MIRUTHNAIN KAVITHAI IVAL 9

cover page-520fe661

MIRUTHNAIN KAVITHAI IVAL 9

மிருதனின் கவிதை இவள் 9

மருத்துவரை ஒரு வழிபடுத்திவிட்டு  மேகாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தவன் ,

‘ நிற்காதே ! நடக்காதே ! பேசாதே ! ஓய்வெடு ! ‘ என வீட்டிற்கு வந்தும் அவளை படுத்தியெடுக்க .

மேகாவுக்கு தான் அவனை சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது .

இஷிதாவை மேகாவுக்கு காவல் வைத்துவிட்டு அக்னி அலைபேசியில் யாரிடமோ பேசியபடி சென்றுவிட , அறையில் இஷிதாவும் மேகாவும் பேசிக்கொண்டிருந்தனர்,  அப்பொழுது அந்நேரம் பார்த்து  இஷிதாவின் அலைபேசி சத்தமிட அவள் பேசிவிட்டு வருவதாக கூறி அலைபேசியை எடுத்துக்கொண்டே தன் அறைக்கு சென்றுவிட ,

கொஞ்சம் நேரம் அலைபேசியில் நேரம் கடத்தியவள் ,பின்பு தன் கையில் இருந்த அலைபேசியை பக்கத்தில் இருந்த டேபிளில் வைத்து விட்டு கண்மூடி படுத்திருந்த மேகாவுக்கு எங்கையோ வழி தெரியாத காட்டில் மாட்டிக்கொண்ட உணர்வு ! அப்பொழுது பார்த்து சாற்றியிருந்த  கதவை திறந்து கொண்டு நுழைந்தான் தீரன் . அவன் வரவும்  எழுந்து உட்கார்ந்தவள் நிமிர்ந்து அவனை பார்க்க , அவளுடைய இருளடைந்த முகத்தை கவனித்து ,

” என்னாச்சு வரு ? ரொம்ப வலிக்குதா ? உன்னை யாரு உட்கார்ந்து இருக்கா சொன்னா,  படுக்க தானே சொன்னேன் ” என்றபடி அவள் அருகில் வந்தான் .

அவளுக்கு தான் ‘ஐயோ ‘ என்றானது .

” உன்கிட்ட தான் கேட்குறேன் ?” குரலில் சற்று கடுமை தெரிந்தது .

அவள் தலையை மட்டும் இல்லைஎன்பதாய் வல பக்கமும் இட பக்கமும்  ஆட்டினாள் .

” நிஜமாவா பட் உன் முகம் ரொம்ப வாடி போயிருக்கே ?”கலக்கத்துடன் கேட்டான் .

” நோ நல்லா இருக்கேன் சார் ” ‘ சார் ‘ என்ற வார்த்தை அவனை எட்டி நிறுத்தியது .

” ப்ச் கால் மீ தீரன் , கார்லையே சொன்னேன் தானே?  இனிமே தீரன்னு கூப்பிடு   ” கண்டிப்புடன் கூறினான்,  அது மறுத்துப்பேச முடியாத குரல்  ! சொன்னதை செய் என்றது .

“ம்ம் ” தலையசைத்தாள் .

” சரி இப்போ சொல்லு ஏன் ஒருமாதிரி இருக்க வரு ?” குரலில்  சற்றென்று  மென்மை படர்ந்தது  .

” என்னாச்சு வரு சொல்லு ” என்றான் .

‘ உங்களை பார்த்தாலே மூச்சு முட்டுது ‘ மனதிற்குள் சொன்னவள் ,

” நீங்க கொஞ்சம் வெளிய இருக்க முடியுமா ?”என்று கேட்டாள் .

” ஏன்? “அவளை ஆழ்ந்து பார்த்தபடி கேட்டான் 

“ரெஸ்ட் ரூம்  போகணும் “

” ரெஸ்ட் ரூம்  தானே,  போ , நான் இங்கையே இருக்கேன் , தலையில அடிபட்ருக்கு ஒருவேளை மயங்கி விழுந்துட்டன்னா?  ” என்றான் அவளது கலவரப்பட்ட முகத்தை பார்த்து , ஆனால் அவளுக்கோ ஆத்திரமாய் வந்தது .

‘ ஐயோ ‘ என வாய்விட்டே கத்தவேண்டும்  போல் இருந்தது ஆனால் கட்டுப்படுத்திக்கொண்டாள் . அவள் உணர்வுகளை உள்ளுக்குள் அடக்க அடக்க ,அது முகத்தில் பிரதிபலித்தது . அதன் விளைவு கோபத்தில் அவள் முகம் சூடாகி சிவந்தது . அவள் முகத்தை பார்த்து என்ன நினைத்தானோ ,

“சரி நீ போ,  நான் கூப்பிட்டா சத்தம் குடு சரியா? ” என்றவன் மனமே இல்லாமல் வெளியே சென்றான் .

அவன் சென்றதும் ரெஸ்ட் ரூமிற்குள்  சென்று தாளிட்டவளுக்கு அப்பொழுது தான் சீராக மூச்சு விட முடிந்தது .

###################################

அலைபேசியோடு தன் அறைக்குள் வந்த இஷிதா அழைப்பை ஏற்று ,

” சொல்லு டா ரித்து, எவ்வளவு தடவை ட்ரை பண்றது ?”என்று கேட்டாள்.

“சாரி இஷு , பிளைட் லேட் பா , ரரொம்ப வெயிட் பண்ணிடீங்களா ? எங்க இருக்கீங்க ? நான் ரீச் ஆகிட்டேன் ”  கையில் சிவப்பு ரோஜா மலர் அடங்கிய பூங்கொத்துடன் நின்றிருந்தான்  ரிதுராஜ் .

” டேய் அண்ணா , அங்க ஒரு சின்ன பிரச்சனை வீட்டுக்கு வந்துட்டோம் “என்று பதிலளித்தாள் இஷிதா .

” என்னாச்சு  என்ன பிரச்சனை? நான் இப்போவே வீட்டுக்கு வரேன் ” என்று கிளம்பியவனை தடுத்தவள் ,

” நோ ப்ரோ ரிலாக்ஸ் , இப்போ ஓகே நீ வர வேண்டாம் , நாளைக்கு நானே அவளை அழைச்சிட்டு வரேன் ” என்றவள் ஒரு வழியாக ரிதுராஜை சமாளித்து அலைபேசியை அணைக்கவும் ,

” என்ன ரிப்போர்ட்டர் மேடம் ?அதிசயமா எனக்கு கால் எல்லாம் பண்ணிருக்கீங்க ” என்றபடி அவள் கட்டிலில் வந்து அமர்ந்தான் அஷோக் மித்ரன் .

” இப்படி தான் ஒரு பொண்ணோட ரூம்க்கு உங்க  இஷ்டத்துக்கு வருவீங்களா மித்ரன் ?” எரிச்சலுடன் கேட்டாள் .

” பொண்ணோட ரூம்க்கு போக கூடாது தான் , ஆனா பொண்டாட்டி ரூம்க்கு போகலாம்ல ”  ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான் .

“ஷாட் அப் அதுக்கு கல்யாணம் ஆகிருகனும் “

” கல்யாணம் தானே பண்ணிட்டா போச்சு ” என்று மித்ரன் இஷிதாவை நெருங்கவும்,

“அது கனவுலையும் நடக்காது மித்ரன் ” என்றாள் தீர்க்கமாக ,

“ஆஹான் ஏன் நடக்காது? நடத்தி காட்டவா , உனக்கு என மேல சந்தேகமா இருந்தா ,ஒரு சாம்பிள் காட்டவா ?” என்றபடி மித்ரன் அவளது இதழ் நோக்கி குனிய

இருவருக்கும் இடையே கரம் நீட்டி அவனை எட்டி நிறுத்தியவள் ,

” முக்கியமான விஷயம் பேசணும் ” என்றாள் . அவள் பார்வையில் என்ன கண்டானோ அவளை விட்டு தள்ளி சென்று நாற்காலியில் அமர்ந்தவன் ,

” சொல்லு ” என்றான் .

” பார்ட்டி ஹால்ல இருந்து திடீர்ன்னு எங்க போனீங்க? “

” பொண்டாட்டி போல விசாரணை பண்ற ” என்றவன் அவள் முறைப்பதை  அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்து ,

” ஏற்கனவே ஒரு மீட்டிங்ல இருந்து , அக்னி கூப்பிட்டான்னு தான் மீட்டிங்கை கோல்டு பண்ணிட்டு வந்தேன் . அப்புறம் அக்னிக்கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டேன்  “

“ம்ம்ம் நீங்க உங்க இஷ்டத்துக்கு கிளம்பிடீங்க, அங்க உங்க அருமை தோழன்  என்ன பண்ணினாருன்னு தெரியுமா ?”

“ம்ம்ம் தெரியும்  ட்ரைவர் சொன்னாரு,  இதுக்கு நீ  இவ்வளவு ரியாக்ட் பண்ண தேவை இல்லை , எல்லா பிரச்சனையும் ஹாண்டில் பண்ணியாச்சு ” என்றான் சாதாரணமாக ,

” அப்புறம் இன்னொரு விஷயம் உங்க அக்னி சார் ஆக்டிவிட்டீஸ் எனக்கு சரியா படலையே ” என்றது தான் தாமதம் , அஷோக்கின் முகத்தில் அவ்வளவு கடுமை  ! திடீர் வானிலை மாற்றம் போல வந்தது.

” உனக்கு அவ்வளவு தான் சொல்லிட்டேன்,  அக்னி பத்தி பேசுற வேலையெல்லாம்   வச்சிக்காத , லவ் பண்ணின பொண்ணுன்னு விடுறேன் , இதுவே கடைசியா இருக்கட்டும் ” கை முஷ்டி இறுகியது .

” நான் உண்மைய தான் சொன்னேன்,  அவர் மேகா கிட்ட நடத்துகிற விதம் சரியா படல ” சொன்னது தான் தாமதம் அவன் அவளை  அடிக்க கையை ஓங்கியிருக்க  , ஓங்கிய கரத்தை பிடித்தவள் அவனை முறைத்து பார்த்து  ,

” என் தரப்பை எப்பவுமே கேட்க மாட்டிங்களா  அஷோக்? ” என்றாள் , கண்கள் சட்டென்று கலங்க , பிறகு மிகவும் சிரமப்பட்டு கண்ணீரை உள்ளே இழுத்தவள்  இறுக்கமான முகபாவத்துடன் அவனை நோக்கினாள்.

” அதுக்கு உனக்கு முதல்ல தகுதி இருக்கனும் ” என்று அவனும்  பதிலுக்கு பேச , இஷிதாவுக்கு மனதில் ஒருவித வலி  வந்து தாக்கியது . இந்த முறை கலங்கிய கண்களில் இருந்து இரெண்டு சொட்டு கண்ணீர் கீழே விழ ஆயத்தமாக  , அது விழுவதற்குள் கண்ணீரை  தன் கரத்தில்  ஏந்தியவன் ,

” என்ன பேச வைக்காத இஷிதா ” என்றவன் , தன் தலையை அழுந்த கோதி ,

” சரி சொல்லி முடி  ”  என்றான் . அவளும் தன்னை ஆசுவாசப்படுத்தியவள்  அக்னி  ஹாஸ்பிடலில் நடந்துகொண்ட விதம் அனைத்தையும் பற்றி கூற , சத்தமாக சிரித்த அஷோக் ,

” நம்புறது போல ஏதாவது சொல்லு ” என்று கூற ,

“உண்மைய தான் சொல்றேன் ” என்றாள் இஷிதா .

“ஏய் அவனுக்கு லவ் எல்லாம் தெரியாது , புடிக்காது , ஏன் பொண்ணுங்களையே  புடிக்காது , அவன் அப்படியே வளந்துட்டான். ஸோ அவன் மேகவா லவ் பண்ண எல்லாம் சான்ஸே இல்லை . மேகா மேல ஒரு சாஃப்ட் கானர் வேணும்ன்னா இருக்கலாம் , லவ்  எல்லாம் ம்ஹூம் ” என்றவன் ,

” இன்னைக்கு அவன் கிளம்பிருவான் அதுக்கப்புறம்,   மேகா யாரோ , அக்னி யாரோ . ஸோ நீ தேவை இல்லாம எதுவும் யோசிக்காத “என்று கூறியவன் , இஷிதாவை ஒருகணம் பார்த்து ,

” அக்னி ஒன்னும் அவ்வளவு கெட்டவன் கிடையாது , நீ பண்ணின நம்பிக்கை துரோகத்துக்கு  உன் இடத்துல வேற யார் இருந்தாலும் அக்னி வேற மாதிரி நடந்திருப்பான் .ஏன்  அக்னி இடத்துல வேற யார் இருந்திருந்தா உன் கதை அவ்வளவு தான் . ஆனா நான் காதலிச்சேன் என்கிற ஒரே காரணத்துக்காக  உன்னை  அவன் கண்டுக்கக்கூட இல்லை , உன் அப்பனுக்காக  ஒன்னும் உன்னை அவன் விடல,  எனக்காக விட்டான் . இனிமே அவனை பத்தி என்ன பேசுறதா இருந்தாலும் கவனமா பேசு ” என்று அஷோக் சொல்லும் பொழுதே வெளியே ,

” ம்ம் இங்க வை ” என  அக்னியின் ஆளுமையான   குரல் கேட்க , அஷோக் கதவை திறந்து கொண்டு வெளியே வர ,அவன் பின்னாலே இஷிதாவும் வந்தாள்.

################################

இங்கே இப்படி இருக்க , அதே நேரத்தில் ,தன் கையில் இருந்து ரோஜா மலரை வெறித்து பார்த்த  ரிதுராஜோ ,

” என்ன டா இப்படி சொதப்பிட்டியே , நாளைக்காவது நேரத்துக்கு போகணும் ” என்று எண்ணியவனுக்கு மேகாவின் அழகிய வதனம் கண்ணெதிரே தோன்ற அவன் இதழ்கள் தானாக புன்னகைத்தது  .

######################################

இதற்கிடையில் தன் பின்னே நிழல் போல சுத்தி வந்த  அக்னியை ஒரு வழியாக சமாளித்து  ரெப்ரஷ் ஆகிடுவிட்டு வருவதாக கூறி குளியல் அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்ட  மேகாக்கு அக்னியின் திடீர் மாற்றம்  மிகவும் சங்கப்படுத்தியது  .

“ஒரே நாளில் எவ்வளவு தான்  சமாளிப்பது” என்றவளுக்கு  அவனது செயல்பாடுகள் தலைவலியை கொடுத்தது .

‘பார்க்கிறான்! பார்த்துக்கொண்டே இருக்கிறான் தான் , அவன் பார்வை சங்கப்படுத்த தான் செய்கிறது,  ஆனால்   அவனது கள்ளம் இல்லா  பார்வை இதுவரை அவளது விழிகளை தாண்டி ஒரு கணம் கூட பயணித்தது  இல்லையே ‘ ஆனாலும் ஒருவிதமான நெருடல் மனதை போட்டு அழுத்த

.’ ஏன் இப்படி நடந்துகிறான் ?’ என காரணம் தெரியாமல் மிகவும் குழம்பியவள் ,

” ஒருவேளை செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கிறானா ? என்ன ?” என்று மூளை யோசிக்க ,அவளோ ,

” நன்றியெல்லாம் யார் கேட்டா இங்கிருந்து சென்றால் போதும் “என வாய்விட்டே கூறியவள் , முகத்தை கழுவி கொண்டு இருக்க அப்பொழுது,

‘தடவென தடவென ‘ கதவு உடைபடும் சத்தம் கேட்டு அந்த அறையே அதிர முகத்தை கழுவிக்கொண்டிருந்த மேகவோ பயத்தில் அலறியபடி கதவை திறக்க , வாசலில், 

” உனக்கு ஒன்னும் இல்லைல ” என்று கலவரம் சூழ்ந்த முகத்துடன் நின்றிருந்தான் அக்னி தீரன் .

” இல்லை ” பயத்தில் தலையை அசைத்தாள் .

‘ ஊஃப் ” பெருமூச்சை வெளியிட்டவன் ,

” ஏன் சத்தமே கொடுக்கல , நான் உன்கிட்ட என்ன சொல்லி அனுப்புனேன்? ” கோபத்தில் கண்களை உருட்டினான் .

” தண்ணி விழுந்ததுனால உங்க சத்தம் கேட்கல ” உளறி தள்ளினாள் .

” இன்னும் கொஞ்சம் தட்டியிருந்தா , கதவு கையோட வந்திருக்கும் . இதோ லாக் வந்திருச்சு”என்றவன் சாதாரணமாக அதை அவள் கையில் கொடுத்து ,

“சரி நீ முடிச்சிட்டு வா நான்,  வெளிய வெயிட் பண்றேன் ” என்றவன் அறையை விட்டு வெளியேற,  மேகா தலையில் கைவைத்தபடி கட்டிலில் அமர்ந்துகொண்டாள் .

அவளுக்கு தன்னை நிலைப்படுத்தவே நேரம் தேவைப்பட்டது , ‘ இப்படியும் ஒரு மனிதனா ? ‘ தீரனை நினைக்கும் பொழுதே கண்கள் இருண்டு கொண்டு வர,  சில நேரம் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திவிட்டு  வெளியே வர , மீண்டும் அதிர்ச்சியில் விழிவிரித்து நின்றாள் .

”  வா  வரு  ஏன் அங்கையே நின்னுட்ட? வா வா ” அக்னியின் குரல் தற்காலிக சிலையாய் நின்ற மேகாவுக்கு உயிர் கொடுத்தது .

“ஹான் ” என்றவளுக்கு ஏனோ தரையில் வேரூன்றிய காலை அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை .

ஆனால் அவனோ,

” வரு வா எல்லாம் உனக்கு தான் ” என்று சிரித்தவன் நால்வர் உட்காரும் மேசை முழுவதும் வித விதமான பறப்பன ஊர்வன என ஒன்று விடாமல் தெரிந்த தெரியாத அத்தனை  உணவு பதார்த்தங்களையும் நிரப்பி வைத்து  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விளக்கம் கொடுத்து கொண்டிருந்தான் .

” முதல்ல என்ன சாப்பிடுற இதுவா ? அதுவா? “என்று அனைத்தையும் நீட்ட ,

” எனக்கு எதுவும் வேண்டாம் ” என்றாள் தவிக்கும் குரலில் ,

” என்ன வேண்டாம் ரொம்ப வீக்கா இருக்க நீ , அதான் அடிபட்டதும் ஒருமாதிரி ஆகிட்ட , தூக்கும் பொழுது வெயிட்டே இல்லை  காத்து மாதிரி இருக்க,  வா வந்து சாப்பிடு முதல்ல மட்டன் சாப்பிடுறியா நல்லா இருக்கும் இந்தா ” அவனே பரிமாறி  அவளிடம் நீட்டினான் ,மாமிச  வாசனையே பழகிராத  மேகாவுக்கு அடிவயிற்றை பிரட்டி கொண்டு வர வாயை மூடி கொண்டு வாஷ்ரூமிற்குள்  ஓட , அக்னி தான் மிகவும் பதறி போனான் .

” ஏய்  உன்னை தான் இங்க வா , உள்ள போ , அவளுக்கு என்னாச்சுன்னு பாரு இன்னும் அவ வரல ” மேகா உள்ளே சென்று முழுவதுமாக ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது  , அதற்குள் அக்னி துள்ளி கொண்டு வர,  மித்ரனை ‘ பார்த்தியா ‘ என்பது போல் பார்த்துவிட்டு இஷிதா வாஷ்ரூமிற்குள்   நுழைந்து கொள்ள, அக்னிக்கு தான் முகம் வாடிவிட்டது .

நேரம் கடந்திருக்க , சோர்வாக காட்சியளித்த மேகாவை , கட்டிலின் மீது இஷிதா அமரவைத்திருக்க ,

” என்னால முடில டி ” இஷிதாவின் கரங்களை பிடித்து கொண்ட மேகாவின் கண்கள் கலங்க ,

” எனக்கு தெரியும் , அந்த டாக்டர் சரி இல்லை அஷோக் , அவன் ஏதோ தப்பான மெடிசின் குடுத்துட்டான் . அதான் வருக்கு ஒத்துக்கலை  அவனை ” என ஆக்ரோஷமா சீரியபடி உள்ளே வந்த தீரனை பார்க்க பார்க்க மேகாவுக்கு பயத்தில் முகமெல்லாம்  வியர்வை அரும்பியது .

” அக்னி ரிலாக்ஸ்  பார்த்துக்கலாம் ” என அஷோக் கூறவும் , ” அவளை பாருடா , எப்படி என்னால ரிலாக்ஸ் ஆக முடியும்? போ போய் வண்டிய ஸ்டார்ட் பண்ணு ” என அஷோக்கிடம் சீறிவிட்டு மேகாவின் அருகே வந்தவன் மீண்டும் தன் கையில் அவளை ஏந்த முயற்சிக்கவும்  அவனை தடுத்தவள் ,

” அக்னி ஹாஸ்பிடல் வேண்டாம் ப்ளீஸ் , எனக்கு நான்வெஜ் பிடிக்காது அதுனால தான் அதை பார்த்ததும் அப்படி ஆகிடுச்சு ” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் ,

” ட்ரைவர் ” என கத்தியவன் மேகாவிடம் ,

” என்கிட்ட சொல்லிருக்கலாமே , பாரு ஒரு செகண்ட்ல எப்படி ஆகிட்ட? ” உண்மையாக வேதனை கொண்டான் .

‘ எங்க டா சொல்ல விட்ட , முதல்ல என்கிட்ட கேட்டியாடா ?’ என மேகா மனதிற்குள் புலம்பினாள் .

அப்பொழுது அவனது கட்டளைக்காகவே காத்திருந்தது போல உள்ளே வந்த ட்ரைவர் ” சார் ” என்று பணிவுடன் நிற்க ,

” ம்ம் எவ்வாவு நேரம் , போ டைனிங் டேபிள்ள ஒன்னும் இருக்க கூடாது.  வருக்கு அதெல்லாம் புடிக்காதாம் ,உடனே எடுத்துட்டு போ , ஸ்மெள்ளே வர கூடாது. பக்கவா க்ளீன் பண்ணிருக்கணும் “என்றவன் மேகாவை பார்த்து ,

” கவலை படாத வரு  , இப்போ க்ளீன் ஆகிரூம் ” என்று கூற அவனது இந்த திடீர் மாற்றம் மேகாவுக்கு உள்ளுக்குள் ஒருவித அதிர்வை கொடுக்க வெடவெடத்தபடி அமர்ந்திருந்தாள் .

” எல்லாம் க்ளியர் பண்ணியாச்சு வரு , இன்னும் ஸ்மெல்  வருதா ?”

“இல்லை “

“அப்புறம் ஏன் ஒருமாதிரியா இருக்க ? என்னாச்சு  தலை வலிக்குதா ? வேற எதுவும் பண்ணுதா? ” அவனுடைய பதற்றமும் கேள்விகளுக்கும்   மேகாவுக்கு ஏதோ  சிறிய அறைக்குள் அடைத்து போட்டது போல மூச்சு முட்டிக்கொண்டு வந்தது .

” தீரன் ஐயம் ஓகே,  நான் நல்லா இருக்கேன் , யு ரிலாக்ஸ் ” கலவரத்தை மறைத்து கூறினாள் .

” நீ சொன்னா சரி தான் வரு ” என்றவன் அப்பொழுது தான் கொஞ்சம் இயல்பு நிலையை அடைந்திருந்தான் .

இதை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த அஷோக்கிற்கோ தீரனின் திடீர் மாற்றத்துக்கான அனைத்து காரணமும் தெளிவாய் புரிய அவனது இதழில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது .

ஆனால் ஏனோ அது இஷிதாவின்  மனதை நெருடியது .  என்ன தான்  தீரனின் கண்களில் தெரிந்த  கலப்படமற்ற  நேசம் அவளை நெகிழ செய்தாலும், தோழியை குறித்து மிகவும் கவலை கொண்டாள் .

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!