Mk 18

eiS8VZ63923-8e703854

Mk 18

அத்தியாயம் 18

வீட்டிற்க்குள் வந்த அவளுக்கு குமட்டி கொண்டு தான் வந்தது . அவனால் வாந்தி எடுக்க வேண்டியவள் அவன் வீட்டில் வரும் துறுநாற்றத்தால் வந்தது .

அவனது பிடியிலிருந்து வேகமாக தன் கையை விடுவிக்க பார்க்க அவனோ விடாது பிடித்து இருந்தான் .

“கொஞ்சம் கைய விடுறீங்களா “

“எதுக்கு அப்படியே என்ன உள்ள வச்சி கதவை சாத்திட்டு வெளிய போகவா ” புருவம் உயர்த்தி கேட்கவே, தலையில் அடித்து கொண்டாள் அவள் .

“லூசா நீங்க ? நீங்களே நினைச்சாலும் என்னால போக முடியாது போதுமா .இப்போ கைய விட போறிங்களா இல்லையா “

“முடியாது . உன்ன நான் நம்ப மாட்டேன் ” மண்டையை இடவலாக ஆட்டி சொன்னவன் அவளது கையை கெட்டியாக பிடித்துக்கொண்டான் .

இழுத்து மூச்சொன்றை விட்டவள் , அவன் பிடித்திருந்த கையை நறுக்கென கிள்ளி விட , வெற்றியோ வலி தாங்க முடியாது அவன் பிடித்திருந்த பிடியை தளர்த்திட , இது தான் சரியான நேரம் என்று அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டாள் பெண் .

“கொஞ்சமாது அறிவிருக்கா டி உனக்கு , இப்படியா கிள்ளுவ” கையை தேய்த்தவாறே அவன் கேட்க,

” ஏன் ,உங்ககிட்ட இருந்தா கொஞ்சம் எனக்கு தர போறீங்களா என்ன? ” வம்பு வளர்க்க

“அப்படியே ஒன்னு விட்டேனா பாரு .ஓவரா பேசுற நீ “

“கொஞ்சமா பேசுனா என்ன பண்ண போறீங்க ,இல்ல அதிகமா பேசுனா தான் என்ன பண்ண போறீங்க ? சொல்லுங்க சொல்லுங்க “

“கொழுப்பு கூடி போச்சி உனக்கு . குறைச்சே தீரணும் ” என்றவன் அவளை அடிக்க ஓடினான் .

அவன் அடிக்க வருவது புறிந்து வீட்டை சுற்றி ஓட துவங்கினாள் .

இருவரும் மாறி மாறி ஓட்டம் பிடிக்க , இறுதியில் தடுக்கி விழுந்தாள் இனியா.

” அய்யோ அம்மா !” கத்தலோடு கீழே விழுந்தாள் .

விழுந்தவளை கண்டு வெற்றி அடக்கமுடியாமல் சிரி சிரியென்ன சிரித்தான்.

” உனக்கு தேவை தான் இது. என்னை கிண்டல் அடிச்சில , அதுக்கு தான் இந்த தண்டனை ” என சொல்லி சிரிக்க

” ஓவரா பேசாதீங்க ” என்றவள் தும்ம தொடங்கினாள்.

” என்னாச்சி ?”

” பேசாதீங்க நீங்க ” மீண்டும் தும்மினாள்.

“கொஞ்சமாவது வீட்டை சுத்தமா வச்சிருக்கீங்களா , பாருங்க இப்போ எனக்கு எப்படி தும்மல் வருதுன்னு ” என்றவள் மேலும் தும்மிய படியே கடினப்பட்டு எழுந்து நின்றாள்.

” ஏன் இந்த சுத்ததுக்கு என்ன குறைச்சல்?”

” என்ன குறைச்சலா , நேத்து வந்து வீட்ட சுத்தம் பண்ணவே இல்லையா என்ன? அங்க பாருங்க கிச்சன்ல குப்பை தொட்டி ஃபுல்லா இருக்கு. வீடு ஃபுல்லா தூசியா இருக்கு. ட்ரெஸ் எல்லாம் அங்கேயும் இங்கேயும் போட்டு வச்சியிருக்கீங்க , அதோட ஸ்மெல் தாங்க முடியல . அப்புறம் தும்மல் இருமல் எல்லாம் வராம இருக்குமா என்ன “

” நானும் உன் கூட தானே இருக்கேன். எனக்கு ஏதும் தும்மல் வரலையே “

” அதுக்கு மனிஷனா இருக்கனும் சார் ” அந்த நேரத்துலையும் கிண்டலடித்தாள் இனியா.

இனியாவை முறைத்த வெற்றி ,” சரி , அப்போ சுத்தம் பண்ணிடு . நான் வேலைக்கு கிளம்புறேன் “

” எனக்கு டஸ்ட் அலர்ஜி இருக்கு தடியன் சார். நீங்களே கொஞ்சம் சுத்தம் பண்ணிட்டு போய்டுங்களேன் சார் ப்ளிஸ் ” கெஞ்சும் குரலில் சொல்லி அவன் மனதை கரைக்க முயன்றாள்.

“அதெல்லாம் முடியாது எனக்கு நேரமாச்சு..”வெற்றி சொல்ல

” சரி , விடுங்க . நான் அத்தைக்கிட்ட சொல்லி எதாவது பண்ணிக்கிறேன் ” சொல்லி மொபைலை எடுக்க போக பார்த்தவளை வேகமாக தடுத்து நிறுத்தினான் வெற்றி.

” விடுங்க , நான் என்னோட அத்தைக்கு கால் பண்றேன். “

” ஒன்னும் தேவையில்லை.‌நானே வீட்டை சுத்தம் பண்ணிட்டு போறேன்.”

” சரி பண்ணுங்க. நான் இப்படி ஒரு ஓரமா உட்கார்ந்து பார்க்குறேன் ” என பக்கத்திலிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

********

” தடியன் சார் “

” தடியன் சார்…”

” சாரேஏஏஏஏஏஏ…”

வெற்றியோ அவளை கண்டு கொள்ளாது வேலை செய்து கொண்டிருந்தான்.

” யோவ் வெற்றி! கூப்பிடுறது காதுல விலலையா என்ன ?” மரியாதை தேய்ந்தது அவனுக்கு.

” என்ன மரியாதை எல்லாம் பலமா இருக்கு ” அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவாறே கேட்டான்.

” இல்ல , நான் உங்களை கூப்பிட்டேன். நீங்க தான் திரும்பியே பார்க்கல. அதான் இப்படி கூப்பிட வேண்டியதா போச்சி ” சிறிய குரலில் பயந்த பெண் பாவனத்தோடு இதழ் பிதுக்கி கூறினாள்.

வெற்றி அவளை பார்த்து முறைக்க ,” இங்க பாருங்க குப்பையா இருக்கு. இங்க வந்து கொஞ்சம் க்ளீன் பண்ணுங்கன்னு சொல்ல தான் கூப்பிட்டேன் . வேற ஒன்னும் இல்லை. “

” செஞ்சிட்டு தானே இருக்கேன். எனக்கென்ன நாற்பது கையா இருக்கு ,இரண்டு கை தானே இருக்கு. ஒவ்வொரு வேலையா தான் செய்ய முடியும் புரியுதா. உனக்கு வேகமா செய்யனும்னா நீ செய்றது ” துடப்பத்தை அவள் புறம் நீட்டினான் .

” இல்ல இல்ல எனக்கு தான் டஸ்ட் அலர்ஜி இருக்கே . எனக்கு எதாச்சும் ஆச்சுன்னா உங்களை அத்தை மாமா சும்மா விடமாட்டாங்க ” தலை தாழ்த்தி இமை சுறுக்கி கூறினாள்.

” முதல இப்படி பப்பி ஃபேஸ் வச்சி பேசுறதை நிறுத்து. இந்த ஃபேஸை வச்சி தான் எல்லாரையும் ஏமாத்துற நீ . என்னையும் சேர்த்து ” பொய் கோபத்தில் ஆரம்பித்தவன் இறுதி வார்த்தைகளை முணுமுணுக்க செய்தான்.

” யாரை ஏமாத்துறேன் சொல்லுங்க.? அப்புறம் வேற ஏதோ கடைசில சொன்ன மாதிரி இருந்தது. என்ன சொன்னீங்க ” நெஞ்சை நிமிர்த்தி கொண்டு கேட்டாள் இனியா .

” உண்மைய தானே சொன்னேன் .உன்னால தான் உங்க அத்தை நான் கிட்ட தினமும் திட்டுவாங்குறேன் “

” நீங்க தப்பு பண்ணிருப்பீங்க அதுனால அத்தை திட்டிருப்பாங்க . ஒன்னுமே செய்யலைன்னா யாராவது திட்டுவாங்களா என்ன ?”

“மாட்டாங்க தான் .ஆனா ..” எதையோ கூற வந்தவனை இடைமறித்தவள் ,”பாருங்க பாருங்க நீங்களே ஒத்துக்கிட்டீங்க . அப்போ நீங்க ஏதோ தப்பு பண்ணிருக்கீங்க , என்ன பண்ணீங்க ?” ஆசிரியர் போல் கைகளை கட்டி கேட்டாள்.

“நான் எதுவும் பண்ணல . என்னைய வேலை பார்க்க விடு ” இனியா கூறிய இடத்தில் சுத்தம் படுத்த ஆரம்பித்தான் .

“போங்கு பண்ணாதீங்க. ஒழுங்கா என்ன பண்ணீங்கன்னு இப்போ சொல்றீங்க ?” அவனை நெருங்கி வந்து கேட்டாள்.

“அதான் ஒன்னும் இல்லைன்னு சொல்றேன்ல ,விடேன் “அவளை விட்டு சிறிது தள்ளி நின்றான் .

“நீங்க ஒன்னும் இல்லைன்னு சொல்ற ஸ்லாங்கே ஏதோ இருக்குன்னு தான் சொல்லுது. என்னென்னு என்கிட்ட சொல்ல கூடாதா என்ன, சொல்லுங்களேன் ” காதை தீட்டியவாறே மேலும் அவளை அறியாமலே அவனை நெருங்கி சென்றாள் .

” ஏதும் இல்லன்னு சொல்றேன்ல ” என்று சற்று அவளை விட்டு தள்ளி நின்றான் வெற்றி .

அவன் தள்ளி நிற்பது , தன்னிடமிருந்து தப்பிப்பதற்காக தான் என்று தவறாக நினைத்து முன்னே வந்தவள் கால் தடுக்கி அவன் மீதே விழுந்துவிட்டாள் .

இனியாவின் இந்த தடுமாற்றம் வெற்றி எதிர்பாராததால் இருவரும் சேர்ந்தே சோபாவின் மீது வீழ்ந்தனர் . சோபாவாலும் அவர்களின் கனம் தாங்க முடியாது போக இருவரும் கீழே உருண்டனர் .

இனியாவிற்கு ஏதாவது அடிபட்டுவிடுமோ என்று பயந்து அவளை தனக்குள் புதைத்து கொண்டான் வெற்றிமாறன்.

அவனது நெஞ்சாங்கூட்டில் நிம்மதியாக அவனது வாசத்தை உணர தொடங்கினாள் அவள்.

இருவரது அங்கபிரதட்சணமும் ஒரு முடிவுக்கு வர , வெற்றியின் மீது இனியா படுத்திருந்தாள்.

இருவரது இமையும் அதன் இணைகளை நோக்கி உலகத்தை மறந்து விட , புதுவிதமான உணர்வு இருவருக்குள்ளும்.

பார்வை பரிமாற்றம் அங்கே நடைப்பெற்றது.

” எங்கயாவது அடிப்பட்டிருக்கா என்ன?” பாசமாய் அவளது அக்கறையை கருத்தில் கொண்டு வெற்றி கேட்க

” காவலன் நீங்க இருக்கும் போது எனக்கு எதுவும் ஆகாது” புன்னகையோடு கூற அவளையே மெய்மறந்து பார்த்தான் அவளின் கணவன்.

‘தன் மீது இத்தனை நம்பிக்கை வைத்திருப்பவளை விட்டுவிட கூடாது. இறுதி மூச்சு வரை தன் மனைவியுடன் ஆசை தீர வாழ வேண்டும்’ என்ற ஆசை கூட அந்த நேரத்தில் அவனுக்கு எழுந்தது.

” உங்களுக்கு ஏதும் ஆகலையே ?” அதே பாசத்துடன் கேட்க

” இல்லையே . சுகமா இருக்கு ” உல்லாச நிலையில் அவன் சொல்ல

” நான் வெயிட்டா இருக்கிறதை தான் இப்படி சொல்றீங்களா என்ன?” முகம் சுருக்கி கேட்கவே,

” அடியே என் சில்! நீ அறிவாளி தான் போ ” அவன் கிண்டல் பண்ணினான்

அது புரியாத அவளோ ,” அதான் எனக்கு தெரியுமே ” கெத்தாக கூறி அவனது காலரை இழுத்து விட , மேலும் அவனோடு ஒன்றினாள்.

இதுவரை இருந்த மனநிலை மாறி , இருவருக்குள்ளும் ஒருவிதமான மாற்றம் உண்டானது.

விழியின் சங்கமத்தில் இருவரும் மயங்கி போய் கிடக்க , இருவரது இதழ்களும் அதன் இணையை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தது.

” மச்சான்…..” என்று சந்தோஷமாக உள்ளே வந்த கௌதம் ‘ அய்யோ ‘ என்ற கத்தலோடு திரும்பி நின்றான்.

அவனது கத்தலில் இருவரது மோனநிலையும் அறுந்து விட , பட்டென்று அவனை விட்டு எழுந்து கொண்ட இனியா நாணம் கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.

இத்தனை நேரம் தெரிந்த சுகம் இப்போது வலி எடுக்க , வெற்றியால் அத்தனை சீக்கிரம் எழுந்துக்க முடியவில்லை.

” மச்சான்…” மெதுவான குரலில் கௌதமை அழைத்தான்.

” ச்சீ.. ச்சீ.. நான் திரும்ப மாட்டேன் டா. நீ கிளம்பி சீக்கிரமா வெளிய வா . நான் உனக்காக கீழ பார்க்கீங்ல வெயிட் பண்றேன் ” என்றவன் , ‘ சிவ சிவா ‘ சொன்னபடி கீழே சென்றுவிட்டான்.

‘ இத்தனை வெயிட்டா இருக்காளே. முதல்ல வெயிட்டை குறைக்க சொல்லணும் ‘ நினைத்தவன் கடினப்பட்டு எழுந்து நின்று கைகால்களை உதறினான்.

பின் , வேக வேகமாக கிளம்பி வெளியே வரவும் அவனுக்காக ஒரு தட்டில் நான்கு டோஸ்டட் பிரெடும் ஒரு பெரிய டம்ளரில் பாலும் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பக்கத்தில் ஒரு மெமோ பேட் வைத்து அதில் ஹாப்பி டே என்று எழுதியிருந்தது.

பார்த்த வெற்றிக்கு இதழில் புன்னகை மெலிதாக மலர்ந்தது.

இது ஒருவிதமான புது அனுபவம் வெற்றிக்கு.

அவனது வழக்கமான பொழுதுகளில் எல்லாம் சாப்பிட கூட நேரமென்பது இருக்காது. இருக்காது என்பதை விட , அதற்காக ஒதுக்கியதில்லை.

இப்போது இதையெல்லாம் பார்க்கவும் வாழ்க்கையே வண்ணமையமாக தெரிந்தது.

அதற்குள் அவனுக்கு கௌதமிடமிருந்து அழைப்பு வரவே , பாலை குடித்துவிட்டு இரண்டு ப்ரெடை உள்ளே தள்ளியவன் சிரித்த முகத்தோடே கீழே சென்றான்.

******

அன்றைய தினம் முழுவதும் , இனியா வீட்டை சுத்தம் செய்வதிலே தன் முழு நேரத்தையும் செலவழித்தாள்.

ஒவ்வொரு வேலையையும் பார்த்து பார்த்து செய்தாள் இனியா . அவள் அவளது வீட்டில் இருக்கும் போதே அவளது வேலைகளை அவளே தான் செய்து கொள்வாள் .

பெரும்பாலும் தந்தை வீட்டில் இருக்க மாட்டார் . அதனால் அங்கு அன்னை வைப்பது தான் சட்டம் .அதில் ஒன்று தான் , தன் வேலையை தானே செய்து கொள்வது. அவள் சாப்பிட்டாளா, இல்லை என்ன வேலை செய்கிறாள் என்று கூட கவனித்து கொள்ள மாட்டார் காந்திமதி . ஏனோ தானோ என்று தான் அவரது நடவடிக்கை எல்லாம் இருக்கும் .

தன்னை யாரும் கவனிக்க வேண்டும் என்பது அவள் எண்ணம் இல்லை . ஆனாலும் பள்ளியில் அவள் கூட படிக்கும் மாணவர்களுக்காக மதிய உணவு கொண்டு வரும்போது ஏக்கமாக தான் இருக்கும் , அதை அவள் கடந்து வந்துவிட்டாள் .

கிடைக்காது என்று தெரிந்த பின் அதற்காக ஏங்கி நிர்ப்பது வீண் என்று அவளுக்கு தோன்றியது . அதனால் தான் விஜயசாந்தி ஊட்டிவிடும் போது அவளுக்கு கண்ணீர் வந்ததே .

இன்று தனக்கு என்று ஒரு சொந்தமான இடம் என்பதால் , அதனை நேரம் பார்த்து பார்த்து ஒவொன்றையும் செய்தாள் . அதில் அத்தனை சந்தோஷம் , எதில் இருந்தோ விடுபட்ட உணர்வு .

அந்த நேரம் பார்த்து அவளது தோழி ரோஷினி அவளுக்கு அழைத்திருந்தாள் .

“ஹலோ ” காட்டமாகவே சொன்னாள் இனியா .

“மேடம்க்கு இன்னும் கோபம் போகல போலையே ?” கேலி குரலில் கேட்க

“நான் யாரு உங்க மேல கோப பட சொல்லுங்க . நீங்க எல்லாம் பெரிய ஆளுங்க , நாங்க போய் கோபப்படுவோமா “கோபமாகவே வெளிவந்தது இனியாவிற்க்கு .

“ஐயம் சாரி டா . பாப்புக்கு உடம்பு சரில்லாம போயிடுச்சி , அதான் வர முடியல . இல்லன்னா என்னோட பிரென்ட் கல்யாணத்துக்கு வராம இருப்பேனா சொல்லு ” திருமணதிற்கு வராததற்கு மன்னிப்போடு காரணத்தையும் கூற பதறிப்போனாள் இனியா .

“ரோ , பாப்புக்கு என்ன ஆச்சி ? இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லையே ” பதறிய குரலில் இனியா கேட்டாள் .

” ஒன்னும் ப்ரோப்ளம் இல்ல டா . எதையோ பார்த்து பயந்துட்டா போல ,ஹை பிவேர் வந்துடுச்சி . அதனால ரெண்டு நாள் ஹாஸ்பிடல இருக்க வேண்டியதா போச்சி “

” இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லையே . நான் நாளைக்கு பாப்புவ பார்க்க வீட்டுக்கு வரேன்.”

” அடமக்குபிள்ளையே , உனக்கு கல்யாணம் தானே டி உனக்கு ஆச்சி. ” சற்று சந்தேகமாக ரோஷினி கேட்க

” ஏன் டி அதுல என்ன சந்தேகம் உனக்கு?”

” இல்ல , பாப்புவ கேர் டேக்கர்ல சேர்த்து விட்டதே நீ தான். இப்போ நீயே மறந்துட்டு பேசுற . அதான் கேக்குறேன் உன்னவர் ஞாபகத்துல எங்க எல்லாரையும் மறந்துட்ட போலையே” ரோஷி கேலி பண்ணி சிரிக்க

” ச்சீ போ ” சிணுங்கினாள் பெண்.

” சரி , சண்டே ரெண்டு பேரும் வீட்டுக்கு வாங்க. புதுதம்பதியனருக்கு என் கையால விருந்து . வந்திருங்க சரியா”

” வந்துடுறோம் டி . நீ பாப்புவ பார்த்துக்க ,நான் வைக்கிறேன் ” என்று கூறி அழைப்பை அணைத்தாள் இனியா.

ஆறு மணிப்போல் வெற்றிக்கு அழைத்தாள் இனியா.

” சொல்லு சில்…”

” கொஞ்சம் கடைக்கு போகணும் . வீட்டுக்கு வரீங்களா ?”

” சரி நீ கிளம்பி இரு , நான் ஒரு அரைமணி நேரத்துல வந்தறேன் ” என்று வைத்தான்.

அடுத்த அரைமணி நேரத்தில் வெற்றி சொன்னது போல் வந்துவிட்டான்.‌பின் அவளுக்கு அழைத்து கீழே வர சொன்னான்.

அவளும் வந்துவிட , இருவருமாக டூவீலரில் சூப்பர் மார்க்கெட் நோக்கி சென்றனர்.

இனியாவிற்கு அவனோடு செல்லும் அந்த பபணம் இனிமையாக இருந்தது.

அதேநேரம் வெற்றிக்கு இது ஒரு புதுவித உணர்வு தான். இத்தனை வருடத்தில் தன் வண்டியில் அன்னையை தவிர்த்து யாரையும் ஏற்றாத நிலையில் இப்போது தனக்கே தனக்கென்ன சொந்தமான பெண் , தான் வாங்கிய வண்டியில் தன்னுடன் வருவது ஒருவிதமான இன்பத்தை கொடுத்தது.

இது பிடிக்கவும் செய்தது வெற்றிக்கு! அந்த நேரத்தை இரசிக்கவும் செய்தான் !

இருவருமாக பக்கத்திலுள்ள சூப்பர் மார்க்கெடிற்கு சென்றனர்.

” நீ போய் வாங்கிட்டு வா சில் . நான் இங்க வெயிட் பண்றேன் ” என்க

” அது எப்படி முடியும் வெயிட்டை யார் தூக்குவா சொல்லுங்க ” கைகளை மார்புக்கு நடுவில் கட்டி கொண்டு கேட்க

” எனக்கு டையர்டா இருக்கு மா. ப்ளிஸ் நீயே கொஞ்சம் ஷாப்பிங்கை முடிச்சிடேன் ” வெற்றி கெஞ்ச

” சரி நானே பார்த்துக்குறேன் . நீங்க இப்படி உட்கார்ந்து இருங்க ” என்று சொல்லி சோகமான முகத்தை கொண்டு ட்ராலியை எடுத்து உள்ளே செல்ல பார்த்தவளை ” சில் ” என்று அழகான அழைத்தான்.

அவள் திரும்பி பார்த்து என்னவென்று கேட்க ,” வா நானும் கூட வரேன்.” என்றவனை பார்த்து முகம் பிரகாசமானது.

” இல்ல டையர்டா இருக்குன்னு சொன்னீங்களே ” அவன் முகத்திலுள்ள சோர்வை பார்த்து கேட்க

” பரவால்ல வா. நம்ம வீட்டுக்கு தானே ஷாப்பிங் செய்றோம். சேர்ந்தே செய்யலாம் “

இருவரும் மகிழ்வோடு ஷாப்பிங் செய்தனர்.

” என்ன நீ இவ்வளவு வாங்குற ? நான் வாங்கிற சம்பளம் இதுக்கே போயிடும் போலையே” அதிர்ந்து போய் கேட்க

” அப்படியே நீங்க வீட்டில சமைக்க தேவையான பொருட்கள் எல்லாம் வச்சிருக்கீங்க பாருங்க. அங்க மதியம் சமைக்கலாம்னு பார்த்தா எந்த விதமான பொருளுமே இல்லை.‌அதான் இந்த ஷாப்பிங் தடியன் சார்.” பேசிய படியே தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கியாச்சா என்று சரி பார்த்தாள்.

“என்ன சில் எல்லாம் வாங்கியாச்சா?”

” வாங்கியாச்சு தடியன் சார் . இன்னும் ஒன்னே ஒன்னு தான் வாங்கணும். அதுவும் வாங்கிட்டா நாம போயிடலாம்.” என்க

” சரி சீக்கிரமா வாங்கு ..”

” சரி ” என்றவள் பிஸ்கெட் இருக்கும் இடத்திற்கு சென்று அனைத்திலும் ஒரு பாக்கெட்டை தூக்கி அதில் போட , பார்த்த வெற்றி அதிர்ச்சியடைந்து விட்டான்.

” எதுக்கு இவ்வளவு பிஸ்கெட்ஸ் எடுக்கிற ? அண்ணன் கூட இப்போ வரலைன்னு சொல்லிட்டானே. அப்புறம் எதுக்கு இவ்வளவு , யாராவது கெஸ்ட் வராங்களா என்ன?” புரியாது கேட்க

” யாரும் வரலை. இதெல்லாம் என் ஒருத்திக்கு தான். “

” இவ்வளவும் உன் ஒருத்திக்கா ” விழி விரித்து கேட்க

” ஆமா கண்ணு வைக்காதீங்க தடியன் சார் . அப்புறம் எனக்கு தான் வயிறு வலிக்கும் ” சிணுங்கினாள் பெண்.

” அப்படியே வலிக்காம இருந்துட்டாலும் . வா பில்லை போடுவோம் ” அவளை அழைத்து கொண்டு பில் போடும் இடத்திற்கு வந்தான்.

பில் போட்ட பிறகு , அவனை அழைத்து கொண்டு காஃபி ஷாப்பிற்கு சென்றவள் , ஒரு காப்பியை ஆர்டர் கொடுத்தவள் அதன் கூடவே சிக்கன் மோமோஸ் ஆர்டர் செய்தாள்.

ஆர்டர் வரவும் ” இந்தாங்க உங்களுக்கு பிடிச்ச மோமோஸ் ” என்று ப்லேட்டை அவன் புறம் திருப்பினாள்.

” வாவ் மோமோஸ் ” ஆசையாக ஒன்றை சாப்பிட எடுத்தவன் கேள்வியாக அவளை பார்த்து புருவம் உயர்த்தினான்.

” எப்படி எனக்கு மோமோஸ் பிடிக்கும்னு உனக்கு தெரியும் ? ” கேள்வி கேட்க

” ஹான் , அதுவா அது அத்தை தான் சொன்னாங்க ” தடுமாற்றத்துடன் சொல்ல

” ஹோ..” என சாப்பிட ஆரம்பித்தவன் மீண்டும் அவளை பார்த்து கேள்வியாய் புருவம் உயர்த்தினான்.

” இல்லையே , அம்மாக்கு இதெல்லாம் தெரியாதே. ஒழுங்கா உண்மையை சொல்லு , உனக்கு எப்படி எனக்கு மோமோஸ் ரொம்ப பிடிக்கும்னு தெரியும் ” கேள்வி கேட்டு அவளது பதிலுக்காக காத்திருக்க , மாட்டிக்கொண்ட தவிப்போடு அவனை பார்த்தவாறே கைகளை பிசைந்தபடி இருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!