Mk 6(2)

அது அவள் தான்.. அவளே தான்.. அவனின் இசை தான் என்று அவனுக்கு புரிந்து விட்டது.

சட்டென எழுந்து நின்றவனின் முன்னால் வந்து ,” ஹாய் மாறா..” என்றாள் புன்னகை பூத்த முகத்தோடு..

” ஹலோ இசை..” என்றான் பட படத்த மனதை கட்டுபடுத்திய படியே..

மயில் பச்சை நிறத்தில் , ஆங்காங்கே பூக்களாய் எம்ப்ராய்டரி டிசைன் போட்டிருந்த குர்த்தா அணிந்திருந்தாள். அதற்கு தகுந்தாற்போல் சின்னதாக ஒரு தோடு. பெரிதாக எந்த ஒரு அலங்காரமும் இல்லாமலே தேவதை போல் காட்சியளித்தாள் அவன் கண்களுக்கு…

” ஹான் , இதோ இப்போ உங்க முன்ன வந்து நின்னுட்டேன். ஆர் யூ ஹேப்பி மாறா.?”

” வெரி ஹேப்பி இசை..”

” அப்புறம் எப்படி இருக்கீங்க மாறா..?”

” குட் டா. நீ.?”

” யா சூப்பரா இருக்கேன் மாறா.. நான் இரசித்த குரலுக்குறியவரை பார்க்கனும்னு ஆசைப்பட்டேன். பார்க்கவும் செய்துட்டேன். நவ்,ஆம் வெரி ஹேப்பி ” என்றாள் உள்ளார்ந்து…

அடுத்து அவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் அமைதி காத்தான்.

“இப்படியே நாம நின்னுட்டு தான் இருக்கப் போறோமா மாறா.?”‌என்க

” சாரி..”என்றவன் அவன் அமர்ந்திருந்த சிட் ஔட்டை காட்டி ,” வாங்க , உட்கார்ந்து பேசலாம் “என்றவன் அவள் அமர்ந்ததும் அவனும் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்.

“ம்ம் , சொல்லுங்க வெற்றி எதுக்காக என்னைய உடனே பார்க்கனும்னு சொன்னீங்க. அதுவும் இல்லாமல் ஏதோ பிரச்சனைன்னு வேற சொன்னீங்களே ” என்றிட

‘எப்படி சொல்வது’ என்று தயங்க

அதனை புரிந்து கொண்ட அவள் ,” சரி ,ஒரு நிமிஷம் இருங்க அங்க ஸ்வீட் பாப்கார்ன் விக்கிறாங்க . நான் போய் வாங்கிட்டு வரேன் ” என்று எழுந்தாள்.

” நான் போய் வாங்கி வரேனே . நீங்க இருங்க ” என்று சொல்லி விட்டு சென்றான்.

வெற்றி சென்று அங்கே இருந்த கடைக்காரரிடம் இரண்டு ஸ்வீட் பாப்கார்ன் என்று சொல்லி காத்திருந்தவனுக்கு தன்னை யாரோ பார்ப்பதாக தோன்ற இசையை நோக்கினான். அவளும் அவனை பார்க்கவும் ‘நம்மாளு தான் போல ‘ என்று நினைத்து திரும்பினான்.

“அண்ணா கொஞ்சம் சீக்கிரமா கொடுங்க ” என்று போனை நோண்ட , அப்போது ப்ர்தா போட்ட மங்கை ஒருவள் அவன் பக்கத்தில் வந்து நின்று அழைத்தாள்.

” சார்…” என்க

” சொல்லுங்க..”

” ஒரு ஃபைவ் ஹன்ரட்டுக்கு சேஞ்ச் கிடைக்குமா..??” என்று மென்மையான குரலில் கேட்க

” இருங்க பாக்குறேன் ” என்றவன் அவனின் பர்சை எடுத்து பார்த்தான். அதில் இருக்கவும் இரண்டு இருநூறு தாள்களும் ஒரு நூறு ரூபாய் தாளும் கொடுத்து ஐந்நூறு ரூபாயை பெற்றுக் கொண்டான்.

“தேங்க்ஸ்..” என்று விட்டு அவள் சென்றாள்.

பின் , ஸ்வீட் பாப்கார்ன் வாங்கிக் கொண்டு இசையிடம் வந்தவன் அவளிடம் ஒன்றை கொடுத்து விட்டு தான் ஒன்று எடுத்துக் கொண்டான்.

“ம்ம் , இப்போ சொல்லுங்க . உங்களுக்கு என்ன ப்ராப்ளம்னு . அப்புறம் நானும் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லனும் ” என்றவள் எந்த கவலையுமின்றி அதனை ருசிக்க தொடங்கினாள்.

“அப்போ நீயே சொல்லு இசை. நான் உன்னக்கப்புறம் சொல்றேன் ” என்க

” இல்லை பரவாயில்லை. நீங்களே சொல்லுங்கள் நான் கேட்கிறேன், அப்புறம் நான் சொல்றேன். பட் நான் சொல்ல போறதை நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு தான் தெரியலை ” என்றாள் ஏனோ தவறு செய்த குற்றவுணர்வோடு..

” அது எப்படி சொல்றதுன்னு தான் தெரியலை.பட் சொல்லி தான் ஆகனும்” என்றவன் நிதானித்து அவள் அலைப்புறியும் கண்களை பார்த்து ” என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா இசை ” என்று அத்தனை காதலையும் ஒருங்கிணைத்து வசப்படுத்தும் குரலால் கேட்டான்..

“வாட்…???” என்றவள் உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்தாள்.

‘ஏதாவது தப்பா கேட்டோமோ ‘ என்று சிந்தித்தவன்

அவளுக்காக வாங்கி வந்த பாக்சை திறந்து ,அதில் இருந்த இரு இதயங்கள் இணைந்தது போல் இருந்த மோதிரத்தை எடுத்து அவள் முன் மண்டியிட்டு தன் காதலை கூறத் தொடங்கினான்.

” இசை.. நான் எப்போ எப்படி உன்னை காதலிக்க ஆரம்பிச்சேன்னு தெரியலை. பட் உன்னோட எழுத்துக்கள் என்னை உன் வசம் இழுத்து கொண்டு வந்துடுச்சி.‌ எனக்கு காதல் பற்றின எந்த கனவும் இல்லாமல் தான் இருந்தேன். ஆனா இந்த ஆறு மாதத்தில் காதல் எப்படி இருக்கும்னு உணர வச்சது உன்னோட எழுத்துக்களும் உன் பாசமும் தான். உன்னோட பாசம் நேசம் எனக்கு நம் வாழ்க்கை முடியுற வரைக்கும் வேணும்னு நினைக்கிறேன். எஸ் ஐம் இன் லவ் வித் யூ இசை. வில் யூ மேரி மீ..?” தன் காதலை கூறி அவள் முகத்தையே பார்த்து இருக்க ,

” என்ன பண்றீங்க மாறா நீங்க..? முதல எந்திரிங்க . ஹோ காட் , இப்படி நீங்க ப்ரோப்பஸ் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சா , நானே முதல் சொல்லியிருப்பேனே . இதெல்லாம் ஒரு ப்ராங்க்ன்னு” என தலையில் கைவைத்து தேய்த்தாள் இசை.

அவளின் செயலில் அதிர்ச்சியடைந்த வெற்றி எழுந்து நின்று அவள் முகத்தையே பார்த்தான்.

” இசை., இப்போ நீ என்ன சொல்ல வர.? எனக்கு சரியா கேட்கலை ” என தவறாக கேட்டது போல் திருப்பி கேட்க

” உங்க காதுல சரியா தான் விழுந்துருக்கு மாறா.. நான் இந்த லெட்ட்ர்ஸ் அனுப்பினது எல்லாம் ஒரு ஃபன்னுக்காக தான் . ஆனா நீங்க இப்படி வந்து ப்ரோப்போஸ் பண்ணுவீங்கன்னு நான் சுத்தமா எக்ஸ்பெக்ட் பண்ணலை “

” அப்போ , நீ அனுப்பின லெட்டர்க்கு எல்லாம் என்ன அர்த்தம் ” என்றவனின் குரலில் அத்தனை கோபம் நிறைந்திருந்தது.

” ஐ கேன் எக்ஸ்ப்ளெயின் யூ கிளியர்லி ” என்றவள் அவனை சமாதான படுத்த முயன்றாள்.

” உன்னோட சமாதான வார்த்தைகள் எதுவும் எனக்கு தேவையில்லை. எதுக்கு இப்படி பண்ண.? அதுக்கு மட்டும் பதில் சொல்லு” என குரலில் சாந்தம் இருந்தாலும் முகத்தில் எள்ளும் கொல்லும் வெடித்தது.

” எனக்கு உங்க வாய்ஸ்ன்னா ரொம்ப பிடிக்கும். அதை போல தான் என்னோட ப்ரெண்டுக்கும் பிடிக்கும். நாங்க சும்மா பேசிட்டு இருக்கும் போது தான்.உங்க வாய்ஸ் நல்லா இருக்கவும் நீங்க எப்படி இருப்பீங்கன்னு பேச ஆரம்பிச்சோம். அதுல தான் ஏதேதோ பேசப்போய் ஒரு பெட் கட்ட வேண்டியதா போச்சி ” என்று தயங்கி அவன் முகம் பார்த்து நிற்க

“என்ன பெட்..??” என்றவனின் குரலில் இப்போது கடுமையாக இருந்தது.

“அது வந்து உங்களை லவ் பண்ண வைக்கிறது தான். அவளுமே உங்களுக்கு ட்ரை பண்ணா ,பட் நோ யூஸ் உங்க கிட்ட கூட அவளால நெருங்க முடியலை. அதான் இப்படி லெட்டர் போட வேண்டியதா போச்சி. நீங்க டேக் கிட் ஈசியா எடுத்துப்பீங்கன்னு தான் நினைச்சேன். பட் இவளோ சீரியசா இருப்பீங்கன்னு நான் நினைக்கலை மாறா.. ரியலி சாரி ” என்று சொல்லி முடிக்கவும் அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தான்.

அதில் அவள் கீழே விழுந்து விட , அவன் கையில் வைத்திருந்த மோதிரமும் கீழே விழுந்தது.

” என்ன டி நினைச்சிட்டு இருக்க.? பொண்ணுன்னா பையனை காதல் சொல்லி ஏமாத்தலாமா சொல்லு.? நான் உன்னை எவ்வளவு நம்பி இருந்தா , நீ சொன்ன ஒரு வார்த்தைக்காக உன்ன பத்தி எதுவும் தெரிஞ்சிக்காம இருந்திருப்பேன். ஆனா நீ…??”

“ச்சி , என்னை ஏமாத்திட்டல . நான் உண்மையா காதலிச்சேன் டி. இப்ப கூட நீ சொன்னதை என்னால ஏத்துக்க முடியல. அந்த எழுத்துக்கள் எதுவும் பொய்யா எழுதினது போல இருந்தது இல்லை ” என்றவன் நின்று நிதானித்து,

” இங்க பாரு இசை , எனக்கு இன்னும் ஒரு நாள்ல கல்யாணம். அதான் உன்கிட்ட காதலை சொல்லி எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு இருந்தேன். நீ பண்ண விளையாட்டுல பாரு நான் உன்னை அடிக்க வேண்டியதா போய்டுச்சி “என்று அவளை எழுப்பி நிற்க வைத்தான்.

” இல்ல மாறா.. நான் உங்களை காதலிக்கவே இல்லை. ப்ளிஸ் இனி இப்படி பேசாதீங்க. எனக்கு கஷ்டமா இருக்கு . நான் ஏதோ விளையாட்டுக்கு பண்ண போய் இப்படி ஆகும்னு நினைக்கலை . என்னை மன்னிச்சிடுங்க மாறா . இப்போ நான் போயாகனும் ” என்றவள் கிளம்பி சென்று விட்டாள்.

அவள் சொன்னத்தை கேட்டவன் இடிந்து போய் அங்கேயே அமர்ந்து விட்டான்.

‘ தன்னை காதலிக்க வில்லையா அவள் . இல்லையே , அவளின் எழுத்துக்களிலே எனக்கான பாசத்தை என்னால் உணர முடிந்ததே. ஆனால் இவள் வேறு விதமாக சொல்லி செல்கிறாளே. அவளால் எப்படி தன்னிடம் நடிக்க முடிந்தது. ‘

‘ இல்லை இல்லை அவளிடம் பேசியதிலே , அவள் காதலை நான் உணர்ந்திருக்கிறேனே. இதில் , என்னால் அவளை உணர முடிக்கிறதே. இதோ இப்போதும் கூட என் பக்கத்திலே இருப்பது போலான உணர்வு எனக்கு வருகிறதே ‘ என்று உள்ளுக்குள்ளே புலம்பியவன் தன் பார்வையை சுழல விட்டான்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக அவன் அங்கேயே அமர்ந்திருந்தான்.

அவள் செல்லும் போதே மணி ஆறை கடந்திருக்க ,இப்போது எட்டை தாண்டியது .

அவனது லவ் குரு ஷோ வேறு இருக்க , கௌதம் அவனுக்கு அழைப்பு விடுத்த படியே இருந்தான்.

மழை வேறு வருவதற்கு இணங்க பலத்த காற்றுடன் கூடிய மின்னல் வர , அதில் தன் சுயம் பெற்றவன் நேரத்தை பார்த்தான்.

கௌதம் அழைப்பது அறிந்து , அவனுக்கு அழைப்பு விடுத்தான்.

கௌதம் எடுத்தவுடனே , “அறிவுக்கெட்டவனே , எங்க போய் தொலைஞ்ச நீ..? இப்பவே மணி எட்டரை டா எருமை. வெளிய போனா சீக்கிரமா வர தெரியாதா உனக்கு. இங்க அந்த ஹெட் புடிச்சு என்னைய கத்துறான். சீக்கிரமா வந்து தொலை ” என்று கத்தியவன் வைத்தும் விட்டான்.

பின் , வெற்றி வேலை என்று வந்ததும் தன் கவலைகளை ஒதுக்கி விட்டு சென்றான்.

அவனை பார்த்ததும் திட்டுவதற்காக காத்திருந்த கௌதமிற்கு , அவனின் முகத்தில் அப்பிக்கிடந்த சோகத்தை பார்த்து அமைதியாகி விட்டான்.

“சீக்கிரமா போய் ஸ்டார்ட் பண்ணு , ஆல்ரெடி டைமாகிட்டு ” என்று அவனை பார்த்து சொல்ல , புன்னகைத்து விட்டு ஸ்டூடியோக்குள் நுழைந்து கொண்டான்.

பின் பத்து மணி வரை அவன் கவலையை வேலை தூரம் வைத்திருக்க , ஷோ முடிந்தவுடன் வேகமாக வீட்டிற்கு வந்தவன் அன்னையின் நச்சரிப்பின் காரணமாகவும் கல்யாணத்தை நிறுத்துவதற்காகவும் ஊருக்கு கிளம்ப ஆய்த்தமானான்.

காரை எடுத்தவன் , தன் கவலைகளை மறக்கப்பதற்காக நிறைய பீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு சென்னையிலிருந்து தன் பயணத்தை தொடங்கியவன் தான் இதோ இப்போது இனியாவோடு சென்று கொண்டிருக்கிறான்..

*******
தன் காதல் கதையை சொல்லி முடித்தவன் தீடிரென்று ப்ரேக் போட்டு நிறுத்த ,இனியாவோ காரின் டேஷ்போர்டில் இடித்து கொண்டாள்.

“தடியன் சார்ர்ர்ர் எதுக்கு இப்போ சடன் ப்ரேக் போட்டு நிறுத்துனீங்க ” என்றவாறே தலையை தேய்த்தாள்.

” ஹான் , மேடம் இறங்க வேண்டிய இடம் வந்துடுத்துன்னு அர்த்தம் ” என்று அவன் சொன்னதும் ஜன்னலை திறந்து பார்த்தாள்.

ஆம் , அதற்குள் லால்குடி வந்திருந்தது. நேரம் சென்றதே தெரியாமல் சென்றது இனியாவிற்கு..

” சரி , இறங்கிக்கோ இனியா ” என்றவன் அவளை பார்த்தான்.

அவளும் அவனையே தான் கண் இமைக்காமல் பார்த்திருந்தாள். அது அவனுக்கு என்னவோ போல் இருக்க வண்டியை விட்டு வேகமாக இறங்கினான்.

அவளும் அவன் கூடவே இறங்கி , வெற்றியின் பக்கத்தில் வந்து ” நான் ஏன் உங்களை முன்னாடியே பார்க்கலை ” என்று உரிமையுடன் கேள்வி கேட்டாள் இனியா.

“என்ன..?” என்று புருவம் சுருக்கினான் வெற்றி.

” நான் ஏன் , உங்களை முன்னாடியே பார்த்திருக்க கூடாது தடியன் சார். இப்படி ஒரு காதல் எனக்கு கிடைச்சிருக்கும்ல ” என்று ஆரம்பித்தவளை இடைமறித்தவன்,

” உளர கூடாது இனியா ” என்றவனை பார்த்து ‘ இல்லை’ என்பது போல் தலை ஆட்டினாள்.

” நான் உளரலை தடியன் சார்.‌உங்க பேரு கூட எனக்கு தெரியாது. இசை இசைன்னு நீங்க காதல் தோல்வில புலம்பவும் தான் , உங்க காதல் கதையை சொல்ல சொன்னேன். ஆனா இப்போ உங்க காதல் கதையை கேட்ட பிறகு , எனக்கு ஏன் என்னை நீங்க காதலிச்சிருக்க கூடாதுன்னு யோசிக்க வச்சிடுச்சி. பட் இது அபத்தமான பேச்சுன்னு தெரியுது தடியன் சார். இருந்தாலும் என்ன பண்றது மனசு கேக்கக்காம சொல்ல சொல்லிடுச்சி. அதான் சொல்லிட்டேன். “

“நீங்க கவலை படாதீங்க , என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. ஏன்னா எனக்கு இன்னும் ஒரு நாள்ல என்னோட அத்தான் கூட எனக்கு கல்யாணம் ” என்று சொன்னதும் அவளது கைப்பேசி தன் இருப்பினை காட்ட

“ஒருநிமிஷம் அத்தான் கூப்பிட்டுறாங்க பேசிட்டு வரேன்” என்று அதனை வெற்றியிடம் காட்டியவள் உயிர்ப்பித்து பேசத் தொடங்கினாள்.

” ஹான் , சொல்லுங்க அத்தான்..”

“……..”

” லால்குடி , ரீச் ஆகிட்டேன் த்தான். நீங்க வாங்க “

“…….”

” அப்படிலாம் இல்ல த்தான் தூங்கிட்டேன். அதான் கூப்பிட மறந்துட்டேன் “

“…..”

“இல்ல இல்ல மாட்ட மாட்டேன்”

“…”

” சரி நான் உங்களுக்காக எப்போதும் நிக்கிற இடத்துலயே வெயிட் பண்றேன் வந்திடுங்க” என்று அழைப்பை துண்டித்தாள்.

இத்தனை நேரமும் அவள் பேசுவதையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.தன்னிடம் வாயாடிய பெண்ணா இவள் , இத்தனை அமைதியாக பேசுகிறாளே என்று பார்த்தான்.

” சரி தடியன் சார்ர்ர்ர், நீங்க கிளம்புங்க. அப்புறம் ரொம்பவே நன்றி , எனக்கு லிஃப்ட் கொடுத்து ட்ராப் பண்ணதுக்கு ” என்று புன்னகைத்தாள்.

அவன் ஏதோ சொல்ல வரவும் ,” நான் எங்க லிஃப்ட் கொடுத்தேன் , நீயே வந்து ஏறிட்டன்னு தானே சொல்ல வரீங்க. இதெல்லாம் பார்த்தா எப்படி சாரே . நானா ஏறுனா என்ன நீங்களா ஏறிக்கன்னு சொன்னா என்ன எல்லாம் ஒன்னு தான் சார்.” என்றவள் அவளது லக்கேஜை எடுத்துக்கொண்டு வந்தாள்‌.

“சரி நான் கிளம்புறேன்.‌நீங்க பார்த்து போங்க சார். இசை மட்டுமே உங்க வாழ்க்கை இல்லை . அதையும் தாண்டி எவ்வளோ இருக்கு சார். எதை பத்தியும் யோசிக்காம உங்களுக்காக காத்திருக்கிற பொண்ணு கழுத்துல தாலி கட்டுங்க ” என்றவள் ” நைஸ் டூ மீட் யூ தடியன் சார் ” என்று கை நீட்ட அவனும் கைக்குலுக்கி விடை கொடுத்தான்.

அவள் நான்கு அடி எடுத்து வைத்தவள் திரும்பி பார்த்து ,” இப்போ கூட உங்க பேரு சொல்லலையே சாரே..?” என சிறு குழந்தை போல் கேட்க

அதில் மென்னகை புரிந்தவன் ,” வெற்றிமாறன் ” என்றான்.

” ஓகே வெற்றிமாறன் பாய் ” என்று சென்றாள். அவனும் அவளுக்கு விடைக்கொடுத்து திருச்சியை நோக்கி வண்டியை செலுத்தினான்.