காதலின் விதியம்மா 6

KV-a0f11401

காதலின் விதியம்மா 6

மேடையின் அலங்காரத்தை ரசித்து கொண்டே வந்தவளின் கால் பிரேக் போட்டது போல ஒரு இடத்தில் நின்று விட்டது. 

“சார் நீங்க சொன்னா மாதிரியே எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். அவனோட சாவை இன்றைக்கு நீங்க கண்டிப்பா பார்ப்பீங்க. நான் செட் பண்ண ஆளு  எதிர்ல இருக்கிற பில்டிங்ல இருக்கான் அவ பொறுப்பை ஏற்ற அடுத்த நிமிஷம் அவன் உலகத்தில இருக்க மாட்டான். நீங்க அவனோட சாவை சந்தோசமா எதிர் நோக்கி இருங்க” என்றான். 

அவன் முதலில் பேசியதை கேட்டு பயத்தில் நடுங்கியவள் அவன் கடைசியாக யாரை பற்றி பேசுகிறான் என்பதை அறிந்து கோபத்தில் கொதித்தாள்.

‘அய்யோ…. பைரவ் சாரை கொல்ல பிளான் பண்றாங்க…. என்ன பண்றது ஒன்னுமே புரியலையே இதை யார் கிட்ட சொல்றது’ என ஒன்றும் புரியாமல் நிற்க ஒரு கை தோளை தொட,  பதறி திரும்பினாள். 

சாய் “ஓய் எல்லோரும் அங்க இருக்கோம் நீ மட்டும் தனியா இங்க நின்னுட்டு என்ன பண்ற” என

“சாய் சார் இங்க… ” என்று தொடங்கியவள் பாதிலே நிறுத்தி ‘வேண்டாம் இவங்க கிட்ட சொன்னா விளையாட்டா எடுத்துப்பாங்க’ என்று நினைத்து தன்னையே குறுகுறு என்று பார்த்த சாயிடம், 

“சார் ஃபன்ஷன் ஸ்டார்ட் பண்ண இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு” என

“இன்னும் ஒரு மணிநேரம் இருக்கும்…. எதுக்கு இப்ப இதை கேட்குறீங்க” என்ற சாயிடம், 

“எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு சார் நான் ஃபன்ஷன் ஸ்டார்ட் பண்றதுக்குள்ள வர டிரை பண்றேன்” என்று அவரின் மறுமொழியை கூட காதில் விழவில்லை. 

வெளியே வந்தவள் ‘அய்யோ இப்ப என்ன பண்றது…. யாரை நம்பி இதை சொல்றது நாராயணன் சர் போன் நம்பர் கூட தெரியாதே எதிரில் வேற நிறைய பீல்டிங் இருக்கு இதில் அந்த பீல்டிங்ல இருந்து சுட போறாங்களோ…. எப்படி பைரவ் சாரை காப்பாத்திருத்து…. துர்க்கா மா எதாவது ஒரு வழியை காட்டு’ என்று வேண்ட, அவளை யாரே அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பினாள். 

சரியாக மணி பத்து முப்பது, மூன்று கார்கள் வரிசையாக நிறுவனத்தின் வாயிலாக உள்நுழைந்து. 

முதல் மற்றும் கடைசி  காரில் இருந்து கருப்பு உடை அணிந்த காவலாளிகள் இறங்கி,  இரண்டாவது காரின் கதவை திறக்க, 

கருப்பு நிற கோட் சூட் அணிந்து, முகத்தில் ராஜ கம்பிரத்துடன் என்னோடு மோதி சாவை தேடாதே என்ற திமிரும் கர்வமும் விழியில் வழிய  இரண்டு நாட்கள் முன் இவன் தான் உயிருக்கு போராடியவனா என்று வியக்கும் வண்ணம் மேடையை நோக்கி வந்தான். 

அவனது தாயும் தந்தையும் பெருமையுடன் முகம் கொள்ளா புன்னகையுடன் அவனை பின் தொடர்ந்தனர். 

சில நிமிட பலரது வரவேற்பு, வாழ்த்துக்கள் பின் அறிமுக உரை என்று நீண்டு கடைசியாக பைரவ் பேசும் முறை, 

“ஹலோ எவ்ரிஒன் பிரசன்ட் ஹியர்… இந்த மாதிரி எதுக்கு பெருசா வரவேற்பு எல்லாம்….. இது தான் என்னோட டேட் இந்த ஃபன்ஷனை பற்றி சொல்லும் போது நான் கேட்ட கேள்வி… உண்மையை சொல்லனும்னா எனக்கு இதுல சுத்தமா விருப்பம் இல்லை. நான் என் டேடி மாதிரி பொறுமை நிதானம் எல்லாம் கிடையாது…. அவருக்கு நேர் எதிர் நான்.  எனக்கு நேரம் ரொம்ப முக்கியம்…. அதே சமயம் செய்ற வேலையை ஒழுங்கா இன்னொருத்தர் குறை சொல்றது போல இருக்க கூடாது… தப்பு யாராவது பண்ணா நான் வார்னிங் மட்டும் பண்ண மாட்டேன் வேலையை விட்டே தூக்கிடுவேன்…. இதை சொல்ல தான் நான் இங்க வந்தேன் இப்ப எல்லாரும் அவங்க அவங்க வேலையை பார்க்க போங்க ” என

புதிய முதலாளியை பார்க்க சந்தோசமாக வந்தவர்கள் இவனது பேச்சை கேட்டு அதிர்ச்சியாகி, தங்கள் நிலைமையை எண்ணி நொந்தே போனார்கள். 

சாய் “அஷ்வினி… நீங்க எப்ப வந்திங்க” என

“நான் சார் பே… ” என்பதற்குள்  உடன் பணி புரியும் காயத்ரி “அவ ஃபன்ஷன் ஸ்டார்ட் பண்ணுறதுக்கு முன்னாடியே வந்துட்டா சார்” என தேஜஸ்வினி அவளை புரியாமல் பார்க்க, 

சாய் “ஒகே இரண்டு பேரும் போய் வேலையை பாருங்க” என்று அவன் கிளம்ப 

தேஜு “ஏய்… நான் இப்ப தான் பைரவ் சார் பேசும் போது தான் வந்தேன் நீ இதுக்கு அவங்க கிட்ட போய் சொன்ன”  என 

“அநியாயத்துக்கு உண்மை விளம்பிய இருக்க கூடாது டி. அது சரி இது என்ன டிரஸ் எல்லாம் அழுக்கா இருக்கு” என்று கேட்க,  “இது ஒரு பெரிய கதை காயத்ரி” என்று பேசி கொண்டே உள்ளே செல்ல, பியூன் “தேஜஸ்வினி மேம் உங்களை சார் உள்ள கூப்பிட்டாங்க” என

“சரி டி நீ போ” என்று காயத்ரி அவளிடம் சென்றாள்.  தேஜஸ்வினி மனதில் ‘இப்ப என்ன சொல்றதுக்கு அவங்க கூப்பிடங்களோ’ என்று கதவை தட்டி “மே ஐ கம் இன் சார்” என

 “எஸ் கம் இன்” என்றதும் உள்ளே வந்தாள். நாராயணன் சாரும் அவர் மனைவியும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் சற்று தைரியமாக அவள் உள்ளே வர அவர்கள் இருவரும் இருந்ததுக்கான அடையாளம் எதுமே இல்லை.

‘அய்யோ சார் இருப்பாங்க னு நம்பி வந்தேன் இப்ப இவங்க மட்டும் தான் இருக்காங்க நான் என்ன செய்வேன்’ என்று பதட்டத்துடன் கண்கள் அந்த அறையை யாரவது இருப்பார்களா என்று தேட,

“ஹலோ என்ன தேடுறீங்க” என்றதும் “அது… அது நாராயணன் சார் எங்கன்னு பார்த்தேன் சார்” என 

“அப்பா வெளியே இருக்காரு இந்தா உன்னோட மோதிரம்” என்று நேற்று அவளிடம் புடுங்கிய மோதிரத்தை கொடுக்க,

அதை ஆச்சிரியமாக பார்க்க அவனோ ‘இந்த பொண்ணு கிட்ட மட்டும் நம்ப திமிரு கோபம் எதுமே வர மாட்டேன்து என்னவா இருக்கும் கூட தெரியலை ஆனா கண்டிப்பா என்னவோ இருக்கு பா இந்த பொண்ணு கிட்ட’ என்று அவளை கண் எடுக்காமல் பார்க்க,

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார். அவரை பார்த்து தேஜஸ்வினி “குட் மார்னிங் சார்” என அவரோ வேண்டா வெறுப்பா “மார்னிங் மார்னிங்” என அதை கவலையோடு பார்த்தாள்.

நாராயணன் “நான் வீட்டுக்கு கிளம்புறேன் டா” என்று அவளிடம் எதுமே சொல்லாமல் கிளம்ப, அஸ்வினி பைரவிடம் “தேங்க் யூ சார்” என்று அவன் பேசும் முன் நாராயணன் பின் சென்றாள்.    

“சார் சாரி சார் இனிமே இப்படி பண்ண மாட்டேன் ப்ளீஸ் உங்க வீட்டு பொண்ணா நினைச்சு என்னை மன்னிச்சிடுங்க சார்” என்று கெஞ்ச 

“மேடம் எதுக்கு கெஞ்சரிங்க…. மேடம் மனசில் பெரிய வீராங்கனைனு நினைப்பா இல்ல மேடம் கண்ணு அசைத்ததும் சுழலுற பூமி கூட நின்னுடும் போல” என்று கோபமாக நக்கலாக கேட்க, 

“சாரி சார் எனக்கு நிச்சமாவே அந்த நேரத்தில் எதுமே புரியலை அவங்களை எப்படி காப்பாத்தறதுனு புரியாம தான் அப்படி பண்ணிட்டேன். என் கிட்ட உங்க நம்பரோ அவர் சார் நம்பர் எதுமே இல்ல. நான் வேலைக்கு வந்தே இரண்டு நாள் தான் ஆகுது யாரை நம்பறதுனு தெரியலை அதான் நானே” என்று தரையை பார்த்து கொண்டு மேதுவாக சொல்ல,

“முகத்தை பார்த்து பேசு. நான் மட்டும் சரியா அங்க என்னோட ஆளை அனுப்பலை என்றால் என்ன ஆகி இருக்கும். எனக்கு என்னோட பையன் உயிர் ரொம்ப முக்கியம் தான் அதுக்காக உன்னோட உயிரை பற்றி கவலை படாமல் இருக்க முடியலை” என்று சற்று நேரம் முன் நடந்த நிகழ்வை நினைத்தான்.

வெளியே வந்த தேஜஸ்வினியை யாரோ கூப்பிட திரும்பினாள்.  வாட்ச்மன்  தான் அவளை கூப்பிட்டார்.

“எங்க என்ன மா பண்ற உள்ள எதோ பன்ஷன் போல நீ இங்க என்ன மா தனியா பண்ற” என்று கேட்க,

“ஒன்னும் இல்லனா சும்மா தான் இருக்கேன்  ஒரு விஷயம் கேட்கணும் தப்ப நினைக்காதீங்க. எதிர்ல எவ்வளவு கட்டிடம் இருக்கே ஆனா எதுமே இன்னும் முழுசா கட்டல என்ன ஆச்சு” என்று கேட்க  

“அட அதுவா மா எதிர்க்க எதோ கடை வராத இருந்தது மா அதான் நிறைய பெரிய பெரிய கடை எல்லாம் இருக்குமே அது மாதிரி ஆனா எதோ பிரச்சனை போல அதான் பாதிலே நிக்கிறது. இந்த கட்டிடத்தில் மட்டும் தான் ஆள் இருக்காது. மற்ற எல்லாத்திலும் ஒருத்தர் இல்ல கொஞ்சம் பேர் கண்டிப்பா இருப்பாங்க” என   

“ஓ ஓ…. சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு கொஞ்ச நேரத்தில் வரேன்” என்று அந்த ஆள் இல்லா கட்டிடத்தை நோக்கி சென்றாள். 

‘கண்டிப்பா இங்க தான் இருப்பான் அந்த கில்லர் நம்ப அங்க போய் அவனை தடுக்கணும்’ என்று நினைத்து கொண்டே செல்ல 

மூன்றாவது மாடி வரை சற்று வேகமாக வந்தவள் பின் மெதுவாக நடந்தால், அவளது உள் மனது  இங்கே தான் அந்த கில்லர் இருப்பான் என்று சொல்ல அதனால் மெதுவாக சென்றவள் ஓரத்தில் இருந்த பெரிய துப்பாக்கியை பார்த்து ‘அய்யோ எவ்வளவு பெரிய துப்பாக்கி எதோ அசட்டு தைரியத்தில் எவளோ தூரம் வந்துட்டேன்  உன்னால  கண்டிப்பா முடியும் ஒரு உயிரை  காப்பாத்தணும் சரி போலீஸ் க்கு  கால் பண்ணலாம்’ என்று அவளின் போனை தேட அது இருந்தால் தானே.

‘போன் வேற இல்ல இப்ப என்ன பண்றது ச்சை…..உனக்கு அறிவே இல்ல டி இப்படியா வரத்து யார் கிட்டவும் சொல்லாமல் வேற வந்துட்டோம் சரி கடவுள் மேல பாரத்தை போட்டு போவோம்’ என்று மேலும் முன்னேற, பக்கத்தில் இருந்த காலி பெயிண்ட் டப்பாவை  கால் இடறி  கீழே விழ சத்தம் கேட்டு அங்கே அந்த கில்லர்  வந்துவிட்டான்.

“ஏய் யார் நீ எப்படி இங்க வந்த” என்று மிரட்டலாக கேட்க அதில் மொத்தமாக பயம் தொற்றி  கொண்டு “தெ… தெரியாமல் வந்துட்டேன்…. நான் போயிடுறேன்”  என்று அந்த துப்பாக்கியை  பார்த்து கொண்டே சொல்ல 

“அடடா செல்லத்துக்கு  பயமா இருக்க. இரு ஒரு வேலையை முடிச்சிட்டு நம்ப பிரச்சனையை  பார்க்கலாம்” என்று பக்கத்தில் இருந்த கயிற்றால் அவளை கட்டி வைத்து விட்டு, தனது sniper ரை  சுடுவதற்கு தகுந்த மாதிரி  வைத்து விட்டு குறி பார்த்து நின்றான்.

‘போச்சு…. சாரயை  எப்படி காப்பாத்துறது  கடவுளே என்னை ஏன் இப்படி பயந்தாங்கோலியா படைச்ச  ப்ச்…. அச்சு…. செத்தா கூட பரவலை இப்படியாவது சாரயை  காப்பாத்தணும். யோசி யோசி எதாவது பண்ணனும்’ என்று அந்த அறையில் தனக்கு வேண்டியது எதாவது இருக்குமா என்று தேட அவள் கண்ணில் சின்ன கண்ணாடி துண்டு பட்டது.

‘கண்ணாடி…. இதை எடுக்கணும்’ என்று மெதுவாக அவனின் கவனம் திரும்பா வண்ணம் நகர்ந்து அதை கட்டிய கைகளால் எடுத்து  கயிறை அறுக்க முயற்சி செய்தாள்.

சில நேர போராட்டத்துக்கு பின் கயிறை  வெற்றிகரமாக அறுத்து விட்டாள். ‘நன்றி துர்க்காமா’ என்று கடவுளிடம் வேண்டி விட்டு பக்கத்தில் இருந்த ஒரு பெரிய  இரும்பு கம்பியை எடுத்து அவன் அருகில் சென்றாள்.

அவள் அடிக்க கையை ஓங்கிய சமயம் அவன் திரும்பி விட அந்த அடி அவன் நெற்றியில் பட்டு ரத்தம் கொட்டியது.

“ஏய்… உன்னை” என்று அவளின் கைகளை பிடிக்க எங்கிருந்து தான் அவ்வளவு பலம் வந்ததோ அவனை தள்ளி விட பக்கத்தில் இருந்த செங்கலில்  முட்டி ஒரு நிமிடம் தடுமாற அது தான் சமயம் என்று  அவன் வைத்து இருந்த துப்பாக்கியை  கீழே போட்டு விட்டு வேகமாக ஓடினாள்.

“ஏய்…. உன்னை சும்மா விட மாட்டேன் என்று அவனும் அவள் பின்னே  ஓட சரியாக யாரோ ஒருத்தர் அவனை எட்டி உதைக்க ஏற்கெனவே மயக்கத்தில் இருந்தவன் அவர் அடித்த வேகத்தில் கீழே விழுந்து விட்டான்.

வந்தவர் “டேய்… யாருடா நீ உன்னை யார் அனுப்புனா” என்று கேள்வி கேட்க அவனோ பாதி மயக்கத்தில் இருந்தாலும் தன்னிடம் இருந்த ஒரு குப்பியை வாயில் போட்டு கொண்டான்.

அடுத்த நிமிடம் வாயில் நுரை வந்து அந்த இடத்திலே இறந்து விட்டான். வந்தவர்  “மேடம் இவன் பாய்சன்  சாப்பிட்டான்  நீங்க போங்க கீழ சார் வெயிட் பன்றார். நான் எதை பார்த்துகிறேன்” என்றான்.

‘யார் இவர் இவரை யாரு அனுப்பி இருப்பா’ என்று யோசித்து கொண்டே கீழே சென்றவள் சத்தியமாக அங்கே நாராயணன் சாரை எதிர் பார்க்க வில்லை.

“சார் நீங்க எப்படி இங்க” என்று ஆச்சிரியமாக கேட்க, “எனக்கு உன் கூட பேச எல்லாம் நேரம் இல்ல அங்க பங்க்ஷன் போய்ட்டு இருக்கு நீ இந்த பக்கம் போனதா வாட்ச்மன் சொன்னார் அதான் பார்க்க வந்தேன். வந்ததும் நல்லதா போச்சு உன்னை யாரு எங்க எல்லாம் வர சொன்னது சரி உன்னை எதுக்கு அவன் கடத்தினான்” என்ற கேள்விக்கு 

நடந்ததை சொன்னாள். அவரோ எதுமே சொல்லாமல் செல்ல அவளும் அவர் பின்னே சென்றாள். சரியாக பைரவ் பேசும் போது தான் இருவரும் வந்தனர். ஆனால் பைரவின் பேச்சில் அனைவரது கவனமும் இருக்க யாரும் இவர்களை கவனிக்கவில்லை.

தற்போது நாராயணன் “இங்க பாரு அஸ்வினி  முதல எது பண்றதுக்கு முன்னாடியும் யோசிக்கணும். நம்ப யோசிச்சு  பண்றது எதுமே தப்பாகாது. புரியுதா நான் இங்க தினமும் வர மாட்டேன் இனி என்னோட பையன் தான் எல்லாத்தையும் பார்த்துப்பான். உன்னை நீ தான் பார்த்துக்கணும் நான் இதுக்கு பின்னாடி யார் இருக்கானு பார்க்க சொல்றேன்” என்று அவளிடம் சொல்லி விட்டு கிளம்பினான்.

அவளும் தன் வேலையை பார்க்க கிளம்பினாள். இருவருக்கும் தெரியவில்லை  இவர்கள் பேசியதை ஒரு ஜோடி கண்கள் கோபத்துடன் கேட்டு கொண்டு இருந்தது என்று.

யார் அந்த கண்களுக்கு சொந்தகார்? அதனால் தேஜஸ்வினி வாழ்வில் எதாவது பிரச்சனை வருமா?

விதிகள் தொடரும்…..

அன்புடன் 

நிலா 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!