அனல் அவள் 17
மாடியில் பேச்சு வார்த்தை முடிந்து மூவரும் கீழே இறங்கி வர மித்ரனும் தென்றலும் ஒருவர் முடியை ஒருவர் பிடித்து இழுத்தப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களை பிரிக்கும் வழி தெரியாது லக்ஷ்மியும் வள்ளியும் முழித்துக் கொண்டிருந்தனர்.
“இரண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என விவேகன் கேட்கவும்,
அவனைத் திரும்பிப் பார்த்த இருவரும் ஒருவரின் மீது மற்றொருவர் குறைக் கூற துவங்கினர்.ஆனால் தலை முடியில் இருந்து இருவருமே கையை விளக்கி கொள்ளவில்லை.
இருவருக்கும் இடையேயான சண்டையின் காரணம் ஒன்று தான் அது ரோஜா பூ படம் வரையப் பட்டிருந்த ஒரு பீங்கான் தட்டு.
அதில் நான் தான் சாப்பிடுவேன் என மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு இடையில் திடீரென கை கலப்பு ஆரம்பம் ஆனது லக்ஷ்மியும் வள்ளியும் எவ்வளவு சமாதானம் கூறியும் இருவரும் அதை காதுக் கொடுத்துக் கூட கேட்கவில்லை.
இவர்களின் சண்டையைப் பார்க்க முருகனுக்கு சுவாரசியமாக இருக்கவும் அவர் அமைதியாக வேடிக்கைப் பார்க்க துவங்கி விட்டார்.
தமிழுக்குமே இந்த சிறுப்பிள்ளை தனமான சண்டை பிடித்துப் போகவும் அவனும் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டான்.
அந்த வீட்டில் இப்போது மீண்டும் மீண்டும் எதிரொளித்துக் கொண்டிருந்தது மித்ரன் மட்டும் தென்றலின் குறல் தான்.
“நான் தான் இதுல சாப்பிடுவேன்” தென்றலும்,
“இல்ல நான் தான் இதுல சாப்பிடுவேன்”
என மித்ரனும் மாறி மாறி ஒரே வரியையே வாசித்துக் கொண்டிருக்க இதற்கு மேல் பொருக்க முடியாது என நினைத்த லக்ஷ்மி.
“ஏன் டா மித்ரா அவ பிடிவாதம் தான் உனக்கு தெரியுமே நீதான் கொஞ்சம் விட்டு கொடுத்து போயேன் அவ சாப்ட அப்பறம் நீ சாப்பிடேன்” என்றாள் சமாதானமாக,
“என்னது இவ சாப்ட அப்பறம் நான் சாப்பிடனுமா சும்மா காமெடிப் பண்ணாமா அந்த பக்கம் போரியா அவ சாப்ட அப்பறம் எனக்கு சோறு இருக்கும்னு நினைக்கிறியா லக்ஸ்” என கூறிய மித்ரன் தென்றலை முறைக்க அவளோ அவனை விட அதிகமாக முறைத்து கொண்டிருந்தாள்,
‘இதற்கு மேல் விட்டால் இருக்கும் ஒரு தட்டையும் இதுங்க உடைச்சுப் போடப்போகுதுங்க’ என எண்ணிய விவேகன், “சரி இரண்டு பேரும் முதல்ல தலையில் இருந்து கைய எடுங்க, நான் இதுக்கு ஒரு வழி பண்றேன்” என்றவன்,
இருவருக்கும் இடையில் உயிருக்கு ஊசல் ஆடிக் கொண்டிருந்த தட்டை எடுத்தவன் அதில் இட்லியை எடுத்து வைத்து அவர்களை அமர வைத்து இருவருக்கும் ஊட்டத் துவங்கினான்.
இப்போதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொள்ள இவர்களின் சேட்டையைப் பார்த்து விவேகன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
பிறகு அனைவரையும் அமர்ந்து சாப்பிட கூறிய விவேகன் இருவருக்கும் ஊட்டிக் கொண்டே அவனும் சாப்பிட,
இதனை இரண்டு ஜோடி விழிகள் அன்பாக பார்த்து கொண்டிருக்க, இரண்டு ஜோடி விழிகள் ஏக்கத்துடனும் ஏக போக கடுப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தது.
ஒரு வழியாக இரவு உணவை அனைவரும் முடித்துக் கொள்ள பெரியவர்கள் அவர்கள் அறைக்கு உறங்க சென்று விட சிறியவர்கள் பட்டாளம் பாய், போர்வை, தலையணை உடன் மாடியை முற்றுகை இட்டனர்.
மாடியில் அமர்ந்த அனைவரும் பொதுவாக பேசிக் கொண்டாலும் விவேகனும் லக்ஷ்மியும் பேசிக் கொள்ளவில்லை.அதேப் போல் தான் தமிழும் தென்றலும் இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்ட மித்ரனுக்கு தான் முழி பிதுங்கி போனது.
பிறகு தென்றல் மெதுவாக விவேகனின் தோள்களில் சாய்ந்து கொண்டவள்.
“ஏன் விவு அந்த பாலாவ என்னைக் கடத்திட்டு போக விட்ட அவன் கடத்துனாலும் ஏன் உடனே என்னைக் காப்பாற்ற நீ வரல நான் தப்பித்து வர வரைக்கும் நீ ஏன் வரல” என கேட்டவளின் குரலில் அத்தனை வருத்தம் இருந்த போதும் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லை.
இதனைக் கண்ட லக்ஷ்மி மித்ரனிடன்,
“ஏன் டா மித்ரா இவளுக்கு என்ன ஆச்சி எப்படி நடந்துச்சி இந்த அதிசயம் தொட்டதுக்கு எல்லாம் லிட்டர் லிட்டரா கண்ணீர் விடுவா அதுக்காகவே தண்ணீ குடிப்பா இப்ப என்னடானா இவ்ளோ பெரிய சம்பவம் நடந்து இருக்கு ஒரு சொட்டு தண்ணீ கூட வரல அவ கண்ணுல இருந்து”
“அத ஏன் கேக்குற” என சோகம் போல் ஆரம்பித்த மித்ரன் அன்று விவேகன் வாங்கிய சத்தியத்தைப் பற்றி கூற லக்ஸ் தலையில் அடித்துக்கொண்டு விவேகன் பேசுவதை கவனிக்கலானாள்.
“அதுவா நீ உன் ஹீமேன் மந்திரம் சொல்லி தப்பிச்சு வந்துடுவேனு நினைச்சேன் அதான்” விவேகன் கூறவும்,
விவேகன் தோளில் இருந்து வேகமாக விலகியவள் அதே வேகத்துடன் தன் தலையில் அறைந்துக் கொண்டாள்.
“அடச்சே இத நான் மறந்தே பொய்ட்டேன் விவு ரொம்ப பயந்துட்டேன் வேற” என்றவள்.
தன் வலது கை விரல்களை மடக்கி நெஞ்சின் நடுவில் வைத்துக் கொண்டவள் கண்களை மூடிக் கொண்டாள் அவள் உதடு மட்டும் எதையோ முனுமுனுத்தது.
பிறகு கண்களைத் திறந்து நெஞ்சின் நடுவில் இருந்த கையை வானோக்கி உயர்த்தி “கிரேஸ்கல் கோட்டையின் சக்தியே என்னுள் இருக்கும் சக்தியே” என கத்தினாள்.
பிறகு விவேகனைப் பார்த்துக் கண் சிமிட்டி சிரித்தவள் “பயம் போயே போச்சி” என மீண்டும் அவன் கைகளைக் கட்டிக் கொண்டாள்.
இவளின் இந்த நடவடிக்கையைப் பார்த்து லக்ஷ்மி,
“இது இன்னும் திருந்தலயா டா” என மித்ரனிடம் கேட்க அவனோ,
“இது திருந்தும்னு நினைக்கிற நீ வாய்ப்பில்லை ராஜா” என கூறவும்,
லக்ஷ்மி சிரித்து விட்டாள்.
அப்போது தான் தமிழ் அவளை நன்கு கவனித்தான்.தென்றலின் உடன் பிறந்த சகோதரி என கூறினால் நம்பும் அளவிற்கு ஒத்திருந்தது அவர்களின் உருவ ஒற்றுமை ஆனால் இவள் சற்று மெலிந்த தேகம் உடையவள் என அவன் எண்ணிக் கொண்டிருக்க,
விவேகன் அவனை அழைத்தான்.
“தமிழ்”
திடுக்கிட்டு திரும்பினான் அவன் விவேகனின் குரலில் கண்டிப்பு இருந்ததோ என சந்தேகம் தோன்றியது தமிழுக்கு ஆனால் அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆனால் மித்ரன் அதைக் கண்டு கொண்டான்.’அன்று தென்றலை அந்த பார்வை பார்த்தான் ஐயா ஒன்னும் கண்டுக்கவே இல்ல இன்று லக்ஸை லேசாக பார்த்ததற்கு குரலில் இத்தனைக் கடுமைக் காட்டுகிறான்.ஆனால் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை ஏன் அவள் முகத்தை கூட பார்க்கல சம்திங் ராங்’ என மனதில் குறித்து கொண்டான்.
தமிழை அவசரத்தில் அழைத்து விட்ட விவேகன் அவன் தன் முகத்தை கேள்வியாக நோக்குவதைப் பார்த்து என்ன கூறுவது என தெரியாமல் “அது வந்து தமிழ்” என இவன் இழுக்க
“எதுவாக இருந்தாலும் சொல்லு விவேக்” என்றான் தமிழ்
“நாளைக்கு நாங்க சென்னைக்கு கிளம்புறோம் தமிழ் என்றவன்.இதுக்கு மேல இங்க இருக்குறது பாதுகாப்பா இருக்கும்னு எனக்கு தோணல” எனவும்
“சரி விவேக் அப்போ நானும் உங்க கூடவே வந்துட்றேன் தனியா வரனும்னா கஷ்டமா இருக்கும்” என தமிழ் கூறவும்
சரி என தலை அசைத்தவன் உறங்குவதற்காக படுத்துக் கொண்டான்.
அவன் தங்களுடன் லக்ஸை அழைக்காதது தென்றலுக்கும் மித்ரனுக்கும் கோவம் வர,
“விவு லக்ஸ கூப்பிடு” என தென்றல் கட்டளையாய் கூற,
“மித்ரனோ ஏன் டா அவள கூப்ட உன் சொத்து அழிஞ்சிடுமா” என கத்த,
“இப்போ எதுக்கு ரெண்டு பேரும் கத்திட்டு இருக்கிங்க யாருக்குலாம் வரனும்னு விருப்பம் இருக்கோ அவங்க வரலாம். யாரும் வேண்டாம்னு சொல்லப் போறது இல்ல” என சற்றுக் கடுமையாக கூறிய விவேகன். அவர்களுக்கு முதுகு காண்பித்தவாறு திரும்பிப் படுத்துக் கொண்டான்.
இதனால் மேலும் கோபம் அடைந்த மித்ரனும் தென்றலும் எதோ பேச வாய் எடுக்கும் முன் லக்ஷ்மி பேசினால்.
“இரண்டு பேரும் சும்மா இருக்கிங்களா நான் கேட்டேனா உங்க கூட வரேனு எதுக்கு தேவை இல்லாம சண்டைப் போட்டுட்டு இருக்கிங்க நாளைக்கு நீங்க இங்க இருந்து கிளம்பனதும் நான் என் வீட்டுக்கு போறேன். எனக்கு எங்கயும் வர விருப்பம் இல்லை”. என லக்ஷ்மி கூறவும்.
விவேகனின் குரல் கர்ஜனையாக ஒலித்தது.
“ஏன் மகாராணி சீர்வரிசை தட்டு வச்சு அழைச்சா தான் வருவிங்களோ.”
“நான் யாரும் என்னை அழைக்கனும்னு கனவு கண்டுட்டு இல்லை அப்புடியே அழைச்சாலும் எங்கயும் நான் வரப் போரது இல்லை.அவங்க அவங்க வந்த வழிய பார்த்துட்டு கிளம்பலாம்” என அவள் எகத்தாளமாக கூறவும், சற்றும் யோசிக்காமல் விவேகனின் கை அவளை அடித்து இருந்தது.
இதனைக் கண்ட மற்ற மூவரும் அரண்டு போய் எழுந்து நின்றுவிட
லக்ஷ்மியோ, அவனுக்கு சற்றும் அடங்காதவலாய் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்று அவனை நேர் பார்வைப் பார்த்தாள்.
“நீ என்ன பண்ணாலும் சரி நான் இங்க இருந்து வர மாட்டேன்” என்றவளைப் பார்க்க பார்க்க விவேகனின் கோபம் எல்லையைத் தாண்டி சென்றுக் கொண்டிருந்தது.
“திமிரு திமிரு உடம்பு முழுக்க திமிரு டீ உனக்கு மேடம் யாரு கிட்டேயும் சொல்லாமாக் கொள்ளாம ஊர விட்டு ஓடி வந்துடுவிங்க, நாங்க நாய் மாதிரி உங்கள ரோடு ரோடா தேடி அலையனும் அப்புறம் எப்படியோ கண்டு புடிச்சிட்டா நான் எங்கயும் வர மாட்டேன் நான் தான் ஊருக்கே பெரிய இதுனு வசனம் பேசவிங்க,”
“நாங்களும் கை கட்டி வாய் பொத்தி நீங்க சொல்றத கேக்கனுமா அதுக்கு எல்லாம் வேற ஆளப் பாரு இந்த விவேகன் கிட்ட உன் பப்பு வேகாது புரிஞ்சிதா.”
“அடக்க ஒடுக்கமா கிளம்பி வந்தா எங்க கூட கூட்டிட்டு போவேன்.”
“இல்லயா மயக்க மருந்து கொடுத்து மூட்டைக் கட்டி பொட்டி படுக்கையோட தூக்கிட்டு போவேன் உனக்கு எது வசதினு முடிவு பண்ணிக்க” என கூறியவன் நிற்க்காமல் கீழே இறங்கி சென்று விட, மித்ரன் அவன் பின்னால் சென்று விட்டான்.
அடி வாங்கியதில் இவள் அழுவாள் என தமிழும் தென்றலும் லக்ஷ்மி முகத்தைப் பார்க்க அவளோ விவேகன் கீழே சென்று விட்டதை உறுதிப் படுத்திக் கொண்டு தென்றலை இழுத்து அணைத்தவள் வாய்விட்டு சிரிக்கத் துவங்கிவிட்டாள்.
வாங்கிய அறையில் கபாலம் கலங்கி விட்டதோ என தமிழ் எண்ணும் அளவிற்கு சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.
பிறகு தென்றலும் தோழியின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள தமிழ் தனக்கும் பைத்தியம் பிடித்து விட போகுது என பயந்தவன் கீழே ஓடியே விட்டான்.
அவன் ஓடுவதைப் பார்த்த தோழிகளின் சிரிப்பு சத்தம் அவனைப் பின் தொடர்ந்தது.
தமிழ் தலை தெறிக்க ஓடி வருவதைப் பார்த்து விவேகனும் மித்ரனும் லக்ஷ்மிக்கு தான் அடி வாங்கியதில் எதுவும் ஆகிவிட்டதோ என பதறி போனவர்களாய்.
“என்ன டா ஏன் இப்புடி ஓடி வர” என ஒரே போல் கேட்க…
அவனோ இவர்களின் அவசரம் புரியாமல் ஓடி வந்ததில் மூச்சு வாங்க நின்றிந்தான்.
ஒருவாறு தன்னை நிதான படுத்திக் கொண்டவன்.
“பொண்ணுங்களா டா அதுங்க யப்பா கொஞ்ச நேரத்துல பீதிய கெளப்பி விட்டுட்டாளுங்க” என மாடியில் நடந்ததை இவன் கூற,
தமிழ் அறியாமல் மித்ரனிடம் சைகை காட்டிய விவேகன் திடிரென அவனும் இடியென சிரிக்க அவனைத் தொடர்ந்து மித்ரனும் சிரிக்க துவங்கிவிட்டான்.
இதற்கு பிறகும் அங்கு இருக்க தமிழ் என்ன முட்டாளா இரண்டு கால் பாய்ச்சலில் அறைக்கு ஓடியை விட்டான் அவன் ஓடுவதை பார்த்தவர்களின் சிரிப்பு இன்னும் அதிகரித்து இருந்தது.
“இவனுக்கு நம்ம தென்றலே எவ்வளவோ பரவாயில்லை போல டா” என மித்ரன் விவேகனிடம் கூறிக் கொண்டிருக்கவும் தென்றலும் லக்ஷ்மியும் மாடியில் இருந்து வீட்டிற்குள் வந்திருந்தனர்.
அதனைக் கண்ட விவேகன் மித்ரனை முறைத்துக் கொண்டு,
“நம்ம தென்றல் இல்ல அவ என் தென்றல்” என கூறியவன் இப்போது லக்ஷ்மியை முறைத்து கொண்டு நிற்க.
“இதுங்கல திருத்த முடியாது” என நினைத்துக் கொண்ட மித்ரனும் தென்றலும் மானசீகமாக தலையில் அடித்து கொண்டவர்கள் அவரவர் அறைக்கு செல்ல, இங்கு இரண்டு சண்டை கோழிகளும் ஒருவருக்கு ஒருவர் சலித்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சிலிர்த்து கொண்டு நின்றிருந்தனர்.
ஆனால் அவர்களின் மனமோ,
“ஏன் இப்படி பண்ண கடைசியா என் கிட்ட பேசும் போது கூட உன் கஷ்ட்டத்தையோ உன் முடிவையோ சொல்லனும்னு தோணலயா உனக்கு” என விவேகனின் மனமும்,
“இவ்ளோ வருஷம் ஆகியும் நீ என்னை கண்டு பிடிக்கவே இல்லல இதுவே உன் தென்றலா இருந்தா இப்படி தான் விட்டு இருப்பியா” என லக்ஷ்மியின் மனமும் கதறிக் கொண்டிருந்தது…
அந்தோ பரிதாபம் இவர்களின் கதறல் இவர்களுக்கே கேட்கவில்லை.
மறுநாள் காலை என்றும் இல்லாது அனைவருக்கும் மிகவும் புத்துணர்வாக விடிந்தது.
ஒருவனை தவிர இரவு நான்கு நண்பர்களும் காட்டிய திகிலில் தமிழுக்கு காய்ச்சலே வந்திருந்தது.
அவனை பார்த்து பார்த்து மித்ரன் சிரித்து கொண்டே இருக்க விவேகன் சிரிப்பை மிகவும் கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
வள்ளி தான் புலம்பி கொண்டிருந்தார், “நடு இராத்திரி வரைக்கும் மாடில என்னடா உனக்கு வேலை எந்த காத்து கருப்பு அடிச்சதோ தெரிலயே உன் ஆத்தாகாரிக்கு தெரிஞ்சா என்ன தான் டா போட்டு வருத்தெடுப்பா” எனவும்,
அவ்வளவு நேரம் சாதாரணமாக இருந்த தமிழ் தாயைப் பற்றி பேச்சி வந்ததும் உடல் விரைக்க முகம் இருக எழுந்து சென்று விட்டான்.
அதனைக் கண்ட முருகன் மனைவியை கடிந்து கொண்டவர் தமிழை காண சென்று விட்டார்.
பிறகு மித்ரனை லக்ஷ்மி உடன் சென்று அவள் வீட்டில் இருக்கும் உடமைகளை கொண்டு வர சொல்லி அவர்களை அனுப்பி வைத்தவன், தென்றல் வள்ளியை சமாதானம் செய்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு அமைதியாக சென்று அவர்களின் உடமைகளை எடுத்து வைத்து கொண்டிருந்தான்.
வேலைகளை முடித்து விட்டு விவேகன் சற்று ஆசுவாசமாக அமரவும் முருகன் அறைக்குள் வரவும் சரியாக இருந்தது.
அவரை கண்டு அவன் வரவேற்பாக புன்னகைக்க அவன் அருகில் அமர்ந்தவர்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசனும் தம்பி”என்றவர் அவன் முகம் நோக்க
“சொல்லுங்க சார் எதுவா இருந்தாலும் தயக்கம் வேண்டாம்”என்றான் ஆதரவாக,
தமிழின் அன்னையை பற்றியும் அவனின் இறந்த காலம் பற்றியும் கூற துவங்கினார் முருகன்.
தமிழின் தந்தை ஒரு சாதாரண கூலி தொழிலாளி.அவரின் தங்கை தான் இந்த வள்ளி.
தமிழின் தந்தை செய்த ஒரே தவறு, அவன் அன்னை அருணா வை திருமணம் செய்து கொண்டது.
அருணா நடுத்தர வர்க்கத்தில் பிறந்து,கோடீஸ்வரியாக வாழ விரும்பிய பேராசைக் கொண்ட பெண்.
திருமணத்திற்கு பிறகு அவரின் மனம்,காதல் காதல் என்று துடிக்காமல்,
காசு காசு என்றே துடித்துக் கொண்டிருந்தது.
இவரின் பேராசைக்காக தமிழின் தந்தையும், உழைத்து உழைத்தே வெகு விரைவில் மரணத்தை தழுவினார்.
அவர் இறக்கும் பொழுது தமிழின் வயது 17 அபிநவ் 12 வயது சிறுவனாக இருந்தான்.
அதன் பிறகும் கூட அருணாவின் நடத்தையில் மாற்றம் இருக்கவில்லை.
இதனாலேயே தமிழ் அன்னை பாசத்தை உணர விரும்பியது கூட இல்ல.
அவனே சிறு வயதில் இருந்து வேளைக்கு சென்று அவனும் வளர்ந்து அவன் தம்பியையும் வளர்த்து வருகிறான்.
இத்தனையும் முருகன் கூறி முடித்து விவேகனைப் பார்த்தவர்,
“நீங்க எல்லாம் ஃப்ரண்ட்ஸா இல்லாமல் குடும்பமா இருக்குறதா தமிழ் ஏக்கமா பாக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு தம்பி, அவனையும் உங்க குடும்பத்துல சேர்த்துக்கோங்கப்பா” என அவர் விவேகனின் கையைப் பிடித்து கொள்ள,
விவேகனுக்கு தமிழ் ஏன் தங்களை சுற்றினான். இப்பொழுது ஏன் தென்றலை சுற்றுகிறான் என்பது புரிந்து போனது.
முருகனின் கையின் மேல் தன் கையை வைத்தவன்.
“தமிழ் எப்போதுமே எங்கள் குடும்பத்தில் ஒருத்தன் தான் சார், தமிழ் மட்டும் இல்ல அபிநவ் கூட” என கூற,
முருகன் ஒரு நன்றியுடன் சிரிப்புடன் வெளியே சென்று விட்டார்.
அவர் சென்ற பிறகு,
‘இன்னும் எத்தனை எருமைய தான் நான் மேய்க்குறது’ என நினைத்தவன் நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டு தலைமுடியைக் கோதி தன்னை சமன் செய்து கொண்டவன் தென்றலைத் தேடி சென்றான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் மித்ரனும் லக்ஷ்மியும் வந்து விட்டனர்.
அதற்கு பிறகு நேரம் போவதே தெரியாமல் பேசி கொண்டிருந்தவர்கள்.நேரம் ஆனதை உணர்ந்து சென்னைக்கு செல்ல வேண்டிய அவர்களின் பயணத்தை தொடர முருகன் மற்றும் வள்ளி இடம் விடைப் பெற்று கொண்டவர்கள் இரயில் நிலையம் நோக்கி பயணம் ஆகினர்.
இரயிலில் அவரவர் இருக்கையில் அமர்ந்தவர்களின் மனதில் ஒவ்வொரு நினைவுகள் ஓடிக் கொண்டிருக்க இரயிலும் அதன் ஓட்டத்தை ஆரம்பித்து இருந்தது.
பயணம் முழுவதும் நீண்ட நெடிய அமைதியே தொடர்ந்தது.
மறுநாள் விடியலில் ஐவரும் சென்னையின் மண்ணில் காலடி எடுத்து வைத்திருந்தனர்.
மற்ற நால்வரை விடவும் லக்ஷ்மி தான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தால் அவளை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து செல்வதற்குள் மித்ரனும் தென்றலும் தான் படாதப்பாடு பட்டு விட்டனர்.
தென்றல் வீட்டிற்கு முதலில் செல்வது என தான் பேசி வைத்திருந்தனர். ஆனால் தமிழ், “மனசு சரி இல்ல டா ஈவ்னிங் வரேன்” என அவன் வீட்டிற்கு சென்று விட்டான்.
வீடு வரை வந்து விட்ட லக்ஷ்மிக்கு ஏனோ உள்ளே போக அத்தனை உதறலாக இருந்தது. தேவகி அம்மா கேட்டால் என்ன பதில் சொல்லுவாள் அவள்.
விவேகனுக்கும் அதே உதறல் தான் காரணம் தென்றல் கடத்தப்பட்டதை சொல்லியே ஆக வேண்டும்.
அவர்களின் குடும்பத்தினருக்கு தேவகி விதித்து இருக்கும் எழுதப்படாத சட்டம் இது எங்கே சென்றாலும் என்ன செய்தாலும், அதை நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவரிடம் சொல்லி விட வேண்டும் இல்லை என்றால் தண்டனை கடினமாக இருக்கும் தவறு செய்தவர்களை எதுவும் செய்ய மாட்டார் அவரை அவரே வருத்திக் கொள்வார்.
அவரிடம் பொய் கூறியோ உண்மையை மறைத்தோ யாருக்கும் பழக்கம் கிடையாது.அன்று விவேக்கின் கையில் இருந்த தீ காயம் கூட அவராக கண்டு கொள்ளாமல் இருந்து இருந்தாலும் அது சற்று குணமானதும் அவரிடம் அவனே கூறி இருப்பான் தான் அவர் அதற்கு முன்பே கண்டு பிடித்து விட்டார்.
ஒரு வழியாக மித்ரன் அழைப்பு மணியை அடித்து விட்டு கதவு திறப்பதற்காக காத்திருக்க தேவகியே வந்து கதவைத் திறக்க நால்வரும் சிரித்த முகமாக அவரைப் பார்க்க அவரோ லக்ஷ்மியைப் பார்த்ததும் அவரின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாது உள்ளே சென்று விட்டார்.
இது எதிர்ப் பார்த்தது தான் என நால்வரும் உள்ளே சென்றனர்.
அந்நேரம் உள் அறையில் இருந்து வெளியே வந்த மித்ராவதி இவர்களை பார்த்து புன்னகைத்தவர் லக்ஷ்மியை பார்த்ததும் முகம் இறுக அவரும் தேவகியுடன் சென்று நின்றுக் கொண்டார்.
“டார்லிங்” என விவேகன் ஏதோ கூற வாய் எடுக்கவும்,
“மாமா உங்கள தேடி விருந்தாளிங்க வந்து இருக்காங்க” என வீடே அதிரும் படி அவர் கத்த அவரின் குறலே சொல்லியது அவர் கோவத்தின் அளவை.
மனைவியின் குரலில் இருந்த கடுமையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தர்மராஜும் அடித்து பிடித்து கொண்டு எழுந்தவர் கையில் சிக்கிய சட்டையை ஏனோதானோ என அணிந்து கொண்டு வந்தவரைப் பார்த்து மித்ரன் சிரிக்க தேவகி பார்த்த பார்வையில் அவன் அப்படியே விவேகனின் பின்னால் பம்மி பதுங்கி விட்டான்.
தென்றலும் லக்ஷ்மியுமே அவன் பின்னாடி தான் நின்றிருந்தனர். இதில் இவனும் இணைந்து கொள்ள அனைவருக்கும் முன் அவனே குற்றவாளியாக நின்றிருந்தான்.
அன்னையின் குரலில் அரண்டு போன அக்ஷாஅறையில் இருந்து ஓடி வந்தவள் எதிர்ப்பாராத விதமாக லக்ஷ்மியை கண்டதும் கண்களில் கண்ணீர் மல்க “லச்சு க்கா” என அவளை அணைக்க ஓடி வந்தாள்.
“அங்கேயே நில்லுடீ இன்னும் ஒரு அடி எடுத்து வெச்சா இரும்பு கம்பிய பழுக்க காய்ச்சி சூடுப் போட்றுவன்” என தேவகி அதட்ட,
அன்னையின் வார்த்தையில் சடன் ப்ரேக் அடித்து நின்றவள் மித்துமா அருகில் சென்று அவர் தோளில் சாய்ந்து அழத் துவங்கிவிட்டாள்.
பிறகு தன்னை தேற்றி கொண்ட தேவகி,
தர்மராஜ் இடம், “என்ன மாமா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க வீட்டுக்கு பெரிய பெரிய மனுஷங்க எல்லாம் வந்து இருக்காங்க போய் கவனிங்க” என கூறவும் அங்கிருந்த அனைவருக்கும் உதறல் அதிகமானதே தவிர குறையவில்லை.
இதற்கு மேல் விட்டால் முடியாது என நினைத்த விவேகன் பேசப் போகவும் அவனை கை நீட்டி தடுத்தவர்.
“நீ பேசதடா அவளப் பேச சொல்லு” என லக்ஷ்மியைக் காட்டவும்.
அவளோ, “அம்மா” என்ற கதறலுடன் அவரை நெருங்கி தேவகியின் காலைக் கட்டி கொண்டு கதறி அழத் துவங்கிவிட்டாள்.
அவள் அழுவதை காணப் பொறுக்காமல் அக்ஷாவும் தென்றலும் அவளை அணைத்தவாறு அழுதுக்கொண்டிருக்க தேவகி சிறிதும் அசைந்து கொடுப்பதாக இல்லை.
“என்ன ஏன் ம்மா நீ அம்மானு சொல்ற நீ எல்லாம் எவ்ளோ பெரிய ஆளு உனக்கு அம்மா ஆகுற அளவுக்கு எனக்கு தகுதி இல்லமா” என கூறியவரின் குரல் இறுதியில் சிறு கமறலாக வரவும் விவேகன் சுதாரித்து கொண்டான்.
அவரை தோளோடு அணைத்தவன் தலையை வருடிக் கொடுக்க அவ்வளவு தான் பெரிய கேவலுடன் தேவகி குளுங்கி குளுங்கி அழத்துவங்கிவிட்டார்.
மித்துமா அமைதியாக கண்ணீர் வடிப்பதைக் கண்ட விவேகன் மித்ரனிடம் கண் ஜாடை காட்ட அவன் அவரை அறைக்குள் அழைத்து சென்று விட்டான்.
மூன்று மகள்களும் அழுவது பொறுக்காத தந்தையாய் அவர் தரையில் மண்டியிட்டு அமர்ந்து அவர்களை அணைத்து ஆறுதல்படுத்த முயற்சித்து கொண்டிருந்தார்.
அவரால் முயற்சி மட்டுமே எடுக்க முடிந்தது யாரும் கண்ணீரை நிறுத்தும் வழி தெரியவில்லை.
ஒரு வருட மெகா சீரியலை ஒரே நாளில் ஓட்டிக் கொண்டிருந்தனர் பெண்கள் ஐவரும்.
அவர்களை சமாதானம் செய்யும் வழியும் தெரியாமல் அவர்களின் வலியை வெளிக்காட்டவும் முடியாமல்
திணறிக் கொண்டிருந்தனர் மூவரும்.
சிறிது நேரத்திற்கு பிறகு தேவகியிடம் அசைவு இல்லாமல் போகவும் விவேகனுக்கு இதயமே நின்று துடித்தது.அவன் “டார்லிங்”
என அலரவும் சில நொடிகளில் வீடே பரப்பரப்பாக மாறி இருந்தது.
(தொடரும்)