கனவு 17

அத்தியாயம்-17

விக்னேஷ் இழுத்துச் சென்று கதவைப் பூட்டும் சத்தம் கேட்டு மதி தினைத்து கதவைத் தட்டச் செல்ல “மதி….” என்று தன் கணவன் ஜீவாவின் குரலில்
திரும்பினாள்.. அவனோ வலமும் இடமும் தலையை ஆட்டி “விடு.. அவன் பேசுனா
தான் இவ சரிப்பட்டு வருவா” என்று அழுத்தமானக் குரலில் முடிக்க கணவனின் பேச்சை மீறாமல் இருவரும் ஹாலில் இருந்த சோபாவில்
உட்கார்ந்தனர்.

உள்ளே இழுத்துச் சென்றவன் அவளைத் தள்ளி கதவைத் தாழிட்டுத் திரும்ப “கதவைத் திற” என்று கௌசி கோபமாகச்
சொன்னாள்… அவ்வளவு தான் அவனது கோபம் பொறுமை எல்லாம் பறந்தது. ஒரே அறையாக அறைந்து விட்டான்.

அவன் அறைந்த திகைப்பில் அவனைப் அவள் ஏறிட்டுப் பார்க்க.. “ஏய்.. யாரடி சுயநலவாதின்னு சொன்ன மாமாவையா.. அவரா சுயநலவாதி உன் மனசாட்சியத்
தொட்டு சொல்லு” என்று உறுமியவனைப் பார்க்க கௌசிக்கு பயம் வந்தது
உண்மைதான்.

பயத்தில் உறைந்து நின்றவளின் தோளை அருகில் பற்றி இழுத்தவன் “உன்னப் போய் கேட்கிறேன் பார்.. அதுசரி உனக்குல்லாம் மனசாட்சி இருக்கும்ன்னு
நினைச்ச நான் ஒரு மடையன்.. ஆனா சொல்றேன் கேட்குக்க.. மாமா ஒன்னும் சுயநலவாதி இல்ல.. நீதான் சுயநலவாதி..
நீதான் இந்த உலகத்திலேயே
சுயநலவாதி” என்று கத்த கௌசிக்கும் கோபம் வந்தது.

“யாரு நானா? ஏன்டா ஓடினவ..
ஓடினவன்னு சொல்றியே.. உங்க எல்லாரோட சுயநலம் தான்டா என்னைய ஓட வச்சுது.. இப்போ கூட எல்லாரும்
சுயநலமா தான் பிகேவ் பண்றீங்க.. இதே அந்த நான்சி இந்நேரம் உன்னுடன்
இருந்திருந்தா நீயெல்லாம் என்ன மனுசியாவே மதிச்சிருக்க மாட்டே” என்று
பொறிந்து தள்ளினாள்.

“ஓஹோ… நீ நல்லா இருக்கனும்-ன்னு
நினைச்ச நாங்க எல்லாம்
சுயநலவாதியா.. ரைட்ரா.. அப்புறம் என்ன எல்லாம் வச்சிருக்க அதையும் சொல்லு”
என்றான் நக்கலாக.

“உனக்கு எல்லாம் எகத்தாளமாகத் தான் இருக்கம்.. அடுத்தவங்க சூழ்நிலைல இருந்து பாத்தா உங்க எல்லாருக்குமே புரியும்” என்றாள் எங்கோ பார்த்தபடி.

“மாமா இப்படி அவரு சூழ்நிலையை மட்டும் உன்னை மாதிரி நினைச்சிருந்தா.. நீ இந்நேரம் இப்படி பேசியிருக்க மாட்டேடி” என்று அழுத்தமாகச் சொன்னவனைக் கௌசி பார்வையை விலக்காமல் நோக்க அதுதான் சான்ஸ் என்று அவன் மடை திறந்த வெள்ளமானான்.

“என்னப் பாக்கற.. எதையுமே யோசிக்க மாட்டையா நீ எல்லாம்.. ஏன்டி.. அத்தை
இறந்த அப்புறம் நீ பச்சக் குழந்தை.. அவருக்கு அப்போ 33 வயசு.. அந்த வயசுல தான் ஒரு ஆம்பிளைக்கு எல்லா
ஃபீலிங்சும் அதிகமா இருக்கும் தெரியுமா.. அவரு நினைச்சிருந்தா இன்னொரு
கல்யாணம்பண்ணியிருக்கலாம்.. இல்லைனா வேற மாதிரி பொம்பளைங்க கிட்ட போறானுகள அவங்ககிட்ட கூட
போயிருக்கலாம்.. அந்த வயசுல தன்னோட எல்லா சந்தோஷத்தையும்
அடக்கிட்டு.. அத்தை போன
சோகத்தையும்.. உன்ன பாத்துக்க தெரியாம தவிச்சு தவிப்பையும் உனக்குலாம் தெரியுமா டி.. நாலு வயசுல
இருந்த எனக்கு இன்னும் அதெல்லாம் கொஞ்சம் நியாபகம் இருக்கு.. எனக்கு
தெரிஞ்சு இப்போ வரைக்கும் அவரு மனசுல இருக்கிறது அத்தையைத் தான். அவரு மனசாலையும் உடலாலையும்
தொட்ட முதல் பொண்ணும் கடைசி பொண்ணு அத்தை தான்.. மனசாலயும்
உடலாலையும் சுமந்த பொண்ணு நீ தான். அவர உன்னால புரிஞ்சுக்க முடியலைல.. கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் என்ன
சந்தோஷமாவே இருந்தாரு.. என் அம்மா பெரியம்மான்னு சந்தோஷமா சுத்தித் திரிய வேண்டிய வயசுலையும் எல்லா
கஷ்டத்தையும் சுமந்து எல்லாத்தையும் கரை சேத்தி.. இதெல்லாம் நினைச்சு பாத்தா அந்த மனுஷனை நினைக்க
எனக்கே பாவமா இருக்கு.. நான் புரிஞ்சுகிட்ட அளவுக்குக் கூட உன்னால புரிஞ்சிக்க முடியலையா கௌசி..” என்று
நீளமாகப் பேசியவனைக் கண்
இமைக்காமல் பார்த்தாள். அவன் பேசிய ஒவ்வொன்றும் உண்மைதான் என்று
அவளுக்கும் தெரியும்.

“இங்க பாரு கௌசி.. உனக்கும் எனக்கும் கல்யாணம்.. நீ ஒத்துக்கிட்டு தான் ஆகணும்” – விக்னேஷ் அழுத்தமாக.

“ச்சி அசிங்கமா பேசாதே…” படபடத்தவள் “எ..என..எனக்கு.. கல்யாணம் ஒன்னு தான் குறைச்சல்..” என்றாள்
முணுமுணுப்பாக.

“அசிங்கமா பேசறானா” என்று விழித்த விக்னேஷ் “ஏய் நான் என்னடி அசிங்கமா பேசறேன்” என்று சீறினான்.

“பின்ன.. நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ.. என்கிட்ட வந்து கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்ற..”

“ஆமா நீ கல்யாணம் பண்ணி வாழ்ந்தது ஒரு வாழ்க்கையாடி.. நாலே நாள் வாழ்ந்தது எல்லாம் கல்யாணமா டி.. கோவத்தக் கிளறாதே..”

“நாளு நாளோ.. நாலு வருசமோ.. என்னால எதையும் மறந்துட்டு நார்மலா இருக்க முடியாதுடா…”

“குருவை நீ இன்னும் மறக்கலையா?” என்ற விக்னேஷின் கேள்வியில்
கௌசிக்கு வாந்தி வராதா குறைதான்.. அவனை எப்போது அவள் நினைத்தால்
மறப்பதற்கு.. அவனை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாளோ என்று
விக்னேஷின் மனம் சோர்ந்தது.

அவன் கேட்ட கேள்விக்கு பதில்
அளிக்காதவள் “இங்க பாரு… சில விஷயத்தை நீயா தான் புரிஞ்சுக்கனும்..” என்றாள் மறைமுகமாக.

“சொன்னாதானடி புரியும்”

தலையில் அடித்தவள் “பசங்களுக்குத் தனக்கு வர பொண்டாட்டி..” என்று
நிறுத்தியவள் அவனிடம் எப்படி எந்த வார்த்தைகளை பயன்படுத்தி புரிய வைப்பது என்று யோசித்தாள்.

“ம்ம் தனக்கு வர பொண்டாட்டி?” – விக்னேஷ் புருவ முடிச்சுடன்.

யோசித்தவள் பின் “தனக்கு வரப் பொண்டாட்டி.. விர்ஜினா இருக்கனும்னு நினைப்பாங்க.. அது எல்லாருக்கு நேச்சரும் கூட.. சோ அதான் சொல்றேன்”
என்றாள்.

அமைதியாக இருந்தவனை ஏறிட்டுப் பார்க்க விக்னேஷின் கண்களோ கோபத்தில் பளபளத்தது. “ஏய் என்னை
என்ன அவ்வளவு சீப்பானவன்னு நினைச்சிட்டயா டி.. ஏன்டி நான் என்ன 15 வயது பையனா இது எதுவும் தெரியாமல் நிற்க.. இங்க பாரு இதெல்லாம் நான்
எதுவும் நினைச்சு யோசிச்சுக் கூடப் பாக்கல டி.. நீயா சொன்னதுக்கு அப்புறம்
தான் இதெல்லாம் என் மைன்ட்ல வருது..”

“இல்லடா.. நான் உன் வாழ்க்கையில் வந்தால்.. நான் உன்கூட சந்தோஷமா வாழ முடியாது.. நீயும் சந்தோஷமா
இருக்க முடியாது.. சொல்றத
புரிஞ்சிக்கோ.. ஏன்டா என்ன ஓப்பனா எல்லாம் சொல்ல வெக்கற” என்று முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

“முடியாதுன்னு மனசுல வச்சிட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கீல நீ” விக்னேஷ்
கோபமாக.

“இல்லடா.. நீ வேற நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்க”

“எனக்கு என் மாமன் பொண்ணு தான் நல்ல பொண்ணு.. அதுவும் இல்லாம என் வாழ்க்கையில அடுத்தவள சொருகுற வேலை எல்லாம் பாக்காத நீ” குறுஞ்சிரிப்புடன்.

“டேய் மரமண்ட.. உனக்கு சொல்றது புரியுதா இல்லையா.. எந்த ஒரு
ஆம்பிளையும் தன் பொண்டாட்டிக்கு அவன் தான் எல்லாம் சொல்லித் தரனும்னு நினைப்பான்” என்று கத்த
விக்னேஷ் சாதரணமாக அதே சிரிப்புடன் நின்றிருந்தான்.. காரணம் மறுத்தாலே தவிர குருவை நான் மறக்கவில்லை
என்று அவள் சொல்லவே இல்லை. ஏன் குருவை நியாபகப்படுத்திய போது கூட
அவள் அழவில்லை. அவன் கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்பதற்காகவே அழுகிறாள். அவன் காதல் கொண்ட மனது அவளை இந்த முறை இழக்க
விரும்பவில்லை.. அவள் சொன்னக் காரணத்தை அவன் கடுகு அளவிற்கும்
பொருட்படுத்தவில்லை. அவளை ஒரு தடவை பிரிந்து அனுபவித்த வேதனைகளே போதும் என்று நினைத்தான்.

அவள் காதின் அருகில் குனிந்தவன் “ஓ.. நீ அப்படி சொல்ல வரீயா… பரவால
கௌசி.. எனக்கு எதுவும் தெரியாது.. நீ எனக்கு சொல்லித்தா…” என்று ஹஸ்கி
வாய்சில் சொல்ல.. திகைத்து நின்றவள் அருகில் இருந்த அவனைப் பிடித்துத் தள்ளி விட்டாள்.

“ச்சை… கருமம்.. நான் என்ன சொல்றேன் நீ என்னடா பேசறே” என்று முறைத்தவள்
“ஆமாம் +2 படிக்கும் போதே லேப்டாப்ல அந்த மாதிரி படம் வச்சிருந்தவனுக்கு நான் சொல்லித் தரனுமாம்.. ஹேர்ருரு..” என்று முணுமுணுத்தாள்.

“ஏய்.. உனக்கு எப்படித் தெரியும் என் லேப்ல இருந்தது. அப்போ நீ பாத்திருக்க? ஹம்” என்று கையைக் கட்டிக் கொண்டு
விசாரணை செய்ய கௌசிக்கு முகம் எல்லாம் சிவந்து விட்டது. அதை மறைக்க முயற்சிக்க விக்னேஷ் அதைக் கண்டும்
கொண்டான்.

“விளையாடுனது போதும் விக்கா.. உனக்குப் புரியதா.. இல்ல புரியாத மாதிரி
நடிக்கிறயா.. என்னால முடியாதுடா”

“போதும் நிறுத்து கௌசி… நான் இதுக்கு மேலேயும் எதுவும் பேச விரும்பல.. நான்
ஒன்னும் எடுத்தோன குடும்பம் நடத்தக் கூப்பிடுல உன்ன.. என்னால உன்ன மாத்த முடியும்னு நம்பிக்கை இருக்கு..
நீயும் சீக்கிரம் மனசை மாத்திட்டு என்னோட குடும்பம் நடத்தற வழியைப் பார்.. அதே மாதிரி எஸ்கேப் ஆகலாம்ன்னு
நினைக்காத.. உன்னக் கண்டுபிடிக்கிறது அவ்வளவு கஷ்டம் இல்ல இந்த உலகத்துல” என்று திட்டவட்டமாகச் சொன்னவன் கதவைத் திறந்து கொண்டு
வெளியே சென்றான். கௌசி தான் அப்படியே நின்றுவிட்டாள். அவளின்
பிரச்சினையை அவனிடம் சொல்லவே அவளிற்கு குன்றலாக இருந்தது.

வெளியே வந்த விக்னேஷைப் பார்க்க ஜீவாவிற்கும் மதிக்கும் அதிசயமாக இருந்தது. காரணம் அவன் முகத்தில்
தெரிந்த பிரகாசம் தான். மற்றும் அவன் உதட்டில் உறைந்திருந்த புன்னகை.

“என்னடா.. ஒளிவட்டமா இருக்கு” என்று ஜீவா கேட்க விக்னேஷ் சிரித்தான். “ஆமாடா.. எப்படியோ கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டா” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

கண்கள் விரிய விக்னேஷைப் பார்த்த மதியிடம் “என்ன மதி.. இப்பவும் என்னைப் பார்த்து மனதில் திட்டுவியா” என்று விக்னேஷ் கேட்க மதி
திடுக்கிட்டாள். “இல்லையே… நான்..” என்றவளின் பேச்சில் இடை புகுந்தான் விக்னேஷ்.

“போதும் போதும்.. கௌசி மேல இருக்க ப்ரண்ட்ஷிப்ல என்னைய நீ வறுத்து
எடுக்கிறது உன் பார்வையிலேயே மூன்று
வருஷமாத் தெரியும்” என்றான் விக்னேஷ்.

“திடீர்னு ஏன் இந்த மாற்றம் விக்னேஷ்” -மதி.

“ஏன் மாற்றம் கூடாதா மதி..” – விக்னேஷ்.

“இல்லை.. இத்தனை நாள் நாங்க சொன்னபோது எல்லாம் கல்யாணமே வேண்டாம்-ன்னு சொல்லிட்டு இப்போ திடீர்னு சொல்றீங்களே அதான்
கேக்கறேன்” – மதி.

“ஓ… அதுவா.. இதோ இங்க நிக்கறான்ல இவன்..என் அண்ணன்” என்று ஜீவாவைச்
சுட்டிக் காட்டியவன் “இவன மாதிரி கல்யாணம் பண்ணி பொண்டாட்டிக்கு பயந்து கொஞ்சம் நடுங்கலாம்ன்னு
ஆசையா இருக்கு அதான் அண்ணி” என்றான் விக்னேஷ் பவ்யமாக. அவனுக்கு ஜீவா-மதி காதலிக்க ஆரம்பத்திலிருந்தே அதான் வேலை.. பெயரைச் சொல்லிக் கூப்பிடுபவன் அவ்வப்போது வேண்டுமென்றே நக்கலாக அண்ணா அண்ணி என்பான்.

“ஆங்ங்ங்” என்று விக்னேஷை
முறைத்தவள் ஜீவாவிடம் திரும்பி “என்ன நான் உங்களை பயப்படுத்தி
வச்சிருக்கேனா.. நீங்க அண்ணன் தம்பி எல்லாம் எல்லோரையும் அதிகாரத்துல
வச்சிட்டு எங்களை சொல்றீங்களா” என்று
பொரிந்த மதி “சரி சரி நான் கௌசியிடம் பேச வேண்டும்” என்று அறைக்குள்
சென்றுவிட்டாள்.

மதி சென்றபின் விக்னேஷிடம் ஜீவா “டேய் என்ன திடீர்னு.. எனக்கு உன் பிகேவியர் எங்கையோ ஏதோ இடிக்குதே”
என்று யோசிக்க..

“அய்யோ… அப்படி எல்லாம் இல்லிங்க அண்ணா.. நீங்க உங்க மூளையை எப்போதும் போல ஃபெரஷா வச்சிருங்க”
என்று மரியாதைத் தந்து கிண்டலடித்தான். பின் இருவரும் ஏதோ பேசியபடி வெளியே வராண்டாவில் வந்து நின்றனர்.

“கௌசி ஐம் ஸோ ஹாப்பி” என்று உள்ளே நுழைந்த மதி கௌசியைக் கட்டிப் பிடித்தாள். கௌசியின் உடம்பு
விறைப்பாகவே இருந்ததை உணர்ந்த மதி.. மேலும் அவள் எதுவும் பேசவில்லை என்பதை உணர்ந்து அவளிடம் இருந்து
விலகி முகத்தைப் பார்த்தாள்.
கௌசியின் முகத்தில் ஏராளமான குழப்ப ரேகைகள்.

“ஏன் கௌசி ஒரு மாதிரி இருக்க?” என்று மதி கேட்டாள். ஏதோ யோசனையிலேயே
இருந்தவள் மதியின் கேள்வியில் விழித்து “ஒன்றுமில்லை மதி” என்று மறைத்தாள்.

“என்ன ஆச்சு கௌசி.. நீ ஒன்னு இல்லைன்னு சொல்லும்போதே ஏதோ
இருக்குன்னு தெரியுது”

“நீங்களாவது விக்னேஷ் கிட்ட இந்தக் கல்யாணம் வேண்டாம்ன்னு
சொல்லுங்களேன் மதி.. அவன் பாட்டுக்கு முடிவு பண்றான்” – கௌசி

“ஏன் கௌசி இதுல என்ன இருக்கு” – மதி சாதரணமாக.

“மதி.. என்ன பேசறே நீ.. நான் அல்ரெடி கல்யாணம் ஆகி..” என்று ஆரம்பிக்க மதி இடை புகுந்தாள். “அதனால் என்ன
கௌசி.. குரு விதி அவ்வளவு தான் போய் சேர்ந்திட்டான். அதற்காக நீ வாழ்க்கை ஃபுல்லா தனி மரமா
உட்காரணும்மா..” என்று நியாயமான கேள்வியை முன் வைத்தாள்.

“எனக்கு ராசி இல்லை மதி.. என்னால விக்னேஷிற்கு ஏதாவது ஆயிடப்போகுது”
என்று கண் கலங்கினாள் கௌசி. அவள் பழசை எதுவும் மறக்கவில்லை.. சந்தியா
பேசியது தன் அன்னை பேசியது எவ்வளவு பாதித்திருக்கு என்பதை மதி
உணர்ந்தாள்.

“ஏய்ய்… கௌசி.. நீ எல்லாம் ஐடி
வேலையில் இருந்தாய் என்று வெளில சொல்லிடாதே.. இந்தக் காலத்தில வந்து ராசி அதுஇதுன்னு” என்று மதி அதட்டி சமாதானம் செய்ய முயற்சிக்க கௌசி மேலே பேசினாள்.

“அது இருக்கோ இல்லையோ.. ஆனா என்னாலன்னு பயந்து பயந்தே நான் செத்திருவேன் மதி.. அதுவும் இல்லாமல்
அவன் நான்சியைத் தான லவ்
பண்ணான்.. எனக்காக ஏதோ சொல்ற மாதிரி இருக்கு அவன் அவள விட்டுப் பிரிஞ்சிட்டன்னு சொல்றது” என்றாள் கௌசிகா.

“உனக்கு நடந்தது எதுமே தெரியாதா?” எனக் கேட்டாள் மதி புருவ முடிச்சுடன்.

“ஏன்.. அப்படி என்ன ஆச்சு மதி..” என்று கேட்ட போதே ஏதோ அடைப்பது போல
இருந்தது கௌசிகாவிற்கு.

நான்சியை ஏர்போட்டிற்குச் செல்லும் முன் விக்னேஷ் அவளைப் பார்க்கச்
சென்றபோது அங்கு நடந்த சம்பவங்கள்.. பின் கனடா போனபின் வர முடியாமல்
சிக்கியது.. இங்கு வந்த அப்புறம் நீயில்லாத அதிர்ச்சி.. அப்புறம் செந்தில்நாதன் அவரின் இறப்பு.. பின்
சென்னையை விட்டு வந்தது.. என்று ஒன்றுவிடாமல் மதி சொல்லி முடித்தாள்.

“செந்தில் மாமா… இறந்துட்டாரா?” என்று
கேட்க கௌசியின் கண்களில் கண்ணீர் உருண்டோடியது.

“ஆமாம் கௌசி” – மதி கௌசியின் தோளை ஆறுதலாகப் பற்றிய படி.

சிறிய வயதில் இருந்து தந்தைக்கு நிகராகத் தன்னைத் தூக்கி வளத்தவரின் இழப்பில் கூட இருக்க முடியவில்லையே
என்று தன்மேலே கோபம்
கொண்டவளுக்கு கண்கள் கரித்தது.

“விக்னேஷை நாங்க கல்யாணம் பண்ண சொல்லி எவ்வளவோ அதுக்கு அப்புறம்
கம்பெல் பண்ணோம் கௌசி.. விக்னேஷ் தான் அந்தப் பேச்சை எடுத்தாலே எரிஞ்சு
எரிஞ்சு விழுந்தாரு.. ஆனா நீ வந்த அப்புறம் தான் எல்லாமே ஓகே ஆயிருக்கு மதி.. நீ வீட்டை விட்டுப் போன அப்புறம் போன சந்தோஷம் இப்போ அப்படியே
திரும்பி வருது.. நீயா கௌசி ராசி இல்லாதவ.. எனக்கு தெரிஞ்சு வரதராஜன் சித்தப்பா சொன்ன மாதிரி நீ
மகாலட்சுமி கௌசி” என்றாள் மதி.

ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்தாளே தவிர எதுவும் பேசவில்லை.. ஆனால் அவள் மனதில் ஒன்று ஓடிக்கொண்டு
இருந்தது. விக்னேஷ் குடும்பத்திற்கும் தன் தந்தைக்காக மட்டும் தான்
கல்யாணம் செய்கிறான் என்று.

“இங்கேயே கௌசி இன்னிக்கு
இருக்கட்டுமே” என்று வெளியே வந்து
பேசிக்கொண்டிருந்த விக்னேஷிடம் கேட்க “இல்ல மதி.. அவ வரட்டும்.. அங்க
அம்மா இவளை இன்னிக்கே பாத்து ஆகனும்-ன்னு உட்கார்ந்திருக்காங்க” -விக்னேஷ்.

“சரி லக்கேஜ் எல்லாம் இருக்கு பாரு.. பேசாமல் காரை எடுத்திட்டுப் போ..” – ஜீவா.

“அப்புறம் உனக்கு” – விக்னேஷ்.

“நாளைக்கு காலையில் நான் லேட்டா தான் போவேன் டா.. நீ 9.30க்கு வந்து காரை விட்டுட்டு அப்புறம் பைக்கை
எடுத்திக்கோ” – ஜீவா.

“சரி ஜீ” – விக்னேஷ். பின் விக்னேஷும் ஜீவாவும் லக்கேஜை காரில் எடுத்து
வைக்க கௌசியும் மதியும் பேசிக் கொண்டு நின்றிருந்தனர்.

“கௌசி போகலாம்” என்று விக்னேஷ் சொல்ல கௌசி அவனுடன் புறப்பட்டாள்.

இருவரையும் அனுப்பிவிட்டு வந்த மதி உள்ளே நுழைந்து கதவைச் சாத்திவிட்டு திரும்ப ஜீவா அவளை அணைத்தான்.
கணவனின் திடீர் அணைப்பை
எதிர்பாராதவள் அவனின் அணைப்பில் அப்படியே நின்றாள். “ஐம் ஸோ ஹாப்பி
மதி” என்றான் அவளின் காதில் அணைத்தபடியே.

“என்னன்னு கேக்க மாட்டியா?” – ஜீவா.

கணவனைத் தானும் அணைத்தவள் “விக்னேஷ் கௌசி கல்யாணம் தானே”
என்று கேட்டாள்.

“அதுவும் ஒன்னுதான்” என்று அவளை விலக்கியவன் “நீ நம்ம பேமிலி மேல வச்சிருக்கு அக்கறை மதி.. கௌசி இங்க
வந்த அப்புறம் நீ கடமையாவே எதுவும் செய்யலையே.. எல்லாம் பாத்து பாத்து செஞ்ச.. நம்ம வியா குட்டிக்கு செய்யற
மாதிரி” என்றவன் அவளின் கன்னத்தில் ஒரு முத்திரையைப் பதித்து “தேங்க்ஸ் மதி” என்றான்.

“இல்ல ஜீவா… கௌசி எப்போதுமே” என்று மதி ஆரம்பிக்க “அய்யோ.. ஏய்
ப்ளீஸ்.. மறுபடியும் கௌசி புராணம் பாடுவே.. நீங்க இரண்டு பேரும் அப்படி
இப்படின்னு.. போதும் டி.. மூணு வருஷமா கேட்டுட்டே இருக்கேன்.. அதான் அவ
வந்துட்டால போதும்” என்று
இருகைகளையும் காதில் வைத்தபடி கிண்டலடிக்க மதி அவனைச் செல்லமாக
அடித்தாள்.

“சரி.. நாளைக்கு ஏன் லேட்டா போறீங்க.. ஏதாவது நைட் வொர்க் இருக்கா முடிக்க?”
என்று வினவினாள்.

“ஆமாம்”

“சரி முடிச்சிட்டு வந்து படுங்க.. நான் போய் தூங்கறேன்” – மதி.

“வொர்க் என் பொண்டாட்டியோட தான்..”
என்று அவளைத் தன் அருகில்
இழுத்தவன் இதழ் நோக்கி குனிய “ஓ… இதுதான் சார் வொர்க்-ன்னு சொன்னிங்களோ” என்று கேட்டாள் மதி.

“ஆமா.. பட் இப்போ நீ கொஞ்சம் பேசாமல் இருந்தால் நல்லா இருக்கும்” என்றவன் அவளின் இதழில் தஞ்சம் புகுந்தான்.
தன்னையும் தன் குடும்பத்தையும் அளவில்லாமல் நேசிக்கும் மனைவியை காதலால் மூழ்கடிக்க ஆரம்பித்தான்.

“என்ன நீயும் மதியும் லவ்வர்ஸ் மாதிரி பேசிட்டே இருக்கீங்க” என்று காரின் தன் அருகில் உள்ள சீட்டில் அமர்ந்திருப்பவளிடம் பேச்சுக் கொடுத்தான் விக்னேஷ். அவள் பதில் சொல்லவில்லை.. தலையைக் குனிந்த படியே வந்தாள்.

“என்னடி.. பேசவே மாட்டிறே” என்று காரை ஓட்டியபடி அவன் வினவ.. “எனக்கு என்னமோ மாதிரி இருக்குடா” என்றாள்
கௌசி.

“என்ன மாதிரி” என்று வினவினான்.

“அதான் தெரியல.. ஏதோ குழப்பமா.. கஷ்டமா” என்று விழித்தாள் கௌசி.

வலது கையால் காரை ஓட்டியவன் தன் இடது கரத்தால் அவள் வலது கரத்தைப்
பற்றி “எதையும் யோசித்துக் குழப்பிக்காத கௌசி.. தைரியமா இரு.. நான் இருக்கேன்” என்று அவள் கரத்தை வலுவாகப் பிடித்தான். அவன் தன் கையை அழுத்தமாகப் பற்றியதே
அவளுக்கு சற்றுத் தெளிவாக இருந்தது.

கிணத்துக்கடவு வந்தவுடன் அவன் காரை நிறுத்த நீ உள்ளே போ நான் வரேன்
என்றான்.. வெளிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல எங்கிருந்தோ ஓடி வந்த ப்ரௌனி அவளைத் தாவிப்
பிடித்தது. ஒரு நிமிடம் தடுமாறியவள் பின் சமாளித்து நின்று ப்ரௌனியைக்
கொஞ்சினாள். கௌசி அவள்
குடும்பத்தை எவ்வளவு மிஸ் செய்தாளோ அதே அளவிற்கு ப்ரௌனியையும் மிஸ்
செய்தாள். அதன் தலையை நீவி கௌசி முத்தமிட ப்ரௌனி தலையைத் தூக்கியது.. முதலில் புரியாமல்
விழித்தவள் பின் சிரித்துக் கொண்டே “சாரிடா மறந்துட்டே” என்று அதன் கழுத்தில் தன் கைகளை வைத்து கொஞ்சி தேய்த்துவிட்டாள். “ங்ங்ங்ங்”
என்று சத்தத்தை எழுப்பியது அவளைச் சுற்றி சுற்றி சந்தோஷத்தில் அங்கும்
இங்கும் ஓடியது.

“வா கௌசி” என்ற தன் சின்ன அத்தை சுமதியின் குரலில் நிமிர்ந்தாள். அத்தையைப் பார்த்தவுடன் செந்தில்நாதன் நியாபகம் வர சுமதியிடம்
சென்று அவரைக் கட்டிக் கொண்டாள் கௌசி. பின் விக்னேஷ் அவளின் லக்கேஜ் எல்லாம் எடுத்து வந்து உள்ளே
வைக்க.. அத்தையுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தாள் கௌசி.

“விக்னேஷ்.. ஜீவா போன் பண்ணி சொன்னார் டா.. கல்யாணத்தப் பத்தி. எப்போ என்னன்னு நாளைக்கு நாள்
பாத்திடலாம்” என்று சொல்ல தலையை ஆட்டியவன் உடை மாற்ற தன் அறைக்கு எழுந்து சென்று விட்டான்.

அவன் போன பின் “அத்தை.. உங்களுக்கு இதுல சம்மதமா?” என்று கேட்டாள் கௌசி.

“எதில்” – சுமதி.

“அதான்.. இந்தக் கல்யாணத்தில்” – என்று
இழுத்தாள் கௌசி.

“ஏன்… என் கௌசியிடம் தான் என் மகன் சிடு மூஞ்சியைக் கட்டிக் கொள்ள சம்மதமான்னு கேக்கணும்.. நீ எதையும்
கேக்கவே அவசியம் இல்லை..” என்றார் அவளின் தாடையை பிடித்து ஆட்டியபடி.

அவரின் சம்மதத்தையும் தெரிந்து இறுதியில் தெரிந்து கொண்டாள். “என்ன
சிடுமூஞ்சியா” என்று விழித்தாள்.

“அவன் அப்படித் தான் இருக்கான்.. அந்த போட்டோ ஸ்டுடியோ ஆரம்பிச்சதுல
இருந்து” என்று சலித்துக் கொண்டார் சுமதி. நான்சியைப் துரோகத்தால் இருக்கும் என்று நினைத்தாள் கௌசிகா.
பின் விக்னேஷ் வர சிறிது நேரம் பேசிவிட்டு தன் அத்தையுடனே அவரது
ரூமிற்குள் உறங்கச் சென்றாள் கௌசிகா.

விக்னேஷைப் பொருத்த வரை
“கௌசிகா குருவுடன் வாழ்ந்த காதல் வாழ்க்கையை முழுதாக மறக்கடித்து.. தன்னைக் காதலிக்க வைத்து.. தன்
காதலை அவளிடம் உணர்த்த வேண்டும்” என்று எண்ணினான்

கௌசிகாவைப் பொருத்த வரை “நான்சியுடன் ஆன காதல் விக்னேஷை பாதித்து விட்டது.. அதனால் தான் பாரா
முகம் காட்டி இருக்கிறான்.. இப்போது குடும்பத்தினருக்காகவே தன்னைக் கல்யாணம் செய்கிறான்..” என்ற
எண்ணம்.

இருவருமே சரியாகத்.. தவறான எண்ணத்திலும் கனிப்பிலும் இருந்தனர்.

அடுத்து என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!