Uyir Vangum Rojave–EPi 16

Uyir Vangum Rojave–EPi 16
அத்தியாயம் 16
கல்யாணம் பண்ணிட்டு கசமுசா பண்ணா ஹீரோ
கசமுசா பண்ணிட்டு கல்யாணம் பண்ணா வில்லன்
(சந்தானம் – தீயா வேலை செய்யனும் குமாரு)
வீடு கிரகப்பிரவேசம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. தேவியும் வேந்தனும் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்திருந்தனர். தேவி ஓடிவிட்டு வருவதற்குள் வேந்தனும் யோகாசனம் முடித்து விட்டு குளித்து ரெடியாகி இருப்பான்.
கார்த்திக் எப்பொழுதும் போல் காலையில் அவர்கள் வீட்டுக்கு வந்து விடுவான். தேவி கிளம்பி வந்ததும் மூவரும் ஒன்றாக உணவருந்துவார்கள். வேந்தன் எது கேட்டாலும் செய்து கொடுக்கும்படி முனிம்மாவுக்கு தேவியிடம் இருந்து உத்தரவு. காலையில் மட்டும் தான் தானாக சாப்பிடுவாள் அவள். பகல் வேளையில் இருவரும் தனித்தனியே வெளியே சாப்பிட்டுக் கொள்வார்கள். இரவில் மட்டும் இவன் தான் அவளுக்கு ஊட்டி விட வேண்டும். முதலில் அவள் ஆசையாகக் கேட்ட போது வெகுவாக தயங்கினான். கண்டிஷன் நம்பர் ஓன் என சொல்லித்தான் வழிக்கு கொண்டு வந்திருந்தாள் தேவி. அவளுக்கு ஊட்டிவிட்டு தான் அவன் சாப்பிடுவான். அந்த நேரம் அவன் சாப்பிடும் அழகை கண் எடுக்காமல் பார்ப்பாள் தேவி.
‘இப்படி கண்ணு வச்சா சாப்பிடறது ஒட்டுமா?’ என மனதிலேயே புலம்புவான் வேந்தன்.
காலை வேளையில் கார்த்திக் இவர்கள் இருவரையும் கண்டு கொள்ள மாட்டான். (சாப்பிட) வந்த வேலையை கரெக்டாக செய்வான்.
“மலர்! எப்படி இவ்வளவு காரமா சாப்பிடற? கேஸ்ட்ரிக் வந்தற போகுது. இனிமே காரத்தை குறைச்சிக்க. முனிம்மா, சாருக்கு இனிமே காரத்தைக் குறைச்சு சாப்பாடு போடுங்க” உத்தரவிட்டாள் தேவி. நேற்று நடந்த சம்பவத்திலிருந்து அவன் மேல் இன்னும் அக்கறை வந்திருந்தது தேவிக்கு.
‘ரோஜா செல்லம்! இந்த வீட்டுல நான் பார்க்கற உருப்படியான வேலையே சாப்பிடறது தான். உனக்கு அது கூட பொறுக்கலையா?’ குமுறினான் வேந்தன். ஆனாலும் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை. வெட்கம் வந்து தடுத்தது.
“ஆமாம் மேடம். சாரோட குடும்ப ஹிஸ்டரில வேற, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நிறைய இருக்கு. நீங்க எடுத்த முடிவு தான் சரி” என கார சட்னியை வழித்து சாப்பிட்டுக்கொண்டே தேவியை ஏற்றிவிட்டான் கார்த்திக். தேவி பார்க்காத போது, வேந்தனைப் பார்த்து கண் சிமிட்டி சிரிக்கவும் மறக்கவில்லை அவன்.
‘எல்லாம் நல்லா நடுந்துடுச்சு போல. வேந்தன் முகத்துல பல்பு எரியுது’ சிரித்துக் கொண்டான் கார்த்திக்.
‘ஏன்டா, கடன்காரா நீயுமா? மொக்கறதப் பாரு பத்து நாளு பஞ்சத்துல அடிப்பட்டவன் மாதிரி. உனக்கெல்லாம் சுடுதண்ணீ கூட வைக்கத் தெரியாதவ தான் பொண்டாட்டியா வருவா’ சாபம் கொடுத்தான் வேந்தன்.
பகலில் இரண்டு நாட்கள் அம்மா வீட்டுக்கு சென்று விடுவான் அவர் கையால் சாப்பிட. மீதம் இரு நாட்கள் கடையிலும், ஒரு நாளை லட்டுவின் காலேஜ் கண்டீனில் அவளிடம் பேசியபடியும் உணவருந்துவான். இன்று லட்டுவைப் பார்க்கும் நாள். இருவரிடமும் சொல்லி விட்டுக் கிளம்பினான். லன்ச் டைமுக்கு கரெக்டாக காலேஜ் செல்ல வேண்டும் என திட்டமிட்ட படியே நடந்தவனை,
“மலர் கொஞ்சம் ரூமுக்கு வா. என்னோட பைலை காணோம்” என்ற தேவியின் குரல் அழைத்தது.
உள்ளே சென்றவனை, கதவின் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள் தேவி.
“என்ன பார்த்து என்ன வெட்கம் மலர்?” அவன் முகத்தைப் பிடித்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“ஐ லவ் யூ மலர்” ஆசையாக சொன்னாள்.
“மீ டூ” என சொன்னவன் வேகமாக அறையை விட்டு ஓடிவிட்டான்.
காலேஜ் காண்டீனில் சாப்பாடு வாங்கி கொண்டு அமர்ந்தார்கள் இருவரும்.
“எப்படிணா இருக்க? ரொம்ப இளைச்ச மாதிரி இருக்க. அந்த வீட்டுல சாப்பாட்டை உன் கண்ணுலயே காட்டுறது இல்லையா?”
“நம்ம வீட்டுல சாப்பிடற மாதிரி இல்லடா. ஹ்ம்ம். என் கதைய விடு.உன் படிப்பெல்லாம் எப்படி போகுது?”
“வரப்ப எல்லாம் இதையே கேப்பியா? நல்லா போகுது. லாஸ்ட் செம் இன்னும் ரெண்டு மாசத்துல முடியுது. அதுக்கு அப்புறம் வேலைக்கு போகலாம்னு இருக்கேன். நீ தான் முடியாது இன்னும் படின்னு சொல்லுற” குறைப்பட்டுக் கொண்டாள்.
“நீ அதுக்குள்ள வேலைக்கு போயிட்டா, அப்புறம் பொண்ணு குடுன்னு வந்து நிப்பானுங்க. ஏற்கனவே அங்க இங்க பார்த்துட்டு அம்மாகிட்ட சில பேரு உன்னைப் பத்தி விசாரிக்கறாங்க. எத்தனை பேருக்கு தான் சொல்லுறது மூத்தவளுக்கு முடிச்சுட்டு தான் உனக்குன்னு. அதோட இன்னும் படிக்கிறன்னு சமாளிக்கறோம். நம்ப சொந்தக்காரங்க எல்லாருக்கும் மண்டையில மசாலா தான் இருக்கு. நம்ப அனு சின்ன வயசுல சீக்கா இருந்தா. என்னமோ அவ இன்னும் படுத்த படுக்கையா இருக்கற மாதிரி அவளை பொண்ணெடுக்கவே பயப்படுறானுங்க. இதுல இந்த மதனோட மன்மத லீலை வேற. வெறுப்பா இருக்கு.”
“கவலைப் படாதே அண்ணா. அனுக்குன்னு இன்னொருத்தன் இனிமேலா பொறந்து வர போறான். நேரம் வரும் போது அவளுக்கும் எல்லாம் கரெக்டா நடக்கும். அவ அருமை யாருக்கும் தெரியலை. சரி விடு, நான் இன்னும் கொஞ்ச நாளைக்கு படிப்ப கன்ட்டினியூ பண்ணுறேன்.”
“மனசு ரொம்ப கஸ்டமா இருக்கு லட்டும்மா. அனு படிப்புலயும் சுமார் தான், அம்மா பைத்தியம் வேற. பேசற சத்தம் கூட வெளிய கேக்காது. வேலைக்கு ட்ரை பன்ணுற எடத்துல எல்லாம் இவ அமைதிய பார்த்தே ரிஜேக்ட் பண்ணிருறாங்க.”
“அத ஏண்ணா கேக்குற. ஆபிஸ் வேலைதான் கிடைக்க மாட்டிக்கிதேன்ற விரக்தியில நேத்து ஒரு சூப்பர் மார்க்கேட்டுக்கு கேசியர் வேலை கேட்டு போயிருக்கா. அந்த மேனேஜர் ஒரு நாற்காலிய குடுத்து, அதை தூக்க சொன்னாறாம். ஏன்ன்னு கேட்டதுக்கு இப்படி ஒடிசலா இருக்கியே, வேலை செய்ய பலம் இருக்கான்னு செக் செய்யத்தான்னு சொல்லி இருக்காரு. மேடம் அழுது கிட்டே காருல வந்துருக்கா. நம்ப செக்குரிட்டி சிவப்பு சொக்கா, அந்த மேனஜர் தான் இவள என்னமோ பண்ணிட்டான்னு அவனை தூக்கிப் போட்டு அடிச்சு, ஒரே ரகளை. அப்புறம் விவரம் தெரிஞ்சு அவரே செட்டில் பண்ணிட்டு வந்திருக்காரு. நீ டென்ஷன் ஆகிருவன்னு தான் அம்மா உன் கிட்ட சொல்லல.”
“இவள யாரு திரும்பவும் வேலை தேட சொன்னது? நான் தான் வீட்டுலயே இருக்க சொன்னேனே” நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டான் வேந்தன்.
“அவளுக்கும் வீட்டுக்குள்ளயே அடைஞ்சி கெடக்க முடியலைண்ணா. இனிமே போக மாட்டா. நேத்து சிகப்பு சொக்கா பண்ண ரகளையில ரொம்ப பயந்துட்டா”
“உங்களுக்கு எல்லாம் வசதியா இருக்காம்மா? ஏதாவது பிரச்சனைன்னா நீ தான் என் கிட்ட சொல்லனும். அம்மாவும் அனுவும் எதுக்கும் என் கிட்ட வாய் திறக்க மாட்டாங்க”
“இப்போதைக்கு பிரச்சனை ஒன்னும் இல்ல. நீ சொல்லு, நான் போட்டுக் குடுத்த காரசாரமான பிளான் எந்த அளவுக்கு சக்சஸ் ஆச்சு?” ஆவலாக கேட்டாள் லட்டு.
‘அதை என் வாயால எப்படிம்மா சொல்லுவேன்? பிரிக்கனும்னு நீ போட்டுக் கொடுத்த பிளான்னு எங்கள கோர்த்து விட்டுருச்சே. பிரிஞ்சி போக நீ பண்ண பிளான்னு எங்கள பிசைஞ்சி போட்டுருச்சேம்மா’ அவன் அமைதியைப் பார்த்த அவள்,
“இது சொதப்புனா சொதப்பிட்டு போகுது. நெக்ஸ்டு?”
‘எனக்கு ரெஸ்ட்டு. சங்கூதற வயசுல சங்கீதான்னு பேரு வச்சாங்கலாம். அது போல தோத்து போன எனக்கு எதுக்குமா இனிமே வேற பிளான்னு?’ என மனதிலே கவுன்டர் கொடுத்தான் அவன். வாயைத் திறந்து தங்கையிடம் கூட சொல்ல முடியவில்லை அவனால்.
நேற்றைய இரவின் ஞாபகங்கள் நிழலாடின அவன் மனதில்.
லட்டு சொல்லிக் கொடுத்த படியே, தேவி குளித்து விட்டு வருவதற்குள் அவளுக்கு சாதத்தைப் பிசைந்து வைத்துக் கொண்டு காத்திருந்தான். ஊசி மிளகாய் ஊறுகாயை சாதத்தில் பிசைந்திருந்தான். லட்டு இரண்டு கரண்டி போட சொல்லியிருந்தாள். இவன் தான் மனம் கேட்காமல் அரை கரண்டி போட்டிருந்தான்.
ஆசையாக அவன் பக்கத்தில் வந்து அமர்ந்து ஆவேன தன் பிங்க் அதரங்களை திறந்தாள் தேவி. கை நடுங்க ஒரு வாய் ஊட்டினான். அவள் சாப்பிட்டவுடன் மீண்டும் மறு வாய் ஊட்டினான். அப்பொழுதுதான் அவளுக்குக் காரம் உறைக்க ஆரம்பித்திருந்தது. அவன் கண்களை நோக்கியவள்,
“எனக்கு காரம் ஆகாதுன்னு தெரியும் தானே மலர்?”
ஆம் என்றும் இல்லை என்றும் ஒரு மாதிரியாக தலையாட்டினான் அவன்.
“அப்போ தெரியும்? தெரிஞ்சும் காரத்த கலந்துருக்க. சரி உன் ஆசையா ஏன் கெடுப்பானேன். இன்னும் ஊட்டு” என கட்டளை இட்டாள். அதற்குள் அவள் நாக்கு, முகம், கழுத்து என சிவந்து போயிருந்தது. வேந்தன் முடியாது என தலையாட்டினான்.
“இப்ப நீ ஊட்டுறியா இல்ல நானே சாப்பிடவா?” மிரட்டலாக குரல் வந்தது.
“தெரியாம கலந்துட்டேன் ரோஜா. வேண்டாம் விடு. கண்ணுல தண்ணி வருது பாரு. இந்தா குடி” என தண்ணீர் தம்ளரை நீட்டினான்.
அவனை முறைத்தவள் பிடிவாதமாக தட்டைப் பறித்து உணவை அள்ளி வாயில் வைத்தாள். கண்ணீரை துடைத்துக் கொண்டே மீண்டும் மீண்டும் சோற்றை வாயில் திணித்தாள். வேந்தன் மிரண்டு விட்டான்.
அவள் கையிலிருந்த தட்டைக் கீழே தட்டி விட்டான். தண்ணீரை குடிக்க மாட்டேன் என இருக வாயை முடி இருந்தவளை என்ன செய்வது என்றே அவனுக்குத் தெரியவில்லை. அவள் முகத்தை ஒரு பக்கமாக அவன் நெஞ்சில் சாய்த்து, உதட்டை பலம் கொண்ட மட்டும் திறந்து தண்ணீரை ஊற்ற பாடுபட்டான். அவள் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. இன்னும் சிவப்பேறிக் கொண்டே போகும் அவள் முகத்தைப் பார்த்து அவனுக்கு பதட்டம் ஏறியது.
“ரோஜா! என்னை மன்னிச்சிருடா. இனிமே இப்படி காரத்தைப் போட மாட்டேன். ப்ளிஸ்டா. தண்ணி குடி.” கிட்ட தட்ட கெஞ்சினான். அதற்கும் பலன் இல்லை.
“ஏன்டி என்னை இப்படி கொல்லுற? ப்ளிஸ்டி ரோஜா. என் கண்ணுல” குரல் கரகரத்தது வேந்தனுக்கு. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர, பிடிவாதத்தைத் தளர்த்தவேயில்லை.
வேறு வழியின்றி அவளது முகத்தை நிமிர்த்தி தன் முதல் முத்திரையை அவள் இதழ்களில் அவசரமாக பதித்தான் வேந்தன். ஒரு நொடி அதிர்ந்தவள் ,பின் அவனைத் தள்ள முற்பட்டாள். இறுக அவள் கன்னங்களைப் பற்றி அவளது முயற்சியை சுலபமாக முறியடித்தான் அவன். மெல்ல மெல்ல அவன் வசமானவள், வேந்தனின் தோள்களில் மாலையாக கைகளைக் கோர்த்துக் கொண்டாள். அவளது காரத்தைத் தன் வாய்க்கு மாற்றிக் கொள்ளும் மிஷனில் இறங்கி இருந்த வேந்தன் அப்படியே மிசினில் அரைப்பட்ட கரும்பு போல் நிலைக் குலைந்து போனான்.
“டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா”
கார்த்திக்கின் பாட்டும் கணைப்பு சத்தமும் தான் இருவரையும் பூமிக்கு இழுத்து வந்தது. சட்டென விலகிய வேந்தன், தண்ணீர் தம்ளரை தேவியின் கையில் திணித்தான்.
“குடி ரோஜா” என முகத்தைப் பார்க்காமல் சொன்னவன் , அவள் தம்ளரை வாங்கியதும் கார்த்திக்கை நோக்கித் திரும்பினான்.
“என்னடா இந்த நேரத்துல?”
“ஹ்ம்ம் புரியுது மாமு. என்னடா இந்த நேரத்துல சிவ பூஜையில கரடின்னு கேக்குற?” என கிசு கிசுப்பாக கேட்டான்.
“அது வந்து, நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லைடா”
“டேய், கல்யாணம் வேணான்னு சொல்றான் பாத்தியா அவன கூட நம்பிறலாம். ஆனா தங்கச்சி கல்யாணம் முடிஞ்சு தான் தனக்கு எல்லாம்னு சொல்லுறான் பாத்தியா, அவன மட்டும் நம்பவே கூடாதுடா” என வேந்தனை ஓட்டி எடுத்தான் கார்த்திக்.
கடுப்பான வேந்தன்,
“நீ முதல்ல எதுக்கு வந்தேன்னு சொல்லி தொலை” என எரிந்து விழுந்தான்.
“நான் தான் வர சொன்னேன். அந்த கொட்டேஷன இப்படி குடு கார்த்திக்” என பைலை வாங்கியவள் , விடு விடுவென மேலேறி சென்று விட்டாள்.
“மச்சி, மேடம் சூடா போறாங்க. என்ன பண்ண? ஐ மீன், இந்த கச்சா முச்சாவ மைனஸ் பண்ணிட்டு சொல்லு. வயசு பையன் அதை எல்லாம் கேட்டா கெட்டு போயிருவேன். எங்க வீட்டுல பிரிட்ஜ் வேற இல்லை” கண்களால் சிரித்தான் கார்த்திக்.
“ஒன்னும் இல்லடா. கொஞ்சமா காரம் குடுத்துப் பழக்கினேன். அதுக்கு கோவிச்சுக்கிட்டாங்க”
‘மொச புடிக்கற நாய மூஞ்சப் பாத்தா தெரியாது? ஏன்டா மேடத்துக்கு உறைப்பக் குடுத்து காலி பண்ண பாக்கறியா. இரு இன்னிக்கு உனக்கு ஆப்ப அழகா சொருகிட்டு போறேன்’
“அவங்க அப்படித்தான்டா. எதையும் சீக்கிரமா பழகிக்க மாட்டாங்க. நீ அதை எல்லாம் மனசுல வச்சிக்காதே. என்ன முகமெல்லாம் சோர்ந்து போய் கிடக்கு? வா, வந்து சாப்பிடு. நான் போய் பாதாம் பால் எடுத்துட்டு வரேன்.”
சொல்லிவிட்டு பின்னால் வழியாக காருக்கு சென்றவன், பப்புக்கு போகும் போது நண்பன் ஒருவன் கொடுத்த மருந்தை டேஸ்போர்டிலிருந்து எடுத்து வந்தான். ஆண்களுக்கு ஆசை அதிகம் வர வைக்க கூடிய ப்பில் அது. தூக்கி வீச மறந்து டேஸ்போர்டிலே இருந்தது. இன்றுதான் அதற்கு வேலை வந்திருந்தது.
‘மச்சி நீ இன்னைக்கு பண்ணத யோசிச்சுப் பார்த்தா ஒன்னு மேடத்தை காலி பண்ண பிளான் போட்டிருக்கனும். இல்ல பிரிஞ்சு போக நினைச்சிருக்கனும். கண்டிப்பா காலி பண்ணுற அளவுக்கு நீ இறங்க மாட்ட. பிரியத்தான் நினைச்சிருப்ப. அது நான் உசுரோட இருக்கற வரைக்கும் நடக்காது. உன்னை மாதிரி ஒரு பாசக்காரன் அவங்களுக்கு கிடைக்க மாட்டான். உன் முகத்தையும் நடந்துக்கற விதத்தையும் பார்த்தா கண்டிப்பா உங்களுக்குள்ள ஒன்னும் நடக்கலைன்னு புரியுது. தப்புன்னு ஒன்னு நடந்துட்டா நீ கண்டிப்பா அவங்கள விட்டுப் போக மாட்ட. அதென்ன தப்பு? கல்யாணம் பண்ணிட்டு கசமுசா பண்ணாட்டி தான் தப்பு. புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடந்தா அது ரைட்டு தான். இப்ப உன்ன ரைட்டான பாதைக்கு நான் தள்ளி விடறேன். அதுக்கு மேல ஆண்டவன் விட்ட வழி’
மருந்தை இடித்துப் பாலில் கலந்தவாறே மெல்லிய குரலில் பாடினான் கார்த்திக்.
“ஜிங்ஜினக்கு ஜனக்கு
நான் சொல்லி தரேன் கணக்கு
பூவாச்சு செங்காயாச்சு
அது கனியாச்சு இப்போது”
“என்ன கார்த்திக், இவ்வளவு சந்தோஷமா பாடிக்கிட்டு வர?”
“அதுவா மச்சி, நல்ல காரியத்துக்கு பிள்ளையார் சுழி ஒன்னு போட்டிருக்கேன். அதான் சந்தோசம்”
“நீ நினைச்ச காரியம் நல்ல படியா நடக்க வாழ்த்துக்கள் டா. சரி பாலை குடு குடிச்சுட்டுப் படுக்கறேன்” என வாங்கி பாதி அருந்தியவன்,
“உனக்கு மச்சி? ஓன் பை டூ வேணுமா? நம்ப காலேஜ்ல குடிப்போமே அப்படி” என கேட்டான்.
“ஐயய்யோ வேணாம் மாமு. எனக்கு பாலுன்னாலே அலர்ஜி. இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு மச்சி. அதனால பால் குடிக்கறதையே விட்டுட்டேன்”
“சரி விடு, நீ செத்தா மட்டும் பாலுக்கு பதிலா காப்பி ஊத்த சொல்லுறேன். இப்ப நீ நடையைக் கட்டு” என அவனை அனுப்பியவன் மெல்ல படியேறினான்.
ரூமில் தேவி யோசனையில் அமர்ந்திருந்தாள். ‘எனக்கு ஒத்துக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி செஞ்சான் மலர்? எனக்கு கோபமூட்டிப் பார்க்க ஆசைப்படறானா? எதனால? ஓ! நானா டைவர்ஸ் பண்ணுவேன்னு காய நகர்த்தறான் போல. ஹ்ம்ம். அப்புறம் ஏன் அப்படி துடிச்சான்? பிரியனும்னு நினைக்கிறான், ஆனா என்னை துன்பப் படுத்தி பார்க்க முடியல.’ மெல்லிய புன்னகைப் பூத்தது அவளுக்கு.
‘மலர், நீ நிஜமாலுமே ரொம்ப மென்மையானவன்டா. உன்னை எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் பிரிய மாட்டேன். ஐ நீட் யூ இன் மை மிசரபள் லைப்’
அந்த நேரம் வாட்ஸாப் மேசேஜ் கார்த்திக்கிடம் இருந்து வந்தது. வேந்தன் சாப்பிடும் நேரத்தில் அதை அனுப்பி இருந்தான்.
“மேடம், வேந்தனுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்னு கேட்டீங்களே? அவனுக்கு பாட்டு பிடிக்கும்னு உங்களுக்கே தெரியும். அதுவும் இந்த பாட்டு பாடுனீங்கன்னா அப்படியே மயங்கிருவான்” என டைப் செய்து, ஆங்கிலத்தில் பாடல் வரியையும், யூ டியூப்பில் பாடல் வீடியோவையும் அனுப்பி இருந்தான்.
வேகமாக பாடலை மனனம் செய்தவளுக்கு ராகம், சுருதி, ஸ்வரம் என்பதெல்லாம் என்னவென்று தெரியாது. அவள் கேட்பதெல்லாம் ஆங்கில பாடல்கள் தான்.
உள்ளே நுழைந்த வேந்தனை கைப் பிடித்து அழைத்து சென்று கட்டிலில் தன் அருகில் அமர வைத்துக் கொண்டாள் அவள்.
“மலர், உனக்கு பாட்டுனா ரொம்ப பிடிக்குமில்ல? உனக்கு நான் ஒரு பாட்டு பாடவா?” என ஆசையாகக் கேட்டாள்.
மருந்து இன்னும் வேலையை காட்டி இருக்கவில்லை. வேந்தன் தெளிவாக தான் இருந்தான். அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவன்,
“பாடுங்க ரோஜா” என்றான்.
குரலைக் கணைத்துக் கொண்டவள் அவனைக் கண்ணுக்கு நேராகப் பார்த்து,
‘மலரே! மோனமா மோனமே வேடமா’
இசை எனும் இன்ப வெள்ளத்தில் மூழ்க காத்திருந்த வேந்தனுக்கு, கல்ப்ஸ் அக்காவுக்கு போட்டியாக பாட ஆரம்பித்த தேவியைப் பார்த்து சிரிப்பு தாளவில்லை. கஸ்டப்பட்டு முகத்தை நார்மலாக வைத்திருந்தான்.
‘மலர்கள் பேசூமா பேசீனால் ஓய் உம்ம்மா அம்பே’
‘என்னாது உம்மாவா? இப்பத்தானே கீழ குடுத்தேன். இன்னும் வேணும்னு சிம்பாலிக்கா கேக்குறாளோ?’ இப்பொழுது மருந்து மெல்ல வேலை செய்ய ஆரம்பித்திருந்தது.
‘பாடி ஜீவன் கொண்ட்டு டேகம் வாண்டு வண்டதோ… ஹா’
அவள் இழுத்த ஹாவில் அப்படியே சொக்கிப் போனான் வேந்தன்.
விரலை அவள் உதட்டின் மேல் வைத்தவன், மிச்ச பாடலை அனுபவித்து தானே பாடினான்.
‘மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ…ஓ
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா
விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா’ பாடி முடித்தவன் அவளை மார்போடு தழுவிக் கொண்டான்.
(உயிரை வாங்குவாள்…)