MIRUTHNAIN KAVITHAI IVAL 33

cover page-1780cc58

MIRUTHNAIN KAVITHAI IVAL 33

மிருதனின் கவிதை இவள் 33

“எல்லாமே ஓகே வா இருக்குல்ல, வேற எதுவும் நீட்ஸ் இருக்கா ?” காலையில் தனக்கு இருக்கும்  ஓபியை முடித்துவிட்டு முகாம் நடக்கும்  இடத்திற்கு  பார்வையிட வந்திருந்த மேகா, தன் தோழியும் சக ஊழியருமான  திவ்யாவிடம்  இவ்வாறு கேட்டுக்கொண்டிருந்தாள் . எப்பொழுதும் ஒரு வித சோர்வுடன் இருக்கும் அவளது முகம் இன்று மிகவும் பிரகாசமாக இருக்க ,

” ஷைனிங்  பேப்ஸ் ” என்ற திவ்யாவிடம் வெட்க புன்னகையை உதிர்த்த மேகாவை, அவளது தோழி  சீண்டி  கொண்டிருக்க , மேகாவின் மனநிலையில் அப்படி ஒரு மாற்றம் அவளது சிந்தை முழுவம் தீரன் தான் நிறைந்திருந்தான்.

நிஜத்தில் ,அனலை கக்கும் விழிகளுடன் எப்பொழுதும் இவளை அதட்டிக்கொண்டே இருக்கும்  தீரனின்   முகம்,  மேகாவின் கனவில்  மட்டும் இவளுடன்  மணிக்கணக்காக உரையாடும் ,அப்பொழுது   அவன் குரல் அநியாயத்திற்கு காதல் பேசும் , அவன் இதழ் புன்னகைக்கும் , இவளை கொஞ்சி தீர்க்கும் , மன்னிப்பு கேட்கும் , தன் காதலை சொல்லும் . 

அந்த நேரத்தில் இடை இடையே திடுக்கிட்டு முழிப்பவளுக்கு  அவ்வளவு ஆச்சரியமாக  இருக்கும் , ஆரம்பத்தில் கண்டதையும்  யோசிக்காதே என  தன்னையே கடிந்து கொண்டு உறங்கிவிடுபவள் , பிறகு  அந்த கனவை கண்டு திடுக்கிடாமல் அதற்கு  பழகி கொண்டு, ஒருகட்டத்தில்  அதற்காக எதிர்பார்க்க துவங்கிருந்தாள்.

அப்பொழுது இத்தனை நாளாக நீ கனவென்று எண்ணியிருந்தது கனவல்ல , அது உன் கணவனின் இன்னொரு ரகசிய அவதாரம்  என்று நேற்று இரவு தான் அவள் அறிந்துகொள்ள , அவளுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி . இவள் உறங்குவதாக நினைத்து அவளவன் அவள் காதில் காதல் பேச , அவனிடம் உறங்குவதை போலவே நடித்தவள் , அவன் வாயால் மொழிந்த, அவளுக்காக அவன் கொண்ட காதலை மனம் மகிழ கேட்டு தெரிந்து கொண்டு , வெகு நாட்கள் கழித்து அவனது அரவணைப்பிலே கண் மூடி உறங்கினாள்.
ஆனால் மறுநாள் காலை விழித்த பொழுது  வழக்கம் போல அவளது கணவன் கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடர  , மேகாவுக்கு தான் முகம் சுருங்கியது .

இருந்தும்   முந்தின நாள் இரவு அவன் பேசிய காதல் மொழிகளை எண்ணிப்பார்த்தவளுக்குள் அப்படியொரு  மகிழ்ச்சி ,இதுவரை அவன் கொடுத்த இன்னல்கள் அனைத்தையும் துச்சமாக தட்டிவிட்டவள்  , அவன் இதுவரை காட்டிய சின்ன சின்ன நேசங்கள் அனைத்தையும் தன் இதயத்தில் நிரப்பிக்கொண்டாள் .

பின்பு அதே முகமலர்ச்சியுடன்  மருத்துவமனை சென்றவள் உற்சாகமாக  தன் அணைத்து பணிகளையும் முடித்துவிட்டு இங்கே  வந்துவிட்டாள்.

” வரமாட்டேன்னு சொன்ன வந்துட்ட “

” வரவேண்டாம்ன்னு தான் இருந்தேன் அங்க வேலை முடிஞ்சிதா  அதான் வந்துட்டேன் ” ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே புன்னகையோடு  கூறினாள் .

” சேர்மேன் மேடம் சரியில்லையே ” அதற்கும் புன்னகை மட்டும் தான் பதிலாக வந்தது .

அப்பொழுது  அந்த விடுதியின் உள்ளே இருந்து குழந்தை ஒன்று  அழும் சத்தம்  வெளியில் டென்ட் அமைத்து  மருத்துவம் பார்த்து கொண்டிருக்கும் இவர்களுக்கும் கேட்க,  திவ்யாவை ஒருகணம் பார்த்த மேகா ,

” என்னன்னு பார்த்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு ,  உள்ளே செல்லும் பொழுதே குழந்தையின் அழுகையை தாண்டி , ஒரு குரல்

“கனவுகள் தேய்ந்ததென்று

கலங்கிட கூடாதென்று

தினம் தினம் இரவு வந்து

தூங்க சொல்லியதே

எனகென உன்னை தந்து….”

மேகாவின் செவியை தழுவி செல்ல  , யோசனையுடன் உள்ளே சென்றவள் , தனது அகன்ற தோளில் சிறு சிறு காயங்களுடன் விடாமல் அழுது கொண்டிருந்த பிஞ்சு குழந்தையை போட்டு கொண்டு   , குழந்தையின் முதுகை மென்மையாக தட்டி கொடுத்த படி

“உனக்கு இரு கண்ணை தந்து

அதன் வழி எனது கனா காணசெல்லியதே

நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்

உன் மதி மேதை மேல் மடங்கிக்கொள்கின்றேன்” என பாடி கொண்டிருந்த  தீரனை கண்டு   அதிர்ச்சியில் விழிவிரித்து நின்றாள் .

ஏற்கனவே அந்த இடம் அமைதியாக இருந்ததால் ! தீரனின் வசீகரம் நிறைந்த   இனிமையான குரல் மட்டும் அங்கே ஒலிக்க ஆரம்பிக்க , அங்கு இருந்த அனைவரின்  கவனமும்  அவன் மீதே இருக்கே , அவனோ பாடிக்கொண்டே குழந்தைக்கு தட்டி கொடுத்து ஆறுதல் படுத்திக்க கொண்டு  இருந்தான் . தீரனின் அரவணைப்பில்  அந்த சிசு பாதுகாப்பை உணர்ந்ததோ ! அது மெல்ல அழுகையை மறந்து உறங்க ஆரம்பித்தது .

குழந்தை உறங்கியதும் அதன் தலையை மெதுவாக கோதிய அஷோக்  நிமிர்ந்து மேகாவை பார்க்க ,மேகா மட்டும் இன்னும் அதே அதிர்ந்த நிலையிலே நின்றிருந்தாள் .

‘ இந்த குரலுக்கு இத்தனை இனிமையா ! இந்த கரத்திற்குள் இத்தனை மென்மை  !’ முகத்தில் ஆச்சரியம் குறையாமல் தீரனையே பார்க்க , இப்பொழுது தீரனும் பார்த்தான் .
அவனுக்கும் மேகாவை இங்கே பார்த்ததில் சிறு அதிர்ச்சி  தான், இங்கே வந்த பிறகு தான் மெடிக்கல் கேம்ப் நடக்கும் விடயம் தீரனுக்கு  தெரியும் .அங்கே வந்த வெவ்வேறு மருத்துமவமனையில் தங்களின் மருத்துமனையும்  இருந்ததால்  அவன் கண்கள் ஒரு கணம் மேகாவை தேட , அவள் இல்லையென்றதும் அவள் வரவில்லை போல என நினைத்து கொண்டவனுக்கு , இப்பொழுது மேகாவை கண்டது இன்ப அதிர்ச்சி தான் . ஆனாலும் அவன் வெளிகாட்டிக்கொள்ளவில்லை .

“மேகா வந்து பேபிக்கு என்னனு பாரேன் ” என்ற அஷோக்கின் குரலில் தன்னிலை அடைந்து அவர்களிடம் வந்த மேகா  தீரனை பார்க்க , அவன் குழந்தையை மெதுவாக அவளது கரத்தில் கொடுக்க இருவரின் பார்வையும் நொடிபொழுது உரசிக்கொண்டது .

அவளது பார்வையில் தெரிந்த மாற்றம் தீரனின் கருத்தில் பதிய , யோசனையுடன் மனைவியை  பார்த்தவன்  அங்கிருந்தவர்களுடன்  பேச ஆரம்பித்தான் .

” யாரோ பெத்து  கமாய் பக்கம் வீசிட்டு போய்ட்டாங்க சார் , அந்த வழியாக  நாங்க வேலைக்கு போகும் பொழுது எறும்பு கடிச்சு குழந்தை அழுத சத்தம் கேட்டு தான் நாங்க வந்து பார்த்தோம் , குழந்தையை  தூக்கியாந்து  உங்க கிட்ட ஒப்படைச்சு இருக்கோம் ” என்று தலைப்பாகை  அணிந்திருந்த  அந்த ஊர் காரர்  தீரனிடம் சொல்ல ,

“சரி நீங்க கிளம்புங்க ” என்றவன் , அந்த காப்பகத்தின் நிர்வாகி  சாரதாவை பார்க்க அவரோ,

” சார் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கணும்.   யாரும் தேடி வரலைன்னா ப்ரோசீஜர்ஸ் படி  நாமளே வளர்த்துக்கலாம்   ,இது யூஷுவல்  தான் ” என்றார் .

” சரி அப்போ அப்படியே பண்ணிருங்க ” என்றான் . இதை கேட்டுக்கொண்டிருந்த மேகாவின் கண்கள் கூட கரித்து கொண்டு வந்தது . ‘ இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே ‘ என மிகவும் வருந்தினாள் .

” பேபி எப்படி இருக்கு மேகா ” என அஷோக் கேட்க , கலங்கிய கண்களை துடைத்து கொண்டவள் ,

” சின்ன சின்ன சிராய்ப்பு ,அப்புறம் எறும்பு கடிச்சதுனால தான் உடம்புல காயம்  வேற எதுவும் இல்லை சீக்கிரம் சரியாகிரும் ” என்றவள் குழந்தையை  தொட்டிலில் மெல்ல கிடத்தி , தீரனை பார்த்தபடி கூறினாள் .

“சரி மா ” என்றவன் , சாரதாவை பார்த்து ,
” இவங்க தான் தீரனோட வைஃப் ” என மேகாவை அறிமுகப்படுத்தி  வைக்க , அவர்கள் மரியாதையுடன்  மேகாவை வரவேற்க  ,மேகா புன்னகையுடன்  ஏற்றுக்கொண்டாள் .

அதன் பிறகு தீரன் சாரதாவுடன் ஒரு சில கணக்கு வழக்குகளை பற்றி பேசி கொண்டிருக்க , அக்னியின்  இந்த பரிமாணம்  மேகாவுக்கு  மிக பெரிய வியப்பை  கொடுத்தது . இன்று தீரன் இவளது கண்ணுக்கு மிகவும் வித்யாசமாக தெரிந்தான் . மேகா தீரனையே    பார்த்து கொண்டிருப்பதை   கண்ட மித்ரன்  புன்னகையுடன்   அவளிடம் வந்து ,

” என் ப்ரண்டை கொஞ்சம் விட்டுவை டா இப்படி பார்க்குற ” என கேலியாக கூற ,இப்படி அகப்பட்டுக்கொண்டோமே என பதறிய மேகாவை  பார்த்து சிரித்தவன் ,மீண்டும்

” அங்க தானே இருக்கான். ஏன் மறைஞ்சு மறைஞ்சு பார்த்துட்டு இருக்க, போ போய் பேசு ” என அவளிடம் வம்பிழுத்தான் .

” ஐயோ வேண்டாம் பயமா இருக்கு ” முகம் சிவக்க  பார்வையை  வேறுபக்கம் திருப்பி கொண்டாள் .

”  எதுக்கு பயம் ?ஹீ இஸ் யுவர் ஹஸ்பண்ட் , உனக்கு இல்லாத உரிமையா ?விடு நான் கூப்பிடுறேன் “என்ற அஷோக்கை கெஞ்சலாக பார்த்தவள் ,” ப்ளீஸ் அண்ணா ஒருமாதிரி இருக்கு ” என்று கூற ,

” சரி சரி ஹெல்ப் பண்ணலாமேன்னு  நினைச்சேன், வேண்டாம் நீயே கரெக்ட் பண்ணிக்குவன்னா ஓகே ” என்று கேலி செய்த  ,அஷோக்கிடம் , மேகா ,

” தீரன் பாடுவாரா? ” என ஆச்சரியமாக கேட்டாள்.

அவள் கேட்ட விதத்தில் வாய்விட்டு சிரித்த அஷோக் ,

” ம்ம் நல்லா பாடுவான் , அதை விட இன்ஸ்ட்ருமென்ட்ஸ்  எல்லாம் வாசிப்பான் . அவன் அப்பா ஒரு ம்யூசிக் டைரக்டர்  சோ இயற்கையாவே  அவனுக்கு மியூசிக்ல  அறிவு உண்டு. என்ன அவனுக்கா தோணுனா தான் பாடுவான் , எப்போவாது பியானோ  வாசிப்பான் அது  அவனுக்கு ரொம்ப புடிக்கும் ” என்றான் .

” இது உங்களோட காப்பகமா ?” சுற்றி பார்வையிட்டபடி வினவினாள் .

“ம்ம்ம் முன்னாடி தீரனோட அப்பா நடத்திட்டு இருந்தாங்க இப்போ இவன் நடத்துறான் ” என்றவன் “வா அப்படியே  நடந்துட்டே பேசலாம்” என்று மேகாவுடன்  நடைபயின்றவன் , அங்கு வேலை பார்ப்பவர்களையெல்லாம்  அவளுக்கு    அறிமுகப்படுத்தி வைக்க புன்னகையுடனே  ,நடந்து வந்தவள், இடைஇடையே   கணவனையும்  தேடினாள்.

” அப்புறம் மேடம் இங்க என்ன பண்றீங்க ?மார்னிங் நீ இங்க இல்லையே இப்போ வந்திருக்க  “புன்னகையுடன்  அஷோக் வினவினான் .

”  அதுவா முதல்ல   நான் வர்றதா  பிளான் இல்லை . அப்புறம் அங்க வொர்க் முடிஞ்சதும் சரி போகலாமேன்னு திடீர்ன்னு தான் டிசைட் பண்ணி வந்தேன் அண்ணா ” என்றாள் .

” இந்த ப்ரீ மெடிக்கல் சர்வீஸ் ஐடியா உன்னுடையதுன்னு நான் கேள்வி பட்டேன் “

” ஆமா நான் ஒரு மீட்டிங்கில சொன்னேன் எல்லாருக்கும் புடிச்சிது “

” செம மேகா  உன் டெசிஷன்ஸ்,   உன் ஐடியாஸ் எல்லாமே ரொம்ப நல்லா   இருக்கு . ” மனதார பாராட்டினான் . பதிலுக்கு புன்னகைத்துக்கொண்டாள்  .

என்ன தான் மேகா அஷோக்குடன் பேசிக்கொண்டிருந்தாலும்   அவளது  விழிகள் கணவன் மீது தான் நிலைத்திருந்தது  . அவன் போகும் இடமெல்லாம்  அவளது பார்வை பின்தொடர்ந்தது. அவனது ஒவ்வொரு செய்கையையும்  ரசித்தாள் . தீரன் இன்று புது மணிந்தனாக அவளது கண்களுக்கு தெரிந்தான் . முக்கியமாக  அங்குள்ள குழந்தைகளுடன்  அவன் காட்டிய  இணக்கம்  மேகாவை மிகவும் கவர்ந்தது . 

ஒரு குழந்தை அவன் மடி மீது ஏறி அமர்ந்து  , அவனது தாடையை பிடித்து ஏதா கேட்கிறது  , இவன் ஏதோ சொல்லி , அக்குழந்தைக்கு  முத்தமிட்டு   அட்டகாசமாக  சிரிக்கிறான் ! மேகாவுக்கு மயக்கம்  வரவில்லை .இந்த ஒருநாளில் மட்டும் தனக்கு எத்தனை அதிர்ச்சி தான் காத்து இருக்கிறது  என்பது  போல விழிவிரித்து  தீரனை பார்த்துக்கொண்டிருந்தாள் .அவனது ஒவ்வொரு அசைவையும்  நுணுக்கமாக  ரசித்து கொண்டிருந்தாள் .

 குழந்தைகளுடன்  விளையாடுகிறான் , அவர்கள் செய்யும் சீண்டல்களை ரசித்து சிரிக்கிறான்  ஆனால்
ஏதோ ஒன்று அவளை வெகுவாய் உறுத்தியது ! அந்த சிரிப்பில்  , அந்த கண்களில்  , அவன் முகத்தில் உயிர்ப்பில்லையே  ! அந்த புன்னகையில் மகிழ்ச்சி இல்லையே ஏன் ? இன்னும் நுணுக்கமாக பார்த்தாள் . குழந்தைகள்  அனைவரும் பந்தை காலால் தட்டி விளையாடி கொண்டிருக்கிறார்கள் , கையை காட்டி ‘ அக்னி அங்கிள் வாங்க ‘ ஒரு சிறுவன் அழைக்கிறான் ,புன்னகைத்தபடி கண்களாலே  மறுத்தவன் . நாடியில் கைகுற்றி  அவர்கள் விளையாடுவதை  வெறித்து பார்த்து கொண்டிருக்கிறான் .  எதற்கோ  ஏங்கும்  குழந்தை போல !

அவனது   பார்வையில்? தான் எத்தனை தவிப்பு ? எத்தனை ஏக்கம் ?  ஆக புரிந்துவிட்டது  வலியை மறைத்து சிரிக்கிறான் ஆனால் ஏன் ?அவனிடம் என்ன இல்லை , ஏன்  இவ்வளவு இறுக்கம் ? எதை எண்ணி கவலைப்படுகிறான் . மேகாவுக்கு  காரணம் புரியவில்லை .  ஆனால் அவனுக்குள் ஏதோ ஒரு மனம் சிக்கல் இருக்கிறது . அவனது அதீத கோபத்திற்கு கூட அது காரணமாக இருக்கலாம் என ஒரு மருத்துவராக யோசித்த மேகா .
மறுகணமே அது எப்படிப்பட்ட சிக்கலாக  இருந்தாலும் அதில் இருந்து அவனை எப்படியாவது  வெளி  கொண்டு வரவேண்டும்  என்று ஒரு மனைவியாக சிந்திக்க தொடங்கினாள் .

காதல் கொண்ட மனதால் ஏனோ தன்னவனின் கவலையை காண முடியவில்லை , அவனது வலியை  தான் சுமக்க  நினைத்தாள் போல இவள் முகமும்  சட்டென்று வாடி விட்டது .

” என்னாச்சு மேகா ஆர் யு ஓகே ” அஷோக் கவலையுடன் வினவினான் .

” அவர் ஏன் அண்ணா இப்படி இருக்காரு ?   “

” எப்படி இருக்கான்? “

” சோகமா, கவலையா, எதையோ பறிகொடுத்த மாதிரி இறுக்கமா  இது தான்னு சொல்ல தெரியல ” கவலையுடன்  கூறினாள் .ஒரு கணம் தீரனை பார்த்த மித்ரன் , மேகாவிடம்

” தீரனை பத்தி உனக்கு என்ன தெரியும் மேகா ? ” என்று கேட்க , அவளோ ,

” அவர் சொன்னதை மீறி ஏதாவது செஞ்சிட்டா  ரொம்பவே  கோபம் வரும் , அதிகமாக பேச மாட்டாரு , அவருக்கு உங்க எல்லாரையும் புடிக்கும் ,  நல்லா பாடுவாரு ” இதை சொல்லும் பொழுது அஷோக் மேகா இருவரும்  சிரித்துவிட்டு  ” அப்புறம்  குழந்தைங்களை  புடிக்குது  ” என்றவள் சிரிது நேர தயக்கத்திற்கு  பிறகு ,” என்னையும் புடிக்குது   பட் வெளிப்படையா  காட்டிக்க  மாட்டாரு ” சிறு வெட்கத்துடன்  தலைகுனிந்து கொள்ள ,

” சூப்பர் மேகா ஓரளவு சரியா சொல்றா ஆனா ஒண்ணே ஒன்னு தப்பா சொல்லிட்ட . அவனுக்கு எங்க எல்லாரையும்  பிடிக்கும் தான் , அதை விட அதிகமா  மேகாவை புடிக்கும் ” என்ற அஷோக் ” அப்போ ஏன் உன்னை கஷ்டப்படுத்துறான்னு கேக்குறியா? “

” மேகா தீரன் ஒரு நார்மல் பெர்ஸன் கிடையாது ,அவனுடைய குழந்தை பருவம்  ரொம்ப மோசமானது  .  அவனுக்குள்ள நிறைய வலிகள் இருக்கு, கோபம் இருக்கு ,பயம் இருக்கு, சந்தேகம் இருக்கு  ,நம்பிக்கையின்மை  இருக்கு . மனுஷங்கள அவ்வளவு  சீக்கிரம்  அவன் நம்ப மாட்டான் . ” என்ற  அஷோக் ஒரு இடைவெளி விட்டு ,

” பன்னிரண்டு வயசு வரைக்கும்  நல்லா தான் இருந்தான் ஆனா அப்புறம் அப்புறம் ஒரு சில நிகழ்வுகள் ,அவன் அப்பாவோட மரணம்  எல்லாம் அவனை இறுக்கமா  மாத்திடுச்சு  ” இதை கேட்டதும்  அவள் கண்கள் சட்டென்று கலங்கியது .

” அப்பவே அவர் அப்பா இறந்துட்டாங்களா ? “

“ம்ம்ம் , இன்னைக்கு அவரோட  இறந்த நாள் , இந்த ஆஷ்ரமம் அவரோடது தான் , அவர் இறந்ததுக்கு அப்புறம்  இதை சரியா யாரும் பராமரிக்க முடியல , வளர்ந்து வந்ததுக்கு  அப்புறம் தீரன் தான் பார்த்துகிறான்  ,ஒவ்வொரு வருஷமும்  தீரனும் நானும் அவங்க அப்பாவோட இறந்த நாளைக்கு   இங்க வருவோம்  .  கணக்கு வழக்கு  எல்லாம்  பார்த்துட்டு இந்த குழந்தைங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு போவோம் “

” என்கிட்ட சொல்லிருந்தா  நானும் உங்க கூட  மார்னிங்கே வந்திருப்பேன் “சிறு வருத்தத்துடன் கூறினாள் . எனக்கும் உங்களுடைய மகிழ்ச்சி துக்கத்தில் சம  பங்கு இருக்கிறது  என்றது  அவளது குரல் .

” சாரி டா தப்பா நினைச்சிக்காத  உன்கிட்ட  சொல்ல கூடாதுன்னு இல்லை  . அவன் விரும்பல . மேகா அவன் கொஞ்சம் அப்படி தான்  சட்டுன்னு  மனசுல உள்ளதை சொல்லிற மாட்டான் . அவனை புரிஞ்சிக்கிறது  கொஞ்சம் கஷ்டம் ஆனா  ஒரு நாள் உன்கிட்ட அவன் மனசை திறந்து பேசுவான் . “

” புரியுது அண்ணா  நான் தப்பா  நினைக்க மாட்டேன் .அவர் சொல்லும் பொழுது சொல்லட்டும்  என் கிட்ட சொல்லாம எங்க போய்டுவாரு . அவர் சொல்ற வரை நான் வெயிட் பண்ணுவேன் , அவரை பழையபடி  சந்தோஷமா  மாறுவார் ” என்ற மேகா தீரன் மீது காட்டும் அக்கறையும்   உரிமையும் அஷோக்கிற்கு ஆச்சரியத்தை கொடுத்தது .
இவ்வளவு எல்லாம் தீரனை பற்றி அவள் இதுவரை அதுவும் புன்னகை பூத்த முகத்துடன்  எல்லாம்  பேசியது இல்லை , இரெண்டு மூன்று வார்த்தைகள் பேசவே தயங்கி தயங்கி தான் ஆரம்பிப்பாள் சொல்ல போனால் இங்கே வந்து அவள் சிரித்து  அஷோக்  இன்று தான்  பார்க்கிறான் .  இனி தீரனின் வாழ்க்கையில் எல்லாம்  சீக்கிரமே சரியாகிவிடும்  என்று எண்ணிய அஷோக் , மிகவும் மகிழ்ந்தான் .

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!