NKV – 2(2)

செல்லும் அவளை கண்ட தாயுக்கு தான் கவலையாக இருந்தது… “இரண்டு பேரும் ஒரே நேரத்தில் தான் பொறந்தாங்க… இவப் பொறுப்பா இருக்கா… அவ விளையாட்டு பிள்ளையா இருக்கா. இது எங்க போய் முடியுமோ” என்று சலித்துக் கொண்டார் வித்யரூபினி.

தன் மனைவி சொல்வது சரியாக பட்டாலும் “ரூபி விடு டா… அவளுக்கு பிடிச்ச மாதிரி அவ இருக்கட்டும்” என்று தன் இளைய மகளுக்கு தான் ஆதரவு தெரிவித்தார் சக்கரவர்த்தி.

“விருஷா, இப்போ புதுசா பிலிம் பண்றதுக்கு பைனான்ஸ் கேட்டு‌ வந்தாரே புது ஆக்டர் அர்ஜூன்… அவருக்கு ஏன் வேண்டாம் சொல்லிட்ட… நல்ல டீல் தான டா. படம் பிளாப் ஆனக் கூடா நமக்கு செட்டில் பண்ற அளவுக்கு அவருக்கிட்ட காசு இருக்கே” என்றதும்,

“ஐ நோ டேட்… பட் அவன் வந்து பைனான்ஸ் பண்ண சொல்லி கேட்குறதே ரொம்ப திமிரா இருந்துச்சு… இது எனக்கு சரியா படும்னு தோனல” என்றவளுக்கு அவனை சந்தித்த நிகழ்வு கண் முன் தோன்ற தானாக எரிச்சல் மண்டியது. 

அவளின் முகத்தை பார்த்தே கோபத்தை உணர்ந்தவர், “ரிலாக்ஸ் டா… பார்த்துக்கலாம் விடு. சரி நீ ஆபிஸ் போ நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்றதும் தலையசைத்து விருஷா அங்கிருந்து செல்ல, சக்கரவர்த்தியோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்

•••••••••••••••••

இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டு இருக்க, முழு போதையில் இருந்த அர்ஜூனோ தட்டு தடுமாறியபடி காரை ஓட்டிக் கொண்டு இருந்தான்.

‘ஏய் விருஷாலி. எனக்கா பைனான்ஸ் பண்ண மாட்டேனு சொல்ற… உனக்கு இருக்குடி… என்ன சொன்ன நான் நடிச்சா படம் பிளாப் ஆகிடுமா… உனக்கு ஏமாற்றமே பிடிக்காதமே… அப்படியா… வெயிட் பண்ணுடி உனக்காக தான் ஒருத்தனை பணத்தை வாரி இறைச்சு இறக்கி இருக்கேன். என்னை அவமானப் படுத்தன நீ உன் லைஃப்ல அவமானப்பட்டு நிக்கனும்” என்று பிதற்றிக் கொண்டே காரை இப்படியும் அப்படியுமாக ஓட்ட,

அவன் வளைந்து நெளிந்து ஓட்டியதில்  ஏதோ ஒரு ஸ்கூட்டியின் மீது மோத வந்தவன், தட்டு தடுமாறியடி நிறுத்திய அர்ஜூன் உஃப் என்று ஊதிக் கொள்ள, ஸ்கூட்டியில் அமர்ந்து இருந்தவளோ, கிரிச்சென்று சத்தத்துடன் தன்னை இடிக்க வந்த கார் அப்படியே நின்றதில் துடிதுடிக்கும் இதயத்தோடு மருண்டபடி நின்றாள்.

காரில் இருந்து இறங்கியவனோ, “சா…ரி சாரி…” என்று‌ குளறலாக கேட்டவன், அவள் முகம் பார்த்து அப்படியே நின்று விட்டான்.

“யூ இடியட் கண்ணு எங்க வைச்சிருக்க… ஓ சரக்கு அடிச்சு இருக்கியா…‌ ஓட்ட முடியாதுனு தெரிஞ்சு அப்புறம் எதுக்குடா வண்டியை ஓட்டுற” என்று அவனின் தடுமாற்ற நிலையை உணர்ந்து சரமாரியாக திட்டிக் கொண்டு இருந்தாள் விஷாலி.

அவனோ அவளின் முகத்தையும் ஆடையையும் பார்த்தவிட்டு, “ஏய் கொஞ்ச நாள் முன்னாடி வேற ஸ்டைலில் இருந்த… இப்போ வேற‌ மாதிரி இருக்க” என்றவனின் வார்த்தையில் புரிந்துக் கொண்டாள் இவன் விருஷாலியை சொல்கிறான் என்று. அதை அவனிடம் சொல்ல வந்தவள், அவனின் பார்வை மாற்றத்தில் தொண்டை குழி ஏறி இறங்க,

“அய்யோ என்ன இந்த மலைப் பாம்பு இப்படி வெறிச்சு… வெறிச்சு பார்க்குறானே” என்று அவனின் பச்சை விழிகள் தன்னை மேய்வதை கண்டு உள்ளுக்குள் அதிர்ந்தாலும், கெத்தாய் நின்றவள், அவன் தன்னை நெருங்க நெருங்க,

‘உயிரே தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு’ என்று மனம் கவுன்டர் கொடுக்க, சர்ரென்று தன் ஸ்கூட்டியை எடுத்து பறந்தவள் சில தூரம் வந்த பின்னே திரும்பி பார்த்தாள் அவன் வருகிறானா என்று… அவன் வரவில்லை என்பதை உணர்ந்த ‘அப்பாடா’ என்று மூச்சு விட்டவள் திரும்பி பார்க்க, கண்கள் மட்டும் தெரியும் படி காரில் இருந்து வெறித்துக் கொண்டிருந்தான் ஒருவன்.

‘அட இது என்னடா இந்த ஷாலிக்கு வந்த சோதனை. அழகா இருந்தாலே பிராப்ளம் தான் போல’ என்று மனதில் நினைத்து கொண்டவள், அவனின் சாம்பல் விழி தன்னை ஊடுறுவதை கண்டு, ‘ஆமா இந்த பூனை கண்ணு யாரா இருக்கும்’ என்று ஓர் உந்துதலில் அவன் முகம் பார்க்க விழைந்தவளை, எதிர் திசையிலும் இருந்து வந்த கார் சர்ரென்று இடித்து தூக்கியது.

நொடியில் நிகழ்ந்த நிகழ்வால் விஷாலி சாலையின் ஓரத்தில் தூக்கி ஏறியப்பட்டு இருக்க, அவளோ கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலையை அடைந்துக் கொண்டு இருந்தாள்.

காரில் அமர்ந்தபடி அதையெல்லாம் பார்த்து இருந்தவனோ ‘ஒரு மவுஸ் டிராப்ல மாட்டியாச்சு ‘ என்றவனின் உதடுகள் குரூர புன்னகை சிந்திக் கொண்டு இருக்க, குருதியில் மிதந்துக் கொண்டு இருப்பவளை திருப்தியோடு பார்த்தான் அபிஜித் கர்ணன்!

நெருங்குவான்…🖤