OVIYAPAAVAI-05

ஓவியம் 05
 
அப்போதுதான் கண் விழித்தான் ரஞ்சன். இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. இன்பமான கனவுகள் அவன் இரவுக்கு வர்ணம் சேர்த்திருந்தன.
 
எப்போதும் சரியான தூக்கம் இல்லாவிட்டால் ரஞ்சன் சிறிது கஷ்டப்படுவான். அன்றைக்குச் செய்ய வேண்டிய வேலைகளில் முழுதாக அவனால் ஈடுபட முடியாது. ஆனால் இன்றைக்கு மனது மகிழ்ச்சியில் திக்கு முக்காடியது.
சொல்லத் தெரியாத இன்பமொன்று அவனைச் சூழ்ந்து கொண்டது.
இயற்கையும் இதமான குளிரோடு மழை தூவியதால் படுக்கையை விட்டு எழ மனமில்லாமல் புரண்டு படுத்தான்.
 
“ரஞ்சன், எந்திருங்க.” லலித்தின் குரலில் சட்டென்று எழுந்தான் இளையவன்.
 
“என்னாச்சு லலித்?”
 
“மூனு வீடு இருக்காம், ஃப்ரெண்ட்ஸ் விசாரிச்சு சொன்னாங்க, உங்களுக்குப் பிடிக்குதான்னு பார்க்கலாம், சீக்கிரமா ரெடி ஆகுங்க.”
 
“இதோ, ஒரு டென் மினிட்ஸ் குடுங்க, வந்தர்றேன்.” அவசரமாக எழுந்த ரஞ்சன் பாத்ரூமுக்கு போனான். இப்போதைக்கு கெஸ்ட் ஹவுஸில்தான் இருவரும் தங்கி இருந்தார்கள்.
 
லலித்தை அதற்கு மேலும் இங்கேப் பிடித்து வைக்க ரஞ்சன் விரும்பவில்லை. சீக்கிரமாக வீடொன்றைப் பார்த்து விட்டால் அவரை கொழும்பிற்கு அனுப்பி விடலாம்.
 
அவசர அவசரமாகக் குளித்து முடித்துவிட்டு காரில் வந்து ஏறினான் ரஞ்சன். இவனுக்காக காரில் காத்திருந்தான் லலித்.
 
“இங்க பக்கத்துல ரெண்டு வீடு இருக்கு, அதை முதல்ல பார்த்திடலாம், அடுத்தது டவுன் ல இருக்கு, அதுதான் உங்களுக்கு செட் ஆகும்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்க ரஞ்சன்.”
 
“டவுன் இங்க இருந்து எவ்வளவு தூரம் லலித்?”
 
“டென் மினிட்ஸ் ட்ரைவ்தான், ரொம்பத் தூரமில்லை.”
 
“ஓகே.”
 
பக்கத்தில் இருந்த இரண்டு வீடுகளையும் முதலில் இருவரும் போய் பார்த்தார்கள். பெரிய வீடுகள்தான், ஆனால் கொஞ்சம் பழையதாக இருந்தது.
 
“சுமி வீட்டுக்குப் பக்கத்துலேயே நம்ம வீடும் இருந்தா நல்லா இருக்கும் லலித்.”
 
“அவ்வளவு தூரமில்லை ரஞ்சன், டவுன்ல இருக்கிற வீட்டையும் பார்த்திடுவோம், அது வசதியா இருந்தா நல்லதுதானே?”
 
“ம்…” பத்து நிமிட தூரத்துக்கு பத்து முறை யோசித்தான் ரஞ்சன்.
 
டவுனில் இருந்த வீடு மிகவும் திருப்திகரமாக இருந்தது இருவருக்கும். வீட்டுக்குப் பக்கத்திலேயே கடைகளும் இருந்ததால் ரஞ்சனுக்கு இதுதான் மிகவும் வசதி. அதையேதான் லலித்தும் சொன்னான்.
 
“இந்த வீடுதான் உங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும் ரஞ்சன், அப்பா அம்மா வந்தாத் தங்குறதுக்கு நல்ல விசாலமாவும் இருக்கு, சாமான் வாங்க நீங்க அங்க இங்கன்னு அலைய வேண்டியதுமில்லை.”
 
“முடிச்சிடலாம் ன்னு சொல்றீங்களா?”
 
“எனக்கு அப்பிடித்தான் தோணுது.” லலித் முடிவாகச் சொல்ல ரஞ்சனும் சிறிது நேரம் யோசித்தான்.
 
“சரி லலித், அப்போ முடிச்சிடலாம், நான் அப்பாக்கும் ஃபோனை போட்டுச் சொல்லிடுறேன்.”
 
“சரி… கார் வேணும்னு சொன்னீங்களே, அதையும் என்னன்னு பார்த்திடலாமா ரஞ்சன்?”
 
“ஓ யெஸ்.” பணம் இருந்தால் எல்லாம் பட படவென்று நடக்கும் போலும். பணம் மட்டுமல்ல, ரஞ்சனும் எல்லா விஷயத்திலும் மிகவும் தீவிரமாக நின்று காரியங்களை துரிதமாக நடத்தி முடித்துக் கொண்டிருந்தான். 
 
அவன் மனம் முழுவதையும் ஆக்கிரமித்து அமர்ந்து கொண்டவள் விசை போல அவனைச் சுழட்டி அடித்தாள். ரஞ்சன் ஓயாமல் ஓடிக் கொண்டிருந்தான். 
 
அடுத்த நாளே வீட்டின் சாவி அவன் கைகளுக்கு வந்துவிட்டது. லலித்தும் அவனுமாக கெஸ்ட் ஹவுஸை காலி பண்ணிக்கொண்டு புது வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.
 
வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி, ஒழுங்குபடுத்தி… ரஞ்சனுக்கு பிடித்தமான காரை தெரிவு செய்து… இப்படி நான்கு நாட்கள் நிற்க நேரமில்லாமல் ஓடினார்கள் இருவரும்.
 
வேலை வேலையாக இருந்த போதும் அந்த ராத்திரிப் பொழுதுகளை ரஞ்சன் தவற விடுவதில்லை. இரவு உணவை முடித்துவிட்டு பொடி நடையாக அவள் வீடு வரை நடப்பான். சமயங்களில் லலித் இவனை காரில் அழைத்துக் கொண்டு போவதும் உண்டு.
 
இளையவனை ஏமாற்றாமல் அவளும் அந்தச் செய் குளத்தில் தினமும் வந்து அமர்வாள். சிந்தனைச் செய்தபடியே இருக்கும் அந்தத் தேவதை முகம்! சில நேரம் அந்த இதழ்கள் எதையோ முணுமுணுக்கும். 
 
ஏதாவது பாடலைப் பாடுகிறாளா? இல்லை… இவனைத்தான் வசை பாடுகிறாளா என்று ரஞ்சன் பல முறை சிந்தித்ததுண்டு. எது எப்படி இருந்தாலும் அந்த ரோஜா இதழ்களை அவன் ரசித்தான் என்றுதான் சொல்ல வேண்டும்!
 
ரசனையோடு மாத்திரம் அவன் சித்தம் நின்றுவிடாது. முதல் முதலாக அனுபவித்த முத்தம் அப்போது ஞாபகம் வரும். ரத்தம் சூடாகும். பித்தம் தலைக்கேறும். அவளோடு மீண்டுமொரு யுத்தம் செய்யத் தோன்றும்!
 
வசை பாடும் அவள் இதழ்கள் இவனோடு இசைந்து இசை பாடவாப் போகிறது?! ரஞ்சன் ஒரு பெருமூச்சோடு கிளம்பி வந்துவிடுவான். இதுவே தினமும் நடந்தது. 
 
***
அந்த ப்ளாக் ஆடியை வீட்டின் முன்பாக நிறுத்தினான் ரஞ்சன். லலித் நேற்றைக்கேக் கிளம்பி கொழும்பு போய்விட்டான். ஏற்கனவே தனக்காக வேண்டி ஒரு வாரம் லீவு போட்டிருந்தவனை அதற்கு மேலும் பிடித்து வைக்க ரஞ்சன் விரும்பவில்லை.
 
போட்டிருந்த சன் கிளாஸை கழட்டி காரிலேயே வைத்துவிட்டு இறங்கினான். வெயில் என்றைக்கும் இல்லாமல் அன்றைக்குக் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.
 
மாத்தளையை சார்ந்த இடங்கள் எப்போதும் குளுகுளு என்றுதான் இருக்கும். ஆனாலும் அவ்வப்போது வெயில் கொஞ்சம் தாக்கும். ‘யூகே’ இலும் கோடை காலத்தில் இது போல வெயில் அடிப்பது வழக்கம் என்பதால் ரஞ்சனுக்கு உடம்பில் பெரிதாக எந்த மாற்றமும் தோன்றவில்லை.
 
வீட்டுக்குள் நுழைந்தவன் நேராக கிச்சனுக்குள் போனான். சின்னதாக மண் கலயம் ஒன்று வாங்கி அதில் நீர் நிரப்பி வைத்திருந்தான். இது லலித்தின் ஐடியா.
 
“இப்பிடி தண்ணியை நிரப்பி வெச்சுட்டீங்கன்னா ஜில்லுன்னு இருக்கும் ரஞ்சன், ஃப்ரிட்ஜ் வாட்டர் தேவையே இல்லை, உடம்புக்கு நல்லது.”
 
“ஓ…” ரஞ்சனுக்கு இந்தத் தகவல் புதிது. நீர் குளிர்ச்சியாக இருந்ததோடு மாத்திரமல்லாமல் மண் வாசனைக் கலந்த ருசியோடும் இருந்தது.
 
குளிர்ந்த நீரை ஒரு டம்ளரில் எடுத்துப் பருகியவன் சோஃபாவில் போய் அமர்ந்து கொண்டான். வீட்டினர் அனைவருக்கும் இங்கு நடப்பவற்றை உடனுக்குடன் தெரியப்படுத்தி இருந்தான். கூடிய சீக்கிரமே வருவதாகச் சொல்லி இருந்தார்கள்.
 
தரமான உணவகங்கள் இருந்ததால் சாப்பாட்டிற்கு எந்தப் பிரச்சனையும் வரவில்லை. அத்தோடு ரஞ்சனும் நன்றாகச் சமைப்பான். சுத்தமான உடனுக்குடன் பறித்த காய்கறிகளும் தங்கு தடையின்றிக் கிடைத்ததால் ரஞ்சன் சமையலிலும் அவ்வப்போது இறங்குவான்.
 
காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. காஃபி டேபிளில் காலை நீட்டிப் போட்டுக் கொண்டு தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அப்போது பதில் சொல்லிக் கொண்டிருந்தான் ரஞ்சன்.
 
யாராக இருக்கும் என்று எண்ணமிட்டபடி கதவைத் திறந்தான். வெளியே மஞ்சுளா நின்றிருந்தார், சுமித்ராவின் மூத்த அண்ணி. ரஞ்சன் அப்போது அவரை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை.
 
“கொஞ்சம் உங்கக்கூட பேசணும் தம்பி.” தோளை மூடியிருந்த முந்தானையைப் பிடித்த படி சொன்னார் மஞ்சுளா.
 
“உள்ள வாங்க.” ரஞ்சன் தனது திகைப்பை மறைத்துக் கொண்டு வரவேற்றான்.
 
“நீங்க தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸுக்கு போனேன், அவங்கதான் இந்த அட்ரஸ் குடுத்தாங்க.” சோஃபாவில் அமர்ந்தவர் இயல்பாக விளக்கம் சொன்னார்.
 
“ஓ… சொல்லி அனுப்பி இருந்தா நானே வந்திருப்பேனே!” 
 
“இல்லையில்லை… அது முறையில்லை.” மரியாதையோடு புன்னகைத்த அந்தப் பெண்மணியை ரஞ்சனுக்கு மிகவும் பிடித்தது. ஏதோவொரு ஸ்னேக பாவம் அவர் புன்னகையில் தெரிந்தது.
 
உண்மையிலேயே ரஞ்சன் சுமியின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து தன்னிடம் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தான். அதனால்தான் இந்த வீட்டின் முகவரியை கெஸ்ட் ஹவுஸில் கொடுத்துவிட்டு வந்திருந்தான்.
 
“நம்பிக்கை ரொம்ப பலமா இருக்குப் போல.” இவன் கெஸ்ட் ஹவுஸில் விபரம் சொல்லிவிட்டு வரவும் லலித் கூட கேலி செய்திருந்தான்.
 
ஜெயராம் கண்டிப்பாகத் தன்னை அணுகுவார் என்று அவன் எதிர்பார்த்திருக்க, அவர் மனைவி வந்து நிற்கிறார்! 
 
“குடிக்க டீ கொண்டு வர்றேன்.” அந்த வீட்டைக் கண்களால் அளந்து கொண்டிருந்த பெண்மணி இவன் பேச்சில் கலைந்தது.
 
“இல்லை தம்பி, வேணாம்… நான் உங்கக் கூட கொஞ்சம் பேசணும், அதுதான் கிளம்பி வந்தேன்.”
 
“நீங்க வந்தது…”
 
“இல்லையில்லை… வீட்டுல யாருக்கும் தெரியாது, அண்ணனும் தம்பியும் வேலை விஷயமா வெளியூர் போயிருக்காங்க, நாளைக்குத்தான் வருவாங்க, பல்லவி அவளோட அம்மா வீட்டுக்குப் போயிருக்கா.”
 
“அவங்களும் நாளைக்குத்தான் வருவாங்களா?”
 
“ஆமா, அதனாலதான் நான் தைரியமாக் கிளம்பி வந்துட்டேன்.” ரஞ்சன் மேல் அளவுகடந்த நம்பிக்கை இயல்பாகவே உருவாகி இருந்ததால் தன் வீட்டு விவகாரங்களை மறைக்காமல் சொன்னார் மஞ்சுளா.
 
அதுவுமல்லாமல் அவரைப் பொறுத்தவரை சுமித்ராவுக்கு ரஞ்சன் மிகவும் சரியான இணை. இந்த வரன் அமைந்து விட்டால் தான் வளர்த்த பெண் சுகப்படுவாள் என்பது அவரது எண்ணம். 
 
ஆனால்… அதற்கு முன்பாக அவருக்குச் சில விஷயங்களை ரஞ்சனிடம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். அதனாலேயே நேரம் அமையும் வரைக் காத்திருந்து வந்திருந்தார்.
 
“லேடீஸை இப்பிடித் தனியா விட்டுட்டுப் போகலாமா?” 
 
“பொறந்து வளர்ந்த ஊர் தம்பி, அக்கம் பக்கம் இருக்கிறவங்க அத்தனைப் பேரும் நல்லாத் தெரிஞ்சவங்க, பயமெல்லாம் கிடையாது, இது எப்பவும் நடக்கிறதுதான்.”
 
“ஓ… ஏதாவது அவசரம் ன்னா என்னைக் கூப்பிடுங்க, என்னோட நம்பர் குடுக்கிறேன்.” என்றவன் தனது விசிட்டிங் கார்ட்டை எடுத்து நீட்டினான்.
 
“வீடெல்லாம் எடுத்திருக்கீங்க…” கார்ட்டை வாங்கிக் கொண்டு மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார் மஞ்சுளா.
 
“ம்… வாடகைக்குத்தான், உங்க சம்மதம் கிடைச்சுதுன்னா சொந்தமாவே வாங்கிடலாம்.”
 
“இதெல்லாம் சரியா வருமா தம்பி?”
 
“ஏன்? ஏனப்பிடி கேட்கிறீங்க?”
 
“நீங்க பொறந்து வளர்ந்ததெல்லாம் ‘யூகே’ ல, சுமியோட அண்ணன்மார் அவளை அவங்களோட கண்ணைத் தாண்டி எங்கேயும் அனுப்ப மாட்டாங்க.”
 
“அதனாலென்ன, அப்போ நான் இங்க வந்திடுறேன்.” சுலபமாக வழி சொன்னான் இளையவன்.
 
“உங்க வீட்டுல இதுக்குச் சம்மதிப்பாங்களா?”
 
“ஏன் மாட்டாங்க? தாராளமாச் சம்மதிப்பாங்க.”
 
“ஓ… உண்மையிலேயே…” எதையோக் கேட்க ஆரம்பித்த‌ மஞ்சுளா சட்டென்று நிறுத்தினார். அவரின் முகத்தையேப் பார்த்திருந்த ரஞ்சன் அவரருகே இருந்த சோஃபாவில் வந்தமர்ந்தான்.
 
“தம்பி, தம்பின்னு கூப்பிடுறீங்களே, இந்தத் தம்பியை நீங்க நம்பலையா க்கா?” ரஞ்சனின் குரல் சொந்தம் கொண்டாடியது.
 
”நம்பினதாலதானே இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கேன்.” மஞ்சுளாவும் நயமாகப் பேசினார்.
 
“அப்போ எதுக்குப் பேச இவ்வளவு தயங்குறீங்க?!”
 
“தம்பீ… அந்த வீட்டுக்கு நான் மருமகளாப் போகும் போது சுமிக்கு எம் பொண்ணு வயசு, அண்ணி, அண்ணின்னு என்னைச் சுத்திச் சுத்தி வருவா.”
 
“……”
 
“அநியாயம் சொல்லக் கூடாது, பல்லவிக்கும் சுமி மேல ரொம்பப் பாசம், ஆனாலும் சுமி எங்கிட்டத்தான் கூட ஒட்டுவா.”
 
“ஓ… அப்போ சுமி உங்கச் செல்லம் ன்னு சொல்லுங்க.” ரஞ்சன் இப்போது சிரித்தான்.
 
“செல்லம் மட்டுமில்லை, கண்டிப்புலயும் அப்பிடித்தான், சுமியை யாரும் எந்தக் குறையும் சொல்லாத மாதிரித்தான் நான் வளர்த்திருக்கேன்.”
 
“ஆனா… கோபம் மட்டும் ரொம்ப அதிகமா வருதே?!” ரஞ்சன் லேசாகக் குறைப்பட்டான்.
 
“நடந்த விஷயம் அப்பிடி… அவ இடத்துல யாரு இருந்திருந்தாலும் நிச்சயமாக் கோபப்பட்டிருப்பாங்க.”
 
“நடந்தது எதுவுமேத் திட்டம் போட்டு நடக்கலை க்கா, அதை நீங்கப் புரிஞ்சுக்கணும், என்னை நீங்க நம்பணும்.”
 
“நான் மட்டுமில்லை, பல்லவி கூட நம்புறா, எங்க வீட்டுல சின்னவர் மட்டுந்தான் கொஞ்சம் குதிப்பாரு, சுமியோட மூத்த அண்ணா ரொம்ப நிதானம்.”
 
“எங்க வீடுன்னு சொல்லிட்டீங்க, நீ கொஞ்சம் தள்ளி நில்லு தம்பின்னு சொல்லாமச் சொல்றீங்க.”
 
“ஐயையோ! அப்பிடியெல்லாம் இல்லை தம்பி, உங்களை மாதிரி எனக்கொரு தம்பி இருந்திருந்தா நிச்சயமா அவனுக்கு சுமியை நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்.”
 
“எனக்கு இது போதும் க்கா.”
 
“போதாதே ப்பா.”
 
“என்ன சொல்றீங்க நீங்க? எனக்குப் புரியலை?!”
 
“உங்கப் பக்கம் இருக்கிற நியாயம் எல்லாத்தையும் எங்களுக்குப் புரிய வெச்ச நீங்க… சம்பந்தப் பட்டவளுக்குப் புரிய வெக்கலையே!”
 
“புரியலை.”
 
“ட்ரெயின் ல நடந்ததை சுமி எங்கிட்டச் சொன்னா.” மஞ்சுளா சொல்லவும் ரஞ்சனின் முகம் சிவந்து போனது. தலையைக் குனிந்து கொண்டான்.
 
அவன் அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்த போது மஞ்சுளாவுக்கு சிரிப்பு வந்தது. தவறு செய்த குழந்தைப் போல உட்கார்ந்திருந்தான். அவன் அண்ணார்ந்து பார்க்கும் போது வந்த சிரிப்பை மறைத்துக் கொண்டு முகத்தைக் கடினமாக வைத்துக் கொண்டார்.
 
“எதுக்கு இவ்வளவு அவசரம் தம்பி? அவளுக்கு உங்க மேல ஒரு வெறுப்பு வந்திடுச்சு, வீட்டுல இருக்கிற ஆம்பிளைங்களை நாங்க சமாதானம் பண்ணலாம், ஆனா சம்பந்தப்பட்டவளே பிடிக்கலைன்னு சொன்னா என்னப் பண்ணுறது?”
 
“சுமி அப்பிடிச் சொன்னாளா?” ரஞ்சனின் குரலில் தொனித்த மெல்லிய கோபத்தை மஞ்சுளா கவனிக்கவில்லை. தொடர்ந்து பேசினார்.
 
“ஆமா… எங்கிட்டச் சொன்னா, இந்தக் கல்யாணம் வேணாமாம், அவளுக்கு உங்களைப் புடிக்கலையாம்.”
 
“…….”
 
“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை தம்பி, சுமிக்கிட்ட கொஞ்சம் இதமாப் பேசுங்க, உங்களைப் பத்தின நல்லபிப்பிராயம் அவ மனசுல வரணும்.” 
 
“என்னைப் பேசவே விட மாட்டேங்கிறா க்கா.” 
 
“அதெல்லாம் இருக்கிறதுதான், கொஞ்சம் விட்டுப் பிடிங்க, நிதானமா உங்க மனசுல இருக்கிறதை அவளுக்கு எடுத்துச் சொல்லுங்க, புரிஞ்சுப்பா.” 
 
அதற்கு மேலும் சிறிது நேரம் அங்கிருந்து பேசினார் மஞ்சுளா. ரஞ்சனுக்கு ஏகப்பட்ட புத்திமதி. தனது நாத்தனாரிடம் அவன் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று பட்டியல் போடாத குறைதான்.
 
ரஞ்சன் அனைத்தையும் அமைதியாக உள்வாங்கிக் கொண்டான். மஞ்சுளாவை பார்க்கும்போது ஏதோ அவன் அம்மாவைப் பார்ப்பது போல இருந்தது. 
 
அவரை எதிர்த்துப் பேச அவனால் இயலவில்லை. ஆனால் உள்ளுக்குள் கொதித்தது. சுமித்ரா மேல் அத்தனைக் கோபம் வந்தது. 
 
மஞ்சுளா கிளம்பும் போது தான் கொண்டு போய் விடுவதாக ரஞ்சன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
 
“இல்லை தம்பி, நீங்க வந்தா யாரு, என்னன்னு அக்கம் பக்கத்துல பார்ப்பாங்க, நான் இங்க வந்தது சுமிக்கு தெரிஞ்சு போயிடும்.” மஞ்சுளா தன் உதவியை மறுத்த காரணம் அவன் கோபத்திற்கு இன்னும் எண்ணெய் வார்த்தது.
 
‘ஓ… மகாராணி அவ்வளவு பெரிய ஆளா?! அவளுக்குப் பயந்துக்கிட்டு இவங்க என்னை அந்த வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லுவாங்களா?! அவ்வளவுக்கு அவளுக்கு என்னை வெறுத்துப் போயிடுச்சா?!’ உள்ளுக்குள் ரஞ்சனுக்கு கொதித்தது. 
 
முயன்று தன்னை அடக்கிக் கொண்டவன் மஞ்சுளாவை சிரித்த முகமாகவே அனுப்பி வைத்தான். ஆனால் அத்தோடு அவனது அன்றைய நாள் நிறைவுறவில்லை.
 
எப்போதும் இரவு உணவின் பிறகு பொடி நடையாக அவள் வீடுவரை நடப்பவன் அன்றும் போனான். வீதிக்கு அப்பால் நின்று ஒரு பார்வையோடு வழமையாகத் திரும்பி விடுவான். ஆனால் அன்றைக்கு அந்த எண்ணம் அவனுக்குக் கிஞ்சித்தும் இருக்கவில்லை.
 
சரியாக இரவு உணவை முடித்துக் கொண்டு செய் குளத்தின் அருகில் சுமித்ரா வந்து அமர்ந்த போது சட்டென்று மின்சாரம் தடைப்பட்டது.
 
“சுமீ… வெளியே உட்காராம உள்ளே வா.” மஞ்சுளாவின் குரல் உள்ளிருந்து கேட்டது. 
 
“சரி ண்ணீ…” இளையவளும் சட்டென்று வீட்டினுள் போன நொடி தடைப்பட்ட மின்சாரம் மீண்டும் வந்திருந்தது.
 
“இவனுங்களுக்கு இதுவே வேலையாப் போச்சு!” புலம்பிய மஞ்சுளா வீட்டின் அனைத்துக் கதவுகளையும் அடைத்துத் தாழ்ப்பாள் போட்டார். 
 
தனது ரூமிற்குள் வந்த சுமித்ரா பாத்ரூமிற்குள் போய் பல் துலக்கினாள். ஏனோ அன்று தூக்கம் வரவில்லை. ரூமில் இருந்த புத்தக அடுக்கில் எதையோ புரட்டியவள் சட்டென்று நிதானித்தாள்.
 
அந்த அறைக்குள் தான் மட்டும் இல்லை என்று அவளுக்கு ஏதோவொரு உள்ளுணர்வு சொன்னது. பயந்த விழிகளை அங்குமிங்கும் ஓட விட்டாள்.
 
“இந்த ரூமுக்குள்ள வர்ற தைரியம் என்னைத்தவிர வேற யாருக்கும் வருமா என்ன?!” சட்டென ரஞ்சனின் குரல் கேட்க திடுக்கிட்டுத் திரும்பியவள் வாய்விட்டு அலறப் போனாள். ஆனால் அதற்கு அவன் அனுமதிக்கவில்லை.
 
“வாயைத் தொறந்தே… கொன்னுடுவேன்!” அவனது வலது கை இவள் வாயை இறுக மூடியிருந்தது. அப்போதும் தன் பலங்கொண்ட மட்டும் திமிறியவளை லேசாக அடக்கினான் அந்த ஓவியன். 
 
“சின்னதா ஒரு சத்தம் வந்தாலும் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது! போட்டுக் குடுக்குறியா?” சினம் கொப்பளிக்க அவன் கேட்ட போது முயன்று அவன் கரத்தைத் தன் முகத்திலிருந்து விலக்கினாள் சுமித்ரா. 
 
“லூசாய்யா நீ?!” அவள் குரலும் இப்போது வெடித்தது. 
 
“ஆமா, லூசுதான்… ஆனா உன்னளவுக்கு இல்லை! ட்ரெயின் ல நடந்ததை வெவஸ்தையே இல்லாம உங்கண்ணிக் கிட்டப் போய் சொல்லி இருக்கே?!”
 
“ஆமா… அப்பிடித்தான் சொல்லுவேன்! அதுக்கென்ன இப்போ?!”
 
“ஓஹோ! இப்ப நான் உங்கூடக் குடும்பம் நடத்தப் போறேனே… அதையும் விடிஞ்ச உடனேயே உங்கண்ணிக் கிட்டப் போய் சொல்லுவியா?” புருவங்களை நெற்றி வரை உயர்த்தி அவன் கேட்ட போது அவள் முகம் சிவந்து போனது!
 
“செருப்புப் பிஞ்சிடும் ராஸ்கல்!” 
 
“அதையும் இன்னைக்குப் பார்த்திடலாம்!” திமிறிய பெண்ணை ரஞ்சனின் கைகள் வலுக்கட்டாயமாக அணைத்தன. அணைத்தது மட்டுமல்லாமல் அத்துமீறி ஆங்காங்கே அவள் உடலில் தவழ்ந்தது.
 
“ஏய்!” உறுமிய பெண் அவன் கைகளுக்குத் தடைவிதிக்க வெகுவாக முயன்றது. ஆனால் அது அத்தனை எளிதாக இருக்கவில்லை.
 
சுவரோடு சுவராக அவன் அவளைச் சேர்த்த போது ரஞ்சனின் உடல் முழுதாகப் பெண்ணை உரசி நின்றது.
 
“ச்சீய்… பொறுக்கி! பொறுக்கித் தனம் பண்ணத்தான் ஃப்ளைட் புடிச்சு இவ்வளவு தூரம் வந்தியா?” வெறுப்பில் நெருப்பென வார்த்தைகள் வந்து வீழ்ந்தன. ரஞ்சன் இப்போது சிரித்தான்.
 
“ஆமா பேபி, பொறுக்கித் தனம் பண்ணத்தான் வந்திருக்கேன், எத்தனை நாளைக்குத்தான் நானும் கனவுலயே பொறுக்கித் தனம் பண்ணுறது?” அவள் சொன்ன வார்த்தையையே மீண்டும் மீண்டும் வேண்டுமென்று சொன்னான் ரஞ்சன். 
 
“ச்சீய்!” அவனைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தைச் சட்டென்று திருப்பினாள் சுமித்ரா.
 
“அட! என்னைப் பார்க்கக் கூடப் பிடிக்கலையா உங்களுக்கு?! நீங்க எதுக்குப் பார்க்கணும்? அதான் நான் இன்ச் பை இன்ச்சா உங்களைப் பார்க்கப் போறேனே!” அவன் வார்த்தைகளில் பெண் திடுக்கிட்டுத் திரும்பியது. 
 
அவள் கண்களை ஆழ்ந்து பார்த்த ரஞ்சனின் விழிகள் பெண்ணின் சம்மதம் இல்லாமலேயே கழுத்தைத் தாண்டி இறங்கியது. தவித்துப் போய் நின்றிருந்தாள் சுமித்ரா!
 
உருமாறி உருமாறி ஓவியப் பெண் உனைத் தேடி…
வருவேனே வாரித் தருவேனே…