மயங்கினேன்.!கிறங்கினேன்.!
அத்தியாயம் 24
கடலின் அலையோசை மனிதர்களின் மனதை பல நேரங்களில் இனிமையாகவும் அமைதியாகவும் வைக்கிறது. ஆனால் சில நேரத்தில் அதே அலையோசை அவர்களுக்கு அபாயத்தையும் காட்டிவிடும் .
அதே நிலை தான் இப்போது இனியாவுக்கும்.
இனியாவின் மூளை அவன் கூறிவிட்டு சென்றதிலே நிலை கொத்தி நின்றது.
உண்மையை சொல்ல நினைக்கும்போது அவளால் சொல்ல முடியா நிலை உருவாகியிருந்தது. இப்போது இந்த உண்மை தெரியவேண்டாம் என்று நினைக்கையில் அது வெளிவந்துவிடும் போல் உள்ளதே.
மனது நினைக்க நினைக்க கடலை போல் ஆர்பரித்தது.
குளிர் தாங்காது மயங்கி சரிந்த என்னை தாங்கி மருத்துவமனையில் சேர்பித்து நான் கண் திறக்கும்வரையிலும் அவன் உயிரே இல்லாத ஜடம் போல் தான் இருந்ததாக விழித்ததும் விஜயா கூறவும் தான் அவனின் நிலையே பெண்ணுக்கு தெரிந்தது.
கேட்டவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அமைதியாக அதனை கடந்துவிட்டாள்.
ஆனால் இப்போது வெற்றியின் மனதை தன்னிடம் வெளிக்காட்டிவிட , தான் மட்டும் தன் மனதை மறைத்து வைத்து வெளிக்காட்ட முடியாத நிலையை எண்ணி வருந்தினாள்.
மாலை வரை எப்படி அவள் பொழுதை நெட்டி கழித்தாள் என்றே தெரியவில்லை.
ஆறுமணிப்போல் வெற்றி வந்தபின் தான் அவள் சுயத்தையே அடைந்தாள்.
” இன்னுமா நீ கிளம்பாம இருக்க , சீக்கிரமா கிளம்பு ” அவளை வேகப்படுத்தினான் வெற்றி.
” இல்ல நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் ” என்று நின்றவளை பார்த்து ,
” எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம் சில் இப்போ கிளம்பு . டைம் ஆகுது பாரு” மணியை சுட்டி காட்டி சொல்லவும் அவளுமே பிறகு சொல்லலாம் என்று தயாராகி வந்தாள் .
பின்னர் இருவருமாக கிளம்பி மருத்துவமனைக்கு சென்றனர்.
டாக்டர் இனியாவை பரிசோதித்து விட்டு ,” இப்போ உங்க ஹெல்த் நல்லா இருக்கு. கொஞ்சம் சத்துள்ள உணவா எடுத்துக்கோங்க மிஸஸ். வெற்றி ” என்றதும் தலையை ஆட்டினாள்.
இருவருமாக வெளிய வரவும் , அவளை மட்டும் இருக்கையில் அமர வைத்து ” ஒரு நிமிஷம் இரு நான் வந்தறேன் ” என்று சொல்லி மீண்டும் மருத்துவரை காணச் சென்றான்.
” டாக்டர் ! இப்போ அவளோட உடல் நிலை பரவால்லையா ?” மனைவியின் நிலை அறிந்து கொள்ளும் நோக்கில் கேட்டான்.
” இப்போ பெட்டர் வெற்றி. வயிற்று புண் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா ஆறிட்டு இருக்கு. திரும்பவும் ஜங்க் புட் எதுவும் சாப்பிட விடாதீங்க . கொஞ்ச நாளைக்கு ஹெல்தியாவே சாப்பிட கொடுங்க வெற்றி ”
” வேற ஒன்னும் பிரச்சினை இல்லையே டாக்டர் “
” இது நார்மல் தான் வெற்றி. பயப்பட எதுவுமில்லை கொஞ்ச நாளைக்கு குழந்தை பெத்துக்கிறதை மட்டும் தள்ளி வைங்க . ஆல்ரெடி பேஷன்ட் கொஞ்சம் வீக் அவுங்களால குழந்தையை தாங்க முடியுமான்னு தெரியல ” என்றதும் தலையை ஆட்டி வெளியே வந்தான்.
” போலாமா மிஸஸ் . வெற்றி” என்கவும் சம்மதம் கூறி அவனோடு நடந்தாள்.
வீட்டுக்கு போகும் பாதையில் போகாது வண்டி வேறெங்கோ போவதை அறிந்து ” எங்க போறோம் வெற்றி?”
” ம்ம் உன்னை கடத்திட்டு போறேன் பொண்டாட்டி ” என கண்ணடிக்க
” எவனாவது சொந்த பொண்டாட்டியை கடத்துவானா ” அவனை பார்த்து கடுப்பாக கேட்டாள்.
” எவன் கடத்துவானோ இல்லையோ நான் கடத்துவேன் பா ” என்றவன் சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான்.
திடிரென ப்ரேக் போடவும் டாஷ்போர்டில் இடித்து கொண்டாள் இனியா.
” ஏன் பொறுமையா ப்ரேக் போட்டா தான் என்ன ?” தலையை தேய்த்தவாறே கடிந்து கொள்ள
” ஹிஹி , சும்மா சாரி ” என இளித்து வைத்தான்.
” சரி சரி வந்து இறங்கு ” என்று அவன் இறங்கி அவளையும் இறங்க வைத்தான்.
” எங்க வந்திருக்கோம் ” என சுற்றி பார்த்தவளுக்கு ஏதோ பிடிபட ஆச்சரியத்தோடு அவனை ஏறிட்டாள்.
“உங்களுக்கு எப்படி தெரியும்?” வார்த்தை வெளிவரவில்லை அவளுக்கு .
” உன்னை என் மனைவியா ஏற்றுக்கிட்ட பின்பு உன்ன பத்தி தெரியாம இருந்தா தப்பு .அதான் உன்ன பத்தி ரோஷினி கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன் ” என்றதும் விழி அகலாது அவனையே ஏறிட்டாள் பெண்.
” இப்படி என்னையே பார்த்துட்டு இருந்தா எப்படி” அவள் காதில் கிசுகிசுக்க
அவனின் மூச்சு காற்று பெண்ணின் காதில் படவும் உடல் சிலிர்த்தது. சொல்ல முடியா அவஸ்தைக்கு ஆளானாள்.
அவளின் நிலை அறிந்து உள்ளுக்குள் சிரித்து கொண்டவன் ,” வா உள்ள போகலாம் ” என அவளை அழைத்து சென்றான்.
அது நூலகம் எக்மோரில் உள்ள கன்னிமாரா பொது நூலகம் .அங்கு ஆறு லட்சத்தை தாண்டிய புத்தகங்கள் உள்ளன .
வெற்றியை காண வரும்போது எல்லாம் இங்கு வந்து இனியா புத்தகம் படிப்பதுண்டு. அவளுக்கு புத்தகம் படிப்பதில் அலாதி பிரியம் கொண்டவள் , அதனாலே அவனிற்காக காத்திருக்கும் நேரத்தில் இங்கு ஓடி வந்திடுவாள்.
உள்ளே வந்ததும் அவளை கண்ட நூலகர் ,” வா மா இனியா ! என்ன மா இந்த பக்கம் வந்தே ரொம்ப நாலாகுது . எப்படி இருக்க மா ?” பாசத்தோடு கேட்டார்.
” நான் நல்லா இருக்கேன் அங்கிள். நீங்க எப்படி இருக்கீங்க?”
” நல்லா இருக்கேன் மா ” என்றவர் வெற்றியை பார்க்க , அதனை உணர்ந்த இனியா” இவர் என்னோட ஹஸ்பண்ட் ஆர்.ஜே வெற்றிமாறன் அங்கிள் ” என வெற்றியை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.
அவனை பார்த்து புன்னகைத்தவர்” சந்தோஷம் மா. சரி நீங்க ரெண்டு பேரும் போய் புக் படிங்க” என்று அனுப்பி வைத்தார்.
அவர்களும் புன்னகையோடு கடந்து விட்டனர்.
” உனக்கு பிடிச்ச புத்தகத்தை எடுத்து படி போ ” என்று அவளை அனுப்பி வைத்தவன் மேகஸின்ஸ் எடுத்து புரட்ட ஆரம்பித்தான்.
நேரம் போனதே தெரியாமல் அவள் புத்தகத்தில் மூழ்கி விட , வெற்றி தான் அதனை கலைத்தான்.
” இனியா நேரமாகுது பாரு , கிளம்பலாமா ?” என்று கேட்ட கணவனை பார்த்து மென்மையாக புன்னகைத்தவள் ” போலாமே” என்றாள் சிறு தலையசைத்து.
” டிஸ்டர்ப் பண்ணிட்டேனா என்ன ?”
” அப்படிலாம் எதுவுமில்லை. இது நான் படிச்ச புக் தான் ஆனா இன்னைக்கு இது படிக்கணும்னு போல இருந்தது அதான் எடுத்து படிச்சேன் ”
” ஹோ ” என்று முடித்து கொண்டான் வெற்றி.
பின்னர் அவளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றான்.
அடுத்து வந்த நாட்களில் அவர்களுக்குள் நல்லதொரு பிணைப்பு ஏற்பட்டிருந்தது.
இப்படியாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் அடுத்தக்கட்ட வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்க சிறிது தயங்கி நின்றனர்.
இருவருக்குமே அடுத்த அடி எடுத்து வைக்க தயக்கமாக இருக்க , அதை தகர்த்தெறியும் நாளும் வந்தது.
**********
இன்று விருது வழங்கும் விழா.
இந்த மாதிரியான வருடா வருடம் நடைப்பெறும் . பல பிரிவுகளிலிருந்து சிறந்த நபர்களை தேர்வு செய்து விருது வழங்கி சிறப்பு செய்வர்.
அதுபோலான நிகழ்வில் இந்த வருடம் சிறந்த மேல் ஆர்.ஜேவாக வெற்றி தேர்வாகியிருக்க , குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அதில் மட்டற்ற மகிழ்ச்சி.
அதிலும் இனியாவிற்கு சொல்லவே வேண்டாம். என்று இப்படி என்று தெரிந்ததோ அன்றைய நாளில் இருந்து அவனுக்கு பிடித்தமானதை செய்து போட்டு தன் சந்தோஷத்தை அவனுக்கு வெளிப்படுத்தினாள்.
அதிலும் அவளிடம் தான் முதலில் கூற வேண்டுமென்று மொட்டை மாடியில் வைத்து கூறவே , சந்தோஷம் தாளாது அவனை அணைத்து முத்தமொன்றை கொடுத்து அவனை திக்கு முக்காட செய்திருந்தாள்.
காலையில்.,
” வெற்றி இப்போ எழும்ப போறீங்களா இல்லையா ” கோபமாக அவன் முன்னே நின்றிருந்தாள் அவளின் சரிபாதி.
” முடியாது ” கங்கனம் கட்டி படுக்கையில் உருண்டு பிரண்டான்.
” நேரமாகுது வெற்றி இன்னும் ஒருமணி நேரத்துல நமக்கு ஃப்லைட் . நீங்க இப்படி பண்ணா எப்படி ” என்றவள் ட்ராலியை அறைக்கு வெளியே எடுத்து வைத்தாள்.
” முடியாது ,நான் எழும்பனும்னா நீ தர வேண்டியதை தா .அப்போ தான் எழுந்திரிப்பேன் ” என சிறு குழந்தையென வெற்றி முரண்டு பிடிக்க தலையில் அடித்து கொண்டாள் இனியா.
“சரி சரி தரேன் ” என்றவள் வெற்றியை நோக்கி மெல்லமாக அடியெடுத்து வைத்தவள் , தன் மூச்சு காற்று அவன் மேனியில் படுமளவிற்கு நெருங்கி நின்று அவன் விழிகளையே பார்த்திருக்க , வெற்றி அவளது நெருக்கத்தில் சிறகில்லாமல் பறக்க அதனை உடைக்கும் பொருட்டு அவனின் மண்டையில் நங்கென்று கொட்டு வைத்தாள் அவனவள்.
என்னவோ எதிர்பார்த்த வெற்றிக்கு தலையில் கொட்டு விழவும் முகத்தை உம்மென்று வைத்து கொண்டான்.
” சீக்கிரமா கிளம்புற வழியை பாருங்க ” மிரட்டல் விட்டு வெளியே சென்றாள்.
” ஏதோ புதுசா கேக்குற மாதிரி ரொம்ப தான் பண்றா. நெத்தில முத்தம் கொடுக்கிறதுக்கு இத்தனை சீன் போட்டுட்டு போறா சண்டாளி ” காலையில் அவளை சட்டி என்னும் மனதில் போட்டு வறுத்தெடுத்தான்.
பின் , முகத்தை தொங்க போட்டு கொண்டே ஆயத்தமானவன் இனியாவை கண்டுக்கொள்ளாது தன் வேலையை பார்த்தான்.
‘ பார்ரா துறைக்கு வந்த கோபத்தை ‘ மனது ஒருவித துள்ளல் கொண்டது.
” அத்த மா ” கத்தியவாறே கிச்சன் நோக்கி வந்தவள் அவரை கட்டி கொண்டு கன்னத்தில் இதழ் பதித்தாள் வெற்றியை பார்த்தவாறே.
வந்ததே கடுப்பு வெற்றிக்கு. முகம் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
” அம்மா ” அவனும் கத்த , இருவருக்கும் இடையில் கசாப் கடை ஆடு மாதிரி மாட்டிக்கொண்டார்.
” என்ன டா கிளம்பிட்டியா ?” மருமகளுக்கு ஹார்லிக்ஸ் கலக்கியவாறே கேட்க
” ஏன் பார்த்தா எப்படி தெரியுது மா “
மேலும் கீழும் மகனை பார்த்து ஆராய்ந்தவர் ,” ஏன் டா இப்படி கிளிஞ்சல் துணி எல்லாம் போட்டுட்டு போற .வர வர உனக்கு ஒரு இரசனையும இல்லை ” மகனை கலாய்க்க அதில் குஷியான மருமகள் அடுத்த கன்னத்திலும் முத்தமிட , அவரும் பதில் முத்தம் கொடுத்தார்.
” ஏது எனக்கு இரசனை இல்லையா . சரிதான், ஆனா எனக்கு இதை வாங்கி கொடுத்ததே உன்னோட தி க்ரேட் மருமகள் தான் ஆத்தோய் ” என்றதும் ஸ்லேப் மேல் அமர்ந்து ஹார்லிக்ஸ் குடித்து கொண்டிருந்தவளிடம் கண்ணாலே ‘ அப்படியா’ என்று கேட்க , அவளும் ஆமாம் என்று தலையசைத்தாள்.
“அதை தான் டா சொல்றேன் உனக்கு இரசனை இல்லாததுனால தான் அவ இப்படி அம்சமா உனக்கு எடுத்து கொடுத்திருக்கா ”
” ஏதோ கிளிஞ்சல் துணின்னு சொன்ன மாதிரி இருந்ததே ” காது குடைவது போல் செய்ய ,
” அது தான் இப்போதைய ஃபேஷன் டா மகனே ” சொல்லி இடத்தை விட்டு தப்பித்தால் போதுமென நகரந்தார் .
மாமியார் வெளியேறவும் மருமகளும் நைசாக வெளியேற பார்க்க , கணவன் விட்டால் தானே விடாக்கண்டனாக அவளை தன் பிடியில் நிறுத்திக்கொண்டான்.
” விடுங்க வெற்றி” அவனிடமிருந்து நழுவ முயல
” ஹான் , விடுறதுக்கா பிடிச்சது ” அவள் கொட்டிய கையை பிடித்தவன் ,” இந்த கை தானே என் தலையில கொட்டு வச்சது ” என ஒவ்வொரு விரலுக்கும் ஒரு முத்தம் வைத்தான்.
முத்தம் தந்த குருகுருப்பில் அவனிடமிருந்து கையை உருவ பார்க்க , அவனோ அவளை மேலும் நெருங்கி நின்று ” எங்க அம்மாக்கு முத்தம் கொடுத்து கடுப்பேத்த பாக்குறீங்களோ ” என்றவனது விரல் அவளது இதழில் கோலமிட , அதில் நெளிய தொடங்கினாள் பெண்.
” விடுங்க நான் போகணும் ” பெண் சிணுங்க
” விடுறதுக்காகவா இப்படி இறுக்கியிருக்கேன் . ஒழுங்கா ஒரு முத்தம் கொடுத்திருந்தா இந்த நிலமை உனக்கு வந்திருக்குமா ” அடாவடி பண்ணினான் .
” ப்ளிஸ் விடுங்களேன் ” இனியா அவனிடம் கெஞ்ச ,
” அப்போ முத்தம் கொடு விட்டறேன் ” என்றதும் அவளும் பிகு பண்ணாமல் நெற்றியில் பட்டும் படாமலும் முத்தமொன்றை பதிக்க
” என்னாதிது ?” என்றவனை கேள்வியாய் நோக்கினாள்.
” எனக்கு இந்த பேபி கிஸ் எல்லாம் வேணாம். எனக்கு இப்போ ஒய்ஃப் கிஸ் தான் வேணும்” புரியாது முழித்தாள் பெண்.
” அப்படின்னா ? “
” அதான் மா லபக் லபக் ஃப்ரெஞ்ச் கிஸ் ” என்றதும் கண்கள் அகல விரிந்தன.
” முடியாது மாட்டேன்” என்று அடம் பிடித்தவளை பார்த்து இதழ் சுளித்து ” நானும் விடமாட்டேன்” என்றான்.
இவனிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்தில்,” அத்தை” என்று அழைக்கப்பார்த்தவளின் இதழ்கள் அவனது இதழுக்குள் அடங்கியது.
இந்த தாக்குதலில் பெண்ணவளின் கால்கள் தள்ளாட , அவளை தாங்கியவன் தன்னோடு அணைத்து கொண்டான்.
சிறிது நேரத்திலே அவளை விடுவித்தவன் ,” இனி மார்னிங் ஒய்ஃப் கிஸ் தான் ” என்றதும் பெண்ணவளின் கன்னங்கள் இரண்டும் செரி பழம் போல் சிவந்து விட்டது.
நாணம் கொண்ட பெண் அவனை தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்.
பின்னர் இருவருமாக கிளம்பி மும்பை சென்றனர் மாலை நடக்கவிருக்கும் விருது விழாவிற்கு.
*******
மும்பை – மஹாராஷ்டிரா
விருது வாங்குபவர்களுக்காக ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் புக் செய்திருக்க , நேராக அங்கே சென்றனர் தம்பதியினர்.
அவர்கள் கூடவே அங்கே வேலை பார்க்கும் சிலர் வந்திருக்க அதில் கௌதமும் அடங்கினான்.
மாலை நான்கு மணிப்போல் விழா தொடங்கியது.
வெற்றி அடர் நீல கோட் ஷூட் அணிந்திருக்க , அதே நிறத்தில் இனியாவும் டிசைனர் சாரி அணிந்திருந்தாள்.
ஜோடியாக இருவரும் விருது வழங்கும் நிகழ்விற்கு வந்ததை பார்த்த மற்றவர்களுக்கு பொறாமையாக இருந்தது.
இருவரும் அனைவரது கண்ணையும் கவர்ந்தனர்.
நிகழ்ச்சி நடனத்தோடு தொடங்கப்பட , அவர்களுக்கு உரிய இடத்தில் அமர்ந்து பார்க்க ஆரம்பித்தனர்.
சினிமா , விளையாட்டு , வணிகம் , என இதுப்போல் பலதரப்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் நடுநடுவே இசை, நடனம், நகைச்சுவை என இருக்க நேரம் கடந்ததே தெரியவில்லை.
” அடுத்ததாக பெஸ்ட் மேல் ஆர்.ஜே அவார்ட் அண்ட் தி வின்னர் இஸ் ” என்று இடைவெளி விட்டு ” ஆர்.ஜே வெற்றிமாறன் ஃப்ரம் சிட்டி எஃவம் ” என்றதும் கரகோஷங்கள் அவன் காதில் ரிங்காரமிட்டது.
மனைவியை ஆரதழுவியவன் மேடையை நோக்கி மெல்ல நடையிட்டான்.
விருதை அவனிடம் கொடுத்த விஐபி ” கங்க்ராட்ஸ் மேன் ” ஃபார்மலாக அணைத்து விடுவித்தார்.
” ம்ம் பேசுங்க மிஸ்டர். ஆர்.ஜே வெற்றி. திஸ் ஸ்டேஜ் இஸ் யுவர்ஸ் ” என தொகுப்பாளினி கூற அவனும் புன்னகையோடு மைக்கை வாங்கியவன் மனைவியை பார்த்து அர்த்தமுள்ள சிரிப்பொன்றை உதிர்த்தான்.
அவனது சிரிப்பிற்க்கான அர்த்தம் அவளுக்கு புரியவில்லை என்றாலும் பக்கத்தில் அமர்ந்திருந்த கௌதமுக்கு நன்றாக புரிந்தே இருந்தது.
” முதல எல்லாருக்கும் வணக்கம் ! லைஃப்ல இப்படி ஒரு ஸ்டேஜ் ஏறுவேன் விருது வாங்குவேன்னு நான் நினைச்சி கூட பார்த்ததில்லை. பட் இப்போ என் கையில் என்னோட முதல் விருது தவழுது . இதுக்கு காரணமாக இருந்த ஜூரி மெம்பர்ஸ் அண்ட் என் குரலை இரசித்த ரசிகர்களுக்கு ஒரு நன்றி . நீங்க இல்லைன்னா இது என்கிட்ட இருந்திருக்காது ” என்றவன் விருதை தூக்கி காட்டினான்.
” பேருல மட்டும் தான் வெற்றி , ஆனா நான் கண்டது எல்லாமே தோல்வி தான். அப்படி தோல்வியே ஃபேஸ் பண்ணிட்டு இருந்த எனக்கு கிடைத்த முதல் வெற்றி என்னோட மனைவி தான். எனக்கு அவ நிறைய குட்டி குட்டி விஷயங்களை கத்து கொடுத்தா , அதை வச்சி தான் தினமும் ரேடியோல பேச செய்வேன். அவ எனக்கு கிடைக்க செய்த என்னோட பெற்றோர்களுக்கு முதல் நன்றி ” என்றவன் நிறுத்தி நிதானமாக மனைவியை கண்டான்.
அவளோ திகைத்து போய் அவனையே பார்த்திருந்தாள். வெற்றி பெற்றதற்கான பேச்சு பேசுவான் என்று எதிர்ப்பார்த்திருக்க அவனோ தன்னை பற்றி பேசவும் முச்சற்று சிலையென அமர்ந்திருந்தாள்.
” இந்த நேரத்துல என் மனைவிக்கிட்ட ஒன்னு சொல்ல ஆசைப்படுறேன். இன்னவரைக்கும் இதை நான் அவக்கிட்ட சொன்னதில்லை , இது தான் முதல் முறை ” என்று ஆசுவாச மூச்சொன்றை இழுத்து வெளியிட்டவன் மனைவியின் கண்ணை பார்த்து ,” எல்லோரோட வாழ்க்கையிலையும் அம்மாக்கு நிகர் யாருமேயில்லை. ஆனா என்னோட மனைவி இனியா எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. நல்லா காது கொடுத்து கேட்டுக்கோங்க மிஸஸ்.வெற்றிமாறன் ” மெலிதான புன்னகை புரிந்தான்.
அனைவருமே அவன் அடுத்து என்ன சொல்ல போகிறான் என்று ஆவலோடு காத்திருக்க , இனியாவின் இதயம் தடக் தடக் என வேகமாக துடித்து ஒருவிதமான பதட்டத்தை கொடுத்தது.
” நான் உன்னை காதலிக்கிறேன்.
மே தும்சே பியார் கர்தாஹூன் .
நேன்னு நின்னு ப்ரேமிஸ்தான்னானு .
I love you my better half ” என அவனுக்கு தெரிந்த மொழிகளில் எல்லாம் தன் காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்தினான்.
இதுநாள்வரை வாழ்ந்து காட்டி காதலை சொல்லாமல் புரிய வைத்தவன் , இன்று அனைவரது முன்பு அதுவும் ஒரு விருது வழங்கும் விழாவில் பலதரப்பட்ட மக்களின் முன்பு மனையிடம் தன் காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்தினான்.
அவனது காதல் மொழியை கேட்டு கரகோஷங்களோடு பேக்ரௌண்டு பாடல் போட்டு விட , வெற்றிக்கே நாணம் வந்து ஒட்டிக்கொண்டது.
இதனை கேட்ட இனியா பேந்த பேந்த முழித்திருந்தாள். அவளின் ரியாக்ஷனை பார்த்தவன் இதழுக்குள் புன்னகைத்தப்படி கீழே இறங்கினான்.
வெற்றி தன் பக்கத்தில் வந்து அமர்ந்ததோ , அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்ததோ எதுவுமே இனியாவின் நினைவில் இல்லை. அவனது காதல் மொழியிலே நின்றது.
” மேடம் ! சாப்பிட வாங்க ” என வெற்றி உழுக்கவும் தான் நினாத்திற்கே வந்தாள்.
” நீ..நீ..நீங்க எ..எ..எனக்கு ” என வார்த்தை வராமல் தந்தியடிக்க , கண்கள் இரண்டும் கலங்கியிருந்தது.
” சில் இனி மா ! இப்போ எதுவும் பேச வேணாம் .நாம ரூம்க்கு போய்ட்டு பேசலாம் புரியுதா ” என அவளை தன் கையணைப்பிலே சாப்பிடும் இடத்திற்கு அழைத்து சென்றான்.
இருவருமாக சாப்பிட அமரவும் , பலரும் வந்து இனியாவிற்கு ‘ இப்படியான வாழ்க்கை கிடைத்ததற்கான ‘ வாழ்த்துக்களை கூறி சென்றனர்.
சந்தோஷத்தோடு சாப்பிட்டு முடித்தவள் வெற்றியோடு அறைக்கு சென்றாள்.
*************
அறைக்கு வந்த இனியா பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள்.
அவளால் இத்தகைய சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தாள்.
சந்தோஷத்தின் அதிகப்படியான வெளிப்பாடு அமைதியும் கூட!
அவளின் அமைதியை கெடுக்க விரும்பாமல் பால்கனியில் வந்து நின்றான் வெற்றி.
சிறிது நேரத்திற்கு பின்பு , தன்னை நிதானப்படுத்தியவள் ” தரு ” என்றழைத்தாள்.
நிசப்தமான அறையில் அவளது அழைப்பு வெற்றியின் செவியில் தேனாய் பாய்ந்து இதயத்தை ஊடுருவியது.
‘ எத்தனை நாட்களுக்கு பின்னான இந்த அழைப்பு ‘ வெற்றியின் மனம் சந்தோஷம் கொண்டது.
” தரு ” அழைத்தபடி பால்கனி வர ,
” இத்தனை நாள் தேவைப்பட்டதா சில் என்னை தருன்னு கூப்பிட ?” ஆதங்கமாக வெளிவந்தது அவன் குரல்.
இனியா மௌனமாக இருக்க ,” இப்பவாது கூப்பிட்டியே அதுவே சந்தோஷம் தான் சில் ” விழியோரம் கலங்கியது.
அவனை ஏறிட்டு பார்த்தவள் , என்ன நினைத்தாளோ அவனை ஓடிச்சென்று அணைத்து கொண்டாள்.
” நல்லா கேட்டுக்கோ பொண்டாட்டி .நீயா வந்து கட்டிக்கிட்ட இனி என்னை விட்டு போகணும் நினைச்சா கூட முடியாது ” என்றவன் அவளை தன்னோடு இறுகணைத்து கொண்டான்.
” நானும் போகமாட்டேன். ஆனா உங்க காதலி ஃபீல் பண்ணுவாளே ” கணவனின் அணைப்பில் இருந்தவாறே கணவனை சீண்டினாள்.
” நீ ஹாஸ்பிடல்ல இருக்கும்போதே தெளிவா சொல்லிட்டு வந்துட்டேன் .இனி என்னோட ஊனும் உயிரும் என் மனைவி இனியாவுக்கு தான்னு ” கணவன் சொல்ல இப்போது மனைவியின் பிடி இறுகியது.
” லவ் யூ டி பொண்டாட்டி ” என்க
” ம்ம் ” என்றாள்.
” எங்கடி மீ டூ ?”
” சொல்லும்போது சொல்லுவோம். இப்போ கிடையாது ”
” அது சரி ” நக்கலாக கூறியவன் அவளை அணைத்தப்படியே நிலவை இரசித்திருந்தான்.
திடிரென மழை பெய்யவும் , இனியா அவனை விட்டு பிரிந்து உள்ளே செல்ல பார்க்க , அவளது இடக்கரத்தை பிடித்து சடாரென்று இழுக்கவும் அவன் நெஞ்சத்திலே வந்து புதைந்தாள் பெண்.
” விடுங்க தரு நான் போகணும் ” மழையில் நிற்க முடியாமல் சங்கோஜப்பட்டு சொல்லி விலகப் பார்த்தாள்.
அவள் விலகுவதை உணர்ந்த வெற்றி , அவளின் வலது கையை தன் இடது கையோடு கோர்த்து கொண்டு அவளின் இடுப்பை சுற்றி வளைத்து தன்னோடு நெருக்கிக்கொண்டான்.
இனியா அவனது இந்த தொடுகையில் மேனி சிலிர்த்து போனாள்.
அவன் கண்களாலே தன் காதலை வெளிப்படுத்தி சம்மதம் கேட்க இல்லாளும் தன்னை அவனுக்கு ஒப்படைத்தாள்.
அவளை அப்படியே அலேக்காக தூக்கி கொண்டு மஞ்சத்தில் விட்டவன் , அவள் பக்கத்தில் படுத்து கொண்டான்.
அவனின் இந்த நெருக்கத்தில் மனம் படபடக்க சற்று தள்ளி படுத்தாள்.
அவளது விலகல் புரிந்து அவனுமே சிறிது இடைவெளி விட்டு படுக்க , அந்த அறையின் நிசப்தத்தை போக்கும் பொருட்டு பலத்த இடி ஒன்று இடித்தது.
இடி சத்தத்தில் தள்ளி படுத்திருந்த இனியா வெற்றியின் முதுகில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டு இடையை சுற்றி இறுகே அணைக்க , மின்சாரம் பாய்ந்தது வெற்றியின் உடம்பில்.
இருவரின் உடலும் உரசிக்கொள்ள , ஈரமாக இருந்தவர்கள் உடலில் சூடு பரவியது மிகநெருக்கமான நிலையில்.
புரியாத பரவசம் இருவருக்குள்ளும் , இந்த இன்பவுராய்வு வேண்டுமென மனம் துடிக்க , வெற்றியின் கைகள் தானாக மனைவியின் உடலை தழுவிக்கொண்டது.
நடுக்கத்தில் மனைவியின் இதழ்கள் தந்தியடிக்க , தானாக தன் இதழை அவள் இதழோடு ஒற்றினான்.
இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த காதல் வெளியே சொன்னதும் , இந்த தீண்டலில் ஆர்பரித்திருந்த மனது அமைதிகொள்வதாய் உணர்ந்து மேலும் அவளை தன்னோடு இறுக்கினான்.
மனமும் உடலும் மோகத்தில் முக்குளித்துவிட என ஆணையிட , கைகள் இரண்டும் பரபரத்தது.
” சில் , உனக்கு ஓகே வா ?” மனைவியிடம் கூடலுக்கு சம்மதம் கேட்டு பார்க்க , அவளுமே சம்மதம் கூறும் வகையில் அவனை நெஞ்சத்தை மையமாக்கி கொண்டாள்.
இருவருமே அடுத்தகட்டத்தை நோக்கி மெதுவாக அடியெடுத்து வைத்தனர்.
அவளை தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தவன் , மெது மெதுவாக அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தான்.
மனைவிக்கு எங்கே வலித்திடுமோ என்ற பயத்தில் அவள் முகம் நோக்கியே முன்னேறினான் கணவன்.
அறியாத விடயத்தை இருவருமே தட்டு தடுமாறி கற்று தேறி வரவும் , வெட்கம் இருவரையும் சூழ்ந்து கொண்டது.
கூடல் முடிந்து மனைவியை தன் மேல் போட்டுக்கொண்டவன் நெற்றியில் முத்தமிட்டு ” தேங்க்ஸ் டா ” என்கவும் கண்சிமிட்டி அவனோடு மேலும் ஒன்றினாள்.
இருவரும் ஒவரையொருவர் அணைத்து இளைப்பாறினர். நல்லதொரு இல்லறம் அங்கே நடந்தேறியது.
அவனோடு இணைந்தாலும் அந்த சொல்லப்படாத உண்மை நெருஞ்சி முல்லாய் அவள் இதயத்தை குத்தி கொண்டிருந்தது.
ஆனாலும் இந்த ரம்மியமான பொழுதை அவள் இழக்க விரும்பவில்லை.
ஒருவாரம் சந்தோஷமாக அங்கே இருந்து காலையில் இருவருமாக ஊர் சுற்றி பார்க்க , இரவில் அவளை சுற்றினான் கணவன்.
அந்த ஒரு வாரமும் இருவருக்குமான பொழுதுகள் இனிமையாக கழிந்தன.
ஊருக்கு வந்த பின் அவர்களது தினசரி வேலையை அவர்கள் பார்க்க , ஆனால் இங்கே இசையோ அவன் விருது வழங்கும் விழாவில் மனைவியிடம் கூறிய காதலை மீண்டும் மீண்டும் ஓட்டி பார்த்து இனியாவின் மீது கொலைவெறியாகி கொண்டிருந்தாள்.