அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 14

“இரண்டு வருடங்களுக்கு முன்”

வீட்டில் மொத்த பேரும் ஹாலில் கூடி இருக்க.. யுக்தா, நிஷா, ஜானவி, ராஷ்மி என்று நால்வரும் நடு ஹாலி கைகாட்டி நல்ல பிள்ளைபோல் நின்றிருந்தனர்..

“ஏன்டி ராஷ்மி.!? எள்ளு தா என்னைக்குக் காயுது.?? நாம எதுக்குடி காயனும்.. அதுங்க ரெண்டு தான் உண்மையா மறச்சிவச்சு இப்ப அது தெரிஞ்சு.. பொறில மாட்ன எலி மாதிரி முளிக்குதுங்க.. அதுக்கு ஏன் நம்மையும் குற்றவாளி கூண்டுல நிக்க வச்சிருக்காங்க” என்ற ஜானுவை முறைத்த ராஷ்மி.. “ம்ம்ம்..!!? அப்டிக்கத் திரும்பி அப்டியே ஒரு யுடர்ன் போட்டு உன் ஆளு முகரகட்டயா கொஞ்ச பாரு…!! அப்றம் பேசு..”

ஜானவி மெதுவாகத் திரும்பி ஓரக்கண்ணால் ஜீவாவை பார்க்க.. அவன் முறைத்த முறையில் பொத்தெனத் தலையைத் தொங்க போட்டவள்.. “ஏய் என்னடி இது..?? இந்த மனுஷன் இப்டி முறைக்கிறாரு.. இவரு பாக்குற பார்வையில ஒரு முட்டையை வச்சா தன்னால பொறுஞ்சு கோழிகுஞ்சு வெளிய வந்துடும் போல” என்று ராஷ்மி காதை கடித்தவள்.. ஜீவா அருகில் இருந்த விஷ்ணுவை பார்க்க.. அவன் கண்களும் வாட்டர்ஹீட்டர் போல் கொதித்துக் கொண்டிருந்தது.. “ஏய் ராஷ்மி..!! ஜீவா முறைக்கிறாரு சரி.. விஷ்ணு ஏன்.??” என்று புரியாமல் பார்க்க..”

“ம்ம்ம் அந்தக் கோழிகுஞ்சு எனக்காக” என்ற ராஷ்மியை சட்டென நிமிர்ந்து பார்த்த ஜானு.. “இது எப்போ டி நடந்துச்சு.. சொல்லவே இல்ல” என்று வடிவேலு ரியாக்ஷ்ன் கொடுக்க

“அதெல்லாம் பாத்த உடனேயே பத்திக்கிச்சு.. அவன் லவ்வை சொன்னான்.. நானும் சும்மா தானா இருக்கோம்.. இவனா விட்ட வேற இளிச்சவாயன் கெடைக்கா மாட்டன்னு ஓகே சொல்லிட்டேன்.. அதோட யுகிக்கு அண்ணிய வராதுன்னா கசக்குமா என்ன..?? விஷ்ணு யுகிய விடப் பெரியவன் தான்.. ஆன யுகி தா அவனுக்கு அக்கா மாதிரி.. விஷ்ணுவை யுகியோட வளர்ப்புனே சொல்லலாம்.. சோ எனக்கு விஷ்ணு தான் பெஸ்ட் சாய்ஸ்.. நீயும் இந்த வீட்டுக்கு தான் மறுமகளா வரப்போற.. நிஷாவும் அனேகமாக இந்த வீட்டுக்கு தா வரப்போற.. அப்டி இருக்க இப்டி ஒரு சான்ஸ்சை மீஸ் பண்ண நா என்ன லூசா..??” என்ற ராஷ்மி அதிர்ச்சியில் வாய்பிளந்து நின்ற ஜானுவின் வாயை “கிளாஸ் தி டோர்” என்று அடைத்தவள்.. “மூடிட்டு வேட்டிகைய பாரு” என்று விட்டு மீண்டும் நல்ல பிள்ளைபோல் முகத்தை வைத்துக் கொண்டாள்..

“நீங்க ரெண்டு பேரும் ரெண்டு வருஷமா சிபிஐ ல இருக்கீங்க அப்டி தானா” என்று ராம் கண்களை இடுக்கி கேட்க..

யுக்தாவும், நிஷாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவர்கள் ஆமாங்கண்ணா” என்று தலையை மேலும் கீழும் ஆட்ட..

“ஏன்டி அதை இவ்ளோ நாளா எங்ககிட்ட சொல்லல” என்று வினய் கோவமாகக் கத்த..

யுக்தா திரும்பி பரதனையும், வெற்றியையும் “ப்ளீஜ் ஹெல்ப்பு மீ” என்று இதழை பிதிக்கி பாவமாகப் பார்க்க..

“ஏய் அங்க என்ன பார்வை அவங்களும் ஹீட் லிஸ்ட்ல தா இருக்காங்க.. இவங்க ரெண்டு பேருக்கும் எல்லா உண்மையும் தெரிஞ்சிருந்தும் இவ்ளோ நாளா ஒரு வார்த்தை கூடச் சொல்லல” என்று ஜீவா தன் பங்கிற்குக் கடுகடுக்க..

“டேய் நாங்க என்ன டா செய்றது.. இதுங்க பரிதிமாமா, ஆனந்தி அத்தைகிட்ட சத்தியம் வாங்குன மாதிரி எங்ககிட்டையும் அதுங்களைப் பத்தி ஒன்னு சொல்லக் கூடாதுன்னு தலையில அடிச்சுச் சத்தியம் வாங்கிடுச்சு.. நாங்க என்ன செய்ய..?? வீ ஆர் கார்னர்டு” என்ற வெற்றி.. கயல்விழியைத் திரும்பி பார்த்து, “கயல்ம்மா என்னம்மா பேசாம நிக்குறா.?? கொஞ்சம் புருஷனுக்கும், அப்பாக்கும் சப்போர்ட் பண்ணு டா” என்றவனை முறைத்த கயல்விழி..

“யோவ் நீ வாயா மூடுய்யா.. இவ்ளோ நாள் ரெண்டு பேரும் என்கிட்ட கூட உண்மையைச் சொல்லல இல்ல.. ரெண்டு பேரும் பேசுநீங்க…… நாக்க புடிங்கி வெளிய போட்ருவேன்.. வாயா மூடிட்டு கம்முன்னு இருங்க” என்று வெடிக்க..

வெற்றி வாயில் கைவைத்தவன்.. “என்னது யோவ்வஆஅஆ..??”

கயல்விழி, “ஆமாய்யா..!?”

“நா உன் புருஷன் டி..!!?”

“இருந்துட்டுபோ அதுக்கென்ன..!?” என்ற கயல்விழியை அதிர்ச்சியாகப் பார்த்த வெற்றி.. “புருஷன்ற மரியதையும் போச்சு, கலெக்டர்ன்ற மரியாதையும் போச்சு‌‌.. ச்சே இந்த ரெண்டு பிசாசால என் மரியாதை போச்சே” என்று புலம்பியவன் திரும்பி பரதனை பார்க்க.. அவர் ஹெட்செட்டில் கேட்கும் பாட்டில் லயித்திருக்க.. “சர்தான்” என்ற வெற்றி அதுக்குப் பிறகு வாயே திறக்கவில்லை..

“டேய் அண்ணாஸ் நாங்க என்ன பண்றது….!? சூழ்நிலை அப்டி அமைஞ்சு போச்சு.. நாங்க வேணுன்னு எதுவும் செய்யல.. மும்பை காலேஜ்ல ஜாயின் பண்றா வரை எங்களுக்கு ஐபிஎஸ் பண்றா ஐடியாவே இல்ல.. ஆன காலேஜில நடந்த சில சம்பவங்கள் எங்களை இந்த முடிவு எடுக்க வச்சிடுச்சு” என்றவள் ஜானவியைப் பார்க்க.. அவள் கண்கலங்கி தலைகுனிய.. அவள் நாடியில் கைவைத்து அவள் தலையை நிமிர்த்தி நிக்கவைத்தவள்.. “இந்த மாதிரி, எங்களை மாதிரி எல்லாப் பொண்ணுங்களும் தலை நிமிர்ந்து நிக்கணும்.. அப்டி நிக்க வைக்க எங்களால முடிஞ்சதை செய்யணும்னு நெனச்சோம்.. அதுக்கு எங்களுக்குப் பவர் தேவைப் பட்டுச்சு.. அதான் நாங்க ஐபிஎஸ் படிக்க முடிவெடுத்தோம்.. ஜானு லாயர், ராஷ்மி ஜேர்னலிஸ்ட்னு எங்க பயணத்த ஸ்டார்ட் பண்ணோம்.. முதல்ல உங்ககிட்ட நாங்க ஐபிஎஸ் ல ஜாய்ன் பண்ணத மறச்சதுக்குக் காரணம்?? போஸ்டிங் கெடச்ச பிறகு யூனிபார்மோட வந்து உங்க எல்லாரையும் சர்ப்ரைஸ் பண்ண நெனச்சோம்.. அப்போ இருக்கும் போது டிரெய்னிங் சமயத்தில் வெற்றி அண்ணா எங்களைப் பார்த்துடுச்சு அதான் யார்கிட்டையும் சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்குனோம்… ஆன எங்க விதி.. ஐபிஎஸ் முடிச்ச உடனே ஒரு உத்தமர் எங்க ரெண்டு பேரையும் ஒரு அன்டர்கவர் மிஷன்ல போட்டு நார்த் இந்தியா பக்கம் சப்பாத்தி திங்க தொரத்திட்டாரு” என்றவள் பரதனை பார்க்க.. அவர் “யா இட்ஸ் மீ” என்று அசால்ட்டாகத் தோளைகுளுக்கினார்..

யுக்தா செல்லமாக அவரை முறைத்தவள்.. “அந்த மிஷன் முடியவே எட்டு மாசம் ஆகிடுச்சு” என்று இதழை பிதுக்க..

“சரி அந்த மிஷன் முடிச்ச அப்றம் சொல்லவேண்டியது தானா டி” என்ற மதுவை அப்பாவி போல் பார்த்த நிஷா.. “அங்க தான் விதி வெளயாடிச்சு அண்ணி..!! விதி வெளயாடிடுச்சு!!” என்று முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்டவள்…. “அந்த மிஷனை சுப்பர் டூப்பார முடிச்சதை கேட்ட சிபிஐ எஸ்பி எங்க ரெண்டு பேரையும் அவர் டீம்ல அன்டர்கவர் ஏஜென்ட்டா ரெக்யூட்ட் பண்ணிடாரு அண்ணி.. அப்டியே எங்க பொழப்பு ஓடிடுச்சு அண்ணி.. அப்போ தான் சிபிஐக்கு வந்த இந்த சென்னை கேஸ் யுகி கைக்கு வந்துச்சு.. அதுக்காக அவ சென்னை வந்த.. அவ கூட அவ அசிஸ்டென்ட்ட நானும் வந்துட்டேன்.. இப்ப நீங்களே சொல்லுங்க அண்ணி..??அன்டர்கவர்ல இருக்க நாங்க எப்டி அண்ணி எங்களைப் பத்தி வெளிய சொல்லமுடியும்..?? எப்…..!! எப்டி…… எப்டி அண்ணி முடியும்” என்று வாயை பொத்தி குளுங்கி குளுங்கி அழ.. யுகி ஆதரவாக அவள் முதுகை தடவியவள்.. அவள் காதோரம், “அடியேய் அடியேய் எமோஷனை கொற டி.. ஓவர் ஆக்டிங் பண்ணி மொத்த குடும்பத்துக்கிட்டை மொத்து வாங்கிக் குடுத்துடாத டி” என்று நிஷா மெதுவாக அவள் காதில் ஓத..

நிஷா “ஏன் டி பார்பமென்ஸ் ஓவராகிடுச்ச என்ன…??”

“ம்ம்ம் பிண்ண ஐஞ்சுருவாக்கு நடிக்கச் சொன்ன ஐநூறுஒவாய்க்கு நடிக்குற நீ…?. அடங்குடி..??”

“அங்க என்ன சத்தம்??” என்ற ராம் குரலில் நிமிர்த்த யுக்தா.. “சும்மா பேசிட்டு இருந்தோம்கணோய்” என்க..

மொத்த குடும்பமும் சிரித்துவிட்டது.. சிரித்த வாயோடு..யுக்தா, நிஷா, ராஷ்மி, ஜானு நாலுபேரை வெளுத்த கையோடும் அன்றைய தினம் அடிதடியோடு முடிந்தது..

யுக்தா தனக்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தன் ஆஃபிஸை அமைத்திருந்தாள், அங்கே தன் ரூமில் ஆறு மாதமாகக் கேஸ் பற்றி அவளும் நிஷாவும் சேகரித்த தகவல்களைப் படித்துப் பார்த்து முக்கியமான தகவல்களையும், ஃபோட்டோக்களையும், தன் இருக்கைக்கு முன்னிருந்த நோட்டீஸ் போர்டில் பின் வைத்து குத்திவிட்டு அதை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தவள்.. டாக்டர் வினோத்தின் இறந்து கிடந்த ஃபோட்டோவை பார்த்து இழுத்து மூச்சி விட்டவள்.. “பாவம் நிஷா நம்ம ராஜீ.!? அவளுக்குன்னு இருந்தது, அவ அப்பா மட்டும் தான்.. இப்ப அவரும் இல்ல” என்றவள் தன் சேரில் வந்து உட்கார..

“ஆமா யுகி.. நல்ல மனுஷன்.. அவரோட சாவுக்குக் கண்டிப்பாக ஒரு நியாயம் கெடச்சே ஆகணும்.. ஒருவகையில அது நம்ம கடமையும் கூட” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே.. ஜானவியும், ராஷ்மியும் வந்தனர்..

“என்ன ராஷ்மி நா சொன்னதப் பத்தி விசாரிச்சியா.?? என்ன ஆச்சு..??”

“ம்ம்ம் விசாரிச்சிட்டேன் யுகி.. நீ சொன்னுது சரிதான்… அந்த இன்ஸ்பெக்டர் கோவாலு ஒன்னு அவ்ளோ பெரிய கையெல்லாம் இல்ல.. பணம் குடுத்தால் வால் ஆட்டுவான்.. அவ்ளோ தான்.. அவனுக்கு அவ்ளோ சீன்லாம் இல்ல.. அதோட டாக்டர் பத்தியும் விசாரிச்சேன்.. டாக்டர் ரொம்ப நல்ல டைப் டி.. நெறய வெளிநாட்டு ஹாஸ்பிடல்ஸ் அவரக்கு லட்சலட்சமா சம்பளம் கொடுக்க ரெடிய இருந்தும்.. நா படிச்ச படிப்பு என்னோட சொந்த மண்ணுக்கு தான் யூஸ் ஆகணும்னு சொல்லிட்டு இங்கயே இருந்துட்டாரு மனுஷன்.. நெறய மெடிக்கல் கேம் போட்டு பல கிராமங்களுக்குப் போய்ச் சர்வீஸ் பண்ணி இருக்காரு.. அதனால தான் ராஜீய கூட ஹாஸ்டல்ல தங்கவச்சு படிக்க வச்சிருக்காரு.. ம்ம்ம் நல்ல மனுஷன் அவருக்கு இப்டி நடந்திருக்க வேணாம்.. ஆமா நீங்க அந்தக் கோபாலை கூட்டி போனீங்களே என்ன சொன்னான்..”

“ம்ம்ம் ஒன்னு பெருச இல்ல.. நாம நெனச்சது தான்.. அவனுக்கும் சரி, ராஜீய கொல்ல வந்த வங்களுக்கும் சரி இந்தக் கேஸ் பத்தி ஒன்னு பெருச தெரியல.. காசுக்காகச் செஞ்சிருக்காணுங்க.. காசு தந்தது யாருன்னு கூட அவனுங்களுக்குத் தெரியல.. இதுக்குப் பின்னாடி இருக்கவன் செம்ம ஸ்மார்ட்.. ரொம்பத் தெளிவ மூவ் பண்ணி இருக்கான்..”

“ம்ம்ம் அப்ப அந்த மூனு பக்கிகளும் ஒன்னுக்கும் வொர்த் இல்லன்னு சொல்லு..?? அப்ப இன்னேரம் நீங்க உங்க வேளைய காட்டி இருப்பீங்களே.. என்ன பண்ணிங்க அதுங்களா.?? உயிரோட இருக்கானுங்களா இல்லலலல” என்று இழுக்க..

நிஷா ராஷ்மியை பார்த்து கண்ணடித்தவள்.. கட்டை விரலை கழுத்தில் வெட்டுவதுபோல் காட்டியவள் கதம் கதம்.. “உயிரை மட்டும் விட்டுட்டு, மத்தயெல்லாத்தையும் புடிங்கீட்டோம்..”

“அதுசரி ஏற்கனவே யுகி அந்தக் கோபால், ராஜீகிட்ட பேசுன விதத்துல செம்ம காண்டுல இருந்த.. இப்ப தொக்க அவனே இவ கையில கெடச்ச சும்மாவ இருப்ப” என்ற ஜானு வாசலை பார்த்தவள்.. “ஏய் யுகி ராம் அண்ணா வரங்க” என்க..

“ஹாய் டா அண்ணா..” என்று ஆரம்பித்தவள் சட்டென அவன் யூனிபார்மில் இருப்பதைப் பார்த்து.. “குட்ஈவ்னிங் ஏசிபி சார்” என்க..

“நா இப்ப டியூட்டில இல்ல டா.. டியூட்டி முடிஞ்சு வீட்டுக்கு போய்டு இருந்தேன்.. சரி உன்னோட கேஸ் எப்டி போகுதுன்னு பாத்துட்டு போலான்னு வந்தேன்..”

“ம்ம்ம் போகுதுண்ணா.. இப்ப கூட டாக்டர் வினோத் மர்டர் கேஸ் பத்தி தா பேசிட்டு இருந்தோம்..”

“என்ன சொல்ற சாம்.. மர்டர்ரரர.. அது சூசைட் தானா..??”

யுக்தா புருவம் உயர்த்தி ராமை கூர்மையாகப் பார்த்தவள்.. “ரியாலி அண்ணா.. அது சூசைட்னு நீ நம்புறீயா..??”

“ஆமா ரிப்போர்ட்ஸ் அப்டி தானா சொல்லுது..”

“நா.. நீ என்ன சொல்றேன்னு கேட்டேன்.??” என்று புருவம் உயர்த்திய யுக்தாவை பார்த்து சிரித்த ராம்.. “ம்ம்ம் சும்மா சொல்லக்கூடாது.. நீ சிபிஐ க்கு சரியான ஆள் தான்.. ஜஸ்ட் ஒரு ஐஞ்சு நிமிஷம் தா அந்தக் கிரைம் சீன்ல இருந்திருப்ப, அதுக்குள்ள அது மர்டர்னு கண்டுபுடிச்சிட்டியே..!!”

“ம்ம்ம் பிண்ண சும்மாவா நா யார் தங்கச்சி, யாரோட மருமக.. கமிஷ்னர் பரதனோட டைகருக்கு கண்ணு ரொம்ப ஷர்ப்பாக்கும்” என்று கலரை தூக்கிவிட..

“சரி சரி வெளயாட்டு போதும்.. கேஸ் பத்தி சொல்லு” என்றவுடன் யுக்தா சாம்மில் இருந்து சம்யுக்தா ஐபிஎஸ் ஆக மாறிவிட்டாள்..

“இது பிரீபிளான் மர்டர் அண்ணா.. அதுவும் அந்தக் கொலகாரன் டாக்டரைப் பத்தி நல்ல தெரிஞ்சவனா தான் இருந்திருக்கணும்.. அதனால தா அவருக்கு இடதுகை பழக்கம் இருக்குன்னு தெரிஞ்சு அவரோட வலதுகையில விஷ ஊசிய போட்டு விட்டிருக்கான்..”

“ஏன் யுகி ஊசி வலதுகையில போட்டிருக்குறதை வச்சு மட்டும் இதை மர்டர்னு எப்டி சொல்லமுடியும்.. டாக்டர் இடதுகை பழக்கம் இருக்கவர் தானே.. அப்ப அவரோ ஊசிய அவருக்கு போட்டுக்கிட்டு இருக்கலாம் இல்ல..??”

“இல்ல ராஷ்மி அப்டி இருக்க வாய்ப்பே இல்ல.. முதல் ரிசன் அவர் தற்கொலை பண்ணிக்க எந்தக் காரணமும் இல்ல.. தென் அவருக்கு ரெண்டு கையாலையும் எழுதுற பழக்கம் இருக்கு.. பட்(but)” என்றவள் சில ஃபோட்டோகளை எடுத்து மேஜை மீது வைத்து.. “அவர் எல்லா வேலையும் தான் ரெண்டு கையாலயும் செய்ற பழக்கம் உள்ளவர்.. ஆன அவர் ஆப்ரேஷன் செய்யும்போது மட்டும் அவரோட வலது கையைத் தான் யூஸ் பண்ணுவாரு.. நீங்களோ இந்த ஃபோட்டோஸை பாருங்க புரியும்.. ஆப்ரேஷன் மட்டும் இல்ல.. சாதாரண ஊசி போடுறாத இருந்த கூட வலது கையால தா போடுவாரு.. இதை ராஜீயோ என் கிட்ட சொல்லி இருக்க.. அப்டி பாக்கும்போது ஒருவேளை அவர் தற்கொலை செஞ்சிருந்த அவர் ஊசிய தன்னோட இடது கையில தா போட்டிருப்பாரு.. அதோட ஒரு முக்கியமான விஷயம்.. அவர் யூஸ் பண்ணத சொல்ற பாய்சன்(விஷம்).. இட்ஸ் ஏ வொறி பவர்புல் பாய்சன்.. அந்தப் பாய்சன் எடுத்துக்கிட்டா.. உடனே சாகமாட்டாங்க.. மொத்த ரத்தமும் ஒறைஞ்சி.. ஒவ்வொரு உடம்பு உறுப்பும் செயலிழந்து, துடிச்சு துடிச்சு சாவங்க.. டாக்டர் சூசைட் செஞ்சுக்க நெனச்சிருந்த சாகும்போது நிம்மதியா சாகாம ஏன் இப்படித் துடிதுடிச்சி சாகணும்..??.. நீங்க கேக்கலாம்..?? அவருக்கு அந்தப் பாய்சன் பத்தி தெரியாம இருந்திருக்கும், இல்ல அந்த நேரத்துல அந்தப் பாய்சன் தா அவர் கையில இருந்திருக்கும்னு.. அதுக்குச் சான்ஸ்சே இல்ல. பிகாஸ் டாக்டர் வினோத் பாய்சன்ஸ் பத்தி ரிசர்ச் பண்ணிட்டு இருந்தாரு.. அவருக்கு அது ஒரு பேஃஷன்னு கூடச் சொல்லாம்.. சோ இது சூசைட் இல்ல…” என்று யுக்தா உறுதியாகச் சொல்ல..

“நீ சொல்றது எல்லாக் கரெக்ட் தான் சாம்.. இதெல்லாம் எனக்கும் தெரியும்.. அப்ப அவரை ஏன் கொன்னாங்க.?? யார் கொன்னாங்க.?? என்ன மோட்டிவ்.?? அதோட நீ இங்க வந்தது வேற கேஸ்க்காகத் தானா.?? ஏன் இந்தக் கேஸ்ச நீ டேக்ஓவர் பண்ண” என்ற ராமை தீர்க்கமாகப் பார்த்தவள்.. “பிகாஸ் எந்த ஷோஷியல் ஆக்டிவிஸ்ட் அடிக்கடி ரோட்டோரம் அடையாளம் தெரியாத மக்கள் காணாம போறங்கன்னும், அதுபத்தி விசாரிக்கணும்னு கோர்ட்ல கேஸ் போட்டு இந்தக் கேஸ் சிபிஐ கைக்கு வந்துதோ அந்த ஆக்டிவிஸ்ட் வேறயாரும் இல்ல.. டாக்டர். வினோதோட பெஸ்ட் ப்ரண்ட்.. ஆறு மாசத்துக்கு முந்தி நாங்க சென்னை வந்ததும் இந்தக் கேஸ்க்காகத் தான்.. டாக்டர் வினோதுக்கு இந்தக் கேஸ் பத்தி ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்கு.. சோ இந்தக் கேஸ் இன்வஸ்டிகேஷன்ல எங்களுக்கு உதவிய இருக்கிறத சொன்னாரு.. அப்டி சொன்ன அடுத்தப் பத்துநாள்ல அவர் இறந்துட்டாரு.. சோ இது வேறவேற கேஸ் இல்ல.. ஒரே கேஸ் தான்” என்று உறுதியாக சொன்னாள்…

கேஸ் இன்வஸ்டிகேஷன் ஒரு பக்கம் போக.. இதோ யுக்தா, உதய் கல்யாண நாளும் நெருங்கி வந்துவிட்டது…