NIRAL MOZHI -15.1

NIRAL MOZHI -15.1
First!
Bitcoin (cryptocurrency)
பிட்காயின் (Bitcoin) என்பது எண்ணிம நாணயக் குறியீடு ஆகும். இதன் குறியீடு BTC.
Above picture, just a symbol of bitcoin. Not real coin!
நுண்காசு என்றும் அழைக்கப்படும்!
[சத்தோசி நகமோட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயம் ஆகும்]
இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது.
சுருக்கமாக computer generated currency!
Ok, Next!
Bitcoin Wallet
பொதுவாக பணப்பை என்பது பணம் வைக்கும் பையைக் குறிக்கும். அதேபோல்தான், பிட்காயின் பணப்பை(Bitcoin Wallet) என்பது, பிட்காயின்களை(Bitcoins) சேமித்து வைக்கும் இடமாகும்.
Example : bitcoin wallet = bank account/ email account என்று எடுத்துக் கொள்வோம்.
வங்கி கணக்கிற்கு(Bank Account) ஒரு வங்கிக் கணக்கு எண் (Bank Account Number) இருக்கும்.
மின்னஞ்சலுக்கு(Email) மின்னஞ்சல் முகவரி(Email ID) இருக்கும்.
அதேபோல, பிட்காயின் பணப்பைகளுக்கு(Bitcoin Wallet) ஒரு முகவரி உண்டு. அதன் பெயர் பொது-திறவி குறியீட்டியல் (Public Key – Public-key cryptography).
Ok! Now!!
வங்கிக் கணக்கிற்கு(Bank Account) ஒரு கடவுச்சொல்(Password) உண்டு! வங்கி கணக்கில் உள்ள பணத்தை பாதுகாப்பதற்கு!
மின்னஞ்சல் முகவரிக்கு(Email ID) கடவுச்சொல் உண்டு! வேறு யாரும், மின்னஞ்சல்களைப் பார்த்துவிடக் கூடாது என்பற்காக!
அதேபோல், பிட்காயின் பணப்பைகளுக்கும் கடவுச்சொல்(Password) போன்ற ஒன்று உண்டு! அது, தனியர்-திறவி குறியீட்டியல் (Private Key – Private-key cryptography).
Ok! Now Transactions!!
வங்கி கணக்கிற்கு(Bank Account) யாராவது பணம் அனுப்ப வேண்டும் என்றால், நாம் நமது வங்கி கணக்கு எண்-ஐ(Bank Account Number) அவர்களிடம் சொல்வோம்.
மின்னஞ்சல்-க்கு(Email), ஏதேனும் அனுப்ப வேண்டும் என்றால், நமது மினனஜால் முகவரியைத்(Email ID) தருவோம்.
அதேபோலதான், பிட்காயின் பணப்பைகளுக்கு (Bitcoin Wallet) பிட்காயின்(Bitcoin) அனுப்ப வேண்டும் என்றால், (Public Key) பொது திறவி தர வேண்டும்.
Next! Important!!
யாரிடமும், நம் வங்கி கணக்கின் கடவுச்சொல்(Bank Account Paasword), மின்னஞ்சல் கடவுச்சொல்(Emai ID Password)… இதனைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம்.
அதேபோல்தான், பிட்காயின் பணப்பைகளின் தனியர் திறவியை(Bitcoin Wallet Private Key) யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
அப்புறம் எதற்காக இவைகள்?
வங்கி கணக்கு கடவுச்சொல் (Bank Account Password)
- வங்கி கணக்கின் உள்ளே நுழைய (Login)
- வங்கிக் கணக்கின் இருப்பு (Bank Account Balance) எவ்வளவு என்று பார்க்க
- வேறு யாருக்கும் பணம் அனுப்ப (Money Transfer)
மின்னஞ்சல் கடவுச்சொல் (Email -ID)
- மின்னஞ்சலுக்குள் நுழைய (Login)
- வந்திருக்கும் மின்னஞ்சல்களைப் (Inbox) பார்க்க
- வேறு யாருக்கும் (Sending Email) அனுப்ப
இதேபோலத்தான்… பிட்காயின் பணப்பை தனியர் திறவி (Bitcoin Wallet Private Key)
- பிட்காயின் பணப்பைக்குள் நுழைய
- பிட்காயின் பணப்பைகளில், பிட்காயினின் இருப்பு (Bitcoin Balance) எவ்வளவு என்று பார்க்க
- வேறு யாருக்கும் பிட்காயின்(Sending Bitcoin, Spending Bitcoin) அனுப்ப
Note
Private Key Format
பிட்காயின் பணப்பை(Bitcoin Wallet) ஆரம்பிக்கப்படும் பொழுதே, தனியர் திறவு கொடுக்கப்படும். இந்த Private Key(256 bits Long) generate பண்ணுவதற்கு, complex mathematical algorithm use பண்ணப்படும்.
5KUR9tz4iDTpW2xQkNvJDKyGHYWT9q8LriTLH29Tv8Thiyqvy9A
Public Key Format
Private Key-லிருந்து Public Key generate பண்ணப்படும்.
1DSsgJdB2AnWaFNgSbv4MZC2m71116JafG
கட்டச்சங்கிலி (Blackchain)
Normal Cuurency (example: rupees) இது, ஒரு மைய வங்கியால் உருவாக்கப்படும், கட்டுப்படுத்தப்படும் மற்றும் மேற்பார்வையில் இருக்கும்.
ஆனால், பிட்காயின(Bitcoin) என்ற இந்த கணினிக் காசு எந்த வங்கியாலும் மேற்பார்வை இடப்படுவது இல்லை. கட்டுப்படுத்தப்படுவதும் இல்லை.
மாறாக, கட்டச்சங்கிலி (Blockchain) என்ற மென்பொருளால் ஆன வரவுப் பதிவேட்டில் (ledger) சேமிக்கப்பட்டு, பாதுகாக்கப் படுகின்றது.
கட்டச்சங்கிலி என்பது ஒரு மென்பொருளால் ஆன வரவு-செலவு கணக்குப் புத்தகம். ( blackchain is a software ledger)!
Centralized / Decentralized
வங்கி பணப் பரிவர்த்தனைகள்(Bank Transactions) எல்லாம், வங்கியின் தரவுத்தளத்தில்(Bank Database) சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
இதை கண்காணிக்கும் உரிமை வாடிக்கையாளர்களுக்கு கிடையாது. (Centralized Control System)
பிட்காயின் பணப் பரிவர்த்தனைகள்(Bitcoin Transactions) கட்டச்சங்கலியில் (Blackchain) சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
இதைக் கண்காணிக்கும் உரிமை பலருக்கும்(anyone can view) பரவலாக்கப்பட்டுள்ளது. (decentralized)
அதாவது, பிட்காயின் பணப் பரிவர்த்தனைகளை (Bitcoin Transactions), யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
Some Tips
- பிட்காயினை, வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம்; பொருள்கள் வாங்கலாம்; மற்றும் சேமித்து வைக்கலாம்.
- பிட்காயினை வைத்துக் கொண்டு… டாலர், ரூபாய் போன்ற பணத்தை வாங்கலாம். மற்ற பொருட்களையும் வாங்கலாம்(வலைத்தளங்களில் மட்டும்- online purchase).
- பிட்காயின் பணப்பை(Bitcoin Wallet) create பண்ண… நிறைய செயலிகள்(apps) உள்ளன.
- பிட்காயின் பணப்பையில்(Bitcoin Wallet), பிட்காயின்(Bitcoin) வருவதற்கு இரண்டு வழிகள் உண்டு.
-
- பிட்காயின் பரிமாற்றம் மையங்கள்(Bitcoin Exchange)
-
-
- இதில் ரூபாயைக் கொடுத்து பிட்காயின்கள் வாங்கி கொள்ளலாம். ( Rupees —–> Bitcoins)
- இப்படி வாங்கும் பொழுது, உங்களது Personal Details (Identity Card) கொடுக்க வேண்டும்.
- Example : ZebPay, Unocoin, coinbase
-
-
- நமது பிட்காயின் பணப்பைக்கு, யாரையாவது பிட்காயின் அனுப்பப் சொல்லலாம்.
- ஒரு மின்னஞ்சல் முகவரியை (Email ID) வைத்து, அது யாரோடது என்று கண்டுபிடிக்க முடியும். அதேபோல், வங்கி கணக்கு எண் (Bank Account Number) வைத்து, அது யாரோடது என்று கண்டறிய முடியும்.
- ஆனால், பிட்காயின் பொது திறவு(Bitcoin Public Key) கொண்டு, அதன் உரிமையாளர் யாரென்று கண்டறிய முடியாது. (இதில், சில விதிவிலக்கு உண்டு)
- சில நாடுகளில் பிட்காயின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்… it is not illegal by any law in India. At the same time, it is not legal! But bitcoin exchanges are legal in India.
Bitcoin Wallet Creation
https://login.blockchain.com/#/signup?showWallet
பிட்காயின் பணப்பை(Bitcoin Wallet) create பண்ண, E-mail ID மற்றும் Password மட்டும் போதும்.
குறுக்க எண்கள் (Hash values) (optional)
ஒவ்வொரு பிட்காயின் பணப் பரிவர்த்தனைக்கு, ஒரு குறிப்பிட்ட அளவு நீளமுள்ள எண் (குறுக்க எண்) கொடுக்கப்படும்.
குறுக்க எண்(hash value) 256 bits இருக்கும்.
Network Service Provider கொடுக்கும் விவரங்கள்
- கைப்பேசி எண்ணிற்கு வரும் அழைப்புகள்(Incoming and Outgoing Calls).
- கைப்பேசி எண்ணிற்கு வரும் குறுஞ்செய்திகள்(text messages).
- மின்னஞ்சல் விவரங்கள் (e-mail).