NKV – 2(1)

PicsArt_11-30-09.00.47-cfc30cd0

காதல் வேடன்🖤 – (02)

கல்கத்தா!

பல வீடுகள் ஒன்றை ஒன்று
நெருக்கிக் கொண்டு இருக்கும் சாதாரண ஜனத்திரள் மக்கள் வாழும் மேன்ஷன் அது. அறை என்று சொல்வதை விட, பத்துக்கு பத்து இடம் என்று சொன்னால் சரியாக பொருந்தும்… நின்றால் முட்டும்… படுத்தால் இடிக்கும்… எனும்படி தான் இருக்கும்… சுருக்கமாக சொன்னால் ஒரு  சின்ன தீப்பெட்டி மாதிரி அந்த மேன்சனில் இருக்கும் அறைகள்.

அப்படிப்பட்ட ஒரு அறையில் தான், ஒற்றை கட்டிலில் புரண்டபடி படுத்திருந்தான் அபிஜித். அவன் படுத்து இருப்பது மெத்தை மீது அல்ல. பணத்தின் மீது.  ஆம் கட்டில் முழுவதும் பணம் பரப்பிக் கிடக்க அதன் மீது தான் படுத்து இருந்தான். பெண்களை விட அவன் அதிகம் விரும்பும் பணம்.

அதிலிருந்து ஒரு பணக் கட்டை எடுத்தவன், தன் நாசியில் வைத்து ஆழ்ந்து சுவாசிக்க போதை ஏறியது போன்ற உணர்வு!

“ம்ம் என்ன தான் சொல்லு அச்சு. இந்த பணம் கொடுக்கிற சுகத்தை இந்த பொண்ணுங்களால கூட கொடுக்க முடியாது… அப்படியே ஜிவ்வுன்னு மண்டையில் ஏறி ஏதோ பண்ணுது…” என்று பிதற்றிக் கொண்டு இருப்பவனின் பேச்சை ரசிக்கவில்லை என்றாலும் எதுவும் பேசாது அமைதியாக‌ இருந்தான் அச்சுதன்.

“என்ன மேன் எதுவும் பேச மாட்டேங்கிற… எப்போவும் எதாச்சும் உபதேசம் மாதிரி சொல்வியே. சொல்லு கொஞ்சம் கேட்போம்” என்றபடி கரத்தை தலைக்கு முட்டுக் கொடுத்தபடி அவனையே நோக்கிக் கொண்டு இருக்க, அச்சுவோ அவன் எதை சொல்கிறான் என்று புரிந்து அதை பேசாது வேறு பேசினான்.

“ஜீ எனக்கு ஒரு சந்தேகம். அது தான் அவ்ளோ பெரிய பங்களா வாங்கி வைச்சு இருக்கிங்களே. அப்புறம் அதை விட்டுட்டு ஏன் இங்கேயே இருக்கிங்க”

“என்ன செய்றது அச்சு. பழையதை எப்போவும் மறக்க கூடாது. வீடு கூட இல்லாம ரோட்டுல திரிஞ்சப்போ இந்த ஒத்த அறை தானே நமக்கு ஆதரவு கொடுத்துச்சு அதெல்லாம் மறந்துட்டியா…  அதுக்காக இங்கேயே இருக்க போறது இல்லை. அதுக்கான நேரம் இன்னும் வரல” என்றவன் எழுந்து நின்று தன் முகத்தைக் கண்ணாடியில் உற்று பார்க்க, அர்ஜூனின் கைங் காரியத்தில் உதடு நன்றாக வீங்கிக் கொண்டு இருந்தது.

‘இதுக்கு வட்டியும் முதலும் சேர்த்துக் கொடுக்கிறேன் டா ‘ என்று மனதிலே சூளுரைத்துக் கொண்டவன், அச்சுதனிடம் அடுத்து என்ன வேலை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு, மீண்டும் கட்டிலில் விழுந்தவன், பணத்தின் சுவாசத்தில் தன்னை மறக்க துணிந்தவனை தன் பக்கம் இழுத்துக் கொண்டது திரையில் ஒளிர விடப்பட்டிருந்த புகைப்படங்கள்!

அர்ஜூன் கொடுத்த கேசட் தான் அது. அதையே பார்த்திருந்தவன், ‘ம்ம் அர்ஜூன் நீ தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு ஒரு நல்லது தான் செஞ்சு இருக்க… இதுக்காக எல்லாம் நீ சொன்னது எல்லாம் செய்ய முடியாது. பணத்துக்காக நான் எதுவும் செய்வேனு தெரிஞ்சுக்கிட்ட நீ என்னை பத்தி முழுசா தெரிஞ்சுக்கலயே மேன்’ என்று போலியாக அவனுக்காக பரிதாபப்பட்டவன் கண்களில் இருந்த தீவிரம் எதனால் என்பது அவன் மட்டுமே அறிந்த விடயம்.

••••••••••••••••

ஹைதராபாத்!

மேகத்தினை கிழித்துக் கொண்டு செங்கதிரோன் தன் கதிர்களை புவியின் மீது படரவிட்டுக் கொண்டிருக்க, ஹைதராபாத்தின் செல்வந்தர்கள் குடியிருப்பில் இருந்த அந்த  பங்களா ரணகளப்பட்டுக் கொண்டு இருந்தது.

“பப்பா(papa) பிளிஸ் ஐ வான்ட் டூ ஜாயின் தி டேன்ஸ் கிளாஸ்… உங்களுக்கு தெரியும் தானே நான் எனக்கு அதுல எவ்ளோ விருப்பம்னு… பிளிஸ் ப்பபா நீங்க நோ சொல்லாதிங்க” என்று தன் விழிகளால் மிரட்டியும் கெஞ்சலுமாக பேசிக் கொண்டு இருந்தாள் விஷாலி…

பிங்கும்… கறுப்பும் சேர்ந்து மிக்ஸான ஓர் கலரில் டாப்பும்… அதற்கு ஏற்றவாறு கேப்ரி ஜீன்ஸ்… அதாவது 3/4 ஜீன்ஸ் அணிந்திந்தவள், அதற்கு பொருந்தும் படியாக தன் நீள் கூந்தலை பிதெர் கட் செய்திருந்தக்க, அலை அலையாக பறந்த தன் கூந்தலை காதின் புறம் ஒதுக்கியபடியே தன் தந்தையிடம் கொஞ்சிக் கொண்டு இருந்தது அந்த சிற்பம்.

இவளின் பேச்சை எல்லாம் கேட்டபடியே மாடியில் இருந்து இறங்கி வந்தாள் விருஷாலி. முட்டி வரை உடைய பிளாக் கலர் பென்சில் ஸ்கார்ட், அதற்கு பொருந்தும் படியான வைட் சர்ட்(white shirt) என, பார்மல் உடையில் இருந்தவள், தோள் வரை புரளும் கூந்தலை தூக்கி போனி டைல் மாதிரி போட்டு இருக்க, அதுவோ அவளின் நடைக்கு ஏற்றபடி மேலும் கீழும் ஆடிக் கொண்டு இருந்தது.

“நோ டேட்… கண்டிப்பா இதுக்கு தான் ஓ.கே சொல்ல மாட்டேன்” என்றபடி தந்தைக்கு எதிரான சோஃபாவில் அமர்ந்தவள், மேஜை மீதுக் கிடந்த நியூஸ் பேப்பரில் தன் பார்வையை மேய விட்டாள்.

“நான் உனக்கிட்ட பெர்மிசன் கேட்கல. எஸ் ஆர் நோ வானு பப்பா சொல்லட்டும்…” என்றபடி ஷாலி தன் தந்தையை நோக்க, “நான் அக்சப்ட் பண்ணாம அவரு ஓ.கே சொல்ல மாட்டாரு…” என்றவள் அலுவலகம் செல்ல எழுந்துக் கொள்ள,

“ஏன்… ஏன்…” என்று வெடித்தவள், மார்பின் குறுக்கே கையை கட்டிக் கொண்டு தன்னையே அலட்சியமாக பார்ப்பவளை அதை விட அலட்சியமாக பார்த்தவள், “நீ கம்பெனியை சார்ஜ் எடுத்துக்கிட்டதால் இங்க எதுவும் மாறப் போறதில்ல” என்று விருஷாவின் எதிரே
எதிரே கோபத்தோடு நின்றாள் ஷாலி.

இவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக நிற்க, அந்த காட்சி காண்பதற்கு கண்ணாடியின் முன் ஒருவர் நின்றால் அவரின் பிம்பத்தை அப்படியே கண்ணாடி  பிரதிபலிக்குமே அதுப் போல் தான் தோற்றம் அளித்தது!

பால் சருமம் என்பார்களே அப்படியொரு நிறம் இருவருக்குமே… லேசாக கிள்ளி விட்டாலும் அந்த இடம் சிவந்து போய்விடும்… புரியும்படி சொன்னாள் மெழுகுச் சிலை தான் இருவரும்…

ஆனால் இருவரின் விருப்பங்களும் வேறு வேறு… ஆசையும் வேறு வேறு… கனவுகளும் வேறு வேறு… ஏன் அவர்கள் உடுத்தும் ஆடை ரசனை கூட வேறு வேறு தான்.

அப்படியே அச்சு அசலாக தன் மனைவியை போல் இருக்கும் இருவரை  தான் வாஞ்சயோடு பார்த்து இருந்தார் சக்ரவர்த்தி வர்மன். V. V பைனான்ஸ் குழுமத்தை நடத்துபவர். அதாவது இவர்கள் பைனான்ஸ் கம்பெனி, மக்களிடம் மட்டும் பிரசித்தி பெற்றது அல்ல… சினிமா துறையிலும் தனக்கென இடத்தை பிடித்து இருப்பது இதன் தனித்துவமே!

படத்தை பிரொடக்சன் செய்பவர்களுக்கு பணம் கொடுப்பது இவர்களின் முக்கிய தொழில். அதற்காக யார் கேட்டாலும் கொடுத்த விட மாட்டார்கள். பணம் வாங்குபவர்கள் அதனை கொடுக்க முடியுமா…

அப்படி கொடுக்க முடியவில்லை என்றால் அதனை கறக்க அவர்களிடம் சொத்து உள்ளதா என்று சாதக பாதகங்களை யோசித்து தான் அவர்களின் முடிவு இருக்கும். இதற்கென தனியே அடியாட்களும் வைத்துள்ளனர். பணத்தை சரியாக கொடுக்கும் வரை இவர்கள் நல்லவர்களே! அப்படி இல்லையென்றால் அவர்கள் வழியில் பறித்துக் கொள்வர் அவ்வளவு தான்.

இவர்களின் சண்டையை கேட்டு கிட்சனில் இருந்து வெளி வந்தார் வித்யரூபினி. “ப்ச் என்னங்க பிள்ளைங்க சண்டை போட்டுட்டு இருக்காங்க நீங்க பார்த்து சிரிச்சிட்டு இருக்கிங்க” என்று கணவனை கடிந்தபடியே இருவரையும் நோக்கி செல்ல, தன் தாயை கண்ட ஷாலியோ தமக்கையை பற்றி குற்ற பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்தாள்.

“மாத்தாஜி பாருங்க இந்த விருஷா என்னை டேன்ஸ் கிளாஸ் போக வேண்டாம்னு சொல்றா” என்றிட விருஷாவை  கேள்வியாக ஏறிட்டார் வித்யரூபினி.

“மாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருக்கும். இப்போ இவ போகனும்னு அடம்பிடிக்கிறது இந்த மந்த்ல மூனாவது கிளாஸ். பர்ஸ்ட் குக்கிங் போன… அது பிடிக்லானு வந்தாச்சு… அடுத்து கராத்தே கிளாஸ் போனா… அதுவும் பிடிக்கலனு வந்தாச்சு… இப்போ அடுத்தது டான்ஸ் கிளாஸ் போகனும்னு சொல்றா.. இது எத்தனை நாளோ” என்று உதட்டை சுளிக்க,

“ஹேய் நான் என்ன சும்மா வேண்டாம்னு வந்துட்டேனா. ஐ ஹேவ் வேலிட் ரீசன்… ப்ர்ஸட் குக்கிங் கிளாஸ் போய் கத்துக்கிட்டு சமைச்சாலும் அது கேவலமா இருக்கு… சோ அது வேஸ்ட். அடுத்தது கராத்தே கிளாஸ் போனா… அந்த கோச் என்னவோ கையை தூக்கு கால தூக்குனு கடுப்பு ஏத்துறான்… அது தான் வந்துட்டேன்”

“பட் கண்டிப்பா டான்ஸ் கிளாஸ் விடமாட்டான்… பக்கா பிராமிஸ்” என்றவளை ஒரு நொடி கூர்ந்து நோக்கியவள், “ஓ.கே யுவர் விஷ்” என்றபடி தோளை குலுக்க, ஹூரே என்று குதித்தபடி அவளின் கன்னத்தில் அவசரமாக முத்தம் பதித்துவிட்டு சிட்டாக பறந்து விட்டாள் ஷாலி.