அத்தியாயம் 29
Amalfi coast, Italy(அமல்பி கோஸ்ட், இத்தாலி)
தேள்னா கொட்டும், பாம்புன்னா கொத்தும், ஆம்பிளைனா சபலப்பட தான் செய்வான். இட்ஸ் அ பயலோகிக்கல் அர்ஜ்.
(விஜய் சேதுபதி — கவன்)
முட்டி வரை இருக்கும் ஸ்விம்மிங் ட்ரங்க் அணிந்து, சட்டை இல்லாமல் கடற்கரை மர பெஞ்சில் துண்டு விரித்துப் படுத்திருந்தார் ராகவன். கண்களில் கறுப்பு கண்ணாடி அணிந்து, சூரிய கதிர்கள் உடலை வருட ஆழ்ந்த நித்திரையில் இருந்தார் அவர். பக்கத்தில் இருந்த சிறு மேசையில் அன்னாசி பழம் கலந்த காக்டேயில் வீற்றிருந்தது. கடல் காற்றின் சுகந்தமும், அலைகளின் ஆர்ப்பரிப்பும் தந்தை மடியாய் அவரை தாலாட்டியது. தந்தை போனதிலிருந்து ஊண் உறக்கமின்றி தவித்தவரை இத்தாலி இரு கரம் கொண்டு அரவணைத்துக் கொண்டது.
சோம்பலுடன் கண் விழித்தவர், மெல்ல எழுந்து அமர்ந்தார். காக்டயிலை ஒரு மிடறு விழுங்கியவர், கண்களை சுற்றிலும் சுழல விட்டார். நீச்சல் உடையில் வெள்ளை வேளேறென்ற யுவதிகள் அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தனர். பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என சுவைத்தறிந்தவருக்கு யாரிடமும் மனம் லயிக்கவில்லை. மீண்டும் கடலை நோக்கி நடந்தவர், ஒரு நீச்சலைப் போட்டு விட்டு தண்ணீர் சொட்ட சொட்ட கரையேறி வந்தார்.
பல பெண்களின் கண்கள் அவரை சுற்றியே வட்டமடித்தன. ஆறடி உயரமும், செதுக்கி வைத்த உடற்கட்டும், ஆண்மையை எடுத்துக் காட்டும் மீசையும் கன்னியரை மட்டும் அல்ல வெள்ளைக்கார கிழவிகளையும் திரும்பி பார்க்க வைத்தது. நீர் வழியும் உடம்பை துடைத்துக் கொண்டவர் ஹோட்டல் அறையை நோக்கி நடந்தார். அவரின் ஒவ்வொரு அசைவையும் ஒரு ஜோடி கண்கள் பிரமிப்பாக பருகி கொண்டிருந்தன. அவள் தான் ரோஸ்மேரி.
ரோஸ்மேரி பதினேழே வயது நிரம்பிய அழகு மங்கை. பெற்றவரின் கூட்டிலேயே அடைந்திருந்தவர், இப்பொழுதுதான் சுதந்திரமாக பறக்கவிடப்பட்டிருக்கிறார். பரீட்சை முடிந்தவுடன் தனது இரட்டை சகோதரியோடு உல்லாசப் பயணம் வந்திருந்தார். வயதிர்குறிய துறுதுறுப்பு, ஆர்ப்பரிப்பு, புதிதாய் கிடைத்த சுதந்திரம் என குதூகலமாக இருந்தார் ராகவனை பார்க்கும் வரை.
அவர்கள் நாட்டு ஆண்களைப் போல் வெள்ளையாக இல்லாமல், கருத்த சிகையுடன் வித்தியாசமாக இருந்தவரை ஒரு வேடிக்கையாக தான் முதலில் பார்த்தாள். ராகவனின் அலட்சிய போக்கும், பெண்களை ஏறிட்டுப் பார்க்காத பார்வையும்(?) மேரியை அவர் பக்கம் கட்டி இழுத்தது. ராகவன் தங்கியிருக்கும் ஹோட்டலில் தான் சகோதரிகளும் தங்கி இருந்தார்கள். அவர்கள் ஹோட்டல் பாரில் தான் ராகவனை முதன் முதலாக பார்த்தாள் மேரி. தனியாக அமர்ந்து ஸ்காட்ச் குடித்துக் கொண்டிருந்தவரை பல பெண்கள் நெருங்கி ஆட அழைத்தும் மென்மையாக மறுத்து விட்டார். அமைதியாக குடித்துவிட்டு எழுந்து நடந்தவர், இவர்கள் மேசைக்கு வரும் போது கொஞ்சம் தடுமாறினார். மேரிதான் அவரின் கைப் பிடித்து நிறுத்தினாள். அவளை ஆழ்ந்து பார்த்தவர்,
“தேங்க்ஸ் லிட்டல் ஓன்” என கன்னத்தை தட்டி விட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டார். அவர் பார்த்த பார்வைக்கு அர்த்தம் புரியாவிட்டாலும், அந்த பார்வை இரவும் பகலும் அவளை ஏதோ செய்தது. அன்றையிலிருந்து தான் இந்த பின் தொடரும் படலம்.
ராகவன் ஹோட்டலை நோக்கி நடக்கவும், தானும் எழுந்து பின் தொடர்ந்தாள் மேரி. அவர் லிப்டுக்குள் நுழைந்து கதவு மூடுவதை கவனித்து, நிற்குமாறு கத்திக் கொண்டே ஓடி வந்தவள் தடுமாறி, ராகவனின் மேல் மோதிக் கொண்டு நின்றாள். நிற்க தடுமாறியவளை ஒரு கரம் கொண்டு நிலைப்படுத்திய ராகவன்,
“ஆர் யூ ஆல்ரைட் லிட்டல் ஓன்?” என ஆழ்ந்த குரலில் கேட்டார்.
“ஐம் சாரி. பீச்சுக்கு போய்ட்டு வந்ததால ஸ்லீப்பர் எல்லாம் ஈரம். ஓடி வரவும் வழுக்கிருச்சு. வேரி சாரி” என மீண்டும் மன்னிப்பு கேட்டாள் மேரி.
“தேட்ஸ் ஓகே” என நகர்ந்து நின்று கொண்டார் ராகவன்.
அவர் கைப்பட்டு சிவந்து போயிருந்த தன் கரத்தை தேய்த்தவாறே ஓரக்கண்ணால் ராகவனை நோட்டம் இட்டாள் மேரி. அவர் லிப்ட் கதவை பார்ப்பது போல நின்றிருந்தாலும், கறுப்பு கண்ணாடி வழியாக இவளை தான் இன்ச் பை இன்ச்சாக ரசித்துக் கொண்டிருந்தார்.
‘வாவ்! என்ன ஒரு அழகு. கை பட்டவுடனே சிவக்குதே இவ தேகம். எக்சோதிக்(exotic) பியூட்டி. சின்ன பொண்ணு மாதிரி இருக்கா. வூ கேர்ஸ்? அவ கண்ணுல தெரியுதே மயக்கம், அது போதும் எனக்கு. ராகவன் கேம்ஸ் ஸ்டார்ட்ஸ் நவ்’ மனதுக்குள் பழைய உற்சாகம் பீறிட்டது. அங்கிருக்கும் வரைக்கும் தன் மன்மத கணைகளை அவள் மேல் ஏய்வதற்கு தயாரானார்.
அடிக்கடி அவள் கண்படும் இடங்களில் உலாவ ஆரம்பித்தார். அவள் ஆர்வமாக பார்த்தாலும் அவர் தெரியாத மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்துவிடுவார். எல்லா நாட்டு அழகிய பெண்களின் சைக்கலாஜியும் ஒன்றுதான். ஆண்கள் தன்னை ஆர்வமாக பார்த்தால் அலட்சியமாக ஒதுக்கி விடுவார்கள். அதுவே அவர்கள் திரும்பி பார்க்காவிட்டால், ‘நான் என்ன அவ்வளவு மொக்கை பிகரா’ என ஈகோ கிளர்ந்தெழ அந்த ஆண் பின்னாலேயே சுற்றுவார்கள். மேரியும் அதற்கு விதிவிலக்கல்ல. தனது இரட்டை சகோதரி புதிதாக கிடைத்த பாய் பிரண்டுடனே தங்கி விட, இவருக்கு ராகவனை தொடர்வதே வேலையாகி போனது. விட்டில் பூச்சி விளக்கை சுற்றி சுற்றி வந்து தற்கொலைக்கு நாள் பார்த்தது.
அன்று அதிகாலையிலேயே விழித்த மேரி, சூடாக காப்பி சாப்பிடலாம் என ரூமிலிருந்து இறங்கி வந்தார். பனிமூட்டமாக இருந்த அந்த காலை வேலையில், வெள்ளை டாப்சும், கருப்பு ஸ்கார்டும் அணிந்து உற்சாகமாக துள்ளல் நடையிட்டு நடந்து வந்தவர், எதிரே வந்த ராகவன் மீது மோதிக் கொண்டார். மீண்டும் விழாமல் பிடித்து நிறுத்திய ராகவன்,
“கேர்பூல் லிட்டல் ஓன்! என்ன அவசரம்?”
என மென்மையாக வினவினார். கறுப்பு கண்ணாடி அணியாமல் பவர் கண்ணாடி மட்டும் அணிந்திருந்தார். அவரின் மயக்கும் கூரிய பார்வையில், தட்டு தடுமாறி போனது மேரியின் நெஞ்சம்.
“நான் லிட்டல் ஓன் இல்ல. எனக்கு பதினேழு வயசு ஆச்சு” என உடைந்த ஆங்கிலமும், கை ஜாடையும் கலந்து பேசினாள் மேரி. அவளுக்கு இத்தாலி மொழி தான் தெரியும். ஆங்கிலம் தட்டு தடுமாறி வரும். அவளது கொஞ்சல் மொழியிலும், நடனமாடிய உடல் அசைவிலும் தன்னை மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தார் ராகவன்.
“சிக்னோர் (சார்)” என அவரை உலுக்கினாள் மேரி.
“பெலேஷா(அழகி)! இந்த பனி காலைப் பொழுதுல உன்னைப் பார்க்க தேவதையே இறங்கி வந்த மாதிரி இருந்தது. நான் பிரம்மிச்சுப் போய் நின்னுட்டேன்” கன்னம் குழிய சிரித்தார். மெதுவாக அவளுக்கு புரியும்படி வார்த்தைகளை உச்சரித்தார் அவர். கன்னம் சிவக்க பார்வையைத் தாழ்த்தினாள் அவள். அவளது சிவந்த கன்னங்களை தன் விரலால் தடவி பார்த்த ராகவன், சட்டென்று தன் கையை உறுவிக் கொண்டார்.
“என்னை மன்னிச்சுரு. வெள்ளைக் கன்னத்துல திடீரென ரோஜா பூக்கவும், என்னை அறியாம தீண்டிட்டேன். மன்னிச்சிரு ப்ளிஸ்.” என பதறி போய் பல தடவை மன்னிப்பு கேட்டார்.
அவள் பரவாயில்லை என சொல்லியும், மீண்டும் மீண்டும் மன்னிப்பை வேண்டினார்.
“என்னை மன்னிச்சிட்டதா இருந்தா என் கூட ப்ரேக்பஸ்ட் சாப்பிடனும்” என வேண்டுகோளை விடுத்தார் ராகவன். சரியென தலையாட்டினாள் மேரி. மன்மத கலையில் பி.எச்.டி வைத்திருக்கும் ராகவனிடம் நோ என ஒரு பெண் சொல்லிவிடத்தான் முடியுமோ?
சாலையின் இரு மருங்கிலும் கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள், கபேஸ், பூக்கடைகள், பொட்டிக்ஸ் என அணிவகுத்து நின்றன. பக்கத்தில் இருந்த கபேவுக்கு இருவரும் நடந்தே சென்றனர். பெரிய குடை விரிக்கப்பட்டு கீழே நாற்காலிகளும், சிறு மேசையும் போடப்பட்ட இடத்தை தேர்ந்தெடுத்தார் ராகவன். நாற்கலியை இழுத்து மேரி அமர்ந்தவுடன் தான், அவர் அமர்ந்தார். அவளிடம் கேட்டு அவளுக்கு பிடித்த புளுபேரி ஸ்கோன், பப், வெனிலா லாட்டே என ஆர்டர் செய்தார்.
பேசியபடியே இருவரும் உணவருந்தினார்கள். பேச்சுவாக்கில் அவள் அப்பா வைன்யார்ட் வைத்திருக்கும் பெரும்பணக்காரர், அம்மா மறுமணம் செய்து போய்விட்டார், இரட்டை சகோதரி ஒருத்தி மட்டும் இருக்கிறாள் போன்ற விவரங்களை கிரகித்துக் கொண்டார்.
“அப்போ உன் சிஸ்டர பார்த்தா நீ தான்னு ஏமாந்துருவேனோ?” என சிரித்தார் ராகவன்.
“நோ, சில்லி. நாங்க ரெண்டு பேரும் நன்-ஐடெண்டிகல் டுவின்ஸ். அவ அப்பா மாதிரி இருப்பா, நான் அம்மா மாதிரி இருப்பேன்” பர்சில் இருந்த போட்டோவைக் காட்டினாள் மேரி.
“அப்பாடா!” பெருமூச்செறிந்தார் ராகவன்.
“என்னாச்சு வன்?” ராகவன் வன்னாக மாறியிருந்தார்.
“உன் ஒருத்தி அழகே இப்படி ஆள அசரடிக்குதே, நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தா இந்த பூமி தாங்காதுன்னு நினைச்சேன். நல்ல வேளை அப்படி இல்ல.” குறும்பாக சிரித்தார்.
வெட்கப் புன்னகை சிந்திய மேரி, இவரைப் பற்றி விசாரித்தாள். என்னத்தான் உடலை கிண்ணென வைத்திருந்தாலும் முகம் கொஞ்சம் கிழடு தட்டியிருந்தது .திருமணம் ஆகவில்லை என்று சொன்னால் கழுதை கூட நம்பாது என அறிவார் அவர்.
“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சு. வைப் ரெண்டு மாசத்துக்கு முன்னே இறந்துட்டாங்க. பிள்ளைங்க இல்ல. அவ போன துக்கம் இன்னும் என்னை விட்டுப் போகல. மனச நிலைப்படுத்திக்க தான் இங்க வந்தேன்” லேசாக கண் சிவந்தார். உருகி விட்டது. மேரிக்கு. ராகவனின் கைப் பற்றி தட்டிக் கொடுத்தாள்.
“சீ வாஸ் மை சோல். இப்ப எனக்கு உயிர் இருக்கு, ஆனா உணர்ச்சி இல்ல. நான் சிரிக்க ஆரம்பிச்சதே இன்னிக்கு தான். உன்னைப் பார்த்து தான். யூ லைட் அப் மை மிசரபள் லைப்” அவளது கையை இருகப் பற்றிக் கொண்டார். கண் கலங்கி விட்டது மேரிக்கு. இல்லாள் இறந்தவன் இமயமலைக்குப் போகாமல் இத்தாலிக்கு ஏன் வந்தான் என அவள் யோசிக்கவும் இல்லை. அப்படி யோசிக்க அவளுக்கு டைம் கொடுக்கவும் இல்லை நமது காதல் மா(மா)மன்னன்.
படுக்கும் நேரம் தவிர இருவரும் ஒன்றாகவே சுற்றி அலைந்தனர். சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்த ஊரையே சுற்றினார்கள். பசித்த நேரத்துக்கு சாப்பிட்டு, காரணமே இல்லாமல் சிரித்து, செல்ல சண்டையிட்டு நெருக்கத்தைக் கூட்டி இருந்தனர் இருவரும். மெல்ல மெல்ல உணர்ச்சிகளை தூண்டி, இத்தாலி வயலினை மீட்ட நாள் குறித்தார் ராகவன்.
“பேபி! இன்னிக்கு நைட் சீ சைட் கேம்பிங் போகலாமா? நான் புக் பண்ணவா? உன் கை கோர்த்துக் கிட்டு இரவுல மின்னும் நட்சத்திரத்தை கணக்கு பண்ணனும்னு ஆசையா இருக்கு” அவளை கணக்கு பண்ண போவதை இண்டைரக்டா இப்படி தெரிவித்தார் அந்த ஜெகஜாலக்கில்லாடி.
“யூ ஆர் சச் அ ரோமாண்டிக்” கிறங்கினாள் மேரி. அவள் கன்னத்தை சிவக்க நிமிண்டினார் அவர். வலிக்கிறது என அவள் சிணுங்க, அடடா என அவர் தடவ இருவரும் கடை வீதியில் காதல் நாடகம் நடத்தினார்கள்.
சிரித்தபடியே வந்த மேரி, ஒரு கடையின் ஷோகேஸ் பொம்மையைப் பார்த்து பிரேக் போட்டதைப் போல் நின்றாள். அழகான வெள்ளை வேடிங் ட்ரெஸ் அது. அவளையே கவனித்த ராகவன்,
“ஷல் வீ ட்ரை?” எனக் கேட்டார்.
“நெஜமாவா?” வாயைப் பிளந்தார் மேரி.
“ஆமா டார்லிங். இந்த சட்டையில நீ ஸ்னோ வைட் மாதிரி அழகா இருப்ப” என பேசியவாறே அவளை உள்ளே அழைத்துச் சென்றார். கடை சிப்பந்தியிடம் சொல்லி, பிட்டிங் பார்க்க வைத்தார். மேரி அந்த உடையை அணிந்து பிட்டிங் ரூமிலிருந்து வெளியே வந்த போது, அவள் முன்னே மண்டியிட்டு மோதிரத்தைக் நீட்டி,
“வில் யூ மேரி மீ ரோஸ்மேரி?” எனக் கேட்டார். முகம் புன்னகைக்க, கண்கள் நீரை சொரிய கீழே தானும் மண்டியிட்டு அமர்ந்து ராகவனை அணைத்துக் கொண்டார் மேரி.
“யெஸ் ஐ வில் மேரி யூ மை டியர் வன்” என அழுதவாறே தலையாட்டினார் மேரி.
சுற்றி இருந்த கடை சிப்பந்திகள் கைத் தட்ட அங்கேயே மோதிரத்தை அணிவித்தார் ராகவன். அத்தோடு அந்த உடையையும் வாங்கிக் கொடுத்தார் அவளுக்கு. அந்த ப்ரோபசலைப் பற்றி அவள் தமக்கையிடமோ, தந்தையிடமோ கூட சொல்லவிடாமல் அவளை கைக்குள்ளேயே வைத்திருந்தார் ராகவன்.
அன்று இரவு கேண்டில் லைட் டின்னர் சாப்பிட்டுவிட்டு சீ சைட் கேம்பிங்குக்கு சென்றனர் இருவரும். கடலோரமாக இருவர் தங்குவதற்கு ஏதுவாக கேம்ப் அமைக்கப் பட்டிருக்கும். கேம்ப் முன்னே சுள்ளிகள் வைத்து நெருப்பு மூட்டப் பட்டிருக்கும். ஒரு கேம்ப்கும் மற்ற கேம்புக்கும் நடுவே நிறைய இடைவெளி இருந்தது. கடற்கரையில் காதல் கரையை தேடுபவற்களுக்கான சொர்க்கபுரி அது.
ராகவனின் மடியில் படுத்துக் கொண்டு மின்னும் நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தார் மேரி.
“வானத்தைப் பார்க்காம, என்னை ஏன் உத்து உத்து பார்க்கறீங்க?”
“வானத்துல மின்னும் நட்சத்திரத்த என்னால தொட முடியாது டார்லிங். ஆனா உன் கன்னக் கதுப்புல மின்னும் நட்சத்திரம் மட்டும் எனக்கே எனக்கு.” என சொல்லியபடியே கன்னத்தைத் தடவினார் அவர். மெய் சிலிர்த்தது மேரிக்கு.
அவர்கள் கலாசாரத்தில் ஆண் பெண் உறவு என்பது சர்வ சாதாரணம். பெற்றவர்களே பிள்ளைகளுக்கு தகுந்த பாதுகாப்பு முறையை சொல்லிக் கொடுப்பார்கள். பள்ளியிலிலும் சேப் செக்ஸ் பற்றி போதிக்கப்படும். மேரியின் வாழ்க்கையில் நுழைந்த முதல் காதலன் ராகவன் தான்.
அவரின் தொடுகை ஒவ்வொன்றும், அவளின் நாடி நரம்புகளை மீட்டியது.
“உன் கூட இருக்கற ஒவ்வொரு நிமிடமும் நான் என்னோட கவலை எல்லாத்தையும் மறந்துருறேன் மேரி. என் வாழ்க்கையில வந்த வசந்த காலம் நீ. என்னோட கசப்பான பக்கங்களை மீண்டும் இனிப்பா மாத்துனது நீதான்.” சொல்லியவர் மென்மையாக அவள் உதட்டில் தன் உதட்டைப் பொருத்தினார். மென்மை கொஞ்சம் கொஞ்சமாக வன்மையாக மாறிய நேரம், அவளை அணைத்தவாறே தூக்கிக் கொண்டு கேம்பினுள் நுழைந்தார்.
“ஆர் யூ ஓன் தெ பில்(pill)?” கேட்கவும் தவிரவில்லை அவர். அவள் தலை ஆமோதிப்பாக அசைந்தவுடன் தான் அடுத்தக் கட்டத்துக்கு சென்றார் ராகவன்.
மறுநாள் சுள்ளென சூரியன் தடிமனான கேம்ப் துணியையும் மீறி முகத்தில் அடிக்கவும் தான் எழுந்து அமர்ந்தாள் மேரி. முகம் மின்ன, பக்கத்தில் பார்த்தாள் ராகவனைக் காணவில்லை. அவசரமாக கையில் கிடைத்த உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தவள்,
“வன், வன்! வேர் ஆர் யூ?” என கத்தினாள். கண்ணுக்கெட்டிய தூரம் பார்வையை சுழற்றினாள், யாரையும் காணவில்லை. மீண்டும் கேம்பில் நுழைந்துப் பார்த்தாள். அவள் கொண்டு வந்த பேக் மட்டும் தான் இருந்தது. ராகவனின் பேக்கை காணவில்லை. மண்டையில் மணி அடிக்க, சரிந்து அப்படியே அமர்ந்தாள் மேரி. கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.
“ஐ லவ்ட் யூ சோ மச் வன். ஹொவ் குட் யூ டூ திஸ் டு மீ?” கதறினாள் அவள்.
இந்தியாவுக்கு செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்த ராகவன்,
‘ஸ்வீட் லிட்டல் ஏஞ்சல், குட் பை’ என மனதிற்குள்ளேயே பேசியவர் உதட்டில் உறைந்த சிரிப்போடு தூங்கிப் போனார்.
Leave a Reply