Sirpiyin Kanavukal – 10

Sirpiyin Kanavukal – 10

அத்தியாயம் – 10

இத்தனை நாட்களில் தன்னை கடிந்து பேசிடாத தன் மகன் இன்றைக்கு வந்த அவளுக்காக கோபம் கொண்டது அவரின் மனதை கலக்கத்தில் ஆழ்த்தியது. வீட்டிற்கு வந்த ஒரே நாளில் தன் மகனை மாற்றிவிட்டதாக நினைத்து அவளின் மீது வன்மம் வளர்ந்தார் சரளா.

அன்று இரவு அறைக்குள் வந்த கணவனிடம், “இஞ்சிருங்கோப்பா இண்டைக்கு எழிலன் என்னை எசுவிட்டன்” என்றார் கவலை தோய்ந்த முகத்துடன்.

“நீங்க என்ன செய்தீர் எண்டும் சொல்லும் சரளா” என்றார் கணவர் கறாராகவே.

“நிலா ஆசையாக நட்டுவைத்த செடியினை வேரோடு பிடிங்கி வீசிட்டன்..” என்றார் மெல்லிய குரலில்.

“நீர் செய்த செயல் தவரெண்டு தோன்றல்ல” என்றதும் மனைவி அமைதியாகிவிட்டார்.

“உன்ர கோபத்தை காட்ட அவளை இங்கே கூட்டிக்கொண்டு வரல்ல. இது அவளின்ட புகுந்த வீடு. அவளும் நம்மன்ட குடும்பத்தில் ஒருத்தி. அதனால் அவளை எதுவும் சொல்லாமல் அமைதியாக இரும்” என்றார் கண்டிப்புடன்.

அவரின் பேச்சும் சேர்ந்து அவரின் கோபத்திற்கு தூபம் போட மறுநாளில் இருந்தே அவள் எது செய்தாலும் எரிந்துவிழ தொடங்கினார். எங்கே இது மகன் உண்மை அறிந்தால் தன்னை தவறாக நினைப்பானோ என்று அவனுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

அவள் செய்யும் சமையலில் குறை சொல்ல தொடங்கி அது மெல்ல மெல்ல வளர்ந்து அவளின் அன்றாட வேலைகளிலும் குற்றம் காண தொடங்கிவிட்டார் சரளா. மழைநிலா அவரின் பேச்சிற்கு எல்லாம் அவர் ஆட்டிவைத்த போல ஆடினாள்.

அவர் குறைசொல்ல முடியாதபடி வேலை செய்ய கற்றுகொண்டாள். தன்னால் முடிந்தவரை அவரின் பேச்சுகளுக்கு மறுப்பு சொல்லாமல் இருந்தாள். அவர் என்ன செய்தாலும், சொன்னாலும் ஒரு ஜெடம் போல அந்த வீட்டில் வளைய வந்தாள்.

அவர் கோபத்தைக் காட்டும்போது பொறுமையாக இருந்த மழை நிலாவைக் கண்டு சுரேஷ் மட்டும் மனம் வருந்தினார். அவரின் மகனும், பேரனும் வேலைக்கு கிளம்பும் வரையில் அமைதியாக இருப்பவர் அவர்கள் சென்ற பின்னரோ சீறும் பாம்பாக மாறி அவளை சொற்களால்  ஒரு வழி செய்தார்.

அவள் ஒருநாள் நன்றாக சமைத்துவிட்டால், “இண்டைக்கு என்ர சமையல்” என்று சொல்லி பாராட்டை அவர் வாங்கிக் கொள்வார். அதே மற்றொரு நாள் சமையலை  அவர் செய்துவிட்டு, “இண்டைக்கு உங்களட மருமகளின் சமையல்” என்று சொல்லி அவளுக்கு ஏச்சுக்கு வாங்கி வைப்பார்.

இதுமாதிரி மாற்றி மாற்றி சொல்வது மட்டும் இல்லாமல், அவள் விருப்பப்பட்டு எதுவும் செய்து சாப்பிடவே விடமாட்டார். அவளுக்கு பிடித்திருக்கிறது என்று தெரிந்தாலே அந்த வீட்டிற்குள் அந்த பொருளுக்கு இடமில்லை.

அன்றைக்கு கேம்பஸ் தொடங்குகின்ற நாள் என்பதாலோ என்னவோ எழிலன் சீக்கிரமே எழுந்து கிளம்பிவிட்டு மனைவி கிளம்பும் வரை ஹாலில் காத்திருந்தான்.

அவள் பம்பரமாக சுழன்று வேலை செய்வதை கண்டு, “அம்மா உதவிக்கு வரல்லே” என்ற சிந்தனையுடன் அவளின் முகத்தை கூர்ந்து கவனிக்க அவளின் பளிங்கு முகம் தெளிவாக இருந்தது.

அப்பொழுது அறையிலிருந்து எழுந்து வந்த சரளா வேண்டுமென்றே செல்பில் இருந்த கண்ணாடி பொம்மையை எடுத்து துடைப்பது போன்ற பாவனையில் அதை கீழே தவறவிட்டார்.

அப்பொழுது நிலா மற்றது பறந்து அந்த பொருளை கீழே விழவிடாமல் கையில் பிடிக்கிறேன் என்று டேபிளின் மீது பலமாக மோதி ரத்தம் கொட்ட தொடங்கியது.

“அம்மா” என்று அலறிய மனைவியைப் பார்த்ததும், “நிலா” என்று அவளின் அருகே சென்று அவளை கையில் எழுந்திகொண்டு தன்னறைக்குள் சென்றவன் அவளை படுக்கையில் கிடத்திவிட்டு ரத்தத்தை துடைத்து அதற்கு மருந்து போட்டுவிட்டு,

“உனக்கு என்ன விசாரா நிலா. இப்போ இந்த கண்ணாடி பொம்மை ரொம்ப முக்கியமோ? தலையில் இடித்து இரத்தம் வருகிறதேல்ல” அவன் கோபத்துடன்.

அவளின் கவனம்  முழுவதும் கண்ணாடி பொம்மையின் மீதே இருக்க அவள் பதில் எதுவும் பேசவில்லை. அசத்திய அமைதி என்று சொல்லும் அளவிற்கு அமைதியாக இருந்தாள்.

அவளிடம் பதில் இல்லை என்ற பின்னர் அவளை கவனித்த எழிலன், “என்ர பொம்மா. ஏன் உப்படி நடந்து கொண்டாய்” என்று அவளின் முகத்தை நிமிர்த்தி அவளின் விழிகளை சந்தித்தான்.

அவளின் பளிங்கு முகம் தெளிவாக இருக்க அவளின் கண்களும் மௌனம் என்ற ஒரு மொழியை மட்டுமே கதைக்க அவளிடம் வந்த அந்த மாற்றத்தை உணர்ந்தான். சரளாவின் பேச்சிற்கு நாணல் போல வளைகிறேன் என்ற எண்ணத்தில் அவள் ஆளே மாறிபோய் இருந்தாள்.

ஒரு மாதத்தில் அவள் பேசிய வார்த்தைகளை அவனால் விரல்விட்டு எண்ணிவிட முடியும். அப்படியொரு நிலைக்கு வந்தவள் தன்னை தன் சுயத்தை தொலைத்துவிட்டு ஜெடம் போல இருப்பது போல அவனின் மனதிற்கு தோன்றியது.

“நிலா ஏன்ர ஒரு மாதிரியாக இருக்காவே..” என்ற கேள்விக்கு, “நான் எப்பொழுதும் போலல்லே இருக்கிறன்..” என்று புன்னகைத்துவிட்டு அவள் எழுந்து செல்ல அவளின் கரம்பிடித்து தடுத்தான் எழிலன்.

“என் கண்ணை பார்த்து நேராக கதையும் மழை” என்றதும் பட்டென்று திரும்பியவள், “எனக்கு என்ர புருஷனிடம் என்ன பயம். இதோ பாருங்க இது எதார்த்தமாக நடந்தது. இதை போட்டு குழப்பாமல் வேலைக்கு கிளம்பும் வழியைப் பாருங்கோவன்” என்றுவிட்டு அவள் சென்றுவிட்டாள்.

அன்றிலிருந்து மழைநிலாவின் மீது பார்வை பதித்தவனுக்கு தாயின் மாற்றங்கள் புரிந்தது. இனி எழிலனின் நடவடிக்கை என்னவாக இருக்குமோ?

அன்று காலை முகிலன் வேலைக்கு கிளம்பி சாப்பிட வரும்போது தருணும், சித்தார்த்தும் தீவிரமாக கதைப்பதைக் கண்டு புருவம் சுருக்கினான். அவர்கள் இருவரும் தேவை இன்றி ஒரு விடயத்தை கதைப்பதில்லை என்று அவனுக்கும் தெரியும்.

நந்தினி மகனுக்கு இடியப்பமும், ஜோதியும் வைக்க, “அம்மா அப்பாவும், மாமாவும் எந்த விடயத்தை தீவிரமாக கதைக்கிறா போல இருக்கு” என்றான் அவர்களின் மீதே பார்வையைப் பதித்தபடி.

“ம்ம்.. நம்ம மேகாவிற்கு நல்ல வரன் வந்திருக்கீனம். அதைபற்றி கதைத்து கொண்டிருக்கிறார்” அவர் மற்ற வேலைகளைக் கவனிக்க செல்ல மகனின் முகம் சட்டென்று வாடியதை அவர் கவனிக்கவில்லை.

அவன் வேறு எதுவும் சொல்லாமல் எழுந்து செல்ல, “முகிலன் இங்கே வாரும் கண்ணா” என்றார் சித்தார்த்.

அவன் அவரின் அருகே சென்று அமர, “மேகாவிற்கு வந்திருக்கும் வரன்.இவளிண்ட குணத்திற்கு இவன் சரியா இருப்பானா எஎண்டு பார்த்து சொல்லுங்கோ” என்றதும் அவன் போட்டோவை வாங்கி இரண்டாக கிழித்துப் போட்டான்.

அவனின் இந்த செயல் பெரியவர்களின் மனதை திடுக்கிட வைக்க, “நான் இருக்கின்ற போதே எண்ட மேகாவிற்கு நீங்க வரன் பார்ப்பது தவரெண்டு தொன்றவில்ல” என்றான் கோபத்துடன் எங்கோ பார்த்தபடி.

அவனின் சத்தம்கேட்டு நந்தினி கூடத்திற்கு வரவே, “முகிலா இது சரியெல்ல. உன்னட்ட கருத்து மட்டும் கேட்டம். அதுக்கு நீர் இப்படி கதைப்பது மாமாவிற்கு, மாமிக்கும் மன குமுறலை உருவாக்கும் எண்டு உமக்கு தெரியாதா?” என்றார் தந்தை கோபமாக.

அவன் அவர் சொல்வதை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை. விவரம் அறிந்த நாளில் இருந்தே அவளுடன் சேர்த்தே வளர்ந்தவனால் அவளை வேறொரு நபருக்கு விட்டுகொடுக்கும் எண்ணம் துளியும் இல்லை.

அவன் பதில் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருக்க கண்டு சித்தார்த் கோபத்துடன் மகனை முறைக்க அவற்றை எல்லாம் அசட்டை செய்துவிட்டு கற்சிலைபோல வீற்றிருந்தான் மகன்.

இருவரின் கோபத்தையும் எப்படி சமாளிப்பது என்று தருண் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருக்க திவ்யா மகளுடன் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கே வழமைக்கு மாறாக நிலவிய அமைதியே என்ன நிகழ்ந்ததென்று மற்றவர்கள் சொல்லாமல் உணர்ந்து கொண்டாள்.

அவள் மெல்ல முகிலனின் அருகே சென்று, “கண்ணா” என்றழைக்க அத்தையின் இடையைக் கட்டிக்கொண்டு, “மாமி எனக்கு மேகா வேணும். அவளை வேறு யாருக்கும் விட்டுகொடுக்க நான் தயாராக இல்லே” என்றான் குழந்தைபோலவே.

“அவளுக்கு உன்னை பிடிக்கவில்லை எண்டால் என்ன செய்யறது” என்றார் அவரும் பேச்சை விடாமல்.

“மேகாவிற்கு என்னை பிடித்தம் மாமி. ஆன ஈகோ அவளை சொல்லவிடாமல் செய்யறது” என்றான் மெல்லிய குரலில்.

“உனக்கு அவளின்ட மேல் கோபம் இல்லே” என்றதும் மறுப்பாக தலையசைத்தவன், “அவளோடு சண்டை இடுவதும், போட்டி போடுவதும், அவளை வம்பிற்கு இழுப்பதும், சீண்டுவது எல்லாமே விளையாட்டுக்கு மாமி..  அவளின்ட கோபத்தை கண்ணார பார்க்கும் தருணத்தில் அவ்வளவு தித்திப்பாக இருக்கும் மனது..”அவன் மனதை மறைக்காமல் அவரிடம் ஒப்பித்துவிட்டான்.

அவன் இப்படி கதைப்பதைக் கண்டு சித்தார்த்- நந்தினி இருவரும் திகைப்புடன் திவ்யாவைப் பார்க்க, ‘அவளும் அப்படித்தான் இருக்கறவே..’ என்றார் பார்வையாலே.

தருணுகோ வெகு திருப்தி இந்த விடயம் கதைத்ததில்..

சின்ன வயதில் இருந்து உடன் வளர்ந்த மாமன் மகனுக்கு பெண்ணை கொடுக்காமல் வேறு யாரோ ஒருவனுக்கு பெண்ணைக் கொடுத்து அவள் கண்ணீர் விடுவதைப் பார்க்கும் சக்தி அவருக்கில்லை.

“நீர் போய் மேகாவைப் பாரும் முகிலன்” என்றதும் பட்டென்று நிமிர்ந்து அத்தையின் முகம் நோக்கினான். அவரோ அவனின் கலைந்த தலையை சரிசெய்ய, “தேங்க்ஸ் மாமி” அவன் அவளைக் காண சென்றுவிட்டான்.

அவன் சென்றதும், “பிள்ளை மனதில் இவன்தான் இருக்கான் இஞ்சிருங்கோப்பா. மாப்பிள்ளை வந்திருக்கிறது என்றதில் இருந்தே பிள்ளையின் முகத்தில் புன்னகை காணாமல் போய்விட்டது” அவர் வருத்தத்துடன்.

“கீரியும், பாம்பும் போல இருக்கின்றதென்று நினைக்க இங்கே நகமும் சதையும் போல இல்லே இருந்திருக்கிறவே” என்ற நந்தினி சென்று எல்லோருக்கும் இனிப்பு கொண்டு வந்து கொடுத்தார்.

சித்தார்த் மனமும் நிறைந்து போனது. தன் மகன் அவளோடு சேர்ந்து விளையாடகூட மாட்டான். இவன் எப்படி அவளுக்கு வாழ்க்கை துணையாக வருவான் என்ற பயம் ஓடிமறைய நிம்மதியுடன் தங்கையின் முகம் பார்த்தான்.

திவ்யாவும் அதே நேரத்தில் சித்தார்த்தை பார்த்தாள். பிறந்த வயிறுதான் வேறாகி போனது. இன்று வரை இருவரின் இடையே இருந்த பாசம் அவர்களோடு முடிந்துவிடுமோ என்ற பயம் சென்று மனதார அண்ணனை பார்த்து புன்னகைத்தாள்.

அவர்களிடம் விசயத்தை சொல்லி சம்மதம் வாங்கிய மறுகணம் அவன் தேடி சென்றது அவளை மட்டுமே!

அவன் வீட்டின் உள்ளே நுழையும்போதே, “எனக்கு என்ன விசார் எண்டு நினைத்தாரோ? இந்த பெடியனின் படம் பாரும் எண்டு சொல்லி வரிசையாக போட்டோவை நீட்டி கொண்டிருக்கிறவே. எல்லாம் அவனால் வந்தது, நான்தான் அவனோடு சண்டை போட்டு வேணும் என்றே கதைக்காமல் இருப்பேன்..” என்று கோபத்தில் கையில் கிடைத்த பொருட்களை அனைத்தையும் ஹாலில் தூங்கி எறிந்தாள்.

அவன் வரும்போது வீடு இருந்த கோலம் கண்டு, “இவளுக்கு என்ன விசாரா?” என்ற கேள்வியுடன் அவளின் அறையை எட்டிப் பார்க்க அங்கே ஆள் இல்லாமல் தனியாக புலம்பிக் கொண்டிருந்தாள் மேகா.

“சின்ன வயதில் இருந்தே என்னோடு சண்டையிட்டு,கதைத்து, விளையாடி, சிரிக்க வைத்தவன் இவன், இண்டைக்கு எவனோ ஒருவன் வருவானாம். அவனின்ர முன்னாடி கோபி கப்புடன் போய் பல்லை ஈன்னு காட்டிட்டு நிற்கோணுமாம். எனக்கு வருகின்ற வெறிக்கு..” என்று கையில் கிடைத்த பொருளை தூக்கி கண்ணாடியின் மீது விட்டெறிந்தாள்.

அந்த கண்ணாடி தூள் தூளாக சிதற கண்டு, “இவனோடு சண்டை போட்ட போது தானே நண்பனின் கோபம் உணர்ந்தேன். இவன் இருக்கின்ற தைரியத்தில் வேண்டுமென்றே பெடியன்களை வம்புக்கு இழுப்பேன். இண்டைக்கு என்ன சண்டை என்றாலும் என்னை அவனோடு தானே வெளியே அனுப்புவாங்கோ. அதுக்கு எல்லாம் எண்ட மாமன் மகன் வேணும் இண்டைக்கு கல்யாணம் என்றதும் எவனோ ஒருவனை கைகாட்டுவரோ” என்று கோபத்துடன் அவள் திட்டித்தீர்த்தாள்.

அவள் கதைப்பதை முழுமையாக கேட்டுவிட்ட முகிலனின் உதட்டில் புன்னகை அரும்பியது. அவளின் மனதில் அவன் எந்தளவு ஆழமாக பதிந்திருக்கிறான் என்று அவளின் வார்த்தைகள் வெளிபடுத்தியது.

“என்ன மேகா தனியாக உட்கார்ந்து சுவற்றுடன் கதைக்கிறீர். உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்னிடம் சொல்லுங்கோவன்” என்றவன் விரிந்த புன்னகையுடன் அவளின் அறைக்குள் நுழைந்தான்.

அவனைக் கண்டதும், “வாங்கோ வாங்கோ இத்தனை பிரச்சனைக்கு காரணமே நீங்கதானே. அது ஏன் எண்டுதான்  சாருக்கு தெரியாதில்ல” என்றாள் கோபத்துடன்.

அவளின் சிவந்த முகம் கண்டு அவளை சீண்டிப் பார்க்கும் எண்ணத்தில், “என்னால் என்ன பிரச்சனை மேகா” அவன் சாதாரணமாக கேட்டு வைக்க அவளுக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது.

“எவனோ ஒரு பெடியன் என்னை பெண் பார்க்க வருகின்றனாம். அம்மா இப்போதான் கதைத்துட்டு போறார்” என்றதும், “வாவ் மேகா உமக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாவவே. ஹப்பா இனியாயிட்டு வீட்டில் நிம்மதியாக இருக்கலாம்” என்றான் அவன் குறும்புடன்.

“ஏண்டா நான் என்ன கதைக்கிறன். நீங்க என்ன கதைக்கிறீர்?” என்றவள் கோபத்துடன் பக்கத்தில் இருந்த பூஜாடியை எடுத்து அவனின் மீது வீசிவிட்டு, “இப்போதாவது உண்மையை சொல்லுங்கோ முகிலன். எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்ல. எனக்கு நீங்கதான் வேணும், வேற எந்த பெடியனுக்கும் நான் கழுத்தை நீட்ட மாட்டன்” அவள் முழங்காலிட்டு அமர்ந்து அழுதாள்.

அவளின் வாயில் இருந்தே உண்மையை வாங்கிவிட்ட முகிலனோ அவளின் எதிரே சென்று அமர்ந்தவன், “மேகா என்னை நிமிர்ந்து பாரும்” என்றான்.

அவள் அழுகையுடன்  நிமிர, “இது என்ன குழந்தை மாதிரி.. ஸ்ஸ்ஸ்.. எண்ட மேகா என்னோடு சரிக்கு சரி சண்டையிட்டு ஜெய்க்கோணும். இப்படி கண்ணை கசக்கி ஜெய்க்க கூடாதல்லே..” பெருவிரலால் அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவளும் பந்தமாக அவனின் பரந்த மார்பில் முகம் புதைக்க, “என்ர மேல் இவ்வளவு காதலா?” அவன் காதோரம் கேட்க, “எனக்கு உன்னை பிடிக்குபா. என்ன ஒத்துக்கொள்ள மனசு இல்ல..” என்றதும் அவனின் அணைப்பு மெல்ல மெல்ல இறுகியது.

பின்னர் மேகாவை அவன் சமாதானம் செய்துவிட்டு, “நான் மாமிடம் நம்மட காதலைப் பற்றி கதைத்திட்டன் மேகா. எனக்கு நீதான் வேணும் என்று தெளிவா சொல்லிட்டன்” என்றதும் அவளின் இதழில் புன்னகை அரும்ப அவளின் கன்னத்தில் முத்தமிட்டு அவளை அழைத்துக்கொண்டு பெரியவர்களிடம் சென்றான்.

முகிலனும்- மேகாவும் ஒன்றிணைந்து வருவதைக் கண்டு பெரியவர்களின் மனம் நிறைந்து போனது. அவர்கள் மனதார இருவரையும் ஆசீர்வாதம் செய்ய அவர்களின் திருமண நாளை பற்றி கதைக்க தொடங்கினர். இவர்கள் எப்படியோ காதலை வெளிபடுத்தி வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க இங்கே மழைநிலாவின் வாழ்க்கையில் மெல்ல புயல் வீச ஆரம்பித்தது.

 

error: Content is protected !!