரிய  மேடம் , அக்னி  சாரோட மனைவி  ” பணிவாக கூறினாள் .

” வாட் ? ” அதிர்ச்சியில் நேத்ராவின் விழிகள் விரிந்து கொண்டது.

” ஆமா மேம் , நேத்து தான் கல்யாணம்  ஆச்சு ”  பணிப்பெண் சொன்ன மறுகணம் , அவர்  கொண்டுவந்த காலை உணவு அடங்கிய பாத்திரம் தரையில் கிடக்க , பணிபெண்ணின் கரங்கள் நடுங்கியது .

” என்ன பார்த்துட்டு இருக்க ?வெளிய போ ” ஆவேசத்தில் நேத்ரா கத்த ,அப்பெண்  பயத்தில் வெளியேறிவிட்டாள்.

” அக்னி  சாரோட மனைவி ” என பற்களை கடித்தவள் , “என் வாழ்க்கைய நரகம் ஆகிட்டு ,நீ சந்தோஷமா இருக்க போறியா ? யு காண்ட் தீரன்,  நெவெர் எவர் “‘உன்னால் ஒருபோதும் முடியாது தீரன் ‘ என்ற நேத்ராவின் குரலில் நிறைந்திருந்த வன்மம் ! வீச போகும் புயலுக்கான ஆரம்பம் !

~~~~~~~~~~~~~

தன் அறையில் பாடி  ஸ்பிரேவை பறக்க விட்டபடி ட்ரெஸிங் டேபிளுக்கு முன்பு நின்றிருந்த தீரனிடம்  ,

” மீட்டிங்கை ஒன் ஹவர் டிலே பண்ணுவோமா சார்  ” சிறு தயக்கத்துடன் கூறினான் ,அவனது பெர்சனல் அசிஸ்டன்ட் ரிஷி .

” ஏன்? “

” ஏற்கனவே லேட் ஆகிடுச்சு “

” ஏன் ?அஷோக் என்ன பண்ணிட்டு இருக்கான் ?அவனை லீட் பண்ண சொல்லு “

” அது ” ரிஷி சொல்ல முடியாமல் இழுக்க ,

” அஷோக் எங்க ?” என்றவன், ” வீட்ல தான் இருப்பான்னு நினைக்கிறன் , அஷோக் ” தீரனின்  குரலை கேட்டு படியேறி ஓடிவந்த வேலைக்காரன் ,

“சார்  வீட்ல இல்லை ” என்றார் .

” ம்ம் ஆபிஸ் போயிருப்பானா இருக்கும் ” என்றவன் அலைபேசி எடுக்கவும் ,

” சார் , அஷோக் சார் ஆபிஸ்ல தான் இருக்காரு ” மெதுவாக இடையிட்டான் ரிஷி  .

” ஏன் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சொல்லேன் ” தீரனின் முகம் இறுகியது .

” அவனை லீட் பண்ண சொல்லு ” என்றவன் விட்ட பணியை மீண்டும் தொடர ,

” சார் “ரிஷி தான் அழைத்தான் .

” வாட் ” தீரன் பற்களை கடிக்க ,

” அஷோக் சார் மாட்டேன்னு சொல்லிட்டாரு , அப்புறம் நேத்து நைட்ல இருந்து சார் ஆபிஸ்ல தான் இருக்காரு , வாட்ச்மென் சொன்னாரு ,நான் ஆபிஸ்ல இருந்து தான்  வரேன்  ” என தனக்கு தெரிந்த தகவலையும் கூறினான் .

” அதான் சொல்லிட்டியே இன்னும் என்ன பண்ற ?” சீறினான் .

” மீட்டிங் டிலே பண்ணனுமா சார்”

ரிஷியை ஒருகணம் பார்த்த  தீரன்  “கான்செல் பண்ணு ” என்றான் அழுத்தமாக .

” ஓகே சார் ” ரிஷி வெளியேறினான் .

‘ அவளுக்காக இவன் , என்கிட்ட முறைக்கிறான்  இடியட் . எல்லாம் அவளை சொல்லணும், என் வீட்ல நான் நிம்மதி இல்லாம இருக்கேன், இவ மட்டும் நிம்மதியா இருக்கா ‘ என முனங்கிய தீரன் , வேலைக்காரனிடம் ,

” மேகா கார்டென்ல இருப்பா ,இங்க  வர சொல்லு ” என்றான் .

!!!!!!!!!!!!!!!!

‘ எதுக்காக வர சொல்லிருப்பாரு ?’ என்று அதிர்ச்சியானவளுக்கு பயத்தில் கையும் காலும் வேலை செய்ய மறுக்க , நீண்ட பெருமூச்சை வெளியிட்டவள்  , தன்னை நிலைப்படுத்திக்கொண்டு மெதுவாக அவன் அறையை நோக்கி நடந்தாள்.

ஒருவித பதற்றத்தில்  எதையோ யோசித்தபடி எவ்வளவு நேரம் நின்றாளோ ! தீரனின் ,

” உள்ள வா ”  என்ற குரலில் தன்    சுயத்திற்கு வந்த மேகா , திருதிருவென விழிக்க , 

தன் சட்டையின் பொத்தானை போட்ட படியே மேகாவை தன் பார்வையாலே உள்ளே வருமாறு செய்கை செய்தான் .

வழமை போல கருப்பு நிற சட்டை மற்றும் பேண்டில் தயாராகிருந்தவன், கழுத்தை சுற்றி டை முடிச்சிடாமல் தொங்கி  கொண்டிருக்க , மணிக்கட்டில் கை கடிகாரத்தை  அணிந்தபடி கண்ணாடியுடு  தயங்கியபடி  கண்களை உருட்டி கொண்டிருக்கும்  மேகாவை பார்த்தான் .

அவளோ முடிந்தளவு அவனை பார்ப்பதை தவிர்த்தவள் , அவனை தவிர மொத்த அறையையும்  பார்த்து கொண்டிருக்க ,

சட்டையின் பொத்தானை முழுவதும் போட்டபடி  அவளிடம் வந்தவன்  , தன் வலது கை மணிக்கட்டை மேகா  முன்பு காட்ட , அவளோ அவனை புரியாத பார்வை பார்த்தாள் .

அவனோ மணிக்கட்டின்  பக்கம் உள்ள பொத்தானை ஒரு கணம் பார்த்துவிட்டு   அவளை நோக்கி கண்களால் செய்கை செய்ய , அவன் என்ன சொல்கிறான் என்பதை புரிந்து கொண்ட மேகாவுக்கு  மிகவும் தயக்கமாக இருக்க , தயக்கத்தில் அவளது கால்கள் அனிச்சையாக பின்னால் செல்ல , எரிச்சல் அடைந்தவன் ,

” நான் உன் புருஷன் தானே ?இல்லை அதுல எதுவும் சந்தேகம் இருக்கா ?” என கண்களாலே இருவருக்கும் இருக்கும் இடைவெளியை  அளந்தபடி விஷம் போல வார்த்தைகளை கொட்ட .

உதட்டை கடித்து பொங்கி வரும் கேவலை அடக்கிக்கொண்டவள் ,தன்னை அவன் அருகில் வருமாறு  அழைக்கிறான் என்பதை  உணர்ந்து கொண்டு , போகாவிட்டால் அதற்கும் ஏதாவது சொல்லுவான் என்று பயந்த மேகா , வேகமாக அவன் அருகே சென்றாள் .

இதோ அவன் அருகில் வந்துவிட்டாள்.

கணவன் தான், உரிமையானவன் தான் , இருந்தாலும் அவனிடம் மனம் ஒத்து , நெருங்கி உறவாடும் மனநிலைக்கு , இன்னும் வராதவளுக்கு அவன் காட்டும் நெருக்கம் தயக்கத்தையே  கொடுக்க , கைகளை பிசைந்தபடி மேகா  அப்படியே நின்றாள் .

தயங்குகிறாள் ! தன்னிடம் நெருங்கவே தயங்குகிறாள் ! என்பதை  அவள் உடல் மொழியிலே கண்ட தீரன் ,   ‘ என்கிட்ட என்ன தயக்கம் ?’ என்று எண்ணியவன் ,தன் தாடை இறுக , போட்டிருந்த  சட்டை பொத்தான்களை தன் வலது கை விரல்களால்  , மேகா பார்க்க அவளது விழிகளின் மாற்றத்தை பார்த்து கொண்டே  ஒவ்வொன்றாக  கழட்டினான் .

அவன் முகம் கடுகடுவென இருக்க , அதற்கான அர்த்தம் புரிந்தவளுக்கு ‘ஐயோ’ என்றானது !

விபரீதமாக  இவன் ஏதும் செய்வதற்குள் , உடனே வேகமாக அவனது வலது மணிக்கட்டின் பொத்தானை மாட்டுவதற்காக அவள் நெருங்கவும் , சட்டையை கழற்றி அவளிடம் நீட்டியவன்,  கரங்களை தன் வெற்று மார்புக்கு குறுக்கே கட்டியபடி நிற்க ,  அவன் நிற்கும் கோலம் கண்டு அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது .

இப்பொழுது மேகாவையும்  , அவளது கரத்தில் இருக்கும் தன் சட்டையையும் தீரன் பார்த்தான் .  அவளே சட்டையை அவனுக்கு போட்டுவிட வேண்டும் என்றது அவனது பார்வை . மேகாவின் கண்கள் கலங்கிவிட்டது .

அவள் தயங்க தயங்க , அவனது முகம் விகாரமாய் மாறுவதை கண்டவள் , இயலாமையுடன் அவனை பார்க்க ,அவனது விழிகள் ‘செய்’ என கட்டளையிட , மெதுவாக  தன் கரம் படாமல் அவனுக்கு சட்டையை அணிவித்தவள் , சட்டை பொத்தானை போட துவங்கினாள் .

குளம் கட்டிய கண்களில் இருந்து கண்ணீர் விழாவா என்பதை போல தயாராக இருக்க , இதுவரை தன் நகம் கூட அவன் மீது படாது பார்த்து கொண்டவள் , இப்பொழுது பொத்தானை போடுவதற்காக  அவனது மார்பு பகுதியை நெருங்க வேண்டியிருக்கவும்  தான் மிகவும்  தயங்கினாள் .

தோள்கள் அகன்றிருந்ததால் எளிதாக  போட முடியவில்லை , இன்னும் கொஞ்சம் நெருங்கினால் தான் போட முடியும்  என்கிற நிலையில் ,அவளது தளிர் விரல்கள் மெல்ல நடுங்க ,

” இன்னும் கிட்ட வரலாம் , திடீர் புருஷனாலும் புருஷன் புருஷன் தானே ” நக்கலாக கூறினான் .

கண்ணீர் மணிகள் உருண்டோட  , சட்டென்று குனிந்து கொண்டவள் கொஞ்சம் இழுத்து விட்டு பொத்தானை போட்டு விட்டாள் .

அவளது நாடியை தன் ஒற்றை விரலால் நிமிர்த்திய  தீரன்  ,

” இந்த கண்ணீருக்கு அவன் தான் காரணம் இல்ல,இன்னும் அவன் உன்னை பாதிக்கிறான் ” அவளது நாடியை  வலிக்க பிடித்து தன் பல்கலை கடித்தான் , வலி தாங்காது அவள் முகத்தை சுருக்க ,

” அவ்வளவு அருவருப்பு ! என் கிட்ட வந்தா  , நான் தொட்டா ” தகாத  வார்த்தைகள் தாறுமாறாய்  வந்து விழுந்தது .

அவமான உணர்வு மேலிட , அழுகையை உதட்டை கடித்து கட்டுப்படுத்தியவள் ,”அழாத மேகா” என தனக்குள்ளே  முணுமுணுத்துக்கொண்டாள் .  அழுதால்,  அதற்கும் திட்டுவானே! ஆனால் அவனோ ,

” ஏய் ஏய் இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம்  ” என அதற்கும் காட்டு கத்து கத்தியவன் , முடிந்தளவு மேகாவை காயப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றான் .

-தொடரும் 

நாளை

 தன் முரட்டு விரல்களால் அவளது வதனத்தில் மென்மையாக  கோலம் போட்டபடி  வளம் வந்தவன் .

அவளது முகத்தில் பூத்திருந்த  வியர்வை துளிகள்  கண்டு கொண்டு ,

” ஏன் இவ்வளவு பயம் ” புன்னகையுடன்  வினவினான் . அவன் அன்பாக தான் கேட்டான் . இவளுக்கு தான் உள்ளுக்குள் ஒரு வித பயம் இன்னும் அதிகரித்து , உடல் விறைத்தது .

முகத்தில் விளையாடிக்கொண்டிருந்த  முடி கற்றையை  எடுத்து காதோரமாக  சொருகியவன் , அவளது கன்னத்தில்  முத்தமிட்டான் .

அவளது மென்மையான  கன்னத்தில் அவனது தாடியும் மீசையும் ஏற்படுத்திய   தீண்டல்களிலும் அவன் கொடுத்த காதல் அவஸ்தைகளிலும் அவளது பெண்மை கரைந்து கொண்டிருக்க , வழக்கம் போல அவனது அருகாமையில்  , அவனது செயல்களை எதிர்க்க முடியாமல் செயலற்று  போகும்  தன் இயலாமையை  எண்ணி வருந்தியவளாய்  தனது இதழ்களை அழுந்த  கடித்து கொண்டாள்.

” நோ பேபி , இது என்னுடைய வேலை ” என்றவன்   இதழ்களை மெல்ல அவளது பற்களின் பிடியில் இருந்து விடுவித்தவன், அதை மென்மையாக  வருடி முத்தப்போருக்கு  ஒத்திகை பார்த்தான் .

————————————–

” போச்சா ”  கண்கள் அனலாய் கொதித்தது .

” இல்லை ” என்றவளுக்கு அழுகையாக வர , கண்களை மூடி திறந்தவனுக்கோ அதை பார்க்க பார்க்க அவ்வளவு கோபம் வந்தது . உடனே அவளது வலது கரத்தை பிடித்தவன் மணிக்கட்டு பகுதியை  மேல் தோல் பிய்ந்துவிடும் அளவிற்கு வேகமாக அழுத்தி தேய்த்தான். மேகவோ வலியில் துடித்துவிட்டாள் .