MMM–EPI 3

MMM–EPI 3
அத்தியாயம் 3
ஒரே கும்மிருட்டு. அந்த இருட்டில் ஓர் இடத்தில் மட்டும் ஒளி ஊடுருவி வருகிறது. அங்கே உயரமான நாற்காலி ஒன்று போட பட்டிருக்கிறது. மெல்ல நடந்து வந்து அந்த நாற்காலியில் அமர்கிறான் அலேக்ஸ். கையில் அவன் உயிராய் போற்றி பாதுகாக்கும் கிட்டார். கிட்டாரை டியூன் செய்தபடியே, ஸ்டேஜிக்கு கீழே பார்க்கிறான். ஜனங்கள் யாரும் இன்றி அவ்விடமே வெறிச்சோடிப் போய் கிடந்தது. ஏன் யாரும் தன் காண்சேர்ட்டுக்கு வரவில்லை என யோசித்தப்படியே, கிட்டாரை வாசித்துக் கொண்டே பாட வாயைத் திறக்கிறான் அவன். குரல் வெளியே வரவில்லை. இருமி, கணைத்து, செறுமி என எல்லா வகையிலும் முயன்று பார்க்கிறான். இல்லை, குரல் வெளி வரவேயில்லை. குரல் போய் விட்டதோ என பயம் நெஞ்சைக் கவ்வ, தொண்டையை இரு கை கொண்டு பரபரவென தடவி விட்டவன் மீண்டும் முயற்சித்தான். அப்பொழுதும் தோல்விதான். எது அவனின் வாழ்வாதாரமாக இருந்ததோ, எது அவன் புகழ் பெற காரணமாக இருந்ததோ, எது கோடானு கோடி ரசிகர்களை பெற்று தந்ததோ அது இப்பொழுது அவனிடத்தில் இல்லை. பயத்தில் முத்து முத்தாய் வேர்க்க, கண்கள் கலங்க ஓவென பெருங் குரலெடுத்துக் கத்தினான் அலேக்ஸ்.
“ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல ஜோனா! கனவு தான்! எழுந்துக்கோ! ப்ளிஸ் வேக் அப் ஜோனா!” எனும் பதற்றமான குரலில் மெல்ல கண் விழித்தான் அலேக்ஸ்.
காட்சிகள் எதுவும் ஃபோக்கசாகாமல் மங்கலாக தெரிந்தன. தன்னருகே குனிந்து தேற்றிய உருவத்தை வயிற்றோடு இறுக்கிக் கட்டிக் கொண்டான் அவன்.
“ஐம் ஸ்கேர்ட்!” என நடுங்கியவன் அணைத்த உருவத்தின் உள்ளேயே புதைந்து போய் விடுபவனைப் போல இன்னும் இறுக்கினான். அவன் அணைப்பில் உடல் விறைத்த அவ்வுருவம், மெல்ல மெல்ல இளகியது. அவன் அணைப்புக்குள் இருந்தாலும் அவனை திருப்பி அணைக்கவோ, விலக்கவோ முயலவில்லை அவ்வுருவம்.
“உனக்கு ஒன்னும் இல்ல! யூ ஆர் ஆல்ரைட்! முழிச்சுக்கோ ஜோனா!” மிக மெல்லிய குரலில் கெஞ்சியது அக்குரல்.
“தீரன்?”
குரலை வைத்து அடையாளம் கண்டுக் கொண்ட ஜோனாவுக்கு மங்கலாக பல நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தன. ப்ளைட் இறங்கியது, தீரனைப் பார்த்தது, காபி குடித்தது, ஹோட்டேல் போனது, தூங்கியது, பீச் போனது, எங்கே நிம்மதி பாட்டு, மயங்கியது, முழிப்பு வரும் போல இருந்த நேரத்தில் நாக்கில் அடிக்கப்பட்ட ஒரு வித கசப்பு ஸ்ப்ரே, மீண்டும் மயங்கியது, யாரோ அசால்ட்டாக தன்னை காரில் இருந்து இறக்கி படுக்கையில் படுக்க வைத்தது, தலை கோதியது என பல நிழற்படங்கள் வரிசைக் கட்டி வந்து நினைவடுக்கில் முட்டி மோதின.
மெல்ல மெல்ல மூளை கூர்மைப் பெற, அணைத்திருந்த உருவத்தை படக்கென படுக்கையில் தள்ளி, அதன் வயிற்றில் ஏறி அமர்ந்தான் அலேக்ஸ். தீரனின் கை இரண்டையும் அவன் தலைக்கு மேல் உயர்த்தி ஒற்றைக் கைக் கொண்டு பிடித்து, இன்னொரு கரத்தால் தாடையை அழுத்திப் பிடித்தான்.
“யார்டா நீ? எதுக்கு என்னை மயங்க வச்ச? எங்க கொண்டு வந்துருக்க என்னை? ஹூ தெ ஹெல் ஆர் யூ?”
குரல் கரகரப்பாக வெளி வந்தது இவனுக்கு. இன்னும் மயக்கம் முற்றிலுமாக தெளிந்திருக்கவில்லை. ரூமில் உள்ள பொருட்கள் எல்லாம் சுழல்வது போல தோன்றியது அலேக்ஸுக்கு. தலையை உலுக்கிக் கொண்டவன், தனக்குக் கீழ் படுத்திருப்பவனின் முகத்தைக் கூர்ந்துப் பார்த்தான்.
கீழிருந்தவனோ மெல்லிய புன்னகையுடன்,
“நவ் ஹூ தெ ஹேல் ஆர் யூ!” என ராகமிழுத்து பாடினான்.
“மெடிசன் அவேனியூ!(அந்த பாடலை பாடிய பேண்ட்)” என்ற அலேக்ஸுக்கு சிட்டுவேஷன் சாங் பாடியவனைப் பார்த்து புன்னகை வரும் போல இருந்தது. அடக்கிக் கொண்டு அவன் தாடையை இன்னும் அழுத்தினான்.
வலியில் முகம் சுழித்தாலும் திமிராக,
“வெல்கம் அலெக்சாண்டர் ஜோனா! இந்த சிறு முயல் விரிச்ச வலையில சிக்கிக் கொண்ட சிங்கமே! வருக வருக” என்றான் தீரன்.
“என்ன வேணும் உனக்கு? எதுக்கு இந்த கடத்தல்? டெல் மீ டேம்மிட்!” கத்தினான் அலேக்ஸ்.
“ரிலேக்ஸ் ஜோனா ரிலேக்ஸ்! நீ இன்னும் வீக்கா இருக்க! ப்ளிஸ் கால்ம் டவுன்”
பளாரென ஓர் அறை விழுந்தது தீரனுக்கு.
“ஆவ்ச், வலிக்குது ஜோனா!”
“நல்லா வலிக்கட்டும்! என்னடா ட்ரக் குடுத்த எனக்கு? நான் இன்னும் ட்ரக் அடிக்ஷனுக்காக மெடிகேஷன்ல இருக்கேன் தெரியுமா! ஹவ் டேர் யூ”
அலேக்ஸுக்கு பயமாய் இருந்தது. கடவுளின் காலைத் தொட்டுவிட்டு மீண்டும் பூலோகத்திற்கு வந்ததில் இருந்து உயிர் மேல் கொஞ்சமாய் ஆசை வந்திருந்தது. ட்ரக், ட்ரீங்க்ஸ் பழக்கங்களுக்கு பாய் சொல்லி விட்டு மெடிகேஷனில் இருக்கிறான். தீரன் அடித்த ஸ்ப்ரே ஏதோ ஒரு வகையான ட்ரக்ஸ் என எண்ணிக் கொண்டவன், எங்கே மீண்டும் அதன் பின்னே போகும் ஆவல் வந்து விடுமோ என பயந்தான். அந்த எண்ணமே அவனை ஆக்ரோஷமாக மாற்றியது. அந்த பழக்கங்களில் இருந்து வெளி வர அவன் பட்ட பாடு அவனுக்குத்தான் தெரியும். உடற்பயிற்சி, தியானம், மருந்து மாத்திரைகள் என மனத்தை திசை திருப்ப அவனும் அவனது ஸ்ரின்க்கும்(சைக்கியாட்ரிஸ்ட்டை இப்படியும் அழைப்பார்கள். உள்ளுக்குள் இருந்து கொள்ளும் எதிரியை இவர்கள் ஸ்ரின்க்(சின்னதாக்குவது) செய்வதால் வந்த காரண பெயர்) படாத பாடு பட்டார்கள். ஓரளவு வெற்றி அடைந்தவனை மீண்டும் அந்த சூழலுக்குத் தள்ளினால், வெகுண்டெழ மாட்டானா?
“நீ உடம்ப ஆர்னால்ட் மாதிரி வச்சிருந்தாலும் நெஜத்துல எங்க ஊரு ஓமக்குச்சி சார் ரேஞ்ச்கு தான் உன் ஸ்ட்ரெங்த் இருக்கு!”
“வாட்? என்ன உளருற?” என்றவன் மீண்டும் கையை ஓங்கினான்.
“வலிக்குது ஜோனா!” என தன் பெரிய கண்களால் பாவமாய் பார்த்து கெஞ்ச, சட்டென கையை கீழே இறக்கினான் அலேக்ஸ்.
“உன் மேல சத்தியமா, நானே செஞ்ச மயக்க மருந்தும் ஸ்லீப்பிங் ஸ்ப்ரேவும் தான் யூஸ் பண்ணேன் ஜோனா! நீ ரொம்ப வீக்கா இருக்கவும் மருந்து சட்டுன்னு வேலை செஞ்சிருச்சு!”
தலை விண் விண்ணென வலிக்க ஆரம்பித்திருக்க நெற்றியை ஒரு கையால் தேய்த்துக் கொண்டான் அலேக்ஸ். அந்த சில விநாடிகளைப் பயன்படுத்திக் கொண்டு, பட்டென அவனை கீழே தள்ளி அவன் மேல் அமர்ந்திருந்தான் தீரன். அலேக்ஸின் கன்னத்தில் இரண்டு அறை வைத்தவன்,
“நீ குடுத்தத திருப்பி கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடா என் வெள்ளை மன்னவா!” என பாட்டை மாற்றி வேறு பாட செய்தான்.
அலேக்ஸுக்கு கோபம் தலைக்கேற தீரனை தாக்க முயன்றான். இருவரும் அந்த கட்டிலிலேயே கட்டிப் புரண்டனர்.
ஒரு கட்டத்தில்,
“ஓ மை குட்னஸ்! ஓ மை குட்னஸ்!” என தீரனைத் தள்ளி விட்டு விலகி அமர்ந்தான் அலேக்ஸ்.
“ப்ளடி ஹெல்! எ லேடி!!!!!!!”
அவன் குரலில் கோபம் இருந்ததா, ஆச்சரியம் இருந்ததா, சிரிப்பு இருந்ததா, கடுப்பு இருந்ததா, என பிரித்துப் பார்க்க முடியாத பாவம்!
தலையை நிமிர்த்திய அலேக்ஸ் கட்டிலில் முட்டிப் போட்டு நின்றிருந்த உருவத்தை மேலிருந்து கீழ் வரை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்தான். கண்கள் அவ்வுருவத்தின் நெஞ்சப் பகுதியில் நிலைக்குத்தி நின்றன. சிறியதாக இருந்தாலும், இருந்தது அது! கட்டிப் புரளும் போது கைப்பட்ட போதே அதன் மென்மை புரிந்துப் போனது இவனுக்கு! அதனால் தான் சட்டென விலகினான்.
தீரனாக வந்தவன் தீரனில்லை. தீரி என வைத்துக் கொள்வோமா? அப்படி ஒரு வார்த்தை இல்லாததால் அவளை திரி என்போமா! திரி, அதிரிபுதிரி!!!!
மீண்டும் அவளை நன்றாக பார்த்தவன் தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டான்.
“எத்தனைப் பொண்ணுங்கள கடந்து வந்துருக்கேன்! ம்ப்ச்! என்னையே ஏமாத்திட்டியே! ஓ மை காட்” அவனால் இன்னும் நம்ப முடியவில்லை தன்னைக் கடத்திக் கொண்டு வந்தது ஒரு பெண்ணென்று.
தன்னை சந்திக்க வந்தப் போது குரல் கரகரவென ஆண் குரலை ஒத்தே இருந்தது. ஒல்லியான தேகம். ஆண்களைப் போலவே குட்டை முடி. முகத்தில் மீசை இல்லை. எத்தனையோ ஆண்கள் மீசை இல்லாமல் மொளு மொளுவென இருப்பதில்லையா! அலேக்ஸை பார்க்க வந்திருந்த பொழுது டீ ஷர்ட் அணிந்து அதன் மேலே லெதர் ஜேக்கேட் போட்டிருந்தாள். பேகி ஜீன்ஸ் தொள தொளவென எங்கே விழுந்து விடுமோ என்பது போல இருந்தது. ஆண்கள் அணியும் பாடி ஸ்ப்ரே! அச்சு அசல் ஆண் போலவே வந்து தன்னை ஏமாற்றிய அந்தப் பெண்ணை மீண்டும் ஆச்சரியமாகப் பார்த்தான் இவன்.
அவளும் அவனைத்தான் பார்த்தவாறு இருந்தாள்.
“ஏன்?” என கேட்டான் இவன்.
“நிம்மதி வேணும்னு கேட்ட! அதான் குடுக்கலாம்னு கூட்டிட்டு வந்தேன்!”
அவள் பதிலில் கோபம் வர, தலையணையை அவள் மேல் வீசினான் அலேக்ஸ்.
“நான் எவ்வளவோ தப்பு பண்ணிருக்கேன்! ஆனா ஒரு பொண்ண கை நீட்டி அடிச்சது இல்ல! நீ அடிக்க வச்சிட்ட! தெரியாம செஞ்சத மறுபடியும் தெரிஞ்சே செய்ய வச்சிடாதே! சொல்லு, முதல்ல உன் பேர சொல்லு!”
“ஜீவா!”
“நீ க்ரூப்பியா ஜீவா? இப்போலாம் நான் க்ரூப்பி கூட உறவு வச்சிக்கறது இல்ல! அதெல்லாம் விட்டு வந்து ரொம்ப வருஷம் ஆகுது! அதோட என் கூட இருக்க நான் செலெக்ட் பண்ணற பொண்ணுங்களுக்குக் கூட சில குவாலிட்டிஸ் இருக்கனும்னு நான் எதிர்பார்ப்பேன்! என் கையில சுருட்டிப் பிடிச்சிக்க நீள முடி இருக்கனும், என்னைத் தாங்கிக்க மெத்து மெத்துன்னு பஞ்சு போல உடம்பு இருக்கனும், அப்புறம்.. ஓ யா! நான் வழுக்கி விழுந்துடாம இருக்க தேவையான இடங்கள்ல மேடு பள்ளங்கள் இருக்கனும்!” என்றவன்,
அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வைப் பார்த்து,
“சாரி பேப்! ஐம் நாட் இண்ட்டெரெஸ்டெட்!” என்றான்.
புகழ் பெற்ற பாடகனாய் ஆனதிலிருந்து நிறைய பெண்கள் மேலே வந்து விழுவார்கள். இவன் தங்கும் அறைகளில் பெல்பாயை கரேக்ட் செய்து வந்து ஒளிந்துக் கொள்வது, கேரவேனில் ஒளிந்துக் கொள்வது, ஷோ செய்யப் போகும் இடங்களில் டாய்லெட்டுக்கு கூட செக்குரிட்டி இல்லாமல் போக முடியாது. அங்கும் ஒளிந்திருப்பார்கள் பெண்கள். (இதெல்லாம் நெஜமா நடப்பது. ஒரு துறையில்(ஸ்போர்ட்ஸ், நடிப்பு, இசை இப்படி) புகழ் பெற்றவர்களை படுக்கையில் சரிப்பது இந்தப் பெண்களுக்கு பெருமையான விஷயம்) ஆரம்பத்தில் எல்லாம் ஃபன்னாகத்தான் இருந்தது இவனுக்கு. போக போக இம்மாதிரி உறவுகள் கசந்துப் போனது. அதோடு வீடியோ லீக்கேஜ், பிள்ளை இவனுக்குத்தான் பிறந்தது என வழக்குத் தொடுப்பது, பெர்சனல் போட்டோக்களை மீடியாவுக்கு கொடுத்து காசு பார்ப்பது என க்ரூப்பிகளால் பல விதமாய் பாதிக்கப் பட்டிருந்தான் அலேக்ஸ். போதுமடா சாமி என அந்த அத்தியாயத்துக்கு பெரிதாய் முழுக்கு போட்டிருந்தான்.
இந்த முறை இவள் தலையணையை அவன் மேல் தூக்கி எறிந்தாள்.
“நீ அதுக்கு மட்டும் தான் லாயக்குன்றது மாதிரி பேசாதே ஜோனா! ரொம்ப கோபமா வருது எனக்கு. எனக்கு கோபம் வந்தா நல்லது இல்ல! அடிச்சுப் புழிஞ்சு காயப் போட்டுருவேன்! ஆனாலும் யாருமே ஒத்துக்காத ஒரு விஷயத்த நீ ஒத்துக்கிட்டதால உன்னை இப்போதைக்கு சும்மா விடறேன்”
நன்றாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டவன், கேள்வியாக அவளைப் பார்த்தான்.
“என்னை பொண்ணுன்னே யாரும் ஒத்துக்கிட்டது இல்ல! நீ அதை நம்பனது மட்டும் இல்லாம, பேப்னு வேற கூப்டுட்டா! எனக்கு எவ்ளோ ஹேப்பியா இருக்குத் தெரியுமா ஜோனா! வார்த்தையால விவரிக்க முடியாது அத!” எனறவள் கட்டிலில் இருந்து கீழிறங்கி ஏதோ சாகசம் செய்பவளைப் போல நின்றாள்.
என்ன செய்யப் போகிறாள் என இவன் பார்க்க, மேலே எகிறி ப்ரண்ட் சமர்சால்ட் அடித்து அழகாய் குதித்து நின்றாள். ரூமை சுற்றி அதே போல சமர்சால்ட் அடித்தவளை ஆவென வாய் பிளந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அலேக்ஸ்.
“ஓ மை காட்! நீ பொண்ணா இல்ல புயலா? இப்படி சுழண்டு சுழண்டு அடிக்கற! நிறுத்து நிறுத்து” என சத்தமிட்டான். எங்காவது இவள் இடித்துக் கொண்டு மயங்கி விழுந்தால், இவன் எப்படி இந்த இடத்தை விட்டு வெளியேறுவது!
அவள் மீண்டும் கட்டிலின் அருகே வந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்ததும்,
“எனக்குப் புரியுது ஜீவா! ஐம் எ செலிபரிட்டி! யாருக்கும் என் கூட பழகிப் பார்க்கனும்னு தோணத்தான் செய்யும். உனக்கு அப்படி தோணி, என்னை கிட்நப் பண்ணிட்ட! போகுது விடு, உன்னை மன்னிச்சிடறேன். நான் திரும்பி போகனும்! சோ ப்ளிஸ், நான் கெளம்பறதுக்கு அரேஞ்ச்மேண்ட் செய்யலாமா?” என கேட்டான்.
“ஓவர் மை டெட் பாடி” என அசால்ட்டாக சொன்னவள்,
“இனிமே நீ என் கூடத்தான் இருக்கனும் ஜோனா! உன்னை நான் ரொம்ப நல்லா பார்த்துப்பேன்! நீ கேட்டதெல்லாம் செய்வேன்! நல்லதா சமைச்சுப் போட்டு உன்னை ஸ்ட்ரோங்கா மாத்துவேன்! என் கூட இருந்தீனா ட்ரீங்க்ஸ், ட்ரக்ஸ் எதுவும் ஞாபகத்துக்கு வராது! வீ கென் பீ குட் ப்ரேண்ட்ஸ்! நீ தேடி அலையற பீஸ் ஆப் மைண்ட் இங்க கிடைக்கும் ஜோனா! என் கூடவே இருந்திடேன்!” என அதிகாரமாக ஆரம்பித்தவள் கெஞ்சலில் முடித்தாள்.
“நோ” ஒற்றை சொல்லில் மறுத்தான் அலேக்ஸ்.
“டோண்ட் சே நோ! நோ சொல்லாதே, சொல்லாதே!” என கத்த ஆரம்பித்தாள் ஜீவா.
ஹிஸ்டீரியா வந்தது போல கத்த ஆரம்பித்தவளை வேகமாய் நகர்ந்து வந்து பிடித்துக் கொண்டான் அலேக்ஸ்.
“ஹேய் டோண்ட் ஷவுட்! ஜீவா, ஜீவா” என இவன் தோளைப் பிடித்து உலுக்க, அவன் தோளில் சாய்ந்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.
“ஹேய், ஹேய் மூலான்!(ஆண் வேடமிட்ட பெண் கார்ட்டூன் கேரக்டேர்)..வேக் அப்”
தன் மேல் மயங்கிக் கிடந்தவளை மிக மென்மையாய் கட்டிலில் கிடத்திய அலேக்ஸ், தண்ணீர் பாட்டில் எங்காவது கிடைக்குமா என ரூமை அலசினான்.
ஒற்றைக் கண்ணை கொஞ்சமாகத் திறந்து அவனின் தேடலை ரசித்தவள், அவன் திரும்புவது போல இருக்க படக்கென கண்ணை மூடிக் கொண்டாள்.
இவள் மூலானாய் இருப்பதும் பூலானாய்(பூலான் தேவி) மாறுவதும் நம் ஜோனாவின் கையில்! ஜீவாவுக்கு ஜீவன் கொடுப்பானா அவளின் ஜோனா?????
{மயங்குவா(ன்/ள்)}
(இந்த கதையில சில பல ஆங்கில பாடல்கள் வரும். பாடல் வீடியோலாம் எக்குத்தப்பா இருக்கு. முடிஞ்ச அளவு டீசண்டான வீடியோவா தேடி போடறேன். அதோட சில விஷயங்களுக்கு விளக்கமும் சேர்த்துக் குடுத்துட்டு வரேன். பலருக்கு இதெல்லாம் தெரியும். ஆனாலும் சிலருக்கு தெரியாமல் இருக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கு! அதுக்குத்தான் இந்த விளக்கங்கள்! தீரனை ஜீவாவா மாத்தி, போன எபிய மறுபடி படிச்சுப் பாருங்க. தீரன் செஞ்ச சின்ன சின்ன விஷயங்களில எவ்ளோ அன்பும் அக்கறையும் ஒளிஞ்சிருக்குன்னு புரியும். இவன் தேங்க்ஸ் சொன்னப்போ தீரன் எ..எதுக்குன்னு தடுமாறுற இடம்லாம் இப்போ நல்லா புரியும். அது தீரன் இல்ல தீரின்னு கண்டுப்புடிச்ச என் செல்லங்களுக்கு வாழ்த்துக்கள். இவ ஏன் கடத்துனா, சாப்பாடு குடுத்து ஏன் கடத்தனாலாம் பின்னால வரும் டியர்ஸ்! போன எபிக்கு லைக், காமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. மீண்டும் சந்திப்போம். லவ் யூ ஆல்!)