இந்திரனின் சுந்தரியே
இந்திரனின் சுந்தரியே
??13??
அந்தக் கோவிலில் இருந்த சன்னதியில், இந்திரன், அய்யர் சொல்வதைச் செய்துக் கொண்டிருக்க, ராணி சுந்தரியை அழைத்துக் கொண்டு வந்தாள். தனக்குத் தெரிந்த ஒரு புகைப்படக் கலைஞரை இந்திரன் அந்த நிகழ்வை படம் பிடிக்க அழைத்திருந்தான்..
அவனது கண்கள் அடிக்கடி பாதுகாப்பிற்காக, அங்கு வந்திருந்தவர்களை அலசிவிட்டு வந்தது.. இன்னமும் அவனது மனதில் இருந்த பயம் நீங்கிய பாடுதான் இல்லை.. கடவுளை வணங்கி விட்டு, சுந்தரி அவர்கள் அழைப்பதற்காக காத்திருக்க, இந்திரனின் பார்வை அவளை தழுவி மீண்டது.. அவளைப் பார்க்கும் பொழுது அவனது இதழில் தோன்றும் அந்தப் புன்னகை சுந்தரியை கட்டிப் போட்டது..
சில நிமிடங்கள் அவனது கண்கள் ஆபத்தை அலசிய பிறகு, சிறுகச் சிறுக அந்த நாளின் நிகழ்வுகளுக்குத் திரும்பி இருந்தது.. தனது வாழ்வின் மிக முக்கியமான நாள்.. இறுதி வரை தன்னுடன் வரப்போகும் உறவு.. தன்னுடய உயிரின் மேலானவளை கைப் பிடிக்கப் போகும் நிகழ்வு.. தனது மனம் கவர்ந்தவள்…
அவள் மீதான மனதின் காதலை.. அவளோடு வாழும் ஆசைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து, அவளது நலனுக்கென்று ஒதுங்க நினைத்தாலும், அவளது அன்பில் மொத்தமாக தலைக்குப்புற கவிழ்ந்து, தனது கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்து இப்பொழுது திருமண கோலத்தில் அமர்ந்திருப்பதை நினைத்தவனுக்கு, இப்பொழுது சிரிப்பு பொங்கியது..
அவனது பார்வை சுந்தரியை நோக்கித் திரும்ப, சுந்தரி தலை குனிந்து அமர்ந்திருக்கவும், அவனது கண்கள் அவன் அனுமதி இன்றியே அவளைத் தலை முதல் கால் வரை வருடியது.. தான் தேர்வு செய்த பட்டுப்புடவையில் தேவதையென இருந்தவளைப் பார்த்தவனுக்கு மனம் நிறைந்து இருந்தது..
அவளது அம்மா அவளது திருமணத்திற்கு லட்சக்கணக்கில் பணம் போட்டு புடவை எடுக்க காத்திருக்க, தான் எடுத்த சில ஆயிரங்களே பெரும் அந்தப் புடவையை அவள் ஆசையுடன் அணிந்திருப்பது அவனது மனதிற்கு நிறைவாக இருந்தது.. இப்படி எல்லா விதத்திலேயும் தன் மீதான அன்பை காட்டும் அவளுக்கு ஒரு குறையும் வைக்கக் கூடாது என்று மனதினில் உறுதியாக நினைத்துக் கொண்டான்..
அதே நேரம் சுந்தரியும் தலை கவிழ்ந்த நிலையில் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவனது பார்வை தன்னிடம் இருப்பதைப் பார்த்தவளுக்கு கன்னங்கள் சூடேறியது.. அவன் அணிவிக்கப் போகும் மாங்கல்யதைத் சூட அவள் காத்திருக்க, அந்த நிமிடமும் வந்து சேர்ந்தது..
“பொண்ணை கூட்டிட்டு வாங்க..” அய்யர் சொல்லவும், ராணி சுந்தரியை அழைத்துக் கொண்டு வர, பதுமையென நடந்து வந்தவளை இந்திரனின் கண்கள் விழுங்கியது.. அவனது பார்வையின் தாக்கத்தை உணர முடிந்தவளுக்கு நெஞ்சம் படபடக்கத் துவங்கியது.. அவன் அருகில் அமர்ந்ததும், அவளது கண்கள் உயர்ந்து அவனைப் பார்க்க, இந்திரன் அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்..
அன்னக்கொடி போல நடந்து வந்தவளின் அழகு இந்திரனை தனக்குள் சுருட்டிக் கொண்டிருந்தது.. இத்தனை நாட்களில் இயற்கை அழகில் மிளிர்ந்துக் கொண்டிருந்தவள், இன்று பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்துக் கொண்டதில், அந்த வானத்து அப்சரஸ் கீழே இறங்கி வந்த தோற்றத்தை அவனுக்கு கொடுத்தது.. பூலோகத்தில் இருக்கிறோமா அல்லது தேவலோகத்திலா என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க, சுந்தரி அருகில் வந்து அமர்ந்தாள்.
அவள் அமர்ந்ததும் அவனது பார்வை அவளது இதழ்களுக்குத் தாவ, இயற்கையிலேயே அழகிய ரோஜா நிறம் கொண்ட அந்த இதழ்கள், அவள் போட்டிருந்த லிப்ஸ்டிக்கில் தேனில் ஊறிய சுலை போல இருக்கவும், இந்திரனுக்கு மூச்சு முட்டியது..
அவள் அமர்ந்ததும், அவள் அருகே மெல்ல சாய்ந்தவன், அவளது காதில்
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்..
என்று பாட.. சுந்தரி அவனை விழிகள் விரியப் பார்த்தாள்.. அதே நேரம் தன்னுடயவன் தனது அழகை வருணிக்க மனதில் எழுந்த சந்தோஷமும், அவனது கண்கள் சொல்லும் அந்த கதையில் சுந்தரியின் கன்னங்கள் சிவக்க, வெட்கப் புன்னகையுடன் தலை கவிழ்ந்துக் கொண்டாள்.
அதை ரசித்துக் கொண்டே, அய்யர் அவன் கையில் கொடுத்த ரோஜா மாலையை அவளது கழுத்தில் அவன் அணிவிக்க, மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்க, அதை தலை குனிந்து வாங்கிக் கொண்டவள், தனது கையில் இருந்த மாலையை அவனுக்கு அணிவிக்க, இந்திரன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்..
ராணியும் தாசும் இருவரையும் மனம் நிறைந்து பார்த்துக் கொண்டிருக்க, அவனது கையில் திருமாங்கல்யத்தை தரவும், அதை வாங்கி சுந்தரியைப் பார்த்தவன், அவள் தலை குனிந்து அந்த நொடிக்காக காத்திருக்கவும், அவளது கழுத்தைச் சுற்றி அதை எடுத்துச் சென்றவனின் இதயம் படபடக்க, அவளை என்றுமே பிரியாத வரத்தை வேண்டிக் கொண்டு, அவளது கழுத்தில் வைத்து முடிச்சிட.. ராணி மீதி முடிச்சைப் போடவும், இந்திரன் அதில் குங்குமத்தை வைத்து சுந்தரியின் நெற்றியிலும் வைத்து விட, சுந்தரியின் கண்கள் கலங்கியது..
அதை உணர்ந்தவன், “என்னம்மா?” என்று அவளது தோளை ஆதரவாக அழுத்திக் கேட்க, ‘ஒண்ணும் இல்லை..’ என்று மறுப்பாக தலையசைத்தவள்,
“எனக்கு இந்த நிமிஷம் நான் எப்படி ஃபீல் பண்றேன்னே தெரியல.. கொஞ்சம் எமோஷனலா இருக்கு.. அளவு கடந்த சந்தோசம் சொல்லுவாங்க இல்ல.. அப்படி இருக்கு.. அதுல தான் கண்ணு கலங்கிடுச்சு போல..” என்றவள், அவனைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொள்ள, அவளது தோளை மெல்ல அழுத்திவிட்டு, இந்திரன் அடுத்து அய்யர் சொல்வதை செய்யத் துவங்கினான்..
அவர்களின் பார்வைகளையும், உரசல்களையும் பார்த்துக் கொண்டிருந்த மலருக்கு, நெருப்பின் மீது நிற்பது போல இருந்தது.. அதுவும் சுந்தரியின் அழகு அவளை பொறாமை கொள்ளச் செய்திருந்தது.. இந்திரன் அவளைப் பார்த்து கனவில் மிதப்பவனைப் போல மிதக்கவும், மேலும் அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது..
‘எங்க கிட்ட இல்லாத அழகை அவகிட்ட என்ன கண்டுக்கிட்ட? வெள்ளைத் தோலு தானே அதிகமா இருக்கு..’ இந்திரனை வருத்தெடுத்தவள்,
‘இங்க தானே இருக்கப் போற.. உன்ன கவனிச்சுக்கறேன்..’ என்று கருவியவள், அவள் கையில் இருந்த பூக்களை கசக்கி அவர்கள் மீது வீச, அப்பொழுது ராணியைப் பார்ப்பதற்காக நிமிர்ந்த இந்திரனுக்கு அது கண்ணில் பட, அவனது மனது துணுக்குற்றது..
அனைத்து சடங்குகளும் முடிய, மணமக்கள் இருவரும் கோவிலைச் சுற்றி வருவதற்குள், அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து ராணி, தயாராக இருக்கவும், சுந்தரியின் விருப்பப்படி சார்பதிவாளர் அலுவலகம் சென்று, திருமணப் பதிவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்..
இருவரையும் வாசலில் நிற்க வைத்து ஆலம் சுற்றி ராணி வீட்டிற்குள் அழைத்துச் சென்றவள், நேராக அவளை அங்கிருந்த சாமி மாடத்தில் விளகேற்ற வைக்க, சுந்தரி கடவுளை வேண்டிக் கொண்டு விளக்கு ஏற்றுவதற்குள், இந்திரன் உடையை மாற்றிக் கொண்டு வந்து நிற்க, ராணி அவனை முறைக்கத் துவங்கினாள்..
“என்ன அக்கா எதுக்கு இப்படி முறைக்கிற?” புரியாமல் இந்திரன் கேட்கவும்,
“அதுக்குள்ள உனக்கு என்னடா அவசரம்? ரெண்டு பேருக்கும் பாலும் பழமும் தர வேண்டாமா?” என்று கடிய, சுந்தரி இந்திரனைப் பார்க்க,
“இங்க மாமா மட்டும் தனியா எல்லா வேலையும் செய்துட்டு இருக்காங்க.. அந்த பட்டு வேட்டியைக் கட்டிக்கிட்டு நான் என்னத்தை செய்யறது? அது தான்.. அடுத்து பந்தி வேலை ஆரம்பிச்சா அங்க இருக்க வேண்டாமா?” என்று கேட்க, ராணி தலையில் அடித்துக் கொண்டாள்.
“ஒரு அஞ்சு நிமிஷம் இருந்தா தான் என்ன? எங்க கல்யாணத்துல நீ மட்டும் தானே எல்லாம் செஞ்ச?” என்று சலித்துக் கொண்டவள், இருவரையும் அமர்த்தி பாலும் பழமும் கொடுக்க, அதை முடித்ததும்,
“நீ அங்க போய் டிரஸ் மாத்திட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ.. உள்ளேயே இரு.. நானோ அக்காவோ வந்து கூப்பிட்டா மட்டும் கதவைத் திற சரியா? நான் வேலை எல்லாம் முடிச்சிட்டு சாப்பிட கூப்பிடறேன்.. இல்ல.. அதுக்கு முன்னால பசிச்சா உள்ளேயே அக்காவை கொண்டு வரச் சொல்லி சாப்பிட்டு ரெஸ்ட் எடு” என்றபடி அவளது பதிலை எதிர்ப்பார்க்காமல் கிளம்பி வேலையைப் பார்க்கச் செல்ல, சுந்தரிக்கு ஏமாற்றமாக இருந்தது.. ராணியும் தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, பந்தி ஆரம்பிக்கவும், அனைவரும் சாப்பிடச் செல்லவும், சுந்தரி தனியாக நின்றாள்..
வந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ராணி, சுந்தரி தனியாக இருக்கவும், அவளிடம் ஓடி வந்து, “அவன் எங்க?” என்று கேட்க,
“இல்ல.. அவர் வேலையைப் பார்க்க போயிருக்கார்.. அக்கா.. நான் அங்க வீட்டுல போய் ரெஸ்ட் எடுக்கறேன்.. நேத்து நைட் எல்லாம் தூக்கமே வரல.. கொஞ்சம் படுக்கறேன்.. அவர் வேலை எல்லாம் முடிச்சதும் என்னை எழுப்புங்க..” என்றவள், வீட்டிற்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் விழுந்தாள். அவளது கழுத்தில் இருந்த மாங்கல்யம் அவளது கண்ணில் படவும், அதை வருடிக் கொடுத்தவள், அதில் முத்தம் பதித்து, கண்களை மூட, கோவிலில் இந்திரனின் பார்வைகள் நினைவு வந்தன.. உடலில் மின்சாரம் பாய்ந்ததொரு உணர்வில், கண்களை இறுக மூடிக் கொண்டவள், அப்படியே உறங்கியும் போனாள்..
நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு, “சுந்தரி… சுந்தரி..” இந்திரன் மெல்ல அவளது கன்னத்தை வருடி எழுப்ப, சோம்பலாக இமைத் திறந்து பார்த்தவள், அவளது முகத்தின் அருகே இந்திரனின் முகம் இருக்கவும், கண்களைச் சிமிட்டி அது கனவா நினைவா என்ற ஆராய்ச்சியுடன் பார்க்க,
“என்ன அம்மணிக்கு பசிக்கலையா? நல்ல தூக்கமா?” கேலியாக அவன் கேட்க, அப்பொழுது தான் தனது வயிற்றில் பசியை உணர்ந்தவள், எழ முயற்சி செய்ய, அவளது முதுகில் கைக் கொடுத்து அவளை அணைத்தபடி எழுப்பியவன், அவளது கன்னத்தைக் கடிக்க, ‘ஸ்..’ என்று அவள் வலியில் குரல் எழுப்பவும், இந்திரன் அவளைப் பார்த்து கண்ணடித்தான்..
“அதான் தாலி கட்டி முடிச்சாச்சு.. கடமை முடிஞ்சதுன்னு விட்டுட்டு போனீங்க இல்ல.. இப்போ என்ன கொஞ்சல் வேண்டி இருக்கு?” அவள் குறையாகக் கேட்க,
“ஓய்.. அம்மணிக்கு என் மேல கோபமா? மாமா மட்டும் தான் ரெண்டு நாளா அலைஞ்சிட்டு இருக்கார்.. அது தான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ன்னு போனேன்.. அது ஒரு குத்தமா?” முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்க, சுந்தரி அவனது முகத்தை ஆழ்ந்து நோக்கினாள்.
“இல்ல.. நீங்க அப்படியே விட்டுட்டு போனதும் எனக்கு ஒரு மாதிரி ஆச்சு.. என்னோட பாதுகாப்புக்காக தான் இந்த கல்யாணமோங்கற மாதிரி ஒரு செகண்ட் தோணிடுச்சு.. ஒரு மாதிரி ஆச்சு இந்தர்..” அவள் சொல்லவும், அவளது நாடியைப் பிடித்து நிமிர்த்தியவன், அவளது கண்களைப் பார்த்துக் கொண்டே,
“என்னைப் பார்த்தா உன்னை காப்பாத்த கல்யாணம் செஞ்சவன் போலவா இருக்கு உனக்கு? ஏண்டி இவ்வளவு கொஞ்சறேனே.. உனக்கு என்னைப் புரியவே இல்லையா? இல்ல நான் கொஞ்சறது எல்லாம் டயலாக் பேசற மாதிரி இருக்கா?” அவனது கேள்விக்கு சுந்தரி பதில் பேசாமல் இருக்கவும்,
“ஹ்ம்ம்.. இன்னும் கொஞ்சம் காதல் செய்ய கத்துக்கணுமோ இந்திரா.. பாரு உன் பொண்டாட்டியோட லுக்க.. இனிமே நிறைய சினிமா பார்த்து கத்துக்கணும்.. இல்ல.. உன்னோட சுந்தரி.. உன்னை சரியான மக்கு மந்திரின்னு சொல்லிடுவா..” அவன் தனக்குள் பேசுவது போல பேசவும், அவனைப் பார்த்து முறைத்தவள், பழிப்பு காட்ட, அவளது கையைப் பிடித்துக் கொண்டவன்,
“அம்மும்மா.. இத்தனை நாளா கடை வீடுன்னு சுத்திட்டு இருந்துட்டேன்.. காலேஜ் கூட நான் ஈவெனிங் காலேஜ் தான் போனேன்.. அதுல பொண்ணுங்க எல்லாம் அவ்வளவா கிடையாது.. நானும் போனோமா வந்தோமான்னு இருப்பேன்.. அதனால அந்த லவ் எல்லாம் எப்படி பண்றதுன்னு தெரியாது.. சினிமால காட்டற மாதிரி எல்லாம் எனக்கு செய்யத் தெரியாது.. உன்கிட்ட தான் நான் அந்த உணர்வு எப்படி இருக்கும்னே உணர்ந்தேன்.. இனிமே மெல்ல மெல்ல எனக்கு எப்படி லவ் பண்றதுன்னு சொல்லிக் கொடு.. நான் கத்துக்கறேன்.. சரியா டீச்சர் அம்மா?” முதலில் சீரியசாகத் துவங்கி, இறுதியில் விளையாட்டாக முடிக்க, சுந்தரி அவனது தோளில் தட்டினாள்.
“கொழுப்பு தான் உங்களுக்கு.. அப்படியே பச்சைப் பிள்ள எதுவும் தெரியாது..” என்றவளைப் பார்த்து அவன் சிரித்துக் கொண்டே,
“எனக்கு என்ன தெரியும் தெரியாதுன்னு உனக்கு தெரியத் தான போகுது..” அவளது காதில் சரசமாகச் சொன்னவன், அவளது கையைப் பிடித்து எழுப்ப, சுந்தரியோ அப்படியே அசையாமல் அமர்ந்திருக்கவும்,
“சீக்கிரம் முகம் கழுவிட்டு வா.. எனக்கு பசிக்குது.. நீயும் நல்லா தூங்கறியேன்னு நானும் எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது? உனக்கு பசிக்கலையா?” என்று கேட்டவன், அவளது இடையோடு பிடித்து தூக்கி அவளை நிறுத்த, அவனைப் பார்த்து பழிப்பு காட்டிக் கொண்டே முகம் கழுவி வந்தவளை அழைத்துக் கொண்டு, உணவுண்ணச் செல்ல, ராணி இருவருக்கும் இலை போட்டு பரிமாறி வைத்திருந்தாள்.
அவசரமாக கையைக் கழுவி வந்தவன், அவள் சாம்பார் ஊற்றவும், வேகவேகமாக பிசைய, “டேய்.. என் தங்கச்சிக்கு ஸ்வீட்டை ஊட்டி விட்டுட்டு நீ சாப்பிட ஆரம்பி.. அப்படியே என்னவோ அவசரமா பிசையற?” தாஸ் அவனை மிரட்டவும்,
“நான் சாப்பாடே அவளுக்கு தானே பிசஞ்சு வச்சேன்.. அவளுக்கு பசிக்கும்ல.. காலையில கூட அவ ஒழுங்கா சாப்பிடல..” என்றவன், ராணி போட்டு வைத்திருந்த ஸ்வீட்டை எடுத்து ஊட்ட, சுந்தரி மனம் மகிழ்ந்து அவன் தந்ததை வாங்கிக் கொள்ள, அதே நேரம் இந்திரன் ‘ஆ’ என்று வாய்த் திறக்கவும்,
“பார்த்து.. நானே உள்ளே போயிடப் போறேன்..” என்று கேலி செய்தவள், அவளது இலையில் இருந்த லட்டுவை எடுத்து அவனது வாயில் திணிக்க, அதை வாங்கிக் கொண்டவன், அசால்டாக அந்த முழு லட்டுவை கடித்து உண்ணத் துவங்கவும், சுந்தரி ‘ஆ’ என்று அவனைப் பார்க்க, தாஸ் நைசாக அவனுக்கு கண்ணைக் காட்டிக் கொண்டே வைத்த ஒரு லட்டுவை அப்படியே அவளது வாயில் திணித்தவன், அவளது முகத்தில் பூசி விட, சுந்தரி சிணுங்கிக் கொண்டே, தனது முகத்தைத் துடைத்துக் கொண்டாள்..
“சீக்கிரம் சாப்பிடு.. பசிக்குது..” இந்திரன் அவசரமாக தனது வேலையில் மும்முரமாக, தனது கையை மெல்ல நகர்த்தி அவனது தொடையில் நறுக்கென்று அவள் கிள்ளி விட, ‘ஆ.. ஆ..’ என்று இந்திரன் அலறினான்.
“என்னடா.. எதுக்கு இப்போ இப்படி கத்திட்டு இருக்க?” ராணி கேட்க, திருதிருவென விழித்தவன், அமைதியாக சுந்தரியைப் பார்க்க,
“பச்சை மிளகாயை கடிச்சு இருப்பாரா இருக்கும்க்கா..” சுந்தரி அப்பாவியாக கொடுத்த பதிலில், தலையை மேலும் கீழும் ஆட்டியவன், அமைதியாக உணவை உண்ண, மீண்டும் சுந்தரி அவனைக் கிள்ள வரவும், அவளது கையைப் பிடித்துக் கொண்டவன், அவள் பக்கம் சாய்ந்து,
“வேண்டாம் சுந்தரி… சொன்னா கேளு.. அப்புறம் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல.. இதுக்கு நீ அப்பறம் ரொம்ப ஃபீல் பண்ணுவ..” நக்கலாக சிரித்துக் கொண்டே அவன் சொல்லவும், தனது கையை பட்டென்று எடுத்துக் கொண்டவள், அமைதியாக உண்ணவும், மீண்டும் அவள் பக்கம் சாய்ந்தவன்,
“இல்லன்னா மட்டும் என்ன செய்யப் போறேன்.. அதையே தான் செய்யப் போறேன்..” அவளை வம்பு வளர்க்க, சுந்தரி நாணத்துடன் தலைகுனிந்துக் கொள்ள, உல்லாசமாக சிரித்துக் கொண்டே, இந்திரன் உணவை உண்ணத் துவங்கினான்..
பூமிப்பந்து தனது வேலையைச் செவ்வனே செய்து சூரியனின் கிரணங்களில் இருந்து தப்பித்து, இருளைப் பரவச் செய்ய, சுந்தரியை அழைத்துச் சென்ற ராணி, விளக்கேற்றச் சொல்ல, முகம் கழுவி வந்தவள், விளக்கேற்றி விட்டு,
“அக்கா.. நைட் என்ன செய்யணும்? உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணவா? சும்மா உட்கார்ந்து இருக்கறது போர் அடிக்குது..” என்றபடி ராணியின் அருகே செல்ல,
“இன்னைக்கு ஒண்ணும் இல்ல.. மதியம் சாப்பாடே நிறைய மீதி இருக்கு.. அது சாப்பிட்டா போதும்.. சரி ஆகிடும்.. கொஞ்ச நேரம் டிவி பாரு..” என்று ரிமோட்டை எடுத்து அவளிடம் தர, நெடுநாட்களுக்குப் பிறகு டிவியைப் பார்த்த சந்தோஷத்தில், டிவியை இயக்கியவள், ஆங்கிலப்படம் ஒன்றை போட்டுக் கொண்டு அதில் மூழ்கிப் போய் அமர்ந்திருந்தாள்.
மெல்ல இந்திரன் அவள் அருகே வந்து அமரவும், அதைக் கூட கவனிக்காமல் அவள் அமர்ந்திருக்க, அவளைப் பார்த்துச் சிரித்தவன், அவளது கையை மெல்லச் சுரண்டினான்..
“ம்ப்ச்.. டோன்ட் டிஸ்டர்ப்..” அனிச்சை செயலாக சொல்லிவிட்டு, அவள் மீண்டும் திரையில் பார்வையைப் பதிக்க, இந்திரனுக்கு சிரிப்பு வந்தது..
அவளது கன்னத்தை மெல்ல அவன் கிள்ள, திரும்பி அவனைப் பார்த்தவள், “கொஞ்சம் பேசாம இருங்க.. இந்தப் படம் நல்லா இருக்கும்..” என்று சொல்லவும், இந்திரன் அவளது தோளில் சாய்ந்தபடி டிவியைப் பார்க்க, சுந்தரி அவனது முகத்தைப் பார்த்தாள்..
“இந்த வீட்ல டிவி வாங்கி வச்சோமே தவிர யாருமே பார்த்தது இல்ல.. நான் தான் டிவி வீணா போகுதேன்னு எப்போவாவது ராத்திரி நியூஸ் போட்டு பார்ப்பேன்.. அவ்வளவு தான்..” என்றவன், அவளது கையில் தனது கையைக் கோர்த்துக் கொண்டான்..
“உனக்கு அவங்க பேசறது எல்லாம் புரியும் இல்ல..” அவன் கேட்க, அவனைப் பார்த்தவள், கண்களைச் சிமிட்டி,
“வேற வழி இல்லையே.. இந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்..” என்றவள், மீண்டும் அதில் மூழ்கிப் போக, இந்திரனும் அவளுடன் சேர்ந்து படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. வெளியில் சென்றுவிட்டு வந்த ராணி,
“மணியாகுது.. ரெண்டு பேருக்கும் அங்க வீட்ல சாப்பிட வச்சிருக்கேன்.. சாப்பிட்டு நேரத்தோட தூங்கப் போங்க..” என்று சொல்லவும், இந்திரன் ராணியை ஒரு மாதிரிப் பார்க்க,
“சரிக்கா.. குட் நைட்..” என்று சுந்தரி எழுந்துக் கொள்ளவும், ராணி அவளது கன்னத்தில் முத்தமிட்டு, காதில் எதுவோ சொல்லவும், ‘குட் நைட்டா?’ திகைத்து இருவரையும் பார்த்தபடி, சுந்தரியை அழைத்துக் கொண்டு நடக்க,
“டேய்.. இந்தா உன்னோட தலைகாணி.. உனக்கு தான் இந்தத் தலைகாணி இல்லன்னா தூக்கமே வராதே.. இதை எடுக்காம போற?” என்று கேட்டபடி அவனது தலைகாணியை, அவனிடம் தூக்கிப் போட, சுந்தரி முன்னே சென்றுவிடவும், ராணியை முறைத்துக் கொண்டே அவன் நகர்ந்து செல்லவும், ராணி சிரிப்பை அடக்கிக் கொண்டு, மீதி வேலைகளை முடித்தாள்.
வீட்டிற்குச் சென்ற சுந்தரி, ராணி சுட வைத்து வைத்திருந்த உணவுகளை எடுத்து வைக்க, தனது தலையணையை எடுத்துக் கொண்டு வந்தவன், அதை அப்படியே போட்டுவிட்டு, சுந்தரியைப் பார்க்க, “உட்கார்ந்து சாப்பிடுங்க.. தூங்கப் போகலாம்.. ரொம்ப டயர்டா இருக்கு..” என்றவள், அவனுக்கு உணவைப் போடவும்,
“நீயும் காலையில என் கூட தானே சாப்பிட்ட.. உட்கார்ந்து நீயும் சாப்பிடு.. சேர்ந்தே சாப்பிடலாம்..” இந்திரன் சொல்லவும், சுந்தரி தனது தட்டை வைத்துக் கொண்டு அமர, இருவரும் உண்டு முடித்து எழுந்துக் கொள்ள, அனைத்தையும் எடுத்து வைத்தவள், அங்கிருந்த சேரில் இருந்த புடவையை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்..
“இவளுக்கு எப்போப் பாரு குளிக்கிறதே வேலையாப் போச்சு.. நாட்டுல இருக்கற தண்ணிப் பஞ்சத்துக்கு இப்படி குளிச்சா தண்ணி என்ன ஆகறது?” என்று புலம்பியப்படி அவன் நிற்க, குளித்து முடித்து வந்தவள், அவனிடம் டவலை எடுத்து நீட்டவும், அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே அவன் குளிக்கச் சென்றவன், திரும்பி வந்த பொழுது சுந்தரி எங்கும் இல்லாமல் போகவும், அவனது இதயம் ஒரு நிமிடம் நின்றுத் துடித்தது..
“சுந்தரி.. சுந்தரி..” படபடப்பாக அவன் அழைக்க,
“ரூம்ல தான் இருக்கேன்..” அவளது குரல் கேட்டதும் தான், நின்றிருந்த மூச்சு வெளியில் வர, அவசரமாக தனது லுங்கியை எடுத்து அணிந்துக் கொண்டே அவன் வேகமாக அவளது அறைக்குச் சென்று அவளை அணைத்துக் கொண்டவன்,
“கொஞ்ச நேரம் உன்னை காணும்ன உடனே மூச்சே நின்னுப் போச்சுடி..” என்றபடி, அவளது முகமெங்கும் முத்தமழைப் பொழிய, சுந்தரி அவனது கழுத்தில் தனது கரங்களை மாலையாகக் கோர்த்து, அவனது கன்னத்தில் இதழ் பதிக்கவும் தான், அவனது பார்வை சுற்றத்தில் பதிந்தது..
அந்த அறை முழுவதும் ரோஜாக்களினால் அலங்கரிக்கப்பட்டு இருக்க, அந்த இடத்தைப் பார்த்ததும், இந்திரனின் கண்கள் விரிந்தது.. அத்தனை நேரம் பதட்டத்தில் இருந்தவனின் இதழ் ஒற்றுதல்கள் யாவும் இப்பொழுது அழுத்தம் கூடி இருக்க, சுந்தரியின் நெஞ்சம் படபடக்கத் துவங்கியது..
“அம்மும்மா..” என்று முனங்கியப்படி அவளது கழுத்து வளைவில் இதழ் பதித்தவன், மெல்ல அவனது உதடுகளை அங்கு உறவாட விட, அந்த உணர்வுகளின் தாக்குதலில் சுந்தரி விழிகளை மூடிக் கொண்டாள். அவள் விழி மூடி நிற்கும் அழகைப் ரசித்தவன், அவளை மெல்ல பெட்டில் கிடைத்தி, காதல் கம்பனாக மாறி அவளது மேனியில் கவிதை எழுதத் துவங்க, சுந்தரி அந்த சுகமான கவிதையில் தன்னைத் தொலைக்கத் துவங்கினாள்.. முதல் எது முடிவெது என்று புரியாமல் கவிதையின் வரிகளைத் தேடத் துவங்கி, சந்தம் பிடித்து, வார்த்தைகளைக் கோர்த்து, அழகாக எழுதி முடிக்க, அந்த சுகமான கவிதை மீட்டலின் முடிவில், இருவரின் இதழ்களிலும் நிறைவானதொரு புன்னகை அரும்ப, பெண்ணவள் கண்களை மூடிக் கிடந்தாள்..
“சுந்தரி..” இந்திரன் மென்மையாக அழைக்க, கண்களைத் திறந்து அவனைக் கேள்வியாகப் பார்த்தவளிடம்,
“இப்போவாவது நீ யாருன்னு சொல்லலாம்ல.. நான் உன் புருஷன்டி.. இதுக்கும் மேல நீ யாருன்னு தெரியாம இருந்தா நல்லா இருக்குமா? முன்ன தான் நான் உன்னை உங்க வீட்ல கொண்டு விட்டுடுவேன்.. இப்போ உன்னைப் பிரிஞ்சு என்னால ஒரு நிமிஷம் இருக்க முடியாதுடி.. சொல்லு சுந்தரி..” இந்திரன் கேட்க, கண்களைத் திறந்தவள்,
“ஏன்.. நான் யாருன்னு தெரிஞ்சா தான் என் கூட குடும்பம் நடத்துவீங்களா?” இடக்காக சுந்தரி கேட்க,
“பார்த்தியா.. நான் அப்படிச் சொன்னேனா? உன்னோட புருஷனா நீ யாருன்னு நான் தெரிஞ்சிக்க வேண்டாமா? அது கூடவா நான் செய்யக் கூடாது?” இந்திரனின் கேள்வியில் சில நிமிடங்கள் மௌனமாகக் கழிய, சுந்தரி அவனது மார்பில் வருடியபடி, அவனது முகம் பார்த்தவள்,
“திவ்யம் டைமண்ட்ஸ் கேள்வி பட்டு இருக்கீங்களா?” என்ற கேள்வியை முன்னே வைக்க, புருவத்தை சுருக்கி சிறிது யோசித்தவன், மண்டையை மேலும் கீழும் ஆட்டி,
“ஹ்ம்ம்.. வெளிய போக வர பெரிய பில்டிங்ல எல்லாம் ஹோடிங் விளம்பரம் பார்த்திருக்கேன்.. ரொம்ப பெரிய கடைன்னு சொல்லுவாங்க.. வைரத்துக்கு மட்டுமே அந்தக் கடைன்னு சொல்வாங்க.. உள்ள எல்லாம் அப்படி இருக்குமாமே.. சொர்க்கத்துக்குள்ள போன மாதிரி இருக்கும்ன்னு சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன்.. இப்போ அதை ஏன் கேட்கற?” இந்திரன் மெல்ல அவளது முகத்தை நிமிர்த்திக் கேட்க,
“அது எங்க கடை தான்.. என்னோட முழு பேர் திவ்யசுந்தரி..” சுந்தரியின் பதிலில் இந்திரன் திகைப்புடன் அவளைப் பார்த்தான்..
“சுந்தரி..” பேச்சே வராமல் அவன் திக்கித் திணற,
“ஏன் இந்தர்.. இப்படின்னு தெரிஞ்சு இருந்தா என்னைக் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டீங்களா?” சுந்தரியின் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் திணறிய இந்திரன் அவளது முகத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டு, வார்த்தை வராமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அதுமட்டும் இல்ல.. ஜெனிக் சாப்ட்வேர்ஸ் எங்க கம்பனி தான்.. கோயம்பத்தூர்லையும், சென்னைலையும் ஆபீஸ் இருக்கு.. பெரிய கம்பனிக்கு அடுத்து எங்க கம்பனி தான் மார்க்கெட்ல இருக்கு..” அவள் சொல்லச் சொல்ல, அவளை அணைத்திருந்த கரத்தை எடுத்து விட்டு இந்திரன் அதிர்ச்சியுடன் அவளது முகத்தைப் பார்க்க, அவனது கரத்தை தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்டவள்,
“ஏன் இந்தர்.. அப்படின்னு தெரிஞ்சிருந்தா என்னைக் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டீங்களா?” கோபம் துளிர்க்க அவள் கேட்கவும், மறுப்பாக தலையசைத்தவன், அவளது முகத்தை ஏந்தி,
“ஏண்டி இப்படி பண்ணின? அவ்வளவு வசதியை எல்லாம் விட்டுட்டு இங்க வந்து, இந்த இடத்துல இருந்துக்கிட்டு, வேலைக்கு போய் சம்பாதிச்சுக்கிட்டு.. ஒரு காய்காரனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்கயே இருக்க ரெடியா இருக்கியேடி.. உனக்கு நான் அப்படி என்னடி செஞ்சிட்டேன்.. ஏண்டி இப்படி எல்லாம்? அப்படி அங்க இருந்து வெளிய வர உனக்கு என்ன தாண்டி கஷ்டம்..” மனமாறாமல் அவன் புலம்ப, சுந்தரி அவனது முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டாள்.
“அன்பு.. பாதுகாப்பு.. என்னோட இந்திரன்..” அவள் சொல்லவும், அவளது பதிலில் நெகிழ்ந்து போனவன், அவளது நெற்றியில் இதழ் ஒற்ற,
“இந்தர்.. அது எல்லாம் எங்க அம்மா வீட்டுச் சொத்து.. என்னோடது இல்ல.. என்னோடது என் புருஷன் நீங்க சம்பாதிக்கிறது தான்.. எனக்கு அது தான் வேணும்.. எனக்கு அதை எல்லாம் விட இந்திரன் பெருசு.. இந்திரனோட கையணைப்புலையே இருக்கணும்.. இந்திரனோட வாரிசை சுமந்து பெத்தெடுத்து.. சந்தோஷமா என்னோட கடைசி மூச்சு இருக்கற வரை உங்களோட வாழனும்.. அது தான் வேணும்..” என்றபடி அவனது இதழில் இதழ் பதிக்க, அவளது அன்பில் திக்கு முக்காடியவன், அவளை இறுக அணைத்துக் கொண்டான்..
“அதை எல்லாம் விட நான் என்னடி அப்படி உசத்தி.. கண்ணைக் காட்டினா உனக்கு ஏவல் வேலை செய்ய அத்தனைப் பேர் இருந்திருப்பாங்க.. இப்போ.. இப்படி நீயே எல்லா வேலையும் செஞ்சிக்கிட்டு.. போடி..” மீண்டும் அவளது அன்பில் நெகிழ்ந்து கேட்டவனின் இதயத்தைத் தொட்டுக் காட்டியவள்,
“இது தான்.. உங்களோட அன்பு தான் எனக்கு உசத்தி.. எனக்கு பணம் எல்லாம் வேண்டாம்.. அது நாம சம்பாதிச்சுக்கலாம்.. நீங்க என் மேல வச்சிருக்க அன்பும்.. அக்கறையும் தான் எனக்கு எல்லாத்தை விட உயர்வு..” என்றவளை தழுவிக் கொண்டவன், அவளது அன்பில் கட்டுண்டு மீண்டும் கவிதைகள் எழுதத் துவங்கினான்..
அதிகாலை மணி மூன்றைக் கடந்து கடிகார முட்கள் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில், சுந்தரியின் இதழ்களில் அழுந்த முத்தமிட்டு அவள் மீதிருந்து கீழே சரிந்தவன், அவள் இமைகள் சொருக தண்ணீர் கேட்கவும், நெற்றியில் இதழ் ஒற்றியபடி, அவளுக்கு தண்ணீரை புகட்ட, அதைக் குடித்து முடித்தவள் அப்படியே உறங்கியும் போனாள்.
அவளது முகத்தில் வியர்வையில் ஒட்டி இருந்த முடிகளை மெல்ல ஒதுக்கிவிட்டவன், “என் மேல இவ்வளவு அன்பை வைக்க நான் என்னடி செஞ்சேன்? அப்படி எல்லாத்தையும் சுகத்தையும் விட்டுட்டு நான் தான் வேணும்ன்னு சொல்றியேடி.. உனக்கு நான் என்ன செய்யறது?” மனதில் நினைத்துக் கொண்டவன், தாகமெடுக்கவும், அங்கிருந்த சொம்பை கையில் எடுக்க, அதில் தண்ணீர் இல்லாமல் போகவும், மெல்ல சுந்தரியின் தலையை தலையணையில் கிடத்திவிட்டு, சமையலறையை நோக்கிச் சென்று அவன் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த வேளையில், அவர்களது வீட்டின் கதவு படபடவென்று தட்டப்பட்டது..
“யாரு..” இந்திரன் குரல் கொடுக்க, அந்தப் பக்கம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போகவும், இந்திரனுக்கு பயத்தில் நெஞ்சை அடைத்தது..
??மனதைத் தருவாள்.. ????
???❣️❣️❣️❣️????❣️❣️❣️❣️????