ஈஸ்வரனின் ஈஸ்வரி

IMG-20200914-WA0006

அத்தியாயம் – 11 

விஷ்வாவின் அலுவலகத்திற்கு வந்தவன், அங்கு இருந்த பூஜாடியை தூக்கி எறிந்தான். சற்று முன் அந்த கடத்தல்காரனிடமிருந்து அவனுக்கு ஒரு புகைப்படம் பார்சல் வந்து இருந்தது.

அதில் முதல் குழந்தையை கடத்திவிட்டதாக, அந்த குழந்தையின் முகம் தெரியாதபடி சுற்றி துணி கொண்டு கட்டி இருந்தது.

மேலும் அந்த கடத்தியவன் முகமும் தெரியவில்லை, அவனும் முகமூடி அணிந்து இருந்தான். அதில் ஏதும் க்ளூ கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவன், அதை ஆராய்ந்தான்.

ஒன்றும் பிடிபடவில்லை அவனுக்கு, அந்த எரிச்சலில் தான் இந்த கோபம் எல்லாம். குழந்தை கிடைக்காமல், எத்தனையோ தம்பதிகள் வேண்டுதல் வைத்து, தவமாய் தவமிருந்து பெற்று கொள்கிறார்கள்.

அப்படி இல்லையென்றால், தத்து எடுத்துக் கொண்டு அவர்களை தங்கள் பிள்ளைகள் போல் பேணிக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்படி ஒவ்வொரு பெற்றவர்களும் குழந்தைகளுக்கு ஏங்கிக் கொண்டு இருக்க, மறுபக்கம் குழந்தைகளை கடத்தி அவர்களை வேறு நாட்டிற்கு எடுத்து சென்று அங்கே அவர்களை தீவிரவாதிகளாக மாற்றப்படுவார்கள் என்ற செய்தி ஈஸ்வருக்கு ஜீரணிக்க முடியவில்லை.

அதுவும், அந்த கடத்தல்காரன் யார்? அவனுக்கும் தொழிலதிபர் பாண்டியனுக்கும் என்ன சம்மந்தம்? இந்த பிஞ்சு குழந்தைகளை கடத்தும் அளவிற்கு, அவனுக்கு அப்படி ஒரு வெறி என்ன?

இப்படி பல கேள்விகள், அவன் மண்டைக்குள் ராட்டினம் போல் சுற்றிக் கொண்டு இருந்தாலும், அடுத்து என்ன செய்வது என்பது அவனுக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆகையால் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். அவனின் செய்கையை பார்த்த விஷ்வா, அவனுக்கு உடனே தன் கையால் ஒரு காபியை தயாரித்துக் கொண்டு வந்து , அவனிடம் கொடுத்தான்.

அப்பொழுது அவனுக்கு தேவையாக இருக்கவும், உடனே வாங்கிக் கொண்டு பருகினான். அந்த அமைதியை கிழித்துக் கொண்டு அவனின் செல்பேசி, அப்பொழுது அங்கே அலறியது.

அதை எடுத்து அட்டெண்ட் செய்தவன், அங்கே மறுமுனையில் கேட்ட செய்தியில் துள்ளி குதித்தான்.

“டேய் விஷ்வா! பாண்டியன் சார் போஸ்ட்மாடம் ரிப்போர்ட் வந்துடுச்சு. உடனே நீ ஹேக்கிங் டீம்மை இங்க வர சொல்லு” என்று அவன் கூறிவிட்டு உடனே அவனின் மேலதிகாரி ஒருவருக்கு அழைத்து பேச தொடங்கினான்.

அங்கே அவரும் இவனுக்கு சாதகமாக கூறவும், உடனே இவன் அடுத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று குறித்துக் கொண்டான்.

அப்பொழுது அங்கே வந்த ஹேக்கிங் டீமை பார்த்து, அடுத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அடுத்து அடுத்து கட்டளைகள் கொடுக்க தொடங்கினான்.

“சார்! நைட் ரெண்டு மணியில் இருந்து, காலை அஞ்சு மணி வரை கேமரா எல்லாம் ஸ்டில் மோட்ல தான் இருந்து இருக்கு” என்று அந்த ஹேக்கிங் டீம் லீடர் தன்வந்த் கூறினார்.

“ஆர் யு ஷுயர் சார்?” என்று கேட்டான் விஷ்வா.

“சென்ட் பெர்செண்ட் சார்! மூவ்மெண்ட் கொஞ்சமாவது இருக்கும் சார், தட் டூ சரியா ஒன்னு அம்பத்தி அஞ்சு வரை உள்ள தான் அந்த நாய் இருந்து இருக்கு, அப்புறம் காணோம் ”.

“அது வெளியே போய் இருந்தா, கண்டிப்பா எதாவது ஒரு கேமராவில் மட்டுமாவது தெரிஞ்சு இருக்கும். இங்க அப்படி இல்லையே சார், அதுவும் அஞ்சு மணிக்கு அந்த நாய் ஹாலில் சுருண்டு படுத்து இருந்து இருக்கு”.

“சோ நடுவில் எதோ கண்டிப்பாக நடந்து இருக்கும் சார், இது என் யூகம் தான் சார்” என்றவரை பார்த்து சிரித்தான் ஈஸ்வர்.

“யூ ஆர் ரைட்! கொலை நடந்த டைமிங் கூட அப்போ தான். எனக்கு இப்போ அடுத்த அடுத்த வீடியோஸ் வேணும், அதை எல்லாம் தனி தனியா, டைம் வாரியா போட்டுக் கொடுங்க ஒரு சிடியா” என்று கூறினான் ஈஸ்வர்.

“ஓகே சார்” என்று கூறிவிட்டு அடுத்த ரெண்டு மணி நேரத்தில் அதன் பிறகு அங்கு நடந்த அத்தனையையும், ரெக்கார்டு செய்து அவனிடம் கொடுத்துவிட்டு தன் டீமை கூட்டிக் கொண்டு சென்றார்.

அவர் சென்ற பின், அங்கே இருக்கும் தனி கேபின் உள்ளே நுழைந்து கொண்டான்.

“விஷ்வா அடுத்து ஒரு ரெண்டு மணி நேரத்திற்கு எனக்கு எந்த டிஸ்டர்பன்ஸ் இருக்க கூடாது” என்று கூறிவிட்டு உள்ளே லேப்டாப் உடன் அமர்ந்தவன் தான், அதில் எதும் தடயம் கிடைக்கிறதா என்று பார்க்க தொடங்கினான்.

சில நிமிடங்களிலேயே, அந்த காணொளியில் அவனுக்கு சில விஷயங்கள் முரண்பாடாக தோன்ற தொடங்கியது. திரும்ப திரும்ப அதை பார்த்தவனுக்கு, தன்னுடைய சந்தேகங்களை எல்லாம் ஒரு நோட்டில் எழுத தொடங்கினான்.

அவன் கூறிய இரண்டு மணி நேரம் கடந்து, மேலும் ஒரு ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் அவன் அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

“விஷ்வா! நாம திரும்ப கேசை முதலில் இருந்து ஆரம்பிக்கனும். அப்புறம் நீயும், நானும் அடுத்த வாரம் மும்பை போக வேண்டி இருக்கும் ரெடியாகிகோ” என்று ஈஸ்வர் கூறிவிட்டு வீட்டிற்க்கு சென்றுவிட்டு, அதன் பின் மாலை வருவதாக கூறிவிட்டு சென்றான்.

வீட்டில் ஈஸ்வரி தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, தாயிடம் போனில் பேச தொடங்கினாள்.

“ஹல்லோ மம்மி! நான் இங்கேயும் குட்டீஸ் பர்த்டே பார்ட்டி வைக்க பெர்மிஷன் வாங்கிட்டேன் உன் மாப்பிள்ளை கிட்ட. சோ நானும் இனி சம்பாதிச்சு, உனக்கு போட்டியா பெரிய ஆளா வருவேன்” என்று அவள் கூறியவுடன், அந்த பக்கம் அவர் பொரிய தொடங்கினார்.

“அடியே முதல உன் புருஷனுக்கு, ஒழுங்கா சோறு ஆக்கி போடு. அரிசிக்கும், பருப்புக்கும் வித்தியாசம் தெரியல, இதுல சம்பாதிக்க போறாலாம்”.

“எது செய்றதா இருந்தாலும், முதல வீட்டை சுத்தமா வச்சிட்டு, புருஷனுக்கு வாய்க்கு ருசியா சோறாக்கிட்டு நீ எங்கின வேனா போ வேலைக்கு. அதை விட்டுபுட்டு, நீ வேலையிலேயே குறியா இருந்து, இதுல கோட்டை விட்ட அப்புறம் நானே மாப்பிள்ளை கிட்ட சொல்லி வேலைக்கு போக விடாம செஞ்சிடுவேன் பார்த்துக்க” என்றுவிட்டு போனை வைத்தார்.

எல்லா அம்மாமார்களுக்கும் இருக்கும் பயம் தான் அது, தன் பிள்ளை சரியாக வீட்டை நிர்வாகம் செய்ய தெரியாமல் இருந்தால், நாளை எப்படி தன் பிள்ளைகளை கவனித்துக் கொள்ளுவாள் என்ற ஆதங்கம் தான், அவர்களின் பயமே.

வீட்டில் இளவரசியாக, காலை நேரம் கழித்து எழுவதும், பிடித்ததை உண்டு உறங்குவதும் என்று பழகிவிட்டு, புகுந்த வீட்டில் இதையே தொடர்ந்தால் என்ன செய்வது என்ற ஆதங்கம் தான் நிறைய தாய்மார்களுக்கு.

அது தான் இப்பொழுது ஈஸ்வரி விஷயத்திலும், அவர் படபடத்ததுக் காரணம். ஆனால் ஈஸ்வாியை பற்றி அவரை விட, அவளின் தந்தைக்கு அவளின் குணம் அத்துபடி.

தாயிடம் மட்டுமே இந்த குறும்புகள் எல்லாம், வேலை என்று வந்துவிட்டால் அவளை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்று அவருக்கு நன்றாக தெரியும்.

ஆகையால் தான் அவரிடம் இந்த விஷயத்தை அவள் கூறியவுடன், அவர் இவளை வாழ்த்தி மகிழ்ந்தாரே தவிர வேறு எந்த அறிவுரையும் அவர் கூறவில்லை.

“ஆத்தி! மம்மி டெரரா இருக்காங்க, வீட்டை கூட நீட் பண்ணிடலாம், ஆனா இந்த சமையல்! முதல சின்ன சின்ன டிஷ் செய்து பழகனும்” என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு இருந்தவள், காலிங் பெல் சத்தத்தில் மீண்டாள்.

கதவின் லென்ஸ் வழியாக பார்த்தவள், அந்த பக்கம் நின்று கொண்டு இருந்த பீட்டரை பார்த்துவிட்டு, கதவை திறந்துவிட்டு உள்ளே வரவேற்றாள்.

“வா டா பீட்டர்! என்ன அதிசயமா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட, இல்லைனா ரவுண்ட் அடிச்சிட்டு மெதுவா தானே எப்போவும் வருவ வீட்டுக்கு. என்ன மாற்றம் டா அண்ணா இது? யார் அந்த பொண்ணு?” என்று கண்களில் குறும்பு மின்ன கேட்டவளை பார்த்து சிரித்தான். 

“இந்த வாயால தான் டி உன் பொலைப்பே, ஓடுது எலி. வேலை சீக்கிரம் முடிஞ்சது, அதான் நேரா இங்கேயே சாப்பிடலாம்ன்னு வந்துட்டேன்”.

“ஆமா நீ சாப்பிட்டியா?” என்று கேட்டான்.

“இல்லை! வா சேர்ந்து சாப்பிடுவோம், அவங்க இன்னைக்கு வெளியே மீட்டிங் இருக்கு அங்கே சாபிட்டுக்கிறேன் சொன்னாங்க” என்று ஈஸ்வரை பற்றியும் கூறிவிட்டு, அவனுக்கு சாப்பாடு பரிமாறினாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, தட்டை கழுவி வைத்து, எல்லாம் ஒதுக்கிவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தனர்.

“என்ன வேலை டா பார்க்கிற பீட்டர்? ஏதோ வேலை கிடைச்சு இருக்கு, அதனால இனி அவன் இங்க தான் இருப்பான் சொன்னாங்க”.

“நீயும் எந்த வேலைன்னு யார் கிட்டயும் சொல்லல போலயே, அப்படி என்ன வேலை டா பண்ணுற?” என்று கேள்வி எழுப்பினாள்.

“அது எல்லாம் சஸ்பென்ஸ், அதுக்குன்னு உன் கற்பனை குதிரையை தறிகெட்டு ஓட விடாத. நல்ல வேலையில் தான் இருக்கேன், இப்போ தான் டிரெய்னிங் பீரியட், இந்த ஜாப் confirm ஆன உடனே எல்லோருக்கும் சொல்லிடுறேன் போதுமா” என்றவனை பார்த்து சிரித்தாள்.

“அது வேற ஒன்னும் இல்லைடா அண்ணா, அம்மா நீ எந்த வேலைன்னு சொல்லாம இருக்கியேன்னு ரொம்ப சங்கடப்பட்டாங்க”.

“அதான் நான் கேட்க வேண்டியதா போச்சு, நீ தப்பான வேலையில் இருக்க மாட்டன்னு எங்களுக்கும் தெரியும், ஆனாலும் உன் மேல இருக்கிற அக்கறையில் தான் கேட்கிறோம்” என்றவளை பார்த்து வாஞ்சையாக புன்னகைத்தான்.

இப்படியே மாலை வரை இருவரும் ஊர் கதை எல்லாம் பேசிக் கொண்டு இருந்தவர்கள், மாலை சிற்றுண்டி செய்ய சொல்லி ஈஸ்வரிக்கு ஈஸ்வரனிடம் இருந்து போன் வந்தது.

“எந்த தைரியத்தில், என்னை சமைக்க சொல்லி இருக்கார் பாரேன்” என்று அதிசயித்துக் கொண்டு இருந்தவளை பார்த்து சிரித்தான் பீட்டர்.

“மாம்ஸ், நான் இருக்கிற தைரியத்தில் தான் சொல்லி இருப்பாங்க. வா கேசரியும், கார வடையும் சொல்லி தரேன் கத்துக்கோ” என்று கூறி அவளையும் இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் சொல்ல சொல்ல, இவளே சிறிது சிறிதாக செய்து பழகினாள். அப்பொழுது தான் தன் ஆச்சி சொன்ன பழமொழி, அவளுக்கு நியாபகம் வந்தது.

சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நா பழக்கம் என்று. எந்த ஒரு செயலையும், திரும்ப திரும்ப செய்யும் பொழுது அதை நாம் சரியான முறையில் செய்து தேர்ச்சி அடைவோம். அதை தான் ஆங்கிலத்திலும் கூட, பிராக்டிஸ் மேக்ஸ் எ மென் பெர்பெக்ட் என்று கூறுவார்கள். அதை இப்பொழுது நன்கு உணர்ந்தாள் ஈஸ்வரி, ஆகையால் சந்தோஷமாகவே கற்றுக் கொள்ள தொடங்கினாள். 

எல்லாம் தயார் செய்து முடித்துவிட்டு, ஈஸ்வரின் வருகைக்காக கதவை திறந்து வைத்துக் காத்துக் கொண்டு இருந்தனர் இருவரும்.
அப்பொழுது கையில் ஒரு கவருடன் ஈஸ்வர் வீட்டினுள் நுழைந்தான்.

“இந்தாடா! உன் அப்பாய்ன்மெண்ட் ஆர்டர்! நாளைக்கே ட்யுட்டியில் ஜாயின் பண்ணிடு, எனக்கு ஒரு காபி கொண்டு வா ஈஸ்வரி” என்று கூறிவிட்டு உள்ளே சென்ற ஈஸ்வரை பார்த்து பல்லை கடித்தாள்.
காபியை எடுத்துக் கொண்டு தங்களின் அறைக்குள் சென்றவள்,

அங்கே அவன் குளியலைக்குள் இருப்பது புரிந்து அங்கே இருந்த மேஜையில் அதை வைத்துவிட்டு அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.

அவனும் சிறிது நேரத்தில் வெளியே வந்தவன், அவளிடம் காபியை கேட்க, அவளும் அவனுக்கு எடுத்துக் கொடுத்துவிட்டு அங்கேயே அமர்ந்தாள்.

அவளின் செய்கையில், அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து அவன் புன்னகைத்தான்.

“காலையில் நான் உங்களுக்கு ஒரு மெஸேஜ் போட்டேன், அதுக்கு எந்த ரிப்ளையும் இன்னும் வரல” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவனிடம் முறையிட்டாள்.

“சாரி ஈஸ்வரி! கொஞ்சம் பிஸி அதான் நான் கவனிக்கல, சொல்லு என்ன வேணும் உனக்கு?” என்று கேட்டான்.

“எனக்கு ஆபிஸ் வைக்க வேணும், அதுவும் லேடீஸ் எல்லாம் ப்ரீயா வந்து போற மாதிரியான பாதுகாப்பு இருக்கிற இடமா வேணும்” என்று கேட்டாள்.

அவளுக்காக தான் நண்பனிடம் இடம் பார்க்க சொல்லி, அவன் நேற்று கேட்டு இருந்தான். அவனோ இரண்டு நாட்கள் டைம் வேண்டும் என்று கேட்டு இருந்தான், நாளை தான் விசாரிக்க வேண்டும்.

அவளிடம் அதை பற்றி அவன் எடுத்துக் கூற, தான் கேட்கும் முன் அவன் தனக்காக செய்தததை நினைத்து பார்த்தவள், மேலும் அவன் மேல் காதல் கொண்டாள்.

ஆயிரத்தெட்டு கேள்விகள் இருக்கு அவளுக்கு, அவனிடம் கேட்க. அதே போல் அவனுக்கும், அவளிடம் கேட்க நிறைய இருந்தாலும், இருவரும் அன்றைய சண்டைக்கு பிறகு அதிகம் எதுவும் பேசிக் கொள்ளவில்லையே தவிர, ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டு தான் இருந்தனர்.

அந்த புரிதல் தான் காதல் என்று அறியாமல், இன்னும் விரைப்பாகவே சுற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

வெளியே வந்த ஈஸ்வரனை கட்டி பிடித்துக் கொண்டு, நன்றி கூறிக் கொண்டு இருந்தான் பீட்டர்.

“டேய்! இது உன் திறமைக்கு கிடைச்ச வேலை, எனக்கு எதுக்கு டா நன்றி எல்லாம் சொல்லுற. சரி, நாளையில் இருந்து நீ என் கூட தான் எல்லா இடத்துக்கும் வரணும்” என்று கூறிவிட்டு, மீண்டும் விஸ்வாவின் அலுவலகம் விரைந்தான்.

இங்கே ஈஸ்வாிக்கு குழப்பம், அப்படி என்ன வேலை செய்கிறான் இவன்? எதற்காக அவனோடு செல்ல வேண்டும் என்று? அதை தெளிவுபடுத்த பீட்டரிடமே கேட்டாள்.

“எனக்கு வேலையே சைபர் கிரைமில் தான் யா, ஐயா அதனாலதான் ஹேக்கிங் எல்லாம் படிச்சேன்” என்று கூறிவிட்டு செல்பவனை பார்த்து அசந்து விட்டாள்.

கம்ப்யூட்டர் பற்றி தெரியாத விஷயமே, அவனிடம் கிடையாது. இவளுக்கு டிசைனிங் வரும் அளவிற்கு, கோடிங் அவ்வளவு எளிதில் வராது.

ஆனால் ஹேக்கிங் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பது, அவளுக்கு நீண்ட நாள் ஆசை என்றே கூறலாம். மெதுவாக இதை பற்றி அப்புறம் பீட்டரிடம் தெரிந்து கொள்வோம் என்று விட்டு விட்டாள்.

இங்கே ஈஸ்வர் வந்த உடனேயே, விஷ்வா அவனிடம் சில கோப்புகளை கொடுத்து பார்க்க கூறினான். அதில் இருக்கும் சில விஷயங்கள், அவன் மனதை நெருட செய்தது.

அதை தெளிவு படுத்திக் கொள்ள விஸ்வாவிடம் அவன் கேட்க, அவன் கூறிய பதிலில் அவன் திகைத்து விட்டான். இனி அதிரடி நடவடிக்கை தான் எடுக்க வேண்டும், என்ற முடிவுக்கு வந்துவிட்டான் ஈஸ்வர்.

அடுத்த வாரம் மும்பை கிளம்ப இருந்தவன், இந்த வாரமே தனக்கான டீமை உருவாக்கிக் கொண்டு, மும்பைக்கு அவர்களுடன் சென்றான்.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!