கண்ட நாள் முதல்

அத்தியாயம் 12

 

அரவிந்த் போகும் வழி எல்லாம் சந்தியாவை பற்றி புகழ்ந்தபடியே வர… சூர்யாவும் அது சரி என்பது போல் அமைதியாக வந்தான்.

 

“சின்ன பொண்ணா இருந்தாலும் எவ்வளவு மெச்சூடா யோசிக்கிறா இல்ல சூர்யா…!” என்று அரவிந்த் சொல்ல. 

 

“யாரு அவளா டா சின்ன பொண்ணு! நீ வேற… உனக்கு ஞாபகம் இருக்கா? அவ நிலா இன்னொருத்தனை காதலிக்குறன்னு தெரிஞ்சும். நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்க அவளை புடிச்சிருக்கிறது மட்டும் தான் காரணமா? இல்ல வேற ஏதும் இருக்கான்னு கேட்டாளே? அது ஏன்னு உனக்கு தெரியுமா அரவிந்த்? என்று சூர்யா கேட்க.

 

“ஆமா டா நானும் கவனிச்சேன்… ஏன் அவ அப்படி கேட்ட?”

 

“அதுக்கு காரணம். உனக்கு வந்த அதே சந்தேகம் அவளுக்கு வந்தது. அதனால தான் அப்டி கேட்ட…”

 

“டேய் எனக்கு சுத்தமா புரியல… கொஞ்சம் தெளிவா சொல்லு டா.” என்றதும் சூர்யா சன்னமாக சிரித்தவன், “தேனு, தேவி என்னை பத்தி சந்தியாகிட்ட சொன்ன அடுத்த ரெண்டு நாள்ல, சந்தியா என்னோட முழு ஹிஸ்டரியையும் எடுத்துட்ட டா. அதுல என்னோட மெடிக்கல் ரீப்போட்டும் அடக்கம்” என்று சொல்ல அரவிந்த் ஆச்சரியத்தில் வாயை பிளந்து விட, “ஆமா டா… நீ அன்னைக்கு என்னை கேட்டியே.? நிலானியால எனக்கு வந்த பிசினஸ் ப்ராப்ளம்காக, அவளை கல்யாணம் பண்ணி பழிவாங்க பாக்குறீயானு? அதோ சந்தேகம் தான்டா சந்தியாக்கும். அதனால தான் நா அவ்வளவு பெரிய விளக்கம் கொடுத்தேன்” என்று சூர்யா சொல்ல. அரவிந்துக்கு சந்தியாவை நினைக்க வியப்பாக இருந்தது. 

 

“சூப்பர் இல்லடா அந்த பொண்ணு” என்று அரவிந்த் சொல்ல. இதுக்கே நீ இப்டி சொல்றீயே… சந்தியாவாது நிலானிக்கு தங்கச்சி, அதனால இதை எல்லாம் செய்றா. ஆனா, அந்த தேனுவும், தேவியும் சான்ஸ்சே இல்ல மச்சி. நம்ம அவங்களை மீட் பண்ண அடுத்த நாளோ என்னை பத்தி எல்லா டீடெய்லும் அவங்க எடுத்துட்டாங்க. அதுக்கு அப்புறம் தான் சந்தியா கிட்ட என்னை பத்தி பேசினாங்க. அவங்க ரெண்டு பேரும் சொன்னதால தான் சந்தியா என்னை நம்புனா” என்று சொல்ல.

 

அரவிந்த், “நிஜமாவே நிலா குடுத்து வச்சவா தான்டா. அவளை சுத்தி அவளுக்கு நல்லது மட்டுமே நினைக்குறவங்க இருக்காங்க” என்று சொல்ல.. சூர்யா ‘ஆமாம்’ என்று தலையாட்டினான்.

 

அன்றைக்கு பிறகு நிலா வீட்டில் இல்லாத நேரங்களில் சூர்யா அவள் வீட்டுக்கு அடிக்கடி சென்றான். தன் பெற்றோரை கலை, ராம்குமாருடன் ஃபோனில் பேச வைத்தான். நிலாவுக்கு தெரியாமல் எல்லாம் ஏற்பாடுகளும் நடந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் சூர்யா, சந்தியா, தேனு, தேவி, அரவிந்த் இடையே ஒரு அழகான நட்பும் உருவாகி இருந்தது. ஆனால், தேன்மொழி ,அரவிந்த் சண்டை மட்டும் ஓயவில்லை. இதில் தேவி அரவிந்துக்கு சப்போர்ட் பண்ணி தேனு கையால் சில பல அடிகளையும் பெற்றுக் கொள்வாள். எல்லாம் நல்லபடியாக நடந்து இதோ இன்று செல்வி. நிலானி ராம்குமார் , திருமதி. நிலானி சூர்யாவாக மாறி விட்டாள்.

 

அம்மாடியே..!! ஒரு வழிய ஒருமாச கதையையும் சொல்லி முடிச்சச்சு. அய்யோ சாமி இதுக்கே கண்ண கட்டுதே. இதுல இன்னொரு பிளாஷ்பேக் கு வேற இருக்கு. இதுல இந்த தேனு ,அரவிந்த் சண்டை வேற.. அட கடவுளே… ஏன் என்னை இப்படி சோதிக்கிற??? திஸ் இஸ் மை மைண்ட் வாய்ஸ் மக்களே… கண்டுக்காதீங்க…

 

சரி இனி நம்ம நிலா கிட்ட மாட்டுன கலை, சந்தியா கதி அதோகதியா? இல்ல உசுரு ஏதும் மிச்சம் வச்சிருக்காளானு பாப்போம்.

 

ராம்குமார் வெளியே சென்றவர் திரும்பி வீட்டுக்கு வந்து கதவை திறக்க.!! அங்கே நிலா தான் கைகளுக்கு ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுத்துக் கொண்டு இருந்தாள். அருகில் சந்தியா விங்கிய தன் இரு கன்னங்களை கைகளால் அழுத்தி கொண்டு இதழ்களை பிதுக்கி சின்ன பிள்ளை போல் சினுங்கி கொண்டு உட்கார்ந்து இருக்க… பக்கத்தில் கலை தன் காதுகளில் இரத்தம் வருகிறத? என்று தடவி தடவி பார்த்துக்கொண்டு இருந்தார்.  

 

” ஏன்டா நிலாம்மா என்ன ஆச்சு?? என்று ராம்குமார் கேட்க. 

 

ஒன்னும் இல்ல குமாரு, சும்மா பேசிட்டு இருந்தோம்” என்று நக்கலாக சொன்னவள். மீண்டும் கலை, சந்தியாவை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் அறைக்கு செல்ல, இங்கு கலை தன் காதுகளை தடவிக்கொண்டே இருப்பதை பார்த்த ராம்குமார், “ஏய் இரத்தம் ஒன்னும் வர்லடி” என்று நேரம் தெரியாமல் உலரிவைக்க, வந்ததே கலையாம்மவுக்கு கோபம். எரிமலை எப்டி பெருக்கும் என்று பொங்கி எழுந்தவர், “யோவ் மனுசனா நீ? இல்ல மனுசன்னு கேக்குறேன்?? இந்த கல்யாண மேட்டர்ல உனக்கு சம்பந்தமே இல்லாத மாதிரியும், எல்லாத்துக்கும். நா தான் காரணம்ன்ற மாதிரியும், அந்த சூர்ப்பனகை கிட்ட எங்களை கோத்து விட்டுட்டு நீ மட்டும் எஸ்கேப் ஆகிட்ட இல்ல” என்று முறைக்க… 

 

ராம்குமார், “நா என்னடி செஞ்சேன்? நிலா தானா என்னை வெளியே போக சொன்னா… அதனால தான் நா” என்று ஆரம்பிக்க அவர் கன்னத்தில் ஒரு இடி இடித்தவர். “அவ சொன்னா உனக்கு புத்தி எங்கய்யா போச்சு புத்தி. கட்டுன பொண்டாட்டியையும், பெத்த பொண்ணையும் இப்படி ஒரு பிடாரி கிட்ட தனியா விட்டுட்டு போக கூடாதுன்னு உனக்கே தெரிய வேண்டாமா.?? என்று கத்திய கலை, “எனக்கு புரியுதுய்யா புரியுது. நா உன்னை படுத்துன பாட்டுக்கு உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாதுன்னு, நேரம் பார்த்து அந்த பிடாரி கிட்ட என்னை சரியா மாட்டிவிட்டு பழிவாங்க கிட்ட இல்ல நீயிஇஇஇ… கவனிச்சுகிறேன்ய்யா உன்னை கவன்சிக்குறேன்.. எனக்கும் ஒரு காலம் வராமயா போய்டும். அப்ப பாத்துக்குறேன் உன்னை” என்றவர் சந்தியாவிடம் திரும்பியவர், “அடியேய் சின்ன சூர்ப்பனகி… எல்லாம் நா பாத்துகிறேன் நா பாத்துக்குறேன்னு சொன்னீயேடி… இப்ப போய் கண்ணாடில பாருடி, உன் மூஞ்சயே உன்னால பார்க்க முடியாதபடி மாத்தி வச்சிருக்காடி உங்கக்கா” என்றவர் கலை தன் அறைக்கு செல்ல. 

 

இங்கு ராம்குமார், “சந்தியா செல்லம் ரொம்ப வலிக்குதடா, அப்பா வேணும்னா ஏதாவது மருந்து எடுத்து வரவா?” என்று கேட்டவரை திரும்பி பார்த்த சந்தியாவின் பார்வையில் இருந்த கொலைவெறியை கண்டவர். மெதுவாக அங்கிருந்து நழுவி விட. “யோவ் அப்பா…! உனக்கு நழுவி ஓடுறாதே பொழப்ப போச்சு இல்ல. இருடி இரு. என்னைக்காவது வசமா நீ சிக்குவ இல்ல, அப்ப இருக்கு உனக்கு வானவேடிக்கை” என்று கத்தியவள் அவளும் தன் அறைக்கு சென்று உறங்கி விட.

 

இங்கு நிலாவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.. கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. “கடவுளே நா உனக்கு என்ன பாவம் பண்ணேன்? எதுக்கு இப்டி என் வாழ்க்கையில வெளையாடுற? என் வாழ்க்கையில ஆம்பளைங்க, கல்யாணம் எதுவுமே வேணாம்.?? இருக்குற வரை இப்டியே இருந்துட்டு போய்டலானு இருந்த என்னை. திடீர்ன்னு இப்டி ஒரு கல்யாண பந்தத்தில் மாட்டி விட்டுட்டியே. இனி நா என்ன செய்யபோறேன். பழச நினச்சு வாடுறத.?? இல்ல இந்த புது வாழ்க்கை ஏத்துக்கிட்டு வாழ்றத? இப்ப நா என்ன செய்யரது? என்னால எதையும் யோசிக்க முடியல, எந்த முடிவுக்கு வர முடியலயே என்று புலம்பி தவித்தவள், பின் எதையே நினைத்து, “ம்ம்ம” என்று பெருமூச்சு விட்டவள், “நடந்த எதையும் இனிமே மாத்த முடியாது. எது எப்டியே நடந்த இந்த கல்யாணதால எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க… இப்பத்திக்கு அது போதும் எனக்கு. இனி என்ன நடக்குதோ?? அத அது போக்குலயே விட்ருவோம்” என்று நினைத்தவள் உறங்க முயன்று அதில் தோற்று போனாள்.

 

மறுநாள் காலை தன் அறையில் நிலா அரை மனதுடன் ஆபீசுக்கு கிளம்பி கொண்டிருக்க, கலை அவளை லீவ் போட்டு வீட்டில் இருக்க சொல்லி கத்திக்கொண்டு இருந்த வேளையில் அங்கு வந்து சேர்ந்தனர் சூர்யாவின் பெற்றோர். அவர்களை பார்த்த கலைவாணி, “வாங்க வாங்க” என்று வரவேற்றவர், ” நிலா… ஏய் நிலா சீக்கிரம்வாடி. இங்க யாரு வந்திருக்காங்க பாரு?” என்று அழைக்க. 

 

“ஏம்மா காலங்காத்தலை இப்டி கத்துற” என்று பதிலுக்கு கத்தியபடி அறையை விட்டு வெளியே வந்த நிலா அங்கு தனலட்சுமி, குமரேசனை பார்த்ததும் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.

 

தனலட்சுமி, “வாடா” என்று நிலாவை அழைத்து தான் அருகில் அமர்த்தி கொண்டவர். “எப்டி மா இருக்க?” என்று அவள் தலை வருடி… 

 

“நா நல்லா இருக்கேன் ஆண்ட்டி” என்றவளை செல்லமாக முறைத்த தனம், ‘அதென்னமா ஆண்ட்டி.? அழகா அத்தைன்னு கூப்பிடு” என்று சொல்ல நிலா சிரித்துக்கொண்டே, “நான் நல்லா இருக்கேன் அத்தை” என்றவள், “நீங்க எப்டி இருக்கீங்க மாமா?’ என்று குமரேசனை கேட்க அவர் அப்டியே உச்சி குளிர்ந்து போய் விட்டார். “நா நல்லா இருக்கேன்ம்மா” என்று சந்தோஷமாக சொல்ல, அந்த நேரம் அங்கு வந்த ராம்குமார் அவர்களை வரவேற்றவர், “என்ன சம்பந்தி நேத்து முக்கியமான மீட்டிங் இருக்குன்னு அவசரமா கிளம்பி போனீங்க? திடீர்ன்னு இப்ப இங்க வந்து இருக்கீங்க?” என்று கேட்க.

 

“அது ஒன்னும் இல்லண்ணா. அங்க இவருக்கு வேலையே ஓடல. மனசு பூர இங்கயே தான் இருந்துது. சோ, எல்லா வேலயயும் மேனேஜர் கிட்ட விட்டுட்டு. அடுத்த பிளைட் புடிச்சு நாங்க வந்துட்டோம். இனி எல்லா கல்யாண வேலையும் நாங்களே பாக்க போறோம். முதல்ல என் செல்லா பொண்ணுக்கு கல்யாண புடவையை நானே பாத்து பாத்து எடுக்கணும்” என்று ஆசையாக சொல்ல. அவரின் என் பொண்ணு என்ற வார்த்தையில் கலை, ராம்குமாரோடு நிலாவின் உள்ளமும் நிறைந்து விட்டது. 

 

(நேற்று அவள் கடவுளிடம் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் கிடைத்து இருக்கும்.. இந்த திருமணபந்தத்தில் அவளை கோத்து விட்டது அவளுக்கு இப்படி பட்ட அருமையான உறவுகள் கிடைக்க தானே என்னமோ.)

 

 “அதுவும் சரிதான் அண்ணி, கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு சீக்கிரம் எல்லாம் வேலையும் முடிக்கணும்” என்று கலை சொல்ல.

 

“அதுக்கு அவசியமே இல்ல அண்ணி. சூர்யாவும்,அரவிந்தும் எல்லாம் வேலையும் முடிச்சுட்டாங்க. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி. அதுவும் இன்னும் ரெண்டு நாள்ல முடிஞ்சுடும். இப்ப நம்ள பண்ண வேண்டிய வேலை கல்யாண புடவை, நகை, தாலி எடுக்கணும் அவ்வளவு தான். அதை பத்தி சொல்ல தான் இப்ப நாங்க வந்தோம்’ என்று தனம் முடிக்க.

 

“என்னம்மா இது? எங்களுக்கு ஒரு வேலையும் இல்லாம, எல்லாத்தையும் நீங்களே முடிச்சுட்டிங்க போல” என்று ராம்குமார் சிரிக்க.

 

“இதுல என்ன இருக்கு ராம்… எல்லாம் ஒரே குடும்பம்னு ஆகிட்ட பிறகு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன? என்ற குமரேசன் வார்த்தைக்கு ராம்குமார் “ஆமாம்” என்று தலையை ஆட்டினார்.

 

 “கல்யாண புடவை எடுக்க நல்ல நாள் பாத்தாச்சா அண்ணி?” என்று கலைவாணி கேட்க.

 

“ஆமா அண்ணி, அத சொல்ல தான் இப்ப நாங்த வந்தோம். நாளை மறுநாள் ரொம்ப நல்லா இருக்கு அன்னைக்கே எடுத்துடுவோம்” என்று தனலட்சுமி சொல்ல கலையும் அதற்கு ஒப்புக் கொள்ள தனலட்சுமி, குமரேசன் அங்கிருந்து கிளம்பினார்‌.

 

“நீ ரொம்ப குடுத்து வச்சவ நிலா, இப்டி ஒரு புகுந்து வீடு கிடைக்க” என்று சொன்ன கலை அதற்கு நிலா முறைப்பாள் என்று எதிர்பார்க்க. அவள் தலையை “ஆமாம்” என்று ஆட்டிவிட்டு செல்ல.. கலை உள்ளுக்குள் மகிழ்ந்து தான் போனார், மகளின் இந்த மாற்றத்தில்…

 

நிலா ஆபீஸ் வந்தவள் மௌனமாகவே

இருக்க.?? தேனுவும், தேவியும் அவள் அருகில் வந்தவர்கள், “என்ன நிலா என்ன ஆச்சு? நேத்து வீட்ல என்ன நடந்தது?” என்று தேனு கேட்க.

 

நிலா கைகளை கவனித்த தேவி, “ஏய்… என்னடி இது, கை இப்டி வீங்கி இருக்கு?” என்று தேவி பதற,

 

“நேத்து நைட்டு வீட்ல சந்தியாவுக்கு பூஜை பண்ணி இருந்தேன். அதான் கை லைட்டா வீங்கி இருக்கு” என்று தேவி, தேனுவை முறைத்தபடியே நிலா சொல்ல. தேவி திரு திருவென்று முழித்தவள் மண்டையில், “நாளைக்கு நம்ம பண்ண வேலை எல்லாம் இவளுக்கு தெரிஞ்ச.?? நம்ம நிலைமை என்னாகும்?” என்று நினைத்தவள் வயிற்றில் புளியை கரைக்க…

 

“என்னடி? அப்படியே ஃப்ரீஸ் ஆகிட்ட” என்று நிலா கேட்க… தேவி பீதியில் இருந்து வெளியே வந்தவள், “இல்ல நிலா! அடிச்ச உனக்கே கை இப்டி வீங்கி இருக்கே.. அப்ப அடி வாங்குன சந்தியா கதிய யோசிச்சு பார்த்தேன்” என்று சொல்ல.

 

“அதெல்லாம் அந்த பிசாசு நல்லா தான் இருக்கு. அவளை அடிச்சதுக்கு பதிலுக்கு பதில். காலையில என் ஃபோன்ல இருந்து 2000 ரூபாய்க்கு ஜோமடோ ல ஃபுட் ஆர்டர் பண்ணிடுச்சு அந்த எரும” என்று சொல்ல. 

 

“பாத்தியாடி தேனு… என்ன நடந்தாலும் நம்ம சந்தியா தன் கடமையில கண்ணா இருக்க” என்று சொல்ல மூவரும் சிரித்து விட்டனர்.

 

“ஜோக்ஸ் ஆப்பர்ட்… நீ இப்ப எப்டி இருக்க நிலா?” என்று தேன்மொழி கேட்க.

 

நிலா மௌனமாக தலையாட்டியவள், “எனக்கு தெரியல தேனு, என்னால எதுவும் யோசிக்க முடியல. திடீர்ன்னு நடந்த கல்யாணம்.!! அதனால ஏற்பட்ட அதிர்ச்சி, என்னோட கடந்தகால கசப்பு இதெல்லாம் சேர்த்து என்னை எதையும் யோசிக்க விட மாட்டேங்குது” என்று சொன்னவள் முகம் வாடிவிட. அவள் கைகளை ஆதரவாக பற்றி தேன்மொழி, ” ப்ளீஸ் டா, வருத்தப்படாத சீக்கிரம் எல்லா சரி ஆகிடும்.”

 

“ஆமா நிலா. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும். உன்னை சுத்தி நல்லது மட்டும் தான் நடக்கும்” என்று தேவி சொல்ல…

 

“அதான்டி என் பிரச்சனையே? என்னை சுத்தி எல்லாரும் நல்லவங்களா இருக்கீங்க. என் மேல உயிரயே வச்சிருக்க குமார், அம்மா, எனக்காக என்ன வேணும்னாலும் செய்ற தங்கச்சி, எனக்கு நல்லதை மட்டுமே நினைக்கிற நீங்க. இது பத்தாதுன்னு அந்த சூர்யாவோட அம்மா, என்னை அவங்க சொந்த பொண்ணவே பாக்குறாங்க. இப்டி என்னை சுத்தி எல்லாரும் நல்லவங்களா இருக்கப்போ, நா மட்டும் என்னை பத்தி மட்டுமே யோசிக்கிறது… எனக்கே ரொம்ப அசிங்கமாக இருக்குடி” என்று புலம்ப.

 

“ஏய் லூசு… யார் சொன்ன நீ செல்பிஷ்னு, நீ அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல. நீ உன்னோட மனசு சொல்றத கேக்குற அவ்வளவுதான். அப்டி நீ சுயநலம் பார்த்திருந்த அப்பாவுக்காக, நீ இந்த கல்யாணத்தை செஞ்சுட்டு இருந்திருக்க மாட்ட. சோ, நீ அத பத்தி எல்லாம் நினைச்சு பீல் பண்ணாத” என்று தேவி ஆறுதல் சொல்ல,

 

தேனுவும், “ஆமா நிலா, தேவி சொல்றது உண்மைதான். நீ இதெல்லாம் யோசிக்காத. அடுத்து நீ என்ன செய்யணும், உன்னோட எதிர்காலம், இத பத்தி மட்டும் யோசி, ஓகே. இப்ப நம்ம கிளம்பலாம். இந்த எம்.டி கடுவன்பூனை தர சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யலாம்” என்று சொல்ல நிலா சிரித்து கொண்டே “சரி” என்று எழுந்தவள். தோழிகளிடம், “ஏய் இன்னைக்கு ஈவினிங் காபி ஷாப் போலாமா? ரொம்ப நாள் ஆச்சு நம்ம ஒன்ன வெளிய போய்” என்று கேட்க 

 

தேவியும், தேனுவும் ஒருவரை ஒருவர் ‘என்ன செய்றது’ என்று புரியாமல் பார்க்க… 

 

தேன்மொழி, “சரிடி, மூனு பேரும் போலாம்” என்று சொல்ல. நிலா அங்கிருந்து கிளம்பினாள். அவள் சென்ற அடுத்த நொடி தேனு சூர்யாவுக்கு ஃபோன் செய்து ஏதோ பேசிவிட்டு தேவியை பார்க்க அவளும் “சரி” என்று தலையாட்ட இருவரும் தம் வேலையை பார்க்க சென்றனர்.