UUU–EPI 17

103977454_653445081909496_2472649225753995686_n

UUU–EPI 17

அத்தியாயம் 17

‘டெத் பை சாக்லேட்’ என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரண்டாவது உலக போரின் போது, சர் வின்ஸ்ட்டன் சர்ச்சிலை சாக்லேட்டினால் கவர் செய்யப்பட்ட வெடி குண்டினால் கொல்ல, ஹிட்லர் ப்ளான் செய்ததாக பரவலாக பேசப்படுகிறது.

 

“இப்போ உடம்பு எப்படி இருக்கு?”

“நீ தான் பார்க்கறீயே குட்டிம்மா! நீயே சொல்லு நான் எப்படி இருக்கேன்னு?”

“மூஞ்சி கொஞ்சம் தேஞ்சிருக்கு! கை கொஞ்சம் வளைஞ்சிருக்கு! கால் கொஞ்சம் நெளிஞ்சிருக்கு! மத்தப்படி பார்க்க சுமாராவே இருக்க”

சொல்லும் போதே தொண்டை கமறியது அவளுக்கு. முன்பொரு முறை இதே போல் ‘இத்து போன கண்ணையும், சைடு வாங்கற வாயையும் வச்சு மயக்கப் பார்க்கறியா’ என ரிஷி தன்னை டேமேஜ் செய்தது ஞாபகத்துக்கு வந்து இம்சித்தது அவளை.

சிந்தியாவின் பேச்சில் மெலிதாய் நகைத்தான் அவன்.

“எப்போ திரும்பி வருவ நீ?”

“இன்னும் ரெண்டு மாசத்துல வந்துடுவேன் பேபிமா!”

மெல்ல நகர்ந்து அவனைக் கட்டிக் கொண்டாள் சிந்தியா. கண்ணில் கண்ணீர் வழிய,

“ஐ மிஸ் யூ சோ மச்! அவ்ளோ நாள் என்னை விட்டுட்டு தள்ளி இருந்த! இப்போ மறுபடியும் விட்டுட்டு வந்துட்ட! என் மேல பாசம் இருந்தா இப்படிலாம் செய்வியா? உனக்கு ரோஷம் தான் முக்கியம். நான் எது கேட்டாலும் நீ செய்ய மாட்ட! ஆனா உனக்காக நான் எல்லாம் செய்யனும்! ஐ ஹேட் யூ ஃபோர் தட்! ஹேட் யூ சோ மச்” என தேம்பினாள்.

தன் மார்பில் சாய்ந்து அழுபவளின் முதுகை தடவி சமாதானப்படுத்தினான் அவன்.

“இனி உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் செல்லம்! போடான்னு நீயே துரத்தினா கூட போக மாட்டேன். இது சத்தியம்! இப்போ அழறத நிறுத்திட்டு கொஞ்சம் சிரி பார்ப்போம்”

“ஒன்னும் வேணா போ!”

“நெஜமா ஒன்னும் வேணாமா? உனக்குப் புடிச்ச சாக்லேட் புட்டிங் வாங்கி வைக்க சொல்லிருக்கேன்! தெ பெஸ்ட் புட்டிங் ஆப் பென்சில்வேனியா(அமெரிக்காவின் ஒரு ஸ்டேட்)! அதுவும் வேணாமா?”

“பெரிய பென்சில்வேனியா புட்டிங்!!! எங்க ஊரு கேமரன்ல ஒருத்தன் செய்வான் பாரு புட்டிங்! அதுக்கு பேருதான் புட்டிங்! நீ வாங்கி வச்சிருக்கறதெல்லாம் சாப்டா வாயில வந்துடும் வாமிட்டிங்!”

“பார்டா! என்ன ஒரு ரைமிங்கா பேசற நீ! பீட்டரக்காவுக்கு பெரிப்பா பொண்ணு கணக்கா வாயத் தொறந்தாலே டஸ்ஸு புஸ்ஸின்னு படம் காட்டுவ! இப்போலாம் நல்லா தமிழ் பேசறியே! அதோட கேமரன் எப்ப இருந்து உன்னோட ஊர் ஆனது?” என வியந்தான் அவன்.

“வெளிநாட்டுல இருக்கற ஒரு இந்தியன பார்த்து நீ எந்த ஊர்னு கேட்டா, நான் பஞ்சாப், நான் ஆந்திரா, நான் கேரளா, நான் தமிழ்நாடுன்னா சொல்லுவான்? கண்டிப்பா ஐம் இந்தியன்னு தானே சொல்லுவான். வெளிநாட்டுக்கு வந்துட்டா இந்தியால இருக்கற எல்லா ஊரும் அவங்க ஊருதான். இப்போ நான் அமெரிக்காவுல இருக்கேன்ல, சோ மலேசியால இருக்கற எல்லா ஊரும் என் ஊர்தான் இன்க்லூடிங் கேமரன்” என சொல்லி புன்னகைத்தாள் சிந்தியா.

“சிந்தி!! அவங்க எல்லாம் நல்லா இருக்காங்களாடா?” தயங்கி தயங்கி கேட்டான் இவன்.

“ஹ்ம்ம்! நல்லா இருக்காங்க! சோகம் இருக்கு, ஆனா சமாளிக்கறாங்க! ஆனா நான்தான் நல்லா இல்ல இப்போ! எல்லாம் உன்னாலதான்! ஐ ஹேட் யூ” என மீண்டும் ஆரம்பித்தாள் சிந்தியா.

“மன்னிச்சிடுடா! என்னால முடியல, அதான் உன்னை அனுப்பினேன்! ரியலி சாரிடா! ஐம் சோ சாரி!” குரலில் வலியுடன் சொன்னான் அவன்.

“உன் சாரிலாம் ஒன்னும் தேவையில்ல! அந்த புட்டிங் எங்கிருக்குன்னு சொல்லு அது போதும்”

அவன் முகம் சோகமாவதை தாங்கமாட்டாதவளாக பேச்சை மாற்றினாள் சிந்தியா. அவளின் பேச்சில் மீண்டும் முகம் மலர புன்னகைத்தான் அவன்.

அங்கே கேமரனில், தில்லும்மா சின்னக் குட்டியை நன்றாக எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அவர் தேய்க்க, நான் தான் தண்ணீர் ஊற்றுவேன் என அடம் பிடித்தாள் சீனீ பாப்பா. அவள் கையைப் பிடித்து நந்தனாதான் சுடுநீரை ஊற்றினாள். குழந்தையைக் குளிப்பாட்டும் முன்னே, அதன் தாயை குளிக்க வைத்திருந்தார் தில்லும்மா.

“நந்தும்மா! இந்தா புள்ளய கொண்டுப் போய் துவட்டி விடு! மீத தண்ணில சீனீ பாப்பாவ குளிப்பாட்டிட்டு வரேன்”

“அவ சாயந்திரம் குளிச்சிக்குவா! இப்போவே எதுக்கு தில்லும்மா?”

“அடிப்போடி கூறு கெட்டவளே! ரெண்டாவது புள்ள வந்துட்டா, பெருசுக்கு தானாவே ஒரு பொறாமை வந்துடும்! அதுக்குத்தான் சின்னத குளிப்பாட்டுன மீத தண்ணியில பெரிய புள்ளயயும் குளிப்பாட்டி விடுவாங்க! இதெல்லாம் இந்த காலத்து ஆளுங்களுக்கு எங்க தெரியுது!” என பெருமூச்சு விட்டவர் சீனி பாப்பாவை விளையாட்டு காட்டி குளிக்க வைத்துத்தான் அழைத்து வந்தார்.

சின்னவளை நந்து துவட்டி முடிக்க, காலை நீட்டிப் போட்டு அமர்ந்த தில்லும்மா அவளை தன் மடியில் படுக்க வைத்தார். நன்றாக சாம்பிராணி போட்டு குழந்தைக்கு காட்டியவர், பின்பே பவுடர் போட்டு அலங்காரம் செய்ய ஆரம்பித்தார். அதற்குள் பெரியவளுக்கு துணி மாற்றி அழைத்து வந்திருந்தாள் நந்தனா.

“தேனே மானே துன்பம் வந்தாலே

நீயும் நில்லு நாணலே போலே தான்!!!!!!

தூரி தூரி தும்மக்க தூரி

ஓஓஓஒ” என பாடியபடியே குழந்தையின் கன்னத்தில் திருஷ்டி பொட்டிட்டார் தில்லும்மா. அவர் முதுகில் சாய்ந்து கழுத்தைக் கட்டிக் கொண்ட சீனி பாப்பா, அவருடன் சேர்ந்து தூரி தூரி என பின்பாட்டு பாடினாள். இங்கே வந்ததில் இருந்து அவர் பாடும் தாலாட்டு பாடல் இது ஒன்றுதான். பெரியவளுக்கு மனனமே ஆகி இருந்தது அதன் வரிகள்.

சின்னவளை நந்தனாவிடம் கொடுத்து பசியாற்ற சொன்னவர், பெரியவளை தன் மடியில் அமர்த்தி அவளுக்கும் அலங்காரம் செய்து விட்டார்.  நெற்றியில் பெரிய பொட்டிட்டு, கண்ணுக்கு மை தடவி, கன்னத்தில் பொட்டிட்டு என பொம்மை போலாக்கி வைத்தார் சீனி பாப்பாவை.

“நானும் குட்டி பாப்பாவும் சேம் சேம்” என எப்பொழுதும் போல குதூகலித்தாள் ரோஷினி.

அந்த நேரம் தான் புயல் போல் வீட்டுக்குள் வந்தான் ரிஷி.

“நந்து, நந்து!!!!” என கத்தியவனின் குரல் ஹை டெசிபளில் இருந்தது.

“இருடா வரேன்! பாப்பாவுக்கு பீடிங் டைம் இப்போ” என ரூமில் இருந்து கத்தினாள் நந்தனா.

தன்னிடம் ஓடி வந்த சீனி பாப்பாவைத் தூக்கிக் கொண்டவன், ஹாலிலேயே குட்டிப் போட்ட பூனை போல நடைப்பயின்றான். கையில் வைத்திருந்த என்வலப்பை கோபமாக தூக்கி மேசையில் போட்டவனையே கலவரமாக பார்த்திருந்தார் தில்லும்மா.

“தம்பி, உங்களுக்குப் புடிச்ச சார்டின் சம்பல்(டின்னில் அடைத்து விற்கப்படும் சார்டின் மீன்) வச்சிருக்கேன். ஒரு வாய் சாப்பிடுங்க” என சொல்லி எரியும் எரிமலையின் மேல் லேசாக தண்ணீர் விட பார்த்தார் அவர்.

“யார் சொன்னா எனக்கு சார்டின் சம்பல் பிடிக்கும்னு? உங்க சிந்தி பாப்பா சொன்னாளா? ரிஷி, ரிஷின்னு ஒரு கேணையன், கேமரன்ல இருக்கான். அவனுக்கு சார்டின் சம்பல் புடிக்கும், புடலங்காய் சாம்பார் புடிக்கும், கோழி வறுவல் புடிக்கும், புளிக்குழம்பு புடிக்கும்னு உங்க கிட்ட சொன்னாளா? இவ்ளோ சொன்னவ, இதெல்லாத்தையும் விட எனக்கு அவளத்தான் ரொம்ப ரொம்ப புடிக்கும்னு சொல்லலியா?” என மெல்லிய குரலில் கோபமாக கேட்டான்.

“ஐயயோ என்ன சொல்றீங்க நீங்க! சிந்தி பாப்பாவுக்கு உங்கள புடிக்குமா? ஐயோ கல்லுமலை குமரா(ஈப்போ, பேராக்கில் இருக்கும் முருகன் ஆலயம்)!!!இத மட்டும் எங்க பாப்பா சொல்லவே இல்லையே!” என பம்மியவர் குடுகுடுவென சமயலறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

ரிஷி பயங்கர கோபத்தில் வந்திருந்தான். தில்லும்மாவின் இந்த ஆக்டிங் அவன் கோபத்தை குறைத்து முகத்தில் லேசாக புன்னகையை வரவழைத்தது.

குழந்தைக்கு பாலூட்டி முடித்து அவளைத் தூக்கிக் கொண்டு வந்தாள் நந்தனா. குழந்தையை அவள் கையில் இருந்து வாங்கி முதுகில் தட்டிக் கொடுத்தான் ரிஷி. அவன் குழந்தையைப் பூப்போல ஏந்தி இருப்பதைப் எப்பொழுதும் போல முகமெல்லாம் மலர சமயலறையில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்தார் தில்லும்மா.

“என்னடா வீட்டு கூரை இடிஞ்சி விழற மாதிரி கத்திக்கிட்டே வர? என்ன விஷயம்?” என கேட்டாள் நந்து.

“அவ உன் கிட்ட எதுக்காச்சும் சைன் வாங்கனாளா?” என கேட்டான் ரிஷி.

அலர்ட்டான நந்து,

“ஏன், ஏன் கேக்கற?” என கேட்டாள்.

“அந்த என்வலப்ப எடுத்துப் பாரு”

கை நடுங்க மெல்ல அதைப் பிரித்து, உள்ளே கத்தையாய் இருந்த டாக்குமெண்ட்களை வெளியே எடுத்தாள் நந்தனா.

“என்னடா இது?”

“படிச்சுப் பாரு” என்றவனின் குரலில் கோபம் இருந்தது.

ஒவ்வொரு பத்திரத்தையும் ஊன்றிப் படித்தாள் நந்தனா.

“நீ ஒரு டீச்சர் தானே?”

“ஹ்ம்ம்” சுதியே இல்லாமல் வந்தது பதில்.

“எதையும் படிக்காம சைன் வைக்கக் கூடாதுன்னு உனக்குத் தெரியாது? நீயெல்லாம் புள்ளைங்களுக்கு என்னத்தப் படிச்சுக் குடுப்ப?” என குதறி எடுத்தான் ரிஷி.

“அது..அவ.. வந்து!!”

“மென்னு முழுங்காம சொல்லு” என கத்தினான் ரிஷி.

“பச்சப்புள்ள மூஞ்ச வச்சு, சிரிச்சே என்னை ஏய்ச்சுட்டா! நான் என்னடா செய்யட்டும்? நீ மட்டும் ஏமாந்து நிக்கலியா? உன் ட்வீன் உன்ன மாதிரி தானே இருப்பேன்” என பதிலுக்கு இவளும் சத்தம் போட்டாள்.

குடுகுடுவென ஓடி வந்தார் தில்லும்மா.

“எதுக்கு இப்ப சண்டை! எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்குங்க”

“உங்க சிந்தி பாப்பாவ தீர்த்துட்டு, அப்புறம் பேசறோம்” என இருவருமே பொங்கினார்கள்.

“ரசத்துல அடுப்பு இருக்கு! தோ வந்துடறேன்” என குழப்பி அடித்து இடத்தைக் கழுவினார் அந்த கேடியின் லேடி.

தில்லும்மாவை அசைத்துப் பார்ப்பதில் இரட்டையர்கள் இருவருக்குமே படு தோல்விதான். சிந்தி இப்படி சிந்தி அப்படி என வாயைத் திறந்தாலே அவள் புராணம் பாடுபவரின் வாயில் இருந்து அவள் எங்கிருக்கிறாள் எனும் விஷயத்தை மட்டும் கறக்கவே முடியவில்லை. அவருக்குத் தெரியாமல் போனை நோண்டிப் பார்க்கலாம் என முயன்றாள் நந்தனா. அந்த லேட்டஸ்ட் மாடல் போனோ திறக்கவே முக அடையாளம் கேட்டது. இதற்கிடையில் தில்லும்மாவின் பொறுப்பில் இவர்களை விட்டுவிட்டு தியாஸ் மில்ஸ் வரை சென்று வந்திருந்தான் ரிஷி. அவர்கள் அலுவலுகத்தின் உள்ளே நுழையக் கூட முடியவில்லை. அவ்வளவு டைட் செக்கியூரிட்டி. அலுவலுகத்தின் உள்ளே நுழைவதே இந்தப் பாடாய் இருக்கும் போது, வீட்டை எங்கிருந்து கண்டுப்பிடிப்பான் இவன். சோசியல் மீடீயாவில் எதாவது கிடைக்குமா என தேடினால் அவளது ப்ரோபைல் லாக் செய்து வைக்கப்பட்டிருந்தது. எங்கு சென்றாலும் முட்டு சந்தில் முட்டிக் கொள்ளும் நிலை ரிஷிக்கு. நொந்து நூடுல்சாகி போனான். இங்கே சிந்தியாவை தேடும் நேரம் முழுவதும், அங்கே தங்கையும் அவள் பெற்ற செல்வங்களும் என்ன செய்கிறார்களோ என வேறு மனம் பதைத்துப் போய் கிடக்கும் இவனுக்கு.

இவன் என்ன தொழிலதிபனா, சொடுக்குப் போடும் முன் காணாமல் போன ஹீரோயினின் ஃபுல் டீட்டேயில் மடி மேல் வந்து விழ!!! முட்டி மோதி தொழிலில் தனக்கென்று ஒரு இடம் பதிக்கப் போராடிக் கொண்டிருக்கும் சாதாரண சாக்லேட் மேக்கர். நான்கு நாள் கடை அடைத்தால், ஐந்தாவது நாள் ரோலிங் செய்ய முடியாமல் திண்டாடி போகும் வளர்ந்து வரும் ஓர் இளம் ஒண்ட்ரெப்ரெனெர்(entrepreneur). (அதாவது புதியதாக சிந்திந்து, ரிஸ்க் எடுத்து ஒரு பிஸ்னசை செய்பவன்)

காதல் கொண்ட மனது தவித்துப் போய் கிடக்க, கடமை உணர்வு அதை ஏறி மிதிக்க, எந்நேரமும் தடுமாறி தத்தளித்துக் கொண்டிருந்தான் ரிஷிநந்தன்.

“நந்தா சார் குடுக்கற சம்பளம் பத்தல! அதனால இன்னும் கொஞ்சம் சம்பாரிக்க இன்சுரண்ஸ் ஏஜேண்ட் ஆகிட்டேன். முத கஸ்டமரே நீதான் நந்து! உன் கையால ஒரு போலிசி போடேன்! உன் கை ராசி நான் பெரிய ஏஜேண்டா ஆகி கொள்ளை கொள்ளையா சம்பாரிப்பேன்னு சொன்னாடா! நானும் புள்ள சம்பாரிக்கத்தானே வழி கேக்கறா, ஒரு போலிசி எடுப்போம்னு சைன் போட்டேன். மேலோட்டமா படிச்சேன்டா. மாசம் இருநூறு வெள்ளி கட்டற சேவிங் ப்ளான்னு போட்டிருந்துச்சு. அதான் தைரியமா சைன் வச்சேன்.”

“என் கிட்ட ஏன் நீ சொல்லல?”

“அவ தான் சொன்னா, நீ ஒரு முசுடு! ஏற்கனவே பார்ட் டைம் வேலை பார்க்கற, இதுல இன்னொரு பார்ட் டைம் ஏஜேண்ட் வேலையான்னு வாய வச்சிடுவ! அது அவ தன்மானத்த தூண்டி வேலையாச்சு மண்ணாச்சுன்னு தூக்கிப் போட்டுட்டு போக வச்சிடும்! அதனால பிறகு சொல்லிக்கலாம்னு சொன்னா. ஒருத்தவங்க வளர்ச்சில என் சகோதரன் முட்டுக்கட்டையா இருக்கறதான்னு நானும் அப்படியே சொல்லாம விட்டுட்டேன். அதோட அவ சொன்ன மாதிரியே நீ எதாச்சும் சத்தம் போட்டு, அவ நம்மள விட்டுப் போயிடுவாளோன்னு பயத்துலயும் உன் கிட்ட சொல்லல! அப்புறம் ஹாஸ்பிட்டல் ஸ்டே, பேபி பொறந்ததுன்னு மறந்தே போச்சு நந்தா”

“நந்து! உன்னோட சைன்ல இருந்து அடையாள அட்டை வரைக்கும் அவ கிட்ட குடுத்துருக்க! இவளே ஒரு ஃப்ராடா இருந்தா என்ன ஆகிருக்கும்? இந்நேரம் உன் வீடு, மாமாவுக்கு கிடைச்ச இன்சுரன்ஸ் காசு எல்லாமே ஸ்வாஹா ஆகிருக்கும்!” என கடிந்துக் கொண்டான் ரிஷி.

“சும்மா சும்மா எகிறாதே! அவள பார்த்ததும் எனக்கு புடிச்சது! என் உள்ளுணர்வு சொன்னது அவ தப்பானவ இல்லைன்னு. அவள கடைக்குள்ளயும் விட்டேன், வீட்டுக்குள்ளயும் விட்டேன். நம்புனா முழு மனசோட நம்புவா இந்த நந்தனா! நானாச்சும் வீட்டுக்குள்ளத்தானே விட்டேன். நீ மனசுக்குள்ளயே விடல! நடந்தது நடந்துருச்சு. குதி குதின்னு குதிக்காம, இனி மேல என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.”

“டாக்குமேண்ட் எல்லாம் பக்காவா ரெடி பண்ணிருக்கா அந்தக் கேடி. லீகலா பைண்ட் பண்ணி இன்னிக்கு கடைக்கு அனுப்பி வச்சிருக்கா வக்கீல் மூலமா. உன் பேர்லயும் பெரியவ பேர்லயும் லட்சக்கணக்குல இன்வெஸ்ட்மேன்ட் ப்ளான் வாங்கிருக்கா! அதுவும் லோ ரிஸ்க் இன்வெஸ்ட்மேண்ட். போட்ட பணத்துக்கு எந்த சேதாரமும் ஆகாது. பெரியவளுக்கு 18 வயசுல பாதி பணம் ஸ்டடிஸ்கு ரிலீஸ் ஆகும். பெரியவ வாழ்க்கைக்கு வழி பண்ணிட்டா. சின்னவ இப்போத்தானே பொறந்தா! அவளுக்கு நாம பேர்த் சர்ட்டிபிக்கேட் கூட எடுக்கலல இன்னும். அதனால அவளுக்கு லீகலா ஒன்னும் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுதான் உன் பேருலயும் இன்வெஸ்ட் செஞ்சிருக்கான்னு நினைக்கறேன். நீ சின்னவள செட்டில் பண்ணிடுவன்னு அவ நினைச்சிருக்கலாம். ஆனா, இவ காச நமக்கு ஏன் வாரி இறைக்கனும்?” என கேட்டவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.

“எனக்கு இந்தப் பணம் எதுவும் வேணா நந்தா”

“ஒன்னும் செய்ய முடியாது இதுல. எல்லாத்துக்கும் சரின்னு சைன் பண்ணிருக்க!”

“டேய் டேய்! அப்படிலாம் இல்லடா. நம்மளால கட்ட முடியாதா இந்த இருநூறு வெள்ளின்னுதாண்டா சைன் வச்சேன். அத வச்சு இவ வேற டாக்குமேண்ட் ரெடி பண்ணிருப்பான்னு நான் ஜோசியமா பார்த்தேன்.” என புலம்பினாள் நந்தனா.

“அட! வீட்டுக்கு மகாலெட்சுமி வந்துருக்கா! அத கொண்டாடாம, ரெண்டு பேரும் மூஞ்ச ஏழு முழம் தூக்கி வச்சிருக்கீங்க! திடீர் பாயாசம் செஞ்சுருக்கேன், வந்து சாப்பிடுங்க! வாங்க வாங்க” என அழைத்தார் தில்லும்மா.

“இந்த பணமா மகாலெட்சுமி? இருண்டு கிடந்த எங்க வாழ்க்கையில் வெளிச்சத்த தந்து, என் உயிரையும் என் மக உயிரையும் காப்பாத்தி, அன்ப வாரி வாரி தந்த உங்க சிந்தி பாப்பாத்தான் எங்களுக்கு மகாலெட்சுமி. அவ குடுத்த பணம் இல்ல” என பட்டென சொன்னாள் நந்தனா.

“நாள் எடுத்தாலும் இந்தப் பணத்த என்னாலயும் சம்பாதிக்க முடியும்! ஆனா உங்க சிந்தி பாப்பா பக்கத்துல இல்லாம எவ்ளோ சம்பாரிசாலும் நான் ஏழைதான்! வா நந்து, வந்து சாப்பிடு! நேரத்துக்கு சாப்பிடலனா எப்படி எனர்ஜி இருக்கும்!” என சொல்லியவன், சீனி பாப்பாவை கையில் ஏந்தியபடியே தமக்கையை சாப்பிட அழைத்து சென்றான்.

“இன்னிக்கு நீ முழுசா சாப்பிட்டு முடிக்காம, நான் விடமாட்டேன். எப்ப பாரு சாப்பாட்ட கொரிக்கற! இப்படியே போனா வேலை செய்ய எப்படி வலு இருக்கும்!” என அவனைக் கடிந்தப்படியே கூட நடந்தாள் நந்தனா.

இரட்டையர்களின் பாச பிணைப்பையும் அவர்கள் தன் சிந்தி பாப்பாவின் மேல் வைத்திருக்கும் அன்பையும் பார்த்துப் பூரித்துப் போனார் தில்லும்மா.

“இன்னிக்கு பாப்பாக்கு வீடியோ கால் போட்டு, இவங்களயும் உட்கார வச்சி சுத்திப் போட்டுடனும். என் கண்ணே பட்டுருச்சு”

டெக்னோலோஜியால் தீமைதான் என யார் சொன்னது!!!கண்டம் விட்டு கண்டம் உள்ளவர்களுக்கும் திருஷ்டி சுற்றிப் போட யூஸ் ஆகும் தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதமல்லவா!!!!!

பென்சில்வேனியாவில் இருந்த நாட்களில் நன்றாக ஊர் சுற்றி, ஷாப் ட்டில் ட்ராப் என சொல்வார்களே அது போல விழுந்து எழுந்து ஷாப்பிங் செய்து, தன்னை பிசியாகவே வைத்துக் கொண்டாள் சிந்தியா. அடிக்கடி தில்லும்மா அனுப்பும் வீடியோக்களின் வழி இரட்டையர்களையும், குழந்தைகளையும் பார்த்து தன்னை உயிர்ப்பாய் வைத்துக் கொண்டாள். இரவில், ரிஷியுடன் பழகிய ஒவ்வொரு நிமிடங்களையும் மனக்கண் முன் கொண்டு வந்து மீண்டும் ஒரு முறை வாழ்ந்துப் பார்த்து ரசித்து மகிழ்ந்தாள்.

கிளம்பும் நாளும் வந்தது. தன் அன்பிற்குரியவனை அணைத்து, அழுது, சீக்கிரம் வர வேண்டும் என அன்பு கட்டளையிட்டு விடைப் பெற்று கிளம்பி வந்தாள் சிந்தியா.  

ப்ராசிடர்களை முடித்து, லக்கேஜ்ஜை கலேக்ட் செய்து கொண்டு வெளியே வந்தாள் அவள். கண்ணில் இருந்த கூலர்சை தலைக்கு ஏற்றி விட்டு, மெல்ல ட்ராலியைத் தள்ளிக் கொண்டே வந்தவள் கண்களில் விழுந்தான் அவன். கையைக் கட்டிக் கொண்டு தன்னையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவனை பார்த்ததும் முகம் மலர்ந்துப் போனது சிந்தியாவுக்கு. லக்கேஜ்ஜை அப்படியே விட்டவள், பாய்ந்து ஓடினாள் அவன் அருகில். வழக்கம் போல தடுமாறி விழப் போனவளை அள்ளி வாரி அணைத்துக் கொண்டான் ரிஷி.  

“லவ் யூ ரிஷி! லவ் யூ ரிஷி! லவ் யூ ரிஷி” என ஜபித்தவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் அவன்.

முகம் விகசிக்க, பேதி வந்த பேட்ஜர் (இது பேரு தமிழ்ல என்னனு தெரியல. படம் போட்டிருக்கேன். தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளிஸ்) போல இளித்தவளின் கன்னத்தை முத்தத்தால் பதம் பார்த்தான் ரிஷிநந்தன்.

‘கைகளில் சேர்ந்தாள் மங்கை

இனி தினம் ஊதப்போறா உனக்கு சங்கை!!!!’

 

(உருகுவான்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!