Sirpiyin Kanavukal – Pre – Final

அத்தியாயம் – 14

அவர்கள் கொடுத்த அனைத்தையும் எடுப்பது பார்த்து திகைப்புடன் நிமிர்ந்த அனைவரும், “அப்போ உங்க இருவருக்கும் உண்மை தெரியுமா” என்று கேட்க மற்ற இருவரும் ஒப்புதலாக தலையசைத்தனர்.

திவ்யாவை தீர்க்கமாக பார்த்த நிலா, “உங்ககிட்ட கோடி கொடியாக பணமிருந்து அதுக்கு பயன் இல்லாமல் பண்ணிட்டான் பாருங்க அதுதான் விதி. ஒரு பெத்தவங்க அடுத்த தலைமுறையினருக்கு சொத்துகளை வைத்துவிட்டு போவதில் யாருக்கும் எந்த லாபமும் இல்ல. ஆனா உங்க அப்பா அம்மா உங்களுக்கு புண்ணியத்தை மட்டும் சேர்த்து வெச்சிட்டு போயிருக்காங்க” என்று கூறியவள் கணவனின் நிமிர்ந்து பார்த்தாள்.

எழிலன் சித்தார்த்திடம், “நீங்க ஒரு டாக்டர் உங்களுக்கு தெரியாத விஷயம் இல்ல. நாங்க அவங்க உருவத்தில் பிறந்ததால் நாங்க இருவரும் கார்முகிலன் – மேகவர்ஷினி ஆக முடியாது. நாங்க என்றும் எழிலரசன் – மழைநிலாதான் அதில் என்னைக்கும் மாறவே மாறாது” என்றவன் தொடரும் முன்னே அவனின் கரம்பிடித்து தடுத்த நிலாவே மீண்டும் பேசினாள்.

“நாங்க அவங்க உருவத்தில் மட்டும் தான் பிறந்திருக்கோம். நீங்க நினைக்கிற மாதிரி இது எங்களோட மறுஜென்மம் இல்ல. அதெல்லாம் படத்தில் பார்க்க அழகாக இருக்குமே தவிர நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத ஒன்று” என்று கூற வரும் விஷயம் மற்றவர்களுக்கு புரிந்துவிட அவர்களின் முகத்திலும் தெளிவு பிறந்தது.

“நான் இவரை காதலித்து கரம்பிடித்தேன். அவருக்கு எந்த தோல்வி வந்தாலும் அவருக்கு பக்கபலமாக இருப்பேன். எந்த காரணத்திற்காகவும் நான் அவரை பிரிய மாட்டேன் காரணம் நான் மேகவர்ஷினி இல்ல. நான் மழைநிலா..” என்று தன்னுடைய கருத்தை அவர்களிடம் கூறிவிட்டு கணவனின் தோள் சாய்ந்தாள்.

அவளை மார்புடன் சேர்த்து அணைத்துகொண்ட எழிலன், “தோற்றம் ஒரே மாதிரி இருப்பதால் அவங்கள மாதிரி நாங்களும் பிரிவோம் என்று நினைத்து அவங்க வாழ்க்கையை எங்க வாழ்க்கையுடன் சேர்த்து குழப்பிக்காதீங்க. நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிருக்கோம், எங்க வாழ்க்கையை நாங்க மட்டும் வாழ போறோம். இந்த வாழ்க்கைக்கும் உங்க அப்பா – அம்மாவின் வாழ்க்கைக்கும் துளியும் சம்மதம் இல்லை.” என்றவன் தொடர்ந்து,

“பிறந்த இடம், வளர்ந்த சூழல், பழகிய மனிதர்களின் மூலமாக வருவதை எல்லாம் நொடியில் மாற்றிவிட முடியாது. அதனால் தயவுசெய்து எங்க வாழ்க்கையை அவங்க வாழ்க்கையுடன் கம்பேர் பண்ணாதீங்க. அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. என் மனைவிய நான் கடைசிவரை பிரிய மாட்டேன். அப்படி பிரிந்து வாழ நான் கார்முகிலன் மாதிரி சாதனை மனிதன் இல்ல. சாதாரண மனிதன் நான்” அவன் பேசி முடித்துவிட்டு மனைவியின் நெற்றியில் நேசத்துடன் இதழ் பதித்தான்.

அவர்கள் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுகொடுக்காமல் பேசுவதை வைத்தே அவர்கள் ஒரு உண்மையை உணர்ந்தனர். எழில் இல்லாத இடத்தில் மழை வராது. மழை இல்லாத இடத்தில் எழில் இருக்காது.

ஒருவரைவிட்டு ஒருவர் ஒருநாளும் இருக்க போவதில்லை என்ற உண்மையை உணர்ந்தும் அவர்களின் தவறும் புரிந்தது. அவர்களைவிட பல வருடம் சிறியவர்கள் என்றபோதும் அவர்களின் பேச்சில் இருந்த தெளிவும், அவர்களின் விட்டுகொடுக்காத தன்மை, இருவருக்கும் இடையே இருந்த புரிதல் எல்லாமே அவர்களை வியக்க வைத்தது.

மறுஜென்மம் மற்றும் மறுப்பிறப்பு என்பதெல்லாம் நம்ப அவர்கள் தயாராக இல்லை என்று அனைவருக்கும் உணர்த்தியது அவர்களின் தெளிவான பேச்சு. சில கருத்துகள் எதிர்மறையாக இருப்பது போல தேன்றினாலும் அதுவே வாழ்க்கையில் நேர்மறையாக தோன்றும்.

“உங்க இருவரிடமும் இப்படியொரு புரிதலை எதிர்ப்பார்க்கல. இதே மாதிரி காலம் முழுவதும் நீங்க ஒற்றுமையாக வாழணும்” என்று அவர்களை வாழ்த்தினார் சித்தார்த்.

எழில் – நிலா இருவரும் புன்னகையுடன் ஒப்புதலாக தலையசைக்க தங்களுக்குள் நொறுங்கிப் போய் அமர்ந்திருந்த முகிலன் – மேகாவை அப்போதுதான் கவனித்த திவ்யா, “ஏன் நீங்க இருவரும் ஒரு மாதிரியாக இருக்கீங்க” என்று முகிலனின் தலையை செல்லமாக கலைத்தார்.

அத்தையின் கரத்தை பற்றிகொண்ட முகிலன் பதில் பேசாமல் அவரின் மடியில் சாய்ந்து கொள்ள, மேகா தன் மாமன் சித்தார்த் தோளில் கண்ணீரோடு முகம் புதைத்தாள். அவர்களின் செயலே சொன்னது அவர்களின் மனதைப் பற்றி..

தன் அண்ணனின் கரத்தை தட்டிகொடுத்த திவ்யா அமைதியாக இருக்க, “முகில்” என்றார் சித்தார்த்.

அவன் நிமிர்ந்து அவரின் முகம் பார்க்க, “என்னடா இவங்க இருவரும் அண்ணன் தங்கை என்று சொன்னாலும் ஒருதாய் வயிற்று பிள்ளை இல்லையே. இனிமேல் நமக்கு எப்படி மேகா கிடைப்பா என்று யோசிக்கிறாயா?” என்று கேட்டது தந்தையின் தோளில் முகம் புதைத்து மௌனமானான்.

தன் தங்கை மகளின் தலையை பாசத்துடன் வருடியவர், “இன்றைக்கு மட்டும் இல்ல என்னைக்குமே உனக்கு மேகாதான் ஜோடி” என்று கூறியதும் அவன் பட்டென்று நிமிர்ந்து பார்க்க, மேகா திடுக்கிட்டு  திரும்பி பார்த்தாள்.

“நாங்க கடந்த காலத்தை மட்டும் தான் சொன்னோமே தவிர, உங்க திருமணத்தில் மாற்றம் செய்ய போறோம்னு சொல்லவே இல்லையே.. அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத வருத்தம்” என்று தன் தங்கை மகளிடம் கேட்டார் சித்தார்த்.

சிறியவர்களின் முகத்தில் மெல்ல மகிழ்ச்சியின் சாயல் பரவுவதைக் கண்டு நிம்மதியடைந்த பெரியவர்கள் அன்று இரவு நிம்மதியாக உறங்க சென்றனர். எழிலன் – நிலா சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட தன்னருகே மேகாவை அமர வைத்துகொண்ட முகிலன்,

“ஒரு நிமிஷம் உயிரே போயிருச்சு. நீ என்னோட சொந்தமில்லையா? உன்னை நான் உரிமை கொண்டாட கூடாதான்னு” என்றவன் பெரும் பாரம் இறங்கியவனை போல கூற அவனின் தோள் சாய்ந்தாள் மேகா.

“என்னதான் உன்னோட சண்டை போட்டாலும் எனக்கு நீதான் என்னைக்குமே வேணும் முகில். இன்னைக்கு மாமா சொன்னதை கேட்டு நானும் கொஞ்சம் பயந்துவிட்டேன்” என்றவளை அவன் இறுக்கியணைத்து கொண்டான்.

எழிலன் நிலா இருவரும் தனிமையை தேடி மொட்டை மாடிக்கு சென்றனர். வானில் முழு நிலவு உலா போக நட்சத்திர பட்டாளம் அவளுடன் பயணிக்க வெள்ளை நிற மேகங்கள் கூட்டம் கூட்டமாக எங்கோ சென்றது.

ரம்மியமான இரவும், அழகான நிலவும், சில்லென்ற தென்றலும் எழிலனின் மனதை இதமளித்தது. நிலா அமைதியாக அங்கிருந்த சுவற்றின் மீது சாய்ந்து அமர அவளின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்ட எழிலனின் மனம் முழுவதும் முதல் முறை கண்ட கனவையே நினைத்தது.

“என்ர பெயர் மேகாவென்று  நீங்க என்னிடம் சண்டையிட காரணம் என்ன” என்று மெல்லிய குரலில் அவனின் அலையலையான கேசத்தை கோதியபடி கேட்டாள்.

அவனின் சிந்தனை கலைந்துவிட, “அன்னைக்கு நமக்கு அடிப்பட்டப்போ நான் கண்ட கனவில் உன்ர பெயர் மேகா என்ற உண்மை தெரிந்து கொண்டன்” என்றதும் சட்டென்று திரும்பி மனைவியின் முகத்தை கேள்வியாக நோக்கியவன்,

“நீயும் என்னை போலவே கனவு கண்டாயா” என்று அவன் கேட்க அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்..

பிறகு, “நமக்கு வந்த கனவு முன்னாடி நடந்த விஷயம் என்றபோதும் அதை நம்பி உங்களோடு சண்டையிட்டதை நினைக்கையில் சிரிப்புதான் வருகிறது” என்றவளுடன் இணைந்து சிரித்தான் எழிலன்.

சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது..

“கார்முகிலன் – மேகவர்ஷினி மாதிரி நம்மளும் ஈருடல் ஓருயிருமாக இருக்கோணும் நிலா. இருவரின் இடையே எத்தகைய புரிந்தால் இருந்தால் அத்தனை வருட பிரிவையும் தாண்டி அவர்கள் நேசத்துடன் இருந்திருப்பார்கள்” என்று வியப்புடன் அவன் கூற,

“இதில் வியக்க என்ன இருக்கு. மேகாவிற்கு புரிதல் இருந்தபோதும் அவங்க மனக்காயம் ஆறாமல் எப்படி அவரோடு இருக்க முடியும் என்று நினைத்தவர், ஒரு கட்டத்தில் குழந்தை பிறந்தபிறகு அவரோடு வாழ நினைத்தபோது விதி அவர்களுக்கு சதி பண்ணிருச்சு. ஆனால் கடைசிவரை தங்களுக்கு என்று ஒரு துணையை தேடாமல் அவர்கள் வாழ்ந்திருப்பதை நினைக்கின்ற போது உடல் சிலிர்க்கிறது” என்றாள்

எழிலன் அவளின் மாடியிலிருந்து எழுந்து அவளின் பளிங்கு முகத்தை இரு கரங்களால் தாங்கி அவளின் விழிகளில் தன் பார்வையை கலக்கவிட்டு, “நம்ம அவங்களவிட ஒரு படி நல்ல வாழ்ந்து காட்டோணும் நிலா” என்றான் கண்களில் காதல் வழிய.

அவனின் காதல் பார்வையில் அவளின் மனமும் தொலைந்து போக, “ஐ லவ் யூ எழிலன்” என்ற அவளின் கண்களில் வழிந்த கண்ணீரை இரண்டு பெருவிரலால் துடைத்துவிட்டு, “ஷ்.. நிலா இது சந்தோசமாக இருக்க வேண்டிய நேரம்..”என்று அவளை இழுத்து மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

மறுநாள் அங்கிருந்து கிளம்பியவர்கள் இலங்கை வந்து சேர்ந்தனர். அவர்கள் ஊருக்கு வந்த ஒரு கிழமையில் முகிலன் – மேகா இருவருக்கும் திருமணம் ஊரறிய திருமணம் நடந்தது.

அந்த திருமணத்தில் சித்தார்த் – நந்தினி, தருண் – திவ்யாதர்ஷினி, முகிலன் மேகா, எழிலரசன் நிலா அனைவரும் நின்று ஒரு புகைப்படம் எடுத்து கொண்டனர். எழிலன் – நிலாவும் மணமக்களுக்கு பரிசு கொடுத்துவிட்டு

வாழ்த்திவிட்டு வந்தனர்.

அன்று இரவு முதலிரவில் குனிந்த தலை நிமிராமல் வந்தவளை இழுத்து அணைத்த முகிலன், “எத்தனை வருட கனவு இன்னைக்கு கைசேர்ந்து இருக்கிறது” என்றவன் அவளின் சம்மதத்துடன் அவளை தனக்கென்று எடுத்து கொள்ள இனிமையான இல்லறம் அங்கே தொடங்கியது..

நாட்கள் விரைந்து செல்ல மழைநிலா மற்றும் சரளா இருவரும் சேர்ந்து வீட்டை ஒரு வழி செய்வார்கள். அவர்களின் வீட்டில் மகிழ்ச்சி என்பது நிலையாகிட எல்லாமே சரியாக சென்றது.

அன்று மாலை வீடு திரும்பிய எழிலன் அத்தை பின்னோடு குட்டிபோட்ட பூனை போல சுற்றி வரும் மனைவியின் மீது பார்வையை பதித்தபடி கதிரையில் அமர்ந்து டிவி பார்க்க அவனின் அருகே வந்து அமர்ந்தாள் நிலா.

“இஞ்சாருங்கோப்பா அந்த பாட்டு சேனலை போடுங்கோ” என்று பார்வையை பதித்தபடி அவள் ஆர்வமாக கேட்க அவனோ காது கேளாதவன் போல அமர்ந்திருந்தான்.

அவன் தான் கேட்ட பாட்டு சேனலை போடவில்லை என்றதும் கோபத்தில் எழுந்து சென்றவள் வரும்போது தன் அத்தையுடன் வந்தாள். இப்போதெல்லாம் மழைநிலாவிற்கு அத்தை இல்லையென்றால் பொழுதே போகாது..

“தம்பி அவள் விரும்பிய பாட்டு சேனலை போடுப்பா” என்று கூற அவன் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும்  வேறு சேனலை மற்ற அவனின் தலையில் நறுக்கென்று கொட்டிவிட்டு, “பிள்ளையை அழுக வைப்பதே இவனின் வேலையாய் போயிற்று” என்று ரிமோட்டை வாங்கி தன் மருமகளின் கையில் கொடுத்துவிட்டு சமையல் செய்ய சென்றுவிட்டார்.

“அம்மா இதெல்லாம் நல்லது இல்ல. இவளா உன்ர பிள்ளை .நான்தானே உன்ர மகன்” என்று தாயுடன் அவன் வேண்டுமென்றே வம்பி வளர்க்க, “இஞ்சாருங்கோப்பா நீங்க அவங்க பொடியன் தான். அதில் சந்தேகமே இல்லையேல்ல. ஆனால் நான் சரளா மாமியின் செல்ல மருமகள்..” என்று கர்வமாக கூறியவள் பாட்டு சேனலை போட்டு பாடலை கேட்க துவங்கினாள்.

அதெல்லாம் ரசனையோடு பார்த்த எழிலன், “எல்லாம் எண்ட நேரம்” என்றவன் கோபத்துடன் எழுந்து அறைக்குள் செல்ல நினைக்க, “தம்பி சாப்பிட்டு போய் தூங்குப்பா” என்று கூற அவனும் சாப்பிட அமர, “நிலா நீயும் எழுந்து வாம்மா” என்றார் சரளா.

அவளை முறைத்தபடியே உணவை சாப்பிட கணவனை கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தது. இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அறைக்குள் நுழைய அவளின் பின்னோடு வந்த எழிலன் கதவை சாத்தி தாழிட்டு திரும்பிப் பார்க்க அவளோ படுப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.

மெல்ல அவளின் அருகே சென்ற எழிலன் பின்னாடி புறம் நின்றபடி அவளை இழுத்து அணைத்து அவளின் கழுத்து வளைவில் தாபத்துடன் இதழ் பதிக்க, “என்ன எழில் இப்படி பண்றீயேள்” என்றவள் சிணுங்கினாள்.

ஆனால் அவனோ பதில் சொல்லாமல் அவளின் இடையோடு கரம்கொடுத்து இருக்கியணைத்தான். அவனின் உதடுகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அவளின் காது மடல்களை தீண்ட அவளின் பூவுடன் சிலிர்த்தது..

“நிலா..” என்றான் அவள் கன்னத்தில் இதழை பதித்தபடி.

அவளோ கிறக்கத்தில் விழி மூடியபடி, “ம்ம் சொல்லுங்கோ” என்றாள்..

“உனக்கு சம்மாதமா” என்று கேட்டு அவனின் கரங்கள் அவளின் இடையோடு உரிமையாக உறவாட விழிதிறந்து அவனின் முகத்தை ஏறிட்டு நோக்கினாள்..

அவனின் கண்களில் வழிந்த தாபத்தை கண்டு பெண்ணவளின் கதுப்புநிற கன்னங்கள் இரண்டு சிவந்துவிட அவனின் மார்பில் முகம் புதைத்தாள். அதையே அவளின் சம்மதமாக நினைத்துகொண்ட எழிலன் இருகரங்களில் அவளை தூக்கிச்சென்று படுக்கையில் போட்டு அவளின் மீது படர்ந்தான்.

கண், காது, கன்னம் என்று பயனித்தவனின் உதடுகள் அவளின் இதழில் இளைப்பாறியது. மெல்ல அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் மெல்ல முன்னேற நினைக்க  பெண்ணவள் நாணத்தில் மறுத்தாள்.

அவளின் பயத்தை போக்கி கெஞ்சி கொஞ்சி பெண்பாவையின் மனத்தைக் கரைத்து அவளுக்குள் தன்னை தேட துவங்கினான். நேரம் செல்ல அவனின் வலைகரம் எல்லை மீறியது. அவனின் விரல்கள் செய்த வித்தையில் அவள் மதிமயங்கி கிறங்கி விழிமூடினாள். அவனின் வேகம் கூடிப்போக பெண்ணவள் தன்னை அவனிடம் இழந்து வாடிய கொடியாக மாறிப்போனாள்..

அழகான கூடலுக்கு பிறகு அவளின் நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்தவன், “ரொம்ப சிரமம் கொடுத்தேனா” என்றவன் அவளின் கலைந்த கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டு வருத்தத்துடன் கேட்க அவளின் வதனம் தாமரை மலர்போல மலர்ந்தது.

“இல்லப்பா” என்று செல்லம் கொஞ்சிய மழைநிலா அவனின் நெஞ்சமென்னும் மஞ்சத்தில் அவனும் வலைகரம் கொண்டு அவளை அணைத்து கொண்டான்.