கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
அத்தியாயம் 9
மடியில் காதல் பலா….
இன்ப அவஸ்தையில் இளா……
நெளிந்து கொண்டிருந்தான்…
“சும்மா இருக்க மாட்டியா இளா….? எதுக்கு ஷேக் பன்ற…?” ஆராதான் அவன் நிலைமை தெரியாமல் திகிலூட்டினாள்…
“நான் எங்கடி ஷேக் பண்றேன்….. நீ தான் என்னை ஷேக் பண்ணிட்டு இருக்கடி லட்டு….”
“நானா…. ..? முன்னாடி பண்ணின டிசைனை வேற போல்டர்ல சேவ் பண்ணிட்டேன் போல …. என்னய உலுக்காம தேட விடறியா….?” கத்தினாள்.
ஒருதலைக் காதலில், மிக அருகில் காதலியின் மணம், இருதலை க்கொள்ளி எறும்பாய் இளாவின் மனம்.
“கத்தி காதை கிழிக்காத……நீ தேடுடி நான் ஒன்னும் பண்ணல…”
ஒரு நிமிடம் திரும்பி அவன் முகத்தை பார்த்து முறைத்தவள்… இன்னும் நன்றாக நகர்ந்து அவன் மடியில் அமர்ந்து கொண்டு….(வழுக்குதாம்) மீண்டும் லேப் டாப்பில் மூழ்கினாள்…
‘அய்யோ ஆரா…. உன் கூட போயி காதல் போரா….?இவ்வளோ இம்சையாடி நீ…..?’ அவன் அசையாமல் இருந்தாலும் ஒவ்வொரு செல்லில் நிரம்பியிருந்த காதல் துடித்து உடம்பெல்லாம் உதறியது…’நீ பக்கத்தில் இருக்கும் போது , பில்டிங் ஸ்ட்ராங்கா இருந்தாலும். , பேஸ்மெண்ட் ரொம்ப வீக்கா இருக்குதே டி…’. , ஆரா வின் கூந்தல் அலையலையாய் முகத்தில் கோலமிட…. இளாவின் இளமை இம்சிக்க ஆரம்பித்தது… ‘நீயுமா…….போ காதுக்கு பின்னாடி,’ கற்றை முடியுடன் காதல் செய்து கொண்டிருந்தான்…. ஆராவை போலவே ஒதுக்கிவிட்டாலும் அடங்கமாட்டேன் என அடம்பிடித்தது .
மீண்டும் முகத்தில் அவள் கேசம்… …. இம்முறை நுகர்ந்தவன்…பெண்களோட கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டு நக்கீரரே. மனதிற்குள் திருவிளையாடல் ஸ்கிரிப்ட் டிற்குள் புகுந்தவன் …, அங்கிருந்து அப்படியே யூ டர்ன் அடித்தது அவன் மனம்.. கொஞ்சம் கொஞ்சமாக பயணப்பட்டு…,. தன்னை மறந்து காதல் டாஸ் மாக்கில் , நுழைந்து விட்டான் ..(காதல் போதையப்பா ) சாவதானமாக ஒரு கையால் ஆராவின் இடையை வளைத்து பிடித்து ,( ஒரு கிரிப்பிர்க்காக மட்டுமே ) பின்னங் கழுத்தில் இருந்த கூந்தலை வருடி சரி செய்யும் வேலையில் மும்மரமாக இறங்கி விட்டான்…
வருடலில் கலந்திருந்த காதலோ , இடையை வளைத்திருந்த கைகளில் இருந்த உரிமை உணர்வோ …. ஆராவின் பிடரியில் குறு குறுக்க செய்தது…
‘என்ன பண்ற இளா….?’ கேட்க வாயெடுத்தவள்…தேவர் மகன் ரேவதி போல….வெறும் காத்து தான் வந்தது…….(ஆராவின் பெண்மை அவள் ஸ்பீக்கரை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டது)
“இ……………..ளா…..!” ,( பேசிட்டா……)
“ம்……………., “
அவன் பிரச்சினை அவனுக்கு…
மிக நீளமான பதில் வந்தது.
“என்ன பண்றே…….?”
“பார்த்தா தெரியலை முடிய ஒதுக்கி விடறேன்….”
“எனக்கு என்னவோ போல இருக்கு…..”
“எப்படி இருக்கு…”
“இன்னைக்கு ஈவ்னிங் லயிருந்து பார்க்கிறேன்.. ஏன் இப்படி இருக்க …..?”
“எப்படி இருக்கேன்…..?”
“தெரியலையே….., உன் கிட்ட என்னமோ புதுசா இருக்குடா…? உன் கண்ணு என்கிட்ட என்னமோ சொல்ற மாதிரி இருக்கே….?”
என்ன சொல்லுது…..?
(இளாவிற்கு காதல் செய்யும் வேலை கண்ணை கட்டும் அளவு இருந்ததால்.., மணிரத்னம் பட ஹீரோவை பொல் ஒன் வேர்டில் கன்னா பின்னாவென்று பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை மிகுந்த பெருமிதத்தோடு இங்கே பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன்….)
“அதான் தெரியலையே…..விடமாட்டேன்….இரு பார்த்திட்டு சொல்றேன்……“ ( ஆராவின் ஆறாம் அறிவு தூண்டியதில் தீயாய் வேலை செய்ய ஆரம்பித்தாள்..)
அமர்ந்திருந்த நிலையிலேயே திரும்பி ..,( லட்டு பாவம்ப்பா அவன்….. விட்டுடு… அவன் இந்த காதல் ஏரியாக்கு புதுசு..)…. அவன் கண்களை உற்று நோக்க ஆரம்பித்தாள்… இளா இப்போது ஆராவின் விழிகளோடு தன் விழிகளை மையலாக கலக்க….. நம்ம ஆளு தான் காந்த கண்ணழகனாச்சே விழியீர்ப்பு விசையால் ஆராவின் இதயத்திற்குள் ஊடுருவி கொண்டிருந்தான் ….இப்போது ஆராதான் தன் விழிகளை …, மீட்க போராடி கொண்டிருந்தாள்…. ஆராவின் மனம் அவன் விழிகளுக்கு உள்ளே போகாதே.., தடை செய்து கொண்டிருந்தது…..
(அடேய்…. இவன் ஸ்டிரா போட்டு அவளை உள்ள இழுக்குறான் போல இருக்கே…..)
“இப்ப சொல்லு …..என் கண்ணு என்ன சொல்லுது….?” இவ்வளவு மயக்கத்திலும் உஷாராக அவனுக்கு தேவையான கேள்வி வந்தது.
“கண்ணா……..?”
“ ம்……என் கண்ணுக்குள்ள ஏதோ கண்டுபிடிக்கிறென்னு போனியே அதான்…?”
“உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு….என்ன நீ ஹிப்னாடயஸ் எதுவும் பன்றீயா….? பிளீஸ் கண்ணை மூடிக்கோ இளா…, என்னால பார்க்க முடியலை….. முழுங்குற மாதிரி பார்க்கிற…? நான் உள்ள போயிடுவேன் போல…. என்ன தான் சொல்ல நினைக்கிற வாயாலேயே சொல்லிடு…. உன் கண்மணிக்குள்ள நான் மட்டும்தான் தெரியுறேன்…” விழிகளை அவனிடமிருந்து அகற்றாமலேயே தோன்றியதை எல்லாம் பதிலாக உளறினாள் ஆரா…..
கள்ள சிரிப்புடன்…, ஒரு வினாடி கண்களை மூடி நிதானித்தவன்…,
“எனக்கு உன்கிட்ட நிறைய பேசணும் ஆரா…. அத்தனையும் சொல்லிடட்டா…?”
“என்கிட்ட…………நீ என்ன சொல்லணும் இளா………?”
ரகசியம் பேசியது ஆராவின் குரல்…
பதிலளித்தவனின் குரல் இன்னும் ரகசியமாக…,. மிதமான கரகரப்புடன்….., போதையுடன் ஒலித்தது……
“ இத்தனை வருஷமா…., நீ தான் என்னோட பொக்கிஷம்…என் கண்ணின் மணி …. அப்படித்தான் பத்திரப்படுத்தி வச்சிருந்தேன் உன்னை…. கண்ணுக்குள்ள இருந்த நீ இப்போ என் மனசு முழுக்க நிறைஞ்சிட்ட ஆரா…… அதை நான் உணர்ந்த நிமிஷத்துல இருந்து…. என் உடம்புல இருக்குற ஒவ்வொரு அணுவும் உனக்கு, என் மனசை உணர்த்திடணும்ன்னு துடிக்குதுடி…..உன் நினைப்பு வெறும் பாசம் …., மட்டுமேன்னு வாழ்ந்த இளமாறன் இல்லை நான்….நெஞ்சு முழுக்க புகுந்து என் உடம்பு முழுசும் பரவி…..உன் நினைப்பால நிரம்பி வழியிறேன்டி நான் ……”
நிதானித்தான் ஒரு நிமிடம்….இளாவின் மனதிற்குள்…, இதற்கு அப்புறம் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையுமா…? என்னைக்கு இருந்தாலும் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளத்தான் வேண்டும்..இன்றே அனைத்தையும் கொட்டி விடலாம்… முடிவு அவளது கையில்…. பெருமூச்சுடன் மேலே தொடர்ந்தான்….
“நான் நேரடியா சொல்றேன்…..”
“என் கண்மணி ஆரா ……. என் உயிரை விட அதிகமா பொத்தி வச்சி பார்த்துப்பேன்டா உன்னை……எந்த இடத்திலயும் உன்னை, உன் தன்மானத்தை , சுயமரியாதையை விட்டு தராமல் , என்னில் பாதியா நடத்துவேன்டா…. இதுவரை என் கூட மட்டும் இருந்த நீ……பிளீஸ் இனிமே எனக்குள்ள வந்திருடி…… …….” இறுக அணைத்து கொண்டான்.
உணர்வு கொந்தளிப்புடன் காதலை, வார்த்தைகளில் விவரித்தவன் மேலே தொடர முடியாமல் ஆராவை இழுத்து தன்னுள் புதைத்து கொண்டான். இளாவின் அணைப்பு…, அவன் காதலை போலவே மிக ஆழமாக இருந்தது. அவள் கண்ணீர் அவன் காதலை விட பாரமாய் நெஞ்சை கனக்க வைத்தது…. தாங்க முடியாதவனாய்….
ஆராவிற்க்குள்…. அதிர்ச்சி,ஆனந்தம் ,குழப்பம் ,பயம், தவிப்பு….என அனைத்து உணர்வுகளும் சுழன்றடித்தது…..
அனைத்தையும் உரியவளிடம் சேர்பித்த பிறகு மனம் லேசாக…, அணைப்பிற்க்கு அதிகமாய் எந்த பிரயத்தனமும் செய்யாமல்…..கண்ணியத்துடன் காதலை மட்டுமே கரைபுரள விட்டிருந்தான் இளா…. ஒரு வழியாய் மீண்டவன் , ஆராவை விட்டு விலக….. மீளாப் பார்வை இப்போது அவளிடம்….. அவளை மடியிலிருந்து எழுப்பியனை இன்னும் தொடர்ந்தது பார்வை….. விழிகளை விரித்து பார்த்திருந்தவளை சேரில் மீண்டும் அமரவைத்து விட்டு….சென்று கட்டிலில் அமர்ந்தான்…
சிமிட்டாமல் விழி விரித்திருந்தாள்…அவள் பார்வையின் அர்த்தம் புரியாமல், இவன் புருவங்களை உயர்த்தி கேள்வியாய் நோக்க…. கையிலிருந்த லேப் டாப் பை சேர்ரில் வைத்தவள்…… ஓடி வந்து இளாவின் மேல் விழுந்து பிரண்டாள்….
“என்னடி….?”
“ஏண்டா இப்படி பண்ணின…..? என் மனசு முழுக்க பாரமா இருக்கு….. தொண்டையெல்லாம் அடைக்குது.”
“மேடம் என்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு எல்லார்க்கும் முன்னாடி சொன்னிங்க….. அதை நம்பி என் மனச உன்கிட்ட சொன்னா…..? இப்ப என்ன ஆச்சு என் லட்டுக்கு…?”
“தெரியலடா…. எனக்கு கஷ்டமா இருக்கு….. அண்ணா அண்ணி கூடவே இருக்கிறது போல…, நீ என்கூடவே எப்போதும் இருப்பன்னு நினைச்சு மட்டும்தான்….. கல்யாணம் பண்ணிக்கிறேண்ணு சொன்னேன்….. இப்ப நீ என் மேல இவ்வளோ லவ் வச்சிருக்கன்னு சொல்ற…..?”
“ஆமாண்டி உன் மேல காதல் எக்கச்சக்கமா வச்சிருக்கேன்…. அதனால் என்ன….?”
“தெரியல. ஏன்னா என்கிட்ட , உன்கிட்ட இருக்கிறது போல உனக்கு தர எதுவும் இல்லையே இளா .? கல்யாணம் ரொம்ப ஈஸி இல்லையோ…? எனக்கு கஷ்டமா இருக்கு… பயம்மாவும் இருக்குடா.”
என்றவள் தேம்பியபடி அவன் நெஞ்சிலயே படுத்து அழ ஆரம்பித்தாள்….. இதுதானே ஆரா..,அவளது அனைத்து வலிகளுக்கும் இளா மட்டும்தான் மருந்து…. அவனே காயப்படுத்தினாலும் கூட….
அவசரப்பட்டு…, மனசை கொட்டி அவளை துன்புறுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வு தலை தூக்க……
“சரி…, நான் கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு….,”
சுமூகமாக சரி செய்யும் முயற்சியில் இறங்கினான்…
“என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு உன் ஆழ் மனசில இருந்து சம்மதமா…? பொறுமையா நிதானமா யோசிச்சு சொல்லுடா…. மத்தபடி நான் பேசினதை எல்லாம் விடு… உன்னை கல்யாணம் பண்ணி தான் உன் மேல அன்பு செலுத்தனும்னு இல்லை…நான் எப்போதும் உன் இளாதான்… இப்ப உனக்கு மட்டுமேயான இளா…. அவ்வளவு தான் வித்தியாசம் லட்டு…ம்…..சரியா…?”
“ம்………”ஆராவிடம் விசும்பல் குறைந்த பாடில்லை…
இன்னும் அதிகமாய் அணைத்து கொண்டு அழ ஆரம்பித்தாள்….
“சாரி டா… …… உன் மனசை நானே ரொம்ப காயப்படுத்திடேனே லட்டு…. நீ எதையும் யோசிக்காத…. நான் பேசினதை தயவு பண்ணி மறந்திடுமா…..நமக்குள்ள காதல்.., கல்யாணம்…, எதுவும் வேணாம்டா….. என் பழைய ஆராவா என் கூடவே இரு…அதுவே போதும் எனக்கு….” முடித்தவனின் குரலில் வலி இருந்ததோ…. அவள் கண்ணீர் அவன் காதலை விட பாரமாய் நெஞ்சை கனக்க வைத்தது…. தாங்க முடியாதவனாய்….
அவன் விழிகளிலிலும் கலங்கி சொட்டு கண்ணீர்…… அவன் அணைப்பில் அழுது கரைந்து கொண்டிருந்த ஆராவை எட்டியது…. நிமிர்ந்து அவன் கண்ணீரை கண்டதும் அதிர்ந்து இயல்பிற்கு வந்தாள்….இத்தனை வருடங்களாக ஒருவரை ஒருவர் தேற்றி கொண்டு வாழ்ந்தவர்கள் அல்லவா…..கண்ணை துடைத்து கொண்டு…..
“அழாத இளா……… இப்ப என்ன வேணும் உனக்கு…..? நாம கல்யாணம் பண்ணிக்கலாம்…… எனக்கும் உன்னை போல லவ் பண்ண கத்து கொடு…ம்ம்.. சரியா….?”
குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து சமாதானப் படுத்தும் தொனியில் கேட்டவளை , பார்த்ததும் இளாவின் முகத்தில் புன்னகை அரும்பியது….
சிரிப்புடன்….. “நீ ஒன்னும் அவ்வளோ கஷ்டப்பட்டு என்னை கல்யாணம் எல்லாம் பண்ணிக்க வேணாம்….?. சிரிச்ச முகத்தோடயே இரு…. அழுதா ரொம்ப கேவலமா இருக்கிற….பார்க்க சகிக்கல……”
“ரொம்ப கேவலமாக வா இருந்திச்சி என் அழுகாச்சி….? ஆனாலும் உன் அளவு மட்டமா இருந்திருக்காது …. அண்ட் ஐ ஆம் டேம் ஷ்யூர்….” ரொம்ப சீரியஸாக கலாய்த்தாள் ஆரா…
அவளின் கேலியை புரிந்தவன்…,
“நான் உனக்கு மட்டமா தெரிஞ்சேனா…?”
அவளை கீழே பிடித்து தள்ளி …, குமுற தொடங்கினான்…. ஆரா தான் ஹெவி வெயிட் சாம்பியன் ஆச்சே….விட்டு கொடுக்காமல் எகிறி அடித்து கொண்டிருந்தாள்…. இவர்கள் எப்போதும் இப்படித்தான் …சண்டைன்னு வந்துட்டா சம்பவத்தில் இறங்கி விடுவார்கள்…ஒரு அமுக்கு…. அப்படியே ஒரு குமுக்கு….என ரூம் முழுவதும் உருண்டவர்களுக்கு…, வாய், கை, கால் என அவ்வப்போது பேசும்….ஆனால் இருவர் மனமும் பேசிக்கொண்ட இந்த நாள் புதிது, சூழ்நிலையும் புதிது…..
“சாப்பாடு ரெடி கொட்டிக்க வாங்க பக்கீஸ்…..” கூப்பாட்டோடு வந்த கிருஷ்…, அப்படியே ஷாக் ஆயி நின்னுட்டான்….
காதலோட கட்டி பிடிச்சு உருளுங்க….. அத்து விட்டு கூட்டி வரேன்னு ஏகப்பட்ட பில்ட்அப்பை வெளியில் கொடுத்துட்டு உள்ள வந்தா……,
“ கருமம்… கருமம் பன்னி குட்டிங்க சேத்துல பிறல்ற கணக்கா ரூம் ஃபுல்லா உருளுதுங்க பாரு…”..தலையில் அடித்து கொண்டான்…
கட்டி புரண்டு சண்டை போட்டு கொண்டிருந்த இருவரையும் கண்டதில் கடுப்பான கிருஷ்…
“ச்சை….. எருமைங்களா …. சண்டையை நிப்பாட்டுங்க…..”
இளாவும் , ஆராவும் திரு திருவென முழித்தபடி எழுந்து நிற்க……
“டேய் இளா ………,அறிவில்ல உனக்கு…. எருமைகிடா வயசாகுது இன்னும் … இந்த எருமை கன்னு குட்டி கூட சண்டையை போட்டுகிட்டு உருல்ற….”
கையில் அகப்பட்ட டவலை எடுத்து இளாவினை கிருஷ் ரெண்டு அடி வைத்தான்…
“டேய் கிருஷ் அண்ணா..,எதுக்குடா என் இளா வை அடிக்கிற……?”
“என்னது …டேய்…,… யா…..? வயசில பெரியவன்னு மரியாதை இருக்கா…..? வாடா… போடான்னே… வாயை தச்சிடுவேன்டி…”.. அவளையும் துண்டாலயே முதுகில் ரெண்டு வைத்தான் கிருஷ்….
ஆரா ரூமுக்கு வெளியே ஓடி .., வேதாவை அரணாய் கட்டிக் கொண்டாள்…
“பாருங்க …மாதாஜி கிருஷ் அண்ணன் என்னை அடிக்க வரான்.”
ஆரா கோபமாக இருக்குமபட்சத்தில் மானே… தேனே …மாதிரி…, வாடா போடா… எல்லாம் இடையில் வாயில் வரும்… வேதா அவரது செல்ல லட்டுவை கண்டுகொள்ள மாட்டார்..மாறாக அவ வாடா போடான்னு கூப்பிடற அளவுக்கு என்ன பண்ணின என்று கிருஷிர்க்கு தான் பாட்டு விழும்…
வேதாவிடம் எஃபெக்ட் கம்மியாக இருக்கவும்,
“ என்னை மட்டும் அடிக்கல மாதா ஜி இளாவையும் அடிச்சான்… “
வஞ்சனையின்றி போட்டு கொடுத்தாள்…
“ஏன் ரெண்டு பேரையும் அடிச்சான்….?” அவள்
எதிர் பார்த்த ரிசல்ட்… வேதாவிடம் இருந்து….
நாங்க ரெண்டு பேரும் கட்டி புடிச்சு கீழே உருண்டோமா…? அதைப் பார்த்து…, நாங்க மட்டும் சந்தோஷமா இருக்கொம்னு பொறாமைபட்டு தீவிரவாத தாக்குதல் நடத்திட்டான் மாதாஜி….”
“டவலால தானடி சாத்தினேன்… அதுக்கு டயம் பாம் வச்ச கணக்கா என்னா பில்ட் அப்பு… தர…” சுத்தி சுத்தி வந்து துண்டாலயே அவளை அடிக்க,
அவளைக் காப்பாத்த வந்த இளாவையும் அடிக்க,
“டேய் அண்ணா, திரும்ப திரும்ப ஏன்டா பொறாமையில் அடிக்குற வேணும்னா , அண்ணியோட நீயும் பன்னியா உருளு, நானும் இளா வும் கேட்கவே மாட்டோம்.”
கடுப்பில் துண்டை விட்டெறிந்து விட்டு, இளாவை முறைத்து விட்டு நகர்ந்தான்.
வேதாவிற்கு சிரிப்பு பீறிட…, ரோஜாவிற்கோ வெட்கம்…., சமாளித்து கொண்டாள்.
அதற்குள் கிருஷ் கோபமாக முன்னே நடந்து வர…, இளா பின்னே வந்தான்… ரோஜா சக்ஸஸ்ஸா…? என்று கட்டை விரலை உயர்த்தி, இளாவிடம் கேட்டாள்….
கிருஷ் அவளிடம்….,
“என்ன உன் அண்ணன் சந்திரயான் ராக்கெட்டை நிலாவுக்கு விட்டுட்டு நேரா இங்க வரானா….? அப்படியே பெருமை கொப்புளிக்குது உன் மூஞ்சில…..?அதுக ரெண்டும் சண்டையில கட்டி புடிச்சு உருண்டுட்டு இருக்குதுங்க…. கடுப்பேத்தாதடி…..”
“அய்ய…..அதுக்கு எதுக்கு நீங்க இஞ்சி தின்ன குரங்கு போல வச்சிருக்கீங்க உங்க மூஞ்சிய….? அரியர் வைக்கிறவங்க அடுத்த அட்டெம்ட்டுல பாஸ் ஆகறது இல்லை….? அது போல எங்க அண்ணன் பாஸ் ஆவார்….” ரோஜாவின் குரலில் அப்படி ஒரு பெருமை…
“எருமைய வச்சி ஏர் ஓட்ட முடியும்….. பன்னிய வச்சி கார் ஓட்ட முடியுமா…..?”
“ஆ…….ஊன்னா…… ஆயா கணக்கா எதாவது…, இல்லாத கதையெல்லாம் பேசுங்க….. வெளங்காத வெட்டி கதை பேசரத விட்டுட்டு , போயி என் அண்ணனையும் ஆராவையும் கோர்த்து விடற வேலைய பாருங்க…”
“ஏண்டி… நடக்குற விஷயமா பேசுடி…. ரெண்டும் சேர்றதுக்கு நாள் கணக்கோ.., மாச கணக்கோ ஆகும்னு நினைச்சியா….? வருஷ கணக்காகும்டி…”
“பத்து பன்னிரெண்டு வருஷம் ஆனாலும் பரவாயில்ல இருந்து பக்காவா வேலைய பார்த்திட்டு வாங்க … இங்க சீக்கிரம் வந்து , ஒண்ணும் நீங்க கிழிக்க போறது இல்லை…”
“மாமா வேலை பார்க்குறதையே ஒரு மாமாங்கமா பார்க்கணும் நானு ..,அதானேடி உன் பிளானு….”
“………க்கும் …”.. நொடித்துக்கொண்டு… உள்ளேயே போய்விட்டாள்….
“ஆனா ஒன்னு மட்டும் தெரியுது… இந்த ரெண்டு கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வச்சாதான் நம்ம வீட்ல நம்மளுக்கு மரியாதை….. இல்லைன்னா ஒரு நாய் கூட மதிக்காது….”
‘கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வச்சா மழை தானே பெய்யும்…, மரியாதை எப்படி கிடைக்கும்….?’ இடையில் கிருஷ்ஷின் டியூப் லைட் பிளிங்க் ஆகி கொண்டிருக்கவும்..…
“எதுக்குடா மந்தி குரங்கு மாதிரி வழியில நின்னுகிட்டு குறு குறுண்ணு பார்க்குற….”
வேதா தான் ஓரமாய் நின்னவனை வாலண்டியராக வம்பு வளர்த்தார்…(எபி முழுக்க இன்னைக்கு ஒரே அனிமல்ஸ் நேம் தான்…. ஸூ டே ஸ்பெஷல்….)
“இந்த தாய்கிழவி டார்ச்சர் தாங்க முடியலடா சாமி….அப்பப்ப காமெடி பண்றேன் பேர்வழின்னு காண்டாக்குது…”
கிருஷ் வேதாவை முறைத்தான்.. வாஸ்துபடி அந்த வீட்டில் கிருஷின் வாய் , அமைதியாக இருந்தால் இப்படி வம்பு வழக்குகள் தானா அவனை தேடி வர்றது சகஜம்…..
அதற்குள் சாப்பாட்டை கொட்டிக்க அனைவரும் டைன்னிங் டேபிளில் ஆஜராக , கிருஷ்ஷும் வந்தமர்ந்தான்….
ஆராவிர்க்கு செல்போனில் அழைப்பு வந்தது…,….
போனை அட்டெண்ட் செய்தவள்,..,
“சொல்லு சீமா.”, ஆராவின் அழைப்பில்,
அனைவரும் ஃபிரீஸ் ஆயினர்….