Mk 23

FB_IMG_1631334494200-c970108c

Mk 23

மயங்கினேன்.!கிறங்கினேன்.!

அத்தியாயம் 23

இனியா மருத்துவ மனையிலிருந்து வீடு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.

 

இனியாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்ததும் விஜயசாந்தியும் பரமசிவமும் ஓடோடி வந்துவிட்டனர்.

 

இந்த ஒருவாரமும் இனியா வெற்றியிடம் பாராமுகத்தை தான் காட்டி கொண்டிருக்கிறாள்.

 

உண்மையை இவன் கூறியிருந்தாலோ அல்லது அவள் சொல்லும்போதே தெளிவாக கூறியிருந்தாலோ இப்படி ஒருவாரக்காலம் மருத்துவமனையில் இருந்திருக்க வேண்டாம்.

 

மருத்துவமனையில் வாசம் செய்த இனியா கூட நன்றாக தான் இருந்தாள் .ஆனால் அவளை பார்த்து பார்த்தே இவன் உள்ளுக்குள் மறுகிபோனான்.

 

இப்போது இவளின் ஜாகை வெற்றியின் அறை தான். ஆனால் வெற்றியின் ஜாகையோ ஹால் சோஃபாவாக மாறியது.

 

காலையில் சீக்கிரமே எழுந்த வெற்றிக்கு இனியாவை காணும் ஆவல் பெருகி இருந்தது.

 

வீட்டிற்கு வந்த நாளிலிருந்து இனியா அவனிடம் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி கொண்டிருக்கிறாள்.

 

இப்போது வீட்டில் அவனை தவிர வேறு யாரும் இன்னும் எழுந்திரிக்கவே இல்லை.

 

இனியாவை காண அறைக்கு செல்லலாமா வேண்டாமா என்ற சிந்தனையோடே உலா வந்தவனை இடைமறித்தது கௌதமிடம் வந்திருந்த அழைப்பு .

 

‘ இந்த எரும எதுக்கு எனக்கு ஃபோன் பண்ணி இருக்கு ‘ என்ற நினைப்போடே அழைப்பை ஏற்றான்.

 

” டேய் அறிவுக்கெட்டவனே !” எடுத்த எடுப்பிலேயே கத்த ஆரம்பிக்க ,

 

” எதுக்கு இத்தனை நல்ல வார்த்தையை யூஸ் பண்ற மச்சான் ” சிரிப்போடு கேட்கவே கடுப்பானான் கௌதம்.

 

” என்கிட்ட வாங்கி கட்டிக்காத டா. உனக்கு இன்னும் விடியலையோ சார்க்கு ஸ்டூடியோ வர ஐடியாவே இல்ல போல “

 

” வரனும் டா மச்சான் ” சலித்து கொண்டே சொல்லவும் தலையில் அந்த பக்கம் அடித்து கொண்டான்.

 

” ஒழுங்கா கிளம்பி வந்து தொலை டா ” 

 

” வரனும் டா . ஆனா வரனுமான்னு இருக்கு மச்சான் ” 

 

வெற்றியின் பேச்சில் ‘ ஐயோ ‘ என்றானது கௌதமுக்கு.

 

” சீக்கிரமா கிளம்பி வர பாரு மணி ஆகுது ” என்று வைக்க பார்த்தவனிடம் டீல் பேசலானான் வெற்றி.

 

” மச்சான் நான் வேலைக்கு வரனும்னா எனக்கு ஒரு ஐடியா குடுடா ?”

 

” என்னாத்துக்கு ?”

 

” வேற என்ன கேக்க போறேன் என்னோட சில்லை பார்க்க தான் ” 

 

” செருப்பால அடிப்பேன் என் தங்கச்சி கிட்ட போனேனா . சீக்கிரமா ஒரு டிவேர்ஸ் பேப்பர்ஸை ரெடி பண்ணி அனுப்பிவிடுறோம் டா சைன் பண்ணி குடுத்து விடு ” 

 

” மச்சான் ” அலறிவிட்டான் வெற்றி .

 

” கத்தாத காது வலிக்குது. நான் ஃபோனை வைக்குறேன் ” என்று வைத்தும் விட்டான்.

 

‘ ச்சை பேருக்கு தான் எனக்கு நண்பன் ஆனா அன்பு அக்கறை எல்லாம் அந்த வண்டுக்கு தான். அப்போ நான் ஆரோ தான் போல ‘ உள்ளுக்குள் புலம்பிய படி அவனது அறையை பார்வையால் நோட்டம் விட்ட படி இருந்தான்.

 

அப்போது தான் எழுந்து வந்த விஜயசாந்தி மகன் விழித்திருப்பதை பார்த்து அறையை நன்றாக மூடிவிட்ட பின்பே தான் வெளியே வந்தார்.

 

” இன்னும் வேலைக்கு போகாமா இங்க என்ன டா பண்ற  ” மகனை பார்த்து கேட்ட படி ஃப்ரிட்ஜில் இருந்து பால் பாக்கெட்டை எடுத்தார்.

 

” உண்ணா விரதம் எடுக்கிறேன் ” முறைத்த படி சொல்ல

 

” சரி இருந்துட்டு போ எனக்கென்ன ” தோளை குலுக்கி கொண்டு பால்லை காய்ச்சினார்.

 

எப்படி மனைவியை காண்பது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருந்தவனை பார்த்த விஜயாவிற்கு மகனை நினைத்து சிரிப்பு தான்.

 

‘இத்தனை பாசம் வைத்திருக்கிறவன் எதற்காக மனைவியை அடிப்பானேன் ‘ காப்பியை கலந்தவர் மகனிடம் நீட்டினார்.

 

” எனக்கு வேணாம் ” முறுக்கி கொண்டான்.

 

” தம்பிக்கு நினைப்பு தான். அதான் உண்ணா விரதம்னு சொல்லிட்டல அப்றம் என்ன ” என்றதும் அன்னையை முறைத்து பார்த்தான்.

 

” அட மக்கு மகனே ! இதை போய் உன் பொண்டாட்டி கிட்ட கொடு டா ” விஜயா சொல்லவும் மகனின் முகம் தௌசன்ட் வாட்ஸ் பல்ப் போல் பிரகாசமாக எரிந்தது.

 

அதை வாங்கிய வெற்றி அன்னையின் கன்னத்தில் முத்தமொன்றை பதித்து விட்டு ” தேங்க்ஸ் மா ” என்று அறையை நோக்கி சென்றான்.

 

அவளை பார்த்து இரண்டு நாட்கள் தான் ஆகியது அதுவே ஏதோ பல வருடங்கள் பார்க்காதது போலான ஓர் உணர்வு. 

 

அறைக்குள் நுழைந்ததுமே மனைவியின் பிரத்யேக வாசனையை உணர முடிந்தது.

 

‘ இந்த அறைக்கே இப்போ தான் ஒரு உயிர்ப்பு வந்தது போல் இருக்கு ‘ பெருமூச்சு விட்டவன் குளியலறையில் இருந்த மனைவிக்காக காத்திருக்க துவங்கினான்.

 

அடுத்த சில வினாடிகளிலே குளியலறை திறக்கும் சட்டம் கேட்டு திரும்பி பார்த்தவன் சிலை போல் நின்றிவிட்டான்.

 

தலைக்கு குளித்து ஈரம் சொட்ட சொட்ட புடவை அணிந்து வந்த மனையாளை பார்த்து விழிகள் இரண்டும் அவளை இரசிக்க , அந்த இரசனைக்குறியவளோ அவனை கண்டு தீப்பிழம்பாய் முறைத்து நின்றாள்.

 

” சில் ” ஆசையாக அவன் அழைக்க , அவளோ முகம் திருப்பி கொண்டாள்.

 

அந்த திருப்பல் கூட கணவனை ரசிக்க தான் வைத்தது .

 

“பொண்டாட்டி “அவள் பக்கத்தில் வந்து ஆசையாக அழைக்க 

 

“பொண்டாட்டி கிண்டாட்டினு கூப்பிடீங்க அப்றம் நான் என்ன செய்வேனே எனக்கு தெரியாது. முதல உங்களுக்கு இங்க என்ன வேலை ,உங்கள யாரு உள்ள விட்டது ? ” விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்தபடி கேள்வி கேட்டாள் .

 

அப்படியே அவள் கையை பிடித்தவன் ,”என் செல்ல பொண்டாட்டியே !அப்படியே உன்ன ” என்றவன் அவளது முறைப்பில் அப்படியே வார்த்தையை முழுங்கியவன் நமட்டு சிரிப்பொன்றை அவளுக்கு கொடுத்தான் .

 

“மேடம் எதுக்கு முறைக்கிறீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா ” விரலோடு விரல் கோர்த்த படி இல்லாளை பார்த்து சிரிப்போடு கேட்க ,

 

“ஏன் நான் எதுக்கு முறைக்கிறேன்னு உங்களுக்கு தெரியாதோ . முதல கைய விடுங்க ” அவனிடமிருந்து தன் விரலை உருவ முயன்றாள் .

 

“உன்னால என்கிட்ட இருந்து உன் விரல கூட பிரிக்க முடியாது செல்லம் “

 

“உங்களை யாரு இந்த ரூம்குள்ள விட்டது ?”

 

“இது நம்ம ரூம் டி ” 

 

“சாரி ,இது உங்க ரூம் “என அவள் திருத்தி கூற ,

 

“எங்க இன்னொரு தடவை சொல்லு பாப்போம் “புருவம் உயர்த்தி சொல்ல ,

 

“ஒரு தடவை என்ன பல தடவை சொல்லுவேன் . இது உங்க ….” என்றவளின் அடுத்த வார்த்தை அவன் இதழுக்குள் அடங்கியது .

 

இருவருக்குமான இரண்டாவது இதழ் முத்தம் . முதல் முத்தம் மருத்துவ முத்தமாகிவிட இருவருக்குமே அந்த நினைவு கூட இல்லை .

 

ஒற்றை முத்தத்திலே தன் காதல் முழுவதையும் அவளிடம் சேர்க்க நினைத்து சேர்ப்பிக்கவும் செய்தான் .ஆனால் எதிர்புறத்தில் இருந்தவளுக்கு இந்த முத்தம் கசக்க தான் செய்தது .அவளால் இதனை ஏற்று கொள்ளவே முடியவில்லை .அவனிடமிருந்து தன்னை விடுவிக்க போராட, அவனோ அவளை தன் பிடியில் வைத்திருந்தான் .

 

அவளது இயலாமையை எண்ணி கண்ணீர் கசிந்து அவனது மார்பை நனைக்கவும் தான் அவளை தன்னிடம் இருந்து வேகமாக பிரித்தான் .

 

“ஏன் இப்படி பண்றிங்க வெற்றி ? என்னால இது எதையும் ஏத்துக்க முடியல . நான் ஹாஸ்பிட்டல இருந்தவரைக்கும் நீங்க என்மேல காட்டின அந்த அன்பு உங்களோட அந்த தவிப்பு அக்கறை பாசம் இதெல்லாம் எதுக்கு ,எத்தனை நாளுக்கு ? அடிச்சுட்டு அப்படியே விட்ருந்தா கூட எனக்கு வலிச்சுருக்காது வெற்றி ஆனா உங்களோட அக்கறை எனக்கு ஏதோ நெருப்பு மேல நிக்கிற மாதிரி ஒரு உணர்வை கொடுக்குது ” கண்ணீரோடே அவனை அடித்தப்படி சொன்னாள் .

 

அத்தனை அடியையும் தாங்கி கொண்டவன் அவளை இருக்கையில் அமர வைத்து அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தான்.

 

முதலில் வாங்க மறுத்தவள் பின்பு அதனை வாங்கி சிறிதளவு குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

 

 “நான் உன்கிட்ட பேசணும் இனி மா. நம்ம பேசாதது தான் நம்மலோட இத்தனை பிரச்சனைக்கும் காரணமே. இனி அப்படி ஒன்னு நம்ம வாழ்க்கையில நடக்க கூடாது ” என்றவன் அவளது கையை மென்மையாக பிடித்து கொண்டான்.

 

இனியா அதனை உருவ முயல ,” வேண்டாமே இனி உன்னோட விலகல் என்னை உயிரோட கொன்னுடும் டா ” என்றதும் அமைதியாகிவிட்டாள்.

 

” உன்ன ஒரு தடவை அடிச்சதுக்கே நான் உயிரோட செத்து போய்ட்டேன் டி . பொதுவா நான் யாரையும் அடிக்க மாட்டேன் ஆனா அன்னைக்கு நீ பேசியதை என்னால ஜீரணிக்கவே முடியல அதுனால தான் என்னையும் மீறி அடிச்சிட்டேன் ” என்றவன் வருந்தி அவளது கன்னத்தை மென்மையாக தொட்டான்.

 

” உன்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி உங்க அம்மா என்கிட்ட பேசுனது எல்லாமே உண்மை தான் இனி. ஆனா நீ பாதி தான் கேட்டிருக்க ” என்றதும் இனியா அவனை புரியாது ஒரு பார்வை பார்க்க , வெற்றி அன்றைய தினம் நடந்த விடயத்தை கூறினான்.

 

இனியாவிற்கு தன் அவசர புத்தியை எண்ணி உள்ளுக்குள்ளே நொந்து போனாள்.

 

” இது என்னுடை தப்பாவே இருந்துட்டு போகட்டுமே ஆனா நீங்க உங்க காதலியோட வாழ தானே ஆசைப்படுறீங்க . இதுக்கு எதுக்கு நான் இடைஞ்சல் சொல்லுங்க “

 

” என் பொண்டாட்டி அழகு பொம்மை போல் இருக்கும்போது எனக்கு எதுக்கு இன்னொரு பொண்ணு சொல்லு ” 

 

‘ஞே ‘ என விழித்தாள் பெண்.

 

” என்ன உளறல் இது ?” கண்டன பார்வை பார்க்க ,

 

” உளறல்லாம் எதுவும் இல்லை. உன் கழுத்துல என்னைக்கு நான் தாலி கட்டினேனோ அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் இனி இனியா தான் எனக்கு எல்லாம்னு ” என்று சொன்னதும் இளக்காரமாய் சிரித்தாள் இனியா.

 

” எதுக்கு இத்தனை பொய் சொல்றீங்க வெற்றி? என்ன உயிரோட வதைச்சி தான் வெளிய அனுப்புவீங்களா ?” வேதனையை அப்பட்டமாக அவள் கண்கள் காட்டியது.

 

” கண்டிப்பா கிடையாது மா. உன்னை நான் திட்டிருப்பேன் தவிர என்னைக்குமே உன்ன என் வாழ்க்கையை விட்டு போன்னு சொல்லிருக்க மாட்டேன். எனக்கு கோபம் நீ மட்டும் உண்மையை சொல்லியிருந்தா அப்படி ஒரு இக்கட்டான நிலையில் வந்திருக்க மாட்டேனேன்னு. அதான் அதை அப்படி காட்டினேன் ” என்றதும் இனியா யோசித்தாள் .

 

வெற்றி தன் வாழ்க்கையை விட்டு போ என்று சொன்னது போல் அவள் நினைவலைகளில் இல்லை என்றாலும் ” அப்போ உங்க காதலி வந்து பேசுனது ஒன்னும் பொயில்லையே வெற்றி , அவ தான் சொன்னாளே நீங்க அவளை தான் காதலிக்கிறீங்கன்னு?” இடக்காக கேள்வி கேட்டாள்.

 

” அவளை நான் காதலிச்சேன்னா இல்லையான்னு எனக்கு தெரியாது இனியா. ஆனா இப்போ என் மனசுல அவ இல்லை அது மட்டும் நிஜம் ,அதை ஊருல இருக்கும்போதே நான் புரிஞ்சிக்கிட்டேன் . நீ எனக்கு தண்டனை தரதா நினைச்சிட்டு போனியே சத்தியமா சொல்றேன் நீ போனப்போ எனக்கு எதுவும் தெரியலை ஆனா நேரம் போக போக என்னால நிம்மதியா இருக்கவே முடியல , உன்ன பார்த்த பின் தான் உயிரே வந்தது தெரியுமா . அப்ப உணர்ந்தேன் என் மனசு உன்ன என் மனைவியா ஏத்துக்கிச்சுனு . யாரெல்லாம் என்னையும் உன்னையும் சேர்த்து வச்சதுக்காக அந்த திட்டு திட்டினேனோ அவுங்க எல்லார்க்கிட்டையும் நீ கிடைக்க வச்சதுக்காக நன்றி சொன்னேன் ” என வெற்றி சொல்லவும் இனியாவின் கண்கள் பெரிதாக ஆச்சரியத்தில் விரிந்தது.

 

” அப்புறம் இசை , அவ நம்மளோட வாழ்க்கையில திரும்ப நுழைவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் எதெல்லாம் நான் நிஜம்னு நினைச்சிட்டு இருந்தேனோ அதெல்லாம் பொய்ன்னு சொல்லி வந்து நிக்கிறா தலையில கட்டோட . யாரோ ஒருத்தருக்கே பாவம் பார்த்து நல்லது செய்றவன் நான் , இதுல அவளை ஆறு மாசம் நினைச்சிட்டு இருந்திருக்கேன். எப்படி அவளோட ஹெல்த் கண்டிஷன் தெரிஞ்சும் உண்மையை சொல்றது சொல்லு . மனசு வரல இனி மா அதான் உண்மையை கொஞ்ச நாள் மறைக்க நினைச்சேன் . ஆனா அது இப்படி ஒரு வினையை கொடுக்கும்னு நான் எதிர்பார்க்கல்ல ” என பெருமூச்சு விட்டான் வெற்றிமாறன்.

 

” அந்த பொண்ணுக்கு என்னாச்சி?” சிறிது பதற்றத்துடன் கேட்க ,

 

” ஆக்சிடென்ட்ல தலையில அடிப்பட்டு ஏதோ நரம்பு பிரச்சனையாம் இனி . ஆப்ரேஷன் பண்ணாலும் ஐம்பது சதவீதம் தான் உயிரோட இருக்க முடியும்னு சொல்றாங்க ” இனியாவின் முகம் ஒரு நொடி கவலையை காட்டி மீண்டது.

 

” அவ உன்கிட்ட பேசியது கேட்டதும் எனக்கு உன்மேல தான் கோபம் வந்தது. எங்க உரிமை இருக்கோ அங்க தானே கோபம் வரும் சொல்லு , கோபமா வீட்டுக்கு வந்து பார்த்தா அவ சொன்னது போலவே நீயும் பையை தூக்கிட்டு வந்து நிக்கிற மனிஷனுக்கு எப்படி இருந்திருக்கும்னு நினைச்சி பாரு “சிறிது சிறிதாக இனியாவிற்கு அவனின் நிலை விளங்க தொடங்கியது.

 

” சாரி அன்னைக்கு நான் கிளம்புனது அவளுக்காக இல்லை. சுமதிமாக்கு நெஞ்சு வலின்னு அப்பா ஃபோன் போட்டதுனால தான் கிளம்பினேன். நீங்க கிளம்பிட்டப்போலன்னு கேட்டதும் அப்பா உங்க கிட்டயும் சொல்லிட்டாரு நினைச்சிட்டு தான் பேசினேன் . அது இப்படி ஆகும்னு நினைக்கல ” வருத்தத்துடன் கூறியவளை அணைத்து ஆறுதல் படுத்தினான் வெற்றி.

 

” பரவால்ல விடு மா. நீ என்ன நினைச்சு பேசினன்னு எனக்கும் தெரியல , நான் என்ன நினைச்சி பேசினேன்னு உனக்கும் தெரியல அதான் இந்த மாதிரி ஆக காரணமே விடு இதுவும் நல்லதுக்கு தான் இல்லைன்னா நாம இப்படி உட்கார்ந்து பேசிருப்போமான்னு தெரியல ” 

 

” இனி என்னோட வாழ்க்கையில இந்த இனியா மட்டும் தான். அவளை தவிர யாருக்கும் என் வாழ்க்கையில இடம் இல்லை ” என்று வெற்றி தீவிரமாக அவள் கண்ணை பார்த்து சொன்னாலும் இனியாவால் சட்டென்று அதனை ஏற்று கொள்ள முடியவில்லை.

 

” உன்னால சட்டுன்னு இதை ஏத்துக்க முடியாதுன்னு எனக்கு புரியுது . வார்த்தைகளை விட வாழ்ந்து காட்றேன் சில். நமக்கிடையில இனி எந்த விதமான ஒழிவு மறைவும் இருக்க கூடாது. நான் இனி அப்படி தான் இருப்பேன் நீயும் அப்படி தான் இருப்பன்னு நான் நம்புறேன் ” என அவளது பட்டு கன்னத்தை தட்டிவிட்டு வேலைக்கு வேகமாக கிளம்பினான் வெற்றிமாறன். 

 

போகும் போது மனைவியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு ” டேப்லெட்ஸ் எல்லாம் கரக்டா எடுத்துக்கோ . இவ்னிங் ரெடியா இரு ஹாஸ்பிடல் போகனும் ” என்று விட்டு சென்றவனை பார்த்தப்படி இருந்தாள் அவனின் இல்லாள்.

 

அவள் தான் அவன் கூறியதில் திடுக்கிட்டு போய் சிலையென அமர்ந்திருந்தாள். உள்ளுக்குள் அவள் மறைத்திருக்கும் உண்மை அவளை கொலையாக கொன்றது.

 

மனைவியின் நம்பிக்கையை வாழ்ந்து காட்டி மீட்பேன் என்று கூறி தன்னை நம்புகிறேன் என்று சொன்னவனின் நம்பிக்கையை பாசத்தை அக்கறையை இந்த புதுவிதமான மாற்றத்தை எங்கே உண்மை தெரிந்து இழந்து விடுவேன்னோ என்று பயந்து போய் அமர்ந்திருந்தாள் .

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!