NSK–20 1

NSK–20 1

அத்தியாயம் 20

உயிருக்கு போராடிய நிலையில் இருந்த இருவரையும் அந்த சாலையில் வந்தவர்களில் யாரோ ஒருவர் நங்கையையும் பாரியையும் மருத்துவமனையில் சேர்த்தார்.

மருத்துவர்கள் இருவரையும் காக்க போராட, அவர்களின் உயிரோ ஊசலாடி கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்கு முன்பு…

“ஏங்க நம்ம இப்படி எல்லாம் ஒன்னா இருப்போம்னு நான் நினைச்சு பார்த்தது கூட இல்ல பாரி. இது எல்லாம் நடந்தது ஏதோ கனவு மாதிரி இருக்கு” என்க,

“இது எதுவும் கனவு இல்லை கண்ணம்மா. எல்லாம் உன் பிள்ளையின் செயல். அவனால மட்டும்தான் நாம இன்னைக்கு இப்படி இருக்கோம்” என்று அவரது இடக்கரத்தோடு இவரது வலக்கரத்தை சேர்த்துக் கொண்டார்.

“ஆமாங்க… அவன் நம்ம வாழ்க்கைக்கு கிடைச்ச வரம். அவன் மட்டும் இல்லைன்னா நீங்களோ நானோ எப்படி எப்படியோ இருந்திருப்போம். உங்கனால மட்டும்தான்  நாங்க ரெண்டு பேரும் இன்னைக்கு இவ்வளோ சந்தோஷமா இருக்கோம்ங்க” என்றவர் லாவகமாக அவர் தோளில் சாய்ந்து கொண்டார்.

“நடப்பது யாவும் நன்மைக்கே கண்ணம்மா” என்று அவர் நெற்றியில் இதழ் பதித்தார்.

“ஏங்க எனக்கு ஒரு ஆசை இருக்கு அதை நிறைவேத்துறீங்களா?” எனப் பாரியின் முகம் பார்த்து கேட்க,

“உங்களின் ஆசையை நிறைவேற்றவே இந்த அடியேன் உள்ளேன் மகாராணி” என்று நாடக பாணியில் கூறினார்.

“பச் நான் சொல்றதை கேளுங்க” என நங்கை சிணுங்க, வாயில் கையை வைத்து, ‘இனி பேச மாட்டேன்’ என்பது போல் சைகை செய்து பேசுமாறு கையைத்தார்.

“இதெல்லாம் ஓவரு கார்காரரே” எனச் சிரித்தவர் தன் ஆசையை கூறினார்.

“ஏங்க நான் சின்ன பொண்ணா இருந்த காலத்துல இருந்தே எனக்கு பைக்ல போகணும்னு ஒரு ஆசை. ஆனா உங்களுக்குதான் என்னோட குடும்பத்தை பற்றியும் அப்புறம் நடந்த நிகழ்வுகளை பத்தியும்தான் தெரியுமே. இதுல என்னோட ஆசை நிறைவேறாமலே போச்சிங்க. நிறைவேறாமா போச்சின்னு சொல்றதை விட சொல்லவே சந்தர்ப்பம் இல்லாம பொய்டுச்சிங்க” எனப் பாவமாக சொல்ல, அவரின் நிலையை எண்ணி மனம் வருந்தி போனார் பாரிவேந்தர்.

“ஆனா இந்த விபு பையன்தான் சொன்னான். வாடகைக்கு இந்த ஊருல வண்டி எல்லாம் கிடைக்குமாமே… ஏன் நீங்க வச்சி இருக்க மால்ல கூட அதை வச்சி இருக்கீங்களாமே பாரி. இன்னைக்கு நாம அந்த வண்டியை வாடகைக்கு எடுத்துட்டு வீட்டுக்கு போலாமாங்க” என ஏக்கத்துடன் ஆசையை கூறினார்.

“நீ ஆசைபட்ட ஒரு விசியத்தை நான் நடத்தாமல் பொய்டுவேன்னா என்ன. அதை செய்ய தானே நான் இருக்கேன்”என்றவர் வண்டியை ஓரம் நிறுத்த சொல்லி யாரிடமோ பேசியவர், நங்கையிடம் திரும்பி, ”இதோ இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல வண்டி வந்துடும். நாம அதுலையே வீட்டுக்கு போகலாம்” என்றார் மனைவியின் ஆசைக்கிறங்கி.

“ரொம்ப நன்றிங்க” என்று அவரிடம் தஞ்சம் அடைந்தார் நங்கை.

பாரி சொன்னது போலவே பத்து நிமிடத்திலே இருசக்கர வாகனம் வந்து விட, முதலில் ஏறிய பாரி நங்கையை பார்த்து ஏறுமாறு கண்ணடித்து சொன்னார்.

நாணத்துடனே வண்டியில் ஏறிய நங்கை அந்த நிமிடத்தை வெகுவாக இரசித்தார்.

இருவரும் பல கதைகள் பேசினர். எதைப்பற்றி பேசுகிறோம் என்று தெரியாமல் இருவரும் பேசிய படியே அந்த ஷனத்தை இரசித்தவாறே சென்ற நேரம்தான் எதிர்பாராவிதமாக எதிர் வந்த வண்டி தன் கட்டுப்பாட்டை இழந்திருந்ததால் பாரியின் வண்டி மீது மோதியது. இதனால் இருவருமே தூக்கி எறியப்பட்டனர்.

நங்கை சாலையின் ஓரத்தில் இருந்த புல்தரையில் விழுந்திட, பாரியோ எதிர் இருந்த ஒரு குட்டி பாறையில் தலை மோதி கீழே விழுந்தார். அவரின் விழியோ அந்நேரத்திலும் நங்கையை தேடி அலைந்து கண்ணீர் விடுத்தது.

இருவரும் இரத்தம் கொட்ட, காப்பாற்ற ஆளின்றி மயங்கிய நிலையில் இருந்தனர்.

அந்த வழியாக வந்த ஒருவர்தான் , இருவரின் நிலையை அறிந்து வேகமாக செயல்பட்டார்.

இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து போலீஸ்க்கும் விவரத்தை கூறினார். மருத்துவர்களும் அவர்களுக்கான சிகிச்சையைத் தொடங்கினர்.

நேற்றுதான் ஆதினியின் குடும்பம் பாரியையும் நங்கையையும் காணுவதற்காக சென்னைக்கு வருகை தந்தனர்.

காலையிலிருந்து இருவருக்காக மொத்த குடும்பமும் காத்திருந்தது. பரணிதரன் மட்டுமே கோட்டையூர் வரைக்கும் சென்றிருந்தார் அனைவரையும் சமாதானம் படுத்தி அழைத்து வருவதற்கு.

இங்கே நேரம் கடக்க கடக்க, உள்ளுக்குள் அனைவருக்கும் ஏனோ நெருடலாக இருந்தது.

காலையில் வசீகரன், ‘அழைக்க தானே வருகிறேன் ‘என்று சொன்னதற்கு, ‘வேண்டாம்’ என கணவனும் மனைவியும் சேர்ந்தே மறுத்திருந்தனர்.

காலை பத்து மணி போலவே இருவரும் சென்னை வந்திருக்க வேண்டும், ஆனால் இப்போது மணி இரண்டை தாண்டி சென்று கொண்டிருந்தது.

நேரம் செல்ல செல்ல வசீகரனால் அமைதியாய் வீட்டில் இருக்க முடியவில்லை. அதனாலேயே தனக்கு தெரிந்த ஒருவரை தொடர்பு கொண்டு ஃப்ளைட் வந்துவிட்டதா என்று விசாரிக்க அந்த நபரும் பத்து மணிக்கே வந்துவிட்டது என்று அமைதியாக அனைவரின் தலையிலும் இடியை இறக்கினார்.

நேரத்தை வீணடிக்க விரும்பாமல் விபுவை அழைத்து கொண்டு செல்ல நினைக்கையில் ஆதினியும் மிளனியும் முன் வந்து, “நாங்களும் வரோம்” என்றனர்.

நால்வரும் இரு வண்டிகளை எடுத்து சென்று எல்லா இடத்திலையும் தேடினர். அவர்கள் இருவரும் எங்கு சென்றார்கள் என்று தெரியாததால் குழம்பிப்போயினர்.

ஆதினிதான் பயத்தின் பிடியில் அழுகத் தொடங்கினாள்.

“கரண், அத்தை மாமாக்கு ஒன்னும் ஆகிடாதுல?” எனப் பயத்துடனே அழுகையின் பிடியில் கேட்க,

“பாசிட்டிவா யோசி ஆது… அம்மாக்கும் அப்பாக்கும் எதுவும் ஆகியிருக்காது. அவங்க எங்கேயாவது வெளிய போயிருக்கலாம்” என்று அவளுடன் சேர்த்து தன்னையும் தேற்றினான்.

வீட்டிலுள்ள அனைவரும் மாறி மாறி இருவருக்கும் அழைக்க, இருவரின் மொபைலும் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது.

கிட்டத்தட்ட வசீயும் விபுனனும் ஒரு மணி நேரமாக எல்லா இடங்களிலும் தேடியும் எந்த ஒரு விடயமும் இருவரை பற்றியும் தெரியவில்லை.

ஆதினியும் மிளனியும் ‌விடாமல் அவர்களது மொபைலுக்கு அழைத்த வண்ணமே இருந்தனர்.

ஆக்சிடன்ட் ஆன இடத்தில் போலீஸ் வந்து என்ன ஏது என்று விசாரணை செய்ய, அப்போது அங்கேயும் இங்கேயுமாக ஏதாவது விடயம் கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருந்த கான்ஸ்டபிளுக்கு ஏதோ மொபைல் தட்டு பட, அதனை எடுத்து வந்து மேல் அதிகாரியிடம் கொடுத்தார்.

அவரும் அதிலிருந்த உதிரத்தை துடைத்து, மொபைலை ஆன் செய்தார்.

ஆன் செய்த அடுத்த நொடியிலே ரிங் வரவும் அதனை அட்டர்ன் செய்தார்.

எதிர்ப்புறத்தில்  இருந்த ஆதினி வசியிடம், “போன் அட்டன் பண்ணிட்டாங்க” என்றாள் கண்ணீருடனே.

அதனை உடனே வாங்கிய வசீ காரினை ஓரம் நிறுத்தி, “அப்பா… ப்பா…” எனக் குரலில் நடுக்கத்தோடு சொல்ல,

“ஹலோ சார்! இது யார் நம்பர்ன்னு சொல்ல முடியுமா?” என வேறொருவரின் குரல் கேட்கவே இத்தனை நேரம் இருந்த அத்தனை தைரியமும் வடிந்து போனது.

“அது எங்க அப்பாவோடது, நீங்க யாரு?” எனப் பதற்றத்துடன் குரல் வெளி வர, ஆதினி பயத்தில் அவனின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டாள்.

“நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன் சார். இங்க ஒரு ஆக்சிடென்ட் அதனை விசாரணை பண்ணிட்டு இருந்தப்பதான் இந்த மொபைல் கிடைச்சது அதான்” என அவர் சொல்ல,

வசீகரனுக்கு உயிரே இல்லை இதனை கேட்கும்போது, சரியாக அந்த நேரம் பார்த்து விபுனன் வரவும் அவன் தொலைபேசியை விடவும் சரியாக இருந்தது.

“கரண் என்ன ஆச்சி? மாமா என்ன சொல்றாரு? அவங்க ரெண்டு பேரும் எங்க இருக்காங்கலாம்? இப்போ யாரு பேசுனது? சொல்லுங்க கரண் ரெண்டு பேருக்கும் ஒன்னும் இல்லையே” என வசீகரனை அவள் உலுக்க,

அவளின் உலுக்களில் உயிர்பெற்றவன், “மா… ப்பா…” எனக் கத்தலானான்.

இதனை கண்ட விபுனன் அவன் தவறவிட்ட மொபைலை எடுத்து, “ஹலோ” என்க.

எதிர்ப்புறத்தில் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்து போனான். ஆனால் இப்போது தான் கலங்கினால் அது சரியாக இருக்காது என்று உணர்ந்தவன் அவரிடம், எந்த ஹாஸ்பிடல் என அறிந்து கொண்டு வசியையும் ஆதினியையும் தன் வண்டியில் ஏற்றி சென்றான்.

அடுத்த பத்து நிமிடத்திலே மருத்துவமனையை அடைந்தவன், மற்ற மூவரையும் உள்ளே அழைத்து சென்றான்.

நேராக நால்வரும் ஐசியூவிற்கு செல்ல, அங்கே பாரிக்கு ப்ளட் வேண்டி மருத்துவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

நங்கைக்கு ஆப்ரேஷன் நடந்து கொண்டிருந்தது. பாரிக்கு தலையில் பலமான அடி என்றும் இரத்தம் அதிகளவு கசிந்திருந்ததால் உடனடியாக உதிரம் தேவைப்பட்டது.

வேகமாக உள்ளே வந்த வசீ, மருத்துவரை சந்தித்து, ”எங்க என்னோட ம்மா… ப்பா…” கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தான்.

“உங்க அம்மாக்கு உள்ள ஆப்ரேஷன் நடந்துக்கிட்டு இருக்கு. ஆனா உங்க அப்பாக்கு அதிகளவு ப்ளட் வெளிய போயிருக்கு. அதுமட்டும் இல்லாமல் அவரு இப்போ கான்ஷியஸ்ல இல்ல. எங்களுக்கு இப்போவே அவசரமா AB negative ப்ளட் தேவைப்படுது, இது ரொம்பவே ரேர் ப்ளட்னால எங்கேயும் கிடைக்க மாட்டேங்குது. சீக்கிரமா ப்ளட் ஏற்பாடு பண்ற வேலையை பாருங்க” எனச் சொல்லி சென்றார்.

வசீ அங்கேயே இடிந்து போய் அமர்ந்து விட்டான். மிளனியும் மருத்துவம் படிப்பதால் மருத்துவருடன் பேச சென்றாள். அதற்கு முன் வீட்டினருக்கும் தந்தைக்கும் அழைத்து விஷயம் சொல்ல அனைவருமே கிளம்பி வருவதாக கூறினர்.

அடுத்த நிமிடமே நிலைமையை உணர்ந்த வசீகரன் ப்ளட் ஏற்பாடு செய்ய முனைந்தான். விபுனனும் ஆதினியும் அவர்களின் புறம் இந்த ப்ளட் கிடைக்குமா என கேட்க தொடங்கினார்கள்.

***

“இங்க நான் வந்தது கிருஷ்ணவேணி, சீனிவாசன் மகனாவோ இல்லை நாச்சியார் பேரனாவோ வரலை.  நான் வந்தது நங்கையோட அத்தானாக” என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார் பரணி.

“என்ன பேராண்டி! உனக்கு அவ என்ன வசியத்தை பண்ணினா இப்படி அவளுக்காக வந்து எங்க கிட்டயே பேசுற? நீ அவமானப்பட்டது எல்லாம் மறந்து போச்சா என்ன?” எனத் திடகாத்திரமாக அவர் குரல் வெளிவந்தது.

“நான் இப்போ உங்ககிட்ட ஆர்க்யூ பண்ண வரலை. என்னோட மாமாவை கூட்டிட்டு போகதான் வந்தேன். இத்தனை வருஷமா அவரை மிரட்டி வச்சது எல்லாம் போதும், முதல்ல அவரை வெளிய விடுங்க” என பரணிதரன் கோபமாக கத்திட, நாச்சியார் தன் மகளை பார்த்து முறைத்து வைத்தார்.

கிருஷ்ணவேணி தலை கவிழ்ந்து கொண்டார் நாச்சியாரின் பார்வையை தவிர்பதற்காக.

“என்னால அவனை எங்கேயும் அனுப்ப முடியாது. அதுவும் அந்த ஒழுக்கம் கெட்டவளுக்காக என் மகனை எங்கேயும் அனுப்ப நான் தயாராயில்லை” என்று வார்த்தைகளை அத்தனை கோபமாக கக்கினார்.

“அவ மேல எந்த தப்பும் கிடையாது பாட்டி. நாம எல்லாம் ஒன்னு நினைச்சிட்டு இருக்க, ஆனா அங்க நடந்தது வேற என்னவோ இருந்திருக்கு. ஒரு காதலின் ஆசையை நிறைவேற்ற போய் அவளோட இத்தனை வருட வாழ்க்கையே பாழாப்போச்சி. நான் அவளுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன் அவளோட குடும்பத்தை அவகிட்ட சேக்கிறேன்னு” என்றவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினார்.

இதனை அவரது அறையில் இருந்து கேட்டு கதரினார் பெரியவர். அவருக்கு தெரியும் தன் மகள் ஏதோ ஒரு காரணத்தினால் மட்டுமே திருமணத்தை நிறுத்தினாள் என்று. ஆனால் அது சௌந்தர்யாவின் காதலை வெற்றியடைய வைக்கதான் என்று பரணி சொல்ல இன்று கேட்க, தன் மகளை நினைத்து பெருமையடைந்தார்.

“என்னாவா வேணா இருந்துட்டு போகட்டும். ஆனா அவ வயித்துல வளர்ந்த அந்த குழந்தை” எனக் கேள்வியாக புருவமுயற்த்தி நிறுத்த,

பரணிதரனுக்கு இந்த கேள்வி அத்தனை சங்கடத்தை கொடுத்தது. அவரால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் தயங்கி நிற்க, அவரின் செயலே இன்று அவரை உயிரோட கொன்றது.

ஆனால் எத்தனை நாட்களுக்கு இவ்விடயத்தை மறைப்பது என்றாவது ஒரு நாள் அது தெரிந்து தானே ஆகவேண்டும். இந்த பாவ செய்கையை செய்ததை கண்டு வெட்கிபப்போனார் பரணிதரன்.

“சொல்லு பேராண்டி… ஏன் அமைதியாகிட்ட? உன்னால கூட பதில் சொல்ல முடியலைல. எந்த ஒரு ஒழுக்கமான செயலுக்கும் நமக்கு பதில் இருக்கும். ஆனா ஒழுக்கம் இல்லாத செயலுக்கு பதில் இருக்கவே இருக்காது பேராண்டி” என விவரமாய் பேசுவதாய் நினைத்து வார்த்தையால் பரணியை தாக்கினார் நாச்சியார்.

அவரது பேச்சிற்கு பதில் பேசிய பரணியை பார்த்து அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர் என்றால் பரணி தான் இப்போதே மரணித்து விடகூடாதோ என்றிருந்தார்.

“அவ குழந்தைக்கு காரணம் நான்தான். என்னோட தவறான புத்தியாலதான்  அவ கன்னி தன்மையிலே குழந்தையை சுமக்க வச்சேன்” என அனைத்து விடயத்தையும் கூறி முடிக்கவும் கிருஷ்ணவேணி அவரின் கன்னத்தில் அடிக்கவும் சரியாக இருந்தது.

அத்தனை அடியையும் தாங்கி நின்றார் பரணிதரன். அதற்குள் அவருக்கு மிளனியிடமிருந்து அழைப்பு வர, முதலில் ஏற்காதவர் பின் பல அழைப்புகள் வரவும் ஏதோ என பயந்தவராக அதனை ஏற்றார்.

மிளனி கூறிய செய்தியைக் கேட்டு அதிர்ந்து போய் குடும்பத்தாரிடம் சொல்ல, இத்தனை வருடமாய் அன்னைக்கு பயந்து இருந்த கிருஷ்ணவேணி அவரை எதிர்த்து அண்ணணின் அறையை திறந்து விட்டார்.

அதன் பின் நாச்சியாரை தவிர்த்து அனைவரும் சென்னைக்கு செல்லும் ப்ளைட்டில் ஏறினர்.

சென்னைக்கு ஏறும் வரை வசீகரனுக்கு அழைத்தபடியே இருந்தார் பரணிதரன். ஆனால் அவனது மொபைலோ பிசி என்றே வர தவித்து போனார்.

error: Content is protected !!