NMK-9

முகைக் காதல்-4fff2f33

NMK-9

நின் முகைக் காதல்
9

பால்கனியில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்த தீட்சண்யா, ஆதவ் எழும் சத்தம் கேட்டுத் திரும்ப, அவளைத் தான் தேடினான்.

“குட் மார்னிங்” ட்ரிம் செய்த அவன் தாடியையும் தாண்டி அவன் உதடுகள் மலர்வதைக் கண்டவள் புன்னகைத்து அவனுக்கு பதிலுக்கு குட் மார்னிங் கூறினாள்.

அவன் பாத்ரூமிற்குச் சென்றதும், அவனுக்கு ஒரு சட்டையை வழக்கம் போல அயர்ன் செய்து வைத்தாள்.
ஆதவ் வெளியே வந்ததும் அவனிடம், “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க” என்றாள்.

“எஸ் மேடம்” கலைந்த தன் தலையை கோதிக்கொண்டே நிற்க, முதன் முதலாக தீட்சாவின் கண்களுக்கு அவன் வசீகரமாகத் தெரிந்தான். அவனது கண்களை அப்போது தான் அவள் பார்க்கிறாள்.

லென்ஸ் வைத்தது போல பழுப்பு நிறத்தில் இருந்தது அவனது கண்கள். கூர்மையான நாசி, சிவந்த உதடுகள் என தனித் தனியாக அவள் கண்களில் பட்டுத் தொலைந்தது.

‘இவ்வளவு அம்சமா இருக்கனே!’ மூளை இன்று தான் விழித்துக் கொண்டது அவளுக்கு.
அவள் பேசாமல் இருப்பதைக் கண்டு,
“என்ன வேணும் சொல்லு. எதுக்குத் தயங்கற?” அவள் முன் வந்து நின்றான்.
“அ..அது…அது…” என்ன சொல்ல வந்தோமென்று அவனைக் கண்டு மறந்து போனாள். அவனது வாசம் அவள் மனதை கிறங்கச் செய்தது. அவ்வளவு பக்கத்தில் நின்றான்.

“என்ன.. என்ன.. ஏன் பதட்டப் படற?” அவளது தோளைப் பற்றி அங்கிருந்த ஒரு சோபாவில் அமர்த்தினான்.
“என்ன விஷயம் இப்போ சொல்லு?” அருகில் நிண்டு கொண்டான்.
சற்று தெளிந்தவள், “அந்த சாஷா நம்பர் வேணும். நீங்க பிரதாப் அண்ணா கிட்ட கேளுங்க. இல்லனா அவர் நம்பர் தாங்க, நான் பேசறேன்.” நேற்று இருந்த துடிப்பு அவளிடம் இன்று குறைந்தது. அது ஆதவிற்கு நன்றாகவே தெரிந்தது.
“ஹா ஹா.. அந்த பொண்ணு கிட்ட பேசணுமா?” சிரித்தான்.

“ஆமா.. உங்க மேல அவளுக்கு இப்பவும் கண்டிப்பா லவ் இருக்கும். அவ கூட இருந்தா உங்க லைஃப் நல்லா இருக்கும்.”
“அப்படியா? நான் சந்தோஷமா இருப்பேன்னு உனக்கு எப்படித் தெரியும்.?” கூர்மையாக அவளையே பார்த்தபடியே கேட்க,
அவள் நிமிர்ந்து அவனைக் கண்டாளே தவிற, அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் விழிப்பதைக் கண்டு,
“என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்னு நான் சந்தோஷமா இருப்பேனு சொல்றன்னு கேட்டேன்?” புன்னகைதான்.
“உங்களைப் பத்தி எனக்கு அதிகம் தெரியாது தான், ஆனா நீங்க நல்லவரு மட்டும் தெரியும். உங்களுக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கணும்.” சிறுபிள்ளைப் போல அவள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கையில் அவனது செல்போன் சிணுங்கியது.

அதை எடுத்துப் பார்க்க, அதில் தெரிந்த எண்ணைக் கண்டவன் சற்று சுதாரித்தான்.
பாவமாக அங்கே சோபாவில் அமர்ந்திருப்பவளை அங்கிருந்த அனுப்ப நினைத்து,
“எனக்கு கொஞ்சம் காஃபி கொண்டுவரியா ப்ளீஸ்” என்றான்.
“சரி” என அவள் சென்ற உடனே அறையின் கதவை சாத்தித் தாளிட்டான். வந்த காலை அட்டென்ட் செய்து, “என்ன?” குரலில் அத்தனை கடுமையும் கொண்டுவந்திருந்தான்.

“சார்..சாரி.. நீங்க தான் அவ பேசினதும்..சாரி அவங்க பேசினதும் உடனே உங்ககிட்ட சொல்லச் சொன்னீங்க. அதான் இப்போ போன் பண்ணேன்.”
“ம்ம்..நான் சொன்ன மாதிரி சொன்னியா?”
“மன்னிச்சுடுங்க.. நீங்க சொன்னதும் சொன்னேன். கொஞ்சம் ரியலிஸ்டிக்கா இருக்கணும்னு..”

“இருக்கணும்னு ??”

“நல்லா கேட்டுவிட்டேன் சார். அவங்கள அப்படிப் பேச எனக்கு ரைட்ஸ் இல்லதான். ஆனா இதுக்கு மேல அவங்க எனக்கு போன் பண்ணக் கூடாதுன்னா இதெல்லாம் பேசணும்னு நானே முடிவு பண்ணி பேசிட்டேன் சார்..” தான் பேசிய அனைத்தையும் ஆதவ்விடம் கூறினான் சத்யா.
தீட்ச்சாவின் ,முகத்தில் தெரிந்த வருத்தத்திற்கு காரணத்தைப் புரிந்து கொண்டான் ஆதவ். ஆனால் இவன் அதிகமாகப் பேசியது அவளுடைய மனதை வருத்தும் என்றாலும் இது அவளுடைய முதிற்சிக்கு அவசியமான ஒன்றாகவே பட்டது.
“இந்த வார்த்தைகளுக்கு உனக்கு இப்போ அனுபவிக்கற வேதனை பத்தாது. இன்னும் வெச்சு செய்யணும். இருந்தாலும் உன்னோட குடும்பத்துக்காக சும்மா விடறேன். இத்தோட எந்த பொன்னுகிட்டையும் உன் திமிர காட்டனும்னு நெனச்சா உன்னை உயிரோட புதைக்கவும் தயங்க மாட்டேன். போனை வெச்சுட்டு அந்த ‘சிம்’ அ உடைச்சு போட்டுட்டு போயிட்டே இரு. இனிமே உனக்கும் என் தீட்ச்சாவுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. ஆனா நான் உன்ன வாட்ச் பண்ணிட்டுத் தான் இருப்பேன். புரியுதா..?” சிம்மமாக கர்ஜித்தான்.
“சரி சார் சரி சார். வச்சுடறேன்..” பயந்தபடி அந்தப் பக்கம் போனை வைத்தான் சத்யா.

இவன் வைக்கவும், சரியாக தீட்சா கதவைத் தட்டவும் சரியாக இருந்தது.
காபியை வாங்கிக் கொண்டவன், அவளின் முகவாட்டத்திற்கான காரணத்தை அறிந்து அவளைக் கண்டான்.
அவளின் வேதனை அவனுக்கும் வேதனை தரும் ஒன்று தான். ஆனாலும் இதை அவள் அனுபவித்தால் தான் வாழ்வில் பலவற்றை உணரும் பக்குவம் பெற முடியும்.

பிறப்பிலிருந்து எந்தவித மனக்கசப்பும் அறியாமல் இன்று வரை குழந்தையாக இருக்கும் தன் மனைவிக்கு இன்று அவள் கேட்க நேர்ந்த வார்த்தைகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவன் அறிந்து தான் இருந்தான்.
இருந்தாலும் உளி படாமல் எந்தக் கல்லும் சிலையாவதில்லையே! இதில் அவன் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. தங்களின் எதிர்கால காதல் வாழ்விற்கு இது அவசியம் என்றே உணர்ந்தான்.

அவனின் பார்வை துளைப்பதைப் போலிருக்க அவன் சிந்தனை என்னவென்று புரியாமல், ஆனால் அவனால் ஈர்க்கப் படுவதை மட்டுமே அவன் கண்களில் கண்டாள்.
‘இல்ல இல்ல… இவருக்கு நான் பொருத்தமில்ல. இவரை உருகி உருகி காதலிக்கும் சாஷா தான் பொருத்தம்.’ என்றெண்ணியபடி,
“பிரதாப் அண்ணாக்கு போன் பண்ணுங்க..” மெல்லிய குரலில் அவன் மனதைக் கலைத்தாள்.
‘அடிப்பாவி உன்னை எந்தக் ஸ்கூல்ல படிக்க வெச்சாங்க? இவ்வளோ அறிவா இருக்கியே..!’ “ஹ்ம்ம்…என்னை சாஷா கூட சேத்து வச்சுட்டுத் தான் மறுவேலை போல..?” லேசாகப் புன்னகைக்க,
“ஆமா.. பண்ணுங்க” அவனை வற்புறுத்தினாள்.
“சரி.. சரி..” உடனே தன் போனை எடுத்து நண்பனுக்கு டயல் செய்ய
அவனோ உடனே எடுக்க, “சொல்லு டா மச்சான். என்ன ஆச்சு?” ஸ்பீக்கரில் இருப்பது தெரியாமல் அவன் பேச வர,
உடனே சுதாரித்த ஆதவ், “இரு டா.. உன் தங்கச்சி பேசணுமா..” அவனுக்கு சிக்னல் கொடுக்க,
“ ஓ!” புரிந்துகொண்டான்.

“அண்ணா… அந்த சாஷா நம்பர் வேணுமே? இவருக்கே அனுப்புங்க..” என்றாள்.
“ஏன் மா. அவள திட்டப் போறியா? பாவம் வேண்டாம். அவ தான் ஒதுங்கிட்டாளே! “ விஷயம் அறியாதவன் போல காட்டிக் கொண்டான்.
அப்போது தான் அவளுக்கு உரைத்தது எப்படி இந்த விஷயத்தை மறந்தாள் என்று..!’

நாக்கைக் கடித்துக் கொண்டு ஆதவ்வைப் பார்க்க, அவன் கண்ணை மூடி தலையை இரு புறமும் ஆட்டினான். தலையில் அடித்துக் கொண்டவள்,
“இல்ல..இல்ல ண்ணா… சும்மா தான் இன்னும் இவரையே நெனச்சுட்டு இருக்காம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லலான்னு” அவசரமாக கூறி முடித்தாள்.

“அப்படியா… அவ கேக்கற ஆள் இல்ல ம்மா. வேணும்னா பேசிப் பாரு.” அழகாக பொய் கூறினான்.
நண்பனின் இந்தத் திறனைக் கண்ட ஆதவ் உதட்டை மடக்கி சிரிப்பை கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டிருந்தான்.
“சரி அண்ணா. நீங்க நம்பர் அனுப்புங்க. வைக்கறேன்” போனை அணைத்தவள்,
“எப்படி சமாளிச்சேன் பாத்தீங்களா?” புருவத்தை உயர்த்தி இடுப்பில் கைவைத்து நிற்க,
“சிறப்பு.. மிகச் சிறப்பு…இப்படியே வீட்ல ஒரு நாள் உளறு… ரெண்டு பேரையும் நல்லா செஞ்சுடுவாங்க..” கையை கழுத்துக்குக் குறுக்காகக் காட்ட,
தீட்ச்சா சிரித்துவிட்டாள்.

“அது சரி..இவ்வளோ தீவிரமா என்னை சாஷாவோட சேத்து வைக்கப் பாக்கற.. அந்த சத்யா எதுவும் ப்ளான் சொன்னானா உங்களுக்கு?” அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை நோண்டினான்.

“ம்ம்ம்.. எல்லாம் பேசிட்டான். இப்போவே வந்து கூட கூட்டிட்டு போறேன்னு சொன்னான். நான் தான் உங்களுக்கு ஒரு வழி கிடைக்காம வரமாட்டேன்னு சொல்லிட்டேன். அத பத்தி இப்போ என்ன, அடுத்து நடக்கறத பார்ப்போம்.” முகம் வாடினாலும், தெளிவாக அவனிடம் கூற,

‘என்னடி ஒரே மணி நேரத்துல… இவ்வளவு தெளிவா பொய் சொல்ற.. சும்மாவா சொன்னங்க பொண்ணுங்கள புரிஞ்சுக்க முடியாதுன்னு.’
“ஓ! நீங்க கிளீயரா இருக்கீங்க? அப்போ எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ நல்லா இருந்தா போதும். நான் சாஷாவோ பாஷாவோ தேடிக்கறேன். சத்யாவ உடனே வர சொல்லு.” அவளுக்கு மேல் இருந்தான் அவன்.

“ இல்ல இல்ல.. உடனே எப்படி ஆஸ்ட்ரேலியா லேந்து வர முடியும். அதுக்கு டைம் ஆகும். நீங்க என்ன என்னை தொரத்தறதுல குறியா இருக்கீங்க..” அவளது வருத்தம் எட்டிப் பார்த்தது.

“ச்ச ச்ச.. உன்னை நான் தொரத்தல. உன் லைஃப் நீ ஆசப் பட்ட மாதிரி இருந்தா போதும். அதுக்காக சொன்னேன்.” காபியை அருந்திய படி அவளின் பதில்களை ரசித்துக் கொண்டிருக்க,
“ம்ம்… அதெல்லாம் பாத்துக்கலாம்.”

“பரவால்ல ஒரு ப்ரென்ட்க்கு இவ்வளோ செய்யற..தேங்க்ஸ்” என்றான்..

“யார் ப்ரென்ட்?” புரியாமல் குழம்ப,

“நான் தான். நான் உனக்கு ப்ரென்ட் தான.. இல்லையா..? நமக்குள்ள என்ன ரிலேஷன்ஷிப்?”

‘பிரெண்ட்ஸா? நான் உங்க கைக்குள்ள கட்டிப் பிடிச்சுட்டு இருக்கற மாதிரி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தோனுச்சு. அதுக்குள்ள எப்படி ப்ரென்ட்னு சொல்றது..’ அவளும் தன் மனதுடன் போராட,

“என்ன..?”

“ம்ம் ஆமா ப்ரெண்ட்ஸ் தான்.” மனதே இல்லாமல் சொல்லி வைக்க, அவர்களின் அரைக் கதவு தட்டப் பட்டது.

“வாங்க..” ஆதவ் குரல் கொடுக்க,
ராகேஷ் உள்ளே வந்தான்.

“என்ன டா?” ஆதவ் அவனிடம் வர,

“உடனே நீயும் தீட்ச்சாவும் உங்க திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு கிளம்புங்க..”

“என்ன டா? எங்க கிளம்பனும்?” அவசரமாகக் கேட்க,

“ம்ம்…கோயில் யாத்திரைக்கு… போடா… உங்க ரெண்டு பேருக்கும் இன்னிக்கு நைட்டு ஃப்ளைட்ல கோவா க்கு டிக்கெட் போட்டிருக்கேன். ஒன் வீக் கழிச்சு தான் ரிடர்ன். கெட் ரெடி” இருவரையும் பார்த்துக் கூற,

“மாமா..இப்போ எதுக்கு?” சங்கடமாக உணர்ந்தாள் தீட்சா.
அதைக் கண்டுகொண்டான் ஆதவ். எப்படியும் இந்தத் தருணத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள நினைத்தான்.

“என்ன எதுக்குன்னு கேக்கற தீட்சா?” ராகேஷ் இருவரையும் பார்க்க,
“தீட்சா வோட அப்பா போன் பண்ணி நாளைக்கு அவங்க வீட்டுக்கு விருந்துக்கு வர சொன்னாரு. அதுனால தான் யோசிக்கறா..இல்ல?” அவளுக்கு ஜாடை காட்டி தலையாட்ட வைத்தான்.

“ஆங்… ஆமா மாமா.அதுக்குத் தான் சொல் வந்தேன்.” ஆதவைக் கண்டு தலையை ஆட்ட,

“ஓ! அப்படியா! பரவால்ல உங்க அப்பா கிட்ட நம்ம அப்பாவ விட்டு பேசச் சொல்லலாம். அவர் ஒன்னும் சொல்ல மாட்டாரு. இப்போவே சொல்றேன்..” என டிக்கெட்டை கொடுத்து விட்டு நிற்காமல் சென்று விட்டான் ராகேஷ்.

“டேய்..இரு..” ஆதவ் அங்கே காற்றுடன் தான் பேசிக் கொண்டிருந்தான்.

“ப்ச்.. இப்போ என்ன பண்றது?” தீட்சா அவனைப் பார்க்க,

“என் கூட வந்தா உனக்கு ஒன்னும் ப்ராப்ளெம் இல்லனா வா. எதுக்கு சொல்றேன்னா ராகேஷ் லேந்து அம்மா வரைக்கும் அன்னிக்கு உன்னை வெளிய கூட்டிட்டு போகச் சொன்னாங்க. நான் அப்போ முடியாதுன்னு சொன்னப்ப எல்லாரும் எதாவது பிரச்சனையானு தான் கேட்டாங்க. இப்பவும் நாம போலனா கண்டிப்பா கன்பார்ம் பண்ணிடுவாங்க. அதுக்குத் தான் சொல்றேன்.” அவள் மறுக்க முடியாதபடி பேசிவைத்தான்.

வேறு என்ன அவள் கூறி மறுக்க முடியும்? இருந்தாலும் அவள் யோசிக்க,
“அதுவுமில்லாம அங்க போனா நீயும் ஃப்ரீயா சத்யா கூட பேசலாம். நானும் சாஷா கூட பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.” சாஷாவின் பெயரை இழுக்க, அவளால் மறுப்பேதும் சொல்ல முடியாமல் போனது.

“கிருஷ்ணா..” கீழிருந்து தந்தையின் குரல் ஒலிக்கவும்,

“வா..” என அவளையும் அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.

“நடராஜா.. பசங்கள அடுத்த வாரம் அனுப்பறேனே. திடீர்னு சொல்லாம ராகேஷ் அவங்களுக்கு கோவாக்கு டிக்கெட் போட்டுட்டான் இன்னிக்கு நைட்க்கு.” பேசிக்கொண்டிருந்தார் ராஜவேலு.

“அப்படியா. ஒன்னும் பிரச்சனை இல்ல, அவங்க சௌரியமா போயிட்டு வரட்டும்.” நடராஜன் கூறிவிட, அந்தக் காரணமும் அவர்களுக்கு இல்லாமல் போனது.

இருவரும் தங்களின் உடைகள் மற்றும் தேவையான முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள, ராகேஷ் அங்கே வந்தான்.

“ஆதவா, இங்க வா”

ஆதவ் வெளியே செல்ல, அவர்களின் தோட்டத்தில் அழைத்துச் சென்று பேசினான்.

“எதாவது ப்ராப்ளெம்னா என்கிட்டே சொல்லு டா” அக்கறையுடன் கேட்டான்.

“டேய் என்ன டா. என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா. அதெல்லாம் ஒண்ணுமில்ல டா.” அண்ணனின் தோளில் கை வைத்து அவனைத் தெளிவு படுத்த,

“இல்ல டா. நீ அவள புடிச்சுத் தான் கல்யாணம் பண்ண. அது எங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா அவளுக்குத் தெரியாதே. அவளுக்கு ஒரு வேளை உன்னைப் பிடிக்கலையா? நீங்க ரெண்டு பேரும் மனசுவிட்டுப் பேசி நான் பார்க்கல. தீட்சா இன்னும் உன்கூட இலகுவா இருக்கற மாதிரி தெரியலையே அதுனால கேட்கறேன்.”

“ராகேஷ்.. எனக்கு அவள எந்த அளவு புடிக்குமோ , அதே அளவு அவளுக்கு என்ன புடிக்கும்னு எனக்குத் தெரியும். என்னை அவளுக்குப் புரியவைக்க இந்த ட்ரிப் யூஸ்புல்லா இருக்கும்னு நினைக்கறேன். இப்பவும் அவளுக்கு என்னைப் புடிக்கும் டா. ஆனா அவ லவ் பண்ணனும்னு தான் வெய்ட் பண்றேன்.” மனதில் இருந்ததை அண்ணனிடம் பகிர்ந்து கொண்டான்.

“நீ எல்லாத்தையும் தெளிவா ப்ளான் பண்ணுவ. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.” அவனது தோளில் தட்டி புன்னகைத்தவன்,ஆல் தி பெஸ்ட் கூறி அவனை அனுப்பினான்.

அதே நேரம் தீட்சா உறுத்தலுடன் இருந்தாள்.
‘எனக்கு உங்கள புடிக்கும் தான். வேற ஒருத்தன புடிச்சிருக்குன்னு சொன்ன பிறகு மறுபடியும் உங்க கிட்ட வந்து நான் எப்படி இந்த மாதிரி சொல்ல முடியும் ? இப்போ உங்க கூட இந்த ட்ரிப் வேற…! நான் என்ன பண்றேன் எப்படி நடந்துக்கணும்னு ஒண்ணுமே எனக்குப் புரியல. கடவுளே!’ பெட்டியில் அடுக்கிக் கொண்டே முனகிக் கொண்டிருக்க, ஆதவின் செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.

பிரதாப் தான் சாஷா என்ற எண்ணை அனுப்பி இருந்தான்.
அதைக் கண்டவள் மனம் சுருங்கிப் போனது. அது பெரு வலியாக மாறும் என அப்போது அவள் உணரவில்லை.
“சாஷா..ஆதவ்”
“சாஷா ஆதவ் கிருஷ்ணா..” சொல்லிப் பார்த்தாள்.

“ஹ்ம்ம்…” என்ற பெருமூச்சு தான் மிஞ்சியது.

இரவு அவன் அருகில் அமர்ந்து ஃப்ளைட்டில் பயணமாகிக் கொண்டிருந்தாள் தீட்சண்யா.
கோவா அவர்களை அன்புடன் வரவேற்றது. கூடவே தானாகவே சேர்த்துக் கொண்ட தீட்சாவின் மனக்கவலைகளும் பின் தொடர்ந்தது.

Leave a Reply

error: Content is protected !!