உயிரே.. உறவே…

உயிரென்பதும் நீயடா…… உறவென்பதும் நீயடா…….

சென்னை நகரின் பிரபலமான கல்லூரி, எஞ்சினீரிங், மேடிசன் மற்றும் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என அனைத்தையும் உள்ளடக்கிய நிறுவனம் jvp இன்ஸ்டிடூஷன். கல்லூரியின் முதல் நாள் என்பதால் பரபரப்பாக இருந்தது. விடுமுறைக்கு பின் சந்திக்கும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பவர் ஒரு பக்கமாக இருக்க புதிதாக வந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்வது ஒருபுறம் என  சிறப்பாக இருந்தது.

அந்த இடத்துக்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் பாவாடை தாவணியில் கண்ணில் பயத்தையும் தாண்டி சாதிக்கும் ஆசையோடு கல்லூரியை நோக்கி முதல் அடி எடுத்து வைத்தாள். அனைவரது பார்வையும் அவள் மேல் தான். ஆளை அசர அடிக்கும் அழகோடு பார்வையை சுற்றிலும் சுழல விட்டு சிறிது பதட்டமாக நடந்து வந்தால், ஆதர்ஷினி.

ஜெகதீஷ், இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு மாணவன். தன் நண்பர்களை எங்க தேடியும் கிடைக்காமல் எங்க போச்சுங்க இந்த வானரங்கள்என திட்டிக்கொண்டு இருந்தவன் கண்ணில் பட்டாள் ஆதர்சினி. ப்பா…. யார்டா இந்த தேவதைஅவளிடம் செல்ல துடித்த கால்களை தரையில் உதைத்தவாறு போனில் தன் நண்பனை அழைத்தான்.

டேய் பரதேசி எங்கடா போனீங்க” என சத்யாவிடம் கேட்க 

ஏன் டா எவளோ டென்ஷன் ஆகுற நாங்க எல்லாம் கான்டீன்ல தான்  இருக்கோம் வா டா” என ச்சை.. கேன்டீனா மறந்துட்டேனேஎன போனினை வைத்து விட்டு பின் தன் தேவதையை பார்க்க, அவளோ ஆர்ட்ஸ் என்பதால் உள்பக்கம் இருக்கும் தனது வகுப்பை தேடி சென்றாள்.

ச்சை.. இவன் கூட பேசனத்துக்கு அவங்க கிட்ட போய் பேராவது கேட்டு இருக்கலாம். எல்லாம் என் நேரம்என சலித்து கொண்டே த் நண்பர்களை தேடி கான்டீன் சென்றான்.

ஆதர்சினி வந்த சில வாரங்களிலே அனைவரது கனவு கன்னியாக மாறி இருந்தாள். நிறைய  பேர் அவளிடம் பேச முயற்சி செய்வார்கள். ஆனால் அனைவரையும் தன் பார்வையாலே தள்ளி வைப்பாள்.

ஜெகதீஸ் அவளை பெரும்பாலும் லைப்ரரியில் தான் பார்ப்பான் ஆனால் இன்று வரை பேச நினைத்தது இல்லை. அவள் லைப்ரரி செல்வதை பார்த்து சத்யாவிடம்

மச்சி நீங்க கிளம்புங்க எனக்கு சின்ன வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன்” என 

டேய் ஜெகா உன்னோட முக்கியமான வேலை என்னனு எனக்கு தெரியும். அந்த பொண்ண பார்த்த கொஞ்சம் பயந்த சுபவம் மாதிரி தெரியுது டா. பத்திரம் மச்சான் இவங்களை நான் கூட்டிட்டு போறேன்” என ஜெகாவின் காதில் ரகசியமாக பேசிவிட்டு மற்ற நண்பர்களுடன் கிளம்பினான்.

அவர்கள் கிளம்பிய பின் லைப்ரரி சென்று அவன் தேவதையை தேட, அவளோ காரியமே கண்ணாக ஒரு முலையில் படித்து கொண்டு இருந்தாள். அவளின் அருகில் அமர்ந்தவன் முதலில் மெலிதாக சிரிக்க, அவளும் சினேகமாக புன்னகைத்தாள்.

பின் அவளிடம் பேச்சு கொடுக்க, அவளின் பெயர் ஆதர்சினி என்பதையும் பி.எ எகனாமிக்ஸ் படிப்பதையும் தெரிந்து கொண்டான். அதை தவிர வேற எதையும் அவளிடம் இருந்து வாங்க முடியவில்லை.

அவளை பற்றி மனஜ்மென்டில் விசாரிக்க அவனுக்கு கிடைத்ததோ ஒரே தகவல் அவளின் மொத்த செலவும் யாரோ ஒரு ஸ்கூல் பிரின்சிபால் ஸ்பான்ஸர் செய்கிறார்கள்மட்டுமே வேற ஒரு தகவலையும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஆறு மாதம் வேகமாக ஓடியது. ஆதர்சினி, ஜெகா இருவரும் லைப்ரரியில் பல முறை சந்திக்க பின் சிறிதாக பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். காலேஜில் அவள் பேசும் ஒரே ஆண் ஜெகா மட்டுமே. அது ஏன் என்று அவளுக்கே தெரியாத ஒன்று. ஜெகாவின் மூலம் சத்யாவிடம் பேசுவாள்.

செமஸ்டர் எக்ஸாம் முடிந்து லீவ்க்கு ஊருக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தால் ஆதர்சினி. பல காயங்களை தந்த ஊருக்கு செல்ல வேண்டுமா என்று கூட தோன்றும். ஆனால் அவளுக்கு ஒரு ஜீவன் அங்கு உள்ளதால் மனதை தேற்றி கொண்டு செல்ல தயாரானாள்.

இங்கு சத்யா, “டேய் ஜெகா எப்போ டா ப்ரொபோஸ் பண்ண போற” என்றதும் 

நாளைக்கு மச்சி.  நாளை மறுநாள் அவ ஊருக்கு போறதா சொன்ன. சோ நாளைக்கு சொல்ல போறேன். அது வரைக்கும் இது யாருக்கும் தெரிய கூடாது” என்று சொல்லி விட்டு நிலாவை பார்த்து ரசிக்க தொடங்கினான்.

ஆதர்சினி ஹாஸ்டல் பக்கத்தில் உள்ள பார்க்கில் இருந்தால். சிறிது நேரம் முன் ஜெகா அவளுக்கு போன் செய்து “தர்சினி கொஞ்சம் பக்கத்தில் இருக்கிற பார்க் வரைக்கும் வர முடியுமா” என அவளும் வருவதாக சொல்லி அவனுக்காக இப்போ பார்க்கில் கால்மணி நேரமாக காத்து இருக்கிறாள்.

அவளை மேலும் சோதிக்க விடாமல் ஜெகா பார்க்கில் வாசலில் வந்தான். வந்தவனை பார்த்து தர்சினி சிலையானால்.

வைட் ஷர்ட் பிளாக் ஜீன்யில் கையால் தலையை கொத்தி கொண்டே வர தர்சினி வாழ்வில் முதல் முறையாக ஒருவனை ரசித்து பார்த்தாள். அவளின் பார்வையை புரிந்து கொண்டே அவளிடம், “என்ன தர்சினி மேடம் பாஸ் பண்ற ஆளாவது மார்க் போடுவீங்களா இல்ல பாயில் தானா” என 

முதலில் புரியாமல் முழித்து பின் புரிந்த பின் அவனை முறைப்பதாக ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பி கொண்டாள். சிறிது நேரம் கழித்து “எதுக்கு ஜெகா வர சொன்னிங்க” என தயக்கத்தை விட்டு கேட்டாள்.

அதற்காகவே காத்து இருந்தவன் போல் அவள் முன் வந்து நின்றான். அவள் கண்ணை பார்த்து கொண்டே “நான் உங்க கிட்ட சொல்றது உங்களுக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம் பட் தப்ப மட்டும் நினைக்காதீங்க. உங்களை முதலில் பார்க்கும் தடவை காலெஜ்யில் போது தேவதையா தெரிச்சிங்க அப்பெல்லாம் இல்லாத ஒன்னு நீங்க உங்க கிட்ட ஹெல்ப் என்று வர எல்லாருக்கும் உதவி பண்றதா இல்ல யார் என்று கூட தெரியாதவங்க மேல எல்லாம் அக்கறை காட்டுற உங்க  குணமோ இல்ல கோவமே வந்தாலும் முடிச்ச வரைக்கும் எதிரில் இருக்கிறவங்க மனச புரிஞ்சிக்கிற உங்க மனசோ இதை எல்லாத்தையும் விட வார்த்தையில் கூட யாருமே கஷ்ட பட கூடாதுனு தேடி தேடி பேசுற உங்க நிதானமா எதுன்னு தெரியலை பட் உங்க கிட்ட திரும்ப திரும்ப விழ வெக்குது. ஐ லவ் யு தர்ஷினி. உன்னை பத்தி எதுமே தெரியாது. பட் நீ இல்லாம என் எதிர் காலம் இல்ல. என்னை கல்யாணம் பண்ணிக்கிறிய” என 

அதுவரை அவன் பேசுவது கேட்டு பிரம்மித்தது போய் இருந்தவள், அவனின் கடைசி கேள்வியில் பதறி கொண்டு “அயோ…. சாரி ஜெகதீஷ். உன்னோட ஆசை கண்டிப்பா நடக்காது. என்னை மறந்துட்டு வேற வேலை இருந்த பாருங்க”  என அவனிடம் பேசிவிட்டு வேகமாக கண்களில் கண்ணீரோடு பார்க்கை விட்டு வெளியே பொன்னாள்.

அவள் போகும் திசையே பார்த்த ஜெகா “உன் மனசில் நான் இல்லாமல்லா உன் கண்ணு கலங்குது பேபி. உன்னோட பாஸ்ட் எனக்கு வேண்டாம். அது எப்படி இருந்தால் ஓகே பேபி பட் நீ இல்லமால் என்னால முடியாது பேபி. என் லவ் கண்டிப்பா உன்னக்கு புரியும். வெயிட் பாரேன்” என கிளம்பினான்.

சாரி ஜெகா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். பட் எனக்கு உங்க கூட வாழ குடுத்து வைக்கல. எனக்கு என்னோட ட்ரீம் ips எவளோ பிடிக்குமோ அதே அளவுக்கு உன்னை பிடிக்கும். ஆனா நீ நல்ல வாழ வேண்டியவன். நான் உனக்கு வேண்டாம் ஜெகா ” என அழுதுகொண்டே பஸ்ஸில் தன் ஊரை நோக்கி செல்ல கூடவே கடந்த கால நினைவுகளுடன் சென்றாள்.

இருபது  வருடங்களுக்கு முன்,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சிறிய கிராமம் புண்ணை. அந்த கிராமத்தின் பெரிய குடும்பம் பணத்திலும் சரி அதிகாரத்திலும் சரி கிராமத்தை தன் கட்டுக்குள் வைத்திருந்தார் சேதுபதி, அறுபதை நெருங்கும் குடும்பத்தின் ஆணிவேர்   . புது வரவால், சந்தோச கடலில் மிதந்தது. சேதுபதியின் மகன் மருதுவிற்கு மகன் பிறந்து இருந்தது. 

ஏல மருது  என்ன சொல்ற உன் பொஞ்சாதி” என 

அவளுக்கு என்ன ஐயா சந்தோஷமா இருக்க. இப்பவே என்ன பெயர் வைக்கலாம்னு யோசிக்கிற” என சொல்லி சிரிக்க 

அவரும் உரக்க சிரித்து “ம்ம்ம் பிள்ளை கிட்ட சொல்லி நல்ல புது பெயரை வைக்கணும் தம்பி”

கண்டிப்பா ஐயா” என சில நாட்களில் தங்கள் வீட்டு ராஜகுமாரனுக்கு தர்ஷன்என பெயர் சூட்ட அவர்களின் வாழ்க்கை தெளிந்த நீரை போல் செல்ல அதை கெடுப்பதை போல் வந்தது தர்ஷனின் பத்தாம் பிறந்தநாள்.

மருதுவும் அவன் மனைவியும் மகனின் நடவடிக்கையில் உள்ள மாற்றத்தை கண்டு கவலை அடைந்தனர். ஒரு நாள் வெளியே சென்று வந்தவர் மகனின் கோலத்தை கண்டு கோவம் கொண்டு அவனை அடி பின்னிவிட்டார்.

கோபத்தோடு மனைவியை அடித்து “வீட்டுல தானே இருக்க இவன் என்ன பன்றான் கூட பார்க்க மாட்டிய. போட்ட புள்ள மாதிரி வளையல் போடுறான் போட்டு வைச்சிக்கிறான்” என இது வெளியே தெரிந்த குடும்ப மானம் போகும் என தன் தந்தையிடம் புலம்பினான்.

எவளோ அடித்தும் தர்ஷன் மாறாததால் சேதுபதி குடும்ப கௌரவத்துக்காக அவனை கொல்ல நினைத்தார். அதனால் மகனிடமும் மருமகளிடம் சொல்லமால் அடியாளிடம் பேசியதை வீட்டில் வேலை செய்யும் அன்னம்மாள் கேட்டு விட்டாள். எதிர்க்க தைரியம் இல்லாமல் யாரிடமும் சொல்லாமல் அவனின் உயிரை காக்க தர்ஷனை தன் சொந்த ஊருக்கு கூட்டி வந்தாள்.

பெற்றோருக்கே புரியாத அவனின் நிலைய புரிந்து கொண்டு அவனை பெண் பிள்ளையாக வளர்க்க நினைத்து பெயரை ஆதர்ஷினிஎன மாற்றினார். கால போக்கில் தான் ஒரு திருநங்கை என்பதை மறக்கும் அளவுக்கு அன்னம்மாள் அவளை வளர்த்தார். பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்து விட்டார், அவளின் நிலை அந்த பள்ளி முதல்வரை தவிர யாருக்கும் அன்னம்மாள் சொல்லவில்லை.

மற்ற பெண் பிள்ளையை விட அழகாக இருக்கும் ஆதர்ஷினி, ஒரு திருநங்கை என யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளிவந்தது.

காவ்யா ஆதர்ஷினி உடன் படிக்கும் சக மாணவி. ஆதர்ஷினியின் அழகை பார்த்து பொறாமை கொண்டவள். அவள் அவமான படுத்த நினைத்தால், லட்டு போல் அவளுக்கு ஒரு வாய்ப்பு வந்தது.

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு அனைவரும் தயாராக, அவளுடன் படிக்கும் கார்த்தி தனியாக பேசவேண்டும் என அவளை கிரௌண்ட்யில் இருக்கும்  மரத்துக்கு வந்தனர்.

என்ன கார்த்தி எதுக்கு வர சொன்ன” என தர்ஷினி கேட்க 

ஆதர்ஷினி உங்க கிட்ட சொல்லணும் தைரியமா வந்தேன் பட் இப்ப கொஞ்சம் நெர்வோஸா இருக்கு.ம்ம் உங்களை ரொம்ப பிடிக்கும் ஐ திங்க்…… ஐ லவ் யூ” என பயந்து கொண்டே சொல்ல 

இதை முற்றிலும் எதிர்பார்க்காத தர்ஷினி முதலில் திகைத்து பின், “சாரி கார்த்தி உனக்கு என்னை பத்தி தெரியாது” என 

எனக்கு எதுமே வேண்டாம். நீ ஒகே மட்டும் சொல்லு” என பிடிவாதமாக இருக்க vendam

ஐயோ கார்த்தி உனக்கு சொல்றது புரியல…. சரி இதை சொல்றதை தவிர வேற வழி இல்ல. நான் பொன்னே இல்ல கார்த்தி. நா… நான்… நான் ஒரு திருநங்கை” என 

கார்த்தி “ஏய்… புடிக்கலனா பரவலா டி. அதுக்கு இப்படி எல்லாம் சொல்லாத” என கடுப்பாக சொல்ல 

சீரியஸ் ஆ  சொல்றேன் இது மாதிரி ஒரு விஷயத்தில் யாரவது பொய் சொல்லுவாங்களா. ப்ளீஸ் யார் கிட்டவும் சொல்லாதீங்க” என 

கண்டிப்பாங்க எனக்கு தெரியாது உங்கள பத்தி சாரி” என அவன் வேகமாக சென்று விட்டான். அவளும் அவன் சொல்லமாட்டான் என்ற நிம்மதியுடன் சென்றாள். ஆனால் இவர்கள் பேசியதை கேட்ட காவ்யா விஷம புன்னகையுடன் தன் திட்டத்தை செயல் படுத்த தொடங்கினாள்.

மறுநாள் எப்போதும் போல் பள்ளி வந்த தர்ஷினி அனைவரின் பார்வையும் தன் மேல் படுவதை உணர்ந்தவள் என்ன என்று புரியாமல் விழித்தாள்.

கும்பலாக இருந்த மரணவர்களில் ஒருவன் அவள் கையை இழுத்து “நீ எல்லாருக்கும் நிறைய கம்பெனி கொடுப்பியமே எங்களுக்கும் கொஞ்ச நேரம் தரலாமே” என 

ஏய் கையை விடுடா. ஒரு பொண்ணு கிட்ட இப்படி தான் பெஹவே பண்ணுவியா” என 

மச்சி பொண்ணுடா… பொண்ணாம்  டா” என பக்கத்தில் இருந்தவன் நக்கலாக சொல்ல அவளுக்கு புரிந்தது தன் நிலை அனைவருக்கும் தெரிந்து விட்டது. அனைவரும் அவளை தப்பாக பார்க்க தப்பாக கூப்பிட மனம் உடைந்த தர்ஷினி வேகமாக வெளியே வந்தால்.

எதிரே வருவது எதுமே தெரியாமல் ரோட்டில் செல்ல வேகமாக வந்த லார்ரி அவள் மேல் மோதும் சமயம் ஒரு கரம் அவள் காப்பாத்தியது. அந்த கைகளு சொந்தக்காரர் பிரேம் அந்த ஏரியாவின் SI.

அவளை வீட்டுக்கு அழைத்து வந்தவன் சரமாரியாக திட்ட அவளோ “அண்ணா நான் சாகனும் ன்னா… என்னை பொண்ணா பார்த்தப்ப கூட எதோ பார்ப்பாங்க ஆனா நான் ஒரு திருநங்கை அப்படினு தெரிஞ்ச உடனே எல்லாரோட பார்வையும் வக்கிரமா இருக்கு. தப்ப பேசறாங்க…. ஏன்னா என்ன மாதிரி இருக்கிறவங்க எல்லாம் தப்பான தொழிலுக்கு தான் போகணுமா… இது மாதிரி பொறந்தது என் தப்பா… என்னை பெத்தவங்க கூட நான் இருக்கேனா இல்லையானு கவலை படல . நான் ஏன் பொறந்தேனு தோணுது அண்ணா….” என அழுதுகொண்டு  சொல்ல, அன்னம்மாள் வாயை முடி கொண்டு அழுதாள்.

பிரேம், “ஏன் ஆதர்ஷினி இப்படி எல்லாம் பேசற. உன்னை இவங்க எவளோ கஷ்ட பட்டு படிக்க வெச்சாங்க. முதல அவங்க எல்லாம் யாரு உன்னை பத்தி தப்ப பேச. உன் மனசுல எந்த தப்பும் இல்லாத வரைக்கும் நீ பயப்பட கூடாது. ஒன்னு முதலில் உன் மனசில் நல்லா பதிய வெச்சிக்கோ நீ பொண்ணு தான் பட் எல்லார் விடவும் ரொம்ப வித்தியாசம். உனக்கு என்று ஒரு ட்ரீம் வெச்சிக்கோ. அதை மட்டும் போகிஸ் பண்ணு. எனக்கு இதை தவிர வேற சொல்ல தெரியலாமா. பட் ஒரு அண்ணாவா கடைசி  வரைக்கும் உன் கூட இருப்பேன்” என்றான்.

அன்னம்மாள், “நீ ஏன் கண்ணு கவலை படுற. உன் கிட்ட ஆண் கிட்ட இருக்கிற வலிமையும் அதே மாதிரி பெண் கிட்ட இருக்கிற மென்னையும் ஒண்ணா இருக்கு. அந்த தம்பி சொன்ன மாதிரி உன்னை மாத்திக்கோ” என அவர்க்கு தெரிந்ததை சொல்லி விட்டு சென்றார்.

நன்றாக யோசித்தவள் தான் ஒரு போலீஸ் ஆகா வேண்டும் என முடிவு எடுத்தாள். அதனால் ஒரு முடிவோடு பப்ளிக் எக்ஸாம் எழுதினால், நல்ல மதிப்பெண் எடுத்து தன் பள்ளி முதல்வர் உதவியுடன் இங்கே படிக்க வந்தால். ஆனால் அவள் எதிர் பார்க்காதது ஜெகதீஷின் நட்பு, அவனின் காதல் எல்லாம். பேருந்து நின்றதும் அன்னம்மாள் தற்போது இருக்கும் விழுப்புரம் அருகே உள்ள வளவனுர் சென்றால்தன் வீட்டுக்கு வந்தவள்   கவலையை மறந்து சந்தோஷமாக இருந்தால். விடுமுறை முடிந்து திரும்பவும் ஹாஸ்டல் சென்றாள்.

வழக்கம் போல் கல்லூரி வாழ்க்கை செல்ல, ஜெகா தர்ஷினி உறவில் மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஜெகாவை கண்டாலே ஒதுங்கி செல்ல ஆரம்பித்தாள். ஒரு நாள் சத்யா ஜெகாவிடம்,

மச்சி எனக்கு தெரிஞ்சி தங்கச்சி உன்ன லவ் பண்ணல போல டா. உங்க அப்பா வேற ஏன் டா என் பையன் இப்படி இருக்கான் என்று கேள்வியை கேட்டு கொல்றாரு டா”

அப்பா கிட்ட நான் பேசறேன் டா. எனக்கு என் லவ் மேல நம்பிக்கை இருக்கு. அவ என்னக்காக பொறந்தவ டா” என 

எப்படியோ சந்தோஷமா இருந்த சரி. முதலில் அப்பா கிட்ட பேசு” என அன்று இரவே தந்தையிடம் பேசிவிட்டான்.

ஆதர்ஷினி எழும்பும்  போதே எதோ தப்பாக நடப்பது போல் தோன்ற பல மாதங்கள் பின் தோன்றிய இந்த உணர்வால் பயந்து கொண்டே கடவுளிடம் எதுவும் தப்ப நடக்க கூடாது. உன் கிட்ட முதலும் கடைசியுமா என்னோட ஒரே வேண்டுதல் ஜெகா நல்லா இருக்கணும். எனக்கு அது மட்டும் செய்என தன் வாழ்க்கையை மாற்ற போகும் நாள் என தெரியாமல் காலேஜ்க்கு செல்ல தயாராகினாள்.

பிரீ ஹவர் என்பதால் லைப்ரரி புக்ஸ் ரிட்டன் பண்ண சென்றால், உள்ளே வரும் போதே லைப்ரரியன் பூபதி பார்வை சரி இல்லை என்பதை பார்த்து வேகமாக செல்ல வேண்டும் என முளை கட்டளை  இட்டது.

திரும்பி செல்ல நினைத்தவள் கைகள் வர மறுத்தது. என்ன என்று பார்த்து அதிர்ந்தாள். “சார் என்ன பண்றீங்க விடுங்க” என 

பெரிய உத்தமி மாதிரி பண்ணாத உன்ன மாதிரி இருக்கிறவங்க படிக்க எல்லாம் லாக்கி இல்ல” என சொல்லி கொண்டே கைகள் அத்துமீற நொடியும் தாமதிக்காமல் இடி என அவன் கன்னத்தில் அறைந்தால்.

ஏய் உன்ன…. என்ன பண்றேன் பாரு. போயும் போயும் என்ன அடிச்சது ஒரு திருநங்கை. ச்சை… உன்னை விட மாட்டேன் டி” என அவளும் கலங்கிய கண்களுடன் தன்னை விடமால் துரத்தும் விதியை நினைத்து மனம் பரத்துடன் ஹாஸ்டல சென்றால்.

தர்ஷினியை காலெஜ்யில் ஜல்லடை போட்டு தேடி கொண்டு இருந்த ஜெகா விடம் சத்யா “மச்சி தங்கச்சி காலேஜ்ல இல்லை போல கிளம்பலாம் டா நாளைக்கு சீக்கிரம் வந்து பாத்துக்கலாம்” என வழக்கத்தை விட சீக்கிரமாக கிளம்பியது விதியின் விளையாட்டு போல.

அவர்கள் இருவரும் கிளம்பிய சிறிது நேரத்திலே பூபதி தான் நினைத்ததை செய்து முடித்தார். மறுநாள் சீக்கிரம் வந்த ஜெகா மற்றும் சத்யாவிற்கு அதிர்ச்சியான தகவல் காத்திருந்தது.

ஜெகா “மச்சான் என்னனு தெரியல டா எதோ படபடப்பா இருக்கு டா”

ஒன்னும் இல்ல மச்சி உன் ஆளை ரொம்ப நாள் கழிச்சு பாக்க போற லா அதான்” என இருவரும் உள்ளே வர எதிரே தன்னுடன் பயிலும் விஷால் வந்தான்.

விஷால் “மச்சான்ஸ் உங்களுக்கு ஹாட் நியூஸ் தெரியுமா” என இருவரும் என்ன என்று பார்க்க அவனே மேலே தொடர்ந்தான்.

நண்பா காலேஜ் கனவு கன்னி ஆதர்ஷினி ஒரு திருநங்கையாம் டா. பார்த்த தெரியவே இல்லைல. கேட்டவுடனே செம ஷாக்” என சரியாய் அவன் சொன்ன விஷயம் இருவரையும் அதிர்ச்சி அடைய அதே நேரம் அங்கு வந்த தர்ஷினியை பார்த்த ஜெகா கோவமுடன் எதிர் பக்கம் செல்ல சத்யாவும் அவன் பின்னாடியே சென்றான். இருவரையும் புரியாமல் பார்த்த விஷால் தர்ஷினியை பார்த்ததும் அந்த இடத்தை விட்டு சென்றான்.

ஜெகாவிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என அவன் சென்ற திசை நோக்கி சென்றால்.

டேய் ஜெகா நில்லுடா” என சத்யாவின் குரல் கேட்டாலும் கோபத்தில் நிற்க முடியமால் பக்கத்தில் இருந்த கல்மேடையில் அமர்ந்தான். “ஏன் டா உனக்கு நான் எவளோ கோபம்” என சத்யா கேட்கவும் எதிரே வந்து நின்றாள், ஆதர்ஷினி.

எதிரே இருந்த தர்ஷினியை முறைத்து கொண்டே “உனக்கு என்னை பார்த்த எப்படி தெரியுது… எதோ பைத்தியகாரன் காதல் என்று உளறி கொண்டு இருக்கான் அப்படி தானே நினைச்ச. என் காதல் என்ன விளையாட்டாடி. எதோ அற்ப காரணத்துக்காக என்னை ஒதுக்கீட்டு போற” என சத்யா தன் நண்பனை புரியாமல் பார்க்க தர்ஷினியோ புரியாத மொழியில் பார்க்கும் படத்தை போல திரு திருவென முழித்தால்.

என்ன ரெண்டு பெரும் இப்படி பேய் பார்த்த மாதிரி முழிக்கிறிங்க”

சாரி ஜெகா நான் உன்னை ஏமாத்தணும் நினைக்கல. என்னால முடியல ஜெகா ஒவ்வோருத்தனோட பார்வையும் என்னால சகிச்சிக்க முடியல. படிக்கணும் நினைச்சு இதுக்கு முன்னாடி போன காலேஜ் சீட் தரல. அதான் என் ஐடென்டிட்டி யாருக்கும் தெரியவேண்டாம் என்று தான் டீன் கிட்ட சொன்னேன் அவரும் ஒத்துக்கிட்டார். பட் நீ என்னை லவ் பண்ணுவ என்று நான் நினைச்சு கூட பார்க்கல. என்னை மறந்துட்டு வேற வேலைய பாரு” என தன் வாழ்க்கையில் நடந்ததை நீண்ட விளக்கமாக கொடுக்க,

மெலிதாக சிரித்து கொண்டே, “இப்ப கூட வேற வேலையை பாருங்கன்னு சொல்லுற ஆனா வேற பொண்ண பாருன்னு உன் வாயில் இருந்து வரல. ஏன் வரல?” என கேள்வியாக அவளை பார்க்க 

பதில் தெரிந்தால் தானே சொல்வதற்கு “நான் கிளம்புறேன்” என வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றாள்.

சத்யா, “மச்சான் இன்னுமா அவங்கள  லவ் பண்ற” என 

இப்ப தாண்டா அதிகமா லவ் பண்ணனும் தோணுது” என்ற நண்பனை விசித்திரமாக பார்த்தான்.

காலேஜ் முழுக்க தெரிஞ்சிடுச்சு ஆனா ஏன் கிட்ட எல்லாரும் முன்ன மாதிரியே தான் பழகுறாங்க எப்படிஎன குழம்பி போய் இருந்தவள் அருகே வந்த பியூன் “ஆதர்ஷினி மா உன்னை டீன் வர சொன்னாரு” என டீன் அறையை நோக்கி சென்றால்.

குட் அபிடேர்நூன் சார்” என குழம்பிய முகத்துடனே சொன்னால்.

என்ன தர்ஷினி உண்மை எல்லாருக்கும் தெரிஞ்ச அப்புறம் கூட யாருமே அதுமே கேட்கலைன்னு பாக்கறி” என அவளும் ஆம் என தலையை ஆடினால்.

எங்க வீட்டு பொண்ணு மா நீ. உன்னை தலை குனிய விடமாட்டேன். நிம்மதியா உன்னோட ட்ரீம் ips அதுல தான் உன்னோட முழு கவனமும் இருக்கணும். பயப்டாமல் லைப்ரரி போ. வேற லைப்ரரியன் போட்டுருக்கேன்” என 

உங்களுக்கு எப்படி இது எல்லாம் தெரியும். என் ட்ரீம் கூட தெரிஞ்சு இருக்கு”

நீ  ஜெகா கிட்ட சொன்னது அவன் என் கிட்ட சொன்னான். நீ யோசிக்கிறது புரியுது. ஜெகா என்னோட பையன். ஜெகதீஷ் புருசோத்” என 

அப்ப உங்களுக்கு அவன் என்னை லவ் பண்றது தெரியும் தானே. ப்ளீஸ் சார் அவருக்கு புத்திமதி சொல்லுங்க. இது எல்லாம் செட் ஆகாது. ஒரு திருநங்கையை கல்யாணம் பண்ணிக்கிறது கேட்க வேண்டும்னா நல்லா இருக்கலாம் பட் நடைமுறையில் சாத்தியம் இல்ல. அவங்க அம்மா கூட இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. எந்த அம்மாக்கு தன் மகன் ஒரு திருநங்கையை கல்யாணம் பண்ண சம்மதிப்பாங்க” 

நீ சொல்றது எல்லாம் உண்மை தான். பட் என் மனைவி வசுந்தரா தான் உன்னை பார்க்க ஆவலா இருக்கா. நானும் அவளும் ஒண்ணா தான் படிச்சோம். முதலில் நண்பர்களா இருந்த நாங்க அப்புறம் காதலர்களா மாறினோம். வீட்டுல எல்லார் சம்மதமும் கிடைச்சுது. ஆனா அசோக் எங்க கூட படிச்ச பையன் வசுந்தராவை ஒரு தலையா காதலிச்சவன் இதை ஏத்துக்க முடியல. அதுனால வசு முகத்தில் ஆசிட் அடிச்சிட்டான்.அதுல இருந்து அவளை காப்பாற்றி அதுக்கு அப்புறம் என்னை வேண்டாம் சொல்லிட்டா அவளுக்கு அந்த முகத்தோட வாழவே பிடிக்கலைனு சொல்லிட்டா. அதை  எல்லாம் ஒடைச்சு கடைசியா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்ப ஒரு மறுவாழ்வு மையம் நடத்திட்டு வரமா. எங்க பையன் மா ஜெகா. அவன் எதுக்குமே ஆசை பட மாட்டான். பட் ஆசை பட்டத்துக்காக எவளோ ரிஸ்க் வேண்டுனாலும் எடுப்பான். அவனை நீ ஏத்துக்கிட்ட எங்க வீடு மருமகள். இல்லனா மகள். நல்லா யோசிச்சு முடிவு எடு” என்று அவளை மேலும் குழப்பி விட்டார். குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும்.

ரெண்டு நாள் இதை போலவே நகர,

இதுக்கு மேல முடியாது  என தர்ஷினியை பார்த்து பேச பீச் வர சொன்னான் ஜெகா.

எதுக்கு என்னை வர சொன்னிங்க” என கோவமாக கேட்டால் தர்ஷினி.

ஆமாம் தெரியாத மாதிரியே நடிஎன முணுமுணுத்து விட்டு “என்னக்கு இன்னிக்கு முடிவு தெறிச்சகனும். என்னை எப்ப கல்யாணம் பண்ணிக்கிற”  என 

ஏன் ஜெகா புரியாமல் பேசுற என்னை கல்யாணம் பண்ணா உன் வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் இருக்காது. சரி கல்யாணமே ஆகிடுச்சு என்று வச்சிப்போம்  அதுக்கு அப்புறம் நம்ப வெளியே போகும் போது உனக்கு தெரிஞ்சவங்க யாரவது வந்தாங்கன்னா என் மனைவி ஒரு திருநங்கைனா  அறிமுகம் பண்ணுவ உனக்கு தான் கஷ்டமா சங்கடமா இருக்கும் டா” என 

உன்னோட பிரஞ்சனையே இது தான். ஏன் உன் ஐடென்டியை மறைக்க பாக்கிற. நீ ஒரு திருநங்கைனு சொல்றதில்  எனக்கு எந்த கஷ்டமோ பிரச்சனையோ இல்ல. உன்னோட அழகை பார்த்து நான் லவ் பண்ணி இருந்தா முதல் நாளே ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன். ஆனா என்னை லவ் பண்ண வெச்சது உன்னோட கேரக்டர் டி. செஸ் மட்டும் வாழ்க்கை இல்லடி. என்னக்கு உன்னோட லைப் லோங் ட்ராவல்  பண்ணனும். உன் முகத்தை பார்த்துட்டே இருக்கணும். உன் கையை பிடிச்சிட்டு போகணும் டி. உன்னோட சின்ன குறைக்காக உன்னை விட்டு போக நான் என்ன லூசாடி” என 

என்ன சின்ன குறையா” என மனதில் நினைத்தால் தர்ஷினி.

நீ பல பேருக்கு எடுத்துக்காட்ட வாழ பொறந்தவால் டி. உன்ன மாதிரி நிறைய பேர் அவங்களோட கனவை தொலைச்சிட்டு இருக்காங்க அவங்க எல்லாருக்கும் நீ ஒரு உதாரணம். தைரியமா ப்பேஸ்  பண்ணுடி. உன் கூட நான் இருப்பேன். உன்னை பார்த்து சிரிச்சவங்க முன்னாடி கெத்தா வாழ்ந்து கட்டணும் தருக்குட்டி.உன் கையை பிடிச்சிட்டு கடைசி வரைக்கும் உன்னோட போராட நான் ரெடி. ப்ளீஸ் தருக்குட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கோ” என கொஞ்சிக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் இருந்தான்.

ஐயோஓஓ அப்பனும் மகனும் பேசியே நம்பலை கவித்துவிட்டாங்களேஎன நினைக்க 

இந்த குட்டி முளை  என்னடி யோசிக்கிது” என கிண்டலாக கேட்க,

ம்ம்ம்…. போலீஸ் ஆகிட்டு உன்ன கல்யாணம் பண்ணிக்கிலாமா இல்லா உன்னை கல்யாணம் பண்ணிட்டு போலீஸ் ஆகலாமா னு யோசிக்கிறேன்” என கிண்டல் போலவே தன் சம்மதத்தை சொன்னால்.

என் செல்லக்குட்டி… நம்ப ரெண்டையும் ஒன்னாவே பண்ணலாம்” என அவளை அணைத்து கொண்டான்.

ஐந்து வருடங்கள் பிறகு,

டேய் உன்னக்கு என்னை பார்த்த பாவமாவே தெரியலையா. நானே கேஸ் எல்லாம் முடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்க ஒரு வாரம் லீவு போட்ட எங்கடா கூப்டு போற” என அந்த அதிகாலை வேளையில் கணவனுடன் காரில் சென்று கொண்டே கேட்டால் தர்ஷினி.

ஆமா  ப்பா… எங்க  போறோம்” என தாயை பின்பற்றி கேட்டால் நான்கு வயது ஆருத்ரா.

ஆருக்குட்டி நீயும் acp மேடமும் வாயை முடித்து வாங்கம்மா” என்றான். தற்போது ஆதர்ஷினி மதுரை மாவட்ட அசிஸ்டன்ட் கமிஷனர். ஆருத்ராவை இருவரும் தத்தெடுத்தனர்.

கார் நின்ற இடம் ஆதர்ஷினியின் சொந்த ஊர் புண்ணை கிராமம்.

இங்க எதுக்குடா வந்து இருக்கோம்” என 

உங்க அப்பா அம்மாவை பார்க்க தான். என்னக்கு இப்படி ஒரு தேவதை கிடைக்க அவங்க தானே காரணம் அதான்  பார்த்து நன்றி சொல்லத்தான்” என விருப்பமே இல்லாமல் எதிரே இருந்த மனைவியை பார்த்து “உனக்கு பார்க்க பிடிக்கலையா டா” என 

தெரியலை பட் உனக்காக வரேன்” என்ற மனையாளை காதலுடன் நோக்கினான். அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் ஜன்னல் பக்கம் திரும்பி தன் மகளிடம் பேசிக்கொண்டு வந்தால்.

அந்த பெரிய வீட்டின் முன் கார் நிற்க இனம்புரியா உணர்வோடு உள்ளே சென்றால். ஹாலில் அமர்ந்து இருந்த மருதுவும் வாசுகியும் ஆதர்ஷினியை பார்த்து ஒரு நிமிடம் தடுமாறினாலும் அடுத்த நொடியே தன் ரத்தத்தை கண்டுகொண்டார்.

அதிர்ச்சியோடு இருக்கும் பெற்றோரை பார்த்து “அம்மா… அப்பா…” என் ஓடி சென்று அனைத்து கொண்டால்.

உன் பெயர்  என்னமா” என குரல் நடுங்க கேட்ட தந்தையை பார்த்து “ஆதர்ஷினி” என்றால்.

எங்களுக்கு சத்தியமா ஐயா இப்படி எல்லாம் யோசிப்பாங்க என்று தெரியாது மா. அநாதை மாதிரி இந்த வீட்டு வாரிசு வளரனும் என்று தலையெழுத்து போல மா. ஐயா  கடைசி நிமிஷம் அவர் உயிர் போகும் முன்னாடி தான் அன்னம்மாள் உன்னை கூப்பிட்டு போனதை சொன்னார். உன்னை எங்க தேடுறது என்று தெரியலாமா. மன்னிச்சுடு மா” என 

பரவலா ப்பா… இவர் என்னோட கணவர் ஜெகதீஷ் என் பொண்ணு ஆருத்ரா” என அறிமுகம் படுத்தினால்.

ஜெகா “அத்தை மாமா ரொம்ப நன்றி எனக்கு இப்படி ஒரு தேவதை கொடுத்ததுக்கு” என தர்ஷினி மனதில் உன்னால நான் இழந்த எல்லாம் கிடைச்சிடுச்சு டா ஐ அம் வெரி லக்கி டு ஹவ் யு‘  ஜெகா மனதில் உன்னோட இந்த சந்தோஷத்தை சிரிப்பை தொலைக்காமல் நான் பார்த்துப்பேன் தருக்குட்டி உன்னை தோற்க்கவும் விடமாட்டேன்இனி இருவர் வாழ்க்கையில் என்றும் வசந்தமே…..

ஒரு பெண் தனியாக வாழ நினைக்கலாம். ஆனால் நடைமுறையில் பெண்ணை தனியாக ரோட்டில் கூட விடமுடியாது. ரெண்டே உறவு அவளுக்கு சரியாக அமைந்தால் பிறந்த வீட்டில் ராஜகுமாரியாகவும் புகுந்த வீட்டில் ராணியாகவும் வாழ முடியும். ஆனால் ரெண்டுமே அந்த ரெண்டு உறவு தந்தை மற்றும் கணவன் கையில் தான் உள்ளது. கல்லை சிலையாக்கவும் முடியும் தூள்ளாக்கவும் முடியும் அது அந்த சிற்பியின் திறமை. பல பெண்கள் அடுப்படியில் ஒரு காலும் கணவனின் கனவை நினைவாக்க ஒரு காலிலும் ஓடுவாள். ஆனால் எத்தனை கணவன் மனைவின் கனவை நோக்கி செல்லுகிறார்கள். ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது போல் பெண்ணின் வெற்றிக்கும் ஆணின் துணை வேண்டும். ஒரு ஆண் நினைத்தால் பெண்ணை மட்டும் இல்ல திருநங்கையின் கனவை கூட நிறைவேத்த முடியும்.

சுபம் 

ஹாய் மக்களே… குறைகள் இருந்தால் இந்த சின்ன பொண்ண மன்னிச்சிடுங்க. உங்கள் கருத்துக்களை சொல்லுங்க. நன்றி……

அன்புடன் 
நிலா