என் தீராத காதல் நீயே 8
என் தீராத காதல் நீயே 8
“மறுநாள் காலை மிருதுளா வேகவேகமாக காலேஜ் கிளம்பிக் கொண்டிருக்க.. அவளை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட தனு.. ஏய் லூசு இப்ப எதுக்கு இவளோ அவசர அவசரமா காலுக்கடியில நெருப்பு புடிச்ச மாதிரி குதிச்சிட்டு இருக்க நீ..?? நிலவனை பார்க்க தான் அவளுக்கு இத்தனை அவசரம் என்ற கடுப்பில் தனு புலம்ப… மிருதுளா திரும்பி தனுவை முறைத்தவள்.. ஏன்டி உனக்கு தெரியாதா நா ஏன் இவ்ளோ சீக்கிரம் கிளம்புறேன்னு.. தெரிஞ்சுக்கிட்டே என்ன கேள்வி வேண்டிகிடக்கு உனக்கு என்று அவளும் கடுப்பாகவே பதில் தந்தாள்.
தனு ” மிருது நான் சொல்றதை கேளு டி.. நீ ஷரவனண்ணா பத்தி அந்த விசித்திர கொரங்கு கிட்ட சொல்லி எந்த யூஸ்சும் இல்லைன்னு தான் எனக்கு தோணுது.. ஏன்னா ஷரவனண்ணாவும் அந்த கொரங்கும் சின்னபுள்ளையில் இருந்து ப்ரண்ட்ஸ்.. சோ நிலவனுக்கு ஷரவன் அண்ணா உன்னை காதலிக்கிற மோட்டர் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்.. நான் நினைக்குறது கரெக்ட்னா நேத்து அந்த கொரங்கு உன்ன லைப்ர்ரிக்கு புக் எடுக்க அனுபிச்சது கூட அவங்க ப்ளான்ன இருக்கலாம்..?? என்று நிலவனை, தனு சரியாக கணித்து சொல்ல..
“மிருதுவோ அவள் சொல்வதை கேட்காமல்..,”ஏய் நீ பாட்டுக்கு சும்மா எதையும் சொல்லாத.. நிலவன் அண்ணா எதுக்கு அப்படி செய்யனும், அவர் ஒன்னும் ஷரவன் மாதிரி இல்ல.. ரொம்ப நல்லவர் என்று நிலவனுக்கு சப்போட் பண்ண.. தனுவுக்கு பற்றிக்கொண்டு வந்தது.. அடிப்போடி இவளோ.. ஷரவன் அண்ணா மாதிரி இருக்க பசங்களை கூட நம்பலாம்.. ஆன அந்த கொரங்கு மாதிரி அமுக்குனி பசங்களை நம்பாவே கூடாது.. சரி நீ இவ்வளவு பேசுறீயே.. நீயே சொல்லு நேத்து அந்த நேரம் நீ லைப்ர்ரியில் தான் இருந்தேனு, அதுவும் தனிய இருந்தேன்னு ஷரவனுக்கு எப்படி தெரியும் என்று கேட்க.. மிருதுளாவிற்கும் அப்போது தான் அது உரைத்தது.. ஆமாம்மில்ல..!! அதெப்படி சரிய அந்த நேரம் பார்த்து அந்த லூசு அங்க வந்துது என்று யோசித்தவள்.. தனுவை பார்த்து எப்படி டி அவன் கரெக்ட்டா அங்கே வந்தான்.?? என்று கேட்க.. ஏய் லூசு நா கேட்டதை நீ திரும்பி என்கிட்டையே கேக்குறீய?? வெளங்கிடும் போ என்று அலுத்துக்கொள்ள.. எது எப்படியோ தனு.. நான் நிலா அண்ணாவை நம்புறேன் அவர்கிட்ட அந்த லூசை பத்தி சொல்லத் தான் போறேன்.. அதுக்கு அப்புறம் அண்ணா அந்த ஷரவனை கூப்ட்டு மெரட்டுற மெரட்டுல அந்த லூசு என் பக்கம் கூட திரும்பி பாக்க மாட்டான் பாரு என்று நடக்கப் போவது தெரியாமல் நம்பிக்கையாக சொல்ல.. “தனு பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே இந்த மரமண்டையை காப்பாத்து என்று வேண்டிக்கொள்ள.. அவள் முதுகில் அடித்த மிருது வாயைமுடிட்டு கிளம்பு டி என்று எழுந்தவர் கல்லூரி வந்து நிலவன் எங்கிருக்கிறான் என்று தேட..??
“இங்கு நிலவனும், விஷ்வாவும் ஷரவனை பிடித்துக் கொண்டனர்.. டேய் நேத்து அமுல்பேபிகிட்ட லவ் சொன்னீயே, அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு ஒரு வார்த்தை ஃபோன் பண்ணி சொன்னீயடா நீ, நைட் பூரவும் நாங்க என்ன ஆச்சோனு குழம்பிட்டு கிடந்தோம்.. என்னடா ஆச்சு நேத்து.?? அமுல்பேபி உனக்கு ஓகே சொல்லிடுச்ச என்று விஷ்வா ஆர்வமாக கேட்க.. ம்க்கும்… யாரு.?? அவ உடனே ஓகே சொல்லிடுவ..?? ஏன் டா நீ வேற.. என்ன பார்த்த உடனே பயத்துல அவளுக்கு ஜன்னி வந்துமாதிரி காலும், கையும் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு என்று சலித்துக்கொள்ள.. அடப்பாவமே அப்ப நாங்க கஷ்டப்பட்டு ப்ளான் பண்ணி அமுல்பேபியை தனிய லைப்ர்ரிக்கு அனுப்புனது எல்லாம் வேஸ்ட்ட என்று நிலவன் ஷரவனை கலாய்க்க..”
“டேய் டேய் ரொம்ப ஆணவத்தில் ஆடாத டா.. என்ன என்னான்னு நெனச்சே.. நானெல்லாம் முன்ன வச்ச காலை பின்ன வைக்கிறவன் இல்ல.. நேத்தே மித்துகிட்ட என் லவ்வை சொல்லிட்டேன் என்று கெத்தாக சொல்ல.. நண்பர்கள் இருவருக்கும் திறந்த வாய் முடவில்லை.. டேய் என்ன சொல்ற உண்மையா வா என்று ஆச்சரியப் பட.. ஷரவன் கர்வமாய் புன்னகைக்க.. டேய் டேய் என்ன டா நடந்துச்சு கொஞ்சம் விவரமா சொல்லேன் என்று விஷ்வா, ஷரவனை நச்சரிக்க..
“ஷரவன் நேற்று மித்துவிடம் அவன் தன் காதலை சொல்லிய விதத்தை சொல்ல.. நிலவன் விழுந்து விழந்து சிரித்தவன்.. டேய் இந்த உலகத்தில் எவனும் இந்த மாதிரி லவ்வை சொல்லி இருக்க மாட்டான் டா என்று சிரித்துக்கொண்டே சொன்னவன்.. ஏன் டா லவ்வை சொல்ல சொல்லி அனுப்புனா இப்படி அந்த புள்ளையை மிரட்டிட்டு வந்திருக்கியே டா என்று மறுபடி சிரிக்க..
“விஷ்வாக்கு மட்டும் சின்ன வருத்தம்.. அது அவன் முகத்தில் தெரிய?? டேய் விஷ்வா என்ன டா என்ன ஆச்சு ஏன் முகம் ஒருமாதிரி இருக்கு?? என்று ஷரவன் கேட்க..”
” இல்ல டா..!! நீ அமுல்பேபிய லவ் பண்றது ஓகே.. அது உன் விருப்பம்.. ஆன மிருதுவை நீ வேற யாரையும் லவ் பண்ண கூடாதுன்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம்னு சொல்லு.. அது அவ தனிபட்ட உரிமை, அவளோட பர்சனல், அதை தடுக்க நீ யாரு?? சரி ஒருவேளை மிருது மனசுல ஏற்கனவே வேற யாராவது இருந்திருந்தா அப்ப நீ என்னடா செஞ்சிருப்ப என்று சற்று கோபமாகவே கேட்க..”
“ஷரவன் சன்னமான சிரித்தவன்.. ஒருவேளை மித்து ஏற்கனவே யாரையாவது விரும்பி இருந்த அவன் நல்லவனா, மித்துவை சந்தோஷமா பாத்துக்குவான்ற பட்சத்தில், நா மித்துவை விட்டு விலகி தள்ளி நின்னு அவ சந்தோஷத்தை பார்த்துட்டு இருந்து இருப்பேன் டா.. எந்த வகையிலும் அவளை நான் தொந்தரவு பண்ணியிருக்கமாட்டேன்.. இன்னொருத்தனை விரும்புற பொண்ணை அடைய நினைக்கிறவன் நல்ல ஆம்புளையே இல்ல டா.. நான் ஆம்பளை டா.. எனக்கு மித்து சந்தோஷமா இருந்த மட்டும் போதும்.. ஆன மித்து மனசுல இப்ப வரை யாரும் இல்ல.. இனியும் யாரும் வந்துட கூடாதுன்னு தான் நா அப்படி சொல்லிட்டு வந்தேன்.. அதோட அவ என்னோட மித்து என்னால மட்டும் தான் அவளை கடைசி வரை சந்தோஷமா வச்சுக்க முடியும் என்ற ஷரவனை கட்டிக்கொண்ட விஷ்வா… நீ கிடைக்க அமுல்பேபி கொடுத்து வச்சிருக்கனும் டா என்று சந்தோஷமாய் சொல்ல.. நிலவனும் அதையே தான் நினைத்தான்.. அது சரி ஏற்கனவே மிருது உன்ன பார்த்தாலே ஓடும்.. நீ லவ்வை சொல்றேன்னு இப்படி மெரட்டிட்டு வேற வந்திருக்க இனி என்ன டா ஆகும்..??
“ம்ம்ம்ம் நா மித்துவை புரிஞ்சு வச்சிருக்கிறது கரெக்ட்னா இன்னேரம்.!! அவ நொண்ணான் என்று நிலவனை கொலைவெறியுடன் முறைத்தவன் உன்கிட்ட என்ன பத்தி குற்றப்பத்திரிகை வாசிக்க வந்திட்டு இருப்பா என்று சொல்லி முடிக்கும் முன் அவர்கள் இருந்த இடம் நோக்கி தனுவுடன் வந்துகொண்டு இருந்தாள் ஷரவனின் இதயராணி… இதோ வந்துட்டா இல்ல.. உன் தொங்கச்சி என்றவன்..”
“டேய் நா இருந்த அவ பேசமாட்டா, நான் ஒளிஞ்சுக்கிறேன் என்று அவன் மறைந்து நின்றுகொள்ள.. மித்து அவர்கள் அருகில் வந்தவள்.. குட் மார்னிங் நிலாண்ணா, குட் மார்னிங் விஷ்வாண்ணா என்று மலர்ந்த முகமாய் சொல்ல, குட் மார்னிங் அமுல்பேபி என்ற நிலவனின் பார்வை தனு மேல் தவழ.. அவள் இதழை சுழித்து ஒழுங்கு காட்டியவள்.. குட் மார்னிங் விஷ்வா அண்ணா என்று விஷ்வாவிற்கு மட்டும் சொன்னவள் நிலவனை திரும்பி கூட பார்க்கவில்லை.. ஓஓஓ… மேடம் என்னை பாக்க மாட்டீங்களோ?? இருடி இரு நேத்து மாதிரி என் கிட்ட தனிய சிக்குவே இல்ல அப்ப இருக்கு டி உனக்கு.. அந்த சுழிக்கிற உதட்டுக்கு என்று நினைத்தவன்.. அடுத்த நொடி தான் என்ன நினைத்தோம் என்பது புரிய, உண்மையில் அதிர்ந்து விட்டான்.. இவகிட்ட மட்டும் ஏன் என்னால் இயல்பா இருக்க முடியல என்று யோசித்தவனுக்கு பாவம் வழக்கம் போல் பதில் தான் கிடைக்கவில்லை… (அடப்போடா உன்னோட பெரிய தொல்லையபோச்சு)
“இது எதுவும் கவனிக்காத விஷ்வா.. என்ன அமுல்பேபி காலையிலையே அண்ணாக்களை பார்க்க வந்திருக்கே.. ஏதும் சொல்லனுமா என்று மறைந்திருந்த ஷரவனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே கேட்க.. மித்து ஆம் என்று தலையாட்டியவள்.. நேற்று ஷரவன் தன்னிடம் நடந்து கொண்டதை சொல்லி, நீங்க தான் அண்ணா அவங்களை கூப்பிட்டு மெரட்டிவைக்கனும் என்று படு சீரியஸ்சாக சொல்ல.. நிலவனும், விஷ்வாவும் வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டனர்.. ஆனாலும் ஷரவன் மிருதுளாவை இந்த அளவு புரிந்து வைத்திருப்பதை நினைக்க.. ஷரவன் மிருதுளாவை கடைசிவரை நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்தது இருவருக்கும்…
நிலவன், “தனக்கு எதுவும் தெரியாது என்பது போல்.. என்ன அமுல்பேபி.. இவ்வளவு நடந்திருக்க.. அந்த ஷரவன் பையன் உன்னை அவ்வளவு மெரட்னானா..? அவன நான் சும்மா விடப்போறதில்ல.. அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்த உன்ன மெரட்டி இருப்பான்.. அவனை நான் என் பண்றேன்னு பாரு என்ற சட்டை கையை ஏற்றி விட்டவன்.. டேய் ஷரவன் இங்க வாடா என்று குரல் கொடுக்க மிருதுளாவிற்கு மொத்த உடலும் அடிவிட்டது அய்யோ சாமி இந்த கடுவம்பூனை இங்க தான் இருக்கா.. அச்சோ இது தெரியாமா உலறிட்டேமே என்று மலங்க மலங்க முழிக்க.. ஷரவன் மிருதுவை குறும்பாக பார்த்த படியே நிலவன் அருகில் வந்து நின்றவன்.. மிருதுளாவை பார்த்து கண்ணடிக்க.. மிருதுளாவிற்கு தூக்கிவாரி போடா பட்டென தலையை குனிந்து கொண்டாள்.. மிருதுவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த ஷரவன் முதுகில் நிலவன் ஓங்கி அடித்து.. டேய் நேத்து என்னமோ நீ மிருதுவை லைப்ர்ரில் வச்சு மெரட்டினீயாமே.. உனக்கு எவ்வளவு திமிர் இருந்த என் அமுல்பேபி பயமுறுத்தி இருப்ப?? கேக்க ஆள் இல்லையின்னு நெனச்சிய என்று கஷ்டப்பட்டு கோபமாக கேட்பது போல் நடிக்க.. மிருது மனதில் ஏக குஷி.. திரும்பி தனுவை அலட்சியமாக பார்த்தவள், பாத்தியா டி என் அண்ணாவை எப்புடி அந்த கடுவன்பூனையை மெரட்டுறாருன்னு.. என்ன நெனச்ச என் அண்ணாவ பத்தி என்று தனு காதைக் கடிக்க.. அவளோ ம்ம்ம்ம் பார்த்துட்டு தான் டி இருக்கேன்.. இப்ப தானே ஸ்டார்ட் ஆகி இருக்கு.. உன் நொண்ணானோட ஃபினிஷிங் எப்படி இருக்குன்னு இனிதான் பாக்கணும் என்று திமிராக சொல்ல.. மிருது அவளை முறைத்து விட்டு திரும்பி நிலவனை பார்க்க.. அவன் இன்னும் ஷரவனை மிரட்டுவது போல் நடித்துக் கொண்டிருந்தன்..
ஷரவன் ” டேய் இது ரொம்ப ஓவர் டா.. நேத்து வந்த உன் தங்கச்சிக்காக. உன் ஆருயிர் நண்பனை இப்படி அடிக்கிறீயே இது நியாயமா, அடுக்குமா, ஏன் டா என்னை பத்தி உனக்கு தெரியாது.. உன் நண்பன் அப்படியெல்லாம் செய்வேனா டா. நா அவளை மெரட்டவே இல்ல டா.. அவ பொய் சொல்ற டா என்று அழுவது போல் குரலை வைத்துக்கொண்டு சொல்ல.. மித்துவுக்கு “அட அண்டா புழுகா.. இப்படி பொய் சொல்றனே என்று நினைத்தவள்.. அப்பாவியாக நிலவனை பார்க்க.. அவனோ என்ன மிருதுமா இது.?? அவன் உன்ன மிரட்டாவே இல்ல, நீ தான் பொய் சொல்றேன்னு சொல்றான் என்ன மா இதெல்லாம் என்று கேட்க.. “அய்யோ இல்ல அண்ணா அவங்க தான் பொய் சொல்றாங்க.. நேத்து அவங்க என்னை எப்படி பயமுறுத்துனங்க தெரியுமா என்று கண்கள் படபடக்க, சின்னபிள்ளை போல் கைகளை உதறிக் கொண்டு கடகடவென்று வார்த்தைகளை கொட்ட.. ஷரவனுக்கு அவளின் இந்த செயல் அவனுக்குள் குறுகுறுப்பை தர.. அப்படியே அவளை இறுக்கி அணைத்து கொள்ள வேண்டும் போல் உள்ளே ஆவல் தோன்றியது..
நிலவன் ” டேய் அமுல்பேபி பொய் சொல்ல மாட்டா.. நீதான் அவளை மிரட்டி இருக்க என்று முறைக்க.. ஷரவன் டேய் நா ஒன்னும் அவளை மெரட்டல.. நான் உன்ன லவ் பண்றேன்.. இனி உன்ன யார் கேட்டாளும் உன் லவ்வர் பேரு ஷரவன்னு சொல்லுன்னு மட்டும் தான் டா சொன்னேன்.. ஒரு இளைஞன் ஒரு இளஞ்சி கிட்ட லவ் சொல்றது தப்பா என்று முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு கேட்க.. நிலவன் திரும்பி மிருதுவை ஒரு பார்வை பார்த்தவன்.. ஷரவனிடம் திரும்பி”
“டேய் அப்போ நீ அமுல்பேபியை லவ் பண்றீயா என்று என்று கோபமாக கேட்க.. ஷரவன் வேக வேகமாக ஆம் என்று தலையாட்ட.. டேய் அவ என் தங்கச்சி நீ பாட்டுக்கு இப்ப லவ் பண்றேன்னு சொல்லிட்டு, நாளைக்கு வந்து இது செட்டாக, எங்களுக்கு ஒத்துவராது அப்டி இப்டின்னு எதாவது சொன்னா நாங்க என்ன டா செய்றது..?? உன் ஸ்டேட்ஸ் வேற அவ ஸ்டேட்ஸ் வேற.?? இது சரிபட்டு வருமா??
ஷரவன் “டேய் யாரா பார்த்து என்ன வார்த்தை சொன்னா.. இந்த ஜென்மம் மட்டும் இல்ல..இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மித்து தான் டா எனக்கு பொண்டாட்டி இது எங்க அம்மா மேலயும், இவ பேரா சொல்லி எனக்குள்ள துடிக்குதே இந்த இதயத்துமேல சத்தியம் என்று தன் இதயத்தில் கைவைத்து சொல்ல.. அந்த வார்த்தையில் மிருதுவுமே ஒரு நிமிடம் உருகிவிட்டாள்.. தனுவோ இங்க என்ன டா நடக்குது என்று ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க..
நிலவன் ” ம்ம்ம்ம் ரொம்ப சந்தோஷம் டா.. நீ என் தங்கச்சியை உண்மையா லவ் பண்றேன்னு எனக்கு புரிஞ்சுடுச்சு.. என் தங்கச்சி படிக்கிற பொண்ணு, அவ படிப்பு முடிஞ்சதும் பெரியவங்க கிட்ட பேசி கல்யாணத்தை முடிச்சுடலாம்.. அதுவரைக்கும ஒழுங்க இருக்கணும்.. என்ன ஓகே வா என்று ஷரவனை பார்த்து கண்ணடிக்க.. அவனும் நீங்க சொன்ன சர்தான் மச்சான் என்று கையை கட்டிக்கொண்டு நல்ல பிள்ளைபோல் சொல்ல.. ம்ம்ம் அது அந்த பயமிருக்கணும் என்ற நிலவன்.. அமுல்பேபி எல்லாம் ஓகே மா.. இனி நீ பயப்பட வேணாம் சரியா.. படிப்பு முடிஞ்சதும் உங்க கல்யாணம்.. அதுக்குள்ள இவன் உன்கிட்ட எதாவது சேட்டை பண்ண என் கிட்ட சொல்லு என்றவன்.. நீ தைரியமா போடா அண்ணா இருக்கேன் என்று மிருது கன்னத்தில் அன்பாக தட்டிவிட்டு, தனுவை ஒரு மாதிரி விழுங்கும் பார்வை பார்த்து விட்டு ஷரவனை தோளில் கைபோட்டு வாங்க மாப்பிள்ளை நம்ம போலாம் என்று அவனையும் விஷ்வாவையும் அழைத்துக் கொண்டு சென்று விட.. மிருது, தனுவும் ஷாக் அடித்தது போல் நின்றனர்..
“ஏய் தனு இப்ப இங்க என்னடி நடந்துது என்று மிருதுளா புரியாமல் கேட்க.. தனு அவள் தலையில் நங்கெனா கொட்டியவள்.. போடிங்கு இவளோ.. மூதேவி… மூதேவி நா அப்பவே சொன்னேன் அந்த கொரங்கை நம்பதேன்னு.. இப்ப பாரு உன் நொண்ணான் உனக்கும், ஷரவன் அண்ணாக்கும் கல்யாணம் பேசி முடிச்சுட்டு போறான் டி.. எரும எரும என்று அவளை இன்னு மொத்தியவள்.. நா அப்பவே சொன்னேன் அந்த நிலவனை நம்பாதே நம்பாதேன்னு தலதலையா அடிச்சுக்கிட்டேன் கேட்டிய, கேட்டிய.. இப்ப என்ன நடந்துச்சுன்னு பாரு என்று கத்த.. மிருது ஏதோ சொல்ல வாயெடுக்க.. தனு திரும்பி பார்த்த பார்வையில் கப் என்று வாய் முடிக்கொண்டாள்..