இரண்டு வருடங்களின் பின்னர்.
விஜய் அவனது கம்பெனியை திறம்பட நடத்திக்கொண்டு இருக்கிறான், எனினும் தலைமை பொறுப்பை தந்தையிடம் இருந்து இன்னும் எடுக்கவில்லை. அவனுக்கு வாகனங்களின் உதிரிப்பாகங்களை பொருத்துவது மிகவும் பிடித்தமான வேலை. மிக நுணுக்கமாக, பொறுமையாக செய்வான். வாகனங்களின் மிக முக்கிய பாகங்கள் பொருத்தும் பகுதியிலே கூடிய நேரம் செலவிடுவான். இரும்பும், இயந்திரங்களுடனுமே இவனது பொழுது முழுதும் கழிகின்றது.
பிரபா ஆஸ்திரேலியாவில் அவனது அக்காவின் கணவருடன் இணைந்து ஆறு மாதங்களாக அவனது உழைப்பின் பங்கை முதலிட்டு ஆரம்பித்த வாகன விற்பனை நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறான் . இன்னும் இரண்டு மாதங்களில் வருவதாகவும் நண்பர்கள் மூவரும் இணைந்து ஒரு வாகன ஷோ ரூம் ஒன்றை நட்பினை மேலும் தொடர எண்ணி, ஆரம்பிக்க உள்ளனர்.
தருண் அவனது தந்தையுடன் இணைந்து செயல்பட அவர்களது தொழிலும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
தருண் அவர்களது வருடாந்தம் நடைப்பெறும் பூ கண்காட்சிக்கு தேவையான வேலைகளில் ஈடுபட்டிட்டுத்தான்.முதன் முதலில் அவன் பொறுப்பில் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழ் வழங்க அடுத்த வாரம் விஜயின் வீடு வருவதாக கூறியிருந்தான். ஹரியின் திருமணத்தின் பின்னர் நண்பர்கள் பேசிக்கொண்டாலும் சந்தித்து நேரம் செலவிட அவர்களது வேலை இடம் தரவில்லை. இடையில் விஜய் அவர்களது கம்பெனி தேவைக்காக ஆஸ்திரேலியா சென்று பிரபாவுடன் ஒரு வாரம் தங்கி வந்தான் .
நிவி அவளது படிப்பை முடித்துக்கொண்டு கனடாவில் பிரபல கல்லூரி ஒன்றில் மேட்படிப்பை தொடர தெரிவு செய்யப்பட்டவள் அனுமதி பத்திரம் வரும் வரை காத்திருக்கிறாள்.
தாரா இறுதி ஆண்டில் கல்லூரி வாழ்வினை ரசித்து தொழில் புரிய விருப்பம் இல்லாது இருந்தவள், இன்று தொழிலில் ஆர்வம் கொண்டவளாக படித்துக்கொண்டிருக்கிறாள்.
ஹாஸ்டலில் தங்கி படிக்க,
இவளுடன் அனிதாவும் புதிதாக புன்யா தோழியாக இணைந்திருந்தாள்.
காலை கதிரவன் கிழக்கிலிருந்து மேல் எழும்ப நான்கு சக்கர இயந்திரங்களுடன் மக்களும் போராடி ஓட, கல்லூரி செல்லும் இளவட்டங்கள் செல்லும் பாதை அது.
கல்லூரிக்கு இன்னும் அரை கிலோமீட்டர் தூரம் இருக்க, இரு மருங்கிலும் நிழல் பரப்ப ஓங்கி வளர்ந்த மரங்களில் ஒன்றின் கீழே
ஊதா நிறத்தில் மஞ்சள் நிற பூக்கள் கொண்ட டொப்பும் மஞ்சள் நிற பொட்டோமும் அணிந்து மஞ்சள் நிற ஷோலை தலைக்கு சுற்றி கண் தவிர முகத்தை மறைத்தவாறு மையிட்ட விழிகள் மட்டுமே தெரிய அதற்கு மேலாக தலைக்கவசம் அணிந்து ஸ்கூடியில் ஒரு காலை கீழே ஊன்றி முன்னாள் அமர்ந்திருக்க அனிதா கீழிறங்கி நின்றிருந்தாள்.
இது தினமும் புன்யா அவளது வண்டியில் வரும் வரை காத்திருக்கும் இடம்.அவ்விடம் இருந்து மூவரும் ஒன்றாகவே கல்லூரிக்கு செல்வர்.
இவர்கள் இவ்வாறு நின்றிருக்க,
“என்ன அனி, புன்யா இன்னக்கி லேட் பண்றா.லேட்டா போனா மரத்தடி மங்கிஸ் கிட்ட கதை அளக்க வேண்டி வரும்.” என தாரா கூற, அனிதாவின் பேச்சை காணும் என்று அவளை பார்க்க அவளோ இவர்களுக்கு முன் நின்றிருந்த பிளாக் லேண்ட் க்ருசரை பார்த்த வண்ணம் இருந்தாள்.
“ஹேய் யாரை அப்படி பார்க்குற”
“அது நம்ம தரு அண்ணா பிரென்ட் விஜய் அண்ணா தானே?” எனக்கூறவும்
தாரா சட்டென்று திரும்பி வண்டியை கூர்ந்து நோக்கினாள்.ஆம் அவனேதான். வண்டியை ஓரமாக நிருத்தி யாருடனோ அலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தான்.
இரண்டு வருடங்களின் பின்னர் நேரில் இன்று தான் பார்க்கிறாள்.
முழுக்கை இளநீல நிற சட்டை,கறுப்பு காட்சட்டை கண்களைமறைத்த கறுப்பு கண்ணாடி, ஷார்ட் பியர்ட், முகத்தில் பிஸ்னஸ் மேன் லுக் என பார்க்க சைட் அடிக்கும் லுக்கில் இருந்தான்.
“செம ஹன்சாம் ஆகிட்டாங்க இல்ல…” என்று அனிதா கூற,
“ஹ்ம்ம்…” எனும் சத்தம் மட்டுமே தாராவிடம். தாராவின் கைகள் மெதுவாக அவளது வயிற்றோடு கட்டிக்கொண்டு அவள் இடை தழுவிய செயினை தொட்டுக்கொண்டது.
(விஜயின் கை செயின் இன்னும் அவளது இடையில். அவளது இடைக்கு போதாது போக அதனை அட்ஜஸ்ட் பண்ணும் வகையில் இன்னும் நீளமாக்கி புதிதாக மாற்றியமைத்திருந்தாள் )
புன்யா அவர்கள் அருகில் வந்து ஹார்ன் அடிக்கும் வரையில் அவனை தான் இருவரும் பாத்திருந்தனர்.
” என்னப்பா யாரை இவ்வளவு டீப்பா பார்த்துக்கிட்டு இருக்கீங்க. ” எனவும்
“அண்ணாவோட பிரென்ட்.” என தாரா கூற,
“அண்ணாக்கு பிரென்ட் னா நமக்கும் பிரெண்டதான்ப்பா.” என்றவள் அவளது ஸ்கூட்டர் ஹார்னை ரெண்டு தரம் அழுத்தி அவனை இவர்கள் பக்கம் திருப்பி இருந்தாள்.
“புன்யா என்ன பண்ற…?” என்று கூறி முடிக்க முன்னமே அவனும் இவர்களை பார்க்க ,
ஹாய் அண்ணா… ” என இங்கிருந்து கையும் அசைத்து விட்டாள். அவனும் யார்டா இது என்றுதான் பார்த்தான்.
“ஹாய் அண்ணா ஞாபகம் இருக்கா?” எனவும் கண்ணாடியை கலட்டியவாறு இவர்களிடம் வந்தான்,
“தருண் அண்ணா வீட்ல பார்த்தோம்.” என அனிதா கூறவும்.
“ஓஹ்! சட்டுனு ஞாபகம் வரல.எப்டி இருக்கீங்க? இங்கே என்ன பண்றிங்க?” எனவும் ,
” இவ வர்ர வரைக்கும் வெய்ட் பண்ணிட்டு இருந்தோம் ணா. பக்கத்துலதான் காலேஜ்” என அனிதா கூறினாள்.
“தாரா என்னடி அண்ணா கூட கதைக்காம என்ன பார்க்குற ?” எனவும் அது வரை அவனையே பார்த்திருந்தவள் தலைக்கவசத்தை கலட்டினாள்.ஷோலை கழட்டப்போக,
“வேண்டாம்மா எப்பவுமே என்ன பார்த்ததும் மயக்கம் போட்ருவாங்க, இன்னக்கி அவங்கள பார்த்து நா மயக்கம் போட்டுட்டேன்னா சோ வேணாம். ” என மெலிதாக சிரிக்கவும்
தாராவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“அச்சோண்ணா அது மேடம் எப்பவும் அப்படித்தான், டென்ஷன் கூடிடுன்னா சட்டுனு மயக்கம் போற்றுவா, ஆனா இப்போ அப்படியில்ல.’
என கூறிய புன்யா,’இப்போ காலேஜ்ல இவள பார்த்து தான் எல்லோரும் மயக்கம் போட்றாங்கண்ணா.” எனவும் தாரா அவளை முறைக்க,
“ஓஹ் அப்டியா?” என தாராவை பார்த்தவன்.அவள் ஷாலை முகத்திலிருந்து நீக்க பார்த்தவன் கண்சிமிட்ட மறந்தான் ஓர் நொடிதான் சட்டென்று தன்னிலை உணர்ந்தவன்.
“ஹையோ எனக்கும் மயக்கம் வரும் போலவே… முகத்தின் பால் அழகை ரசித்தவன் உள்ளம் அதனை தொட்டுப்பார்க்க சொல்ல சட்டென்று கண்ணாடியைக் கொண்டு கண்ணை மறைத்தவாறு, ‘இது சரியில்லயே கிளம்புடா’ என அறிவு கூற, ‘எங்கடா கிளம்புற அவளை கொஞ்சம் பாரேன் ‘ என மனம் கூவ மனதை அடக்கியவன்,
“ஓகே மா. ஒரு நாள் வீட்டுக்கு வாங்களே பக்கத்துலதான் இருக்கு, நிவிதாவும் வீட்லதான் இருக்கா ” எனவும்,
” ஓகே அண்ணா இன்னொரு நாள் பார்க்கலாம். “என. அவனும் நேரமாவதாக கூறி அவர்களிடம் விடைபெற்றான்.தாராவிடம் ஒரு சின்ன சிரிப்புடன் கூடிய தலையசைப்பு. இவளும் அவ்வாறே. ஆனால் அவளின் கண்கள் கூறிய செய்தி. அறிய தவறினானோ.
கல்லூரி சென்றவள் அவன் நினைவிலே இருந்தாள். இரண்டு வருடங்களிலும் அண்ணனும் அவளது அன்னை அருணாவுடன் கதைப்பதை வைத்தும் இவனை பற்றி தெரிந்துக் கொள்வாள். அருணாவுடனும் அன்னை பேசும் சந்தர்பங்களில் அலைபேசியில் அடிக்கடி பேசுவாள்.
இது காதலா.ஜஸ்ட் பார்த்து ஹாய் ஹலோ கூறிக்கொண்டவர்கள் அவ்வளவே. இவளும் அவனை படங்களில் ஹீரோவை சைட் அடிப்பது போலவே நினைத்திருந்தாள். எனினும் இன்று அவனை பார்த்ததில் இருந்து மனதில் சொல்ல தெரியாத உணர்வொன்று…. கல்லூரி வந்த நாள் முதல் யாரேனும் இவளை பார்த்து பூ நீட்டுவதே இன்று வரை வேடிக்கை அதிலும் முதல் இரண்டு தடவைகள் அவ்விடமே மயக்கம் போட்டு விழுந்தது வேறு கதை.வீட்டில் மாலதியும் நண்பர்களும் கிண்டல் பண்ணுவர்.கடைசி ஒரு வருடமாகத்தான் அவளது சிறு விடயங்களுக்கும் டென்ஷன் குறைக்க, மயக்கம் ஏற்படாது இருக்க தன்னையே சமநிலை படுத்திக்கொள்ள ஒரு டாக்டரின் உதவியோடு பழகி கொண்டிருக்கிறாள்.
பல ஆடவர்களை பார்த்திருந்தாலும் யார் மீதும் ஈடு பாடில்லாது இருப்பதற்கு ‘என் மனதில் இடம் இல்லையா, இல்லை என் மனமே என்னிடம் இல்லையா? ‘என தன்னை தானே கேட்டுக்கொண்டு ஒரு வாரமாக சுற்றிக்கொண்டு இருக்கிறாள்.
தருணின் மலர் கண்காட்சி இனிதே நடை பெற்று முடிந்திருந்தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் நடை பெற நிவிதாவும் விஜயுடன் வந்திருந்தாள் இவர்கள் இரண்டாம் நாள் வர, தாரா முதல் நாளே அவளது கல்லூரி நண்பர்களுடன் வந்து சென்றிருந்தாள்.
நிவியை கண்டவன் அவளை கண்ட நொடி உள்ளம் குளிர்த்தவன் அவளுடன் வந்த தன் உயிர் நண்பனையும் அவனது கைகோர்த்து வந்த நிவியையும் பார்த்து மனதால் சொல்ல முடியா துயர் கொண்டான். நண்பனின் மனைவியாக போகிறவள். அவளை பார்ப்பது என் நட்புக்கு செய்யும் துரோகம் என மனதில் எண்ணியவன் முகத்தில் ஒன்றும் காட்டாது அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றான். இவனது முதல் பார்வையும் அதன் பின்னான முக மாற்றத்தையும் கவனித்த கண்கள் மனதால் அவனை மனதால் வறுத்தெடுத்தது.
மலர் பிரியர்கள் மட்டுமல்லாது கலையினை நேசிப்பவர்களும் அவ்விடம் வந்தால் திரும்பி செல்ல நினைக்க மாட்டார்கள். பூக்கள் கொண்டு கலை நயமிக்க வடிவ உருக்கள் அவ்விடத்தை அலங்கரித்திருநதது.
நிவி மிக ஆர்வமாக ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள். தருண் சென்ற வாரம் விஜயின் இல்லம் சென்று அழைப்பிதழ் வழங்க முடியாது போக கண்காட்சி முடிய விஜயின வீடு வருவதாக கூறியவன் இரண்டு நாட்களுக்கு வெளியில் எங்காவது ரிலாக்ஸாக செல்லலாம் என பேசிக்கொண்டு விஜய் விடைபெற்றான்.
கடந்த இரு வாரங்களாக மனது ஒரு நிலை இல்லாது இருக்க தனக்கு என்னாச்சு என்று குழம்பிப்போனாள் தாரா. எத்திசை பார்த்தாலும், எங்கு பார்த்தாலும் எதிலும் அவன் விம்பம். பிடித்தம் என்பது வேறு காதல் என்பது வேறு அல்லவா. அதை இந்த ரெண்டு வாரங்களாக உணர்கிறாள்.படம் ஒன்றை பார்த்த பிறகு அந்த கதாநாயகன் மேல் வரும் பிடித்தம், என்பது அவனது உடை, அவன் பயன் படுத்தும் பொருள் போல வாங்கி உபயோகிப்பது, அவனது படங்களை வாங்கி அறை சுவர்களை அலங்கரிப்பது என செய்ய வைக்கும். அது போலவே இவளது பள்ளிப்பருவ வயதில் விஜய் மீதான பிடித்தம் இருந்தது. ஆனால் அன்று பாதையில் அவனை பார்த்த நொடி முதல் ‘அவன் எனக்கானவன்.இது பிடித்தத்திற்கும் மேலாக,என்னுடனே என்கூடவே என்னுடன் என் வாழ்க்கை பாதையில் வரவேண்டும்’ என என் மனம் நினைக்கிறதே. அதை என்னவென்று சொல்வேன்…..
‘இது சரியா?அவங்களுக்கும் இப்படி தோனி இருக்குமா. சின்னப்பொண்ணு இதெல்லாம் தப்புன்னு சொல்லிருவாங்களா?நா சின்னப்பொண்ணா?அண்ணாவோட நட்பு இதுனால இல்லமாகி போகுமா? அம்மா வேறு அருணா அத்தைக்கூட ரொம்பவ் நட்பா இருக்காங்க என்ன பண்ணலாம்?’ யோசித்துக்கொண்டிருந்தவள் அன்று பாதை ஓரத்தில் வண்டியில் சாய்ந்து நின்றிருந்தவாறு இருக்கும் உருவம் அவள் கை வண்ணத்தில் தத்ரூபாமாக வரையப்பட்டிருந்தது. இந்த இரண்டு வருடங்களில் பத்திற்கும் மேட்பட்ட படங்கள் அவளது நோட் புத்தகத்தில் வரையப்படடிருக்க அவன் அவள் மனதில் எவ்வளவு ஆழப்பதிந்து இருக்கிறான் என்பதை விளக்கும்.
ஹ்ம்ம் பார்க்கலாம்….
ஸ்ரீ என் காதல் உங்களை வந்து சேருமான்னு…’ தாரா ஸ்ரீ என்னைக்கும் தாரா ஸ்ரீ (விஜய் ஸ்ரீ ) யாகவே இருக்க ஆசை படறேன். என்னை புரிஞ்சிப்பீங்களா ?
தாரா அவள் இடையை இறுக்க தழுவிக்கொண்டு இந்த செயின் என்னிடம் இருப்பது என்னவோ உங்க கை என் இடையை சுற்றி இருக்கி தழுவியது போலவே உணர்கிறேன் ஸ்ரீ. என்னை தழுவும் அந்த கைகளுக்குள் நான் அடங்கிவிட நினைக்கிறேன் ஸ்ரீ …. .
உன் கன்னத்து மீசைகள் என் தோல் உரச உன் இதழ் என் காதோடு உரசிப்பேசும் வார்த்தைகள் கேட்க நினைக்கிறேன் ஸ்ரீ…
உன்னுடன் என்றும் வாழ நினைக்கிறேன் ஸ்ரீ…
உன்னுள் நான் நீயாக…
என்னுள் நீ நானாக…
வாழ நினைக்கிறேன் ஸ்ரீ….”
ஸ்ரீ…
ஸ்ரீ…
ஸ்ரீ…
ஒவ்வொரு படத்துடனும் இவ்வாறான காதல் கிறுக்கல்கள்
“அதிகமா ஆசை படறேனா ஸ்ரீ…”
எது வேண்டும் என்றாலும்,என்ன தேவை என்றாலும் என்னிடமே கேள். நீ கேட்கும் வரை தானே நான் காத்திருக்கிறேன் என்று கடவுளே கூறுயுள்ளார். கடவுளிடம் கேட்கும் அளவிற்கு என் பெற்றோர் இதுவரை எதிலும் குறை வைத்ததில்லை. அவனுக்கு நன்றியே செலுத்தும் வாழ்வினை அள்ளி தந்துள்ளான்.
இன்று முதல் முறையாக கேட்கிறேன்
“கடவுளே! எனக்கு என் காதல் வேண்டும். “
என மனதால் கடவுளை வேண்டினாள் ஸ்ரீ……….
தாரா ஸ்ரீ.