கார் அடித்து சாலையின் ஓரத்தில் தூக்கி எறியப்பட்டிருந்த ஷாலியின் உடலோ ரத்த வெள்ளத்தில் மிதந்துக் கொண்டு இருக்க, தலையில் இருந்து வழிந்துக் கொண்டு இருந்த குருதி அவள் முகத்தை மொத்தமும் ரத்தத்தால் நினைத்திருந்தது.
சிறிது சிறிதாக நினைவு இழக்க போகிறவளின் முன் படர்ந்தது ஓர் நிழல். அது அபிஜித் அன்றி வேறு யாராக இருந்திட இயலும்!
அந்த நிலையிலும் அதனை உணர்ந்தவள் இமை தட்டி தன் முன் நின்றுக் கொண்டு இருப்பவனை காண முயல, அவனின் பிம்பம் மட்டுமே மங்கலாய் தெரிந்தது அன்றி அவன் முகம் தெரியாது தான் போனது.
அவளின் முயற்சி அனைத்தையும் இறுகிய முகத்தோடு கண்டு களித்தவன், அவளை தன் கரங்களில் ஏந்தியபடி தூக்கி செல்ல, அவன் தொடு உணர்வில் அரை குறையாக விழி திறந்தவளுக்கு அவனின் சாம்பல் நிற விழிகள் மட்டுமே காட்சி கொடுத்தது.
மீண்டும் விழி மூடிக் கொண்டவளின் இமைகளில் கோர்த்திருந்த குருதி துளிகள் சொட்டு சொட்டாக அவன் கரம் மீது விழ, அதை கண்டவனோ தோளை குலுக்கியபடி வாயில் இருக்கும் சுவிங் கம்மை மென்றவாரே, தன் காரின் பின் பக்க சீட்டில் படுக்க வைத்தவன் அலட்சியமாக அவளை பார்த்தபடியே இருந்தான் அபிஜித் கர்ணன்.
அவளின் நிலைக் கண்டு கிஞ்சித்தும் அவன் மனம் பரிதாபத்தை காட்டவில்லை. மாறாக இவள் தான் தன் ஆட்டத்தின் துறுப்பு சீட்டு என்று வெற்றி புன்னகை மட்டுமே அவன் இதழில் உறைந்து இருந்தது. அதோடே டிரைவர் சீட்டில் அமர்ந்தபடி காரை இயக்கினான் அபிஜித்.
ஆள் ஆராவாரமற்ற அந்த சாலையில் இருந்து வேறு சாலையில் பயணித்துக் கொண்டு இருந்த வண்டி தானாக ஒரு சாதாரண மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டது.
அதன் வாசலிலே இவர்கள் வரவுக்காக காத்திருந்தது போல் இவர்களை நோக்கி வேக நடையிட்டு வந்தான் அச்சுதன்.
“ஜீ நீங்க சொன்ன மாதிரியே டிரிட்மென்ட் செய்றதுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டேன்…” என்று மடமடவென்று ஒப்புவிக்க, தலையை மட்டும் ஆட்டியவன் காரை காட்ட, அதன் பின் சீட்டில் ரத்தம் தோய்ந்த முகத்தோடு இருந்தவளை கண்டு பதறி விட்டது அச்சுதனுக்கு.
‘பணத்திறக்காக, அடித்தடி கூட செய்திருக்கிறான் தான். ஆனால் இப்படி கொலை செய்யும் அளவு எல்லாம் இல்லையே இப்போது மட்டும் ஏன்’ என்று கேள்விகள் சூழ்ந்தாலும் அதை கேட்க திரணியற்று மயக்கமாய் இருந்தவளை தூக்கி உள்ளே செல்ல, ஸ்டரச்சரும் சரியாக வந்துச் சேர்ந்தது!
மடமடவென்று அவளை மருத்தவ அறையில் கிடத்த, அவளுக்கான டிரிட்மென்ட் ஆரம்பிக்கபட்டது. அந்த பெண்ணை அப்படி ஒரு நிலையில் கண்ட அச்சுதனுக்கு தான் என்னாகுமோ என்று மனம் தவித்துக் கொண்டு இருந்தது. ஆனால் அனைத்திற்கும் காரண கர்த்தா ஆனவனோ கூலாக தன போனில் ஆங்கிரி பர்ட் விளையாடிக் கொண்டு இருந்தான்.
இதில் ‘ச்சே ஜஸ்ட் மிஸ் அவுட் ஆகிடுச்சே’ என்று புலம்பல் வேறு. அவனிடம் எந்த கேள்வியும் கேட்க முடியாது, அவன் செய்கையை காணவும் சகியாது, முள் மேல் அமர்ந்து இருப்பது போல் இருந்தான் அச்சுதன். ஆனாலும் அவனை எதிர்க்கமாட்டன். ஏனென்றால் பேசினாலும் எந்த ஒரு பயனும் இருக்காது என்பதை விட அதனை அபிஜித் காதில் கூட போட்டுக் கொள்ள மாட்டான்.
இப்படியும் அப்படியுமாக நிமிடங்கள் நகர, சில மணி நேரங்கள் கடந்த பின்பே டிரிட்மென்ட் அறையில் இருந்து வெளி வந்தனர் மருத்துவர்கள். எப்போதும் சொல்வது போல், ‘அடி பலம் ஆனால் உயிருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை’ என்றுவிட்டு அவர்கள் அடுத்த பேசன்ட்டை கவனிக்க சென்று விட, நிம்மதியாக மூச்சு விட்டான் அச்சுதன்.
அதை எல்லாம் கேட்ட அபிஜித்தோ தன் கையை திருப்பி வாட்சில் டைம்மை பார்த்தவன், “அச்சு என் கெஸ் கரெக்டனா இந்நேரம் நான் போன் செஞ்சு பேசுனவங்க ஹாஸ்பிடலுக்கு பதறி அடிச்சிட்டு வந்து இருக்கனுமே” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை, சரியாக அந்த மருத்துவமனை வளாகத்தில் உள் நுழைந்தாள் விருஷா.
அவளின் முகம் பதட்டத்தையும் காட்டவில்லை என்றாலும் அவளின் கண்கள் அதனை காட்டிக் கொடுத்திட அதை சரியாக கண்டுக் கொண்டான் அபிஜித்.
“ஜீ அவங்க வந்துட்டாங்க… நாம இங்கிருந்து போயிடலாமா” என்று கேட்ட அச்சுவை முறைத்து பார்த்தவன், “ஏய் மேன்… அதுக்காகவா ஸ்கெட்ச் போட்டு இவளை காரை வைச்சு அடிச்சு தூக்கிட்டு அவக்கிட்ட நாமே காப்பத்துன மாதிரி சீன் கிரியேட் செஞ்சது…” என்று எரிச்சலாக சொல்லிக் கொண்டே அவளின் முகத்தை நோக்கினான்.
அவன் மனதின் அலைப்புறுதல் கண்கள் வெளியிட, அதை உணர்ந்தவன் உள்ளுக்குள் ரசித்தபடி, தாங்கள் இருக்கும் இடம் நோக்கி வருபவளை அவளுக்கு முன் நெருங்கியவன்
“நான் தான் உங்களுக்கு கால் பண்ணது. நீங்க தான் உள்ளே இருக்கிற பொண்ணோட சிஸ்டரா” என்று ஒரு அறையை சுட்டி காட்டி எதுவும் அறியாதது போல் கேட்ட அபிஜித்தை சந்தேகமாக பார்த்தாள் விருஷா. அவளின் பார்வையை கண்டவனோ,
‘மே… டம்’ என்று இழுத்து, “எதுக்கு இப்போ இந்த சந்தேக பார்வை… ரோட்டுல ஆக்சிடென்ட் ஆகி இருந்தாங்க. அப்படியே விட்டுட்டு போக மனசு இல்ல. அது தான் கொண்டு வந்து சேர்த்தேன். அண்ட் நீங்க யாரையோ தேடுற மாதிரி தெரிஞ்சது. அப்போ தான் உங்க பேஸ் கட் கிளியாரா பார்த்தேன்… இரண்டு பேருடையதும் ஒரே மாதிரி இருந்துச்சு…” என்று நிறுத்திட அப்போதும் அவளின் பார்வை அவன் மீது சந்தேகமாக படிந்தாலும், தன் தங்கையை காண உள் நுழைந்தாள் விருஷா.
அவள் உள்ளே சென்றதும் மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டவன், “ம்ஹூம் இவ மவுஸ் கிடையாது… ஸீ இஸ் லைன்ஸ்(she is lioness)” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன் அங்கிருந்த நாற்காலியில் அப்படியே அமர்ந்து விட்டான்.
உள்ளே நுழைந்து, மயக்கமாக இருக்கும் தன் தங்கையை பார்த்தவள் அவள் நிலைக் கண்டு தானாக கண்கள் கலங்கி போக, தன்னையும் மீறி உடைப்பெடுத்ததை துடைத்து விட்டு, சில நிமிடங்கள் கழித்தே வெளி வந்தாள் விருஷா.
அவளின் சிவந்த முகத்தை கண்டே அவள் நன்றாக அழுது இருக்கிறாள் என்பது புரிந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டது, அதிகாரமாக அபிஜித்தை நோக்கி சொடக்கிட்டு அழைத்திட, அதை கண்டு அவன் புருவம் உயர்ந்தாலும் எதுவும் சொல்லாது அவளிடம் சென்றான்.
“எங்க ஆக்சிடன்ட் ஆச்சு. ஸ்டேசனில் கம்பளைனிட் பைல் செஞ்சாச்சா” என்று கேட்டவளின் தோரனையிலும் கேட்ட கேள்வியிலும், அபிஜித்திற்கு உண்மையில் அவளை மெச்ச தோன்றியது. அச்சுதன் கூட அவளை ஆச்சரியமாக பார்த்தான்…
இந்த மாதிரி சமயத்தில் அனைவரிடமும் இருந்தும் வரும் வார்த்தை, ‘ரொம்ப நன்றி’ என்பது தானே ஆனால் இவளின் கேள்வி அவனுக்கும் வியப்பை கூட்டியது. அதிலும் அதில் தெறித்த அதிகார தோரனை, ஒரு சிறு பெண்ணிடம் இதை எதிர் பார்க்கவில்லை அச்சுதன். ஆனால் அபிஜித்திற்கோ இப்படி ஒரு நிலையிலும் யோசிகிறாளே என்று தான் ஆச்சரியம்.
“ஹலோ மிஸ்டர்… உங்ககிட்ட தான் கேள்வி கேட்குறேன்” என்றவளை அலட்சியமாக பார்த்த அபிஜித், “நான் ஒன்னும் உங்க சர்வன்ட் கிடையாது நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல மே…டம்” என்றவனின் பதிலில் அதிர்வது இவள் முறை.
இவள் அறிந்தது எல்லாம் தன்னுடைய ஆளுமை கீழ் கட்டுப்பட்டு அடங்கி போகும் ஆண்களை தான். அப்படி இல்லையென்றால் தன் பேச்சால் கோபம் கொண்டு கத்துபவர்களை தான். இப்படி அலட்சியமாகவும் அழுத்தமாகவும் பேசுபவனை இப்போது தான் முதன் முறை காண்கிறாள். அவன் பேச்சில் உண்டான எரிச்சலில், அபிஜித் அருகில் இருந்த அச்சுதனை நோக்கி பார்வையை செலுத்த,
“மேடம் நாங்களே இங்க வேலைக்காக வந்து இருக்கோம்… அப்படி இருக்கும் போது போலீஸ் கேஸ் கம்பளைன்ட் கொடுத்து எங்காளால் அலைய முடியாது. உங்களுக்கு அவசியம்னா நீங்க கம்பளைன்ட் கொடுத்துக்கோங்க… அண்ட் எதாச்சும் விசாரனைனா சொல்லுங்க நாங்க கண்டிப்பா கோ – ஆப்ரேட் பண்றோம்” என்று அபிஜித் ஏற்கனவே சொல்லிக் கொடுத்தபடி பேசி முடித்தவன் தன்னுடைய அலைப்பேசி நம்பரையும் கொடுக்க,
அதற்கு மேல் அவர்களை சந்தேகிக்க இயலாது தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்… ஆனாலும், ‘யார் இதை செய்தார்கள்’ என்று அறிந்துக் கொள்ள வேண்டும் என்று தன் மனதில் முடிவெடுத்துக் கொண்டாள் விருஷா.
அவளின் முகப் பாவனைகளை வைத்தே அவள் நினைப்பதை உணர்ந்துக் கொண்டவன் உள்ளுக்குள் சிரித்துக் கொள்ள, “ஓ.கே மிஸ்டர் நீங்க கிளம்பலாம். இனி நான் பார்த்துக்கிறேன்” என்றவள் மீண்டும் தன் தங்கையை காண உள் நுழைய இப்போது சொடக்கிடுவது இவன் முறையானது.
முறைப்பாக அவனை நோக்கினாலும், என்னவென்று பார்வையாலே கேட்க, “என்ன மே… டம் ஒரு தேங்க்ஸ் தான் சொல்லல… அட்லீஸ்ட் நாங்க இங்க பேஷனட்டுக்கு கட்டுன பணத்தையாச்சும் திருப்பி கொடுக்கலாமே… ஏனா அதை கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவங்களுக்கு தான் தெரியும் அதோட அருமை” என்றவனின் நக்கல் பேச்சில், செக் எடுத்து கேஷ் எழுதியவள் அவனிடம் கொடுக்க,
“தேங்கியூ மே… டம் நாங்க கிளம்புறோம்” என்றபடி முன் சென்றவனை எரிச்சலாக பார்த்துக் கொண்டு இருந்தாள் விருஷா. அதுவும் அவன் ‘மே… டம்’ என்று இழுப்பது கடுப்பை கிளப்ப, ‘இனி இவனை மீண்டும் சந்திக்கவா போகிறோம்’ என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு ஷாலி இருக்கும் அறையில் நுழைந்துக் கொண்டாள் விருஷா.
அவளின் பார்வையில் இருந்து வெளி வந்த அபிஜித்தோ அந்த செக்கை நாசியில் வைத்து உள்ளிழுத்தபடி, “ம்ம் எப்படி இருந்தாலும் பணம் பணம் தான்” என்று முனுமுனுத்துக் கொண்டவன், தன்னையே குழப்பமாக பார்த்து கொண்டு இருக்கும் அச்சுதனை நோக்கி புருவம் உயர்த்திட, அவனோ கேள்வியாக நோக்கினான்.
“என்ன அச்சு… எதுவுமே புரியலையா… இவனே அவளை ஆக்சிடனட் செய்ய சொல்லிட்டு அப்புறம் இவனே எதுக்கு ஹாஸ்பிடலில் சேர்க்கிறானு… மே ஐ ரைட்” என்றிட,
“எஸ் ஜீ… அர்ஜூன் சார் சொன்ன பிராஜக்ட் படி பார்த்தா, நீங்க இப்போ வந்தவங்களை தான் உங்களை லவ் பண்ண வைக்கனும்னு சொன்னாங்க.. ஆனா நீங்க என்னடான்னா அவங்க டிவின் சிஸ்டரை ஆக்சிடன்ட் செஞ்சு நீங்களே அவங்களை காப்பாத்துனிங்க… இங்க வந்த கேர்ள்கிட்ட அலட்சியமா பேசுறீங்க… இதுனால யாருக்கு என்ன யூஸ்” என்று குழம்பியபடி பேசியவனை கண்டு லேசாக புன்னகைத்தவன்,
“நீ கேள்விப்பட்டது இல்லையா அச்சு, கியூரியாசிட்டி கில்லட் தி கேட்(Curiosity killed the cat)” என்றிட இன்னும் புரியாது விழித்தான் அச்சுதன். உண்மையில் அபிஜித் மறைமுகமாக எதோ கூறுகிறான் என்று புரிகிறது. ஆனால் அது என்ன என்பது தான் சுத்தமாக புரியவில்லை!
அச்சுதன் முகம் இன்னும் தெளியாததை கண்டு, “எல்லா விசயமும் எல்லாருக்கும் புரியனும்னு அவசியம் கிடையாது அச்சு” என்றவன் சிறிது இடைவெளி விட்டு,
“அண்ட் ஒன் திங், நான் அந்த அர்ஜூன் சொன்ன பிராஜெக்ட்க்காக தான் இதை எல்லாம் செய்றேனு நினைக்குறியா… நோ… நோ… திஸ் இஸ் மை கேம்” என்றவனை அதிர்ந்து பார்த்தவன்,
“ஜீ அப்போ உங்க எய்ம் ஆக்சிடன்ட் பண்ண கேர்ளா… இல்லை இப்போ வந்தவங்களா” என்று கேட்ட அச்சு அவன் பதில் என்னவாக இருக்கும் என்றபடி அவனை நோக்கிக் கொண்டு இருக்க,
“இரண்டு பேருமே தான். ஆனா இது நாட் பார் லவ்… ஒன்லி பார் அவங்க பிராபர்டி, உனக்கு புரியும்படி தெளிவா சொல்லனும்னா ஒன்லி பார் மணி(money)” என்றவன் இப்போது வாய்விட்டே சிரித்தபடி தான் கொண்டு வந்த கார் சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு, அச்சுதன் கொண்டு வந்து ‘ஹார்லி டேவிட்சன்’ மாடல் பைக்கில் பறந்தான் அபிஜித். செல்லும் அவனையே இன்னும் குழம்பிய மனதோடு நோக்கியபடி இருந்தான் அச்சுதன்.
வியூகம் யார் வேண்டும் ஆனாலும் அமைத்திடலாம். ஆனால் அதில் நுழைந்து போராடுவர்கள் எல்லாராலும் வெற்றி பெற இயலுமா என்ன?
வியூகம்அமைத்தவன் ஒருவன்!
ஆட்டம் ஆடுபவன் ஒருவன்!
யார் ஆட்டத்தில் யார் பகடைகள்!
பகடைகள்
வெறும் பகடையாகவும்
இருக்கலாம்…
அல்ல…
எதிர்க்கும் படையாகவும் மாறலாம்!
விதியின் பொம்மலாட்டத்தில்
அனைவரும்
கைப்பாவைகளாய்!
🖤நெருங்குவான்…🖤
For discounts in the shop section, please contact mspublications1@gmail.com Dismiss