உனக்காக ஏதும் செய்வேன் – 8

அத்தியாயம் – 8

 

எழுந்ததிலிருந்து தன் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் மனைவியைக் கண்டு ‘வேணும் னே பண்றாளா இல்லை எதேச்சையா நடக்குதா’ எனக் குழம்பியவன்,

 

‘எலி பொந்துக்குள்ள போன எலி கணக்கா கிட்சன் க்கு உள்ள இருந்து வெளியவே வர மாட்டறா….’ என மனதுக்குள் திட்டியவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

 

கீர்த்தியோ ‘எதுக்கு இப்போ இவரு இப்படி பார்த்துட்டு இருக்காரு’ என சற்று படபடப்பாக உணர்ந்தாள்.

 

நேற்று அவன் Duty முடிந்து வீடு வந்த பின் தான் அவன் பார்வையின் வித்தியாசத்தை கவனித்தாள்.

 

அவன் அவளை இப்படி பார்த்து கொண்டிருப்பது மனதுக்கு இதமான உணர்வை கொடுத்தாலும் அது அவளுக்கு சற்று பதற்றத்தையும், வெட்கத்தையும் கொடுக்க அவன் கண்களில் சிக்காமல் போக்கு காட்டினாள்.

 

மேலும் தானும் இப்படி பார்க்கும்போது கண்டுகொண்டாரா….! எனவும் அவளுக்கே தெரியாமல் மனதுக்குள் தோன்றியதோ….?

 

நெருங்கினால் விலகுவதும் விலகினால் நெருங்குவதும் தானே இயல்பு. அது தான் அவர்களிடையே நடந்து கொண்டிருந்தது.

 

குழப்பம் தீராவிடினும் நேரம் ஆவதை உணர்ந்து கிளம்பும்போது சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

 

அவனுக்கு தலையசைத்து விட்டு உள்ளே வந்தவள் தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டு அங்கிருந்த அவனின் புகைப்படத்திடம்,

 

‘எதுக்கு இப்போ இப்படி பார்த்துட்டு இருக்கீங்க….?’

 

‘திடிர்னு போய்ட்டு வரேன் னு சொல்றீங்க….?’

 

‘எப்படி வந்தது இந்த மாற்றம்….?’

 

‘எதும் ஞானப்பழம் கீது சாப்டீங்களா….?’

 

என சிரித்தவாறு கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தவள் மனதில் மகிழ்ச்சி மட்டும் தூக்கலாகவே இருந்தது.

 

******

 

வகுப்பாசிரியர் இல்லாத வகுப்பு சந்தைக்கடைக்கே Tough கொடுக்கும் என்பதை மெய்பிக்கும் வகையில் அனைவரும் சத்தமாக வாயடித்துக் கொண்டிருந்தனர்.

 

அந்த சந்தைகடைக்குள்…. இல்லை…. இல்லை…. வகுப்பிற்குள் அவன் வரவும், சற்று அமைதியானவர்கள் “குட் மார்னிங் சார்….”, என்று எழுந்து நின்று கூட்டதோடு கோவிந்தா போட,

 

“குட் மார்னிங் டு ஆல். உட்காருங்க….”, என்றவன் அட்டெண்டன்ஸ் எடுத்த பின் பாடம் நடத்த ஆரம்பித்தான்.

 

அன்றைய வகுப்பில் ஒரு யூனிட் முடியும் தருவாயில் இருந்த அந்த தலைப்பு சற்று கடினமாக இருந்ததால் பலருக்கு புரியவில்லை என்று கூறினர்.

 

அவன் மீண்டும் விளக்க இப்போது பரவலாமாக புரிந்தது போலும்.

 

இருப்பினும் அவன் மீண்டும் அதை நன்றாக விளக்க முற்படும் சமயம் ஒலித்த மணி ஓசையில் அவனின் பாடம் நடத்தும் அவகாசம் முடிந்தது என்பதால் ‘எதும் டவுட் இருந்தால் ஒட்டுகா வந்து ஸ்டாப் ரூம் ல கேளுங்க’ என்றான்.

 

அந்த முழு யூனிட் முடிந்த பின் அடுத்த நாள் டெஸ்ட் கண்டிப்பாக உள்ளது என ஏற்கனவே கூறி இருந்தமையால் “அதில் டவுட் இருந்தால் Clear செய்து கொள்ள வேண்டும் நாளை புரியல னு சொன்னா கிளாஸ் க்கு வெளிய தான் நிற்கனும்”, என்றவன் ஸ்டாப் ரூம் நோக்கி சென்று விட்டான்.

 

மாணவர்களோ ‘எல்லாமே தான் சார் டவுட்’ என வாய்க்குள் முணுமுணுத்தனர். 

 

அங்கிருந்த பலரும் அவன் கூறியதைக் கேட்டு என்ன பண்ண என டென்ஷன் இல் இருக்க ஒருத்தியோ சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் ப்ரீத்தி.

 

******

 

மதியம் சாப்பிட்டு விட்டு அமந்திருந்தவன் தன் உடன் வேலை செய்யும் மற்றொரு ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருக்க அப்போது,

 

“மே ஐ கம் இன் சார்”, என்ற குரல் கேட்டதும் திரும்பியவன்,

 

“எஸ். வாங்க”, என்றான் எந்த உணர்வையும் காட்டாத முகத்துடன்.

 

இது மட்டும் தான் இப்போது இவனுக்கு இந்த காலேஜ் வர அவனுக்கு தயக்கம் கொள்ள காரணம் ஆக இருந்தது.

 

ஒரு பத்து நாட்களாக அவன் உடன் பணியாற்றும் ஒரு ஆசிரியர் Health Problem ஆல் லீவு எடுத்திருந்ததால், அவன் இரு கிளாஸ் ஐ Combine செய்து எடுத்துக் கொண்டிருந்தான்.

 

முதலில் அவள் இந்த காலேஜ் ற்க்கு வந்து சேர்ந்தது தெரிந்தாலும் அவள் வகுப்பிற்கு போகாத காரணத்தாலும், அன்று தான் பேசிய பேச்சிற்கு தன்னிடம் பேசமாட்டாள் என்ற நினைப்பாலும் அவளை கண்டுகொள்ளாதது போல சாதாரணமாகவே இருந்தான்.

 

முதலில் அமைதியாக இருந்தவளைக் கண்டு நிம்மதியுற்றவன் இயல்பாக இருக்க,

 

சில நாட்களுக்கு முன் பஸ் க்காக வெயிட் பண்ணும்போது அவள் பேச வரவும் பட்டென எடுத்தெறிந்து பேச வராமல் திணறிப் போனான்.

 

அவர்களை பக்கத்தில் நின்றிருந்த பெண் ( 1st எபி பொண்ணு ) ஒரு மாதிரி பார்க்க அவள் என்ன நினைத்திருப்பாள் என கணித்த ப்ரீத்தியோ முகத்தை சுழித்தவாறு சற்று அழுத்தமாக,

 

“அவர்……………

……………………” என,

 

“ஓ….” என்றவள் அவள் பஸ் வரவும் மன்னிப்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு ப்ரீத்தி யின் கோபப் பார்வையில் பயந்து டக்கென ஓடி விட்டாள்.

 

அவள் கூறியதை கேட்டு உள்ளம் வலித்தாலும், அவள் அந்த பெண்ணை பார்த்த பார்வையில் உள்ளுக்குள் சிரித்தவன் அவள் பேச ஆரம்பிக்கும் முன் உடனே அவனும் பஸ் வர அதை நோக்கி சென்றுவிட்டான்.

 

இவளோ ‘ச்சே…. ஒரு வார்த்தை கூட பேசலையே….இதுக்கா இந்த காலேஜ் க்கு வந்தோம். எத்தனை நாள் னு நானும் பார்க்கறேன்’ என அவனை வசை பாடியவள் பஸ் ஸ்டாப் இல் ஒரு ஓரமாக நிறுத்தி வைத்திருந்த தன் Scooty ஐ கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டாள்.

 

அன்று அப்செட் க்கு இதும் ஒரு காரணம். மகா கேட்கும்போது கூறாமல் விட்டது….!

 

அவளை பார்க்கும்போது சில விஷயங்கள் ஞாபகம் வரும். கண்களில் தோன்றும் பாசத்தை அவளிடம் மறைப்பதை போல ப்ரீத்தி யிடம் எளிதாக மறைக்க இயலாது என அவனுக்குத் தான் முன்பே தெரியுமே.

 

இருப்பினும் முடிந்த மட்டும் முகத்தை இயல்பாகவே வைத்திருந்தான்.

 

“ஒரு சின்ன டவுட் அ….”, என அவள் ஆரம்பிக்க அவன் முறைப்பில் “சார்” என்றாள்.

 

ஒரு பெருமூச்சு விட்டவன் பாடத்தில் அவள் கேட்ட சந்தேகத்தை விளக்கினான்.

 

அவளுடன் இன்னும் சிலரும் வந்திருந்தனர். சில நிமிடங்களில் அவர்களுக்கு புரியும்படி விளக்கியவன் அடுத்து நின்றிருந்த பசங்களிடம் மும் விளக்கினான்.

 

பொதுவாக சூர்யா நன்றாக பேசி பாடம் நடத்தும் ஆசிரியர் தான் ஆனால் சொன்னதைக் கேட்கவில்லை என்றால் கண்டபடி திட்டிவிடுவான்.

 

அதனாலே அனைவரும் அவன் கண்டிப்பாக செய்ய வேண்டும் என சொல்லும் விஷயங்களை முடிந்த மட்டும் கடைபிடிப்பர்.

 

அதில் யூனிட் முடிந்த பின் வரும் டெஸ்ட் உள்ளடங்கும். பக்கத்து கிளாஸ் ஆக இருந்த போதும் அவர்களும் அவன் கிளாஸ் ற்கு வருவதால் அந்த டெஸ்ட் எழுதும்படி ஆனது.

 

அவர்களுக்கு வரும் ஆசிரியரும் இதே போல டெஸ்ட் வைப்பர் என்பதால் அவர்களுக்கு அதில் பெரிதாக பிரச்சனை இல்லை.

 

ஆனால் அவர்கள் வகுப்பாசிரியர் இவ்வளவு கண்டிப்பு அல்ல. அதனாலே நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட வந்து சந்தேகம் கேட்டனர்.

 

பெரும்பாலும் இன்று நடத்திய தலைப்பில் கிட்டதட்ட அனைவரும் வந்து சந்தேகம் கேட்க, யோசித்தவன் ‘இன்று நடத்தியது மட்டும் டெஸ்ட் க்கு வேண்டாம் என்றும் மற்றவற்றை படிக்கும் படி’ கிளாஸ் ற்கு சென்று கூறிவிட்டு வந்தான் அங்கிருந்த ஆசியரிடம் ஒரு நிமிடம் என பெர்மிஸ்ஸன் வாங்கி.

 

இதனால் தான் சூர்யா வை அங்குள்ள மாணவர்களுக்கு பிடிக்கும். என்னதான் நன்றாக பேசினாலும் கண்டிப்பு இருக்கும். அதே சமயம் மாணவர்களுக்காகவும் யோசிப்பான்.

 

சிலர் அதை கேட்டு குஷி ஆகினர். சிலர் அதையும் வேண்டாம் என்று கூறினால் பரவாயில்லையே என ஆசை பட்டனர். சிலரோ அவன் கூறியதை கேட்டனரா என சந்தேகம் தான். ஆயினும் பிறகு friends இடம் கேட்டுக்கொள்வர்.

 

அன்றைய நாளுக்கு பின் அந்த ராஜ் உடன் (ஸ்டுடென்ட்) பேசி டென்ஷன் ஆகும் படி அவன் நடந்து கொள்வதில்லை. சூர்யா வும் அதை மறந்துவிட்டு அனைவரிடமும் ஒரு போல தான் நடந்து கொண்டான்.

 

பலரின் முகம் அவன் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி உற்றதை கண்டவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டே அடுத்து தான் கிளாஸ் எடுக்க வேண்டிய வகுப்பிற்கு வேகமாக நடை போட்டான்.

தொடரும்…..