NKV – 1(1)

NKV – 1(1)

நெருங்காதே காதல் வேடனே…🖤

காதல் வேடன் 🖤 – 01

கல்கத்தாவின் பிரபலமான கிளப்பில் டிஸ்கோ பாடல்கள் ஒலித்துக் கொண்டு அந்த இடத்தையே அதிர வைத்துக் கொண்டு இருக்க, பார் இருக்கும் இடத்தில் அமர்ந்தபடி, சிப் சிப்பாக விஸ்கியை பருகிக் கொண்டிருந்தான் அவன்.

ஆறடி உயரத்தில் அவனுடைய பால் நிறத்திற்கும் கட்டுமஸ்தான உடலுக்கும் பொருந்தும் படியான கிரே கலர் ஷர்ட்  அணிந்திருந்தவன், சட்டையின் மேல் இரண்டு பொத்தான்களை திறந்து விட்டிருக்க, அதுவும் கூட அவனுக்கு தனி வசீகரித்தை தான் கொடுத்தது. 

தன்னுடைய தலையை கோதியபடியே, “ஒன் மோர் விஸ்கி வித் ஐஸ்” என்றுவிட்டு டேபிளில் தாளம் தட்டியபடி சுற்றிலும் பார்வை பதித்தபடி இருக்க, அவன் வந்த நொடியிலிருந்து  இனிப்பை பொய்க்கும் எறும்பென அவனையே பார்த்திருந்தது ஒரு ஜோடி கண்கள்.

அதை அவனும் கண்டுக் கொண்டது போல் அவனின் சாம்பல் நிற விழி ஒரு முறை சுருங்கி விரிய, அவனின் உதடுகள் லேசாக வளைந்தது. அதன் பின் ஆர்டர் செய்த விஸ்கியை அருந்திக் கொண்டிருக்க, அவனின் பாக்கெட்டில் இருந்த ஐபோன் இசைத்து தன் இருப்பை காட்ட, அதை எடுத்த அடுத்த நொடி அந்த பக்கத்தில் இருந்து படபடவென பேச ஆரம்பித்தான் அச்சுதன்.

“பையா எங்க இருக்கிங்க…. என்ன எதோ சாங் ஓடுற மாதிரி சவுண்ட் கேட்குது… மறுபடியும் கிளப்புக்கு போயிட்டிங்களா… எப்போ வருவிங்க” என்றவன் கேள்வி கணைகளை தொடுத்து கொண்டே போக, எதிர் பக்கத்தில் இருந்து எந்தவொரு பதிலும் வராமல் இருந்ததை உணர்ந்தவன், தான் பேசியதை மீண்டும் நினைவு கூர்ந்தான்.

அவன் அமைதி எதனால் என்பதை கண்டுக் கொண்டவன், பையாவை ஜீ என்று மாற்றிக் கொண்டு “இல்ல ஜீ… எப்போ வருவிங்கனு கேட்க தான் கால் பண்ணேன்..‌. ஒரு வோர்க் வந்திருக்கு… ரொம்ப பெரிய இடம்” என்ற அச்சுவின் குரல் மெல்லிய தயக்கத்தோடே ஒலிக்க,

அதை எல்லாம் சிறிதும் கண்டுக் கொள்ளாது போனை ஆஃப் செய்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் அந்த சாம்பல் நிற விழியாளன்.

டொய்ங்…டொய்ங் என்ற சத்தத்திலே அவன் அழைப்பேசியை துண்டித்ததை உணர்ந்த அச்சுவிற்கு அவன் தாமதமாக வருவதன் காரணம் புரிய பெருமூச்சு ஒன்றை வெளியிட்டபடி வந்திருந்தவனை சமாளிக்க கிளம்பினான்.

இன்னொரு கிளாஸ் விஸ்கியும் உள்ளே போய் இருக்க, அந்த சாம்பல் விழியாளன்  அருகில் வந்து நின்றாள் அந்த நவநாகரீக யுவதி… அவள் கேத்ரீன்… செல்வ செழிப்பிலே வளர்ந்து அதிலே செழித்துக் கொண்டு இருப்பவள்.

அந்த பப்பிற்கு எப்போதும் வரும் ரெகுலர் கஷ்டமர்… சில நேரம் பொழுதுப் போக்கிற்காக… சில நேரம் ஆடம்பரத்திற்காக… சில நேரம் வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்காக… ஆம்! ரசித்து வாழ தான்… அவளிடம் கேட்டாலும் அப்படி தான் சொல்வாள்…

“இருக்கிறது ஒரு லைஃப்… ஜஸ்ட் என்ஜாய் இட்… எப்படியும் மேரேஜ் ஆன அவனோடு மட்டும் தானே குப்பை கொட்டனும்… பிரீடம்(freedom) இருக்கிற வரை என்ஜாய் செய்யனும்… அப்புறம் நமக்கு பிரீடம்  இல்லாத லைஃப் தான்… ச்சே இரிட்டேடிங் சொசைட்டி” என்றவளின் குரலில் அவ்வளவு கசப்பு மிஞ்சி இருக்கும்…

ஆனால் இவ்வளவு தூரம் அவள் வந்து இருப்பதே அவளுக்கு கிடைத்த சுதந்திரம் என்பதை அவள் மட்டுமல்ல… பலரும் மறந்தும், மறுத்தும் கொண்டு தான் இருக்கின்றனர்… சுதந்திரம் கிடைக்காமல் வாழும் பலர்… சுதந்திரம் கிடைத்தும் அதை வாழத் தெரியாத சிலர்… அப்படி பட்டவளுள் இவளும் ஒருத்தி!

தனது உடலை இறுக்கியிருந்த பிளாக் ஸ்லீவ் டாப்பை இன்னும் கீழே இறக்கியவாரு தன் முன்னழகை அவனுக்கு காட்டியபடியே மோகன புன்னகையை சிதறவிட்டபடி அவனை நெருங்கி… அவன் தோள்கள் உரச நின்றவள்,

“ஹாய் அபி பேப்… கேன் ஐ ஜாயின் வித் யூ” என்றபடி அவன் கரத்தினை பற்றி குலுக்க, அவளை மேலும் கீழும் பார்த்தவன் பின் அவளை நோக்கி மந்தகாசமாக புன்னகையை சிந்தியவன் “யா பேபி இட்ஸ் மை பிளஷர்” என்றவன் தன் உதட்டில் மெல்லிய குறுநகை படரவிட்டபடி,

“பட் நாட் பார் ப்ரீ(free)…” என்றதும் இன்னும் அவன் மேல் உரசியபடி நின்றவள், “ஐ நோ அபி பேப்… எப்போவும் போல முடிஞ்சவுடன் கேஷ்(cash) உன்னுடைய அக்கவுண்ட்க்கு டிரானஸ்பர் பண்ணிடுறேன்” என்றிட, பளிரென்று ஒரு மயக்கும் புன்னகையை சித்தியவன், அவளின் இடையை இறுக பற்றியபடி அந்த பப்பில் தனக்கென இருக்கும் பிரைவெட் அறைக்கு அழைத்து சென்றான் அபிஜித்.

அறைக்குள் அழைத்துச் சென்றவன் அவளை கட்டிலில் கிடத்தி அளவிட்டுக் கொண்டு இருந்தான்… அவளின் வென்னிற முட்டி வரை உடைய ஆடை அவளின் வழவழப்பான கென்டை காலினையும்… பளிச்சென்ற தொடையையும் அப்பட்டமாக பறைச்சாற்ற…

அதிலும் உடலை இறுக்கி அணிந்திருந்த உடை அவளின் நெளிவு சுளிவுகளை காட்ட, அப்பப்பா அதை கண்டவனுக்கு தேகம் பற்றிக் கொள்ளும்படியாக தான் இருந்திருக்க வேண்டும்..‌. ஆனால் அவனின் உணர்வுகள் அவ்வாறு இல்லை… மாறாக “நீ என்னுடைய சோர்வை நீக்கும் ஒரு கருவி… என்னை நானே மறக்க வைக்கும் ஒரு கருவி… வெறும் கருவி மட்டுமே” என்பது தான் அவன் எண்ணமாக இருக்கும்.

ஆனால் அவன் கண்களோ மோகம் சொட்ட, அவளின் இடையோடு தன் கரத்தை பினைந்து அழுத்தி முழு பாரத்தை அவள் மேல் சாய்க்க, அதற்கே அவளுக்கு சொர்க்கத்தை கண்ட நிலை தான். ஏதோ உடல் எல்லாம் மேகத்தில் பறப்பது போன்று இருக்க, அவனின் செய்கைக்கு எல்லாம் வளைந்து கொடுத்துக் கொண்டு இருந்தாள் கேத்ரீன்.

இரண்டு மணி நேரம் கலவியிலே கடந்து முடிந்திட “ஓவர் பேப்… டைம் முடிஞ்சது…” என்றவனின் குரலிலே உலகிற்கு வந்தாள் அவள்.

“யூ ஆர் சான்ஸ்லெஸ் பேப்… இருந்தாலும் அந்த சேப்டி மெசர் மட்டும் இல்லாம இருந்தா இன்னும் பர்பெக்டா இருக்கும்… பட் எனிவே ஐ என்ஜாயிட்” என்றிட, அவனோ அவளை ஒருமாதிரி பார்த்தானே தவிர, வேறெதுவும் சொல்லவில்லை.

“தென் மறுபடியும் எப்போ டைம் ஸ்பென்ட் பண்ணலாம்” என்று கேட்டபடி அவன் மேல் சாய்ந்தவளை உதறி தள்ளியவன், “நோ பேபி… ஐ அம் பிஸி… நவ் யூ கோ” என்றிட,

“ப்ச் பேப்… இன்னும் ஒன்று ஹவர் கூட வைச்சிக்கலாம்… அதுக்கு எக்ஸ்டரா பேமென்ட் தரேன்” என்று சினுங்கியவளை கண்டு எரிச்சலாக பார்த்தவன்,

“தடஸ் மை விஷ்… நான் நினைச்சா மட்டும் தான் யாரும் என்னை நெருங்க முடியும்… நவ் கெட் அவுட்” என்று அழுத்தமாக கட்டளை இட்டவனின் குரலில், அதற்கும் மேலும் அவனோடு இருக்க முடியாது என்று புரிந்தவளாக தானாக வெளியேறினாள் கேத்ரீன்‌.

அப்படியே சோர்வோடு படுக்கையில் சாய்ந்தவனுக்கு களைந்த உடையை எடுத்து அணிய வேண்டும் என்றுக் கூட தோன்றவில்லை… மனதில் ஒரு நிம்மதி…  சீலிங்கில் பொருத்தி இருந்த வெளிச்சத்தையே வெறித்து பார்த்திருந்தான். அவன் அபிஜித்… அபிஜித் கர்ணன்…

பெயரின் பிற்பகுதியில் கர்ணன் என்றுக் கொண்டுள்ளதால் தான் இவன் பெண்கள் விடயத்தில் தாராளமாக இருக்கிறானோ என்னவோ… ஆனால் இவன் எல்லோரையும் போன்றவன் அல்ல….

தேவையான இடத்தில் தேவைப்பட்டால் மட்டுமே அவன் உணர்வுகள் வெளி வரும்… இல்லையெனில் அனைவரும் ரசிக்கும் புன்னகை மன்னனாய் இருப்பான்… அல்லது அனைவரும் வியக்கும் கல்லாய் சமைத்து நிற்பான்.

இவனை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்.‌‌.. ‘பணம்.. அதுதானே எல்லாம்’ என்பான். அப்படிப்பட்ட நினைப்பை கொண்டவன்… பணத்திற்காக கொலையையும் செய்வான்… பணத்திற்காக உறவாடாவும் செய்வான்… ஆனால் எல்லாம் அவன் மனது வைத்தால் மட்டுமே! அவன் நினைத்தால் மட்டுமே! அவனே அபிஜித் கர்ணன்!

••••••••••••••

error: Content is protected !!