MIRUTHNAIN KAVITHAI IVAL 37

cover page-8297af7c

MIRUTHNAIN KAVITHAI IVAL 37

மிருதனின் கவிதை இவள் 37

 

தீரன் வேண்டாம் என்று தடுத்தும் தான் அடம்பிடித்து வந்ததை எண்ணி தன்னை தானே நொந்து கொண்ட மேகா, தன் அருகில் இரும்பு மனிதனை போல எந்த ஒரு உணர்வையும் முகத்தில் காட்டாது இறுகிய வதனத்துடன், மௌனமாகவே நின்றுகொண்டிருந்த தன்னவனை எண்ணி கலங்கி தவிக்க, மேகாவின் முகத்தில் தோன்றிய கலவரத்தையும், அக்னியின் கன்றி சிவந்திருந்த முகத்தையும் மனம் குளிர ரசித்த நேத்ரா மனதிற்குள் தாராளமாக சிரித்துக்கொள்ள ,

அஷோக் தான் ரிதுராஜின் வருகையால் தீரனுக்கும் மேகாவுக்கும் இடையே மனக்கசப்பு எதுவும் வந்துவிட கூடாது என்பதில் மிகுந்த கவலை கொண்டான்.
ரிதுராஜிடம் சத்தமாக ஏதோ பேசி சிரித்தபடி அக்னியின் அருகே வந்த கிரண் , வேண்டுமென்றே அக்னி நிற்கும் டேபிளுக்கு அருகே இருக்கும் தனது தொழில் சார்ந்த நண்பரை பார்த்து கைகுலுக்கி சினேகமாக புன்னகைத்து அவரிடம்,

“ஹீ இஸ் மிஸ்டர் ரிதுராஜ் என் கம்பெனியோட நியூ பி.ஆர்.ஓ ஆபிசர்.” என அக்னியின் காதில் விழும்படி ரிதுராஜை  அறிமுகப்படுத்த,

மேகாவையும் அக்னியையும் பார்ட்டியில் சற்றும் எதிர்பார்த்திராத ரிதுராஜ் தான் மிகவும் சங்கடப்பட்டுப்போனான். அவனுக்கு மேகாவிடம் பேச வேண்டி இருந்தாலும் அதற்கான இடம் இது இல்லை என புரிந்து கொண்டவன், மேகாவின் கலங்கிய முகத்தை ஒருகணம் பார்த்து, அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாது கிரண் பாஸ்கரிடம் இதோ வந்துவிடுவதாக சொல்லிவிட்டு நாகரிகமாக அங்கிருந்து சென்றுவிட, வேகமாக செல்லும் ரிதுராஜையும், கலையிழந்து நிற்கும்  மேகாவையும் ஒருகணம் வன்மமாக பார்த்த கிரண் தன்னை எரித்துவிடுவது போல பார்த்துக்கொண்டிருக்கும் அக்னியை பார்த்து வெளிப்படையாகவே இதழை வளைத்து நக்கலாக சிரித்தான்.

அந்த சிரிப்பை கண்ட தீரனுக்கு ஏதோ தவறாகப்பட இனியும் தாமதித்தால் ஏதாவது விபரீதம் நடந்துவிடும் என்பதை உணர்ந்தவன் அஷோக்கை அழைத்து,
“நான் மேகா கூட கிளம்புறேன் நீ பார்ட்டிய முடிச்சிட்டு வா” என்று கூற, தீரனின் நிலையை உணர்ந்த அஷோக் தீரனிடம்,

“எனக்கும் அது தான் சரின்னு படுது நீ மேகா கூட கிளம்பு” என்று கூற, அவனிடம்  விடைபெற்ற அக்னி கழுகு போல தன்னையே வட்டமடிக்கும் கிரணின் அழுத்தமான பார்வையை தன் நெற்றி சுருங்க பார்த்தவன், ஒருவித பதற்றத்திலேயே இருக்கும் மனைவியின் கரத்தை உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டு கிரணை அலட்சியமாக பார்த்த தீரன், மனைவியின் பக்கம் திரும்பி,

“கிளம்பலாம் பேபி டின்னர வெளில முடிச்சிக்கலாம்” என அன்பாக அழைக்க, அதுவரை படபடப்பிலே இருந்த மேகாவுக்கு தீரனின் காதலாடிய குரலில் ஆசுவாசம் பிறக்க சட்டென்று அவளது கண்கள் கலங்கியது.  கலங்கிய தன்னவளின் விழிகளை கண்டு பதறிய தீரன்,

“என்னாச்சு?” என கேட்க, உடனே விழிகளை துடைத்து கொண்டவள் மறுப்பாக தலையசைக்கவும், சுற்றி ஆட்கள் இருந்ததை கருத்தில் கொண்டு மேகாவை வெளியே அழைத்து வந்தவன் காரணம் கேட்கும் முன்பே மேகா தீரனிடம் ,

“ரிதுராஜ் இங்க வந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”  என பயத்தில் சிறுபிள்ளை போல சிறு நடுக்கத்துடன் அழ ஆரம்பித்துவிட அவனோ,

“பைத்தியம் மாதிரி பேசாத மேகா நாம வந்த இடத்துக்கு அவன் வந்தால் நீ என்ன பண்ணுவ?” என சிறு கோபத்துடன் மனைவியை பார்க்க அவள் மறுகணமே,

“நீங்க சட்டுன்னு ஒரு மாதிரி ஆகிட்டிங்க அதான் பயந்துட்டேன் பா” என அழுதபடி அவன் நெஞ்சோடு முட்டி மோத மேகாவின் மனநிலையை புரிந்து கொண்ட தீரன் அவளது தலையை ஆதரவாய் வருடினான்.

ரிதுராஜை அங்கே கண்டத்தில் தீரனுக்கு எரிச்சல் தான்! மேகா இருக்கும் இடத்தில் அவன் இருப்பது தீரனுக்கு பிடிக்கவில்லை தான். ஆனாலும் கிரணுடன் ரிதுராஜை கண்டதுமே கிரணுக்கு எப்படியோ ரிதுராஜை பற்றி தெரிந்திருக்கின்றது, அவனை வைத்து தனக்கு எதிராக அவன் ஏதோ திட்டம் தீட்டுகிறான் என்பதை உணர்ந்திருந்த தீரன்.

மேகா தன்னுடன் இருப்பதை கருத்தில்கொண்டு கிரண் தன்னை பழிவாங்குவதாக சொல்லி ஏதாவது செய்து அது மேகாவை பாதித்துவிட கூடாது என்று எண்ணியவன் சிறிதும் யோசிக்காமல் அஷோக்கை பார்ட்டியை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு மனைவியுடன் கிளம்பினான்.

தீரன் சென்றதும் கிரணை பார்த்து கண்ணசைத்த நேத்ரா அஷோக்கிடம் வாஷ்ரூம் செல்வதாக கூறிவிட்டு தன்னை யாரும் பார்க்கிறார்களா? என பார்த்தபடி சற்று ஒதுக்குப்புறமாக வர, அந்நேரம் பார்ட்டியில் இருக்கும் ஒருவனை பார்த்து நேத்ராவை கண்களால் காட்டியபடி கிரண் தன் விழிகளால் சமிக்கை செய்ய, அடுத்த சில நிமிடங்களில் அந்த நபரின் கரங்களில் இருந்த கவர் நேத்ராவின் கரங்களில் இடம் மாறியிருக்க, பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்த நேத்ரா அதை எடுத்து தன் பர்சில் வைத்து கொண்டாள்.

தன் நெஞ்சில் முகம் புதைத்து அழும் மனைவியை அணைத்து பிடித்தபடி கார் பார்க்கிங் அருகே இருக்கும் ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்திருந்த தீரனுக்குள் கலவையான உணர்வு.

அன்று ரிதுராஜ் விடயத்தில் தான் நடந்து கொண்ட விதம் தான் மனைவியை இவ்வளவு பாதித்திருக்கின்றது என்று புரிந்து கொண்ட அக்னி அன்று மனைவியை அவ்வளவு காயப்படுத்தியிருக்க வேண்டாம் என்று வருந்தியவன் அறியவில்லை இனி மிகவும் அவளை காயப்படுத்த போகிறோம் என்று.

நிமிடங்கள் கடந்த பிறகு தன் அழுகையை நிப்பாட்டி கொஞ்சம் நிதானம் அடைந்திருந்த மனைவியின் முகத்தை கையில் ஏந்திய தீரன் ஏதோ பேச வாயெடுக்கவும்,

“லவ்லி! அட… அட… வாட் அ லவ் கலக்குற மேன், பொண்டாட்டி மேல அவ்வளவு காதல் ஹ்ம்.” என்ற கிரணின் குரலில் எரிச்சலடைந்த தீரன் வழமை போல அவனை சட்டை செய்யாமல், மேகாவிடம் “போகலாம் பேபி” என்றவன், அவளது கரத்தை உறுதியாக பற்றி கொண்டு வேகமாக நடக்க,

காற்றுக்கு அடித்து செல்ல படும் சருகு போல அவன் இழுப்பிற்கு இசைந்தபடி அவனுடன் மேகா செல்ல, தன் முன்னால் கார் பார்க்கிங்கை நோக்கி வேகமாக நடக்கும் தீரனின் பின்னாலே சென்ற கிரண் அவன் முன்பு வந்து வழிமறித்து நின்று,

“பார்ட்டி இன்னும் முடியல தீரன் அதுக்குள்ள கிளம்பினா எப்படி?” என நக்கலாக கேட்டு சிரிக்க, அவனை எரித்துவிடுவது போல பார்த்த தீரன் மேகாவை காரில் ஏறுமாறு கூறியவன் கிரணிடம் திரும்பி,

“என்னடா ம்ம்? என்ன வேணும் உனக்கு? பைத்தியமா டா நீ? பல்ல காட்டிட்டு பின்னாடியே வர ” என்று கிரணை நெருங்கி அவன் விழிகளை நேருக்கு நேராக பார்த்து தீரன் உறுமினான். தன்னை பார்த்து கத்தும் தீரனை தன் நாடியை தேய்த்தபடி புருவம் உயர்த்தி வஞ்சனையோடு பார்த்த கிரண், தீரனின் உயரத்துக்கு நிமிர்ந்து அவன் காதில் ஏதோ கூற,

அடுத்தக்கனமே தீரனின் முகம் அதிர்ச்சியில் கருத்துவிட்டது. சில நொடிகளுக்கு தீரனால் நிலைகொள்ளவே முடியவில்லை.
தீரனின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்க, ஏதோ பேரதிர்ச்சியை சந்தித்ததுப் போல கண்கள் விரிய, விழிகள் வெளியே தெரித்துவிடும் அளவுக்கு கிரணை பார்த்தவன் உடல் வியர்வையில் குளித்துவிட,  தீரனின் தடுமாற்றத்தை திருப்தியாக பார்த்த கிரண் தீரனிடம் நெருங்கி,

“பார்த்து தீரன் வரலாறு மறுபடியும் நடந்திற போது, கொஞ்சம் கவனமா இரு” என்றவன்,

“சும்மா சொல்ல கூடாது உன் பொண்டாட்டி அழகா தான் இருக்கா, அஷோக் வேற உன்னை விட இளமையா ஹாண்ட்சம்மா இருக்கான்” என்று கிரண் சொல்லி முடிக்கவில்லை,

“ஷட் அப்” என வான்பிளக்க கத்திய தீரன் ஏளன புன்னகையுடன் நின்றிருந்த கிரணின் முகத்தில் ஓங்கி குத்தினான். கிரண் எந்த எதிர்வினையும் காட்டாமல் அதே ஏளன புன்னகையுடன் அவனை பார்க்க. அதை கண்டு வெறிபிடித்த மிருகம் போல மாறியிருந்த தீரன் கிரணை வைத்துப்பார்க்கவில்லை, கிரணின் தடையை அடித்து நொறுக்கியிருந்தான்.

“ஹவ் டேர் யு? என் மனைவியை பற்றி நீ எப்படி பேசலாம்?” இவ்வாறு சொல்லி சொல்லியே கிரணை பயங்கரமாக தாக்கினான்.

அவ்வளவு ரெத்தம் கிரணின் உடம்பில் இருந்து வழிந்தது, ஆனால் பதிலுக்கு ஒரு தாக்குதல் கூட நடத்தாத கிரண் பைத்தியம் போல சிரித்து கொண்டே இருந்தது தீரனுக்கு தான் வெறி ஏறியது. நொடி பொழுதில் நடந்தேறிய இந்த தள்ளு முள்ளை காரில் இருந்தபடி பார்த்த மேகா அதிர்ச்சியில் கத்தியவள் வெளியே வந்து தீரனை தடுக்க முயன்றாள், புயலை சிறு மலரால் தடுக்க முடியுமோ? ஒரே உதறலில் அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன்,

“எப்படிடா அப்படி பேசுவ?” என அழுத்தமான குரலில் கத்தியவன் மீண்டும் கிரணை தாக்கினான். அவன் போட்ட சத்தத்தில் அந்த இடம் அதிரவில்லை அவ்வளவு தான் ஆனால் மேகாவின் அலறலிலும், தீரனின் சத்தத்திலும் அங்கே ஒரு கூட்டமே கூடிவிட,

“தீரன் ப்ளீஸ் சொல்றதை கேளு” தீரனின் ஆக்ரோஷம் கண்டு அவனை அஷோக் தடுக்க முயன்றான்.

“உன்னை விட மாட்டேன்டா” அசோக்கிடம் இருந்து திமிறியபடி கிரணிடம் பாய்ந்தான்.

“தீரன் ப்ளீஸ் பேசிக்கலாம்.” அசோக்கை தொடர்ந்து பின்னணியில் இன்னும் பல குரல் ஒன்றாக வந்தது ஆனால் அது எதையும் தன் காதில் வாங்காத தீரன்,

“என்னை விடு” வெறிகொண்ட விழிகளுடன் ஆவேசமாய் கத்திய தீரன் தன்னை பிடித்திருந்த அனைவரையும் தள்ளியவன் கிரணை சரமாரியாக தாக்கினான்.

கணவன் அடிவாங்குவதை கண்டு பதறி துடித்த தாரிக்கா, “ஐயோ யாரவது காப்பாத்துங்களேன்.” கத்தி கதறி மாறி மாறி மார்பில் அடித்து கொண்டாள்.

தீரனின் அசுர வேகத்துக்கு முன்பு அவனை தடுக்க முயன்ற அனைவரின் முயற்சியும் எரிமலையில் விழுந்த மழையாய் வீணாய் போக, தீரனின் ஆவேசத்தில் பதறி துடித்த மேகா,

“தீரன் ப்ளீஸ் விடுங்க” என கெஞ்ச திரும்பி அவளை பயங்கரமாய் முறைத்தவன்,

“கைய விடு” என்றான் சிவந்த விழிகள் பளபளக்க.

அவனது விழிகளும் அவனது உடல் மொழியும் மேகாவின் உடலெங்கும் ஒருவித நடுக்கத்தை பரவ செய்ய, கொஞ்ச நேரத்திற்கு முன்பு தன்னுடன் மகிழ்ச்சியாக சிரித்து பேசிய தீரனா இவன்? என மேகா நினைக்கும் அளவிற்கு தீரன் கொடூரமாக காட்சியளித்தான்.

முன்பும் இது போல கோபம் கொண்டிருக்கிறான் ஆனால் இன்று அவன் கண்களில் தெரியும் வெறியை அவளால் வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை.

“தீரன் ப்ளீஸ்” பயத்தை விழுங்கிக்கொண்டு மீண்டும் கெஞ்சினாள்.

“தள்ளி போ” என்ற தீரனை பார்த்தபடி தன் உதட்டில் வழிந்த ரத்தத்தை துடைத்தபடி எழுந்து நின்ற கிரண் மேகாவை ஒருகணம் பார்த்துவிட்டு மீண்டும் தீரனின் காதில்,

“பார்த்தியா,  உன் மனைவிக்கு என் மேல  எவ்வளவு அக்கறைன்னு, நான் அடிவாங்குறதை அவளால பார்க்க முடியல தீரா ” என அவன் கோபத்திற்கு தூபம் போட,

“டேய்” என சீறிய தீரன் மேகாவை தள்ளிவிட்டபடி கிரணை தாக்க,

“தீரன்” என்று கத்திய மேகா பிடிமானம் இல்லாமல் தடுமாறி தன் நெற்றியில் அடிப்பட தரையில் விழுந்தாள். மேகாவின் சத்தத்தில் அனைவரின் பார்வையும் அவள் பக்கம் திரும்ப அஷோக் உடனே ஓடி வந்து  மேகாவுக்கு உதவி செய்ய ,  நெற்றியில் குருதி வழிய பரிதாபமாக நின்ற மனைவியை பார்த்த தீரன் தானாக அடங்கினான்.

அன்று இரவு வீட்டில் யாருக்கும் ஒரு பொட்டு தூக்கம் இல்லை, மேகா உட்பட அனைவரையும் தவிர்த்த தீரன் அந்த இருட்டு அறைக்குள்ளே அடைந்து கிடந்தான். அஷோக்கால் கூட அவனை நெருங்க முடியவில்லை.

கிரணுக்கும் தீரனுக்கும் இடையே என்ன நடந்தது? சண்டைக்கான காரணம் என்ன? என ஒன்றும் புரியாமல் அஷோக் ஒருபுறம் குழப்பத்தில் இருக்க,

திடீரென்று நடந்த இந்த நிகழ்வால் மேகா கதி கலங்கி போய் இருந்தாள். பால்கனியில் குருதி கசிந்த நெற்றியுடன் நின்று கொண்டு, இருண்டு கிடக்கும் வானத்தையே வெறித்த மேகாவுக்கு அவள் வாழ்க்கையும் அந்த காரிருக்குள் சிறைப்பட்டது போல தோன்றியது.

“எத்தனை மகிழ்ச்சியாய் கிளம்பி சென்றோம்? எத்தனை அழகான தருணங்கள்? அத்தனையும் கனவு போலானதே” ஆற்றாமையுடன் தனக்குள்ளே கேட்டுக்கொண்ட மேகாவின் கண்களில் கண்ணீர் திரண்டது. தீரன் வருகிறானா? என வாசலையே பார்த்து கொண்டிருந்தாள்.

கிரண் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் தீரனை புரட்டி போட்டது. மனம் பழைய நினைவுகளில் உழன்று தவித்தது. யாரையும் பார்க்க விரும்பாத தீரன் நேரே அந்த அறைக்குள் சென்று தாழிட்டுக்கொள்ள அந்த இருட்டறை அவனின் வரவுக்காக காத்திருந்தது போல அவனை வரவேற்றது.

அவனை துரத்தி அடித்த நினைவுகள், ரணமாக்கிய தருணங்கள், சிரித்து மகிழ்ந்த நாட்கள் என்று ஒவ்வொரு நினைவுகளும் நிழல் போல அவனுடன் வர, சுவற்றில் சாய்ந்து நின்றபடி விழிகளை அழுந்த மூடினான். தன் தாய் தந்தையரோடு இன்பமாய் கழித்த சிறுவயது நியாபகம் இதழ் இசைக்க செய்தாலும், தன்னை விழுங்க துடிக்கும் பல கோர வலிகளால் விழிகள் அவனது இமைகள் தாண்டி தானாய் கசிந்தது.

!!!!!!!

“ஏன்?” என மூச்சு வாங்க கத்திய தீரன், “எவ்வளவு சந்தோஷமா அன்றைக்கு வீட்டுக்கு வந்தேன் ஏன் எனக்கு மட்டும் இப்படி? நான் வராமலே இருந்திருக்கலாம்” என ஏதேதோ பிதற்றியவனால் எவ்வளவோ முயன்றும் கடந்த காலத்தை மட்டும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

கடத்த கால நினைவுகள் அனைத்தும் காட்சிகளாக அவன் கண் முன் வந்து நிழலாட கண்களை இறுக்கமாக மூடி கொண்டான்.

அன்று மார்ச் பதினாலு தாய் தந்தையை காண ஆசை ஆசையாக குவாலியரில் இருந்து கிளம்பிய தீரன் வீட்டிற்கு வரும்பொழுது ஓரளவு இருட்டிவிட, தோளில் பையோடு துள்ளி குதித்து வாசலுக்கு வந்தவன் காலிங் பெல்லை அழுத்திவிட்டு,

“அம்மா பார்த்து ஷாக் ஆக போறாங்க.” என எதிர்பார்ப்புடன் கூறியவன், கதவு திறக்கும் சத்தம் கேட்கும் பொழுதே அவனது மனம் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தது.
தாய் தந்தையை காண ஆர்வமாக இருந்தவன் கதவு திறக்கப்பட்டதும் தன்னை அதிர்ச்சியாக பார்த்த தாயை,

“சர்ப்ரைஸ் மாம்!” என இறுக்கமாக கட்டிக்கொள்ள, முதலில் திகைத்தாலும் பின்பு மகிழ்ச்சியோடு தீரனை கட்டிக்கொண்டார் அவனது தாய் ரேஷ்மா.

அப்போழுது, “ஹலோ அக்னி” என்ற திடமான குரலில் தாயிடம் இருந்து விலகிய தீரன் அவர் அருகில் இருந்த நபரை பார்த்து,

“ஹெலோ இந்தர் அங்கிள்” என்றவன் ஒரு சில நலவிசாரிப்பிற்கு பிறகு,

“டாட் எங்க?” என கேட்டபடி உள்ளே நுழைய,

“அப்பா வேலையா வெளிய போயிருக்காங்க நாளைக்கு தான் வருவாங்க தீரன்” என்ற ரேஷ்மாவிடம்

“ஓ அப்பா இல்லையா ரெண்டு பேரையும் சர்ப்ரைஸ் பண்ணலாம்ன்னு நினைச்சேன்.” என்றவனின் தலையை தடவிய அவனது தாய்,

“போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா” என்றார்.

அந்நேரம், “ஓகே தீரன் நான் கிளம்புறேன்.” என்ற இந்தர்,

“ராம் கிட்ட நான் வந்தேன்னு சொல்லிருங்க அண்ணி .” என்றவர் இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு செல்ல, டைனிங் டேபிளில் தனக்கு ஊட்டிவிட வந்த தாயின் கரம் பிடித்து தடுத்த தீரன், அவரை ஒரு நாற்காலியில் அமரவைத்து,

“போதும் அக்னி இவ்வளவு எல்லாம் என்னால சாப்பிட முடியாது.” என ரேஷ்மா தடுக்க தடுக்க அவருக்கு உணவை பரிமாறினான்.

“மாம் சாப்பிடுங்க ப்ரெக்நன்ஸி டைம்ல நிறைய பசிக்கும்ன்னு படிச்சிருக்கேன் நீங்க டூ மந்த்ஸ்க்கு முன்னாடி எப்படி இருந்தீங்களோ அப்படியே இருக்கீங்க.” என்ற தீரனிடம் பதில் சொல்ல தடுமாறியவர், பின்பு தன்னை சுதாரித்து கொண்டு,

“இதெல்லாம் உனக்கு யாருடா சொன்னா?” கேள்வியை அவன் பக்கம் திருப்பினார்.

“ஐயம் நாட் அ கிட் மாம், எனக்கு தெரியும் அண்ட் மாம் யு லுக்கிங் வெரி வொரிட் என்னாச்சு? தம்பி பாப்பா நல்லா இருக்கான்ல நீங்க ஒழுங்கா செக் அப் போறீங்களா?” பெரிய மனுஷன் போல கேள்வி கேட்டவன் தாயின் முகத்தையே பார்க்க, தீரனின் கேள்வியில் ரேஷ்மா ஒரு கணம் தடுமாறி தான் போனார்.

“நல்லா தான் இருக்கேன் நீ சாப்பிடு.” என்று அந்த நிமிடம் தீரனை சமாளித்த ரேஷ்மாவுக்கு உணவு தொண்டை குழியில் இறங்க மறுத்தது.

“மார்னிங் சிக்னெஸ் எல்லாம் எப்படி இருக்கு மாம்” உணவை உண்டபடியே கேட்டான்.

“இப்போ ஓகே தீரன்.”

“இன்னும் டூ மந்த்ஸ்ல உங்க வயிறு கொஞ்சம் பெருசாகும்ல!” ஆர்வத்துடன் வினவியவன்,

“மாம் இது சாப்பிடாதீங்க ரொம்ப ஸ்பைசியா இருக்கு ப்ரெக்நன்ஸி டைம்ல காரம் எல்லாம் சாப்பிட கூடாது வயித்துல இருக்கிற பாப்பாக்கு ரொம்ப ஒத்துக்காது.” என்றவனை எதிர்கொள்ளவே ரேஷ்மா சங்கடப்பட்டார்.

வந்த இத்தனை நேரத்திற்குள் எத்தனை கேள்விகள் கேட்டுவிட்டான்,எவ்வளவு பேசிவிட்டான் . அனைத்து விடயத்திலும் தன் கணவனை உரித்து வைத்திருக்கும் தீரனை சலிப்புடன் பார்த்தவர், கடினப்பட்டு உணவை முடித்துக்கொண்டு தன் அறைக்கு செல்ல உடனே தடுத்தவன்,

“உங்களுக்கு எதுவுமே தெரியல மாம், இவ்வளவு வேகமா எல்லாம் ஸ்டெப்ஸ் ஏற கூடாது. இன்னைக்கு தான் அப்பா இல்லையே நாம ஏன் மூவி பார்க்கா கூடாது இன்னைக்கு என் ரூம்லையே தூங்குறீங்களா” என தீரன் ஆசையோடு கேட்க.

“இன்னைக்கு அம்மாக்கு ரொம்ப டயர்டா இருக்கு பா. நாளைக்கு அப்பா வந்ததும் நீ நான் அப்பா மூணு பேரும் மூவி பார்த்துட்டு ஒன்னா தூங்கலாம்.” என்ற ரேஷ்மாவிடம் சம்மதமாக தலையசைத்தவன் தன் தாய் தடுக்க, தடுக்க அவருடன் அவர் அறைக்கு வந்து அவர் உறங்க வசதியாக போர்வை விரித்து, தலைக்கடியில் தலையணை வைத்து அவர் வயிற்றில் இருக்கும் தன் குட்டி தம்பியிடம் கதை பேசிய பின்பே தன் அறைக்கு வந்தான் தீரன்.

தாயிடம் விடைபெற்றுக்கொண்டு தன் அறைக்கு வந்த தீரனுக்கு ஏனோ தூக்கம் வரமறுக்க, தனக்கு மிகவும் பிடித்தமான அவனது தாய் தந்தையின் திருமண விடியோவை சீடி பிளேயரில் ஓட விட்டவன் கையில் பாப்கார்னுடன் தொலைக்காட்சி பெட்டியின் முன்பு அமர்ந்துகொண்டான்.

எப்பொழுது விடுமுறைக்கு தீரன் தன் வீட்டிற்கு வந்தாலும் அவன் முதலில் பார்ப்பது தன் தாய் தந்தையரின் திருமண விடீயோ தான், அது ஏனோ அவனுக்கு எத்தனை முறை பார்த்தாலும் அது மட்டும் சலிப்பதில்லை. இரெண்டு மணிநேரம், நேரம் போவதே தெரியாமல் வழமை போல மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தவனுக்கு திடிரென்று தண்ணீர் தாகமாக எடுக்க வீடியோவை ஹோல்டில் போட்டவன்,

கிச்சனுக்கு சென்று தண்ணீர் பாட்டிலோடு தன் அறையை நோக்கி வந்தான் அப்பொழுது , மாடியில் ஏதோ சத்தம் கேட்கவும் தண்ணீரை அருந்தி கொண்டே மாடி ஏறியவன் சத்தம் தன் தாய் தந்தையரின் அறையில் இருந்து கேட்கவும்,

“அப்பா வந்துட்டாங்களா என்ன? அப்பா நாளைக்கு தானே வருவாங்கன்னு சொன்னாங்க?” என்றபடியே,

“டேட் , மாம்” என குதூகலத்துடன் கதவை திறக்க போன தீரன்,

“எனக்கு பயமா இருக்கு. தீரன், ராம் மாதிரியே குழந்தை விஷயத்துல ரொம்ப ஆர்வமா இருக்கான். நான் அபார்ட் பண்ணின விஷயம் மட்டும் தெரிஞ்சா அவ்வளவு தான் இந்தர்.” என்ற தாயின் குரலில் திடுக்கிட்டவன்,

“இன்னும் எவ்வளவு தான் பயப்பட போற இது முடிவெடுக்க வேண்டிய நேரம் ரேஷ்மா தைரியமா இரு.” என்று உடனே கேட்ட குரலில் குழம்பினான்.

“இந்தர் அங்கிள் வாய்ஸ் அவர் இங்க என்ன பண்ணிட்டு இருக்காரு?” என கேள்வியுடன் யோசிக்காமல் சட்டென்று கதவை திறந்த தீரன் அங்கு கண்ட காட்சியில் அதிர்ச்சியில் தண்ணீர் பாட்டில் கீழே விழ,  அப்படியே உறைந்துவிட்டான்.

தடதடவென கைகள் நடுங்க நின்றிருந்த தீரனின் மனதின் காயங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை. வஸ்தீரங்கள் மூலையில் கிடக்க இந்தரின் கை அணைப்பிற்குள்ளே ரேஷ்மா இருந்த கோலம் கண்டு தடதடவென ஆடிய தன் கரங்களை அடிவயிற்றில் வைத்து நன்கு பிடித்து கொண்டான்.

தன்னை பெற்ற தாய் வேறொரு ஆடவனுடன் இருக்க கூடாத நிலையில் இருப்பதை பார்த்த அந்த பன்னிரெண்டு வயது சிறுவன் அப்படியே நொறுங்கி விட்டான். அவன் முகம் பேயறைந்தது போல மாறியது.

இயந்திரம் போல அசைவற்று நின்றவனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருந்தது .
தன் கண் முன்பே அரங்கேறும் இந்த  காட்சி தவறு என்று புரிந்த அவனுக்கு, அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் தெரியவில்லை .

அவனுக்கு வயிற்றில் இருந்து எதுவோ கிளம்பி நெஞ்சுக்குழிக்குள் அடைத்தது, அதற்கு மேல் ஒரு நொடி நிற்க முடியாதவன் அங்கிருந்து தன் அறைக்குள் வேகமாக ஓடி சென்று பாத்ரூமிற்குள் போய் கதவை தாழிட்டுக்கொண்டு ஷவரை திறந்து அதற்கு கீழே உட்கார்ந்து கொண்டான்.

தண்ணீர் தலைமீது விழ கவிழ்ந்தபடி தன் குடலே வெளியே வந்துவிடும் படி உக்கரித்தவன் தன் தலையை இருக்கரங்களாலும் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

தீரனை சற்றும் அங்கே எதிர்பாராத அவனது தாய் பெற்ற மகன் முன்பு தான் இருந்த கோலம் கண்டு அவமானத்தில் எதுவும் பேச முடியாமல்,

“உங்க கிட்ட அப்பவே சொன்னேன் இந்தர் ,  தீரன் வந்திருக்கான் இன்னைக்கு வராதீங்கன்னு பாருங்க அவன் முன்னாடி…” என்று ரேஷ்மாவின் கண்கள் சங்கடத்தில் கலங்க,

“இப்போ ஏன் ஃபீல் பண்ணிட்டு இருக்க, என்னைக்கு இருந்தாலும் தெரிய வேண்டியது தானே.” இலகுவாக அவள் மடியில் படுத்தபடி கூறினான் இந்தர் .

“ஆமா ஆனா இப்படி ஒரு நிலைமையில தெரிஞ்சிருக்க வேண்டாம். அவன் சின்ன பையன் இந்தர்.”ரேஷ்மாவின் குரல் தழுதழுத்தது.

“அவனா சின்ன பையன் பன்னிரண்டு வயசு ஆகுது அவனுக்கு எல்லாமே புரியும்.”

“இந்தர் ப்ளீஸ் என்னை கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க முதல்ல கிளம்புங்க ராம்க்கு தெரிஞ்சா அவ்வளவு தான்.”

“தெரியட்டும் ரேஷ்மா இது நாம ஏற்கனவே பேசி எடுத்த முடிவு தானே. சீக்கிரம் ராம் கிட்ட பேசு இதுக்கு மேல என்னால உன்னை விட்டு பிரிய முடியாது. உன்னை சுத்தி இருக்கிற வேலியை தூக்கி எறிஞ்சிட்டு சீக்கிரம் எங்க கிட்ட வா. உனக்காக நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம். இனியாவது உனக்காக வாழு ரேஷ்மா. உனக்கு இன்னும் வயசு இருக்கு அழகு இருக்கு அந்த குடி காரன் கூட கிடந்தது, கஷ்டப்பட்டதெல்லாம் போதும். நீ நான் ரஞ்சித் மூணு பேரும் சந்தோஷமா வாழலாம். தீரனை நான் வேண்டாம்ன்னு சொல்லல அவன் வந்தா அவனையும் நான் சந்தோஷமா பார்த்துகிறேன்.” என்று கொஞ்சம் கூட ஈரமே இல்லாமல் பேசிய இந்தர் ரேஷ்மாவின் இதழை அணைத்துவிட்டு விடை பெற, ரேஷ்மாவுக்கு தீரனின் முகத்தை சந்திக்கவே சங்கடமாக இருந்தது.

தீரன் வெகு நேரம் தண்ணீருக்கு கீழே உட்கார்ந்து இருந்ததால் அவன் உடலெங்கும் ஒருவித குளிர் பரவி நடுக்கம் ஏற்பட. தண்ணீர் பைப்பை பிடித்து கொண்டு மறத்து போன கால்களால் கடினப்பட்டு எழுந்து நின்றான்.

ஈரமான உடைகளை கூட மாற்றாது பாத்ரூமை விட்டு வெளியே வந்தவன் அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்றான்.
தன் தாயுடன் கழித்த இன்பமான நாட்கள் அனைத்தும் அவன் கண் முன் தோன்றி அவனை கொல்லாமல் கொன்றது. தன் அறையில் உள்ள சுவரெங்கும் தன் தாய் மற்றும் தந்தையுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை பார்த்தான், கண்ணீராக வந்தது.

இதோ இன்று வீட்டிற்குள் நுழைந்ததும் தன் தாயை கட்டி அணைத்த தன் கரங்களை பார்த்தான். அவன் கண்கள் டீவியில் தன் தந்தையுடன் தன் தாய் ஒன்றாக இருக்கும் காட்சியை கண்டது. தன்னையும் தன் தந்தையையும் அன்போடு அணைத்த அதே கரங்கள். தன் தந்தையுடன் உரிமையாக பிணைந்திருந்த அதே கரங்கள் இன்று வேறொரு ஆடவனின் நெஞ்சில் ‘ஐயோ ‘ என கதியவனுக்கு, ரேஷ்மா செல்லமாக தன் தலையை கலைத்தது, வாஞ்சையுடன் கன்னத்தை தடவியது,

உணவை ஊட்டிவிட வந்தது என அனைத்து இன்பமான நினைவுகளும் அவன் நெஞ்சில் இப்பொழுது பாரமாக மாற, ஒருவித அருவருப்புடன் தன் சட்டையை கழற்றி எறிந்தவன் மீண்டும் குளியலறைக்குள் நுழைந்து தனது உடலை நன்றாக சோப் போட்டு திரும்ப திரும்ப தேய்த்து கழுவினான். கண்களில் இருந்து கண்ணீர் மற்றும் வடிந்து கொண்டே இருந்தது.

பின்பு ஒரு உடையை எடுத்து மாட்டிக்கொண்ட தீரன் தலையை கூட துவட்டாமல் அப்படியே தரையில் அமர்ந்தவனுக்குள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பூதாகரமாக அவன் முன்பு தோன்றியது. தந்தையை எண்ணி பார்த்தான் கண்ணீராக வந்தது.

மீண்டும் மீண்டும் அவன் கண்ட காட்சி அவன் கண்முன்னே ஓடியது. எதையோ மிதித்தது போல அருவருப்பில் உடல் கூசியது. கோபம் வந்தது. கண்முன்னே சிரித்த முகமாக தந்தையுடன் கல்யாண கோலத்தில் அழகே உருவாக நின்ற தாயை கண்டான். எத்தனை நாட்கள் ரசித்து ரசித்து பார்த்திருப்பான் இந்த திருமண விடியோவை ஆனால் இந்த நிமிடம் அவனுக்குள் அதை காண காண அவ்வளவு அழுத்தம் பிறந்தது.

ரிமோட்டை எடுத்து டீவியிலே ஓங்கி எறிந்தான். உடையவில்லை!
தாயின் சிரித்த முகம் வெறுப்பை கூட்டியது அழுதபடியே எழுந்து வந்தவன் கொஞ்சமும் யோசிக்காமல் டீவியை தூக்கி சுவற்றில் எறிந்தான் . அவன் வயதை மீறிய கோபம் அவன் செயலில் தெரிந்தது.

சுவற்றில் இருந்த அனைத்து புகைப்படத்தையும் கழற்றி கழற்றி கீழே எறிந்தான். கண்ணாடிகள் சில்லு சில்லாய் நொறுங்கியது.

“தீரன் அம்மா சொல்றதை கேளுப்பா” அறையில் கேட்ட சத்தத்தில் பயந்த ரேஷ்மா கதவு திறந்து இருந்தும் உள்ளே செல்ல தயங்கியவர். தயக்கத்துடன் மகனின் அறையின் கதவை தட்டினார். அவர் குரலை கேட்க கேட்க ஆத்திரம் கொண்டவன் அருகில் இருந்த தன் புத்தகப்பையை தூக்கி கதவில் எறிய. ஒருவித அதிர்வுடன் ரேஷ்மா விலக, தன் காதை இறுக்கமாக மூடிகொண்டவன்.

“ஏன் ம்மா இப்படி செஞ்ச? ஏன் ம்மா இப்படி செஞ்ச?” என்று திரும்ப திரும்ப பிதற்றினான். இதை தவிர வேறு எதுவும் அவன் வாயில் இருந்து வரவில்லை. கத்தி கத்தி கதறி அழுதவனின் சத்தம் அவன் அறையெங்கும் எதிரொலித்தது.

கோபமும் கண்ணீருமாக தன் உணர்வுகளை வெளிப்படுத்திய தீரனுக்கு தந்தைக்கு நடந்த துரோகத்தை ஏற்று கொள்ளவே முடியவில்லை.
சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளுக்கு இடையே தெரிந்த தன் தாய் தந்தை சேர்ந்திருந்த புகைப்படம் ஒவ்வொன்றையும் எடுத்தான். கண்ணாடி துண்டுகள் அவன் விரலில் ஆங்காங்கே குத்தியது, ரெத்தம் வடிந்தது.

ஆனால் அவனிடம் சிறு முனங்கல் கூட இல்லை. வலிக்கவில்லையா? இல்லை இவன் அதை உணரவில்லையோ!ஆனால் தீரன்  கொஞ்சமும் தன் காயத்தை பற்றி கவலைப்படாமல்  அழுதபடியே ஒவ்வொரு புகைப் படத்தையும் எடுத்தவன். அதை ஒவ்வொன்றாக கிழித்து அதில் இருந்த தன் தாயின் படத்தை மட்டும் கசக்கி கசக்கி எறிந்தான். நிலை குத்தியிருந்த அவனது  கண்களில் நீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!