NKV – 1(2)

“சார் பிளிஸ் சார் புரிஞ்சுக்கோங்க, இன்னைக்கு அபிஜித் பையாவை கண்டிப்பா சந்திக்க முடியாது… பிளிஸ் நாளைக்கு வாங்களேன்” என்று அச்சுதன் கெஞ்சிக் கொண்டிருக்க,

“டேய்… நான் யார் தெரியுமா… என் பேக்கிரவுண்ட் என்னனு தெரியுமா… அவன் தானே இன்னைக்கு வரச் சொன்னான். அப்புறம் என்ன… கண்டிப்பா இன்னைக்கு நான் அவனை பார்த்தே ஆகனும்… எங்கே இருக்கான் சொல்லு… அவனை மீட் பண்ணாம நான் இங்கிருந்து கிளம்ப போறதில்ல…” என்று அச்சுதனிடம் எகிறிக் கொண்டு இருந்தான் அர்ஜூன்… அர்ஜூன் தேவ்…

அதற்கு மேலும் அவனை இழுத்து வைக்க முடியாது போக அபிஜித் எப்போதும் செல்லும் கிளப்புக்கு அர்ஜூனை அழைத்துச் சென்றான். அந்த கிளப்பினுள் நுழையும் போதே அவனுக்கு மனம் தடக் தடக் என்று அடித்துக் கொண்டது… எப்போதும் தொழில் விடயத்தை இங்கு பேச அபிஜித் விரும்ப மாட்டான் என்பதை அறிந்தவன் ஆயிற்றே! இருந்தும் இப்போது வேறு வழியில்லையே!

“ராகேஷ்… அபிஜித் பையா உள்ள இருக்காறா” என்று அங்கு பாரில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவனிடம் கேட்டான் அச்சு. இங்கு இருப்பவர்கள் அனைவரும் ஒரளவுக்கு இருவருக்கும் தெரிந்தவர்களே… ஏன் இந்த பார் ஓனர் கூட இவர்களுக்கு பழக்கம் தான்… அதனால் தான் அபிஜித்துக்கென தனி பிரைவேட் அறை.

“இருக்காரு ஸாப்… அவருடைய ரூம் 307 தான்” என்றதும் வேகமாக இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக தாவி ஏறிய அர்ஜூன், அந்த அறையை திறந்தவன் உள் நுழைய, பின்னால் கத்தியபடி வந்த அச்சுதனின் குரல் அவன் செவியை அடையவும் சரியாக இருந்தது.

“கதவை தட்டாம உள்ள போகாதிங்க சார்” எனும் போதே, சடாரென்று கதவை திறந்தபடி உள் நுழைந்த அர்ஜூன், அதிர்ச்சியில் கண்களை விரித்து பின் திரும்பி நின்றுக் கொள்ள, அச்சுவோ வெளியிலே தேங்கிவிட்டான்.

அர்ஜூனுக்கோ மனது சமம் அடையவில்லை… அதிர்வோடு நின்ற இடத்திலே வேரூன்றி போய் இருந்தான்… 

ஆனால் மெத்தையில் படுத்து இருந்த அபிஜித்திற்கு அவ்வாறு எல்லாம் இல்லை போலும்! சாதரணமாக எழுந்து நின்று தான் களைந்த உடைகளை எல்லாம் கண்களால் தேடிக் அதனை கண்டறிந்தவன்,

“ஏய் மேன்… கொஞ்சம் உன் பூட்ஸ்க்கு பக்கத்துல இருக்கிற என் இன்னர்வேர்ரை எடுத்துக் கொடுக்கிறயா.. இல்ல நானே வந்து எடுத்துகிடவா” என்றதும், கீழே இருப்பதை பார்த்த அர்ஜூன் முகத்தை அருவருப்பாக சுளித்தபடி, “சேம்லெஸ் இடியட்(shameless idiot)” என்று திரும்பியும் பார்க்காமல் திட்டியபடி  வெளியேறினான்‌ அர்ஜூன்.

‘நான் நியூடா இருக்கிறதை பார்த்திட்டு வெளியே போகாம திரும்பி நின்ன இவன் என்ன சேம்லேஸ் இடியட்னு சொல்றானா… ஸ்டுப்பிட் பெல்லோ’ என்று நினைத்தபடி தனது உள்ளாடையை எடுத்து அணிந்தபடி,

‘இதுக்கா இப்படி பேயை பார்த்த மாதிரி பயந்து ஓடுறாங்க…’ என்று தன்னை மேலும் கீழும் பார்த்து கொண்டவன் தோளை குலுக்கி கொண்டு, தன்னுடைய ஆடையை எடுத்து அணிந்து கொண்டு கண்ணாடியில் தன் முகத்தை இப்படி அப்படியும் பார்த்தபடி இருக்க, கதவு மெலிதாக தட்டப்பட்டு சில நொடிகளுக்கு பின் உள் நுழைந்தான் அச்சுதன்.

“ப்ச் ஜீ… ஏன் ஜீ இப்படி செய்றீங்க… இப்படி உங்களுக்கு இந்த கமிட்மென்ட்ஸ் வேனும்னா  மேரேஜ் செய்துகலாமே…. அதை விட்டுட்டு ஏன் இப்படி… உங்க உடம்பையும்… அதோடு பெயரையும் சேர்த்து கெடுத்துக்கிறிங்க” என்று அச்சு ஆதகமாக பேசிக் கொண்டு இருக்க, அதை கேட்ட அபிஜித்தின் முகமோ ஒரு நொடி இறுகி பின் சாதரணமாக,

“ஹா… ஹா… அச்சு நீ என்னை பிளே பாய் ரேஞ்சுக்கு நினைச்சு இருக்க… ஐ ஆம் நாட் தட் டைப்…(I am not that type)” என்று வெடித்து சிரித்தவன்,

“நானா பொண்ணுங்க பின்னாடி போக மாட்டேன்… பட் அவங்களா வந்தா நான் நோ சொல்ல மாட்டேன்… அதுக்காக இந்த அபிஜித் கர்ணன் வுமனைஜர் (womanizer) எல்லாம் கிடையாது… ஜஸ்ட் பார் மணி(money)” என்று தோளை குலுக்கி கொண்டவன் அச்சுதனின் கலக்கமான முகத்தை கண்டு,

“கூல் அச்சு… நான் எல்லா சேபிட்டி பிரிகாஷன் எடுத்திட்டு தான் செய்றேன்… சோ டோன்ட் வொர்ரி மேன்” என்று கண்ணடித்தான்.

“அப்புறம் என்ன சொன்ன மேரேஜ் செய்றதா…ம்ஹூம்  இந்த மேரேஜ் எல்லாம் வெறும் போரேஜ்… அதெல்லாம் இந்த அபிஜித்துக்கு செட் ஆகாது…” என்று தோளைக் குலுக்க, அறையின் கதவை திறந்தபடி வேகமாக உள் நுழைந்தான் அர்ஜூன்.

“யூ இடியட்… எவ்ளோ நேரம் தான் உனக்காக வெயிட் பண்றது… சொன்ன டைம் கரெக்டா மெயின்டெய்ன் பண்ண மாட்டியா நீ… டேமிட்” என்றதோடு இன்னும் சில ஆங்கில வார்த்தைகளை சேர்த்து திட்டக் கொண்டு இருக்க, அபிஜித்தோ  கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவாறே முன்னுச்சி முடியை கலைத்து விளையாடியபடி,

“இங்க பாரு மேன்… பர்ஸ்ட் நீ எவ்ளோ பணம் கொடுத்தாலும்… ஒரு பையனோடு இருக்க நான் சம்மதிக்க மாட்டான்… ஏன்னா நான் கே(gay) கிடையாது” என்றவனின் வார்த்தையில் இருவரும்  அதிர்ந்து நின்றனர்…. அவன் சொல்லியதன் தாக்கத்தில் இருந்து வெளி வருவதற்குள், அபிஜித்தை அடிக்க பாய்ந்திருந்தான் அர்ஜூன்…

“யூ சேம்லெஸ் இடியட்… என்னை கே’னு(gay) சொல்றியா டா” என்று அபிஜித் உதட்டிலே குத்த, “பையா…” என்ற அலறிய அச்சு வேகமாக அபிஜித் மீதிருந்த அர்ஜூனனை  விலக்கினான்.

அபிஜித்தோ, கீழ் அமர்ந்தபடியே தன் உதட்டில் வழியும் குருதியை துடைத்தவன், “டோன்ட் கால் மீ பையா” என்று அச்சுதனை நோக்கி அழுத்தமாக சொன்னவன், அர்ஜூனனிடம் திரும்பி அவனை கூர் பார்வை பாரத்திட, அதை சளைக்காது தாங்கினான் அவன்.

அதில் லேசாக சிரித்துக் கொண்டவன், “சில் மேன்… நீ கதவை திறந்து வந்து கேட்டவுடன் அப்படி தான் எனக்கு தோனுச்சு… ம்ம் ஓ.கே இப்போ என்ன மேட்டர்னு சொல்லு… பக்காவா முடிச்சிடுவோம்” என்று தொழில் விடயமாக பேச்சை மாற்றிவிட, அர்ஜூனும் தன் தலையை கோதி ஆசுவாசபடுத்தி கொண்டவன், காரியம் தான் இப்போது முக்கியம் என்று நினைத்தபடி,

“இந்த டேப்பை பிளே பண்ணு” என்று அச்சுவிடம் ஒரு கேசட்டை கொடுக்க, அதை அந்த அறையில் இருக்கும் விடியோ பிளேயரில் போட்ட அச்சு அதை ஆன் செய்ய, அனைவரும் திரையை உற்று நோக்கியபடி இருக்க, தனது திட்டத்தை கூறியவன்,

“டீல் ஓ.கே வா…” என்ற அர்ஜூனனின் முகத்தை ஏறிட்டவன் லேசாக உதட்டை இழுத்த சிரித்தபடி, “பக்காவா முடிச்சிடலாம்… நாளைக்கே பிராஜெக்ட் ஸ்டார்ட் பண்றேன்” என்றிட அதை கேட்ட அர்ஜூனும் தலையசைத்தபடி, “மை கேம் ஸ்டார்ட்ஸ் நவ்” என்று கைகளை குலுக்கி கொண்டு அவன் விடைப்பெற்று செல்ல, அதை கேட்டு தனக்குள்ளே சிரித்துக் கொண்டான் அபிஜித்.

அச்சுதனோ அபிஜித்தின் ரத்தம் தோய்ந்த உதட்டை பார்வை இட்டபடியே “ப்ச் ஏன் ஜீ இந்த பிராஜெக்ட் அவ்ளோ முக்கியமா… அவன் அடிச்சதை கூட திருப்பி கொடுக்கல…” என்று கவலையாக கேட்டவனை பார்த்து சிரித்தவன்,

“என்னை அடிச்சதால அவன் ஹீரோவும் இல்லை…  அவன்க்கிட்ட அடி வாங்கிட்டு அமைதியா இருந்ததாலா இந்த அபிஜித் கர்ணன் நல்லவனும் இல்லை…” என்று சொன்னவன் விழிகளோ திரையில் தெரிந்துக் கொண்டிருந்த இரட்டையரின் புகைப்படத்தையே வெறித்து இருந்தது.

அதில் அழகாய் சிரித்துக் கொண்டு இருந்தனர்… விசாலியும்… விருஷாலியும்…  அதை பார்த்து கொண்டு இருந்தவன் உதடுகளோ, “ஐ ஆம் கம்மிங் பார் யூ லிட்டில் மவுஸஸ்(little mouses)” என்று முனுமுனுக்க, கண்களோ கள்ள புன்னகை சிந்தியது!

****தொடரும்🖤****

(Comment your thoughts frds… Next ud on Thursday…🥰)