என் தீராத காதல் நீயே 4

என் தீராத காதல் நீயே 4
“என் தீராத காதல் நீயே 4
“சிந்து கண்ணில் கொலைவெறியுடன் வருவதை பார்த்த ஷரவனுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது.. காலை மிருதுளாவை பார்க்கும் ஆவலில் சிந்துவை காலேஜ் கூட்டி வர மறந்ததுவிட்டு வந்தது.. ஐய்யோ போச்சு இன்னைக்கு இந்த கொத்தவரங்ககிட்ட நல்ல மாட்டினேன்.. பிரிச்சுமேய போறா என்று அவன் நினைக்கும் போதே.. அவன் தலையில் சிட்டுக்குருவி பறந்து.. ஆஆஆஆ என்று தலையை தேய்த்து விட்டு கொண்டு சிந்துவை பார்த்தவன்.. சாரி டா குட்டிமா என்று ஆரம்பிக்கும் போதே மறுபடி தலையில் கொட்டு விழுந்து.. எரும எரும நீயெல்லாம் ஒரு வயசு பையனா டா.. அழகான பொண்ணை தினமும் காலேஜ் கூட்டி போக சான்ஸ் கிடைக்கலையேன்னு அவனாவன் அலைறான்.. நீயென்னாடான்ன கையில் கிடச்ச சான்ஸ்ஸை இப்படி வேஸ்ட் பண்ணிட்டு இருக்றீயே லூசு லூசு என்று அவன் முதுகில் மொத்தியவள்.. என்னை பிக் பண்றத விட அப்படி என்னடா கழட்டுற வேலை உனக்கு.. அதுவும் எப்பவும் காலேஜிக்கு லேட்டா வர எரும.. இன்னைக்கு வாட்ச்மேனுக்கு முன்னையே வந்திருக்கேன்னு தகவல் வந்துது என்ன விஷயம் என்று ஷரவன் கதை திருக..
விஷ்வா ” தலையில் அடித்துக் கொண்டவன்.. அடியேய் பேயி இன்னைக்கு இல்ல டி.. இனிமே எப்பவும் இப்படி தான் என்க..”
சிந்து “ஏன் டா?? என்னமோ இவரு நாயகன் படத்துல வர வேலுநாயக்கர் ஆகிட்டமாதிரி இனிமே எல்லாம் இப்புடி தான்னு டாய்லாக் விடுறா..”
“இல்ல டி பேயி, ஷரவன் நாயகன் பட கமல் ஆகல.. காதல்மன்னன் கமல் ஆகிட்டான் என்றவன் மிருதுளா பற்றி சொல்ல ஆரம்பிக்க பின்னால் இருந்து சொல்லவேண்டாமென்று ஷரவன் செய்கை செய்ததை கூட கவனிக்காமல் அனைத்தையும் உலரி வைத்தவன், ஷரவனை திரும்பி பார்க்க.. அவன் விஷ்வாவை தீயாய் முறைத்துக் கொண்டிருந்தான்.. டேய் இப்ப எதுக்குடா இவ்வளவு பாசமா என்னை பாக்குற என்றவன். அய்யோ சாரி டா மச்சி மறந்துட்டேன்.. உன் லவ் மேட்டர் சிந்துக்கு தெரியக் கூடாதுன்னு சொன்ன இல்ல.. “சாரி டா நா தெரியாம உலரிட்டேன் சாரி டா ரொம்ப சாரி என்றவன் எனக்கு ஒன்னும் தெரியாது என்பது போல முஞ்சை பாவமாக வைத்துக்கொண்டு மீண்டும் ஏரியும் கொள்ளியில் எண்ணெய் உத்த..
ஷரவன் ”பத்தவச்சிடியே பரட்டை என்று தலையில் அடித்துக்கொண்டே ஈஈஈ என்று கேவலமா சிரித்துக் கொண்டே சிந்துவை பார்க்க.. ஏற்கனவே விஷ்வா, ஷரவன் லவ் பற்றி சொன்னதை கேட்டு கடுப்பின் உச்சத்தில் இருந்தவள்.. இதை கேட்டு இன்னும் கொதித்து போக.. ஏன் டா டேய்.. உன் லவ் மேட்டரை நீ முதல்ல என் கிட்ட தான் சொல்லி இருக்கணும்.. அதை செய்யால.. அதுவே பெரிய தப்பு.. இதுல இந்த பக்கீஸ் கிட்ட இது எனக்கு தெரிய கூடாதுன்னு வேற சொல்லி வச்சிருக்கிய நீ என்றவள்.. அவனை போட்டு புரட்டி எடுத்துவிட்டு.. அடுத்து தன் அண்ணன் நிலவனையும் பிடிபிடி என்று பிடித்து விட்டு விஷ்வாவிடம் யூ டார்ன் போட.. அய்யோ சைத்தான் பார்வை நம்மேல படுதே என்றவன் திரும்பி பார்க்க பரத்தும், பிரேமும் எஸ்ஸாகி இருந்தனர்.. இதான் இவனுங்க கிட்ட இருக்க கெட்ட பழக்கம்.. கூடவே இருப்பானுங்க.. அடின்னு வந்த வெறிநாய் தொறத்துற மாதிரி ஓடிடுவனுங்க என்று மைண்ட் வாய்ஸ்சில் புலம்ப.. சிந்துவின் அர்ச்சனை தொடங்கியது.. டேய் பன்னி நீயெல்லாம் ஒரு லவ்வர டா.. அவன் தான் ஏ கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொன்ன.. நீயென்ன செஞ்சிருக்கனும்.. உடனே எனக்கு ஃபோன் பண்ணி இது இது இப்புடி இப்பிடின்னு மேட்டரை புட்டு புட்டு வச்சிருக்க வேணாம்., உன்னை எல்லாம் நம்பி நான் எப்படி டா கல்யாணம் பண்றது என்றவள். வன்முறை கையில் எடுத்து வெளுத்து வாங்க.. ஷரவனும், நிலவனும் குட் கேர்ள்.. பாரபட்சம் பாரக்காம திட்டுற என்றவர் திரும்பி விஷ்வாவை பார்த்தவர் ஓய் ப்ளட் சேம் ப்ளட் என்று hi-fi அடித்துக்கொள்ள சிந்து பார்த்த பார்வையில் கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டனர்..
“ஏன் மாம்ஸ் நான் தான உன் செல்லம்.. அப்ப ஏ கிட்ட தான நீ உன் லவ்வை முதல்ல சொல்லி இருக்கணும்.. ஏன் மாம்ஸ் மறச்சே அப்ப நா உன் செல்லம் இல்லைய என்று வருத்தமாக கேட்க..”
“ஏய் சிந்து குட்டி அப்டியெல்லாம் இல்ல டா.. எப்பவும் நீதான் டா செல்லம்.. மித்துக்கு இன்னும் நான் அவளை லவ் பண்ற மேட்டரே தெரியது டா.. நா மட்டும் உன்கிட்ட மித்து பத்தி சொல்லி இருந்த.. நீ உடனே அவளை பார்க்கனுன்னு கேட்ப.. அவகிட்ட நா அவளை லவ் பண்றதை சொல்லிட்டு தான் அடுத்த வேலையே பாப்ப. என்னோட காதலை நான் தான் டி அவகிட்ட சொல்லணும்.. அவ முகத்த பாத்து, நேருக்கு நேர் அவ அழகான கண்ணை பார்த்து சொல்லணும்.. அத கேட்கும்போது அவ முகத்தையும், அதுல வர மற்றதை ரசிக்கணும் டா.. அதனால தான் உன்கிட்ட சொல்லல என்று சிந்துவை சமாதானப்படுத்த.. (பாவம் ஷரவன் அறிய மாட்டான் ஷரவன் காதலை சொல்லும் தருணம் மிருதுளா முகத்தில் பயம், குழப்பம், சந்தேகம் மட்டும் தான் இருக்க போகிறதென்று..) ஷரவன், சிந்துவிடம் சொன்னதை கேட்க கூடாத ரெண்டு செவிகள் கேட்டுவிட்டன.. ஷரவன் எப்போதோ செய்த சிறு தவறு அவன் காதலில் பெரும் சூறாவளியையே ஏற்படுத்த போகிறது..
“நாட்கள் அதன்போக்கில் நகர மிருதுளா காலேஜ் சேர்த்து ஒரு மாதம் ஓடி இருந்தது.. கலாட்டா, ராகிங் என்று காலேஜ் அமர்க்களப்பட.. நிலவன் மிருதுளாவிடமும், தனுவிடமும் யாரும் வம்பு செய்ய கூடாதென்று ஏற்கனவே ஜுனியர் மாணவர்களிடம் சொல்லி இருந்ததால் யாரும் மிருதுளா, தனு பக்கம் கூட வருவதில்லை.. அதோடு ஷரவன் அவளை காதலிப்பதும் காட்டு தீ போல் காலேஜ் முழுவதும் பரவி இருந்தது.. பாவம் தெரிய வேண்டியவளுக்கு தான் இன்னும் அது தெரியவில்லை.. மிருதுளா, தனுவும் படிப்பில் கவனமாக இருந்தாலும் அவர்களின் சேட்டையிலும் எந்த குறையும் இல்லை.. இந்த ஒரு மாதத்தில் சிந்து, மிருது, தனுவுக்கு இடையில் நல்ல நட்பு பூத்தது.. சிந்து தவறி கூட ஷரவனை பற்றி மிருதுவிடம் வாய்திறக்கவில்லை.. ஒருவேளை சிந்து ஷரவனை பற்றி மிருதுவிடம் பேசி இருந்தால் பின்பு வர இருக்கும் பிரிவை தடுத்திருக்கலமோ என்னவோ.. சிந்து நிலவனின் தங்கை என்ற ஒரே காரணம் மிருது, தனுவை சிந்துவிடம் நெருங்க வைத்தது.. பழகிய பிறகு சிந்துவின் குறும்பு நிறைந்த குணம் பிடித்துவிட மூவரும் சிலநாட்களிலேயே உயிர் தோழிகள் ஆகிவிட்டனர்.. மிருதுவிற்கு ஷரவன், நிலவன், விஷ்வா,பரத்,பிரேம் எல்லோரும் நண்பர்கள் என்றும் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் என்பதோடு, அவர்கள் வைத்தது தான் இந்த காலேஜில் சட்டம், அனைவருக்கும் இவர்களை கண்டால் பயம் என்பது வரை காலேஜ் சேர்ந்த ரெண்டு, மூனு நாளிலேயே தெரிந்து.. கூடவே ஷரவனுக்கு கேர்ள் ப்ரண்ஸ் அதிகம் என்பதும், இந்த காலேஜின் அனைத்து பெண்களின் கனவுகண்ணன் அவன் தான் என்பது வரை தெரிந்தது.. நிலவனிடம் பாசம் வைத்த மிருது அவனிடமும் விஷ்வாவிடமும் நன்கு ஒட்டிக்கொண்டாள். ஆனால் தவறி கூட ஷரவனை ஒரு பார்வை கூட பார்ப்பது இல்லை.. ஷரவனிடம் தள்ளியே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.. ஆனால் அவளின் நிழல் கூட இனி ஷரவனின் நிழலுக்குள் அடங்கபோவது அவளுக்கு தெரியாது.. மிருது நிலவனிடம் பேசும் போது ஷரவன் தள்ளி நின்று அவளின் குழந்தைதனமான பேச்சு, செய்கையென அனைத்தையும் ரசித்து பார்ப்பான்.. தவறியாவது மித்துவின் பார்வை தான் மேல் படுமா என்று அவன் கண்கள் ஏங்கி தவிக்க, அவளின் நகக்கண் கூட அவன் புறம் திரும்பவில்லை…
“இந்த ஒரு மாதகாலத்தில் ஷரவன் மித்துவிடம் தன்னை முழுதாக தொலைத்து விட்டான்.. அவளின் குறும்பு, சேட்டை, அவள் சிறு அசைவுகள் கூட ஷரவனுக்கு அவ்வளவு சந்தோஷத்தை தந்தது.. இனி அவள் முகம் காணாது தன் விடியல் இல்லை, அவள் இல்லாத வாழ்க்கை தேவையில்லை என்ற அளவுக்கு முழுதாக அவனுள் மித்து வந்துவிட்டாள்..
நிலவன் “டேய் ஷரவன் எப்போ தான் டா நீ உன் லவ்வை மிருது கிட்ட சொல்ல போற.. எப்பபாரு தள்ளி நின்னு அவளை திருட்டு சைட் தான் அடிச்சுட்டு இருக்க.. எப்ப தான் டா லவ்வை அவகிட்ட சொல்ல போற நீ.?? “
“அட போடா நீ வேற வயித்தெரிச்சலை கிளப்பிட்டு.. உங்ககிட்ட பேசவே பொறந்த மாதிரி நல்லா வாயடிக்றா.. என்னை பாத்தவுடனே கப்புன்னு சைலன்ட் மோடுக்கு போய்டுற.. அட்லீஸ்ட் ஒரு பார்வை, சின்ன சிரிப்பு ம்ம்ம் எதுவுமில்ல.. ம்ம்ம்ம் உங்க சுமார் முஞ்சை எல்லாம் பாத்து சிரிச்சு சிரிச்சு பேசுற.. அதுவும் இந்த நிலவன் எருமையை அண்ணா அண்ணா கூப்பிட்டு பின்னாடியே சுத்துறா.. ஆனா என்னை மட்டும் பார்க்கவே மாட்டேங்கிற என்று புலம்ப..”
பரத் ” அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும் டா..”
ஷரவன் “அடி செருப்பால கற்கால கடைசி ஆதிவாசி மாதிரி இருந்துட்டு முகராசியாம்.. வந்தேன் தூக்கி போட்டு மிதிச்சுடுவேன்.. ஆல்ரெடி நான் செம்ம காண்டுல இருக்கேன்.. மேற்கொண்டு எதாவது பேசி என்னை கடுப்பேத்துன அவ்வளவு தான் சொல்லிட்டேன்..
விஷ்வா “நோ டா மச்சி இப்படி எல்லாம் கடுப்பாக கூட.. ப்ரெண்ட்ஸ் நாங்க இருக்கும் போது உனக்கு என்ன கவலை..”
ஷரவன் ” நீங்க இருக்கிறது தான் டா கவலையே..”
நிலவன் “டேய் ஏன்னா டா இப்படி சொல்லிட்டா.. நாங்க ஒன்னுமே செய்யலயே டா.. ஆமா டா நீங்க எதுவுமே செய்யல அதான் இப்ப பிரச்சனை.. மித்துகிட்ட என்ன பத்தி நல்லதா ஒரு நாலஞ்சு பிட்டு போட்டு.. அவ மனசுல என் பேரு நச்சுன்னு பதியுற மாதிரி எதாவது செஞ்சீங்களா டா துரோகிகளா என்று ஷரவன் கடுப்பாக..”
விஷ்வா “அட போடா என்னான்னே தெரியல.. உன் பேரை சொன்னலே அந்த பொண்ணு எதாவது காரணத்தை சொல்லிட்டு அங்கிருந்து ஓடிடுது.. அது நின்னு கேட்டவது.. நீ நல்லவன் வல்லவன்னு மனசாட்சிய கொன்னு குழிதோண்டி புதைச்சிட்டு பொய் சொல்லாம்.. அவதான் ஷஷஷன்னு தொடங்கின உடனே ஓடிடுறவ… ன்னுன்னு உன் பேரை முடிக்கும் போது அவ ஹாஸ்டல்ல நிக்கிறா. நாங்க என்ன செய்ய? நீ பேசாம உடனே உன் லவ்வை அவகிட்ட சொல்லிடு எனக்கு என்னமோ அதுதான் சரின்னு தோனுது.. இப்படி திருட்டு சைட் அடிச்சுட்டு நாளை வேஸ்ட் பண்ணாத அம்புட்டு தான் சொல்லிட்டேன் ஆமா..”
ஷரவன் “நீ சொல்றதும் கரெக்ட் தான் டா.. இதுக்குமேல என்னால அவள தள்ளி வச்சு பாக்க முடியாது.. எனக்கு அந்த பொறுமை இல்ல டா.. இன்னைக்கே அவகிட்ட என் லவ்வை சொல்லப்போறேன் என்றவன்.. ம்ம்ம்ம் இனி மித்துவ திருட்டுத்தனமா சைட்டாடிக்க தேவையில்லை.. என்ன இருந்தாலும் திருட்டுதனமா சைட்டடிக்கிறது ஒரு தனி பீலிங் தான் டா என்று ரசித்து சொல்ல.. ஏனோ நிலவனுக்கு தனுவின் முகம் கண்முன் வந்து சென்றது.. கொஞ்ச நாளல நிலவன் சின்சியர்ர தனுவை திருட்டு சைட் அடிஞ்சுட்டு இருக்காருன்னு ஒரு செய்தி காத்துவாக்குல காதுல விழுந்தது..”
“அன்று மாலை கடைசி வகுப்பு ஃப்ரீ என்பதால் மிருதுவும், தனுவும் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தனார்.. வழியில் நிலவனை பார்க்க அவனிடம் சென்றனர்..”
நிலவன் “அமுல்பேபி அண்ணாக்கு ஒரு ஹெல்ப் பண்றீய டா..??”
“என்ன கேள்விண்ணா இது..?? என்ன வேணும்னு மட்டும் சொல்லுங்க..?? ஒரே நிமிஷத்தில் இப்புடிக்க போய் அப்டிக்க வந்துடுறேன் என்று உடனே சொல்ல..”
“எனக்கு லைப்ரரியில இருந்து ஒரு புக் வேணும் டா என்றவன் புக் பேரை சொல்ல.. மிருது ஓகேண்ணா வெய்ட்.. ஒரே நிமிட் எடுத்து வரேன் என்றவள் சிட்டாய் பறக்க.. மிருதுவின் பின்னாலேயே சென்ற தனுவை தடுத்து நிறுத்திய நிலவன்..”
“ஏய் வால்டியூப் நீ எதுக்கு இப்ப அவ பின்னாடி போற ?. என்று திமிராய் கேட்க..??”
“ம்ம்ம்ம மிருது கூட புக் எடுக்கப் போறேன் என்று தனுவும் திமிராகவே பதில் தந்தாள்.. அவளின் திமிர் பேச்சில் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு.. அதெல்லாம் ஒன்னு வேணாம்.. ரெண்டு பேர் சேர்ந்து தூக்குற அளவு அந்த புக்கென்னும் அவ்வளவு வெய்ட் இல்ல.. நீ இங்கயே இரு மிருதுவே அத எடுத்துட்டு வருவா என்க..”
தனு “ஹலோ சீனியர் நீங்க யாரு?? நீங்க சொன்னா நா ஏன் கேக்கணும்.. அதெல்லாம் முடியாது.. நா போவேன் நீங்க யாரு என்ன தடுக்க என்று அவள் நகர போக.. நிலவன் கோபத்தில் அவள் கையை பிடித்து இழுத்த இழுப்பில் அவன் மேலேயே வந்து விழுந்தாள். அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன்.. ஏன் டி நான் பாட்டுக்கு சொல்லிட்டே இருக்கேன்.. நீ பாட்டுக்கு போய்டீருக்க.. உனக்கென்ன அவ்ளோ திமிரு டி என்றவன் அவளை இன்னும் தன்னோடு இறுக்கி அணைக்க.. திடிரென நடந்த இந்த நிகழ்வில் ஏற்கனவே தனு உறைந்து நிற்க.. தன் முகத்திற்கு வெகு அருகில் மூச்சுகாற்று படுமளவு தூரத்தில் நிலவனின் முகம் பார்த்தவளுக்கு பேச்சு மட்டுமல்ல மூச்சும் வெளிவராமல் சிக்கிக்கொண்டது.. இவ்வளவு அருகில் பார்த்த தனுவின் பயந்த கருவிழிகளில் நிலவனும் தன்னை தொலைத்து நின்றுவிட்டான்.. தன்னைமறந்து ஒவரின் விழியில் ஒருவர் தவறி விழுந்து தன்னையே மறந்திருக்க.. அவர்களின் அந்த இணைப்பை பிரிக்க ஒலித்து நிலவன் ஃபோன்.. அதில் சுயவுணர்வுக்கு வந்த தனு அவசரமாக நிலவனைவிட்டு நகர்ந்தவள் பயத்திலும் அவன் ஸ்பரிசம் தந்த படபடப்பிலும் அங்கிருந்து ஓடிவிட.. நிலவனின் நிலை என்னவென்று அவனுக்கே புரியவில்லை.. ஏன் தனுவின் அருகமையை தான் இத்தனை ரசிக்கிறேன் என்ற கேள்வியை அவன் தன்னக்குள் கேட்க?? பாவம் பதில் தான் இல்லை…
“இங்கு லைப்ரரிக்கு வந்தவளை யாரும் இல்லாமல் அமைதியாக இருந்த லைப்ரரி பயமுறுத்த.. மிருதுளா நிலவன் கேட்ட புக்கை எடுத்துக்கொண்டு சீக்கிரம் போக வேண்டுமென்று அரக்கபரக்க புக்கை தேட.. (அது நா இங்க இருந்த தானா மிருது உன் கைக்கு கிடைக்க.. என்னை தான் அந்த நிலவன் பையன் மேல எடுத்து மறச்சு வச்சிருக்கானே என்று அவளை பார்த்து சிரித்தது..) மிருது புக் தேடி தேடி அலுத்து போனவள்.. ச்சே எங்க போய் தொலஞ்சுது இந்த புக்கென்று புலம்பிக் கொண்டே திரும்பியவளின் மான்விழி விரிந்து பார்த்தது பார்த்த படி அப்படியே நிற்க.. அவள் விழி பார்வை முடியும் இடத்தில் அவளையே விழுங்கும் பார்வை பார்த்தபடி நின்றான்.. ஷரவன்..
“மிருதுளா தீடிரென ஷரவனை அங்கு பார்த்ததில் மிரண்டு போய் இமைக்க மறந்து விழி விரித்து பயத்தில் நடுங்கி நிற்க.. ஷரவனோ மிருதுளாவின் பயத்தில், மிரட்சியில் வைரமென ஜொலித்த அவள் கண்களில் தன்னை தொலைத்து நின்றான்…
மிருதுளா ” ஐய்யோ கடவுளே இவரு எங்க இங்க வந்தாரு.. லைப்ரரில் வேற துணைக்கு யாருமில்ல.. கடவுளே நா என்ன பண்ணுவேன் என்று பயந்து நடுங்கிய படி யோசித்துக் கொண்டே நிமிர்ந்தவள் தன் சுவாசம் தொடும் தூரத்தில் ஷரவனை பார்க்க பயத்தில் பின்னால் அடியெடுத்து வைக்க ஷரவன் அவள் முன் நோக்கி நகர்ந்தான்.. பின்னால் சென்ற மிருது சுவரில் மோதி நிற்க இனி எங்கும் போகமுடியாது என்று அவள் ஷரவன் அசந்த நேரம் அங்கிருந்து ஓட பார்க்க.. அவளை நகர விடாமல் தன் கரம்கொண்டு அரணிட்டவன்..”
“ஓய்..?? என்ன என் கிட்ட இருந்து தப்பிச்சு ஓட பாக்குறீய என்று அதட்டும் குரலில் கேட்க.. இல்… இல்ல.. சீனியர் நிலா.. நிலவன் அண்ணா புக் கேட்டாங்க.. எ… எடுக்க வா.. வா.. வந்தேன்.. புக் இல்ல அதான் போ.. போறேன் என்று நாலு வார்த்தை நன்கு கடித்து மென்று திக்கி திணறி சொல்ல முடிக்க.. அந்த நாலு வார்த்தை சொல்வதற்குள் நாற்பது விதமான மாறும் அவளின் அழகு வதனத்தை ஷரவன் ரசித்துக் கொண்டிருந்தான்.. அது எதையும் கவனிக்காத மிருது.. தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்துவிட்டேன் என்பது போல் ஷரவனின் அடுத்த வார்த்தைக்காக விரிந்த விழி இமைகளுடன் ஷரவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
“நா யாருன்னு உனக்கு தெரியுமா மித்து.?? என்று மென்மையான குரலில் அவன் கேட்க.. பயத்தில் இருந்த மிருதுளாவிற்கு அவன் தன்னை மித்து என்று செல்லமாக அழைத்ததை கூட கவனிக்காமல் தெரியுமென்பது போல் தலையை மெதுவாக ஆட்ட.. நல்லவேள நான் ஒருத்தன் இவ மேல கிறுக்கு புடிச்சு சுத்திட்டு இருக்கிறது தெரியாம.. எங்க அவனை தெரியாதுன்னு சொல்லிடுவளோ என்ற பயத்தில் இருந்த ஷரவனுக்கு அவளுக்கு தன்னை தெரியும் என்று வந்த சின்ன தலையசைப்பு அத்தனை சந்தோஷத்தை தந்தது.. ஆனால் அடுத்து மித்து சொன்ன வார்த்தையில் பாவம் அந்த காதல் கண்ணனின் சின்ன மனசு பொக்குன்னு போய்டுச்சு.. ஷரவன் நான் யாரு என்று ஆர்வமாக மித்துவை கேட்க அவளோ சற்றும் யோசிக்காமல் நிலவன் அண்ணா ப்ரண்ட்டு தான நீங்க எனக்கு தெரியும் நான் அண்ணா கூட உங்களை பாத்திருக்கேன் என்று அப்பாவியாக சொல்ல.. ஷரவனுக்கு நிலவன் மீது கொலைவெறி வந்தது.. அடிப்பாவி இங்க ஒருத்தன் வேர் எவர் யூ கோ ஐ பாலோன்னு வோடஃபோன் டாக் மாதிரி இவ பின்னாடி சுத்திட்டு இருந்தா.. இவளுக்கு நான் நிலவன் அண்ணா ப்ரண்ட்டாம்… அண்ணானாம் அண்ணன் அவன் பெரிய வெண்ணொ.. இருக்கட்டும் அந்த வெண்ணெய்யை போய் உருக்கிடுறேன் என்று உள்ளே நிலவனை வறுத்தெடுத்தான்.. (டேய் ஷரவன் அவன் தான் டா ப்ளான் பண்ணி மித்துவை இங்க வர வச்சது.. நன்றி மறப்பது நல்லதில்ல சொல்லிட்டேன் என்று ஷரவன் மனசாட்சி நிலவனுக்கு சப்போர்ட் பண்ண.. அதெல்லாம் ஒரு பக்கம்.. இங்க என் மித்துக்கு நான் தான் முதல்ல.. அப்புறம் தான் அண்ணன் நொண்ணன் எல்லாம் என்று மனசாட்சியை மிரட்டி விரட்டி விட்டான்..)”
“ஓஓஓ அப்ப நான் நிலவன் ப்ரண்ட் அதனால உனக்கு என்ன தெரியும் அப்புடி தான என்று கடுப்பாக.. அவன் கேட்பதின் அர்த்தம் புரியாமல் மித்து குழந்தை போல் வேகவேகமாக ஆமாம் என்று தலையசைத்தாள்.. ஐய்யோ மித்து ஏன் டி நீ இவ்ளோ அப்பாவியா இருக்க.. நான் கடுப்புல கேக்குறேன்னு கூட புரியாம தலையாட்டுறீயே டி.. இப்படி இருந்த நா எப்ப உன்ன கரெக்ட் பண்ணி.. காதலிக்க வச்சு கல்யாணம் பண்ணி, புள்ளகுட்டி பெத்து, அய்யோ நெனைக்கவே கண்ணகட்டுதே.. ம்ம்ம் பரவாயில்ல இந்த குழந்ததானத்துக்கு தானே நானும் இவகிட்ட விழுந்தேன் என்றவன் அவளின் இந்த சின்னபிள்ளை தானத்தில் சிரிப்பு வந்தாலும் சிரமப்பட்டு அதை இதழிலேயே சிறையிட்டவன்.. தன் முகத்தை பார்க்காமல் தலை குனிந்தபடி இருந்தவள் நாடியை பிடித்து நிமிர்த்தியவன்.. உன் பேர் என்ன?? என்க அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் மி.. மி.. மிருதுளா என்று சொல்வதற்கே மிருது உதடு பயத்தில் தந்தியடிக்க தொடங்கிடுச்சு.. டேய் ஷரவன் நீ காலி.. ஒரு பேர் சொல்லவே இவ இப்புடி தந்தியடிக்கிற. இதுல நீ இப்ப ஐ லவ் யூன்னு சொன்ன இவ என்னாவளோ பிள்ளையாரப்பா நீதான் காப்பாத்தனும்.. நீ மட்டும் எனக்கு இந்த லவ் மேட்டர்ரில் ஹெல்ப் பண்ண எங்களுக்கு பொறக்குற முதல் புள்ளைக்கு உன் கோயிலுக்கு வந்து மொட்டை போடுறேன்… கூடவே அந்த வெண்ணெய் என் ஆருயிர் நண்பன், என் வருங்கால பொண்டாட்டியோட நொண்ணன், என் புள்ளையோட தாய்மாமன் நிலவன் இருக்கான் இல்ல.. அவன் நாக்குல அலகு குத்தி தீ மீதிக்க வைக்கிறேன், அது கூட அந்த வினாபோன விஷ்வாவை உருண்டியே உன் கோயிலுக்கு கூட்டி வரேன், பிரேம், பரத் பத்தி அப்புறமா யோச்சி சொல்றேன் சாமி என்று மனசாட்சி இல்லாமல் வேண்டியவன்.. மித்து என்ன பாரு என்று அழைக்க அவள் நிமிரவில்லை.. மித்து என்ன பாரு என்று அழுத்தி சொல்லியும் அவள் அவனை பார்ப்பதாக தெரியவில்லை..
“ஏய் என்ன பாரு டி என்று சத்தமும், கோபமும் கலந்து வந்த ஷரவனின் குரல் அதிர்ந்தவள் சட்டென நிமிர்ந்து அவன் முகம் பார்க்க.. குரலில் இருந்த கோபம் அவன் கண்ணில் இல்லாமல் அந்த கண்கள் தன்னை மென்மையாக வருடுவதை கண்டவள் மீண்டும் தலைகுனிந்து கொள்ள.. போச்சு டா மறுபடியும் மண்ண பாக்க ஆரம்பிச்சிட்ட.. இவ கிட்ட சாப்ட் டா பேசுன வேலைக்காது என்று நினைத்தவன்… இவளா…!! ஏன்டி அப்படி கீழ என்ன தான் டி தேடுற நீ.. கீழ குழிதோண்டி புதையல் ஏதும் புதச்சு வச்சிருக்கிய என்ன..?? எப்பாரு டக்அவுட் ஆன பேட்ஸ்மேன் மாதிரி கீழயே பாத்துட்டு இருக்க… நிமிந்து என் முஞ்ச பாரு டி என்று அதட்ட அதில் பயந்த மிருதுளா ஷரவனை நிமிர்ந்து பார்க்க.. இவகிட்ட கோவமா பேசுன தான் வொர்க் ஆகுது. ம்ம்ம்ம் நமக்கு வேற வழியோ இல்ல போல என்றவன்.. ம்ம்ம்ம் குட் கேர்ள் இப்ப நா கேக்குற கேள்விக்கும் என்னை நேர பாத்து பதில் சொல்லணும் ஓகே என்று மீண்டும் அதட்டும் தொனியில் சொல்ல.. மிருதுவின் இதயமோ முதல் முதலில் அவ்வளவு அருகில் நெருங்கி நின்ற ஒரு அந்நிய ஆண்மகனின் அருகமையில் வேகமாக துடிக்க.. வார்த்தை வராமல் சரி என்று தலையை மட்டும் ஆட்டினாள்..
“ஒரு நிமிடம் மிருதுவை ஆழமாக பார்த்த ஷரவன் நீ யாரையும் லவ் பண்றீய மித்து என்று கேட்கும் போதே ஷரவனின் குரல் பிசிரடித்தது.. ஷரவனுக்கு நன்றாக தெரியும் மிருதுளா யாரையும் காதலிக்கவில்லை என்பது இருந்தும் அவனுக்குள் ஒரு சிறு பயம்.. கடவுளே மித்து இல்லைன்னு சொல்லணும்.!! இல்லைன்னு சொல்லணும்..!! என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டே மிருதுளாவை பார்த்து கொண்டிருக்க.. மித்துவோ ஐய்யோ சீனியர் அப்புடி ஒன்னும் இல்ல.. எனக்கு லவ் எல்லாம் ஒன்னும் இல்ல சீனியர் என்று அவசரமாக சொல்ல.. ஷரவனுக்கு நின்ற மூச்சு அப்போது தான் வெளிய வந்து அப்பாடி என்றிருந்தது.. மித்துவோ அவன் நிலை புரியாது.. நா அப்படியெல்லாம் இல்ல சீனியர்.. எனக்கு என்னோட படிப்பு தான் முக்கியம் என்று வேக வேகமாக சொல்லிக் கொண்டிருக்க.. ஷரவன் அப்போது தான் அவள் தன்னை சீனியர் என்றழைப்பதை கவனித்தான்.. ஏய் ஏய் நிறுத்து நிறுத்து எதுக்கு என்ன சீனியர்னு கூப்பிடுற.. ஏன் எனக்கு பேர் இல்ல.?? இல்ல உனக்கு ஏ பேர் தெரியாத..?? என் பேரு ஷரவன் ஷ..ர..வ..ன் என்று அழுத்தி சொல்லியவன்.. எங்க சொல்லு பாப்போம் ஷரவன் என்க..
“மிருது முடியாது என்று இடவலமாக தலையாட்ட.. ஏன் ஏன் சொல்லமுடியாது..?? என் பேரென்ன அவ்வளவு நீளமாவ இருக்க.?? இல்ல என் பேரே நல்ல இல்லையா என்று குறும்பாக கேட்க.. மித்து இல்லையென தலையாட்ட.. ஓஓஓ அப்ப எங்கம்மா எனக்கு வச்ச பேர் நல்லா இல்லைன்றீய நீ என்று மிரட்ட.. ஐய்யையோ நா அப்படி சொல்லல.. உங்க பேர் ரொம்ப நல்ல இருக்கு.. ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. உங்கம்மா நல்ல பேர் தான் வச்சிருக்காங்க என்று படபடக்க… ஷரவன் தான் பாவம் வந்த சிரிப்பை அடக்க ரொம்ப கஷ்டப்பட்டான்… அப்புறமென்ன என்னை பேர் சொல்லி கூப்புடு..!!
மிருது “இல்ல சீனியர் நீங்க என்ன விட வயசுல பெரியவங்க.. நா எப்புடி உங்களை பேர் சொல்லி கூப்பிடுறது.. அது தப்பு என்று தட்டு தடுமாறி மலங்க மலங்க முழித்து, பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல..
ஷரவன் “ஐய்யோ கொல்றாலே கொல்றாலே.. பாவி பாவி ஏன் டி நீ இவ்ளோ கீயூட்ட இருக்க.. இப்படி உன்ன பாக்கும்போது என்னோட கன்ட்ரோல் மிஸ் ஆகுது டி செல்லம்.. ஐய்யோ கடவுளே என்று அவன் உள்மனம் புலம்பி தவிக்க.. அவனை புலம்ப வைத்தவள் எப்படி அங்கிருந்து எஸ்கேப் ஆகி ஓடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்..
ஷரவன் “நிலவனுக்கும் என் வயசு தான்.. நிலவனை மட்டும் பேர் சொல்லி கூப்பிடுற அது என்ன கதை.??
மிருது “அவரு எனக்கு அண்ணா மாதிரி அதனால தான்.. அப்ப கூட நான் அவர நிலவன் அண்ணான்னு தான் சொல்லுவேன்.. வேணுன்னா உங்களையும் அண்ணானு என்று ஆரம்பிக்கும் போதே ஷரவன் வேகமாக மிருது வாயை தான் கையால் அழுத்தி முடியவன்.. அடிப்பாவி குடி கெட்டுச்சு போ.. என்ன வார்த்தை டி சொல்ல பாத்த.. ஒரு நிமிஷம் மனுஷனுக்கு மூச்சே நின்னு போச்சு.. நல்லவேள இன்னேரம் முதலுக்கே மோசமாகியிருக்கும்.. இன்னொரு தடவை அண்ணா நொண்ணன்னு சொன்னா.. அடுத்த வார்த்தை பேச உன் வாய் உன் கிட்ட இருக்காது, கடிச்சு எடுதிடுவேன் ஜாக்கிரதை.!! என்று ஷரவன் பதறி விட மிருதுளாவிற்கு ஒன்னும் விளங்கவில்லை..
“ஷரவன் இழுத்து மூச்சு விட்டவன்.. சரி இப்ப நீ என்ன சொன்ன நிலவன் உனக்கு அண்ணா மாதிரின்னு தான சொன்னா இல்ல.. ம்ம்ம் ஓகே நிலவன் எனக்கு மச்சான், அவனோட தங்கச்சி சிந்து என்ன மாம்ஸ்னு கூப்பிடுவ.. நீயும் நிலவனுக்கு தங்கச்சி. சோ அக்கார்டிங் டூ தட் நீயும் இனிமே என்ன மாமா ன்னு தான் சொல்லணும்.. எங்கே ஷரவன் மாமான்னு ஒரு தடவ சொல்லு பாப்போம் என்று ஷரவன் ஆசையாய் கேட்க.. மிருதுவிற்கு அதிர்ச்சியில் இழுத்த மூச்சு அவள் நெஞ்சு குழிக்குள்ளேயே சிக்கிக் கொண்டது..”
ஏய் மித்து என்ன காது கேக்கலய.. என்ன மாமா ன்னு கூப்பிட சொன்னேன் கூப்பிடு என்று ஆர்வமாக கேட்க.. மித்துவுக்கோ ஐய்யோ புள்ளையாரப்பா.? என்ன இது? ஏன் இவரு என்கிட்ட இப்புடி பேசுறாரு.. என்ன சோதனை இது.. ஏன் என்ன இப்படி மாட்டிவிட்டு வேடிக்கை பாக்குற நீ இவர்கிட்ட இருந்து என்ன காப்பாத்து புள்ளையாரே என்று மனதிற்குள் வேண்டியவளின் கண்கள் கலங்கி விட.. ஷரவன் அவள் கலங்கிய விழிகளை பார்க்க முடியாமல்.. “ஏய்…ஏய்.. அழத.. எதுக்கு இப்ப நீ அழுகுற என்றவன் அவள் கண்களை துடைத்து விட.. திடிரென ஷரவன் தொட்டதும் மிருதுளா ரெண்டு அடி பின்னால் நகர்ந்தவள் விழிகளை தாழ்த்திக்கொள்ள.. ஷரவனும் இன்னைக்கு இது போதும்.. இதுக்குமேல இவள பயமுறுத்த வேணாம்.. இவ தாங்க மாட்டா என்று நினைத்தவன்..
“ஷரவன், மித்து என்ன பாரு என்று மென்மையாக அழைக்க.. இவ்வளவு நேரம் அதிகாரமாக வந்த ஷரவனின் குரல் இப்போது மலரின் இதழ் மோதும் மென் காற்றை போல் வந்த குரலில் இருந்த மற்றதை உணர்ந்தவள் பயம் மறந்து நிமிர்ந்து ஷரவனை பார்க்க.. அவள் காதருகில் சென்றவன்.. இனி உன் கிட்ட யாரவது நீ யாரையும் லவ் பண்றியன்னு கேட்ட ஆமாம்னு சொல்லு.. உன் லவ்வர் பேர் என்னன்னு கேட்ட ஷரவன்னு சொல்லு என்று கட்டளை போல் சொன்னவன்.. அவளை விட்டு விலகி இதுவரைக்கும் நீ யாரையும் லவ் பண்ணல.. இனியும் நீ என்ன தவிர வேற யாரையும் லவ் பண்ண கூடாது.. அப்படி நீ யாரையும் லவ் பண்றது இல்ல.. அப்படி ஒரு யோசனை வந்தலே அடுத்த நிமிஷம் அவன் இருக்க மாட்டான்.. இந்த ஜென்மத்தில நீ எனக்கு தான் எனக்கு மட்டும் தான்.. அத நீ நல்ல மனசுல பதிய வச்சிக்கே என்றவன் அங்கிருந்து சில அடி நகர்ந்தவன்.. திரும்பி மித்து கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டவன்.. இந்த முத்தத்தை நாலைக்கு நீ என்னன பாக்கும்போது திருப்பி வாங்கிக்கிறேன் அதுவரை பத்திரமா வச்சிக்க என்றவனின் வசீகரமான புன்னகைக்கு மிருதுவிடம் எந்த ரியாக்ஷ்னும் இல்லை.. காலேஜில் இருக்கும் அனைத்து பெண்களும் ஷரவனின் அந்த வசீகரமான சிரிப்புக்கு அடிமை என்றே சொல்லாம்.. அந்த ஒரு சிரிப்புக்கே அவனை சுற்றும் பெண்கள் பலர் இருக்க.. அந்த சிரிப்புக்கு சொந்தகாரன் மனதில் சிம்மாசனமிட்டு உட்காந்து இருப்பாள் மனதை மட்டும் இல்ல.. அவள் கண்களில் கூட அந்த அழகிய புன்னகையை பதியவிடாமல் கண்ணீர் திரை போட்டு இருந்தது..
“ஷரவன் லைப்ர்ரி கதைவை திறந்து வெளியே வந்தவன்.. ஹாஸ்டலுக்கு பத்திரமா பாத்து போ மித்து.. டேக் கேர் என்றவன் குரலில் இருந்த அந்த அக்கறையை உணரும் நிலையில் கூட மிருதுளா இல்லை..