கண்ட நாள் முதல்

அத்தியாயம் 30

 

நிலா போராடி தேவி, தேனுவை ஆஃபீசுக்கு துறத்தி விடுவதற்குள், அவள் கெண்டை மீன் கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிட்டது. “எனக்கு ஒன்னும் இல்லடி. ஐம் ஆல்ரைட்” என்று ஆயிரம் சமாதானம் சொல்லி அனுப்பியும் அதை நம்பாமல் சூர்யாவிற்கு ஃபோன் பண்ணி. “அண்ணா எங்களுக்கு ஆஃபீஸ்ல இம்பார்டெண் மீட்டிங் இருக்குண்ணா. நிலாவும் எங்களை மீட்டிங் போக சொல்லி விரட்டுறா. சோ ப்ளீஸ் நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வாங்க நிலா தனிய இருக்க” என்று சொல்லி, சூர்யா அதற்கு சரி என்ற பிறகே நிம்மதி கொண்டார். 

 

தோழிகள் சென்றதும் தன் அறைக்கு வந்த நிலா. உடனே தன் தோழி யுக்தாவுக்கு ஃபோன் செய்தாள். (சம்யுக்தா நிலாவின் காலேஜ் மேட். ஐ.பி.எஸ் முடித்து இப்போது சென்னையில் ஏ.சி.பி யாக இருக்கிறாள்.) நேற்று நடந்ததை சொல்லி அந்த மூன்று பேரின் முழு ஜாதகத்தை எடுக்க சொல்ல. அந்த பக்கம் யுக்தா. யூ டோன்ட் வொரி மை டியர். இன்னும் அரைமணி நேரத்துல அவனுங்க முழு டீடெய்ல்ஸ் உன் கையிலயும், அவனுங்கு உயிர் என் கையிலயும் இருக்கும்” என்று ஃபோனை வைக்க. இங்கு நிலா அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க. அப்போது தான் காலையில் இருந்து சூர்யா தன்னை வந்து பார்க்கவில்லை என்பது ஞாபகம் வர. கீழே வந்து பார்த்து இல்லாமல், வீடு முழுவதும் தேடி அவன் வீட்டில் இல்லை என்பதை அறிந்தவள். எங்க போனாரு இவரு என்று அப்படியே சோபாவில் அமர்ந்து விட. அப்போது அங்கு சூடான காபியுடன் வந்த லட்சுமி அக்காவிடம் அவரு “எங்கக்கா?” என்று கேட்க. 

 

“தம்பி நைட்டு முழுக்க தூங்கவே இல்லமா. உங்க பக்கத்திலயே தன் இருந்தாரு. நிலானி… நிலானி ன்னு புலம்பிட்டே இருந்துதுமா தம்பி. பாவம் ரொம்ப பயந்துட்டாரு போல” என்றவர் வார்த்தையில் நிலா கண்கள் நனைந்து விட்டது. “பாவம் ரொம்ப பயந்துட்டாரு போல?” என்று நினைத்தவள். நேற்று சூர்யா தன் அருகில் உட்கார்ந்து “உன்னை விட்டு போக மாட்டேன் நிலானி. உன்னை விட்டு போகவே மாட்டேன். எப்பவும் உன் கூட தான் இருப்பேன்” என்று சூர்யா சொன்ன வார்த்தைகள் தான் அவள் காதில் திருப்ப திருப்ப கேட்டது. தன்னை இந்த அளவு நேசிக்கும் கணவன் கிடைத்ததை எண்ணி அத்தனை பெருமை அவளுக்கு. தன்னிடம் இவ்வளவு அன்போடும் உண்மையாகவும் இருக்கும் சூர்யாவிடம் இனி எதையும் மறைக்க கூடாது என்று முடிவு எடுத்தவளுக்கு, அப்போது தான் சூர்யா அவளை நிலானி என்று முழு சொல்லி அழைப்பதை நினைவு வர. “ஆமா எல்லாரும் என்ன நிலான்னு தான் கூப்பிடுவாங்க. இவர் மட்டும் ஏன் நிலானி, நிலானினு முழுபேர் சொல்லி கூப்பிடுறரு?” என்று யோசித்தவளுக்கு. அதற்கு பதில் மட்டும் கிடைக்கவில்லை. மென்மையாக சிரித்தவள். “ம்ம்ம்ம் அவர் இஷ்டம்” என்று கண்களை மூடி முச்செடுத்தவள். “லட்சுமிக்கா அவர் எங்க?”

 

“தெரியலமா, காலையில நீங்க தேனு, தேவிகிட்ட பேசிட்டு இருக்கும் போது உங்க ரூம் வாசல்ல தான் சூர்ய தம்பியும் அரவிந்த் தம்பியும் நின்னுட்டு இருந்தாங்க என்று சொல்ல, நிலாவிற்கு புரிந்து விட்டது. தன் பேசிய அனைத்தையும் சூர்யா கேட்டு விட்டான் என்பது. “பாவம் சூர்யாவுக்கு ஏற்கனவே எனக்கு என்ன ஆச்சுன்னு டென்ஷன். இப்ப எனக்கு எதனால இப்படி ஆச்சுன்னு காரணம் தெரிஞ்சதும் டபுள் டென்ஷன்… கடவுளே பாவம் அவரு எவ்ளோ மனசு கஷ்டப்படுறாரோ. நல்ல வேளை அத்தை, மாமா வீட்ல இல்ல அவங்க மட்டும் இருந்து இருந்த என்னை அந்த நிலைமையில் பாத்ததும் ரொம்ப பயந்து போயிருப்பாங்க” என்று மனம் வருந்தியவள். இன்றே எல்லா பழைய விஷயத்தையும் அவர் கிட்ட சொல்லிட்டு, அதுக்கு அப்றமும் சூர்யா மனசு என்னை ஏத்துக்கிட்ட. அதுக்கு அப்றம் என்னோட காதலை அவர்கிட்ட சொல்லி, காலம்பூரவும் அவர் கூட சேர்ந்து சந்தோஷமா வாழனும்” என்று முடிவெடுத்தவள். சூர்யா வரவிற்காக காத்திருக்க. 

 

நிலாவின் ரூம்மில் அவள் ஃபோன் அடித்தது. நிலா சென்று ஃபோனை எடுத்து பார்க்க, யுக்தா தான் அழைத்திருந்தாள். ஃபோனை எடுத்த நிலா.. சொல்லுடி என்க.. 

 

யுக்தா சொன்ன விவரங்களை கேட்ட நிலாவிற்கு ஒரு நிமிஷம் மூச்சே வரவில்லை. அந்த நிமிடம் அவளின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த அவள் அழகு முகத்தால் கூட முடியவில்லை. இன்னதென்று சொல்ல முடியாத சந்தோஷம். “நீ நெஜமாவா சொல்ற யுகி?’ என்று கேட்க, “ஆமாடி நெஜம் தான். ஆனா, இதுல எனக்கு சின்ன வருந்தம் தான். அவனுங்க சாவு என்னோட கணக்குல வர்ல… பட் இட்ஸ் ஒகே” என்று சொல்ல, நிலா உற்சாகமாக குரலில் “ஓகே யுகி ரொம்ப தாங்ஸ்டி செல்லம். நா அப்றம் உன்கிட்ட பேசுறேன்” என்று ஃபோனை கட் செய்தவள், மனது றெக்கை இல்லாமல் பறந்தது. அதிக சந்தோஷத்தில் யுக்தா சொன்ன முக்கியமான விஷயம் நிலாவிற்கு சரியாக புரியாமல் போக.. சூர்யாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்க. அவன் வருவதற்குள் ரெஃப்ரஷ் ஆகிடலாம் என்று சென்றவள். குளித்து அழகாக சூர்யாவுக்கு பிடித்த ப்ளு கலர் புடவையில் ரெடியாகி கண்ணாடியில் ஒன்னுக்கு பத்து முறை தன்னை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, இது நான் தானா! எப்டி இருந்த நா இப்டி ஆயிட்டேன்” என்று தனக்குள்ளே சிரித்துக்கொள்ள. அப்போது கல்யாணத்தன்று சூர்யா தனக்கு பரிசாக ஒரு மோதிரத்தை தந்து, உனக்கு எப்ப என் மேல காதல் வருதே அப்ப இத நீ போட்டுக்கோ!” என்றது நினைவு வர. அவசரமாக அந்த மோதிரத்தை எடுக்கச் சென்றாள். 

 

மோதிரத்தை தேடும் பரபரப்பில், நகை பெட்டியை கீழே தள்ளிவிட “அய்யோ கடவுளே…’ என்று தலையில் கொட்டிக் கொண்டவள். எல்லா நகைகளையும் அதற்குரிய பெட்டியில் எடுத்து வைத்தாள்..க்ஷ அப்போது அவள் கையில் சின்ன டாலர் ஒன்று கிடைக்க. அதை பார்த்தவள் முகத்தில் அதுவரை இருந்த சிரிப்பும், சந்தோஷமும் சூரியனை கண்ட பனி போல் இருந்த இடம் தெரியாமல் தொலைந்து போனது. ஒரு நிமிடம் அப்படியே நின்றவள் பின் ஏதே நினைவு வந்து எதையே தேட 

ஆரம்பித்தவளுக்கு அவள் தேடியது, உடனே கிடைத்து விட… அப்போது தான் யுக்தா சற்று முன் சொன்னது அவள் ஞாபகத்திற்கு வந்தது. நிலாவுக்கு உள்ளங்கை ரேகை போல் எல்லாம் விஷயமும் தெள்ளத் தெளிவாக புரிந்தது. இத்தனை நாள் சூர்யா மேல் கோபப்பட விடாமல் எது தடுத்தது? அவனின் அருகாமை ஏன் தனக்கு அந்நியமாக தெரியவில்லை” என்ற அவளின் அனைத்து கேள்விகளுக்கும் நிலாவுக்கு பதில் கிடைக்க. அப்படியே கல்லாய் சமைந்து விட, கண்களில் மட்டும் கண்ணீர் வருவது நிற்கவே இல்லை. யாரோ இதயத்தை கையில் எடுத்து கசக்குவது போல் அப்டி ஒரு வலி. தன்னவன் தன்னை ஏமாற்றிவிட்டானா? என்ற நினைப்பே அவளை கொல்லாமல் கொன்றது. 

 

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தால் என்று அவளுக்கே தெரியவில்லை. பின் எழுந்து முகத்தை துடைத்துக் கொண்டாவள். அதற்கு பிறகு நடப்பது நடக்கட்டும் என்று எழுந்து வெளியே வர, அப்போது அங்கு வந்த சூர்யாவின் மேல் மோதி அவள் விழப்போக, அவளை தாங்கி பிடித்த சூர்யா, “ஏய் நிலானி பாத்துமா” என்று அவளை பிடித்து நிற்க வைத்தவன். 

“உனக்கு ஒன்னு இல்லயே? இப்ப எப்டி இருக்கு? டாக்டரை வர சொல்ல வா”என்று பதற… நிலாவிடம் எந்த பதிலும் இல்லாமல், அமைதி மட்டுமே பதிலாக வர. 

 

சூர்யா, “நேத்து நடந்தத நெனச்சு தான் இப்டி அமைதியா இருக்க போல” என்று நினைத்தவன் அதற்கு மேல் அவளை கேள்வி கேட்க விரும்பாமல். “சரி நிலானி. நீ போய் ரெஸ்ட் எடு” என்க.. அதற்கும் நிலாவிடம் பதில் என்ன, சின்ன தலையசைப்பு கூட இல்லாமல் போக. சூர்யாவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற அவள் முகத்தை பார்க்க. அவள் கண்கள் காட்டிய உணர்வுக்கு எந்த மொழி கொண்டு மொழிபெயர்ப்பது என்று புரியாமல் சூர்யாவே ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டான்.

 

நிலா தான் அறைக்கு சென்று விட. சூர்யா போகும் நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“என்ன ஆச்சு இவளுக்கு இதுவரைக்கும் இவளை இப்டி நா பாத்ததே இல்லயே..?? என்ன நடந்துச்சு.?? கண்டிப்பா நேத்து நடந்தது, இவ இப்ப இப்டி இருக்க காரணம் இல்ல. அது மட்டும் நல்லா புரியுது. ஆனா, வேற என்னவா இருக்கும் என்று குழம்பியவன். அவளின் கண்களிள் கண்ட வலி அவன் உயிர் வரை சென்று தாக்க செய்வதறியாது நின்றான்.

 

இரண்டு நாள் கழித்து சூர்யாவை பார்க்க அரவிந்த் அவன் ஆபிசுக்கு வந்தவன். சூர்யாவின் குழப்பம் தோய்ந்த முகத்தை பார்த்து, “டேய் என்னடா ஆச்சு உனக்கு? முகம் என் இப்டி வாடி கிடக்கு. வீட்ல ஏதும் பிரச்சனையா? நிலா கூட சண்டை ஏதும் போட்டியா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே போக. “ம்ம்க்கும்” என்று விரக்தியாக ஒரு சிரிப்பு சிரித்தவன. “அவ என் கிட்ட பேசினா, தானேடா சண்ட வர்ரதுக்கு… அவதான் என் முகத்தை பாத்தே ரெண்டு நாள் ஆகுதே. அப்றம் எங்கிருந்து பேசி சண்ட போட” என்று வலியோடு வார்த்தைகள் வெளிவர.

 

 “ஏன்டா சூர்யா?? என்ன ஆச்சு அவளுக்கு. நீ ஏதும் அவளை திட்டுனீய? இல்ல வேற எதுவும் பேமிலி ப்ராப்ளமா என்ன..??” என்க

மீண்டும் விரக்தி புன்னகையோடு “தெரியல” என்ற தலையசைப்பு மட்டுமே பதிலாக கிடைக்க.. அரவிந்த்திற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை… “நிலா கிட்ட என்ன எதுன்னு நீயே கேக்க வேண்டியது தானா டா??”

 

“அவ என முகத்த கூட நிமிந்து பாக்க மாட்டேங்கிறாடா… பாக்கத்துல போனாலே தலையை குனிஞ்சிட்டு தள்ளி போய்றா. நா என்னடா பண்றது” என்ற போது சூர்யாவின் இயலாமை தான் அதில் தெரிந்தது. 

 

“சரி விடு சூர்யா ஈவினிங் வீட்டுக்கு போய் அவ கிட்ட பேசி பாரு. அப்டி இல்லயா, தனம்மா க்கு ஃபோன் பண்ணி சீக்கிரம் ஊருக்கு வர சொல்லு. அவங்க வந்து பேசினா நிலா சரியாயிடுவா” என்க.. சூர்யாவும் அதற்கு சம்மதம் என்பது போல் தலையாட்ட, அன்றைய மாலைப்பொழுதை எதிர்பார்த்து காத்திருந்தான் சூர்யா.

 

மாலை வீட்டுக்கு வந்தவன், நேராக நிலாவிடம் சென்றான்.. 

 

“நிலானி நா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..??”

 

நிலா அவனை நிமிந்து கூட பார்க்காது “என்ன?” என்பது போல் தலையசைக்க…

 

“என்னடி ஆச்சு உனக்கு..?? ஏன்டி என்கிட்ட பேச மாட்டேங்கிற. நீ என் முகத்தை நிமிந்து பாத்து ரெண்டு நாள் ஆகுதுடி..?? என்னதான் ஆச்சு உனக்கு..??’ என்று கத்த

 

நிலா அமைதியாக, “அப்டி எல்லாம் ஒன்னு இல்ல. நா எப்பவும் போல தான் இருக்கேன்” என்று எங்கேயோ பார்த்து சொல்லி விட்டு நகர. அவள் கையை பிடித்து இழுத்து நிறுத்தியவன். “ஏய் என்ன தான்டி உன் பிரச்சனை? எதுக்கு இப்படி என்னை சாகடிக்கிற. எத இருந்தாலும் சொல்லி தொலையேன்டி… ஏன் மனசுக்குள்ளயே வச்சுட்டு, நீயும் கஷ்டப்பட்டு என்னையும் ஏன்டி இம்சை பண்ற.?? என்று‌ கேட்க, அதற்கும் நிலாவிடம் பதில் இல்லை.

 

நிலாவின் கையை சூர்யா இறுக்கி பிடித்திருந்ததில் அவளின் கை வலிக்க தொடங்க, “ப்ளீஸ் கையா விடுங்க வலிக்குது.” என்று அவன் கைகளில் இருந்து தன் கையை எடுக்க முயல. அவள் கைகளை இன்னும் இறுக்கி பிடித்து தன்புறம் இழுக்க… நிலா தடுமாறி அவன் மார்பில் வந்து மோதி நின்றவள். அவன் பிடியில் இருந்து வெளிவர முயன்று முடியாமல் போக, “ப்ளீஸ் விடுங்க என்னை… எனக்கு வலிக்குது” என்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் சொல்ல. அதில் இன்னும் கோபம் கொண்டவன். “வலிக்கட்டும்டி நல்லா வலிக்கட்டும். ரெண்டு நாள்ல உன் முகத்தை பாக்காம, பேசாம எனக்கு வலிச்சது விடவா உனக்கு வலிச்சிடபோகுது?” என்றவன் அவள் முகம் அவள் வலியில் தவிப்பதை சொல்ல, தன் பிடியை தளர்த்தியவன். “ப்ளீஸ் நிலானி உனக்கு என்ன தான் ஆச்சு? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுடி.. நம்ம புருஷன் பொண்டாட்டி டி, நமக்குள்ள இந்த ஒளிவு மறைவு எதுக்கு?” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் நிலா சட்டென்று நிமிர்ந்து அவன் கண்களை நேருக்கு நேர் தீர்க்கமாக ஒரு பார்வை பார்க்க. அந்த பார்வையின் அர்த்தம் “அத நீ சொல்றீய சூர்யா” என்று குற்றம்சாட்டும் படி இருக்க, அதில் சூர்யா ஒரு நிமிடம் ஆடி விட்டான். 

 

அவனுக்கு நிலாவின் பார்வை எதையே உணர்த்த, உடனே அவளை விட்டு விலகியவன். தன்னை நிலைபடுத்தி கொள்ளவே சிறிது நேரம் தேவைப்பட்டது. பின் மனதில் தைரியத்தை வரவைத்து கொண்டு.

 

“நி…”

 

“…….”

 

“நிலானி” என்று அழைத்தவன்.

 

“உ …” “உனக்கு”

 

“நா யாருன்னு உனக்கு

தெரிஞ்சு போச்சு இல்ல?” என்று தட்டு தடுமாறி கேட்க,

 

நிலா அவனை வெற்றுப் பார்வை பார்த்து விட்டு சென்றவள், பீரோவில் இருந்து எதையோ எடுத்து வந்து அதை சூர்யா முகத்திற்கு முன் நீட்டியவள் கண்களிள் வலி, வேதனை, இயலாமை, ஏமாற்றம் என்று எல்லா உணர்வுகளும் தெரிய. அப்போது தான் அவன் செய்த தவறின் வீரியம் சூர்யாவிற்கு புரிய ஆரம்பித்தது. தன்னவளின் கண்ணீருக்கு தானே காரணமாகிவிட்டேமே என்ற நினைவே அவனுக்கு இதயமே வெடித்து சிதறும் வலியை தந்தது.

 

நம் மனதின் மொழியை சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லிவிடுவது நல்லது. சில சமயங்களில் அதை சொல்லும் நேரம் வரும்போது நம்மால் அதை சொல்ல முடியாமலே போகலாம்.

 

சூர்யா தன்னவளை காயப்படுத்தி விட்டோம், என்ற வலியுடன் அவள் கைகளில் தொங்கி கொண்டிருந்த அந்த செயினை தான் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

நிலா உணர்ச்சிகள் துடைத்த குரலில், “இது என்னோட அம்மா எனக்கு போட்ட செயின். இது என் கழுத்த விட்டு போனா நாள். என்னோட வாழ்க்கையில் நா மறக்கவே முடியாத நாள். இந்த உலகத்தையும் உறவுகளையும் நா வெறுத்த நாளும் அதுதான். அன்னைக்கு ஒரே ஒரு நாள் பாத்த ஒருத்தனை சாகுற வரைக்கு நெனச்சிட்டு இருக்க வச்ச நாளும் அது தான்” என்று சூர்யாவை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவள். “இந்த செயின் உங்க கிட்ட இருக்குதுன்னா அதுக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் இருக்க முடியும்.” 

 

“அது…”

 

“அது…” என்று சொல்ல வந்ததை முழுவதும் சொல்ல முடியாமல் நிலா கண்களில் கண்ணீருடன் கலங்கி நிற்க… 

 

அதற்கு மேல் அவள் கண்ணீரை காண சகிக்காது. அவளை நெருங்கி அவள் கன்னத்தை இருகரம் கொண்டு பிடித்து அவள் நெற்றியில் தன் நெற்றி மோதி நின்றவன். “இல்லை” என்பது போல் தலையசைத்தவன். “சாரிடி… ரொம்ப சாரி… நா வேணும்னு உன்கிட்ட மறைக்கலடி, ப்ளீஸ்டி என்ன மன்னிச்சிடு. நா… நா வேணும்னு பண்ணல” என்று கதற நிமிடங்கள் நொடிகலாய் கரைந்தது.

 

சூர்யா தன்னை நிலை படுத்திக்கொண்டவன், “நிலானி” என்றழைக்க.. அவளிடம் மௌனம் மட்டுமே பதிலாக வர.. ஆழ மூச்செடுத்தவன்.

 

“இங்க பாரு நிலானி, நா வேணும்னு எதுவும் செய்யல. எல்லாத்துக்கும் காரணம் எனக்கு உன் மேல வந்த காதல் தான்” என்க.. நிலா அவனை புரியாமல் பார்க்க. “ஆமா நிலானி, உன்னை அன்னைக்கு தேனியில விட்டு வந்த நாள்ல இருந்து, உன்னை நினைக்காம ஒரு நாள் கூட என்னால இருக்க முடியல. ஏன்னு தெரியல, உன்னோட முகம் என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. என்னோட நெனப்பு உனக்கு வரகூடாதுன்னு என் பேரை கூட சொல்லாம வந்த என்னால உன்னை மறக்க முடியாம போனது தான்டி விதி… ஆனாலும் போக போக உன்னை மறந்திடுவேன்னு தான் நானும் நெனச்சேன். ஆனா, நினைச்சதுக்கு நேர்மாறா உன்னோட ஞாபகம் எனக்கு அதிகமாச்சே தவிர குறையவே இல்ல. உன்னை ஒரு தடவயாது பாக்கணும்னு மனசு ரொம்ப தவிச்சிது. அந்த தவிப்புக்கு என்ன அர்த்தம். நா ஏன் உன்னை பாக்க இவ்ளோ தவிக்கிறேன்னு கூட எனக்கு புரியல… உடனே உன்னை பாக்கணும்னு மட்டும் தான் தோனிச்சு. அப்ப தான் நீ அவ்ளோ கூப்டும் உன் கூட உன் வீட்டுக்கு வராதது, உன்னோட பேரை தவிர வேற எதையும் கேக்காதத நெனச்சு என்னை நானே அடிச்சுக்கிட்டேன். அதுக்கு பிறகு இந்த ஒன்பது வருஷத்தில் குறைஞ்சது பத்து தடவையாவது தேனிக்கு வந்து அந்த ஊரு முழுக்க உன்னை தேடி அலஞ்சிருக்கேன் தெரியுமா?” என்றதும், சட்டென நிமிர்ந்து விழிவிரிய சூர்யாவை பார்த்தவள் விழியில் “இது நிஜம் தானா?” என்ற கேள்வி இருக்க… சூர்யா ‘ஆமா உண்மைதான்” என்று தலையசைக்க… நிலா கலங்கிய விழிகளில் அந்த நொடி உலகத்தையே வென்ற கர்வம் குடிகொண்டது. அதை கண்ட சூர்யாவின் இதழ்களும் சிறுமுறுவலிக்க, 

 

“எங்க தேடியும் நீ எங்க இருக்கேன்னு என்னால கண்டுபிடிக்க முடியலடி… அப்றம் வாழ்க்கை அது போக்குல போக, படிப்பு, வேலை, பிசினஸ்னு நாட்கள் பறந்துடுச்சு. ஆனா, இந்த ஒன்பது வருஷத்துல உன்னை நினைக்காத ஒரு நாள் கூட என் வாழ்கையில இல்லடி. அந்த அளவுக்கு நீ என் மனசுலையும் நெனப்புலையும் கலந்துட்ட. அம்மா என்ன கல்யாணம் பண்ண சொல்லி எவ்ளோ கட்டாயப்படுத்த்தியும் நா ஒத்துக்கல. உன்னை தவிர என்னால வேற எந்த பொண்ணையும் நினைச்சு கூட பாக்க முடியலடி. ஒரு டைம்ல கடவுள் மேல கூட கோவம் வந்துது. ஏன்டா சாமி அவளை என் கண்ணுல காட்டுன..?? மனசுல முழுசா அவளை நினைக்க வச்சுட்டு, இப்ப அவளை தேடி அலைய வச்சுட்டியே? என் மேல உனக்கு கருணையே இல்லயானு சண்டை கூட போட்டு இருக்கேன். ஆனா, கடவுளுக்கு என் மேல ரொம்பவே கருணை இருக்குன்னு, உன்னை பத்தி அரவிந்த் என்கிட்ட சொல்லும் போது தான் புரிஞ்சுக்கிட்டேன். நா தேடிட்டு இருந்த என் தேவதை இங்க என் பக்கத்துல தான் இருக்கான்னு எனக்கு அவ்வளவு சந்தோஷம்டி. ஆனா, அந்த சந்தோஷத்தையும் முழுசா அனுபவிக்க முடியாம, அரவிந்துக்கு பாத்திருந்த பொண்ணு நீ இருந்த. அதுவும் அவனுக்கு உன்னை புடிச்சு இருக்குன்னு சொன்னப்பா, எனக்கு தலையில இடி. விழுந்த மாதிரி இருந்துது. ஆனா, அடுத்த நிமிஷமே, நீ என்ன பத்தி அதாது உனக்கு நடந்ததை பத்தியும், தேடி புடிச்சு என்னை காப்பாத்தின அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னதயும் அரவிந்த் சொல்லும் போது எனக்கு எப்டி இருந்துச்சு தெரியுமா நிலானி!! ஏதாது மல மேல போய் நின்னு… என் நிலானி எனக்கு கிடைச்சுட்டா, அவ என்னை தான் விரும்புறன்னு சத்தம் போட்டு கத்தனும் போல இருந்துது. ஆனா, அரவிந்தை பாத்ததும் மனசு கனமாய்டுச்சு. அய்யோ இவனுக்கு வேற நிலானியை புடிச்சு போச்சே? எப்டி இவனுக்கு அவ என்னோட நிலானி. எனக்கு மட்டும் தான் சொந்தம்னு சொல்றதுன்னு குழம்பி தவிச்சுட்டு இருந்தேன். அதே சமயம் அரவிந்த் உன்னை பத்தி சொல்லும்போது எனக்கு புரிஞ்ச இன்னொரு விஷயம். உனக்கு என்மேல இருந்தது வெறும் நம்பிக்கையும், அன்பு மட்டும் தான் அது காதல் இல்லைன்னு, அதோட நீ கல்யாணம் பண்ணிக்காம இருக்க வேற ஏதோ காரணம் இருக்குற மாதிரி தோணுதுன்னு அரவிந்த் வேற சொன்னான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி அரவிந்த் கிட்ட பேசி. என் நிலையை அவனுக்கு புரியவைக்கிறதுனு யோசிக்கும் போது தான் கடவுள் புண்ணியம் அவனே உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண விருப்பமில்லனு கடைசி வர நிலா எனக்கு ஒரு நல்லா ஃப்ரண்ட்ட மட்டும் இருந்த போதும்னு சொன்னான் பாரு. அதுதான் என்னோட முழு வாழ்க்கையில பெஸ்ட் மொமெட். அதுக்கு பிறகு தான் நா உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்புறத அவன் கிட்ட சொன்னேன். ஃப்ரண்ட்ட நீ இருந்த போதும் நெனச்சவன். எனக்கு பொண்டாட்டிய, அவனுக்கு தங்கச்சிய வருவேன்னு தெரிஞ்சதும். அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். அப்றம் தேனு, தேவி சந்தியான்னு எல்லார் கிட்டயும் பேசி நம்ம கல்யாணம் நடந்தது” என்றவன் அவள் கைகளை அழுத்தி பிடித்து, “சத்தியமா நா உன்னை ஏமாத்தனும்னு எதையும் பண்ணலடி…” எனும்போதே அவன் குரல் கம்மி விட.

 

“நீ என்னை முழுசா புரிஞ்சுகிட்டு. உன் மனசுல என மேல காதல் வந்த பிறகு உன்கிட்ட உண்மையா சொல்லாம்னு தான் நெனச்சேன். அதான் ஒவ்வொரு நாளும் எப்ப டி உன் காதலை சொல்ல போறேன்னு உன்கிட்ட கெஞ்சிட்டு இருந்தேன். ஆனா, நீ பிடி கொடுக்கவே இல்ல. உன் கண்ணுல எனக்கு தெரிஞ்ச காதலை, வாயத் தொறந்து நீ சொல்லவே இல்ல,

ஆனா, அன்னைக்கு எனக்கு அலர்ஜி ஆன அப்ப நீ பதறிதுடிச்சதை பார்த்தப்பாவே எனக்கு புரிஞ்சு போச்சு, நீ என்ன எந்த அளவுக்கு நேசிக்கிறேன்னு…பட், என்னோட கெட்ட நேரம். எனக்கு புரிஞ்ச உன்னோட காதல் உனக்கு புரியவே இல்ல, அது தான் கொடுமை” என்று தலையில் அடித்துக்கொள்ள, 

 

‘இல்ல சூர்யா அன்னைக்கே எனக்கும் புரிஞ்சுபோச்சு. நீங்க தான் என் மனசுல இருக்கீங்க. நீங்க இல்லாம என்னால வாழமுடியாது.. நா உங்களை காதலிக்கிறேன்னு. அத சொல்ல உடனே உங்ககிட்ட ஓடி வந்தேன். ஆனா, சொல்ஷ முடியல. அதுக்கு அப்றம் உங்க பெத்டே அன்னைக்கு உங்களுக்கு சர்ப்ரைஸ்சா சொல்லணும்னு நெனச்சு நான் என்னை கட்டுப்படுத்திக்கிட்டேன். ஒருவேள அன்னைக்கே நா என்னோட காதலை உங்கிட்ட சொல்லியிருந்த இந்த பிரச்சனை எல்லாம் வராம இருந்திருக்குமோ என்னமோ?” என்று அன்றைய நாளை நினைத்து தனக்குள்ளேயே வருந்திக்கொண்டு இருந்தாள். ஆனால் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.

 

“நானும் முடிஞ்ச வரை உன் மனசை உனக்கு புரியவைக்க முயற்சி செஞ்சு பாத்தேன். ஆனா நீ என்னை விரும்பியும். கடைசி வரை அதை நீ ஒத்துக்கவே இல்லடி… சரி எப்ப உன்மனசு உனக்கு புரிஞ்சு நீயே உன் காதலை சொல்றீயே அப்ப தான் நா யாருன்னு உன்கிட்ட சொல்லனும்னு நானும் முடிவு பண்ணிட்டேன்.” என்றவனை நிலா கேள்வியாய் பார்க்க… அந்த பார்வையில் “ஏன்?” என்ற கேள்வியை உணர்ந்தவன். 

 

“எனக்கு நல்ல தெரியும்டி… உனக்கு என்மேல, ஐ மீன் உன்னை அன்னைக்கு காப்பாத்தின என் மேல எவ்வளவு மரியாதை, நம்பிக்கை, அன்பு இருக்குன்னு. ஏன் நீயே தேனுகிட்ட சொல்லி இருக்க, நமக்கு கல்யாணம் ஆகுறதுக்கு ஒரு நிமிஷம் முந்தி அவரை பாத்திருந்தா கூட நீ நம்ம கல்யாணத்தை நிறுத்திட்டு, அவர்கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்குங்கன்னு கேட்டிருப்பேன்னு. அப்டி இருக்கும்போது, நா தான் நீ தேடிட்டிருக்க ஆளுனு தெரிஞ்ச, நீ உன்னை அன்னைக்கு காப்பாத்தினேன்ற, ஒரே ஒரு காரணத்துக்காக என்ன கல்யாணம் செய்ய சம்மதிச்சு இருப்ப. அது எனக்கு புடிக்கலடி. அதான் நா உண்மையை மறச்சேன். எனக்கு என் நிலானியோட நம்பிக்கை, அன்பு மட்டும் போதாது… எனக்கு அவளோட காதல் வேணும்னு ஆசப்பட்டேன். நா உன்னை காப்பாத்தினேன்ற ஒரு காரணத்தை வச்சு. நீ என்னை விரும்புறதயோ, கல்யாணம் பண்ணிக்கிறதயோ நா விருப்பல.

 நீ என் நிலானி… என்னை, இந்த சூர்யாவ, சூர்யாவாவே நேசிக்கனும்னு ஆசப்பட்டேன். எங்க நா யாருன்னு தெரிஞ்ச உன்னோட காதல் எனக்கு கிடைக்காம போட்டுமோன்னு எனக்கு பயமா இருந்துச்சுடி.. அதான் நா உன்கிட்ட இந்த உண்மையை மறச்சேன். ஆனா, அதுவே உன்னை இந்த அளவு காயப்படுத்லும்னு சத்தியமா நா நெனைக்கலடி, சாரி… சாரிடி” என்று இயலாமையுடன் சூர்யாவின் வார்த்தைகள் வர. நிலாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அதே சமயம் சூர்யாவின் கலங்கி முகத்தை பார்க்கவும் முடியாமல் அங்கிருந்து செல்ல முயல, போகும் அவள் கைபிடித்து தடுத்து நிருத்தியவன். “ப்ளீஸ்டி… இப்டி அமைதியா இருக்காத. எனக்கு பயமா இருக்கு. என்கிட்ட பேசுடி. வேணும்ன நாலு அடி கூட அடிச்சுக்கோ. ஆனா, இப்டி பேசாம இருந்து என்ன கொல்லாதடி… என்னால தாங்க முடியல” 

என்று தவறு செய்த பிள்ளை, தாயிடம் மன்னிப்பு வேண்டுவது போல் கண்கள் கலங்கி நிற்க. நிலாவின் நிலைதான் மோசமானது. கண்களை இறுக்கி மூடி அவனிடம் பேச மறுக்கும் தன் உதடுகளுக்கு பற்களால் கடித்து தண்டித்தவள்.. தன் கரம் கொண்டு கணவன் தலைகோதியவள், ப்ளீஸ் சூர்யா எனக்கு இப்ப எப்டி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல. எனக்கு இப்ப கொஞ்சம் தனிமை வேணும். ப்ளீஸ் என்ன கொஞ்சம் தனியா விடுங்க” என்று கண்களை மூடியபடியே பேச, உடனே சூர்யா அவள் கையை விடுவிக்க, நிலா ரூமை விட்டு வெளியே செல்ல, வேதனையுடன் போகும் நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா. 

 

காலையில் சூர்யாவிடம் உண்மையை சொல்லி, அனைத்து பிரச்சனைகளையும் முடித்து. கணவனின் காதலில் முழ்கி திளைக்க அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தவள். இப்போது அவன் அருகே இருந்தும் விலகி சென்றுவிட்டாள்.